Monday, October 14, 2024
முகப்புசெய்திஆங்கிலம் - லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !!

ஆங்கிலம் – லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !!

-

ழக்கறிஞர் விஜயனை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் இட ஓதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்து உருட்டுக் கட்டை அடிவாங்கி பிரபலமானவர். ஆனால் தொடர்ந்து உருட்டுக்கட்டை ஆட்சியை ஆதரிப்பவர். தமிழகத்தில் வழக்கறிஞர் போராட்டம் தொடங்கினால் போதும், விஜயனின் பேனா சீறலாய் வெடித்துக் கிளம்பும். போராட்டத்திற்கெதிரான தனது சொந்தக் கருத்தை “நடுநிலையான கருத்துப் போல” தினமணி நடுப்பக்க கட்டுரையாய் பதிவு செய்யும்.

சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழுக்காக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் குறித்தும் 05.07.2010 தேதிய தினமணியில் “பொய் சொல்லக் கூடாது” என்ற தலைப்பில் விஜயன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் விஜயன் முன்வைத்திருப்பது:

1)    உயர்நீதிமன்றத்தில் தமிழ் வந்தால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.
2)    உரிய உள் கட்டமைப்பு வசதியின்றி தமிழ் வழக்காடும் மொழியாக முடியாது.
3)    இந்தியா போன்ற பலமொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல.
4)    சட்டம், தீர்ப்புகள் ஆங்கிலத்தில் தான் இருந்தாக வேண்டும்.
5)    போராட்டம் அரசியலாக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட விசயங்கள் தவிர சட்டரீதியான கருத்துக்கள் சிலவற்றையும் விஜயன் தனது கட்டுரையில் முன் வைத்ததற்கு பலரும் பதில் அளித்த நிலையில் விஜயனை இக்கட்டுரை எழுதத் தூண்டிய சிந்தனை போக்கு எது? அதை ஆராய்வதே விஜயனின் கட்டுரையை அதன் உண்மை பொருளிலும், விஜயனையும் புரிந்து கொள்ள உதவும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதம் நடந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எந்த மக்கள் விஜயனிடம் சொன்னார்கள் எனத் தெரியவில்லை பொதுவாக மக்களுக்கு பாதிப்பு என விஜயன் முன்வைப்பது, தான், தன்னைச் சார்ந்தோர், தன்னை ஒத்திருப்போரின் கருத்தை மக்கள் பெயரால் முன் வைப்பதே. இந்த நாட்டில் ஆள்வோராகவும், அதிகாரத்தில் உள்ளோராகவும் இருக்கக் கூடிய சிறு பிரிவினரின் பார்வையும் விஜயனின் கருத்தை ஒத்ததே.

நமது நாட்டிலிருக்கும் பாராளுமன்றங்கள், சட்டமன்றங்கள், உச்ச- உயர் நீதிமன்றங்கள், காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகார நிறுவனங்கள் அனைத்தும் யாருக்கானது? என்ற கேள்வியிலிருந்து விஜயனுக்கான பதில் தொடங்குகிறது. மேற்படி அரசு அதிகார நிறுவனங்களில் உள்ளோர், மக்களிடமிருந்து தங்களை பல படிகள் உயர்வாக கருதிக்கொண்டு தங்களுடைய தயவில்தான் ஒட்டுமொத்த மக்கள் சமூகமும் இயங்கி வருவதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். இதை நமது அன்றாட வாழ்வில் காவல் நிலையத்திற்கோ, கலெக்டர் அலுவலகத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ செல்லும் போது நாம் சொந்த அனுபவமாக உணர முடியும்.

நமது அரசியல் அமைப்பு முறையானது பாராளுமன்றம், சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களை எல்லோரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும், மறுத்தால் அரசு குற்றம்சாட்டி நீதித்துறை தண்டனை வழங்கும் என்ற வகையில் அமைந்திருக்கிறது. சட்டத்தின் மேலாண்மை (Supremacy of law)  குறித்து அதிகாரத்தில் உள்ளோர் அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால் மக்களின் கருத்தைக் கேட்டறியாமல் அரசாங்கம் ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்பு அதை பின்பற்று என்று கட்டாயப்படுத்தும் வழமையே நம்மிடம் இருக்கிறது.

உதாரணத்திற்கு கடலோர மேலாண்மை சட்டத்திற்கு மீனவர்கள் கருத்தோ, சிறப்பு பொருளாதார மண்டல நிலப்பறி சட்டத்திற்கு விவசாயிகள் கருத்தோ கேட்கப்படுவதில்லை. மாறாக ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களின் நலன் கருதி சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்பு அதை பின்பற்ற கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறான நிலையில் மக்களுக்காக சட்டங்களா? சட்டத்திற்காக மக்களா? என்று கேள்வி எழுப்பி பார்த்தால் மக்களுக்காகத்தான் சட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் நமது அரசியல் அமைப்பு நடைமுறை அதற்கு முரணாக இருக்கிறது. அதை மக்கள் நலன் சார்ந்து மாற்றக் கோருவதை அதிகாரத்தில் உள்ளோர் ஏற்பதில்லை. விஜயனும் இவ்வகை கண்ணோட்டத்திலேதான் மக்கள் நலனுக்கான மாற்றங்களை ஏற்க மறுக்கிறார்.

பாராளுமன்றம், சட்டமன்றங்கள் தொடர்பான கண்ணோட்டத்தை நீதித்துறைக்கும் பொருத்திப் பார்ப்போம். மக்களுக்காக நீதிமன்றங்களா? நீதிமன்றத்திற்காக மக்களா? என்றால் நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கு வேலை தர வேண்டும், விஜயன் போன்ற வழக்கறிஞர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. அதே போல நீதிமன்ற மொழியாக தமிழ் வந்தால் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், விஜயன் போன்ற வழக்கறிஞர்களுக்கு ஏற்படும் சங்கடங்களையும் நாம் கணக்கில் கொள்ள முடியாது. நீதிமன்றங்கள் மக்களுக்கானது. அங்கு மக்களுக்கு தெரிந்த மொழியில் வழக்கு நடவடிக்கையில் இருப்பதே ஜனநாயகம் என்ற முறையிலே இந்தப் பிரச்சினையை பார்க்க முடியும். வழமையான அடிமை வாழ்வில் சுகம் காணுபவர்கள் தவிர வேறு எவராலும் இவ்வாறே சிந்திக்க இயலும்.

மேலும் விஜயன் அக்கட்டுரையில் அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் 21 மொழிகள் அரசின் அலுவல் மொழிகள் என்னும் போது அவற்றை எல்லாம் உயர்நீதிமன்ற மொழியாக்க முடியுமா? என்ற கருத்தை முன்வைக்கிறார்.

உயர்நீதிமன்றங்களில் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திலும், தாய்மொழியிலேயே வழக்கு நடத்திடலாம். மாநிலங்களுக்கிடையிலான பொதுவான அரசியல் சட்டப் பிரச்சினைகள் தவிர இதர வழக்குகளை வழக்காடிகள் தாய்மொழியிலேயே நடத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் (அல்லது) இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்ற அமர்வு (Supreme Court Bench) அமைத்து அந்தந்த மாநில மொழி தெரிந்த நீதிபதிகளை நியமித்து வழக்குகளை நடத்தினால், இன்று உச்சநீதிமன்றத்தில் தேங்கி நிற்கும் பெரும்பாலான சிவில், கிரிமினல் வழக்குகளை மொழி பெயர்க்கும் தேவையின்றி டெல்லி செல்லாமலே முடித்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறான முறையை உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ ஏற்காது. என்ன அடிப்படையில் என்றால் தங்களுக்காகத்தான் மக்களே தவிர, மக்களுக்காக தாங்கள் இல்லை என்று கருதுவதால்.

இக்கருத்துதான் நமது சமூகத்தில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், பெரும் முதலாளிகள் என அனைவரின் கருத்தாக இருக்கிறது. இக்கருத்தை தங்களின் சொந்தக் கருத்தாக ஏற்க கீழ்நிலையில் இருக்கும் அரசு ஊழியர்கள் கூட பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

கூடுதலாக ஆங்கிலத்தை நிர்வாக மொழியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் அரசுக்கும், நீதித்துறைக்கும் இருக்கிறதென்றால் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமின்றி ஆள்வோருக்கும் அதிகாரத்தில் உள்ளோருக்கும் மக்களை மிரட்டும் கருவியாகப் பயன்படுகிறது. பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற நிலையில், அம்மக்கள் அரசு நீதித்துறை நிர்வாகங்களில் பங்கேற்க இயலாத நிலை இருக்கிறது. இந்நிலை திட்டமிட்டே தொடர வைக்கப்படுகிறது. பெரிய தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்களில் எல்லாம் மக்கள் நுழையக் கூட அஞ்சுவதற்குக் காரணம் ஆங்கில அறிவின்மையே. ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் அறிவாளிகள் என்ற கருத்து உளவியல் ரீதியாக மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சாதாரண ஏழை மக்கள் கூட தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க விரும்புகிறார்கள்.

இந்த ஆங்கில வழிக் கல்வியில் அடிமைத்தனமும் சேர்த்தே கற்றுத்தரப்படுகிறது. அதனால்தான் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் சமூக உணர்வு குன்றியும், சுய நல உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றனர். இந்த வகையில் ஆங்கிலப் பயன்பாடு மக்களை அடிமைகளாய் வைத்திருக்க மட்டுமின்றி, அரசு அதிகாரத்திலிருந்து அந்நியப்படுத்தவும் உதவுகிறது. அதிகாரத்தில் உள்ள ஆள்வோரும் இந்நிலை தொடரவே விரும்புகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் விஜயன் ஆங்கில வழி நீதியை ஆதரிக்கிறாரே தவிர மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியல்ல.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் போரட்டத்தை வழக்கறிஞர்கள் அரசியலாக்கி விட்டனர் என்பதும் விஜயனின் குற்றச்சாட்டு. இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரையும் ஒரு கருத்து வழி நடத்துகிறது. அக்கருத்தின் பின்னணியில் ஒரு அரசியல் நிச்சயம் இருக்கும். ஒரு மனிதனின் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட அத்தனை நிகழ்வுகளையும், அவன் வாழும் சமூகத்தினை வழிநடத்தும் அரசியலே தீர்மானிக்கும்போது, அரசியலற்ற ஒரு மனிதன் இவ்வுலகில் இருக்கவே முடியாது. ஏன் வழக்கறிஞர் விஜயனை வழிநடத்தும் அரசியல் எது?

கடந்த பிப்ரவரி 19, 2009 உயர்நீதிமன்ற போலீசு வெறியாட்டத்தை ஆதரித்து விஜயன் எழுதிய “சத்யமேவ ஜெயதே” என்ற கட்டுரையில் “தமிழகத்தில் வன் கொடுமைக்கு உள்ளாகும் ஒரே சாதி பிராமணர் சாதிதான் இதனால் வன்கொடுமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்கிறார். விஜயனின் இக்கருத்துதான் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யின் அரசியல். ஆர்.எஸ்.எஸ்-சின் கருத்து விஜயனை வழி நடத்தலாமாம், மற்ற வழக்கறிஞர்களுக்கு தாய் மொழி உணர்வு கூடக் கூடாதாம். ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு, பல வழக்குகளில் அரசியல் வாதிகளின் குறுக்கீடு எனப் பல வகைகளில் நீதித்துறையில் அரசியல் புகத்தான் செய்கிறது. இதை விஜயன் என்றாவது எதிர்த்திருக்கிறாரா? இல்லை தினமணியில் நடுப்பக்க கட்டுரைதான் எழுதியிருக்கிறாரா?

வழக்கறிஞர்களின் எந்தப் போராட்டத்தையும் விஜயன் எதிர்த்தே வந்திருக்கிறார். ஈழப்போராட்டமானாலும் சரி, கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டிய போராட்டமானாலும் சரி விஜயனின் பேனா அதற்கு எதிராகவே சுழன்றிருக்கிறது. இதே விஜயன் ஜெயலலிதாவிடம் உருட்டுக் கட்டை அடிவாங்கிய போது இதே வழக்கறிஞர்கள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தினார்களே? அது சரியா? தவறா? விளக்குவாரா விஜயன்?

சுப்பிரமணியசாமி என்ற புரோக்கரை வழக்கறிஞர்கள் வெறும் முட்டையால் அடித்ததற்கு பதறித் துடித்து கட்டுரை எழுதிய விஜயன் தன்னோடு பல காலம் பணியாற்றும் வழக்கறிஞர்களின் முகத்தில் இரத்தம் வழிந்ததற்கு பதறி துடிக்காததேன்? வழக்கறிஞர்கள் சு.சாமி அளவுக்கு புனிதமானவார்கள் இல்லையா? விஜயனின் பார்வையில் சு.சாமி, போலீசார் போன்றோரின் உரிமைகள் புனிதமானவை. மண்டை உடைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குண்டு வீச்சுக்கும், கற்பழிப்புக்கும் ஆளான ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் புனிதமற்றவை. இது விஜயன் வழங்கும் மனு தர்ம நீதி போலும்!

இவ்வாறாக ஈழப்போராட்டம், இட ஒதுக்கீடு, தமிழ் உணர்வு ஆகியவற்றை எதிர்ப்பதும், சு.சாமி, கமிஷினர் இராதாகிருஷ்ணன் போன்ற ‘ஜனநாயகவாதி’களை ஆதரிப்பதும் தான் வக்கில் விஜயனின் கொள்கை. இவ்வாறு விஜயனை வழி நடத்துவது அவரது வர்க்க, சாதி நலன்களே. அதனால்தான் ஆங்கிலமா? தமிழா? என்றால் ஆங்கிலத்தின்பாலும், போலீசா? வக்கீலா? என்றால் போலீசின்பாலும், ஈழத்தமிழ் மக்களா? இந்திய அரசா? என்றால் இந்திய அரசின் பின்னாலும் வக்கீல் விஜயன் நிற்கிறார்.

இந்த அடிப்படையில்தான் விஜயனை நாம் பார்க்க வேண்டும். அவரது கட்டுரைகளையும் பரிசீலிக்க வேண்டும். சாரமாகச் சொன்னால் விஜயனின் பார்வை என்பது பார்ப்பனிய – முதலாளித்துவத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துவதே. அதை எதிர்க்கும் மக்கள் போராட்டம் எல்லாவற்றிலும் இத்தகைய அறிவுஜீவிகள் திறமையாக தங்கள் வாதத்தை வைத்து ஜென்டில்மேன்போல காட்டிக்கொள்வார்கள். ஆனாலும் உள்ளே இருக்கும் பூணூலும், லத்திக்கம்பும் எப்போதும் மறைந்து கொள்வதில்லை. நாமும் அதை மன்னிக்க வேண்டியதில்லை.

_____________________________________________________________________
– சே. வாஞ்சிநாதன்
வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், உயர்நீதிமன்றம், மதுரை
_____________________________________________________________________

 

  1. ஆங்கிலம் – லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !!…

    வழக்கறிஞர் விஜயனை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் இட ஓதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்து உருட்டுக் கட்டை அடிவாங்கி பிரபலமானவர்….

  2. […] This post was mentioned on Twitter by வினவு, சங்கமம். சங்கமம் said: ஆங்கிலம் – லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !!: வழக்கறிஞர் விஜயனை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஜெயலலிதா ஆட… http://bit.ly/dfD4dZ […]

  3. ///தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க விரும்புகிறார்கள்.///
    not only in India. Even in China also, english started ruling. It was said that majority of the chinese are learning english so frenetically (in tamil “verithanamaaga”- may be for job opportunities also. Please publish this without throwig in “veendaantha pinnoottangal”. publish all china related current news with A OPEN HEART.

    • There is nothing wrong in learning English as a language.but teaching all the subjects through english and compel children to learn through an alien language is not scientific way to educate.Learning through mother tongue would enable students to excel in their respective fields.I had my primary education in a rural school run by a panchayat union and had secondary education in a government high school.Upto higher secondary level my medium of instruction was Tamil.Only in college it was English.Convent crazy people .please note. eventhough being a rural student having had school education in Tamil medium nothing prevented me from understanding writing and speaking so called intellectuals language ENGLIPISH.

  4. What Vijayan mentioned has been distortd with a caste bias.If Other State Judges are posted to HC ,we cannot be translating or make a provision that only Tamil knowing Judges would be appointed.These sort of sectarian issues would spell adoom to federal setup of the country

    • yes. and most importantly there are thousands of law books and case histories and documents in English, which need to be translated into Tamil first. only then would it be possible to argue in Tamil in all cases in High Courts. and many lawyers and judges in HCs are from other states and do not know tamil. the cheif justice himself too. hence practical difficulties are plenty.

      • Across the Tamilnadu except High Court all the Sub-Ordinate court proceedings in Tamil and English. Though legal books and judgments are in English here the courts proceedings takes place succeessfully in Tamil. So, there is no difficulty to make the Tamil language as High Court official language.

  5. ///பெரிய தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்களில் எல்லாம் மக்கள் நுழையக் கூட அஞ்சுவதற்குக் காரணம் ஆங்கில அறிவின்மையே. ///

    இல்லை. பணம் இல்லாத காரணம் தான். அங்கு செல்ல வேண்டுமானால், நிறைய பணம் வேண்டும் என்ற சூழல் தான் சரியான காரணம். படிப்பறிவே இல்லாத, ஆங்கிலம் சிறிதும் அறியாத பணக்காரர்கள் பலரும் சர்வ சாதாரணமாக அந்த இடங்களுக்கு செல்கிறார்கள்.

  6. சுந்தர், அதியமானுக்கு…..
    //
    If Other State Judges are posted to HC ,we cannot be translating or make a provision that only Tamil knowing Judges would be appointed.These sort of sectarian issues would spell adoom to federal setup of the country //

    கட்டுரையை மீண்டும் படிக்கவும்…….
    நீங்கள் தழிழ் தெரியாத ஒரு நீதிபதிக்காக யோசிக்கிறீர்கள்….. (ஏன் நீதிபதி தமிழ் கற்க்ககூடாது…)
    இங்கே ஆங்கிலம் தெரியாத கோடிகனக்கான மக்களுக்காக யோசிக்கிறார்கள்… நீங்கள் இந்த கோடிகனக்கான மக்களை ஆங்கிலம் படிக்கச் சொல்கிடறீர்கள்.. (எது சரியான சிந்தனை….)

    • then the only practical way is to stop appointing other state judges in Madras HC. It is not practical for Judges at their advanced ages to learn Tamil quickly. more over the tenue of judges is very limited and they have very little time for learning a new language, given their work loads. but TN judges are appointed on other state HCs and hence it is not possible to refute other state judges from being appointed to Madras HC. it may create unwanted divisions.

      More importat issue is the huge task of translation all documents relating to cases (which run into millions of pages), law books, reference books and other material into Tamil. First let the TN govt try to do that. then we can talk about using Tamil in HC. or all this will be mere talk.

      IF the lawyers are honest and frank to their Tamil speaking clients, that is more than enough. (that is a tough one). and more over, HC hears only appeals and PILs and no client or witness needs to appear for HC cases (unlike the lower judicary). hence, if the lawyers can speak good english, that is more than enough for HC.

      • நீங்கள் கோர்ட்டுக்கு போனீர்களா என்று தெரியாது. இங்கே உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி தவிர அல்லது (ஒன்றிரண்டு) நீதிபதிகளை தவிர அனைவரும் தமிழறிந்த நீதிபதிகளே. மேலும் தலைமை நீதிபதி உடன் துணைக்கு ஒரு நீதிபதியை வைத்துக் கொண்டு அதாவது( பென்ச்) அமருகிறார். அருகிலிருக்கும் நீதிபதி நானறிந்தவரை (பார்த்தவரை)தமிழ் அறிந்தவரே. வயது ஒரு காரணமே அல்ல மொழி கற்க. அதுவும் கற்றவர்களுக்கு.

  7. மக்களுக்காகத்தான் நீதிபதிகள்…மக்களின் பிரச்சனைகளை தீர்கத்தான் அவர்கள்…
    அவர்கள் இந்தமக்களின் மொழிபடிப்பதில் தவறில்லை.
    இயாலாதவர்களைவிடுத்து இயன்றவர்களை நீதிமன்றத்தில் நியமிக்கலாம்..
    இது தமிழகத்துக்கு மட்டும் இல்லை எல்லா மாநிலத்தும்/உலகத்தில் எந்த இடத்தில் உள்ள மக்களுக்கும் பொருந்தும்..
    லட்சக்கனக்கான பக்கங்களை மொழிபெயர்ப்பதென்பது..இயலாத காரியம் இல்லை..
    உலகத்தமிழ் செம்மொழி மாட்டு செலவில்..பாதிக்கும் குறைவாகத்தான் செலவாகும்..

    • ///லட்சக்கனக்கான பக்கங்களை மொழிபெயர்ப்பதென்பது..இயலாத காரியம் இல்லை.. உலகத்தமிழ் செம்மொழி மாட்டு செலவில்..பாதிக்கும் குறைவாகத்தான் செலவாகும்..///

      sari, first arrange for that, then we can implement Tamil.

      • இதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேடும் வீண் விவாதங்கள். லச்சக்கணக்கான பக்ங்களை, நூல்களை, ஆவணங்களை மொழி பெயர்க்க பணம் மட்டும் பிரச்னையில்லை. எத்தனை கோடி ஒதுக்கினாலும், முடிக்க முடியாத விசியம் இது. தமிழ் கலைகளஞ்சியத்தின் மறுபதிப்பை சொன்ற 40 வருடங்களில் வெளியிட முடியாத அரசா, இத்தகைய பெரும் பணியை ஒழுங்கா செய்யப் போகிறது ? விசியம் அறிந்தவர்களிடம் விசாரித்து பாருங்க. யதார்த்தம் புரியும்.

  8. Except one, other replies are pro Vijayan.GOOD.Anyway the facts given by Mr.Vanchinathan is strongly support the need of the majority people, not only Tamil alsofor other nationals in India.Other replies are wounded horses,alas!-By LIONEL

  9. விஜயன் பார்பனர் அல்ல.வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதை யார்தான் ஆதரிக்க முடியும்.நீதிமன்ற புறக்கணிப்பின் மூலம் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்.
    தினமணி கட்டுரை காவல்துறைக்கு ஆதரவாக எழுதப்படவில்லை.வாஞ்சிநாதன் பொய்யாக இட்டுக்கட்டி எழுதுகிறார்.

    விஜயன் தொடர்ந்த வழக்கினால் ஆயிரணக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றனர்.69% இடஒதுக்கீடு என்ற அநியாயத்தை தைரியமாக எதிர்த்தவர் அவர். வன்முறையை நாடாமல் நீதிக்காக சட்டப் போரில் இறங்கியவர். அவரது கருத்துக்களை நீங்கள் மறுக்கலாம்.அதற்காக பொய் எழுதக்கூடாது.

    • ///69% இடஒதுக்கீடு என்ற அநியாயத்தை தைரியமாக எதிர்த்தவர் அவர். ///

      ஆம். தான் சரியென்று கருதும் விசியங்களுக்காக போராடுபவர்.

      69 % சதவீதம் மிக அதிகம். 50 % போதும் அல்லது அதற்க்கு குறைவாக இருக்கலாம். மிக முக்கியமாக கிரீமி லேயர்கள் இந்த சலுகையை பயன்படுத்த தகுந்த தடைகளை உருவாக்குதல் மிக அவசியம். (நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள கீரிமிலேயர் தான்). சாதி மட்டும் தான் இன்று தகுதியாக உள்ளது மிக தவறு. சாதியுடன் கூடவே, பணம், படிப்பு போன்ற பின்புலங்களையும் சேர்த்தே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இன்று பெரும்பான்மையான இட ஒதுக்கீடு உண்மையில் கீழே உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செல்லாமல், அந்த சாதிகளில் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பன்களே மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றன.

      அண்ணா பல்கலை கழக ஓப்பன் கோட்டாவில் சேரும் பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களின் எண்ணிக்கையை பார்த்தாலே தெரியும்.

      மைய்ய அரசில், இந்த அநீதியை களைய ஒரு அருமையான முறை உள்ளது :

      http://ncbc.nic.in/html/creamylayer.html
      Persons/Sections Excluded from Reservation which constitute Creamy Layer of the Society

      கிரிமி லேயர்களை களைந்தாலேயே, இட ஒதுகீட்டு சதவிகித்ததை குறைக்க முடியும்.

  10. ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் சமூக உணர்வு குன்றியும், சுய நல உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றனர்

  11. VINAVU As usual you have seen everything through your biased CASTE spectacles;! First Vijayan was attacked by DK goons at the behest of VEERAMANI . Of course it was during J’s rule. Second He is not a brahmin as alleged by Vanchinathan. Third you all are seeing this as a hysterical issue but he has applied his mind well before writting this article..If Tamil has to be implemented in Courts lot of infrastructural changes have to be made before that ; That’s what he has mentioned . YOUR ARGUEMENT IS LIKE SOMEBODY SAYING THAT I WILL GO AND SETTLE IN ANY PART OF THE COUNTRY as a constitutional right BUT WILL SPEAK ONLY TAMIL ! ! !..

    VINAVU TEAM Can you answer this question ? DO ALL OF YOUR CHILDREN ARE STUDYING IN TAMIL MEDIUM SCHOOLS ? PLEASE ANSWER ME! (I will not get an answer anyway)

    • அன்புள்ள பஞ்சாப் ரவி,

      வினவில் பலமுறை குறிப்பிட்டிருப்பது போல ஒருவரை பிறப்பால் மட்டுமே பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர் என்று மதிப்பிடுவதில்லை. அவர் பார்ப்பனராக பிறக்கவில்லை என்றாலும் பார்ப்பனியத்தை தூக்கிப் பிடித்தவராக இருந்தால் அவ்வாறு குறிப்பிடுகிறோம். விஜயன் பிறப்பால் பார்ப்பனர் இல்லை என்பதும் அவரது கண்ணோட்டம் பார்ப்பனியம் என்பதற்காகவே கட்டுரையளர் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.

      தமிழ்பேசும் மக்களது எண்ணிக்கை என்பது உலகில் பல ஐரோப்பிய, ஆப்ரிக்க நாடுகளின் தனிப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம். இத்தகைய நாட்டில் தாய்மொழி நிர்வாக, சட்டமொழியாக இல்லை என்பது அயோக்கியத்தனம். தாய்மொழியில் வழக்காடுவதை செய்ய வேண்டியது அரசு கடமை. அதை மக்களின் தலைமேல் சுமத்த முடியாது. நமக்கு ஆங்கிலம் தெரியும் அதனால் எல்லா மக்களும் ஆங்கிலம் கற்கவேண்டுமென்பது பாசிச மனப்போக்கு. நமக்கு ஆங்கிலம் தெரிந்தாலம், பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலும், தமிழ்தான் அவர்களது தாய்மொழி என்பதால் அதுவே வழக்காடு மொழியாக வேண்டும் என்று கோருவது ஜனநாயக சிந்தனை.

      மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் அப்படி ஒரு விதியில்லை என்றாலும் பெரும்பான்மையான தோழர்களின் பிள்ளைகள் தமிழ்வழிக் கல்விதான் கற்று வருகிறார்கள். இதை நாங்கள் வீம்புக்கு செய்யவில்லை. மக்களோடு நெருக்காமாக இருப்பதற்கும், ஒரு குழந்தை தாய்மொழியில் குறிப்பிட்ட வயது வரை கற்பது அறிவியல்பூர்வமானது என்பதாலுமே இதை கடைபிடிக்கிறோம்.

      • VINAVU ;Although you have clarified Brahminism part many times earlier it EVOKES a DEEP PAIN In LIBERAL,FORWARD THINKING BRAHMINS like me for no fault of mine.That’s why I object this every time I see in your articles,..Please do not say am the only one there are so many like me only am expressing this in a forum,..
        I will keep raising this everytime any body is branded like this !

        Before urging for Tamil in courts Let’s us fight for making infrastructure in place and fight for it,.. Your arguement is no less than Karuna’s dravidian issue of making language an issue where there are lot of important things than this,.. This is as good as making Engineering and Medical streams in tamil …

        I really pity these poor students who will not be able to get EVEN BOOKS in Tamil to study ; And they may not be able to seek employment elsewhere also…

        Thanks for your reply about your Children ? Why it is not compulsory for MA KA IE KA comrades? Please start all your preachings at your home! Then you start fighting for others .

        It is proven that your children will study in any meium of your choice but you are insisting the POOR TAMILANS to send their ward to Corporation schools ; You people are no less than Karunanidhi who send all his children to English convent and hail himself as sole custodian of tamils…

        Tail piece: Do you know the name of the school run by M.K.Stalin’s daughter ? SUN SHINE yenna arumayana tamil peyaru..

        • அன்புள்ள பஞ்சாப் ரவி

          வினவு இந்தக் கட்டுரையிலோ வேறு எந்தக் கட்டுரையிலோ மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கச் சொல்லி வற்புறுத்தியதாகவோ, அறிவுறுத்தியதாகவோ தெரியவில்லை. இங்கு சொல்ல வந்திருக்கும் விஷயம் தமிழ் மட்டுமே தெரிந்த ஏராளமானோருக்கு தமிழில் வழக்காடும் உரிமைக்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

          மொழியால் ஒதுக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நியாயமான சம உரிமைக்கு வழி வகுக்க முயற்சி செய்ய விழையும் போது இப்படிப் போய் நீங்கள் வாக்குவாதம் செய்யலாமா? தமிழில் உயர் நீதி மன்றத்தில் வழக்காடுவதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள். தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் கற்றுத்தான் ஆக வேண்டும் என்று ஆகி விட்டால் மெல்லத் தமிழ் இனி சாகத்தான் சாகும்.

          நான் வக்காலத்து வாங்க வந்து விட்டதாக நீங்கள் ஒரு வேளை நினைக்கும் பட்சத்தில், நான் வினவில் பணி புரிபவன் இல்லை என்று தெளிவு படுத்தி விடுகிறேன். இத்தளத்தை நடத்தும் நண்பர்களில் பலர் போல இல்லாமல் நான் இந்தியக் குடிமகன் என்று பெருமையாகத்தான் சொல்லிக் கொள்கிறேன். ஒவ்வொரு இந்திய மொழியையும் சம மரியாதையுடன் நடத்த வேண்டியது ஒரு நல்ல குடியரசின் கடமை இல்லையா?

  12. விஜயனின் கட்டுரைக்கு கூடுதல் பதிலுக்கு பார்க்க மணற்கேணி வழக்குரைஞர் பிரபு ராஜதுரையின் கட்டுரைகள்.

  13. உயர்நீதிமன்றத்தில் தமி்ழ் வருவதற்கு முன் உள்கட்டமைப்பு வேண்டும் என்பது மறைமுகமாக தமி்ழ் கூடாதென்பதெ.ராஜஸ்தான்;உ.பி.;ம.பி.;பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்ற மொழியாக உள்ளதே. இந்திக்குப் பொருந்துவது தமிழுக்குப் பொருந்தாதா?ஆங்கிலத் தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டதா? ஏன்?அய்ந்து நூற்றாண்டுகள் போராடி பிரஞ்சை விரட்டி ஆங்கில மக்கள் தங்கள் தாய்மொழியை நீதிமன்றத்தில் கொண்டுவந்தார்களே!அது தவறா?2007ல் அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தமிழை நீதிமன்ற மொழியாக்க ஆதரவு தெரிவித்தார்களே அது ஆராய்தலின்றியா?

  14. மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு; +2 தேர்வில் ஆங்கில வழி மாணவர்கள் ஒரு கேள்விக்கு விடை அளித்தது சரியா?தவறா?என்பது.தமிழ் வழி மாணவர்களூக்குப் பிரச்சனையே இல்லை.குரோமோசோம் பற்றிக் கூறு என்ற கேள்விக்கு மாணவர்கள் சரியான பதி்ல் எழுதவில்லை.அதை விளக்க வேண்டும் என்கிறது அரசு.மாணவர்களோ அது 5 மார்க் கேள்வி கூறினால் போதும் என்கிறார்கள்.DESCRIBE OR EXPLAIN என்ற மொழிக்குழப்பத்தால் வந்த வினை இது.தேவையா இது?

  15. \\வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதை யார்தான் ஆதரிக்க முடியும்.நீதிமன்ற புறக்கணிப்பின் மூலம் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்.
    தினமணி கட்டுரை காவல்துறைக்கு ஆதரவாக எழுதப்படவில்லை.வாஞ்சிநாதன் பொய்யாக இட்டுக்கட்டி எழுதுகிறார்\\. பிப்.19 சம்பவத்திற்கு முன்னும் பின்னுமான வழக்கறிஞர்களின் அனைத்துப் போராட்டங்களுக்கும் 100 க்கும் மேலான வழக்குகள் போடப்பட்டுள்ளன.ஆனால் 100 க்கும் மேலான வழக்கறிஞர்களை நீதிபதிகளை மண்டையை உடைத்த 500க்கும் மேலான போலீசார் மீது வழக்கு இல்லை. காவல்துறையினர் 4 பேர் மீது சிபிஜ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது.இதை விஜயன் கண்டித்திருக்கிறாரா?குறைந்தபட்சம் நீதிபதிகள் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன்;சுகுணா தாக்கப்பட்டதற்க்காவது நடவடிக்கை உண்டா?வழக்கறிஞர்கள் தங்கள் சொந்த கோரிக்கைகளுக்காகப் போராடவில்லை.ஈழத் தமிழ் மக்களை இந்திய அரசு படுகொலை செய்வதை எதிர்த்துத்தான் போராடினார்கள்.அதற்கும் வழக்கு போடப்பட்டுள்ளது.போலீசின் ரவுடித்தனத்திற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மாணவனும்;அதியமானும் பதில் சொல்ல வேண்டும்.

  16. //IF the lawyers are honest and frank to their Tamil speaking clients, that is more than enough. (that is a tough one)//அதியமானுக்கு விஜயன் போன்ற வக்கீல்களைத்தான் தெரியும் போல அந்த அனுபவத்தில் இவ்வாறு பேசலாம்.// //more over, HC hears only appeals and PILs// இதையும் விஜயன்தான் சொன்னாறோ?எதற்க்கும் ஒரு வக்கீலை விசாரித்துப் பாருங்களேன் அதியமான்.//ஒடி ஒளியாது பதில் சொல்லுங்களேன் அதியமான்//பதில் இன்றி போரடிக்கிறது.

    • nanban, the clients and witnesses do NOT dispose in HCs. Only in lower courts and district courts. The HC hears only revision petitions and arguments by lawyers from appeals of cases. ok. try to know the facts fully. and yes, i know many lawyers and their ethics. Lawyer Vijayan is honest and ethical and it is a well known fact. he is an exception among corrupt lawyers. majority of the lawyers are dishonest, esp in the lower courts. ok.

  17. .// The HC hears only revision petitions and arguments by lawyers from appeals of cases. ok. try to know the facts fully//THEN WRIT PETITIONS UNDER ARTICLE 226?//try to know the facts fully!

  18. Athiyaman & Punjab Ravi… don’t waste your precious time… VINAVU group is such a time waste parties…. just they preaching everything to others and they don’t follow anything… If VINAVU can do everything in tamil… why they are consuming English Medicines… just eat Tamil Medicines (Sidha, homeopathy medicines)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க