மக்கள் தொடர்பு அதிகாரி, லயசன் ஆபீசர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் அதிகாரத் தரகர்கள், அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்; அதிகாரத் தரகர்கள் மூலமாகப் போனால்தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்குச் சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். அதிகாரத் தரகு வேலைக்கான செலவுகளை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் “அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகள்” என்று குறிப்பிடுகின்றன. முதலாளித்துவ அரசியலமைப்பு முறையின் பிரிக்க முடியாத அங்கம்தான் இந்த அதிகாரத் தரகர்கள். இத்தகைய அதிகாரத் தரகர்களில் ஒருவர்தான் நீரா ராடியா. குறிப்பாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களுக்கு உரிமங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை அதிகார வர்க்கத்துடன் பேசி முடித்துத் தரும் வேலைகளை இவர் செய்துள்ளார். இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவகாரமாகியுள்ளது.
2009-இல் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி, என்ன துறை ஒதுக்கப்படும், தொலைத்தொடர்பு அமைச்சர் நியமனத்தின் பின்னணியில் அம்பானியும் டாடாவும் எப்படி கா நகர்த்துகிறார்கள் என்ற விவரங்களும், நீரா ராடியா இதில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் அவரது தொலைபேசி உரையாடல்கள் நிரூபித்துக் காட்டுகின்றன. பத்மசிறீ விருது பெற்ற என்.டி.டிவி-யின் நிர்வாக ஆசிரியரான பர்கா தத், பிரபல பத்திரிகையாளரான வீர் சங்வி ஆகியோர் நீரா ராடியாவுடன் நடத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள், பத்திரிகையாளர்கள் எப்படி கார்ப்பரேட் தரகர்களாக உள்ளனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் கள்ளக்கூட்டுச் சேர்ந்து உருவாக்கும் செய்திகளே நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பிரபலமாக்கப்படுவதையும் இது நிரூபித்துக் காட்டுகிறது.
முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டுச் சில ஊடகங்களுக்கு கோடிகளை வாரியிறைத்ததன் விளைவாக, இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம் தரகுப் பெருமுதலாளியான டாடா, தனது நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளராக – அதிகாரத் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இரகசியமாகப் பதிவு செய்து, அலைக்கற்றை ஊழலுக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட விவகாரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் என்று சாடுகிறார். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகத் தனிநபர் உரிமையையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதால், நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் உரையாடியாதை ஊடகங்களில் வெளியிடுவது தன்னுடைய தனிநபர் உரிமையில் தலையிடும் மனித உரிமை மீறலாகும் என்று சீறுகிறார். அரசின் பொறுப்பிலுள்ள இந்த உரையாடல் பதிவுகளை வெளியே கசிய விட்டது யார், அல்லது யார் திருடினார்கள் என்பதைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். இதையொட்டி, உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் திரட்ட அரசே இத்தகைய அதிகாரத் தரகு நிறுவனங்களை அமர்த்திக் கொண்டது. அந்தத் தரகர்கள் மூலம் பல அந்நியக் கம்பெனிகள் கோடிகளை விழுங்கிக் கொள்ளையடிக்க அரசே உடந்தையாக நின்றுள்ளது. அது நியாயம் என்றால், அதே தரகு வேலையைச் செய்துள்ள நீரா ராடியா மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? இப்போது அமலாக்கப்பிரிவும் மையப்புலனாவுத் துறையும் நீரா ராடியாவிடம் விசாரிப்பதாக ஊடகங்கள் பரபரப்பூட்டினாலும், கொள்ளையடித்த முதலாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யவோ, தண்டிக்கவோ அடிப்படை ஏதாவது இருக்கிறதா? டாடா போன்ற தரகுப் பெருமுதலாளிகளின் பொதுக்கருத்துக்கு எதிராக அரசும் நீதித்துறையும் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணரும் என்று நம்பத்தான் முடியுமா?
__________________________________
– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
__________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- 2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
- ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!
- ஸ்பெக்ட்ரம் ஊழல் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்
- ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது !
- 60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?
நீரா ராடியா – அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள் !! | வினவு!…
அனில் அம்பானி, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டத்தன் விளைவாக தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது….
[…] This post was mentioned on Twitter by வினவு and sandanamullai, karthick. karthick said: RT @vinavu: அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!! https://www.vinavu.com/2010/12/08/nira-radia/ […]
மும்பையில் குண்டு வைத்தது வினவு கும்பல்தானே? எப்படிடா உங்களை இன்னும் என்கவுண்டரில் போடவில்லை.
ஓஓஓஓஓஒ……நீங்கள் வெறும் காமடிப் பீஸா……….
திறந்து இருக்கு மார்பு. தைரியம் இருந்தால் எவனும் வந்து சுடலாம் . அதற்க்கு பிறகு தெரியும் நாங்க எப்படி என்று ….
தினம் களம் காணும் எங்களிடம் தின்னைஎல் இருக்கும் நாய்க்கு தெரியாது
Dear Vinavu,
Please publish the conversations between Neera Radia and Dalit Icon Raja,Kanimozhi,Rajathi Ammal and Co.
Raja is the SURIYAN OF ALL TAMILIANS AND ESPECIALLY DALITS…
VAZHGAHA KALANGAR and CO
Hi Mr.Punjab Ravi,
Refer this link…. you can get few other links on same page…
http://www.openthemagazine.com/article/nation/some-telephone-conversations
பஞ்சாப் ரவி,
‘தலித்’ போர்வைக்குள் ‘ராசா’ ஒளிந்து கொள்வதன் நோக்கம் புரிகிறது.
ஆனால், நீங்கள் அப்படி அழுத்திக் கூறுவதில் உள்நோக்கம் எதுவும் உண்டா?
உண்மைத் தமிழன் அண்ணாச்சி இந்த் உரையாடல்களை தமிழில் வெளியிட்டுள்ளார்.
http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_9136.html
அண்ணாருக்கு நன்றிகள்.
நீரா ராடியா விவகாரம் உண்மையிலேயே அதிர்ச்சியான விஷயம்தான். அரசியலில் பதவிக்கு பேரம் பேசப்படுவது ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அதற்கும் புரோக்கர்கள் இருப்பார்கள் என இதுவரை யோசித்ததில்லை.
பங்கு சந்தை சூதாட்டத்தை அரசு வளர்த்ததுதான் இந்த விதமான ஊழலுக்கு வாயிலாக இருக்கிறது. 1990 களுக்கு பிறகு அரசியல் தரகர்கள் தங்கள் நிறுவனங்களுக்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்சம் குடுப்பதும் பேரம் பேசுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கில்லை. அனால் இப்போது ராசாவை மட்டும் குற்றவாளியாக காட்டுவது பார்ப்பன சதியே காரணம். சு சாமி செய்யும் ஒவ்வொரு வேலையும் தமிழனுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தி மு க ஆட்சியை கலைத்தது, சேது திட்டத்தை முடக்கியது போன்றது எல்லாம். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடா இவர் எவ்வளவு லஞ்சம் வாங்கினார் என்பது கொடுத்த கம்பெனிகளை விசாரித்தால் தெரியும். ராசா தலித் என்பதால்தான் வட நாட்டு பத்திரிக்கைகளும், பார்ப்பன பத்திரிக்கைகளும் ராசாவை கடித்து குதறுகின்றது. ராசா மீண்டும் மீண்டும் சட்டப்படியே நடந்துள்ளது என்று கூறுவது இந்த பங்கு சந்தை கூத்தையும், அரசு சொத்தை தனியாருக்கு விடுவதில் அரசு வகுத்த கொள்கையையும் தான். ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு நஷ்டம் 1 .76 லட்சம் கோடி என்றால், 1990 முதல் அரசு சொத்தை தனியாருக்கும் , வெளி நாட்டு கம்பெனிக்கும் விட்டதில் நஷ்டம் 2000 லட்சம் கோடியை நிச்சயம் தாண்டும். பெப்சிக்கு தண்ணீரை தாரை வார்த்தது, நவரத்தின நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்தது, பெட்ரோலிய எண்ணை வளங்களை ஆராயவும், அதை நிலத்தில் இருந்து எடுக்கவும் ரிலையன்சுக்கு கொடுத்தது போன்றவற்றை கூட்டி பாருங்கள் 2000 லட்சம் கோடியை தாண்டும். இந்திய நிச்சயம் ஏழை நாடல்ல ஏழைகளை உருவாக்கும் நாடு. அத்தனை மனித உழைப்பையும் திரட்டி லஞ்சமாகவும் நிறுவனங்களின் லாபமாகவும் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளன. வேலன்
முதலாளித்துவம் தனது இறுதி அத்தியாயத்தை எழுதிக் கொண்டு இருக்கின்றது. ஒவ்வொவொரு வர்க்கமும் தனது இருப்பினை தகக வைக்க போராடும் என்பதற்கு ஏற்ப முதலாளித்துவம் தனது இருப்பிற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதனால்தால், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கண்காணிப்பில் கொண்டுவருவதற்கான அனைத்து வேலைகளையும் (அடையாள எண் முதலானவை, ஆள்தூக்கி சட்டங்கள்) செய்து வருகின்றது.
புதுப் புது அதிகார உறுப்புகளை முதலாளித்துவம் எவ்வளவுதான் அறிமுகப்படுத்திக்கொண்டு, தன்னைத் தானே கழுவி சுத்தம் செய்துகொள்ள நினைத்தாலும் அது லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் பிறந்ததுதான் என்பதை அதுவே காட்டிக்கொடுத்துவிடும் என்பதற்கு அதிகாரத் தரகர்களின் தற்போதைய செயல்பாடுகள் நிரூபித்துக்காட்டிவிட்டன.