முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

-

நமக்கும் இந்த சிறுபத்திரிகைகாரவுகளுக்கும் எப்பவும் ஒத்துக்கிடாது பாத்துக்கிடுங்க! முன்னயாவது அப்பக்கைப்ப கொஞ்சமோ, நஞ்சமோ ஒருபாடு கிசுகிசு வெட்டுக இல்லாம வரும். ஊட்டி தளைய சிங்கம் மேட்டரு, குத்தாலத்துல அண்ணாச்சி விக்ரமாதித்யன் தண்ணியப் போட்டு பண்ணுண அலம்பல், ஜெயமோகன் யாரை அடிச்சாக, சாரு யாருகிட்ட அடிவாங்குனாகன்னு ஒரே ஜாலி ஜம்பர்தான். இவுகதான் சாகவரம் பெத்த இலக்கியம்னு எதை எதையோ சொல்லி பீலா விடுவாக. நம்மளக்க கேட்டா இவுகளோட கிசுகிசுதாதன் சாகாவரம் படைச்ச இலக்கயம்னு அந்த மகர நெடுங்குழைக்காதன் சத்தியமா சொல்லுவேன்.

ம்..ம்.. அதெல்லாம் ஒரு காலம். இப்ப பாத்தீகன்னா எல்லா கிசுகிசு சங்கதிகளையும் நெட்டுல சட்டுப்புட்டுனு எழுதி தள்ளுராகளா, அதுவும் பதிவுலகத்துல கீ போர்ட வச்சே டான்சாடுற நம்ம மொக்கைத் தம்பிமாரு இதுமாதிரியான நியூசெல்லாம் தினமும் ஊர் பூரா போன்ல கூப்ட்டு பத்த வச்சர்ராக. அதுல இருந்தே சிறு பத்திரிகைகள வாங்குறுத நிறுத்தி தொலைச்சாச்சு. பிறவு ஒவ்வொண்ணையும் 30 ரூபா, 50 ரூபா வாங்குறது தெண்டமுல்லா?

நேத்தைக்குத்தான் நம்ம கூட்டுக்காரவுக அவுகளும் என்னாட்டம் இலக்கியவியாதி சகவாசம் வச்சிருந்தவுகதான், இந்த மாசத்து உயிர்மைய கொடுத்தாக. என்னன்னு கொஞ்சம் மேஞ்சு பாத்தா, அடங்கொப்புறானே, என்னத்தைச் சொல்ல……!!!

ஆமா நைனா ஒவ்வொரு தபா நீ உயிர்மை வாங்கிக்கீறீயா, அதுல இன்னா ருக்கும்? அட்டையில மல்டி கலர் மாடுலேஷன். அதான்பா கருத்து கந்தசாமி டிசைன்! குற்றம், தேகம், வதை, இரவுன்னு என்னன்னமோ ராவா அட்ச்சு விடுவான். அப்பாலிகா தலையங்கம் பாத்தா மன்ஸ்ய புத்ரன் அண்ணாத்தே என்னமோ பயங்கரமா பொலிட்டிக்ஸ் பட்சவரு மேறி அவுத்து விடுவாறு, அப்பாலிக்கா நம்ம சாரு நைனா டப்பாகஞ்சிய சீம சாராய பாட்டில் ஊத்தி அட்ச மப்புல ஆறேழு பக்கத்துல சினிமா குனிமான்னு வாந்தி எடுப்பாரு, கொஞ்சம் அந்தாண்ட போனீன்னா இசை, அப்பால ஈரான் சினிமான்னு உடுப்பி அவியலாட்டம் உள்ள தள்ள ரொம்ப இம்சையா ருக்கும். புச்சா இன்னா பாத்தேன்னு கேக்குறீயளா…

மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா உயர்மையில இருந்து இந்த வருசம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க. என்னமோ போங்க, நம்ம கவி அம்பி மனுஷ்ய புத்திரனோட கம்பெனி இம்புட்டு பெருசா வளர்ந்து வருசத்துக்கு அறுபது புக்கு போடுறது சாதாரணமில்லிங்கோ; அப்படீன்னு தப்பா முடிவு செய்ஞ்சிராதீங்க சாமியோவ், கொஞ்சம் முழுசா படிச்சுபுட்டு ஒங்க கருத்த சொல்லுங்க.

முதல்ல பாத்தீகன்னா சுஜாதா நேர்காணல்னு ஒரு புத்தகம். அதுல கட்டிங் லைனா “ அவரது பரந்துபட்ட பன்முகத் தன்மை கொண்ட அக்கறைகளுக்கும் ஆளுமைக்கும் இன்னொரு சாட்சியம்” பளிச்சுனு போட்ருக்காக. ஏம்வே சங்க கால பெண்களை பேசிகிட்டு அப்படியே நைசா பாரிஸ் ஒயினைப் பத்தி பேசுனா அது பன்பட்டர்ஜாம் அக்கறையா? நல்லாருக்கு நைனா உங்க இலக்கணம்.

இந்த ஸ்ரீரங்கத்து பாப்பார ஐயங்காரு ஏதோ கம்யூட்டர பத்தி எழுதினாரு, கூடவே கதங்களயும் எழுதினாருங்கறதெல்லாம் இருக்கட்டும். அவரு ஏன் ஒரு லிபரல் பாயை பிடிச்சு தன்னோட புக் ரைட்ச கொடுத்துட்டு போகணும்? மத்யமர் கதைங்கள்ள இட ஒதுக்கீட்டை கேலி பண்ணி, பிராமண சங்கத்துல விருது வாங்கி, சங்க பரிவாரத்து ஜீக்களுக்கு நமஸ்காரம் போட்ட கையோட சலாம் அலைக்கும் பாய்னு புக் போட விட்டுருக்காருன்னா, அதுதாம்டே பார்ப்பன நரித்தந்திரம். சரி இதுக்காக நம்ம ம.புத்திரனை பாய்னு நினைச்சுக்காதீக. அவுக பாய் இல்ல பிசினஸ்மேன்.

இல்லேன்னா சுஜாதாவோட புக்குங்கள போட்டு, நைசா லைப்பரரிக்கு தள்ளி ஒரு பதிப்பக சாம்ராஜ்ஜியத்தையே உண்டாக்கிட்டாருல்லா, அதுதாம்டே பிசினஸ் தந்திரம். சரி இந்த பாய் எப்படி லைப்ரரி ஆர்டரு பிடிக்குராறு, எவனுக்காவது தெரியுமாடே?

போலே போக்கத்த மூதிகளா, இதுல என்ன இரகசியம் வேண்டிக் கிடக்கு? அப்படியே அந்த அறுபது நூலு நாயன்மாரு பட்டியலப்பாருடே…..

பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?

“பாம்படம்” கரிசல்பூமியின் நினைவுப் பதிவுகள்னு ஒரு புத்தக விளம்பரம். நம்ம தேவதையம்மா எழுதினது. என்ன எழுதியிருப்பாக? “பாம்படமாம் பாம்படம், விருது நகரு பாம்படம், தங்கம் தென்னரசு பாட்டியோட பாம்படம், லைப்ரரி ஆர்டருக்கான பாம்படம்,” இதுதாம்டே விசயம். அடுத்து பாத்தா லைப்ரரி ஆர்டர் தேவதையப்பத்தி மத்த பயபுள்ளக ஆகோ ஓகோன்னு எழுதுன ஐஸ் பேக்டரியவே ஒரு புக்கா போட்டுரக்கானுக, “தமிழச்சியின் பதிப்புலகம் – சில மதிப்பீடுகள்” என்னாமா யோசிக்கிறானுக,,, டெரரால இருக்கு…. அது சரிடே பதிவுலகத்துல இருக்குற ஒரிஜினல் தமிழச்சி இவுகதான்னு குழிம்பிக்கிடாதீங்கடே, நம்ம அக்கா பாரீசுல இருக்காக அவுக வேற…

சரிதானுங்க, லைப்ரரி ஆர்டரோட அடுத்த குல்சா வி.ஐ.பி யாருன்னு தெரியுமாங்கோ? அவருதான் நம்ம வி.சிறுத்தைகளோட எம்.எல்.ஏ இரவிக்குமார். அடிக்கடி கருணாநிதி ஐயாவோட பக்கத்துல நின்னு “இந்தப்பூனையும் பிசா சாப்பிடுமா”ங்குற கதியில போஸ் கொடுப்பாருங்க. அவிகளுக்கென்ன, இப்பதான் ரியல் எஸ்டேட், பஞ்சாயத்துன்னு லைஃப்புல நல்லா செட்டிலாகிட்டாருங்கண்ணா. தமிழ்நாட்டுல இருக்குற இலக்கியவியாதிங்க எல்லாம் கவர்ன்மெண்டு காரியங்கள சாதிக்கணும்னா நம்ம எம்.எல்.ஏவைத்தான் தொடர்பு கொள்றாங்களாம்… அந்த படிக்கு ஐயாவோட நாலு புக்கு ரிலீசாகுதாங்க…

அண்டை அயல் உலகம்“னு ஒரு புத்தகம். இது ஜூனியர் விகடன்ல வந்ததுன்னு நினைக்கிறேனுங்க. அத பாத்தீங்கன்னா ஃபுல்லா நம்ம இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கை என்னவோ அதயே ஏகப்பட்ட விவரங்களோட -அல்லாம் நெட்டுல சுட்டதுதாங்க – அடிச்சு விடுவாறு. இன்னைக்கு தமிழ்நாட்டுல பஞ்சாயத்து பண்றவங்க நாளைக்கு நீரா ராடியா அக்கா மாதிரி உலகத்துக்கே பண்ணனுங்குறதுக்கான டிரெயினிங்னு வச்சுக்கங்க. ஆக நம்ம எம்.எல்.ஏ புக்க போட்டுக்கிட்டா அவரு விட்டையோட மத்த விட்டைங்களையும் லைப்ரரிக்கு தள்ளிரலாங்குறதுதான் ஹமீது பாயோட திட்டம். புரிஞ்சுதுங்களா?

ஒரு காலத்துல இவுங்க எல்லாம் ஒரு கூரூப்பாத்தான் அலைஞ்சாங்க. எம்.எல்.ஏ அண்ணன் சேரிப்புயல் கட்சியில சேர்ரதற்கு முன்னாடி காலச்சுவடு அக்ரகாரத்துல நெய் பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருந்தாக. இப்போ ஒரு சம்மர்சால்ட் போட்டு கலைஞர் ஐயா வூட்டுக் டிகிரி காஃபி குடிக்கிறாங்கன்னா இந்த வளர்ச்சியை உயிர்மை பயன்படுத்தற மாதிரி காலச்சுவடு பயன்படுத்த முடியலைங்க.. அது தனிக்கதை…

இப்ப இந்த அறுபது நூலு நாயன்மாருங்கள்ள சிலர மட்டும் பாப்போம்..

இதுல முத நாயன்மாரு நம்ம சாரு மாமா.. மாமுவோட ஏழு புக்ஸ் இந்த வருடம் ரீலீசாம். இதுல 95 பர்சண்டேஜ் இந்த ஆண்டுல எழுதிக்கீறாராம். என்னா நைனா இது என்ன கட்டிங் மேட்டரா, பர்சண்டேஜ் கணக்கு கொடுத்துகினு…

இதுல முத நூலு தேகம்னு ஏதோ வதை நூலாம். சில பேரு அத சதை நூலுன்னு வியாக்கியானம் கொடுக்குறான். ஓசியில படிச்ச நம்ம தோஸ்த்துகிட்ட கேட்டா அல்லாம் குல்சா மேட்டராம். என்னபா இது அநியாயமா கீது? குண்டியடிச்சான், குஞ்ச ஆட்டுனான், நாக்க போட்டான்னு எழுதுனா அது உலக இலக்கியமா? நெட்டுல மூணு எக்ச போட்டா குல்சா மேட்டரெல்லாம் ஜல்சாவா கொட்டிகினு இருக்கும். இத ஒரு நாவலுன்னு போட்டு பங்ஷன் நடத்தி அதை நாப்பத்திநாலு வெட்டி பாய்ஸ் விமர்சனும்னு போட்டு… படுத்துராங்கப்பா….

செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!

அடுத்த புக்க பாத்தா அது நித்யானந்தாவோட அல்சா மேட்டரு.. இந்த சாமியத்தான் நம்ம நைனா ஒரு காலத்துல கும்பிட்டுகினு, அதயும் போட்டோ புடிச்சு போட்டு பி.ஆர்.ஓ வேல பாத்துகினு இருந்தாரு. அப்பாலிக்கா ரஞ்சிதா சீன் வந்துச்சா, உடனே நைனா நல்ல புள்ளயாட்டம் கூட்டத்தோட கூட்டமா குன்சா தர்ம அடி போட்டு எஸ்ஸாயிட்டாரு. நாஸ்டாவுல உப்ப போட்டு தின்னா இந்த நைனா இப்பிடி செய்யுமா?

சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.

கனவுகளின் நடனம்” இது நைனாவோட சினிமா புக்காம். நைனா சினிமாவப்பத்தி எழுதலேன்னு எந்த குயந்தை அழுதுச்சு? இந்த டிஜிட்டல் குப்பைங்கள புக்கா போடுறான்னா என்னா தைரியம்? இதுபோக நைனா எழுதுன அஜால் குஜால் இலக்கிய கிசுகிசுங்க எல்லாம் மூணு புக்சா வந்துருச்சாம். கனிமொழி வந்து காமராஜ் ஹால்ல பேசியாச்சா, இத வச்சே ஹமீது பாய் அல்லா புக்கையும் லைப்பரரிக்கு தள்ளிருவாரு…இனி இன்டருநெட்டுல பாக்க முடியாதவனெல்லாம் நைனா புக்க லைப்ரரியில படிச்சு பரலோகம் போவப் போறான். சாவுங்கப்பா…

ஸ்பெக்ட்ரல் ஊழல்ல லம்பா அடிச்சா கையோட கனி அக்கா காமராசர் ஹால்ல நைனா சாருவோட நட்ப பத்தி பேசுதுன்னா, என்னாத்தச் சொல்ல? அன்னிக்கு அங்கன சம்சா, காஃபிய முழுங்குன ஒரு பயலுக்கும் அக்காவோட ஊழல் கதக்கு ஒரு ஞாயத்தை கேக்கணும்னு தோணலையே?

அப்பால பாத்தா நம்ம எஸ்.ராவோட “துயில்” நாவல். இதுக்கு கட்டிங் லைனா என்னா கொடுத்துகிறான்னா, ” மனித உடல் என்னும் மகத்தான பிரபஞ்சத்தில் நிகழும் எண்ணற்ற விசித்திரங்களைப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்”……

ஏம் வே எஸ்.ரா? இது உமக்கே ரொம்ப ஓவரா இல்லையா வே? மனித உடல்ல என்ன எழுவு விசித்தரத்த கண்டீரு? கக்கா, ஒன்னுக்கு, சளி, எலும்பு, தோலு, இதுதாம்வே எல்லாத்துக்கும் இருக்கு? இதுல ஆம்பளயாளுகன்னா விந்து, பொம்பள ஆளுகன்னா மென்சஸ்னு இதுல என்ன எழவுயா பிரபஞ்ச ரகசியம் இருக்கு? நீரு ஆ.விகடனுல தொடர் எழுனங்கறதுக்காக வீட்டுக்கு விருந்தினர் வந்தா சிரிக்கணும், தேத்தண்ணி கொடுக்கணும்னு காலனாவுக்கு தேறாததையெல்லாம் எழுதினீரு. அந்த கணக்கே இன்னும் முடியலேன்னா பாத்தா அதுக்குள்ள ஒரு நாவல எழுதிட்டீரு. நீரு எழுதுன வசனத்தையெல்லாம் பாலா குப்பைன்னு தூக்கி எறியிதாருன்னு சொல்லுதாக, உண்மையாவே?

எழுத்துங்குறது ஒரு புள்ளத்தாச்சி வலியோட பிரசவம் பாத்து குழந்தைய தர்ரது மாதிரி. அதை பிளாஸ்டிக் பொம்மை மாதிரி தயாரிச்சா அதுல என்னவே விசித்திர வெங்காயம் இருக்கும்?

சரி அடுத்த மேட்டர பாப்போம்.

இந்த அறுபது நூலு நாயன்மாருல்ல இந்த வாட்டி மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமா? ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்னு ஒரு புத்தகம். 944 பக்கமாம். 600 ரூபாய் விலையாம். முன்னாடி பதிஞ்சா 450 ரூபாயாம். இதுல அண்ணாச்சி மத்த தம்பிமார் 24 பேருக்கு எழுதின கடுதாசிங்க தொகுத்திருக்காங்களாம். இதுக்கு கட்டிங் மேட்டரா கரிசல் காட்டு செக்ஸ் தாத்தா கி.ரா எழுதுன முன்னுரையில இருந்து போட்டுருக்காக…..

” அவருடைய ஒரு கடிதத்தின் முடிப்பு இப்படி இருக்கும்….” ” என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லாருமாக நேற்றுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். தங்கள் அண்ணியும் குற்றாலமும் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிருக்கிறார்கள். தங்கம் தென்காசி. ஆகவே நான் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சிவமே என்றிருக்கிறேன். பலராமும் துணைக்கு இருக்கிறார். அருவிச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.3.0″

இதுமாதிரி 944 பக்கத்திலும் இருக்குதுன்னா அட கொலைகாரப் பாவிகளா, இந்த கருமாந்திரத்தை புக்கா போடுறதுக்கு எத்தனை ரீம் மேப்லித்தோ பேப்பர், அந்த பேப்பரை தயாரிக்கிறதுக்கு எத்தனை மரத்தை வெட்டி அழிச்சாங்களோ! உயிர்மை பதிப்பகம் காடுகள அழிக்குதுன்னு இப்பவாச்சும் விளங்குதா ஆக்கங்கெட்ட மூதிகளா?

டி.கே.சிக்கு ஏதோ அரசு குமாஸ்தா வேலைக்கு இன்டர்வியூ வந்துதாம். அன்னிக்கு காலையில அண்ணாச்சி கிளம்பும்போது குறுக்க பூனை ஏதோ வந்துச்சுன்னு கேன்சல் பண்ணிட்டராம். அவரு பெரிய ஜமீன்ங்கிறதுன்னால மாளிகை வீடு, தாமிரபரணி சோறு, அவியல்னு உபச்சாரம் பலமா இருக்கும். தமிழ்நாட்டு இலக்கியவியாதிகளை கூப்புட்டு தங்க வச்சு பேசி அழுகு பாத்தே இந்த மனுசன் காலத்தை ஓட்டியருக்காரு. அந்த பூனை மட்டும் அன்னிக்கு வரலேன்னா இந்த 900 பக்கம், ஏகப்பட்ட மரங்க எல்லாத்தையும் காப்பாத்தியிருக்கலாம்.

எங்கூருக்காரகுன்னு பாத்தா மானத்த கப்பலேத்துராரே? ஏலேய் காலையில மூணு மணிக்கும் நிசப்தமாத்தாம்டே இருக்கும், அருவின்னா சத்தம் இருக்காதாடே…இதையெல்லாம் ஒரு பெருசு கடிதம் எழுதி அதப்போய் புக்கா போடுறான்னா இந்த பாய்க்கு என்னா தைரியம்? இனி இந்த எழவும் லைப்ரரி ஆர்டருங்குற பேருல மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு தமிழ்நாடு முழுக்க போகப்போவுது..

இதுல உங்களுக்கு ஒரு எக்ஸ்குளூசிவ் மேட்டரு ஒன்னு சொல்லுதேன், யாருகிட்டேயும் சொல்லாதீங்க.. இந்த டி.கே.சி பேரன்ங்கள்ள ஒருத்தன் நம்ம கூட்டுக்காரனோட ஆபிசிலதான் வேல பாக்கனாம். அதுல என்ன விசேசம்னா அந்த பயபுள்ளைக்கு தமிழே படிக்க தெரியாதாம்… ஆக தமிழுக்கு தொண்டு ஆத்துன பெரிசு பரம்பரைக்கே தமிழ் தெரியாத போது அந்த பெருசு அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…

இந்த புக்ஃபேருக்கு வாசல்லேயே காத்துக்கிடந்து எந்த பயபுள்ளையாவது இந்த புக்க வாங்கிட்டு வந்தீகன்னா புடிச்சு கடிச்சு வக்கப்போறேன், அம்புட்டு கொலைவெறியில இருக்கேன்…..

சரி இந்த பெருசு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுன கரிசல் செக்ஸ் தாத்தா கி.ரா இருக்காருல்ல… அவருக்கு மத்த இலக்கியவியாதிமாரு எழுதுன கடிதங்களையும் புக்கா கொண்டு வாராகளாம்… அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!

அடுத்து பாத்தீகன்னா நம்ம ஃபீரிலேன்சு பத்திரிகையாளர் மணாவோட புக்காம். என்னண்டு பாத்தா… “கமல்ஹாசன்: நம்காலத்து நாயகன்” ண்டு தலைப்பு போட்டுருக்கான். கமலஹாசன் நாயகனில்ல, வில்லன்னு எந்த கபோதி சொன்னான்? இதுல கமலைப் பத்தி பிரபல ஆளுமைங் எழுதுன பதிவுகளும் போட்டாவும் வருதாம்.

திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை பிரஸ்ஸூங்களுக்கு போனா தெருவுக்கு ஒரு ரஜனி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜித் ரசிகன்னு பிரிண்டாகுறதை பாக்கலாம். அதுல இல்லாத பதிவா, போட்டாவா…ஏம்டே இப்படி ஊரை ஏமாத்துரீக….நம்ம பாய் ஏற்கனவே “உன்னைப் போல ஒருவனில்” ஒரு பாட்டு எழுதுனத வச்சு கமலை ஒரு ஏகாந்த யோகியாக சித்தரிச்சு பரவசமான பார்ட்டி. அதுக்கு நன்றிக்கடன்தாம்டே இந்த புக்கு….

இதுக்கு அடுத்தாப்ல நம்ம தத்துவ அறிஞர் யமுனா ராஜேந்திரனோட மூணு புக்கு போட்டுருக்காக.. இதுல புரட்சி, உலக சினிமா, ஆவணப்படம்னு டைட்டிலெல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா அண்ணாத்தே எது எழுதுனாலும் காசியில ஆரம்பிச்சு கன்யாகுமாரி வரை இழுத்து இழுத்து பேசியே கொல்வாரே… முன்ன ஒரு தடவை உயிர்மையில பிழை திருத்தும் வேலை செய்யுற ஒரு நண்பரைப் பாத்தேன்.. அப்பதான் அவரு சொன்னாரு, “யமுனா ராஜேந்திரன் கட்டுரைகளை திருத்தி எழுதுற துக்கத்துக்குகூட மனுஷ்ய புத்திரன் சம்பளம் போறவே போறாது”ன்னு.. இந்த வாட்டி இந்த மூணுபுக்குக்கும் யாரோட லங்கோடு கிழிஞ்சதோ தெரியல..அவுகளுக்கு நம்ம அனுதாபங்களையாவது தெரிவிச்சுக்கிடுவோம்.

தமிழக மேலவை” ங்குற தலைப்புல கே.எஸ்.இராதாகிருஷ்ணன் புக்கு வருதாம். இது சத்தியாம லைப்புர்ரி ஆர்டருக்கான புத்தகம். அண்ணாத்தேயும் தி.மு.கவுல முக்கிய தலைங்குறதால பாய் இவர வச்சு வருசத்துக்கு ஐஞ்சு புக்காவது போடுவாறு. இனி “புதிய சட்ட மன்றம் கட்டிய கதை, மு.கவின் மாமல்லபுர விஜயம், அழகிரியின் டெல்லி வாசம்னு” புது புது புக்குங்க வரும். இதுகளையெல்லாம் வாசிக்கிறதுக்கு தமிழ்நாடு எத்தனை கொடுத்து வச்சுருக்கணும்!!!

வா.மு.கோமுங்கறவரோட இரண்டு நாவலும், ஒரு சிறுகதையும் வருதாம். இவரு யாருன்னு விசாரிச்சா நம்ம நைனா சாருவே இவர தன்னோட சீடன்னு அறிவிச்சிருக்கராம்ல. அப்படின்னா இவரும் ஜல்சா மேட்டரு ரைட்டரா, காலம் ரொம்ப கெட்டுப் போச்சு, வேற என்னத்தைச் சொல்ல?

அப்பறும் பழமொழி, கிராமம், விளையாட்டு, சாப்பாடு ன்னு வெரைட்டியான நூல்கள். ஒரு காலத்துல இதுங்களயெல்லாம் மணிமேகலைப் பிரசுரத்துலதான் பாப்போம்.. இப்ப உயிர்மையிலும் பாக்கலாம்.

வெள்ளைப் பல்லி விவகாரம்” என்ற தலைப்பில் லஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுப்பு வருதாம். இந்த அண்ணன் யார்? ஒரு  காலத்துல மனுஷ்ய புத்திரன், கண்ணனோட காலச்சுவடு ஆசிரியர் குழுவுல இருந்தவர். தன்னோட வாழ்க்கையை மனுஷ்ய புத்திரன் பாழாக்கிட்டாருன்னு சொன்னவரு. இப்ப பாழாக்குனவரு புண்ணியத்துல புக்க கொண்டு வராறு.. இவனுங்க ஏன் அடிச்சுக்குறான், எப்படி சேந்துக்குறான்ன்னு ஏதாச்சும் புரியுதாடே?

விமலாதித்த மாமல்லன் கதைகள்” இது ஒரு சிறுகதை புக்காம். இவரும் கூட பிளாகுலயும், பஸ்சுலயும், டவிட்டர்லயும் என்னெல்லாமோ எழுதிப் பாக்குறாரு, ஒன்னும் களை கட்ட மாட்டேங்குது. இவரு மாமா சாருவை  திட்டிகிடந்த்தை பாத்து பீதியான நம்ம மொக்கைத் தம்பிமாறுங்க ஜெயமோகனுக்கு எதிரா பாய இவருக்கு கொம்பையும் சீவி மச்சி சாருன்னு பட்டத்தையும் வச்சி அவர்கையில ஒரு குச்சி ஐச கொடுத்திட்டாகளாம்… சரி இருக்கட்டும். மச்சி சாரு 83ல போட்ட புக்கே இன்னும் விக்காம இருக்காம். அதையே பதிவுலகத்துல ஃபிரியாக கொடுக்குறதுக்கு மச்சி சாரு ததிங்கிணத்தோம் போடுறாரு.. இந்த இலட்சணத்துல இவரு கதைங்க அல்லாம் ஒரே தொகுப்பா வருதுன்னா என்னா அர்த்தம்?

அதுல காமடி என்னன்னா இந்த மச்சி சாருவோட வாழ்க்கை இலட்சியம் ஜனாதிபதி கையால விருது வாங்குறதாம். சனாதிபதி கையில விருது வாங்குறது இருக்கட்டும். உயிர்மையில நூல் வெளியீட்டு விழா லிஸ்ட்ல பாத்தீகன்னா, சாரு, எஸ்.ரா, ரவிக்குமார், தமிழச்சி, மனுஷ்ய புத்திரன் மெயின் சாமிகளுக்கெல்லாம் தனித்தனி விழா. ஆனா நம்ம மச்சி சாரு புக்கெல்லாம் 12 புக் வெளியீட்டு விழாவுல கூட்டத்தோட கூட்டமா கலந்து பொச்சு… லோக்கல்லயே தனிக்கவனிப்பு இல்லேங்குற பட்சுத்துல இவரு தன்னை இன்டர்நேஷ்னல் பிகரா நினைச்சு கனவு காணுராரே, நமக்கே ரொம்ப கஸ்டாமா கீது…. காட் பிளஸ் அமெரிக்கா அண்டு மச்சி சார்!@!

புரியாட்டி இன்னொரு உதராணத்த பாப்போம். சேலம் சிவராஜ் வைத்தியர் கிழமைக்கு ஒரு ஊர்னு விஜயம் செய்வாரு. இதுல பெரிய சிட்டிங்களுக்கெல்லாம் முழு நாள ஒதுக்குவாறு. சில்லறை நகரங்களையெல்லாம் ஒரே நாளில் நாலைந்துன்னு பாப்பாரு, இப்ப நம்ம மச்சி சாரோட கதையும் அதுதான், இதுக்கும் மேல புரியலேன்னா சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விழுங்குலே…..

அடுத்து பத்து கவிதை தொகுப்பு, எப்பவும் வர்றதுதானேன்னு நெனக்காதீக இதுல நம்ம பதிவுலக அம்பிமாறு எழுதுனதும் இருக்காம். வெள்ளிக்கிழமை மாலை கொசு, கழுதை மட்டமும் கழுவாத புட்டமும், பீக்கடல் அப்படீன்னு பதிவமாருங்க டிஜிட்டல்ல கிறுக்கியதை எடுத்து மூணு புத்தகமா போட்டா ஒரு முப்பது பதிவுல விளம்பரம் இனாமா தேத்தலாம். அப்புறம் என்ன புரவலருக்கு புரவலர், விளம்பரத்துக்கு விளம்பரம், வியாபாரத்துக்கு வியாபாரம்… கூட்டிகழிச்சு பாருலே இந்த மார்கெடிங் கணக்கு சரியா வரும்… இதுதாம்லே மனுஷ்ய புத்திரன் ‘டச்‘சு

ஆமா, இதெல்லாம் வரும்போது ”எட்டு லார்ஜ் குடித்தது தப்பில்லை. அடுத்து குடித்த பியர்தான் பிரச்சனை” ன்னு நம்ம எலக்கிய குருஜி சுந்தரின் பஸ்மொழிகளெல்லாம் ஏன் வரலையின்னு கேட்கப்பிடாது. பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…

அடுத்து நம்ம ஹீரோவ பத்தி பாப்போம் அதாம்லே அம்பி பாய் மனுஷ்ய புத்திரன். அவுகளோட 120 கவிதைகள் 300 பக்கங்களுக்கு மெகா புக்கா வருதாம்லே.. சாம்புளுக்கு ஒன்னு

இதற்குத்தானா?

பார்க்காமலே
இருந்திருக்கலாம்

பார்த்தும்
பாராத்து போல போயிருக்கலாம்

பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?

…………………………………………………….

தெரியாமத்தான் கேக்கறேன் பார்த்தான், பாக்கலேன்றத பின்னிப் பின்னி எழுத்திட்டு அது கவிதைன்னா அந்த கடவுளுக்கே அடுக்குமாலே..

“கக்கா போகலாம், போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை, தண்ணியிருந்தா கழுவலாம், இல்லாட்டி துடைக்கலாம், நாறினா ஓடலாம்,” ம்னு நான் என்டர் தட்டாத ஒரு கவிதை சொன்னா ஒத்துப்பியாலே?.. பொழப்ப பாருலே போக்கத்த மூதின்னு துப்பமாட்ட?

தி.மு.க. ஆதரவு பெருந்தலைகளை கொண்டு தன்னோட நூலக ஆர்டரை நைசா வளைச்சு பிசினஸ் சாம்ராச்சியத்தை சைசா தேத்தும் ‘பாஸ்’ மனுஷ்ய புத்திரன் கொண்டுவரும் 60 புத்தகங்களோட லட்சணம் இப்படித்தாம்லே பல்ல இளிக்குது. இதுக்காக்க எத்தன மரத்தை வெட்டிச் சாச்சாகளோ இதத்தாம்லே காடு அழியுதுன்னு சொல்லுதேன். இது சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா? இயற்கை வளமும், கருத்து வளமும் இப்படி வீணாபோவதை நாம ஆதரிக்கவாலே முடியும்… எதிர்க்கனும்லே…!

டிஸ்கி 1: பணி மாற்றமா, பணி உயர்வா, விசாரணையிலிருந்து விடுதலையா, ரியல் எஸ்டேட்டா, கட்டப் பஞ்சாயத்தா, நூலக ஆணைக்கு தள்ள வேண்டுமா, எதையும் புத்தகமாக போட வேண்டுமா – உடனே உயிர்மை பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெறும் பதினைந்து சதவீத கழிவைக் கொடுத்து உலகத் தரமான சேவையை பெறுங்கள்…

டிஸ்கி 2: இப்படி காடுகள் அழிந்தால் வெங்காய விலை எப்படி குறையும்?

டிஸ்கி 3: வினவு தளத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!

________________________

– காளமேகம் அண்ணாச்சி
________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:


 1. உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!…

  இந்த மாசத்து உயிர்மை’ல மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா இந்த வருசம் புத்தக கண்காட்சி சமயம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க….

 2. காள‌மேக‌ம் அண்ணாச்சி, “ந‌ச்”சுன்னு கேட்டீரு… ஆனா பாருங்க‌, வின‌வு கூட‌ இந்த‌ வார‌ம் எதோ புக் எல்லாம் வெளியிடுறாங்க‌ன்னு போன‌ ப‌திவுல‌ படிச்சேன். அதெல்லாம் ம‌ர‌த்தை வெட்டி பேப்ப‌ர்ல‌ இல்லாம‌ க‌ல்வெட்டுல‌யா இருக்க‌ப்போகுது… வாங்கி வீட்டுக்கு தூக்கிட்டு போற‌துக்கு ச‌ங்க‌ட்ட்ட்ட‌மா இருக்காது… 🙂

  • அதெப்படி வெண்பூ ?

   நாங்க எது செஞ்சாலும் சரியாத்தான் செய்வோம். உயிர்மைக்காரன் மாதிரி காடுகளை அழிக்க மாட்டோம். தெரியும்ல

  • ஜூ ஜூ …. என்ன செல்லம் வெண்பூ … உள்ள பொகையுதா ?..

   ஒரு இலக்கிய சொறிநாய் தன் சுய புராணத்தை எழுதுறதுக்கும் ஒண்ணுக்கும் உதவாததை இலக்கியம்ங்கிற பேருல எழுதுறதுக்கும் ஜால்றா போடுற போன்ற வெட்டி ரசிகர்களுக்கு எவ்வளவு தெளிவா சொன்னாலும் புரியாத மாதிரி தான் மறுபடியும் வந்து பீப்பீ ஊதப் போறிங்க ..

   இருந்தாலும் சொல்லுறேன். வினவு,கீழைக்காற்றில் வரும் புத்தகங்கள், சமுதாயத்தின் அவசியம். உயிர்மை வெளியிடும் புத்தகங்கள் சுயசொறிதலின் அவசியம்.

   • ஹி.. ஹி.. இன்னும் மாறவே இல்லையா நீங்க… எதிர்த்து எதாவது சொன்னா அனானியா வந்து திட்டுறதை… :)))

    இன்னும் பெட்டரா எதிர்பார்த்தேன்.. ஏன் பாஸ், கெட்ட வார்த்தை ஸ்டாக் தீந்து போச்சா இல்ல திருந்தீட்டீங்களா? 🙂

    அப்புறம் எனக்கு ஏன் பொகையணும்? தலைப்பை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தேன். அதோட டோக்கனாத்தான் இங்க வந்து கமெண்ட் போட்டேன்…

    BTW, கல்வெட்டு வெளியீட்டுக்கு வாழ்த்துகள்…

    • காடுகள் அழிக்கப்பட்டு தான் காகிதம் செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
     பதிவு அதை பற்றியா பேசுகிறது?

     அந்த காகிதத்தில் ஒன்றுக்கும் உதவாத கழுதை விட்டைகளை எழுதி வீணாக்குவதை பற்றி பேசுகிறது..

     முடிந்தால், உயிர்மையின் புத்தகங்கள் நாடிற்கும், மக்களுக்கும் மிக மிக அவசியமானவை என்று வாதிடுங்கள்.
     அல்லது
     கீழைக்காற்றின் வெளியீடுகள் மக்கள் பிரச்சனைக்கு அன்னியமானவை என்று மறுத்து வாதிடுங்கள்..

     மாற்று கருத்து என்ற பெயரில் oneliner களின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்…

     மேலும், உங்களை வினவில் யார் எப்போது திட்டினார்கள்? நீங்கள் வினவின் மீது அவதூறு கிளப்புவதாக குற்றம் சாட்டுகிறேன்…

     விவாதத்திற்கு வருவதாக இருந்தால் மேலும் பேசலாம், நண்பரே…

 3. Sir

  When i read this , i cant control my laugher.. Hilarious..
  Some of the lines ……

  ” பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கச்சிபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?”

  ” சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.”

  ” அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!”

 4. //பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…// மிகவும் ரசித்தேன்

 5. ஆரம்பிசுடீங்களா உங்க காமெடி டைம்ம, எனி ஹொவ் தேங்க்ஸ் ,இந்த காமெடி நினைச்சு நினைச்சு சிரிக்கலாம் ,
  நம்ப செஞ்சா எல்லாம் ரைட்,வேற எவன் செஞ்சாலும் அது சமுக குற்றம்,உங்க குமுகாய அக்கறை அளவில்லாம போகுது , ஆல் தே பெஸ்ட்.
  பெட்வீன் வெண்பூ சொன்ன மாதிரி உங்க புக் எல்லாம் எப்பிடி கல்வெட்டு ,இல்ல பனையோலை அப்படி எதுலயும் வருதா என்ன ?
  அப்படி வித்தியாசமா வெளியிடற மாதிரி இருந்தா கீப் அஸ் போஸ்டட்

  • @ dr.rohinisivamani

   ஏனுங்க நீங்க அறிவாளியா? முட்டாளா?

   கட்டுரையின் தலைப்பை மட்டும் தான் படிப்பீங்களா? உள்ள என்ன இருக்குன்னு படிக்க மாட்டீங்களா?

   காடுகள் அழிக்கப்பட்டு தான் காகிதம் செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
   பதிவு அதை பற்றியா பேசுகிறது?

   அந்த காகிதத்தில் ஒன்றுக்கும் உதவாத கழுதை விட்டைகளை எழுதி வீணாக்குவதை பற்றி பேசுகிறது…

   பரமார்த்த குருவின் சீடர் போல கமெண்டு போட்டு எங்களை காமெடி என்கிறீர்களா? என்ன கொடுமை…
   அட இந்த பதிவு மெய்யாலுமே காமெடி/நையாண்டி தானுங்க… நீங்க ஏதோ புதுசா கண்டுபுடிச்சா மாதிரி….. கொடுமையிலும் கொடுமை..

 6. உயிர்மை பதிப்பகம் வெளியிடும் புத்தகங்கள் வெற்றி பெற வேண்டுமா, முடங்கி கிடக்கட்டுமா என்பதை தமிழ் வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.
  நாம் யார் புத்தக சந்தையின் தேவை அளிப்பை நிர்ணயிப்பதற்கு.
  அந்த வகையில் இந்தப் பதிவிற்கு எனது கண்டனம் மற்றும் வருத்தங்கள்.

  பதிவில் சில பத்திகளில் வந்துள்ள நெல்லை தமிழ் பிரயோகம் இயல்பாக வந்துள்ளது. நெல்லையில் மற்றும் சென்னையில் வாழ்ந்த ஒரு நபர் எழுதி உள்ளது போன்ற உணர்வு வந்துள்ளது.

 7. காளமேகம் அண்ணாச்சி
  கிழி கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க போங்க. Repeat!!!

  When I Visited once to Uirmai on the Book Fair couple of years ago, The Sales men Pushed me a lot to Buy his Books, ( that time I was not Knowing “manush….” was the owner). Later I understood.

  I also became a Victim for couple of their Crap Books, Upon based on the so called “Cut Lines”.

  Nowadays I’m cautious.

  Friends Beware of them!!!!! Kudos to kaalamegam annachi!!

 8. நீர் எல்லாத்தையும் எல்லாரையும் நல்லா திட்டும்.. சுஜாதாவை பற்றி என்ன சொன்னாலும் அதனால் அவருக்கு எந்த இழுக்கும் இல்லை… ஒரே யொரு உதாரணம்… அன்னாரின் இரங்கல் கூட்டத்திற்கு எந்தவித விளம்பரமோ, பேனர்களோ இல்லாமல் நாரத கான சபையின் பெரிய அரங்கத்தில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் வந்ததே.. அமர இடமில்லாமல் எத்தனை நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள் என்பது உமக்குத் தெரியுமா…இதைவிட அவர் எழுத்தின் மேல் உள்ள மக்களின் ஈர்ப்புக்கு வேறு கட்டியம் தேவையா….? நமது தமிழ்ச்சூழலில் ஒரு சாதாரண எழுத்தாளனுக்கு அப்படி கூட்டம் வந்துவிடுமோ.. வேறு யாருக்காவது வந்திருக்கிறதா…உம்மிட்ம் அப்படிப்பட்ட மக்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் உள்ளனரா.. உமது சர்ட்டிபிகேட்டை நீரே வைத்துக்கொள்ளும்… சுஜாதாவுக்குத் தேவையில்லை… let the caravan passes on…

  • ஆமா..நீங்க சொல்றது முற்றிலும் உண்மை.. அந்தக் கூட்டத்துக்கு நானும் போய் இருந்தேன். ஓவியர் ஜெயராஜ் (பெண்களை வரையும்போது மாரையும் தொப்புளையும் மறக்காமல் வரைந்து கலைச் சேவை செய்யும் கலாரசிகர்) தன்னுடன் சுஜாதா பழகியதை பேச ஆரம்பித்தார். எனக்கு 2 ஆட்கள் தள்ளி உக்காந்திருந்த ஒருத்தர் தாரை தாரையாக அழ ஆரம்பித்து விட்டார். 2 நிமிசம் கழித்து சுஜாதா சொன்ன ஒரு பாலியல் நகைச்சுவையை அதே ஜெயராஜ் சொன்னார். மேற்படி ஆசாமி குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆகா..இதுதான் சுஜாதாவுக்கு அவரின் வாசகர் செய்திருக்கும் சரியான மரியாதை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கூட்டம் முடிந்த கையோடு ஓ ஹென்றி கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்.. உலகத்தில் ஓ ஹென்றிக்கு தோன்றிய அதே கற்பனை சுஜாதாவுக்கும் தோன்றியதை எண்ணிப்பார்த்தேன்.. உலகில்தான் எத்தனை அதிசயங்கள்.. ஆனால் ஓ ஹென்றி ‘பொம்பிளைகளால சுவற்றில் மூத்திரம் பெய்ய முடியுமா?’ங்கிற மாதிரி எல்லாம் கேக்கிற அளவுக்கு கற்பனை வளம் இல்லாதவர்தான்.. என்பதை எண்ணிப்பார்த்தால் சுஜாதாவின் மூத்திர கற்பனைக்கே நோபெல் பரிசு கொடுத்திருக்கலாம்.. போய்ச் சேந்துட்டாளே..

   • அலக்சாண்டா…. யாரோ ஒரு ஆள வச்சி அவன்தான் ரசிகன்னு சொல்ற உம்ம கோண புத்திய கடாசும்… அந்தாளு எத்தனயோ எளுதியிருக்காரு… உம்ம காமல கண்ணுக்கு அதுதான் தெரியுதுன்னு கண் டாக்டரய பாரும்… இல்லை மைண்ட் டாக்டர பாரும்….நீர் எத்தனை முறை அளுது பொறண்டாலும் தமிழ்ல repeat தமிழ்ல இனிமே ஒரு ஆள அவன் மாதிரி பொற்ந்து வரணும்… உம்மால முடியல… வினவும் இனி அப்படி ஒரு ஆள உருவாக்கி அவனுக்கு மார்க்சியம் சொல்லிக் கொடுத்து கர சேர்ரத்துக்குள்ள, அவன் மார்சசுவரிக்கே போயிறுவான்… உமக்கு வவுத்த கொட்சலா இருந்தா செலுசில் போடும்.. வினவுக்கும் கொடும்..

 9. Dear Kaalamegam,

  neenga intha pathiva eluthalennu yaaru kavala padala. eluthunathukkaagavum yaaru kavala pada porathilla.unga naataamai group venumna santhosapattukkattum. unga groupum books release panreenga neenga enna kathulaiya print panreeenga? athe paperla thaana… vitta kaluvruathu kooda wastenu pathivu poduveenga pola irukku.

  ithu oru cheap publicity thedum nokkamaakave karuthikren. ungal groupil silarin thangal pathippukalai puthakamaaka mudiyavillai allathu yaaru erkavillai endra iyalaamai allathu nirakarikkappathan vali,poraami,attaraaami,sirupillaithanaththin velippadaakave intha pathivai.karuthikren..

  apram,ungaloda nija peyarkaliyum, adayaalangalaiyum veliyida nenjil thiram irukkirathaa? yaaro eluthurathaa neengal pottu mandapathila eluthianatha podureenga. mundinthaal ithai eluthiya antha aasaami thannai velikaatti kollatum. paarkaalaaam. nermai atravrakal,aanamai atravarkal neengal.

 10. Hello bloggers, whoever publish books, maximum it will be in paper medium. When vinavu criticise you have to go through it deeply. What is the use of the junk materials? It will land only in the public libraries wasting the public’s money. But vinavu’s books will directly goes to the masses, and it will not swindle the public’s money. That is the difference.

 11. //அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…//

 12. உம்ம வயித்தெரிச்சல வாந்தி எடுத்திருக்கீரு அண்ணாச்சி!! அதய நாங்க படிக்கனுமாம்ல.

 13. அய்யா, வினவு நீங்க இங்க பதிவு போட கணிப்பொறி முன்னால் உட்கார்ந்து மின்சாரத்தை பயன்படுத்திறீங்களே…உலக உருண்டை கொதிக்குது…இது தேவையா?

 14. சிரித்து சிரித்து வயிறு வலிக்கின்றது. நகைச்சுவையோடு சமூக அக்கறையில்லாத எழுத்துக்களை சமூக அக்கறையோடு கண்டித்த அழகு ! வினவு ! கலக்கறிங்க !

 15. //பார்க்காமலே
  இருந்திருக்கலாம்

  பார்த்தும்
  பாராத்து போல போயிருக்கலாம்

  பார்க்க வந்தது
  உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்

  பார்த்த பின்னே
  பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

  பார்த்துப் பார்த்து ஏங்கவா
  இவ்வளவு தூரம் வந்தது?//

  “உழைப்பற்ற
  வார இறுதி நாளிலும்
  களைத்து
  உறங்க செய்ததது
  ஒரு ‘கவித’ புத்தகம்!”

 16. உங்கள் பதிவு நல்ல நடை. துணிவான கருத்துக்கள். வினவு திட்ட மட்டுமே செய்கிறது என்கிற குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்க உயிர்மை செய்த சில நல்ல விஷயங்களையும் பட்டியல் போட்டிருந்திருக்கலாம். வாசகர்கள் ஒப்பிட்டு உணர்ந்திருக்க வசதியாக இருந்திருக்கும். சிறுபத்திரிகையுலகம், பதிப்புலகம் நுகர்வியல் கலாச்சாரத்துக்கு வளைந்து போயிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் உயிர்மையின் ஜனரஞ்சக ஊசலாட்டம். சுஜாதா ஜனரஞ்சகமானது போல், குமுதம் ஆனது போல், உயிர்மையும் ஜனரஞ்சகமாக விரும்புகிறது.

  இன்னொன்றும் இருக்கிறது. சீரியஸ் லிட்டரேச்சர் அதாவது தீவிர தமிழ் இலக்கியம் என்பதாக தங்கள் எழுத்து பற்றிக் கருதுபவர்கள் அனைவரும் ‘உள்ளத் தேடல்களே’ அதி உன்னதமான இலக்கியம் என்கிற போக்கு உள்ளவர்களாகி வருகிறார்கள். அதனாலேயே இது போன்ற உள்ளக் கிடக்கைகளும், ஹேரிபாட்டரைப் போன்ற கற்பனைகள் கொண்ட கதைகளும் மட்டுமே தீவிர இலக்கியங்கள் என்கிற மனப்பிரமை கொண்டு அதற்குள்ளேயே உழலும் எழுத்தாளர்களும், எழுத்தாளர்களின் பிரபலத்தில் மயங்கி இவ்வெழுத்தாளர்களின் எழுத்துக்களும், அவர்கள் எடுத்துக்கொள்ளும் களங்களும் மட்டுமே உயர்ந்த இலக்கியம் என நம்பத் தலைப்படும் வாசகர்களும் ஏராளம்.

  இன்னொன்று அரசியல் கலந்து எழுதப்பட்டால் அது அவ்வளவு எளிதில் தீவிர இலக்கியம் என்கிற தகுதியை அடையவே முடியாத நிலை நிலவுவதும் ஒரு காரணம். வெரைட்டியாக எழுத எழுத்தாளர்கள் உருவாகததும் ஒரு காரணம். ஒரு விதத்தில் உயிர்மையின் இம்முயற்சியில் சலித்துப் போய் பிற்காலத்தில் குடும்பம், காதல், உள்ளத் தேடல் போன்ற வழக்கமான விஷயங்களைத் தாண்டி துணிவாக சமூகத்தை அலசி எழுதும் எழுத்தாளர்கள் உருவாகலாமோ?

 17. சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகளைப் பற்றி எழுதினால் அது இலக்கியமாகாது- அது அரசியல், வெறும் பிரசாரம் என்றெல்லாம் திட்டி ஒதுக்கி வந்த கூட்டத்தின் கடைசிக் காவலாளி சு. ராமசாமி.

  அங்கே உருவாகி வளர்ந்து முற்போக்கான அரசியல் கருத்துக்களை முன்வைத்த படைப்புக்களை நிராகரித்து ஜெயமோகன் வகையான் வக்கிர அரசியலை மட்டும் கண்டும் காணாமல் விட்ட வெறும் புத்தக வியாபாரி தான் மனுஷ்ய புத்திரன். அவர் ஜெயலலிதா மீது 5-6 வருசம் முன்பு எழுதிய வசைபுராணத்தைக் காலச்சுவடு பெருமையுடன் வெளியிட்டது.
  அதைத் தூய இலக்கியக் கும்பல் கொண்டாடியது.

  நவீன (+ பின் நவீன) இலக்கியம் என்ற பேரில் வெளியில் எங்கெங்கோ கண்டதை எல்லாம் ஒழுங்காக விளங்கிக் கொள்ளாமல் தமிழுக்குள் கொண்டுவந்து கொட்டுகிறதும் வாசகனுக்கு விளங்காமையையே இலக்கியத் தகுதியாக்கித் தங்களைத் தாங்களே உயர்த்திதக் கொள்ளுவதும் இந்தக் கூட்டத்துக்குக் கைவந்த கலை.
  அடி மனதில் உள்ளது என்னவோ வெறும் வியாபாரம் தான்.

  அவர்களைச் கொல்லி என்ன பயன்? அறியாமையால் அவர்களை மெச்சித் திரிகிற ஒரு கூட்டம் இருக்கிறதே. அது திருந்தும் வரை அவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.

 18. வினவு நல்லாதானே இருக்கீங்க?? தலைல எதும் அடிப்பட்டுடுச்சா??
  சின்னபிள்ளைத்தனமா அநியாயத்தை எதிர்க்கிறோம்னு எல்லாத்துக்கும் எழுதி மரியாதைய குறைச்சுக்காதீங்க.
  விட்ட வினவு டீம்ல இருக்க 4 பேரை தவிர ஊர்ல ஒருத்தனும் யோக்கியன் இல்லன்னு சொல்லுவிங்க போல??

  • மதன் செந்தில்,

   தமிழக அரசின் நூலகத்துறை என்பது நமது மக்கள் பணத்தில் நடத்தப்படும் பொது நிறுவனம். இதில் கண்ட கண்ட குப்பைகளையும் கட்சி செல்வாக்கின் காரணமாக தள்ளுவதை நாம் எதிர்க்க வேண்டும் என்பதையே இந்தக் கட்டுரையின் சாரம் எடுத்துரைக்கிறது. அதில் என்ன தவறு?

 19. காளமேகம் அண்ணாச்சிக்கு இம்புட்டு இலக்கிய அறிவா! விழுந்து, விழுந்து சிரித்து, வியந்தும் போய்விட்டேன். அண்ணாச்சி அடிக்கடி எழுதனும்.

  விவாதிப்பவர்கள் சாரத்தைப் பற்றி விவாதித்தால் நன்றாக இருக்கும். அதென்னமோ தெரியுல! மாயமோ தெரியுல! சாரத்தை விட்டுபுட்டு வார்த்தைகளை பிடித்து தொங்குவது தான் பலருக்கு செளகரியமாக இருக்கிறது.

 20. சுஜாதாவிற்கு ஏராளமான வாசகர்கள் உண்டுதான். ஆனால் அவர் எழுதியவை எல்லாமே ஆஹா,சூப்பர் என்பது ஓவர். பல குப்பைகளையும் அவர் சந்தடிசாக்கில் வாசகன் மேல் வீசியுள்ளார். சாதிப்பெருமை,சாமிப்பெருமை,நாசூக்காக மற்றவர்களை மட்டம் தட்டுதல் எல்லாம் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்தவனுக்குப் புரியும். சினிமாக்காரர்களில் அவருக்கு மணிரத்தினம், சங்கர் மட்டுமே உசத்தியானவர்கள். அவர்கள் சுட்டதெல்லாம் அவர் கண்களுக்குத் தெரியாது. காரணம் ஏன் என்பதை விளக்கிச்சொல்லி மற்றவர்களையும் சந்திக்கு இழுக்க இது இடமல்ல. உயிர்மை- பிரபலமானவர்களின் சகவாசம் வந்தாலே அவர்களுக்கு முதுகு சொரிந்துவிடும் குணமும் சேர்ந்து வரும் என்பதற்கு மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

 21. எது இலக்கியம், எது குப்பை என்பதை யார் எந்த அடிப்படையில் தீர்மானிப்பது ? காலம் தான் சரியான் தீர்வு அளிக்கும். நீங்கள் அல்ல. ’மேட்டிமை திமிர்’ என்று அடிக்கடி சொல்வீர்களே, அது உங்களுக்கு தான் மிக மிக அதிகம் உள்ளது. பல கட்டுரைகளில் உள்ள தொனி மற்றும் பாணி அதைதான் மீண்டும் மீண்டும் சொல்கிறது.

  இப்பவே, இப்படி மேலோட்டம்மாக, வசைபாடுகிறீர்களே, உங்க குழு செம்புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை கைபற்றினால் என்ன செய்வீர்கள் ? உயிர்மையை முதலில் தடை செய்வீர்கள். மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களை தடை செய்வீர்கள். பலரையும் கைது செய்வீர்கள். யார் ‘இலக்கியம்’ படைக்கலாம் என்பதை ’கட்சி’ தான் தீர்மானிக்கும். இதுதானே உங்களின் ‘மக்கள் ஆட்சி’. ஃபாசிசம் பற்றி நீங்க பேசறீங்க. சிரிப்பா இருக்கு.

  • எது இலக்கியம், எது குப்பை என்பதை தி.மு.க பெரிய மனிதர்களை வைத்து உயிர்மை தீர்மானிக்கிறது என்ற எளிய உண்மை கூட தங்களுக்கு தெரியவில்லை என்றால் கண்ணெதிரே உள்ள அநீதியைக்கூட தட்டிக்கேட்கமாட்டேன், ஆதரிப்பேன் என்றால் உழைக்கும் மக்களின் செம்புரட்சி கசக்கத்தான் செய்யும்.

   • //எது இலக்கியம், எது குப்பை என்பதை தி.மு.க பெரிய மனிதர்களை வைத்து உயிர்மை தீர்மானிக்கிறது என்ற எளிய உண்மை///

    இல்லை. தவறான வாதம். அப்படி எல்லாம் ’இலக்கியத்தை’ எந்த கொம்பனும் ‘தீர்மானிக்க’ முடியாது. வாசகர்கள் தான் நீண்ட கால நோக்கில் தீர்மானிக்கின்றனர். நூல்கள் விற்பது அவர்களினால் தான்.

    • //இல்லை. தவறான வாதம். அப்படி எல்லாம் ’இலக்கியத்தை’ எந்த கொம்பனும் ‘தீர்மானிக்க’ முடியாது. வாசகர்கள் தான் நீண்ட கால நோக்கில் தீர்மானிக்கின்றனர். நூல்கள் விற்பது அவர்களினால் தான்.//

     இணையத்தில் சரச சல்லாப இலக்கியம்தான் அதிகமாக விற்பனையாகிறது. இதனை தீர்மானிப்பதில் வாச்கரின் பங்கும், இணைய சல்லாப கும்பலின் பங்கும் என்னவிகிதத்தில் உள்ளது? அது ஏன் அப்படி இருக்கிறது?

   • //எளிய உண்மை கூட தங்களுக்கு தெரியவில்லை என்றால் கண்ணெதிரே உள்ள அநீதியைக்கூட தட்டிக்கேட்கமாட்டேன், ஆதரிப்பேன் என்றால் உழைக்கும் மக்களின் செம்புரட்சி கசக்கத்தான் செய்யும்//

    எது ’அநீதி’ தோழர் ? நீங்க அநீதி என்று சொன்னால் அதை உலகம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா ? நல்ல நீதி போங்க. ஃபாசிசம் என்றால் இதுதான். உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மற்றவர்கள் எல்லாம் கேனைகள் அல்லது அயோக்கியர்கள் என்ற எண்ணம் தான் ’மேட்டிமை திமிர்’.

    காலம் தான் சரியான் நீதிபதி. எது சரியானது, எது உன்னதமானது, எது மேன்மையான இலக்கியம் என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளில் தெளிவாகிவிடும்.

    • தமிழ்நாட்டில் என்ன சினிமா ஓடவேண்டும் என்பதை சன் டி.வி தீர்மானிக்கவில்லை, உங்களைப் போன்ற அப்பாவிகள்தான் என்பது தெரியாமல் போயிற்றே? ஹாலிவுட் படங்களோ, ஹாரிபாட்டர் இலக்கியமோ எது பார்க்கப்படவேண்டும் என்பதை அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டமைப்பு தீர்மானிக்கவில்லை, உங்களைப் போன்ற ஒன்றுமே தெரியாத நல்லவர்கள்தான் என்பது தெரியாமல் போயிற்றே,

    • வினவு,

     ரொம்ப புத்திசாலித்தனமாக போசறதா நினைபா ? சினிமா பற்றி இங்கு விவாதிக்கவில்லை. எது இலக்கியம், அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதை பற்றி.

     தமிழகத்தில் சன் குழுமம் monopoly நிலையை அடைந்துவிட்டாதுதான். மிக முக்கிய காரணம் Hathaway போன்ற MSO போட்டியாளர்களை அராஜகமாக கேபிளை அறுத்து அழித்ததுதான். மேலும் திருட்டு வீசிடி பெருகியதால், ஒரு படத்தை குறுகிய காலத்தில் பல நூறு தியட்டர்களில் வெளியிட வேண்டிய சுழல். தமிழ் நாட்டில் தான் இந்த நிலை.
     வல்லவனுக்கு வல்லவன் வருவான். பிறகு நீதி பிறக்கும்.

     ஆனாலும் ஒரு படம் வெற்றியடைய செய்வது இது போன்ற குழுமத்தால் முடியாது. ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விஜய் படமும் தோல்வி அடைகிறது.

     ///ஹாலிவுட் படங்களோ, ஹாரிபாட்டர் இலக்கியமோ எது பார்க்கப்படவேண்டும் என்பதை அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டமைப்பு தீர்மானிக்கவில்லை, உங்களைப் போன்ற ஒன்றுமே தெரியாத நல்லவர்கள்தான் என்பது தெரியாமல் போயிற்றே////

     இதை உளரல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வதாம் ? எந்த ’ஏகாதிபத்திய கட்டமைப்பும்’ இவற்றை தீர்மானிக்கவில்லை. அமெரிக்க அரசின் அராஜகங்களை பற்றி பல படங்கள், குறும்படங்கள், யூ டியூப் வீடியோக்கள் நிறைய உள்ளன. அவற்றை யார் ‘தீர்மானிக்கிறார்களாம்’ ?

     the problem with you people is ‘over simplification’ and ‘over generalisation’ with sweeping assumptions.

     More basic problem with you people is that you belive that marxism is a scientific concept with a sound basis. As Das Capital is full of lengthy derivations based on mathamatical models, etc, it sounds a like science, while in fact it is not.

     • புத்திசாலித்தனம் உங்களுக்கு மட்டுமே சொந்தமானதுங்குறது தெரியாமல் போயிற்றே…

      இலக்கியம் வேறு , சினிமா வேறு என்பதும் தெரியாமல் போயிற்றே…

      அதன்படி இலக்கியத்தை வாசகனும், சினிமாவை ஆக்சாபிளேடும் தீர்மானிக்கிறது என்பதும் தெரியாமல் போயிற்றே….

      திருட்டு வி.சி.டியை ஒழிக்கவே சன்.டி.வி ஏகபோகம் என்ற நல்லதை செய்கிறது என்பதும் தெரியாமல் போயிற்றே….

      வல்லவனுக்கு வல்லவன் வருவான், நீதி பிறக்கும் என்ற சங்கராச்சாரி அருளுரையும் தெரியாமல் போயிற்றே….

      அமெரிக்க அரசின் கொள்கையை ஆதரிக்கும் படங்களை விட எதிர்க்கும் குட்டி படங்களைத்தான் உலகில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்ற உண்மையும் தெரியாமல் போயிற்றே….

    • //திருட்டு வி.சி.டியை ஒழிக்கவே சன்.டி.வி ஏகபோகம் என்ற நல்லதை செய்கிறது என்பதும் தெரியாமல் போயிற்றே//

     i didn’t say that. you are twisting these. thiruttu DVDs exisit all over India. I clearly said Sun TV group had become a monopoly using illegal and unethical means. and some day they will pay for this. ok. that is the lesson from history. all fasicists and cronies fall one day. ok.

     ///அமெரிக்க அரசின் கொள்கையை ஆதரிக்கும் படங்களை விட எதிர்க்கும் குட்டி படங்களைத்தான் உலகில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்ற உண்மையும் தெரியாமல் போயிற்றே….///

     எதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். நீங்களோ அல்லது அமெரிக்க அரசோ அல்ல.

     முதலில் உயிர்மை பற்றிய விவாதத்திற்க்கு direct answer சொல்ல முயல்க.

    • //எதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். நீங்களோ அல்லது அமெரிக்க அரசோ அல்ல. //

     அதுதான் எப்படி மக்கள் தீர்மானிக்கிறார்கள்? அந்த ரகசியம் என்ன?

  • //எது இலக்கியம், எது குப்பை என்பதை யார் எந்த அடிப்படையில் தீர்மானிப்பது ? காலம் தான் சரியான் தீர்வு அளிக்கும். நீங்கள் அல்ல. ’மேட்டிமை திமிர்’ என்று அடிக்கடி சொல்வீர்களே, அது உங்களுக்கு தான் மிக மிக அதிகம் உள்ளது. பல கட்டுரைகளில் உள்ள தொனி மற்றும் பாணி அதைதான் மீண்டும் மீண்டும் சொல்கிறது.//

   நீங்க கூடத்தான் செம்புரட்சி பற்றியும், மக்களுக்கான இலக்கியம் பற்றியும் பலமுறை இது போன்ற அவமதிப்பான கருத்து சொல்லியிருக்கிறீர்கள். இவையெல்லாம் அவரவர் சார்பு நிலையிலிருந்து வருவது. வினவு தனது சார்பு நிலையை மறைத்ததில்லை. நீங்கள்தான் அதனை மறைத்துக் கொண்டு அனைவருக்கும் பேசுவது போல ‘மேட்டிமைத்தனத்துடன்’ அறிவுரை சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்கள்.

   • அதியமான் இப்போ சொன்னது:
    //எதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். நீங்களோ அல்லது அமெரிக்க அரசோ அல்ல. //

    இப்படிச் சொல்லும் அதியமான் இதே கருத்தை தலைகீழாக முரன்பட்டு வல்லவனுக்கு வல்லவன் வந்து நீதி சொல்லுவான் என்று முரன்பட்டுள்ளார். அது இங்கே:

    அதியமான் கொஞ்ச நேரம் முன்ன சொன்னது:
    //தமிழகத்தில் சன் குழுமம் monopoly நிலையை அடைந்துவிட்டாதுதான். மிக முக்கிய காரணம் Hathaway போன்ற MSO போட்டியாளர்களை அராஜகமாக கேபிளை அறுத்து அழித்ததுதான். மேலும் திருட்டு வீசிடி பெருகியதால், ஒரு படத்தை குறுகிய காலத்தில் பல நூறு தியட்டர்களில் வெளியிட வேண்டிய சுழல். தமிழ் நாட்டில் தான் இந்த நிலை.
    வல்லவனுக்கு வல்லவன் வருவான். பிறகு நீதி பிறக்கும்.//

    இப்போ கேள்வி என்னவென்றால், மோனோபாலி செய்து மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் இவர்கள் தீர்மானிக்கிறார்களா? இல்லை ஒரு ருபா அரிசிக்கும், இலவச கலர் டிவிக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நித்தியானந்தாவுக்கும், பங்காரு அடிகளாருக்கும் மயங்கும் மக்கள் தீர்மானிக்கிறார்களா?

    • //இப்போ கேள்வி என்னவென்றால், மோனோபாலி செய்து மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் இவர்கள் தீர்மானிக்கிறார்களா? இல்லை ஒரு ருபா அரிசிக்கும், இலவச கலர் டிவிக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நித்தியானந்தாவுக்கும், பங்காரு அடிகளாருக்கும் மயங்கும் மக்கள் தீர்மானிக்கிறார்களா?//

     பன்னாட்டு நிறுவனங்கள் ஊடகங்களை தங்களது கையில் வைத்துள்ள நீர ராடியா சாட்சி. விக்கிலீக் எனும் சுதந்தர ஊடகத்தை முடக்கும் சர்வதேச ஊடக கூட்டணி மக்கள் எதை படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. இது மாதிரி இன்னும் பல உதாரணங்கள் கொடுக்க முடியும்.

     என்ன செய்ய, நம்ம அதியமான் அண்ணாச்சிக்கு இணையம் பார்க்கும் 2% மக்கள்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் என்பதாகத்தானே புரிதல் உள்ளது? விக்கிலீக்கும், நீரா ராடியாவையும் விட -ஆசேஞ்சு செக்ஸ் வைத்துக் கொண்டதும், அ. ராசா கனிமொழி கிசுகிசுவும்தானே மக்களுக்குப் போய்ச் சேருகிறது?

     இதையெல்லாம் மக்கள்தான் தீர்மானகரமாக தேடிப்பிடித்து படிக்கிறார்கள், ரசனையை வளர்க்கிறார்கள் என்று நம்ப வேண்டும் நாம். இல்லையேல் நாமெல்லாம் பாசிஸ்டுகள். இப்படி சொல்வது சாட்சாத் அதியமான் அண்ணாச்சியேதான்

    • //இல்லை ஒரு ருபா அரிசிக்கும், இலவச கலர் டிவிக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நித்தியானந்தாவுக்கும், பங்காரு அடிகளாருக்கும் மயங்கும் மக்கள் தீர்மானிக்கிறார்களா?///

     even though the ‘choice’ of people may be disagreeable to many of us here, let them choose on their own for whom they vote or what they buy or consume. No one has the right to force thru coercion people from buying or not buying what they CHOOSE. ok. certainly no communist dictator. ok.

    • //even though the ‘choice’ of people may be disagreeable to many of us here, let them choose on their own for whom they vote or what they buy or consume. No one has the right to force thru coercion people from buying or not buying what they CHOOSE. ok. certainly no communist dictator. ok.//

     மக்களே இந்த சுத்தபத்த லிபரேட்டிரனியனின் கற்பனாவாத அபத்தத்தை நான் இனி அம்பலப்படுத்தப் போவதில்லை.

     ஆண்டி அங்கிள் வைரஸ்கள், நீலப் படங்கள், செக்ஸ் வக்கிரப் படங்கள், போதை வஸ்துக்கள், டாஸ்மாக்குகள் என எல்லாவற்றையுமே அதியமான தடையின்றி அனுமதிக்க விரும்புகிறார் போலுள்ளது.

     சரியாகச் சொன்னால் முதலாளித்துவவாதி என்ற நிலையிலிருந்து இந்தப் புள்ளியில் இவர் அராஜகவாதி -அனார்ஜிஸ்டு என்று புள்ளிக்கு செல்கிறார். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து சிந்தித்தால் ஒன்று இந்தப் பக்கம் வந்து கம்யூனிஸ்டாகவோ அல்லது அல்லது அந்தப் பக்கம் போய் பாசிஸ்டாகவோ மாற வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.

     ஆனால், இன்னமும் கார்போரேட் டிக்டேட்டர்கள் மக்களின் ரசனையை தீர்மானிப்பது பற்றியும், மக்கள் இலக்கியம் என்று எதை இப்போது தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது பற்றியும் லிபரேட்டிரியனின் மேன்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    • //சரியாகச் சொன்னால் முதலாளித்துவவாதி என்ற நிலையிலிருந்து இந்தப் புள்ளியில் இவர் அராஜகவாதி -அனார்ஜிஸ்டு என்று புள்ளிக்கு செல்கிறார்.///

     சரியான உளரல். முதலில் libertarianism என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.

     /// இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து சிந்தித்தால் ஒன்று இந்தப் பக்கம் வந்து கம்யூனிஸ்டாகவோ அல்லது அல்லது அந்தப் பக்கம் போய் பாசிஸ்டாகவோ மாற வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.///

     மேலும் உளரல். உமது லாஜிக்கை என்னவென்பது !!!

     ////ஆனால், இன்னமும் கார்போரேட் டிக்டேட்டர்கள் மக்களின் ரசனையை தீர்மானிப்பது பற்றியும், மக்கள் இலக்கியம் என்று எதை இப்போது தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது பற்றியும் லிபரேட்டிரியனின் மேன்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்////

     மக்களின் ரசனையை communist or fascist சர்வாதிகரிகள் தீர்மானிக்கும் முறையை விட இம்முறை மேல். கார்பரேட் டிக்டேட்டர்கள் என்ற சொல் முரணானது. கார்ப்ரேட் மார்கடிங் என்று சொல்லாம். சர்வாதிகாரம் எதுவும் இதில் இல்லை. free choice உண்டு. மாற்று கருத்துகள், ரசனைகளை யாரும் அதிகாரத்தின் மூலம் நசுக்கவில்லை.

     பல நூறு புதிய பதிப்பாளர்கள், ஆயிரக்கணக்கான புதிய நூலகள், லச்சக்கணக்கில் புதிய வாசகர்கள் இன்று உருவாகி உள்ளனர். சகல துறைகளை பற்றியும், அனைத்து கோணங்கள், கோட்ட்பாட்டின் அடிப்படையிலும் இன்று அலசல்கள், கருத்துக்கள் உள்ளன. சென்னை புத்தக கண்காட்சி இதற்க்கு சான்று. உங்க கீழை காற்று பதிப்பகமும் கூட சர்வ சுதந்திரமாக அனுமதிக்கபடுகிறது. அனைத்து தரப்பினரும் தான். தமிழகத்தை விட இன்னும் சுதந்திரம் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகள் பலவும் உண்டு.

   • //எது இலக்கியம், அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதை பற்றி. //

    இப்போ எனக்கு ஒரு பெரிய டவுட்டு, அதியமான் சொல்கிறார் எது இலக்கியம் என்பதை மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்று.

    சரி, இப்போ மக்கள் இலக்கியம் என்று எதை தீர்மானித்துள்ளனர் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் அதியமான் – அல்லது உங்களுக்கு சங்கடமா இருந்த லிபேரேட்டிரியன்?

   • //வினவு தனது சார்பு நிலையை மறைத்ததில்லை. நீங்கள்தான் அதனை மறைத்துக் கொண்டு அனைவருக்கும் பேசுவது போல ‘மேட்டிமைத்தனத்துடன்’ அறிவுரை சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்கள்///

    சார்பு நிலையை யாரும் மறைப்பதில்லை. தேவையும் இல்லை. மேட்டிமை திமிருடன் பேசுவது பற்றி தான் இங்கு சொன்னேன். முக்கியமாக நீர் பேசிய பேச்சுகளை பற்றி முத்தமிழ் கூகுள் குழுமத்தினரிடம் கேட்டுபார்க்கலாமா ? கருத்துகளை சொல்லும் முறை பற்றிதான் சொல்கிறேன். கருத்துரிமை பற்றி அல்ல.

    இந்த கட்டுரையில் ஏதாவது objective criticism கொஞ்சமாவது உள்ளதா ? வெறும் மேலோட்டமான வசைகள் மற்றும் தனிமனித தாக்குதல்கள். இதை தான் மேட்டிமை திமிர் என்று சொல்வார்கள்.

  • //பலரையும் கைது செய்வீர்கள். யார் ‘இலக்கியம்’ படைக்கலாம் என்பதை ’கட்சி’ தான் தீர்மானிக்கும். //

   இந்த கற்பனைகளை எத்தனை முறை பதில் சொல்லியும் மீண்டும் மீண்டும் கடை விரிக்கும் உங்களது அல்ப தந்தொரோபாயம் கண்டுதான் இங்கு நான் சிரித்து மகிழ்கிறேன். ஏதாவது உருப்படியான வாதங்கள் வையுங்கள்? கஞ்சி ஓவரா புளித்துவிட்டது.

   • Asuran,

    Only ignorant and the arrogant will laugh at history. It is a fact that thousands of writers and artists were banned or arrested by communist regimes in the past. that is what Vinavu group will do if and when it captures power. I find no denial of their objectives anywhere. in fact, one comrade named Thalapathi confirmed this in person during a blogger meet. He clearly stated that only the ‘committe’ will decide which books and authors will be allowed and what will be banned. that is your agenda. All i ask for is to some honesty and openness in declaring them here. Let us argue about its merits or demerits later.

    and this is what Lenin and other leaders did in the past :

    http://www.ibiblio.org/expo/soviet.exhibit/attack.html
    Attacks on Intelligentsia: Early Attacks

    • //ஆனால், இன்னமும் கார்போரேட் டிக்டேட்டர்கள் மக்களின் ரசனையை தீர்மானிப்பது பற்றியும், மக்கள் இலக்கியம் என்று எதை இப்போது தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது பற்றியும் லிபரேட்டிரியனின் மேன்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.//

     ஆனா பாருங்க மக்களே, கொஞ்ச நேரம் வரை உயிர்மை பற்றிய மைய கேள்விக்கு பதில் சொல்லு வினவு என்று கேட்டுக் குதித்துக் கொண்டிருந்தார் அன்பு நண்பர் லிபரேட்டேரியன் அவர்கள். நானும் அந்தக் கேள்விக்கு வந்தே விவாதிக்கும் வகையில் மேலேயுள்ள எதிர்வினையை இட்டு சில பல பின்னூட்டங்கள் கடந்துவிட்டன.

     ஆயினும் லிபரேட்டேரியன் அவர்கள் துணைக் கோளைப் போல அந்தக் கேள்வியை சுற்றிச் சுற்றி வருகிறாரேயொழிய கேள்விக்கு வரவே மாட்டேன் என்கிறார்.

     அட சும்மா உள்ள வாங்க லிபரேட்டேரியன், நாம இப்படி விளையாடுறது இதென்ன மொத முறையா என்ன?…

    • Attacks on Intelligentsia: Renewed Attacks

     The pattern of suppressing intellectual activity, with intermittent periods of relaxation, helped the party leadership reinforce its authority. After 1923, when threats to the revolution’s survival had disappeared, intellectuals enjoyed relative creative freedom while the regime concentrated on improving the country’s economic plight by allowing limited free enterprise under the Lenin’s New Economic Policy.

     But in 1928, the Central Committee established the right of the party to exercise guidance over literature; and in 1932 literary and artistic organizations were restructured to promote a specified style called socialist realism. Works that did not contribute to the building of socialism were banned. Lenin had seen the need for increasing revolutionary consciousness in workers. Stalin now asserted that art should not merely serve society, but do so in a way determined by the party and its megalomaniacal plans for transforming society. As a result, artists and intellectuals as well as political figures became victims of the Great Terror of the 1930s.

     During the war against Nazi Germany, artists were permitted to infuse their works with patriotism and to direct them against the enemy. The victory in 1945, however, brought a return to repression against deviation from party policy. Andrei Zhdanov, who had been Stalin’s spokesman on cultural affairs since 1934, led the attack. He viciously denounced such writers as Anna Akhmatova, Boris Pasternak, and Mikhail Zoshchenko, who were labeled “anti-Soviet, underminers of socialist realism, and unduly pessimistic.” Individuals were expelled from the Union of Writers, and offending periodicals were either abolished or brought under direct party control.Zhdanov died in 1948, but the cultural purge known as the Zhdanovshchina continued for several more years. The noted filmmaker Sergei Eisenstein and great composers such as Sergei Prokofiev and Dmitrii Shostakovich were denounced for “neglect of ideology and subservience to Western influence.” The attacks extended to scientists and philosophers and continued until after Stalin’s death in 1953.

   • ////பலரையும் கைது செய்வீர்கள். யார் ‘இலக்கியம்’ படைக்கலாம் என்பதை ’கட்சி’ தான் தீர்மானிக்கும். ////

    இந்த வாதத்தை இந்த ஒரு பதிலுடன் முடித்துக் கொள்கிறேன். இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு தகவல் பதிவு என்ற அளவில் இந்த பின்னூட்டம்.

    காந்தியவாதி ஹிமன்ஸு குமார் கைது, மனித உரிமைவாதி பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை, ஐரோம் சர்மிளி பத்து வருடங்களுக்கும் மேல் கைது, டெல்லி, குஜாராத் முதல் இந்தியாவெங்கும் பல அப்பாவிகள், ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள் கைது, கொலை, மிரட்டல், சீமான் எனும் சினிமா இலக்கியவாதி(ஒரு ஆர்க்யூமெண்டுக்கு வைச்சிகுவோம்பா).

    இதை செய்தவர்கள் யார்? யாருக்காக இதைச் செய்தார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே இவை செய்யப்பட்டன. அவற்றின் சுரண்டல், கொடுங்கோல்மையை அம்பலப்படுத்தியதற்காகவே ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள் – இவர்களின் இலக்கியவாதிகளும் உண்டு.

    ஆனால் அதியமான் ஆருடம் சொல்லுவார்- நாளைக்கி ஒரு செம்புரட்சி வரும் அதுல நிறைய கைது செய்வாங்க, கொலை செய்வாங்க, இப்போ ‘இருக்குற’ மாதிரி ஜனநாயகமே இருக்காது – என்றெல்லாம். இந்த அரூடத்தை நம்பியோடர் நல்லவர், அல்லாதோர் பாசிஸ்டுகள். என்னவொரு எளிய வரையறை இல்லையா?

    அதியமானின் நம்பினால் நம்புங்கள்… நம்பிக்கைதான் வாழ்க்கை…

    • //காந்தியவாதி ஹிமன்ஸு குமார் கைது, மனித உரிமைவாதி பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை, ஐரோம் சர்மிளி பத்து வருடங்களுக்கும் மேல் கைது, டெல்லி, குஜாராத் முதல் இந்தியாவெங்கும் பல அப்பாவிகள், ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள் கைது, கொலை, மிரட்டல், சீமான் எனும் சினிமா இலக்கியவாதி(ஒரு ஆர்க்யூமெண்டுக்கு வைச்சிகுவோம்பா).

     இதை செய்தவர்கள் யார்? யாருக்காக இதைச் செய்தார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே இவை செய்யப்பட்டன. அவற்றின் சுரண்டல், கொடுங்கோல்மையை அம்பலப்படுத்தியதற்காகவே ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள் – இவர்களின் இலக்கியவாதிகளும் உண்டு///

     Asuran,

     Genuine liberal democrats and libertarians too do not condone or support all these violations done by Indian govt. ok. What is happening in India is certainly not democratic nor real free market policies. Right to property of the poor farmers and tribals are violated freely here.
     But that is not possible in present day Europe or Canada where mines and factories are created till date in a democratic and fair manner. The lands are bought from the owners by the private companies directly. no govt intervention of SEZs. here land mafia in collusion with govt staff play a cruel game. ok.

     and India is not the same as W.Europe where there is maximum possible political and civil rights with minimum possible corruption. All are labelled as ‘capitalist democracies’ ; mere labels..

     our contention is that people like you who blindly support stalinism and maoism (under which even more terrible violations occur) have no moral right to talk about these violations.

    • //Genuine liberal democrats and libertarians too do not condone or support all these violations done by Indian govt. ok. What is happening in India is certainly not democratic nor real free market policies. Right to property of the poor farmers and tribals are violated freely here.//

     இந்தக் கருத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். இந்த அடிப்படையில் நமது ஐக்கியம், இலக்கு சாத்தியமே.

     இந்தியாவின் இந்த பிரச்சினைக்கு மாற்று என ம.க.இ.க.வினர் சொல்வது புதிய ஜனநாயகப் புரட்சி. அது உங்களைப் போல, மா.சியைப் போல இந்தியாவில் ஜனநாயகம் வேண்டும் என விரும்புகிறவர்களுடனும், இன்னபிற ஜனநாயக அமைப்புகள்-கட்சிகளுடனும், புரட்சிகர சக்திகள் இணைந்து நடத்தும் புரட்சி ஆகும்.

     அது அடிப்படையில் – தேசிய விடுதலைக்காக போராடுபவர்கள் நிர்மானிக்கும் ஒரு முதலாளித்துவ ஜனநாயகமே ஆகும்.

     மேலும், கம்யூனிச ‘சர்வாதிகாரம்’ அல்லது பாட்டாளி வர்க்க ‘ஜனநாயகம்’ எனப்படும் அமைப்பில் மக்களுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்துவது கலாச்சாரப் புரட்சி ஆகும். அது கோடாப்பாட்டளவில் அதியமான் – லிபரேட்டேரியன் முன் வைத்துள்ள கருத்தான ‘மக்களே எது சிறந்தது என தீர்மானிக்கிறார்கள்’ என்பதையே அளவுகோலாகக் கொண்டது – இதன் விளைவாகவே சீனாவில் சில பல அநீதிகளும் நிகழ்ந்தன.

     தவறு செய்யாமல் கற்றுக் கொள்ள இயலாது, கம்யூனிசமும்(முதலாளித்துவமும் கூட அதன் முதல் முயற்சிகளில் தவறுதலான பல சோதனைகளில் பாடம் கற்றே முழுமை பெற்றது) அதனை நடைமுறைப்படுத்தும் போக்கில் தவறுகள் செய்துள்ளது ஆனால் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் மிகச் சரி என்பதையே காலம் நிரூபித்துள்ளது.

     மக்கள் மீது நம்பிக்கை கொண்டவரா நீங்கள்? எனில் உங்களிடம் பாராதூரமாக முரன்பட எனக்கு எதுவும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    • ////Genuine liberal democrats and libertarians too do not condone or support all these violations done by Indian govt. ok. What is happening in India is certainly not democratic nor real free market policies. Right to property of the poor farmers and tribals are violated freely here.////

     கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

    • //கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

     ///

     Asuran,

     First answer these questions for yourselves. Then you ask me or others this question.
     For example i support PUCL and other activists. but not fascists who call themselves communists. ok

    • ////கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

     ///
     //கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

     ///

     Asuran,

     First answer these questions for yourselves. Then you ask me or others this question.
     For example i support PUCL and other activists. but not fascists who call themselves communists. ok////

     இது அதியமானின்/லிபரேட்டேரியனின் அடுத்த காமெடி. நீங்க பியுசிஎல் ஐ சப்போர்ட் பன்னுவது இன்னைக்குத்தான் எனக்குத் தெரியும். உங்க சப்போர்ட்டை மனதுக்குள் வைத்திருந்தால் அதன் பெயர் சப்போர்ட் அல்ல. மேலும், இந்த அநீதிகளை எதிர்த்து யாருடன் ஐக்கியம், இதற்கு மாற்று என்னவென்பதைத்தான் வினவும் இன்னும் பல தோழர்களும் பல இடங்களில் ஏன் இந்த பதிவிலும் கூட வெளிப்படையாக எழுதியுள்ளனர்.

     மேற்சொன்ன இந்த கண்முன் நடக்கும் அநீதிகளுக்கு வெறும் வாய்மொழி சம்பிராதாயப் பூர்வ கண்டனங்களை மட்டும் வெளிப்படுத்தும் லிபரேட்டேரியன், இந்த அநீதிகளை எதிர்த்து வினவு உள்ளிட்ட முற்போக்கு-ஜனநாயகவாதிகள் களமிறங்கும் போதெல்லாம் முதலாளித்துவத்தின் புனிதம் காக்கும் நோக்கத்தை பிரதானமாக முன்னிறுத்தியே விவாதித்துள்ளார் லிபரேட்டேரியன்.

     இன்னிலையில் இந்த அநீதிகளை எதிர்க்கும் வழிவகைகள், அநீதிகளுக்கெதிரான ஐக்கியம், தீர்வு உள்ளிட்டவற்றை ரகசியமாக வைத்திருக்கும் லிபரெட்டேரியன் அவற்றை வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 22. அண்ணன் அதியமான் எந்த பெயரில் வந்தாலும் தோழர் அசுரனுக்கு கரெக்டா புரிந்துவிடுகிறது–உடனே வந்துவிடுகிறார் — என்ன ஒரு பாசாப்பிணைப்பு

 23. அதியமான் சொல்வதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்த/இருக்கும் ரஷ்யா/சீனாவில், அங்கீகரிக்கப்பட்ட படைப்பாளிகள், நிராகரிக்கப்பட்ட படைப்பாளிகள் என்று கட்சியின் இலக்கியப் பிரிவு தீர்மானித்த வகையில்தான் இலக்கியம் அனுமதிக்கப்படுகிறது.

  இது, இன்றைய பெருநிறுவன குப