Wednesday, October 16, 2024
முகப்புசெய்திஉமாசங்கருக்கு ஆதரவாக HRPC ஆர்பாட்டம்

உமாசங்கருக்கு ஆதரவாக HRPC ஆர்பாட்டம்

-

எல்காட் ஊழல், கல்குவாரி ஊழல், கப்பல் கம்பனி ஊழல், சுமங்கலி கேபிள் விசன் மூலம் அரசு கேபிளுக்கு 300 கோடி நஷ்டம் போன்றவற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பணி இடைநீக்கம்  செய்யப்பட்ட  நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள்  போராட்டத்தில்  இறங்கி உள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளையை சேர்ந்த வழக்கறிஞர்களால்  27.08.2010 அன்று மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹாலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான வழக்கறிஞர்களும், வர்க்க உணர்வு பெற்ற தோழர்களும், பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும்    கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் சுரேஷ், சங்கரசுப்பு, புகழேந்தி, பார்த்தசாரதி, மீனாட்சி,  மக்கள் கலை இலக்கியக்  கழகத்தை  சேர்ந்த  வெங்கடேசன், மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனியை  சேர்ந்த   முகிலன்  ஆகியோர் கூட்டத்தின்  நோக்கம்  சிதையாமல்   உமாசங்கரை  பணி இடைநீக்கம்  செய்த கருணாநிதியை கண்டித்து கண்டன உரை   நிகழ்த்தினர். ஒரு வர்க்க உணர்வு பெற்ற ஜனநாகய சக்திகளின் கூட்டம் எவ்வாறு நேர்த்தியாகவும், உணர்ச்சி மேலோங்க  இருக்குமோ அதை போல இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறை நண்பர்களை கூட கூர்ந்து உண்மையை கேட்க வைக்கும் படி இருந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல.

உமாசங்கர்  மதுரை மாவட்டத்தில் பணி புரிந்த போது சுடுகாட்டு கூரை ஊழலை அம்பலப்படுத்தியதோடு அதற்கு காரணமான ஜெயலலிதா மற்றும் இப்போது தி.மு.கவில் ஐக்கியம் ஆகியுள்ள பல முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மேல் ஊழல் வழக்கு போடக் காரணமாக இருந்தவர். அதை தொடர்ந்து  பல துறைகளிலும் அப்போது நடந்த ஊழல் வரிசையாக அம்பலமாகியது அதன் காரணமாக ஜெயலலிதாவிற்கு எதிராக மக்கள் அலை ஏற்பட்டது, அந்த வெறுப்பை எதிர் கட்சியாக இருந்த தி.மு.க.நன்கு பயன்படுத்தி கொண்டு அப்போது நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்தது.  இவர் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த போது இந்தியாவிலையே முதன் முதலாக மின்னனு நிர்வாகத்தை புகுத்தியவர்.  அப்போது கொள்ளை அடித்து கொண்டிருந்த மைக்ரோ சாப்ட்வேருக்கு பதிலாக இலவசமாக கிடைக்கும் மென்பொருளான லீனக்ஸ் என்ற இலவச மென்பொருளை தமிழக அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில்  புகுத்தியதன் மூலம் அரசுக்கு விரயமாகி வந்த ரூ.500 கோடியை மிச்சபடுத்தியவர். மேலும் திருவாரூர் கடற்கரை பகுதியில் விவசாயத்தை நாசமாக்கி வந்த மிகப்பெரிய பணமுதலைகளின் இறால் பண்ணை குட்டைகளை நேரடியாக வெட்டி அப்புறப்படுத்தியவர்.

கருணாநிதி தனது குடும்பத்திற்குள் ஏற்பட்ட பங்காளி சண்டையில் மாறன் சகோதரர்களை பழி வாங்க திரும்பவும் அரசு கேபிளை கொண்டு வந்தார். ஆனால்  மிகப்பெரிய  அளவில்  தமிழகத்தில் கோலோச்சி  வரும்  சுமங்கலி கேபிள் விசனோ அரசு கேபிள் டிவியை   ஒழித்து கட்டும் நோக்கத்தோடு அதன் செயல்பாடுகளுக்கு பல முட்டு கட்டைகளை போட்டது. அரசு கேபிள்  டிவி ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டார்கள் , ரவுடிகளை வைத்து கேபிள் வொயர்களை அறுத்து   எரிந்து  நாசம்  செய்தது,  இது  போன்ற பல குற்றவியல் செயல்களை அரசு கேபிள் டிவிக்கு எதிராக செய்து வரும் எஸ்.கே.வியை நாட்டுமை ஆக்க வேண்டும் , அந்த நிறுவனத்தின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல  பரிந்துரைகளை  செய்தார்  நிர்வாக  இயக்குனராக இருந்த உமாசங்கர்.

ஆனால் கருணாநிதி குடும்பம் திடிரென பணமாற்றத்தால்  ஒன்று சேர்ந்ததை தொடர்ந்து நடவடிக்கை மாறன் சகோதரர்கள் மீது பாயாமல் அதற்கு பரிந்துரை செய்த உமாசங்கர் மீது பாய்கிறது,  உமாசங்கர் சிறுசேமிப்பு துறைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார்.

உமாசங்கரை போலவே கருணாநிதி ஆட்சி காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் பல ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பந்தாடப்பட்டுள்ளனர், ஆனால்  அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர், அதன் மூலம் பல கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கின்றனர், அவர்கள் தங்கள் சொந்த சுயலாபத்திற்க்காகவே அவ்வாறு ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டனர் என்பது வெளிப்படையான உண்மை, அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஒரு நேர்மையான   அதிகாரி தனது பணியை நேர்மையாக செய்ததோடு , ஆளும் கட்சியின் குடும்ப சிபாரிசுகளை புறக்கணித்தார் என்பதும், அத்தோடு அமைச்சர்கள், அதிகாரிகள்,  கருணாநிதியின் குடும்ப உறுபினர்களின் ஊழல்களை அம்பலப்படுதினார் என்பதால் அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டை வைத்து பணி இடைநீக்கம் செய்ய பார்த்தது தமிழக அரசு.

ஆனால் அது செல்லுபடியாகாமல் போகவே அவர் சாதிச்சன்றிதழை போலியாக தந்தார் என்ற  ஒரு சொத்தை காரணத்தை வைத்து அவரை பணி இடை நீக்கம் செய்து தனது வெஞ்சினத்தை தனித்து கொண்டு இருக்கிறார் கருணாநிதி. அவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இதே தமிழகத்தில் தான் பணி புரிந்து வருகிறார் அப்போது எல்லாம் அவர் மீது இது போன்ற எந்த குற்றச்சாட்டும்   வைக்கப் படவில்லை, எந்த காரணமும் கிடைக்காததால் கடைசி அஸ்திரமாக போலியாக அரசு இதை எடுத்துள்ளது. இதன் மூலம் அவர் உணர்த்த நினைப்பது என்னவென்றால் தன்னையோ, தனது குடும்ப உறுப்பினர்களையோ, தனது ஊழல் செய்யும் அமைச்சர்களையோ, தனக்கு ஊழலில் உதவி புரியும் அதிகாரிகளையோ எதுவும் செய்ய முடியாது , அவ்வாறு அநியாயத்தை தட்டி கேட்பவர்களுக்கு,  அவ்வாறு தட்டி  கேட்பவர்  மிகப்பெரிய  பொறுப்புகளில்  உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்தாலும் கூட அவர்கள் மேல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவர்களை ஒரே நிமிடத்தில் பதவி நீக்கம்  செய்ய  தன்னால்  முடியும் என்று நினைத்தார் கருணாநிதி.

ஆனால் குழவி கூட்டுக்குள் கைவிட்டதை போல இப்போது தமிழகமெங்கும் “ஊழலுக்கு எதிராக செயல் பட்டவரை இப்படி அநியாயமாக பதவி நீக்கம் செய்து விட்டாயே” என்று மனித உரிமை அமைப்புகளும், மாணவர்களும், வழக்கறிஞர்களும், தினம் தோறும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம் உமாசங்கருக்கு ஆதரதவு பெருகிவருகிறது.

ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்வேறு ஊர்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் சில காட்சிகள் – படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

சென்னை

 

கடலூர்


மதுரை

சிவகங்கை

திருவண்ணாமலை

திருச்சி

தூத்துக்குடி


விருத்தாச்சலம்

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

  1. உமாசங்கருக்கு ஆதரவாக ம.உ.பா.மை – HRPC ஆர்ப்பாட்டம், புகைப்படங்கள்! | வினவு!…

    பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஐ.ஏ.எஸ் க்கு ஆதரவாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகமெங்கும் நடத்திய ஆர்பாட்டக் காட்சிகள்…

  2. உமா சங்கருக்கு வாழ்த்துகள்! பாசத்தலைவருக்கோ என் கண்டனங்கள்.

  3. உமாசங்கர் போன்ற நேர்மையான அதிகாரிகள் இனியாவது இந்திய அரசமைப்பு என்பதன் யோக்கியதையை தெரிந்து கொண்டு மக்கள் மத்தியில் அதனை பகிரங்கப்படுத்த முன்வர வேண்டும், பணியில் இருந்து கொண்டே அவர் இதுவரை செய்ததை போல இனியும் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  4. HRPC தோழர்களுக்கு வாழ்த்துக்கள். சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என செய்தி அறிவித்திருக்கலாமே! வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் இருந்திருக்கும்.

  5. எல்லா கட்சிகளின் துரோகங்களையும் வெளியே இருந்தும், உள்ளே இருந்தும் பார்த்துவிட்டு வெறுத்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்ட என்னை போன்ற இளைஞர்கள் பலரும் ம. க. இ. க வை கூர்மையாக கவனித்தும் அதனால் ஈர்க்கப்பட்டும் வருகிறார்கள். எல்லாவற்றிக்குமான மாற்றாய், தீர்வாய் நீங்கள் இருப்பீர்களோ மாட்டீர்களோ தெரியாது ஆனால் அதற்கான வாய்ப்பும் அருகதையும் மற்றவர்களைக்காட்டிலும் உங்களிடமே அதிகமாயிருப்பதை நான் காண்கிறேன். நேர்மையான, திறமையான அதிகாரியான உமா சங்கருக்கான போராட்டம் வெல்லட்டும்.. அவரும் விரைவில் அரசு பணியை விட்டுவிட்டு மக்கள் பணிக்கு வருவது நல்லது.

  6. உமாசங்கர் இடைநீங்கம் வாபஸ் – போராட்டம் வெற்றி … வாழ்த்துக்கள் தோழர்களே!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க