privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்!!

மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்!!

-

பினாயக் சென்
பினாயக் சென்

மனித உயிரை காக்கும் மருத்துவ சேவை, பணம் பறிக்கும் தொழிலாக மாறியிருப்பதையும், பணத்திற்காக உடல் உறுப்புகளை திருடி விற்கும் மருத்துவர்கள் பெருகி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை பார்ப்பது அரிது. அதிலும் மருத்துவத்தோடு நில்லாமல் மக்கள் படும் துன்பங்களுக்காகப் போராடும் மருத்துவர்களை காண்பது அரிதிலும் அரிது. அத்தகையதொரு அற்புதமான மருத்துவர்தான் பினாயக்சென். குழந்தைகள் நல மருத்துவத்தில் உயர்படிப்பு படித்து, மருத்தவத்துறையில் பிரபலமானவர் – கிராமபுறங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் குதிரைக் கொம்பாகிவிட்ட இக்காலத்தில் சத்தீஸ்கரில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்து வருபவர் டாக்டர் பினாயக்சென்.

மேற்குவங்கம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் புதைந்து கிடக்கும் ஏராளமதான கனிவளங்களை கொள்ளையடித்துச் செல்ல தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாராள அனுமதி கொடுத்துள்ளது மன்மோகன் அரசு. அதற்காக அப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை பலாத்காரமாக அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். தங்களின் வாழ்விடங்களை பாதுகாத்துக்கொள்ள போராடுவரும் பழங்குடி மக்கள் மீது, போலீசு மற்றும் இராணுவத்தைக் கொண்டும், “சல்வாஜூடும்” போன்ற சட்டவிரோத கொலைகார குழுக்களைக் கொண்டும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவருகிறது மன்மோகன் அரசு. இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்தான் மருத்துவர் பினாயக்சென்.

நமது இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடித்துச் செல்ல அனுமதித்து வரும் தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது.

“பினாயக்சென்” மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டார்” என்று பொய் குற்றம் சாட்டி போலியான ஆவணங்களைக் காட்டி பொய் வழக்கு போட்டது சத்தீஸ்கர் போலீசு. காவல்துறையின் போலியான ஆவணங்களை அப்படியே ஏற்றும் பினாயக்சென் தரப்பு உண்மையான ஆதாரங்களை ஏற்க மறுத்தும் மருத்துவர் பினாயக்சென், தோழர் நாராயன் சன்யால், பிஜூஷ்குஹா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம்.

இந்நீதிமன்ற தீர்ப்பை, “தீர்ப்பு வழங்கும் நெறிமுறைக்கே எதிரானது” என விமரிசத்து பினாயக்சென்-ஐ விடுதலை செய்யகோரி உள்ளது, சர்வதேச பொது மன்னிப்பு சபை. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், “நான் அறிந்தவரை பினாயக் சென் அற்புதமான மனிதர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

நாமும் மருத்தவர் பினாயக் சென் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்!
மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்!

____________________________________________________________

– தகவல், புகைப்படங்கள்: ம.க.இ.க, பு.மா.இ.மு, தஞ்சை

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பினாயக் சென்னை விடுதலை செய் ! ஆர்ப்பாட்டம் !! |…

    தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது….

  2. //காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், “நான் அறிந்தவரை பினாயக் சென் அற்புதமான மனிதர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்//

    மருத்துவர் பினாயக்சென் பற்றி கட்டுரையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது நன்றி!
    மருத்தவர் பினாயக் சென் விடுதலைக்காக குரல் கொடுப்போம்…

  3. வினாயக் சென், சட்டத்தால் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளார்! நீதியால் விடுவிக்கப்படும் காலம் தூரமில்லை!

    இந்த உலகில் தண்டிக்கப்படுபவை யாவும் எளிய இலக்குகளே!

  4. சூப்பரப்பு .அப்படியே நாடு பூரா ஏழை மக்கள், பழகுடியினருக்கு இலவச மருத்துவம் செய்யும் மருத்துவர்களை பிடித்து உள்ளே போடுங்கடா.அப்போதானே அப்போலோ போர்டிஸ் etc..etc.. போன்ற தனியார் கார்பரேட் கழிசடைகள் கொள்ளையடிக்க முடியும்.
    அரசு என்பது மக்களுக்கு என்பது மாறி அரசு என்பது முதலாளிகளுக்கும் கார்பரேட்டுகளுக்கும் என எப்போதோ மாறிவிட்டது.
    இலவச மருத்துவம் பார்த்தால் கைது.ஆனால் ஆயிரக்கணக்கில் “பிடுங்கி” வைத்தியம் பார்த்தால் அவர்களுக்கு பத்மபூஷன் விருது.சூப்பர்.
    அப்போலோ மருத்துவமனை ரெட்டிக்கு பத்மபூஷன்.எதுக்கு?ஒரு சின்ன தலைவலிக்கு போனா கூட அந்த ஸ்கேன் இந்த எக்ஸ் ரென்னு மக்களை ஓட்டாண்டி ஆக்குனதுக்கா?என்னாங்கடா இது?
    அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதை பார்க்க வக்கில்லாத மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் ஒரு கக்கூஸ் கட்டினாலும் கூட “ஆஹா ஓஹோ” என புகன்ழ்து போஸ் கொடுப்பது கூட்டி கொடுப்பதை விட கேவலமானது.வாழ்க சன நாயகம்.

  5. @மா.சி,
    வேறொரு பதிவில் நீங்கள் சொன்னது :

    ///இன்றைய அமைப்பில், டாக்டர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பு, பெருவாரியான மக்களின் தேர்வில் ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பின் சட்டங்களுக்குட்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதைத் தவறு என்று சொல்ல எனக்கும் உங்களுக்கு உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது. /////

    1) அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டது பெருவாரியான மக்களின் ஒப்புதலோடு தானா? அரசியல் அமைப்பு சட்டம் மக்களிடம் பொது விவாதத்திற்கு விடப்பட்டதா?

    2) பெருவாரியான உழைக்கும் மக்களில் எத்தனை பேருக்கு அரசியல் அமைப்பு சட்டம் என்று ஒன்று இருப்பது தெரியும்? அதிலிருக்கும் முக்கிய சரத்துக்கள் தெரியும்?

    3) அரசியல் அமைப்பு சட்டம், பேச்சுரிமை போன்ற சில சுதந்திரங்களை பெயரள்வில் வழங்கியிருந்தாலும், அவை நடைமுறையில் இல்லை என்பதை தானே பினாயக் சென் கைதும் தீர்ப்பும் தெரிவிக்கின்றன?
    அது எப்படி உங்களுக்கு சுதந்திரமாக தெரிகிறது?
    உங்கள் வாதம் எப்படி இருக்கிறதென்றால், அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பெயரளவிலான சுதந்திரமும் ஒருவருக்கு மறுக்கப்படுகிறது, அதை தவறு என்று சொல்ல எனக்கு அதே அரசியலமைப்பு சட்டம் உரிமையும் வாய்ப்பும் அளிக்கிறது…

    இதிலிருந்து என்ன சொல்லவருகிறீர்கள் மா.சி ?
    பினாயக் சென் கைதும், தீர்ப்பும் அரசியலமைப்பு சட்டத்தின் படி சரி என்றா?

    ஒரே குழப்பமாக இருக்கிறது!

  6. மருத்துவர் அப்படி என்ன குற்றம் புரிந்தார்? மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது….!
    சில ஆயிரம் முதலீடு செய்து வாங்கிய கருவியை வைத்து பல லச்சம் சம்பாதிக்கும் மதுத்துவமனைக்கு இந்த செயல்படுட்டை பொருத்துக் கொள்ள முடியுமா?.

  7. the government decided the poor people not necessary in the present society. they only wants people who paid Rs.70,00,000 as one month
    E.B charges. it is natural the all government organizations treats all people
    who help the poor people are anti national.Now they sent the poor people
    helper to jail. tomorrow they shoot such helper in encounter. people must unite to stop this anti national government activity.

  8. […] This post was mentioned on Twitter by Tamil_News, வினவு, கணேசு குமார் and others. கணேசு குமார் said: RT @jyovram: நானும் என்னுடைய கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். https://www.vinavu.com/2011/01/01/free-binayak-sen-now/ […]

  9. மருத்தவர் பினாயக் சென் அவர்கள் கைது செய்ய பட்டதற்கான உண்மையான காரணம் குறிப்பிடப்படவில்லை,

    காரணம் இதோ,
    இந்தியாவில் ஒரு இன படுகொலை நடக்கிறது, மலை வாழ் மக்களிடம் நேரடியாக மோத முடியாமல் அவர்களை பட்டினியில் தள்ளி அவர்களை ஒழித்துகட்ட இந்திய அரசாங்கம் மோசமான சதி வேளையில் ஈடுபட்டுள்ளது,

    என்பதே அவரின் கருத்து, இதனை அவர் வெளியே சொன்னது இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக்கோரியும் தேசிய பாதுகாபுக்கு எதிரானது என்றும் கூறி அவரை கைது செய்துள்ளது இந்த அரசாங்கம்,

    இதை மக்களிடையே மூடி மறைத்து பல பொய் வழக்குகளை அவர்மீது சுமர்தி அவரை கைது செய்துள்ளது இந்த மானம் கேட்ட மன்மோகன் அரசு, இது போன்ற அநீதிகளை தகர்த்தெறிய நாம் ஒன்று பட்டு போராட வேண்டும்.

  10. பினாயக் சென் பற்றி கடந்த வாரம் தான் பெங்காளி நண்பர் கூறத் தெரிந்து கொண்டேன். இந்தப் பணநாயக நாட்டில் இதற்காக குரல் கொடுப்பவர்கள் குறைவு.

    • அசுரன் அவர்களே,

      வணக்கம் பல. பினாயக் சென் பற்றிய உங்கள் ’அறச்சீற்றத்தை’ வரவேற்கிறேன். அதையே நானும் முன்மொழிகிறேன். உலகில் எந்த நாட்டிலும், எந்த காலகட்டத்திலும் இதே போல் மனித உரிமை போராளிகள் அநியாயமாக சிறைபடுத்தப்பட்டால் அதை அனைத்தையும், பாரபட்சமில்லாமல் இதே போல் எதிர்த்து அறச்சீற்றம் கொண்டால் உம்மை இன்னமும் பாராட்டுவேன். கூபாவில், வட கொரியாவில் இன்றும் இதைவிட பல ஆயிரம் மடங்கும் கொடுமைகள் நடக்கின்றன. அதை பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் ?

      எமக்கு புனித பசுக்கள் என்று எதுவும் இல்லை. முதலாளித்துவ பாணி சர்வாதிகாரத்தையும் எதிர்க்கிறேன். அமெரிகா செய்யும் மீறல்களை எதிர்க்கிறேன். யாராக இருந்தாலும், மனித உரிமைகளை மீறுவது பெரும் தவறு. இதே போன்றே நீங்களும் கருதுகிறீர்களா ?

      உங்கள் நாயகன் தோழர் ஸ்டாலின், தோழர் மாவோ ஆட்சிகளில் நடந்த மனித உரிமை மீறல்களை பற்றி பேசினால், அவை அனைத்தும் முதலாளித்துவ ஊடகங்களின் கட்டுகதைகள் என்றே நிராகரிக்கிறீர்கள். சரி, திரு.பினாயக் சென் தலைவராக இருந்த PUCL அமைப்பின் சென்னை அலுவலகத்தில், அவர்கள் முன்னிலையில் இவை பற்றி நேரில் விவாதிக்கலாமா ? உங்கள் திருமுகம் காண ஆவலாக இருக்கிறேன் !

      • //வணக்கம் பல. பினாயக் சென் பற்றிய உங்கள் ’அறச்சீற்றத்தை’ வரவேற்கிறேன். அதையே நானும் முன்மொழிகிறேன். உலகில் எந்த நாட்டிலும், எந்த காலகட்டத்திலும் இதே போல் மனித உரிமை போராளிகள் அநியாயமாக சிறைபடுத்தப்பட்டால் அதை அனைத்தையும், பாரபட்சமில்லாமல் இதே போல் எதிர்த்து அறச்சீற்றம் கொண்டால் உம்மை இன்னமும் பாராட்டுவேன். கூபாவில், வட கொரியாவில் இன்றும் இதைவிட பல ஆயிரம் மடங்கும் கொடுமைகள் நடக்கின்றன. அதை பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் ?//

        க்யுபா – வட கொரியா ஒரு சோசலிச நாடு என்றெல்லாம் யாரும் இங்கு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கவில்லை. அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்ற எனில் அவை கண்டிக்கத்தகவைதான். க்யுபா மருத்துவக் கட்டுரை மருத்துவத் துறை தனியார்மயம் பற்றி உங்களைப் போன்றவர்களின் புனிதப் பசு பொய்களை அம்பலப்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே பிரசூரிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

        மேலும், மனித உரிமை பற்றிய உங்களது சார்புக் கண்ணோட்டத்திற்கு உதாரணங்களே தேவையில்லை ஏனேனில் அவை வினவு தளம் முழுவதும் உங்களது சுய வாக்குமூலங்களாகக் கொட்டிக் கிடக்கின்றன.

        உலகிலேயே மிக அதிகமான சிறைவாசிகளைக் கொண்ட அமெரிக்கா, குற்றமே செய்யாமல் வெறும் சந்தேகத்தின் பேரில் பல ஆண்டுகள் பலரை சிறையில் வைத்துள்ள இந்தியா. போடா, தடா , உபா , தேசத் துரோகச் சட்டம், சிக்கிம், மணிப்பூர், காஷ்மீர, தண்டேவாரா என பல இடங்களிலும் கண் முன்னே கொடூரங்களும், மனித உரிமை மீறல்களும் அப்பட்டமாக் நடந்துவருகின்றன. இவற்றுக்கு பின்னே உள்ள பன்னாட்டு நிதி மூலதனக் கொள்ளைகளையோ, இதனை மூடி மறைக்கும் போலி ஜனநாயக பிம்பத்தையோ விமரிசிக்க மறந்து போகும் அதியமான் அவர்கள் சார்பு நிலை பற்றி பேசுவது நகைப்பிற்குரியது.

        மேலும், முதலாளித்துவ- ஏகாதிபத்திய சுரண்டல் நாடுகளீல் ஏற்படும் அற்பமான சில நல்ல மாறுதல்களுக்கு உரிமை கொண்டாடுவதும் அவற்றின் ஆகப் பெரிய தீமைகளை அம்பலப்பட்டால் அவறுக்கு காரணம் சோசலிசம் என்று அப்பட்டமாக பொய்யுரைப்பதுமான நடைமுறை கொண்ட நீங்கள், சோசலிச ரஷ்யா – சீனாவின் சோசலிசப் பொருளாதார-அரசியல் தவறுகளை நேரடியாக விமர்சனத்துடன் அனுகும் எம்மைக் கண்டு குதிப்பது சில பல பழமொழிகளை மனதிற் கொண்டு வருகிறது.

        முதலாளித்துவ பொருளாதாரம் 100% நிலவும் இன்றைய உலகில் உங்களால் ஒரு சில உதாரணங்களைக் கூட முதலாளித்துவத்தின் அரசியல்-பொருளாதார வெற்றிக்கு உதாரணமாகக் கொடுக்க இயலவில்லை. ஆனால் சோசலிசல் இரண்டே இரண்டு நாடுகளில் தனித்து நின்று ஆற்றிய பொருளாதார வெற்றிகளுக்கு(இதனை நீங்களே பல இடங்களில் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள்) முகம் கொடுக்கும் துணிவற்ற நீங்கள் அதன் அரசியல் தோல்விகளில் தஞ்சம் புகுந்து ஆறுதல் தேடுவது அவலாமனதொரு நிலையே.

        எந்த நம்பிக்கையும் கொடுக்காத முதலாளித்துவ சமூக அமைப்பில் ஊட்டோபியன் கனவு காணும் நீங்கள். சோசலிசத்தின் பழைய அரசியல் தவறுகளை சரி செய்தால் சிறப்பானதொரு சமூகம் சாத்தியம் என்பதை உறுதிப் பட கூறும் எம்மை கண்டு பிதற்றுவதை என்னவென்று சொல்லுவது?

        • மேலும், பா.ராகவனது ஆர்எஸ்எஸ் பற்றிய வினவு கட்டுரையில் தங்களது மேலான மனித உரிமை கருத்துக்களை நான் கோரியிருந்தேன் அவற்றை நீங்கள் இங்கு கூட தருவிப்பதன் மூலம் நீங்கள் யார்என்பதை வெளிக் காட்டலாம்.

        • மேலும், உங்களது அபிமானத்துகுரிய அரசும் பொருளாதாரமும் உங்களது வார்த்தைகளிலேயே சீரழிந்து கொண்டுள்ளதே அதனை சரி செய்ய நாங்கள் களமிறங்கியுள்ளோம் நீங்கள என்ன செய்கிறீர்கள்? இணையத்தில் வாதம் செய்வதொன்றைத் தவிர? இதையும் உங்களிடம் முன்பே கேட்டுள்ளேன்.

          சார்புநிலையற்ற உங்களிடமிருந்து பதில் வராத கேள்விகளில் இதுவும் ஒன்று. உங்களை வீதியில் இறங்கி உங்களது அபிமானத்துக்குரிய அரசு-சமூக அமைப்பை காப்பாற்றும் போராட்டத்தை நடத்த விடாமல் நாங்களா கை பிடித்து தடுத்து வைத்துள்ளோம்? ஏன் நீங்கள் இதுவரை இறங்கவில்லை?

        • //மேலும், பா.ராகவனது ஆர்எஸ்எஸ் பற்றிய வினவு கட்டுரையில் தங்களது மேலான மனித உரிமை கருத்துக்களை நான் கோரியிருந்தேன் ///

          நான் அதை சரியாக கவனிக்கவில்லை. ஆனால் அப்பதிவின் சாரத்தை ஏற்க்கிறேன். நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆதாரவாளன் இல்லை, மதவெறி, இனவெறி, சாதி வெறி எதுவும் எமக்கு கிடையாது என்பதை இத்தனை வருடங்களில் நன்றாக அறிந்த நீர், இப்படி பேசுகிறீர்களே ! பல முறை வெளிப்படையாக இந்து மதவெறியர்களை கண்டித்து எழுதியிருக்கிறேன். நான் ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்தவன். இன்று கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அந்த பின்புலத்தை முற்றாக துறக்கவில்லை. முடியவும் முடியாது. ஆன்மீகம் வேறு, மதம் என்பது வேறு என்ற தெளிவு வயதாகத்தான் பிறக்கும்.

          மனித உரிமைகளை ஆர்.எஸ்.எஸ் பல தருணங்களில் மீறி, கொலை வெறியை தூண்டி, பிரிவினையை வளர்க்கும் மூடத்தனத்தை செய்கின்றனர். இதை பற்றியும் இங்கு பின்னூடம் இட்டிருக்கிறேன். எழில் உடன் செய்த விவாவத்தில் சமீபத்தில்.

          சும்மா, முத்திரை குத்தி, திசை திருப்ப வேண்டாமே.

        • //சும்மா ‘நாங்கள்’ என்று கதையளக்க வேண்டாம். ம.க.இ.க தோழர்கள் போராடுகிறார்கள். நீங்கள் புனை பெயரில் எங்கோ இருந்து கொண்டு இணையத்தில் பேசுகிறீர். நானும் தான்.
          சரி, களப்பணி இதுவரை என்ன ஆற்றியிருக்கிறீர் ? சொல்ல முடியுமா ?//

          யாராவது களப்பணி ஆற்றியவர்கள் அதியமானிடம் எனது கேள்வியை கேளுங்கப்பா. இணையத்தில் மட்டுமே கிறுக்கும் எனக்குத் தகுதியில்லை என்று அதியமான் கருதுகிறார்.

          என்றோ நடந்த விசயத்தை நேரில் வா விவாதிக்கலாம் (இணையத்தில் இவர் செய்துள்ள விவாதங்கள் ஆங்காங்க தொங்கி நிற்கும் இடங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்) என்றழைக்கும் அதியமானின் ஆர்வம் கண் முன் நடக்கும் மனித உரிமை கொடூரங்களுக்கு வரவில்லையே ஏன்? அவரது எதிர்ப்பு வெறும் சம்பிரதாய கண்டனமாக மட்டும் நின்று விடுகிறதே ஏன்? என்கிற ஆதங்கத்திலிருந்து எழந்த கேள்வி கீழே உள்ளது.

          அதியாமானுக்கான கேள்வி:
          //மேலும், உங்களது அபிமானத்துகுரிய அரசும் பொருளாதாரமும் உங்களது வார்த்தைகளிலேயே சீரழிந்து கொண்டுள்ளதே அதனை சரி செய்ய நாங்கள் களமிறங்கியுள்ளோம் நீங்கள என்ன செய்கிறீர்கள்? இணையத்தில் வாதம் செய்வதொன்றைத் தவிர? இதையும் உங்களிடம் முன்பே கேட்டுள்ளேன்.

          சார்புநிலையற்ற உங்களிடமிருந்து பதில் வராத கேள்விகளில் இதுவும் ஒன்று. உங்களை வீதியில் இறங்கி உங்களது அபிமானத்துக்குரிய அரசு-சமூக அமைப்பை காப்பாற்றும் போராட்டத்தை நடத்த விடாமல் நாங்களா கை பிடித்து தடுத்து வைத்துள்ளோம்? ஏன் நீங்கள் இதுவரை இறங்கவில்லை?///

        • அதியமான் கொடுத்த் உதாரணத்தில் ஸ்வீடனை மட்டும் இப்போ பார்க்கலாம்,

          ஸ்வீடன் முதலாளித்துவத்தின் கதை:

          நவீன ஸ்வீடன் சமூக ஜனநாயகவாதிகளால் ஆளப் பெற்றது. அதனது சிவில்-தொழில்த்துறை நிர்வாகம் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்சாலை நிர்வாகத்தால் செய்யப்படுகிறது.

          மேலும், 1990 பொருளாதாரச் சரிவின் காரணமாக மக்களுக்கான சேமநல நிதிகளை வெட்டிக் குறுக்கி, தனியார்மயப்படுத்தும் வேலையில் இறங்கியது. மேலும், நடுநிலைவாதி வேடம் இனி வேலைக்காகது என்பதால் அமெரிக்காவின் உலக மேலாதிக்க திட்டங்களுடன் பட்டும் படாமல் இணைந்து கொண்டது. (ஆயுதத் தளவாட விற்பனை, அப்கானிஸ்தான் யுத்தத்திற்கு ஆள் அனுப்பியது).

          இந்தக் கதையேல்லாம் சேம் பிளட், மற்ற முதலாளித்துவ நாடுகளின் கதையாகத்தான் உள்ளது.

          இதில் இந்த நாடு யாரையும் சுரண்டாமல் முன்னேறியது என்றோ விவரம் இல்லையே? அங்குள்ள 20 பெரிய நிறுவனங்களில் வால்வோ, சோனிஎரிக்சன் இவையெல்லாம் உலகமயப் பொருளாதார கொள்கையின் பின் இருந்து கொண்டு மூன்றாம் உலக நாடுகளில் சுரண்டவில்லையா என்ன? உள்நாட்டு பாடி கட்டும் தொழிலை (குறிப்பாக அரசு போக்குவரத்துத் துறையின் சொந்த பாடிகட்டும் யூனிட்டே ஒழிக்கப்பட்டுவிட்டது) அழித்துதானே வால்வோ வந்தது?

          மேலும், சுவிடன் நாட்டின் கட்டுப்பாடு, அங்குள்ள தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் தொழிலாளர் கை மேலோங்கியுள்ளது.

          சங்கத்திற்கு எதிரகாவும், முதலாளிகளின் புனிதம் பற்றியும் பேசும் அதியமான் இதைப் பற்றியும் பேசுவாரா?

          //Eighty percent of the workforce is organised in trade-unions which also have the right to elect two representatives to the board in all Swedish companies with more than 25 employees//

          அங்கும் மோசடிகள்தான்/சுரண்டல்தான், என்ன இப்போதைக்கு நிலைமை ஓகே அவ்வளவுதான்.

          //A majority of Swedish banks and financial firms are in breach of rules on bonuses, the Nordic country’s market watchdog said on Monday.//

          //Sweden, like many countries, has tightened rules on bonus payments in the wake of the global financial crisis, which was seen partly caused excessive risk-taking among financial players keen to land hefty bonuses//

          //The Swedish government took a tough public line against bank payouts during the crisis, and Financial Markets Minister Peter Norman hit out at the behaviour in a separate statement.

          “That the financial players don’t abide by the body of rules is provocative and reduces confidence in a sector that only recently was deeply involved in a development that led to crisis, unemployment and falling production,” he said.//

          வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம்.

          //Sweden’s main trade union for employees in the financial sector said Tuesday it will take industrial actions over the wages and employment conditions of its 30,000 members.

          From March 5 the union will a block all overtime and additional hours in banks represented by the employer’s organization. It will also stage a blockade against all forms of recruitment as well as a prohibition of foreign working missions.//

          வெளிநாட்டு தொழிலாளர்களை சுரண்டுதல்:

          http://www.nytimes.com/2010/09/08/world/europe/08iht-sweden.html
          //The image of migrant workers freezing, locking up their bosses and marching for better pay and conditions is not typically Swedish.

          Yet these are among the catalog of incidents that have occurred among Asian workers spending the season picking wild berries in the forests of central and northern Sweden. //

          தனது சொந்த உழைப்பின் மூலம் அடுத்த நாட்டை சுரண்டாமல் தனது நாட்டு மக்களை மேம்படுத்தியதற்கான ஒரே உதாரணம் சோசலிச நாடுகளில் மட்டும்தான் உள்ளது. முதலாளித்துவ நாடுகள் தமது ஏகாதிபத்திய ந்டைமுறைகள் மூலமோ அல்லது சார்பின் மூலமோதன உயிர்வாழ முடியும். அதாவது பிற நாட்டைச் சுரண்டித்தான் உங்களது அன்பு முத்லாளித்துவத்தின் உண்டி பெருக்கிறது.

      • //சரி, திரு.பினாயக் சென் தலைவராக இருந்த PUCL அமைப்பின் சென்னை அலுவலகத்தில், அவர்கள் முன்னிலையில் இவை பற்றி நேரில் விவாதிக்கலாமா ? உங்கள் திருமுகம் காண ஆவலாக இருக்கிறேன் !//

        என்ன அவசியம் வந்தது? தண்டேவாடாவில் உங்களது அன்பு முதலாளிகளின் மனித உரிமை மீறல்களை, படுகொலைகளை மூடி மறைக்காவா. நேர்மையானவர் எனில் கண் முன் நடக்கும் இந்த அநியாயங்களையல்லவா தடுத்து நிறுத்த அதியமான் முன் வர வேண்டும்?

        ஏன் முன் வரவில்லை? முதலாளிகள் எனும் புனித பசு பிம்பம் கெட்டுவிடும் என்ற பயமா?

        • ///தண்டேவாடாவில் உங்களது அன்பு முதலாளிகளின் மனித உரிமை மீறல்களை, படுகொலைகளை மூடி மறைக்காவா///

          இல்லை. நான் தான் தெளிவாக பல முறை சொல்லிவிட்டேனே : அவற்றை மூடிமறைக அல்லது நியாயபடுத்தவில்லை என்று. PUCL அமைப்பு, மாவோயிஸ்டுகளின் கொலைகளை, கொடூரங்களையும் எதிர்க்கிறது தானே. முதலாளிகளின் மீறல்களை மட்டும் (உங்களை போல) எதிர்க்கவில்லை. அனைத்து வகை மனித உரிமை மீறல்களையும் எதிர்ப்பவர்கள் அவர்கள். உண்மைகளை மறைக்க அவர்கள் என்று முயன்றதில்லை.

          இந்தியாவில் இருந்ப்பது போலி முதலாளித்துவம். போலி முதலாளிகளின் மீறல்களை வைத்துக்கொண்டு, தூய முதலாளித்துவத்தை குறை கூற முயல்கிறீர்களே. அய்ரோப்பாவிலும் தான் கனிம வள சுரங்கள் உள்ளன. அந்த நிலங்கள் எப்படி வாங்கப்பட்டன ? அம்முறைகளே உண்மையான முதலாளித்துவம். (நீங்க மட்டும்தான்
          ’போலி’ மற்றும் திரிபுவாதிகள் என்று பேச முடியுமா என்ன ).

        • //சும்மா, முத்திரை குத்தி, திசை திருப்ப வேண்டாமே.//

          முத்திரை குத்துவதற்காக கேட்க்கப்பட்டதல்ல. அந்த கட்டுரையில் உங்களது எதிர்வினையே இல்லை. அதை ஏதாவதொரு தருணத்தில் உங்களிடமிருந்து வாங்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். இன்று நிறைவேறியது அவ்வளவே.

          பா. ராகவன் ஒரு ஆர்எஸ்எஸ் பினாமியாக ‘நூல்’ வெளியிட்டுள்ளது பற்றிய உங்களது கருத்தைப் பெறவே அந்த பின்னூட்டம். நீங்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவானவர் என்றெல்லாம் நான் நம்பவில்லை.

        • //இந்தியாவில் இருந்ப்பது போலி முதலாளித்துவம். போலி முதலாளிகளின் மீறல்களை வைத்துக்கொண்டு, தூய முதலாளித்துவத்தை குறை கூற முயல்கிறீர்களே. //

          இந்தியாவில் இது போன்ற் மீறல்களைச் செய்யும் முதலாளிகள் மே. ஐரோப்பா முதலான உங்களது அன்பு முதலாளித்துவ நாடுகளின் முதலாளிகள்தான்.

        • //இல்லை. நான் தான் தெளிவாக பல முறை சொல்லிவிட்டேனே : அவற்றை மூடிமறைக அல்லது நியாயபடுத்தவில்லை என்று. //

          நானும் கூடத்தான் பல முறை தெளிவாகச் சொல்லிவிட்டேன். அவற்றை மூடி மறைக்கவில்லை அல்லது நியாயப்படுத்தவில்லை என்று. இங்கேகூட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன் இதனை(சோசலிச ரஷ்யாவின் அரசியல் தவறுகள் என்று).

          அப்புறம் என்ன? பினாயக் சென் முதல் அருந்ததிராய் வரை, 3 லட்சம் பழகுடியின உள்நாட்டு அகதிகளிலிருந்து என்கௌண்டர் கொலைகள் வரை கண் முன் நடக்கும் பிரச்சினைக்கு அதியமான் போராட வேண்டியதுதானே? ஏன் சோசலிச ரஷ்யாவைத்தான் பேசுவேன் என்று அடம் பிடிக்கீறார்?

          இதன் உள் நோக்கம் பற்றி அவர் பேசவே மறூக்கிறாரே?ூஇந்தக் கட்டுரையிலேயே கட்டுரையின் நோக்கத்தை சீர் கெடுப்பதில் வெற்றி பெற்றுள்ளாரே? இதே வேலையை அவர இதுவரைக்குமான எல்லா அரசு-முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கட்டுரைகளிலும் செய்து சீர்குலைத்துள்ளாரே? இவரும் நல்லவர் என்று சும்மா சம்பிரதாயாமன இவரது அரசு பயஙக்ரவாத எதிர்ப்பு வார்த்தைகள் கண்டு நாம் எடை போட வேண்டுமென்று எந்த நம்பிக்கையில் நம்மிடம் கோருகிறார்?

          ஒரு கொலை கண்முன்னே நடந்து கொண்டுள்ளது, அதனை தட்டிக் கேட்க களமிறங்குகிறான் இன்னொருவன், அவனிடம் சென்று போன வருசம் நீ இந்த பகுதியில் ஒரு ரவுடியைக் கொன்றாயே அதைப் பற்றி முதலில் பேசுவோம் என்று கை பிடித்து இழுக்கிறான் இன்னொருவவ். அவனை என்னவென்று சொல்வார்கள்? நான் அவனை அதியமான் என்று சொல்வேன். மக்கள் அவனையும் கொலைகாரன் என்று சொல்வார்கள். அதியமான் அவனை நடுநிலைவாதி என்றூ சொல்வார்.

          மேலும், அதியமான் பதில் சொல்ல மறந்துள்ள கேள்விகள் இவை,
          //
          பினாயக் சென்னோ அல்லது கண்ணபிரானோ மாவோயிஸ்டுகளினுடையதை அநியாயமான போராட்டம் என்று சொல்லியுள்ளார்களா எங்காவது?
          //

          //மேலும், மனித உரிமைவாதி பினாயக் சென் கட்டுரையில் நீங்கள் ஏன் சம்ப்ந்தமில்லாமல் ஸ்டாலின் சோவியத் ரஷ்யா என்று பேச வேண்டும்? அதன் நோக்கம் என்ன? அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் முனையை சீர்குலைப்பதுதானே? அப்படியில்லையெனில் அரசு பய்ங்கரவாதத்தை எதிர்க்கும் பணியில் இருந்து கொண்டு பேசினால் ஒரு நியாயம் உண்டு(அருந்ததி ராய், பியு சஎல், ஹிமான்சு குமார் போல).//

          +++++++++++++++++++

          //அரசு பயங்கரவாத்தை நான் எதிர்க்கவில்லை, //

          அப்புறம் வேறென்ன செய்றீங்க? ஞானியோட கூட்டத்துக்கு ம க இகவோட கூட்டத்துக்கு போய் உட்காந்து வருவதா? அதை உளவுத் துறை கூடத்தான் செய்யுது. உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு? பினாயக் சென்னின் கைது பற்றி பேசும் இடத்தில் நான் சோசலிச ரஷ்யாவில் நிகழ்ந்த வன்முறை பற்றித்தான் பேசுவேன் என்பவரை என்னவென்று சொல்வார்கள்? அரசு பயங்கரவாதம் அடிப்படை உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் காலத்தில் அதனை எதிர்த்து செயல்பட சக்தியை செலவழிக்க வேண்டியிருக்கும் இடத்தில் நான் 40 50 வருடத்திற்கு முந்தைய சோசலிச ரஷ்யாவின் வன்முறையைத்தான் பேசுவேன் என்பவரை பா. சிதம்பரம் வகையாறாவாகத்தான் பார்க்க இயலும். ஏன் தேவையற்ற நல்லவன் வேசம் அதியமான்?

          //? வினவு தளத்தில் தான் இருவரும் தொடர்ந்து விவாதிக்கிறோம். இணையத்தில் ம.க.இ.க வேறு எங்கு எழுதுகிறதாம் ?//

          ஓ.. இணையத்தைத் தவிர வேறெங்கும் உங்களது அறிவு தேற்றலை செய்யவில்லை இல்லையா? அவரவது நோக்கம் ஆர்வமே அவரவரது வாசிப்பைத் தீர்மானிக்கிறது. கண் முன் மக்கள் படும் கஷ்டத்துக்கு தீர்வு தேடுபவர்கள் இந்த அரசை மாற்ற வேண்டும், தூக்கியெறிய வேண்டும் என்று கூறி அதற்கு பல வழிகளை பரிந்துரைத்து அதன் போக்கில் படிக்கிறார்கள்.

          நீங்களோ நடைமுறையில் இத்தகைய போக்குகள் குறித்து அறவே புரிதலின்றி இணையத்தில் ம க இக பற்றி படித்தேன் அதை வைத்து சொல்கிறேன் என்று உங்களது அரைவேக்காட்டுத்தனத்தை விளம்ப்ரப்படுத்துகிறீர்கள்.ஏனேனில் உங்களது நோக்கம் மக்கள்து கஷ்டங்களுக்கான தீர்வைத் தேடுவதிலிருந்து வந்தத்ல்ல. மாறகா, இணையத்தில் உங்களை குத்தி குதறியதிலிருந்து வந்தது. எனவேதான் அந்த வரம்பிலிருந்தே அரசு, வன்முறை, புரட்சி பற்றிய கருத்துக்களை முன் வைக்கீறீர்கள். குறைந்த பட்சம் மா-லே கட்சிகளின் வரலாறு என்னவென்றாவது படியுங்கள்.

          —————————

          அதியமான் இதுவரை செய்துள்ளா விவாதங்களின் தரம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே. ரொம்ப நல்லவன் போல ஜெமோவின் தளத்திள் வீறாப்பு பேசி வினவில் இனி விவாதிக்க மாட்டேன் என்று சென்றவர் லிபரேட்டிரியன் என்ற பெயரில் திரும்ப வந்ததிலிருந்து அவர செய்து வருவது வெறும் திசை திருப்பு விவாதம் மட்டுமே(ஆரம்பத்திலிருந்தும் கூட அதைத்தான் செய்தார்). இவருக்கு அரசை எதிர்ப்பதோ அல்லது கண் முன் நடக்கும் அரசு-முத்லாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்ப்பதோ நடைமுறை நோக்கம் அல்ல. அவை வெறும் வார்த்தைகளில் ‘நானும் நல்லவன்’ என்பதற்காய் கண்டிக்கப்பட வேண்டிய எத்திக்கல் நடிப்புக்கு மட்டுமே தேவைப்படுபவை. அதனால்தான் இவை குறித்து பேசும் ஓவ்வொரு இடத்திலும் சம்பந்தமேயில்லாமல் சோசலிச ரஷ்யாவில் கோடிக்கணக்கானவர் படுகொலை என்று முதலாளித்துவ பிரச்சாரத்தை விடாப்பிடியாய் செய்து வருபவர். இவரிடம் விவாதம் செய்ய வேண்டிய அவசிய்மோ, நேரமோ எதுவும் எனக்கு கிடையாது. எப்படி பா. சிதம்பரம் போன்ற பச்சை கிரிமினல்களிடம் விவாதிக்க எதுவுமில்லையோ அதுபோலத்தான் அதியமானிடமும்.

          வினவு தளத்தில் அவர் காறி உமிழ்ந்து செல்கின்றவற்றை சுத்தம் படுத்தும் நோக்கத்தில்தான் அவரிடம் இங்கு விவாதிக்கப்படுகிறதேயன்றி, இதயே அவரை ஏதோ மனிதாபிமானி, மக்கள் நலனில் அக்கறையுள்ளவர் என்று தோழர்கள் அங்கீகரித்துவிட்டதாக அவர் எண்ணிக் கொண்டு விவாதத்திற்கு வா என்று கூப்பிடுவதை நினைத்து விலா நோக சிரிக்க மட்டுமே முடியும். இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாதிகள் வினவில் விவாதிக்க அழைப்பு விடுத்த பொழுது கொடுத்த பதில்தான் முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதியான அதியமானுக்கும் நான் கொடுக்க விரும்புகிறேன். வடிவேலு பாணியில் உங்களுடன் ‘திரும்ப திரும்ப’ பேசி விவாதிக்கும் நேர விரயத்தை இணைய அளவில் வரம்பிட்டுக் கொள்ளவே விரும்புகிறேன் அதியமான்.

      • //முதலாளித்துவ பொருளாதாரம் 100% நிலவும் இன்றைய உலகில் உங்களால் ஒரு சில உதாரணங்களைக் கூட முதலாளித்துவத்தின் அரசியல்-பொருளாதார வெற்றிக்கு உதாரணமாகக் கொடுக்க இயலவில்லை.///

        ஏன் கொடுக்கவில்லை. மே.அய்ரோப்ப பற்றி, முக்கியமாக, ஸ்காண்டினேவிய நாடுகளான ஸ்வீடன், நார்வே, டென்மார் போன்ற நாடுகள், மற்றும் நெதர்லாந் போன்ற நாடுகள் லிபரல் ஜனனாயகம், சுதந்திர சந்தை பொருளாதாரம் with welfare state என்று மிக வெற்றிகரமாக, அருமையாக செயல்படுவதை பற்றி உங்களிடம் எத்தனை முறை சொல்லியுள்ளேன். சும்மா கதை அளக்காதீங்க நீட்டமா.

        PUCL அமைப்பு பாரபட்சமில்லாமல் மனித உரிமை மீறல்களை எதிர்த்து குறை கொடுப்பதை பற்று உம்மை விட அதிகம் அறிந்தவன். அதனால் தான் அவர்கள் முன் விவாதிக்கலாம் என்றேன்.

      • //சீரழிந்து கொண்டுள்ளதே அதனை சரி செய்ய நாங்கள் களமிறங்கியுள்ளோம் நீங்கள என்ன செய்கிறீர்கள்? இணையத்தில் வாதம் செய்வதொன்றைத் தவிர?///

        அசுரன்,

        சும்மா ‘நாங்கள்’ என்று கதையளக்க வேண்டாம். ம.க.இ.க தோழர்கள் போராடுகிறார்கள். நீங்கள் புனை பெயரில் எங்கோ இருந்து கொண்டு இணையத்தில் பேசுகிறீர். நானும் தான்.
        சரி, களப்பணி இதுவரை என்ன ஆற்றியிருக்கிறீர் ? சொல்ல முடியுமா ?

        மேலும், ம.க.இ.கவில் பல போராட்டங்கள் தவறானவை. தவறான எதிரிகளை கற்பிதம் செய்து கொள்கின்றனர். ஆனால் சில போராட்டங்கள் மிக சரியானவை. தேவையானவை.

        ஒரு முக்கிய விசியம் பற்றி விவாதிக்க முயன்றால், உடனே நீர் என்ன செய்தீர் என்று திசை திருப்வது ஏன் ? PUCL வலை மனையில் இருந்து, மாவோயிஸ்டுகளின் கொடூர கொலைகளை கண்டித்து வெளியிட்ட அறிக்கையை இங்கு எடுத்து காட்டியிருந்தேன். ஆனால் நீங்களும், வினவும் மாவோயிஸ்டுகள் புனித போராளிகள், அவர்களின் முறைகள் சரியானவை தான், தேவைதான் என்று பேசுகிறீர்கள். இது இரட்டை வேடம் தானே ? அரசு பயங்கரவாதம் தவறு. மனித உரிமை மீறல்களை அரசு செய்வது மிக தவறு. ஆனால் மாவோயிஸ்டுகள் அதே பாணியில் மனித உரிமை மீறல்களை செய்தால், அது ‘வர்கப் போர்’ ; வர்க ‘எதிர்கிகளை’ கொல்லாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்களைப் பொறுதவரை அது மனித உரிமை மீறல்கள் அல்ல. அப்படிதானே ?

        மேத பட்கர் தலைமையில் நர்மதா அணை கட்டுவதை எதிர்த்து, பல ஆண்டுகள் காந்திய முறையில் போராடினர். அவரின் போராட்ட முறையை யாரும் எதிர்க்கவில்லையே !
        அவரின் வழி தான் சரியான வழி. அதனால் தான் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

        இடதுசாரி பத்திர்கையான (அதாவது முதாலாளித்துவத்தை எதிர்க்கும்) EPWயில் சென்ற ஆண்டு வெளியான மிக முக்கிய கட்டுரை இது : (EPW posts can be viewed only for a week. then it is for subsribers. hence i downloaded them and uploaded into google docs)

        https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUNGYyOWI0OTItMWNmZi00MGRiLWEyMGMtOWIxZmVhMTRiMjE3&hl=en

        Arms Over the People:
        What Have the Maoists
        Achieved in Dandakaranya?

        • //இடதுசாரி பத்திர்கையான (அதாவது முதாலாளித்துவத்தை எதிர்க்கும்) EPWயில் சென்ற ஆண்டு வெளியான மிக முக்கிய கட்டுரை இது //

          ஹா.. ஹா.. முதலாளித்துவத்தை எதிர்த்தால் அது இடதுசாரியா? சரி, அது எந்த முதலாளித்துவத்தை எதிர்க்கிறது? உங்க ‘முதலாளித்துவமா’? க்ரோனி முதலாளித்துவமா? இல்ல உங்களுக்குப் பிடிக்காத ‘இந்திய முதலாளித்துவமா’?

        • //ஆனால் நீங்களும், வினவும் மாவோயிஸ்டுகள் புனித போராளிகள், அவர்களின் முறைகள் சரியானவை தான், தேவைதான் என்று பேசுகிறீர்கள்.//

          மாவோயிஸ்டுகள் மீதான ம க இகவின் விமர்சனமும், இது குறித்து காராசாரமாக நடந்துள்ள விவாதங்களும் தெரியாமலேயே பேசக் கூடாது. யாராவது உங்களது நண்பர்கள் (சுகுணா, ஏன் பா.ராகவனிடம் கூட கேட்கலாம் அல்லது வினவிடமே செல்பேசியில் கேளுங்கள்).

          ஆனால் விசயம் என்னவென்றால், உங்களைப் போல முதலாளித்துவத்தின் கொடூரங்களை பேசும் போது வேண்டுமென்றே திசை திருப்பும் திட்டத்துடன் பழைய காலத்து சோசலிச அபாயம் பற்றி கதைப்பது போன்ற ந்டைமுறை கொண்டவர்கள் அல்ல மற்றவர்கள்.

          எனவேதான், பியுசிஎல் மாவோயிஸ்டுகள் பற்றிய விமர்சனத்தை தனியாகவும், அரசு பயங்கரவாதம் பற்றியதை கூர்மையான முனையிலும் செய்கிறது. அருந்ததி ராயிலிருந்து- மேதா பட்கர் வரை அனைவரும் இவ்வகையே. ம க இகவும் இதே போன்றுதான். இவர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்டுகள் மீது வெவ்வேறு அரசியல் திட்டத்தின் அடிப்படையிலான விமர்ச்னாம் உள்ளது. ஆனால் அவை எழுப்பப்படும் இடங்கள் வேறு.

          ஆனால் நீங்களோ அரசு பயஙக்ரவாதம், முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு காபந்து செய்யும் வகையில் அவற்றை பேசும் இடங்களில்தான் இந்த பிரச்சினையை அஜெண்டவாக கொண்டு வருகிறீர்கள். இதன் அர்த்தம் என்ன? நோக்கம் என்ன?

        • //ஹா.. ஹா.. முதலாளித்துவத்தை எதிர்த்தால் அது இடதுசாரியா?///

          அசுரன்,

          நீர் இதே வினவு தளத்தில் EPW அய் மேற்கொள் காட்டியிருந்தீர்கள். இப்ப ஆணவமாக எகத்தாளமாக, அதை படித்து பார்க்காமலே இப்படி பேசுவது கபட நாடகம். சரி, அய்யா, அந்த பத்திர்க்கை ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆதரவு பத்திரிக்கையாகவே இருக்கட்டும். சாரம் என்னவென்று பார்க்காமல், இப்படி கொக்கரித்தால், உண்மைகள் மறையாது. இடதுசாரி / வலதுசாரி பற்றி உமது வியாக்கியனம் மட்டும் தான் சரியானது என்று ஏற்க்கமுடியாது. எமக்கும் கொஞ்சம் பொது அறிவு உண்டு.

  11. //எனவேதான், பியுசிஎல் மாவோயிஸ்டுகள் பற்றிய விமர்சனத்தை தனியாகவும், அரசு பயங்கரவாதம் பற்றியதை கூர்மையான முனையிலும் செய்கிறது. அருந்ததி ராயிலிருந்து- மேதா பட்கர் வரை அனைவரும் இவ்வகையே. ம க இகவும் இதே போன்றுதான். இவர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்டுகள் மீது வெவ்வேறு அரசியல் திட்டத்தின் அடிப்படையிலான விமர்ச்னாம் உள்ளது. ஆனால் அவை எழுப்பப்படும் இடங்கள் வேறு.///

    கடந்த இரு ஆண்டுகளாக வினவு தளத்தில் அப்படி ஒரு விரிவான விமர்சனத்தை நான் இதுவரை படித்ததில்லை. மாறாக, திரு.கண்ணபிரான் அவர்கள் பற்றிய கட்டுரையில், மாவொயிஸ்டுகளின் நியாயமான போராட்டம் என்று தான் எழுதுகிறார்கள். அதென்ன கூர்மையான முனை ? அந்த முனை ஒரு பக்கத்தை மட்டும் தான் எழுதுமோ ?

    திரு.கண்ணபிரான் அவர்கள் பற்றிய வினவு கட்டுரையில், பின்னூட்டத்தில், நான் PUCL வலைமனை அறிவிப்பை எடுத்து இட்டுள்ளேன். முழுசா படித்துவிட்டு நேர்மையா பதில் சொல்ல முயலவும். மாவோயிஸ்டுகளின் கொலைகளை கடுமையாக கண்டனம் செய்த அறிக்கை அது. அதே போல் வினவு என்றாவது விமர்சனம் செய்துள்ளதா ? எங்கே ?
    சும்மா கதை விடாதீங்க.

    ///ஆனால் நீங்களோ அரசு பயஙக்ரவாதம், முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு காபந்து செய்யும் வகையில் அவற்றை பேசும் இடங்களில்தான் இந்த பிரச்சினையை அஜெண்டவாக கொண்டு வருகிறீர்கள். இதன் அர்த்தம் என்ன? நோக்கம் என்ன?///

    மாவோயிஸ்டுகளை என்ன நோக்கத்தில் நீங்கள், கண்மூடித்தனமாக ஆதரிக்கிறீர்களோ, அதே போல் நான் ‘முதலாளிகளை’ கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அதென்ன காபந்து செய்யும் வகை ? சும்மா உளராதீங்க. உள்னோக்கம் கற்பிப்பதுதானே உங்க பாணி. மதவாதிகளின் பாணியும் அதேதான்.

    ஸ்டாலின், மாவோ காலங்களின் நடந்த மீறல்களை பற்றி அருந்ததி ராய், PUCL என்ன கருதுகிறது என்று பார்போமா ? நான் சொல்வது சரியா, அல்லது உம்மை போன்ற அப்பாவி கம்யூனிஸ்டுகள் நம்புவது சரியா என்று, தொடர்ந்து நாமே விவாதிப்பதை விட, இரு தரப்பினரின் பெரும் மதிப்பையும், நம்பிக்கையும் பெற்ற PUCL அமைப்பினரின் அலுவலகத்தில், அவர்களை நடுவராக கொண்டு, நேரில் பேசலாம் என்றுதான் அழைத்தேன். வினவுவை அழைத்து நாளாயிற்று. பதில் இல்லை. நான் சென்னையில் தான் உள்ளேன். எப்போதும் தயார்.

    • //மாறாக, திரு.கண்ணபிரான் அவர்கள் பற்றிய கட்டுரையில், மாவொயிஸ்டுகளின் நியாயமான போராட்டம் என்று தான் எழுதுகிறார்கள். அதென்ன கூர்மையான முனை ? அந்த முனை ஒரு பக்கத்தை மட்டும் தான் எழுதுமோ ?//

      பினாயக் சென்னோ அல்லது கண்ணபிரானோ மாவோயிஸ்டுகளினுடையதை அநியாயமான போராட்டம் என்று சொல்லியுள்ளார்களா எங்காவது?

      • ///பினாயக் சென்னோ அல்லது கண்ணபிரானோ மாவோயிஸ்டுகளினுடையதை அநியாயமான போராட்டம் என்று சொல்லியுள்ளார்களா எங்காவது?///

        PUCL condemns the Killings of Eastern Frontier Rifle jawans by the Maoist

        PUCL strongly condemns the brutal firing on the camp of the Eastern Frontier Rifle jawans killing 24 of them on 15 February 2010. It is a reprehensible act of gravest human rights violation by the group of CPI (Maoists) who claimed the responsibility of the act.

        PUCL believes that acts of violence like this have no place in a democratic society such as ours that has in it all the means of conflict resolution through negotiations. It is a long standing firm belief of PUCL that violence in any form can never be a means to achieve any end howsoever grand that might be.

        PUCL appeals to both the maoist and the state to suspend the hostilities and engage in negotiations to address the outstanding issues of the affected people like displacement, development and livelihood.

        — Pushkar Raj General Secretary, PUCL, 16 February 2010

        http://www.pucl.org/Topics/Industries-envirn-resettlement/2010/maoist-kilings.html

      • //அநியாயமான போராட்டம் //

        இங்கே எந்த இடத்தி ல் மவோயிஸ்டுகளின் போராட்டம் அநியாயமானது என்று சொல்லப்பட்டுள்ளது? மாவோயிஸ்டுகள் படுகொலை செய்வது தவறு, கண்டிக்கத்தக்கது என்று பியு சிஎல் சொல்கிறது என்றால் அதனை அவரகளின் போராட்டம் அநியாயமானது என்று சொல்வதாக அதியமான் பொழிப்புரை வழங்க வேண்டிய நோக்கம் என்ன?

        • //மாவோயிஸ்டுகள் படுகொலை செய்வது தவறு, கண்டிக்கத்தக்கது என்று பியு சிஎல் சொல்கிறது என்றால் அதனை அவரகளின் போராட்டம் அநியாயமானது என்று சொல்வதாக அதியமான் பொழிப்புரை வழங்க வேண்டிய நோக்கம் என்ன///

          ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா அசுரன். போராட்ட முறைகள் பற்றி தான் விவாதமே. அதை பற்றி தான் பி.யு.சி.எல் மிக தெளிவாக கண்டித்துள்ளது. வன்முறை தீர்வாகாது என்றும் தொடர்ந்து பேசுகிறது. அது எத்தகைய உயர்ந்த லட்சியத்திற்க்காக என்று சொல்லப்பட்டாலும். அவர்களின் அறிக்கை அதை தான் மிக தெளிவாக சொல்கிறது. சும்மா வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள்.

          மேதா பட்கர் கூடாத்தான் நர்மதா அணையால் பாதிக்கப்ட்ட, நிலங்களை இழந்தவர்களுக்குகாக பல ஆண்டுகள் தொடர்ந்து போராடுகிறார். அவரின் போராட்ட முறை பற்றி யாராவது கண்டித்தார்களா என்ன ? விதண்டாவாதம் புரிகிறீர்கள்.

    • //கடந்த இரு ஆண்டுகளாக வினவு தளத்தில் அப்படி ஒரு விரிவான விமர்சனத்தை நான் இதுவரை படித்ததில்லை.//

      ம க இகவை வினவை மட்டும் படித்து புரிந்து கொண்டுதான் உங்களது மேதாவித்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் என்னால் சொல்ல் இயன்றது இதுதான். வயது வ்ளர்ந்தால் மட்டும் போதாது, நமது வாசிப்பையும் ஆழமாகவும், விசாலமாகவும் செய்ய வேண்டும்.

      • அசுரன்,

        உம்மிடம் மரியாதையா பேசியதுதான் எம் தவறு. கேட்ட கேள்விக்கு ஒழுங்கா, நேர்மையா பதில் சொல்ல முடியாமல் இப்படி கண்டபடி பேசுவதுதான் மார்க்சிய பாணியா ? வினவு தளத்தில் தான் இருவரும் தொடர்ந்து விவாதிக்கிறோம். இணையத்தில் ம.க.இ.க வேறு எங்கு எழுதுகிறதாம் ? ஏன் வினவு இரண்டு வருடங்களில் அப்படி எழுதவில்லை என்று கேட்டால், பதில் சொல்ல முடியாமல், எமது வாசிப்பின் ‘ஆழத்தை’ பற்றி பேசுகிறீர். என்னாலும் இதற்க்கு தக்க பதில் சொல்ல் முடியும். ஆனால் சின்னபயலுக்கு, தெளிவில்லாமல் பேசுபரிடம் தொடர்ந்து பேசி என்ன பயன் ?

    • //அருந்ததி ராய், PUCL என்ன கருதுகிறது என்று பார்போமா ? //

      அருந்ததி ராயும், பியு சி எல் வும் எனது ஆசான்கள் அல்ல. மார்க்சிய லெனினிய கட்சிகள் இந்தியாவில் நடத்திய சித்தாந்த போராட்டத்தின் வரலாறு தெரியாத நீங்கள். ‘நான் தவறா, நீ தவறா என்று பார்ப்போமா?’ என்று சிறு பிள்ளை போல நீட்டி முழக்குவது சிரிப்பை வரவழைக்கிறது. உங்களது நோக்கமும் கூட இதனை தாண்டி வேறில்லை – அதாவது வினவு தவறா, அல்லது அதியமான் தவறா என்கிற சிறு பிள்ளை விளையாட்டைத் தாண்டி.

      • //சிறு பிள்ளை போல நீட்டி முழக்குவது சிரிப்பை வரவழைக்கிறது. உங்களது நோக்கமும் கூட இதனை தாண்டி வேறில்லை – அதாவது வினவு தவறா, அல்லது அதியமான் தவறா என்கிற சிறு பிள்ளை விளையாட்டைத் தாண்டி.///

        yeah. you may be you are right. i should not be playing with a kid like you here. all you can do is laugh foolishly about this serious matter. and dodging the core issue of ‘what is meant by human rights’ ;

  12. மேலும், மனித உரிமைவாதி பினாயக் சென் கட்டுரையில் நீங்கள் ஏன் சம்ப்ந்தமில்லாமல் ஸ்டாலின் சோவியத் ரஷ்யா என்று பேச வேண்டும்? அதன் நோக்கம் என்ன? அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் முனையை சீர்குலைப்பதுதானே? அப்படியில்லையெனில் அரசு பய்ங்கரவாதத்தை எதிர்க்கும் பணியில் இருந்து கொண்டு பேசினால் ஒரு நியாயம் உண்டு(அருந்ததி ராய், பியு சஎல், ஹிமான்சு குமார் போல). நீங்களோ முழு நேரமும் அரசு-முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பின் போது மட்டும் வந்து ஆஜராகி அங்கு நியாய்வாதம் பேசினால் அதன் நோக்கமும், திட்டமும் வேறாதகவும் என்னால் புரிந்து கொள்ளப்பட இய்லாது.

    குறைந்த பட்சம் உங்களது கருத்து நேர்மையாக களத்தில் இறங்கி அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பேசுங்கள். பிறகு உங்களது நடுநிலையை ஆய்வு செய்யலாம்.

    • ஏன் சம்பந்தமில்லை. அரசு பயங்கரவாத்தை எதிர்த்து, பழகுடியுனருக்காக போராடுபவர்கள் மாவோயிஸ்டுகள் என்று கருதப்படுகிறது. அவர்களின் பெயரில் இருக்கும் ‘மாவோ’ வின் கொள்கைகள் மற்றும் வரலாறு என்ன சொல்கிறது என்பதை பற்றி பேசாமல், வேறு எதை பேசுவதாம் ? மிக முக்கியமாக, மாவோயிஸ்டுகள் தங்கள் போரில் வெற்றி பெற்றால், பிறகு என்ன முறையில் தீர்வை அளிப்பார்கள் என்பதை எப்படி தெரிந்துகொள்வது ? அவர்களின் பெயரில் இருக்கும் மாவோவின் கொள்கைகளை நடை முறை படுத்துவார்கள் என்பது நிச்சியம்.

      மனித உரிமை universally applicable. அதை தான் நான் சொல்கிறேன். PUCL, அருந்ததி ராய் போன்றவர்களும் அதை தான் சொல்கிறார்கள். உங்களை தவிர. மாவோயிஸ்டுகளை தவிர. இன்றே மாவோயிஸ்டுகளின் மீறல்கள் இந்த அளவில் இருந்தால், அவர்கள் அதிகாரத்தை கைபற்றினால் என்ன செய்வார்கள் என்பதை வரலாற்று பார்வையோடும், EPW கட்டுரைகளின் முடிவுகளை கொண்டும் தான் நிர்ணியக்க முடியும்.

      ஸ்டாலின், மாவொ காலங்களை பற்றி ஏன் பேச கூடாது. சம்பந்தமில்லை என்று எப்படி சொல்கிறீர்கள். மிக அதிகம் சம்பந்தம் உள்ளது. எமக்கும் உமக்கும் அந்த காலகட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி பல காலமாக வாக்குவாதம். பிடிவாதமாக அனைத்து தரவுகளையும் பொய் என்று நிராகரிக்கிறீர்கள். PUCL இதை பற்றி என்ன கருதுகிறது என்று கேட்டறிவோமே ? Why not ? it is not irrelevant since the maoists certainly consider Mao and Stalin’s methods as final solution to the problems, poverty, etc of India, esp the tribals.

      அருந்ததி ராய் மாவொ பற்றி சொன்னதை ஏற்பீர்களா என்ன ? பினாயக் சென் என்ன கருதுகிறார் என்று தெரியுமா ? மனித உரிமைகளை யார் எங்கு எப்போது மீறினாலும் அதி மிக தவறு என்றே கருதுவர். ஆனால் நீங்கள் அதை மட்டும் மழுப்புவீர்கள். இரு தரப்பின் மீறல்களை ’மட்டும்’ (மீண்டும் சொல்கிறேன் ‘மட்டும்’) தொடர்ந்து பேசுவீர்கள். அந்த EPW கட்டுரை எழுதியவர்கள் என்ன அரசு பயங்கரவாத கைக்கூலிகளா அல்லது மேத பட்கர் போன்ற இடதுசாரிகளா ? உண்மையை நேரடியாக சந்திக்க moral courage நிறைய வேண்டும் தம்பி.

      இறுதியாக, உண்மைகளை எதிர்கொள்ளும் moral courage உமக்கும், வினவுக்கும் இல்லை. இல்லாவிட்டால் ஒரு நேரடி விதத்திற்க்கு நான் ஒத்தை ஆளாக, பகிரங்கமாக அழைத்தும் பதில் சொல்லாமல், தவர்க்கும் escapists.

      • ///இரு தரப்பின் மீறல்களை ’மட்டும்’ (மீண்டும் சொல்கிறேன் ‘மட்டும்’) தொடர்ந்து பேசுவீர்கள். /// எழுத்து பிழை. ’ஒரு தரப்பின்’ என்று வாசிக்கவும்.

      • //ஏன் சம்பந்தமில்லை. அரசு பயங்கரவாத்தை எதிர்த்து, பழகுடியுனருக்காக போராடுபவர்கள் மாவோயிஸ்டுகள் என்று கருதப்படுகிறது. அவர்களின் பெயரில் இருக்கும் ‘மாவோ’ வின் கொள்கைகள் மற்றும் வரலாறு என்ன சொல்கிறது என்பதை பற்றி பேசாமல், வேறு எதை பேசுவதாம் ?//

        இப்போ கூட பாருங்க அதியமான் அரசு பயங்கரவாதத்தை பற்றி பேசாமாட்டாராம். ஏனேனில் அதைத்தான் அவர் கண்டிக்கிறாரே, அது போதாது? ஆனால் அதனை எதிர்த்துப் போராடும் மாவோயிஸ்டுகள் பற்றி ‘மட்டும்’ விரிவாகப் பேசுவாராம். அதனால்தான சொல்கிறோம் அதியமான், நீங்களும் அருந்ததிராயும், நீங்களும் பியு சி எல்லும் ஒன்றல்ல.

        அவர்களெல்லாம் மாவோயிஸ்டுகளை கண்டிக்கின்ற அதே நேரத்தில் அரசு பயங்கரவாத் எதிர்ப்புப் போரின் கூர் முனையில் மாவொயிஸ்டுகளுடன் தோள் சேர்ந்து நிற்கிறார்கள். நீங்கள்? அருந்ததி ராயை விமர்சித்த ஜேமோவுடன் நிற்கிறீர்கள்.

        • //நீங்கள்? அருந்ததி ராயை விமர்சித்த ஜேமோவுடன் நிற்கிறீர்கள்//

          எமது பொறுமையை மிகவும் சோதிக்கிறீர்கள் அசுரன். ஜெமோவின் அனைத்து கருத்துக்களையும் அப்படியே எற்க்கவில்லை. பல விசியங்களில், முக்கியமாக அருந்ததி ராய் பற்றிய நிலைபாடுகளில் முரண்படுகிறேன். உடனே இப்படி over simplify and gross generalisation செய்வதுதான் முட்டாள்தனம்.

          அரசு பயங்கரவாததை பற்றி நான் பெரிசா எழ்தவில்லை என்றால், நீங்களும் வினவும் கூடத்தான் மாவோயிஸ்ட் பயஙக்ரவாதத்தை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. மேலும் நியாயப்படுத்துகிறீர்கள். பல நூறு அப்பாவிகளை கொன்றனர். பாலங்களை, ரயில்களை, பள்ளி கட்டிடங்களை, அரசு அலுவலங்களை தொடர்ந்து தகர்கின்றனர். அப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூட வினவு மற்றும் நீர் ‘எதிர்த்து’ , ‘கண்டித்து’ எழுதவில்லை. ஆனால் நான் கருத்து சொல்லாமல் இருந்தால் அது தவறு ? நல்ல நியாயம். மேலும் தேவைபடும் போது, அரசு பயங்கரவாதத்தை கண்டித்து இங்கு எழுதுகிறேன். நீங்கள் உங்க ஆளுங்க பற்றி அப்படி எழுதவே மாட்டீங்க. முதலில் இந்த ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலை பயன்படுத்த நான் தயஙகவில்லை. இரு தரப்பையும் பற்றி தான். ஆனால் நீர் அரசு தரப்பை மட்டும் தான் பயங்கரவாதம் என்பீர். மாவோயிஸ்டுகள் செய்வது புனித போர். அல்லது வர்க போர். அது உங்கள் பார்வை. ஆனால் நான் அதை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது. நல்ல கதை.

    • //குறைந்த பட்சம் உங்களது கருத்து நேர்மையாக களத்தில் இறங்கி அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பேசுங்கள். //

      இதையே நான் திருப்பி கேட்டால் ? மாவோயிஸ்டுகளின் மீறல்கள் பற்றி முதலில் நீங்க பேசுங்க என்று ? அரசு பயங்கரவாத்தை நான் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறேன் என்று நீங்களே எப்படி தீர்மானித்துகொள்கிறீர்கள். களத்தில் இறங்குவது பற்றி நீர் பேசுவது வேடிக்கை. இதுவரை நீர் என்ன களப்பணி செய்திருக்கிறீர் என்று ஏற்கனவே கேட்ட போது ஒரு பதிலும் இல்லை. நான் மட்டும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

      பினாயக் சென் கைதை கண்டித்து நடந்த ஒரு கூட்டத்தில் ஞாநி பேசினார். அவருடன் நானும் சென்றிருந்தேன். அந்த வாரத்தில் இதே போல் பல கூட்டங்கள். ம.க.இ.க வும் ஒரு கூட்டம் நடத்தியது. ஆனால் அனைத்தும் தனித்தனியே தான் நடந்தன. ஏன் இவர்கள் எல்லோரும் ஒரு பொது மேடையில் பேசவில்லை, ஏன் ஒன்றாக கண்டன ஆர்பாட்டம் நடத்தாமல், தனித்த்னியே செயல்படுகின்றனர் என்று வியந்து ஞாநியை கேட்டேன். கொள்கை வேறுபாடுகள் என்றார்.

    • ///மேலும், மனித உரிமைவாதி பினாயக் சென் கட்டுரையில் நீங்கள் ஏன் சம்ப்ந்தமில்லாமல் ஸ்டாலின் சோவியத் ரஷ்யா என்று பேச வேண்டும்? அதன் நோக்கம் என்ன? அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் முனையை சீர்குலைப்பதுதானே?////

      அசுரன்,

      பழங்குடியினர்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அரசு பயங்கரவாதத்திற்க்கு மாற்றாக, தீர்வாக, மாவோயிசம் தான் வைக்கப்பட்டிருக்கிறது. (மேதா பட்கர் போன்றவர்களின் தீர்வுகள் வேறு). அதை தான் நீங்களும், வினவு மற்றும் தோழர்களும் தொடர்ந்து முன்மொழிகிறீர்கள். இந்த ‘தீர்வு’ மாவோயிசம் தான் என்றால், அதன் பிதாமகன் மாவோ பற்றி, அவரின் வரலாறு பற்றி, மனித உரிமைகள் அவரின் ஆட்சியில் எப்படி இருந்தன இருந்தது பற்றி, இங்கு பேசுவது, விவாதிப்பது சாலப் பொருத்தமானது.

      உடனே எம் நோக்கம் அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் முறையை சீர்குலைப்பது என்று மிக மிக தவறாக, அயொக்கியத்தனமாக அனுமானித்துக்கொண்டு இப்படி முத்திரை குத்துகிறீர்கள். (மதவாதிகளின் பாணி இதுதான்). அரசு பயங்கரவாத்திற்க்கு மாற்று வேறு உண்டு. அதை தான் PUCL மற்றும் திரு.பினாயக் சென் முன்மொழிக்றார்கள். மேதா பட்கர் அந்த முறையில் தான் குஜராத், மகராஸ்ட்ராவில் போராடினார். மிகவும் மதிக்கப்படுகின்றனர்.

      மேலும் மாவோயிசத்தை தீர்வாக வைக்கும் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளின் விளைவை பற்றி, பழங்குடியினருக்கு அவர்களால் ஏற்பட்ட விளைவுகளை பற்றி அந்த EPW ஆய்வு மிக விரிவாக, ஆழமாக பேசுகிறது. அதை படிக்காமலேயே, வெற்று பேச்சு பேசுவது, உம்மை நீரே ஏமாற்றி கொள்ளும் வேலை. அறிவுலகம் அப்படி செயல்படாது.

      • //பழங்குடியினர்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அரசு பயங்கரவாதத்திற்க்கு மாற்றாக, தீர்வாக, மாவோயிசம் தான் வைக்கப்பட்டிருக்கிறது. (மேதா பட்கர் போன்றவர்களின் தீர்வுகள் வேறு). அதை தான் நீங்களும், வினவு மற்றும் தோழர்களும் தொடர்ந்து முன்மொழிகிறீர்கள். //

        இந்தக் கட்டுரையில் எங்குள்ளது?

        • நான் கேட்ட பல அடிப்படை கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், மழுப்பி, இதை மட்டும் கேட்டும் உமது திறமை தான் மெச்சதகுந்தது அசுரன் !!

          திரு.கண்ணபிரான் அவர்களை பற்றி வினவு மிக சமீபத்தில் எழுதிய அஞ்சலி கட்டுரையில், பின்னுட்டதில் தெளிவாக நிருபித்திருந்தேன். பார்க்காது போல பாசங்கு செய்யாதீங்க. அதுசரி, வினவின் நிலைபாடு என்னவென்று தெளிவாக ஏன் எழுதாமல் டபாய்க்கிறார்கள் ?

        • ///போலீசின் பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான நக்சல்பாரி புரட்சியாளர்களின் நியாயமான போராட்டங்களையும் சமப்படுத்தி, இரண்டையும் “வன்முறை” என்று கூறும் சில மனித உரிமை அமைப்புகளின் போலித்தனமான ‘நடுநிலைக்கு’ மாறாக, ////

          அப்படியா ? அவர் தலைவராக செயல்பட்ட PUCL அமைப்பின் வலைமனையில் இருந்து :

          http://www.pucl.org/Topics/Industries-envirn-resettlement/2010/maoist-kilings.html

          PUCL strongly condemns the brutal firing on the camp of the Eastern Frontier Rifle jawans killing 24 of them on 15 February 2010. It is a reprehensible act of gravest human rights violation by the group of CPI (Maoists) who claimed the responsibility of the act.

          PUCL believes that acts of violence like this have no place in a democratic society such as ours that has in it all the means of conflict resolution through negotiations. It is a long standing firm belief of PUCL that violence in any form can never be a means to achieve any end howsoever grand that might be.

          PUCL appeals to both the maoist and the state to suspend the hostilities and engage in negotiations to address the outstanding issues of the affected people like displacement, development and livelihood.
          – Pushkar Raj General Secretary, PUCL, 16 February 2010

          PUCL அமைப்பு நீங்க சொல்ற மாதிரி, (அல்லத் உஙகளை மாதுரி) மாவோயிஸ்டுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. நியாயப்படுத்துவதில்லை. மேற்கொண்ட உங்க ‘கருத்து’ அவர்களுக்கும் அப்ப பொருந்தும். மேற்கொண்டு அவர்கள் முன்னிலையிலேயே விவாதிக்க நான் தயார்

      • // அரசு பயங்கரவாத்திற்க்கு மாற்று வேறு உண்டு. அதை தான் PUCL மற்றும் திரு.பினாயக் சென் முன்மொழிக்றார்கள். மேதா பட்கர் அந்த முறையில் தான் குஜராத், மகராஸ்ட்ராவில் போராடினார். மிகவும் மதிக்கப்படுகின்றனர்.//

        திரும்பவும் முதல்ல இருந்தா? அசுரன் கொடுத்த இந்த சுட்டியை படித்து பார்க்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசு பயங்கரவாதத்தை ‘மாற்றுப்’ பாதையில் எதிர்த்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பு…

        “The danger of Being good”
        http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne260211Coverstory.asp

        • //அரசு பயங்கரவாதத்தை ‘மாற்றுப்’ பாதையில் எதிர்த்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பு///

          முதலில் நான் அளித்த அந்த EPW சுட்டியை முழுசா படித்துவிட்டு வாருங்க. பிறகு இதை பற்றி பேசலாம். மேலும் PUCL மற்றும் இதர ‘நல்லவர்கள்’ மிக தெளிவாக, மாவோயிச பாதையை நிராகரிப்பதை எடுத்துகாட்டியும், தொடர்ந்து மழுப்பல்கள் உம்மிடமிருந்து. அவர்கள் யாரும் உம்மை போல் வாதாடவில்லை.

          அடிப்படையான விசியம் : மாவோயிஸ்டுகளின் நோக்கம் பழங்குடியினர்களின் நிலங்களை பாதுகாக்க அல்ல. அதிகாரத்தை கைப்பற்றுவதே நோக்கம். இன்றைய சாக்கு, பழங்குடிகளின் நலன். ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. அப்படியென்றால் பாஸ்கோ, வேதாந்தா, டாடா நிறுவனங்களில் புவவனேஸ்வர் அலுவலங்கள், இதர இடங்களில் ஏன் ஒரு தாக்குதலும் நடத்தவில்லை ?

          சரி, 1991க்கு பின் தான் இந்த தனியார்மயம், அன்னிய முதலீடுகள். ஆனால் 60களில் இருந்து தொடர்ந்து பல பெயர்களில் அந்த பகுதிகளில் இருந்து போராடுகிறார்கள் அவர்கள். அன்று தனியார் சுரங்கங்கள் இன்று போல் அனுமதி இல்லை. இருந்த நிலக்கரி சுரங்கங்களையும் தேசியமயமாக்கினார்கள். மேலும் Coal India Ltd எனப்படும் அரசு துறை பெரு நிறுவனம் கையக்ப்படுதிய / கையகப்படுத்தும் நிலங்களின் அளவு எத்தனை பல்லாயிரம் ஏக்கர்கள் என்று தெரியுமா ? அதன் மூலமும் ஆதிவாசிகள் displacement பெரும் அளவில், இதே பாணியில் தான் நடக்கிறது. நஸ்ட ஈடும் அதே அளவில் தான்.
          இவர்களுக்கு எதோ ஒரு சாக்கு வேண்டும். அல்லது இவர்களை நியாயப்படுத்துவோர்களுக்கு எதோ ஒரு சாக்கு வேண்டும். அவ்வளவு தான்.
          ஆதிவாசிகள் முன்னேறவிடாமல் தொடர்ந்து வறுமையில் இருப்பதே அவர்களுக்கு சவுரியம். அதை பற்றி அந்த EPW ஆய்வு மிக விரிவாக பேசுகிறது. தரவுகளுடன். அதை பற்றி பேசலாமா ?

          சரி, மாவோயிஸ்டுகள் வென்றால், பிறகு கனிமவளங்களை ‘சுரண்டாமல்’ , ஆதிவாசிகளின் இன்றைய வாழ்க்கை முறையை பாதிக்காமல், அப்படியே விடப்போகிறார்களா என்ன ? கட்டாயம் ஒரு புதிய செம்புரட்சி அரசு நாட்டை முன்னேற்றம் அடைய இதெ சுரங்கங்களை புதிய வீரியத்துடன் செயல்படுத்தும். என்ன, தனியார்களுக்கு பதில், அரசு துறைகள் செய்யும். சோவியத் ரஸ்ஸியாவில் அன்று செய்தது போல். அன்று எதிர்க்கும் ஆதிவாசிகளை ஈவிரக்கமில்லாமல், அந்த பகுதிகளை விட்டு வெளியேற்றி, நசுக்கும்.

          இன்று உள்ள அரசு பயங்கரவாதத்தை விட பல ஆயிரம் மடங்கு கொடுமையான ‘புதிய அரசு பயங்கரவாதம்’ நிகழும். இதை பற்றியும் விவாதிக்கலாம். வரலாற்று ஆதாரங்களை கொண்டு.

  13. //நாமும் மருத்தவர் பினாயக் சென் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.//

    இதுதானே இங்கு சொல்லப்பட்டுள்ளது? பல கட்டுரைகளில் சோசலிச ரஷ்யா, மாவோ பற்றி நீங்களும் பேசியுள்ளீர்கள். அதனை மறுத்தும் வாதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உங்களது மாறாத நடைமுறை ஒன்றே ஒன்றுதான், எல்லா இடத்திலும் சோசலிச வன்முறை என்று பிரச்சாரம் செய்வது. ஏனேனில் உங்களது அன்பு முதலாளித்துவத்தை நல்லவனாகக் காட்ட வேறெந்த நேர்மறை அனுபவத்தையும் இந்த உலகில் முதலாளித்துவம் விட்டுச் செல்லவில்லை. உங்களாலும் காட்ட இயலவில்லை. எனவேதான் சோசலிச பீதியூட்டி உங்களை-முதலாளித்துவத்தை நல்லவனாக்கிக் கொள்ளும் ஒரே உத்தியை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இதனை மீறி வினவு தளத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் எனில் அது எமது ஜனநாயக நடைமுறைக்கான ஆதாரமேயன்றி உங்களை மனிதாபிமானியாக தோழர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதற்கான ஆதாரமல்ல. இதனை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

  14. @அதியமான்
    //சரி, திரு.பினாயக் சென் தலைவராக இருந்த PUCL அமைப்பின் சென்னை அலுவலகத்தில், அவர்கள் முன்னிலையில் இவை பற்றி நேரில் விவாதிக்கலாமா ? உங்கள் திருமுகம் காண ஆவலாக இருக்கிறேன் !//

    தோழர்களின் முகங்களையும் முகவரிகளையும் தெரிந்து கொள்வதில் உங்களுக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம் போல..??!!
    ஏதாவது சீக்ரட் அஜெண்டா உண்டா? LOL

    • போதெம்கின்,

      உங்க பெயர் காரணம் பற்றி : Battleship Potemkin பற்றி முன்பே படித்திருக்கிறேன். செம்புரட்சியில் முக்கிய களம்.

      அதைவிட Battleship Potemkin என்ற மிக அருமையான திரைபடத்தை இயக்கிய இயக்குனர் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். செர்கி அய்ன்சென்ஸின் என்னும் மேதை அவர். உலகின் மிக முக்கிய இயக்குனராக கொண்டாடப்படுபவர். அவரின் கதி பின்னாட்களில் என்னாவாயிற்றி என்று தெரியுமா ? சோவியத் ரஸ்ஸியாவில் அவர் பல முனை தாக்குதல்களை, மிரட்டலகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவரின் பாணி பற்றி தாக்குதல்கள். தம்மை காப்பறிக்கொள்ள தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.
      இல்லாவிட்டால் அவரையும் ‘திரிபுவாதி’ என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.

      மனித உரிமைகள் என்ற கோணத்தில், ஒரு கலைஞனை எப்படி ஒரு சித்தாந்தம் நசுக்கியது என்பதை பற்றி பேசலாம்.

Leave a Reply to போதெம்கின் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க