முகப்புசெய்திஅடங்கமாட்டியா நித்தியானந்தா?

அடங்கமாட்டியா நித்தியானந்தா?

-

நித்தியானந்தா மீண்டும் தனது கிரமமான சிரமமில்லாத சாமியார் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இன்று தமிழ் நாளிதழ்கள் அனைத்தும் நித்தி பக்தர்களிடம் ஆற்றிய சொற்பொழிவை வெளியிட்டிருக்கின்றன.

பெங்களூடர் பிடுதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஞாயிற்றுக் கிழமை குரு பூர்ணிமா விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாம். இதற்காக காலை ஆறு மணிக்கு அக்னி வளையத்துக்குள் பஞ்ச தபதி யாகத்தை நித்தி நடத்தினாராம். குளத்திலுள்ள 21 அடி லிங்கத்திற்கு அபிஷோகம், நித்தியாவை பக்தர்கள் பல்லக்கில் தூக்கிவந்தது என எல்லா எழவுகளும் திவ்யமாக நடந்தனவாம்.

அப்போது பக்தர்கள் நடனமாட, நித்தி ஆசிர்வாதம் வழங்க, போன்ற கூத்துக்களெல்லாம் முடிந்து, நித்தி பேசியதில் சில ஹைலைட்ஸ்:

“என் மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து என்னை காமசாமி, செக்ஸ் சாமியார் என விமரிசிக்கிறார்கள். இந்த விமரிசனங்களால் நான் மனம் நொந்து போக மாட்டேன். அதற்காக கவலைப்படமாட்டேன். மகான் ராமகிருஷ்ண பரமஹம்சரையே பலர் பலவாறு விமரிசனம் செய்தார்கள். குற்றம் சாட்டினார்கள். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. நானும் கவலைப்படப்போவதில்லை.”

“நான் ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, கைதிகள் என்னிடம் ஆசிர்வாதம் பெற்றனர். ஒரு கைதிஎன்னிடம் சாமி எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று கேட்டார். விரைவில் கிடைக்குமென்றேன். அதன்படி எனக்கு முன்பாக அவருக்க ஜாமின் கிடைத்து விடுதலையானார்.”

தப்பு செய்து மாட்டிக் கொண்டவர்கள் யாருக்கும் இத்தனை திமிர், தெனாவெட்டு இருக்குமா என்பது சந்தேகம். ஜெயலலிதா கூட வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணத்திற்கு பின்னர் அவர் வீட்டில் கோடிக்கணக்கில் நகைகள் கைப்பற்றப்பட்ட பின்னர் இனி சாகும் வரை நகை அணியமாட்டேன் என்று டிராமாவாவது போடுகிறார். ஆனால் இந்த நித்தியோ எந்த சுவடும் இல்லாமல் சகஜமாக இயங்க ஆரம்பித்து விட்டார்.

நித்தியானந்தா விவகாரம் வெளிவந்த உடன் அண்ணன் தமிழ்ச்செல்வன் போன்ற நல்லெண்ண மனிதாபிமானிகள் நித்தியை பாலியல் தேவைகளுக்காக தவிக்கும் இளைஞனாய், மகனாய் பார்த்தார்கள். வேறு சிலரும் அதே கோணத்தில் பரிசீலித்தார்கள். இளவயதில் பிரபலம், எல்லா டைப் பிரபலங்களும் காலில் விழுவது, ஆயிரக்கணக்கான கோடி சொத்து, ஆடம்பர வாழ்க்கை என்று வாழும் ஒருவன் வர்க்கமென்ற வகையில் மேட்டுக்குடி பொறுக்கியாகத்தான் இருப்பான். இதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அண்ணன் தமிழ்ச்செல்வன் வர்க்க ஆய்வில் ரொம்பவும் வீக் என்று தெரிகிறது.

அப்போது ஒரு வெளிநாட்டு நண்பர் ஒருவர் ஒரு ஆலோசனையை போராட்ட முறையாகச் சொன்னார். அதன்படி நடிகை ரஞ்சிதாவை மணம் செய்ய வேண்டுமென நித்தியை வற்புறுத்தி போராட வேண்டுமாம். அவரிடம் சொன்னோம், “ நண்பரே இந்தப் பட்டியிலில் ரஞ்சிதா மட்டும் சிக்கியிருக்கிறார், இன்னும் பலர் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரையும் மணம் செய்து கொள்வது சாத்தியமில்லையே?”. அத்துடன் நண்பர் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அமைதியானார்.

பாலியில் பிரச்சினையில் சாதாரணமானவன் தவறு செய்வதைப் போன்று நித்தியும் இருப்பார் என்பதுதான் இத்தகைய மனிதாபிமானத்தின் ஊற்று மூலமாக இருக்கிறது. பாலியல் விசயங்களை நாம் அணுகுவது போல மேட்டுக்குடியினர், சாமியார்கள், திரையுலகினர் அணுகமாட்டார்கள். அதனால் நித்தியை வெறுமனே இச்சைக்காக தவிக்கும் அப்பாவி இளைஞனாக கருத முடியாது. அதனால்தான் இப்போது நித்தி தெனாவெட்டாக பேசுகிறார்.

வெட்கம், மானம், சூடு, சொரணை முதலியவைகள் இருந்திருந்தால் நித்தி தனது தவறை நினைத்து மனம் வருந்தியிருப்பார். சாமியார் வாழ்வை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதோடு சாமியார் முன்னை விட மும்மூரமாக வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ரஞ்சிதாவும் வெளியான வீடியோ பொய்யானது என்று கூறிவிட்டார்.

எடியூரப்பா மற்றும் பா.ஜ.கவின் இந்துத்வ ஆதரவோடு, மிகுந்த பணபலத்தோடும் நித்தி இந்த பாலியல் ஊழல் முறைகேட்டை பத்தோடு ஒன்றாக கருதிவிட்டு ஆசிர்வாத லீலைகளை ஆரம்பித்து விட்டார். ஆக செய்த தவறு இம்மியளவும் இந்த மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கும் அவர் மேட்டுக்குடி பொறுக்கி சாமியார் என்ற பௌதீக நிலைதான் காரணம். இதை இனியாவது அண்ணன் தமிழ்ச்செல்வன் புரிந்து கொள்வாரா?

நித்தியை விடுங்கள், இந்த பக்தர்களை எதைக் கொண்டு அடிப்பது? இந்தக் கண்றாவி சாமியாரை பல்லக்கில் சுமந்து வருகிறார்கள் என்றால் யாரிடம் சொல்லி அழ? சாமியார் யாகம் செய்வாராம், பக்தர்கள் நடனம் ஆடுவார்களாம், சாமியாரின் காலில் விழுவார்களாம், இறுதியாக நித்தி சொற்பொழிவு ஆற்றுவராம். எதுவும் நடக்காதது போல பக்தர்கள் இப்படி அடி முட்டாள்களாக இருப்பதுதானே நித்தி இப்படி கூச்ச நாச்சமில்லாமல் ஆட்டம் போட வைக்கிறது?

இவர்களை அடிமுட்டாள்கள் என்பதை விட ஊழலெல்லாம் வாழ்வில் சகஜம்தான் என்று ஊழல்படுத்தப்பட்ட சிந்தனைக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்லலாம். இவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் நித்தி தன்னை காமசாமியார் என்று அழைப்பதைப் பொருட்படுத்தவில்லை என்கிறார். இதில் ராமகிருஷ்ணரை எதற்கு ஒப்பிடுகிறார்? அவருக்கு சாரதா தேவி என்ற மனைவியும், அந்த மனைவியை காளியின் அவதாரமாய் அவர் பூஜை செய்வதும், ரஞ்சிதாவை பூஜை செய்த நித்திக்கு பொருத்தமாக இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

மேலும் விவேகானந்தர் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடம் துவங்கி எல்லா மடத்திலும் செக்ஸ் முறைகேடுகள் வழமையாக மாறிக் கொண்டிருக்கும் போது அந்த மடத்து சீடர்களும் நித்தி இப்படி ஒப்பீடு செய்வதை எதிர்க்க முடியாது. ஆனாலும் ராமகிருஷ்ணரோடு ஒரு மூன்றாந்தர சாமியார் தன்னை ஒப்பிட்டுக் கூறுவதை நம்மைப் போன்ற நாத்திகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இதில் நித்திக்கு இன்னும் ஆன்மீக பவர் போகவில்லையாம். அவர் சொன்னபடி ஒரு கைதிக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாம். ஜெயலலிதா கூட தனது வழக்குகளிலிருந்து விடுதலை அடைவதற்கு நித்தியைப் பார்க்கலாமே?  எடியூரப்பாவிடம் சொன்னால் ஒரு அப்பாயிண்ட்மெண்ட வாங்கிக் கொடுத்து விடுவார். ஒரு வேளை இந்த சாமியாரைப் பற்றி கேள்விப்படாததினால்தான் சதாம் ஹூசேன் கூட தூக்கில் தொங்க வேண்டியிருந்ததோ?

நித்தி செக்ஸ் ஊழலில் சிக்கினாலும் அவரது ஆன்மீன ஃபவர்  வலிமையானது என்று பிடதியின் கொ.ப.செ சாரு நிவேதிதா கூட குறிப்பிடுகிறார். அந்த ஆன்மீக பவரை இப்படி காமத்திற்கும் பயன்படுத்திவிட்டார் என்பதைத் தவிர இன்னும் நித்தி எதையும் குணமாக்கும் வல்லமை கொண்டவர் என்பது சாருவின் கருத்து. பொதுவில் சாரு பொய் சொல்வதற்கெல்லாம் கோழைகள் போல அஞ்சாமாட்டார் என்றாலும் உலக இளக்கியம் படித்த உத்தமரே இப்படி கொண்டாடும் போது உள்ளூர் பக்தர்கள் நித்தியை கொண்டாடுவதில் வியப்பில்லையே?

இப்போது நித்தி கூட பிரச்சினையில்லை. ஆனால் ஊரறிந்த சாமியார் அதே ஊரறிய ஒரு  செக்ஸ் மோசடியில் சிக்கிய பிறகும் அவரது ஆன்மீக சாம்ராஜ்ஜியம் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுகிறதே அதுதான் பிரச்சினை. இலவச டி.வியும், பணமும் வாங்கிக் கொண்டு ஏழைகள் தி.மு.கவுக்கு வாக்களிப்பதாக சலித்துக் கொள்ளும் புண்ணியவான்கள் இந்த பணக்கார பக்தர்களின் நடத்தைக்கு என்ன சொல்வார்கள்?

 

 1. அடங்கமாட்டியா நித்தியானந்தா?…

  ஊரறிந்த சாமியார் அதே ஊரறிய ஒரு செக்ஸ் மோசடியில் சிக்கிய பிறகும் அவரது ஆன்மீக சாம்ராஜ்ஜியம் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுகிறதே அதுதான் பிரச்சினை….

 2. ஏய் தெனவு, நான் மறுபடியும் எழுத வந்த டைமிங்குக்கு பொறுத்தமா பொம்பள பொறுக்கி நித்தியோட பதிவு போடறியா? வச்சுகறேன்டா ஒன்னயை.

 3. நல்ல பதிவு. டாக்டர் ருத்ரனை எப்படியாவது கட்டுரையை தொடரச்செய்யவும்

 4. நித்திக்கு பவர் ரொம்ப ஜாஸ்தியாம் நான் கூட கேள்வி பட்டேங்க!!! பின்ன எல்லா ஓட்டு பொறுக்குற கட்சியையும் தன்னோட பிரம்ம திருஸ்டியால வளைச்சு போட்டுட்டாரு!!! இன்னா பவரு இன்னா பவரு.

  கலகம்

 5. இவனுகளைச் சொல்லி என்ன செய்ய.

  ‘இன்னுமா நம்மள இந்த ஊர் உலகம் நம்புது என்று வடிவேலு கேட்ட மாதிரி
  இவன நம்புறதுக்கு இன்னமும் ஆளு இருக்குறதுனால தான் இந்த கூத்தெல்லாம் பாக்க வேண்டியிருக்கு.

  பிரேமானந்த, ஜக்கி, நித்யானந்தா, சங்கராச்சாரி, கங்காரு
  போன்றவர்களின் சேவை இந்த நாட்டுக்கு இப்ப ரொம்பத் தேவை.????

  வினவு வலை உலகில் எப்படி எல்லாம் சகித்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கின்றது என்பதற்கு கீழே உள்ள இந்த கொசுக்கடியைப் பாருங்க.

  Date: 2010/7/25
  Subject: தமிழ் மணத்தின் காட்டு தர்பாருக்கு சாவு மணி அடிப்போம்

  ஐயா,
  தாங்கள் கவிதை07 என்ற எனது வலை தளத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்
  என்று நினைக்கிறேன்.

  ஜஸ்ட் 14 மாதங்களில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் ஹிட்ஸ் பெற்ற என்
  வலைப்பூவில் பிரபாகரன் ஜாதகத்தை அலசி அவர் சாக வாய்ப்பில்லை என்று எழுதி
  தொலைத்து விட்டேன். கில்மா ஜோக்குகள், பலான சமாசாரங்கள்
  எழுதினப்போவெல்லாம் தடை பண்ணாத தமிழ் மணம் தடை செய்துட்டதால ஹிட்ஸ்
  குறைஞ்சிக்கிட்டே போகுது. என் ஆர்வமும் தான் . ஜிமெயில் மூலமா உங்களுக்கு
  வந்திருக்கிற இந்த மெயிலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வார்ட்
  பண்ணுங்க. கீழ் காணும் லின்கை க்ளிக்கி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கசொல்லுங்க.

  தமிழ் மணத்தின் காட்டு தர்பாருக்கு சாவு மணி அடிப்போம். சீப்பை ஒளிச்சு
  வச்சுட்டா கல்யாணம் நின்னுராதுனு நிரூபிப்போம்.

  ………………………..

  இந்த எனது வலைப்பூவில் ஜோதிடவியலின் டாப் சீக்ரெட்ஸ் முதல் உண்மையான
  ஆன்மீகத்தின் அகர முதலி வரை இதில் நான் எழுதாத மேட்டரே கிடையாது. ஒரு
  தாட்டி வந்து பாருங்களேன்.

  …………………………….

  சித்தூர்.எஸ்.முருகேசன்

 6. நித்தி மாதிரி நெத்திலிய விடுங்க, ஜாக்கி-சொறி சொறி மாதிரி சுராமீனபத்தியெல்லாம் வினவுல வந்தா நல்லாருக்கும்னு பக்கத்துல பேசிக்கிறாங்க

 7. ஆண்மையைப்பற்றி செய்முறையில் அறிந்துகொள்ள தமிழருக்கு கிடைத்துள்ள அரும்பெரும் கொடை நித்தியானந்தா சுவாமி அவர்கள். அவருக்கு கோவில்கட்டி கும்பிட நிதிவேண்டும்.

  பக்தகோடிகள் பணம் அனுப்பவேண்டிய முகவரி: மீன்சந்தையில் பூவாசம் நுகரவிழையும் வினவு.

  நன்றி.

 8. Ivan adanka mattan sir.. ivanodu 2002 matrum 2003 andu iruthene.. ivan chamundi studiola irukum pothee ivanodha first website nan design pannien.. website la ulla content padikum pothu neriya doubt varum.. yethachum ketta UNNODA EGO kelvi keka solluthunu solluvan.. ennodah nanban Jamuna ammavoda paduthu irunthatha parthuthan .. Jamnuna yaruna ivanodha secratary yoda wife.. athai partha Jamuna amma next day coola vanthu en friend kitta healing kodutharnu sollitaah.. intha sambavam veliye theriya koodathunu en friend melaium kai vechutan… epadiyo thapuchu odi vanthutome.. ivan valarchikana karannankal :
  1) Nagarathar Makkal – Nambi yemantha muthal group. They were looking local alternate for trichy swamigal in Raja Rajeshwari Nagar.
  2) Kumudam Group – First few episode elithinathu mr. valamburi jan .. avar solla solla eluthi avar kidda nalla peru vankinen.. bangalorela IT piyan oruthan thappu illama tamizhla yeluthranenu..
  3) Local all Ex-CM’s (Both Krishna and Devagowda). Opening ceremony pannum pothe CID police watch pannankha.
  4) NRI’s in US especially through Nagarathars.

  Ulla ullavanuku ellorukum thanku oru vaipu swami kooda kedaikathanu irukaravununka.. vittu thallunkha..

 9. இந்த மாதிரி சாமியார்கள் வருவதற்கு காரணம், மக்களின் வாழ்க்கை மீதான பயமே காரணம். முதலாளித்துவ உலகில் எல்லாம் பணம் என்று ஆகிவிட்ட பிறகு, தன்னை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் படிப்படியாக நம்பிக்கையை இழக்க செய்து, அற்புதங்கள் செய்யும் சாமியார்களிடம் விழச்செய்கின்றது. அந்த சாமியார்கள் என்ன தவறு செய்தாலும் நம்ப முடியாத அளவு கண்மூடித்தனமான ஒரு பக்தியை – வாழ்க்கையின் மீதான இந்த பயமே ஏற்படுத்துகிறது. பத்திரிக்கைகளும் புட்டபர்த்தி சாய்பாபா, கல்கி, ஜட்டி சாரி ஜக்கி வாசுதேவ், நித்தி முதலான பண்ணாடைகளை ஏற்றி விடுவதன் மூலம் இந்த பக்தி வியாபாரத்தில் கொள்ளை அடிக்கின்றனர். குமுதம் பக்தி ஒரு சிறந்த உதாரணம்.

 10. hw abt sankaracharya JAYENDRAN…….he is going to be free soon frm punishment.Deal already settled with KARUNANITHI thru es ve sekar.Pulavar mahadevan keeps in touch with dmk power base constantly……..plz get ready to write another article to expose the murder case which is going to honour killer

 11. நல்ல கட்டுரை. ஆனாலும் கட்டுரையாளருக்கு என் அழுத்தமான கண்டனங்கள். கட்டுரை முழுவதும் நித்தியை “ர்” விகுதி இட்டு எழுதியிருக்கிறீர்கள். அவனுக்கெல்லாம் “ன்” தான் சரி! அவனைக் கொண்டாடும் ஜென்மங்களை எல்லாம் எதைக் கொண்டு அடிப்பது?

 12. //ஊரறிந்த சாமியார் அதே ஊரறிய ஒரு செக்ஸ் மோசடியில் சிக்கிய பிறகும் அவரது ஆன்மீக சாம்ராஜ்ஜியம் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுகிறதே அதுதான் பிரச்சினை. //

  மறுக்கமுடியாத உண்மை. எங்கே போய்க்கொண்டிருக்கிறது நம் சமூகம் என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை அழுத்தமாக எழும் இடம் இது.

 13. //வெட்கம், மானம், சூடு, சொரணை முதலியவைகள் இருந்திருந்தால் நித்தி தனது தவறை நினைத்து மனம் வருந்தியிருப்பார். //
  அய்யய்யே! அதெல்லாம் பைசாவுக்குப் பிரயோசனமா இல்லை பைசாவுக்காகக் கும்மியடிப்பதற்குப் பிரயோசனமா? வெட்க‌ம் கெட்ட‌வ‌ர்க‌ள்!
  :)))

 14. //எதுவும் நடக்காதது போல பக்தர்கள் இப்படி அடி முட்டாள்களாக இருப்பதுதானே நித்தி இப்படி கூச்ச நாச்சமில்லாமல் ஆட்டம் போட வைக்கிறது?//

  கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!

  அடிப்படை நேர்மையில்லாமல் நான் ஒண்ணுமே பண்னலைன்னு வாய் கூசாமல் பொய் சொல்லும் பஞ்ச பரதேசிகளை இன்னும் நம்பும் கூட்டம் இருக்கும் வரை நான் கத்தி கொண்டே இருக்க வேண்டியது தான்!

  அவனுக்கு தான் எல்லாம் தெரியும்னு ஊர்ல பேசிகிறாங்கல்ல, எனக்கு இப்போ அரிக்குது கண்டுபிடிக்க அவனால முடியுமா!?

  (சே டயலாக் பழசா போச்சே)

 15. மீண்டும் குமுதம் போன்ற பத்திரிக்கைகள் ”ஜன்னலை மூடு ஜாக்கெட் திறக்கும்” போன்ற கட்டுரைகள் வெளியிடுமா!?

  • சூப்பர் மிகவும் அருமையான தலைப்பு .குமுதம் நாண்டுக்கிட்டு சாகணும் .

 16. நித்தி கூட்டத்தில் நடிகை மாளவிகா கலந்து கொண்டார் என்ற செய்தியைத் தான் தினசரிகள் எழுதுகின்றன. இதன் மூலம் எந்த நடிகையை வைத்து தன்னை இழிவுபடுத்தின்னர்களோ, அதே போல வேறொரு நடிகை என் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என சொல்வதன் மூலம் தரச் சான்றிதழை பெற்றுக் கொள்கிறான் நித்தி.
  தூதுவராகவோ தமிழக தினசரிகள்!

  பி.எல் படித்தால் நீதிபதியாகலாம்.
  நடிகையானலோ ஜட்ஜ் ஆகலாம்.

  எனவே தான் ‘ஜட்ஜ்மெண்ட்’ நடிகை(மாளவிகா)யிடமிருந்து வந்துள்ளது போலும்.
  தமிழக டிவிகள் கண்டெடுத்த முத்துகள் தான் இந்த ’ஜட்ஜ்கள்’

 17. உண்மை, நடிகைகள் கூட்டமும் வந்ததாக பத்திரிகை செய்தி, இதன் மூலம் பலத்தை நிருப்பிக்கிறார் நித்தி.

 18. நித்தி ஒரு சத்ரிய சாமியார் விச்வமிதிரர மாதிரி எத்தனை பெண்களை வேண்டுமணலும் வைதுகொள்ள்ளலாம் அகவே ஆத்திரபடதிர்கள்

 19. ivana madiri allunkalai araichi panniye oruthan web site vechurukan guruphalic.com ivan perula mattum yethini company USla register pannirukankanu puttu puttu vechrukankha.. ivanuku perumai verah michel jackson aprom ivaru than internetaa crash pannaram velakana vetti.. blorela mysore mallika CD aprom ivarodah CD neriya vithcu in Richy st for Rs.500.. ivaru Ramakrishnar peru ilukarathunala Ramakirshna mutt should put case on him..

 20. ஆளும் அவன் மூஞ்சியும் ,எவனை பார்த்தால் ஆன்மிகவாதி மாதிரியாகவா தெரியுறான் .ஒண்ணாம் நம்பர் பொம்பளை பொறுக்கி ராஸ்கல் .திராவிடர் கழகம் தூங்குகிறதா?இந்நேரம் அவனுடைய ஜாதகத்தை புட்டு பொது மக்களிடையே கொண்டுபோயிருக்க வேண்டாமா?

 21. இது தான் இன்றையோட மக்களின் நிலைமை . எது அனனைதுகும் பொருதுந்தும் தமிழ் ஈழம் உட்பட

 22. i happened to read his agreement he got signed from his disciples. for its very content he should be lynched by the public particularly by their parents.if anybody see his brother swami nithishwarar they would vomit immediately.i can definitely say his money is the only reason for his re entry back in business.after all this is india.boss tamil script is not working please go into it i have very good words in my mother tongue for this vaanaravaayan.

 23. முதலில் திருந்த வேண்டியது நாமே. அவனை சொல்லி குற்றமில்லை. முட்டாள் ஜனங்களின் மனதினை நித்தி நன்றாகவே அறி்ந்து வைத்துள்ளான். அவன் ஆயிரம் பெண்களை மோசடி பண்ணினாலும் சட்டம் அவனை ஒன்றும் செய்யப்போவதில்லை. அவனின் மவுசும் குறையப்போவதில்லை.

  முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

 24. வெட்ககேடு. படம் போட்டு காமிச்சும், திரும்ப போய் கால்ல விழுற முட்டா நாய்கள என்ன பன்ரது…

 25. We can not blame Nithi for this.But We can surely blame the people who still trust & follow him.His believers should stop believing him.If the people do not change their mind after seeing his scandal videos,then those people will have thousands of problems in their life.

 26. இந்த பதிவு நன்றாக இருக்கின்றது. ஆனால், எப்படிப்பட்ட மக்கள் அங்கே செல்கிறார்கள், ஏன் செல்கிறார்கள் என்பதை மருத்துவ உளவியல் மற்றும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்து விளக்க முடியுமா என்று முயல வேண்டுகிறேன். இந்த சாமியார்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை கோட்பாட்டு ரீதியாக விளக்கினால், நன்றாக இருக்கும்.

 27. இந்த பதிவு நன்றாக இருக்கின்றது.
  பலத்தை நிருப்பிக்கிறார் நித்தி.
  எனது வீட்டுக்கு வருமாறு நித்யானந்தாவை அழைத்தேன்: எஸ்.வி.சேகர்

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=37082

  இவனுங்கள ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா!!

 28. இப்பொலுது தெரிகிரது திவிரவதம் ஏன் முலைகிரது என்ட்ரு … எவ்வ்லவுநால் உனர்வுகலை அடகி வைபது… பொஙி எல வேன்டியது தான் ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க