Friday, September 13, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்பாட்டம்

ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்பாட்டம்

-

ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

_____________________________________________________

இந்த ஆர்ப்பாட்டங்களை ஒட்டி இலண்டன் சூர்யோதயம் வானொலிக்காக தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு பேசிய ஒலிப்பதிவு

Maruthaiyan Audio

_____________________________________________________

முழக்கங்கள்:

சிங்கள் இனவெறி அரசே,
ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து
இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு!
முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று!
அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்!
______________________________________________________________________________

இந்திய மேலாதிக்க அரசே,
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்காதே!
வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் ஈழத்தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமிக்காதே!
_________________________________________________________________________

தமிழக மக்களே,
50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்!
இலங்கை இனவெறிப் பாசிச அரசுக்கும் அதனைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக சர்வதேசப் பாட்டாளிவர்க்கத்தையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டுவோம்!
ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

_________________________________________________________________

இதே நாளில் இலண்டனில் “புதிய திசைகள்” எனும் ஈழத்தமிழர் அமைப்பு சார்பாக பல பிரிவினரும் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முழக்கங்கள்:

இலங்கை அரசே
இன அழிப்பை  நிறுத்து!

தமிழர் பிரதேசங்கள்  மீதான
ஆக்கிரமிப்பை  நிறுத்து!

தமிழ் மக்களை விடுதலை  செய்
தடுப்பு முகாம்களை மூடு!

பிரதேச ஆக்கிரமிப்பை நிறுத்து
தமிழ் மக்களை மீள குடியமர்த்து!

சுயநிர்ணய உரிமை
தமிழர் பிறப்புரிமை.

அரசியல்  கைதிகள் மீதான
சித்திரவதையை நிறுத்து!

கடத்தப்பட்ட ஊடகவியலாரர்கள்  எங்கே?

இலங்கை சிறுபான்மையினரே!
ஓன்று படுவோம் எமது உரிமைக்காக
போராடுவோம்!

சிங்கள மக்களே!
சிறுபான்மையினர் மீதான
ஒடுக்குமுறைக்கெதிராக
குரல் கொடுங்கள்!

உலகில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினரின்
போராட்டங்களின் ஓர் அங்கமாக எமது உரிமைப்போர்
மாறட்டும்.

சிங்கள மக்களே!
தமிழ் பேசும் மக்களின் விடுதலை
என்பதே உங்களுக்கான ஜனநாயகம்.

இந்திய அரசே!
இன அழிப்பு பயிற்சி களம்  இலங்கை தமிழர்,
செயற்பாட்டு களம் இந்திய பழங்குடிகளா?

கடந்தகால தவறுகளில் இருந்து
கற்றுக்கொண்டு முன்னேறுவோம்.

இந்திய அரசே!
பிராந்திய வல்லாதிக்கதிற்காக
இலங்கை தமிழர் உரிமையை
விலை பேசாதே!

_____________________________________________________

இந்த ஆர்ப்பாட்டங்களை ஒட்டி இலண்டன் சூர்யோதயம் வானொலிக்காக தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு பேசிய ஒலிப்பதிவு

Maruthaiyan Audio

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  1. ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் !!…

    ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன. தமிழக மக்களே, 50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவ…

  2. இலங்கை போல வேறு எங்கும் இத்தனை ஆண்டு காலமாக இவ்வளவு படுகொலைகள் எங்கும் நடந்த தில்லை . உலகின் மிகபெரிய தீவிரவாத இயக்கம் ஒன்று வுண்டு என்றால் அது இலங்கை அரசாங்கம் தான். வேறு எந்த தீவிரவாத இயக்கங்களும் இந்த அளவுக்கு படுகொலைகள் நிகழ்த்தியதில்ஐ . அது மட்டும் இல்லை . இன்று வுலகமே குளோபல் வார்மிங் பிரச்சினை குறித்து கவலை படும் போது இவர்கள் தமிழ் இன அழிப்பு என்ற பெயரில் பல் ஆயிர கணக்கான ஏகர் காடுகளை அழித்துவுள்ளனர் . அந்த வகையில் வொட்டு மொத்த மனித குலத்திற்கு எதிராக செயல் படிருன்கின்றனர் . இதை ஒரு தனிப்பட்ட இனத்திற்கு எதிரான செயல் என்று சொல்வதே தவறு . முதலில் இதை தமிழர்கள்இன் சொந்த பிரச்சினை என்று வரை அறுப்பதால்யே நாம் வுலக நாடுகளின் ஆதரவை பெற தவறி விடுகிறோம். பிரிட்டிஷ் அரசையே அரசியல் ரீதியாக தோற்கடித நாம் கேவலம் சிங்களர்களிடம் அரசியல் ரீதியாக தோற்று போவதா ?
    சவுத் ஆப்ரிகாவில் வொரு மகாத்மா காந்தி யை வுருவகியதும் தமிழன் தான் . தமிழன் இல்லை என்றால் ஒரு நேதாஜி உம் இல்லை . (INAவில் பெரும்பாலோர் தமிழர்கள். இது எல்லாம் சரித்திரத்தில் மறைக்கபட்ட வுண்மைகள்). இன்று இந்துமஹா சமுத்திரத்திற்கு எவென் எவனோ சொந்தம் கொண்டாடு கின்றான் . ஆனால் நாகரீகம் தோன்றும் முன்னரே (அரசர்கள் காலத்திலேயே ) கடற்படை அமைத்து , ஏற்றுமதி வியாபாரங்கள் செய்து இந்த பிராந்தியத்தை ஆண்டது தமிழர்கள் தானே ? அது மட்டும் இல்லை நாளை பிராந்திய வல்லரசு போட்டியினால் போர் உருவாகுமேயானால் அதனால் அதிகமாக பாதிக்க பட போவது தமிழ் நாடு தான் . அதனால் மற்ற நாட்டவர்களையும், இலங்கை அரசு வின் கொடூரங்களுக்கு எதிராக போராட வைப்பதும் , நாமும் குரல் கொடுப்பதும் தமிழனாய் பிறந்த வோவொருவரின் கடமை . இதை நாம் செய்ய தவறினால் , சகோதரன் முத்து குமரன் சொல்லியது , போன்று மாயா, இன்கா வரிசையில் தமிழ் இனமும் சேர்ந்து விடும் (தமிழ் நாடு தமிழ்அர்கலையும் சேர்த்து தான்). இது வாழ்வா சாவா போராட்டம் . வாருங்கள் மனிதர்களே தமிழ் ஈழம் காண்போம்.

  3. Waste of money.
    Tamils cannot achieve anything.

    Only one solution for Tamils likes Israelites.
    Diaspora Tamils works together with in 10 years make few Tamils as members of Pillars Perk committee.

    Then UN will pass resolution for independent home land for Tamils.

  4. Tamils don’t have Unity. They are not economically strong like Punjabis or other ethnic groups. Tamils don’t have entrepreunial spirit. So Tamils cannot achieve their own homeland. Just forget it. Waste of time

  5. ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் !! | வினவு!…

    தமிழக மக்களே, 50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்!…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க