Thursday, July 18, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

-

சி.என்.என்-ஐ.பி.என், டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்:

கரண் தபார்: மாவோயிஸ்டுகள் பற்றிய தங்களது பார்வை மற்றும் அவர்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது பற்றிய தங்களது கருத்துகளுடன் விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன், சமீபத்தில் பீகாரில் நான்கு போலீசார் கடத்தப்பட்டு எட்டு நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டது, அவர்களில் ஒருவரான லூக்காஸ் டிட்டி கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அருந்ததி ராய்: தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்த ஒருவரைக் கொலை செய்வதில் புரட்சிகரமானது ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஆந்திரத்தில் போலி மோதலில் ஆசாத்தைக் கொலை செய்த போலீசாரின் செயலை ஒத்ததே இச்செயல் என நான் இதுபற்றி அறிவித்திருக்கிறேன்.  ஆனால், நமது தொலைக்காட்சிகளில் வரும் வன்முறை அடிப்படையிலான பகுப்பாய்வுகளில் இருந்தெல்லாம் நான் ஒதுங்கியே இருக்கிறேன்.  ஏனென்றால், இவ்வாறான விவாதங்கள், எதற்காக இந்தப் போர்? இந்த போரை விரும்புகிறவர்கள் யார்? இந்த போர் யாருக்குத் தேவையாக இருக்கிறது? என்ற விரிந்த பார்வையை (big picture) நீங்கள் இழந்து நிற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இருக்கின்றன.

தபார்: அந்த விரிந்த பார்வை பற்றி விவாதிக்கப் பெரிதும் விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னால் நான் வேறு சிலவற்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.  மாவோயிஸ்டுகள் கடந்த ஓராண்டில் பிரான்சிஸ் இண்டுவார், சஞ்சய் கோஷ் ஆகியோரது தலையைக் கொய்திருக்கிறார்கள், லூக்காஸ் டிட்டியைக் கொன்றிருக்கிறார்கள், பிற போலீசாரைக் கடத்தியிருக்கிறார்கள்; நிலைகுலைய வைக்கும் தாக்குதல்கள் தண்டிவாடாவில் நடத்தப்பட்டிருக்கின்றன; கியானேஸவரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டு இருக்கிறது.  இவை எல்லாம் அவர்களது நியாயமான போர்த்தந்திர அல்லது செயல்தந்திர நடவடிக்கைகளா? அல்லது அவர்களது லட்சியத்தில் இருந்தான பிரழ்வுகளா? நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அ.ராய்: எல்லாவற்றையும் மொத்தமாகக் கட்டிச் சுமத்தாதீர்கள்.. உதாரணத்துக்கு அந்த ரயில் விபத்து.  அதை யார் செய்தார்கள் என்று இன்று வரை யாருக்காவது தெரியுமா?

தபார்: மாவோயிஸ்டுகள்தான் என்று எல்லோருமே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்..

அ.ராய் : எல்லோருரையும் ஏற்கச் செய்திருக்க முடியும்.  ஆனால், ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது, மெய்ப்பிக்கப் புறச்சான்றுகள் வேண்டும்.  நாளும் வெளிப்படும் உண்மைகள் சிக்கவிழ்த்த வண்ணம் இருக்கின்றன.

தபார் : சரி, தண்டிவாடா, தலை கொய்தல்கள், ஆள்கடத்தல்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

அ.ராய் : தற்போது நிகழ்வது என்ன.. ஒரு சண்டை, நிலவுவது ஒரு போர்ச் சூழல்.  நீங்கள் எல்லோரும் அதில் ஒரு தரப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரமான வன்செயல்களை முன்வைத்துப் பாயிரம் பாடுகிறீர்கள்.  அதே சமயம் மறுபுறம் என்ன நடக்கிறது என்ற சித்திரத்தை ஓரங்கட்டி விடுகிறீர்கள்.  அது, ஆகப் பரிதாபகரமான அந்த கிராமங்களை இரண்டு லட்சம் துணை ராணுவத் துருப்புகள் சூழ்ந்துகொண்டிருப்பதும், மக்களை இடம் பெயர்த்து எரிவதும், எரித்துக் கொல்வதும் பற்றியது.  எல்லா வன்முறைகளும் பயங்கரமானவைதான்.  ஆனால், உண்மையில் நடப்பது என்ன என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிய விரும்பினால் அதுபற்றி நாம் சற்று விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.

தபார் : ஆக, நீங்கள் சொல்ல வருவது, வன்முறை திருகுச்சுருள் போல விரிந்து செல்கிறது, அதில் ஒரு தரப்பின் செயல் மற்றதன் எதிர்வினையை நியாயப்படுத்தி விடுகிறது; ஒரு விதத்தில், நீங்கள் இதில் எந்த ஒரு தரப்பின் மீதும் குற்றம் காண விரும்பவில்லை.  இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாகக் காண்கிறீர்கள், அப்படித்தானே?

அ.ராய் : இல்லை, அவ்வாறு இல்லை. இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாக நான் பார்க்கவில்லை, இதில் எதையும் நியாயப்படுத்தவும் நான் விரும்பவில்லை.  ஒரு அரசு தனது ஆதிவாசி மக்கள் தொடர்பாகத் தான் வைத்திருக்கும் அரசியலமைவுச் சட்டத்தின் சரத்துகள் ஒவ்வொன்றையும் உடைத்தெறியும் போது, பல பத்து லட்சம் மக்களின் தாய்மண்ணில் ஒரு படுகொலையை நிகழ்த்தும்போது, அதைத் தடுக்கும் சக்தியும் இருக்கத்தான் செய்கிறது, அது இச்செயலைத் தடுக்கத்தான் செய்கிறது.  அந்த சூழ்நிலை தற்போது மூர்க்கமானதாகவும், மோசமானதாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.  இந்த சூழலில் இருந்து நெறிசார் விளக்கம் பெற விழைவீர்களானால் விஞ்சுவது குழப்பமாகத்தான் இருக்கும்.

 

தபார் : ஆனால், இந்த அரசுதான் முதல்நிலைக் குற்றவாளி எனக் காண்கிறீர்கள் என்பது உங்கள் கூற்றில் இருந்து தெள்ளத் தெளிவாகத் துலங்குகிறது. அதாவது, பெரும் தவறு, முதல் தவறு அரசாங்கத்தினுடையது, மாவோயிஸ்டுகள் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறார்கள் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்.

அ.ராய் : நிச்சயமாக இந்த அரசை வலுச்சண்டைக்காரனாகவே நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டுகளைப் பொருத்தவரை அவர்களது கொள்கையும் இந்திய அரசை பலாத்காரத்தால் தூக்கியெறியும் கொள்கைதான்.  இருப்பினும், இந்திய அரசு ஒரு நீதிவழுவா அரசு என நான் நினைக்கவில்லை. அது அவ்வாறு இருக்குமானால், சாமானிய மக்கள் இங்கு தாங்களும் நியாயம் பெறமுடியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கையேனும் பெற்றிருப்பார்களானால், மாவோயிஸ்டுகள் மக்கள் ஆதரவற்ற போர்க்குணம் கொண்ட மிகச் சிறிய குழுவாகவே இருந்திருப்பார்கள்.

தபார் : ஆக, நியாயமானது என்று நீங்கள் நம்பத் தயாரில்லாத இந்த அரசின் தன்மையின் காரணமாகத்தான் மாவோயிஸ்டுகள் தங்களது பலத்தையும், ஆதரவையும் பெற்றார்கள்…

அ.ராய் : மாவோயிஸ்டுகளை விடுங்கள், ஆயுதம் தாங்கிய, தாங்காத அனைத்து எதிர்ப்பு இயக்கங்களும், இன்றைய மாவோயிஸ்டுகளும் கூட அரசியல் அமைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரிப் போராடுகிறார்கள். ஆனால், அரசோ அதற்குக் குழிபறிக்கிறது.

தபார் : எனவே, உண்மையான சட்டவாதிகள் மாவோயிஸ்டுகள், சட்டத்தை உடைப்பவர்கள் இந்த அரசாங்கம்.. அப்படித்தானே?

அ.ராய் : மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா எதிர்ப்பு இயக்கங்களும்தான்.

தபார் : இவ்வாரச் செய்திகள் முழுவதிலும் அடிபட்டவர்கள் என்பதால், தற்போதைக்கு மாவோயிஸ்டுகள் மீது கவனத்தை செலுத்துவோம். தேசத்தின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைப் பார்க்கிறார் பிரதமர்.  அவர்களைப் பற்றிய உங்களது கருத்து முற்றிலும் மாறுபட்டது எனக் கருதுகிறேன். மாவோயிஸ்டுகளைப் பற்றிய உங்களது பார்வைதான் என்ன?

 

அ.ராய் : நாடு, நகரம், காடுகளில் உள்ள எதிர்ப்பு இயக்கங்களின் அலைவரிசையில் மிகவும் போர்க்குணம் மிக்க முனையில் முதல் நிலை வக்கிக்கும் குழுவினராக அவர்களைப் பார்க்கிறேன்.

தபார் : ஆனால் அவர்கள் என்ன செய்ய விழைகிறார்கள்?  அவர்கள் தரப்பு நியாயம் என்ன?

அ. ராய்: அவர்களது இறுதி இலக்கு, அவர்களே தெளிவாகச் சொல்வது போல, இந்த இந்திய அரசைத் தூக்கியெறிந்துவிட்டு பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தைக் கொணர்வதுதான்.  அது அவர்களது இறுதி இலக்கு.  ஆனால்,…

தபார் : சொல்லுங்கள் அருந்த்திராய் அவர்களே, நீங்கள் அந்த இலக்கை ஆதரிக்கிறீர்களா?

அ. ராய்: நான் அந்த இலக்கை ஆதரிக்கவில்லை.  என்ன அர்த்தத்தில் என்றால், உலகம் இன்று சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு கம்யூனிச அல்லது முதலாளியக் கற்பனைகளில் இருந்து பிறக்கும் என நான் நம்பவில்லை…

தபார் : அது எனக்குப் புரிகிறது.  ஆனால், இந்த அரசைத் தூக்கியெறியும் முயற்சி எதையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அ. ராய்: சரிதான், ஆம், ஆதரிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது.  பிறகு இங்கிருந்தே விலங்கிட்டு அழைத்துச்செல்லப்படுவேனே.

தபார் : இந்தக் நடைமுறை சிக்கலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், நீங்கள் ஆதரிப்பதாகத்தான் தெரிகிறது.

அ. ராய்: இருப்பினும், இந்திய அரசு மக்கள் மீதான தனது பொறுப்புணர்ச்சியைக் கைகழுவிவிட்டது என்று நான் நம்புகிறேன்.  இந்திய அரசியலமைப்புக்கு சட்டப்படியோ, தார்மீக ரீதியாகவோ இந்த அரசு கட்டுப்படாதபோது, ஒன்று, நாம் இந்த அரசியல் அமைப்புச்சட்ட முன்னுரையின் மேற்கோள் வாசகத்தை மாற்றி எழுதலாம். அது சொல்கிறது…

தபார் : அல்லது ?

அ.ராய் : நாம் ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு என்று அது சொல்கிறது.  அதை மாற்றி இது ஒரு கார்ப்பரேட் முதலாளிகள், இந்துத்துவ சக்திகளை சுற்றிச் சுழலும் துணைக்கோள் என்று அழைக்கலாம்.

தபார் : அல்லது  ?

 

அ.ராய்: அல்லது இந்த அரசியலமைப்பை மதித்து நடக்கும்படியான ஒரு அரசை நாம் பெற்றாகவேண்டும். அல்லது, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும்.

தபார் : உடைத்துச் சொல்கிறேன்… இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் உறுதிப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.  அதைச் சொல்வதற்கு சாதுர்யமான, பூடகமான வழிகளைக் கையாள்கிறீர்கள்.  சிறைப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள்..  பார்வையாளர்களுக்குத் தங்களது பேச்சின் பொருள் இதுபோலத்தான் ஒலிக்கிறது.

அ.ராய் : இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் விருப்பத்தை ஆதரிக்கிறேன் என்று நான் சொன்னால், நான் என்னை ஒரு மாவோயிஸ்டு என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.  ஆனால் நான் ஒரு மாவோயிஸ்ட் அல்ல.

தபார் : ஆனால் நீங்கள் அவர்களது அனுதாபி… இல்லையா?

அ.ராய் : எல்லா இயக்கங்களுக்கும்தான் நான் அனுதாபி.  நான் இருப்பது கோட்டின் இந்தப்பக்கம்; உள் நாட்டில் மட்டுமல்ல, உலகலிலேயே கொடும் ஏழையான மக்களின் மீதே தனது இராணுவத்தைப் ஏவத்துடிக்கும் அரசுதான் இங்கு இருக்கும் அரசு என்று இடித்துரைக்கும் மக்களின் பக்கம் நான் இருக்கிறேன்.  இச் செயலை நான் ஆதரிக்க முடியாது.

 

தபார் : சரி, இப்படிக் கேட்கிறேன்.  நீங்கள் மாவோயிஸ்ட் இலட்சியத்தின்பால் அனுதாபம் காட்டுகிறீர்கள்.  ஆனால், அவர்கள் நடைமுறைப்படுத்தும் செயல்தந்திரம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?  பிரச்சினை என்னவென்றால், மாவோயிஸ்டுகள் மக்களைக் கருத்தொருமிக்கச் செய்தோ, சட்டபூர்வமான தேர்தலில் வென்றோ அல்லாமல் ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையைச் சாதித்து ஒரு புதிய ஜனநாயக சமூக ஒழுங்கமைவைக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.  பலருக்கும் இச்செயல் ஒரு உள்நாட்டுப் போரை ஒத்த விசயம்.  இதில் நீங்கள் அவர்களுடன் கைகோர்த்துச் செல்கிறீர்களா?

அ.ராய் : ஏற்கனவே இங்கு ஒரு உள்நாட்டுப் போர்தானே நடக்கிறது. வன்முறையில் மட்டுமே நம்பிக்கை கொண்ட ஒரு எதிர்ப்பு இயக்கம் புதிய ஜனநாயகத்துக்கு வழிநடத்தும் என்று நான் நம்பவில்லை.  உறுதியாக நான் நம்பவில்லை.  அதுபோலவே, நீ அகிம்சாவாதியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று கோட்பாடு பேசுவீராயின் அதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.  இவ்வாறு பேசுவது நடப்பில் உள்ள அநீதியை ஆதரிக்கும் புரட்டுப் பேச்சு என்றே நம்புகிறேன்.  எதிர்ப்பு இயக்க அலைவரிசையில் ஒன்றாக அதுவும் இடம்பெறுகிறது என்றே கருதுகிறேன்.  800 மத்திய சேமக்காவல் படையினரால் உங்கள் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு, வண்புணர்ச்சி, தீயிடுதல், சூரையாடுதல் நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக்கும்போது, நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று உங்களால் சொல்லமுடியாது என்றும் நம்புகிறேன்.  அச்செயல்களை எதிர்க்கும் மக்களின் உரிமையை நான் ஆதரிக்கிறேன்.

தபார் : இருக்கட்டும், என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.   நீங்கள் அதை ஆயுதந்தாங்கிய விடுதலைப் போர் என்றோ வேறு எதுவாகவோ அழைத்துக்கொள்ளுங்கள், அதற்கான உங்கள் நியாயவாதம் எதுவாயினும் இங்கு ஒரு பொருட்டல்ல; மாவோயிஸ்டுகளின் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு உரிமையை நீங்கள் ஆதரிப்பீர்களானால்..

அ.ராய் : இப்படி மாவோயிஸ்டுகளை நோக்கியே  சுற்றியே பேச்சை கொண்டு செல்கிறீர்கள், இது நியாயம் இல்லை…

 

தபார் : நீங்கள் அதை ஆதரிப்பீர்களானால், அது எந்த அடிப்படையில் என்பது இங்கு விசயமல்ல,  அதே சமயம் அரசு ஆயுதம் எடுத்துத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை உங்களால் எப்படி மறுக்க முடியும்?

அ.ராய் : அரசுக்கு தன்னைத் பாதுகாத்துக் கொள்வதா வேலை,  மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், பாதுகாப்பதுமே அதன் கடமை என கருதப்படுகிறது

தபார் : ஆனால், அரசு தாக்கப்படுமானால், அது மக்கள் தாக்கப்படுவதாகவே பொருள். மேலும்…

அ.ராய் : கரன., அரசு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை. அதுதான் தாக்குதலைத் தூண்டுகிறது.  அதைத்தான் நான் புரியவைக்க முயல்கிறேன்.  தனது சொந்த அரசியல் சாசனத்துக்கு முரணாகச் செயல்படுவதுடன் ஒரு தாக்குதலையும் முன் தள்ளுகிறது. சமீபத்திய பஞ்சாயத் ராஜ் அறிக்கையைப் பார்த்தீர்களானால், அதன் கண்டன அத்தியாயத்தில் அரசு தனது செயல்பாடுகளில் முற்றிலும் சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.  ஒரு மாறுதலுக்கு நான் உங்களை கேட்கிறேன், ராணுவம், போலீசு, துணை ராணுவப்படை, விமானப்படை அனைத்தும் கூடி ஏழை மக்கள் மீது ஒரு போரைத் தொடுக்கத் தொடங்கும்போது அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?  இடத்தைக் காலி செய்துவிட்டு கூடாரத்தில் குடியேறவேண்டுமென்றா? தங்களது நிலத்தைப் பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சுரங்கத்துறையினர் அபகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றா?

 

தபார் : ஆக, மாவோயிஸ்டுகளும் மற்ற அனைத்து எதிர்ப்பு இயக்கத்தினரும் இதை எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்த வேறு வாய்ப்புகள் இல்லை என்று சொல்கிறீர்கள், இல்லையா?

அ. ராய் : நான் என்ன சொல்கிறேன் என்றால், அரசு வன்முறையற்ற எதிர்ப்புக்கு மதிப்பளிக்குமேயானால் -இந்த அரசு மதிப்பளிக்காவிட்டாலும் – பல ஆண்டுகளாக, பல பிரச்சனைகளுக்காக  மக்கள் அமைதிவழியிலான போரட்டத்தைதான் கடைபிடித்துவந்திருக்கிறார்கள்.  நீங்கள் அந்த அகிம்சைப் பாதையை அலட்சியப்படுத்துவதன் மூலம் தன்னியல்பாக வன்முறையை பிரதானமாக வளரச் செய்கிறீர்கள். அதைத்தான் இந்த அரசு செய்கிறது.

தபார் : ஆனால், நீங்கள் கூறுகின்ற இந்த வன்முறையற்ற பாதையில்தான் மாவோயிஸ்டுகள் தங்கள் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்களா?  அது தானே பிரச்சினை.  அவர்களது லட்சியம் அவர்கள் பின்பற்றும் வழிமுறையை நியாயப்படுத்துவது போல் இருக்கிறது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம்.  கேள்வி என்னவெனில், அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்களா, இல்லையா?

அ. ராய் : என் சொற்களுக்கு நீங்கள் காதுகொடுக்கவில்லை.  பலபத்து லட்சம் மக்களை அவர்தம் மண்ணிலிருந்து பிய்த்தெறியும் கண்மூடித்தனமான அநீதி இங்கு நாளும் முன்னேறிச் செல்கிறது என்று நான் கூறுகிறேன்.  ஏன் இந்த நாட்டில் 83 கோடியே 36 லட்சம் மக்கள் 20 ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கொண்டு ஒரு நாளைத் தள்ள வேண்டியிருக்கிறது?  உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட 6 கோடி மக்களை நாம் கொண்டிருக்கிறோமே, ஏன்?  ஏன் என்றால் இந்த அரசு முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.  கடந்த 25 ஆண்டுகளாக இந்த அரசு அமைதிவழி கோரிக்கைகளைக் கேட்கவும் மறுத்திருக்கிறது.

தபார் : ஆகவே, மாவோயிஸ்டுகளை இதற்குப் அநீதியால் பாதிக்கப்பட்டவற்களாக நீங்கள் பார்க்கிறீர்களா..?

அ. ராய் : மக்கள் எதற்கோ பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டு கொள்கைகளை நீங்கள் பார்த்தீர்களானால், எதற்கும் பலியானவர்களாகத் தங்களை அவர்கள் கருதவில்லை.   ஆனால் இந்த அரசு இழைத்துவரும் மாபெரும் அநீதியின் காரணமாக மாவோயிஸ்டுகளின்  கொள்கை ஒரு  வெகுஜனக் கருத்தாக்கமாக பெருவாரியான மக்களிடம் எடுபடுகிறது.

தபார் : சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட எல்லாத் தவறும் அரசுத் தரப்பினுடையதுதான் இல்லையா?

அ.ராய் : ஆம்.

தபார் : இதைத் துணிந்து , வெளிப்படையாக சொல்கிறீர்கள்.. அப்படித்தானே?

அ.ராய் : நிச்சயமாக.

தபார் : பேச்சுவார்த்தையின் நிலவரம் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன்னால், ஆசாத் பற்றிச் சொல்லுங்கள்.  மாவோயிஸ்ட் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்யுமாறு சுவாமி அக்னிவேஷை உள்துறை அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.  அதன்படி அக்னிவேஷ் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.  மே மாதம் தொட்டு இச்சூழல் தலைதூக்குகிறது.  ஆனால் ஜூலை மாதத்தில் விவரிக்க முடியாததொரு போலீஸ் மோதலில் ஆசாத் திடீரென்று இறந்துபோகிறார்.  ஆசாதை வெளிக்கொணர்ந்து கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித்திட்டமே இது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அ. ராய் : ஆம், நம்புகிறேன்.

தபார் : உண்மையிலேயே அது அப்படித்தான் என்கிறீர்களா? ஆசாத்தைக் கொல்ல அரசு சதிவலை விரித்ததா?

அ. ராய் : வெளிவரும் உண்மைகளில் இருந்து பெறக்கூடியதாகவும், அவ்வுண்மைகள்  சுட்டிக்காட்டுவதாகவும் இம் முடிவுதான் இருக்கிறது.

தபார் : ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள்?  பேச்சுவார்த்தைக்கான நியாயமான் எதிர்பார்ப்புகளை வைத்திருந்த ஒரு மனிதரையே அவர்கள் ஏன் கொலை செய்ய வேண்டும்?

 

அ. ராய் : இந்த போர் அரசின் தேவையினால் நடக்கும் ஒன்று என்று கடந்த சில மாதங்களாகவே நான் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறேன்.  அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆதிவாசி நிலங்களைக் காலிசெய்யவும், கைமாற்றவும், கையெழுத்திடப்பட்ட நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொணரவும் இந்த போர் தேவை.  தொழில்-வர்த்தக ஏடுகளைக் கவனிப்பீர்களானால் அவர்கள் இவ்விசயத்தில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பது புரியும்.

தபார் : அரசுக்குப் போர்தான் தேவை என்றால் அதன் பேச்சுவார்த்தை முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே.

அ. ராய் : ஆமாம்.  அதற்குப் போர் தேவைப்படுகிறது.  அதே சமயம் கருணைமிகு புன்முறுவலுடன் கூடிய ஜனநாயக முகமூடியும் அதற்குத் தேவைப்படுகிறது.  எனவேதான் ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வரும்போதே மறு பக்கம் அதற்குக் குழிபறிக்கிறது.

 

தபார் : ஆனால், அரசு இரட்டை முகமுடையது என்ற இந்த முற்றிலும் விசித்திரமான கோட்பாட்டை ஒப்புக்கொண்டாலும்,

அ. ராய்: நான் அது இரட்டை முகமுடையது என்று சொல்லவில்லை

தபார் : ஒப்புக்கொண்டாலும்.. ஆசாத்தைக் கொல்வதன் மூலமாக அது தனது முகமூடியை ஏன் அவிழ்க்கவேண்டும், தன்னைத்தானே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?

அ. ராய்: ஏனென்றால், அப்போது நிகழ்ந்தனவற்றை நீங்கள் கவனித்தால், ஆசாத் அபாயகராமான அளவுக்கு நியாயமாக பேசத்துவங்கினார்…

தபார் : யாருக்கு?

 

அ. ராய் : நம் எல்லோருக்கும்தான்.

தபார் : ஹிந்து நாளேட்டுக்கு அளித்த ஒரு பேட்டியை வைத்தே அப்படி முடிவு கட்டிவிட்டீர்களா?

அ.ராய் : பாருங்கள் கரண், நாம் அனைவரும் ஆசாத்தை அறிவோம்.  நம்மிடையே அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமாக எழுதியிருக்கிறார்.

தபார் : உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  ஆனால், மக்களுக்கு அதெல்லாம் தெரியாது.  அவர்களைப் பொருத்தவரை ஆசாத் ஒரு புதிர், அவ்வளவுதான்.

அ. ராய் : இல்லை. நிச்சயமாக இல்லை.  உதாரணமாக, அவர் அவுட் லுக் இதழுக்கு எழுதியதைப் பாருங்கள்.  அது அவர் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது.  ஆனால், அதற்கு முன்னாலேயே அனுப்பப்பட்டிருந்தது.

தபார் : ஆனால், அவர் பெரிதும் பேசத்தொடங்கினார், நியாயமானவராக தோன்றத் தொடங்கினார் என்பதால் அச்சமுற்ற அரசு அவரைக் கொன்றுவிட்டது என்ற உஙக்ளது கோட்பாட்டை ஒருவர் ஒப்புக்கொண்டாலும் கூட, அந்த அம்சங்கள் அவரை மதிக்கத்தக்க ஒரு நடுவராக அரசின் முகமூடியில் நன்கு பொருந்தக்கூடியவராக மட்டுமே செய்திருக்க முடியும்.  நிச்சயமாக, அதுவே அவரைக் கொன்றதென்பது ஒருவிதத்தில் இக்கருத்தின் நகைக்கத்தக்க முரணாகவே இருக்கிறது.

அ. ராய் : ஏன் அப்படி இருக்கவேண்டும்?  போரில் இரு தரப்புகள் இருப்பதாகக் கொள்வோம்.  இரண்டுக்கும் மேற்பட்டவை இருப்பினும், எல்லோருமே அதை இருமைப்படுத்தவே விரும்புவதால், வாதத்தின் பொருட்டு அதை ஒப்புக்கொள்வோம்.  ஒரு தரப்பு ஒரு தூதரை அனுப்ப, மறுதரப்பு அவரைக் கொலை செய்கிறதென்றால் அதற்கு என்ன பொருள்?  அத்தரப்பு அமைதியை விரும்பவில்லை என்பதுதானே.  அதுதான் இதற்குப் பொருள். இது ஒரு  அறிவார்ந்த அனுமானம்.

 

தபார் : ஆக இது ஒரு மோசடியான அரசு.. ?

 

அ. ராய்: நிச்சயமாக.

 

தபார் : அப்படி என்றால், நான் கேட்க விரும்பும் சிக்கலான விசயத்துக்கே வருகிறேன்.  பேச்சுவார்த்தைக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?  மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிடுவார்களேயானால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பார்வம் கொண்டிருப்பதாக அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.  ஆயுதங்களைக் கீழே போடுங்கள் பேச்சு நடத்துவோம் என்று சொல்லிக் கேட்கக்கூட இல்லை.  பலரும் இதை மிகவும் நியாயமான, சொல்லப்போனால், பெருந்தன்மையான முன்வைப்பு என்று கருதுகிறார்கள்.  பேச்சுவார்த்தை பற்றிய அரசின் நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அ. ராய்: நீங்கள் அந்த காடுகளுக்குள் சென்று அங்கு நடப்பனவற்றைக் காண்பீர்களானால் தெரியும்.  இரண்டு லட்சம்  துணை ராணுவத் துருப்புகள் அந்த ஆதிவாசி கிராமங்களைச் ரோந்து வருகின்றன.  சுற்றிவளைப்பும் தேடுதல் வேட்டைகளும் நடத்தப்படுகின்றன, படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன, மொத்தப்பகுதியும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் வன்முறையைக் கைவிடுங்கள் என்று சொல்வதன் பொருள்தான் என்ன?  சண்டை நிறுத்தம், இருதரப்பு சண்டை நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதுவே உண்மையில் நியாயமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.  பிறகு நாம் பேசலாம்.  அதைவிடுத்து, நீ வன்முறையைக் கைவிடவேண்டும் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்?

 

தபார் : ஆக, வன்முறையை ஒரு தரப்பு கைவிடக் கோருவது ஏற்கத் தக்கதல்ல, இருதரப்பு சண்டை நிறுத்தமே தேவை என்று கருதுகிறீர்கள், இல்லையா?

அ.ராய் : இருதரப்பு சண்டை நிறுத்தம்தான் அவசரத் தேவை எனக் கருதுகிறேன்.

தபார் : ஒரே நேத்ததிலா?

 

அ.ராய் : ஆம்.  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என அரசாங்க அறிக்கைகள் சொல்லுகின்றன.  சிதம்பரம் அவர்களே அவற்றைக் கிடப்பில் போடுவேன் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.  ஏன் அவர் அவ்வாறு செய்யவில்லை?

தபார் : மாவோயிஸ்டுகளிடம் இருந்து பேச்சுவார்த்தை தொடர்பான சாதகமான சமிக்ஞை வருவதற்காக அவர் ஒருக்கால் காத்திருக்கலாம்.  தன்னிச்சையாக இதை செய்ய அவர் விரும்பாதிருக்கலாம்.

அ. ராய்: அவர்கள் இப்போது எழுத்துமூலமாக பதிலளித்திருக்கிறார்கள்.  ஆசாத் தனது எழுத்தின் மூலம் பதிலளித்தார்.

தபார் : ஆசாத் இனி இல்லை.  நான் உங்களைக் கேட்கிறேன்.  இந்த நேர்காணலின் மூலமாக, இருதரப்பும் சமகாலத்தில் என்ன செய்தால், அது ஒருக்கால் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்பது பற்றி பரிந்துரைக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்.  நீங்கள் மாவோயிஸ்டுகளை அறிந்திருப்பதால், அவர்களால் நம்பப்படுபவராக இருப்பதால், பேச்சுவார்த்தையில் ஒரு நடுவராக செயல்படத் தயாராக இருக்கிறீர்களா?

அ. ராய்: ஆந்திரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாகப் படித்திருந்தீர்களானால் தெரியும். யாராவது ஒருவரைப் பொருக்கி எடுத்து அவரை பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அறிவிப்பது, இப்படி இரு தரப்புமே செய்திருக்கின்றன.  சிதம்பரம் தன்னிச்சையாக சுவாமி அக்னிவேஷை தேர்ந்தெடுத்து அறிவித்தார்.  மாவோயிஸ்டுகளும் அது வேண்டும், இது வேண்டும் எனத் தங்கள் கோரிக்கைகளைத் தன்னிச்சையாக வானொலி வாயிலாக அறிவித்தனர்.  ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு இப்படி நடப்பதில்லை.  ஆந்திரத்தில், தம்மைப் பேச்சுவார்த்தைக்குப் பொருப்பானவர்களாக அமர்த்திக்கொள்ள குடிமக்கள் கமிட்டிக்குக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பிடித்தது.  நடுவராகச் செயல்படுவது ஒரு நபராக இருக்க்க் கூடாது.

தபார் : தன்னிச்சையாய்ப் பொருக்கி எடுக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும் சுவாமி அக்னிவேஷ்தான், ஆசாத்தை பேச்சுவார்த்தையின் விளிம்புவரை கொண்டுவருவதில் வெற்றிகரமாய் செயல்பட்டிருக்கிறார்.  நீங்கள் சொல்வது போல அவர் கொல்லப்பட்டார் என்ற உண்மையைத் தவிர, அக்னிவேஷ் தனது பொறுப்பைப் பெரிதும் நிறைவேற்றியிருக்கிறார்.  எனவே, நான் மீண்டும் கேட்கிறேன், நீங்கள் மாவோயிஸ்டுகளால் நம்பப்படுவதால், இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளும் வகையில், குறைந்த பட்சம் ஆங்கிலத்தில், புரியும் மொழியில் பேசுவதால், நீங்கள் ஒரு பேச்சுவார்த்தையின் நடுவராக இருக்கத் தயாரா?

அ. ராய் : பாருங்கள் கரண், அது ஒருவராகத்தான் இருக்கவேண்டும் என்று நான் கருதவில்லை.  கூட்டுச் சிந்தனைக்கும் முடிவுக்கும் பழக்கப்பட்டவர்கள் அடங்கிய ஒரு குழுவினராக அது அமைய வேண்டும் என நான் கருதுகிறேன்.

 

தபார் : ஒரு கமிட்டியாக…?

அ. ராய் : நிச்சயமாக. அதுதான் ஆந்திரத்தில் நிகழ்ந்தது.  சிலர் அடங்கிய கமிட்டி அங்கு இருந்தது.

தபார் : அது ஒரு குளறுபடி இல்லையா?

 

அ. ராய் : இல்லை.  அது அத்தியாவசியமான ஒன்று.

தபார் : அதில் ஒரு உறுப்பினராக இருப்பீர்களா?

அ. ராய் : நான் அதில் பொருந்துவேன் என்று கருதவில்லை.  நான் சுதந்திர சிந்தனையுடயவள்.

தபார் : நீங்கள் அந்த கமிட்டியில் ஒருவராக இருக்கத் தாயாரா?

அ. ராய்: அப்படி இல்லை.  நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை.  ஏனென்றால் அதற்கான திறமை எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.  அதற்குப் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.

தபார் : ஜீன் மாதம் ஹிந்து பத்திரிகைக்கு எழுதிய நீதிபதி கிருஷ்ணய்யர், மாவோயிஸ்டுகள் நிபந்தனையற்ற வகையில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார்.  நீங்கள் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவீர்களா?

அ. ராய் : மாட்டேன்.  இரண்டு லட்சம் துணைராணுவத் துருப்புகள் அந்த கிராமங்களை நெருக்கிக்கொண்டிருக்கையில் நான் அவ்வாறு செய்யமாட்டேன்.  நிபந்தனையற்ற வகையில் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறேன். பிறகு நீங்கள் அதன் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

தபார் : ஆனால், நடுவராக இருந்தோ, கமிட்டியில் ஒரு அங்கமாக இருந்தோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நீங்கள் தயாராக இல்லை.

அ. ராய் : நான் முயற்சிக்கிறேன்.

 

தபார் : முயற்சிக்கிறேன்! அட, உடனே உங்கள் நிலையில் தலைகீழ் மாற்றமா?

 

அ. ராய் : இதைப் பற்றி எப்படி யோசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

தபார் : கொஞ்சம் தள்ளிவிட்டால், இதமாக எடுத்துச் சொன்னால் ஒருக்கால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.

அ. ராய் : நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம் பேசுவதைப் போல என்னிடம் பேசுகிறீர்கள். ‘தேர்தலில் போட்டியிடுவீர்களா?’

தபார் : இல்லை.  எனது கேள்விக்குத் தெளிவான பதிலை நீங்கள் அளிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான்.  நான் என்ன உணர்கிறேன் என்றால், உங்களிடம் ஒரு உந்துதல் இருக்கிறது ஆனால் தெளிவான முடிவெடுக்க தயங்குறீர்கள்.

அ. ராய் : நாம் எல்லோருமே நம்மால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்று கருதுகிறேன். ஆனால், கமிட்டி போன்றவற்றில் அங்கம் வகிக்க நான் பொருத்தமானவள் அல்ல என்று உறுதியாக உணர்கிறேன்.  நீண்ட அனுபவம் உள்ள B.D. சர்மா போன்று பேச்சுவார்த்தைகளில் அனுபவம் மிக்கவர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அவசியம் என்று நான் கருதுகிறேன்.

 

தபார் : சற்று மாறுபட்ட ஒரு விசயத்துக்கு வருவோம்.  இந்த அரசாங்கம், குறிப்பாக உள்துறை அமைச்சர், மாவோயிஸ்டு குறிக்கோள்களில் அனுதாபம் கொண்டவர்களை அவர்களது கூட்டாளிகள் என்று குறிப்பிடுகிறார்.  செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினர் அவர்களைத் துரோகிகள் என்றும் அழைக்கிறார்கள்.  அவ்வகையினரில் முதன்மையானவர் அருந்ததி ராயாகத்தான் இருக்கிறார். இப்படி முத்திரை குத்தப்படுவதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

 

அ. ராய் : என்ன சொல்ல, எல்லாம் அதே பழங்கதை தானே.

தபார் : ஆனால் இப்போக்கு ஒவ்வொரு முறையும் மூர்க்கமாய்த் தொடர்கிறதே.

அ.ராய் : இந்த அரசு, மற்றும் இப்பிரச்சினையில் தெளிவாய் ஒரு பக்கச் சார்பு எடுக்கும் பெரும்பாலான பத்திரிகைகள் எல்லோருமே ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.  காரணம் என்னவெனில், அடர்ந்த காடுகளில் புதைந்து ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் இருந்து, இந்தக் காட்டுவேட்டை தொடங்கியதும், ஏராளமான மனித உரிமை செயல்வீரர்களும், அறிவுஜீவிகளும் முன்வந்து இது எங்களுக்கு ஏற்புடையதல்ல என அறைந்து கூறினர்.  இச் செயல் அதுவரை இயல்பாய் நடந்துவந்த இலை மறை காயாக வைத்திருந்த விசயத்தை அம்பலப்படுத்தி ஆட்டங்காணச் செய்தது.

தபார் : ஆக, அரசின் நிலையிலான உறுதிப்பாடு மாவோயிஸ்டுகளை ஆதரித்த அறிவுஜீவிகளால் பலவீனப்படுத்தப்பட்டு  ஆட்டங்கண்டது.  அதனால்தான் அரசு அவர்களை “கூட்டாளிகள்” என்று முத்திரை குத்துகிறது.. இல்லையா?

 

அ. ராய்: மீண்டும் நீங்கள் மாவோயிஸ்டுகள் என்றே குறிப்பிடுகிறீர்கள்.

 

தபார் : ஆனால், அதனால் தானே அரசு அவர்களை கூட்டாளிகள் என்று அழைக்கிறது?

 

அ. ராய் : என்ன நடந்திருக்கிறது என்றால், இந்த அரசு தன்னுடன் ஒத்துப்போகாத எல்லோரையும் குறிப்பிடும் அளவுக்கு மாவோயிஸ்ட் என்பதன் வரையறுப்பை நீட்டித்திருக்கிறது.  என்னைப் போன்றவர்கள் நிலைமையைச் சிக்கலாக்கிவிட்டோம் என்பதுதான்.  இந்த ஏச்சுகள் எல்லாம் அவ்வளவு சல்லிசாக எடுத்துக்கொள்ளக் கூடிய விசயமல்லதான். இருப்பினும்,  நான் எனக்குத் தெளிவாய்ப் பட்டதைச் சொல்ல விரும்புகிறேன் என்பதால் அது என்னைப் பாதிக்கவில்லை.  எனக்கு பெயர்கள் வழங்குவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.

தபார் : மேலும், இந்த அரசு உங்களைக் ’கூட்டாளி’  என்று அழைப்பது ஒரு விதத்தில், நீங்கள் உண்மையிலேயே இந்த அரசை நிம்மதி குலையச்  செய்திருக்கிறீர்கள் என்பதற்கு நிரூபணம்.

அ. ராய்: நான் இந்த அரசை நிம்மதி குலையச் செய்திருப்பேன் என்றால், அதற்காகப் பெருமைப்படுகிறேன்.  ஏனென்றால், அது செய்யும் வேலைக்கு அது நிம்மதியற்றுத் திரியத்தான் வேண்டும்.

 

தபார் : தங்களுடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

___________________________________________________

ஆங்கில மூலம்http://ibnlive.in.com/news/india-is-a-corporate-hindu-state-arundhati/130817-3.html
-தமிழாக்கம்: அனாமதேயன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 1. இந்தியா ஒரு கார்பரேட் இந்து தேசம் ! – அருந்ததிராய், கரண்தபார் நேருக்குநேர்…

  சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தி டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்!…

 2. […] This post was mentioned on Twitter by வினவு and Badri Seshadri, marudhan. marudhan said: மிக முக்கியமான வினவு மொழிபெயர்ப்பு: அருந்ததி ராய் – கரன் தாபர் உரையாடல் https://www.vinavu.com/2010/10/06/devils-advocate-arundathi-roy/ […]

 3. கார்பரேட் அன்னையர்களும், பாசிச அம்மாக்களும் இருக்கும் நாட்டில் ஆகச்சிறந்த பெண் ஆளுமை அருந்ததி ராய்!
  இது போன்ற நேர்காணல்கள், கட்டுரைகள் நிறையவே வினவு தந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்.

 4. அரசின் இலக்கு என்ன என்பது நன்கு தெரிந்திருந்தும் அரசை பினாமியாகவும் அடியாலாகவும் வைத்திருக்கும் அந்த கார்ப்பிரேட் முதாளிகளின் விளம்பர பிச்சை காசை பொருக்கி தின்னும் இந்த ஊடகங்கள் மிக சாதுர்யமாக அரசின் அந்த “போலி ஜனநாயக புன்முறுவல்” முகத்திற்கு நல்ல சாயம் பூசி நன்கு பாதுகாக்கின்றன என்பதற்கு இந்த நேர்காணல் மற்றொரு உதாரணம். கறந கேற்பவை எல்லாம் தனி மனிதரான அருந்ததி ராயின் சொந்த ஆளுமை பற்றியே இருக்கின்றனவே தவிர, பிரச்சனையை அதன் உம்மைகலோடு பேச விரும்பவில்லை. நல்ல மொழிபெயர்ப்பு[வழமை போலவே]

 5. முகமதியர்களுக்கும் ஒரு பங்கு கொடுத்திருக்கு பாஸ். அது கூட பாக்கிஸ்தானில் கிடைத்திருக்காது. இந்தியா எப்படியென நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

  கோவிலே கட்டக் கூடாது என மற்ற முகமதிய நாடுகள் சொல்லுகின்றன. இந்தியாவில் அதெல்லாம் கிடையாது.

  • sahodara,”kovil cutta koodadunnu solra muslim nadellam mada sarbulla nadu.India mada sarbilla nadu.” palukkum(milk)sunnambukkum vidyasam therindukol sahodara.

  • //கோவிலே கட்டக் கூடாது என மற்ற முகமதிய நாடுகள் சொல்லுகின்றன//

   UAE (துபாய், அபுதாபி), பாகிஸ்தான், பங்களாதேஷ், இரான், இந்தோனேசியா, மலேசியா, ஓமன் ஆகிய நாடுகளில் இந்து கோவில்கள் உள்ளன.

   (எனவே குசூதரன், உங்கள் ‘பின்மூச்சை’ சிவன் கோவிலில் மட்டும் கசிய விடவும்.)

   மேலே குறிப்பிடப்படுபவை இஸ்லாமிய நாடுகளாக தம்மை அழைத்துக்கொள்பவை. ஆனால் இந்திய அரசியலமைப்பு இந்நாட்டை ஒரு மதச்சார்பற்ற அரசாக அறிவித்துக்கொண்டு, நடைமுறையில் இந்து பயங்கரவாத அரசாகவே திகழ்கிறது.

 6. ராமர் கோவில் வேண்டாமென சொல்லும் இந்துக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். எங்கே பாபர் மசூதி வேண்டாமென சொல்லும் ஒரே ஒரு முகமதியனை காண்பியுங்கள் பார்க்கலாம்.

  • அப்புறம் இன்னொரு மேட்டரு:

   //, ராமர் கோவில் கட்டுவதை தடை செய்ய முடியாது.
   //

   ரொம்ப நல்லது. கடப்பாரக் கும்பலோட வெறியப் பாத்தா ராமன் கோயில் மட்டும்தான் கட்சீல மிஞ்சும்னு நினைக்கிறேன். டேய் மறந்து போயி அத்தயும் இடிச்சுறாதீங்க….

 7. sahodara ,”kovil cutta koodathunu solra muslim nadellam mada sarbulla nadu.India mada sarbilla nadu.”palukum(MILK)sunnambukkum vidyasam therindukol sahodara.

 8. எப்படியோ…. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை நிகழ்த்த அரசு தயாராக இருக்கின்றது என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி…

  தம் வாழ்நிலத்துக்காகப் போராடும் பழங்குடியினர், தாமும் இந்தியக் குடிகள்தாம் என நிரூபிப்பதற்காகத் தமது மத உணர்வுகளைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கப்படும் இஸ்லாமியர்கள் (நீ இந்தியன் என்றால் ராமர் கோயிலுக்கு வழிவிடு), அமைதியான, மான வாழ்வுக்குப் போராடும் கஷ்மீரிகள், தோளில் துண்டு, காலில் செருப்பும் போடவும் ஆதிக்கசாதியினரிடம் இறைஞ்சும் தாழ்த்தப்பட்ட மக்கள், கடற்கரையில் செத்து ஒதுங்கும் மீன்களை மட்டும்தான் பிடிக்கவேண்டும் என்று அருளப்பட்ட மீனவர்கள், ஒருவேளை சோற்றுக்கும், ஒண்டக் குடிசைக்கும் வக்கின்றி அழும் ஏழ்மையில் உறைந்துபோன, எலிக்கறி சாப்பிடவும் அதற்கும் வழியில்லை எனில் ‘வயிற்று வலி’யாலோ இல்லை ‘புருஷன் பொண்டாட்டித் தகராறிலோ’ தற்கொலை செய்துகொள்ளும் பரிதாப ஜீவன்கள்….

  என இவர்கள் எல்லாரையும் ஒரே போடு! போட்டுவிட்டால் இந்தியா அமைதிப்பூங்காவாக மாறிவிடாது?!

 9. சகோதரன் என்ற பெயரில் வந்துள்ள காவி பயங்கரவாதி அவர்களே

  ராமர் கோவில் வேண்டாமென சொல்லும் இந்துக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். எங்கே பாபர் மசூதி வேண்டாமென சொல்லும் ஒரே ஒரு முகமதியனை காண்பியுங்கள் பார்க்கலாம்.

  துபையில் கூட சிவன் கோயில் இருக்கிறது,துபாய் ஒரு முஸ்லிம் நாடு. எந்த முஸ்லிமும் ஒரு கோயிலை இடிச்சுட்டு மசூதி கட்டித்தர சொல்லலையே. நானூறு வருசமா இருந்ததை தானே கேட்கிறோம். ஏற்கனவே இருந்ததை இடிச்சது மட்டும் இல்லாமல் இன்னும் ஆயிரக்கணக்கான மசூதிகளையும்,சர்ச்சுகளையும் இடிக்கனும்னு அலையிறீன்களே !!!!. பாபர் மசூதி விவகாரத்தை போனால் போகட்டும்னு விட்டால், உங்களுக்கு துளிர் விட்டுப்போஇரும். அப்புறம் ஆளாளுக்கு இடிக்க கிளம்பிருவானுங்க.

  http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_06.html

  • கோயிலை இடித்து தானே மசஊதி கட்டினீங்க ..இப்போ மசஊதியை இடித்து கோயில் கட்டுறோம்..
   மூடிகிட்டு போங்க…சரியா

 10. “The Collateral Damage of Breaking News” என்ற அருந்ததி ராயின் பேச்சும் கட்டுரையும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  இவர்கள் அவரை எதோ ஒரு இயக்கத்தின் ஆதரவளாராய் முத்திரை குத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். உண்மையில் இந்த பேட்டியில் பேசப்படும் அல்லது கருதுபொருளின் நியாயங்களை பார்ப்பவர்களுக்கு புரியவைக்கும் எந்த கேள்வியையும் “தபார்” என்பவர் கேட்டதாக எனக்கு தெரியவில்லை, புரியவில்லை. என்னவோ இவர் ஒருவரை முத்திரை குத்திவிட்டால் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு தீர்வு வந்துவிடும் போல்!!!!

  சர்வதேச அளவில் Noam Choamsky போன்றவர்களால் பாராட்டப்பட்ட ஒருவரை இந்திய ஊடகம் ஒன்று கூப்பிட்டு வைத்து கொரளி வித்தை காட்டுவதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 11. அருந்ததி ராய் அவர்கள் முடிந்த அளவு நடுநிலை வஹிக்க முயற்சி செய்து இருக்கிறார் ஆனால் எந்த விசியதிலும் யாரும் நடுநிலைமை வஹிக்க முடியாது மாவோயிஸ்ட் வன்முறையை யாரும் ஆதிரிக்க கூடாது என்கிறார்கள் ஏன் இந்திய முதலாளிகளும் அரசாங்கமும் பட்டளிகளை கொள்ள உரிமை பெற்று இருப்பதாக நினைக்கும் போது அவர்கள் திருப்பி கொள்ளுவதில் என்ன தவறு இருக்கிறது அரசாங்கத்தின் வன்முறை தவறு இல்லை என்றால் மாவோயிஸ்ட் வன்முறையும் தவறில்லை

 12. தங்களது புரட்சிக்கான மாவோயிஸ்டுகளின் வன்முறை வழி எனக்கு தவறாகவேப்படுகிறது.

  இவர்களது செயல்களால் கம்யூனிசப் புரட்சி என்பதே ஏதோ தீவிரவாத செயல் என்பதான தவறான தகவல்கள் பரவுகின்றன. வெகுஜன மக்கள் ஆதரவில்லாத எந்த ஆயுதப் புரட்சியும் வென்றதில்லை. இவர்கள் மக்கள் ஆதரவு பெற எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை.

  தேவையில்லாமல் சிலரை பிணைக் கைதியாக்கி கொல்லும்போது, இவர்களை யாரும் புரட்சியாளர்களாகப் பார்ப்பதில்லை. இது போன்ற செயல்கள், இவர்களை மக்கள் மத்தியில் தீவிரவாதிகள் என முத்திரை குத்த நினைக்கும் அரசியல்வாதிகளின் வேலையை எளிதாக்குகிறது.

  • //வெகுஜன மக்கள் ஆதரவில்லாத எந்த ஆயுதப் புரட்சியும் வென்றதில்லை. இவர்கள் மக்கள் ஆதரவு பெற எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை.//

   அன்பு, இப்படி யோசித்துப்பாருங்களேன். ஏன் ஆயுதப்புரட்சி உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது? யாருக்காக உருவாகிறது? அருந்ததி ராய் அடிப்படையில் சொல்வது ஆயுதப்புரட்சியாளர்கள் ஏன் உருவாகுகிறார்கள் என்பதை அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டும் என்பது தான்.

   போராட்டமே மக்களுக்காக என்னும் போது நாங்கள் ஆட்டுமந்தைகளாய் சிந்திப்பது அவர்கள் தவறல்லவே. போராடுபவன் கடிமனதோடு எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்க தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் நோகாமல் இருந்து விமர்சனம் மட்டும் செய்வோம்?

   • //போராட்டமே மக்களுக்காக என்னும் போது நாங்கள் ஆட்டுமந்தைகளாய் சிந்திப்பது அவர்கள் தவறல்லவே. போராடுபவன் கடிமனதோடு எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்க தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் நோகாமல் இருந்து விமர்சனம் மட்டும் செய்வோம்?//

    Good thought! ஆயுதப்போராட்டம் சிறு குழுவாகத்தான் துவங்கும். ஒடுக்குமுறைக்கு எதிரான கணிசமான பலம் பெற்றதும்தான் அவர்கள் தமது அடுத்தகட்டமாக விரிவான அளவிலான அரசியல் பரப்புரையை நடத்தமுடியும். எல்லா மக்களையும் அரசியல் விழிப்புண்ர்வு அடையச்செய்து அதன்பின் தான் ஆயுதப்புரட்சியை ஒழுங்கு செய்யவேண்டுமென்றால் அதுவரை ஒடுக்குமுறையாளர்கள் விரல்சூப்பிக்கொண்டா இருப்பார்கள்?!

    • //ஆயுதப்போராட்டம் சிறு குழுவாகத்தான் துவங்கும். ஒடுக்குமுறைக்கு எதிரான கணிசமான பலம் பெற்றதும்தான் அவர்கள் தமது அடுத்தகட்டமாக விரிவான அளவிலான அரசியல் பரப்புரையை நடத்தமுடியும்.//

     உங்களது இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கருத்தின்படி பார்த்தாலும் மாவோயிஸ்ட்கள் தங்களது அரசியல் கொள்கைகளைப் பற்றி மக்களிடம் விளக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன்.

     இங்கே உடன் வேலை செய்யும் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பலரும் மாவோயிஸ்ட்களையும், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளையும் ஒன்றாகவே வகைப்படுத்தினர். இதுதான் எனக்கு வருத்தமளிக்கும் ஒரு விஷயம். அடிப்படைவாதத்தையும், முற்போக்கு சிந்தனையும் ஒன்றாகப் பார்க்க கூடிய அளவில், மக்களிடம் செய்திகளைப் பரப்ப மாவோயிஸ்ட்கள் காரணமாக அமைந்திருக்கின்றனர்.

     மாவோயிஸ்ட்கள், தங்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல் என அரசு தற்போது உணர்ந்துள்ளது. அதனால்தான் அவர்களின் தீவிரவாத செயல்கள் அனைத்து ஊடகங்களிலும் முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. எனவே அரசு தங்களுக்கெதிராக உபயோகிக்கும் ஊடகங்கள் மூலமாகவே தங்களின் கருத்துகளை மக்களிடம் தெளிய வைக்க இவர்கள் முயற்சிக்கலாமே. அதை இவர்கள் செய்வதுபோலவே தெரியவில்லையே.

 13. //எனவே அரசு தங்களுக்கெதிராக உபயோகிக்கும் ஊடகங்கள் மூலமாகவே தங்களின் கருத்துகளை மக்களிடம் தெளிய வைக்க இவர்கள் முயற்சிக்கலாமே.//

  ஊடகத்துறை முழுக்க முழுக்க யார் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லையா உங்களுக்கு? ஊடகங்கள் அரசு தரப்பை முழுமனதுடந்தான் ஆதரிக்கின்றன என்பதே உண்மை நண்பரே! கரண்தாப்பரின் கேள்விகளைக் கூர்ந்து கவனியுங்கள்… அவரது குரல் அரசின் குரலாக ஒலிக்கவில்லை? “நீங்கள் எங்கள் பக்கம் இல்லையென்றால் அவர்கள் பக்கம் இருக்கின்றீர்கள்!” என்ற புஷ்ஷின் குரல் தெரியவில்லை? மாவோயிஸ்ட்டுக்களிடம் இருக்கும் நியாயத்தை ஓரளவாவது எடுத்தியம்பும் ஊடகவியலாளர்கள் எந்தளவு அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதற்கு அருந்ததிராயே உதாரணம். ஊடகப் பரப்புரை என்பது மாவோயிஸ்ட்டுக்களுக்கு எந்தளவு சாத்தியம் என்பதில் எனக்கு நம்பிக்கை குறைவே!

  • நான் சொல்வது அரசைப் போல மறைமுகமான வழியில் இல்லை. நேரடியான வழியில். ஒரு பேட்டியாக.

   எனக்கு தெரிந்தவரை இது சாத்தியமே. எப்போது பரபரப்பான செய்தி கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள், மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவர் பேட்டி அளிக்கிறார் என்றால் அதை ஒளிபரப்ப தவருவார்களா என்ன? ‘exclusive interview’ எனக் கூறி பல விளம்பரங்களுடன் ஒளிபரப்புவார்கள் என்றே தோன்றுகிறது.

 14. அருந்ததி ராய் மீது தேச துரோக வழக்கு :

  காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், ‘காஷ்மீர் சுதந்திர நாடா? அடிமை நாடா?’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் ஒன்று நடந்தது.

  இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் பேசுகையில், “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. ஒருபோதும் இந்தியாவின் அங்கமாக காஷ்மீர் இருந்தது இல்லை. இது வரலாற்று உண்மை. இது, இந்திய அரசுக்கும் தெரியும்.

  இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதும், இந்தியாவுக்கு காஷ்மீர் மீது காலனி ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இருந்தது. அதனாலேயே, இந்தியாவுடன் காஷ்மீர் இருக்கிறது,’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

  எழுத்தாளர் அருந்ததி ராய் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-A-வின் கீழ் தேச துரோக வழக்குப் பதிவு செய்ய டெல்லி காவ‌ல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

  http://www.vikatan.com/news/news.asp?artid=5315
  http://tamil.webdunia.com/newsworld/news/national/1010/26/1101026002_1.htm

 15. It comes from not wanting people to be killed, raped, imprisoned or have their finger-nails pulled out in order to force them to say they are Indians.

  Pity the nation that has to silence its writers for speaking their minds. Pity the nation that needs to jail those who ask for justice, while communal killers, mass murderers, corporate scamsters, looters, rapists, and those who prey on the poorest of the poor, roam free.”
  – Arundhati Roy

  http://timesofindia.indiatimes.com/india/I-pity-the-nation-that-needs-to-jail-those-who-ask-for-justice-Arundhati-Roy/articleshow/6814239.cms#ixzz13S87CmhH

 16. உண்மையை பேசியதற்காக அருந்த்திராய் மீது வெறி நாய்களைப் போல பாயும் இந்த விரிவாதிக்க வெறியர்கள் அருந்த்திராய் பேசியது தவறு என்றால், எது சரி அல்லது எது உண்மை என்கிற வரலாற்று விவரங்களை முன் வைப்பது தானே நியாயம் ? அருந்த்திராய் பேசுவது பொய் என்றால் இந்த அரசு உண்மையை பேச வேண்டியது தானே ? அவர்கள் கூட்டியதை போல அரசின் சார்பில் ஒரு கூட்ட்த்தை ஏற்பாடு செய்து பத்திரிகையாளர்களை அழைத்து ’வரலாற்று உண்மை’களை அறிவிக்க வேண்டியது தானே ? அதை விடுத்து கைது செய்து சிறையிலடை என்று உத்தரவிடுவது ஏன் ?

  நமது காஷ்மீர் வெல்க!

  http://vrinternationalists.wordpress.com/2010/11/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/

 17. இது வரை எந்த அகிம்சைப் போராட்டங்களும் இந்திய அரசால் நேர்மையான முறையில் எதிர்க்கொள்ளப்பட்டதில்லை காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தவிர்த்து (அதுவும் வெள்ளைய அரசால்). காந்தியும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் மிசாவிலும், தடாவிலும், பொடாவிலும் தொடர்ச்சியாக சிறை வைக்கப் பட்டு கடைசியில் தப்பித்துச் செல்ல முயன்றதற்காக என்கவுண்ட்டரில் கொல்லப் பட்டிருப்பார்.
  அட ! விடுங்கப்பா ! எனக்கெதெற்கு ஊர் வம்பு, நான் கலைஞர் டிவில மானாட மயிலாட பார்க்கனும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க