Monday, September 26, 2022
முகப்பு வாழ்க்கை அனுபவம் உலகின் அழகிய மணமக்கள் !

உலகின் அழகிய மணமக்கள் !

-

புதிய கலாச்சாரத்தின் அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியனுக்கும், ம.க.இ.க மையக் கலைக்குழவின் தோழர் அஜிதாவுக்கும் தேனிமாவட்டம் தேவாரத்தில் கடந்த ஞாயிறன்று புரட்சிகர மணவிழா இனிதே நடந்தேறியது. இந்த திருமணத்தில் பங்கு கொண்ட சந்தனமுல்லை இங்கே தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். -வினவு

_________________________________________________________________

மணமேடை
ஊர் மைதானத்தில் அமைக்கப்பட்ட மணமேடை

உலகின்  அழகிய   மணப்பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?  உலகின் அழகிய  மணமகனை?

ஜோசிய‌ர்  சொன்னார் என்பதற்காக  மாங்கல்ய தோஷத்தை நீக்க மரங்களை இரண்டு  முறைகள் மணந்து, அதற்கு பின்னர்  நடமாடும்  மூன்றாவது  மரத்தை மணந்த ‘உலக அழகி’  ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனையா நினைத்துக் கொண்டீர்கள்  நீங்கள்?    ச்சே..ச்சே….நிச்சயமாக அவர்கள் இல்லை.

உலகின் எந்த மூலைக்குப்  போனாலும், ஏன் சந்திரனுக்கே சென்று வந்திருந்தாலும் சந்தியாவந்தனம் செய்வதை விடுவதில்லை –   ஆவணி அவிட்டத்தை விடுவதில்லை – ஒரு சம்பிரதாயம் விடாமல் எல்லா சடங்குகளையும்  நிறைவேற்றி,காசி யாத்திரைக்குச்  சென்று  அய்யர்  வைத்து ஓதி  நெருப்பை வலம் வந்து அம்மி மிதித்து நமது பண்பாட்டின் படிதான் திருமணம் செய்துக் கொள்வேன்  என்று பெருமையாக  சொல்லிக்கொள்ளும் பல தமிழர்களின் பகட்டான திருமணங்களுக்கு நடுவில் -‍உடலில் ஒரு பொட்டு தங்கம்  இல்லாமல் பெண்களை அடிமையாக்கும் எந்த சம்பிரதாயங்களுககோ, மூடநம்பிக்கைகளுக்கோ, போலி ஆடம்பரங்களுக்கோ  இடம்  தராமல்  தலைநிமிர்ந்து,  ‘இந்த சமூகத்தின் எந்த அழுக்குகளும் கறைகளும் எங்கள் மீது படவிடமாட்டோம்’ என்று  உறுதியான  கொள்கையுடன் நடந்த திருமணத்தின் மணமக்களான  தோழர்.அஜிதா மற்றும் தோழர்.பாண்டியன்-தான் அவர்கள் – உலகின் அழகிய  மணமக்கள்!

ஆம்,அங்கு ஜோடிக்கப்பட்ட  மேடை  அலங்காரங்களோ  கண்கவரும் மேடை வளைவுகளோ இல்லை; ஆனால் போலித்தனமில்லாத  சுயமரியாதை இருந்தது.

கை கூப்பி  வரவேற்கும் ஆட்டோமேடிக் பொம்மைகளோ,  கல்கண்டு டப்பாக்களோ  மணக்கும் சந்தனமோ இல்லை ;  ஆனால்,  பார்க்கும் யாவரையும்  நோக்கி புன்னகைக்கும் எளிமையும் தோழமையும் இருந்தது.

மண்டபத்தில்,  பளபளவென அடுக்கி வைக்கப்பட்ட புத்தம்புதிய சீர்வரிசை பாண்டங்களோ அட்டை பிரிக்கப்படாத வீட்டு உபயோகப்   பொருட்களோ இல்லை ; ஆனால் “நாங்கள்  விரும்பி ஏற்றுக் கொண்ட இவ்வாழ்க்கையை   சமூகத்தின் விடுதலைக்காக இதுவரை  தனியாக போராடிய வாழ்க்கையை இனி இருவருமாக ஒன்றாகத் தொடர்வோம்” என்ற உறுதியும், உத்வேகமும் இருந்தது.

திரை இசையை பாடி மகிழ்விக்கும் ஆர்கெஸ்ட்ராவோ, பட்டுப்புடவை சரசரப்புகளோ இல்லை;  “கலகலப்பு என்பது இவற்றில் இல்லை,   உண்மையான மகிழ்ச்சி என்பது போராட்டத்தில் இருக்கிறது” என்ற உறுதி  இருந்தது.  மக்களை சிந்திக்க வைக்கும் பேச்சாளர்களாலும்,  மக்களுக்கான கலையாலும் களை கட்டிய விழாக்கோலம் அங்கிருந்தது.

காது  பிளக்கும்  இரைச்சலான கெட்டிமேளம், நாயனங்கள்  இல்லை; ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லையும்  தூண்டி  உணர்வுகளை புதுப்பிக்கும் பறையும் புல்லாங்குழலும் இருந்தது.

சாதியோ, மதமோ, காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களோ எதுவும் இல்லை; ஆனால் மனிதரை மனிதர் உள்ளன்போடு நேசித்து  அவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்து அங்கீகரிக்கும் உயர்ந்த பண்பு இருந்தது. தங்கள் மகன் மற்றும் மகளுக்காக  காலங்காலமாக மக்களை அழுத்தி வைத்திருக்கும் போலி நம்பிக்கைகளை தூக்கியெறிந்து, புதிய சமூக மாற்றங்களை மனமுவந்து  ஏற்கும் தெளிவும், தைரியமும், எதிர்கொள்ளும் துணிவும் அந்த பெற்றோர்களிடம் இருந்தது.

ஓ, சுய மரியாதைத் திருமணமா என்றா கேட்கிறீர்கள்…இல்லை…இல்லை….இது ஒரு புரட்சிகர   திருமணம்!

சாதி மத சம்பிரதாயங்களை மறுத்த சுயமரியாதைத் திருமணங்களைக் கேள்விப்பட்டிருப்போம்; ஏன்  பார்த்துமிருப்போம்.

ஆனால்,  கோடானுகோடி  மக்களின் நலனுக்காக தங்கள்  வாழ்க்கையை அர்ப்பணித்த தோழர்களின் புரட்சிகரத்   திருமணத்தை?

ஆம், முதல் முறையாக ஒரு புரட்சிகரத் திருமணத்திற்கு சென்று பங்கேற்ற  பிரமிப்பிலிருந்தும் தாக்கத்திலிருந்தும் இன்னும் மீள  முடியாமலிருக்கிறேன்.

மனித குல விடுதலைக்காக, கம்யூனிசமே தீர்வு என்று  தான் நம்பும் கொள்கைகளுக்காக, அரசியல் சித்தாந்தங்களுக்காக  சொந்த   வாழ்க்கையை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக‌களை துச்சமென மதித்து சமூகத்திற்காக வாழும் உன்னத நோக்கத்திற்காக  அர்ப்பணித்துக்கொண்ட  இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட விழா அது! இதுதான் எவ்வளவு அர்த்தமுள்ளதாக  இருக்கிறது.

மக்களின் நலனுக்காக தங்கள் உயிரை ஈந்து தியாகிகளான தோழர்களை நினைவு கூர்ந்தபடி விழா ஆரம்பமாயிற்று.மணமக்களின் பெற்றோர்கள் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட இரு தம்பதிகளும் மேடைக்கு வந்து வணங்கி அமர்ந்தனர்.அதன்பின், மணமக்கள் இருவரும் அழைக்கப்பட மேடையை நோக்கி இருவரும் நடந்து வந்தனர்.

பார்க்கத்தான் அது எவ்வளவு கம்பீரமாக கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது!

பெண்ணை  அவமானத்துக்குள்ளாக்காத திருமண முறை  எந்த மதத்திலாவது எந்த சாதியிலாவது இருக்கிறதா?

“திருமண மேடையில் எப்படிப்  பெண்ணுக்குரிய லட்சணங்களோடு நடந்துக் கொள்ள  வேண்டும், நீ பெண் என்பதால் தலைகுனிந்து  நாணி கோணி தன்னியல்பாக இருப்பதை விட இயல்பைவிட்டு ஒதுங்கி  வெட்கத்தை, குடும்ப வளர்ப்பை, மானத்தை நீ நடந்துக்  கொள்ளும் முறையில்தான் காப்பற்ற வேண்டும்” என்றும் “அளவா சிரி, பல்லு தெரியயாம ஸ்மைல் பண்ணக் கத்துக்கோ” என்றும்  அறிவுரைகள் வழங்கி, இத்தனைக்கும் மேலாக தலைகொள்ளாப் பூவை சடையில் தைத்து வைத்து நினைத்தாலும் தலை நிமிர்ந்து  பார்க்க முடியாமல் மணப்பெண்ணை அலங்கார பொம்மையாகவே  மாற்றியிருக்கும் திருமணங்கள் –  முக்காடிட்டு பெண்ணை ஒரு  தனி இடத்திலும், ஆணை ஒரு தனி இடத்திலும்  அமர வைத்து, ஆணை மையமாக  வைத்தே சம்பிரதாயங்களை நிறைவேற்றி,  வரதட்சிணையை பேரேட்டில் குறித்துக் கொண்டு கையெழுத்திட்டு, இருவரையும்  பொதுவாக  ஒரு இடத்தில் இருவரும்  அமரக்  கூட  வழியில்லாமல் மணவிழாச் சடங்குகள் நிறைந்த கட்டுக்கோப்பான திருமணங்கள் – முதலில் மணமகன் நடந்து வர பின்னாலேயே  தலை குனிந்து மணமகள் நடந்து வரும் நடைபெறும் திருமணங்கள் –

இவை நடுவில் மணமகனும் இருவரும் சமமாக நடந்து வர எந்த திருமண மேடை அல்லது திருமண அமைப்பு அனுமதிக்கிறது?

இல்லை, அந்த மாற்றத்தைத்தான்  எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்? படித்திருக்கிறோம், உயர்ந்த பதவிகள் வகிக்கிறோம், உலகின்  விலை உயர்ந்த காரை ஓட்டுகிறோம், ஊருக்கே முன்மாதிரியாக இருக்கிறோம்  என்று சொல்லிக்கொள்ளும் உயர் குடும்பத்தைச்  சேர்ந்தவர்களும் ஏற்க மறுக்கும் மாற்றங்களை இந்தத் தோழர்களின் பெற்றோர்கள் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கு பின்னுதாரணமாக இருக்கும் பிரபலக் குடும்பங்கள் பார்ப்பனிய சடங்குகளையும் பிற்போக்குத்தனங்களையும்  கடைபிடித்து உலகை பின்னோக்கி இழுத்துச் செல்கின்ற வேளையில் இந்த எளிய மக்கள் தங்களின் உயர்பண்பால் உலகை  முன்னோக்கி தள்ளிச் செல்கிறார்கள். அப்பிரபல குடும்பங்களின் பெண்கள் தந்தைகளின் மடியில் அமர்ந்து கன்னிகாதானமாக  வழங்கப்படுகையில், இங்கு ’நாங்களிருவரும் சரிசமமாக வாழ்வோம்’ என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்!

மணமக்கள் தோழர் அஜிதா - தோழர் பாண்டியன்
மணமக்கள் தோழர் அஜிதா - தோழர் பாண்டியன்

எப்படி சாத்தியமாயிற்று இது?

இந்த திருமணத்தில் தாலி இல்லை, சாதி மத சம்பிரதாயங்கள் இல்லை. இது வேறுபட்ட திருமண வடிவம் என்பதை பெற்றோருக்கும்  தோழர் பாண்டியன் சொன்னபோது முதலில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது அவரது தந்தையிடமிருந்து. ஆனால், அவரது தாய் தோழருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அதோடு நில்லாமல், “இந்த சம்பிரதாயங்கள் நம்மோடு  போகட்டும்” என்று மணமகனின் தந்தையிடம் கூறி திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார். உறவினர்களையும்  சமாளித்திருக்கிறார்.  சுவாரசியமானதென்னவெனில், அவரொன்றும் பெரும் படிப்போ அல்லது பெண்ணியம் பேசும் மெத்த  படித்தவருமல்லர். தேயிலை தோட்டத்தில் தேயிலைக்க் கொழுந்துகளை பறிக்கும் ஒரு தொழிலாளி.  தனது வாழ்வியல் மூலமாக  அனுபவங்கள் ரீதியாக ஒரு பெண் இதை சொல்லும்போது அந்த  வார்த்தைகள்தான் எவ்வளவு வீரியம் மிக்கதாக இருக்கிறது!

ஒருவேளை படித்தவர் இம்மாறுதலை எளிதாக ஏற்றுக்கொண்டிருந்தால் இதில் எவ்வித சுவாரசியமும் இல்லாமல் போயிருக்கும். ஆனால்  முரண்பாடுகளின் மொத்த உருவமான நம் நாட்டில்தான் நடைமுறை முற்றிலும் வேறாக அல்லவா இருக்கிறது!

குழந்தை ஒன்று பிறந்துவிட்டாலே அதை எப்படி கரையேத்துவது என்ற கவலைப்படுவர்களை பார்த்திருப்போம். மேலும், அக்குழந்தை  பெண்ணாக பிறந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம். ’வயித்துலே நெருப்பை கட்டிக்கிட்ட மாதிரி’தான். ’அதை எப்படி ஒருத்தன்  கையிலே புடிச்சு கொடுக்கிறது’ என்பதே பெற்றோருக்கு மனதை அரிக்கும் கவலையாக இருக்கும். அது எந்த வர்க்கத்து பெற்றோராக  இருந்தாலுமே! இதில் பெற்றோரை அந்த நிர்பந்தத்துக்கு தள்ளுவது எது? திருமணத்தோடு சீரும் காரும் பங்களாவும் குறைந்த பட்சம் பைக்கும் எதிர்பார்க்கும் நமது  சமூகச் சூழல்தானே!

”எங்கே, செக்கோஸ்லாவேகியா சொல்லு” என்றும் இன்று இவ்வளவு முதலீடு செய்தால் 20 வருடங்களில் இவ்வளவு தொகை வரும்  என்றும் மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்டில் ஆயிரமாவது கட்டினால் ஐந்து வருடங்களில் இவ்வளவு கிடைக்கும் கணக்கிடும்  தந்தைகளை பார்த்திருப்போம். அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தோழர் அஜிதாவின் தந்தை. எந்திரனில் கையை காலை ஆட்டி கோடிகளில் சம்பாரித்து மகளின் திருமணத்தை நடத்திய தந்தையில்லை அவர்.ஆனால் அந்தத் தந்தைகள் தங்கள் மகள்களுக்கு  கொடுக்காததை தனது மகளுக்கு கொடுத்திருத்திருக்கிறார் இவர்.  விவசாயம் பொய்த்து போனதன் காரணமாக திருப்பூருக்கு சென்று  பனியன் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்துக் கொண்ட குற்றத்திற்காக மகளை  கொல்லும் தந்தைகள் மத்தியில், ஒரு  பெருமைமிகு வாழ்க்கையை, அதை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை தனது மகளுக்குக்  கொடுத்திருக்கிறார்.

தன் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கத் துடிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் அஜிதா சிறுமியாக இருக்கும்போதே ம.க.இ.க கலைக்குழுவில் சேர்த்துவிட்டு “தனது மகள் மக்கள் தொண்டாற்றட்டும்” என்று பெருமை கொண்டவர் அந்த தந்தை. “எங்களுக்கு மொய் தேவையில்லை, அன்பளிப்பாக கொடுப்பதாக இருந்தால் புத்தகங்களை பரிசளித்து வாழ்த்துங்கள்” என்று சொல்லும்  உயர்ந்த பண்பாடு மிகுந்த பெற்றோர்கள் இவர்கள்.

விழாவின் முக்கிய கவர்ந்த அம்சம் மேடையில் பலரும் பேசிய பேச்சுகளே! மேலும், குழுமியிருந்த மக்களும் மிக நாகரிகமாக பொறுமையாக அமர்ந்து பேசுவதை அமைதியாகக் கேட்டு ரசித்தனர். ஒரு சலசலப்போ கவனச்சிதறலோ இல்லை. சம்பிரதாயத் திருமணங்களில், மேடையில்  மும்முரமாக மணமக்களை ”சொல்றதை பின்னாடியேச் சொல்லுங்கோ” என்று பின்னி பெடலெடுத்துக்கொண்டிருக்கும்  ஐயர் ஒரு புறம்; வேர்த்து விறுவிறுத்தபடி மணமக்களும் அவர்களுக்குப் பின்னால் அதைவிட பரபரப்புடன் காணப்படும் நெருங்கிய சொந்தங்கள் ஒருபுறம்; யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாக கல்யாணம் முடியவேண்டுமே என்ற கவலையுடன் வெளியே சிரித்துக்கொண்டிருக்கும் மணமகளின் பெற்றோர் ஒரு புறம் என்ற திருமணக் காட்சிகளிலிருந்து இது முற்றிலும் வேறாக இருந்தது. மேடைப் பேச்சுகளால் விழா களைக் கட்டியது என்பதே உண்மை.

ம க இ கவின் ‌திருச்சிப் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நிர்மலா  பேசும்போது குறிப்பிட்ட நிகழ்ச்சி இது. காவல்துறையில் ஏட்டாக பணிபுரியும் ஒருவர் தனது மகளுக்கு சொந்த சாதியில்  ஒரு வரனை தரகர் மூலமாக‌ப் பார்த்து மணமுடிக்கிறார்.  அவன் சரியானவனில்லை,  ஒரு பொறுக்கி என்று விரைவில் தெரிய வருகிறது. ஆறுமாதத்திற்குள்ளாக  அந்த பெண்ணை அவளது த‌ந்தை வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுகிறான்.  இன்னொரு தரகரைப்  பார்த்து தனது புகைப்படத்தைக் கொடுத்து வேறு மணமகளைத்  தேடுகிறான். முதல் தரகரின் நண்பரான இவர்  இவனது அயோக்கியத்தனத்தை ஏட்டுவிற்கு தெரியப்படுத்துகிறார். தக்க நேரத்தில் கையும் களவுமாக  பிடிபடுகிறான். ஆனாலும், ஏட்டுவினால் அதைத்  தாண்டி அவனை ஒன்றும் செய்யஇயலவில்லை.இதுதான் யதார்த்தம். திருச்சியைச் சேர்ந்த ஸ்மாலின் ஜெனிட்டாவின் கதையை நாம் அறிவோம். பல  பெண்கள் தாங்கள் ஐடி மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் படவேண்டுமென்று விரும்புகிறார்களே தவிர எந்த மாதிரியான வாழ்க்கை வாழவேண்டுமென்று கொள்கைகள் கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள். விட்டில்பூச்சிகளைப் போல அற்ப வாழ்வு வாழ்ந்து  இரைகளாகிப் மடிகிறார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் வாஞ்சிநாதன் பேசும்போது சொன்னார் – பெண்கள் பலருக்கு கிருஷ்ண ஜெயந்தி என்றைக்கு என்பது நினைவிலிருக்கும். விநாயகர் சதுர்த்தி நினைவிலிருக்கும்.ஆனால், பெண்களின் விடுதலைக்கு பெரிதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளை மறந்துவிடுகிறார்கள் என்று. இன்றும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அவரே முக்கியக் காரணம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராக சேரில் கூட  அமர முடியாது. கல்யாணத்தில் ஆண்களுக்கு மட்டுமே  சேர் இருக்கும்.  பெண்கள்  கீழே தரையிலோ அல்லது ஜமக்காளத்திலோதான் அமர வேண்டும் அல்லது நின்றுக்கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற  ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் நிறைந்த சமூகம்தான் நமது தமிழ்ச்சமூகம். இங்கு ஓரளவு  முன்னேறியிருந்தாலும் இன்னும் முழுமையாக விடுதலை கிடைக்கவில்லை.

மகாபாரத்ததில் அர்ஜூனன் பிச்சைபெற்று மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். தாயிடம் விஷயத்தைச் சொன்னதும், “எதுவாக இருந்தாலும் உனது சகோதரர்களுடன் பங்குப் போட்டுகொள்” என்கிறாள் தாய்.உடனே அர்ஜுனன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? “அம்மா, நான் அழைத்து வந்திருப்பது பொருளல்ல, ஒரு பெண்” என்று சொல்லி இருக்க வேண்டும்.

அந்த மணப்பெண்ணுக்காவது கோபம் வந்திருக்க வேண்டும்.அது இயல்பு. அல்லது ஐவரில் முதல்வனான தருமத்திற்கு பெயர் போன தருமர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? எந்தக் கேள்வியுமில்லாமல், அவள்,  ஐவருக்கும் மனைவியாகிறாள். இது ஒரு புனையப்பட்டக் கதையாகவே இருந்தாலும் என்ன சொல்ல வருகிறது?

பெண்  என்பவள் ஒரு சொத்து. கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் சொந்தம். அவர்கள் சொல்வதை மறுப்பேச்சின்றி கேட்க வேண்டும், அவளே பத்தினி.  இதுவா முன்னுதாரணம்?

ஏகபத்தினி விரதன் ராமனின் கதை என்ன?  சீதையை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்புவதும், பிறர் தவறாக பேசிக்கொண்டதைக் கேட்டு சந்தேகப்பட்டு சீதையை தீக்குளிக்க வைத்ததும்….ராமன் என்பவன் ஆணாதிக்க வெறி பிடித்த சந்தேகப்பேயே அவன். இவனா ஆண்களுக்கு முன்னுதாரணம் அல்லது தன்னை நிரூபிக்க தீக்குளித்த சீதைதான் பெண்களுக்கு முன்னுதாரணமா?

அடுத்த பிம்பம் கற்புக்கரசி கண்ணகி ‍; மணமேடையிலிருந்து  நேராக தாசி வீட்டுக்கு சென்ற கணவன் வரும்வரை பிடிவாதமாக  அவனுக்காக காத்திருந்து அவனுடன் வாழவே தலைப்படுகிறாள். அவளைத்தான் நமது இலக்கியவாதிகள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். பத்தினிக்கு அடையாளம் என்கிறார்கள்.

நியாயமாக  அவள் என்ன செய்திருக்க வேண்டும்?

தாசி வீட்டுக்குச் சென்ற கணவனை தூக்கியெறிந்திருக்க வேண்டும்.

பெண்ணுக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்படும் பிம்பங்கள் அனைத்தையும்  தூக்கியெறிந்துவிட்டு தோழர்.அஜிதாவைத்தான்  நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

மேலும்  பழைய திருமண முறைக்கும் இந்தத் திருமண வடிவத்துக்குமுள்ள வேறுபாடு என்ன? பழைய திருமண முறையின் உள்ளடக்கம் சொல்ல வரும் செய்தி என்ன? பெண்ணை தானமாகக் கொடுத்து தாலியை  கட்டுகிறார்கள். இதன் பொருள் பெண் தந்தையிடமிருந்து வேறு ஒருவருக்குச்  சொந்தமாகிறார். இதற்குத்தான் தாலி. இதை ஒரு சிலர்  பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். பெண்களும்,ஆண்களுமேதான். தாலயின் மகிமை பற்றியெல்லாம் தமிழ்சினிமா பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

சென்ற வாரத்தில் ஒரு  இடுகைக் கூட தமிழ்மணத்தில் இருந்தது. நேற்றும் ஒரு குலக்கொழுந்து அதைத் திருக்குறள் வடிவத்தில் விளக்கி இருந்தார்.

ஏன், பாதுகாப்பு வேண்டுமென்றால் இன்ஷ்யூரன்ஸ் எடுக்க வேண்டியதுதானே?

அல்லது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதுதானே? பெண்களின் பாதுகாப்பு தாலியில் இருப்பதாகவும் ஆண்களின் உயிருக்கு உத்திரவாதம் பெண்களின் தாலியிலும் பொட்டிலும் இருப்பதாகவும் ஏன் நினைத்துக் கொள்ளவேண்டும்?

பொட்டு என்பது இந்து முறைப்படி கணவனின் உரிமை. அவன் இறந்துபோனால்  ஒரு பெண்ணின் பொட்டு வைக்கும் உரிமையும் பறி போகிறது. அதோடு பூவும்.

அது போல காலில் மெட்டி. “பசங்க ஒரு பொண்ண பாக்கறாங்கன்னா அதுவும் கொஞ்சம்  நல்லாருந்துச்சுன்னா உடனே காலைத்தான் பார்ப்பாங்க..மெட்டி போட்டிருக்கான்னு..கல்யாணம் ஆய்டுச்னான்னு தெரிஞ்சுடும் இல்லே” ‍‍; வேலை செய்யுமிடத்தில் அறிமுகமான நண்பரொருவர் சொன்னது இது.

இல்லையென்றாலும் பார்க்காமலா விடப் போகிறார்கள்? அல்லது அப்பெண்ணை அணுகி அடி வாங்குவதை தடுக்க இந்த மெட்டி உதவுகிறதா?

இவை அனைத்தும் இந்தப் பெண் இன்னொருவனது உடமை என்று அறிவிக்கும் அதிகாரபூர்வ சின்னங்கள். காலங்காலமாக பெண்கள் அணிந்து வந்ததை மாறுதலுக்கு ஆண்கள்தான் அணியட்டுமே?தாலியும், மெட்டியும் பூவும் பொட்டும் ஆண்களும் கொஞ்ச  நாட்கள்  உரிமை கொண்டாடட்டுமே!

இவை எல்லாம் பெண்ணடிமை வடிவங்களே என்றாலும் அவை பெண்களுக்கு அழகூட்டத்தானே செய்கிறது என்று வாதாடும் ஆண்களையும் பெண்களையும் அறிவேன். ஏன், பதிவுலகில் புர்க்காவைப் பற்றி பேசியபோது ஒருவர் எழுதியிருந்தார் ‍; எவ்வளவு அழகழகான விதவிதமான சம்க்கிகளை வைத்து தைத்த புர்க்காக்கள் இருக்கின்றனவே,அதை அணிந்துக்கொள்ள என்ன கசக்கிறதா என்பது போல! ஏன், அவ்வளவு கண்கவரும் அழகெனின்  ஆண்களும் அதை வாங்கி அணிந்துக் கொள்ள வேண்டியதுதானே?

இந்த திருமண வழிமுறைகள் யாவும் மதங்கள் காட்டுபவையே. பெண்ணை மதிக்கும், பெண்ணை கண்ண்ணீயமாக நடத்தும் எவரும் இதை விரும்புவதில்லை. உண்மையில் பெண்களுக்கு எங்குச் சென்றாலும் என்ன வேலைக்குச்  சென்றாலும் அந்தந்த படி நிலைக்கு ஏற்றவாறு தொல்லைகள் ஆணாதிக்கங்கள்  இருக்கத்தான் செய்கிறது. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் ஆணாதிக்கவெறிகளுக்கெராகவும்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு  பெண்களும் சிந்திக்க வேண்டும்.

எனது எத்தனையோ தோழிகள், அலுவலகத்தில் மேனேஜரையும், மேனேஜருக்கு மேனேஜரையும் ஏன் சீஇஓ வைக்கூட பெயரிட்டு அழைக்கும்போது, வீட்டில்  தன் கணவரை  “வாங்க போங்க” என்று மரியாதைக்கொடுத்து அழைக்க வேண்டியிருப்பது ஏன்? பதிலுக்கு அவர்களும் இவ்வாறு அழைக்கிறார்களா என்ன? இதைப் பற்றிக் கேட்டால் உடனே பஜாரி வேடமும், அடங்காப்பிடாரி பட்ட்டமும் கொடுக்க  காத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்?

நாள் பார்த்து நேரம் குறித்து ஒரு சம்பிரதாயங்கள்/ அடையாளங்கள் விடாமல் நடத்திய எத்தனை கல்யாணங்கள் ஒரு வருடம் கூட முழுமையடையாமல் உயிரை விட்டிருக்கின்றன?

ஐயரின் ஒன்றும் புரியாத மந்திர உச்சாடனங்களுக்கிடையில் குறித்த வேளைக்குள் தாலியை கட்டிவிட்டால் வம்சம் தழைக்கும்என்ற வெத்து கல்யாணங்களுக்கிடையில் “வாழ்க்கையில் ஒருபோதும் ஆணாதிக்கத்தை பெண்ணடிமையை கடைபிடிக்காமல்  ஒருவர் தேவையை ஒருவர் புரிந்துக் கொண்டு  இணையாக வாழ்வோம்” என்று உறுதி எடுத்துக்கொண்ட  இத்திருமணம்தான்  எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது!

மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுடன்
மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுடன்

தோழர் மருதையன் சிறப்பு வாழ்த்துரை வழங்கும் போது சொன்னதாவது:

தோழர் அஜிதா மக்களின் பணிக்காக  தனது சிறுவயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.தான் சிறுமியாக இருந்தபோது கருவறை நுழைவு போராட்டத்தில் ஆரம்பித்து கிராமம் கிராமமாக  ஊர் ஊராக சென்று அரசியல் பிராச்சாரங்களை மேற்கொண்டவர்.

தோழர் பாண்டியன், சென்னையில் கல்லூரி மாணவர் போராட்டத்தில் பங்கேற்று சிறைவைக்கப்பட்டவர். போராட்டங்களைக் கண்டு அஞ்சி விலகி ஓடியவரல்லர். அதுமுதல்  பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர்.

இருவரும் ம.க.இ.கவின் முழுநேர அரசியல் ஊழியர்கள். தங்கள் வாழ்க்கையை இப்படி மக்கள் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எவ்வவளவு பேர் இருக்கிறார்கள்? இவ்விருவரின் திருமணம் அமைப்புத் தோழர்களால் பரிந்துரைச் செய்யப்பட்டு அமைப்பே முன்னின்று நிறைவேற்றிய  திருமணம்.கணவன் கிழித்தக் கோட்டை தாண்டாத அடங்கிப் போகும் பெண் கணவனோடு இறுதிவரை வாழ்வது பெரிய விஷயம் இல்லை.வேறுபட்ட ஆளுமைகளை கொண்டவர்கள் அவரவர் நியாயங்களை அங்கீகரித்து இணைந்து வாழ்வது, குறைகளை சரி செய்து இருவருமாக  புதியதாக உருமாறுவது.இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்துக் கொண்டு வாழ்வது.

இருவரும் தங்கள் வாழ்க்கையை ஜனநாயகப்பூர்வமாகவும் அமைத்துக் கொள்வதோடு, மக்கள் நலனுக்காக குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டபின்  மாலைகளை மாற்றிக்கொள்ள விழா முடிவடைந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. கலைநிகழ்ச்சிகளில் மணப்பெண்ணும் பாடல்கள் பாடும் போது சேர்ந்துக்கொண்டார். எந்த எளிமை என்னை நிச்சயமாக எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.

சாதி இல்லை என்று சொல்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நாமொன்றும் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதியெல்லாம்  “நாட் அ பிக் டீல் யார்” என்று சொல்பவர்கள் எத்தனை பேர் சாதி விட்டு திருமணம் செய்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்?

நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் படிப்பறிவு பெற்றிருக்கிறோம் என்று  சொல்லிக்கொள்ளும் நாம் செய்வது என்ன? சிந்தித்துப் பார்ப்போம்.

திருமண வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

தாங்கள் கொண்ட அரசியல் ஈடுபாடு காரணமாகவும்,சமூக அக்கறையின் காரணமாகவும் வாழ்க்கையை இணைத்துக்கொண்டு புதிய பயணத்தைத் தொடங்கிய தோழர் அஜிதா நீங்கள்தான் உலகின் அழகிய பெண் – தோழர் பாண்டியன் நீங்கள்தான் உலகின் அழகிய ஆண்!

__________________

– சந்தனமுல்லை
__________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. பாண்டியன் உங்கள் கல்யாணம் முடிந்ததா

  சொல்லவே இல்லை

  வாழ்த்துக்கள்

 2. உலகின் அழகிய மணமக்கள் ! – சந்தனமுல்லை…

  உலகின் அழகிய மணப்பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உலகின் அழகிய மணமகனை?…

 3. ‘இந்த சமூகத்தின் எந்த அழுக்குகளும் கறைகளும் எங்கள் மீது படவிடமாட்டோம்’ என்று உறுதியான கொள்கையுடன் நடந்த திருமணத்தின் மணமக்களான தோழர்.அஜிதா மற்றும் தோழர்.பாண்டியன்-தான் அவர்கள் – உலகின் அழகிய மணமக்கள்!

  ————–

  துணிவு மிக அருமை.

  இனிய இல்லறம் அமைய வாழ்த்துகள்..

  நல்ல பதிவு

 4. அட்ட‌காச‌மான‌ தொகுப்பு. விழாவை நேரில் க‌ண்ட‌ திருப்தியை முடிந்த‌வ‌ரை ஏற்ப‌டுத்தி விட்டீர்க‌ள்.
  ம‌ண‌ம‌க்க‌ளுக்கு ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக‌ள். இந்த‌க் கால‌த்தில் இப்ப‌டியும் இளைஞ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌தே ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.

  //சுவாரசியமானதென்னவெனில், அவரொன்றும் பெரும் படிப்போ அல்லது பெண்ணியம் பேசும் மெத்த படித்தவருமல்லர். தேயிலை தோட்டத்தில் தேயிலைக்க் கொழுந்துகளை பறிக்கும் ஒரு தொழிலாளி. தனது வாழ்வியல் மூலமாக அனுபவங்கள் ரீதியாக ஒரு பெண் இதை சொல்லும்போது அந்த வார்த்தைகள்தான் எவ்வளவு வீரியம் மிக்கதாக இருக்கிறது!// தலை வணங்குகிறேன் அவரை.

  // “வாழ்க்கையில் ஒருபோதும் ஆணாதிக்கத்தை பெண்ணடிமையை கடைபிடிக்காமல் ஒருவர் தேவையை ஒருவர் புரிந்துக் கொண்டு இணையாக வாழ்வோம்” என்று உறுதி எடுத்துக்கொண்ட இத்திருமணம்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது!// நிச்சயமாக!

  அப்புறம், பல போலியான அருவருக்கத்தக்க விஷயங்களையும் உங்கள் பாணியில் கிண்டல் நக்கல் என்று அடித்துத் துவைத்திருக்கிறீர்கள்! வெகுவாக ரசித்தேன்.
  //சொல்றதை பின்னாடியேச் சொல்லுங்கோ” என்று பின்னி பெடலெடுத்துக்கொண்டிருக்கும் ஐயர் ஒரு புறம்; // :))))))
  ஐயர்கள் மட்டுமா, பாதிரிகள் கூட இப்படித் தான் உசிரை எடுப்பானுங்க!

  //பெண்களின் பாதுகாப்பு தாலியில் இருப்பதாகவும் ஆண்களின் உயிருக்கு உத்திரவாதம் பெண்களின் தாலியிலும் பொட்டிலும் இருப்பதாகவும் ஏன் நினைத்துக் கொள்ளவேண்டும்?//
  இதைக் கேட்டாலே குட்டிச்சாத்தான்க‌ளின் உயிர் பாட்டிலில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் சிறுவ‌ர் க‌தைக‌ள் தான் நினைவுக்கு வ‌ரும்!

  • உங்கள் திருமணமும் இப்படித்தானே நடந்தது சுகுணா??? ஆகவே, தலைப்பில் இரண்டாவது அழகிய மணமக்கள் என்றிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். :))

 5. மணமக்களுக்கு வாழ்த்துகள், அருமையான நிகழ்வை பதிந்த சந்தமுல்லைக்கு நன்றி
  பிரபல டவிட்டர்-பதிவர்-விமர்சகர் மணிகண்டன் சார்பாகவும் இந்த வாழ்த்து பதியப்படுகிறது

  -(ஒரிஜினல்) ஏழர (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்)

 6. நான் மணி

  சாதிக்கலவரங்களுக்கு பேர் போன தேனி மாவட்டத்தில் நடந்த புரட்சிகர திருமணம் அம்மணமக்களின் சமூக பாத்திரத்தால் இன்னும் உயர்ந்து நிற்கிறது. இத்தம்பதியினர் மீது பொறாமையாக இருக்கிறது.

 7. சந்தனமுல்லையின் தொகுப்பு நேரில் கண்டதுபோல அழகாக இருந்தது…அஜிதாவுக்கும், பாண்டியனுக்கும் வாழ்த்துக்கள்.

 8. உலகின் அழகிய மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  சந்தனமுல்லை, வினவு, நன்றி.

 9. தோழர் பாண்டியனின் திருமணத்துக்கு அழைப்பு வந்திருந்தும், சில எதிர்பாராத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டதால் என்னால் செல்ல இயலவில்லை…. அவரிடம் அலைபேசியில்கூட வாழ்த்துச் சொல்ல இயலாத சூழல். கலந்துகொள்ள முடியாத ஏக்கத்தையும், வருத்தத்தையும் ஓரளவாவது தணித்தது இந்த இடுகை… அஜிதா- பாண்டியன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள். தோழரை நிச்சயம் நேரில் சந்திக்க வேண்டும்

 10. தோழர்.பாண்டியனுக்கும் தோழர்.அஜிதாவுக்கும் திருமண வாழ்த்துக்கள்

 11. உலகின் அழகிய மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
  சந்தனமுல்லை, வினவு, நன்றி

 12. தோழர் பாண்டியனுக்கும், தோழர் அஜிதாவிற்கும் வாழ்த்துக்கள்.

  தோழமையுடன்,
  அசுரன்

 13. சில அவசர வேலைகள் காரணமாக புரட்சிகர திருமணத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை. தோழர் பாண்டியன் மற்றும் தோழர் அஜிதாவுக்கு வாழ்த்துக்கள்…

  பகிர்விற்கு நன்றி முல்லை , வினவு…

 14. இந்தத் திருமணத்திற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. செய்திப் பத்திரிகைகளில் இந்த திருமணத்திற்கு வித்தியாசமான விளம்பரம் வந்தது. அது இதோ:

  தேவாரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த சமூக சீர்திருத்த கல்யாணம்

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88319

  தேவாரம் : தேவாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சமூக சீர் திருத்த கல்யாணம் நடத்தப்பட்டது. தேனி மாவட்டம் தேவாரம் மோதிலால் மைதானத்தில் தேவாரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அஜிதாவிற்கும், நீலகிரியை சேர்ந்த பாண்டியனுக்கும் திருமணம் நடந்தது. எவ்வித சடங்குகளும் இல்லாமல் இருவரும் மாலை மாற்றி கொண்டனர். ஆனால், வி.ஐ.பி.,களின் திருமணத்தை போன்று போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். போலீஸ் உளவுத்துறையில் உள்ள அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் வாழ்த்துரை பேசியவர்களின் பேச்சுகளை குறிப்பெடுத்து கொண்டிருந்தனர். விழா நடத்தியவர்களும் பந்தலுக்குள் போலீசாரை அனுமதிக்க மறுத்தனர். காரணம் மணமக்கள், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவை சேர்ந்தவர்கள். பாண்டியன் சென்னையிலும், அஜிதா திருச்சியிலும் ம.க.இ.க., வில் முழு நேரப் பணியாளர்களாக உள்ளவர்கள்.

  மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், மூட நம்பிக்கைகளை உடைக்கும் விதமாகவும், வீண் ஆடம்பரத்தை தவிர்த்தும் திருமணம் முடிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த திருமணம் நடத்தப்பட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதை விட வளமான இந்தியாவில் 8 மாநிலங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. வரதட்சணை கொடுக்க முடியாமல் எத்தனையோ திருமணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜாதி, வரதட்சணையின்றி திருமணங்கள் நடக்கவும், மணமக்களின் விருப்பம் அறிந்து திருமணம் நடத்த முன்மாதிரியாக இந்த திருமணம் நடந்துள்ளது. இவ்வாறு கூறினர். போலீஸ் தரப்பில் கூறுகையில், விழா நடத்திய ம.க.இ.க., மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் போலீஸ் கண்காணிப்பில் உள்ளவர்கள். அரசுக்கு எதிராகவோ, தீவிரவாதம் குறித்தோ பேசக் கூடாதென்பதற்காக உளவுத்துறையின் அனைத்து பிரிவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டோம் என்றனர்.

 15. வினவு தோழர்களின் அரசியல், போராட்டங்கள் தாண்டி வாழ்க்கை, திருமணம் போன்ற தனிப்பட்ட விசயங்களில் கூட சமூக அக்கறைய்யும் நம்பிக்கையும் ஊட்டும் இது போன்ற நிகழ்வுகள் தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்த திருமணத்திற்கு சென்றிருந்தால் சந்தனமுல்லை அடைந்த நம்பிக்கையை நானும் அடைந்திருப்பேனோ? மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

 16. பொது நலனுக்காக முழுநேர அரசியல் வாழ்க்கை வாழும் இரு தோழர்களின் இணைவும், இந்த நிகழ்ச்சிக்கு நேரில் சென்று கலந்த சந்தனமுல்லையின் துணிவும் ( நிறைய பேரு வினவுல கமாண்டு போட்டாக்கூட துக்கம் விசாரிப்பாங்க) நிஜமாக நிறைய மகிழ்ச்சியைத் தருகின்றது.

 17. வாழ்த்துக்கள் தோழர்களே……

  பிற்போக்கு கலியாணங்களேன ஊர்வலம் விட்டு ஊரறிய செய்யப்படும் போது இது போன்ற முன்மாதிரி நிகழ்வுகள் பரைசாற்றப்படவேண்டும்.. விரைவில் இதன் ஒளிப்பதிவை எதிர்ப்பார்க்கிறேன்

 18. தோழர்கள் பாண்டியன்-அஜிதா திருமணத்திற்கு வர இயலவில்லை.
  தொலைவில் இருந்தபடி வாழ்த்துகிறேன். புரட்சிகரவாழ்த்துகளுடன்
  சு.ப.

 19. புரட்சிகர திருமணத்திற்கு வர முடியவில்லை. ஆனால் அந்த குறையை போக்கும் விதமாக கட்டுரை வரையப்பட்டுள்ளது. புரட்சிகர திருமணங்கள்தான் மகிழ்ச்சியை காட்டிலும் பொறுப்புகளை மணமக்களுக்கு முன்னிறுத்துகிறது என்பதும் புரிகிறது. பொறுப்பும் போராட்டமும்தானே மகிழ்ச்சி

 20. இந்த திருமணத்தினை தோழர்களுடன் சென்று பார்த்து, பரவசப்பட்டு வந்து இன்னும் அதில் பெற்ற உணவுகளிலிருந்து மீளமுடியாத நிலையில் இருக்கிறேன். சந்தனமுல்லையின் அருமையான பதிவு மீண்டுமொருமுறை அந்த அனுபவங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்த்துக்கள்!

  எனது வாழ்க்கையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஏன், எனது திருமணம் கூட சாதி, சடங்குகள், வரதட்சனைகளை மறுத்துத்தான் நடைபெற்றது. ஆனால், தாலியில் மட்டும் சமரசம் செதுகொள்ள வேண்டியதாயிற்று. நானும் எனது துணைவியாரும் சி.பி.எம். கட்சியில் பணியாற்றி வாழ்க்கையை இணைத்துக் கொண்டவர்கள்தான். இருந்தாலும் எமது திருமணத்தை நடத்திவைத்த ‘மூத்த’ தலைவர்களே “எல்லாவற்றையும் நமக்காக விட்டுக்கொடுத்திட்டாங்க, தாலி விசயத்துல நாம கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் ஆகனும்”ன்னு அறிவுரைகள் வழங்கினார்கள்.

  ஆனால் தோழர்கள் அஜிதா – பாண்டியன் திருமண நிகழ்வில் எதிலும், சிறிதும் சமரசமின்றி கறாராக அவர்கள் இந்துமத சனாதான சடங்குகளைக் குப்பையில் வீசுவதைக் காணும்போது, நான் சமரசம் செய்துகொண்டதை எண்ணி கூசிப்போனேன். ம.க.இ.க.வின் முன்னணித்தோழர்கள் இவ்விசயங்களை எத்தனை கறாராகவும், ஏற்கமறுப்பவர்களை இனங்கி ஏற்கச் செய்யும் தர்க்கங்களுடனும் இக்கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள்.

  எனது திருமணத்தைப் பொறுத்தவரை, மணமேடையோடு புரட்சி முடிவுற்றதாக நினைத்துக் கொண்டேன். மணமேடையை அடைவதைத்தான் உச்சபட்ச இலக்காக எண்ணியிருந்தேன். ஆனால், தோழர்கள் அஜிதா – பாண்டியன் திருமண நிகழ்வில் நான் பார்த்த முக்கியமான அம்சம் ஒன்று இருந்தது.

  அதாவது, இந்த புரட்சிகர மணவிழாவில் மேடையிலிருந்துதான் புரட்சிகர வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயம் தொடங்குகிறது என்பதை உணர்த்தியது இந்த மணவிழா.

  சாதியை மறுப்பதனால், பார்ப்பன பிற்போக்கு சடங்குகளை மறுப்பதனால், வரதட்சனை, மொய் போன்றவற்றை மறுப்பதனால், ஆடம்பரங்களை மறுப்பதனால் அல்லது முற்போக்கு இயக்கங்களின் தலைமையில் நடப்பதனால் மட்டும் இத் திருமணம் புரட்சிகர தன்மையைப் பெற்றுவிடவில்லை; இந்த மணவிழா மேடையை விட்டு இறங்கிய பிறகு இந்த மணமக்கள் வாழவிருக்கும் வாழ்க்கை, அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதிலிருந்துதான் (அவர்கள் நேரடியாக உறுதிபட அறிவித்தார்கள்) இம்மணவிழா புரட்சிகரத் தன்மையைப் பெறுகிறது.

  இளைய தோழர்களுக்கு திருமணம் குறித்த உறுதியான, சரியான புரிதல் ஏற்படுவதற்கு பெருவாய்ப்பாக அமைந்த இந்த புரட்சிகர மணவிழாவை சிறப்பாக நடத்திக்காட்டிய அப்பகுதி தோழர்களுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

 21. அற்புதமான திருமணம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் ரஜினி மகள் திருமணமும் இதே ஊரில் தான் நடக்கிறது

 22. திருமணத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்

 23. புரட்சிகரமாக வாழத் தொடங்குவது தான் புரட்சி. புரட்சிக்கு பிறகு புரட்சி செய்வதில்லை. இந்த சமூக அமைப்பை மாற்றுவது என்பது, நாம் எம்மை மாற்றி போராடுவதில் இருந்து தொடங்குகின்றது. புரட்சிகர திருமணம் செய்த தோழர்களுக்கு மட்டுமின்றி அதில் பங்கு கொண்டு புரட்சிகர திருமணத்தை வாழ்த்திய தோழர்களுக்கு வாழ்துகள்.

 24. சகோதரி அஜிதாவுக்கும் மச்சான் பாண்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

 25. தோழர்கள் அஜிதா, பாண்டியன் ஆகியோருக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

 26. உலகின் அழகிய மணமக்களுக்கு
  உளம் ததும்பிய வாழ்த்துக்கள் –
  இனிமேலும் கைகோர்க்கப் போகும்
  உலகின் அழகிய மணமக்களுக்கும் சேர்த்து…!
  – புதிய பாமரன்.

  • கைகோர்க்கப் போகும்
   உலகின் அழகிய மணமக்களுக்கும் சேர்த்து…!

   எங்கே ஆளு எஸ்கேப்பாகி ஓடிக்கொண்டு இருப்பார் போல.

 27. எங்களுடைய மணவிழாவை நினைத்து குறுகிப் போகிறேன். (என்னுடைய எதிர்ப்பையும் மடக்கி சமரசத்திற்கு சம்மதிக்க வைத்தது, சொந்தக்காரரான ஒரு சிபிஐ தோழர்தான்) அன்று சமரசப்பட்டுவிட்டு இன்றும் வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

  தோழர்கள் அஜிதா, பாண்டியன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  செங்கொடி

 28. தோழர்.பாண்டியனுக்கும் தோழர்.அஜிதாவுக்கும் திருமண வாழ்த்துக்கள்

 29. சந்தன முல்லை அவர்களின் “புரட்சித் திருமணம்” படித்ததில் என்ன புரட்சி என்பது தெரியவில்லை…. நான் ஒரு முஸ்லிம்…இந்து மத திருமண சம்பிரதாயங்கள் அவ்வள்வாக தெரியாது..ஆனால் நீங்க ஏன் இப்படி இந்து மத கோட்பாடுகளை இவ்வளவு சாடுகிறீர்கள்…மற்ற மதங்களையும் தான்… ரொம்ப எளிமையாய் திருமணம் செய்வதும்..தனக்கு பிடிக்காத திருமண சடங்குகளை தவிர்ப்பதும் எப்படி ஒரு புரட்சி திருமணம்னு சொல்றீங்க….. அப்படினா ஏன் மாலை மட்டும்..அதுவும் வேண்டாமே…கூட்டம் எதற்கு….திருமணம் எதற்கு…சேர்ந்து வாழ வேண்டும் என நீங்கள முடிவு எடுத்த பிறகு.. எல்லரிடமும் சொல்வது ஏன்…உங்களை எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல… வாழ்வில் எதை தேடுகிறீர்கள்..வாழ்வின் சந்தோசம் என்பதற்கு உங்களை போன்றோரின் விளக்கம் என்ன…நீங்கள் வாழ்வில் பல கஷ்டங்களை கடந்திருப்பவர்கள் என்பதால் இத்தகைய எண்ணங்களா..?

  • // சந்தன முல்லை அவர்களின் “புரட்சித் திருமணம்” படித்ததில் என்ன புரட்சி என்பது தெரியவில்லை…. நான் ஒரு முஸ்லிம்…இந்து மத திருமண சம்பிரதாயங்கள் அவ்வள்வாக தெரியாது..ஆனால் நீங்க ஏன் இப்படி இந்து மத கோட்பாடுகளை இவ்வளவு சாடுகிறீர்கள்…மற்ற மதங்களையும் தான்… ரொம்ப எளிமையாய் திருமணம் செய்வதும்..தனக்கு பிடிக்காத திருமண சடங்குகளை தவிர்ப்பதும் எப்படி ஒரு புரட்சி திருமணம்னு சொல்றீங்க….. அப்படினா ஏன் மாலை மட்டும்..அதுவும் வேண்டாமே…கூட்டம் எதற்கு….திருமணம் எதற்கு…சேர்ந்து வாழ வேண்டும் என நீங்கள முடிவு எடுத்த பிறகு.. எல்லரிடமும் சொல்வது ஏன்…உங்களை எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல… வாழ்வில் எதை தேடுகிறீர்கள்..வாழ்வின் சந்தோசம் என்பதற்கு உங்களை போன்றோரின் விளக்கம் என்ன…நீங்கள் வாழ்வில் பல கஷ்டங்களை கடந்திருப்பவர்கள் என்பதால் இத்தகைய எண்ணங்களா..? //

   அப்படியே வழிமொழிகிறேன். திருமணம் என்பதும் ஒரு சடங்கு தானே ? அதையும் தவிர்த்திருக்கலாமே ? விளம்பரத்திற்காக செய்ததும், பதிந்ததும் போல இருக்கு.

  • வாழ்வின் மகிழ்ச்சி என்பது பொதுநலனுக்காக வாழப்படும் வாழ்க்கை என்ற வகையிலேதான் இந்த திருமணம் நடைபெற்றது. சாதி, சடங்குகள், ஆடம்பரத்தை துறந்ததோடு மட்டுமல்ல தங்களது வாழ்வில் ஆணாதிக்கம், பெண்ண்டிமைத்தனம் முதலியவற்றை துறந்து ஜனநாயக முறையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதோடு தங்களது குடும்ப வாழ்க்கையை பொது நலனுக்காக அமைத்துக் கொள்வோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள் மணமக்கள். சமூகத்தில் இருக்கும் சராசரி திருமணங்களை இந்த நோக்கில் ஒப்பிட்டு எழுதுவதில் என்ன் தவறு?

 30. […] அப்படி என்ன இந்த திருமணத்தின் சிறப்பு என்று அறிய வேண்டுமா? இந்தக் கட்டுரையை படித்துப்பாருங்கள் உலகின் அழகிய மணமக்கள் […]

 31. சடங்குகளை மறுத்து நடக்கும் மணவிழா என்பது இன்னும் புரட்சியாகவே பார்க்கப்படும் இந்தக்காலத்தில் அப்படிப்பட்ட புரட்சிகர மணவிழாவில் இணைந்த மணமக்களுக்கு வாழ்த்துகள்.

 32. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  //சாதியோ, மதமோ, காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களோ எதுவும் இல்லை; ஆனால் மனிதரை மனிதர் உள்ளன்போடு நேசித்து அவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்து அங்கீகரிக்கும் உயர்ந்த பண்பு இருந்தது.//

  இதுபோன்ற வரிகளை தவிர்த்து இருந்தால் கட்டுரையை ரசித்திருக்கமுடியும்! ஒன்று சிறப்பாக நடந்தது என்று சொல்வதுக்காக மற்றதை மட்டம் தட்டுவதும் அப்படி செய்வது/செய்பவர்களை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வது அதிகப்படியாக இருக்கிறது. எழுதியவர் புது தோழர் புது இரத்தம் அல்லவா அதான் எதை பார்த்தாலும் பொங்க தோன்றுகிறது.

  • சாதிக்கும், மதத்திற்கும் காட்டுமிராண்டித்தனமான முகங்களும் இருக்கிறது ராஜா, அதை தனியாக விளக்காமல் சொன்னாலே புரிந்து கொள்ளும் அளவிற்கு நிறைய நமக்குதெரியுமே!

   • //சாதிக்கும், மதத்திற்கும் காட்டுமிராண்டித்தனமான முகங்களும் இருக்கிறது ராஜா, //

    “முகங்களும்” என்றால்? அவை, குறிப்பாக சாதி – காட்டுமிராண்டித்தனமாவைதாம்.

 33. தோழர் பாண்டியன், உங்கள் ஆளுமையும், தோழமையும், அர்ப்பணிப்பும் உங்களை ஒரு வியப்புக்குரிய முன்மாதிரியாகவும் மனதிற்கு நெருக்கமான தோழராகவும் ஆக்கியிருக்கிறது. தற்காலிகமாக இப்போது வெளிநாட்டில் இருப்பதால் உங்கள் மணவிழா குறித்து அறியவில்லை. நேரில் சந்திப்போம்.

  நீங்கள் இருவரும் தொடங்கியிருக்கிற புரட்சிகர வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். தோழர் அஜிதாவுக்கும், உங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும், வாழ்த்திய அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவிக்கிறேன்.

  தலைப்பும் கட்டுரையும் அருமை. நன்றி, சந்தனமுல்லை.

 34. தோழர் பாண்டியனுக்கும், தோழர் அஜிதாவிற்கும் வாழ்த்துக்கள்.

  தோழமையுடன்,

  நாவலன்

 35. Manamakkkal,avarkaludaiya thaai,thanthai,thozharkal anaivarukkum vaazhthukkal & Nantri.

  Naam anaivarum,naamum namathu pillaikalukkum sontha sathiyil thirumanam seiyyakoodathu ena sapatham seivom

  • நாங்க போராட்டத்துல ஈடு பட்டா எங்க குடும்பம் என்னாகறது ? எழுதியவங்க என்ன நாளைக்கு ஹாயா ஹோண்டா சிட்டி, இல்ல உயர் ரக கார்ல குழந்தைய பள்ளிக்கு கூட்டிப் போய் விட்டுட்டு வருவாங்க. அவங்களுக்கு எழுத்துல மட்டும் தான் போராட்டம். ஆனா எங்களுக்கு வாழ்க்கையே போராட்டம். எங்க குடும்பம் காப்பாத்துனம்ல ? இதோ புரட்சிகர திருமணத் தம்பதிகளுக்கும் நாளைக்கு வாழ்வாதாரம் என்ன ? இங்க எழுதும் எத்தனைத் தோழர்கள் நீங்கள் சொன்னது போல போராட்டம் நடத்திக்கிட்டு இருக்காங்க. எல்லாம் கார்ப்பரேட் கம்ப்பெனில வேலை செஞ்சு தன்னை வளர்த்திக்கிட்டு இருக்காங்க. இங்கே வரும் பல தோழர்கள் முகம் தெரியாம வரதுக்கான முழுக்காரணமே , அலுவலகத்துல தெரிஞ்சா வேலைக்குப் பிரச்சினை வரும் என்ற காரணமாகவும் இருக்கலாமே?

   அப்புறம் தொண்டர்களைப் போராடத் தூண்டிட்டு தலைமைகள் சுகவாழ்வு வாழ்வது தானே பொதுவான இயக்கக் கோட்பாடு. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும் இன்றைய ஆளும் இயக்கம் வரைக்கும்.

   என்னமோ போங்க சாமி.

   • நீங்கள் மக்கள் பிரச்சனைக்கோ அல்லது குறைந்த பட்சம் உங்களுடைய பிரச்சனைக்கோ கூட போராட முன்வருவதில்லை.

    அதை நியாயப்படுத்த, சமூக அக்கறையால் ஈர்க்கப்பட்டு, இந்த சமூக அமைப்பிலேயே இருந்து கொண்டு, இந்த அமைப்பை மாற்றி அமைக்க போராடும் தோழர்களை இழிவு படுத்துகிறீர்கள்!
    அந்த உரிமையை யார் உங்களுக்கு வழங்கியது???

    மக்கள் போராடியதால் அவர்களின் உரிமைகளும், வாழ்வாதரங்களும் பறிக்கப்படுகின்றனவா? உரிமைகளும், வாழ்வாதரங்களும் பறிக்கப்படுவதால் மக்கள் போராடுகிறார்களா?

    இந்த வெண்ணை வெட்டி விளக்கெண்ணை தத்துவங்களை, வேறு எங்காவது போய் சொல்லுங்கள், ஆராயாமல் ஏற்றுக்கொள்வார்கள்…

    ஆமா! பிழைப்புவாத சுளுக்குக்கு எந்த எண்ணைய போட்டு தடவுனா சரியாகும்??? டவுட்டு!

 36. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.கட்டுரை நன்று.வாழ்த்துக்கள் ஆனால்!!!! ராமன் என்பவன் ஆணாதிக்க வெறி பிடித்த சந்தேகப் “பேயே” என்பது கொஞ்சம் உதைக்குதே தோழரே????????//

  • //ராமன் என்பவன் ஆணாதிக்க வெறி பிடித்த சந்தேகப் “பேயே” என்பது கொஞ்சம் உதைக்குதே தோழரே????????////

   கட்டுரையை திசை திருப்ப விரும்பவில்லை. ராமனது யோக்கியதைக்கு கீழே கொடுத்துள்ள சுட்டியில் ஆதாரங்கள் உள்ளன.

   http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html

 37. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.. மருதையன் சிற்றுரை நன்றாக இருக்கிறது..

  எளிமையாக நடந்த இந்தத் திருமணத்துக்கு சந்தனமுல்லை ஓவர் பில்டப் கொடுத்திருக்கிறார்.. அது தான் தாங்க முடியவில்லை..

 38. தோழர் அஜிதாவுக்கும் தோழர் பாண்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

 39. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  அவர்களின் விருப்பம் இந்த மாதிரி திருமணம் செய்து கொண்டார்கள். இதில் பார்ப்பனியம் மற்றும் இதர மக்களின் விருப்பு வெறுப்பு மற்றும் பழக்க வழக்கங்களை ஏன் தவறாக சித்தரிக்க வேண்டும்?

 40. மணமக்களுக்கு வாழ்த்துக்கள். இதுவல்லவோ திருமணம். சாதி சாக்கடையில் ஊறிக் கிடக்கும் மக்களுக்கு இவை சொல்லப் பட வேண்டும்.

 41. Ulagin miga azhagana manamakkalin thirurumana nikazhchi yai neril kana vaayppai erpaduthikkonda enekke nan nantri solla kadamai pattu irukkiren. Thodarattum puratchikara manamakkalin puratchikara vazhkkai.

 42. தோழர்கள் பாண்டியன் மற்றும் அஜிதா இருவருக்கும் இனிய இல்லறத்திற்கு வாழ்த்துக்கள்.

 43. வாழ்த்துக்கள் அஜிதா – பாண்டியன் தோழர்களே. சுரேஷ் கூப்பிட்டபோது வராமல் இருந்ததர்க்கு வருந்துகிறேன் இப்போது. அதே நாளில் நான் எனது தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். சந்தனமுல்லை கூறியது போல் //முக்காடிட்டு பெண்ணை ஒரு தனி இடத்திலும், ஆணை ஒரு தனி இடத்திலும் அமர வைத்து, ஆணை மையமாக வைத்தே சம்பிரதாயங்களை நிறைவேற்றி, வரதட்சிணையை பேரேட்டில் குறித்துக் கொண்டு கையெழுத்திட்டு, இருவரையும் பொதுவாக ஒரு இடத்தில் இருவரும் அமரக் கூட வழியில்லாமல் மணவிழாச் சடங்குகள் நிறைந்த கட்டுக்கோப்பான// திருமணம் அது. ஒரு மணிநேரத்தில் ஏன் தான் வந்தோமென்று தோன்றியது. அப்பொழுது தான் அஜிதா தோழர் திருமணத்தில் பங்கெடுக்காமல் இருந்த்தால் ஏற்பட்ட இழப்பை உணர்ந்தேன்.

 44. மணமக்களுக்கு வாழ்த்துகள்..

  எனக்கு மங்களூர் சிவா திருமணம் நினைவுக்கு வருகிறது.. எந்த இசைக்கருவிகளும் இல்லை.. பெற்றோர் மற்றும் நண்பர்கள் மட்டும் வாழ்த்த மிக மிக எளிமையாக நடந்த சாதி துறந்த திருமணம்.

 45. சாதி மதம் துறந்து சடங்குகளில்லாமல் பல மணவிழாக்கள் இங்கே நடந்து வருகின்றன. இன்றைய நிலையில் அவை முற்போக்கானவை தான். அதிலும் ஜனநாயகப்பூர்வமாக பெண்ணடிமைத்தனமில்லாமல் நடத்தப்படுகிற குடும்பவாழ்க்கை மிகச்சிறப்பானது தான்.

  ஆனால் ம.க. இ. க வினர் நடத்தி வருகிற புரட்சிகரமணவிழாக்களின் உன்னதம் என்னவெனில் //இருவரும் தங்கள் வாழ்க்கையை ஜனநாயகப்பூர்வமாகவும் அமைத்துக் கொள்வதோடு, மக்கள் நலனுக்காக குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக உறுதி மொழி// எடுத்துக்கொள்வது தான். அதில் தான் அவை எல்லா வகைத்திருமணங்களில் இருந்தும் வேறுபடுகின்றன. ஒரு உண்மையான சமூக விழாவுக்கான தகுதியையும் பெறுகின்றன.

  சந்தனமுல்லை ஒரு திருமணத்தை இங்கே பதிவு செய்திருக்கிறார். அமைப்பில் பல தோழர்கள் இதைப்போன்ற ‘உலகின் அழகிய மணவிழாக்களையே’ நடத்திவருகின்றனர்.

  • அதுவும் இல்லாம பணக்கார திருமணங்களுக்கு மட்டும் சென்று கொண்டிருந்த சந்தனமுல்லை முதன்முறையாக ஒரு எளிமையான திருமணத்தை பார்த்தாதல் வந்த பிரமிப்பு புத்தர் வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு வேளி ஒலகத்த பாத்து ஆச்சரியப்பட்ட மாதிரி

 46. oruvanukku sikkanam enral matroruvanukku varumanam illai. selavu illai enral eppadi thozhilkal uruvakum?. athu sari ean malai matra vendum athu sadangu illaya? ean vizha vaikka vendum?.

  Communism waste. ean enral manitharkal ella samam enru solluthu. intha ulagaththil ethuvume samanillai.

  swiss in weather i chennaikku kondudu vara mudiyuma?. verum payaluga vettipp pechchu than communism.

  • @திருவாளர் சிவா///

   செலவு வருமானம் கணக்கு எல்லாம் நல்லாத் தான் பேசுற .. சும்மா உக்காந்து வாயால ஆய் போகுற பாப்பானுக்கு எல்லாம் காசு கொடுக்க முடியாது டா சிவா ..
   உனக்கு உலகத்துல எதுவுமே சமனில்லாமல் தான் தெரியும் .. உக்காந்து திண்ணு பெருத்த இரத்தம் உடம்புல ஓடுதுல்ல .. அது தான அப்படித் தோணும்;

   அப்புறம் மாலை மாத்திகிறதுல என்ன பிற்போக்குத்தனம் கண்ட நீ ..? கொஞ்சம் விளக்கம் கொடுப்பா ..

   உனக்கு ஆப்பு வைக்கிற மாதிரி பேசுனா அது வெறும்பயலுகளோட வெட்டிப் பேச்சா உனக்கு தெரியுதா ?.. கவலப் படாத கண்ணா … நம்ம செட்டினாட்டு சிதம்பரத்துக்கிட்ட சொல்லி டப்பு டப்புன்னு சுடச் சொல்லிடலாம் .. நீ அழாம போ..

 47. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  மணமகள் சகோதரி அசிதா சிறுவயது முதற்கொண்டு அமைப்பு பணியில் ஈடுபட்டு வருவது அறிந்து மிகவும் ஆச்சரியமும் பெருமிதமும் அடைகிறேன்.மணமகன் பாண்டியன் மாணவர் நலனுக்காக போராடி சிறை சென்றவர் என்று அறியும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.தன்னல வெறி தலைக்கேறிப்போன உலகில் சேற்றில் முளைத்த செந்தாமரையாய் தங்களையும் தங்கள் வாழ்க்கையையும் தாங்கள் நேசிக்கும் மக்களுக்கு பரிசாக அளிக்கும் இம்மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

 48. எந்த ஐயரும் உன்ன சந்தியாவந்தனம் பண்ண சொல்லவில்லை, எந்த ஐயரும் உங்களை ஐயர் வச்சு கல்யாணம் பண்ணனும்னு சொல்லவில்லை, நீங்களா போய் ஏன் விழுகிறீர்கள்…. அம்மா சந்தனமுல்லை corporate கம்பெனில வேல ஏ சி ரூம்ல உக்காந்துகிட்டு எழுதுறீங்க நல்லா இருக்கு… ஏன் இவ்ளோ பேசற நீங்க உங்க குழந்தைகள அட்லீஸ்ட் அரசாங்கம் நடத்தற பள்ளிகூடத்துல படிக்கவைங்க பாக்கலாம் அதல்லாம் பண்ண மாட்டீங்க… இந்த வினவுல இருக்கற பல பேர் இப்படிதான்… திரும்ப சொல்லறேன் ஊருக்குதான் உபதேசம்….

  • //எந்த ஐயரும் உன்ன சந்தியாவந்தனம் பண்ண சொல்லவில்லை, எந்த ஐயரும் உங்களை ஐயர் வச்சு கல்யாணம் பண்ணனும்னு சொல்லவில்லை, நீங்களா போய் ஏன் விழுகிறீர்கள்…. அம்மா சந்தனமுல்லை corporate கம்பெனில வேல ஏ சி ரூம்ல உக்காந்துகிட்டு எழுதுறீங்க நல்லா இருக்கு… ஏன் இவ்ளோ பேசற நீங்க உங்க குழந்தைகள அட்லீஸ்ட் அரசாங்கம் நடத்தற பள்ளிகூடத்துல படிக்கவைங்க பாக்கலாம் அதல்லாம் பண்ண மாட்டீங்க… இந்த வினவுல இருக்கற பல பேர் இப்படிதான்… திரும்ப சொல்லறேன் ஊருக்குதான் உபதேசம்….//

   மணி சுந்தரம் ரொம்ப கன்பூசிங்கா பேசுகிறார். ஒரு பக்கம் தோழர்கள் சமரசமின்றி, தாம் சொல்வதற்குப் பொருத்தமாக சொந்த வாழ்க்கையிலும் நடந்து கொள்வதற்கு உதாரணமாக உள்ள தோழர் பாண்டியன் மண நிகழ்வை ஆத்திரத்துடன் தூற்றுகிறார். இன்னொரு பக்கம் ஊருக்குத்தான் உபதேசம் என்று சம்பந்தமில்லாமல் அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து இழுத்து வைத்து பேசுகிறார். ஏதாவது உளவியல் டிஸ் ஆர்டர் பிரச்சினை அவருக்கு இருக்குமோ?

   • என்னுடைய தொடர் கருத்துக்கள் வெளிவரவில்லை… நான் தோழரது திருமணத்தை எங்கேயும் கொச்சை படுத்தவில்லை, அவர்கள் நன்றாக வாழ என் வாழ்த்துக்கள், நான் முன்னிலை படுத்திய விஷயம் அம்மா சந்தனமுல்லை இதை பற்றி எழுதியிருப்பதைதான். ஏனென்றால் இதே போல் திருமணம் செய்த தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், சந்தனமுல்லை முதன் முதலில் பார்த்திருக்கிறார் போலும்…. மற்றும் இவ்வளவு பேசும் சந்தனமுல்லை அவர்கள் கார்போரட் கலாச்சாரம் இல்லாமல் வாழ்கிறாரா என்பதுதான் எனது கேள்வி… அவர் எப்பொழுதுமே ஊர்ருக்கு உபதேசம் பண்ணுபவர் மற்றும் எந்த விஷயங்களை எடுத்தாலும் ஆணாதிக்கம் பெண்ணடிமை இதில் தான் கொண்டு போய் முடிப்பார், அதற்குத்தான் கேட்டேன்… நீங்கள் வேண்டுமானாலும் கேட்டுபாருங்களேன்…. கண்டிப்பாக அவர் ஒரு ஐ டி துறையையோ அல்லது ஒரு மல்டி நேஷனல் கம்பெனியாருக்கு அடிமை சாசனம் கொடுத்து வேலை செய்பவராக இருப்பார்…. இப்படி வேலை செய்துகொண்டு கம்யுனிசமும், கார்ல் மார்க்சும் என்று பேசி “கொல்கிறார்” உண்மையான தொண்டர்களை. இவையே எனது செய்திகள்…. தோழரின் திருமணத்தில் நானும் அங்கம் வகித்தேன் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்……. வாழ்க தமிழ் வளர்க நற் கருத்துக்கள்…..

    • திரு.மணி சுந்தரம்..

     இப்பொழுது உங்களுக்கு சந்தனமுல்லை இந்தப் பதிவை எழுதியது தானா ?..

     இந்தப் பதிவு குறித்த உங்கள் கருத்து என்ன ?..

     சாதாரண சம்பிரதாய திருமணம் குறித்து உங்கள் கருத்து என்ன ?..

     பதிவர் சந்தன முல்லையைப் பற்றி பேசும் முன் இந்தக் கருத்துக்களை எல்லாம் பதிந்து விட்டு பிறகு உங்களது வாழ்னிலையை சீர்தூக்கிப் பார்த்துவிட்டு பிறகு இங்கு வந்து பதிவிடலாம்.

 49. “” மாலைகளை மாற்றிக்கொள்ள”” விழா முடிவடைந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கின

  மாலை போட்டுகொள்வது மட்டும் முற்போக்கு தனமா?
  இது எந்த பகுத்தறிவு செய்கை?

  • மாலை போட்டுக்கொள்ளும்போது பீப்பி ஊதி மோளமும் அடித்திருக்கலாமே ?

   • அது உன்னைப் போன்ற பிழைப்புவாதிகள் ’பீ’,’பீ’ ஊதி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.

    அவங்க தான் மாலை மாற்றியதில் என்ன பிற்போக்குனு கேக்கிறாங்கள்ள ?.. பதில் சொல்லுப்பீ .. சாரி .. பதில் சொல்லுபா …
    சுயனலவாதின்னு சொல்லிக்கிறத்னுக்கு வெக்கமே படாத ஒரு ஜென்மத்தை இப்பொ தான் இணையத்துல முதல் முறையா பாக்குறேன்..

 50. எனக்கென்னமோ கொஞ்சம் ஓவர் பில்டப்பாக தெரிகிறது சாமீ…!!

  புரட்சி திருமணத்துக்கும் சீர்திருத்த திருமணத்துக்கும் இன்னும் எனக்கு வித்யாசம் புரியலங்க.

  அப்படி பார்த்தால் என்னுடைய சாதி, மதம், மொழி கடந்த திருமண புரட்சி, எல்லாவற்றையும் விட பெரிய புரட்சி. இதுபோன்ற விளம்பர ஸ்டண்ட் இல்லாமல்.

  அதே நேரம், சிவிலியன்களை இது போன்ற புரட்சிகளில் உளவுத்துறை போலீசுக்கு தீனி போட்டுவிட்டு, அதன் பின்னால் ஒளிந்துகொள்வது அயோக்கியத்தனம்.

  • //புரட்சி திருமணத்துக்கும் சீர்திருத்த திருமணத்துக்கும் இன்னும் எனக்கு வித்யாசம் புரியலங்க.//

   செந்தழல் ரவி,

   சிலர் ஓடிப் போய் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். அவற்றிலும் தாலி மறுப்பு, சடங்கு மறுப்பு, சாதி மறுப்பு என ஏகப்பட்ட முற்போக்குக் கூறுகள் அடையாளங்கள் இருக்கின்றன. இங்கு புரட்சி என்று சொல்லப்பட்டுள்ள விசயம் அதுமட்டுமல்ல.

   பாண்டியன் ஒரு புரட்சிகர அமைப்பின் முழு நேர ஊழியர், அதே அமைப்பின் இன்னொரு முழு நேர ஊழியர் தோழர் அஜிதா. இருவருக்கும் ஒரு அரசியல் இயக்கம் நடத்தி வைக்கும் திருமணம் வேறு வகைப்பட்டது. எப்படியெனில், நாங்கள் பிற்போக்குத்தனங்களை மறுத்து மணம் செய்துள்ளோம் என்று அறிவித்தள்ளதோடல்லாமல், சமூக மாற்றத்திற்காய் இணைந்து செயல்படுவோம் என்றும் சமூகத்திற்கு உறுதி கூறியுள்ளனர்.

   நீங்களும் சுயமரியாதை திருமணம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ஆனால், உங்களது குடும்ப வாழ்க்கை சமூகத்தின் விமர்சனத்திற்கும், கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டதா? உங்களது குழந்தைக்கோ அல்லது உங்களது வேறேதேனும் குடும்ப நடவடிக்கைகளிலோ முற்போக்காக நடந்து கொள்வது முற்றிலும் உங்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அவற்றை நீங்கள் மீறுகின்றபட்சத்தில் யாரும் கேள்வி கேட்க முடியாது. பாண்டியன் – அஜிதா தம்பதியினர் விசயத்தில் இது சாத்தியமில்லை. சமூக மாற்றத்தின் ஒரு அங்கமாக தமது குடும்ப வாழ்வையும் இணைத்துக் கொண்டுள்ளனர் அவர்கள். இது புரட்சிகரமானதே ஆகும்.

 51. பாராட்டுக்கள். திருமணத்தை போலவே இனி வாழ்வும் சரியானபடி அமைத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
  இப்படியொரு திருமண நிகழ்வுக்கு ஒத்துழைத்த அத்த்னை நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்.

 52. are you saying that superstition is to be seen only in hinduism? what abour islam and christianity. the report does not talk of that.typical marxism with typical anti-hinduism

 53. ///தன் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கத் துடிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் அஜிதா சிறுமியாக இருக்கும்போதே ம.க.இ.க கலைக்குழுவில் சேர்த்துவிட்டு “தனது மகள் மக்கள் தொண்டாற்றட்டும்” என்று பெருமை கொண்டவர் அந்த தந்தை////

  நான் அந்த அளவுக்கு முட்டாள் அல்ல.

  • //தன் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கத் துடிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் அஜிதா சிறுமியாக இருக்கும்போதே ம.க.இ.க கலைக்குழுவில் சேர்த்துவிட்டு “தனது மகள் மக்கள் தொண்டாற்றட்டும்” என்று பெருமை கொண்டவர் அந்த தந்தை////

   //நான் அந்த அளவுக்கு முட்டாள் அல்ல//

   ஆங்கிலேயனை எதிர்த்து களத்தில் போரிட்டு மடிந்தவர்களும் தெருவில் போராடி மாடு போல் அடி உதை வாங்கி சிறை சென்றவர்களும் அவரவர் தந்தையின் பாசத்திற்கு உரியவர்களே.அந்த தந்தைகளும் உங்களைப் போல் ‘அறிவு’ படைத்தவர்களாக இருந்திருப்பார்களேயானால் வெள்ளையன் இன்றும் வெளியேறி இருக்க மாட்டான்.

  • செந்தழல் ரவி,
   உங்கள் கணினி அறிவும் பிழையற்ற எழுத்து நடையும் நீங்கள் படித்தவர் என காட்டுகின்றன.ஆனால் படித்த படிப்பும் பெற்ற அறிவும் உங்களிடம் நல்ல பண்புகளை வளர்க்கவில்லை என்பதை எண்ணும்போது வருத்தமாக உள்ளது.
   சகோதரி அசிதாவின் தந்தை மக்கள் நலனுக்காக பாடுபடும் அமைப்பு என தான் நம்பும் ஒரு அமைப்பில் தனது மகள் சிறுவயது முதற்கொண்டு பணியாற்ற செய்திருக்கிறார்.அந்த அமைப்பு உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.அதற்காக அவரது தன்னலமற்ற செயலை பாராட்ட உங்களுக்கு மனமில்லாவிட்டாலும் ஏசாமலாவது இருக்கலாம்.
   பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு பின் சந்தனமுல்லை இப்படி ஒரு பதிவில் தன்னை பாராட்டுவார் என எதிர்பார்த்து அன்று அந்த முடிவை அவர் எடுக்கவில்லை.தன்னலமற்ற ஒருவரை பாராட்டுவதை விடுத்து முட்டாள் என ஏசுகிறீர்களே.இது எத்தகைய பண்பாடற்ற செயல் என எண்ணிப் பாருங்கள்.தவறு என உணர்வீர்களேயானால் வருத்தம் தெரிவியுங்கள்.

  • ///நான் அந்த அளவுக்கு முட்டாள் அல்ல////

   ஆம் .. நீங்கள் முட்டாள் இல்லை தான் செந்தழல் ரவி.

   தனக்கு பிள்ளை பெற்றுத் தர வக்கில்லை என்பதற்காக, பிள்ளை பெற்றுத் தரும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல என்று சொல்வதற்கும் உங்கள் வாசகத்திற்கும் மிக அதிக வித்தியாசம் இல்லை செந்தழல் ரவி ..

   எதுக்கு தேவை இல்லாம செந்தழல்னு எக்ஸ்ட்ரா பில்டப்பு எல்லாம் ?..

 54. ///மனித குல விடுதலைக்காக, கம்யூனிசமே தீர்வு என்று தான் நம்பும் கொள்கைகளுக்காக, அரசியல் சித்தாந்தங்களுக்காக சொந்த வாழ்க்கையை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக‌களை துச்சமென மதித்து சமூகத்திற்காக வாழும் உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட விழா அது! இதுதான் எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது///

  காமெடி கீமடி பண்ணலியே ? மனித குல விடுதலைக்கு கம்யூனிசம் தான் தீர்வா ?

  • இல்லை வியாபாரம் தான் தீர்வு என்றா சொல்கிறீர்கள்? எதற்காக வினவு போன்ற இணையங்களில் உலாவுகிறீர்கள்?? ப.ஜ.க வின் இணையத்தைப் பார்த்து மகிழலாமே???

  • உங்களது பொன்னான தீர்வை இங்கே பதிவு செய்யலாமே செந்தழல் ரவி …

   நித்தியானந்தா வீட்டு வாசலில் பஜனை செய்தால் உலகம் உய்வுற்றுவிடுமா ?..

  • கம்யூனிசம் தான் தீர்வு என்ற தமது நம்பிக்கைக்கு இணங்க தோழர்கள் பாண்டியன், அஜிதா இருவரும் பல போராட்டங்களில் பங்கு கொண்டுள்ளனர். நீங்கள் கூறும் தீர்வுக்கு எந்த ஆணியை எப்போது பிடுங்கிப் போட்டீர்கள் ?..
   கொஞ்சம் பதில் கூறவும் .. செந்தழல் ரவி ..

   • கம்யூனிசம் தான் தீர்வு என்று ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டவர்கள் என்று மாற்றி சொல்லுங்கள்.

    • அந்த தீர்வையெல்லாம் சொல்லமாட்டார்கள் தெரியவும் செய்யாது.. ஆனால் அறிவு ஜீவி போல் பினாற்றுவார்கள்.

    • உன்னோட தீர்வை கேட்டுக்கினுக்காங்கள்ளா … சொல்லேன்ப்பா …

     தீர்வ மட்டும் சொல்லமாட்றீயே நைனா ..

  • கம்மூனிசம் என்றால் என்ன வென்று தெரிந்துதான் பேசுகிறீர்களா
   கம்மூனிசம் என்னவென்றே தெரியாத காலத்தில் அதை அதிகம் அதிகம் விமர்சித்தவன் நான் அரகுறைய புரிஞ்சப்பவே ரொம்ப பிடிச்சிருச்சு இப்போ இன்னும் அதன் மீது காதலே வந்த்துருச்சு கொஞ்சம் படிச்சு பாருங்க பிடிக்கும்

   • ////கம்மூனிசம் என்றால் என்ன வென்று தெரிந்துதான் பேசுகிறீர்களா
    கம்மூனிசம் என்னவென்றே தெரியாத காலத்தில் அதை அதிகம் அதிகம் விமர்சித்தவன் நான்//////// யாரவது ஒரு விஷயத்த அரைகொரைய படிச்சுட்டு விமர்சனம் பன்னுவாங்களா? நீ பன்னியிருக்கன்ன நீ ஒரு அரகொர இப்பயாவது முழுமைய படிச்சுட்டு காதலிக்கவும்

    • தோழர் ஹைதர் அலி எனது பதிவு ரவிக்காக எழுதியது நீங்கள் என் பதிலை தவறாக அர்த்தம் எடுத்துக்கொண்டீர்கள் என நினைக்கிறேன்
     நான் வர்க்க விடுதலையே மனித குல விடுதலை என்று தீர்க்கமாக நம்புபவன்

 55. புரட்சிகர திருமணத்துக்கு வாழ்த்துக்கள். புரட்சிகர மணமக்களுக்கு வணக்கங்கள்.

 56. மக்களுக்கு தொண்டாற்ற மகளை அனுப்பி வைத்த தந்தை முட்டாள். தன்னலத்திற்கும் அறிவாளித்தனத்திற்கும் எந்த இடத்தில் வேறுபாடு துவங்குகிறது செந்தழல் ரவி

  • இப்போது அந்த பெண் என்ன வேலை செய்கிறார்?

   அந்த புள்ளையை படிப்பித்து ஒரு ஆசிரியராக்கியோ, மருத்துவ தாதி, வைத்தியராக்கியோ மக்களுக்கு சேவைபுரிய வைத்திருந்தாள் அந்த அப்பன் செய்தது சரி… காரணம் அந்த பெண் எப்போதும் தன்னம்பிக்கையுடன் வாழ வழி இருக்கும்.. எனது மகளுக்கு தந்தை என்ற முறையில் அது தான் நான் செய்வேன்..

   • உங்களது காரியவாதமான தன்னலமான் வாழ்வு கூட பலருடைய தன்னலம் கருதா போராட்ட வாழ்வின் பின்னாலிருந்தே தொடங்குகிறது.

   • செந்தழல் ரவி, அப்போ வீட்டுல உக்காந்துக்கிட்டு பொண்டாட்டி புள்ளைக்கு பேன் பார்த்துட்டு, மானாட மயிலாடவில் வரும் அரைகுறை ஆட்டக்காரிகளுக்கு மார்க் போடனும் இங்கே மக்களுக்காக போராடத் தயாராக இருக்குற உண்மையானவர்களை நொல்லை சொல்லக் கூடாது.

    ஹ்ம்ம்.. முன்னாடிலாம் நான் சுயனலவாதின்னு சொல்லுறதுக்கு வெக்கப் படுவாங்க .. ஆனால் இப்போ முதலாளித்துவத்தின் கலாச்சார தாக்கம் மக்களை இப்படியெல்லாம் வெக்கமில்லாம பேச வைக்கிது.

    அப்புறம் ரவி.. முக்கியமா கம்யூனிஸ்ட்டுகள் உங்களை மாதிரி அவன் சொன்னான் இவன் சொன்னான்னு வியாக்கியானம் பண்ணுறவங்க இல்லை.. விவாதம் செஞ்சு தான் எதையும் ஏத்துக்கக் கூடியவர்கள். அதனால் உங்கள் பிழைப்புவாத பீப்பீயை வேறு எங்காவது போய் ஊதிப் பார்க்கவும் .. கைதட்டுக்கள் கிடைக்கலாம்…

    • ///இங்கே மக்களுக்காக போராடத் தயாராக இருக்குற உண்மையானவர்களை நொல்லை சொல்லக் கூடாது.///////////

     .
     நொல்லை சொல்றது தான பாஸ் அறிவு, அதுக்கு தான பாஸ் படிச்சிருக்கோம். இங்க பாருங்க படிக்காத முட்டாளா இருக்குறவங்க சமுகம் அது இதுன்னுட்டு, கடைசி காலத்துல கஞ்சி ஊத்துற மகளையே சமுகபனிக்கு அனுப்புறார்!
     இதெல்லாம் நடக்குற காரியமான்னு சிரிச்சுகிட்டு இருந்தோம். இப்ப நடக்குது, நடந்துடுச்சுன்னு சொன்னா… எங்களுக்கு கூ(கோ)வம் வருமா வராதா? இத காமிச்சி எங்கள நீங்க கார்னர் பண்ணுவீங்க தானே! அதான் அதான் அந்த அரிப்பும் கூட ஒரு காரனந்தேன்! ஹி ஹி 🙂

 57. […] This post was mentioned on Twitter by ஏழர, ஏழர and ஏழர, ஏழர. ஏழர said: இந்த விசயத்தை மறந்துபோனேன் ஞாபகப்படுத்திய பூச்சாண்டிக்கு நன்றி http://bit.ly/aDFMAr @dynobuoy @kavi_rt […]

 58. ரவி,
  பொதுநலன் குறித்து பேசினாலே அப்பேச்சை வேருதளத்திற்கு
  எடுத்துசெல்லும் ‘அறிவு சார்ந்த’ காரியவாதம் நிறைந்த நபர்களுக்கு
  மத்தியில் மக்களுக்கு தொண்டு செய்ய மகளை அனுப்பிய தந்தை முட்டாள் என்றால் உங்கள் ‘அறிவு சார்ந்த’ கருத்து விடுலைஇல் பங்கு
  பெற்ற வீ ரர்களையும் அவமானம் செய்கிறது. மேலும் உங்கள் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 59. இவ்வுலகின் அழகிய மணமக்களான தோழர்.பாண்டியனுக்கும் தோழர்.அஜிதாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 60. //ரவி,
  பொதுநலன் குறித்து பேசினாலே அப்பேச்சை வேருதளத்திற்கு
  எடுத்துசெல்லும் ‘அறிவு சார்ந்த’ காரியவாதம் நிறைந்த நபர்களுக்கு
  மத்தியில் மக்களுக்கு தொண்டு செய்ய மகளை அனுப்பிய தந்தை முட்டாள் என்றால் உங்கள் ‘அறிவு சார்ந்த’ கருத்து விடுலைஇல் பங்கு
  பெற்ற வீ ரர்களையும் அவமானம் செய்கிறது. மேலும் உங்கள் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது///

  ம.க.இ.கவுக்கு மந்திரித்து விடுவதை கோயிலுக்கு பொட்டு கட்டிவிடுவதுடன் ஒப்பிடலாம். இளம் வயதில், தனக்கு தேவை என்ன என்பதை முடிவெடுக்க இயலாத வயதில், நீங்களே ஒரு ப்ரொபஷனுக்கு அனுப்புவதை வேறு எப்படி ஒப்பிட முடியும் ? எல்லா குழந்தைகளுக்கும் உள்ள ஆசா பாசங்களை நீங்களே வெட்டிடலாமா ? இந்த கட்டுரையை படிக்கும் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை காண்வண்டு படிப்புக்கு பதில் மக இகவுக்கு அனுப்ப ரெடி ?

  • //நீங்களே ஒரு ப்ரொபஷனுக்கு அனுப்புவதை வேறு எப்படி ஒப்பிட முடியும் ?//

   நீங்கள், உங்களது குழந்தையைக் கேட்டுத்தான் பள்ளிக்கூடத்தில் சேர்த்தீர்களா? குழந்தையைக் கேட்டுத்தான் எல்லாம் வல்லக் கடவுளை தேர்ந்தெடுத்துக்கொள் என்றீர்களா?

  • செந்தழல் ரவி,
   ஒற்றை வரியில் பதிலளிக்காமல் அறிவு நாணயத்துடன் விவாதிப்பீர்கள் என்றே இன்னும் நம்புகிறேன்..

   இன்றைய இந்த சமூகத்தில், எல்லா குழந்தைகளுக்கும் தமது விருப்பை தேர்வு செய்யும் உரிமை இருக்கிறதா?

   பெரும்பாலான வறிய-ஏழை குடும்பத்தினருக்கு சமுகம், காரணிகள் அவர்களது தேர்வை, விருப்பத்தை தீர்மானிக்கின்றன.
   நடுத்தரவர்க்க குடும்பத்தின் பிள்ளைகளுக்கு, பெற்றறோரின் அபிலாசைகளும், பொருளாதாரமுமே தேர்வை, விருப்பத்தை தீர்மானிக்கின்றன.
   இது சிறு வயதில் மட்டுமல்ல வளர்ந்து முடிவெடுக்கும் வயது வந்த பின்னும் தொடர்கிறது…

   இந்நிலையில் தோழர் தான் மகளை மக்கள் பணிக்கு அனுப்பிவைத்ததோடு, உனக்கு முடிவெடுக்கும் வயது வந்த பின் உனது ஜனநாயகமான முடிவை (அங்கே தொடர்வதா, அல்லது குடும்ப வாழ்வுக்கு செல்வதா) ஏற்று கொள்கிறேன் என்ற உருதிமொழியளித்தது உங்களுக்கு முட்டாள் தனமாக படுகிறது!

   அடுத்து படிப்பு பற்றி பேசுகிறீர்கள்.. நேர்ந்து விட்டு மகளின் வாழ்க்கையை வீணடித்து விட்டார் என்கிறீர்கள்.
   படித்த உங்களுக்கோ மக்கள் பணிக்கு செல்வது முட்டாள் தனமாகப்படுகிறது, படிக்காத எளிய விவசாயிக்கு அது கடமையாக தெரிகிறது.
   கம்யுனிசமே சமூக விடுதலைக்கு தீர்வு என்றால் சிரிப்பு வருகிறது. இந்த சமூகத்தில் படித்த படிப்பு அதை தான் கற்றுக்கொடுக்கும் என்பதை புரிந்து தான் படிக்காத விவசாயியான அவர் தான் குழந்தையை சமூக கல்வி கற்க அனுப்புகிறார்.
   அவர் உங்களுக்கு முட்டாளாக தெரிகிறார். என்ன செய்வது அவரைப்போல் முட்டாள்கள் இருப்பதால் தான் நீங்கள் கொழுப்பெடுத்து இப்படி கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!

   சரி, கான்வேன்டிலும், காலேஜ்களிலும் படித்த மேதாவிகள் சமூகத்திற்கு தீர்வையோ அல்லது பிரச்சனைக்கான காரணத்தையோ கூட சொல்லவேண்டாம், போராடவேண்டாம். குறைந்த பட்சம் தனது அன்றாட பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணத்தை விளக்குவார்களா? அதற்காகவாவது போராடுவார்களா? அதற்கும் அவர்களுக்கு முட்டாள்களே தேவைப்படுகிறார்கள்.
   இப்படி ஈன பிழைப்பு நடத்துபவர்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முட்டாள்களாக தெரிவதும், சமூகத்திற்கு போராடுபவர்கள் பிழைக்கத்தெரியதவர்களாக தெரிவதும், இயல்புதான்! 🙂

   படிப்புக்கும் அறிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ரவி சார்??
   அறிவு என்பது எது ரவி சார்?
   எதற்காகவோ, எவருக்காகவோ ஏதோ ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு இங்கு சமூகத்திற்கும் மக்களுக்கும் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களை இழிவு படுத்துவது தான் அறிவா சார்வாள்??? 🙂

  • நாட்டு சேவைக்கு ஒரு தந்தை தனது மகளை அனுப்பியது எந்த விதத்தில் தவறு என்று நினைக்கிறீர் செந்தழல் ரவி.

   உங்கள் பிள்ளைகளை ஏர்டெல் சூப்பர் சிங்கர் சூனியருக்கும் , ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிக்கு அனுப்பி மகிழத் துடிக்கும் உங்கள் எண்ணத்தை விட அது எவ்வளவோ மேலானது. குழந்தைக்கு திரைப்படத்தைப் பார்த்து கேவலமான ஆடைகளை வாங்கிப் போட்டு பார்க்கும் உங்கள் கேவலமான ரசனையை விட அது அறிவுப்பூர்வமானது…
   அடுத்தவன் தாலியை அறுத்தாலும் தாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் படிப்பினையை விட பல கோடி மடங்கு சிறந்தது தோழர் அஜிதா அவர்களின் தந்தை சொல்லிக் கொடுத்த பொதுப்பணித் தொண்டு.

   அரே… ஓஒ.. சம்போ … வர வர நாட்டுல பிழைப்புவாத ஊளையிடும் ஓநாய்களெல்லாம் ஊரான் வீட்டு ஆடு நனைகிறது என்று அழுகின்றன.
   நான் உங்களைத் தான் சொன்னேன்னு நினைச்சிங்களா ரவி .. சத்தியமா இல்லைனு நான் சத்தியம் பண்ணி சொல்லமாட்டேன்னு சொல்லுவேன்னு நினைச்சிங்களா ?.. ஆமா .. சொல்லுவேன்…

   • ///ஓநாய்களெல்லாம் ஊரான் வீட்டு ஆடு நனைகிறது என்று அழுகின்றன.///

    இப்படி என்ன ஊளையிட்டாலும், நாளைக்கு தன்னோட(ஓநாய்) குட்டிக்கும் ஏதாவது பிரச்சனைன்னா அதுக்கு இந்த முட்டாள் ஆட்டுக்குட்டிகள் தான் களத்தில் நிக்கும்ன்னு தெரிஞ்ச தால தான் இப்படி தைகரியமா ஊளைஇட முடியுது!