Saturday, February 4, 2023
முகப்புசெய்திசெயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

-

உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட  விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு ‘உயிர்’ என்பதற்கு எங்கெலஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் இது.

பிரெட்ரிக் ஏங்கல்ஸ்

“புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்…. இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்…”
“.. மனது – பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின பொருளற்ற இயற்கைக்கு முரணான கருத்து மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும்.”

“புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக் கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.”

1886 இல் எதனை மந்திர வித்தை என்று எங்கலெஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

000

சிந்தடிகா செல்

சிந்தடிகா – Synthetica  . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.

ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக்  குறியீடுகளுக்குரிய  (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.

சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல;  ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.

வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது.  அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.

மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து  உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.

செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்;  அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.

உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் கூறப்படும் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோயிந்சாமியை நுழைத்து, இனி கோயிந்சாமியாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் செல் (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.

தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கிறது சிந்தடிகா.

குரோமோசோம் என்பது மரபணுக்களால் அனது; மரபணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் பரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், இயற்கை தன் போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, “இது நான் உருவாக்கியது” என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற வகையிலான ‘போலச்செய்தலில்’ தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி.

இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள  ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையசும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை’ நாம் மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்.

கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

000

விஞ்ஞானி கிரெய்க் வென்டர்

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, “ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட  உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?” கேள்வி எழுப்பினர். “ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகிறது” என்று அன்றிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.

25 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும்  படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, “என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்” என்று கூறி போலித் தன்னடகத்துடன் ஏளனப் புன்னகை சிந்துகிறார்கள்.

எனினும், செயற்கை உயிரியல் (synthetic biology) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும் சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும்,  விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகிறார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிர் செல்களையும் அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கிறார்கள்.

“நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக் கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிர்கள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்து விடக்கூடிய  சூழல்களில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிர்கள் இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது” என்றார் எங்கெல்ஸ்.

மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். “தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்” என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.

“தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்வதும் கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே – அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது” என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெள்வந்தவுடனே, ‘அழித்தல்’ தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட ‘ஆக்கல்’ தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகிறதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் இன்னமும் உயிரோடிருக்க துணை செய்கிறது.

தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகிறார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கிறது அறிவியல்.

அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறது.  இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா – இதற்கு விலக்கல்ல.

000

புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் (BioBrick parts)  பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை வேண்டியவாறு இணைத்து ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம்.  சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.

தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.

அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.

எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது; இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு உணவுக் கழகங்களும் (Agri business corporations)  உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள்,  பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ளின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக் களமாக ஏழைநாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நம் கண் முன் தெரிகின்ற சான்று.
ஆனால் இந்த அழிவைக்கூட “சொல்லி அழக்கூடாது, சொல்லாமல்தான் அழவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்” என்று கூறும் சட்டமுன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.

செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் – பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும் தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.

விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும்.  இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும் கொரியாவிலம் ரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விசவாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.

இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (TRIPS), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கிறது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களை மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்
புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிராட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக்கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிராட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கு அறிவு சார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்குத் மிரியாட் தடை பெற்றிருந்தது.

கிராட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் “உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல” என்று வாதிட்டன. மார்ச் 2010 இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் கிராட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.

மிரியாட் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் ‘பயனை’ ‘அறுவடை’ செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் காழ்க்கண்டவாறு எச்சிரித்திருக்கிறார்: “சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகிறது. இது நிராகரிக்கப்படவில்லையென்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டுவிடும்”

சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கின்றோம்.
இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவு சார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.

உயிரின் வேதியல் மூலத்தை க் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமையாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கிறது.

இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி.  இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.

____________________________________________

– மருதையன், புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

____________________________________________

 

 1. //“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது”//

  எவ்வளவு வியாபகமான, அருமையான பார்வை…

 2. […] This post was mentioned on Twitter by vinavu, vinavu, vinavu, vinavu and others. vinavu said: செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்? http://wp.me/pvMZE-28i RT Pls. […]

 3. மிக மிக முக்கியமான பகிர்வு!

  உயிர்காக்க விஞ்ஞானிகள் உயிரை கொடுத்து கண்டுபிடிக்கும் மருந்துகள் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாரிக்க பயன்படுத்துவது கொலை குற்றத்திற்கு சமம்!

 4. ஒரு கை தேர்ந்த உயிரித் தொழில்நுட்ப வல்லுனர் கூட இவ்வகையான செய்திகளை இவ்வளவு எளிதாக புரிய வைத்திருக்க மாட்டார்…..

  தோழர் மருதையனின் பல படைப்புகளில் மற்றுமொரு சிறந்த படைப்பு இது….கட்டுரைக்காக அவரின் தயாரிப்பு/ தரவுகள் பாராட்டப்பட வேண்டியவை.

  செயற்கை உயிரியின் படைப்பை மார்ஸியக் கண்ணோட்டத்துடன்
  விளக்கியது மட்டுமல்லாமல் இன்றைய அறிவியல் மேலும் வளராததற்கு தற்போதுள்ள முதலாளித்துவ சமூகமே காரணம் என்பதை விளக்கியதும் அருமை.

  ///இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
  மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி. இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.///

  வரிகள் புரட்சி என்கிற இன்றய தேவையை நச்சென சொல்கிறது.

  சில

 5. மிகச் செறிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி.

 6. //வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. // ஏன் அந்த வேர்க்கடலைத் தோலையும் நீங்களே செய்ய வேண்டியதுதானே? செயற்கையா படிச்சேன் என்று மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் ஏன் ஏற்கனவே படைக்கப் பட்டிருக்கும் ஒரு உயிரை உபயோகிப்பதன் மூலம் அதைப் படைத்தவனிடம் பிச்சைக்காரர்களாக நிற்கிறீர்கள்? //இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. // ஏற்கனவே ஊருபட்ட பாக்டீரியாக்கள் இருக்குதே, இதைச் செய்யவா இவ்வளவு பணத்தை வீனடித்தீர்கள்? ஒருத்தன் நாய் மாதிரி குறைக்கிறான் என்றால் அதை காசு கொடுத்து பார்ப்பார்கள், ஆனால் ஊரிலே எக்கச் சக்கமாக நாய்கள் வீதியெல்லாம் குறைக்கும், அதை யாரும் பொருட் படுத்துவதில்லை. அட அதை விடு, செயற்கை முறையில் முதலில் அமீப, அப்புறம், கொசு, நாய் பூனை என்று மனிதன் வரைக்கும் வந்து விடலாம். மனிதனின்
  உடல் விலை நூற்றி ஐம்பது ரூபாய் தானாம், இதைப் போட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒருத்தியை செய்து [இரவோடு இரவாகச் செய்ய கம்பியூட்டர் புரோகிராம் வந்திடுமில்ல!] அவளோடு வாழ்ந்திட்டு அடுத்த நாள் அதே வேதிப் பொருளாக மூட்டை கட்டி வச்சிடலாம், அப்புறம் ஒவ்வொருத்திக்கும் புராடக்ட் கோட் இணையத்தில் கிடைக்கும், அதைக்கொண்டு நாட்டில் எந்த பெண் வேண்டுமோ அவைளை உருவாக்கி ஆனந்தம் அடையலாம். அடுத்த நாள் இன்னொருத்தியை அதே மாதிரி செய்து பார்க்கலாம். உங்க கண்டுபிடிப்பு எங்கே போகுது பாத்தீங்களா? ஆண்டவன் என்ன அவ்வளவு இளிச்சவாயனா? உங்களால தன்னைத் தானே விருத்தி செய்து கொள்ளும், சுயமாகச் சிந்திக்கும் ஒரு உயிரை ஒருபோதும் உருவாக்க முடியவே முடியாது, இன்றைக்கு எழுதிவைத்துக்கொள்.

  • இந்தக் கட்டுரை படைப்புத் தொழிலிலிருந்து கடவுள் காலி செய்யப்பட்டதை மட்டுமல்ல அந்த இடத்தை முதலாளிகள் எடுத்துக் கொள்வதைப் பற்றியும் விமரிசனம் செய்திருக்கிறது. முதலில் கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு சண்டைக்கு வரலாமே?

   • கடவுளை திட்டறதுங்கிறது நம்ம ஆட்கள்கிட்டெ இருக்கிற fashion. முழுசா செயற்கை உயிரை முதலில் உருவாக்கட்டும். இது ஏறக்குறைய இருதய மாற்று சிகிச்சை மாதிரிதானே

  • செயற்கை உயிரியைப்பற்றி சரியாக தெளிவாக அறீந்து கொள்ள ஒரு கட்டுரை, வழக்கம் போலவே தோழர் மருதையன்ன் இக்கட்டுரை ஒரு ஆவணக்கட்டுரை. மேலே ஒருவர் இதற்காக இக்கட்டுரைக்காக கோபத்திலிருக்கிறார். கடவுளின் வேலையை முதலாளிகள் எடுத்துக்கொள்ளும் செயலை அவர் எதிர்ப்பாரா என்பது சந்தேகமே

   கலகம்

  • We know how to use the synthetic cells because we are a scientist not a common man like you ,there are many use full feature in this project you did’t not think that your thought are all around the silly things this one of the Major different from you and scientist.and one more thing one day WE CAN MAKE THE SYNTHETIC CELL SKINS ALSO you should note it

  • ராகவன், இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. தமிழில் மட்டுமே வெளியாகி உள்ளது.

 7. ஏப்பா வினவு,

  இப்புடி ஆரமிக்கர எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் ஒருநாள் எதோ ஒரு கார்ப்பொரேஷனோட கல்லா நிறைக்கறதுக்குதான் பயன்படும்.

  அப்புடி என்னாதான் நீங்க ப்ரூவ் பண்றேன்னு துடிக்கறீங்க ??? இயற்கல வாழனும்ன்றீங்க…

  அப்பொறம் லேப்-ல ஆட்டுகுட்டிய பண்ணியாச்சு, பாதிரி மூஞ்சில கரியபூசியாச்சு……இந்த எழவெல்லாம் எதுக்கு…????

  இந்த அ(றி)வியல் இப்பொ உலகத்தெ அழிக்கற வழில ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு, இது இன்னும் புரியலேனா – நீங்களும் “ALL NATURAL ” – அப்ப்டின்னு போட்டிருக்கற கெமிக்கல கடைல வாங்கி தின்னுங்க….

 8. அற்புதமான பதிவு. இந்த நூற்றாண்டுக்குள் உயிரின் ரகசியம் கண்டுபிடிக்கப்படும் என நம்புவோம்.

 9. மிக அருமையான கட்டுரை

  கடினமான செய்தியை வழக்கம் போல எளிமையாக கூறும் தோழர்..மருதையனுக்கு வாழ்த்துக்கள்
  வினவில் கட்டுரைகள் மருதையன் எழுத வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
  வினவு தோழர்கள் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.

 10. தமிழில் எளிமையாகக் கொடுத்துள்ள மருதையனுக்கு நன்றி

  மேலும் அதிக தகவல்கள் வேண்டுவோருக்கும் துறை சார்ந்த பதிவர்களுக்காகவும்….

  —————-
  FIRST SELF-REPLICATING SYNTHETIC BACTERIAL CELL
  http://www.jcvi.org/cms/research/projects/first-self-replicating-synthetic-bacterial-cell/overview/

  look for ..

  Press Release (Web | PDF)
  Frequently Asked Questions (Web | PDF)
  Fact Sheet: Ethical and Societal Implications/Policy Discussions about Synthetic Genomics Research (PDF)
  Fact Sheet: Background/ Rationale for Creation of a Synthetic Bacterial Cell (PDF)

  ——————-

  Dr Craig Venter Announces First Synthetic Living Cell
  http://www.youtube.com/watch?v=eoqBSNmYJYI

  Synthetic cell – groundbreaking science or unethical?
  http://open.salon.com/blog/aliquot/2010/05/26/synthetic_cell_-_groundbreaking_science_or_unethical

  Synthetic Genome Brings New Life to Bacterium
  http://www.sciencemag.org/cgi/reprint/328/5981/958.pdf

  Craig Venter unveils “synthetic life”
  http://www.ted.com/talks/craig_venter_unveils_synthetic_life.html

  .

  காப்புரிமை என்பது தவிர்க்க முடியாதது. ஆராய்சிக்காக செலவழித்த பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பது அதை மேலும் புதிய ஆராய்ச்சிக்கும் பயன்படுத்துவது. இது ஒரு இடியாப்பச் சிக்கல்.

  *
  ஆனால் மென்பொருள் உலகில் வந்துள்ள ஓப்பன் சோர்ஸ் முறை மற்ற அறிவியல் ஆராய்ச்சித் துறைகளிலும் வருங்காலத்தில் வளர்த்தெடுக்கப்படலாம்.

  .

 11. Let me ask you this.

  Can a scientist create a peanut from scratch? What I mean by “from scratch” is without using any materials provided by nature or God. Man can not even create a peanut. we can claim I created this and that. from what? from where? man needs a base product to create anything.

  I always believe Creator is always few notches greater than what is being created. In simple way, I can not create something far greater than me. Anything I create is lower than me. Same thing applies to every aspect of life. If human being is a super talented thing in the universe, then its creator is also much greater than human. You and I can call that as God or some Super Natural Power. We can not deny the existence of that. Period.

  • Sam…. you have not come up with an intelligent argument as you may like to assume… it is the age old scream of brain washed believers which might gain the approval of similar brain washed losers but not create a stir in the rational sphere…

   but do not fret. all hope is not lost yet. you may still become a rational human being. all you have to do is extend your own so called argument to its logical conclusion and you will come to question the existence of that super natural power yourself.

   simply put, if such a power exists even it could not have come into existence on its own, as you have so eloquently expressed, “a base product is needed to create anything”. now, this supernatural power should also have been created out of something if it exists at all. aand where did that base product come from? the cycle will become endless. if you want to stop it by saying that power always remained there on its own and it didnt have to be created, then all you have to do is open your eyes istead and understand that the universe existed on its own instead of your imaginarry power. once that minor tweaking is done to your basic understanding then everything else is consistent with scientific thought processs. you dont need god to explain anything at all.

   • அருமையான விளக்கம் வித்தகன் !
    (once that minor tweaking is done to your basic understanding then everything else is consistent with scientific thought processs. you dont need god to explain anything at all.)
    தெளிவான கட்டுரை மருதையன்.
    திறந்தமனம் இருந்தால் புரிந்துகொள்வது எளிது.
    நன்றி.

   • திரு வித்தகன் அவர்களே,
    you have not come up with an intelligent argument as you may like to assume-என்பது உங்களுக்கும் பொருந்தும். இன்றைக்கு நம்பப் படும் Big Bang Theory-படி சில பில்லியன் வருடங்களுக்கு முன்னாள் Matter, Space, Time எதுவுமே இல்லை. அப்புறம் எப்படி //if you want to stop it by saying that power always remained there on its own and it didn’t have to be created, then all you have to do is open your eyes instead and understand that the universe existed on its own instead of your imaginary power// என்று வாதம் வைக்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இல்லை, அப்புறம் பெருவெடிப்பு [Big Bang] மூலம் தோன்றியது என்று விஞ்ஞானமே கூறுகிறது, அனால் நீங்கள், “அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். இது முரண்பாடானது. “கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சருன்னா, அந்தக் கடவுளைப் படைச்சது யார்?” என்பது ஒன்னும் புத்திசாலித் தனமான கேள்வி இல்லை. இங்க கண்ணில் படும் ஒவ்வொன்னும் இன்னொன்னுல இருந்து தான் வருது, அதே விதி இதற்கெல்லாம் காரணமாக விளங்கும் மூலத்துக்கும் பொருந்தும் என்று கட்டாயம் இல்லை. நியூட்டனின் விதிகள் அணு உலகிற்குப் பொருந்த வில்லை, அதற்க்கு குவாண்டம் இயக்கவியல் வந்தது. மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது. காலம், மெதுவாகச் செல்லும், பின்னோக்கியும் செல்லும் என்பது போன்றவை கண்கூடாக நிரூபிக்கப் பட்டவை. ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அவையெல்லாம் Experiments மூலம் நிரூபிக்கப் பட்டவை.அதுபோல இங்கு காணும் விதிகள் படைத்தவனுக்கும் பொருந்தும் என்று கேட்பது எப்படி நியாயம்? ஒன்று உருவாக இன்னொன்று காரணமாக இருக்கும், அது இவ்வுலக விதி, படைத்தவனை பார்த்து நீயும் இவ்விதிக்கு கீழ் படிந்து நட என்று யாரும் சொல்ல முடியாது. If you find some cause which is the cause of everything but is not caused by anything else that is God, until you reach that cause keep searching.

    • //இந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இல்லை, அப்புறம் பெருவெடிப்பு [Big Bang] மூலம் தோன்றியது என்று விஞ்ஞானமே கூறுகிறது, அனால் நீங்கள், “அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். //

     Big bang தான் பிரபஞ்சத்தின் தொடக்கமே. அது மட்டுமல்ல. காலத்தின் துவக்கமும் அதுதான். “Big bang” க்கு பத்து வருஷம் முன்னாடி…. என்றெல்லாம் சொல்ல எதுவுமே இல்லை. Big bang நடந்த அந்த மணித்தியாலம் மட்டுமே அனைத்து விதிகளும் காலமும் null and void. Big bang நடந்த உடனேயே ஒளியின் வேகம் 3 லட்சம் கி.மீ/ வினாடி. எல்லா இயற்பியல் விதிகளும் இப்போதும் எப்போதும் இருப்பது போல் அமுலுக்கு வந்தன. அதனால் பிரபஞ்சம் அறிவியல் விதிகளைப் பொருத்தவரை தானாகவே இருந்தது என்று வைத்துக் கொள்வது சரிதான். காரணம் அறிவியல் விதிகளும் பிரபஞ்சமும் சேர்ந்தே பிறந்தன.

     //நியூட்டனின் விதிகள் அணு உலகிற்குப் பொருந்த வில்லை//

     எந்தெந்த விதிகள் பொருந்தவில்லை? குவாண்டம் விதிகள் நியூட்டனின் எந்த சிந்தாந்தத்திற்கு முரண்படுகின்றன? சும்மா சொல்லாதீங்க. கணுக்காம விட்டுட மாட்டேன்.

     //ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அவையெல்லாம் Experiments மூலம் நிரூபிக்கப் பட்டவை.//

     அரைகுறையாக அறிவியலைப் படித்தால் இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமாகப் புரிந்து கொள்வீர்கள். வண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கவே ஒரு திறமையான ஓட்டுனர் தேவைப் படும் போது theory of relativity ஐ எல்லாம் நீங்களாகவே படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்தால் அதுவும் புராணக் கதை அளவில்தான் மனதில் பதியும். நீங்கள் சொல்வது போல ஒரு experiment-உம் எங்கும் நடக்கவில்லை.அதனால் மனதை வருத்திக் கொள்ளாதீர்கள். இப்படியெல்லாம் பொய் சொல்லி ஒரு அறிவியல் கொள்கையை சிதைப்பதற்குப் பதில் பேசாமல் வேர்க்கடலைத் தோல் அளவிலேயே நீங்கள் பேசலாம். உலகிற்கு ஒரு இழப்பும் வராது.

    • //மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது//

     சரியான காமெடிங்க!

    • //“அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். //

     தப்பு ஜெயதேவ தாஸ். தானாகவே உருவாகியது என்றுதான் சொல்கிறேன். உங்கள் வசதிக்கேற்றபடி வளைக்காமல் சொல்லி இருப்பதைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

   • //Big bang நடந்த உடனேயே ஒளியின் வேகம் 3 லட்சம் கி.மீ/ வினாடி. எல்லா இயற்பியல் விதிகளும் இப்போதும் எப்போதும் இருப்பது போல் அமுலுக்கு வந்தன. // See Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer? A dust particle has million of electrons. Science says not even a single electron originate on it own, it has to be taken from somewhere “as it is” OR is to be created by some energy [electron, positron pair production]. You can’t even create an insignificant particle which is one of millions of particles that reside in a dust without accountability, then how do you claim this universe itself came from nothing? [Universe: big Earth in a Big solar system, and sun itself is an insignificant star in a galaxy that contains millions and trillions of bigger stars and has a width of hundred of light years, and the universe contains millions and billions of such galaxies!]. You atheist guys are so intellligent, what is the logic by which you say all these came from nothing? Haa.. Ha.. Ha.. What created the laws of four forces of nature? [Gravitational, Electrostatic, weak & strong Nuclear forces]. Science says the Entropy will always go increasing. It means, the universe was ordered in the beginning and goes chaotic as times goes on but never in the reverse. Who kept things in the ordered manner in the beginning? All questions you guys never think about, just come out and abuse the drawbacks of regious systems and think yourself to be intelligent. Start finding answeres to all these questions, you will know God is there.

    • //Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer?//

     Excellent question. This is the question the ‘so called’ athiest afraid to ask and explore. Instead, they are hiding behind some ‘intelligent looking’ statements such as “அமுலுக்கு வந்தன”. If they are really keen to find the answers, they will never boast as “பழைய கடவுள் காலி!”. Sorry to say guys. You have to go a long way! You are too far off from the truch!

    • //See Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer? //

     Sigh!!!! I am tired Das. We are back to square one. If you want to assume someone switched on the computer, then the question of how that “someone” came into existence should also be addressed. If that someone/something should be assumed to have come into existence on its own, then universe could also be assumed to have come into existence on its own. Once universe is in existence then there is no need for that imaginary someone to explain any subsequent event. I promise you I wont take the bait anymore to continue this line of argument because you have forced me to say the same point four times.

   • ஹாய் வித்தகன், என்ன இது விடிய விடிய ராமாயணம் கேட்ட கதையா இருக்கு. கிழவன் குமாரனானது, இரட்டையரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இதெல்லாம் நம்மள மாதிரி பாமரப் பசங்களுக்கு புரியணுமேன்னு விஞ்ஞானிகள் சொல்லும் கதை. என்னோட பதிலில் பை-மீசான் பற்றி சொல்லியிருந்தேனே? அது தான் இரட்டையர் கதை. காலம் பின்னோக்கிச் செல்லுவதற்கும் இதே போல சோதனை முடிவுகள் உள்ளன. இவையெல்லாம் குவாண்டம் உலகில் மட்டுமே காண முடியும், அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடியாது. இயற்பியலில் MSc PhD பண்ணியிருந்தாலும் குவாண்டம் இயக்கவியல், ரிலேடிவிட்டி பத்தி நல்லா தெரிஞ்சவங்க கம்மி. ஐ.ஐ.டி, Institute of Mathematical Sciences, தரமணி, சென்னை IISc, Bangalore போன்ற இடங்களில் உள்ள பெரிய ஆட்களுக்கு மட்டுமே முழு விவரமும் தெரியும். மத்த எல்லா பயல்களும் பாமரர்கள்தான். ஆனா நான் சொன்னது அத்தனையும் நிஜம் நீங்க யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கலாம். முழுசா படிக்காம சும்மா புருடா விடுறேன்னு சொல்லி என்னை மட்டம் தட்ட வேண்டாம். இன்னொன்னு, நீங்க எப்ப பாத்தாலும் கடவுள யாரு படைச்சாங்கன்னு கேக்குறீங்க. ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சுக்குங்க. ஜடப் பொருள் இருக்கு [கல்லு, மண்ணு, காத்து எல்லாம்], பிரஞை உள்ளதும் இருக்கு [ பாக்ட்டேரியா, செடி கொடி, நாய், பூனை, மனுஷன் எல்லாம்]. இப்போ ஒவ்வொன்னுக்கும் ஒரு காரணம் இருக்கு. அந்த காரணத்துக்கு இன்னொரு காரணம் இருக்கு. கடைசியா எல்லாத்துக்கும் காரணம், [Ultimate Cause of all causes, which has no other cause] எதுவா இருக்க முடியும்ன்னு ஒரு கேள்வி வருது. அதுக்கு நீங்க சொல்வது முதலாவது என்று [ஜடம்]. அது சரியா? தப்பா? அத புரிஞ்சுக்க ஒரு விஷயத்தை யோசிங்க. ஒரு களிமண்ணு பொம்மை கூட ஒருத்தன் செஞ்சு வச்சாதான் வரும். தானா வராது. அதே மாதிரி, எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் ஜடப் பொருளில் இருந்து செய்யணும்னா அதுக்கு பிரக்ஞை உள்ள ஒன்றால் தான் முடியுமே தவிர தானா ஜடப் பொருளால மாறிக் கொள்ள முடியாது. [கம்பியூட்டர், தொலைபேசி, படப்பிடிப்புக் கருவி என்று எதுவுமே தானா வராது, யாராவது சென்ச்சாத்தான் வரும்]. இப்போ நம்ம கண்ணு பக்க கேமரா மாதிரி வேலை பண்ணுது, இதயம் மாதிரி ஒரு பம்ப் மனுஷனாலயே செய்வது கஷ்டம், நம்ம மூளை மாதிரி கணினி எங்கே இருக்கு. விமானத்தை செய்தவங்க முதலில பறவையை பாத்துதானே செய்தாங்க? ஆக, ஜடத்தை அற்புதமாக மாற்ற பிரக்ஞை உள்ள ஒரு [Conscious Entity] உள்ளத்தால மட்டும் தான் முடியும். அதனால தான் சொல்லுறோம், இந்த பிரபஞ்சம் என்ற ஜடத்தை பின்னால் இருந்து முடுக்க, இயக்க ஒரு பிரக்ஞை உள்ளவர் ஒருத்தர் இருக்க வேண்டும் என்று. இப்போ கேட்பீங்க அவருக்கு என்ன மூலமுன்னு. சரி கேட்டுகிட்டே போங்க. கடைசியா நீங்க இதுதாண்டா கடைசி, இதுக்கு மேல எதுவுமே இல்லை என்று நிற்கப் போவது ஒரு பிரக்ஞை உள்ளவரோடத்தான் இருக்க முடியும், [Conscious Entity] ஜடப் பொருளா இருக்க முடியாது.

    • எல்லாத்துக்கும் பின்னால ஒன்னு இருக்கனும் என்றாலும் அந்த ஒன்னை மதங்கள் விவரிக்கும் விதம் சரியானதா? அது மனிதனாகவூம் அல்லது மனிதக் குனங்களைக் கொண்டதாகவூம் தானா இருக்கவேண்டும் பின்னால் இருப்பதை என்னென்று தெரியாத என்பதற்காக அதனை மடத்தனமாக விவரிக்க முடியூமா?

  • ///In simple way, I can not create something far greater than me.///
   There are parents who create sons and daughters who are more intelligent, more lovable and more talented than themselves.

   • Hi Viththagan,

    Do you think I am just bluffing? Ha… Haa..Ha.. If you wish you can take any Physics fundamental book and verify everything I have told. According to Newton a system can have any energy, but in the quantum world the system can have not any energy but only allowed discrete energies. This is one deviation. Next, according to Newtonian mechanics, Force = Mass * Acceleration. But, when you accelerate an electron in a combined field of Electric & Magnetic in a double D shaped particle accelerator, after a certain speed this relationship was not found obeying. Newton assumed that the mass will remain same irrespective of the speed. But this not true, mass increases with speed. For a given strength of Electric and Magnetic field the electron gets accelerated in a circular path of predictable radius. The radius was more than predicted, because of the increase in mass of electron when it speeds up. This was solved by Einstein by his theory of Relativity. Next, the twin Paradox. [Two brothers, one who goes on a space journey is younger than one who stayed on earth: Imaginary story, but explains time dilatation]. The experimental proof is as follows: A particle called Pi-Meson which disintegerates into a Mu Meson and a Nutrino. On Earth this particle disintegerates so fast that it can travel only few meters of distance. Never beyond that. But the same Pi-Meson created in the upper atmosphere by cosmic radiation is able to reach earth safely travelling hundred of kilometeres. This was because Pi-Meson created by cosmic radiation that travels almost near speed of light lives longer, like a twin who goes at high speed living longer and hence survives the journey of hundreds of kilometers! Next about times reversal, I can not give any easy examples, you have to ask some of your friends who are good at theoretical Physics.

    • Jayadeva Das.

     //ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா?//

     Who came back from dead and grew younger? After he got married, did he end up turning into a kid and finish inside his dad’s testicles?

     //மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது//

     Believe me. You haven’t understood Theory of Relativity at all. Otherwise you would never have written the above.