Saturday, June 15, 2024
முகப்புசெய்திபின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!

பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!

-

சாமா பின்லேடனது மகனின் பெயர் ஓமர் பின்லேடன். ஒசாமாவின் குடும்பம் சவுதியில் உள்ள பணக்காரக் குடும்பங்களில் ஒன்று என்பதை அறிந்திருப்பீர்கள். 29 வயதான ஓமர் சமீபத்தில்தான் தன்னைவிட 25 வயது அதிகமுள்ள ஆங்கிலேய பெண்ணான சாய்னாவை விவாகரத்து செய்தார்.

தற்போது ஹாலிவுட்டன் பிரபல நடிகையான 35 வயதுள்ள டிரி பாரிமோரோடு டேட்டிங் செல்வது தனது கனவு என்று ஓமர் அறிவித்துள்ளார். இந்த நடிகைதான் ஹாலிவுட்டில் மிகவும் அழகானவர் என்றும் வழிந்துள்ளார்.
அமெரிக்க பண்பாட்டின் மீது தனக்குள்ள காதலை விவரித்துள்ள ஜூனியர் பின்லேடனுக்கு, ஜிம்  கேரியின் படங்கள், அமெரிக்கன் கால்பந்து, ராக் இசை, மடோனா என்றால் மிகவும் விருப்பமாம். தோஹாவில் தங்கியிருக்கும் ஓமருக்கு தனது தந்தை உயிருடன் இருப்பதாகவும், ஆனால் எங்கிருக்கிறார் என்பது தெரியாது என்றும் கூறுகிறார்.

அப்பனுக்கு பிள்ளை தப்பாது என்பதற்கு முரணாக இந்த பிள்ளை தப்பி பிறந்திருக்குமோ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. ஓமரின் அமெரிக்க மோகம் என்பது சமீபத்தில் வந்ததாக இருக்காது. அதற்காகன வரலாற்றுக் காரணமும் அதை மறுக்கிறது.

இசுலாமிய சர்வதேசியம் பேசும் பின்லேடன் முழுக்க முழுக்க அமெரிக்கா தயாரிப்பாகும். ஆப்கானை ஆக்கிரமித்த ரசியாவை விரட்டுவதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ திட்டமிட்டு தயாரித்த பொருள்தான் பின்லேடன். 80, 90 களில் தீவிர அமெரிக்க ஆதரவாளராக பின்லேடன் இருந்த போது அவரது குடும்பத்தினர் இயல்பாகவே அமெரிக்க கலாச்சாரத்தின் இரசிகர்களாகத்தானே இருக்க முடியும்?

அரபு நாடுகளின் எண்ணெய் தொழிலை அமெரிக்கா கட்டுபடுத்துவதற்கேற்ப, ஷேக்குகளின் பணம் அமெரிக்காவில்தான் முதலீடாக இருக்கிறது. மேட்டுக்குடி ஷேக்ககுகள் ஏழை இசுலாமியர்களை இசுலாத்தின் படி வாழவேண்டும் என்று பிரச்சாரம் செய்து நிதி உதவி வழங்கிவிட்டு தங்கள் வாழ்க்கையில் தீவிர அமெரிக்க நுகர்வு வெறியர்களாகத்தான் உள்ளனர். அதில் எல்லா பொறுக்கித்தனங்களும் உண்டு.

பின்லேடன்  வகையறாக்கள் இப்போது அமெரிக்காவை எதிர்ப்பது என்பது தற்செயலானதுதான். அடிப்படையில் ஜிகாதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் நண்பர்கள்தான். தற்போதைய முரண்பாடு என்பது நீடித்ததாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாளையே இவர்கள் சேரமாட்டார்கள் என்று யாரும் உத்திரவாதமளிக்க முடியாது.
பின்லேடன் குடும்பத்தில் அவர் மட்டும் போராளியாக வாழ்க்கையைக் கழித்த போதும், குடும்பத்தினர் வாழ்வை ஜாலியாகத்தான் கழிக்கின்றனர். எனவே தந்தை மதவாதியாகவும், மகன் அமெரிக்க அடிமையாகவும் இருப்பதில் முரண்பாடு இல்லை. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமம் இசுலாமிய மதவாதிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் பகைவர்கள் இல்லை என்பதே. கூடவே ஏழை நாடுகளின் ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்தக் கூட்டம்தான் தங்கள் வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது.

பாக்கிஸ்தான் தீவிர இசுலாமியக் குடியரசாக இசுலாமியர்கள் மத்தியில் அறியப்படுகிறது. ஆனால் உலக அளவில் செக்ஸ், போர்னா விவகாங்களை இணையத்தில் அதிகம் தேடும் நாடு அதுதான் என்று ஒரு ஆய்வு கூகுளின் தேடுதல் விசயங்களை வைத்து கூறுகிறது. இசுலாமிய உட்பிரிவுகளுக்குள்ளேயே குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் நாட்டில், பெண்களை புர்கா முதல் பல்வேறு அடிமைத்தனங்களில் ஆழ்த்தி இன்பம் காணும் நாட்டில் ஆண்கள் மட்டும் இணையம் மூலம் லவுகீக விசயங்களை துய்க்கின்றனர். ஆக தீவிரமதவாதம், ஒழுக்கம் என்பது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதவாதக்கூட்டத்தின் பிடியிலிருந்து ஏழை இசுலாமியர்கள் வெளியேற வேண்டும். அப்போதுதான் வர்க்கமென்ற முறையில் தம்மை ஒடுக்கும் மேட்டுக்குடி பணக்கார ஷேக்குகளையும், அவர்களுக்கு காவல் அரணாக இருக்கும் அமெரிக்காவையும் எதிர்த்து விடுதலை பெற முடியும்.

ஆக ஓமர் பின்லேடன் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மைனர் பிள்ளைதான்!  தப்பிப் பிறந்த பிள்ளை அல்ல !!

 

 1. […] This post was mentioned on Twitter by ஏழர, சங்கமம். சங்கமம் said: பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!: ஒசாமா பின்லேடனது மகனின் பெயர் ஓமர் பின்லேடன். ஒசாமாவின் குடும… http://bit.ly/b6MGsB […]

 2. இளமையில் அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்து சகலத்தையும் அனுபவித்து விட்டு, தனது நாற்பத்தி ஐந்தாவது வயதில்”இஸ்லாமே உயர்ந்த மார்க்கம்” என்று அமெரிக்காவுக்கு எதிராக திரும்புவார் பாருங்கள்.

 3. உடனே, இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமியர்களை நடவடிக்கைகளை விமர்சிப்பதின் மூலம், வினவு, இஸ்லாத்தை கேவலப்படுத்துகிறது என்று சொல்லாமல், இக்கட்டுரையின் மையப் பொருளில் விவாதியுங்கள் இஸ்லாமிய நண்பர்களே! அத்தகைய விவாதத்தின் மூலம் தான் ”இஸ்லாம்-இஸ்லாமியர்கள்-தலிபான்கள்-அரபு ஷேக்குகள்” போன்றவைகளை என்னால் புரிந்து கொள்ள முடியும். மத குருக்கள் அல்லது மதத்தலைவர்கள் ஏன் தங்களுடைய கொள்கைகளை பின்பற்றவில்லை? உடனடியாக கொள்கைகளை பின்பற்றாதவர்களுக்கு மறுமையில் சொர்க்கம் கிடையாது என்ற பதிலில் எனக்கு நம்பிக்கை இல்லை. “பூமியில் உள்ள வாழ்வு” என்ற பொருளில் பதில் அளித்தால் நலம் பயக்கும்.

  • A mathematician is a person whose primary area of study or research, or both, is the field of mathematics..
   A chemist is a scientist trained in the science of chemistry. Chemists study the composition of matter and its properties such as density, acidity
   A physicist is a scientist who studies or practices physics.

   Islamic fundementalist is a person who follow the fundementals of islam (poor/rich)

   • அடிப்படைவாதத்தை பின்பற்றும் இசுலாமிய அடைப்படைவாதிகளை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா, ஏன்?

 4. ஒரு மனிதன் தான் என்ன வாகபோகிறோம் என்று அவன் தீர்மானிப்பதற்கு முன்னதாகவே அவனுடைய வர்க்கம் தீர்மானித்துவிடும்.- காரல்மார்க்ஸ்.
  தான் மதத்தின் பிரகாரமே நடக்கிறேன் என்பதெல்லாம் ஒப்புக்குச் சப்பாணிதான்.

 5. ஓமருக்கு தன்னுடைய அப்பா ஒசாமா ன்னு தெரிந்திருக்கு. ஒசாமாக்கு இப்படி ஒரு பிள்ளை இருப்பது தெரியுமா. ஏன்னா ஒசாமாக்கு பிள்ளைகளின் எண்ணிக்கை 45க்கு மேல்ன்னு சொல்றாங்க

 6. எனக்கும் ஜிம்கேரி படம்னா பிடிக்கும்.HBO ல காலைல அவர் படம் போட்ருந்தாங்க.பாத்துட்ருந்தேன்.அதுக்குள்ள கரன்ட் போச்சு.

 7. //பாக்கிஸ்தான் தீவிர இசுலாமியக் குடியரசாக இசுலாமியர்கள் மத்தியில் அறியப்படுகிறது. ஆனால் உலக அளவில் செக்ஸ், போர்னா விவகாங்களை இணையத்தில் அதிகம் தேடும் நாடு அதுதான் என்று ஒரு ஆய்வு கூகுளின் தேடுதல் விசயங்களை வைத்து கூறுகிறது. //

  ஏன், அரபு நாடே எதாவது உத்தரனுதுக்கு கொடுத்திருக்கலாமே, கிடைக்க வில்லையா, பாகிஸ்தான் இந்தியாவின் துணை கண்டம், உன் பங்காளி உன்னைமாதிரி தான் இருப்பான்.

  //பெண்களை புர்கா முதல் பல்வேறு அடிமைத்தனங்களில் ஆழ்த்தி இன்பம் காணும் நாட்டில் ஆண்கள் மட்டும் இணையம் மூலம் லவுகீக விசயங்களை துய்க்கின்றனர்.//

  சட்டம் அப்படிலாம் எதுவும் தேவ இல்ல??, எவ அவுத்து போட்டுடு போவன்னுதான் நீயும் பாக்குறே. உனக்கு அறிவு இருந்தால் இதற்கு பதில் சொல். பெண்ணின் முகத்தையும், கைகளையும் தவிர மற்ற பகுதிகளை உனக்கு பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி போவதால் நாட்டுக்கு என்ன பயன், உனக்கு என்ன பயன். அப்பா அம்பாளையும் பொம்பளையும் அம்மணம போன உனக்கு ஜாலி தான்.

  //கூடவே ஏழை நாடுகளின் ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்தக் கூட்டம்தான் தங்கள் வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது.//

  நீதான் பாத்தியா, சர்ச்சைக்குரிய கருத்துக்கள சொல்றப்ப அதுக்க என்ன ஆதரம்னு உனக்கு சொல்ல தெரியாத, ஆதாரத்த சொல்லு எல்லாருமே எதுக்குவாங்க, சும்மா பக்கத்த நிரப்புரதுக்க்காகவும், இவனுகள எதாவது சொல்லன்னுன்னும் சொல்ல கூடாது.

  • plz do not use any bad ward MR.Faisal,,,,,,,,, this article doen’t mention anything wrong about islam. its true,,,,,,,,,,, the middle class,poor family only following the islam religion. most of the samiyar’s, father’s in church, muthavaa’s are being bad then the ordinary people, u must understand no one didn’t mention wrong in islam, all the religion in the world is teaching us good ,,,,,,,,,,,, as u misunderstand,, just come outside even in saudi u wil know abt it

   • தங்களின் கருத்துக்கு நன்றி தோழரே, நித்யனந்தாவையும், பிரேமானதவையும் பார்த்துவிட்டு அப்படித்தானே அனைத்து தரப்பு மேல்மட்ட வாதிகளும் இருப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டு வைத்து உள்ளீர், முடிந்தால் ஆதாரத்துடன் எடுத்து வைக்கலாமே!

    நீங்கள் அறிந்தவர்கள் பொய் என்பதற்காக அனைவரும் பொய் என்பது தவறு நண்பரே, பின் லேடனுக்கும் பாகிஸ்தானில் பிட்டு படம் பக்குரவனுக்கும் முடிச்சு போடும் போதே தெரியலையா இவர்கள் நோக்கம் என்னன்னு.

    இஸ்லாத்தை ஆதாரம் இல்லாத கருத்துக்களை கொண்டு விமர்சித்து பாமர மக்களை இஸ்லாத்தை விட்டு தூர வைப்பதே இவர்களின் நோக்கம்.

 8. சரியாச் சொன்நீர்கள் நெருப்பு
  தொங்கும் போதுதான் ………………………
  புள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கனுமில்ல
  கொள்ளையடிக்க ஒரு கவசம் வேணுமில்ல கட்டாயம் மாறுவார்
  இஸ்லாத்தை யாராலும் அளிக்க முடியாது

 9. First of all, Americal always want all the countries under their control – is this true or not
  second, why your people always support america, do you know their culture and your sister and mother can accept usa culture.
  third, Your sister and mother or your wife, whatever in their organ parts, its should can see only for their husband. you will accept or not.
  fourth, if you say no, that means your family can expose their body naked to outside thats called prostituion (sorry to say this world, because your mother is my mother, your sister is my sister, your wife is my sister)
  and finally, islam always giving rights to the girls that obey your parents and your husband. do you have any objection or find any mistake that the girl can obey parents and husband (if they didnot obey or keep control with them, they will go like ranjitha or vinitha or like any pros.girl)
  Islam is only one can give a lot of answer of human being question. we proud that each and every man or women same. dont want to obey kanchi or nithyananda any stupid man
  If osama kill innocent people means he is terrorists and islam willnot allow to kill anyone. do you have any doubt ?
  If one or two doing mistake, you can rise the finger for islam ?
  before rise your finger, see other three finger where is looking on your hand its yours. so please please please try to avoid and go little bit more deep in islam religion. then you can understand that what is the meaning of islam.

  if you need any information about islam, drop mail to my id azifair_gfm@yahoo.com or call me on 00971505745825

 10. மதம் சம்பந்தமான கருத்துக்களை சொல்லும் கட்டுரையாளர் தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்று பதிவுசெய்வது முக்கியமானது என்று நான் கருதுகிறேன். தான் பின்பற்றாத மற்றொரு மதத்தின் மீது கருத்து சொல்வதில் சில வரம்புகள் உள்ளன.

  இஸ்லாம் சம்பந்தமான கருத்துக்களை ஆணாதிக்கம் என்று கண்மூடித்தனமாகச் சொல்பவர்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராக வைப்பது பெண் சுதந்திரமா ? பெண்ணாதிக்கமா ? குடும்பம் அமைப்புக்கு எதிரானவர்களா ? குடும்பத்துக்கு மாற்றாக என்ன அமைப்பை முன் வைக்கிறார்கள் ? என்று நிறைய கேள்விகள் எழுகின்றன.

  அடிப்படை மனித உரிமை மீறல்கள், பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் போன்றவற்றை இஸ்லாம் அடிப்படைவாதம் செய்கிறது என்றால் அதற்கான எதிரான குரல் இஸ்லாமியரிடமிருந்து ஒலிக்கும் போதுதான் அதன் அர்த்தம் ஆழமானதாக மாறும். மற்றவர்கள் எழுப்பும் குரலில் பல அரசியல்கள் வெளிப்படுகின்றன.

  ஆளும் வர்க்கமாக ஷேக்குகள் உள்ளனர். இவர்கள் உண்மையான ஏகாதிபத்திய கம்பெனி CEOக்கள் போல் புத்திசாலித்தனமான சுரண்டல்காரர்களாக இல்லாமல் ஜமீன்தார்கள் போலவும், அரசர்கள் போலவும் இருப்பதால் அவர்கள் தாங்கள் ஆளும் இஸ்லாமிய மக்களின் வாழ்வு பற்றி அக்கறையில்லாதவர்களாகவும், அதே சமயம் அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள முட்டாள்களாகவும் உள்ளனர். இஸ்லாமிய மதவாதிகள் என்பவர்கள் தீட்சிதர்களுக்கும், போப் பாண்டவர்களுக்கும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர். எனவே ஏதோ இஸ்லாமிய மதவாதிகள் எல்லோரும் (மட்டுமே)மிகப் பிற்போக்குத் தனமானவர்கள் என்கிற மாதிரியான பார்வை தவறு.

  இந்த மாதிரியான மதரீதியான ‘சீர்திருத்தப்’ பார்வைகள் இஸ்லாமிய இனம் மீது மட்டுமே பாய்ச்சப்படுவதும் அமெரிக்க ‘மேற்கத்திய’ கலாச்சாரத்தை உயர்த்திப்பிடிக்கும் தந்திரங்களில் ஒன்று என்பதையும் நினைவில் வையுங்கள். இஸ்லாமிய இனம் பல்வேறு முனைகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனம். இந்த மாதிரியான மேம்போக்கான சாடல்கள் வேண்டாம் என்று கருதுகிறேன்.

  • அம்பேதன்,
   கட்டுரையை நன்றாக படித்து அதன் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளவும். இதில் மதம் சம்பந்தமான கருத்துக்கள் சொல்லப்படவில்லை. ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்த மேட்டுக்குடி கூட்டம்தான் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது. இதை ஏழை முஸ்லீம்கள் உணர்ந்து இம்மதவாத கூட்டத்திலிருந்து வெளியேறவேண்டும் என்றே அறைகூவல் விடுகிறது.

 11. 1.//If osama kill innocent people means he is terrorists and islam willnot allow to kill anyone. do you have any doubt ?
  If one or two doing mistake, you can rise the finger for islam //
  இது உங்கள் சொந்தக் கருத்து என்றே பொருள் படுகின்றது.நல்ல விஷயம் ஆனால் மத தீவிரவாதிகளின் கருத்து என்ன ? தங்கள் மததிற்காக தியாகம் செய்வதாக அல்லவா கருதுகிறார்கள்.

  2.//if you need any information about islam, drop mail to my id azifair_gfm@yahoo.com or call me on 00971505745825//

  இந்த தகவலை ஒசாமாவிற்கும் ஈராக்கில் மத சண்டையிடும் குழுக்களுக்கும் அனுப்பவும்.

  3//இஸ்லாத்தை யாராலும் அளிக்க முடியாது//திருத்துக இஸ்லாத்தை யாராலும் அழிக்க முடியாது

  இஸ்லாம் உட்பட எல்லாமே மாறிக்கொன்டே இருக்கிறது.ஒசாமாவின் மகனே இதற்கு உதாரண‌ம். இஸ்லாம் இருந்தாலும் இல்லாமல் போனாலும் உலகம் அது பாட்டுக்கு இயங்கி கொன்டெ இருக்கும்.மனித சமுதாயம் அத‌ற்கு ஒத்து வரும் பாதையில் செல்லும்

  //ஆளும் வர்க்கமாக ஷேக்குகள் உள்ளனர். இவர்கள் உண்மையான ஏகாதிபத்திய கம்பெனி CEOக்கள் போல் புத்திசாலித்தனமான சுரண்டல்காரர்களாக இல்லாமல் ஜமீன்தார்கள் போலவும், அரசர்கள் போலவும் இருப்பதால் அவர்கள் தாங்கள் ஆளும் இஸ்லாமிய மக்களின் வாழ்வு பற்றி அக்கறையில்லாதவர்களாகவும், அதே சமயம் அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள முட்டாள்களாகவும் உள்ளனர். இஸ்லாமிய மதவாதிகள் என்பவர்கள் தீட்சிதர்களுக்கும், போப் பாண்டவர்களுக்கும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர். எனவே ஏதோ இஸ்லாமிய மதவாதிகள் எல்லோரும் (மட்டுமே)மிகப் பிற்போக்குத் தனமானவர்கள் என்கிற மாதிரியான பார்வை தவறு.//
  அருமை எல்லாருமே ஏமாற்றுக்காரன்தான்

 12. //ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்த மேட்டுக்குடி கூட்டம்தான் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது. //

  இதிலிருந்து என்ன சொல்ல வரீர், நீங்களெல்லாம் அறிவாளி, அதேபோல சேக்குகளும் மன்னர்களும் அறிவாளி, மற்ற முஸ்லிம்கள் எல்லாம் முட்டாள்கள், முறையான கருத்து கூரவந்தால், இஸ்லாத்தை முதலில் ஆராய்ந்து அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட முயலுங்கள் முடிந்தால், அதை விடுத்து, மற்றவர்களை முட்டாள் ஆக்க நினைக்காதிர்கள்.

  //இதை ஏழை முஸ்லீம்கள் உணர்ந்து இம்மதவாத கூட்டத்திலிருந்து வெளியேறவேண்டும் என்றே அறைகூவல் விடுகிறது.//

  அர்த்தமற்ற அறைகூவல் என்றுமே உதவாது நண்பரே, அர்த்தத்தோடு விமர்சனம் செய்யுங்கள், அதற்கும் பதிலளிப்போம் இந்த அறிவில்லாத(உங்கள் பார்வையில் மட்டும்) மக்கள்.

 13. //பாக்கிஸ்தான் தீவிர இசுலாமியக் குடியரசாக இசுலாமியர்கள் மத்தியில் அறியப்படுகிறது. ஆனால் உலக அளவில் செக்ஸ், போர்னா விவகாங்களை இணையத்தில் அதிகம் தேடும் நாடு அதுதான் என்று ஒரு ஆய்வு கூகுளின் தேடுதல் விசயங்களை வைத்து கூறுகிறது//

  நீர் அப்படி நினைத்தால் நான் என்ன செய்வது இசுலாமிய நாடுன்னா இசுலாதுல சொல்லி இறுகிரத follow பண்ண‌னும்…..pakistanla for example
  மது ஒழிப்பு இருக்கா?? மண்டைல சரக்கு இல்லாதவந்தான் அப்படி நினைப்பான்.

  //பெண்களை புர்கா முதல் பல்வேறு அடிமைத்தனங்களில் ஆழ்த்தி இன்பம் காணும் நாட்டில் ஆண்கள் மட்டும் இணையம் மூலம் லவுகீக விசயங்களை துய்க்கின்றனர்.// என் தங்கை பர்தா போட்டு வெழியே போரேன்னு சொல்ரா ஆனா நான் skirt போட்டுட்டு வெழியே போன்னு சோன்னா அவ என்ன சொல்லுவாள் (thats their personal intentions) உங்க தங்கை வெழியே போரேன்னு சொல்ரா ஆனா நான் புர்தா போட்டுட்டு வெழியே போன்னு சோன்னா அவ என்ன சொல்லுவாள்….நீங்க சொல்ற logikum இதெ மாதிரிதான் இருக்கு………”THATS THEIR PERSONAL INTENTIONS”. If they follow their faith they will do all the things whatever it told in their religion. Some half baked potatoes (either islamists or communists) will try
  to insert their rules to them
  Purinjutha??

  • கல்லால் அடித்துக் கொல்லும் நடைமுறை உள்ள இசுலாமிய குடியரசுகளை ஏற்கிறீர்களா, இல்லையா, ஏன்?

   • நான் சவுதி வருவதற்கு முன்பு ஒருவர் கூறினார், அங்கு தப்பு செய்தால் உறுப்புகளை எடுத்து விடுவார்கள் என்று, தப்ப செய்தால் தானே என்று கூறிவிட்டு வந்தேன், இங்கு வந்து பார்த்தால் அனைவருக்கும் கை இருக்குறது, கால் இருக்கிறது, யாரையும் கல்லால் அடித்தும் கொல்லவில்லை, ஆனால் இந்தியாவில் இருக்க கூடிய கொலை, கற்பழிப்பு, விபசாரம் போன்ற எதுவுமே இல்லை (வழிப்பறி மட்டும் சில சமயங்களில் நடக்கிறது).

    இந்தியாவில் இந்த தவறுகளால் பாதிக்க பட்டவர் எத்தனை பேர் என்று கணக்கு எடுங்கள், இங்கு இந்த தவறுகள் செய்து தண்டனைக்கு உள்ளானவர்கள் எதனை பேர் என்று கணக்கு போட்டு பார்த்து ஒரு பதிவு போடுங்கள் உங்களுக்கே புரியும்.

    இந்தியாவில் தூக்கு தண்டனை இருக்கு என்பதற்காக சாலையில் செல்பவர்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனை கொடுப்பார்களா என்ன?

 14. //என் தங்கை பர்தா போட்டு வெழியே போரேன்னு சொல்ரா ஆனா நான் skirt போட்டுட்டு வெழியே போன்னு சோன்னா அவ என்ன சொல்லுவாள் (thats their personal intentions) உங்க தங்கை வெழியே போரேன்னு சொல்ரா ஆனா நான் புர்தா போட்டுட்டு வெழியே போன்னு சோன்னா அவ என்ன சொல்லுவாள்….நீங்க சொல்ற logikum இதெ மாதிரிதான் இருக்கு//

  நச்சு அடி சின்னபையா, மற்றவர்களின் ஆடை விசயத்தில் தேவை இல்லாமல் மூக்கை நுழைப்பவர்கள், நான் கேட்ட முதல் கேள்விக்கே பதில் தரவில்லை!!

  நீங்கள் இனி pant shirt போடுவதை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா??

  நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பெண்களின் ஆடை அளவை நடுநிலையோடு தீர்மானியுங்கள் பார்ப்போம். இல்லையெனில் உங்களுடைய பொய் பிரசாரத்தை மூட்டை கட்டிவிட்டு அனைத்து மத பெண்களுக்கு பர்தா(முகம் கைகள் தெரியலாம்) தான் சரி என ஏற்றுகொள்ளுங்கள்.

 15. ………..இசுலாமிய சர்வதேசியம் பேசும் பின்லேடன் முழுக்க முழுக்க அமெரிக்கா தயாரிப்பாகும். ஆப்கானை ஆக்கிரமித்த ரசியாவை விரட்டுவதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ திட்டமிட்டு தயாரித்த பொருள்தான் பின்லேடன்…………..

  ஆமா.இவருதான் அமெரிக்கா பின்லாடன தயாரிக்கும்போது கூட வொர்க் பண்ணாரு.உலகத்துல நீங்க மட்டும்தான் அநியாயத்தையும் அமெரிக்காவையும் எதிர்க்கரவங்க.இத எழுதற உன் அப்பா,அம்மா,தம்பி,தங்கச்சி எல்லாம் உன் கொள்கையில தான் இருக்காங்களா.வர வர வினவின் இசுலாம்,முஸ்லிம் எதிர்ப்பு வெறி எல்லை மீறி கொண்டிருக்கிறது.

 16. பெண்களை புர்கா முதல் பல்வேறு அடிமைத்தனங்களில் ஆழ்த்தி இன்பம் காணும் நாட்டில் ஆண்கள் மட்டும் இணையம் மூலம் லவுகீக விசயங்களை துய்க்கின்றனர். //

  இந்த இடத்தில் புர்கா அனிவது என்பது முஸ்லீம் பெண்களை அடிமைதனம் என்று எலுதி உள்ளீர் அது புர்கா அனிவதால் ஏர்படும் நன்மை அரியதா சிலருடய கருதாக இருகலாம் ஆனால் நானும் ஒரு இஸ்லமிய பெண் என்னய பொருதமட்டில் அதை புர்கா அனிவது என்பது அடிமைதனமாக எனக்கு தெரியல அது ஒரு நல்ல பாதுகாப்பு ஆடையகதான் நான் கருதுகிறேன்.

 17. இங்கன போய் பாருங்க…பாக்கிஸ்தான் முதலாவது….இந்தியா இரண்டாவது…இதுக்கு நாம என்ன செய்யலாம்…நாண்டுக்கிட்டு சாகலாமா?

  http://internet-filter-review.toptenreviews.com/internet-pornography-statistics-pg3.html

  http://internet-filter-review.toptenreviews.com/internet-pornography-statistics-pg2.html

  போர்னுக்கு தென் கொரியர்கள் பண்ணும் செலவு நமது ராணுவத்துக்கு ஆகும் செலவை விட அதிகம் போல தெரிகிறது! பாக்கிஸ்தானும் நாமும் லிஸ்ட்லயே இல்லை…

 18. நான் விவாதத்தில் நுழைய விரும்பவில்லை.ஆனால் கம்யூனிசம் செய்ய முடியாததை (அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அழிப்பது) இஸ்லாம் செய்து முடிக்கும்.

 19. இஸ்லாம் ஒரு மதமல்ல அது மார்க்கம். இஸ்லாம் மதம் என்று குரானில் சொல்லப்பட்டது இல்லை. இஸ்லாம் ஒரு மார்க்கம்(வழினெரி). பெண்கள் புர்கா அணிவது அடிமைத்தனம் என்று சொல்கீறீர்கள். பெண்கள் முகத்தை மட்டும் காட்டினால் பொதாத. தன்னுடய அங்கம் தெரியும் படி சென்ரால் அது அடிமைத்தனம் இல்லை. உங்கள் வீட்டு பெண்களுடன் நீங்கள் செல்லும் போது ஒருவன் தவராக பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். முஸ்லிம் பெண்கள் தங்கள் அங்கத்தை மறைக்கிரார்கள். அது அடிமைத்தனம் இல்லை. மாறாக ஜீன்ஸ், லொ கிப் டீசர், சேலையில் தொப்புல் காட்டி செல்வது தான் நியாயமா?. ஆண்களுடைய(தவறான பார்வையிலிருந்து தங்களை காத்து கொள்ளுங்கள என்று இஸ்லாம் சொல்கிரது.நீங்கள் சொல்லலாம்நாங்கள் அவ்வாறு பார்பது இல்லை என்று. உதாரணம். ஒரு அழகியா ரோஜா கண்காட்ஷியில் ஆயிரம் பேர் பார்த்து செல்வார்கள். ஆனால் எவனாவது ஒருவன் அதை கில்லிவிட்டு செல்வான்.நஸ்டம் யாருக்கு பூலக்குதானே. அதனால் தான் அன்னிய பார்வையிலிருங்து உங்களது பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று இஸ்லாம் சொல்கிரது. வினவு அவர்களெ ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேட்டுப்பாருஙகள் புர்கா அணிவது அடிமைத்தனாமா என்று காரி உமிழ்வார்.
  யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் – 9ம் வகுப்பு மாணவன் கைது
  பேப்பரில் படித்தீரா………….

  கல்லால் அடித்துக் கொல்லும் நடைமுறை உள்ள இசுலாமிய குடியரசுகளை ஏற்கிறீர்களா, இல்லையா, ஏன்?

  குற்றங்களை ஒப்பிட்டு பாரும்.

 20. ….// A religion or a way of life should culture a man in such a way that he sees women with dignity and do not misbehave with any women.. Do not your religion teach you this… something fundamentally wrong with your religion. even if women wear hijab rape will occur morons… Teach discipline in your society, men are different from animals,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க