ஈராண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாடே குலுங்குகிறது. பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஏறத்தாழ 20 லட்சம் பேர் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் அன்று செயலிழந்து முடமாகிப் போயின. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு நாடெங்கும் 220-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
” அடிப்படை ஊதியத்தை அதிகப்படுத்து! தொழிலாளிகளை அதிரடியாக வேலையிலிருந்து தூக்கியெறியாதே! இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடு! முதியோர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை முழுமையாகக் கொடு!” என்பதுதான் போராடும் மக்களின் கோரிக்கை. அரசின் விசுவாச போலீசு -இராணுவ – அதிகாரிகளைத் தவிர, நாட்டில் எவரும் அதிபர் சர்கோசியின் அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஏறத்தாழ 80 சதவீத மக்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து அரசின் ‘சீர்திருத்த’ சதித் திட்டங்களை எதிர்க்கின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகையை எடுத்து நிதியாதிக்கச் சூதாட்டக் கும்பல்களுக்கு வாரியிறைத்து விட்டதால், ஓய்வூதிய நிறுவனங்கள் அனைத்தும் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் உள்ளன. பிரெஞ்சு அரசோ ஓய்வூதியம் கொடுப்பதால் அரசின் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடி செலவாகிறது என்று கூறி ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 60-லிருந்து 62-ஆக நீட்டிக்கும் கொள்கையை அறிவித்து ஓய்வூதியத்தையே செல்லாக் காசாக்கத் துடிக்கிறது. பிரான்ஸ் மட்டுமின்றி, பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதேபோல ஓய்வூதியம் பெறும் வரம்பை 65 முதல் 67 வயதுவரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.
போராடும் தொழிலாளர்களோ இந்தச் சதிகளையும் பசப்பல்களையும் ஏற்கத் தயாராக இல்லை. ஓய்வூதியத் தொகையைச் சுருட்டும் நிதியாதிக்கக் கும்பல்களிடமிருந்து அதனைப் பறித்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல இடங்களில் தொழிலாளிகள் பேரணி நடத்தியுள்ளனர். ஓய்வூதியப் பிரச்சினைதான் போராட்டத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், இது மொத்தப் பிரச்சினையின் ஒரு அம்சம்தான். சமூக அநீதிக்கும் முதலாளித்துவத்துக்கு எதிராக, அதாவது மூலதனத்தின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகவே இந்தப் போர் வெடித்துள்ளது.
நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள முதலாளிகளைக் காப்பாற்ற, நாட்டின் உழைக்கும் மக்களைக் காவு கொடுக்கும் கொள்கைகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக செப்டம்பர் 23-ஆம் தேதியன்று மீண்டுமொரு நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. செப்.21 முதல் செக் நாட்டிலும், செப்.29 முதல் ஸ்பெயின் நாட்டிலும் தொழிலாளி வர்க்கத்தால் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடரும் இப்போராட்டங்களின் ஊடாக, முதலாளித்துவ அரசியலமைப்பு முறையை வீழ்த்தி சோசலிசத்தை நிறுவுவதுதான் ஒரே தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
__________________________________
– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!
- ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!
- துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!
- மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
- கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
- ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!
- தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- தனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்!
- ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
- சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!
- பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்?
- 60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?
- பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்
- இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்
மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்! | வினவு!…
பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதற்க்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் குலுங்குகிறது….
[…] […]
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
read/share this too
http://www.economist.com/node/17259009?story_id=17259009&fsrc=scn/tw/te/rss/pe
[…] This post was mentioned on Twitter by Kirubakaran S, ஏழர. ஏழர said: @paviraksha is @vinavu following your tweets http://j.mp/apPzlk […]
//முதலாளித்துவ அரசியலமைப்பு முறையை வீழ்த்தி சோசலிசத்தை நிறுவுவதுதான் ஒரே தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.//
சோசியலிசம் வெற்றி பெற்ற நாடு எது என்பதை கூறுங்கள், சோசியலிசம் நாடு ரஷ்ய அதுவும் உடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது சோசியலிசம் பேசுவதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கும் செயலுக்கு ஒத்து வராது. முதலாளித்துவ நாடுகள் இன்று வரை தாக்கு பிடிக்கிறது .
முதலாளித்துவம் தாக்குப் பிடித்த பிடியில் எத்தனை பேரைப் பட்டினி போட்டே கொலைசெய்திருக்கிறது. அது உங்கள் வீட்டுக்கும் வரும், அணுகுண்டாக, துப்பாக்கியாக, etc..
இங்கு வந்து சொல்லும் ஐரோப்பிய நாட்டு மக்கள் சொல்லும் கதைகளும் இதே போலத்தான் இருக்கிறது.
“பிரானஸ்சின் முக்கியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலின் கீழ்” என்று சொல்லியதற்குப் பதில் அந்த தொழிற் சங்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தால் இங்குள்ள போலித் தொழிற் சங்கங்களிலிருந்து அல்லது அரசியலற்ற தொழிற் சங்கங்களின் பகட்டை இனம் பிரித்து புரிந்து கொள்வதற்கு வசதியாக இருந்திருக்கும்.
இலவசம் என்றால் இங்கு பரவசம் அடையும் பிந்தங்கிய சிந்தனைப் போக்குடைய சூழலுக்கு அப்பால் அங்கு அரசின் சீர்திருத்த் சதி திட்டங்களுக்கு எதிராக் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் ஓர் அணியில் திரண்டு போராடுவது முன்னேறிய நடைமுறை. இதுவே அரசியல் நடைமுறை. முதலாளித்துவத்தை க்ருவருக்கும் நடைமுறை.
ellam sari
anal ocialism power la irukum pothu
eppadi irukkum?
what stalin did? mao doid?killed so many who are opposed to them ?is that ok?this present so called democracy is definitely not?
but is that the alternative?in fact i think that is why people are nt coming with left oriented parties.some beter alt must be found.
seshan s