Tuesday, June 18, 2024
முகப்புசெய்திபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !

போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !

-

மிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் இந்தியாவில் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள் என்றால் தமிழகத்தின் பங்கு மட்டும் அதில் 1,50,000. இந்தப் புள்ளிவிவரத்தை வைத்து நாம் பெருமைப்பட முடியுமா?

இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான தொழில், அந்த தொழிலுக்குத் தேவையான படிப்பு என்ற சுதேசிப் பார்வை, அணுகுமுறையில் நமது உயர் கல்வி அமையவில்லை. கல்வி தனியார் மயமான பிறகு தகவல் தொழில்நுட்ப முதலாளிகளுக்குத் தேவையான பொறியியல் படிப்புக்களை மக்கள் தமது சொந்த செலவில் படித்து விட்டு காத்திருக்கும் மாட்டுச் சந்தை போல மாற்றப்பட்டிருக்கின்றனர்.

பட்டம் பெறும் அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் தகுதியான வேலைகள் கிடைப்பதில்லை. அறிவுக் கொழுந்தான மாணவர்களை மட்டும் பெரிய நிறுவனங்கள் கொத்திச் சென்றுவிடுகின்றன. மற்றவர்கள் மாயையை சுமந்து கொண்டு ஏதோ ஒரு வேலை கிடைக்குமா என்று தவிக்கின்றனர்.

மருத்துவத்தில் இளங்கலை படிப்பதால் எந்தப் பயனுமில்லை என்று ஆகியுள்ளதால் முதுகலை படித்தால்தான் பத்து பதினைந்து ஆண்டுகளில் ஒரு தேர்ந்த மருத்துவராக தலைநிமிரமுடியும் என்றாகி விட்டது. அரசு கல்லூரிகளில் முதுகலை இடங்கள் குறைவாக இருக்க தனியார் கல்லூரிகளிலோ அதன் விலை கோடிகளில் இருக்கிறது. சுகாதாரத்திலும் அரசு பங்கு கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு வருகிறது. சான்றாக வருடம் 750 கோடி ஒதுக்கி காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதை அரசு மருத்துவ மனைகளில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று கூட சொல்லவில்லை. தனியாரிடத்திலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றால் காப்பீடு, மருத்துவமனை இரண்டிலும் தனியார் நிறுவனங்கள் கொள்ளைக்குத்தான் உதவும்.

இதற்குமேல் பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவரிடம் மிகக் கடுமையான போட்டி மனப்பான்மையை இந்தக் கல்வி அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தபட்சம் பொறியியல் படிப்பு கூட படிக்க முடியாவிட்டால் எதிர்கால வாழ்வு இல்லை என்ற அவநம்பிக்கை நமது இளையோரிடத்தில் அழுத்தமாக திணிக்கப்பட்டிருக்கிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் கூட  கடன் வாங்கியாவது படித்தாக வேண்டும் என்ற நிலை சகஜமாகி வருகிறது.

தனியார் சுயநிதிக்கல்லூரிகளெல்லாம் இந்த போட்டி மனப்பான்மையை வைத்து நன்கு கல்லா கட்டிவருகின்றன. தமிழகத்தில் சுமார் பத்து முதல் இருபது கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை பெரும் நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வுக்காக சீண்டுவதில்லை. ஐ.டி துறையிலும் இப்போது சம்பளம் என்பது முன்பைவிட வெகுவாக குறைந்த நிலையில் பெரும்பான்மையான மாணவர்கள் தமது படிப்பால் எதையும் பெற முடியவில்லை என்ற நிலைதான் இருக்கிறது.

இச்சூழலில் இந்த மாயையை காப்பாற்றிக் கொண்டு எல்லா மோசடிகளையும் செய்து காலி இடங்களை நிரப்புவதற்கு கல்வி முதலாளிகள் விரும்புகின்றனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களை தரகர்களாக்கி  அவர்கள் ஊர்களிலிருந்து மாணவர்களை பிடித்து வந்தால் கமிஷன் என்று சில மாணவர்களை இவர்கள் மாமாக்களாக்கியிருக்கின்றனர். தரகர்களான இந்த மாணவர்களின் போட்டியில் ஒரு மாணவனே கொல்லப்பட்டிருக்கிறான்.

தென்மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தமிழக கோட்டாவில்  இடங்களைப் பெறுவதற்காக போலியாக தமிழக இருப்பிட சான்றிதழ்களை உருவாக்கி இடம் பிடித்ததும் முன்பு மட்டுமல்ல, இப்போதும் நடக்கிறது. அதேபோல என்.ஆர்.ஐ கோட்டாவிலும் வருடந்தோறும் மோசடி நடக்கிறது. எப்படியாவது இடத்தை நிரப்ப வேண்டும் என்று வெறி பிடித்தலையும் கல்வி முதலாளிகள்தான் இத்தகைய மோசடிகளின் ஊற்று மூலம்.

பொறியியல் கற்க வேண்டும், அதுவும் தலைசிறந்த கல்லூரிகளில் படிக்க வேண்டும், அதற்காக உயர்ந்த மதிப்பெண்கள் வேண்டும், இல்லையேல் வாழ்க்கை இல்லை என்ற போட்டி மனப்பான்மையில் பெற்றோரும், மாணவர்களும் இலக்கில்லாத தூரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த தவிப்பை ஆதாயமாக்கி வாரிச்சுருட்ட நினைக்கும் கல்வித் தொழிலின் தரகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கட் ஆஃப் மதிப்பெண் ஓரிரண்டு குறைந்தால் கூட கட்டணம் குறைந்த அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காது. இதனால் பல இலட்சம் கட்டி தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டியதாகிறது. அங்கு கொடுக்க வேண்டிய பணத்தில் சிறு பகுதியை இந்த தரகர்களிடம் கொடுத்தால் தேவையான மதிப்பெண் கிடைத்துவிடும் என்று தரகர்கள் ஆசை காட்டுகிறார்கள்.

இதில்  நாம் கவனிக்க வேண்டிய விசயம், தனியார் கல்லூரிகளில் வசூல் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படும் பணத்தின் அளவே பெற்றோரை பயமுறுத்தி இந்த முறைகேடான வலையில் விழ காரணமாகிறது. எனில் இந்த மோசடிகளின் ஊற்று மூலம் எது?

போலி மதிப்பெண்கள் மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் திருவேங்கடமும், ஏகாம்பரமும் நெடுங்காலம் கல்வித் தொழிலில் கொடிகட்டிப் பறந்திருக்கின்றனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருக்கும் பெற்றோரிடம் ஆசை காட்டி மதிப்பெண்ணுக்கு பொருத்தமான தொகையை வாங்கி இயல்பாக போலி மதிப்பெண்களை அளித்திருக்கின்றனர்.  போலி மதிப்பெண்களை வாங்க நினைத்தவர்களில் மதிப்பெண்கள் அதிகம் வாங்கியவர்களும், நன்கு படிப்பவர்களும் உண்டு. எனினும் கட் ஆஃப் மதிப்பெண் ரேசில் தாங்கள் முன்னிலைக்கு வரவேண்டும் என்ற வெறியில் இந்த மோசடியை தெரிந்தே மேற்கொண்டிருக்கின்றனர்.

இதில் ஏழைகளும், நடுத்தரவர்க்கமும்,மேல்தட்டு என எல்லா பிரிவுகளும் உண்டு. மேலும் இந்த விவகாரம் தற்செயலாக வெளிவந்ததால் இது பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. இல்லையேல் காதும் காதும் வைத்தது போல மூடியிருப்பார்கள்.  இந்த மோசடி எத்தனை வருடங்களாக நடக்கிறது, இன்னும் எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர், எத்தனை கல்வி முதலாளிகள் – நிர்வாகங்கள் இதற்கு மறைமுகமாக காரணமாக இருக்கின்றனர் போன்ற விவகாரங்கள் அநேகமாக வெளிவராது என்றே தெரிகிறது.

தற்போதைய மோசடியில் ஐம்பது மாணவர்களின் போலி மதிப்பெண் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் போலீசின் கைகளுக்கு கிடைத்திருப்பது பத்து பேர்களின் சான்றிதழ் மட்டும்தான். அதுவும் பெரும்பாலானவர்கள் சாதாரண மக்கள். போலீசுக்கு கொடுக்கப்படாத சான்றிதழ்களில் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாரிசுகள் உண்டு என்று கூறப்படுகிறது. ஆக அதிகாரம் உள்ளவன் தப்பும் செய்வான். பிடிபட்டால் தப்பித்துக் கொள்ளவும் செய்வான்.

மேலும் இந்த மோசடி முழு அளவில் வெளிவந்தால் பலரும் அல்லது ஒட்டுமொத்தமாக தனியார் கல்வி நிர்வாகங்கள் அத்தனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவர். இன்று அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கவுன்சிலிங் நடந்து இடம் ஒதுக்கப்படுகிறது. நாளையே தனியார் கல்லூரிகள் நேரடியாக மாணவர்களை சேர்க்கலாம் என்றால் என்ன நடக்கும்? ஒவ்வொரு கல்லூரியிலும் போலி மதிப்பெண்கள் அச்சடிப்பதற்கென்றே ஒரு அச்சகமும் அதற்கென்று தனியான ரேட்டும் வைத்து கல்வி முதலாளிகள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை நடத்துவர்.

அந்நிலை வரும்போது பிளஸ் 2 வில் பாசாகியிருக்க வேண்டுமென்ற அவசியமோ, இல்லை தேர்வு எழுதியிருக்க வேண்டுமென்ற அவசியமோ  கூட இருக்காது. இப்போது அரசாங்கமும் தகுதி மதிப்பெண்ணை ஆண்டுக்காண்டு குறைத்து வண்ணம்தான் இருக்கிறது. ஆக செலவழிப்பதற்கு ஏராளமானபணத்தை வைத்திருந்தால் நல்ல கல்லூரியில் படிக்கலாம் அல்லது படிக்காமலே சான்றிதழ் வாங்கலாம் என்ற நிலை வரும்.

ஆகவே இந்த போலி மதிப்பெண்கள் மோசடியில் திருவேங்கடம், ஏகாம்பரம் என்ற இரண்டு தரகர்களை மட்டும் வைத்து பிரச்சினையை கடந்து செல்லலாம் என்றால் நடக்காது. கல்வியில் தனியார் மயம் என்று வந்து விட்டதோ அன்றிலிருந்தே இந்த மோசடிகள்  நாளொரு வண்ணம் புதிது புதிதாக பிறந்த வண்ணம் இருக்குமென்பதை நாம் உணரவேண்டும்.

கல்வியில் தனியார் மயத்தை ஒழிப்பது ஒன்றுதான் இந்த மோசடிகளை அடிவேரிலிருந்து அகற்றுவதற்கு உதவும். இல்லையேல் இந்த மோசடிகளோடு வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். தகுதி மதிப்பெண்களுக்கே மோசடி செய்யும் துணிச்சலைப் பெறும் இளையோர் நாளைக்கு வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் போது எப்படி இருப்பார்கள் என்பதை விரித்துரைக்கத் தேவையில்லை. என்ன சொல்கிறீர்கள்?

____________________________________________________________

 

 1. போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் ! | வினவு!…

  தகுதி மதிப்பெண்களுக்கே மோசடி செய்யும் துணிச்சலைப் பெறும் இளையோர் நாளைக்கு வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் போது எப்படி இருப்பார்கள் என்பதை விரித்துரைக்கத் தேவையில்லை….

 2. Only the goverment should run all the Medical & Engineering colleges and instead of giving the Insurance premium to private insurance companies for covering the peoples
  medical benefit the govrment can invest them in Goverment Hospitals in each district.

 3. திருவேங்கடமும், ஏகாம்பரமும் இவர்கலுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் நண்பர்களே……….அரசு என்ன தண்டனை கொடுக்கும்.

 4. […] This post was mentioned on Twitter by அதிஷா, சங்கமம். சங்கமம் said: போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !: தமிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன… http://bit.ly/dC1IkL […]

 5. ராகவன் எழுதியது போல எல்லா கல்வி நிறுவனங்களும் (இயற்கை வள நிறவனங்களும் கூட) நாட்டுடமையாக்கப்பட வேண்டும்.

  பாரத ஸ்டேட் வங்கி, பிஎஸ்என்எல் போன்று தன்னிச்சையான நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தி மத்திய ரிசர்வ் வங்கி, தொலை தொடர்புத் துறை குழுமம் போன்று அரசு சாரா கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும்.

  மா சிவகுமார்

  • that will prevent creation of new private educational institutions. the simple fact is that there is huge demand for seats and parents are willing to pay for them. but govt regulations prevent open and honest payments for them. hence the huge black money payments. best thing to do is to free the instiutions from govt control and allow them to fix fees for their management quotas at market rates. the institutions are all run for profit but are owned by ‘trusts’ for charity. they should be converted into for profit private insititutions like private hospitals and taxed at a minimum rate. the govt can use the huge tax revenue to create more govt colleges and scholorships. nothing, except lack of moeny and will (and wasting money on freebies, corruption and mis management and admin) prevents the govt from setting up new colleges. the govt run IITs and IIMs are still top notch..

   • //பாரத ஸ்டேட் வங்கி, பிஎஸ்என்எல் போன்று தன்னிச்சையான நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தி மத்திய ரிசர்வ் வங்கி, தொலை தொடர்புத் துறை குழுமம் போன்று அரசு சாரா கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும். /// not practiable. and Shiva, what about the internal corruption within BSNL and SBI ? and who pays for them in the long run ?
    if a private company looses money due to corruption, then the investors and shareholders loose. but taxpayers bear the cost of corruption and losses in a PSU.

    and by the way, until 1980s, there were very few private educational institutions and lot of yougsters could not continue their college education due to lack of seats. now it is far better. only issue is cost.

 6. A good article. It is obvious that people do anything to get into engineering & medical as it is a easy way to gain financial freedom later. I don’t know what the solution is but education as a field is highly competetive to get in but rather loses its shine once you get into a college which is proclaimed good.

 7. கல்வியில் தனியார் மயத்தை அரசே ஊக்குவிப்பதினால் ஏற்படும் விளைவே இது .இல்லைஎன்றல் மீண்டும் நுழைவு தேர்வை கொண்டுவருவதகும்.

 8. தெரிந்தே தவறு செய்வது குற்றமே! என்ன தான் காரணங்கள் சொன்னாலும்!
  ஒவ்வொரு குற்றவாளியும் செய்த குற்றத்திற்கு நியாயம் சொல்லுவர்!
  அமைப்பு விதிகளை, சிலர் மீறியது நியாயப்படுத்தினால், மீதியுள்ள நேர்மையாளர், கோமாளியா? சமூகநீதியாகுமா?

  • தனியார் மாயம் எல்லாரையும் கோமாளி ஆக்குகிறதே . சட்டத்தின் படி ,
   குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவன் குற்றவாளி தானே

   • this cheap internet, PCs, and free blogs too are the result of privatisation. you people do not know the situation until the 90s, when there was a waiting list of nearly 8 years (yes, 8 years) for a landline BSNL connection. and no private players were allowed then. may be it was a mistake to allow private players so that this free blogs and cheap net connections have enabled many to chat here freely !!

    • இன்னைக்கி நீங்கள்லாம் பிரீயா ப்லாக்ல எழுதறனாலதான் இன்னைக்கி அரிசி விலை 1கிலோ 50ரூவா. 1கிலோ தொவரம்பயிறு 100ரூவா. தனியாருல விலை ஜாஸ்தியாயிருக்கறலதானே கலைஞரு 1ரூவாயிக்கு அரிசி குடுக்குறாரு. கலைஞர 1ரூவாய்க்கு அரிசி குடுக்க வச்ச தனியாரு வாழ்க. மெய்யாலுமே தனியாருன்னா தனியாருதான். அப்புறம் அரசு பிரீயா குடுத்துதான் இந்தியா உருப்படாம போச்சுன்னு சொல்லக்கூடாது.

 9. ஒரு திருவேங்கடத்திற்கோ, ஏகாம்பரத்திற்கோ தண்டனை அளிப்பதால் மட்டுமே மாற்றம் வந்துவிடுமென நம்புவது நம் அறிவிற்கும் சிந்தனைக்கும் ஏற்றதல்ல, அப்படி நம்புவது, அடுத்த தெருவிலும், அரியணையிலும் உள்ள திருவேங்கடத்திற்கும், ஏகாம்பரத்திற்குமே உதவும்.

  அது போல, எல்லா நிறுவனங்களையும் வளங்களையும் நாட்டுடமையாக்கினால் மட்டுமே சமுதாயத்திலுள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடாது, ஆனால் இன்றிருப்பதைவிட சிறப்பானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
  ஆனால், நாட்டை ஆள்பவர்களைப் பொறுத்து, சில ஆண்டுகளிலே அவை அவர்களின் குடும்ப உடமையாகிவிடும் வாய்ப்புமிருக்கிறது.
  சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளவரை இது போல எந்தவிதமான தீர்வும் தற்காலிகமானதாக, ஒரு சில பத்தாண்டுகளுக்கு மட்டுமே பதிலளிக்கக் கூடியதாக இருக்கும். உள்ளவர்கள் பலம் கொண்டவர்களாகவும், இல்லாதவர்கள் உள்ளவர்களாவதற்காக வாழ முனைதலுமே மறுபடியும் நடக்கும், இன்றிருக்கும் நிலைக்கு விரைவில் வந்து நிற்போம்.

  தேவை இன்னொரு புரட்சியென்றாலும், புரட்சிகளே பின்னர் புரட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம், புரட்சி வருவதற்கு முன்னர், மக்களுக்கான தெளிவும், அதற்கான தேவையின் புரிதல் ஏற்பட வேண்டும்.

  தற்போதைய தற்காலிக தீர்வாக, கல்வியை நிச்சயம் அரசுடமையாக்கலாம், ஆனால், அது மட்டும் போதுமா?

 10. தகுதி மதிப்பெண்களுக்கே மோசடி செய்யும் துணிச்சலைப் பெறும் இளையோர் நாளைக்கு வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் போது எப்படி இருப்பார்கள் என்பதை விரித்துரைக்கத் தேவையில்லை. என்ன சொல்கிறீர்கள்?

  mutrilum unmai.

 11. பட்டம் பெறும் அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் தகுதியான வேலைகள் கிடைப்பதில்லை. அறிவுக் கொழுந்தான மாணவர்களை மட்டும் பெரிய நிறுவனங்கள் கொத்திச் சென்றுவிடுகின்றன. மற்றவர்கள் மாயையை சுமந்து கொண்டு ஏதோ ஒரு வேலை கிடைக்குமா என்று தவிக்கின்றனர் this is the current situation in India. So many graduates without basic knowledge with degree, are searching for a job and htey are readu to bribe to get govet Jobs. Very dangerous situation in India.

 12. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்குவதை முறைப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட டாமால் டூமீல் கமிட்டி கடைசியில் கையை பெப்பெலபே என்று விரித்துவிட்டது.

  பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுக்கள் குவிந்த நிலையில் இனிமே கட்டண உயர்வு பற்றி கமிட்டி எந்த நடவடிக்கையும் எடுக்காது பிம்பிலிக்கி பியாப்பி என்று நேற்று அறிவித்துவிட்டார்கள் (நன்றி: சன் டிவி).

 13. இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், இயற்கை வாழ்வியல் எல்லாம் நம் எல்லோருடைய உடல்நலனை கண்டிப்பாக எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் பாதுகாக்கும். இவற்றுக்கு செலவும் மிக குறைவு. நம் சுற்று சூழல் மாசுபடாது மட்டுமல்லாது எல்லோருக்கும் எட்டும் வகையில் இம்மூன்றும் உள்ளன.

  சிந்தியுங்கள் தோழர்களே! ஆங்கில மருத்துவ படிப்பு படித்த மருத்துவர்கள் தான் நம் உடல்களை கூறு போட்டு பல இரணங்களை உண்டுபண்ணி முடிவில் அகால மரணத்தை பரிசாக கொடுக்கிறார்கள்.

  இயற்கை மருத்துவம், கேன்சர், மூளையில் கட்டி, சிறுநீரக கோளாறுகள் என ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்படும் வியாதியஸ்தர்களையும் குணமாக்குகின்றனர். இந்த செய்தி இன்னமும் பரவலாக பரவாமையே இந்த துரதிஷ்டவசமான செய்கைகளுக்கு காரணம்.

  ஒரு டாக்டர், கோடிகளை கொட்டி கொடுத்து விட்டு படித்தப்பின் அவர் என்ன தருமத்துக்கா வைத்தியம் செய்யபோகிறார். நாம் இயற்கை மருத்துவம், இயற்கை வாழ்வியல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம். நம் நாட்டில் எல்லா அறிவும் ஆற்றலும் நிறைய உள்ளன. அவகளை முறையாக பயன்படுத்தி இந்த கையறு நிலையில் இருந்து விடுபடுவோம்.

  நன்றி
  புதிய உலகோன்

 14. அதியமான்,

  1. உயர் கல்வி நிறுவனங்களில் தனியாரின் ஈடுபாடு பணம் கொடுப்பதோடு (நன்கொடை) நின்று விட வேண்டும். நிர்வாகம், கல்வி அளித்தல் கல்வியாளர்களால் நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் அப்படித்தான் செயல்படுகின்றன.

  2. ஊழல் நடக்காமல் இருக்கத்தான் கண்காணிப்பு அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்பு ஒன்றிலிருந்து கண்டிப்பு எழுதப்பட்டால் பிஎஸ்என்எல், எஸ்பிஐ போன்ற நிறுவனங்களின் மேலாளர்கள் அதற்கான எதிர்வினையை சந்திப்பார்கள்.

  ரிலையன்சு நிறுவனத்துக்கு எதிராக மாதத்துக்கு ஒரு முறையாவது ஒரு நீதிமன்ற கண்டனம் வெளியாகிறது. அது எல்லாம் எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல வீணாகி, அந்த மாஃபியா கும்பல் தமது சட்ட விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

  கர்னாடகாவின் ரெட்டி சகோதரர்கள் இந்த தனியார் கொள்ளையின் புத்தம் புதிய முகங்கள். தமிழ்நாட்டில் மாறன் சகோதரர்கள், கருணாநிதி கும்பல், சசிகலா கும்பல் எல்லாமே தனியார் மயமாக்கத்தில் நாட்டையும் மக்களையும் சுரண்டுபவர்கள்தான்.

  3. எங்கும் எதிலும் தனியார் மயம் என்று பைத்தியம் பிடித்து ஓடியதால்தான் அமெரிக்கா நிதிநிலை சரிவைச் சந்தித்து ஏற முடியாத பள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது.

  தனியாரின் பேராசைக்கும், அதீத ஆதாய முனைப்புக்கும் நாட்டை அடகு வைத்து விட வேண்டும் என்ற கோட்பாட்டின் விளைவுகளை இன்று பல தளங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

  மா சிவகுமார்

  • சார், அவரு இந்தியாவில் நடப்பதை பற்றி பேசமாட்டாரு. வேணுமிண்ணா ஜெர்மனி, தாய்வான், நெதர்லாந்து பற்றி ஏதாவது தகவல் இருந்தால் சொல்லுங்கள். ஏன்னா அவர்தான் இவரு.

  • ///. ஊழல் நடக்காமல் இருக்கத்தான் கண்காணிப்பு அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்பு ஒன்றிலிருந்து கண்டிப்பு எழுதப்பட்டால் பிஎஸ்என்எல், எஸ்பிஐ போன்ற நிறுவனங்களின் மேலாளர்கள் அதற்கான எதிர்வினையை சந்திப்பார்கள். /// big joke and u are living in a pipe dream. A.Raja and Co had made billions under the exisiting set up. and corruption goes on unchecked within al PSUs : in purchase, sales, recrruitments, contracts, etc. (you know better).
   and the regulators themselves are more corrupt. the recent arrest of the Chariman of Medical Council of India (for amassing some 1500 crores of more) is a glaring example. your views are totally divorced from reality and is only wishful thinking.

   BSNL was originally a private sector intiative in the 1930s in India. so were all nationalised banks, coal mines and other industries. Many western nations which did not nationalise, but encouraged free competition and free markets have become developed nations within a century and have very little corruption when compared to India. East Asian tigers : you can compare them.

  • ///3. எங்கும் எதிலும் தனியார் மயம் என்று பைத்தியம் பிடித்து ஓடியதால்தான் அமெரிக்கா நிதிநிலை சரிவைச் சந்தித்து ஏற முடியாத பள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. ///

   Nanbar சிவா,

   கட்டற்ற தனியார்மயமாக்காலினால், இந்த பொருளாதார மந்தம் உருவாகவில்லை. அமெரிக்க அரசின் நிதி கொள்கைகள் தான் அடிப்படை காரணம். வீடற்ற் ஏழைகளுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்ற ‘நல்லெண்ணத்தினால்’ உருவாக்கப்பட்ட அரசு நிதி நிறுவனங்களின் தலையில் பலரும் மட்ட கடன்களை தள்ளிவிட வாய்ப்பளிக்கப்பட்டது. fஎடரல் ரெசெர்வின் வட்டி விகுதம், சந்தையில் உள்ள வட்டி விகுதங்களைவிட மிக குறைக்கப்பட்டதனால் உருவான பண வெள்ளம் ஒரு அடிப்படை காரணம். இவை பற்றி ஒரு முக்கிய கட்டுரை :

   Financial Reform Bill Won’t Stop Next Crisis

   http://www.cato.org/pub_display.php?pub_id=11916

  • நண்பர் சிவா,

   சென்ற மாதம், சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், கனடிய நாட்டு, செய்ன்ட் மேரி பல்கலைகழக தலைவர் திரு.காலின் டட் பேசினார். அதில் நானும் கலந்து கொண்டேன். அவருடன் நான் பரிமாரிக்கொண்ட மின்மடல்கள் :

   Dear Sir,

   Thanks for the prompt reply. In your answer to my question at the lecture in Chennai, you mentioned that the US Congress hearings are going on and they will get to the bottom of this in the end. But i doubt it very much. the Cato article says it succinctly.

   People do not seem to learn from the past. and i am apprehensive of future in the long term.

   I admire the Germans for their prudent management of their currency all these decades. They are the only developed nation which had gone thru hyper-inflation twice after the two World wars. the terrible experience has been burned deep into their collective psyche and hence the German aversion for deficit financing. As an Indian, i share that, as our recent economic history, esp post independence period of ‘soclialistic’ decades has left us with huge deficits and double digit inflation.

   One final point : Can we have something for nothing ? there are no free lunches in this world seems true enough. but…

   Regards
   K.R.Athiyaman

   Hide quoted text –

   On 7 July 2010 21:36, Dr J. Colin Dodds wrote:

   Dear K.R,

   thank you for your email. There was a reference to your point on Freddie and Fannie in the Financial Times of Monday July 5th p14. The comment comes from Bob Kelly, the CEO of BNY Mellon who is a Saint Mary’s University graduate and the new Chancellor of the University.

   He states that the government should leave the mortgage market as it distorts the market.

   Colin

   From: K.R.Athiyaman
   Sent: Tuesday, July 06, 2010 3:30 AM
   To: colin.dodds@SMU.CA
   Cc: president@SMU.CA
   Subject: Financial Reform Bill Won’t Stop Next Crisis

   Dear Sir,

   I attended your excellent lecture about the financial crisis at Chennai, India on 5th July. Thanks for the same. I am the one, who asked a question about the US govt subsidies for housing (Freddie Mac and Fannie Mae) and about Alan Greenspan’s part in ushering in the mother of all liquidity. (and it is ironical that he was a disciple of Ayn Rand !!)

   I am an avid follower and fan of Cato Institute and the following is a relevant article :

   Financial Reform Bill Won’t Stop Next Crisis

   http://www.cato.org/pub_display.php?pub_id=11916


   With Regards

   K.R.Athiyaman
   Chennai

   http://athiyaman.blogspot.com

  • ///ரிலையன்சு நிறுவனத்துக்கு எதிராக மாதத்துக்கு ஒரு முறையாவது ஒரு நீதிமன்ற கண்டனம் வெளியாகிறது. அது எல்லாம் எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல வீணாகி, அந்த மாஃபியா கும்பல் தமது சட்ட விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

   கர்னாடகாவின் ரெட்டி சகோதரர்கள் இந்த தனியார் கொள்ளையின் புத்தம் புதிய முகங்கள். தமிழ்நாட்டில் மாறன் சகோதரர்கள், கருணாநிதி கும்பல், சசிகலா கும்பல் எல்லாமே தனியார் மயமாக்கத்தில் நாட்டையும் மக்களையும் சுரண்டுபவர்கள்தான்.
   ////

   yes, there is massive corruption and abuse. but this is a cumulative effect of many decades of state socialism which corrupted our soul. this same privatisation has enabled you to start a venture with cheap PCs and net and cell. you are personal beneficiary of this globalisation which ushers in many many new oppurtunities for hard working entreprenuers like you. this was unimaginable until the 90s, when govt employment was the only way for ‘settling’ in life.

   RIL has its demerits, no doubt. but this same RIL sticks to the law when it operates its business in the more ethical West, esp W.Europe. How and Why ?
   those W.European nations and Japan too are free market economies with liberal democracies. but the business ethics is much much higher than in India. How ?

 15. பாரத ஸ்டேட் வங்கி, பிஎஸ்என்எல் போன்று தன்னிச்சையான நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தி மத்திய ரிசர்வ் வங்கி, தொலை தொடர்புத் துறை குழுமம் போன்று அரசு சாரா கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க