தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் – அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.
கட்சிகளின் மேடைப் பேச்சாளர்களைத் தயாரிக்கும் முகமாக தொழிற்பட்டறைகளை அந்தந்த கட்சிகள் ஏற்பாடு செய்து தலைவர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. தலைவர்களின் “மூஞ்சி”களோடு கட்சியின் தேர்தல் சின்னங்களையும் மக்கள் மனதில் பதிய வைப்பதற்கு “ஃபிளக்ஸ்” தட்டிகளும், சுவரோட்டிகளும், கொடிகளும், பதாகைகளும் பெரும் எண்ணிக்
கையிலும் “ராட்சத” அளவிலும் அச்சிடுவதற்கும், தலைவர்களை வரவேற்பதற்கான சரவெடிகள் வாங்குவதற்கும் சிவகாசியில் “ஆர்டர்கள்” கொடுக்கப்பட்டு விட்டன. சீரியல் விளக்குகளால் மின்னுமாறு தலைவர்கள் மற்றும் சின்னங்கள் அமைப்பதற்கான தயாரிப்புகள் செய்கிறார்கள்.
ஒலி-ஒளிக் குறுந்தகடு, மின்னணுச் செய்தி ஊடகம், கைபேசி போன்ற அதிநவீன சாதனங்களைத் தங்கள் பிரச்சாரங்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று கட்சிகளின் சிறப்புக் குழுக்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றன. வேட்பாளர்கள் தேர்வுக்கான கொள்கை முடிவுகள் வகுக்கப்படுகின்றன. அதற்காகத் தொகுதிவாரியாக முக்கியப் பிரமுகர்களின் பட்டியல்கள், அவர்களைப் பற்றிய மதிப்பீடுகள், வெற்றிவாய்ப்புகளை ஆராய்வதற்குக் கணினி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவையெல்லாம் ஒருபுறம் நடக்க, தலைவர்களிடையே அனல் பறக்கும் அறிக்கைப் போர்களும் முத்திரை வசனங்களும் (பஞ்ச் டயலாக்) இப்போதே தொடங்கிவிட்டன. பெருநகரங்களில் போட்டி போட்டுக் கொண்டு மாறிமாறிக் கட்சிகளின் பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தங்களுக்குத்தான் அதிக ஆதரவு என்று காட்டுவதற்காக ஆளுக்கு நூறு ரூபாயும் பிரியாணிப் பொட்டலம் வீசிக் காக்கைக் கூட்டங்களைப் போல மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்கள் கூட்டத்தை இழுப்பதற்காக சினிமா நடிகர்களுக்கு வலை வீசப்படுகிறது. ஓட்டுக்கட்சிகளிடையே கூட்டணி பேரங்கள் ஆரம்பிப்பதற்கு முந்தைய பணியாக நோட்டம் விடுவது, ஆழம் பார்ப்பது, தூது அனுப்புவது ஆகியன நடக்கின்றன.
இவையனைத்தும் பற்றிய நடப்பு விவரங்களை இங்கே தொகுத்துத் தரவில்லை. ஏனென்றால், நாளிதழ்கள், வாரம் இருமுறை கிசுகிசு ஏடுகள் முதல் வார இதழ்கள் முதலிய பத்திரிக்கைகளிலும் வானொளிகளிலும் இவை பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. ஓட்டுக்கட்சிகளின் இந்த அரசியல் கூத்துக்கள் எல்லாம் இன்றைய நவீன வசதிகள், சாதனங்களைப் பயன்படுத்தி நடக்கின்றனவே தவிர, புதியதல்ல; எண்பது ஆண்டுகளுக்கு முன்பு காலனிய காலத்தில் ஓட்டுக்கட்சி முறை புகுத்தப்பட்ட காலத்திலிருந்தே தலைமுறை தலைமுறையாக நடப்பவைதாம்.
ஆரியம் – திராவிடம், தேசியவாதம் – இனவாதம், சோசலிசம் – முதலாளித்துவம், இந்துத்துவம் – மதச் சார்பின்மை – சிறுபான்மை, தலித்தியம் – ஆதிக்க சாதியம் என்று சித்தாந்த கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து அரசியல் – தேர்தல் கூட்டணிகளைச் சந்தர்ப்பவாதமாக அமைத்துக் கொள்வதும், பதவிக் காகக் கட்சி மாறுவதும், ஆட்சிக் கவிழ்ப்பும், மைனாரிட்டி ஆட்சிகள் நடத்துவதும் – இவையெதுவும் புதிதில்லை.
இந்தக் கூத்துக்களையே மரபாகவும், விதியாகவும் மாற்றிவிடும் பல நியாயவாதங்களை ஓட்டுக்கட்சித் தலைவர்கள் வகுத்து நிலைநாட்டியும் விட்டார்கள். “அரசியலில் எதுவும் நடக்கலாம்,” “அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது”, “அரசியல் என்பதே எண்ணிக்கை விளையாட்டுதான்”, “தொகுதி உடன்பாடு வேறு, அரசியல் கூட்டணி வேறு”என்று தங்கள் வசதிக்கேற்ப அரசியல் சூத்திரங்களை ஓதுகிறார்கள்.
சமுதாய ரீதியில் மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் இசுலாமிய மக்களின் மீட்புக்காக புதிதாக அவதாரம் எடுத்துள்ள தலைவர்களாகவும் தலித்திய – இசுலாமிய அறிவாளிகளாகவும் காட்டிக் கொள்ளும் திருமாவளவனும் பேராசிரியர் ஜவாகருல்லாவும் ஓட்டுக்கட்சிக் கூட்டணி அரசியல் சாக்கடையில் சங்கமமாகிய பிறகு, மேலும் புதிய நியாயவாதங்களையும் அதற்கான சூத்திரங்களையும் சொல்லத் தொடங்கியுள்ளனர். அரசியலை அரசியலாகத்தான் அணுகவேண்டும், கோட்பாடு, தர்க்கம், பகுத்தறிவு எல்லாம் அதற்குப் பொருந்தாது என்று உபதேசிக்கிறார்கள்.
பிரபாகரன் “கெட்-அப்”பில் தோன்றி முழக்கமிடும் திருமாவளவன், ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதில் ராஜபக்சேவுக்கு உடந்தையாயிருந்த காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளதை நியாயப்படுத்துகிறார். நாடு முழுவதும் இசுலாமியரைக் கொன்று குவித்த பா.ஜ.க.வுடனும், குறிப்பாக குஜராத்தில் அவர்களுக்கெதிராக பாசிச கொலைவெறியாட்டம் போட்ட மோடியுடனும் தோளோடு தோள் உரசும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதை ஜவாகருல்லா கும்பல் நியாயப்படுத்துகிறது.
தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைக்கும் பச்சோந்தி ராமதாசு என்று கிண்டலடிக்கப்பட்டவர், இப்போது சீந்துவார் இல்லாமல் சாயம் போன ஓணான் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் காங்கிரசு தலைமையில் மூன்றாவது அணி அமைக்க வேண்டும்; நடிகர் விஜயகாந்த் கட்சியுடன்கூடக் கூட்டணிக்குத் தயார் என்று நடுத்தெருவில் நின்று கூவுகிறார்.
இப்போது தேர்தல் கூட்டணிகளை அமைப்பது என்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கியின் ஆதரவு சதவீதம், அதன் மீதான கூட்டல் – கழித்தல் என்ற எண்ணிக்கைக் கணக்காகிவிட்டது. அரசியல் என்பது ஆளும் கட்சிகளின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளை அம்பலப்படுத்துவதும் குற்றஞ்சாட்டுவதும் எதிர்க்கட்சிகள் மீது “நீங்கள் மட்டும் யோக்கியமா?” என்ற கேள்வி எழுப்பி எதிர்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும் என்றாகிவிட்டது.
மக்களை ஈர்ப்பதற்கு ஆளும் கட்சிகள் இலவசக் கவர்ச்சி அறிவிப்புகளை செய்வதும் (முன்பு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு, இனி காங்கிரீட் வீடு, விவசாயிக்கு பம்பு செட் ஆகியவை); அவற்றையும் “போதாது, போலி” என்று எதிர்க்கட்சிகள் குறைகூறுவதும் என்றாகி விட்டது. போலி கம்யூனிஸ்டுகள் தமது காலாவதியான கொள்கைகளையும் கைகழுவிவிட்டு, பல சமயங்களில் அரசியல் அனாதைகளாகிவிட்ட நிலையில், ஏதாவது ஒரு அணியில் ஒட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளுகின்றனர்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கத்தை ஓட்டுக்கட்சிகள் பெரும்பான்மையாக நேரடியாகவும், சில கட்சிகள் (போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசக் கட்சிகள்) மறைமுகமாகவும் ஏற்றுக் கொண்டுவிட்டன. இதனால்தான் சிறுபான்மையாக உள்ள நிலையிலும் பா.ஜ.க., காங்கிரசு ஆட்சிகள் மாறிமாறி நீடிக்க முடிகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான சட்டதிட்டங்கள் வெறியுடன் அமலாக்கப்படுகின்றன.
தொடர்ந்து மேற்கண்டவாறு பல அரசியல் கூத்துக்கள் அரங்கேற்றப்படுவதால், செய்தி ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்கட்சிகளின் ஊது குழல்களாகவும், வெறுமனே களியாட்ட வியாபாரிகளாகவும் செயல்படுவதன் காரணமாக மக்கள் ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். கணிசமான அளவு இலவசத் திட்டங்கள், ஓட்டுக்குப் பணம் ஆகியவற்றால் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டுக்கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கோ, அணிக்கோ மக்கள் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
_______________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010
_______________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !
- பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!
- திருமங்கலம் இடைத்தேர்தல்: மக்கள் பிழைப்புவாதத்திற்கு ஒரு திருப்புமுனை !
- தலைவர்களின் சுயமோக போதை !
- கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!
- மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !
தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!…
தமிழக தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன…
//ஆரியம் – திராவிடம், தேசியவாதம் – இனவாதம், சோசலிசம் – முதலாளித்துவம், இந்துத்துவம் – மதச் சார்பின்மை – சிறுபான்மை, தலித்தியம் – ஆதிக்க சாதியம் என்று சித்தாந்த கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து அரசியல் – தேர்தல் கூட்டணிகளைச் சந்தர்ப்பவாதமாக அமைத்துக் கொள்வதும், பதவிக் காகக் கட்சி மாறுவதும், ஆட்சிக் கவிழ்ப்பும், மைனாரிட்டி ஆட்சிகள் நடத்துவதும் – இவையெதுவும் புதிதில்லை
:((
[…] This post was mentioned on Twitter by வினவு, ஏழர and GopiKrishnAn, karthick. karthick said: tamil nadu politix https://www.vinavu.com/2010/09/20/tamilnadu-elections/ #vinavu […]
//தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கத்தை ஓட்டுக்கட்சிகள் பெரும்பான்மையாக நேரடியாகவும், சில கட்சிகள் (போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசக் கட்சிகள்) மறைமுகமாகவும் ஏற்றுக் கொண்டுவிட்டன.//
yes. but you will never ever understand why they all now agree on this. and they are neither crazy nor irresponsible nor cynical in accepting the LPG.
Even the whole world knows communism is a failed ideology…. but some super brilliants will keep talking those failed ideology as a path for dreame world. I worry it might be a fools paradise.
How you argue with a guy who educated only primary school level and saying “newton is stupid” with out any facts ?
Mr.Indian your last line matches very well to you too ..
yes athiyaman..
All those political parties accept that LPG. Because it gives them an easy way to deposit black money in foreign banks.
Please see the following link
http://timesofindia.indiatimes.com/india/India-lost-over-USD-125bn-in-illicit-outflows-between-2000-08/articleshow/6550726.cms
This is not the news given by any communist party magazine but a capitalist magazine..
LPG is very good only for the people who are in the Authority (Corrupt IAS officers, All politicians). Labours and More Hardworking People are in the same state as they were in the 1980-1990 period.
What is the explaination you are going to give here ?..
// Labours and More Hardworking People are in the same state as they were in the 1980-1990 period.//
that is what you belive while reality is different. But, yes it true that total amount in rupess terms of corruption in India has multiplies phenomenally over the 20 years. Economy and GDP has grown and corruption has kept pace. that is all. but you are ignorant of the grave crisis that faced India in 1991 and why we opted for LPG. But for that we would have been bankrupt and in a terrible situation like Germany in 20s (Weimer Republic).
உலக வங்கியின் நிர்பந்தம், etc, என்று தொடர்ந்து பேசுகிறீர்கள். முதலில் உலக வங்கி என்றால் எதை சொல்கிறீர்கள் : IMF or World Bank ? இரண்டிற்க்கும் உள்ள வித்யாசம் மற்றும் இந்தியாவிற்க்கும் இவ்விரு அமைப்புகளுடனான உறவின் வரலாறு பற்றி சொல்லுங்க. பிறகு தொடர்கிறேன்.
////that is what you belive while reality is different. But, yes it true that total amount in rupess terms of corruption in India has multiplies phenomenally over the 20 years. Economy and GDP has grown and corruption has kept pace. that is all./////
Yes Mr.K.R.A, Can you please tell me Economy and GDP is calculated with respect to what ?..
Do you know the cause that made the politician’s corruption to take place ?.. Is that nothing but the share for them to allocate more facilities for the foreign companies entering into India from the people’s money. If their share of money crosses us$125 bn what will be the amount sucked by those companies from India.
How many employee’s hardwork was strawed out by them in the mean time. (I think you know very well that Labour laws can never enter into the SEZs )
///////////////////// but you are ignorant of the grave crisis that faced India in 1991 and why we opted for LPG. But for that we would have been bankrupt and in a terrible situation like Germany in 20s (Weimer Republic)./////////////
Please you Explain me what was that grave crisis India faced in 1991 ? who are the reason for that ?..
உலகவங்கி . சர்வதேசிய நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் இவை பற்றி பின்னர் விவாதிக்கலாம். அது விவாதத்தை திசை திருப்பவே செய்யும். தாங்கள் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும் ..
செங்கொடி மருது,
உங்கள் கேள்விகளுக்கான விடைகளுக்கு பார்க்கவும் :
http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
http://nellikkani.blogspot.com/2008/01/blog-post_9749.html
‘தாரளமயமாக்கல்’ என்றால் என்ன ?
அதியமான் அவர்களுக்கு,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் .. வேலைப் ப்ளுவில் முடியவில்லை.
இந்தியாவில் 1991 இல் அரசாங்கம் திவால் ஆகி இருந்தால் என்பதற்கு முன்னால், இந்தியாவின் கடன் தொகை ஏறிக் கொண்டே சென்றதற்கு காரணம் என்ன என்று பார்க்கலாம் . இங்கே பெரு முதலாளிகளுக்கு (டாட்டா, பிர்லா, அம்பானி,மிட்டல்) கொடுக்கப்படும் சலுகைகள் தான் அதற்கான காரணம். இந்திராகாந்தி காலத்தில் என்ன நடந்தது என்று நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அம்பானி குடும்பத்திடம் வாங்கி திண்று கொண்டு சலுகைகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார் இந்திரா. அம்பானி மர்ருமா டாட்ட, மிட்டல்,பிர்லாக்களும் சலுகைகளில் மிதந்தார்கள். பெட்ரோலுக்கு தானே அதிகமாக இந்திய நாட்டிற்கு அமெரிக்க டாலர்கள் தேவை. தேவைகளைக் குறைக்க முடியாதா என்ன ?..
ஒரு நாளைக்கு எத்தனைக் கார்கள். இந்த கார் ஓட்டும் பாவப்பட்டவர்களுக்கும் சலுகை விலையில் பெட்ரோல் டீசல். முதலாளி முதலைகளுக்கு அள்ளிக் கொடுத்த சலுகைகளை நிறுத்தியிருந்தால், ஊழலுக்குள் தலையை விடாமல் நிறுத்தியிருந்தால் நாடு திவாலாகும் நிலை வந்திருக்காது. அவசர கால நிலையை பிரகடனம் செய்து முதலாளிமார்களிடம் இருந்து இரும்புத் தாது போன்ற கனிமவளங்களை அரசே எடுத்துக் கொண்டிருந்தால் நாடு திவால் ஆகியிருந்திருக்காது. வீடு எரிகிறது என்று பெட்ரோலை ஊற்றி அணைக்கும் முயற்சி தான் தாராளமயம். இதை இங்கு இன்றும் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் 87% இந்திய ஏழைகளின் வாழ்க்கை உங்களுக்கு உரைக்கவில்லையா ?.. முதலாளித்துவம் ஏற்படுத்தும் எரிச்சல் உங்களுக்கு உறைக்கவில்லையா ?..
நாடு திவால் ஆகாம இருக்க தாராளமயம் தான் சரின்னு நீங்க சொல்லுறதை புரியும்படி பச்சையா சொல்லனும்னா … புருசனுக்கு உடம்பு சரி இல்லைனா பக்கத்து விட்டுக்காரன்கிட்ட பொண்டாட்டிய அனுப்ப சொல்லுற மாதிரி இருக்கு .
தூ….
//இந்தியாவின் கடன் தொகை ஏறிக் கொண்டே சென்றதற்கு காரணம் என்ன என்று பார்க்கலாம் . இங்கே பெரு முதலாளிகளுக்கு (டாட்டா, பிர்லா, அம்பானி,மிட்டல்) கொடுக்கப்படும் சலுகைகள் தான் அதற்கான காரணம்.///
இல்லை. அன்னிய செலவாணி கையிறுப்பு மிக குறைவாக இருந்தது. பற்றாக்குறையை சமாளிக்க அய்.எம்.எஃப் இடம் வருடந்தோரும் கடன் வாங்க வேண்டியிருந்தது. சுமார் 45 ஆண்டுகள் வருடந்தோரும் வாங்கி சமாளித்தோம். இன்று இல்லை. இதை பற்றி புரிதல் இல்லாமல் கேவலமாக பேசும் உம்மை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. read my posts fully first.
///நாடு திவால் ஆகாம இருக்க தாராளமயம் தான் சரின்னு நீங்க சொல்லுறதை புரியும்படி பச்சையா சொல்லனும்னா … புருசனுக்கு உடம்பு சரி இல்லைனா பக்கத்து விட்டுக்காரன்கிட்ட பொண்டாட்டிய அனுப்ப சொல்லுற மாதிரி இருக்கு
தூ…////
You are crazy and unable to understand the basics of balance of payment crisis or the basis of exchange rates or about the connection between exchange rates, interest rates, inflation and deficits of govts. It is a waste to argue with morons like you.
(ஏற்கெனவே வேறொரு தலைப்பிற்கு எழுதிய பின்னூட்டம்தான். என்ன செய்ய, இந்த தலைப்பிற்கும் இது பொருத்தமாய்த்தான் இருக்கிறது…!)
நதிக்கரை நாகரிகம் – ஆனாலும் திராவிடம் :
வெள்ளையன் ஓடம் விட்ட நதி
பச்சையப்பன் நீராடிய நதி
கட்டாந்தரையை கண்டிராத நதி
வற்றாத ஜீவ நதி.
துணி வெளுக்கும் படித்துரைகள்;
படகுத்துரை மண்டபங்கள்;
பஞ்சகாலம் வந்தபோதும்
சஞ்சலமின்றி ஓடும் நதி!
***
ஆற்றின் அமைதியும்,
இருளும் நிலவும்,
சூரியனும் சூனியமும்
அழகுச் சித்திரம்தான் – ஆனாலும்
கண்களை மூடிக்கொண்டுதான்
காணவேண்டும்!
____
எங்களின் பிறப்பிடம், வசிப்பிடம்
வாய்ததெல்லாம் இங்கேதான்.
அதனால் – இது ஆறறங்கரை நாகரிகம்:
ஆனாலும் திராவிடப் பாரம்பரியம்!
தெளிவாய்த்தான் கூறுகிறோம்;
உங்களின் குழப்பதிற்கு
நாங்கள் எப்படி பொறுப்பாவோம்?
***
அமேசான் வாசிகள் போல்
ஆற்றங்கரைக் குடில்கள்.
எட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.
கரையை சரித்துவிட்டால்
குந்திக்கொள்ளத் தரை!
நேரான கோடுபோட்ட தெரு –
ஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.
பதினாறடிச் சறுக்கலில்
மலைக் கிராமம்போல.
ஆனால் ஊரில்லை, பேரில்லை,
முகவரியுமில்லை!
தெருவுக்கும் பெயரிடவில்லை,
தெருவிளக்குமில்லை – அதனால்
மின்சாரமுமில்லை!!!
***
ஒன்றுபோலத்தான் குடில்கள் – ஆனால்
கூரைகள்?
வியந்துபோவீர்கள்:
அத்தனையும் சித்திரங்கள்;
கண்ணைப் பறிக்கும் வண்ணமயம்.
வர்ண ஜாலம் வீசும்;
வர்ண வாசமும் வீசும்!
***
அதோ…
அந்தப் படகுதுறைக்குப் பக்கதில்
எமது குடில்.
வியப்பாயிருந்தால் வந்து பாருங்கள்
கண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை…!
***
இதோ…
செல்வியின் சிரிப்பு,
கண்களில் தெறிக்கும் குறும்பு.
கன்னத்துக்குக் கன்னம் எட்டடி.
நெற்றிக்கும் கழுத்துக்கும் எட்டடி.
கனச்சிதமாய் கூரையில்
கவிழ்ந்து கிடக்கிறார்.
“அறுபைத்தைந்தின் அகவையை எட்டும்
தங்கத் தாரகயே வா…’ – கட்சிக் கலரில்.
…ழ்த்த வயதில்லை – வணங்குகிறோம்”
எனும் எச்சம் தென்னங்கீற்றில்
சுருண்டு கிடக்கிறது!
அந்தக் குறும்புச் சிரிப்பு
உடம்பின் வருணணைக்கா
என்பது புரிந்தபாடில்லை.
மயிலை மாங்கொல்லையில்
கருவாடாயக் காய்ந்து கிடந்ததை
முந்தின மாதம் மீன்பாடி வண்டியில்
எங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்!
***
இந்த வாசல் தட்டியைப் பாருங்கள்…
மதுரைக்கார அழகிரி!
ஊருக்குப் புதுமுகம்.
அண்ணா சாலையில்
ஆளுயரத் தட்டியில்
அனாதையைய் நின்றிருந்தார்.
இதோ… இப்போது இங்கே!
முட்டிவரை வெட்டிவிட்டதால்
நாலடி உயர வாசலில்
கச்சிதமாய் நிற்கிறார்.
போகும்போதும் வரும்போதும்
கைகூப்பி வணக்கம் போடுவார்!
***
அந்த முனுசாமி வீட்டிலேதான்
வைகோ இருக்கிறார்.
ஐயகோ, கலங்கிய கண்கள்.
வைகோ கைகாட்டிய இடத்தில்
நட்சத்திர வடிவில்
முத்துக்குமார் படம்.
அதற்குக் கீழே
ஈழப் படுகொலைப் படங்கள்.
“ரத்த ஆறு ஓடும்” என்று
‘ராவா’கப் பேசினவர் – அந்தோ…
சித்தம் கலங்குகின்றார்;
சிந்தையும் கலங்கினாரே…!
***
கஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே
விஜயகாந்த் இளிக்கிறார்.
கருப்பு எம்ஜியாராம் – ஆனால்
கண்கள் ‘செவ செவ’ என்று இருக்கும்.
கருப்பு எம்ஜியாருக்குப் பக்கதில்
பொறுப்பான பொண்டாட்டி.
அவருக்குப் பக்கதில்
ஆசை மச்சான்.
அதற்கும் பக்கத்தில்?
ரெண்டு காலிக்கட்டங்கள் – வாரிசுகளுக்கு!
கேப்டனின் ஆக்ரோஷம்
துல்லியமாகத் தெரிகிறது…
இந்த முறைக்கு பழுக்கப்போவது
எந்தத் தொண்டனின் கன்னமோ…?
***
முந்தானாள் வரையிலே
மங்காத்தா கூரையிலே
மருத்துவர் ‘மாங்காய்’ ராமதாசி இருந்தார்.
கூடவே அன்பு ‘மனி’ மகனும்.
அருமைத் தங்கையும்கூட இருந்தார்கள்.
ஆனால்… ஏனோ தெரியவில்லை –
‘வீட்டுக்கு விளங்கலை’யென்று
மங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.
இப்ப்போது அவள் கூரையில் ரித்தீஷ்!
ராமனாதபுரத்துச் சொந்தம்
ராசி பார்த்து
ரயிலேறி கொண்டுவந்தது!
***
ஆனால் ஐயா,
சிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் –
இந்த நடிப்புக்கு!
ஒரே முகம் – ஒரெயொரு முகந்தான்.
அதிலே மகிழ்ச்சியும் இருக்கும்,
சோகமும் ததும்பும்.
சூழ்ச்சியென்பது இருக்காதைய்யா.
இந்தச்சிக்கலான முகம்
இங்கிருந்து மூன்றாவது குடிசை!
யாரெனக் கேட்பீரேல்…
அவர்தான் அண்ணன் திருமா.
எப்படி ஐயா, எப்படி முடியும்?
ஆண்டாண்டு காலத்துக்கும்
இந்த ஆண்டையின் நடிப்பை
மறக்க முடியுமா?
மறுக்கத்தான் முடியுமா?
***
முக்கால்வாசிக் கூரைகளிளும்
ஓய்வெடுக்கும் முதியவர், கலைஞ்சர்.
இவர் –
ஏழயின் சிரிப்பில்
இரைவனைக் கண்டுவிட்டால் –
திண்ணை காலியாகக் காத்திருக்கும்
சென்னைத் தளபதி
பதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்!
***
கூட்டிக் கழித்தால்
தமிழகத்து எதிர்காலங்கள்
தொங்கிக் கொண்டிருக்கின்றன –
எங்கள் கூரைகளில்!
எப்படியென்று கேட்கிறீர்களா?
கர்ம வீரர்களாகவும், கலைஞ்சர்களாகவும்,
புரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,
தளபதி / இளைய தளபதிகளாகவும்,
கேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,
சிறுத்தைகளாகவும், பன்றிகளாகவும்,
கருப்பு நிலாக்களாகவும்,
சூரியன் களாகவும், நட்ச்சத்திரங்களாகவும்,
அமாவாசைகளாகவும்,
விடிவெள்ளிகளாகவும், வெட்டுக் கத்திகளாகவும்,
வெங்காயங்களாகவும்,
மொத்ததில்…,
மொத்ததில்…
ஆரியர்களாகவும், திராவிடர்காளாகவும்!
***
அடடா…
அது அவர்கள் நாகரீகம்!
அவர்களுக்கு அவர்களாகவே
போர்த்திக் கொண்ட
நாமகரணத் துண்டுகள்!
புரியாமல் தவிக்கும் பிண்டமே…
இதுதாண்டா அரசியல் நாகரீகம்…!
ஆனாலும் எங்களுக்கு
ஆற்றங்கரை நாகரீகம்.
ஆனாலும் நாங்கள் ஆரியர்களல்ல…
திக்கற்றுப் போன திராவிடர்கள்தான்!
***
இன்னொரு நாகரீகம்…
சினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு?
பம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்
கரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.
இந்திய சேரி நாய்களைப் பற்றிய
இங்கிலீசுப் படம் –
அள்ளிக் கொண்டுவந்தது ஆஸ்கார்களை…!
மேட்டுக்குடி மகிழ்ந்தது.
நடுத்தரம் சிலிர்த்தது.
வறுமைக் கோட்டில் இருந்தவர்களும்
கொண்ண்ண்டாடி விட்டார்கள்.
கொண்டுவந்துவிட்டான் ஒரு இந்தியன்.
அதுவும் ஒரு தமிழன் – டமிளிலேயே பேசினவன்.
கவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் –
இந்தியக் கவுரவத்தை
சந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு!
***
ஆரிய மாயையும்
திராவிட சூழ்ச்சியும்
உங்கள் நீரோட்டத்தின்
ஊற்றகிப் போனது.
அதன் ஜனனாயக ஒழுக்குத்தான்
இந்தக் கருப்புச் சாக்கடை.
இந்தச் சாக்கடையின் விளிம்பில்
சிக்கிக்கொண்டுவிட்ட நாங்கள் –
இதோ…
இந்தக் கரைச்சறுக்கலை
இறுகப் பிடிது மேலேறிவிட்டாலோ…
எங்களின் நெரிசல்
உங்களை நசுக்கிவிடும்.
எங்களின் வியர்வை நாற்றத்தில்
உங்களின் மூச்சுத் திணறும்.
எங்களின் வயிற்றில்
சோற்றுக்காய் சுரந்த அமிலம்
உங்களை சுட்டெரித்துவிடும்.
இந்தக் கருப்புச் சாக்கடையில்
ரத்த வீச்சம் வீசும்!
– புதிய பாமரன்.
////ஒலி-ஒளிக் குறுந்தகடு, மின்னணுச் செய்தி ஊடகம், கைபேசி போன்ற அதிநவீன சாதனங்களைத் தங்கள் பிரச்சாரங்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று கட்சிகளின் சிறப்புக் குழுக்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றன///
அவன் அவன் சக்திக்கு தகுந்தாப்ல மண்டையும் பிச்சிகிறான்..கொண்டையும் பிட்சிகிறான். இப்போ உங்களையே எடுதுகுங்கலேன்..எதாவது ஒரு சின்ன போராட்டாம்
பன்னுரதுக்கே போட்டோ பிடிகறதும்.. பறை அடிக்கறதும் செங்கொடி கருங்கொடி பிடிசிகறதும்.. வீடியோ எடுதுகறதும்..அத இணைய தளத்துல அன்னைக்கு நைட்டே போட்டு விளம்பரம் பண்ணறதும்..எவ்வளோ பனுறீங்க…நீங்களே இப்படி எல்லாம் பணறதுக்கு மண்டைய பிசிகும்போது..அவங்க எல்லாம் எப்படி பண்ணுவாங்க. கொஞ்சம் யோசியுங்க…
வினவு க்ரூப்பு..
hey u did a good job. enakum unnai pol thamizhil ezhutha aasaithan aanal eppadi endru theriyavillai.
2006 therthal …AIADMK VOTES.1,07,68,559.
But.. ……………….DMK VOTES 87,15,716.
13 TH ASSEMLY..
//பெட்ரோலுக்கு தானே அதிகமாக இந்திய நாட்டிற்கு அமெரிக்க டாலர்கள் தேவை. தேவைகளைக் குறைக்க முடியாதா என்ன ?..
ஒரு நாளைக்கு எத்தனைக் கார்கள். ///
இல்லை அப்பனே. அனைத்து இறக்குமதிகளுக்கும் டாலர் தேவை. மிக முக்கியமாக பெட்ரோலிய பொருட்கள். பெட்ரோல் பற்றி தான் பேசுகிறீர். டீசல் தான் மிக மிக முக்கியம். அதுதான் life blood of our economy. ஏறக்குறைய மொத்த பொருள் போக்குவரத்தும் டீசலின் விலை மற்றும் சப்பளையை நம்பி உள்ளது. டீசல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு மிக மிக பாதிக்கும். உணவு, பால், காய்கறிகள், மருந்து, உடை, மற்றும் பல ஆயிரம் பண்டங்கள் லாரிகள் மற்றும் டெம்போக்கள் மூலம் தான் கொண்டு செல்ல படுகிறது.
டாலர் இல்லாவிட்டால், இறக்குமதி நின்று போய், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்க்கு சென்று, இங்கு பற்றாக்குறை, பஞ்சம், கடும் விலைவாசி உயர்வு மற்றும் பெரும் சிதைவு உருவாகியிருக்கும். வறுமை மிக மிக மிக மிக அதிகமாகியிருக்கும். சோவியத் யூனியன் திடிரேன சிதைந்த பின் ஏற்பட்ட விளைவுகளை விட பல மடங்கு மோசமான பேரழிவு நிகழ்ந்திருக்கும். 1920களில் ஜெர்மனி இப்படிதான் அழிந்தது. 10000000 மடங்கு விலைவாசி உயர்ந்து. ஜனனாயகம் அழிந்து இட்டலர் உருவாக வழி செய்தது. படித்து பார்க்கவும்..
இந்தியா சுதந்திரம்பெற்றதற்கு பதிலாக
பெறாமலே இருந்திருந்தால் மக்களாவது நன்றாக இருந்திருக்களாம்,
சுதந்திரம் என்றபெயரில் நாடை சுரண்டும் நயவஞ்சகர்களுக்கு ஒட்டளித்தற்கு மக்களுக்கு பரிசாக சிரமம் தான் மிஞ்சியுள்ளது,……