Thursday, July 25, 2024
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்கடப்பாறையேவ ஜெயதே - அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

-

பாபர் மசூதி ராம ஜென்ம பூமி அயோத்தி தீர்ப்பு
இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு  – 1:

அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம்  வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது  சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு  – 2:

பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

_________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !! | வினவு!…

  இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன் என்று பாசிச மோடி சொன்னதைத்தான், வேறு விதமாகப் சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்….

 2. இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம்! வரலாற்றுப் பிழையை, இன்னொரு பிழையால், நியாயப் படுத்துகிறார்கள்! இவ்வுலகில், நியாயமேயானாலும், பெரும்பான்மையே வெல்லும் என்பது, மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது!

 3. உப்பு, சப்பு இல்லாம ஒரு தீர்ப்பு, இதுக்கு ஏன் இவ்ளோ பாது காப்பு?இன்னும் நாலு பேர் கேசு போட்டிருந்த அவைகளுக்கும் பங்கு கிடைத்திருக்கும். எனக்கு தெரியாம போச்சு.
  இந்த மூனு நீதிபதிகள் தான் ராமனுக்கு தாலாட்டு பாடி தூங்க வைத்தார்களா? எந்த வருஷம் பிறந்தாராம்? இத சொல்ல இவங்க யாரு?
  உட்டா இன்னும் கொஞ்ச சாமி படைச்சு சரித்திரமும் எழுதுவாங்க. மெஜாரிட்டி நம்புதும்பாங்க.
  மொத்தத்தில் பெரும்பான்மைக்கு இரண்டு பங்கு. என்ன தடுத்தாலும் கோயில் கட்டுவாங்க தான்.
  நம்பாட்டியும் நம்ம தல விதின்னு போகனும்.

 4. இதை விட நல்ல தீர்ப்பை நம்ம சின்னக் கவுண்டரோ , நாட்டாமையோ கூட குடுக்க முடியும். பார்ப்பனீயம் என்கிற புற்றுநோய் நீதித் துறையிலும் புரையோடியிருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்.

 5. ஒருவனின் சொந்தமான சொத்தை பிடுங்கிக் கொண்டு அவனுக்கே அதில் 3 ல் 1 பங்கு போனால் போகுது என்று தரும் (அ)நீதி ஜனநாயக இந்தியாவிலும், இஸ்ரேலிலும் மட்டுமே நடக்க கூடிய ஒன்று. இவர்கள் என்ன நீதிபதிகளா? இல்லை காவிபதிகளா? காவி பயங்கரத்துக்கு கிடைத்த வெற்றியே இது. நன்றி பா. சிதம்பரம் அவர்கள்.

  +2

 6. அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

  இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

  • அட விடுங்க பாஸு வினவு பதிவை படிக்கோணும் ஆராயக்கூடாது.. இவிங்க வர வர பர பரப்புக்காக எதையாவது எழுதணுமுன்னு எழுத ஆரம்பிச்சிடாங்க…இவிங்க பொழப்புக்கு NDTV, Times Now தேவலாம்…

  • சகோதரர் அருள் அவர்களே,

   அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று இந்துக்கள் நம்புவதை உயர்நீதிமன்றமும் நம்புவதால்தான் அதனை தனது தீர்ப்பிலும் சுட்டி காட்டியுள்ளது.
   உயர்நீதிமன்றம் அந்த கருத்தை எற்றுக்கொல்லாவிடில் அந்த வார்த்தையை தனது தீர்ப்பில் கூற என்ன காரணம்.

   ஆவணங்களையும் சாட்சிகளையும் விட்டு விட்டு இப்படி மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு கூறப்பட்டால் நாட்டில் நீதித்துறையின் நிலை என்னவாகும்.

  • http://www.thehindu.com/news/national/article805033.ece

   //Of the 28 issues framed, Justice Sharma answered a majority in favour of the Hindu-plaintiffs and ruled against the Waqf Board.

   On “whether the disputed site is the birthplace of Bhagwan Ram,” the judge held that “the disputed site is the birthplace of Lord Ram. Place of birth is a juristic person and is a deity. It is personified as the spirit of divine worshipped as [the] birthplace of Lord Rama as a child. Spirit of divine ever remains present everywhere at all times for any one to invoke in any shape or form in accordance with his own aspirations and it can be shapeless and formless also.” //

   படிச்சிட்டு வாங்க, அருள்.

   நீதிதேவதைக்கு பதிலா இந்து மனசாட்சிக்கு கண்ண கட்டிவிட்டு கம்பு சுத்த விட்டுருக்காங்க போல.

 7. இந்த நாட்டில் மக்கள் தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதி மன்றங்களை நம்பிக்கொண்டுள்ளனர்.அந்த நம்பிக்கை பொய்க்குமானால் அவர்கள் நீதியை வேறு வழிகளில் தேட நாடினால் விளைவு என்னாகும்

 8. ஆவணங்களின் அடிப்படையில் இடம் யாருக்கு சொந்தம் ? என தீர்ப்பு வழங்காமல்
  ‘குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதை’ போல சர்ச்சைக்குரிய நிலத்தை
  மூன்று பங்காக பிரித்து வழங்கும் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு
  ‘கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த’ கதையாக உள்ளது!

 9. பன்னிரண்டு ஆண்டுகள் பயன் படுதியவர்க்கு நிலம் சொந்தம்’என்று சட்டம் வகுத்து விட்டு
  நானூற்றி ஐம்பது ஆண்டு தொழுகை நடந்த இடத்தை ‘இங்கு தான் ராமர் பிறந்தார்’
  என்று அராஜகமாக ஆக்ரமித்த அக்கிரமத்தை அனுமதிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கிறது!

  நிலத்திற்கு உரிமை கோரும் சன்னி வக்ப் வாரியத்தின் மனு தள்ளபடி செய்யபட்டிருப்பதும்,
  சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட சிலைகள் அங்கு நீடிக்கும் என்பதும் முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுவர்.

  • ///பன்னிரண்டு ஆண்டுகள் பயன் படுதியவர்க்கு நிலம் சொந்தம்’என்று சட்டம் வகுத்து விட்டு
   நானூற்றி ஐம்பது ஆண்டு தொழுகை நடந்த இடத்தை ‘இங்கு தான் ராமர் பிறந்தார்’
   என்று அராஜகமாக ஆக்ரமித்த அக்கிரமத்தை அனுமதிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கிறது///

   அய்யா உமக்கே நியாயமா? அயோத்தி என்பது 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப் பட்டுவந்த பூமி. சரி அதை விட்டாலும் மசூதிக்கடியில் கோயில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள். உண்மையிப்படியிருக்க அராஜம் என்பது வீணான வாதம்.

   • ///////அய்யா உமக்கே நியாயமா? அயோத்தி என்பது 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப் பட்டுவந்த பூமி. சரி அதை விட்டாலும் மசூதிக்கடியில் கோயில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள். உண்மையிப்படியிருக்க அராஜம் என்பது வீணான வாதம்.///////////////
    கைபர் கணவாய் வழியாக ஆரியர்கள் பெழைக்க வந்து மண்ணின் மைந்தர்களை நான்கு வருனமாக பிரித்து ஆட்சியை நிலைநாட்டுறதுக்கு முன்னாடி அந்த நெலம் யாரு கையில இருந்துச்சு

 10. முயலாயர் படையெடுப்பும் அவர்களின் கோவில் சிதைப்பும் பொருட்கள் கொல்லையடிப்பிற்கும் நியாயம் தேட பௌத்த கோயில்களைக் காட்டி இந்துக்கள் இப்படிஎன்பது காட்டிவது சம்மந்தமாகயில்லையே இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் மூக்கை நுழைக்கலாம் ஆனால் நீதிபதிகள் மட்டும் ஆராயக் கூடாதா?

  முக்கியமாக குறிப்பிட்ட விஷயம் அது முஸ்லீம்களின் வழிபாட்டுத் தளமில்லை. வீணாக இதில் கூட்டம் சேர்ப்பதாகவே உங்கள் பதிவு உள்ளது.

  இதை நக்சலைட்கள் போல துப்பாக்கியேந்திப் போராடுவது நிரந்தரத்தீர்வு இல்லை இது மக்கள் உணர்வுப் பூர்வமான விஷயமாதலால் சமரசமின்றி தீர்வில்லை

  • ////முக்கியமாக குறிப்பிட்ட விஷயம் அது முஸ்லீம்களின் வழிபாட்டுத் தளமில்லை////// இதுக்கு பேருதான் முழிச்சுகிட்டு இருக்கும் போதே கண்ண நொண்டுறாதுங்கிறது

  • ///முயலாயர் படையெடுப்பும் அவர்களின் கோவில் சிதைப்பும் பொருட்கள் கொல்லையடிப்பிற்கும் நியாயம் தேட பௌத்த கோயில்களைக் காட்டி இந்துக்கள் இப்படிஎன்பது காட்டிவது சம்மந்தமாகயில்லையே இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் மூக்கை நுழைக்கலாம் ஆனால் நீதிபதிகள் மட்டும் ஆராயக் கூடாதா?////

   ஆமாண்டா … பாபர் இங்க தான் கோவில இடிச்சாரு .. ராமன் இங்க தான் கக்கூஸ் போனான்னு உங்களை எவன் நக்கிப் பாத்து இடிக்கச் சொன்னது …

   • Mr. korukkupet kumar,

    தரமற்ற எழுத்துக்கள்! ஆவேசமும், வன்முறை எழுத்துக்களும், கெட்ட வார்த்தைகளும், உமக்கே சொந்தமில்லை தம்பி! Mind your words & Language!

    vinavu, asuran, & senkodi marudu – could you not control, these kind of defamatory words, in your blog? cool yourselves!

 11. //பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?//

  அட்டகாசம். நியாயமான கேள்வி.

  • தங்களுக்ககும் தங்களை மெச்சுபவருக்கும் கரசேகர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. இப்படி எழுதுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு மதம்தான் முக்கியம் தேசப்பற்று என்பது இரண்டாம் பட்சம் என்பதுபோல் அர்த்தம் உருவாகிறது. நல்லவேளை உங்களைப்போன்றவர்கள் முஸ்லீம் சமுதாயத்தில் சிறுபான்மையினர்தான்.

 12. கரசேவகர்கள் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்குவார்கள், குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை மோடி கும்பல் கொன்று குவிக்கும், பம்பாயில் பல ஆயிரம் முஸ்லீம்களை தாக்கரே கோஷ்டி கொன்று குவிக்கும்.

  கோவையில் முஸ்லீம் என்ற அடையாளத்தை , தாடியை மழித்து வியாரபாரம் செய்ய வேண்டிய அவல நிலை, எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லீம்களை சிறையில் அடைப்பது, தீவிரவாதி என்ற முத்திரை ,எல்லாம் தாண்டி அதை நியாயபடுத்த ஒரு அலகாபாத் தீர்ப்பு.

  இந்தியா நாங்கள் வாழும் பாதுகாப்பில்லாத இடம். ஆதரவு என்ற பெயரில் எங்கள் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் காங்கிரஸ், திமுக என்ற போலி கட்சிகளை நம்பியே வாழ்ந்தோம் இன்று வாழ்வின் விளிம்புகளில் நிற்கிறோம்.

  வாழ்க ஜனநாயகம்

  • பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் யார்? அமைதியான கோவையில் குழப்பம் ஏற்படுத்தியது பெரும்பான்மையர் அல்லவே! வன்முறை சிறுபான்மையோருக்கு மட்டுமே சொந்தமா என்ன?

   • இந்தப் புடுங்கிகள் (கரசேவகர்கள்) மசூதியை இடிப்பார்களாம் … வன்முறையை அது தூண்டிவிடாதாம் .. நல்லா ரீல் உட்ரே நைனா …

    • ஒவ்வொரு வன்முறைக்கும் காரணம் இருக்கும்! முடிவில் ரணமும் இருக்கும்!

   • Idhu ponru muttal thanamaaga yosikka un ponra “Kaavigalaal mattume mudiyum” . Padichavana yosi. ALahabad high court inoru visayathayum solliriukku. adhu india ORU HINDU COUNTRY INGA PAAPPAN YENNA SENJAALUM THAPPILLA!! ADHU SARI ” KUTTI KODITHA PAPPAN KATTI KODUTHA PAPPAN ” IPPADI THANE NEENGA INDIA YA VA PUDICHINGA!!! VANDERI VERI NAAIGALTA ARASAANGAM POCHU!!

 13. //எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். //
  எதிரணியின் ஆதாரங்கள் எல்லாம் பொய் என்று நீங்கலாகச் சொல்லிக்கொண்டு இருந்தால் அது உங்கள் அறிவின்மையைக் காட்டுகிறது.

 14. இந்திய மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 சதவிகிதம் உள்ளனர். ஆனால் இந்திய குண்டுவெடிப்பில் 90 சதவிதம் முஸ்லீம் தீவிரவாதிகள் உள்ளனர் ஆனால் எண்ணிக்கையில் சில இந்து தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டிடு முஸ்லீம்களுக்கு அநீதிஎன்பது முட்டாள்தனமான வாதம்.
  குரங்கு கையில் சிக்கிய பன்போல இந்த விவகாரத்தில் வினவு.

  • திரு பாஸ் என்கிற பாஸ்கரன் ..

   வன்முறையை ஆரம்பித்து வைத்தது யார்? ..

   இங்கு நடக்கும் இந்து இஸ்லாமிய மோதல்களின் மூலாதாரம் என்ன ?..

   பாபர் மசூதி இடிப்புக்கு முன்னால் எங்காவது இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியிருக்கிறதா ?..

   உங்கள் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு முன்னால் எங்காவது இந்து முஸ்லீம் கலவரங்கள் வெடித்திருக்கிறதா ?..

   பதில் கூறவும் …

 15. தீர்ப்பை முற்று முழுதாக ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை ஒதுக்கவும் முடியவில்லை. இதற்கு மேல் என்ன செய்யமுடியும் நீதிபதிகளால்? அதிகம் பாதிக்கப்பட்டதாக ஏதாவதொரு தரப்புக் கருதினால் பக்கத்தில் இருக்கிற அரசாங்க நிலத்தில் இருந்து காணி ஒதுக்கிக் கொடுப்பார்களாம். என்ன தீர்ப்பு இது?… இந்த சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் அரசுடமையாக்கப்பட்டு அங்கே கோயிலோ, மசூதியோ எதுவுமோ எந்தக் காலத்திலும் கட்டவே முடியாமல் செய்யும்படியான ஒரு தீர்ப்புத்தான் என்னைப் பொறுத்தவரை சரி. இந்துத்துவா தொடங்கி எல்லாத் துவாவுக்கும் ஆப்பாக இருந்திருக்கும். ஆனால், தற்செயலாக மதச்சார்புக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் (அதாவது பா.ஜ.க போன்ற கட்சிகள் இந்திய மத்தியவர்க்க பொதுப்புத்தியை இந்த விஷயத்தை வைத்து இன்னும் மழுங்கடித்து இலகுவாக ஆட்சியில் அமர்ந்துவிடுவார்கள்) அப்படியான தீர்ப்பின் மையநோக்கம் சிதைந்து போய்விடும்.

  • நண்பர் கிருத்திகன் ,

   சிறிது யோசித்துப் பாருங்கள். உங்கள் தாத்தா ஒரு இடத்தில் வீடு கட்டி இருந்திருக்கிறார். இன்று வரை நீங்கள் அங்கு குடியிருக்கிறீர்கள்.
   திடீரென ஒருவன் வந்து தனது பெயர்ப் பலகையை உங்கள் வீட்டு வாசலில் வைத்து விட்டு, ”உங்கள் தாத்தா வீடு கட்டும் முன் இந்த இடத்தில் தான் நாங்கள் காலையில் வெளிக்குப் போவோம். அதனால் இது எங்களுக்கு சொந்தமான நிலம்” என்று கூறினால் என்ன சொல்லுவீர்கள்?…

   நீதிமன்றம் செல்வீர்கள். அங்கு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சில கரசேவகர்களைக் கூட்டிக் கொண்டு வந்து உங்கள் வீட்டை இடித்து விட்டால் என்ன செய்வீர்கள் ?..

   வழக்கு முடிந்து அந்த வீட்டை இரண்டாகப் பங்கு போட்டு கொடுக்கச் சொல்லி தீர்ப்பு கூறினால் என்ன செய்வீர்கள் ?..

   இதையே பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு பொருத்திப் பாருங்கள் ..

   உங்களது கருத்தை இப்பொழுது இங்கே பதியுங்கள் ..

   தோழமையுடன்
   மருது.

   • தீர்ப்பில் நியாயத்தை விட அநியாயம்தான் விஞ்சி நிற்கிறது என்பது உண்மைதான் மருது. ஆனால், இதை விஞ்சி பா.ஜ.க. போன்ற வேட்டை நாய்களையும் கருத்தில் கொண்டு சொல்லக்கூடிய தீர்ப்பாக எதைக் கருதுகிறீர்கள்? (கேள்வி தீர்ப்பை நியாயப்படுத்த அல்ல)

   • இன்னுமொன்று மருது,
    இந்தத் தீர்ப்பின் ஆபாசமான பகுதியாக நான் பார்ப்பது, ஆவணங்கள் அல்லது ஆதனங்கள் புறந்தள்ளப்பட்டு கர்ண பரம்பரைக் கதைகளை நியாயப்படுத்தியிருப்பதுதான்.

    • It is really i do not expect for you kruthigan, A justice department should not mind the feature effects for its judgement. What ever can happen in feature but to have good judgement department it has to stand in facts only. if any things happens in the feature, The govt has to take steps to prevent it, it is the duty of govt. If taking your points into consider, it is as govt has not that much potential to prevent the atracity of the gangs. If is it true? then why govt? Why court?

    • ஆசாத்..
     ///A justice department should not mind the feature effects for its judgement///
     என்ன சொல்ல வருகிறீர்கள்??? இன்றைக்கு வழங்கப்படுகிற ஒரு தீர்ப்பு வருங்கால வழக்கு ஒன்றில் செல்வாக்குச் செலுத்த இடமிருக்கிறது. முன்னைய தீர்ப்புகளின் அடிப்படையில் தீர்ந்த வழக்குகள் எத்தனையோ இருக்கின்றன. ஒரு தீர்ப்பின் வருங்கால சாதகபாதகங்களை ஆராயாமல் யாரும் தீர்ப்புச் சொல்வதில்லை. நியாயமான தீர்ப்புச்சொன்னால் இந்துக் கும்பல் எரித்துவிடும் என்கிற பயம் மேலோங்கிச் சொல்லப்பட்ட தீர்ப்புத்தான் இது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

     ///What ever can happen in feature but to have good judgement department it has to stand in facts only///
     நீங்கள் சொல்கிற facts இந்தத் தீர்ப்பில் எங்கே வருகிறது??? எல்லா facts ஐயும் கண்டுகொண்டவர்கள் இரண்டு விடயங்களை விட்டுவிட்டார்கள்.
     1. சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு மசூதி இருந்தது (1992 வரை)
     2. அந்த இடத்தில் 1949 ல் ஒரு சிலை வைத்துத்தான் சர்ச்சை தொடங்கினார்கள்.

     மேலே மருது கேட்ட கேள்வியையும் பார்க்கவும்… இது ஒரு good judgement department வழங்கிய தீர்ப்பு என்று வாதிட்டால் சிரிப்புத்தான் வருகிறது

 16. அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !! கேனப்பய நாட்டுல கிறுக்குபயல்க நாட்டம

  • முஸ்லிம் மற்றும் சர்வாதிகார நாடுகளின், தீர்ப்பைப் போலவே உள்ளது, இந்த தீர்ப்பு!தலிபானிச நீதி! ஒருதலைப் பட்சமானது!

 17. பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.

  எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

  ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

  நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

  நன்றி(www.tntj.net)

 18. பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.

  எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

  ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

  நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

 19. தனது தாய் நாட்டிலேயே தங்கள் மத நம்பிக்கையை பினபற்ற முடியாமல் அல்லல் படுபவர்கள் இந்துக்கள். வடக்கே அயோத்தியையும் பிடிங்கிக் கொண்டு தெற்கே ராமர்பாலத்தையும் பிடிங்கிக் கொண்டு, மத்தியில் தேஜாமகாலையும் [தற்போதைய தாஜ்மகால்] என பிடிங்கிக் கொண்டு தவிக்க விடுவது. பற்றாக் குறைக்கு மேற்கேயிருந்து தீவிரவாதிகள் வேறு என அல்லல்படுபவர்கள் இந்த இந்துக்கள். நடுநிலையாளர்கள் ஆகிய நாத்திகவாதிகளும் அதை புரிந்துக் கொள்ளாமல் எரிகிற வீட்டில் பிடிங்கியது லாபம் எனப் பார்த்தால் நாடு வளராது. இத்தனையிருந்தும் அனைவரும் பயன்படுத்தும் படி தீர்ப்புவந்தாலும் அதை ஏற்க மாட்டோம் என்பது முதிர்சியற்றவர்களின் மனப்பான்மையாகவுள்ளது.

  • ////இத்தனையிருந்தும் அனைவரும் பயன்படுத்தும் படி தீர்ப்புவந்தாலும் அதை ஏற்க மாட்டோம் என்பது முதிர்சியற்றவர்களின் மனப்பான்மையாகவுள்ளது///////
   நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வர்ரேன் இரண்டுபேரும் ஊதி ஊதி திங்கலாம் என்ற முது மொழி தான் ஞாபகத்துக்கு வருது!

  • //தனது தாய் நாட்டிலேயே தங்கள் மத நம்பிக்கையை பினபற்ற முடியாமல் அல்லல் படுபவர்கள் இந்துக்கள்.//

   அச்சசோ … அப்படியா ?..

   ஆமாங்க … எனக்கு கூட கருவரைக்குள்ள போய் சாமிய பாத்து கும்மிடனும்னு ஆசை .. இந்த பாப்பாரப் பயலுவ விட மாட்றானுங்க ..

   என்ன பண்ணலாம் ?.. கொஞ்சம் சொல்லுங்க பாஸ் என்கிற பாஸ்கரன்.

   /////வடக்கே அயோத்தியையும் பிடிங்கிக் கொண்டு தெற்கே ராமர்பாலத்தையும் பிடிங்கிக் கொண்டு, மத்தியில் தேஜாமகாலையும் [தற்போதைய தாஜ்மகால்] என பிடிங்கிக் கொண்டு தவிக்க விடுவது.////

   காஷ்மீரை இந்திய அரசு காப்பற்றும் பெயரில் எப்படி வழைத்துக் கொண்டதோ அதே போல்
   அல்லாமல் போர் புரிந்து ஒரு மன்னன்(பாபர்) ஒரு இடத்தில் மசூதி கட்டினான். அந்த இடத்திற்கு இஸ்லாமியர்களாக மதம் மாறிய இந்துக்கள் தொழுகை செய்யச் சென்று வந்தனர். இதை மறைத்து விட்டு அங்கு இந்துக்கள் இராமனை வழிபட சென்றதாக கதை விட்டீர்கள்.

   எப்படி காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமோ அதே போல் பாபர் மசூதி இருந்த இடம் இஸ்லாமியருக்கு சொந்தம். கொடுப்பதற்கு நீங்கள் தயாரா ?..

   ராமர் பாலம், ராமர் பிறந்த இடம் இவற்றையெல்லாம் உங்களிடம் கொடுப்பதற்குத் தயார். இராமன் என்று ஒருவன் இருந்தான் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால்.. சும்மா உங்கள் நம்பிக்கைக்கு எல்லாம் கொடுக்க முடியாது..

   அப்புறம் அது என்ன பாஸ் தேஜாமகால் கதை ?.. புதுசா இருக்கு ?.. அடுத்த கரசேவைக்கு தயாராகிட்டிங்க போல ?..

   வன்முறையை ஆரம்பித்து வைத்தது யார்? ..

   இங்கு நடக்கும் இந்து இஸ்லாமிய மோதல்களின் மூலாதாரம் என்ன ?..

   பாபர் மசூதி இடிப்புக்கு முன்னால் எங்காவது இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியிருக்கிறதா ?..

   உங்கள் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு முன்னால் எங்காவது இந்து முஸ்லீம் கலவரங்கள் வெடித்திருக்கிறதா ?..

   பதில் கூறவும் …

  • what is meanin of telling country will not develop. what relationship oriental things with Ramar temple and development of country. which the worker told you that they will start strike from thier work if ram temple has not to hindus.

 20. Have you read the original translation of the Baburnama

  Search this link with the key words:marking the birth-place of Rama

  http://www.archive.org/stream/baburnamainengli02babuuoft/baburnamainengli02babuuoft_djvu.txt

  Reg your பின்குறிப்பு – 2:

  Please read this work

  http://www.flipkart.com/constitution-jammu-kashmir-its-development-book-8175345209

  Further, see the last two pages of this attachment – which is the copy of the original letter of ascension to India signed by the then ruler.

  again a request to research your subjects before posting stuff on the internet

 21. வரலாற்றை அடிப்படையாக கொண்ட திப்பு சுல்தானின் தொலைக்காட்சி தொடருக்கு “சம்பவங்கள் யாவும் கற்பனையே” என்று டைட்டில் கார்ட் போட்ட நாட்டிலிருந்து இதை விட “நியாயமான” தீர்ப்பை எதிர்பார்த்த நாம்தான் முட்டாள்கள்.

 22. //தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும் //

  முதல் ஆளு நீங்கதான் போல….

 23. ராஜீவ் தவான் கூற்றை நான் ஏற்கிறேன். ஆனால் இந்து மத வாதிகள் அங்கு ராமர் கோயில் இருந்தது என்று வாதிடுகிறார்கள். அதனால்தான் உயர் நீதி மன்றம் இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறையை அங்கு ஆய்வு நடத்த அனுமதித்தது. ஆய்வின் படி பிரச்சினைக்கு உரிய இடத்தின் கீழே கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக லக்னோ உயர் நீதி மன்றம் கூறி உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. மேலும் ஆண்டுக்கு பிறகு என்ன நடந்தது என்று மட்டும்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று கூறுவது வேடிக்கையானது. முஸ்லிம்களுக்கு நல்ல தீர்ப்பை இஸ்ரேல்தான் கொடுக்க முடியும். வேண்டும் என்றால் வினவு முஸ்லிம் மக்கள் ஜெருசலம் செல்ல பண உதவி செய்யலாம்.

 24. அது எப்படி மூன்று லட்சம் வருசத்துக்கு முன் பிறந்த ராமர் டெலிவரி ஆனா இடத்தை மகாகனம் பொருந்திய நீதிபதி சர்மாவினால் துள்ளியமாக சொல்ல முடிந்தது? ரியலி கிரேட். டெலிவரி ஆனபோது பார்த்திருப்பாரோ ?

 25. இந்த தீர்ப்பு குறித்து பல பதிவுகள் விமர்சனங்கள், நாளேடுகளிலும் தொலைகாட்சிகளிலும், இடுகைகளிலும் இடப்பட்டுள்ளன. பெரும்பாலான பதிவுகள் ஒருசார்புடயணவாக உள்ளது. வினவின் மிகச் சரியான விமர்சனத்தை வரவேற்கிறேன்.
  பின் இணைப்புகள் அருமை
  பார்பனியத்தின் கடுமையான ஆதிக்கத்திற்கு நீதித்துறையும் தப்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவு. நீதிபதி கான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் நடுநிலையை நிருபித்துள்ளார். நீதபதி(???) சர்மா தன்னுடைய பார்பனியத்தை 120 % வெளிகாட்டியுள்ளார். விரிவான கட்டுரைக்காக ஆவலுடன்
  நன்றி

 26. That place is belongs to Hindu only if you take an example when moghals comes to india before thats whos land!? that is enough for judgement.

  vinavu this is really a good judgement if any thing wrong please go and seek the doctor in kilpak u need some kind of advice from them

 27. இந்த பதிவு பிரியாணிக்காக எழுத பட்டது போல உள்ளது அப்படின்னா ஈழத்துல தமிழ் மக்க இடாத தமிழ் மக்களுக்கு தருவாங்கள – வினவு வர வர வாச்டகுது அதனால தான் இங்க மழைக்கு குட ஒதுங்கறது இல்லா

 28. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:

  GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:

  “The area covered under the central dome of the disputed structure is
  the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”

  GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:

  “5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by
  Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.

  6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”

  இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாகக் கூறுவது ஒரு பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்.

 29. பாபர் மசூதி முடிஞ்சாச்சு… கரசேவகர்களே! கெளம்புன்கப்பா… அடுத்து காசி, மதுரான்னு ஏகப்பட்ட வேலை இருக்கு… கடப்பாரை எல்லாம் தயாரா…?

 30. க‌டப்பாறைக்குத்தான் ஜனநாயகம் வழிமொழிகிறது என்பதை நக்சலைட்டுகள் நிரூபிக்கவில்லை. மத நம்பிக்கையும் தேச பக்தியும் உள்ள இந்துக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். நீதிமன்றம் என்ற பெயரில் இது நடந்திருக்கிறது. அதே நேரத்தில் கடப்பாறையை விட ஒரு போஸ்டர் தீவிரவாதி ஆகி விட்டது எல்லா ஊர்களிலும். போஸ்டர் அடிக்கும் அச்சக உரிமையாளரை கூட மிரட்டுகிறார்கள். ஜனநாயம் போஸ்டருக்கு பயப்படுமா கடப்பாறைக்கு பயப்படுமா என்பதை போலீசும் நீதிமன்றமும் நிரூபித்து கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் ஆயுதம் ஏந்தினால் தீவிரவாதமாம். இது 92 இன் கரசேவகர்களுக்கு பொருந்தாது என்றால் தண்டகாருண்யாவில் ஆயுதமேந்தும் மாவோயிஸ்டுகளுக்கும் பொருந்தாதுதானே

 31. //The D. G. of Fyzabaa
  (H. E. Nevill) p. 173 says ” In 1528 AD. Babur came to Ajodhya (Aud) and halted
  a week. He destroyed the ancient temple” (marking the birth-place of Rama) “and
  on its site built a mosque, still known as Babur’s Mosque … It has two inscrip-
  tions, one on the outside, one on the pulpit ; both are in Persian ; and bear the date
  935 AH.” This date maybe that of the completion of the building.//

  மேலே குறிப்பிடது பாபர் நாமாவின் மொழி பெயர்ப்பு என்றால் 1.எச்.ஈ.நெவைலின் பெயர் ஏன் வந்தது?.

  2.பாபர் நாமாவில் 1528 கி.பி என்று குறிப்பிட பட்டு உள்ளதா?1528 என்றால் ஹிஜ்ரி 934
  ஆனால் கல்வெட்டு ஹிஜ்ரி 935 என்று கூறுவதாக சொல்லப் படுகிறது.அதற்கு ஒருவேளை மசூதி கட்டி முடிக்கப்பட்ட வருடமாக இருக்கலாம் என்ற விளக்கம் வேறு.அதுவும் அடைப்புக் குறிக்குள். இதுவும் பாபர் நாமாவில் உள்ளதா? இந்த சின்ன மசூதியை கட்டி முடிக்க ஒரு வருடம் ஆகுமா?

  அதனை கொஞ்சம் விளக்குங்களேன்.

  கொஞசம் யோசித்து பார்க்கலாம்.

  அயோத்தியில் ராமருக்கு பெரிய கோயில் இருந்தது என்றால் இராம வழிபாடு அத்ற்கு முன்பே ஆரம்பித்து இருக்க வேண்டும் அல்லவா?.

  1.மிகப் பழமையான இராமர் கோயில் எங்கே உள்ளது?.

  2.எப்போது ,யாரால் கட்டப் பட்டது?

 32. அதோ அந்த ஆலமரம் –
  ஐனூறு வருடங்கள் பழமையானது;
  ஒருவனுக்குச் சொந்தம்.
  ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
  நீதி மன்றத்தில் ஒரு வாதம் பதியப்பட்டது –
  ‘மூவயிரம் வருடங்களுக்கு முன்னால்
  எனது கொள்ளு ஸ்கொயர் பாட்டி
  வடை சுட்டு இந்த மரத்தின் கீழே
  விற்றுக் கொண்டிருந்தாள்.
  அதற்கு சாட்சி :
  வடை திருடிய காக்கை,
  காக்கையை எமாற்றிய நரி.
  ஒண்ணாம்ப்பு படிக்கும் முழந்தையை
  விசாரித்தாலும் நடந்த கதை சொல்லிவிடும்.
  அதனால் ஆலமரம் எங்களுடையது.’
  இன்று தீர்ப்பு வந்துவிட்டது.
  ஒண்ணாம்ப்பு குழந்தையும்
  மதிக்கக்கூடிய தீர்ப்பு :
  மரத்தைப் பிளந்து
  இரண்டாகப் பிரித்திடு.’
  – புதிய பாமரன்.

  • சரியான உவமைக் கதை புதிய பாமரன். பாட்டி வடைசுட்ட கதை கேட்டால் கூட மண்டையில் ஏறாது மத வெறியர்களுக்கு…சுப்ரீம் கோர்ட் புண்ணியவான்களும் இதையே உறுதி பண்ணிப்புட்டா என்ன ஆகும் ?

   ராமர் என்கிற கேரக்டருக்கு பிறந்த இடம் காட்டி உயிர் கொடுத்தாகி விட்டால், ராமாயணத்தின் ஆயிரத்து நூறு கிளைக் கதைகளும் உண்மை என்றாகும்.
   அப்புறம் இந்தியாவில் எங்கெங்கு மசூதியும், கோயிலும் பக்கத்தில் பக்கத்தில் உள்ளதோ அங்கெல்லாம் மசூதிகள் இடிக்கப்படும்.

   அவற்றுக்கெல்லாம் வக்காலத்து வாங்க அலகாபாத் கோர்ட் தீர்ப்பு தான் சாக்கு..

   பின் விளைவாக வரும் வன்முறைக்கு இந்த அரசுக்கு மாவோயிஸ்ட் பூச்சாண்டி மாதிரி இஸ்லாமிய தீவிரவாதப் பூச்சாண்டியும் காட்ட, அப்பாவி மக்களைக் கொல்ல, மக்களை அடக்க, அவர்கள் உரிமையைப் பறிக்க பயன்படும்.

   என்னத்த சொல்ல… வாலுக சனநாயகம்….

   • தோழரே,
    ர்ர்ர்ர்ர்ராமாயணக் கதையோ அல்லது பாட்டி வடை சுட்ட கதையோ, புரட்டுக் கதைகள் இந்த நாட்டில் நீதிகளை உருவாக்குகின்றன. ஒரேயொரு புரட்டு வடக்கே மசூதியை இடிக்கிறது; கோயிலைக் கட்டுகிறது. தெற்கே குரங்குகள் கட்டின பாலத்தைக் காப்பாற்றுகிறது. உயரே (காசுமீர்) ஒரு மானிலத்தையே கடித்துக் குதருகிறது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மதராசில் முட்டையடி வாங்கிய புரட்டுக்கதை வக்கீல் தனது ‘டஸ் புஸ்’ வாதத்தை அவிழ்த்து விட வரவில்லையே என்பது ஒன்றுதான் குறை. – புதிய பாமரன்

 33. பாபரி மஸ்ஜித் என்பது கோயிலை இடித்து கட்டப் பட்டதா? என்பதற்கு ஆதாரம் இல்லை இது அலகாபாத நீதி மன்றத்தின் தீர்ப்பிலும் கூறப்பட்டுள்ளது.

  அதே நேரம் 1992ல் மஸ்ஜித் தகர்க்கப் பட்டது என்பதற்கு ஆதாரங்களுக்கு குறையில்லை, அதை பற்றி மௌனம் சாதித்த நீதிபதிகள் …. நீதியை குழி தோண்டி புதைத்துள்ளார்க்ள் .

  நம்பிக்கை அடிப்ப்டையில் சொத்துரிமை வழக்கு தீர்ப்பு என்பதைவிட் ஒரு பெரிய முட்டாள்தனமான தீர்ப்பு உலக வரலாற்றிலேயே முன்னுதாரணமற்றது..

  பெரும்பான்மை அடிப்ப்டையில் நீதி என்பது, நீதி எனும் கண்ணியமான வார்த்தையை கொச்சைப்படுத்தி விட்டது…. கேவலம்… வெட்கக் கேடு … கையாலாகாத காலிதனம்.

  ஒரு மஸ்ஜிதோடு பல்லாயிரக் கணக்கில் உயிரைக் குடித்த கயவர்கள், நீதிமன்ற்ம் தீர்ப்பு சொல்ல இயலாது என்று கூறிவந்ததையும் கூட இந்த நீதிபதிகள் பொய்பிக்க செய்து விட்டனர்.

  மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

  இவர்கள் இங்கு எது செய்தாலும் கேள்வியில்லையென்று தோற்றமளித்தாலும் நிச்சயமாக ஒரு நாள் மறுமை நியாய தீர்ப்பு என்று உள்ளது அதில் இருந்து ஒருவரும் தப்பவே இயலாது.

  எச்சரிக்கை…….

 34. //this is the original annexure of yesterday’s judgement.

  http://www.rjbm.nic.in/dvs/Final_Judgements_&_Annexures_Per_Hon%27ble_Mr._Justice_Dharam_Veer_Sharma_pdf_FILES_FOR_UPLOADING/Annexures_PDF/Annexure%20V%20-%20Page%2015%20to%2059.pdf
  //

  இந்த இணைப்பை பார்த்தேன்.என்ன புரிகிறது என்றால் இது அயோத்தி விஷ்னு ஹரி கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்புகள்.
  இதற்கும் அந்த பிரச்சினைக்கும் உள்ள தொடர்பை விளக்கலாமே திரு விஜய்?

 35. its a worst article….. if u want to get publicity then comment abt muslims… but u know that hindus will newr fight or begave like muslims.. thats y ur teasing hindus….

  ippo kooda hindus ah kora solli pichai eduthu thinnum naaye nee ellam manusana da?

  ore indiakulla ethukku muslm ku thani sattam????? can u write articale abt this??

  muslimsku ethuku ekapatta wife?? & delivering every year kid… yyy??? they will say masha allah we need to increase our population…..

  what the hell…. stupidity/…. i hate muslims..

  this artical -100

  • //ore indiakulla ethukku muslm ku thani sattam????? //
   ஆமாம்..அருமையா கேட்டீங்க!! ஒரே இந்துமதத்துக்குள்ளே பாப்பானுக்கு மட்டும் தனியா எதுக்கு பூனூல் ? பாப்பாத்தியை பாப்பானுக்கு மட்டும்தான் கட்டிக் கொடுக்கணுமா? மத்த இந்தூஸ்லாம் மனுஷாள் இல்லியா? சரியாக் கேட்டே ஓய்..

  • //muslimsku ethuku ekapatta wife?? & delivering every year kid… yyy??? they will say masha allah we need to increase our population…..//
   ஓய்..அம்மாஞ்சி..இந்தக் கேள்வியே 100 வருசப் பழசான கேள்வி..இதுக்கு எத்தினிவாட்டிதான் வெளக்கம் கொடுக்கிறது? சென்சஸ் ரிப்போர்ட்லாம் பார்க்கிறியோன்னோ? 10 வருசத்துக்கு ஒருக்கா சொல்றா…முஸ்லிம் ஜனம் பெருகிருக்குன்னு சென்ஸஸ்ல ஏதாச்சும் நிரூபணம் இருக்கா ஓய்?

   அடுத்து நெறய்ய பொண்டாட்டி கெட்டிக்குறா?..இது எல்லா மதத்திலேயும் ரொம்ப ரொம்ப கம்மியான அளவில் இன்னும் நடக்குது…சரவணபவன் அண்ணாச்சி, கிரூபானந்த வாரியார், கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி, வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். எம் ஆர் ராதா, என்.டி.ராமாராவு…பிரபுதேவா யோவ்..தெரிஞ்ச எல்லாமே இந்துவால்லா இருக்கு..ரெண்டு பொண்டாட்டி சமாச்சாரம்..

   சரி..எல்லா முஸ்லிம்களும் நிறைய சம்சாரம் கட்டுறான்னு வச்சுக்குவமே..இது சாத்தியமா? எல்லா சமூகத்திலேயும் 50 ஆண் இருந்தா 47 ஓ அல்லது 52 ஓ பெண் இருக்கும்..அல்லது 50 ஆகவே இருக்கும்..எல்லா ஆண்களும் பலதார மணம் செய்திட்டா இந்த 50 கணக்கே சரியா வருமா? ஓய்…ஆளுக்கு 2 கட்டிக்கிட்டா 25 பேருக்கு பொண்ணு கிடைக்காதே? இது சமூகப் பிரச்சினையா ஆயிடாதா? என்னமாவது சொல்லிக்கிட்டு திரியப்படாது..
   அடுத்து..பாப்புலேசன ஏத்துறாளாம்..லூசு…! பலதார மணம் செஞ்சிட்டாலே 10 மாசம் என்ன குறைஞ்சாயா போயிடும்? அல்லது வாயக்கட்டி வகுத்தக் கட்டிப் பாடுபடுவது அடுத்து அடுத்து பெத்துக்கிட்டா இன்னும் சிக்கலாயுடும்னு முசுலிம்க்கு தெரியாதா என்ன? அவங்கள எல்லாம் உன்ன மாரி கூமுட்டன்னு நினைச்சேளா?

  • கண்ணா! ஒருத்தனுக்கு எத்தனை புள்ளன்னு பாக்காத. ஒருத்திக்கு எத்தன புள்ளன்னு பாரு. உனக்கு கணக்கு புரியும்.

 36. தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நியாமாக இந்த இடம் இஸ்லாமியர்களுக்குரியதாகத் தான் தீர்ப்பளித்திருக்க வேண்டும். இவர்கள் சொல்வது போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் பிறந்த இடம் எனவே ராமனுக்குத் தாம் சொந்தம் என்றால், என் தாத்தா பிறந்த இடம் என வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தை நான் உரிமை கொண்டாட முடியுமா?
  அதே போல, நாளை எந்த இடம் வேண்டுமானாலும், அங்கே உள்ளக் கட்டிடத்தை இடித்துவிட்டு வழக்காடினால், உண்மையான உரிமையாளனுக்கும், இடித்தவனுக்கும் சமமாகப் பங்கு போட்டு கொடுத்து விடுவார்களா?

  ஆனால் இன்னொரு வகையில் யோசித்தால், நீதிபதிகள் நியாயத்தைக் காட்டிலும், சட்டம் ஒழுங்கைப் பற்றி யோசித்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என முடிவெடுத்து இத்தகையத் தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர் எனத் தோன்றுகிறது. எனவே நீதிபதிகளை தவறு இழைத்தவர்களாகப் பார்க்க முடியவில்லை.

  • காலிகளின் கையில் இன்னும் பல மசூதிகளின் லிஸ்டு உள்ளது. நாளை கடப்பாரையால் எல்லா மசூதிகளையும் கரசேவை செய்துவிட்ட பிறகு , அப்பொழுதும் பிரச்சினை வேண்டாம் என காவித்தீர்ப்பு எழுதப்படுவதை ஆமோதிக்கிறீர்களா!. உங்களின் கூற்றுப்படியே பிரச்சினை செய்கிறவர்கள் யார் என்றுதான் தெரிகிறதே. அந்த நாயைத் தடை செய்வதில் என்ன பிரச்சினை.

   • நான் இந்த தீர்ப்பை முழுமையா ஏத்துக்கலைன்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.

    இனிமேல் பாபர் மசூதி சம்பவம் மாதிரி, எதிர்காலத்தில எதுவும் நடக்காம இருக்க இந்த தீர்ப்பு ஒண்ணும் பண்ணலங்கறது சரிதான். ஆனால் இப்போ இந்த இடம் முழுக்க இஸ்லாமியர்களுக்குத்தான் சொந்தம்ன்னு தீர்ப்பு வந்திருந்தா, யோசிச்சு பாருங்க.. மறுபடியும் எவ்வளவு இடத்தில வன்முறை நடந்திருக்கும்ன்னு. அந்த வகையில்தான் இந்த நீதிபதிகளை குற்றம் சொல்ல முடியாதுன்னு சொன்னேன். மேலும் நாட்டோட அமைதி, சில நியாய தர்மங்களைக் காட்டிலும் முக்கியமாகப் பட்டிருக்கலாம்.

    இனிமேல் இந்த மாதிரி எதுவும் நடக்காம இருக்க இது மாதிரி பிரச்சினைகளை ஆரம்பத்திலயே தடுக்கரதுதான் வழின்னு தோணுது. இதை செய்ய வேண்டியது அரசாங்கம்தான். பாபர் மசூதி ரத யாத்திரையின் போதே இதை தடுத்து அனைவரையும் கைது பண்ணியிருந்தா இந்த பிரச்சினைக்கு இடமே இருந்திருக்காது.

 37. தீர்ப்பில் வினவிற்கு தேவையான பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி இருக்கிறீர்கள். மற்றவையையும் பாருங்க சார்..
  //சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. //
  இந்த முதல் பாய்ண்ட்டை சொன்ன நீங்க…இரண்டாம் பாயிண்ட்டை ஏன் சொல்லல… இதோ அது..
  “It is not proved by direct evidence that premises in dispute including constructed portion belonged to Babar or the person who constructed the mosque or under whose orders it was constructed.”

  நீங்கள் நாசுக்காக வெட்டிய அடுத்த பகுதி..
  //ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. //
  இதோ..அதன் உண்மையான ஜட்ஜ்மெண்ட்
  Mosque was constructed over the ruins of temples which were lying in utter ruins since a very long time before the construction of mosque and some material thereof was used in construction of the mosque

  பார்த்து சொல்லுங்க வினவு..!

  • கபிலனது கேள்விக்குப் பதில்,

   http://poar-parai.blogspot.com/2010/10/blog-post.html

   வெட்டி ஒட்டியெல்லாம் இல்லை, தீர்ப்பின் மையமான எல்லா வாதங்களையும் அவற்றின் முரன்பாடான முடிவுகள் எப்படி ஆர் எஸ் எஸ்க்கு சாதகமாக வளைக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்தக் கட்டுரை சொல்கிறது.

  • @கபிலன்
   விளக்கம் .. விளக்கம்…

   1. ////It is not proved by direct evidence that premises in dispute including constructed portion belonged to Babar or the person who constructed the mosque or under whose orders it was constructed.///
   சரி .. பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றார்கள் என்கிறீர்கள் ..
   பரவாயில்லை யார் கட்டினால் என்ன ?.. அது மசூதி தானே ?. அதில் எந்த சந்தேகமும் இல்லையே ?.. அது இஸ்லாமியர்களுக்குத் தான் சொந்தம். அடுத்து மிக முக்கியமாக பார்க்கவேண்டிய விசயம், கற்பனைக் கதாபாத்திரமான ராமன் பெயரில் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது உயிருடன் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் கொண்ட பாபர் பெயரில் அந்த மசூதி இருப்பது பெரிய தவறு எதுவும் இல்லை. மேலும் அந்த மசூதியின் ஆயுள் குறித்தும் பாபரின் ஆட்சிக்காலம் குறித்தும் தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே அது பாபர் மசூதி என்று அழைக்கப் பட்டுள்ளது.

   2. ///Mosque was constructed over the ruins of temples which were lying in utter ruins since a very long time before the construction of mosque and some material thereof was used in construction of the mosque /////

   இந்த வாக்கியங்களில் நீங்கள் அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டிய பகுதி –> ”utter ruins since a very long time before the construction of mosque “ அதாவது மசூதி கட்டப்படுவதற்கு பலவருடங்களுக்கு முன்னேயே சிதிலமடைந்த கோவிலின் சில பொருட்களை அவர்கள் மசூதி கட்ட பயன்படுத்தினர்.
   *************************************
   இந்த விளக்கம் போதுமா ?.. இன்னும் கொஞ்சம் வேணுமா ?..

  • ////சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. //
   இந்த முதல் பாய்ண்ட்டை சொன்ன நீங்க…இரண்டாம் பாயிண்ட்டை ஏன் சொல்லல… இதோ அது..
   “It is not proved by direct evidence that premises in dispute including constructed portion belonged to Babar or the person who constructed the mosque or under whose orders it was constructed.”//

   இப்படி அது ஆணித்தரமாக நிருபிக்க இயலாது என்பதால் மசூதியை தூக்கிவிடலாமா?

   ராமன் பிறந்தது, அங்குதான் பிறந்தான் என்பது, அங்கு கோயில் இருந்தது, ராமனுக்கு கோயில் இருந்தது, அது இடிக்கப்பட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பவையெல்லாம் நீதிமன்றத்தாலேயே நிருபிக்கப்பட்டவையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லையே? பிறகு எப்படி மசுதியின் மைய கோபுரத்தில்தான் ராமன் பிறந்தான் என்று அதனை இந்துக்களுக்கு நீதிபதி ஒதுக்கினார்கள்?

   வேறு ஒன்றுமில்லை, அது இந்துக்களின் நம்பிக்கையாம்? எல்லா இந்துக்களிடமும் கேட்டார்களா இல்லை ஆர் எஸ் எஸ் மட்டுமே இந்து என்று நினைத்தார்களா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

   அது என்னப்பா முஸ்லீம்னா மட்டும் ஆதாரம் வேண்டும் இந்துன்னா வெறும் நம்பிக்கை மட்டும் போதும்?

   அப்படித்தான் செய்வோம் என்றால் உன் நாட்டோட பேர மாத்திகோ மதச்சார்பற்ற நாடுன்னு ஏமாத்தாத.

   இவையும் கூட அது பாபர் கட்டியதுன்னு நிருபிக்க இயலாததைக் குறித்துதான். அது பாபர் கட்டியது இல்லை என்றால் கோயில் என்ற ஒன்று பாபரால் இடிக்கப்பட்டதும் இல்லையென்றாகிறது. எனவே கோயில் இடிப்பும் பொய் எனவே ஆர் எஸ் எஸ்ன் கூற்றும் பொய் என்றாகிறது.

   இன்னொரு பக்கம், மசூதி என்ற ஒன்று மிகப் பெரிதாக அங்கே இருக்கிறது அந்த ஆதாரம் போதாதாம் இவர்களுக்கு.

   ///
   நீங்கள் நாசுக்காக வெட்டிய அடுத்த பகுதி..
   //ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. //
   இதோ..அதன் உண்மையான ஜட்ஜ்மெண்ட்
   Mosque was constructed over the ruins of temples which were lying in utter ruins since a very long time before the construction of mosque and some material thereof was used in construction of the mosque//
   //

   இதத்தானா வினவும் சொல்லிருக்கு? கபிலனுக்கு ஆங்கிலத்தில் படிப்பதிலும் பிரச்சினையா?

  • @கபிலன்
   விளக்கம் .. விளக்கம்…

   1. ////It is not proved by direct evidence that premises in dispute including constructed portion belonged to Babar or the person who constructed the mosque or under whose orders it was constructed.///
   சரி .. பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றார்கள் என்கிறீர்கள் ..
   பரவாயில்லை யார் கட்டினால் என்ன ?.. அது மசூதி தானே ?. அதில் எந்த சந்தேகமும் இல்லையே ?.. அது இஸ்லாமியர்களுக்குத் தான் சொந்தம். அடுத்து மிக முக்கியமாக பார்க்கவேண்டிய விசயம், கற்பனைக் கதாபாத்திரமான ராமன் பெயரில் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது உயிருடன் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் கொண்ட பாபர் பெயரில் அந்த மசூதி இருப்பது பெரிய தவறு எதுவும் இல்லை. மேலும் அந்த மசூதியின் ஆயுள் குறித்தும் பாபரின் ஆட்சிக்காலம் குறித்தும் தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே அது பாபர் மசூதி என்று அழைக்கப் பட்டுள்ளது.

   2. ///Mosque was constructed over the ruins of temples which were lying in utter ruins since a very long time before the construction of mosque and some material thereof was used in construction of the mosque /////

   இந்த வாக்கியங்களில் நீங்கள் அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டிய பகுதி –> ”utter ruins since a very long time before the construction of mosque “ அதாவது மசூதி கட்டப்படுவதற்கு பலவருடங்களுக்கு முன்னேயே சிதிலமடைந்த கோவிலின் சில பொருட்களை அவர்கள் மசூதி கட்ட பயன்படுத்தினர்.

   *************************************
   இந்த விளக்கம் போதுமா ?.. இன்னும் கொஞ்சம் வேணுமா ?..

  • கபிலன் நீங்க ரொம்ப விவரம்னு காட்ட ட்ரை பன்றீங்க … ஒரு விஷயம் யோசிங்க
   கண்ணுக்கு தெரிஞ்சு இருந்த கட்டிடத்திற்கு ஆதாரம் கேட்கிற கூமுட்டை நீதிபதிகள், ஒரு கதாபாத்திரம்…. அது உண்மையா..? பொய்யா ..? யன்று இந்துகளுடதிலே விவாதத்தில் இருக்கும் பொழுது அதற்கு ஆதாரம் கேட்காமல் இங்கதான் பிறந்தாரு .. அங்கதான் மோண்டாருனு சொல்லி ஒரு அநீதியை தீர்ப்பாக கொடுதிர்கிரார்கள்.

 38. If you have guts answer these simple questions
  1. Where Jesus Born? Did he come alive after he died? what is the proof?
  2 Where Nambi born? what is the proof?
  3.If US soldiers build a church over a Mosque(say destroyed by bombing) in Afghan, Who will be the real owner of that land?
  4.Can you build a hindu or sikh or Budha temple near jeruselam or mecca mathina(may be by war/invasion)

  • திசை திருப்புற வேலைய அப்புறம் வச்சுக்கலாம்..
   நம்ம பாரத மாதவை கீப்பா வச்சிக்கினு ஒருத்தன் அம்மாம் பெரிசா அண்ணா மேம்பாலத்தூக்குக் கீழே கட்டி இருக்கானே அங்கிள் சாம்..
   அந்த இடமே முன்னால பத்ரகாளி அம்மன் இருந்த இடம்தான். இது பற்றிய குறிப்புகள் பத்ரகாளி வலங்கைமாலைன்னு ஒரு ஏட்டுச்சுவடியில் இருக்கு.
   1) அதனை மீட்க, கரசேவை செய்து அமெரிக்க தூதரகத்தை இடிக்க வரத் தயாரா? சரியான வீரனா இருந்தா ராமகோபாலனை கடப்பாரையோட வரச்சொல்லு.

   கட்டாய்மா 2 / 3 இடம் நமக்கு உறுதி..

   கோவில் என்ன..பெருசா கோபுரமே கட்டிரலாம்..பத்ரகாளிக்கு..ஹார்ட் ஆப் த சிட்டில?

   • நாளைக்கு இந்தியன் தலைமையில் கரசேவை நடக்கப் போகுது ,,,, எல்லோரும் அண்ணன் இந்தியனைப் பார்த்து கடைசியா கை தட்டுங்க … இந்து வெறியர்களே … கடப்பாரையை கூர் தீட்டுங்க …அண்ணன் இந்தியன் அழைக்கிறார் …

   • நம்ம பாரத மாதவை கீப்பா வச்சிக்கினு ஒருத்தன் அம்மாம் பெரிசா அண்ணா மேம்பாலத்தூக்குக் கீழே கட்டி இருக்கானே அங்கிள் சாம்..????????????????

    what a bull shit????

    eluthumbothu konjam illa romba romba mosama eluthuringa…..

    shame on u guys….

    • அட! இவங்ககிட்ட போய் மரியாதையான விவாதத்த எதிர்பார்க்குறீங்களே!! இதெல்லாம் Provoke-ஆ இருக்கும்… 😉

    • அய்யோடா…இது மோசம்னா எப்புடி மோசம்னு சொல்லு.. 1947க்கு முன்னாடி பிரிட்டிஷ்காரனுக்கு மட்டும் கீப்பா இருந்த பாரத்மாதாவை அவன்கிட்ட இருந்து விடுவிச்சுட்டு காட்&டங்கல் மூலமா எல்லோரையும் (எல்லா ஏகாதிபத்தியங்களையும்) சமமான புருஷன்களா நம்ம மாதா கருதும் நிலையத்தானே ஓய் சொல்றோம்!..அதாவது அழிக்கப்படும் இறையாண்மை..
     இப்ப 123 ஒப்பந்தம் என்ன சொல்லுது? அமெரிக்க கள்ளப் புருஷன் சொல்றதுக்கெல்லாம் ஆடனும் நம்ம மாதா.. இதுதானே நம்ம மானம் மருவாதி எல்லாம் போன கதை? இன்னும் தெளிவாப் புரியணும்னா ஒரு ஆள்கிட்டே கேக்கலாம்..அவர் இப்ப நல்ல நிலைமையில் இல்ல…இருந்திருந்தா பாதுகாப்பு அமைச்சரா இருக்கச்சே அங்கிள் சாம் ஊருக்குப் போனப்ப ‘நான் இந்தியாவோட அமைச்சர்’னு சொன்ன பிறகும் டவுசரக் கழட்டுடான்னு சொன்னானே அந்தக் கதைய அழகா ரகசியமா சொல்வார்..பாவம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் …இப்ப சொல்லும் நிலையுல இல்ல… நம்ம என்ன பட்ஜெட் போடனும்..எத்தனை பேரை வேலைய விட்டு தூக்கணும்..எத்தன ரேசன் கடைய மூடனும்..என எல்லாத்தையும் முடிவு பண்ற அங்கிள் சாமையும் அவனுக்கு விளக்குப் புடிக்கிற மன் மோகன், போட்டியாளர் அத்வானியையும் சொன்னா கோபம் மட்டும் வருது!!! உண்மையான கோபம் அவனுக மேலதானே வரணும்!!

 39. ராமர் பிறந்த இடம் கண்டுபிடித்தவர்கள், அவன் பிறப்பைக்
  கண்டுபிடித்தார்களா? மூன்று மனைவியர் இருந்தும் அறுபதாயிரம்
  வைப்பாட்டிகள் இருந்தும் யாருக்குமே முறையான
  பிள்ளை இல்லையே வேள்வியில்பிறந்தான், அந்த வேள்விதான்
  எப்படிப்பட்டது,என்று யார்க்கும் தெரியாதா?
  இரவுபூரா குதிரையைத் தழுவிக்கிடக்கும் வேள்விதானே!

  அடேங்கப்பா!குதிரையையா?அதுவும் மூணு பொண்டாட்டிகளுமா?

  • அதாவது த.ராமன் இல்லை..கு.ராமன். மசூதி இருந்த இடத்திலேதான் குதிரைகளைக் கட்டி வச்சிருந்தாங்களா?

 40. இனி,
  கடப்பாறைகள் நிம்மதியாகலாம்
  நீதியின் ஆசியிருக்கென்று.
  இனி,
  நீதி தேவன்களும் நிம்மதியாகலாம்
  கசங்காமல் காவித் தீர்ப்பெழுதலாமென்று.

  இனி,
  அத்வானிகள் நிம்மதியாகலாம்
  ஆள்வதும் நாம்தானென்று
  இனி,
  மன்மோகன்களும் நிம்மதியாகலாம்
  அமெரிக்க சேவகத்திற்கு அலட்டலிருக்காதென்று

  இனி,
  முஸ்லீம்களும் நிம்மதியாகலாம்
  கடப்பாறைகள் பிளக்கப் போகும் மண்டைகளுக்கு
  சொர்க்கம் உறுதியென்று

 41. MAKE A BRAHMIN AS PRIME MINISTER THEN ONLY INDIA WILL REMAIN AS SECULARNATION FOR EVER!
  BRAHMIN NEHRU AS A SECULARIST….BRAHMIN SHASTRI AS A NATIONALIST….BRAHMIN INDRA GANDHI AS FEMINIST….BRAHMIN VAJPAYEE AS A HINDU NATIONALIST…BRAHMIN NARASIMHA RAO AS A GLOBALIST…ON THE OTHER HAND THEY ALL WERE SECULARIST!

 42. அறிவியல் பூர்வமாக இயேசு எங்கு பிறந்தார் என்று பகுதாய்து ஆதாரத்தோடு சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறோம் . எதிர்க்க துணிந்தால் அணைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் எதிருங்கள் அல்லது அனைவரது நம்பிக்கைக்கும் மதிப்பளியுங்கள் . கோழை எனில் விட்டு விடுங்கள் . அமெரிக்க வீரர்கள் ஈராக் அல்லது ஆப்கானில் இடிந்த மசூதியின் மீது தாங்கள் வழி பட ஒரு சர்ச்ஐ கட்டுவதாக வைத்துகொள்வோம் , பிற்காலத்தில் அவ்விடம் யாருக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்குவீர்

  • //தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.//

   அப்போ அல்லாத்தையும் கடப்பாறையால ஒடைச்சிருவோமா நைனா.

  • why the hell u r asking abt Jesus here. The dispute is between Hindu and Muslim. Even Vinavu is not mentioned abt Christians. Dont you have brain to think? Try to reply in a proper manner or keep quiet.

   • Hey Antony…

    why should not we talk about Jesus ? Who are you to say that. If others are fighting you will simply look at them is it???????? Its a common debate. Who ever can talk about anything.

    So you are silently watching the fight between Hindus and muslims and if any one says about Jesus you will enter. Are you a true citizen????

    Dont think whether a person is hindu or muslim. Think as a fellow human being at first.

    All the bad words in this world are formed to scold ANTONY the idiot.

    Also the contents of many people are against national integrity.

    First try to understand. Hinduism,budhism,jainism born in India. Islam invaders spreaded Islam in India latter European people converted (still converting by giving bribe, food,wine etc) Indians to christians. Why the hell you are converting people.

    You people are saying that Jesus reborn on Easter. If so where is he now? Jesus is not God. He jus did some magics among people. and developed a religion. Many kings altered Bible content per their wish. All are stupid stuff.

    All are commenting about Hindus in their own land. Can you able to criticise about Islam in Pakisthan or any other arab country? the next moment you will be killed.

    But in india you are openly criticising Hindu’s beleifs. You have this much enough freedom in india.

    There are many auspicious/foolish beliefs in all religions. All religions are equally good and worse.

    Be a human Atfirst and respect others as well.

    • Hey True Indian,

     //Who are you to say that. If others are fighting you will simply look at them is it???????? //
     What do u want me to say. Pour some oil in the debate so that it can burn more?

     //Its a common debate. Who ever can talk about anything. //
     I dont think its a common debate. This article clearly talks abt the people(?) who demolished the Baber masgit. U people taking these chance to scold other religions without reading the content of the message. This shows ur culture and etc.

     //So you are silently watching the fight between Hindus and muslims and if any one says about Jesus you will enter. Are you a true citizen????//
     I’m a true citizen of India, and I know my limits to enter the problems of others (my fellow Indians). I’m not pouring any oil and I’m not scolding any religion by using this chance. So if I scold like you, then only I can become a true citizen of India? If so according to your word I’m not a good citizen.

     //All the bad words in this world are formed to scold ANTONY the idiot.//
     I’m taking this word with a broader mind, coz I’m still thinking you are a brother to this idiot.

     //You people are saying that Jesus reborn on Easter. If so where is he now? Jesus is not God. He jus did some magics among people. and developed a religion. Many kings altered Bible content per their wish. All are stupid stuff.//
     Jesus is not reborn. Jesus has raised from the dead, and he has gone to heaven on the 40th day. If you dont know abt bible, pls dont give wrong sentence. I’m not criticizing that Raman is not a God and so and also no one here… But U R just criticizing that Jesus is not a God and keep on spitting on it. This shows your maturity level. I’m not going to criticize on Hinduism as u did against us. I’m still giving respect to your beliefs.

     so at the end I’m just repeating your words //There are many auspicious/foolish beliefs in all religions. All religions are equally good and worse.Be a human Atfirst and respect others as well.// Just read your own words against your comments.

     My God Bless You and Your Family.

  • பாபரிநாமா என்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோயில்களை இடித்தாகச் செய்திகளோ குறிப்புகளோ இல்லை அதே நூலில் 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹுமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் அருமை மகனே! வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமையாக அமைத்துக்கொள் .நீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள்.தப்பெண்னங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்கள் எல்லா பிரிவினகளும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்பு கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும் .நீ மற்ற சமூகத்தினரின் வழிப்பாட்டுதலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக்கூடாது.நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பாவனாக விளங்க வேண்டும்.இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபேறும் இன்றைய காவிகளின் தீர்ப்பையும் 500 ஆண்டுகளுக்கு முந்தய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டு பாருங்கள் இவனா இராமர் கோயிலை இடித்திருப்பான்?

   • Excellent Mr. Hyder Ali,

    what you say is hundred percent correct. We have number of examples for such wonderful personalities in Islamic tradition. Many Muslim kings respected the pluralistic nature of the country.
    We should bring to the fore such good and positive elements which would unite people.

    thank you

    Dr. A. Samy

 43. தீர்ப்பு 8189 பக்கங்களாம். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். ஒரு கழுதைக்குக்கூட பத்தாது.

 44. இருதினங்கள் முன்புதான் அருந்ததிராய் – கரண் தபார் விவாதம் படித்தேன். We have to rephrase the Preamble of the Constitution of India as “Corporate Hindu Satellite State” என்றவாறு கூறியிருந்தார். நேற்று மாலை மீண்டும் ஒரு நிரூபணம். என்ன பொருத்தம்

 45. அட நீங்க வேற. கோசலைக்கு பிரசவம் பாத்தவரின் மறு ஜென்மம் தான் சர்மா. ராமனின் தொப்புள் கொடியை வெட்டியவரின் மறுஜென்மம்தான் இந்த அகர்வால். பயப்படவேண்டாம். இதுவும் இந்து நம்பிக்கைதான்.

 46. முஸ்லீம்களுக்கு அல்வா
  அத்வானிகளுக்கு சால்வா
  வழங்கியவர்கள் கோல்வா (ல்கரின் வாரிசுகள்)

 47. //மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

  மிக சிறப்பான கட்டுரை, மதவெறியர்களுக்கு செமையான சவுக்கடி.

  எனக்கொரு யோசனை………………..

  பாரத மாதா கி ஜேய் இயக்கம்

  இந்த நாட்டின் பாரத மாதவும் இந் தேசியத்தாயுமான எங்கள் அன்னை அத்வானி தற்போது குடியிருக்கும் வீட்டில் தான் 1000000 ஆண்டுகளுக்கு முன் (ராமன் 9 லட்சம் அதை விட சீனியர்) பிறந்திருப்பதாக கனவில் வந்து கூறினார். ஆகவே உடம்பில் இந்து / இந்திய ரத்தம் ஓடுகின்ற சொரணையுள்ளவர்கள் கூடவும். வழக்கு வருமென்ற கவலை வேண்டாம் . இப்போது போலவே மூன்று பங்கு பிரித்து தரப்படும்.

  அலகாபாத்து மாண்பூஊஊஊஊஊஊஊஊஊஊஉ மிகி நீதிபதிகளுக்கு நன்றி

  கலகம்

 48. katurai miga nerthiyaga ezhudapatirukiradu. ida padichitu Allahabad Court suo motu modificationku othukanum. illana avanlam naka pudikigitu saganum. Needimandram Nadalumandamendu makal prechanaikai kelikoothakugirargal. kadaparaiyala idichavanukum theerpu sonnavangalukum enda vithiyasamum illa. ivanunga mandaila nangunu makal kadaparaya potathan ellame saripatu varum. anda nallum romba thoorathula illa.

 49. நம்பிகை மற்றும் மத உணர்வுகளின் அடிப்பதையிலேயே கொடுக்கப்பட்ட தீர்பாகவே இது இருக்கிறது… விசாரித்து வழங்கப்பட்ட தீர்பாகவே இல்லை…. இனி வரும் காலங்களில் நீதிமன்றங்கள் முலம் நியாயமான தீர்ப்பு வரும் என்பது கேள்வி குறியே!!!!!

 50. இப்போ இந்திய மதச்சார்பற்ற நாடு இல்ல ,இந்து நாடு தான்னு அறிவிச்சா என்ன விளைவுகள் ஏற்படும்..அது மாதிரி செய்ய முடியுமா?

 51. இன்றைய ஜனநாயக ஆட்சியில் இந்த காலக்கட்டத்தில் இந்திய அதிகார மையங்களில் பார்பனர்களுடைய பிடி தளர்ந்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் தன்கூட்டம் அதிகாரத்திற்கு வர முஸ்லிம்களை பொது எதிரியாக காட்டி இந்து மக்களை தன் இன மக்களின் தலைமையின் கீழ் ஒரு அணியாய் கொண்டுவர உருவாக்கப்பட்ட பிரச்சனைதான் பாபர் மசூதி பிரச்னை.(மற்ற இந்து முஸ்லிம் பிரச்சனைகள் எல்லாம் இப்படி உருவாக்கப்பட்டதுத்தான்) இதனால் தாங்கள் உருவாக்கிய ஏற்ற தாழ்வு ஜாதி அயோக்கியத்தனங்கள் மறைக்கப்பட்டு இந்து என்று ஒரு அணியில் பெரும்பான்மையோர் திரளுவார்கள். இதனை வாக்கு அறுவடையாக செய்து அதிகாரத்தை கைப்பற்றுவது. இதுதான் பார்பனர்களின் நோக்கம் கனவு. இதில் வெற்றியும் கண்டார்கள். எந்த காலக்கட்டத்திலும் அதிகார மையங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறையாமல் இருந்ததுததான் பார்பனீயத்தின் வெற்றி மற்றும் பார்பனீயத்தின் பாதுக்காப்பும் கூட. இதுதான் அவர்களின் வரலாறு. அந்த வரலாற்றை திரும்ப எழுத துடிக்கிறார்கள். இது புரியாமல் கவைக்கு உதவாத காரணங்களை சொல்லி நாம் சண்டை செய்துக்கொண்டிருந்தால் அது கூட பார்ப்பனியத்தை வளர்கவே செய்யும். ஏனென்றால் பார்பனீயம் எதிர்பார்ப்பது இந்த சண்டை சச்சரவுகளைத்தான்.

 52. பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே அந்த இடத்தைப் பங்கிட்டு கொடுத்த லக்னோ உயர்நீதி மன்றத்தைப் போல், டில்லி நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடுத்தவர்கள் டில்லி உச்சநீதி மன்றத்தில் உரிமை கோரி வழக்கு தொடுத்தால், மூன்றி ஒரு பகுதியைப் பிரித்து தருவார்களா?

 53. கேலிக்குரிய இந்து பாசிச பயங்கரவாத தீர்ப்புகளும், கட்டைப்பஞ்சாயத்து செய்யும் சட்டமும் நீதியும்

  பதிவேற்றியது பி.இரயாகரன் Saturday, 02 October 2010 08:53 பி.இரயாகரன் – சமர் 2010

  400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது.
  தீர்ப்பைச் சுற்றி வளைத்துச் சொன்னது, இந்திய இந்துத்துவ பார்ப்பனிய நாடு. யாரும் இதற்கு எதிராக வாலாட்ட முடியாது. இப்படி இந்துத்துவ காவிகளின் பாசிசப் பயங்கரவாத செயல்கள் சரியானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை அவர்கள் சொன்ன விதம் தான் வேறு. இந்து பாசிட்டுகள் எதைக் கோரினரோ, அதை நீதிபதிகள் ….

  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7500:2010-10-02-08-57-09&catid=322:2010

 54. ஒரு தத்துவ கதை:

  ஒரு ஊரில் பாபர் என்ற பையனும் குமார் என்ற பையனும் இருந்தார்கள் ஒரு வேலை பாபர் ஒரு பம்பரத்தை கீழ் கடந்து எடுத்து அதை சரி செய்து ஆணி அடித்து கலர் அடித்து புது பம்பரம் போல் பொழிய செய்து விளையாட வந்தான், அப்பொழுது குமார் அதைகண்டு என்னிடம் காட்டு பாப்போம் என்றான். பார்த்து விட்டு இது என் நண்பன் ராமனுடையது நீ திருடி விட்டாய் என்று சண்டை போட்டு கொண்டு இருந்தான், அது வழியாக வந்த மற்ற ஒரு பையன் ஏன் இப்படி சண்டை என்று கேட்டான் விபரம் பாபர் சொன்னான் , அப்பொழுது அவன் கேட்டான் குமார் இது உன் நண்பன் ராமானுடையது என்பதற்கு ஆதாரம் இருக்கா என்று இல்லை என்றான், பிறகு பாபர் அவனிடம் கேட்டான் அவனும் இல்லை என்று சொல்லிவிட்டு நான் சரி செய்ய கடையில் ஆணி, கலர் எல்லாம் வாங்கியதுக்கு சாட்சி அந்த கடை காரர் இருக்கிறார் என்று கூட்டி போய் அவரிடம் கேட்க சொன்னான், கடைகாரர் ஆம் அவன் வாங்கியது சரிதான் என்றார்.
  உடனே அந்த பையன் இருவருக்கும் சொந்தம் இல்லாத பொருள் இருந்தாலும் பாபர் இதை சரி செய்து புதுப்பித்து வைத்துள்ளான் எனவே இது அவனுக்கு தான் சொந்தம் என்று பாபரிடம் அந்த பம்பரத்தை கொடுத்து விட்டு சென்றான் அந்த சிறியவன்.

  இந்த நீதி குழந்தைக்கு கூட தெரியும் எப்படி நீதி வழங்க வேண்டும் என்று அனால் இன்று வழங்கிய நீதி ?

 55. அடங்கொக்கா மக்க எங்கேய்யா ஒன் சொம்பு, கொப்பளித்து உன் மூஞ்சிலே காறித் துப்ப… எங்க ஊரு மருத்துவமனையில் தான் நான் பிறந்தேன் என்பதற்கான ஆதாரமாக அரசு முத்திரையுடன் என் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறேன், இந்த ஐயா எனக்கு அந்த மருத்துவமனையை தர உத்தரவிடுவாரா? ராம் என்ற கற்பனைப் படைப்பிற்கு அதுகூட இல்லை.

  /சுதிர் அகர்வால்: பெரும்பான்மையினர் ராம் பிறந்த இடம் என்று நம்புவது உணர்வுப் பூர்வமாக மதிக்க வேண்டியது

 56. இந்த அநீதியான தீர்ப்பின் மூலம் காங்கிரஸ் ஒரு மதசார்பற்ற கட்சி என்ற போலி முகத்திரை கிழிந்து நாங்களும் கரசேவகர்கள்தான் என்பதை நிரூபித்துள்ளது. என்றைக்கும் நீதித்துறையின் தீர்ப்பு என்பது தனியல்ல அது ஆளும் கட்சிகளின் கருத்துக்களை வாந்தி எடுப்பவையே.இதுவரை எந்த சாதாரண உழைக்கும் மக்களுக்கோ(அது இந்துவாக இருந்தாளும்), சிறுபான்மையினருக்கோ சரியான தீர்ப்பு வழங்கியதாக சரித்திரம் இல்லை, எனவே இனி யார் யார்க்கு என்ன என்ன தீர்ப்பு வழங்குவது என்ற அதிகாரத்தை போலி வோட்டுச்சீட்டு அரசியல் கொள்ளையர்களிடம் விடுவது நம் அனைவருக்குமே ஆபத்துதான். இனி வரும் தீர்ப்பு சரியான தீர்ப்பாக வேண்டுமானால் அது உழைக்கும் மக்கள் வழங்கும் தீர்பாகத்தான் இருக்க வேண்டும். அதற்க்கு போலி வோட்டுச்சீட்டு தேர்தல் பாதையை புறக்கணித்து மத இன உணர்வை கழைந்து ஒரே வர்க்கமாக உழைக்கும் வர்க்கமாக ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி போராடுவோம்.

 57. Nallai Taj maham keele Krishnar pirantharnu Solluvanga. Appavum intha Theerputhan. Neethi Sethupochi. Ithu jana nayaganadu illa. Seeru Panmeyarai Kollara Nadu. Yehtu yappdiyoo.. ithu mudivee kidaiyathu.. Arasiyal vathikal ithula Kulirkaikirarkal.
  SO, Peesionnum pirojaman Illai.

 58. அயோத்தி பிரச்னையில் ஒரு வழியாக அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. கரசேவகர்களால் உடைக்கப்பட்ட கும்மட்டத்தின் மையப்பகுதி – குழந்தை ராமன் வைக்கப்பட்டிருந்த பகுதி – ஹிந்துக்களுக்கு எனச் சொல்லியிருக்கிறது தீர்ப்பு. நிச்சயமாக மேல் முறையீடு இருக்கும். ஆனால் இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது.

  டிசம்பர் 6, 1992 என்பது ஏதோ இந்த நாட்டுக்கே இழைக்கப்பட்டுவிட்ட தேசிய அவமானம் என்றும், முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் ஒரு பெரிய பிரசாரத்தை இந்த தேசத்தில் அறிவுஜீவிகள் மேற்கொண்டார்கள். ஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் சராசரி ஹிந்து, சராசரி இந்தியன் குற்ற உணர்வும் அச்ச உணர்வும் கொள்ளச் செய்தார்கள். பாபர் மசூதி, பாபர் மசூதி என மீண்டும் மீண்டும் ஏதோ தினசரி தொழுகை நடக்கும் ஒரு மசூதியை ஹிந்து வெறியர்கள் உடைத்தெறிந்துவிட்டது போலக் கூக்குரலிட்டார்கள். இதை நம்பிய முஸ்லீம் சகோதரர்கள் இயல்பாக, பாதுகாப்பற்ற உணர்வில் ஆழ்ந்தார்கள். அன்னிய முதலீட்டில் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு இரையானார்கள். இது ஒரு விஷச்சுழலை உருவாக்கியது.

  தொடக்கம் முதல் ஹிந்துத்துவ இயக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த ஒரு விஷயம், இது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மதப்பிரச்னை அல்ல என்பதுதான். ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்கள் தெளிவாகவே சொன்னார்கள் “ஸ்ரீ ராம ஜென்மபூமியாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்துக்கள் வழிபடும் இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில் செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள் கட்டித்தருகிறோம்.”

  இஸ்லாமிய சகோதரர்கள் ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் களமிறங்கினார்கள் இடதுசாரி அறிவுஜீவிகள். அது மசூதிதான் என்றார்கள். ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வரலாற்று ஆதாரம் எதுவுமில்லை என்றார்கள். அதெல்லாம் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்றார்கள். ஜனவரி 1991 இல் மார்க்ஸிய வரலாற்றறிஞர் ஆர்.எஸ்.ஷர்மாவும் 42 அறிவுஜீவிகளும் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டார்கள். “அங்கே கோவில் இருந்ததற்கான சான்றுகளே இல்லை.”

  ஹிந்து தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில் பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில் என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்; ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக் குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன ராமர் கோவிலுக்கு ஆதாரங்கள் அளிக்கப்பட்டபோது அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள் இந்த இடதுசாரிகள்.

  அகழ்வாராய்ச்சியாளர் பி.பி.லால், ராம ஜென்ம பூமி – பாப்ரி அமைப்பு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தவர். அவர் அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதை உறுதி செய்தார். இடதுசாரிகளோ, இல்லவே இல்லை அது பொய். லால் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறார் என்றார்கள். அவரது ஒரிஜினல் அறிக்கையில் அவர் அதைக் கூறவே இல்லை என்றார்கள். அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது இதை மறுத்தார். 1977களில் பாப்ரி அமைப்பினையொட்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இருந்த ஒரே முஸ்லீம், தான் மட்டுமே என்பதை நினைவுபடுத்திய அவர் ”பாப்ரி அருகே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்துக்கு நான் சென்று பார்த்தேன். அங்கே தூண்களின் அடித்தளங்கள் இருப்பதைக் கண்டேன்” என திட்டவட்டமாக கூறினார்.

  இடதுசாரிகள் விடவில்லை. நாடு முழுக்கத் தங்கள் இயக்கங்களைப் பயன்படுத்தி, பெரிய பிரசாரம் செய்தார்கள். பொதுமக்களிடம் அல்ல. ஊடகங்களிலும் அறிவுஜீவிகளிடமும். புத்த கயாவின் கதை என்ன? அதை ஹிந்துக்கள் அழிக்கவில்லையா? ஆக்கிரமிக்கவில்லையா? ஆனால் உண்மை அப்படி அல்ல. வரலாற்றாராய்ச்சியாளர் டாக்டர்.அப்துல் குதோஸ் அன்ஸாரி விளக்கினார்:

  பௌத்தம் செழித்து வளர்ந்திருந்த புத்த கயா பகுதியில் இஸ்லாமின் சிலை உடைப்புத் தீவிரம் பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும். இதன் விளைவாக அங்கே பௌத்தர்களே இல்லாமல் அழிந்துவிட்ட நிலையில் அங்கு (சிதைக்கப்பட்ட) பௌத்த விகாரங்களை வழிபட, பராமரிக்க ஆளில்லாத நிலையில் பிராமணர்கள் தங்கள் மதக்கடமைக்கு வெளியே சென்று அந்தப் பணிகளையும் செய்ய வேண்டியிருந்தது.

  ஆனால் இத்தகைய வரலாற்று நுண் உண்மைகளைக் குறித்துப் பேசிடும் நிலையில் இல்லை இடதுசாரி பிரசாரகர்கள். வலுவான ஊடகமும் அதிகார வர்க்கமும் ஒரு பக்கம் அணிதிரள, அயோத்தியில் ராமனுக்கு ஓர் ஆலயம் இல்லையா என்கிற ஆதங்கம் வெகுஜன மக்கள் மனத்தில் அலையடிக்க ஆரம்பித்தது. இஸ்லாமியர் மனத்திலோ, அது ஒரு மசூதி என்கிற எண்ணம் ஆழப்பதியத் தொடங்கியது. ஆக, இடதுசாரிகள் செய்த வரலாற்று மோசடியே பாப்ரி கும்மட்டம் ஊடகங்களில் மசூதியாக உருமாற்றம் பெற்றது.

  இந்த தேசத்தின் தேசிய ஆதங்கத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட அறிவுஜீவி துரோகம் இது. துரோகங்கள் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்தன.

  கரசேவகர்கள் உச்சநீதி மன்றத்துக்கு வாக்களித்து அதை மீறிவிட்டார்கள் என்று ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் டிசம்பர் ஆறு 1992 க்குப் பிறகு சோக கீதம் இசைத்தன. இதே கரசேவகர்கள் 1991ல், இதே உச்சநீதிமன்றம் சொன்னதைக் கேட்டு அமைதி காத்தபோது ‘கரசேவை பிசுபிசுத்துவிட்டது; ராமஜென்மபூமி மீட்பு இயக்கம் சக்தி இழந்துவிட்டது’ என்று பேசின.

  இத்தனை உணர்ச்சி பூர்வமான விஷயத்தில், லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கும் இருந்து வந்து அயோத்தியில் குழுமியிருக்கும் ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது சில வாரங்கள் தாமதமானால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் தாமதமானால்? தங்கள் பொறுமை அதிகார வர்க்கத்தால் துச்சமாக விளையாட்டுப்பொருளாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டனர் கரசேவகர்கள். அதனால்தான் டிசம்பர் ஆறு 1992இல் பொங்கியெழுந்தனர். அது துரோகமென்றால், துரோகத்தின் முதல் கல்லை இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மை பேசும் அதிகார வர்க்கம் அவர்கள்மீது வீசியது. .

  அதன் பின்னர் 2003இல் வழக்குக்காக அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தது. ஒரு கனேடிய புவியியல் நிறுவனம் முதலில் ஆராய்ந்து, அங்கே பாப்ரி அமைப்புக்குக் கீழே மற்றொரு அமைப்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தது. அகழ்வாராய்ச்சியில் தேவநாகரி கல்வெட்டு உட்பட, சில மனித உருக்கொண்ட விக்கிரகங்களும் கிடைக்க ஆரம்பித்தன. நவீத் யார் கான் என்ற ஒரு பாப்ரி ‘மசூதி’ ஆதரவாளர் அகழ்வாராய்ச்சிக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்திடம் கோர, அது தள்ளுபடி ஆயிற்று.

  அரவிந்தன் நீலகண்டன்

  ஜூன் மாதத்தில் மீண்டும் ஊடக காமெடி தொடங்கியது. ஜூன் 11 2003 இல் வெளியான செய்திகளில் “பாப்ரி மசூதிக்குக் கீழே ஓர் அமைப்பு இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்பதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளைப் படிக்கும்போது எந்த அளவுக்குத் தங்கள் வாசகர்களை எவ்வித மனச்சாட்சியும் இல்லாமல் மடையர்கள் என இந்தப் பத்திரிகைகள் கருதுகின்றன என்பது புரியும். உதாரணமாக, ’தி ஹிந்து’ தனது செய்தியின் தொடக்கத்தில் இப்படி முழங்கியது:

  ‘இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் பாப்ரி மசூதியின் கீழே வேறொரு அமைப்பு இருப்பதற்கான எவ்வித அமைப்புரீதியிலான வித்தியாசங்களையும் தான் தோண்டிய 15 புதிய குழிகளிலும் காண முடியவில்லை என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.’

  ஆனால் விலைச்சலுகையில் புள்ளி வைத்து சிறிய எழுத்தில் ஆப்பு வைக்கும் சாமர்த்திய வியாபாரியின் நேர்மையின்மையுடன் இறுதியில் அந்த செய்தி சொல்கிறது:

  ‘அமைப்புரீதியிலான வித்தியாசங்களைத் தான் ஆராய்ச்சி மேற்கொண்ட வேறு 15 குழிகளில் கண்டறிந்ததாக அறிக்கை சொல்கிறது.’

  இப்போது நாம் அனைவரும் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டிய கேள்வி – எது இந்திய மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி? திட்டமிட்டுப் பொய் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு மசூதியாக சிறுபான்மை மக்கள் மனத்தில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா? அல்லது தாக்கப்பட்டு, குண்டடி பட்டு மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப்பட்டு, அந்த கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?

  படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ எனப் போவான் என்று பாரதி சொன்னான்.

  உடைக்கப்பட்டது மசூதி அல்ல; ஒரு கும்மட்டம்தான். அந்த இடம் இந்த தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களிடமும் ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு பெயர் ஸ்ரீ ராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி கடுவன் மள்ளனாருக்கும் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன். ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன் பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை சீக்கியரும் பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை தென்னிந்தியரையும் இணைக்கும் பண்பாட்டு உன்னதம் ராமன். அவனுக்கு ஆலயம் அமைக்கவே ஓர் அன்னிய அடிமைத்தளையின் சின்னம் அகற்றப்பட்டது. அதைத்தான் அலகாபாத் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

  இந்த உண்மையைத்தான் நம் நேர்மையில்லாத ஊடகங்கள் மறைத்தன. மனச்சாட்சியில்லாத அறிவுஜீவிகள் வசை பாடினர். ஆனால் தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மவுண்ட்ரோடு மாவோ செய்திதாளில் வரும் புலம்பல்கள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன. எனவே ஹிந்துத்துவர்களுக்கு இந்தத் தீர்ப்பு அடுத்த சவாலை முன்வைக்கிறது. இத்தீர்ப்பு சொல்லும் உண்மையைப் பொது மக்களிடம் – குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு அமைக்கப்படும் ஆலயம் இந்த தேசத்தின் அனைத்து மக்களின் அன்புடனும், அனைத்து சமுதாயத்தினரின் சமரச நல்லிணக்க மனோபாவத்துடனும் எழுப்பப்படுவதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கரசேவையாக அமையும்.

  )))))))))))))))

  aravinthan neelakandan yeluthiyathu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க