நவம்பர் புரட்சி! மகிழ்ச்சி!
சரி…. நாம் என்ன செய்யப் போகிறோம்?
தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்களுக்காக
அழாத விழிகள்….
தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிக்காக
சிரிக்காத உதடுகள்…
தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக
இயங்காத இதயங்கள்…
இருந்தாலும் இறந்தனவே!
பிறப்பின் உருவத்தை
உன் கருப்பை தீர்மானிக்கலாம்
பிறப்பின் உணர்ச்சியை… இலட்சியத்தை
உன் கருத்துதான் தீர்மானிக்கிறது…
மனிதனாக வேண்டுமா? வா!
பாட்டாளி வர்க்க பக்கம்!
புரட்சியின் மகிழ்ச்சியை
துய்த்திட வேண்டுமெனில்,
புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்!
புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!
நீரலை எதிர்த்து… ஓர் இலைப்பற்றி
தன்னந்தனியாய் போராடிப் போராடி
கரைசேரும் சிற்றெறும்பின்
விடாப்பிடி வேண்டும்!
இடையில் ஆயிரம் இன்னல்கள் தாண்டி…
இல்லற முரண்களின் சுயநலம் தாண்டி…
உடன்வரும் தோழர்கள் அன்பினில் தோய்ந்து
முரண்படும் தோழமை இயங்கியல் அறிந்து
முற்றிலும் புரட்சியே சரியென உணர்ந்து
பற்றிடும் உணர்ச்சியில் பாதம் அழுந்து!
புரட்சியின் வேகத்திற்கு நீ பொருந்து! பொருந்து!
பார்! புரட்சியின் இனிமை புரியும் உனக்கு.
என்வேலை… என் சூழல்…
இனிய காதலி… மனைவி, மக்கள்
என தன்நிலை பார்த்து
வேலை செய்வதல்ல புரட்சி,
மக்கள் நிலையைப் பார்த்து
இப்போதே மாறவேண்டும் சமூகம் என
தன்னிரக்கம் தகர்த்து
வேலை செய்வதே புரட்சி!
அய்வகை நிலமும், செய்தொழில் அனைத்தும்
உன் கண்ணெதிரே அழிகிறது!
அந்நிய மூலதனத்தின் நச்சுச்சூழலில்
நம் அன்னையின் மார்பில் சுரக்கிறது,
குரோமியமும், காரியமும்.
மான்சான்டோ மலட்டு விதைகளால்
இந்தியத் தாய்களின் கருப்பையும்
இனி தரிசாக…
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்…. வெண்டைக்காய்…
மன்மோகன்சிங்…. ப.சிதம்பரம்…
இந்த வரிசையில் உன்னையும் சேர்க்க சம்மதமா?
நவம்பர் புரட்சியோடு அடையாளப்படுத்திக்கொள்ளும்
உன்னையே நம்புகிறது ஊர், உலகம்.
உறியப்பட்ட இயற்கை வளங்களின்
அரசியல் புரியாமல்…
ஒரு வாய் தண்ணீருக்காக
உன் வாசல் வந்து கத்துகிறது மாடு!
ஓசையற்ற தறிக்கட்டைகளின்
உள்சோகம் நீ உணராவிட்டால்,
கடைசியில் உன் இதயமும்
செல்லரித்துப் போகலாம்!
கயர்லாஞ்சியிலோ… கடலூர் பக்கத்திலோ
சிதைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின்
போராட்ட உணர்ச்சியோடு பொருந்தாதவருக்கு
நவம்பர் புரட்சியின் நல்லிசை சொந்தமில்லை!
குறுஞ்செய்தி… பரிமாற்றம்…. மகிழ்ச்சி…
விழா இரைச்சலுக்கிடையே… விட்டுவிடாதே!
‘நோக்கியா கட்டிங் மிசினில்’ பணிக்கொலையான
தொழிலாளி அம்பிகாவின் துடிதுடித்த குரல்
உனக்கு கேட்கிறதா?
நச்சரிக்கும் அந்தத் தோழியின் குரல்
இந்த நவம்பர் புரட்சியில் உன்னிடம் வேண்டுவது,
முதலாளித்துவக் கொலைக்களங்களுக்கு எதிராக
ஏதாவது செய் என்பதல்ல…
புரட்சிக்குக் குறைவாக
வேறெதுவும் வேண்டாம் என்பதே!
விழா மகிழ்ச்சியில்…
இந்த வேண்டுகோளை விட்டுவிடாதே,
செய்… வேலை நிறைய இருக்கிறது…
புரிந்துகொள்!
புரட்சியின் பணிச்சுமை ஏற்பவர் எவரோ?
புரட்சியின் மகிழ்ச்சிக்கு
உரியவர் அவரே!
—துரை.சண்முகம்
_________________________________________
வினவுடன் இணையுங்கள்
தொடர்புடைய பதிவுகள்
நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் | வினவு!…
புரட்சியின் மகிழ்ச்சியை துய்த்திட வேண்டுமெனில், புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்! புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!…
அருமையான வரிகள்
புரட்சிகர வாழ்த்துக்கள்
///குறுஞ்செய்தி… பரிமாற்றம்…. மகிழ்ச்சி…
விழா இரைச்சலுக்கிடையே… விட்டுவிடாதே!
‘நோக்கியா கட்டிங் மிசினில்’ பணிக்கொலையான
தொழிலாளி அம்பிகாவின் துடிதுடித்த குரல்
உனக்கு கேட்கிறதா?///
நோக்கியா போனை பார்க்கும் போதும் பேசும் போதும் தொழிலாளி அம்பிகாவின் சாவு நினைவுக்கு வருகிறது
[…] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: RT @vinavu: நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் https://www.vinavu.com/2010/11/06/nov7-2/ […]
நோக்கியா போனை பார்க்கும் போதும் பேசும் போதும் தொழிலாளி அம்பிகாவின் சாவு நினைவுக்கு வருகிறது
உண்மை தான்!
//இடையில் ஆயிரம் இன்னல்கள் தாண்டி…
இல்லற முரண்களின் சுயநலம் தாண்டி…
உடன்வரும் தோழர்கள் அன்பினில் தோய்ந்து
முரண்படும் தோழமை இயங்கியல் அறிந்து
முற்றிலும் புரட்சியே சரியென உணர்ந்து
பற்றிடும் உணர்ச்சியில் பாதம் அழுந்து!
புரட்சியின் வேகத்திற்கு நீ பொருந்து! பொருந்து!
பார்! புரட்சியின் இனிமை புரியும் உனக்கு.
//
ஆழமான வரிகள்
நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
இது தான்.
’புரட்சிக்காக உயிரைக் கொடுப்பது அல்ல, புரட்சிக்காக வாழ்க்கையினை கொடுப்பது தான் சரி’ என கடந்த நவம்பர் விழாவில் துரை.சண்முகம் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகிறது.
முதலாளித்துவம் கொல்லும்,கம்யூனிசமே வெல்லும். இது சொல்லோடு நின்றுவிட்டால் தானாக நடந்து விடுவதில்லை எதுவும். தானாகவே வீழ்ந்து விடாது மூலதனம். இனி புரட்சி ஒன்றுதான் தீர்வு, அதற்கு கம்யூனிசமே சரியான பாதை. இப்படி சொல்லிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு வெறும் ஆத்ரவு மட்டும் தந்துவிடுவதால் யாரும் புரட்சியாளன் ஆகிவிடுவதில்லை, புரட்சியும் வந்துவிடுவதில்லை. ராபின்ஹுட் போல் எவராவது ஒருவர் நமக்காக போராட வருவார் என்று எதிர்பார்த்து திரிவது மூடத்தனம். தானாக முன்வந்து தன் துயர்துடைக்க புரட்சியில் மக்கள் கொத்து கொத்தாக இணைவதுதான் வெற்றியின் விளிம்பு. அதில் நானும் ஒரு நபராக வெகு விரைவிலேயே.
புரட்சியில் ஈடுபடாமல் புரட்சியை நேசிப்பது, உழைப்பில் ஈடுபடாமல் பலனை மட்டும் அனுபவிப்பதற்கு சமம். யார் மகிழ்ச்சிக்கு உரிமையாளன்? கருத்துக்குரியவனா? செயலுக்குரியவனா? அல்லது இரண்டையுமே விலைக்கு வாங்கும் முதலை ஆள்பவனா? மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு உரிமையாளர்கள் மட்டுமல்ல; அதன் இயல்புக்குரியவர்களும் புரட்சியாளர்களே என்பதை தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதை வரிகள் மிக அருமையாக எடுத்துக்காட்டியுள்ளது. நவம்பர் நாள் புரட்சிகர வாழ்த்துக்கள்.
அனைத்து தோழ்ர்களுக்கும் எனது நவம்பர் 7 புரட்சி நாள் வாழ்த்துக்கள்…………
Communism is already lost … communism is no were…. except our filthy pathetic comrades of indian communist parties…. stop dreaming about stupid communism… indian communists are mongolaids….
கனவு மெய்பட வாழ்த்துகள்!
வன்முறையற்ற புரட்சி வழி செல்லுங்கள்!
“வன்முறையற்ற புரட்சி வழி செல்லுங்கள்” என ஆலோசனை
கூறும் திரு. rammy அவர்களே, வன்முறை என்று நீங்கள்
எதைக் கருதுகிறீர்கள?
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை, சிறுவன் நரபலி,
இளம் பெண் கற்பழிப்பு, தங்கத்துக்காக மூதாட்டியின் கழுத்தை
அறுத்துக் கொலை, சொத்துத் தகராறில் வெட்டுக் குத்துக்
கொலை, குடிபோதையில் வாலிபருக்கு வெட்டு, கோயில்
பூசாரியைத் தாக்கி உண்டியல் கொள்ளை, சாதிக்கலவரம்-
மதக்கலவரம், காவல் நிலையக் கற்பழிப்பகள், கொட்டடிக்
கொலைகள், தேர்தல் வன்முறை, தலைவர் சிலைக்கு செருப்பு
மாலை-தொண்டர்கள் ஆவேசம்-கடைகள் சூரையாடல்,
பேருந்துகள் அடித்து நொறுக்கப் பட்டன, தலைவர் கைது-கல்லூரி மாணவிகள் பேருந்தில் எரித்துக் கொலை, நகர
மன்ற-சட்டமன்றங்களில் கைகளப்பு…. இவையெல்லாம்
வன்முறையில்லையா? இப்படி வன்முறைகளை பட்டியலிட்டால் இணைய பக்கங்களே இரத்தத்தில் தோய்ந்து மிதக்கும்.
வன்முறை நடை பெறாத நாளோ நகரமோ மாவட்டமோ
மாநிலமோ நமது நாட்டில் உண்டா? இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபோர் கம்யூனிஸ்டுகளா? அல்லது இத்தகைய வன்முறைகளை கம்யூனிஸ்டுகள் தூண்டுகிறார்களா?
வன்முறை ஒழிய ஒரே வழி அகிம்சை என்று போதிக்கப்
படுகிறது. எவன் மதிக்கிறான் காந்தியின் அகிம்சையை? எது
வன்முறை? அகிம்சையால் ஏன் வன்முறையை
ஒழிக்கமுடியவில்லை? இதைப் புரிந்து கொள்வோம் முதலில்.
ஊரான்.
நண்பர் ரம்மி, அதெப்படிங்க உடம்பில் புகுந்த கிரிமியை ஒழித்துக்கட்டாமலே ஆளை குணப்படுத்துவது? வன்முறையற்ற புரட்சி வழி என்பது காந்திய வழி, அல்லது எதிர் புரட்சி என்றே பொருள்.
//முதலாளித்துவக் கொலைக்களங்களுக்கு எதிராக
ஏதாவது செய் என்பதல்ல…
புரட்சிக்குக் குறைவாக
வேறெதுவும் வேண்டாம் என்பதே!//
//மனிதனாக வேண்டுமா? வா!
பாட்டாளி வர்க்க பக்கம்!//
அருமையான வரிகள் தோழர் துரை. சண்முகம்
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்…. வெண்டைக்காய்…
மன்மோகன்சிங்…. ப.சிதம்பரம்…
இந்த வரிசையில் உன்னையும் சேர்க்க சம்மதமா?
அருமையான கேள்வி.. நல்ல கவிதை.
Vanakkam Thozhar
Uyirthudippana Kavithai,
vazhtthukkal & paarattukkal
weldone.DURAI.SHANMUGAM I THINK IT IS THE BEST.
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் GA_googleAddAttr("AdOpt", "1"); GA_googleAddAttr("Origin", "other"); GA_googleAddAttr("theme_bg", "ffffff"); GA_googleAddAttr("theme_border", "666666"); GA_googleAddAttr("theme_text", "333333"); GA_googleAddAttr("theme_link", "105CB6"); GA_googleAddAttr("theme_url", "8DAB3B"); GA_googleAddAttr("LangId", "1"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%9a%e0%af%8b%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%af%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d"); GA_googleFillSlot("wpcom_sharethrough"); Like this:LikeBe the first to like this post. […]
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]
[…] நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல் […]