முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!

-

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது.  இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம்.  அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது.  அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

****

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர்.  அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.  இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான்,  இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

காஷ்மீர்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘காணாமல் போனவர்களின்’ புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்

இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின்  ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.

வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை.  இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது.  அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.  உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது.  காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர்.  இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின.  இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா.  கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள்.  ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர்.  இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.  அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான்.  ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.

காஷ்மீர்
காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா?  விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது.  இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர்.  விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை.  இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

____________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 1. காஷ்மீர் இந்திய இராணுவமே வெளியேறு!…

  ஈராக்கில் கூட 166 பேருக்கு ஒரு அமெரிக்க இராணுவ சிப்பாய்தான் ஆனால் காஷ்மீரில் 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் இராணுவ சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இறக்கிவிடப்பட்டுள்ளது….

 2. காஷ்மீரிகள் தங்கள் சுதந்திர போராட்டத்தில் விரைவில் வெற்றி பெற்று தனி நாடமைக்க எனது வாழ்த்துக்கள்!

 3. காஸ்மீரில் இருந்து இராணுவத்தை வாபஸ் பண்ணினால் அங்கு பாகிஸ்தான் முகாம் அடித்து விடுமே..அப்போது என்ன தோழர் படையா சென்று இந்தியாவை காப்பாற்றும்?

  • ஐயையோ … அப்படியா பாஸூ …

   பக்கத்து வீட்டுக்காரனோட வீட்டுக்குள்ள நீங்க போய் துப்பாக்கி வச்சிட்டு அவனை மிரட்டி 60 வருசம் சுரண்டி திண்ணுவீங்களாம் ..
   பக்கத்துவூட்டுக்காரன் வூட்டுல இருக்க பொண்டு புள்ளைகள கற்பழிப்பீங்’கலாம்’. அதை அவுக வீட்டுக்காரன் தட்டிக் கேட்டா தீவிரவாதினு போட்டுத் தள்ளுவீங்’கலாம்’.. வெளிய போடா நாயேன்னு அவர்கள் கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளும் போது .. நான் போனா எதிர்த்த வீட்டுக்காரன் உன் வீட்டுக்குள்ள வந்திடுவான்னு மிரட்டுவீங்’கலாம்’. என்னங்கடா டேய் .. ஓவரா விடுரீங்க ?.. இன்னைக்கு இந்திய இராணுவத்தை கல்லால அடிச்சி வெளியேத்துன மாதிரி பாகிஸ்தானையும் வெளியேத்த அந்த மக்களுக்கு தெரியும் ..

   ஆடு நனையுதுன்னு எந்த ஓநாயும் அழுகத் தேவையில்லை…

   • // இன்னைக்கு இந்திய இராணுவத்தை கல்லால அடிச்சி வெளியேத்துன மாதிரி பாகிஸ்தானையும் வெளியேத்த அந்த மக்களுக்கு தெரியும் … //
    இதே வார்த்தைகளை தான் என்னுடன் பேசிய காஷ்மீரத்து தோழரும் கூறினார். நன்றி மருது தோழர்!

    • //இதே வார்த்தைகளை தான் என்னுடன் பேசிய காஷ்மீரத்து தோழரும் கூறினார். நன்றி மருது தோழர்!//

     அப்படியா! ஆச்சரியம் தான்…நம்பிகிட்டு இருங்க.

 4. சீனாவிலிருந்து வெடி மருந்து வந்ததாக இந்திய அரசு முன்னர் சொன்னது.பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளும் துப்பாக்கிகளும் வருகின்றது என எப்போதும் சொல்கின்றது இந்திய அரசு. இஸ்லாமிய நாடுகள் நிதி உதவி வழங்குவதாக முன்னர்சொன்னது இந்திய அரசு….. இப்போது சொல்கின்றது … “கற்கள் பாகிஸ்தானிலிருந்து வருகின்றன ” என.

 5. இப்பிரச்சனையில் தமிழக செய்தித் தாள்கள் செயல்படும் விதம் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. வன்முறை ,தீவிரவாதிகள் வெறியாட்டம்,பிரிவினைவாதிகள் போராட்டம் … என்று தான் செய்திகள் தொடர்கின்றன . எந்த ஒரு செய்தி தாளாவது காஷ்மீரிகள் உயிரை துச்சமாக நினைத்து போராடுவது தங்கள் சுதந்திரத்திற்க்காக என எழுதியதாக நினைவில்லை . செய்தித் தாள்கள் ஊதிப் பெருக்கும் என்றுமில்லாத போலி தேசியத்திற்கு பலியாகுவது முதலில் மானுடமும் அதன் குழந்தைகளும் தான்! ஈராக் பிரச்சனையில் அமரிக்க சேதி தாள்கள் செயல்பட்டமையோடு நம்மவர்களை ஒப்பிட்ட போது வரும் வருத்தங்கள் சொல்லி மாளாது!உமர் ,முப்தி,மீர்வைஸ் போன்ற கருங்காலிகள் ஈழத்தின் கருணா போன்றோரை நினைவு படுத்துகின்றார்கள்.

 6. நீங்கள் கூறுவதை பார்த்தல் காஸ்மீர் தீவிரவாதமே இல்லாத அமைதி பூங்காவாகவும்,அங்கு இந்திய இராணுவம் தான் குழப்பங்களை ஏற்படுத்துகிறது போலவல்லவா உள்ளது…அட பாவிங்களா பாக்கிஸ்தான் எனும் தீவிரவாத சாக்கடையில் இருந்து இந்தியாவை காப்பாற்ற எல்லையில் உயிரை கொடுத்து போராடும் இராணுவ வீரர்களை கொச்சை படுத்துகிறீர்களே…

  • அதாவது பாஸூ ..
   அது வேற ஒண்ணும் இல்லை .. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் மாதிரி தான் தெரியும்.
   நாங்க எல்லையில் இருந்து போராடக் கூடிய இந்திய இராணுவ வீரர்களை எதாச்சும் சொன்னோமா ?… னீங்களா இப்படி பீதில உளறக் கூடாது…

   எல்லையில் இருக்கும் இராணுவ வீரனை விடுங்க .. காஷ்மீர் மக்களோட வீட்டுக் கொல்லையில் புகுந்து கற்பழிக்கிற இராணுவ வீரனைத் தான் குத்தம் சொல்லுறோம்.

   இப்பொ நாளைக்கு உங்க ஊட்டுக்குள்ள இந்திய இரணுவத்தை சேர்ந்த ஒரு பத்து பேர் புகுந்து ஊட்டுல இருக்குறதெல்லாம் சுருட்டிட்டான்னு வச்சிக்கோங்க .. பாத்துட்டு நம்ம இந்திய இராணுவ்ம் தானேனு விட்டுடுவீங்களா ?.
   பொருளைக் களவாடுறதுக்கு மட்டும் உங்கள் வீட்டை வைத்து உதாரணம் சொன்னால் போதும்னு நினைக்கிறேன். காஷ்மீர்ல இந்திய இராணுவம் செய்யுற மற்ற அக்கிரமங்களை நீங்களே புரிஞ்சிக்குவீங்கனு நம்புறேன். இல்லை அதுக்கும் உதாரணம் சொல்லனுமா ?..

   அப்புறம் இவ்வளவு நாள் காஷ்மீருக்கு அந்தப் பக்கம் பனிமலையில் நின்னு இந்திய இராணுவம் கஸ்ட்டப்பட்டுக்கிட்டு இருந்தது .. இனிமேல் காஷ்மீருக்கு இந்தப்பக்கம் சமவெளியில நின்னுச்சுன்னா நம்ம இந்திய இராணுவத்துக்கும் கஸ்ட்டம் இல்லை பாருங்க ..

   நீங்க கண்டிப்பா இராணுவத்துக்கு ஆதரவாகத் தான் முடிவு எடுப்பீங்க என்ற நம்பிக்கையில்
   -செங்கொடி மருது.

 7. நல்ல பதிவு ஆழமான பதிவு காஷ்மீரில் ஒரு பிடி மண்ணை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் இவர்கள் பன்னாட்டு
  நிறுவனங்களுக்கு நாட்டை விற்கின்றார்கள்

 8. “அமைதி பூங்காவை காஷ்மீர் இல்லை அங்கே தான் ராணுவம் உள்ளதே எப்படி அமைதி பூங்காவை இருக்க முடியும்”

  இந்திய இராணுவம் வாபஸ் பெற்று விட்டால் காஸ்மீர் அமைதி பூங்காவாக மாறிவிடும் என்று சொல்கிறீர்களா?அது தான் இல்லை…தலிபானும்,அல்கொய்தாவும் பாகிஸ்தானுடன் சேர்ந்தது முகாமடித்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவைசெய்து தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றிவிடுவர்..பிறகென்ன மும்பை தீவிரவாத தாக்குதல்கள் போல தினசரி உயிர் பலிதான்..

  • ஐயையோ .. என்ன பாஸ் திடீர்னு நீங்க புதுசா ரெண்டு மூனு பூச்சாண்டிய கொண்டு வந்து களத்துல இறக்குறீங்க ?..

   இது எப்படித் தெரியுமா இருக்கு ?.. இந்தியாவில இருந்து பிரிட்டன் வெளியேறினால் ஜெர்மனி வந்து இந்தியாவைப் பிடிசிக்கும் அதனால பிரிட்டனே இருக்கட்டும்னு இந்திய சுதந்திரப் போராட்டகாலத்துல சொன்ன மாதிரி இருக்கு..

   கொஞ்சம் மூளையை கசக்குங்க பாஸ் ..வேற எதாவது நல்ல பீளாவா கிடைக்கும் இங்க விடுறதுக்கு ..

 9. வினவு தான் குடியேறுவதற்கு நல்ல இடம் காஷ்மீர்!

  அமெரிக்காவில் மதநூல் பிரச்சனைக்கும், இந்திய அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல்,வன்முறையில் ஈடுபடுவது, காஷ்மீர் மக்கள் முட்டாள்கள் தான் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறது!

  இந்தியா மென்மையான நாடு எனும் போர்வையில் இருந்து விடுபட வேண்டிய கால்மிது! வன்முறை எந்த போர்வை போர்த்திக் கொண்டு வந்தாலும், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!

  • தோழர் ரம்மி!
   எனது பக்கத்து கல்லூரி நண்பரொருவர் காஷ்மீரிலிருந்து வந்தவர். நேற்றைய முன் தின காஷ்மீர் நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னது … “வழக்கம் போல இந்திய ஊடகம் காஷ்மீர சுதந்திர போரை கொச்சைப் படுத்தி விட்டன என்று” … குரான் எரிப்பு என்பதெல்லாம் நேற்றைய முந்தின தின பிரச்சனயே இல்லையாம் … ‘வழக்கத்தை விட பெருமளவில் நிகழ்ந்த மக்களின் சுதந்திர போராட்டத்தை வழக்கம் போலவே இந்திய ‘ரா’ திட்டமிட்டு புனைவு செய்திகளை பரப்பி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறது ‘” என்றார் வேதனையாக … அவர் தற்போது வேதியியலில் முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகிறார் …பட்டம் முடித்த பின்னர் என்ன செய்வீர்கள் என்றேன் … கசியும் கண்களுடனும் வழியும் வேதனை புன்னகையுடனும் கூறினார் … ” ஆஸாதி! ”

  • *********************************************

   அமெரிக்காவில் மதநூல் பிரச்சனைக்கும், இந்திய அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல்,வன்முறையில் ஈடுபடுவது, காஷ்மீர் மக்கள் முட்டாள்கள் தான் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறது!

   *********************************************

   நீங்கள் இங்கு வந்து டாபிக்கை திசை திருப்ப முயற்சிப்பது முட்டாள்தனம் என்று இந்தப் பதில் நிரூபிக்கிறது கும்மி அவர்களே ..

   *********************************************

   இந்தியா மென்மையான நாடு எனும் போர்வையில் இருந்து விடுபட வேண்டிய கால்மிது! வன்முறை எந்த போர்வை போர்த்திக் கொண்டு வந்தாலும், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!
   *********************************************
   ஐயோ … பூ போல மென்மையான நாடா இந்தியா ?..

   சரி தான் .. தாண்டே வாடாவில சல்வா ஜூடும் வச்சி பழங்குடி இன மக்கள் மேல துப்பாக்கில தோட்டாக்கு பதில் மென்மையான பூவை வச்சி தான சுட்டானுங்க .. இந்தியா மென்மையான நாடு தான் ..
   அப்புறம் வட கிழ்க்கு மாநிலங்களில் இன்னைக்கு வரைக்கும் மக்களை அடிச்சி விரட்டக் கூட ஸ்பான்ச் (sponge) தான் உபயோகிக்கிறாங்களாம் .. ஆர்ம்ட் ஃபோர்சஸ் ஸ்பெசல் பவர் ஆக்ட் கூட யாரை என்னேரத்துல வேணும்னாலும் தூக்கிவச்சி சோறு ஊட்டத்தான்..
   நாங்க நம்பிட்டோம் இந்தியா இவ்வளவு நாளா அமைதியான மென்மையான முறையில தான் இயங்குகிறது என்று.
   இலங்கைக்கு கூட தமிழனை அழிக்க இங்க இருந்து ஒரு லோடு பூவையும் ஸ்பான்ச்சையும் அனுப்புனாங்களாம்…

   சரி பாசு .. இதுக்கு மேல இரும்புக்கரம் கொண்டு அடக்கனும்னா எப்படி சொல்லுறீங்க ?.. சும்மா நம்ம கலாம் டெஸ்ட் பண்ணுனாரே பொக்ரான்ல .. அதை வச்சி அடக்குறது தான் இந்த ’’மென்மையான்’’ அணுகுமுறையைத் தாண்டி இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு சரியான ஆயுதமாக இருக்கும். மொதல்ல உங்க ஊட்டாண்ட வந்து டெஸ்டு பண்ணிட்டு அந்த மக்கள் மேல போட்டு விளையாடச் சொல்லலாம் .. சரிங்களா ?..

  • “இந்தியா மென்மையான நாடு எனும் போர்வையில் இருந்து விடுபட வேண்டிய கால்மிது!”

   ஒரே நாளில் மட்டும் 25000 ஈழ மக்களை இனப்படுகொலை செய்ய ராஜபக்சேவுக்கு உதவிய இன்னமும் உதவிக்கொண்டிருக்கிற இந்தியா உண்மையிலேயே மென்மையான நாடுதான்.
   ஓங்குக ரம்மியின் சிந்தனைகள்.

  • /////மென்மையான நாடு/////
   சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டாரு…. ஏன் கேவப்படுறீங்க?
   இந்தியா மொன்னையான நாடு!

 10. தற்போதைய உலக மயச் சுழலில் தனி ஆவர்த்தன நாடுகள் சாத்தியப் படாது.. அப்படி தனியாகப் போனால் தலிபான்களோடுதான் அவர்கள் போய்ச் சேருவார்கள்.. அதுக்கு இந்திய பெட்டர்

  • அட.. எப்படி சார் .. சூப்பரா ஜோசியம் பாப்பீங்க்ளோ ?..

   காஷ்மீர்ல இருக்குறவங்க கொஞ்சம் சொரனை உள்ளவர்கள் .. எவனுக்கும் அடிமையா இருக்க விரும்பாதவர்கள் ..

   அப்படி எல்லாம் தாலிபான் என்னும் சனி வந்து தன்னைப் பிடிக்க விட மாட்டார்கள் ஜோசியரே ..

   ராகு கிட்ட போய் சேரக்கூடாதுன்னு கேது கிட்டயே இருக்கச் சொல்லுறேளே .. இது நியாயமா ?..

   • நீரு தனி நாடா போய்டும்னு சோசியம் சொல்லும் போது போனா என்ன ஆகும்னு நா சோசியம் சொன்ன என்ன அண்ணே

    • சின்ன திருத்தம் ஓய் .. நான் எப்பொ சொன்னன் … தனி நாடா போயிடும்னு .. நீர் தான் ஆருடம் பார்த்து சொன்னேள் .. தாலிபானோட அவாளாம் சேர்ந்துடுவா .. அதுக்கு இந்தியாவே பெட்டர்னு …

     நான் சொல்லிருந்தேன்னா கொஞ்சம் எடுத்து பதிவு பண்ணும் ஓய்..

   • //காஷ்மீர்ல இருக்குறவங்க கொஞ்சம் சொரனை உள்ளவர்கள் .. எவனுக்கும் அடிமையா இருக்க விரும்பாதவர்கள் ..//

    🙂

 11. oru loosu idea vanthuchu.. if paki want to occupy kashmir and slowly india.. why dont we go back to concept of AKANDA bharatham .. let them call Akanda Pakisan… next step to merge china with india so that Akanda Asia.. instead of dividing country we will start uniting different countries.. enna prachanai senkodiya kavi kodiya pacha kodiya illa vellai kodiyanu sanda varum..

 12. ஆகா நம்ம வினவு கோஷ்டி லோக்கல் பிரச்சனையை முடித்து அப்புறம் தாய்லாந்து அம்மணி பிராதை பைசல் பண்ணிவிட்டு இப்போது தன சொம்பை தூக்கிக்கொண்டு காஷ்மீர் ஆலமரம் தேடி பஞ்சாயத்து பண்ண கிளம்பிட்டாருப்பா.. எல்லோரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க..

  நாட்டாமை சீக்கிரம் உங்க தீர்ப்ப காஷ்மீரில் கல்லெறியும் பாகிஸ்தானிய கைக்கூலிகளுக்கு கூறுங்க.

  • காஸ்மீரில் கல்லெறிவது பாகிஸ்தான் கைக்கூலி என்றால் நீஙக என்ன ஆர்.எஸ்.எஸ். கைகூலியா ?..

   அவன் போடுற எலும்புத் துண்டுக்கு இங்கே வந்து குலைக்கும் *யா?..

   [வினவு தோழர்கள்.. நாகரிகம் கருதி இதை நீக்கவேண்டாம். இதை கண்டிப்பாக பதிவு செய்யவும். மனிதர்களுக்கு நாகரீகமாக பதிலளிக்கலாம் ]

   • அட நம்ம செங்கொடி மருது சீனா துப்பி எரியும் எலும்பு துண்டை நாய் போல் கவ்வி தின்ற பழக்கத்தில் மற்றவரையும் அதே போன்று நினைக்க தோன்றுகிறது போலுள்ளது. சீன எஜமான்கள் துப்பிய எலும்புத்துண்டுகள் திபெத்தில் மலை போல் குவிந்துள்ளதாம். அங்கு நீர் வாலாட்டிக்கொண்டு சென்றால் ஜென்மத்துக்கும் எலும்பு கவ்விக்கொண்டு கம்பத்துக்கு கம்பம் காலை தூக்கலாம்..

    • சீனாவை இன்னும் கம்யூனிஸ்ட் நாடாக நினைத்துக் குலைக்கும் உமது போக்கினிலேயே தெரிகிறது உமது உலக அறிவு…

     இன்னும் வளரனும் பா .. நல்ல மாட்டு எலும்பா சாப்பிடு ..

  • சிறுநீர் கழிக்கும் சொறி நாய்கள் விசாரணையே இன்றி தீர்ப்பெழுதும் போது, அடிவாங்கிய செம்புகளில் சிறுநீரை நிறைத்து வைத்திருக்கும் போது, வினவு பஞ்சாயத்து செய்வதாக தான் உங்களுக்கு தெரியும்!

   இதில் வினவோ அல்லது மற்ற எவரும் பஞ்சாயத்து செய்து தீர்ப்பெழுத வேண்டியதில்லை, காஷ்மீரின் வீரமிக்க மக்களே சிறுநீர்கழிப்பதையே அறுத்தெறிவார்கள்…

   அன்று வரையிலும் கூட செறிநாய்களின் விசாரணையில்லா தீர்ப்புகள் தொடரக்கூடும்…

 13. காசுமீரில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது அரசு மற்றும் ஊடகங்களின் கடமை. இதைத் தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் எதிரானவர்கள் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம். மேலும் காசுமீர் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது காசுமீரிகளே!

 14. பாராளுமன்றத்தில் நேருவின் உரை – 1952, August 7.

  Let me say clearly that we accept the basic proposition that the future of Kashmir is going to be decided finally by the goodwill and pleasure of her people. The goodwill and pleasure of this Parliament is of no importance in this matter, not because this Parliament does not have the strength to decide the question of Kashmir but because any kind of imposition would be against the principles that this Parliament holds. Kashmir is very close to our minds and hearts and if by some decree or adverse fortune, ceases to be a part of India, it will be a wrench and a pain and torment for us. If, however, the people of Kashmir do not wish to remain with us, let them go by all means. We will not keep them against their will, however painful it may be to us. I want to stress that it is only the people of Kashmir who can decide the future of Kashmir. It is not that we have merely said that to the United Nations and to the people of Kashmir, it is our conviction and one that is borne out by the policy that we have pursued, not only in Kashmir but everywhere. Though these five years have meant a lot of trouble and expense and in spite of all we have done, we would willingly leave if it was made clear to us that the people of Kashmir wanted us to go. However sad we may feel about leaving we are not going to stay against the wishes of the people. We are not going to impose ourselves on them on the point of the bayonet

 15. //காசுமீர் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது காசுமீரிகளே!//
  so tamilandu people can decide whatever they want. and so andra ,kerala….

  • ஆம்.

   இந்த நாட்டில் மக்களாட்சி நடைபெறுவது உண்மையானால், காசுமீரிலும் நடப்பது மக்களாட்சிதான் என்றால், தங்களுக்குத் தேவை என்ன என்பதை அந்த மக்களே முடிவு செய்வார்கள்.

   காசுமீரிகளின் வாழ்க்கையை, எதிர்காலத்தை எக்காரணத்தைக்கொண்டும் பஞ்சாபியோ, மலையாளியோ (இந்த நாட்டை தற்போது தவறாக வழிநடத்தி கொண்டிருப்பவர்கள்) அல்லது ஒரு வெளிநாட்டுக்காரியோ தீர்மானிக்கக்கூடாது.

 16. வர வர rediff bulletin board மாதிரி இருக்கு வினவு பின்னூட்ட பாக்ஸ்.moderation வச்சி பதிவுக்கு வரும் relevant comment மட்டும் வெளியிடலாம்.

 17. “நாங்க எல்லையில் இருந்து போராடக் கூடிய இந்திய இராணுவ வீரர்களை எதாச்சும் சொன்னோமா ?… னீங்களா இப்படி பீதில உளறக் கூடாது…”

  ஐயா செங்கொடி மருது அவர்களே..

  காஷ்மீர் இந்தியாவின் ஒரு எல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?… தவறிழைத்த இராணுவவீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..இதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன்…ஆனால் ஒரு சில இராணுவ வீரர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த இராணுவத்தையும் குறை கூறுவது ஏற்றுகொள்ள முடியாத வாதம்..ஒரு சில இராணுவவீரர்களின் தவறால் முழு இராணுவ வீரர்களையும் காஸ்மீரில் இருந்து வெளியேற சொல்வது எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தியதட்கு சமம்..500,000இராணுவ வீரர்கள் இருந்தே 660தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்றால் இராணுவமே இல்லை என்றால் என்ன கெதி?கடைசியாக ஒரு கேள்வி…நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவரா?இல்லை எதிர்பவரா?நான் தீவிரவாதிகள் என குறிப்பிடுவது காஸ்மீர் விடுதலை போராட்டம் செய்பவர்களை அல்ல…பாகிஸ்தானின் செல்ல சொறி நாய்களான லஷ்கரி தொய்பா மற்றும் தலிபான்களே ஆகும்…

  • ஒருவன் செய்யும் தவறுக்காக அவன் சார்ந்த சமூகத்தையோ அல்லது அமைப்பையோ ஒட்டுமொத்தமாக குறைசொல்லக்கூடாதுதான். ஆனால் தவறு செய்தவனையும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தவனையும் அந்த சமூகமோ அல்லது அந்த அமைப்போ தவறை திருத்த முயற்சி செய்யாதபோதும், கண்டிக்காதபோதும், தண்டிக்காதபோதும் அந்த அமைப்புகளே சந்தேகத்திற்கு உரியவையாக மாறிவிடுகின்றன. ஊழல்களும் அதனால்தான் தற்போது இந்திய குடும்பங்களில் அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.

 18. இந்த இந்திய தேசியவாதிகளோட கூச்சல் தாங்க முடியல.அடக்குமுறைய எதிர்த்து கல்லு வீசுனா 200ரூபாய வாங்குற பாகிஸ்தான் பயங்கரவாதி சொல்றானுங்க. ரோட்டுல போற 9வயசு பையனை சுட்டுக்கொல்லுறவனை 10,000ரூபா வாங்குற இந்திய ராணுவ பயங்கரவாதின்னு சொல்ல மாட்டானுங்களாம். அவங்கள்ளாம் ’’புனிதமான ராணுவ வீரர்களாம்’’. stanger எதாவது புலம்புனா செங்கொடி மருதுவே ‘நான் புனிதமான வீரர்களை’ ஒன்னுமே சொல்லலியேங்குராரு. இந்திய ராணுவம் எங்க போனாலும் ஒழுக்கமா நடந்ததா வரலாறு இல்ல. கள்ளு குடிச்ச கொரங்குக்கு தேளு கொட்டுன மாதிரி இவனுங்க பன்னுற அக்கிரமத்துக்கு AFSPA வேற. இத சொன்னாலே பாகிஸ்தான் கைக்கூலிங்குறாங்க. உனக்கு தெரிஞ்சவன் தப்பு பண்ணும்போது நீதான் தட்டிக்கேக்கனும்,மூடி மறைக்கக்கூடாதுன்னு இந்த ’உண்மையான தேசியவாதிகளுக்கு’ புரியமாட்டேங்குது.

  //‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்//
  இதுக்கு ஒருத்தராலயும் பதில் சொல்ல முடியலெ.
  ’’வாழ்க ஜனநாயகம்
  வாழ்க இந்திய தேசியம்’’

 19. இந்திய இராணுவம் இலங்கையில் அடித்த கொட்டம் எனக்கும் தெரியும் Mr.வானம் அவர்களே…நான் ஒன்றும் இந்திய இராணுவம் புனிதமானது என்று கூறவரவில்லை..காஸ்மீரில் சில இந்திய இராணுவத்தினர் தவறு செய்தது உண்மை தான்..அவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்..அதற்காக காஸ்மீரில் இருந்து முழு இந்திய இராணுவத்தையும் வாபஸ் பெறுவதென்பது சிறுபிள்ளைதனமானது…கம்யுனிஸ்ட் சோவித்ஜுநியனுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடித்த ஆப்பு தெரியும் தானே..

 20. இராமேசுவரத்து மீனவர்கள் தினமிரண்டு பேராக சுட்டுப் பொசுக்கப்பட்டாலும் ஏனென்று கேட்க ஆளில்லை; இலங்கையில் சீனத்து அல்லது அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு பயந்து இந்திய இராணுவம் அங்கு எட்டிப் பார்ப்பதில்லை. ஒட்டு மொத்த இந்திய இராணுவமும் காசுமீரில் குவிக்கப்பட்டுவிட்டன – ஐந்து வயது சிறுவனை அடித்து உதைத்து மிரட்டவும், ஒன்பது வயது சிறுவனை சுட்டுக் கொல்லவும் – புதிய பாமரன்

 21. எனக்கு தெரிந்தவரை, காஷ்மீர் மக்களின் ஒரு பிரிவினரின் போராட்டத்தை வைத்து அனைத்து மக்களுமே தனிநாடு கிடைக்க விரும்புகிறார்கள் என முடிவெடுப்பது தவறாகப்படுகிறது.
  இதற்கு சரியான தீர்வு, அங்கே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஆகும். உண்மையிலேயே பெரும்பான்மையான மக்கள் தனிநாடு கேட்டால், நிச்சயம் நம் ராணுவம் அங்கே இருப்பது சரியில்லை.
  மேலும் ஒரு தனி நாடு உருவாதல் என்பது அவ்வளவு விரைவாக நடக்கக் கூடிய விஷயமும் இல்லை. அதுவும் காஷ்மீர் போல பிரச்னைக்கு உரிய ஒரு மாநிலத்தை எந்தவித அரசியல் அமைப்போ, சட்டமோ இல்லாமல் உடனடியாக பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறாகவேப் படுகிறது எனக்கு.

  — அன்பு

  • “காசுமீரில் வாக்கெடுப்பு நடத்தி மக்கள் விருப்பப்படி நடப்பேன்“ என்று ஐ.நா.வில் இந்தியா உறுதியளித்து ஐம்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. வாக்கெடுப்பு நடந்தபாடுதான் இல்லை.

   இந்திய மக்களுக்கும் உலகுக்கும் நடுவண் அரசு அவ்வப்போது சிறந்த “அல்வாக்களை“ கிண்டி அவர்களின் வாயையை அடைத்து வருகிறது. அதுபோல் காசுமீர் மக்களின் குருதியில் கிண்டப்பட்ட “காசுமீர் அல்வாவை“ வாயில் திணித்துக்கொண்டவர்களால் ஐம்பது ஆண்டுகளாக வாயை திறக்கமுடியவில்லை.

  • “உடனடியாக பிரித்துக் கொடுத்துவிட வேண்டும்”

   சேரவே இல்லை எனும்போது பிரிவை பற்றி பேசுவது அயோக்கியத்தனம்.
   அபகரித்தவன் பிரித்துக் கொடுப்பான் என்று எண்ணுவது முட்டாள்தனம்.

   • இந்தியாவுடன் காஷ்மீர் சேரவே இல்லை என ஒதுக்க முடியாது. சமீபத்தில் நடந்த தேர்தல்களில் ஓட்டு சதவிகிதம் அதிகரித்தது (61%) என்பதே உண்மை. பல காஷ்மீரிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாமலே போய் இருக்கலாம். அதனாலேதான் இவ்வளவு அதிக சதவீதம் வாக்குகளைக் காட்ட முடிந்தது என சொன்னால் மறுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
    அதுமட்டுமில்லாமல் மக்களின் விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ, ஏதோ ஒருவகையில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே தனிநாடு எனும்போது நிச்சயம் சில நடைமுறைகள் இருக்கின்றன. அதைத்தான் நான் உடனடியாக கொடுத்துவிட முடியாது எனக்கூறினேன்.
    அதே போல, வாக்கெடுப்பு என்பதை இப்போதைய பிரச்சனையின் உடனடித் தீர்வாகத்தான் கூறினேன். 50 வருஷங்களாக சொல்வதைப் போல கால நிர்ணயம் இல்லாமல் வெற்று வாக்குறுதிகளை நான் சொல்லவில்லை. நான் சொன்னதெல்லாம், இந்திய அரசு ஒரு தேதி குறிப்பிட்டு, அந்தத் தேதியில் வாக்கெடுப்பு நடத்தி முடிப்பதுதான் தீர்வாகும் என்பதுதான்.

    • ரோட்டில் போற ஒருத்தனை வம்படியாக உங்கள் வீட்டில் பூட்டி வைத்து ஒரு வருடம் உணவு கொடுத்துவிட்டு, உனக்கு ஒரு வருடம் நான்தானே சோறு போட்டேன் அதனால நீ எனக்கு அடிமை என்று சொல்லுவது அயோக்கியத்தனமில்லையா?

 22. தொடர்ந்து ரூ. 200 பணத்திற்காக கல்லெறிய முடியுமா என கோயபல்சு தினமணி மல்லாக்கப் படுத்து யோசித்திருக்கும் போலும். காஷ்மீரிகளின் போராடும் குணத்தைப் பார்த்து அரண்டுபோயிருக்கும் மன்மோகன் அரசிற்கு, போராட்டத்தை ஒடுக்க பாசிச ராஜபக்‌ஷே பாணியை பின்பற்றவேண்டும் என பாடம் எடுக்கிறது. தங்களின் விடுதலைக்காக கல்லெறிவதையே தீவிரவாதம் என்று சொன்ன நல்லவனுங்களெல்லாம் இப்பாசிசத் தினமணியின் தலையங்கத்திற்கு என்ன சொல்கிறீர்கள்?

 23. காஷ்மீரிகள் தங்கள் சுதந்திர போராட்டத்தில் விரைவில் வெற்றி பெற்று தனி நாடமைக்க எனது வாழ்த்துக்கள்!

 24. //ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?//

  ‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

  நல்ல பதிவு. ஆழமான பதிவு!

 25. அதெப்படி இப்படி இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் எல்லாம் இந்தியாவில் எதிரி பாகிஸ்தான் போலவே பேசறீங்க ?? …. அப்பறம் மஜோரிட்டி இந்தியர்கள் ஏன் உங்களை வெறுக்க மாட்டார்கள் ?? …. ஒரு circket போட்டியில் கூட இந்தியா தொட்ட்று பாகிஸ்தான் வென்றால் இந்தியாவில் இருந்தே வெடி வெடித்து கொண்டாடும் நீங்கள் எப்படி வெட்கம் இல்லாமல் நீயாயம் பேசுகின்றீர்கள் ??

  இன்னைய்க்கு கஷிமிர்ல நடக்குற கலவரம் மூணுமாசம் முன்னாடி கலவரத்துல ஒரு 17 வயது பையன் இரத்தத்தில் தான் ஆரம்பிச்சந்து …….ஒருவன் இறந்ததிற்கே இவ்வளவு பெரியகலவரம் நா …நீங்க சொல்லறமாதிரி பல ஆயிரம் பெண்கள் கற்பளிகபட்டிருதார்கள் என்றால் …என்றோ இதைவேட மிக பெரிய கலவரம் வந்திருக்கும் …. உங்கள் கட்டுகதைகளை கேட்டால் ஏதோ தீவரவாத குழுவிற்கு ஆள்செற்பது போல இருக்கு ??? (உடனே ஒன்றுக்கும் உதவாத ஒரு திரிகபட்ட செய்தி link போஸ்ட் பண்ணவேண்டாம்)

  கஷ்மிரீரில் ஒன்றும் இந்திய ராணுவத்தின் ஆட்சி நடக்கவில்லை , அங்கு மக்களால் தெர்தேடுகபட்ட ஆட்சி தான் நடக்குது , இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் இன்று ஒரு பிசைகாரனைவிட கேவலமான நில்லையில் தான் உள்ளான், அமெரிகவிடம் பணம் வாகி கொண்டு இன்று தனது நாட்டு மகளியே கொன்று குவிக்கிறான் …அதை பத்தியெல்லாம் நீங்கள் பேசுவதே இல்ல போல ??

  முடிந்தால் நீங்கள் இருக்கும் நாடிருக்கு விசுவாசமாக இருங்கள் இல்லலையேல் நீங்கள் விரும்பும் நாட்டிற்கு சென்று அதற்காவது விசுவாசமாக இருங்கள்.

  ஒரு வேருமததிர்காரன் இஸ்லாம் பற்றி கேள்வி கேடதிற்கே அவன் கையை வெட்டி கொள்ளும் நீங்கள், உங்கள் மதத்தை சேர்ந்த ஒரு வங்கதேச பெண் இச்லமமில் உள்ள குறைகளை எழுதியதிற்கு நாடு கடத்தி, அவர் இந்தியா வந்தபொழுது ஒரு பெனஎன்று பாராமல் அவளை சூழ்ந்து தாகிய நீங்கள் , அமெரிக்காவில் ஒரு பைத்தியக்காரன் குரானை எரிக்க போவதாக சொன்னதிற்கே தாங்கள் கொந்தளித்து கிருஸ்துவ கோவில்களை கொள்ளுதும் நீங்கள் , ………..etc ….etc …எப்படி என்ன செய்தாலும் , என்ன பேசினாலும் இந்தியர்கள் உங்களை போற்ற வேண்டும் என்று எதிர்பார்கிண்டீர்கள் ?? ……

  நான் பலமுறை சொன்னது போல இந்தியாவில் அதிகம் படிக்காத , வறுமையில் உள்ள பலர் இர்கின்றர்கள், இதை போன்ற நாடுகளில் கலவரம் வெகு சுலபமாக ஏற்பட்டுவிடும் .. பருவாரியான மக்கள் உங்களை வெறுக்காத வண்ணம் நடந்து கொள்ளவேண்டும் , அதற்காக நான் ஒன்றும் உங்கள் சுயமரியாதையை விடசொள்ளவில்லை , ……. நீங்கள் சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் ஒருநாட்டின் எதிரி உடன் ஒத்து போனால் உங்களையும் அந்த நாடு எதிரியாக தான் பார்க்கும்.

  கஷிமிர் பிரச்சனைக்கு வருவோம் , எப்படி நன்றாக ஒத்துமையாக இருத்த ஆந்திரா இன்று ஒரு சில அரசியல் காரர்களால் பாலாக பாடு இன்று திசை மாறி உள்ளதோ , அதே போல தான் காஷ்மீரும் … இன்று காஷ்மீரில் இருந்து ராணுவம் வெளி ஏறினால் பாகிஸ்தான் வசதியாக தீவிரவாதிகளை உள்ளே விட்டு கஷிமிரில் தீவிரவாதத்தை எளிதி வளர்க்கும் , பின்பு இந்தியா அதன் கட்டுபாட்டை இல்லக்க வேண்டியது தான். பின்பு காஷ்மீரும் பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போல தீவிரவாத முகாமாக மாறும்.

  • அண்ணேIndian
   ///அதெப்படி இப்படி இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் எல்லாம் இந்தியாவில் எதிரி பாகிஸ்தான் போலவே பேசறீங்க ??// பக்கிஸ்த்தான் இப்புடித்தான் பேசுனாய்ங்களா நீங்க சொல்லி தான் தெரியும் ///அப்பறம் மஜோரிட்டி இந்தியர்கள் ஏன் உங்களை வெறுக்க மாட்டார்கள் ??/// இந்தியானில் மெஜாடிட்ட்டி இந்தியன் மைனார்ட்டி இந்தியன் ரேண்டு பிரிவு இருக்க இத எப்புடி பிரிஞ்சு கண்டுபுடிச்சீக 3 சதவீதம் இருக்கும் ஒரு மைனாரட்டி கும்பலுக்கு அடிம செவ செய்ரவேன் மெஜாரட்டி அப்புடித்தானே /////ஒரு circket போட்டியில் கூட இந்தியா தொட்ட்று பாகிஸ்தான் வென்றால் இந்தியாவில் இருந்தே வெடி வெடித்து கொண்டாடும் நீங்கள் எப்படி வெட்கம் இல்லாமல் நீயாயம் பேசுகின்றீர்கள் ??/// RSSகாரன் கூட பாகிஸ்தானுக்கு அதரவ கை தட்டுவாய்ங்கனு பெரளிய பரப்புனுனாய்ங்க நீங்க அவளாயும் மிஞ்சிட்டேள் போங்கோ இப்புடி அவதூறு சொல்ல ஒனக்கு வேட்கமில்ல
   /////இன்னைய்க்கு கஷிமிர்ல நடக்குற கலவரம் மூணுமாசம் முன்னாடி கலவரத்துல ஒரு 17 வயது பையன் இரத்தத்தில் தான் ஆரம்பிச்சந்து …….ஒருவன் இறந்ததிற்கே இவ்வளவு பெரியகலவரம் நா …நீங்க சொல்லறமாதிரி பல ஆயிரம் பெண்கள் கற்பளிகபட்டிருதார்கள் என்றால் …என்றோ இதைவேட மிக பெரிய கலவரம் வந்திருக்கும் …. உங்கள் கட்டுகதைகளை கேட்டால் ஏதோ தீவரவாத குழுவிற்கு ஆள்செற்பது போல இருக்கு ??? (உடனே ஒன்றுக்கும் உதவாத ஒரு திரிகபட்ட செய்தி link போஸ்ட் பண்ணவேண்டாம்)//// இவருக்கு எல்லாரும் ஆதாரபூர்வமான செய்தியை கொடுங்க ஆனா இவரு மட்டும் வேடி வேடிஞ்சாய்ங்க கஷ்மீருல இதுவரைக்கும் ஒரே ஒரு கொலதான் நடந்துருக்குன்னு சொல்வாரு நம்ம கேட்டுகீரனும்
   /////கஷ்மிரீரில் ஒன்றும் இந்திய ராணுவத்தின் ஆட்சி நடக்கவில்லை , அங்கு மக்களால் தெர்தேடுகபட்ட ஆட்சி தான் நடக்குது , /////அப்புடியா எந்த மக்காளல் தேர்ந்தேடுக்கப்பட்ட ஆட்சி கஷ்மீரின் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் இந்திய நடத்திய போலி தேர்தல்கள்தான் காரணம் ///இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் இன்று ஒரு பிசைகாரனைவிட கேவலமான நில்லையில் தான் உள்ளான், அமெரிகவிடம் பணம் வாகி கொண்டு இன்று தனது நாட்டு மகளியே கொன்று குவிக்கிறான் …அதை பத்தியெல்லாம் நீங்கள் பேசுவதே இல்ல போல ??/// அவிய்ங்க பிச்ச எடுக்குறாய்ங்க அமெரிக்க காரய்ங்ககிட்ட பணத்த வாங்குகிராய்ங்க இத பத்தி ந ஏன் பேசனும் வேனுமுன்ன பிச்சைக்காரர்களே இல்லாத இந்திய நட்டுடைய பிரதமர் மன்மோகன் சிங்கை விட்டு அட்வைஸ் பன்ன சொல்லுங்க குறிப்ப அமெரிக்ககிட்ட காசு வாங்கிட்டு சொந்த மக்களையே கொல்லுரியே பாவி அப்புடியின்னு அட்வைஸ் பன்ன சொல்லுங்க கமெடியிய இருக்கும். குடை ரிப்பேர் பாயிடம் வந்து ஏன் கேக்கிற ?

   • Reply to ஹைதர் அலி :

    // பக்கிஸ்த்தான் இப்புடித்தான் பேசுனாய்ங்களா நீங்க சொல்லி தான் தெரியும் //

    அடடே கப்பா உங்களுக்கு தெரியாதா அண்ணே ? நம்பிட்டேன் 🙂

    ————-

    // இந்தியானில் மெஜாடிட்ட்டி இந்தியன் மைனார்ட்டி இந்தியன் ரேண்டு பிரிவு இருக்க இத எப்புடி பிரிஞ்சு கண்டுபுடிச்சீக 3 சதவீதம் இருக்கும் ஒரு மைனாரட்டி கும்பலுக்கு அடிம செவ செய்ரவேன் மெஜாரட்டி அப்புடித்தானே //

    மஜோரிட்டி minority நா புது விளக்கம் தரீங்க … ஒரு கேள்வி கேட்ட அத பத்தி பதில் சொல்லணும் அத விட்டுட்டு எதை எதை யோ உளறுவது சரீல்லை

    —————–

    /// RSSகாரன் கூட பாகிஸ்தானுக்கு அதரவ கை தட்டுவாய்ங்கனு பெரளிய பரப்புனுனாய்ங்க நீங்க அவளாயும் மிஞ்சிட்டேள் போங்கோ இப்புடி அவதூறு சொல்ல ஒனக்கு வேட்கமில்ல///

    ஆமாம் அது என்ன பாஸ் அய்யர் போல பேசுறீங்க ?? நான் ஒன்னும் அய்யர் இல்ல தல …ஆனா நானும் பதிலுக்கு ஒரு முஸ்லிம் போல பேசி உங்க அல்லவுக்கு இறங்க போவதில்ல 🙂

    RSS காரனா ?? அவன்னை பத்தி ஏன் பேசறீங்க நான் முஸ்லிம் மற்றும் இந்து இரண்டு மததில்லும் இருக்கும் வெறியர்களையும் வெறுக்கிறேன் …RSS கு எதிரானவன் தான் நானும்…மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தான் நான். மதத்தால் மனிதர்கள் மிருகங்களாய் மாறியது தான் மிச்சம்.

    என்ன பாஸ் இந்திய முஸ்லிம் யாரும் பாகிஸ்தான் அதரலவளர்கள் இல்ல நு கத விடறீங்க ?? பொய் ஆற்காடு , வெள்ளூர், வானியம்படின்னு பொய் பாருங்க ….நான் ஒரு முஸ்லிம் கல்லூரியில் தான் படிச்சேன் …அங்கு இந்திய தொட்ட்று பாகிஸ்தான் வென்றால் வெடி வெடித்து கொண்டாடுவார்கள் , இது இந்தியாவில் பல இடங்களிலும் அதேதான். வேற எந்த முஸ்லிம் நாடிள்ளவது இதை செய்ய முடிமா ??

    அது மட்டும் இல்ல தல … எங்கள் உடன் படித்த ஒருவன் கல்லோரிவிலாவுல மேடை ஏறி இந்தியாவை கேவலமாகவும் பாகிதான் தெய்வம் என்றும் பேசினான் , தான் ஒரு பாகிஸ்தானி என்று ஒலிபெருக்கியில் தெயரியமாக கூறினான் …இத என்ன சொல்லுவீங்க ??

    அட அத விடுங்க …. எங்க கல்லூரியில் கார்கில் போருக்கு நீவறன நிதி திறடின்ன இந்து மதத்தை சேர்த்த மாணவர்களை ஓட ஓட அடித்தார்கள் …யாரும் இந்தியாவுக்கு நிதி தர கூடாதுன்னு பிரச்சன பனாங்க ….

    நான் ஒன்றும் அனைத்து முஸ்லிம்களும் இப்படி என்று சொல்லவில்லை , ஆனால் நீங்கள் பலர் இப்படி தேச விரோத கொள்கைகளை வைத்து கொண்டு உங்கள் தாய் நாட்டை எதிரி போல் பார்த்தால் பின்பு மட்டற்ற சக இந்தியர்கள் உங்களை என்ன வென்று பார்பார்கள் ?
    ————————————

    /// இவருக்கு எல்லாரும் ஆதாரபூர்வமான செய்தியை கொடுங்க ஆனா இவரு மட்டும் வேடி வேடிஞ்சாய்ங்க கஷ்மீருல இதுவரைக்கும் ஒரே ஒரு கொலதான் நடந்துருக்குன்னு சொல்வாரு நம்ம கேட்டுகீரனும் //

    அண்ணே தயவு செய்து என்ன சொல்லிருக்கேன் என்று புரிந்து பேசுங்க …. நான் ஒன்றும் ஒருவர் தான் இதுவரை இறந்தார் என்று சொல்லவில்லை …. ஒருவர் இறந்ததில் தான் இந்த கலவரம் ஆரம்பித்தது என்று தான் சென்னேன்

    ———————————-

    /// அப்புடியா எந்த மக்காளல் தேர்ந்தேடுக்கப்பட்ட ஆட்சி கஷ்மீரின் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் இந்திய நடத்திய போலி தேர்தல்கள்தான் காரணம் ///

    அப்போ பல உள்நாட்டு உடகம்களிலும் , வெளி நாடு ஊடங்கங்களிலும் மக்கள் வருசையில் நின்று வோட்டு போடுவதை காட்டினார்களே அது animation என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை ……. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது உண்மை தான் போல ….. உலகிலேயே மிகபெரிய ஜனநாயக நாடு இந்தியாதான் …அதுவும் இல்லையா தல ??

    சரி நீங்களே இந்த photos ச பாருங்க
    http://www.flickr.com/photos/14693588@N02/3572902502/in/photostream/

    ——————–

    //// அவிய்ங்க பிச்ச எடுக்குறாய்ங்க அமெரிக்க காரய்ங்ககிட்ட பணத்த வாங்குகிராய்ங்க இத பத்தி ந ஏன் பேசனும் வேனுமுன்ன பிச்சைக்காரர்களே இல்லாத இந்திய நட்டுடைய பிரதமர் மன்மோகன் சிங்கை விட்டு அட்வைஸ் பன்ன சொல்லுங்க குறிப்ப அமெரிக்ககிட்ட காசு வாங்கிட்டு சொந்த மக்களையே கொல்லுரியே பாவி அப்புடியின்னு அட்வைஸ் பன்ன சொல்லுங்க கமெடியிய இருக்கும். குடை ரிப்பேர் பாயிடம் வந்து ஏன் கேக்கிற ? //

    ஆமாம் நீங்க அப்படியே உள்ளகதுல எல்லாம் நல்லவனுக …குறிப்பா இஸ்லாமியர் யாவரும் எந்த தவறும் செய்வதே இல்ல இந்தியா மட்டும் தான் கேவலமான நாடு நு ஒரு கத சொல்லுவீங்க …. இந்த நாட்டுல குண்டு வச்சி மக்களை கொள்ளரவண விடுதலை வீரன்னு கூம்பிடுவீங்க , இந்தியாவை அளிக்க துடிக்கும் பாகிஸ்தான்காரன் தியாகின்னு சொல்லுவீங்க , எவன் யப்பா கடைபான் அவன எப்படி brain wash பண்லாம் நு துடிபீங்க , இந்திய தேசிய கீதத்தை நீங்க மட்டும் பாட மாடீங்க…. ஆனா கேட்டா என்னக்கு தெரியாது நு escape ??

    ———————

    Where is answer for this ??

    ஒரு வேருமததிர்காரன் இஸ்லாம் பற்றி கேள்வி கேடதிற்கே அவன் கையை வெட்டி கொள்ளும் நீங்கள், உங்கள் மதத்தை சேர்ந்த ஒரு வங்கதேச பெண் இச்லமமில் உள்ள குறைகளை எழுதியதிற்கு நாடு கடத்தி, அவர் இந்தியா வந்தபொழுது ஒரு பெனஎன்று பாராமல் அவளை சூழ்ந்து தாகிய நீங்கள் , அமெரிக்காவில் ஒரு பைத்தியக்காரன் குரானை எரிக்க போவதாக சொன்னதிற்கே தாங்கள் கொந்தளித்து கிருஸ்துவ கோவில்களை கொள்ளுதும் நீங்கள் , ………..etc ….etc …எப்படி என்ன செய்தாலும் , என்ன பேசினாலும் இந்தியர்கள் உங்களை போற்ற வேண்டும் என்று எதிர்பார்கிண்டீர்கள் ??

  • துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்திருக்கிறீர்களா? உங்களை ஏய் என்று அழைத்து கிட்ட வந்தவுடன் எட்டி உதைக்கும் சிப்பாய்: உங்கள் மனைவியின் மார்பை உங்கள் கண்முன்னே சோதனையிடும் சிப்பாய்; நீங்கள் உரிமை கேட்பதனால் தனது வாழ்க்கை முச்சந்தியில் நிற்பதாக நம்பும் சிப்பாய்: இந்தியத்துப்பாக்கிகள் நிழல் ஈழத்தில் பதிந்திருக்கிறது காஷ்மீரில் படிந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி புரிய வைப்பது? மரங்களைப் போலத் துப்பாக்கியும் நிழல் தரும். அதன் கீழே கூனிக்குறுகி ஒடுங்க வேண்டும். குறுக மறுத்தால் சுடும் காஷ்மீரின் பனிமலையை பழத்தோட்டங்களை வாங்கப் போவது யார் நீங்களா? டால் ஏரியில் படகு விட்டுப்பனிச்சறுக்கு விளையாடி மாலை நேரத்தில் மதுவருந்தி மயங்கப் போவது யார்-நீங்களா? ஒபராய், தாஜ், ஹாலிடேஇன் நட்சத்திர-விபச்சார விடுதிகளின் உரிமையாளர்-தாங்களா? ஜீமாகானின் கல்லறைமேல் வசந்தமாளிகை எழுப்பப் போவது யார்-நீங்களா? நீங்களே ஆகட்டும்,உங்கள் எஜமானர்களே ஆகட்டும் காஷ்மீர் ஜீமாகானின் தாயா,உங்களது கூத்தியாளா? இமயத்தின் கம்பீரத்தையும் கள்ளமின்மையையும் அமைதியையும் கவிதை போலச் சொல்லும் காஷ்மீர்ப் பெண்களின் கண்களைப் பார்த்து சொல்லுங்கள் அவளது இதயத்தைக் குத்தீட்டியால் கிழித்துவிட்டு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுவீர்களா?(நன்றி தோழர் மருதையன், போரடும் தருணங்கள் என்ற புத்தகத்தில் உள்ள கவிதை வரிகளின் சுருக்கம்)

   • ஹைதர் அலி ,

    இந்த இந்தியனே ஒரு டம்மி பீசு … ஏற்கனவே பல பிரச்சனைகளில் (தனியார்மய, தாராளமய) வாதாடி பதில் சொல்ல முடியாம எஸ்கேப் ஆன காமெடி பீசு .. இவருக்கு போய் இவ்வளவு பெரிய பதிலா ?..

    • ஆமாம் அண்ணே நா காமெடி பீசு தான், உங்களைபோல முட்டாள்கள் சொர்க்கத்தில் வாழும் முட்டாள் பீசு இல்ல …. அஆமாம் நா எந்த கேள்விக்கு பதில் சொல்லலன்னு சொள்ளரறீங்க சார் ?

     உங்களுக்கு ஒருத்தன் எதுத்து கேள்வி கேட்டா அவ்வனை கேவலமாய் விமர்சனம் செய்வதுதான் கைவந்த கலை ஆச்சே.

 26. காஷ்மீரில் குங்குமப்பூ தோட்டத்தில் பூவை பறித்தெடுக்கும் தொழிலாளர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழே “நமது காஷ்மீரில் விளையும் குங்குமப்பூக்கள்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் மிகவும் தெளிவாக“நமது” என்பதற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது தினமணி. இது பார்ப்பன கும்பல் வழக்கமாக கையாளும் நரித்தனம் தான். பார்ப்பன பயங்கரவாத கும்பல் பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய பிறகு அந்த இட்த்திற்கு இவர்கள் வழங்கிய பெயர் ‘சர்ச்சைக்குரிய இடம்’. இந்த அயோக்கியத்தனத்தை அப்போதே பல வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு பார்ப்பன செய்தி ஊடகங்கள் அனைத்தும் பாபர் மசூதி இருந்த இட்த்தை சர்ச்சைக்குரிய இடம் என்றே குறிப்பிட்டன. இன்று அந்த சொல்லை வழக்கத்திற்கும் கொண்டு வந்துவிட்டார்கள். இப்படித்தான் ’வரலாறு’ உருவாகி எழுகிறது.

  காஷ்மீரி மக்களின் தாய் நிலத்தை கொஞ்சம் கூட வெட்கமோ, குற்றவுணர்வோ இன்றி ’நமது காஷ்மீர்’ என்று பேசும் இவர்கள் ’நமது தண்டகாரன்யாவில்’ லட்சக்கணக்கான மக்கள் ’நமது’ அரசாலேயே அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், ’நமது’ அரசாலேயே கொலை செய்யப்படுவதையும் இருட்டடிப்பு செய்வது ஏன் ? ’நமது குஜராத்தில்’ இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த கொலைகாரன் மோடியை காப்பாற்ற முயல்வது ஏன் ?

  நமது காஷ்மீர் வெல்க!

  http://vrinternationalists.wordpress.com/2010/11/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/

 27. அப்போ லட்ச கணக்கான காஷ்மீர் பண்டிட்கள் அடிச்சி விரட்ட பட்டாங்களே அத பத்தி பேச மாட்டிங்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க