ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தோரணமும், கொடியுமாக தெருவே பளபளவென்று மின்னியது. “உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை” என்று இசைத்தட்டு வழியாக எம்.ஜி.ஆர் தெருவில் பாடிக்கொண்டிருந்தார். குரல் வந்த திசையை நெருங்கிப் போகப்போக தெருவோரத்தில் ஆங்காங்கே கரைவேட்டியுடன் அ.தி.மு.க. கட்சிக்காரர்கள் பளிச்சிட்டனர். சூழ்நிலையின் பரபரப்பும், தெருவின் புதுப்பொலிவும் அங்கு என்னதான் நடக்கிறது என்ற ஆவலைத் தூண்டியது.
திடீரென புதுப்புது ஸ்கார்பியோ, இன்னோவா கார்கள் ஒரு ஐந்தும் சுமோ, மாருதி ஆம்னிகளும் சர்சர்ரென்று சீறிப்பாய்ந்து வர, ஹாரன் சத்தம் கிலியூட்ட, போகிற வருகிறவர்கள் சடாரென விலகி நின்று வேடிக்கைப் பார்த்தனர். நாலைந்து கார்கள் அஞ்சு நிமிசத்துக்கு முன்னால்தான் புதுசாக தரைக்கு இறக்கியது போல இருந்தது. கார்தான் புதுப்பொலிவு என்றில்லை. காரிலிருந்து இறங்கிய கரைவேட்டிப் பேர்வழிகளோ, இப்பொழுதுதான் கஞ்சிபோட்டு இஸ்திரி பண்ணியவர்கள் போல புதுமிடுக்குடன் தென்பட்டனர். ஆளோடு சேர்ந்து அயர்ன் பண்ணியிருப்பார்களோ?! என் பாட்டுக்குப் போனவனை சூழ்நிலை சுண்டியிழுத்தது. தொலைவிலிருந்து பார்க்கக் காட்சிகள் துல்லியம் பத்தாததால் பந்தலை நெருங்கினேன்.
“சூளைமேடு நாலாவது வட்டம் சார்பாக அண்ணனுக்கு இந்த பொன்னாடையை….” முழு வார்த்தையை முடிப்பதற்குள் “சூளைமேடு இளைஞர், இளம்பெண் பாசறை சார்பாக, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கி இந்த பொன்னாடையை”… வரிசையாக வந்த எந்த பொன்னாடையும் முழு வாக்கியமாக முடியவில்லை. “பகுதிக் கழகக் செயலாளரும், சங்கு ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான அண்ணன் சங்கு பாஸ்கரை தலைமையேற்று நடத்தும்படி இதய தெய்வம் அம்மா அவர்களின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்..! பேசி முடிப்பதற்குள் கிடுகிடுவென விழுந்த பொன்னாடைகள், அப்புறம் தோரணம், கொடிகள்,மைக்செட்டு என எல்லாவற்றுக்கும் என் மனம் செலவுக்கணக்கை போட்டுக் கொண்டிருக்கும்போதே, “அம்மா வாழ்க! புரட்சித் தலைவி அம்மா வாழ்க!” என்று ஒருவர் சாமி வந்தது போல கத்த, சுத்தியிருந்த கரைவேட்டிகள் தோளில் கிடந்த துண்டு எகிற கத்தினர். மின்னல் வேகத்தில் பந்தலுக்குப் பக்கத்தில் கூட்டத்தை பிளந்து கொண்டு ஒரு பளப்பள இன்னோவா வர, யாரும் எதிர்பார்க்காதபடிக்கு சரவெடி ஏரியாவையே பிளந்து கட்டியது.
மார்க்கெட் மாடு தெருவில் வெருண்டு ஓடி பந்தல்பக்கம் வர.. “தங்கத் தாரகை அம்மா வாழ்க!” என்ற காட்டுக் கத்தல் ஒலிபெருக்கியில் காற்றைக் கிழிக்க மாடு திக்கு திசை புரியாமல் வேறுபக்கம் ஓடியது. சத்தியமாக ஒரு அய்ம்பதாயிரம் வரை செலவாகி இருக்கும் என மனசுக்குப் பட்டது.
மைக்கை இரண்டு முறை பிடித்து பிடித்து விட்ட சங்குபாஸ்கர் கருணாநிதியை ஒரு பிடிபிடித்தார். “புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மாவைப் பார்த்து கேள்வி கேட்க இந்த கருணாநிதிக்கு அருகதை உண்டா? யார் இந்த அழகிரி? யார் இந்த கனிமொழி?… பேச்சு சூடேறி ஒரு கட்டத்தில் “நான் சவால் விடுகிறேன்! எச்சரிக்கிறேன்! ஏ! ஸ்டாலினே புரட்சித் தலைவி, ஏழைகள் வீட்டுத் தங்கம், திராவிடச்சிங்கம் அம்மா அவர்களைப் போல உன்னால் நாலுவார்த்தை இங்கிலீஷ் பேச தெரியுமா? வருங்கால முதல்வர் அம்மா என்பதை வரலாறு சொல்கிறது! கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களே… இதோ பொன்மனச்செல்வி அம்மா அவர்களின் ஆணைப்படி மக்கள் உங்கள் கதையை முடிக்க காத்திருக்கிறார்கள்…! பேச்சு நீளமும், ஆங்காங்கே பஞ்ச் டயலாக்கும், சொல்லி வைத்தார் போல விசில் சத்தமும் எதற்குத்தான் இத்தனை களேபரம் என்று ஆவல் மிகுந்து இன்னும் பந்தல் பக்கம் நெருங்கினேன்.
“இப்போது அம்மாவின் போர்ப்படைத் தளபதி… இதயதெய்வம் அம்மாவின் உண்மை விசுவாசி.. காவல் தெய்வம் அம்மாவின் கழக முழக்கம்…” மேற்கொண்டு அடுக்கிக் கொண்டே போவதைக் கேட்க விரும்பினாலும், கேட்க முடியாமல், திடீரென்று மேலிடத்தை நினைவுக்கு வந்தவர் போல சடக்கென எழுந்து மைக்குக்கு முன் நயினார் நாகேந்திரன் எழுந்தருளினார். குரலைக் கனைத்துப் பேசத் தொடங்குவது போல பாவனைகள் காட்ட… வரிசையாக பொன்னாடை வந்து விழுந்தது. முகம் பாலிஷ் போட்ட கிரானைட் போல வழு, வழு என பளிச்சிட்டது. ஆளை நிற்க வைத்து நெசவு செய்ததுபோல சட்டையும், வேட்டியும் சன்னமாக மின்னியது.
வெயிலை எப்போதாவது பார்க்கும் நெற்றியில் வியர்வை அரும்ப புத்தம்புது வெள்ளைக் கைக்குட்டையை ஒற்றி எடுத்தபோது இரட்டை இலை தங்க மோதிரம் நயினாரின் கைவிரல்களை அடைத்து தகதகவென மின்னியதை முப்பது அடி தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது. அங்கே எல்லாம் புதுசு, பிரமுகர்கள் வந்த கார்கள் புதுசு, பேசியவர்கள் பாதாதி கேசம் வரை பார்க்குமிடமெல்லாம் புதுசோ புதுசு, சுற்றுவட்ட தெருக்காட்சிகளும் புதுசு, பந்தலின் ஓரத்தில் நின்ற – மன்னிக்கவும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்த – கொஞ்சம் மக்கள் மட்டும் கந்தலான பழசாக தனியே தெரிந்தனர்.
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற எம்.ஜி.ஆர். பாட்டை நினைத்தபடி இன்னும் கூட்டத்தை விலக்கி முன்வரிசைக்கே போனேன்.. விசயம் விளங்கியது.. அங்கே பந்தலுக்கு கீழே குவிக்கப்பட்ட மணலில் அ.தி.மு.க கொடியின் நிறத்தை பெயிண்டில் வரைந்து மூன்று பெரிய தண்ணிப் பானைகள் இடைவெளிவிட்டு குந்தியிருந்தன. முப்பெரும் பானைகளின் தாய் பானையாய் அவைகளுக்குப் பின்னால் டிஜிட்டலில் அச்சிடப்பட்ட ஜெயலலிதாவின் முகம் தொங்கியது. ஒரு கோணத்தில் முதுமக்கள் தாழிபோலவும் ஜெயலலிதாவின் உருவம் தெரிந்தது. மறக்காமல் பானைகளில் இரட்டை இலை சின்னம் கண்ணைப் பறிக்கும்படி பளிச்-சிட்டது.
தண்ணீர் பந்தலை திறக்கும் நிகழ்ச்சியாக.. பானைக்குள் டம்ளரில் மொந்து நயினார் குடிக்க.. மீத தண்ணியை காசி தீர்த்தம் போல கரை வேட்டிகள் தள்ளுமுள்ளோடு பகிர்ந்து கொண்டன. “த்தூ இதுக்குத்தான் இவ்வளவு படாடோபம், ஆர்ப்பாட்டமா” என்று நான் மனம் நொந்த வேளையில், நயினாரின் குரல் வெடித்தது.
“மக்களின் தாகம் தீர்க்க, தாயுள்ளத்தோடு அம்மா தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல் திறக்கச் சொல்லி ஆணையிட்டதற்கிணங்க.. இந்தப் பகுதியில் தண்ணீர் பந்தல் திறந்த கழகக் கண்மணிகளே.. இதே சுறுசுறுப்போடு பணியாற்றி கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்வரை இரத்தத்தின் இரத்தங்கள் தாகம் தணியாது.. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தாகம் தணிக்கும் மக்கள் தெய்வம் அம்மாவின் ஆட்சி அரங்கேறும் நாள் வெகுதொலைவில் இல்லை… இது சத்தியவாக்கு…” நைனார் நீட்டிக்கொண்டே போனார். சங்கு பாஸ்கரும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது போல சுற்றியிருப்பவர்களை திரும்பிப்பார்க்க, கைதட்டல் இன்னும் பலமானது.
பக்கத்து பக்கத்து தெருக்களில் திரும்பியபோது விஜயகாந்த் பானை, கலைஞர் பானையும் கண்ணில்பட்டது. ‘அறுபதாண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும், மக்கள் தொண்டாகவும் வளர்ந்திருக்கிறது. இந்த மானக்கேட்டிற்கு ஒரு திறப்பு விழா, அதை ஒலிபரப்ப மைக்செட்டு!
ஏரியும், ஆறும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. ஏமாளி மக்களுக்கு தண்ணிப்பானை!
தொடர்புடைய பாடல்
______________________________________________
– புதிய கலாச்சாரம், ஜூலை – 2010
______________________________________________
கொடுமை தோழர் ………. தண்ணீர் பானை வைத்தால் கடமை முடிந்தது ………..
பஸ் ஸ்டாப் அதற்க்கு நிழற்குடை வைத்ததை எல்லாம் தொகுத்திக்கு செய்தார்
என்ற பெயரிலே வரும் கொடுமை ……………… தண்ணீர் பந்தலுக்கு விளம்பரம்
மைக் செட்
ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய தெரிந்தவர்களுக்கு, மக்களுக்கும், அணிகளுக்கும் என்ன வகையான அரசியல் சொல்லி தர வேண்டும் என்பது ‘தெரியாமல்’ இருப்பது ஒன்றும் அதிசயமல்ல!
//‘அறுபதாண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும்//
சிறுவாணி, தாமிரபரணி பன்னாட்டு கம்பனிக்கு
நமக்கோ கடல் தண்ணி
மனித நேயம் செத்து கொண்டிருக்கிறது என்பதனை அழகாக எடுத்துக் காட்டும் நிகழ்வு இது..
நான் கேள்விப் பட்டிருக்கிறேன். நம் முன்னோர்கள் எல்லோரும் தங்களின் வீட்டு முற்றத்தில் வழிப்போக்கர்களுக்காக நீரும் மோரும் வைத்திருபார்கள் என..
சக மனிதனின் தாகம் தீர்ப்பதையே ஒரு பெரிய சாதனை என்றென்னும் மக்களே.. சக மனிதனுடைய தாகம் தீர்ப்பது, அவன் பசிக்கு உணவளிப்பது நம் மீதுள்ள கடமை என்பதை நினைவில் கொள்ளுஙள்.
இவையெல்லாம் சாதனைகள் அல்ல மனிதம் படும் வேதனைகள்..
வேதனையுடன்,
ரபீக்.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை ( அரசியல் ) என்றும், மக்களுக்கு தண்ணி காட்டுவதே எங்கள் தொழில் என ஸிம்பாலிக்காக சொல்லவும் கூட இந்த நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கலாம்.தயவுசெய்து தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்காதீர்கள்!
நதிக்கரை நாகாரீகம் – ஆனாலும் திராவிடம் :
வெள்ளையன் ஓடம் விட்ட நதி
பச்சையப்பன் நீராடிய நதி
கட்டாந்தரையை கண்டிராத நதி
வற்றாத ஜீவ நதி.
துணி வெளுக்கும் படித்துரைகள்;
படகுத்துரை மண்டபங்கள்;
பஞ்சகாலம் வந்தபோதும்
சஞ்சலமின்றி ஓடும் நதி!
***
ஆற்றின் அமைதியும்,
இருளும் நிலவும்,
சூரியனும் சூனியமும்
அழகுச் சித்திரம்தான் – ஆனாலும்
கண்களை மூடிக்கொண்டுதான்
காணவேண்டும்!
____
எங்களின் பிறப்பிடம், வசிப்பிடம்
வாய்ததெல்லாம் இங்கேதான்.
அதனால் – இது ஆறறங்கரை நாகாரீகம்:
ஆனாலும் திராவிடப் பாரம்பாரியம்!
தெளிவாய்த்தான் கூறுகிறோம்;
உங்களின் குழப்பதிற்கு
நாங்கள் எப்படி பொறுப்பாவோம்?
***
அமேசான் வாசிகள் போல்
ஆற்றங்கரைக் குடில்கள்.
எட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.
கரையை சாதித்துவிட்டால்
குந்திக்கொள்ளத் தரை!
நேரான கோடுபோட்ட தெரு –
ஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.
பதினாறடிச் சறுக்கலில்
மலைக் கிராமம்போல.
ஆனால் ஊரில்லை, பேரில்லை,
முகவரியுமில்லை!
தெருவுக்கும் பெயரிடவில்லை,
தெருவிளக்குமில்லை – அதனால்
மின்சாரமுமில்லை!!!
***
ஒன்றுபோலத்தான் குடில்கள் – ஆனால்
கூரைகள்?
வியந்துபோவீர்கள்:
அத்தனையும் சித்திரங்கள்;
கண்ணைப் பறிக்கும் வண்ணமயம்.
வர்ண ஜாலம் வீசும்;
வர்ண வாசமும் வீசும்!
***
அதோ…
அந்தப் படகுதுறைக்குப் பக்கதில்
எமது குடில்.
வியப்பாயிருந்தால் வந்து பாருங்கள்
கண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை…!
***
இதோ…
செல்வியின் சிரிப்பு,
கண்களில் தெறிக்கும் குறும்பு.
கன்னத்துக்குக் கன்னம் எட்டடி.
நெற்றிக்கும் கழுத்துக்கும் எட்டடி.
கனச்சிதமாய் கூரையில்
கவிழ்ந்து கிடக்கிறார்.
“அறுபைத்தைந்தின் அகவையை எட்டும்
தங்கத் தாரகயே வா…’ – கட்சிக் கலரில்.
…ழ்த்த வயதில்லை – வணங்குகிறோம்”
எனும் எச்சம் தென்னங்கீற்றில்
சுருண்டு கிடக்கிறது!
அந்தக் குறும்புச்சிரிப்பு
உடம்பின் வருணணைக்கா
என்பது புரிந்தபாடில்லை.
மயிலை மாங்கொல்லையில்
கருவாடாயக் காய்ந்து கிடந்ததை
முந்தின மாதம் மீன்பாடி வண்டியில்
எங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்!
***
இந்த வாசல் தட்டியைப் பாருங்கள்…
மதுரைக்கார அழகிரி!
ஊருக்குப் புதுமுகம்.
அண்ணா சாலையில்
ஆளுயரத் தட்டியில்
அனாதையைய் நின்றிருந்தார்.
இதோ… இப்போது இங்கே!
முட்டிவரை வெட்டிவிட்டதால்
நாலடி உயர வாசலில்
கச்சிதமாய் நிற்கிறார்.
போகும்போதும் வரும்போதும்
கைகூப்பி வணக்கம் போடுவார்!
***
அந்த முனுசாமி வீட்டிலேதான்
வைகோ இருக்கிறார்.
ஐயகோ, கலங்கிய கண்கள்.
வைகோ கைகாட்டிய இடத்தில்
நட்சத்திர வடிவில்
முத்துக்குமார் படம்.
அதற்குக் கீழே
ஈழப் படுகொலைப் படங்கள்.
“ரத்த ஆறு ஓடும்” என்று
‘ராவா’கப் பேசினவர் – அந்தோ…
சித்தம் கலங்குகின்றார்;
சிந்தையும் கலங்கினாரே…!
***
கஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே
விஜயகாந்த் இளிக்கிறார்.
கருப்பு எம்ஜியாராம் – ஆனால்
கண்கள் ‘செவ செவ’ என்று இருக்கும்.
கருப்பு எம்ஜியாருக்குப் பக்கதில்
பொறுப்பான பொண்டாட்டி.
அவருக்குப் பக்கதில்
ஆசை மச்சான்.
அதற்கும் பக்கத்தில்?
ரெண்டு காலிக்கட்டங்கள் – வாரிசுகளுக்கு!
கேப்டனின் ஆக்ரோஷம்
துல்லியமாகத் தொ¢கிறது…
இந்த முறைக்கு பழுக்கப்போவது
எந்தத் தொண்டனின் கன்னமோ…?
***
முந்தானாள் வரையிலே
மங்காத்தா கூரையிலே
மருத்துவர் ‘மாங்காய்’ ராமதாசி இருந்தார்.
கூடவே அன்பு ‘மனி’ மகனும்.
அருமைத் தங்கையும்கூட இருந்தார்கள்.
ஆனால்… ஏனோ தொ¢யவில்லை –
‘வீட்டுக்கு விளங்கலை’யென்று
மங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.
இப்ப்போது அவள் கூரையில் ¡¢த்தீஷ்!
ராமனாதபுரத்துச் சொந்தம்
ராசி பார்த்து
ரயிலேறி கொண்டுவந்தது!
***
ஆனால் ஐயா,
சிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் –
இந்த நடிப்புக்கு!
ஒரே முகம் – ஒரெயொரு முகந்தான்.
அதிலே மகிழ்ச்சியும் இருக்கும்,
சோகமும் ததும்பும்.
சூழ்ச்சியென்பது இருக்காதைய்யா.
இந்தச்சிக்கலான முகம்
இங்கிருந்து மூன்றாவது குடிசை!
யாரெனக் கேட்பீரேல்…
அவர்தான் அண்ணன் திருமா.
எப்படி ஐயா, எப்படி முடியும்?
ஆண்டாண்டு காலத்துக்கும்
இந்த ஆண்டையின் நடிப்பை
மறக்க முடியுமா?
மறுக்கத்தான் முடியுமா?
***
முக்கால்வாசிக் கூரைகளிளும்
ஓய்வெடுக்கும் முதியவர், கலைஞ்சர்.
இவர் –
ஏழயின் சிரிப்பில்
இரைவனைக் கண்டுவிட்டால் –
திண்ணை காலியாகக் காத்திருக்கும்
சென்னைத் தளபதி
பதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்!
***
கூட்டிக் கழித்தால்
தமிழகத்து எதிர்காலங்கள்
தொங்கிக் கொண்டிருக்கின்றன –
எங்கள் கூரைகளில்!
எப்படியென்று கேட்கிறீர்களா?
கர்ம வீரர்களாகவும், கலைஞ்சர்களாகவும்,
புரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,
தளபதி / இளைய தளபதிகளாகவும்,
கேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,
சிறுத்தைகளாகவும், பன்றிகளாகவும்,
கருப்பு நிலாக்களாகவும்,
சூ¡¢யன் களாகவும், நட்ச்சத்திரங்களாகவும்,
அமாவாசைகளாகவும்,
விடிவெள்ளிகளாகவும், வெட்டுக் கத்திகளாகவும்,
வெங்காயங்களாகவும்,
மொத்ததில்…,
மொத்ததில்…
ஆ¡¢யர்களாகவும், திராவிடர்காளாகவும்!
***
அடடா…
அது அவர்கள் நாகா£கம்!
அவர்களுக்கு அவர்களாகவே
போர்த்திக் கொண்ட
நாமகரணத் துண்டுகள்!
புரியாமல் தவிக்கும் பிண்டமே…
இதுதாண்டா அரசியல் நாகாரீகம்…!
ஆனாலும் எங்களுக்கு
ஆற்றங்கரை நாகாரீகம்.
ஆனாலும் நாங்கள் ஆரீயர்களல்ல…
திக்கற்றுப் போன திராவிடர்கள்தான்!
***
இன்னொரு நாகரீகம் …
சினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு?
பம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்
கரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.
இந்திய சே நாய்களைப் பற்றிய
இங்கிலீசுப் படம் –
அள்ளிக் கொண்டுவந்தது ஆஸ்கார்களை…!
மேட்டுக்குடி மகிழ்ந்தது.
நடுத்தரம் சிலிர்த்தது.
வறுமைக் கோட்டில் இருந்தவர்களும்
கொண்ண்ண்டாடி விட்டார்கள்.
கொண்டுவந்துவிட்டான் ஒரு இந்தியன்.
அதுவும் ஒரு தமிழன் – டமிளிலேயே பேசினவன்.
கவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் –
இந்தியக் கவுரவத்தை
சந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு!
***
ஆரிய மாயையும்
திராவிட சூழ்ச்சியும்
உங்கள் நீரோட்டத்தின்
ஊற்றகிப் போனது.
அதன் ஜனனாயக ஒழுக்குத்தான்
இந்தக் கருப்புச் சாக்கடை.
இந்தச் சாக்கடையின் விளிம்பில்
சிக்கிக்கொண்டுவிட்ட நாங்கள் –
இதோ…
இந்தக் கரைச்சறுக்கலை
இறுகப் பிடிது மேலேறிவிட்டாலோ…
எங்களின் நொ¢சல்
உங்களை நசுக்கிவிடும்.
எங்களின் வியர்வை நாற்றத்தில்
உங்களின் மூச்சுத் திணறும்.
எங்களின் வயிற்றில்
சோற்றுக்காய் சுரந்த அமிலம்
உங்களை சுட்டொழித்துவிடும்.
இந்தக் கருப்புச் சாக்கடையில்
ரத்த வீச்சம் வீசும்!
– புதிய பாமரன்.
-உ-/-=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=-/~ #!”நல்ல வேளை.., இதெல்லாம் ‘வெறுந்’-தண்ணிப் பானைதான்..!_%’அந்த’த் தண்ணி வழங்கும் பானையில்லை..=அதுக்காக ஆண்டவனைக் கும்பிட்டுப் படுப்போம்..!!”={’அது’க்கெல்லாங் காசுவேணும்ங்கிறீங்களா..?–அப்படி நிம்மதி கொள்ளமுடியாது..;_ஏன்னா,..”பெரீய’ காசு ‘பாக்க’ச் ‘சின்ன்ன’க் காசெப் போட்டுப் ‘புடிச்சா’லும் புடிப்பாங்க…இவனுகளெப் பத்திச் சொல்லமுடியாது..!}=-இவண்,”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழ்கக் **கொங்குதேய-நின்று.-=சிவ**சிவ=-