
இந்தியாவின் முக்கியமான தொழில்துறையும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுமான ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பருத்தி நூலிழையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதே இந்த நெருக்கடிக்குக் காரணம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கேண்டி (350 கிலோ) 23,000 ரூபாயாக இருந்த பஞ்சின் (சங்கர் 6 என்ற பருத்தி ரகம்)சந்தை விலை, இன்று 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
பருத்தி விலை உயர்வின் விளைவாக நூல் விலையும் உயர்ந்திருக்கிறது. பருத்தி விலை உயர்வைக் காரணம் காட்டி நூற்பாலை முதலாளிகள், நூலின் விலையை மேலும் கூட்டி விற்பதால் ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த வரைமுறையற்ற விலையுயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கைத்தறி நெசவாளர்களும், சிறு விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டங்களையும், தொழில்நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜவுளித்தொழில் சம்மேளனம், தென்னிந்திய ஜவுளி ஆலைச் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முதலான பெரும் ஆலை அதிபர்களின் சங்கங்கள், பஞ்சு விலையைக் குறைக்கும் பொருட்டு பஞ்சு ஏற்றுமதிக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முதலாளிகளின் கோரிக்கை மனுவை அப்படியே நகல் எடுத்து அதன் கீழே கையொப்பமிட்டு, செப்.23 அன்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், கருணாநிதி.
பஞ்சையும், நூலையும் ஏற்றுமதி செய்து விட்டால், துணியையும் ஆயத்த ஆடையையும் நாங்கள் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே இந்த ‘சுதேசிகளின்’ கவலை.
இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த பருத்தி (பஞ்சு) உற்பத்தி 295 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 170 கிலோ). இதில் இந்திய மில்களின் தேவை 270 இலட்சம் பேல்கள். இதில் தமிழகத்திலுள்ள நூற்பாலைகளின் தேவை மட்டும் 100 இலட்சம் பேல்கள். உள்நாட்டு மில்களின் தேவைக்கு அதிகமாகப் பஞ்சு உற்பத்தியாகியிருக்கிறது என்ற போதிலும் பஞ்சின் விலை உயர்ந்து விட்டதால், ஏற்றுமதிக்குத் தடை விதிக்குமாறும், ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் மீது ஒரு கேன்டிக்கு 10,000 ரூபாய் சுங்கத்தீர்வை விதிக்குமாறும் கோருகிறார்கள், இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள்.
சந்தைதான் விலையை முடிவு செய்யும் என்றும், பருத்தி விலை குறைவாக இருக்கும் போது ஆதாயம் அடைந்த ஆலை அதிபர்கள், இப்போது விலை உயர்வால் விவசாயிகள் பயனடையும் போது அதைத் தடுப்பது நியாயமல்ல என்று விவசாயிகளின் நண்பனைப் போல முழங்குகிறார்கள், முன்பேர வர்த்தகம் நடத்தும் சூதாடிகள்.
“பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் விவசாயிகளைச் சென்றடையவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளதால், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் இப்போதே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்டின் துவக்கம் முதல் பருத்தி ஏற்றுமதியின் மீது இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டதால், வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள் என்று சூதாடிகளைச் சாடுகிறார், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் தலைவர், ஏ.சக்திவேல்.
எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.
இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.
சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் சீனாவில் ஜவுளிக்கான உள்நாட்டுச் சந்தை விரிவடைந்திருப்பது, டாலருக்கு எதிராக சீன நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்ற பல காரணிகளால் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இந்திய ஜவுளித்துறை தற்போதைய மதிப்பான 3.27 லட்சம் கோடியிலிருந்து 2020-இல் 10.32 லட்சம் கோடிகளாக உயரும் என்றும் நாக்கில் நீர் சொட்டக் காத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இந்தக் கொள்ளை இலாபத்தை அறுவடை செய்வதற்குப் போதுமான பருத்தி குறைந்த விலையில் தங்களுக்குத் தேவைப்படுவதைத்தான், ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் ‘உள்நாட்டுத் தேவை’ என்று சித்தரிக்கின்றன.
நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள். பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.
__________________________________
– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________
ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?…
பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்ட சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்….
எந்த துறையும் முதலாளிகளின் தரப்பு நியாயத்தை மட்டுமே நம் முதலாளித்துவ அரசு நோக்குவதால் ஏற்படும் பிரச்சினைகள். அவர்களுக்கு ஓட்டு போடும் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை மறுக்க அரசுக்கே உரிமை இல்லை…
இங்கு நடக்கும் பல விசயங்களை எடுத்து வைக்க முடியும். ஆனால் இன்று வரைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்காக பயந்து கொண்டு ஒன்று படாமல் இருப்பது தான் அரசியல்வியாதிகளுக்கு இறுதியில் லாபமாக இருக்கிறது,
நூற்பாலைகளின், பிரச்சனைகளை வினவு அலசவில்லை!
கடந்த 3 வருட காலமாகவே, கடுமையான மின் பற்றாக்குறையின் காரணமாக, தமிழக நூற்பாலைகளில், 55 – 60 சத உற்பத்தி மட்டுமே! ( பகலில் 2 – 3 மணி நேரமும், மாலை 6 – 10 பீக்கவர் வெட்டு: மீதியுள்ள நேரத்தில் 20 – 40 சத வெட்டு).
தமிழகத்தில் தான் நாட்டின் 50சத நூற்பாலைகள் உள்ளது! பஞ்சு ஸ்டாக் வைக்கும் திறன் கொண்ட 10 சத மில்கள், கடந்த 2 ஆண்டுகளாக, நல்ல லாபம் அடைந்துள்ள போதிலும், மீதியுள்ளவை , பஞ்சு விலையேற்றத்தாலும், மின் பற்றாக்குறை காரணமாகவும், கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன!
கடந்த 2 – 3 ஆண்டுகளில்,விவசாயிகளுக்கு பருத்தியின் விலை 20ரு இருந்து, தற்போது 42ரூபாயாக உயர்ந்துள்ளது!
உலக மார்க்கெட்டில்,நிலவும் விலையை விட 10 சத விலை அதிகமாகவே,இந்தியாவில் பஞ்சின் விலை உள்ளது!
விவசாயிகளின் நலம் காக்க, பஞ்சு ஏற்றுமதி தவிர்க்க இயலாது! இந்தியாவில் ஆண்டு முழுவதும், பருத்தி வரத்து இருப்பதில்லை! 90 சத வரத்து முழுவதும், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலேயே வந்து விடுகிறது! இதுவே பதுக்கலுக்கும், விலையேற்றத்திற்கும், காரணமாகி விடுகிறது!
எந்த ஒரு மூலப் பொருளிலும், விலை ஏற்றிறக்கம், சகஜமெனினும், பருத்தி/பஞ்சு விலை, தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது!
பஞ்சு பதுக்கலை சமாளிக்க, பஞ்சு ஏற்றுமதி செய்ய, தனியாருக்குத் தடை விதித்து, இந்திய பஞ்சு கழகத்தின் மூலமாக, மாதவாரியாக பிரித்து ஏற்றுமதி, செய்தல் வேண்டும்!
rightly said
அப்படியா சொல்லவே இல்ல…அப்புறம்….சாப்டாச்சா…
வினவு அண்ணே ,
ஒரு சந்தேகம் வெளிநாட்டில் நூல் விலை குறைவா இருந்தா இறக்குமதி செய்துக்கிறாங்கன்னு சொல்லப்பட்டதற்கு ஏதும் ஆதாரம் இருக்கா?
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க போகிறார்கள் திருப்பூரில் தீருவு என்ன சொல்லுங்கண்ணே –
வினவு தீர்வு சொன்னா அத இம்பிளிமெண்ட் பண்ணிடு(வீ)வாங்களா? சொல்லுங்க நொண்ணே.. சாரி அண்ணே…
கட்டுரை பிரச்சனையின் அடிப்படையான LPG பற்றி பேசுகிறது.
நூல், ஜவுளி, பின்னலாடை முதலாளிகள் ஏற்றுமதியில் கோடிகளில் புரள தொழிலாளர்களை 12மணி நேரம், 14மணி நேரம் சுரண்டுவதை கேள்வி கேட்கிறது.
பஞ்சு விலை ஏறிடுச்சுன்னு எதிர் தரப்பபினர்களுக்காக (முதலாளிகளுக்காக) வருத்தப்படும் தொழிலாளர்களை நட்பு அணியான விவசாயிகளின் தற்கொலைக்கு வருத்தப்படவும், அவர்களுக்காக போராடவும் அழைக்கிறது.
இத பத்தி ஏதாவது சொல்லுங்க அண்ணே!
உங்க மார்க்ஸிய அறிவ ரெண்டு கரண்டி எடுத்துவுடுங்க…
பிரச்சனைகளை ஆராய்ந்தால் போதும்
என்பது சூப்பர் அனுகுமுறையாக இருக்கே அண்ணே.
என்ன செய்யலாம் என்றால் விவசாயிகளோடு சேருங்கள் என்கிறீர்கள்
சரி சேரலாம் .
பின்னலாடை பெரும் ஆபத்தை சந்தித்து
உள்ளது இதற்கு என்ன செய்யலாம்
என்பதற்கு தீர்வு சொன்னா இம்லிமெண்டு செய்வீங்களான்னு கேட்கிரீங்க
அப்போ பிரச்சனையை மட்டும் பேசி
என்னாக போகுது அதான் எங்களுக்கு
தெரியுமே
//சொல்லுங்க நொண்ணே.. சாரி அண்ணே…//
எரிச்சலா இருக்கா அப்படித்தான் இருக்கும் ஏன்னா வினவ மட்டும்தான் செய்வீங்க நீங்க அதான் இந்த எரிச்சல்
Naanga Enna Pannanumnu Ninaikkireenga
Mr Thiyagu ?
எரிச்சலா எனக்கா??
ஹி ஹி ஹி…
சிரங்கு, சொறிய சொறிய சுகமாத்தான் இருக்கும்! கையை எடுத்தா பிறகு தான் ரண வேதனை!
இப்படித் தான் புண்’ணானதையும் பத்தி கவலைப்படாம கைய எடுக்காம சொறியனும்… நல்லா சொறிங்க!
ஆனா, சொறிஞ்ச கைய எங்க பக்கமா எடுத்துட்டு வர்ரீங்க பாருங்க…
அதான், பிரச்சனை எங்களுக்கு!
//Naanga Enna Pannanumnu Ninaikkireenga
Mr Thiyagu ?//
எங்கங்க மரியாதை பலமா இருக்கு !
நீங்கன்னா இந்த கட்டுரை எழுதியவர்
என்ன தீர்வு சொல்கிறார் என்பதும்
இந்த பிரச்சனை ஏற்கனவே இருக்கிறது
அதை வியாக்கியானம் மட்டும் செய்தால் போதுமா என்பதும் எனது கேள்வி
//உலகின் அனைத்து தத்துவஞானங்களும்
இந்த உலகை பல்வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றன ஆனால் அதை மாற்றுவதுதான் முக்கியமானது //
என்று காரல்மார்க்ஸ் சொல்லியிருக்காரே
Aiyaiyo..
Marx appadiyaa Solliyirukkiraar ?
_
intha Visayam ivvalavu Naalaa Engalukkellaam Theriyaama Pooche !
_
Katturai Ezuthina Thozarukkum,
Athai Veliyitta Vinavu Thozargalukkum Kooda Therinjirukka Vaaippillainu Ninaikkiren Ethukkum puja vukku Oru
Post Cardla Ezuthi Poodunga.
_
Appuram,
Tiruppurla intha Visayam Ungalukku Mattum Thaan Theriyumaa ?
aamaanna, athai Appadiye Oru Kalvetla Sethukku Athukku Pakkaththileye Neengalum Utkaarnthukkanga Appa Thaane Tirupur Vaasigalukku Visayam Puriyum.
_
Ennangnaa Naan Cholrathu Sari Thaanung ?
அடடே ரொம்பநேரமா நல்லாத்தானே பேசிட்டு இருந்தாரு
நாந்தான் தப்பா நினைச்சிட்டேனோ
————————-
சரி விடுங்க எந்திரனை கேட்டா சூப்பரா பேசுவீங்க
மெய் உலகத்தை கேட்டால் கிண்டல் செய்வீங்க
—————-
நடத்துங்க நடத்துங்க உங்களுக்கு தெரிந்ததை எழுதி இப்படியே ஓட்டுங்க
தியாகு ஒரு ஓடுகாலி அவரிடம் என்ன விவாதம் வேண்டிகிடக்கிறது.
அவர் பாட்டுக்கு சுகுணா->அ.மார்க்ஸ்->சோபா சக்தி-> பிரான்ஸ்->கூட்டுக்கவி அப்படின்னு போயிட்டாருல்ல, விட்டுது சனியன்னு போவீங்களா?
ஓடுகாலி தியாகு, வெட்டியா பேச்ச வளக்காம உங்க பிராண்ட் தீர்வை எழுதிட்டு ஜீப்புல ஏறி போயிட்டே இருங்க. OK
சுகுணா->அ.மார்க்ஸ்->சோபா சக்தி-> பிரான்ஸ்->கூட்டுக்கவி அப்படின்னு )))))
சகா, இங்க கூட்டுக்கவியென எழுதியிருப்பது எழுத்துப்பிழைதானே :)?
கவிராஜா… க.க.க போங்கள்!
அலோ மிஸ்டர் முத்து நான் ஓடு காலியா ஓடாத காலியா என்பது கேள்வி இல்லை
———————-
ஒரு கட்டுரை போட்டு இருக்கீங்க அதன் மேல கேள்வி கேட்டா என்மேல் வசவுல இறங்குறீங்க
அப்போ இனிமே வினவு அப்படிங்கிற பேர
மாத்திகங்க
—————————–
வழக்கம் போல நான் உங்க கட்டுரையை என் தளத்தில் கிழிக்கிறேன்
அப்புறம் ஏன் நீங்க வினவில் கேட்டு இருக்கலாமேன்னு புலம்பல்ஸ் கூடாது அதான் கேட்டேன்
———————–
கூட்டு கவிதை பத்தியெல்லாம் உங்களுக்கு பேச வக்கு இருக்கா கவிதை எழுதவாவது தெரியுமா அல்லது படிக்கவாவது புரிந்துகொள்ளவாது அதுதான் கிடக்கட்டும் கட்டுரைக்கு விளக்கம் கேட்டால்
சும்மா அவனே இவனேன்னு வசைபாடிகிட்டு
——————-
அலோவ் ஓடுகாலி தியாகு, அதுல கவி எழுத்துப்பிழைய்யா…. மத்த விசயத்தையெல்லாம் நீர் அந்த கூட்டுக்கும்பலின் அப்பர் எஃகோலானில் இணையும் போது புரிந்து கொள்வீர்… ஆனா உமக்கு இருக்கும் குமாஸ்தா மூளைக்கு அதுக்கெல்லாம் சான்ஸ் கிடைக்குமோ என்னவோ 🙁
போலித்தனம் – மழுங்கத்தனம் – மொண்ணைத்தனம் – For Dummies….!
ஒன்றைப் புரிந்து கொள்வதில் இருக்கும் மொண்ணைத்தனம் எப்படி சிந்தனையில் மழுங்கத்தனத்தை ஏற்படுத்தி, செயலில் போலித்தனத்தை உண்டாக்குகிறது என்பதை எனக்குப் புரிந்த
அளவில் விளக்கவே இந்த பின்னூட்டம். முதலில் ஜவுளித் தொழில் நெருக்கடி பற்றி வினவில் வெளியான பு.ஜ கட்டுரையை படித்திருப்பீர்கள் – அடுத்து அதை தனது பாணியில் ‘விமர்சித்து’
நன்பர் தியாகு எழுதியதையும் ஒருமுறை பார்த்து விடுங்கள் (கொஞ்சம் கஸ்ட்டம் தான்… லேசா வாந்தி வரும், மயக்கம் வரலாம், தலை சுத்தும்… ஆனாலும் பரவாயில்லை மூக்கைப்
பிடித்துக் கொண்டு படித்து விடுங்கள் )
வினவு பதிவில் “விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது” என்று நன்பர் தியாகு சொல்கிறார். ஆனால் பு.ஜ கட்டுரையில் எங்கும் அப்படிக்
குறிப்பிடவில்லை. மாறாக, பருத்தி ஏற்றுமதியைத் தடுக்கக் கோரும் முதலாளிகள், அதற்குக் காரணமாகச் சொல்வது உள்நாட்டுத் தேவை புறக்கணிக்கப்படுகிறது என்பதே. அப்படி
இவர்கள் சொல்லும் உள்நாட்டுத் தேவை என்பது, உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதையே – உள்நாட்டு ஜவுளித் தேவைக்கான உற்பத்தியை அல்ல. இன்றைய உலகமயச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் என்பது மேல் நிலை வல்லரசுகளின் / முதலாளித்துவ நாடுகளின் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரமாக
உள்ளது – குறிப்பாக அமெரிக்கா எனும் ஒற்றை எஞ்சினில் இணைக்கப்பட்ட பெட்டிகளாக இருக்கிறது. தமது உள்நாட்டு சந்தையின் தேவையை ஊக்குவிப்பதாக இல்லை.
இதில், “பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து” எனும் கோரிக்கை முதலாளிகள் சார்பில் இருந்து வரும் போது அவர்களின் அந்தக் கோரிக்கை உள்நாட்டு ஜவுளித் தேவையை கருத்தில்
கொண்டோ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டோ எழுவதல்ல. இது கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது –
// இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? //
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. //
பு.ஜ கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கவில்லை – ஆனால், எதிர்ப்பு எழுவதன் பின்னுள்ள முதலாளிகளின் சுயநலனை இடித்துரைக்கிறது. உள்நாட்டு ஜவுளித் தேவையை உந்தித் தள்ளுவதன்
மூலம் ஏற்றுமதியைச் சாராத தொழில் வளர்ச்சியை சாதிக்க முடியும் என்பதை நேர்மறையில் நிறுவுகிறது. அதே நேரத்தில், விவசாயிகளுக்கு இந்த முன்பேர சூதாட்டத்தால் / ஏற்றுமதியால் பயன் ஏதும் இல்லை என்பதையும் பதிவு செய்கிறது – அது கீழே,
//எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது. //
தேசியமுதலாளிகளின் நலனும் (உள்நாட்டுச் சந்தை) விவசாயிகளின் நலனும் (உரிய விலை) இணைந்திருக்க வேண்டும் என்பதே கட்டுரை எதிர்மறையில் ஏற்படுத்தும் மனப்பதிவு.
உள்நாட்டு தேவையை அதிகரிக்க வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் – அதற்கு நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறை லாபகரமாக நடந்தாக வேண்டும் –
அதற்கு விவசாயிக்கு உரிய விலை கிடைத்தாக வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாத முதலாளிகள், தமது சுயலாப நோக்கை மட்டும் குறிவைத்து ஏற்றுமதியை தடுக்கச் சொல்கிறார்கள்.
முன்பேர வர்த்தகத்தாலும் விவசாயிக்கு பாதிப்பு தான் – உள்நாட்டிலும் லாபம் கிடைக்காது என்று இரண்டு பக்கமும் இடிவாங்கும் மத்தளமாக விவசாயிகள் இருக்கிறார்கள்.
அடுத்து ஒரு அட்டைக் கத்தியை எடுத்து சுழற்றுகிறார் தியாகு,
//இதே நூல் பன்னாட்டு சந்தைய்டில் விலை குறைந்தால் முதலாளிகள் இறக்குமதி செய்து கொள்கிறார்கள் என புளுகுகிறார்கள்இறக்குமதி செய்யும் காசுக்கும் நாம் கூடுதல் விலை கொடுத்தே இங்கேயே நூலை வாங்கிவிடலாம் சரி எத்தனை சதவீதம் அவ்வாறு இறக்குமதி நடந்தது ஏதேனும் தரவுகள் இருக்கா என கேட்டாலும் பதில் இல்லை
//
//தொழிலாளர்கள் விவசாயிகளோடு கூட்டு சேரனும் என்றும் ஆகாத கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இங்கென்ன புரட்சியா நடந்து கொண்டு இருக்கிறது விவசாயிகளின் பிரச்சனைக்கு தொழிலாளர் களமிரங்க//
பருத்திக்கான் ஆதார விலையை இந்திய அரசு உயர்த்திய போது சர்வதேச சந்தையில் இருந்து பருத்தி பேல்களை இந்திய முதலாளிகள் இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஆதாரம் –
http://www.cotton247.com/marketplace/trade/?storyid=559
இதைத் தான் கட்டுரையும் சொல்கிறது –
//பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம். //
அடுத்து தொழிலாளர்கள் விவசாயிகளோடு கூட்டு சேர்வது ஆகாத வேலை என்கிறார் திருவாளர் தியாகு. விவசாயிகளும் தொழிலாளர்களும் இணைவது என்பது விவசாயிகளுக்கு
உள்நாட்டிலேயே உரியவிலை கிடைக்கச் செய்யும் என்பதோடு, தொழிலாளர்களுக்கு உரிய கூலியையும் கிடைக்கச் செய்யும் – இது தான் உள்நாட்டின் தேவையை அதிகரிக்கச்
செய்யும். மாறாக, முதலாளிகளின் நலனுக்கான கோரிக்கையின் பின்னே தொழிலாளிகளை வால்பிடித்துச் செல்ல வைப்பது என்பது விவசாயிகள் வயிற்றில் அடிப்பதோடு, ஏற்றுமதிப்
சார்ந்த பொருளாதாரப் புதைகுழிக்குள் ( ஏன் ஏற்றுமதி சார்ந்த ஜவுளிப் பொருளாதாரம் ஒரு புதைகுழி என்பது தியாகுவுக்கு எப்படியும் புரியப்போவதில்லை) இழுத்து விடும்.
என்னோட மெக்கானிக் குரு தர்மா சொல்வாரு – “வண்டியப் பத்தி ஒன்னும் தெரியாதவனும் எல்லாம் தெரிஞ்சவனும் பிரச்சினையில்லை – அரைகுறையாத் தெரிஞ்சவன் தான்
தலைவலி” என்று. தியாகு அரைகுறையாகத் தெரிந்தவர் என்பதோடு அதையே ஒரு தகுதியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் – இது வெறும் தலைவலி இல்லை; மைக்ரோன்
தலைவலி..!
//இது தான் உள்நாட்டின் தேவையை அதிகரிக்கச்
செய்யும்.// vaangum sakthiyai athikarippathan moolam…
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என்பது குறையாகாது! இந்தியாவின் 2வது பெரிய ஏற்றுமதி சார்ந்த தொழில் இது! விவசாயி-வியாபாரி-உற்பத்தியாளர்-ஏறுமதியாளர் எனும் சங்கிலி, தொடர் கொண்டது! சில ஆண்டுகள் முன் வரை, அத்தியாவசிய பொருள் தடை சட்டத்தின் கீழ் பருத்தி இருக்கும்வரை, பிரச்சனை ஏதுமில்லை! சட்டம் விலக்கப்பட்டதும், ஜவுளி சங்கிலியில், பதுக்கல்காரார் என்னும் புதுவரவு வந்து சேர்ந்த்தது!
நான்கு மாத காலத்தில், மட்டுமே கிடைக்கும், பருத்தியை,சிண்டிகேட் அமைத்து, ஜவுளித் தொழிலுக்குநேரடி சம்பந்தமில்லா பண முதலைகள்(உள்/அயல் நாடு), வாங்கிப் பதுக்கி, அரசின் துணை கொண்டு, சட்டங்களை சாதகமாக்கி, செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, செயற்கையாக விலையேற்றி விட்டு, கொள்ளை லாவம் அடைகின்றனர்!பருத்தி மட்டுமல்ல இதர விவசாயப் பொருட்களும்,இதைப் போலவே, விலை ஏற்றப்படுகிறது!
இன்று, உலக பஞ்சு சந்தையே, சீனாவின் கையிலும், சரத் பவாரின் கையிலும் தான் உள்ளது! சீனாவிற்கு பஞ்சுத் தேவை அதிகம்! உலகம் முழுவதும், விவசாயத் தொழில் வீழ்ச்சிக்குப் பின், இந்தியப் பருத்தியின் தேவை, இன்று போட்டியாக மாறிவிட்டது! பருத்தி ஏற்றுமதியை அக்டோபர் 1-ல் , இருந்து நவம்பர் – 1க்கு,இந்தியா தள்ளி வைத்தவுடன், அன்றே உலகப் பருத்தி, சுமார் 7 – 10 சதம், விலை யேறியது!
தொடரும்!
Rammy,
//ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என்பது குறையாகாது! //
உள்நாட்டுத் தேவையை கணக்கில் கொள்ளாத ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் பொருளாதாரம் குறையானது தான்.
எப்படி?
உலகளவில் நிகழும் ஏற்றுமதி என்பது பெரும்பாலும் அமெரிக்க நுகர்வை அடிப்படையாய் வைத்தே இயங்குகிறது. அமெரிக்க நுகர்வு என்பது இயற்கையான காரணிகளால் (தேவையை
ஒட்டி) எழுவது அல்ல. குறிப்பாக அமெரிக்காவில் உற்பத்தி சார் தொழில் அலகுகளை (சீனா, இந்தியா போன்ற) மூன்றாம் உலக நாடுகளிடம் தள்ளிவிடும் போக்கு உள்ளது.
ஏனெனில் ஒப்பீட்டளவில் அங்கே உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இங்கே உற்பத்தி செய்வது சல்லிசானது – லாபகரமானது. இது அங்குள்ள நடுத்தர வர்க்கத்தின் வாங்கும்
சக்தியை குறைக்கிறது. இதை உந்தித்தள்ள, அவர்கள் சப்-ப்ரைம் லோன், வரைமுறையற்று க்ரெடிட் கார்டுகள் கொடுப்பது என்று செயற்கையாக வாங்கும் சக்தியை உண்டாக்குகிறார்கள்.
திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், அங்கே நுகர்வு குறைந்து (மூன்றாம் உலக நாடுகளின்) ஏற்றுமதிசார் பொருளாதாரம் அடிவாங்குகிறது.
இது பற்றி வினவில் புதிய கலாச்சார கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர் “டவுசர் கிழிந்ததது” எனும் தலைப்பில் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
உங்கள் பின்னூட்டத்தின் மற்ற அம்சங்களை ஒப்புக் கொள்கிறேன் – அதிலும் ‘பதுக்கல்காரர்கள்’ என்பவர்களை நீங்கள் வழக்கமான (பழைய எம்.ஜி.ஆர் படத்தில் அரிசி பதுக்கும்
தங்கவேலு போன்ற) பதுக்கல்காரர்களோடு ஒப்பிட்டுப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று அவதானிக்கிறேன். இவர்கள் அப்படியல்ல – ஒரு பொருள் உண்மையில் உற்பத்தியாவதற்கு
முன்பாகவே அதை ‘காண்டிராக்டுகள்’ மூலம் ‘பதுக்கி’ – பின் அதை சர்வதேச பங்குச்சந்தை சூதாட்ட கிளப்பில் ஏலம் விட்டு, அதன் உண்மையான மதிப்பிலிருந்து பல மடங்கு
அதிகரிக்கச் செய்கிறார்கள்.. வினவில் முன்பேர வர்த்தகம் பற்றி பொருளாதார கட்டுரைகள் வந்திருக்கும்; தேடிப் பார்த்து லிங்க் தருகிறேன்.
பிஸிக்கலாகவே பஞ்சு பதுக்கப் படுகிறது! அதுவும் அரசு குடோன்களில், அரசு பணம் கொண்டே! எப்படியெனில், கீ-லோன் அடிப்படையில், 25 சத முன்பணமும், வட்டியும் அரசு வங்கிகளில் கட்டி! பஞ்சு மட்டுமல்ல, இதரப் பொருட்களும்! காண்ட்ராக்ட் முறையானாலும்,யாரோ ஒருவர், பஞ்சை பதுக்கியே வைத்திருக்க வேண்டும்! நீங்கள், குறிப்பிட்டபடி ஆன் – லைன் வர்த்தகம், நடந்தாலும், பருத்தியைக் குறித்தவகையில் , மிகக் குறைந்த அளவே நடை பெறுகிறது!
போலித்தனம் – மழுங்கத்தனம் –
மொண்ணைத்தனம் – For Dummies….!
ஒன்றைப் புரிந்து கொள்வதில் இருக்கும் மொண்ணைத்தனம் எப்படி சிந்தனையில் மழுங்கத்தனத்தை ஏற்படுத்தி, செயலில் போலித்தனத்தை உண்டாக்குகிறது என்பதை எனக்குப் புரிந்த அளவில் விளக்கவே இந்த பின்னூட்டம். முதலில் ஜவுளித் தொழில் நெருக்கடி பற்றி வினவில் வெளியான பு.ஜ கட்டுரையை படித்திருப்பீர்கள் – அடுத்து அதை தனது பாணியில் ‘விமர்சித்து’ நன்பர் தியாகு எழுதியதையும் ஒருமுறை பார்த்து விடுங்கள் (கொஞ்சம் கஸ்ட்டம் தான்… லேசா வாந்தி வரும், மயக்கம் வரலாம், தலை சுத்தும்… ஆனாலும் பரவாயில்லை மூக்கைப்பிடித்துக் கொண்டு படித்து விடுங்கள் )
வினவு பதிவில் “விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது” என்று நன்பர் தியாகு சொல்கிறார்.நான் எழுதியது ://முதலில் பஞ்சுக்கான அரசு நிர்ணயிக்கும் விலை அடுத்து பஞ்சு ஏற்றுமதி அடுத்து அதன் உற்பத்தி பொருளான நூல் ஏற்றுமதி இந்த இரண்டு கச்சா பொருள்களின் ஏற்றுமதியானது சர்வதேச சந்தையில் இந்திய ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கிறது என்கிற விசயமாகும் இதற்கு இந்த விசயத்தை அனுகிய நமது பு.ஜா பத்திரிக்கை சொல்வது
என்னவென்றால் ஆயத்தை ஆடைகள் அதன் சூழல் அது கோரும் பஞ்சு ஏற்றுமதி தடை எல்லாமேதிருப்பூரில் உள்ள முதலாளிகளின் கோரிக்கையாகவும்
ஆன்லைன் டிரேடிங்க் மூலம் விலை ஏறிய அனைத்து பொருட்களுக்குள்ளும் பஞ்சு இருப்பது ஏதோ தற்செயலானது மற்றும் தவிர்க்க முடியாதது போலவும் விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது சரி பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாது மற்றும் நூல் ஏற்றுமதியை தடுக்க வேண்டாம் என்பதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ஆனால் பு.ஜ கட்டுரையில் எங்கும் அப்படிக் குறிப்பிடவில்லை. மாறாக, பருத்தி ஏற்றுமதியைத் தடுக்கக் கோரும்
முதலாளிகள், அதற்குக் காரணமாகச் சொல்வது உள்நாட்டுத் தேவை புறக்கணிக்கப்படுகிறது என்பதே. அப்படி இவர்கள் சொல்லும் உள்நாட்டுத் தேவை என்பது, உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதையே – உள்நாட்டு ஜவுளித் தேவைக்கான உற்பத்தியை அல்ல.
// உள்நாட்டின் ஜவுளி தேவைக்கான உற்பத்தி திருப்பூரில் நடக்கவில்லை என அனைவருக்கும் தெரியும் ஆனால் உள்நாட்டு தேவைக்கும் 40 சதவீதம் நடக்கிறது என்பது ராஜாவனஜ் அறிவாரா தெரியாது உள்ளாடைகள் இந்தியா முழுவதற்கும்
இந்தியாவில் முக்கியமாகதிருப்பூரில் தான் தயாரிக்கப்படுகிறது அது புஜ கட்டுரை எழுதிய தோழர் போட்டிருக்கும் ஜட்டி உட்பட இதில் எப்படி உள்நாட்டு உற்பத்தியே இல்லைன்னு சொல்கிறார்னு தெரியலை
//இன்றைய உலகமயச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் என்பது மேல் நிலை வல்லரசுகளின் /
முதலாளித்துவ நாடுகளின் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரமாக உள்ளது – குறிப்பாக அமெரிக்கா எனும் ஒற்றை எஞ்சினில் இணைக்கப்பட்ட பெட்டிகளாக இருக்கிறது. தமது உள்நாட்டு சந்தையின் தேவையை ஊக்குவிப்பதாக
இல்லை.//
அதிலிருந்து தாவி அடுத்த கட்டமாக ஏற்றுமதி உற்பத்திதான் நடக்குதுன்னு சொல்வதன் மூலம் இந்த பிரச்சனையே ஏற்றுமதி தொடர் பெட்டி அமெரிக்காவுக்கு உற்பத்தி செய்தல் என நகர்ந்து செல்கிறார் அப்படி அல்ல ஏற்றுமதிக்கும் உள்நாட்டு
தேவைக்கும் சேர்த்தே உற்பத்தி செய்யப்படுகிறது நிற்க ஏற்றுமதி சார்ந்த முன்னேறிய நாடுகள் சார்ந்த உற்பத்தி என நினைத்துகொண்டு இந்த விசயத்தை அனுகி ஒரு தீர்வு சொல்லி முரண்பட்டு போகிறார்கள் இருவரும் (மனியும் ,ராஜாவும்)
பிரச்சனை கச்சாபொருள் ஏற்றுமதி, கச்சா பொருளை சார்ந்த உள்நாட்டு உற்பத்தி சம்பந்தப்பட்டது . உழுந்தில் தயாரிக்கபப்டும் அப்பளம் அதன் தயாரிப்புகள் கூட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது இதில் உழுந்து ஏற்றுமதி என வந்தால் அப்பள தொழில்
படுத்துவிடும் அல்லது தேவையை கணக்கில் எடுக்காத ஏற்றுமதி என்பது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் .ஆக பிரச்சனையை கச்சாபொருள் , அதை சார்ந்த உற்பத்தி என விசயத்தை பார்க்கவேண்டும் என கோருகிறேன் அப்படி பார்த்தால் மட்டுமே எந்த ஒரு
கச்சா பொருள் ஏற்றுமதியும் நேரடியாக அந்த நாட்டில் நடக்கும் தொழிலை பாதிக்கும் என்பதை அவதானிக்க முடியும
//இதில், “பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து” எனும் கோரிக்கை முதலாளிகள் சார்பில் இருந்து வரும் போது அவர்களின் அந்தக் கோரிக்கை உள்நாட்டு ஜவுளித் தேவையை கருத்தில் கொண்டோ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்
கொண்டோ எழுவதல்ல. இது கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது –
// இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக்
கொள்வார்களா? //
பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து எனும் கோரிக்கை எழவில்லை ஏற்றுமதியை கட்டுபடுத்து மூன்றுமாதத்துக்கு ஒருமுறை அடுத்த பருவம் வரை நிறுத்தியும் உள்நாட்டு உற்பத்தி போக மிச்சமானதை ஏற்றுமதி செய்யவும்தான் கோருகிறோம் விவசாயிக்கு ஆதாரவிலையை கூட்டினால் ஏற்றுகொள்ளமாட்டோம் என முதலாளிகள் எங்காவது சொல்லி இருக்கிறார்களா அப்படி ஏற்றினால் கூட அதன் பாதிப்பு இந்தளவு கடுமையாக இருக்காது என்பது
நிஜம்
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக்
கவலைப்படவில்லை. //
//பு.ஜ கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கவில்லை – ஆனால், எதிர்ப்பு எழுவதன் பின்னுள்ள முதலாளிகளின் சுயநலனை இடித்துரைக்கிறது. உள்நாட்டு ஜவுளித் தேவையை உந்தித் தள்ளுவதன் மூலம் ஏற்றுமதியைச் சாராத தொழில்
வளர்ச்சியை சாதிக்க முடியும் என்பதை
நேர்மறையில் நிறுவுகிறது. //
ஏற்றுமதி சாராத தொழிலும் கச்சா பொருள் ஏற்றுமதியில் விழுந்து விடும் என்பதை அறிய முடியவில்லையா ? எதிர்ப்பு எழுவதன் பின்னால் முதலாளிகளின் சுயநலன் மட்டுமே இருக்கு என கருதுவதை அரைவேக்காட்டு பார்வை
என்கிறேன்
//அதே நேரத்தில், விவசாயிகளுக்கு இந்த முன்பேர சூதாட்டத்தால் / ஏற்றுமதியால் பயன் ஏதும் இல்லை என்பதையும் பதிவு செய்கிறது – அது கீழே,
//எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான
விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை
உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.
//
தேசியமுதலாளிகளின் நலனும் (உள்நாட்டுச் சந்தை) விவசாயிகளின் நலனும் (உரிய விலை) இணைந்திருக்க வேண்டும் என்பதே கட்டுரை எதிர்மறையில் ஏற்படுத்தும் மனப்பதிவு.//
ஏற்றுமதியும் உள்நாட்டு நலனும் இணைய என்ன செய்யவேண்டும் கட்டுபடுத்தப்பட்ட ஏற்றுமதி கொள்கை வேண்டும் அது கச்சா பொருளை பொருத்தவரையிலும் அதிகமாக மேலும் பனியனை பொருத்தவரை
அயல்நாட்டு ஆடை ரகங்கள் இந்தியாவில் விலை போவதில்லை இங்கு அதிகம் உள்ளாடைகள்தான் அதையும் திருப்பூர்தான் வழங்கிறது
//உள்நாட்டு தேவையை அதிகரிக்க வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் – அதற்கு நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறை லாபகரமாக நடந்தாக வேண்டும் – அதற்கு விவசாயிக்கு உரிய விலை
கிடைத்தாக வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாத முதலாளிகள், தமது சுயலாப நோக்கை மட்டும் குறிவைத்து ஏற்றுமதியை தடுக்கச் சொல்கிறார்கள். முன்பேர வர்த்தகத்தாலும் விவசாயிக்கு பாதிப்பு தான் – உள்நாட்டிலு
அவரே ஒப்புக் கொண்ட படி அவருக்கு புரிந்த ஒன்றை எழுதி இருக்கிறார். இதில் கேள்விகள் எதுவும் இல்லை என்பதை படிப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நேரத்தை இதில் வீண்டிக்க மாட்டீர்கள் என்னைப் போல என நம்புகிறேன்
பஞ்சு ஏற்றுமதிக்கு, குறைந்த அளவே,சுங்கத் தீர்வை விதிக்கும் அரசு, பஞ்சு இறக்குமதிக்கு 10 சதம் விதிக்கிறது!
போட்டி நாடான,சீனாவை நாம் ஒரு விதத்தில் பாராட்டியாக வேண்டும்! தம் நாடு கம்பெனிகளுக்குத் தேவையான, அனைத்து வகை மூலப் பொருட்களை, உலகில் எந்த மூலையில் இருந்தாலும்,எந்த தில்லாலங்கடி வேலை செய்தாவது, கொண்டு வந்து, அரசே மறைமுக உதவி செய்து சேமித்து விடும்!( குறைந்த பட்சம் ஒரு வருட ஸ்டாக் எப்போதும் கையிருப்பில் இருக்கும்)
2008-09 ம் ஆண்டு மட்டும், இந்தியா இந்த முறையை (ஜஸ்ட் ஸ்டாக் மட்டும்), இந்திய பஞ்சு கழகத்தின், வழியாக ஓரளவு, நிறைவேற்றியது! அதற்கு, காரணகர்த்தா,மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்!(போராளிக்களுக்கு ஆகாதப் பெயர்?!)
தற்போதையப் பிரச்சனை என்னவெனில், இந்தியாவில் கேரி-ஓவர் பருத்தி ஸ்டாக் பூஜ்ஜியத்திற்கு சற்றே அதிகம்! இன்னும் புதிய வரத்து சூடுபிடிக்கவில்லை! ஆனால்,இந்தியா ஆலைகளுக்கு, பஞ்சு கிடைப்பதற்கு முன்னரே, வெளிநாட்டிற்கு குறிப்பாக சீனாவிற்கு, ஏற்றுமதி செய்து விட வேண்டும் என்று, சரத் பவார் தலைமையில்,விவசாயிகளுக்கு ஆதரவு என்ற போர்வையில், ஒரு கும்பல், முனைப்புடன் இருக்கிறது!
இதில், ஒரு கொடுமையான ஜோக், என்னவெனில், பருத்தி அதிகம் விளையும்,குஜராத்தில் இருந்து, ஆலைகள் அதிகம் உள்ள, நம் தமிழகத்தை அடைய,பஞ்சு கிலோ ஒன்றுக்கு ரூ 4 முதல் 5 வரை செலவாகிறது.( வரி உள்பட). ஆனால், தொலைவில் உள்ள சீனத்திற்கு, ரூ 2க்கும் குறைவான செலவிலேயே சென்று விடும்! மேலை நாடுகளுக்கு, சீனாவில் இருந்து அனுப்பிய ஏற்றுமதி பெட்டகங்கள், திரும்பி காலியாக வரும்போது,வெட்டியாகச் செல்வதற்கு பதில்,குறைந்த வாடகையைப் பெற்றுக் கொண்டு, பஞ்சை ஏற்றிக் கொண்டு செல்கின்றது!
(இது 3 மாத முன்பு வரை நிலவரம்! தற்பொழுது ரூ2500/குவிண்டாலுக்கு , சுங்க வரி விதிக்கப் பட்டுள்ளது!)
தொடரும்!
Rammy,
//2008-09 ம் ஆண்டு மட்டும், இந்தியா இந்த முறையை (ஜஸ்ட் ஸ்டாக் மட்டும்), இந்திய பஞ்சு கழகத்தின், வழியாக ஓரளவு, நிறைவேற்றியது!//
மேற்கண்ட அம்சத்தில் முரண்படுகிறேன். எனினும் நீங்கள் உங்கள் வாதத்தை முழுமையாக வைத்த பின் நாளை மீண்டும் வந்து பதில் இடுகிறேன்.
பு.ஜ கட்டுரை முற்றிலும் தவறு என்று ட்விட்டரில் ஒரு சொம்பு கம்பு சுத்திக் கொண்டிருந்தது. அவரை இங்கே எதிர்பார்த்தேன் –
பரவாயில்லை, நாளை வாருவாராயிருக்கும். பார்க்கலாம்..
சாராம்சமாக:
1.ஏற்றுமதி – அந்நிய ஏகாதிபத்தியத்தை நம்பி இருக்கிறது
அதற்கு வால்பிடிக்கிறது என சொல்லி
நேரா உள்நாட்டின் தேவைக்கு உற்பத்தி செய்யுங்கள்
என புஜ கட்டுரையில் சொல்லாமல் விட்டதை
சொல்லி பூர்த்தி செய்கிறார் ராஜா
ஆனால் ஏற்றுமதி என்பது அதை சார்ந்த வணிகம் என்பதும் மட்டுமல்ல
உள்நாட்டின் வணிகத்துக்கே கச்சா பொருள் கட்டுள் இல்லாத ஏற்றுமதியும்
ஆன்லைன் சூதாட்டமும் எதிரிகள் என்பதை காணாமல் விடுகிறார்
2.இனிமேல் ஏற்றுமதி சாராத புறாகூடுபோல தனியான ஒரு நாட்டை கட்டமைக்க
சோசலிச அல்லது புதியஜனநாயக நாட்டால் கூட முடியாது அப்போது சரியான
ஏற்றுமதி கொள்கை வகுக்க வேண்டும்
3.விவசாயிக்கும் அறிவுரை சொல்கிறேன் ஏற்றுமதி பத்தி முதலாளியையும் கேள்விகேட்கிறேன் லாபநோக்கம் பத்தின்னு சொல்லிட்டு முடிவா இதன் அடிப்படைகாரணம் அதற்கான தீர்வுன்னு கேட்டால் முழி முழின்னு முழிக்கிறார்கள்
தியாகு ! கொஞ்சம் சீரியசா மாத்திரம் பேசுபவர்களுக்கான இடம் இது என நினைக்கிறேன்
RajaVanaj!
ஏற்றுமதியே வேண்டாம் எனில், இறக்குமதியும் கூடாது! கச்சா எண்ணெய், சுமார் 70 சத இறக்குமதியே செய்யப் படுகிறது!
விவசாயத்திற்கு அடுத்த பெரியத் தொழில், ஜவுளித் துறையே! உற்பத்தியாகும் அனைத்து பொருட்களையும், உள்நாட்டிலெயே, விற்க முடியாது!(30 ரூபாய் ஜட்டியை, 3 வருடத்திற்கு உபயோகப்படுத்தும், காமெடி நடிகர் சுருளிராஜன் வகையைச் சேர்ந்தவர் நாம்!)
மதிப்புக் கூட்டப்பட்ட, பொருட்களை ஏற்றுமதி செய்தால், உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும்! ஆலைகள் பெருகும்!பொருளாதாரம் மேம்படும்! தேவையான அன்னியச் செலாவணி கிட்டும்!
அதை விடுத்து மூலப் பொருட்களை, உள்நாட்டுத் தேவைக்குத் தராமல், ஏற்றுமதி செய்தால் என்னவாகும் என்பது, படிப்பவர்களின் மேலானா அறிவுக்கு! ஆங்கிலேய ஆட்சிக் காலம் நியாபகம் வருகிறதா?
ஜவுளித் தொழிலில், உள்நாட்டு உற்பத்தி யாளர்களுக்கு, கொள்ளை லாபம், என்பதெல்லாம், கட்டுக்கதை! சராசரியாக 3 – 5 சத லாபமே! 3 வருடத்திற்கு ஒரு வருடம்,நஷ்டம் ,கண்டிப்பாகா உண்டு! (சுழற்சி)
மூலப்பொருட்கள்,சம்பளம் ,வரிகள், மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள் — இவை எதையும்,தொழில் முனையும் ஒரு நபரால், நிர்ணயிக்க முடியாது! சந்தையும், தேவையும், அரசுமே, இவை அனைத்தையும், நிர்ணயிக்கிறது! தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, விவசாயியைப் போலவே, ஜவுளி தொழில் முனைவரும், நிர்ணயிக்க முடியாது! (விதி விலக்குகள் உண்டு- இது பொதுவானவை)
தொடரும்!
Rammy,
// நீங்கள், குறிப்பிட்டபடி ஆன் லைன் வர்த்தகம், நடந்தாலும், பருத்தியைக் குறித்தவகையில் , மிகக் குறைந்த அளவே நடை பெறுகிறது//
இல்லை. தற்போது உலகளவிலான பருத்தி விலையில் ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான ஏற்றத்திற்கு முன்பேர வர்த்தக சூதாடிகளே காரணம் – இந்த சுட்டியில் அதைப் பற்றிய விரிவான
செய்தி ஒன்று உள்ளது – http://www.thehindubusinessline.com/2010/10/06/stories/2010100652931600.htm
நீங்கள் “யாரோ ஒருவர்” பதுக்கியே வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது, அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்குகளில் வைப்பதையும் – ஆன்லைன்
சூதாடிகள் செய்வதையும் ஒரே கோட்டில் வைத்துப் பார்ப்பது போல் உள்ளது (எனக்கு அப்படித்தான் புரிகிறது)- அந்த அம்சத்தைக் கொஞ்சம் விளக்குங்கள்.
மற்றபடி எனது பின்னூட்டம் எண் 32022-வில் இருக்கும் மற்ற கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்கிறேன்.
_______________________________________________________
கடைசி பின்னூட்டத்தில் நீங்கள் செய்திருப்பது வாதம் அல்ல – விதண்டாவாதம்…! 🙂
//ஏற்றுமதியே வேண்டாம் எனில், இறக்குமதியும் கூடாது! கச்சா எண்ணெய்,சுமார் 70 சத இறக்குமதியே செய்யப் படுகிறது!//
ஏற்றுமதியை ஒரு குற்றம் என்று யாரும் சொல்லவில்லை (தியாகு இப்படித்தான் புரிந்து கொண்டு உளருகிறார்). உள்நாட்டுத் தேவையைப் புறக்கணித்து விட்டு செய்யப்படும் ஏற்றுமதியைப்
பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இங்கே ‘தேவை புறக்கணிப்பு’ என்று நான் குறிப்பிட்டிருப்பதை கடைசியில் சொல்கிறேன்.
// உற்பத்தியாகும் அனைத்து பொருட்களையும், உள்நாட்டிலெயே, விற்க முடியாது!(30 ரூபாய் ஜட்டியை, 3 வருடத்திற்கு உபயோகப்படுத்தும், காமெடி நடிகர் சுருளிராஜன் வகையைச்
சேர்ந்தவர் நாம்!) //
ஏன் உள்நாட்டிலேயே விற்க முடியாது? நீங்கள் இங்கே சொல்லும் ‘உள்நாடு’ சுமார் ஒரு பில்லியனுக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. உலக மக்கள் தொகையில்
ஆறில் ஒருவர் இங்கே இருக்கிறார் – எனில் இது எந்தளவுக்கு ஒரு பெரிய சந்தை…!?
ஆனால் இந்த சந்தையில் பப்பு வேகாது என்று நீங்கள் சொல்கிறீர்களே ஏன்? வாங்கும் சக்தி இல்லை – சரிதானா…
ஏன் வாங்கும் சக்தி இல்லை?
நாட்டில் சுமார் எழுபது சதவீதம் பேருக்கும் மேல் வேலை அளிக்கும் விவசாயமும் – அதற்கு அடுத்தபடியாக வேலை அளிக்கும் ஜவுளித்துறையும் தான் (பஞ்சு மில், பவர் லூம், ஜட்டி
கம்பெனி, துணி கம்பெனி etc etc)..
விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால், அத்துறையை விட்டே விவசாயி விரட்டப்படும் நிலை (depesentization) உள்ளது. விவசாயிக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை –
விவசாயம் இனி எப்போதும் லாபகரமான தொழிலாக இருக்க முடியாது என்கிற ஒரு நிலைக்கு விவசாயிகளைத் தள்ளி விட்டு அவர்களை அத்துக் கூலிகளாக நகரங்களை நோக்கி
துரத்தப்படுகிறார்கள். விதைக்கும் விதையைக் கூட ஒரு சில பன்னாட்டுக் கம்பெனிகள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார்கள் – உரம், பூச்சி மருந்து என்று எதுவும் கட்டுப்படியாகும்
விலையில் இல்லை. தக்கிமுக்கி விவசாயம் பார்த்து விளைவித்த பொருளுக்கு அடிமாட்டு விலை. இப்படி விவசாயத்தை விட்டு ஓடி வருபவர்கள் நகரங்களில் செக்கூரிட்டிகளாக,
கூலியாட்களாக….. ஏன் – தியாகுவின் கம்பெனியில் பீஸ் அடுக்கும் வேலையிலும் அவர்கள் தான் நிறைந்துள்ளனர்.
மொத்த மக்கள் தொகையில் எழுபதில் இருந்து என்பது சதவீதம் பேர் 20 /- சம்பாதிக்கும் நிலை.
இப்படியொரு நிலையில் மக்களை நிப்பாட்டி வைத்திருப்பதும் – அதை முதலாளிகள் கேப்பிடலைஸ் செய்வதுமாக (மைக்ரேட் ஆகி வரும் விவசாயக் கூலிகளை குறைந்த கூலிக்கு
சுரண்டிக் கொள்வது) உள்நாட்டுத் தேவையை அவர்களே திட்டமிட்டுப் புறக்கணித்துக் கொள்கிறார்கள். இப்படி இங்கே திருப்பூர் தொழிலாளர்களின் உழைப்பை (பனியனோடு சேர்த்து)
ஏற்றுமதி செய்யும் ஏஜெண்டுகளாக (தரகு) இருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.
தியாகு,
நீங்கள் கடைசியாக (சாராம்சமாக) சொன்னது –
//உள்நாட்டின் வணிகத்துக்கே கச்சா பொருள் கட்டுள் இல்லாத ஏற்றுமதியும் ஆன்லைன் சூதாட்டமும் எதிரிகள் என்பதை காணாமல் விடுகிறார் //
//.இனிமேல் ஏற்றுமதி சாராத புறாகூடுபோல தனியான ஒரு நாட்டை கட்டமைக்க சோசலிச அல்லது புதியஜனநாயக நாட்டால் கூட முடியாது அப்போது சரியான ஏற்றுமதி கொள்கை
வகுக்க வேண்டும்//
நான் அதற்கு முன்பு எனது பின்னூட்டத்தில் சொன்னது –
//உள்நாட்டுத் தேவையை கணக்கில் கொள்ளாத ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் பொருளாதாரம் குறையானது தான்.//
உங்களுக்கு கண் முன்னாடி தானே இருக்கிறது? மேலெ நான் சொன்னதுக்கு என்ன அர்த்தம்? உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து விட்டு ஏற்றுமதி செய்யட்டுமே… உள்நாட்டுத்
தேவை முற்றிலுமாக பூர்த்தியாகி விட்டது என்று நீங்கள் சொல்லுங்கள் மேற்கொண்டு பேசலாம்…
நீங்கள் பின்னே சொன்னது –
//முடிவா இதன் அடிப்படைகாரணம் அதற்கான தீர்வுன்னு கேட்டால் முழி முழின்னு முழிக்கிறார்கள் //
நான் முன்னே சொன்னது –
//தேசியமுதலாளிகளின் நலனும் (உள்நாட்டுச் சந்தை) விவசாயிகளின் நலனும் (உரிய விலை) இணைந்திருக்க வேண்டும் என்பதே கட்டுரை எதிர்மறையில் ஏற்படுத்தும் மனப்பதிவு.
உள்நாட்டு தேவையை அதிகரிக்க வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் அதற்கு நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறை லாபகரமாக நடந்தாக வேண்டும்
அதற்கு விவசாயிக்கு உரிய விலை கிடைத்தாக வேண்டும். //
// விவசாயிகளும் தொழிலாளர்களும் இணைவது என்பது விவசாயிகளுக்கு உள்நாட்டிலேயே உரியவிலை கிடைக்கச் செய்யும் என்பதோடு, தொழிலாளர்களுக்கு உரிய கூலியையும்
கிடைக்கச் செய்யும் இது தான் உள்நாட்டின் தேவையை அதிகரிக்கச் செய்யும் //
உங்களுக்கு கண்கள் நெற்றியின் கீழே – கன்னங்களுக்கு மேலே – முகத்தின் முன்பக்கத்தில் தானே உள்ளது?
உங்களோட அந்தப் பெரிய பின்னூட்டத்தைப் படிக்கவில்லை – முடியலை.. சத்தியமா சொல்றேன், தலையே சுத்துது.
இங்கே -Rammyன்னு ஒருத்தர் விவாதிக்கிறார் – நானும் அவரோடு விவாதிக்கிறேன். நீங்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு ஏதாவது புரிந்து கொள்ள முயலுங்கள்.
இல்லையென்றால் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளை எப்படிப் படிப்பது என்பதற்கு டியூசன் போய் பாருங்கள்.. பாதுகாப்பாக குமுதம் / விகடனில் இருந்து ஆரம்பியுங்கள்.
1.பஞ்சு என்ற கச்சாபொருளுக்கு விவசாயிக்கு ஆதாரவிலை அரசு கொடுக்க கூடாது என எந்த முதலாளி சங்கமும் கோரிக்கை விடுக்கவில்லை
2.பஞ்சு என்பது ஒரு கச்சா பொருள் அதை வரைமுறை இன்றி ஏற்றுமதி செய்ய கூடாது
3.அதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளார் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்மேலும் எந்த ஒரு கச்சா பொருளும் ஏற்றுமதி என்பது கட்டுக்குள்
இருக்கவேண்டும்
4.ஏற்றுமதி என்பது அமெரிக்காவுக்கு வால்
பிடிப்பது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை சார்ந்தது எனவே
உள்நாட்டுக்கு உற்பத்தி செய்யுங்கள் என
சொன்ன உங்கள் வாதம் தவறு
அதை ஏற்கனவே மறுத்து இருக்கேன்
அ) திருப்ப்பூரில் உள்நாட்டு உற்பத்தியும்
நடக்கிறது
ஆ) இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கு
வால்பிடிப்பது என ஒரு மொத்த ஏற்றுமதியையும் புறம்தள்ளாமல் ஏற்றுமதி
கொள்கை என்பது வகுக்கப்படனும்
மேற்குரிப்பிட்டவை எனது பாயிண்டுகள்
நிங்கள் படிக்கமுடியலை மயக்கம் வருதுன்னா ஒன்றும் செய்ய முடியாது
//பஞ்சு என்ற கச்சாபொருளுக்கு விவசாயிக்கு ஆதாரவிலை அரசு கொடுக்க கூடாது என எந்த முதலாளி சங்கமும் கோரிக்கை விடுக்கவில்லை //
அப்படியென்றால் MSPஐ அதிகரிப்போம் என்று சொன்னவுடன் ஏன் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யவேண்டும்?
//பஞ்சு என்பது ஒரு கச்சா பொருள் அதை வரைமுறை இன்றி ஏற்றுமதி செய்ய கூடாது //
யார் அப்படிச் செய்யச் சொன்னது பு.ஜவில் அப்படிச் சொல்லவில்லையே? இங்கே நாங்கள் சொல்வதெல்லாம்
ஏற்றுமதியோ இறக்குமதியோ இரண்டினாலும் விவசாயி பாதிக்கப்படுகிறார் என்று தான். ஏற்றுமதியை முதலாளிகள்
நிறுத்தச் சொல்வதன் பின்னுள்ள அரசியலைத் தான் கட்டுரை குத்திக்காட்டுகிறது.
//அ) திருப்ப்பூரில் உள்நாட்டு உற்பத்தியும்நடக்கிறது
ஆ) இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்குவால்பிடிப்பது என ஒரு மொத்த ஏற்றுமதியையும் புறம்தள்ளாமல் ஏற்றுமதி
கொள்கை என்பது வகுக்கப்படனும் //
அட முருகப்பா… எனக்கேண்டா இந்த சோதனை? நான் என்ன கேட்டேன்…. உள்நாட்டு சந்தைத் தேவையை முழுவதுமாக
திருப்பூரின் உற்பத்தி பூர்த்தி செய்து விட்டதா? நூறுகோடி பேரும் ஆயத்த ஆடைகளை வாங்கிக் குவித்து வீட்டில்
இடமில்லாத நிலையில் தான் திருப்பூர் முதலாளி அமெரிக்க சந்தையை குறிவைத்திருக்கிறாரா?
நீங்க செய்யறதுக்குப் பேர் விவாதமா? கடுப்பேத்தாதீங்க புவர் ஆனர்…!
தியாகு,
நீங்க ட்விட்டர்ல விட்ட “உட்டாலக்கடி கிரி கிரி.. சைதாப்பேட்டை வட கறி” போன்ற தத்துவ முத்துக்களெல்லாம்
என்னுடைய பின்னூட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளதே… உங்க பதிவை வாபஸ் வாங்கிக் கொள்ள முடியுமா?
புரியலைன்னு சொன்னா நான் விளக்கமா உங்களோட “கருத்து” எப்படி தவறென்று நிறுவப்பட்டது என்று பாயிண்ட் by
பாயிண்டாக தனியாக கோணார் நோட்ஸ் எழுதனுமா?
வினவு மேலும் எங்கள் மேலும் உங்களுக்கு இருக்கும் கண்மூடித்தனமான வெற்று ஆத்திரத்தின் விளைவைப் பாருங்கள்…
இப்போது ஒரு முழு மூடராக – அம்மனமாக – நிற்கிறீர்கள். புரியலையென்றால் புரிந்து கொள்ள பொறுமையும் முயற்சியும்
வேண்டும்…. இனியாவது வளர்த்துக் கொள்ளப் பாருங்கள்….
//பஞ்சு என்ற கச்சாபொருளுக்கு விவசாயிக்கு ஆதாரவிலை அரசு கொடுக்க கூடாது என எந்த முதலாளி சங்கமும் கோரிக்கை விடுக்கவில்லை //
//அப்படியென்றால் MSPஐ அதிகரிப்போம் என்று சொன்னவுடன் ஏன் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யவேண்டும்?//
யுவர் ஆனர் ஏற்றுமதி செய்து பஞ்சு விலை அதிகமானதும் வாங்கிய முதலாளிக்கு
அடுத்தும் விலை ஏறபோகிறதென்றால் பயம் வருமா வராதா ?
ஒருபக்கம் ஏற்றுமதியை சப்பை கட்டு கட்டிட்டு மறுபக்கம் இறக்குமதி ஏன்னு கேட்கிறீங்களே
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச் அப்பா சிவனே
//பஞ்சு என்பது ஒரு கச்சா பொருள் அதை வரைமுறை இன்றி ஏற்றுமதி செய்ய கூடாது //
யார் அப்படிச் செய்யச் சொன்னது பு.ஜவில் அப்படிச் சொல்லவில்லையே? இங்கே நாங்கள் சொல்வதெல்லாம்
ஏற்றுமதியோ இறக்குமதியோ இரண்டினாலும் விவசாயி பாதிக்கப்படுகிறார் என்று தான். ஏற்றுமதியை முதலாளிகள்
நிறுத்தச் சொல்வதன் பின்னுள்ள அரசியலைத் தான் கட்டுரை குத்திக்காட்டுகிறது.//
பின்னுள்ள முன்னுள்ள அரசியலை குத்திகாட்டுவதைத்தான் நான் குத்தி காட்டினேன் பின்னுள்ள அரசியலை குத்தி காட்டுகிறேன்னு பேர்வழின்னு அடிப்படை பிரச்சனையான தொழிலாளர் ஜீவாதார பிரச்சனையான பஞ்சு ஏற்றுமதிக்கு கொடிபிடிக்காதீங்கன்னு
மறுபக்கம் இல்லை விவசாயிக்கும் சொன்னோம் என்பது பிறகு இல்லை
நேர்மறையா இதை நிருவுதுன்னு சொல்வது
இல்லை எதிர்மறையா இப்படி எடுத்தகாதீங்கன்னு சொல்வது
நடிகர் விசு தோத்தார் உங்க கிட்ட
ராஜா வனஜ்
//அ) திருப்ப்பூரில் உள்நாட்டு உற்பத்தியும்நடக்கிறது
ஆ) இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்குவால்பிடிப்பது என ஒரு மொத்த ஏற்றுமதியையும் புறம்தள்ளாமல் ஏற்றுமதி
கொள்கை என்பது வகுக்கப்படனும் //
அட முருகப்பா… எனக்கேண்டா இந்த சோதனை? நான் என்ன கேட்டேன்…. உள்நாட்டு சந்தைத் தேவையை முழுவதுமாக
திருப்பூரின் உற்பத்தி பூர்த்தி செய்து விட்டதா? நூறுகோடி பேரும் ஆயத்த ஆடைகளை வாங்கிக் குவித்து வீட்டில்
இடமில்லாத நிலையில் தான் திருப்பூர் முதலாளி அமெரிக்க சந்தையை குறிவைத்திருக்கிறாரா?
//
ஆயத்த ஆடைகள் உள்ளூருக்கும் நடக்கிறது அதன் ரகம் இதென்ன பலதடவை சொல்லிட்டேன் அதில் தட்டுபாடு ஏற்பட்ட்டால் உள்ளாடைகள்
இறக்குமதி நடந்து இருக்கிறதா
சொல்வதை நல்லா படிச்சு பார்க்கனும் யுவர் ஆனர்
ஏற்றுமதி செய்யும் பனியன் என்பது
கேட்டகிரி 4 மற்றும் டேங்க் டாப் வகையறா நைட்டி பைஜாமா வெல்லாம்
நம்மூர் பெண்கள் போடமாட்டாங்க போட்டாலும் நம்மூர் ஆளுக வருடகணக்கில் அடுத்த செட் வாங்க மாட்டாங்க அதனால அவங்களுக்கு தேவை படுவது உள்ளாடை மட்டும்தான்
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பனியனை அதிகம்பட்சம் இரண்டுதடவைக்கு மேல உபயோகிப்பதில்லை அங்கு தேவை அதிகம் ஏற்றுமதி செய்கிறார்கள்
அதுக்கா உள்ளூர்காரன் கிழிக்கிற வரை
மெசினெல்லாம் நிறுத்தி வைக்க சொல்வீங்க போல ராசா
//நீங்க செய்யறதுக்குப் பேர் விவாதமா? கடுப்பேத்தாதீங்க புவர் ஆனர்…!//
மிஸ்டர் நீங்க செய்றதுக்கு பேரு ஆள காப்பாத்திர விவாதம் அல்லது சாணியடித்தல்
//மொத்த மக்கள் தொகையில் எழுபதில் இருந்து என்பது சதவீதம் பேர் 20 /- சம்பாதிக்கும் நிலை. //
ரு 20 ஒரு மணி நேரத்திற்கா? ஒரு நாளைக்கு என்றால், அது தவறான தகவல்! சந்தேகமிருப்பின், சாம்பிள் சர்வே எடுங்கள்!
//ரு 20 ஒரு மணி நேரத்திற்கா? ஒரு நாளைக்கு என்றால், அது தவறான தகவல்! சந்தேகமிருப்பின், சாம்பிள் சர்வே எடுங்கள்!//
ராம்மி நீங்க ரொம்ப லேட்டு.. பல பேரு ஏற்கனவே சாம்பிள் சர்வே (அரசும் சேர்ந்து) எடுத்துச் சொன்ன தகவல்கள்தான் இவை
Rajavanaj!
கிராமப் பொருளாதாரத்தில், விவசாயி மற்றும் விவசாய வேலையாட்கள் எனும் இரண்டு பிரிவுகள் உள்ளது…உமது பாஷையில் வர்க்கங்கள்!
1.பெரும்பாலான விவசாயிகள்(வயதானவர்கள்) இன்னும் கிராமத்திலேயே தான், நிலத்தை காபந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்! அவர்களின், பிள்ளைகள் கார்ப்பரேட் வேலைகளுக்கு, சென்று விட்டனர்!
2. 70 கள் வரை, தினக்கூலி முறையில், வேலை பார்த்த பண்ணையாட்கள்,80 களின் போது தங்களுக்குள், குழு அமைத்து, குத்தகை அடிப்படையில், தங்களின் சம்பளத்தை, நிர்ணயம் செய்யும் ஆற்றல் பெற்று, வேலை செய்ய ஆரம்பித்தனர். இன்று வரை, அது தொடர்கிறது!
90 களில், தாராளமயமாக்கலுக்குப்பின், தொழில் வளம் பெருகும் போது, தொழிற்சாலைகள்,உப நகரங்களில்,கிராமங்களுக்கு அருகாமையில், பெருக ஆரம்பித்தவுடன், பண்ணையாட்கள் அதிக உழைப்பு/குறைந்த வருவாய் தரும் விவசாயப் பணியில் இருந்து, மெல்ல விலகி, அதிக வருவாய் வரும், வேலை தரும், தொழிற்சாலைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.
பண்ணையாட்களின், படித்த பிள்ளைகள் தகுதிக் கேற்ற பிற வேலைகளுக்கும், படிக்காத பிள்ளைகளை, கொடுங்கோல் தொழில் செய்யும் ஜவுளி ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இது தமிழகத்தில் விவசாயம், மெல்ல சரிந்ததன் கதை! தண்ணீர்/ மின் பற்றாக்குறை, இடைத்தரகர் ஆதிக்கம், விளைபொருட்களுக்கு எதிர் பார்த்த விலை கிடைக்காதது.. இவையெல்லாம் உப கதைகள்!
Rammy..!
உங்களோடான விவாதத்தின் போது என் நினைவலைகளில் வேறு ஒரு நன்பர் நிழலாடுகிறார். நீங்கள் அவராய் இருப்பின்… மிக்க மகிழ்ச்சி..! வேறு பெயர்களில் வந்தால் தரக்குறைவாய் என்னவேண்டுமானாலும் பேசி விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் உங்களது இந்த நேர்மை பாராட்டத்தக்கது. நீங்கள் ‘அவராய்’ இல்லாவிட்டால்.. முந்தைய
வரியை மறந்து விடுங்கள்… 😉
எனது விவாதத்தின் மய்யப் பொருளாக.. கைக்கூலி அரசால் உள்நாட்டு சந்தை புறக்கணிப்பு (விவசாயம் அழித்தொழிப்பு – தொழிலாளிகளுக்கு உரிய கூலி இல்லாதது – இதன் மூலம் வாங்கும் சக்தியை ஒழித்தது) என்கிற அம்சத்தை முன்வைத்து முந்தைய பின்னூட்டங்களை இட்டிருந்தேன். இதன் இன்னொரு அம்சமானது உள்நாட்டு முதலாளிகள் (தேசிய முதலாளிகள்) ஒன்று தமது தொழிலை விட்டு ஓட வேண்டும் (பொவண்ட்டோ – டொரினோ – மாப்பிள்ளை வினாயகர்) அல்லது பன்னாட்டு முதலாளிகளின் நலனைக் காக்கும் தரகு முதலாளிகளாக
மாறியாக வேண்டிய கட்டாயமும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன். பருத்தியை நீ ஏற்றுமதி செய்யாதே – ஆனால், நான் பனியனை ஏற்றுமதி செய்வேன்; முதலாளிகள் தான் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்கிற நிலை வரும் போது பருத்தி முன்பேர வணிகத்தை ஊக்குவிக்கவும் செய்தனர். இன்றைக்கு பருத்தி ஆன்லைன் டிரேடிங்கால் பாதிக்கப்பட்டோ ம் என்று அலறுகிறார்கள் பனியன் முதலாளிகளும் மில் முதலாளிகளும்…. இதே மில் முதலாளி சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜ வாணவராயர் தான் 2001ம் ஆண்டு கோவையில் வைத்து பருத்தி ஊகபேர வணிகத்தைத் துவங்கி வைத்தார் என்பதை நினைவூட்டுகிறேன்.
இது ஒரு முரண்பட்ட நிலை. இப்போதும் கூட அவர்க