முகப்புசெய்திதுரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!

துரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!

-

சென்னையில் “விடுமுறை குடும்ப நீதிமன்றங்களின்” ஆரம்ப விழா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது குறித்து “தி ஹிந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் பேசியதை வைத்து ஒரு செய்தியை இந்த நாளிதழ் உருவாக்கியிருக்கிறது.

பேச்சுரிமை என்ற பெயரில் மறைந்து கொள்ளும் இவர்கள் மீது சட்டம் பாயும் என்று அவர் பேசியதாக ஹிந்து சொல்கிறது. அடுத்து இந்த சொல்பொருளின் மறைபொருள் என்று இந்த நாளிதழ் சொல்வதென்ன?
தமிழக மீனவர்கள் கேட்பாரின்றி கொல்லப்படும் சூழ்நிலை உருவானால் தமிழகத்தில் ஒரு சிங்களவர் கூட நடமாட முடியாது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசியதைத்தான் சட்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்று போட்டுக் கொடுக்கிறது ஹிந்து பேப்பர். அதன் வாசகர்கள் இதன் உட்பொருளை விளங்கிக் கொள்ளாமல் போய்விடக்கூடுமோ என்று செய்தியை மட்டுமல்ல, தலைப்பிலும் இதையே சொல்கிறார் இந்த மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு.

முதலில் சீமான் பேசியது எந்த விதத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது? அவர் பேசியது சிங்களவர்களைத்தான். அதைக்கூட பேச்சாகத்தான் வெளியிட்டுள்ளார். அதற்காக அவரைக் கைது செய்ய முயன்றால் கூட வன்முறையை தூண்டினார் என்றுதான் சொல்ல முடியும். அதுவும் கூட தமிழகத்தில் அப்படி சிங்களவர்கள் நூற்றுக்கணக்கில் இல்லாத நிலையில் அது வெறும் உதார் பேச்சுதான்.

ஆனால் இதை வைத்து சீமானை தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர் போலவும் அதற்காக துரை. முருகன் ஆவேசம் கொண்டவர் போலவும் ஏன் சித்தரிக்க வேண்டும்? முக்கியமாக சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டை விட இதுதான் அபயாமானது, விசமத்தனமானது, நயவஞ்சகமானது.

இப்படி ஹிந்து பேப்பர், இந்திய அரசு, தமிழக அரசு இவர்களது ஆதரவில்தான் இலங்கை அரசின் கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கொல்வதைச் செய்கிறது. தமிழக மீனவர்களை இப்படி அடக்கி ஆண்டால்தான் ’தொப்புள்குடி’ உறவை வைத்து மீண்டும் இலங்கையில் புலிகள் போல வேறு ஒரு அமைப்பு தளிர் விடாது என்பதற்காகத்தான் இதைச் செய்கிறது. அதனால்தான் இந்திய அரசும் இதை கண்டு கொள்வதில்லை. கேட்டால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று அலட்சிமயமாக பதில் சொல்கிறது.

ஆக சிங்கள கடற்படையின் பின்னே இப்படிப்பட்ட அரசியல் ஆதாயங்களும், அரசுகளும் இருக்கும் போது தமிழக மீனவர் பிரச்சினையை சிங்களவருக்கு எதிரான பிரச்சினையாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அறிவில்லாமல் பேசுகிறார் சீமான்.

சிங்களக் கடற்படைக்கு எதிராக போராடவேண்டுமென்றால் அது ஹிந்து பேப்பர், இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை, மத்திய, மாநில அரசுகள் இவர்களையல்லவா குறி வைக்க வேண்டும்? அதை விடுத்து சென்னையில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் அப்பாவி சிங்களவர்களையா எதிரியாக பார்க்க வேண்டும்?

இப்போது போலீசு சீமானை கைது செய்வதற்கு அலைகிறதாம். அநேகமாக கைதும் செய்யப்பட்டுவிடுவார் என்றுதான் தெரிகிறது. ஆனால் அந்தக் கைதுக்கான திரைக்கதை வசனத்தை தி.மு.க அரசின் கைகளின் துணை கொண்டு எழுதியது இந்து ராம்தான் என்று தெரிகிறது.

தேசிய ஒருமைப்பாட்டின் யோக்கியதையை அறிய வேண்டுமென்றால் இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். அங்கே போய் துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு சமாதி அங்கேயே நிச்சயம். அதை விடுத்து சீமான் போன்ற உணர்ச்சிவசப்படும் அப்பாவிகளை ஒழிப்பதால் இந்திய ஒருமைப்பாடு நிச்சயமாக காப்பாற்றப்படாது.

 

 1. //ஆனால் இதை வைத்து சீமானை தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர் போலவும் அதற்காக துரை. முருகன் ஆவேசம் கொண்டவர் போலவும் ஏன் சித்தரிக்க வேண்டும்? முக்கியமாக சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டை விட இதுதான் அபயாமானது, விசமத்தனமானது, நயவஞ்சகமானது.//

  இதுதான் தேசிய ஓருமைப்பாட்டுக்கு ஊறு எனில், இந்தியாவிலே குடிமக்களாக இருக்கும் முஸ்லீம்களை, கிருத்துவர்களை வெட்டுவே, குத்துவேன் என்று பேசி வரும் ஆர் எஸ் எஸ் வெறியர்களை, தமிழர் விரோத சிவசேனாவினரை இந்த அரசு என்ன செய்யும்?

  //கேட்டால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று அலட்சிமயமாக பதில் சொல்கிறது.//

  கடந்த வாரம் இரு மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து இந்திய கப்பல்படை தளபதி இப்படித்தான் பதில் சொன்னார். அதாவது மீனவர்கள் எல்லை தாண்டிப் போய்விட்டார்களாம். சரி இருக்கட்டும், இந்திய எல்லையில் இருக்கும் ஆதாம் பாலத்தின் இடிப்பு வேலைகளை ஆய்வு செய்து வரும் பகுதிகளில் ரோந்து சுற்றி வந்த இந்திய படையினரை சில மாதங்கள் முன்பு சிங்கள இனவெறி ராணுவத்தினர் தாக்கினார்களே அப்போது அது சிங்கள் எல்லையாகத்தான் இருந்ததா?

  //தேசிய ஒருமைப்பாட்டின் யோக்கியதையை அறிய வேண்டுமென்றால் இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். அங்கே போய் துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு சமாதி அங்கேயே நிச்சயம். அதை விடுத்து சீமான் போன்ற உணர்ச்சிவசப்படும் அப்பாவிகளை ஒழிப்பதால் இந்திய ஒருமைப்பாடு நிச்சயமாக காப்பாற்றப்படாது.//

  எல்லாம் சரிதான் ஆனால் சீமானை அப்பாவி என்று சொன்னதுதான் கொஞ்சம் இடிக்குது…. 🙂

 2. ல்லாம் சரிதான் ஆனால் சீமானை அப்பாவி என்று சொன்னதுதான் கொஞ்சம் இடிக்குது….

  Ammman

  Avar oru appavi than thamizh thamizh entru sollutti sirai selkirar allava athanal ovar oru appavi, unnai pola oru nighty vanki sappittal ovar oru raja thanthiri illa

 3. இன்று 12.7.2010 காலை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்த சீமான் போலிசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது பிரிவினையைத் தூண்டியதாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படியாக இந்து பேப்பரின் நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட பிறகும் சீமான் ஏற்கனவே பேசியதை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

  சீமான் அப்பாவியல்லதான். ஆனால் இந்து ராம் வகையறாக்களோடு ஒப்பிடும் போது கொஞ்சம் அப்பாவியில்லையா?

 4. நாம் ரொம்பதான் சொரணை கெட்டுப் போயிட்டோம்.. டாஸ்மாக் சரகடிச்சு மூளை மழுங்கிப் போய்விட்டது..

  யார் செத்தா நமக்கென்ன.. சீரியல் பாத்தமா.. சரகடிச்சமா.. தூங்குனமான்னு இருக்கோம்..

  சீமானுக்கு வேறு வேலையில்லை..

 5. நல்ல பதிவு. இந்த அப்பாவிகள் தான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னார்கள். வெறும் உணர்ச்சி வசப்படுதல் மூலம் தவறான அரசியல் புரிதலைத் தான் மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். ஈழத்தில் உள்ள பிரச்சனையை வெறும் “தொப்பு கொடி உறவு” என்று சிறிதக்குவதன் மூலம் உண்மையை மக்களிடம் மறைப்பதன் மூலம், இவரும் ஆளும் வர்க்கத்திற்கே சேவை செய்கிறார். எனவே தான் “எதிரியின் எதிரி நண்பன்” என்கின்ற கேவலமாண அரசியல் வாய்பாட்டுக்குள் சிக்கிக் கொண்டு, மக்களவை தேர்தலில் இலைக்கு ஓட்டுக் கேட்டார்.

  சீமான் கைது விவாகரத்தில் ஜெ. வின் நிலைப்பாடு என்ன? போலி கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன?

  • சூர்யா விசயத்தில் சுயநலமாக செயல்பட்டார் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்

   • //சூர்யா விசயத்தில் சுயநலமாக செயல்பட்டார் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்//
    புரியவில்லை. விளக்கவும்

    • தம்பி சூர்யா நல்லவர். தமிழுணர்வுள்ளவர். அவருக்காக அந்த ரத்த சரித்திரத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அவரை மட்டும் அண்டர் த டேபிள் டீலிங்ல உள்ள உடுறோம்னு சொன்னாரே…அது பிரியலையா?

 6. Ayya,

  Seeman onthrum thamizarin thlaivar illai. Asin ilangailyil rajabakshe manaiviyudan ullavaruvathai kandukollatha seeman, suriya ilangai vizayathai mudindhu pona ondru enru kooriyathai onrum ketkaadha seeman onrum thamizarin representative alla.

  Ivanum oru ethirkaala arasiyal vaathi. aavalavu thaan thamishanin thaiyezuthu.

 7. சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தனக்கு ஓட்டு விழ வேண்டும் என்ற சுயநலத்திற்காக மட்டும் சீமான் போன்றவர்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட தமிழன் ஒருவன் உண்மையாகவே ஒரு சிங்களவனைத் தாக்கி விட்டால் (கொன்று விட்டால்) அது மிகவும் வருந்தத் தக்க செயலாகிவிடும். இங்கு இருக்கும் சிங்கள மாணவர்களையோ வியாபாரிகளையோ வீரமாகத் தாக்குவதற்குப் பதில் சீமான் தன் தம்பிகளுடம் இலங்கைக்குச் சென்று ராஜபக்சே குடும்பத்தினருடன் போராடினால் நன்றாக இருக்கும். ஒரு கல்லில் இரு மாங்காய். தமிழர்கள் பிழைத்துவிடுவார்கள்.

  முகாம்களில் அடை பட்டுக் கிடக்கும் தமிழரை விடுவிக்க முயற்சிகள் செய்ய வேண்டிய நேரத்தில் இது போன்ற பொறுப்பற்ற வன்முறைப் பேச்சுக்களால் அவர்கள் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்துவிடக் கூடாது.

  • நீங்கள் பொறுப்போடு ஐ. நா -Banki Moon அமைத்த இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்க அமைத்த குழுவை கலைக்க வேண்டும் என்று இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவை “காத்திரமாக” ஓர் அறிக்கை விடச்சொல்லுங்கள், இந்திய மீனவர்கள்(?)/ அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள்.

   இலங்கையின் இறையாண்மை, பேராண்மை, ….ராண்மை என்று இறுதியில் எந்த விசாரணையும் நடக்காமலிருக்க இந்தியா துணை செய்யாமலா இருக்கும்? அதுக்கு இப்பவே அதை செய்தால் தமிழக மீனவர்களின் உயிர்களையாவது காப்பாற்றலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

   அப்புறம், அகதி முகாம் (Concentration Camp) அத்தனை வசதிகளுடனும் இருக்கிறது என்று எழுதியவரும், தமிழகத்திலிருந்து ஒரு குரூப்பாக கிளம்பிச்சென்று ராஜபக்க்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தியவர்களும் எப்படியும் அகதிகளை முகாமிலிருந்து வெளியே கொண்டு வருவார்கள், கவலைப்படாதீர்கள். 🙂

   ///…..அவர்கள் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்துவிடக் கூடாது//

   இன்னும் என்ன பங்கம் நடக்கவில்லை அவர்களுக்கு, இனிமேல் பயப்பட.

   • என்ன தமிழ், செம்மொழியில இந்தத் தாக்குத் தாக்கறீங்க! தமிழ் நாட்டில் இருக்கும் சிங்களவர்களை அடித்தால் மீனவர்கள் எப்படி காப்பாற்றப் படுவார்கள் என்று சாதாரணத் தமிழில் விளக்குங்களேன். அடிக்கு அடி என்று செய்ய வெளியுறவுக் கொள்கையும் தேசியப் பாதுகாப்பும் கட்டப் பஞ்சாயத்து இல்லை. இன உணர்வு இருந்தால் மட்டும் போதாது. நிலையை சீர்தூக்கி முடிவெடுக்கும் அறிவும் வேண்டும்.

    • nilamayai seer tookuthal endral 500kkum merpatta meenavarkalai kolai seitha pinbum,katitham eluthuvathum,kandanam therivippathum niyayama tholare? neer meenavanaka irunthu un thanthai kollappattiruppin enna seiveer tholare?

    • முதலில் நம்மில் மனிதநேயத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் பேசுங்கள். மீனவர்களுக்கும் உங்களுக்கும் இரத்த பந்தம் இல்லாவிட்டாலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவானவர் என்பதை நான் நம்புகிறேன். நானும் அப்படிப்பட்டவன்தான் என்ற அடிப்படை மரியாதையுடனேயே என்னுடன் பேசுங்கள் என்று அன்புடன் சொல்கிறேன்.

     சீமான் சொல்வது எளிதில் உணர்ச்சிவசப் படும் தமிழன் யாருக்கும், என்னையும் சேர்த்துதான், இரத்தக் கொதிப்பை உண்டாக்கும். ஆனால் அது தீர்வாகிவிடாது என்பதுடன் இந்திய இலங்கை உறவில் விரிசல் ஏற்படுத்தும்.

     இலங்கை மீது இந்தியா போரிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் நிலைப்பாடைப் போல நேர்கோட்டு முடிவு என்னிடம் இல்லை. நான் தமிழீழம் கிடைத்தே ஆக வேண்டும் என்று நினைப்பவன் தான். ஆனால் சிங்கள அரசு புலிகளை அழிக்கத் தொடுத்த போர் தவிர்க்க முடியாதது என்றும் அந்நிலையைப் புலிகளின் தீவிரவாதம் உருவாக்கி விட்டது என்றும் நினைப்பவன்.

     அதே போல இலங்கை அரசுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் நேசக்கரம் நீட்டக் கூடாது என்ற நிலைப்பாடு உடையவன், ராஜபக்சே அரசு கொடுங்கோல் அரசு என்பதால். ஆனால் அங்கு முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு இந்திய அரசு உதவி செய்யாமல் இருந்து விடக் கூடாதென்பதால். ராஜபக்சே உடன் பேசித்தான் ஆக வேண்டும், அந்த அரசு மூலமாகத்தான் நிவாரண உதவிகளை அனுப்ப முடியும் என்பதால்.

     இங்கிருக்கும் சாதாரண சிங்களர்களைத் தாக்குவதன் மூலம் நாமும் குற்றவாளிகள் ஆகி விடுவோம். பதிலடியாக முகாம்களில் இருக்கும் தமிழர்கள் sitting ducks ஆக வதை படுவார்கள். சீமான் நினைப்பது போல சிங்கள ராணுவம் பயந்து போய் மீன்வர்களிடம் இருந்து பதுங்கி ஒளியாது.

     கடல் எல்லைப் பிரச்சினைக்கு சுருக்கமாகத் தீர்வு சொல்லும் அறிவு சீமானுக்கும் இல்லை எனக்கும் இல்லை. இது மத்திய அரசாங்கங்கள் பேசிப் பேசித்தான் தீர்க்க முடியும். மீனவர்கள் கவனமாகத்தான் கடலுக்குள் போக வேண்டும். இது உலகெங்கும் இருக்கும் பிரச்சினை. simple solutions கிடையாது.

     தனிக் கருத்தாக இன்னுமொன்று….

     மீனவர்கள் நம் எல்லைக்குள் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முக்கியமான செயல்பாடு சேது சமுத்திரத் திட்டமும் அதன் மூலம் கப்பல் படைக்குக் கிடைக்கும் மேற்பார்வை செய்யும் பலமும் என்று சொல்லலாம்.

     விடுதலைபுலிகள் காலத்தில் நடந்த கடத்தல்களும் இப்போது நடக்கும் அத்துமீறிய சுடுதல்களும் கடல் எல்லைப் படையின் சுதந்திரமான செயல்பாட்டால் தவிர்க்கப் படும். ராமர் பாலம் அது இது என்று வெட்டிப் பேச்சுக்களால் பல அரிய உயிர்களை இழந்து வருகிறோம்.

 8. /பல்கலைக்கழகம் வழங்குகின்ற ஆரய்ச்சிக்கான புலமைப்பரிசில் வசதிகளை தமது வெளிநாட்டுப் பயணத்துக்கும், பிறநாட்டுக் குடியுரிமை பெறுவதற்குமாகப் பாவித்துக் கொள்கின்ற மனிதர்களால் நிறைந்திருக்கின்ற யாழ் பல்கலைக்கழகமும் அதன் வழி வந்த கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒரு நாளுமே தத்தமக்குத் தேவையான மனிதவளத்தைக் கட்டியெழுப்ப எத்தனிக்காது./– இதுமட்டுமல்ல,பல்வேறு நாடுகளில் வசிக்கும் இலங்கைத்தமிழர்கள்,அமைப்பாக இல்லாமல்,தனிப்பட்ட ரீதியில்,”தமிழ்நாட்டில்(இந்தியா)” அசைய சொத்துக்களும் வாங்கியும்,சிறு தொழில் முதலீடுகளும் செய்துள்ளனர்.தற்போதைய “முன்னால் விடுதலைப்புலிகளின்” சர்வதேச கட்டமைப்பு,”இந்த சொத்துக்களை” காக்க,அவர்களின் முதலீடுகளின் உற்பத்தியை சந்தைப்படுத்த,தமிழ்நாட்டின் “மாஃபியா” கும்பல்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.தமிழ்நாட்டு தமிழர்களே,வெளிநாடுகளில் இருந்தால் சென்னையிலுள்ள தங்கள் சொத்துக்களை பாடுகக்க முடியவில்லை!,ஆனால்,”தலித்தியம்” என்ற போர்வையில் இயங்கும் “ரியல் எஸ்டேட் மாஃபியா” க்கள் இவர்களின் காவல் “பூதங்களாக” செயல்படுகின்றனர்!.இவர்களின் “அடுத்தக்கட்ட அரசியலேதுதான்”!,உள்நாட்டு அகதிகளின் புனர்வாழ்வு என்பதெல்லாம்,வெறும் உதட்டசைவே!.வருங்காலத்தில்,சொத்துக்களுக்காக தமிழ்நாட்டு மாஃபியக்களுடன் முரண்படும் போது,அதற்கு தகுந்த அரசியலுக்கு,மகிந்த ராஜபக்ஷே சகோதர்களுடன் இணைந்து தமிழக கோமாளிகளுக்கு எதிரான அரசியல் போராட்டமாக அறிவிப்பர்!.

 9. //தேசிய ஒருமைப்பாட்டின் யோக்கியதையை அறிய வேண்டுமென்றால் இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். அங்கே போய் துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு சமாதி அங்கேயே நிச்சயம்.

 10. சீமான் அப்பாவியல்லதான். ஆனால் இந்து ராம் வகையறாக்களோடு ஒப்பிடும் போது கொஞ்சம் அப்பாவியில்லையா?

 11. ‘இந்து சொல்வதெல்லாம் வேதமா ?’ என்று இந்து ராமைப் பழித்தவர் கருணாநிதி. (பர்சண்டேஜ் பிரச்ச்சனை). ஆனால் இன்று கூடிக் குலவுகிறார்கள்.

  ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பான்மையான தமிழர்கள் இதனைப் படிக்கின்றார்கள். வேறு ஒன்றுமில்லை. மற்ற பத்திரிக்கைகளில் ஆங்கிலம் வளர வேண்டிய அளவு வார்த்தை வளத்தோடு வருவதில்லை. அல்லது அதற்கான பொருளாதாரவசதி மற்ற தமிழ் பத்திரிக்கையாளர்களிடம் இல்லை.

  ஆங்கிலம் கற்பவர்களுக்கு இந்து, டெக்கான், எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு மாற்று என்ன ?

 12. மவுண்ட் ரோடு தமிழினத் துரோகி, சோமாரி,தினமலம் இந்தச் சவுண்டிக்கும்பலுக்குப் பயந்து பூஜை செய்து கொண்டிருக்கும் கலைஞருக்குத் தமிழர்கள் தேவையில்லை!

  தமிழர்களைப் பேச்சினாலும்,எழுத்தினாலும் ஏமாற்றி விடலாம் என்ற கணக்கு அவருக்கு உறுதியாகி விட்டது.
  துரை முருகன் ,சிதம்பரம் என்று பொருக்கியெடுத்தப் பொறுக்கிகளை வரும் தேர்தலில் தோற்கடிக்க இப்போதிருந்தே தமிழ் உணர்வாளர்கள் திட்டங்கள் தீட்டிச் செயல் பட வேண்டும்.

 13. வாய் கொழுப்பெடுத்துப் பேசித் திரிபவர்கள், களி திங்கவேண்டும் என்பது விதி!சீமான் பேச்சை வெளியிடலாம், ஆனால் துரை முருகன் பேச்சை வெளியிட்டால், அது சிண்டு முடிப்பு! என்னே கண்டு பிடிப்பு! ஒடுக்கப்பட்டவர்க்கு ஆதரவு எனும் போர்வையில், அறிவற்று,வரைமுறை அற்று பேசக்கூடாது என்பதற்கு சீமான்,வைகோ- இருவர்தான் சாட்சி! சிறுபிள்ளைத்தனமான , அபத்தமானப் பேச்சுக்களால் என்ன நன்மை!

   • tamil

    avarkal iruvarum athayavathu seikirarkal,odukkappattavarkalukkaka neer enna pudinkineer?

    தமிழ் என்ற போர்வையில், ஆங்கிலமா?

    ஒரு வேளை, உம்மைப் போன்றவர்களின் கூச்சலுக்குக் காரணம், புடுங்கத்தானா? (புகழை/பேரை/பணத்தை/வோட்டுக்களை…).

 14. இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். அங்கே போய் துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு சமாதி அங்கேயே நிச்சயம். //

  அவர்கள் அங்கேயெல்லாம் போக மாட்டார்கள், தீண்டத்தகாத இடத்துக்கு அவாளெல்லாம் போகப்படாது, அவர்கள் அங்கே போனால் அந்த போர்க்களபூமி கெட்டுவிடும், மானக்கெட்டவர்களின் சுவாசத்தால் விடுதலை வேள்வி அணைந்து விடலாம்

  அப்புறம் அது என்னங்க துரை.முருகன், அவர் பெயர் துரைமுருகன் தானே??????????????????

  கலகம்

 15. @ வித்தகன்,
  புள்ள குட்டிங்க நல்லா இருக்காங்களா? அவங்களை கவனிங்க. இங்க எல்லாம் கூவி யாருக்கும் ஒண்ணும் புரிய வெக்க முடியாது. இவங்க போட்டிருக்கற கண்ணாடி அப்படி.

  ஒரே தமிழர் தலைவராக தான் வர நினைக்கிறார் சீமான். அவருக்குக் குடை பிடிக்கிறார்கள் இவர்கள். இப்படித்தானே ஒரு இனமே அழிந்தது.

  நம் மக்களைக் காப்பாற்ற இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது இவர்களுக்கும் தெரியும். தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள இவர்களுக்கு வேறேது வழி?

  • என்ன தான் முர்பொக்காக நீங்கள் பேசினாலும் நேர்மையாக ஒருவர் கருத்தூகலை குரினல் அதை புரிந்து கொல்லவென்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க