Friday, December 6, 2024
முகப்புஅரசியல்ஊடகம்காஷ்மீர் : காங்கிரசு - பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !

காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !

-

டெல்லியில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் புகுந்து வன்முறையில் ஈடுபடும் இந்துத்வ குண்டர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி என்ற அமைப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து, “விடுதலை: ஒரே வழி” என்ற கருத்தரங்கை கடந்த அக்டோபர் 21 அன்று டெல்லியில் நடத்தியது.  இக்கருத்தரங்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வரவர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு அரங்கத்தில் நுழைந்திருந்த இந்துத்துவா பாசிசக் கும்பல் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே ரகளையில் ஈடுபட்டதோடு, சையத் ஷா கீலானி, அருந்ததி ராய் ஆகியோரைத் தாக்கவும் முனைந்தது.  இக்கருத்தரங்கையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஷ்மீரின் வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியையும் அடித்து நொறுக்கியது, அக்கும்பல்.

தில்லி போலீசின் அனுமதி பெற்று, சட்டபூர்வமான முறையில்-அமைதியான வழியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கருத்தரங்கின் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய இக்கும்பல், அக்கருத்தரங்கில் உரையாற்றிய அருந்ததி ராயையும் சையத் ஷா கீலானியையும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் சாமியாடி வருகிறது.  சில ‘தேசிய’ப் பத்திரிகைகள் இந்துத்துவா கும்பலின் இந்த பாசிச கோரிக்கைக்கு ஆதரவாக செய்திகளையும், தலையங்கக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன.  சில தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியம் குறித்து புதுப் பணக்கார கும்பலைக் கூட்டிவைத்து “டாக் ஷோ’’க்களை நடத்தித் தூபம் போட்டன.

அருந்ததி ராய் அக்கருத்தரங்கில், காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்தை, இந்தியாவின் மையப் பகுதியில் நக்சல்பாரிகள் நடத்தும் போராட்டத்தோடும், நர்மதை அணையை எதிர்த்துப் பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டத்தோடும் ஒப்பிட்டுப் பேசியதோடு,  “போராடும் பழங்குடியின மக்களின் கரங்களில் உள்ள வில்லும் அம்பும், காஷ்மீர் இளைஞர்களின் கரங்களில் உள்ள கற்களும் அவசியமானவைதான்.  ஆனாலும், அதற்கு மேலும் நமக்குத் தேவைகள் உள்ளன.   நாகலாந்து, மணிப்பூர், சட்டிஸ்கர், ஒரிசா, காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீதிக்காகப் போராடி வரும் மக்கள் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை’’த் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து அம்மாநில மக்களின் கருத்தை அறிவதற்காக மைய அரசு நியமித்துள்ள மூவர் குழுவைப் புறக்கணிக்கக் கோரி அக்கருத்தரங்கில் அறைகூவல் விடுத்த சையத் ஷா கீலானி, “சுயநிர்ணய உரிமை, காஷ்மீர் மக்கள் அனைவரின், காஷ்மீரில் வாழும் சீக்கியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட அனைவரின் அடிப்படை உரிமையாகும்;  காஷ்மீர் மக்களின் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் ஆதரிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறியாகும்” என உரையாற்றினார்.

நீர், நிலம், கனிம வளம் என நாட்டின் பொதுச் சொத்துகள் அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பது தேசத் துரோகமா? இல்லை, அந்த அநீதியைத் தடுப்பதற்குப் போராடி வரும் மக்களிடம் ஐக்கியப்பட்டுப் போராடுங்கள் எனக் கோருவது தேசத் துரோகமா?  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பகுதிபகுதியாக ஆட்சியாளர்கள் பட்டா போட்டுக் கொடுப்பதைக் காட்டிலும், காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும் எனக் கோருவது எந்த விதத்தில் தேசத் துரோகமாகிவிடும்?

சண்டிகரில் காஷ்மீர் தொடர்பான கூட்டத்தை அச்சுறுத்திய இந்துத்வ கும்பல்

இந்துத்துவா கும்பலோ அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதை நியாயப்படுத்துவதற்காக, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை ” என அருந்ததி ராய் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை ஆதரித்துப் பேசியதாகவும் குறிப்பிடுகிறது.  சில முதலாளித்துவ அறிஞர்கள், “அருந்ததி ராய் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியிருந்தாலும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை; எனவே, அவரைக் கைது செய்ய வேண்டியதில்லை” என இப்பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இந்த இரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று எதிரானது போலத் தோற்றமளித்தாலும், சாரத்தில் இந்துத்துவா கும்பலும், இந்த முதலாளித்துவ அறிஞர்களும் காஷ்மீரின் வரலாற்றை மூடிமறைக்கிறார்கள் என்பதே உண்மை.

‘‘காஷ்மீர் 1947-இல் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டதே தவிர, அம்மாநிலம்  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது கிடையாது” என்பது அருந்ததி ராயின் சொந்தக் கற்பிதம் கிடையாது.  அது ஒரு வரலாற்று உண்மை.  மேலும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அப்பொழுது இந்திய அரசு ஒத்துக் கொண்டது.  இந்த வரலாற்று உண்மைகளை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடம் எடுத்துக் கூறுவதல்ல, அவ்வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட  முயலுவதுதான் துரோகமும் நயவஞ்சகமும் ஆகும்.

டைம்ஸ் நௌ, நியூஸ் 24, பயோனீர் உள்ளிட்ட சில ஊடகங்கள் அருந்ததி ராயைத் தண்டிக்கக் கோரும் விவகாரத்தில் இந்துத்துவா கும்பலைவிடக் கேவலமாக நடந்து கொண்டன.  அருந்ததி ராய் அக்கருத்தரங்கில் இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்ததாக இந்த ஊடகங்கள் செய்திகளைத் தயாரித்து வெளியிட்டன.  அருந்ததி ராய் இந்த அண்டப்புளுகை அம்பலப்படுத்திய பின்னும், இந்திய தேசியவெறி பிடித்த இந்த ஊடகங்கள் ஒரு புளுகுணிச் செய்தியை வெளியிட்டதற்காக வெட்கப்படவுமில்லை; மறுப்பு வெளியிடவும் இல்லை.

அக்கருத்தரங்கில் காஷ்மீருக்குச் சென்று மடிந்து போகும் ஏழை இந்தியச் சிப்பாய்களின் அவல நிலையைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருந்ததி ராய், அதற்கு மாறாக, இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்துப் பேசியிருந்தாலும்கூட  அதில் தவறொன்றும் காண முடியாது.  துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களை வீசும் காஷ்மீர் இளைஞர்களைப் பிடித்துக் கொண்டுபோ அதற்குத் தண்டனையாக அவர்களின் விரல் நகங்களைப் பிடுங்கி எறியும் இந்திய இராணுவம், காஷ்மீரத்துப் பெண்களிடம் மட்டும் கண்ணியத்துடன் நடந்து கொண்டிருக்குமா?

அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது.  பின்னர், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக மைய அரசு கூறினாலும், எந்த நேரத்திலும் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடுக்கும் நிலையில்தான் இப்பிரச்சினையை தில்லி போலீசிடம் விட்டு வைத்துள்ளது.  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இப்பிரச்சினை பற்றி முடிவு செய்யும் சுதந்திரம் டெல்லி போலீசுக்கு உண்டு” எனக் கூறியிருப்பதில் இருந்தே காங்கிரசின் கபடத்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

காங்கிரசின் இந்த ஜனநாயக வேடத்தைக்கூட இந்துத்துவா கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  அருந்ததி ராய் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடக் கோரி அக்கும்பல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

ஏதோ சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் கண்ணியவான் போல வழக்குத் தொடுத்துள்ள இந்துத்துவா கும்பல், இன்னொருபுறம் தனது மகளிர் அணியை இறக்கிவிட்டு அருந்ததி ராய் வீட்டின் மீது தாக்குதல் தொடுத்து, அவரை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது.  இத்தாக்குதல் ஏதோ யாருக்கும் தெரியாமல் சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதன்பின் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் அல்ல.  “ஓவியர் ஹுசைனை வேட்டையாடியதைப் போலவே அருந்ததி ராயையும் வேட்டையாடுவோம்” என பஜ்ரங் தள் கும்பல் பத்திரிகைகளுக்கு செய்தியளித்துவிட்டு நடத்திய தாக்குதல் இது.

குறிப்பாக, என்.டி.டிவி., டைம்ஸ் நௌ, நியூஸ் 24 ஆகிய மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாகவே அருந்ததி ராயின் வீட்டின் முன் குவிந்துவிட்டனர்.  இதனைத் தாக்குதல் செய்தியை முதல் ஆளாக ஒளிபரப்பிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறாகப் பார்ப்பதா? இல்லை,  இந்துத்துவா கும்பலுக்கும் சில தேசிய செய்தி ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் காட்டும் சான்றாகப் பார்ப்பதா?  மைய அரசு, முன்னரே அறிவித்துவிட்டு நடந்த இத்தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன் மூலம், இவ்விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்படுவதாகக் கூறலாம்.

அருந்ததிராயின் வீட்டையும் அவரையும் தாக்க முயற்சித்த இந்துத்வ கும்பல்

டெல்லிக்கு அடுத்து, ஒரிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நகரில் நடந்த காட்டு வேட்டைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அருந்ததி ராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிய இந்துத்துவா கும்பல், அக்கருத்தரங்கை நடத்தவிடாமல் ரகளையிலும் இறங்கியது.  இவ்வன்முறையில் ஐந்து பேர் காயமுற்றனர்.  அருந்ததி ராய், இந்துத்துவா கும்பலின் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாததோடு, காஷ்மீர் பிரச்சினை குறித்து தான் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற முடியாது என்றும் அறிவித்திருக்கிறார்.

ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகரில் காஷ்மீர் பிரச்சினை குறித்த நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு, உரையாற்றத் தொடங்கும் முன்பே ரகளையில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பல், அவரை நெட்டித் தள்ளி வன்முறையில் இறங்கியது.  “அவரின் அரசியல் கருத்துக்களுக்காகத்தான் மிர்வாயிஸ் தாக்கப்பட்டதாக’’க் கூறி, இந்துத்துவா கும்பலின் இந்த வன்முறையை விசிறிவிட்டுள்ளார், காங்கிரசின் கூட்டாளியும் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஒமர் பாரூக்.

அருந்ததி ராயும், சையத் ஷா கீலானியும், மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் காஷ்மீர் பிரச்சினை குறித்து என்ன பேசி வருகிறார்களோ, அதுதான் காஷ்மீர் மக்களின் பொதுக் கருத்தாகும்.  இந்திய அரசின் காஷ்மீர் கொள்கைக்கு எதிரான இக்கருத்தைப் பேசுபவர்கள் மீது வழக்கு பாயும்; தாக்குதல் தொடுக்கப்படும் என ஒருபுறம் காட்டிவிட்டு, இன்னொருபுறம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கருத்துக் கேட்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது, காங்கிரசு கும்பல்.

இந்துத்துவா கும்பலோ, முசுலீம் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்ப்பதில், தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதில் காங்கிரசைவிடத் தனக்குத்தான் அதிக அக்கறை உண்டு எனக் காட்டிக் கொள்ள தற்பொழுது காஷ்மீர் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறது.  அருந்ததி ராயின் பேச்சை மட்டுமல்ல, காங்கிரசு அரசு அமைத்துள்ள மூவர் குழுவின் சில்லறை ஆலோசனைகளை எதிர்ப்பதன் மூலமும்; அருந்ததி ராயைக் கைது செய்யாத காங்கிரசு அரசு, அஜ்மீர் வெடிகுண்டு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைக் கைது செய்வதாகப் புலம்புவதன் மூலமும் தனது இந்து-இந்திய தேசிய வெறியைக் காட்டி வருகிறது, அக்கும்பல்.
_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

  1. அருந்ததி ராய் , காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு ! | வினவு!…

    அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது…

  2. //இக்கருத்தரங்கைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு அரங்கத்தில் நுழைந்திருந்த இந்துத்துவா பாசிசக் கும்பல்//

    அதாவது, பிரிவினைக்கு ஒத்துக்கிட்டா நல்லவங்க. இல்லன்னா பாசிசக் கும்பல். சூப்பரப்பு…

    தண்டேவடாவில் போலீஸையும் மக்களையும் கொல்பவர்கள் தோழர்கள்!!! ம்ம்…பலே பலே…

    • //தண்டேவடாவில் மக்களையும் கொல்பவர்கள் தோழர்கள்!!! ம்ம்…பலே பலே…//

      மக்களை கொல்பவர்கள் பெயர் போலீசு, சல்வாஜூடும், பன்னாட்டு கம்பனிகள், அரசியல்வாதிகள் என்று பெயர் திரு சீனு அவர்களே.

      • //அதாவது, பிரிவினைக்கு ஒத்துக்கிட்டா நல்லவங்க. இல்லன்னா பாசிசக் கும்பல். சூப்பரப்பு…//

        கட்டுரையில் இப்படி எங்கேயவது சொல்லியிருக்கா? வேறெங்கோ போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கு இட்டுவிட்டீர்களா சீனு? எதுவும் மண்டைக்குழப்பம்?

        • //பாசிசக் கும்பல்//

          ஏன் ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாத கும்பலை பாசிசக் கும்பல் என்று சொல்லக் கூடாது திரு சீனு அவர்களே?

        • //அப்ப…நீங்க மக்களா காக்கிறவங்கனு சொல்லுங்க…அடடா!!//

          உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா? இல்லை உங்க காதுல எல்லாமே கொஞ்சம் டுவிஸ்ட் ஆகித்தான் விழுமா? இல்லை உங்க மண்டைச்சுரப்பின் சிந்தனைப் பாணி இப்படி கோணலானதுதானா?

          இங்கு கட்டுரையிலோ அல்லது நானோ சொல்லாத எதையோ சொல்லியது போல குறிப்பிட்டு பேசுவதன் நோக்கம் என்ன?

        • /போங்கப்பு…//

          எங்கே போவது? எங்கிருந்து போவது? எப்படி போவது? திரு சீனு அவர்களே..

    • //இக்கருத்தரங்கைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு அரங்கத்தில் நுழைந்திருந்த இந்துத்துவா பாசிசக் கும்பல்//

      அவர்கள் பாசிச கும்பல் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சான்று.கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் வன்முறையால் எதிர்கொள்வது பாசிசமன்றி வேறென்ன.

      கசுமீர் மக்களின் தன்னிலை தேர்வுரிமைக்கான (right to self determination) போராட்டத்தில் நியாயம் கசுமீர் மக்களின் பக்கம்தான் உள்ளது.பாகிசுதானின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றும் வேடத்தில் கசுமீருக்குள் நுழைந்த இந்தியா கசுமீர் மன்னரின் இக்கட்டான நிலையை பயன்படுத்தி கசுமீரை தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து தொடர்ந்து அந்த மக்களுக்கு துரோகம் செய்து வந்துள்ளது.ஐ.நா.விடம் அளித்த உறுதிமொழிகள்,கசுமீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்ட இந்திய ஆளும் கும்பல் கசுமீர் மக்களின் நியாயமான கருத்துகளுக்கு முகம் கொடுக்க முடியாது என்பதே உண்மை.

      இந்தியா,பாகிசுதான் என்ற இரண்டு ஆக்கிரமிப்பாளர்களும் கசுமீரை விட்டு வெளியேற வேண்டும்.அந்நாட்டின் நிலையை கசுமீர் மக்களே தீர்மானிக்க வேண்டும்.

      • மிர்வய்ஸ் உமரை எதிர்ப்பது காஷ்மீர் பண்டிட்கள் தானே. இது அவர்கள் “உள்ளூர்” பிரச்சனை. ஜார்ஜ் புஷ் தொடங்கி, சர்தாரி வரை மக்களுக்கு பிடிக்காத தலைவர்கள் மீது செருப்பு வீசுவதும் முட்டை அடிப்பதும் சகஜமப்பா!

        http://www.mid-day.com/news/2010/dec/011210-News-Delhi-Hurriyat-leader-Kashmiri-Pandits-right-wing-activists-Mirwaiz-Purana-Qila-Road.htm?hk

        • செருப்படி வாங்கிய புசு,ப.சி.,அத்வானி வரிசையை சேர்ந்தவரல்லர் மிர்வாயசு உமர் பரூக். அவர்கள் மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடியவர்கள்.இவரோ ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக போராடுவதால் அரசின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகுபவர்.கசுமீர் பண்டிட்களின் வெளியேற்றத்தில் எந்த பங்கும் இல்லாதவர். உண்மையில் விடுதலை பெற்ற கசுமீருக்கு (விடுதலைக்கு முன்னரும் கூட)பண்டிட்கள் திரும்பி வந்து அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் கசுமீர் தலைவர்களுள் ஒருவர்.அவர் மீதான நேரடி வன்முறை தாக்குதல் (பார்க்க.சுட்டி) சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

          http://www.hindu.com/2010/11/26/stories/2010112659540100.htm

  3. களவானி(காவி)பயல்களும்.திருட்டுப்பயல்களும் கள்ளக்கூட்டு வைக்கிறாங்கே.நல்லவங்க ஒன்னுசேரமாட்டுறாங்களே?

    • சீனுவுக்கு இங்கிலீசாவது படிக்க வரும் (என்ன இருந்தாலும் ‘தேசப் பற்று’ள்ளவர் ஆயிற்றே அதனால் தமிழைத் தவிர எல்லா லாங்க்வேஜும் நல்லாத் தெரிஞ்சிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கைதான்) என்ற நம்பிக்கையில் ஹிமன்ஸு குமாரின் கடிதத்தை கொடுத்துள்ளேன்.. என்ன செய்யிறான்னு பாப்போம்…

  4. காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரித்து யார் பேசினாலும் தேச விரோதக் குற்றமாகப் பார்க்கும் இந்திய அரசு, சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையே அம்மக்களின் பொதுக் கருத்தாக இருக்கும் போது அம்மக்களையும் தேச விரோதக் கும்பல் என்று அறிவிக்குமா? அல்லது இந்துத்துவா கும்பல்கள்தான் அறிவிப்பார்களா? வரலாற்றுப் பூர்வ நியாத்தைக் கொண்டிருக்கும் அம்மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் இப்பாசிச கும்பலுக்கு, இந்தியாவின் அனைத்து தேசிய இன மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் போதுதான் காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அமையும். பதவிச் சண்டைக்கு மட்டும் ‘கொள்கை’ வேறுபாடு; இந்து- இந்திய தேசத்தை தூக்கி நிறுத்துவதில் கொள்கை ஒற்றுமை என்று பா.ஜ.க., காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனத்தை மீண்டும் ஒரு முறை தோலுறுத்திக் காட்டியிருக்கிறது டில்லியில் நடந்த காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்தரங்க நிகழ்வு சம்பவம்.

  5. angu irukkum hindukalaiyum, budhhargalaiyum viratti vittu suya nirnayam pannuvaangalam….. arumai arumai…. yen cheena, mattrum pakistan aakiramitha kashmirai andha makkalidam innum oppadaikavillai? asuran, manikandan edhavathu muyarchi seydhu mudhali andha kashmirai thani naadaga arivikka vendiathuthaanae!

    • நீசன்,
      காஷ்மீர், காஷ்மீர் மக்களுக்கு சொந்தம் என்பதை உறுதி செய்வதற்கான போராட்டம்தான் அம்மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டம். இதை மற்றவர்கள் யாரும் பண்ண முடியாது.

      • காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் மக்களுக்கே! ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநில மக்களுக்கு சொந்தமே!
        அனைத்து மாநிலங்களும் இந்திய மக்களுக்கே! காஷ்மீர் உள்பட!
        பிராந்திய உணர்வுகளை ஆதரித்து, வளர்த்து, நாட்டை பிரிவினை செய்யும் உங்கள் ஆசை, சோவியத் பலகூறுகளாக உடைந்ததின், பிரதிபலிப்பே!

        • //சோவியத் பலகூறுகளாக உடைந்ததின், பிரதிபலிப்பே!//
          அங்கு(சோவியத்தில்)பிரிந்து போகும் உரிமையளித்துத் தானே இணைத்துக்கொள்ளப்பட்டன.

    • பௌத்தர்கள் யாரும் கசுமீரை விட்டு வெளியேறவில்லை.கசுமீர் பண்டிட்கள் மட்டுமே வெளியேறி உள்ளனர்.பண்டிட்கள் வெளியேறியதில் தீவிரவாதிகளின் பங்கை விட அப்போதைய கசுமீர் ஆளுநர் பாசிச வெறி பிடித்த சக்மோகனின் பங்கு கூடுதலானது.

      பண்டிட்கள் வெளியேறியது 90-களில்தான்.50-களிலேயே ஐ.நா.வுக்கு அளித்த உறுதிமொழியின்படி பொது வாக்கெடுப்பை இந்திய ஆட்சியாளர்கள் நடத்தாமல் அந்த மக்களை ஏமாற்றியது நயவஞ்சகமில்லையா.

      • UN sonnadhu padithaan thideernu nadapeengala? UN than america voda adi varudiaache….. modhalil kashmir kodi pakistan matrum china aakramitha nilangalil parakka ellarum poraduvom!
        ayya veliyeravillai, nilathai pudungi kondu virati vittargal yenbathu thaan kasapana unmai!

        • ஐ.நா.அமெரிக்காவின் ஏவலாள்தான்.அதில் ஐயம் கொண்டோர் யாருமிலர்.

          எந்த ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியா முயற்சித்து வருகிறதோ அந்த அவையின் தீர்மானத்தின்படிதான் வாக்கெடுப்பு நடத்த கோருகிறார்கள் கசுமீர் மக்கள்.நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஆசைப்படும் இந்தியா அந்த அவையின் தீர்மானத்தை மதித்து நடக்க கோருவதில் என்ன தவறு.அந்த ஐ.நா.வுக்கு கசுமீர் பிரச்னையை கொண்டு போனது இந்தியாதான்.ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கு பலமுறை அறிவித்ததும் இந்தியாதான்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதானே நேர்மையான செயல்.

          \\modhalil kashmir kodi pakistan matrum china aakramitha nilangalil parakka ellarum poraduvom!//
          கசுமீர் விடுவிக்கப்பட வேண்டிய நாடு என்று ஒப்புக்கொண்டு அதற்காக போராடவும் அழைக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.இதைத்தான் எனது முந்தைய பின்னூட்டங்களில் நானும் எழுதி இருக்கிறேன்.ஆக்கிரமிப்பாளர்கள் என்ற வரையறைக்குள் வந்தபின் நமது நாட்டின் ஆட்சியாளர்கள் என்பதற்காக ஆதரிக்காமல் இந்திய ஆக்கிரமிப்பையும் சேர்த்தே நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

          \\ayya veliyeravillai, nilathai pudungi kondu virati vittargal yenbathu thaan kasapana unmai!//
          பண்டிட்கள் வெளியேறினார்களா,விரட்டப்பட்டார்களா என்பதை டைம்சு ஆப் இந்தியாவில் வெளியான புகழ் பெற்ற இதழியலாளர் குல்திப் நய்யாரின் கட்டுரையை படித்துவிட்டு முடிவு செய்யலாம்.அதிலிருந்து சிறு பகுதி மேற்கோள்.
          The plight of the Pandits has only worsened because they have been
          used as pawns in the game which the various rulers and different
          political formations have played in Srinagar and New Delhi. Mr
          Jagmohan, now a BJP MP, encouraged the Pandits to leave the Valley
          when he became governor of the state for the second time. Jammu
          and Kashmir Chief Minister Farooq Abdullah has confirmed this. Mr
          Jagmohan gave the Pandits air tickets, provided them with transport
          and arranged financial and other help to ensure their journey to
          Jammu. It was as if he wanted them to be out of the way to be able
          to deal with militants. Did he want to communalise the situation,
          plan to use the Pandits one day against the Hurriyat’s demand for
          independence? Whatever the reason, his rough methods provided a
          spark to an already combustible situation.
          Not many Pandits were willing to leave their homes, hearths and
          neighbourhoods, where they had lived for years with the Kashmiri
          Muslims. But most of them were assured that they could return after
          the situation was brought under control. So good was their equation
          with their Muslim neighbours that they entrusted their lands and
          shops to them. Pandits in government service readily used the
          opportunity to get transferred to Jammu. At no time did the Pandits
          realise that their departure from the Valley would end the
          prospects of their early return .
          கட்டுரைக்கான சுட்டி.
          http://www.hvk.org/articles/0497/0151.html

          மேலும் விவரங்களுக்கு கசுமீர் டைம்சு ஏட்டின் செய்தியாளர் அக்சய் ஆசாத் பிரபல குடிஉரிமை போராளியும் எழுத்தாளருமான கௌதம் நவ்லக-விடம் நடத்திய நேர்காணலில் இருந்து சிறுபகுதி.

          Migration of Kashmiri Pandits was very unfortunate and onus of migration lies on Kashmiri majority population but not completely. Responsibility of migration of Kashmiri Pandits also lies on Indian state which inspite of providing assistance to Kashmiris in valley provide vehicles to leave the valley. Majority community of Kashmir had the responsibility to provide security to minorities during 90s but they failed to accomplish that responsibility. Many families of Sikhs and Hindus are still residing in Kashmir but they were not forced to migrate when militancy was at its peak in Kashmir. Kashmiri separatist leaders still consider Kashmiri Pandits as the integral part of their culture and visited Kashmiri pandits camps in Jammu.

          முழுமையான நேர்காணலுக்கான சுட்டி.
          http://www.kashmirawareness.org/Item.aspx?id=4419

    • பாகிசுதானின் ஆக்கிரமிப்பில் உள்ள கசுமீர் பகுதியையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த காசுமீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதுதான் ஐ.நா.முன்வைத்திருக்கும் தீர்வு.அத்தகைய வாக்கெடுப்பைதான் கசுமீர் மக்கள் கோருகிறார்கள்.கசுமீரிகளின் விடுதலை போராட்டத்தை ஆதரிப்பவர்கள் பாக்.ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறார்கள் என்பது கற்பனையான குற்றச்சாட்டு.இந்தியா பாகிசுதான் ஆகிய இரு நாடுகளுமே கசுமீரை பொறுத்தவரை ஆக்கிரமிப்பாளர்களே.

      • திப்பு சார்!

        காஷ்மீரின் சில பகுதிகளை சீனா தட்சணை பெற்றுள்ளதே! அதைப் பற்றி?

        • உண்மை.சீனாவும் பாகிசுத்தானும் இணைந்து இரு நாடுகளையும் இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலையை பாக்.ஆக்கிரமிப்பு கசுமீர் வழியாக அமைத்துள்ளன. ஒன்று பட்ட கசுமீர் விடுதலையை சாதிக்கும் பட்சத்தில் அந்த நாட்டுக்கே அந்த சாலை உரியதாகும்.

      • அது சுதந்திர காஷ்மீருக்கும் அதன் அண்டை நாடுகட்குமிடையிலான எல்லைப் பிரச்சனை.
        ஆங்கிலக் கொலனிய ஆட்சி போட்ட எல்லைகளை வைத்து எல்லை எதையும் விவாதிக்க இயலாது.
        ஆனல் சீனாவின் தேசிய இனங்களின் சுயநிர்ணயப் பிரச்சனையும் அங்கு ஓரு பங்கேற்கும்.

        இன்றைய காஷ்மீர் பிரச்சனை எல்லைத் தகராறு பற்றியதல்ல.
        இந்திய ஆக்கிரமிப்பும் அடக்குமுறையுமல்லவா பிரச்சனைகளாக உள்ளன.
        அதிலிருந்து கவனம் பிசக வேண்டியதில்லை.

  6. sudhandhira devi arundati ammayar pakistan sendra podhu vai pothi kondu irundhaar… angu kashmir makkal thaniaga irukka virumbukindranar yendru oru murai kooda koora villai. yen innum pakistan, china aakramitha kashmiril avargalin sudhanthira kodi parakka villai? appadiey tibet il oru suya nirnaya kuzhuva anupungappa…. inaya thedalayae thadai pannra naata serndhavanunga panathai vaangi nalla thaanpa koovarnunga!

  7. Why every muslims support pakistan ? Even they are worst in everything ?

    Why here so many muslims hide their name and talk so good for muslim based separatist group ?

    The same way like kashmir …Tamil nadu was ruled by different kingdoms with different culture …. can we split tamil nadu to separate country again ???? Can we conduct vote to ask people ??? This is kiddish right ?? they same way the kashmir too…

    When Kashmir collapse the whole india will collapse …example take Telungana case once central govt agreeed to give separate state for them…..all over india so many groups strated to ask separate state then only govt relaised its like a cards game if you touch one everything will fall….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க