Sunday, November 3, 2024
முகப்புகலைகவிதைஇந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??

இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??

-

சர்ச்சைக்குரிய இடம்…

முதலாளித்துவச் சமூகத்தில்
மூட்டைப்பூச்சிக்கும், கொசுவுக்கும் கூட வர்க்கமுண்டு,
இயலாதவரையே ஏறிக்கடிக்கிறது!

இந்த லட்சணத்தில்…
இந்தியாவில் நீதிமன்றம் மட்டும்
சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி
நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று
யாராவது நம்பினால்…?
அயோத்தி தீர்ப்பே
அந்த எண்ணத்திற்கு ஆப்பு!

“சர்ச்சைக்குரிய இடம்” யாருக்குச் சொந்தம்?
சட்ட, ஆதாரப்படி சொல் என்றால்,
சர்ச்சைக்குரிய பிறவிக்கே இது ‘ஜென்ம பூமி’ என்று
தீர்ப்பை சொல்கிறான் என்றால்..
இது நீதிமன்றமா… சங்கரமடமா!
இவன் நீதிபதியா… சங்கராச்சாரியா!
இந்து மதவெறியன் கடப்பாரையில்
இடித்துச் சொன்னதை…
“பார் அட்லா”  சுத்தியலால்
அடித்துச் சொல்லியிருக்கிறான்..
வேறுபாடு கருவியில்தான்
மற்றபடி இந்திய நீதித்துறை
எப்போதும் போல் பார்ப்பன படித்துறை.

உழைக்கிற உழவுமாட்டுக்கு சூடு,
திரிகிற கோயில் மாட்டுக்கு தீனி, அகத்திக்கீரை!
இதுதான் இந்து தர்மம்!

உழைக்கும் மக்கள் அர்ச்சகராகி
கருவறைக்குள் நுழைய எதிர்ப்பு!
சந்நிதானத்திலேயே சங்கரராமனை போட்டுத்தள்ளிய
ஜெயேந்திரனுக்கு சட்டம் ஒரு செருப்பு!
இதுதான் அரசியல் சட்டம்!
இவனிடமா நீதி கிடைக்கும்?

பிரியங்கா போட்மாங்கே என்ற
தாழ்த்தப்பட்ட பெணணை
கும்பலாக வன்புணர்ந்து
பிணமான பின்பும் அவளைக் கடித்துக் குதறி,
அவள் பிறப்புறுப்பில் கட்டையைச் செருகிய
ஆதிக்கசாதி வெறிநாய்கள் மேல்,
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்காட முடியாது என
அரசியல் சட்டத்தை அவள் பிணத்தில் செருகிய
ஆதிக்கசாதி பயங்கரவாதிகள்தான்
இந்த நீதிபதிகள்.

இந்தியாவின் முகத்தின் மேல்
என் கழிவை இறக்குவேன்…
அதன் வேதிவினை பற்றி
விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கில்லை..
இது எங்கள் தொழில் ரகசியம் என
கொக்கரிக்கும் கோக்கோ கோலாவிடம்
பேசாமல்… சட்டப்புத்தகத்தால்
தன் பின்வாயைப் பொத்திக் கொள்ளும் நீதித்துறை
‘பந்த்’ வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்ன
போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்கிறது!
புரிகிறது…
இளிச்சவாய் இந்தியனென்றால் விடாது இ.பி.கோ.!
பன்னாட்டுக் கம்பெனி என்றால்
நீதிமன்ற தராசையும் எடுத்துக்கோ!

முப்பதாயிரம் இந்தியர்களை
போபாலில் படுகொலை செய்த
அமெரிக்க யூனியன் கார்பைடு நச்சுப் புகையின்
வேதியியல் பெயர் “மெத்தில் ஐசோ சயனேட்
அதன் அரசியல் பெயர் “இந்தியன் பீனல் கோட்
அமெரிக்க ஆண்டர்சனின்
சிகரெட் குவளைக்குள் கிடக்கிறது
இந்திய நீதிமன்றங்களின் சாம்பல்

யூனியன் கார்பைடின் இலாபத் தாரசின்
எடைக்கு எடை இந்திய நீதிபதிகள்

இன்றும் கூட.. போபாலில்
உதடுகள் பிளந்து, கண்கள் பிதுங்கி,
மரபணு சிதைந்து…
பிறக்கும் குழந்தைகளின் முகத்தில்
விகாரமாய்த் தெரிகிறது நீதித்துறை!

ஆந்திரா தேர்வு மையத்தில் காப்பியடித்து..
அலகாபாத் நீதிமன்ற ஊழியர்களின்
ஓய்வூதியத்தை கொள்ளையடித்து,
மாட்டிக் கொண்டவர்களை மடக்கிப் பிடித்தால்
அத்தனை பேரும் நீதிபதிகள்

விழுந்து, எழுந்து போராடும்
உழைக்கும் மக்களின் உரிமை மூச்செங்கும்
அழுந்திக் கிடக்கும் நீதித்துறையின் தழும்புகள்

அதிர்ச்சியடையத் தேவையில்லை
சர்ச்சைக்குரிய இடம்… இனி
பாபர் மசூதியோ, ராமன் பொம்மை பிறந்த இடமோ அல்ல,
இந்த நீதித்துறைதான்.
தெரிந்து விட்டது உண்மை
தெருவில் இறங்கி வழக்கை முடி!

_________________________________________________
* துரை.சண்முகம்
_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா?? | வினவு!…

    இந்தியாவில் நீதிமன்றம் மட்டும் சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று யாராவது நம்பினால்…? அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!…

  2. ஒருவருக்கு மட்டுமே சாதகமாக தீர்ப்பு சொல்லி இந்தியாவில் இன்னொரு ரத்த ஆறு ஓட வேண்டும்..
    நாம அதுல குளிட்சிருக்கலாமே …..! அட டா …அது நடக்காம போய்டுச்சே …இப்படி பொலம்ப விட்டுடானுவல்ளே…நாசமா போவ….

    • ஆமாமா… என்னோட பங்காளி நெலத்த நான் புடுங்கிகிட்டேன் கொஞ்சநாள் முன்னாடி… அவன் கொஞ்சம் வக்கத்த பய… நாலஞ்சி நாளு சாமியாடுவான்… சரி அந்த நெலத்த நாம சட்டப்படி சொந்தமாக்கிக்கிட்டா ஞாயம்பேச வசதியா இருக்குமேன்னு நம்மூரு பஞ்சாயத்த ஒருவழியா சரிக்கட்டி சோலிய முடிச்சிட்டேன். இப்ப என்னடான்னா ஊருக்குள்ளாற நாலு வேலையத்தவனுக சேப்புத்துண்டு போட்டுகிட்டு பங்காளி பக்கம் வரிஞ்சிகட்டி நிக்குறானுவ. ஏம்பக்கம் தீர்ப்பு சொல்லனன்னா ஊருக்குள்ள நாலு வைக்கப்போர கொளுத்திடுவேன், ஊரு அமைதி போயிடும்னு நல்லெண்ணத்துல பஞ்சாயத்து சொன்ன தீர்ப்ப தப்புன்னு சொல்ல இந்த பயலுவளுக்கு எவ்ளோ துணிச்ச வேணும்? ஞாயத்துக்கு கட்டுப்படவேணாம்? ஊரு ரொம்ப கெட்டுக்கெடக்குது மூட்டா அண்ணே! ஏதோ உங்கள மாரி நாலு நல்லவங்க எடுத்துச் சொன்னாத்தான் இவங்களுக்கு புத்திவரும்

  3. நீதி மன்றங்கள் தம் அளவில் குரைந்து நிதி மன்றங்களாக மாரிவிட்டன. இதில் பார்ப்பணன் என்ன? பைட்தியக்காரன் என்ன?

  4. ///சர்ச்சைக்குரிய இடம்… இனி
    பாபர் மசூதியோ, ராமன் பொம்மை பிறந்த இடமோ அல்ல,
    இந்த நீதித்துறைதான்.
    தெரிந்து விட்டது உண்மை
    தெருவில் இறங்கி வழக்கை முடி! ..////

    நல்லகாமன் வழக்கு முதல் பாபர் மசூதி வழக்கு வரை அனைத்து வழக்குகளும் நமக்குத் தரும் தீர்ப்பு இது தான்.

  5. ///தாழ்த்தப்பட்ட பெணணை
    கும்பலாக வன்புணர்ந்து
    பிணமான பின்பும் அவளைக் கடித்துக் குதறி,
    அவள் பிறப்புறுப்பில் கட்டையைச் செருகிய
    ஆதிக்கசாதி வெறிநாய்கள் மேல்,///

    வெறுமே ஆதிக்கசாதி என்று மூடி மறைப்[பது ஏன். அந்த சாதியினர் அடிப்பார்கள், கொல்வார்கள், தெருவில் இறங்கி வன்முறை செய்வார்கள் என்ற பயமா? அவர்கள் எந்த சாதியினர் என்று சொல்ல ஏன் தயக்கம்? ஒரு தாழ்த்தப் பட்ட பெண்ணை வன்கொடுமை செய்தவர்களை ஏன் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை? இது பேடிமை இல்லையா?

    ///இந்தியாவின் முகத்தின் மேல்
    என் கழிவை இறக்குவேன்…
    அதன் வேதிவினை பற்றி
    விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கில்லை..
    இது எங்கள் தொழில் ரகசியம் என
    கொக்கரிக்கும் கோக்கோ கோலாவிடம்
    பேசாமல்… சட்டப்புத்தகத்தால்
    தன் பின்வாயைப் பொத்திக் கொள்ளும் நீதித்துறை///

    வெறுமே கொக்கோ கோலா என்று மூடி மறைப்பது ஏன்? அவர்கள் அன்னிய நாட்டினர் என்ற பயமா? அவர்கள் கிறித்துவ ப்ரொடஸ்டண்டு சாதியினர் என்று சொல்ல ஏன் தயக்கம்? இந்தியாவின் முகத்தின் மீது கழிவை இறக்கியவர்களை ஏன் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை? இது பேடித்தனம் அடிமைத்தனம் இல்லையா? நீதித்துறையைக் கேள்வி கேட்கும் நீங்கள் ஏன் உங்கள் கண், வாய், பினபுறம் எல்லாவற்றையும் பொத்திக் கொள்கிறீர்கள்?

    ///முப்பதாயிரம் இந்தியர்களை
    போபாலில் படுகொலை செய்த
    அமெரிக்க யூனியன் கார்பைடு நச்சுப் புகையின்
    வேதியியல் பெயர் “மெத்தில் ஐசோ சயனேட்
    அதன் அரசியல் பெயர் “இந்தியன் பீனல் கோட்
    அமெரிக்க ஆண்டர்சனின்///

    கிறித்துவ கத்தோலிக்க சாதியினரான ஆண்டர்சன் என்று எழுத என்ன தயக்கம்? எது உங்கள் கண்ணை மறைக்கிறது? நீதித்துறைக்குக் கொடுத்த அதே சாம்பலா?

    ///ஆந்திரா தேர்வு மையத்தில் காப்பியடித்து..
    அலகாபாத் நீதிமன்ற ஊழியர்களின்
    ஓய்வூதியத்தை கொள்ளையடித்து,
    மாட்டிக் கொண்டவர்களை மடக்கிப் பிடித்தால்
    அத்தனை பேரும் நீதிபதிகள்///

    இவர்களில் இருக்கும் கிறித்துவ கத்தோலிக்க, ப்ரொடச்டண்ட், பெந்தகோஸ்ட், பார்ன் அகைன், இன்னபிற கிறித்துவ சாதியினரும், இஸ்லாமிய சுன்னி ஷியா, லப்பை சாதியினரும் உங்களுக்கு ஏன் தெரியவில்லை? ஏனென்றால் அவர்களைப்பற்ரி தலைப்பிட்டு எழுதினால் அடித்துக் கொல்லுவார்கள் என்பதுதானே? ஒரே ஒரு முறை மேடை போட்டு அவர்களைத் திட்டிப் பாருங்கள், ஃபட்வா வரும், உங்கள் தலைக்கு.

    • வாங்க குமரன்,
      வினவுல இந்த ஒரு கட்டுரை மட்டும் இல்லை. நிறைய எழுதிருக்கு நிதானமாப் படிங்க. அப்புறமா உங்க மதிநுட்பம் வாய்ந்த கேள்விகளை படியுங்கள்.

  6. இ.பி.கோ—?இந்தியன் பிராமணன் கோட்.

    இதில் நீதியை எதிர்பார்ப்பது “இலவு காத்தகிளி” என்ற பழமொழி போல…

    இல்லை…இல்லை…

    “அயோத்தி வழக்கில் நியாயத்தை எதிர்பார்த்த முஸ்லிம்கள்” என்ற புதுமொழி போல எதற்கு நம்பிக்கை வைக்கிறீர்கள்..? அப்புறம் குய்யோ முறையோ என்று கூவுகிறீர்கள்?

  7. பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டு விடும் என்று அது நினைத்து கொள்வது போல
    தற்காலத்திற்கு முற்றிலும் ஒவ்வாத பார்ப்பன தத்துவத்தை தாங்கி பிடிக்கும் வினவுக்கு வாழ்த்துக்கள்.
    பிரச்னை என்றால் களத்தில் இறங்கி போராடாமல் வெட்டி தத்துவம் பேசியே பிறர் கவனத்தை ஈர்ப்பதில் காலத்தை கடத்துபவர்கள் எப்போதும் இருக்கத்தான்செய்வார்கள்
    ஊடக வசதினையும் அதற்கென்றே பயன் படுத்திக்கொள்ளும் வினவு
    தனக்கு பிடிக்காத அரசியல் கட்சி, மற்றும் தனி மனிதர்கள், மற்றும் சாதி இவற்றை விமர்சனம் செய்ய ஒரு இணையதளம்

    பதிவுலக வாசகர்களே இவற்றை புறக்கணியுங்கள்

    • வினவு படிக்க ஆரம்பித்தபோது நானும் இப்படி தான் உளறினேன். நீங்க புதுசு போல. அதனால் தான் உடனே வினவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்துப் படித்தால் புரிந்துகொள்வீர்கள். அல்லது நீங்கள் நியாயத்தின் பக்கம் அல்லாமல் அக்கிரமத்தை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்!

  8. […] This post was mentioned on Twitter by karthick, சங்கமம். சங்கமம் said: இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??: இந்தியாவில் நீதிமன்றம் மட்டும் சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி ந… http://bit.ly/d01GGX […]

  9. ராமன் பொம்மை என்று சொல்லும் உன்னால் அல்லாவும் ஏசுவும் பொம்மை, புரட்டு என்று சொல்ல துணிவு இருகிறதா? இல்லை நீங்களும் நம் பிணம் தின்னி முதல்வர் போல போலி பகுத்தறிவா?

    • நம் முதல்வர் பிணங்களின் மீது அரசியல் ஆதாயம் தேடியதால் அவரை பிணம் தின்னி என்று அழைத்துள்ளேன் …

    • //ராமன் பொம்மை என்று சொல்லும் உன்னால் அல்லாவும் ஏசுவும் பொம்மை, புரட்டு என்று சொல்ல//

      இது ஒரு விசித்திரமான கேள்வி. ராமனை பொம்மை என்றால் அல்லாவையும், ஏசுவையும் புரட்டு என்று சொல்ல வேண்டுமா என்ன? பொம்மை என்று சொல்ல வேண்டும் என்றால் அதனை வினவு பல முறை செய்துள்ளது, அந்தந்த மதவாதிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுமுள்ளது.

      புரட்டு என்று சொல்வது என்றால் அது வரலாற்றுக்கு புரம்பாகச் செல்வது ஆகும். அல்லாவும், ஏசுவும் என்ற தனிமனிதர்கள் இருந்தது உண்மை. அவர்களின் வரலாறு என்று சொல்லப்படுவதும் உண்மை. ராமன் இருந்தது உண்மையா? சரி அப்படியே இருந்ததாகக் கொண்டால் அவனை நிற்க வைத்து நடு மண்டையில் கட்டையால் அடிகக் வேண்டிய அளவு சாதி வெறி பிடித்தவனாகவும், கொலைகாரக் கிரிமினலாகவும், நீதி நேர்மையற்ற குள்ளநரி சதிகாரனாகவும், அழுத நடித்து காரியம் சாதிக்கும் மோசக்காரனாகவும், ஆணாதிக்க வக்கிரனாகவுமே இருந்துள்ளான். இது எதுவும் கற்பனையல்ல. ராமனைப் பற்றி ராமனது அபிமானிகள் காலம் காலமாக எழுதி வைத்துள்ளவற்றிலிருந்தே இவையெல்லாம் தெரியவருகின்றன.

      • //அல்லாவும், ஏசுவும் என்ற தனிமனிதர்கள் இருந்தது உண்மை//

        அசுரன்… அல்லா என்பதைத் திருத்தி முகமது நபி என்று பதியுங்கள்.. தகவல் பிழை…

      • இயேசு தனி மனிதனாக வாழ்ந்திருக்கலாம், இப்பொழுது அவரை கடவுளாக மாற்றி விட்டனர். அல்லா தனி மனிதன் என்று நீங்கள் சொல்லித்தான் கேள்வி படுகிறேன்.
        அவர்கள் கடவுள் அல்ல, தனி மனிதர்கள் கடவுளாக சிலரின் தனி பட்ட ஆதாயத்திற்காக மாற்றப்பட்டனர் என நிற்க வைத்து நடு மண்டையில் கட்டையால் அடிப்பது போல ஒரு பதிவு எழுத துணிவு இருகிறதா?

        ராமன் ஒரு கதை. விவாதம் ராமன் பற்றியது அல்ல….

        நாத்திகம் என்றால் அணைத்து மூட நம்பிக்கைகளையும் கிழித்தெறிய வேண்டும். அந்த துணிவு வினவுக்கு இருகிறதா?

        • இப்போ விவாதம் நாத்திகம் இல்லை, அயோத்தி தீர்ப்பு சரியா இல்லையா என்பது தான். ஒரு மதவாதி மட்டும் தான் நீ ஏன்டா அயோக்கியத்தனம் பண்றன்னு கேட்டா “ஏன் என்ன கேட்குற அவன கேளு ” சொல்லி மழுப்புவான். இருக்குற பிரச்சனைக்கு நேர்மையா பதில் சொல்ல வக்கு இல்லை வந்து பேசுறானுங்க நாத்திகம் ஆத்திகமுன்னு.

    • நம் முதல்வர் உண்ம்யிலேயெ பிணம் தின்னி இல்லை இல்லைஎன்றால் உன்னைப்போன்ற பிணங்களையெல்லாம் பூமியில் உலவ விட்டிருக்கமாட்டார்.

  10. ராஜசேகர், குமரன் மற்றும் அவர்களையொத்தக் கருத்துடையோருக்கு,

    தெனமும் நாலு பேரு ஒங்கள மாதிரி கெளம்பி வந்துடுறீங்க.
    வினவுல ‘மதம்’ -ங்கிற லேபிளில் வர்ற கட்டுரைகளைப் பாருங்க.

    அதுக்கு முன்னாடி, விந்தைமனிதன் ஒரு பதிவு போட்டிருக்கார்.

    “நான் மட்டுமா தின்னேன். உங்க அண்ணனும் தான்.”
    http://vinthaimanithan.blogspot.com/2010/09/blog-post_23.html

    அதைக் மொதல்ல தொடைச்சிட்டு… ச்சே… படிச்சிட்டு வாங்க.

    • அல்லாவையும், ஏசுவையும் பத்தி எதுல சொல்லி இருக்கிங்கனு தயவு செய்து விலாசம் கொடுக்க முடியுமா? அந்த மதங்களில் உள்ள ஒரு சிலரை பற்றி மட்டும் வுள்ளது..
      எங்குமே மதத்தை விமர்சிக்கவில்லை …

    • அட! ஆமாமில்ல… கத இதுக்கும் பொருந்துமில்ல.. மறந்தே போயிட்டேன்…

      ஏம்மதம் மட்டுமா நாறுது? ஒம்மதமும்தான் நாறுது! ங்கொய்யால… எல்லாமே நாத்தந்தான்… இதுல என்ன நீ ‘ஏ’ கிரேடு,அவன் ‘பி’கிரேடு?

      ஏம்யா இப்பிடி மதம் மதம்னு திரியிறீங்க?

      நான் பொறப்பால இந்துவா போயிட்டேன்.. அதுனால மொதல்ல ஏங்குண்டியில இருக்குறதத்தான்யா மொதல்ல கழுவணும்… அடுத்தவன் குண்டி அப்புறந்தான்

  11. முதலாளித்துவச் சமூகத்தில்
    மூட்டைப்பூச்சிக்கும், கொசுவுக்கும் கூட வர்க்கமுண்டு,
    இயலாதவரையே ஏறிக்கடிக்கிறது!
    சிகரெட் குவளைக்குள் கிடக்கிறது
    இந்திய நீதிமன்றங்களின் சாம்பல்
    யூனியன் கார்பைடின் இலாபத் தாரசின்
    எடைக்கு எடை இந்திய நீதிபதிகள்.

  12. அநீதி என்று நினைக்கும் முஸ்லீம்கள் வீதியில் இறங்கவில்லை, மேல் முறையீடு செய்கிறார்கள். அமைதியாக இதை அணுகிறார்கள்.வீதியில் இறங்கினால் எந்தத் தீர்வும் வராது, வன்முறைதான் வரும். வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத பேர்வழிகள் தெருவில் இறங்கு என்கிறார்கள்.நீங்கள் இறங்குங்கள் உங்களுடன் எத்தனை முஸ்லீம் அமைப்புகள் கை கோர்க்கின்றன என்று பார்த்துவிடலாம்.
    சரி வீதிக்கு இறங்கிவிட்டால் உடனே தீர்ப்பு மாறிவிடுமா இல்லை நீங்கள்தான் தீர்ப்பை மாற்றிக் காண்பிக்கிற அளவிற்கு பெரிய அரசியல் சக்தியா. இருப்பது இருபது பேர் பத்து அமைப்பு பெயர்களில் போஸ்டர்- இதுதானே உங்களுடைய அரசியல் சக்தி.
    24 மணி நேரத்தில் 5 லட்சம் பேரை
    திரட்டக் கூடிய முஸ்லீம் அமைப்புகளே வீதிக்கு வரத்தயாரில்லை.அவர்களுக்கு வரத்தெரியாதா என்ன. உங்களை ஒரு பொருட்டாக மதிக்க முஸ்லீம்கள் தயாராக இல்லை, ஏமாறவும் மாட்டார்கள்.

    • இந்த மாதிரி எல்லாம் படிக்கும்போது நானே சிரித்துவிடுகிறேன். வினவு தோழர்களுக்கு சொல்லவா வேண்டும்!
      (அப்படினா முன்பெல்லாம் இதே மாதிரி நானும் உளரும்போது நீங்கலாம் இப்படி தான் சிரிச்சிருப்பிங்க இல்ல!! அட பாவிகளா 🙂 )

  13. உங்க துலுக்க நீதிபதியும் சேர்ந்துதான் அந்த இடம் இந்துக்களுக்கு தான் சொந்தமானதுன்னு சொல்லியிருக்கார். தீர்ப்பை படிக்காம பொலம்ப வந்துட்டான் போக்கத்த பய.

  14. Pirapileye manithanai verupadutthi paarkkum kevalam Paarpana sanaathana mathathil mattum thaan ullathu.Ulakil veru entha mathathilum ithu kidayaathu.raaman nijamaa karpanaiyaa enpathu oru pakkam irukka ,avanathu pirappu ,sayalpaadukal athanaium maanuda virothamaanaathu. athai poottrukiravarkal narakalai tham miithu poosikolkiravarkal thaam. DURAI.SHANMUGAM avarkale kobakanal koppalikkum ungal unarvukalin veppam pala paarppana kaanal niir kuttaikalai inamkattivittathu. ARUMAI,PERUMAI!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க