Wednesday, November 6, 2024
முகப்புகட்சிகள்தி.மு.ககோவை என்.டி.சி தேர்தல்: "நக்சலைட்டுகளின்" வெற்றிவிழா பொதுக்கூட்டம்!

கோவை என்.டி.சி தேர்தல்: “நக்சலைட்டுகளின்” வெற்றிவிழா பொதுக்கூட்டம்!

-

கோவை என்.டி.சி தேர்தல் நக்சலைட்டுகளின் வெற்றிவிழா பொதுக்கூட்டம்
திரண்டிருந்த பார்வையாளர்கள்

கோவை உட்பட ஏழு பஞ்சாலைகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்சங்க தேர்தல் சென்ற 2010 டிசம்பர் -18 ஆம் தேதி நடந்தது. 30 ஆண்டுகளாக நடக்காமலிருந்த தேர்தலை, 2008 ஆம் ஆண்டு கோவை முருகன் மில்லில் துவங்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (இணைப்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி) பெரும் முயற்சியால் தான் நடத்த முடிந்தது.

இத்தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க அனைத்து ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும், அவற்றின் தொழிற்சங்க முதலாளிகளும் முடிந்தளவு முட்டுக்கட்டை இட்டு தடுக்க முயன்றனர். இதை தொழிலாளிகளிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும், உயர் நீதிமன்றம் மூலம் போராடி தொழிலாளர்களுக்கு இவ்வுரிமையை வெற்றிகரமாக பெற்றுத்தந்தது, கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம்.

தேர்தலில் வெற்றிபெற ஆளும் திமுக-வின் தொழிற்சங்கம் LPF ஏராளமாக செலவு செய்து முதல் இடத்தை வென்றது.   “நக்சலைட்”என்று அனைத்து ஓட்டுக்கட்சிகளாலும் அச்சுறுத்தி பயங்காட்டப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம் இரண்டாம் இடத்தையும் “பாரம்பரிய”பெருமைகளை கூறி ஓட்டுக்கேட்ட CITU மூன்றாம் இடத்தையும் பிடித்தது. இதில் முதலடம் பிடித்த திமுகவிற்கும் இரண்டாம் இடம் வென்ற பு.ஜ.தொ.முவிற்கும் 120 வாக்குகள்தான் வேறுபாடு.

கோவை என்.டி.சி தேர்தல் நக்சலைட்டுகளின் வெற்றிவிழா பொதுக்கூட்டம்
தோழர் மருதையன் சிறப்புரை

எனவே எல்லாவித அச்சுறுத்தல்களையும் தாண்டி தொழிலாளர்கள் “நக்சலைட்களை” ஆதரித்து, சரியானவர்களை இனம் கண்டு வாக்களித்துள்ளனர்.  இவ்வெற்றியை கொண்டாட கடந்த ஞாயிறு
(09 -01 11) மாலை கோவை பீளமேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் சரியாக மாலை 6 மணிக்கு  தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி கம்பீரமாகத் துவங்கியது.

தோழர் விளைவை ராமசாமி தலைமை உரையாற்றி துவங்கி வைக்க புதிதாக துவங்க பட்ட பஞ்சாலை கிளைகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை ஒவ்வொருவராக பகிர்த்து கொண்டனர். கோவைத் தமிழில் தேர்தல் அனுபவங்களை விளக்கியதோடு, தற்போது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் திமுகவை பின்தள்ளி முதலிடத்தை நோக்கி விரைவதையும் பலத்த கை தட்டலுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர்.

பின் உயர் நீதி மன்ற வழக்கறிஞரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான தோழர் பார்த்தசாரதி இந்த தொழிற்சங்க தேர்தலுக்கான வழக்கு எப்படி நடந்தது, மற்ற கட்சிகள் என்னென்ன முட்டுக்கட்டைகளை நீதிமன்றம் மூலமாக செய்தனர், அதை எவ்வாறு பு ஜ தொ மு எதிர் கொண்டது போன்ற அனுபங்களை தொழிலாளர்களுக்கு விளக்கிப் பேசினார்.

இறுதியாக  மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரை ஆற்றினார். கடந்த கால துரோக சங்கங்களின் நோக்கங்களையும், தற்போதைய அவர்களின் செயல் தந்திரங்களையும் விளக்கிக் கூறினார். IT  ஊழியர்களின் அவலங்களையும், தொழிலாளர்களின் வலிமை எத்தகையது என்பதையும், இன்றைய உலக அரசியல் நிலைமையுடன் ஒப்பிட்டு விளக்கி பேசினார். பின் இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவினரின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.

கோவை என்.டி.சி தேர்தல் நக்சலைட்டுகளின் வெற்றிவிழா பொதுக்கூட்டம்
புரட்சிகர கலை நிகழ்ச்சி

இறுதியாக தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி  இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருவாரியாக தோழர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களுமாக 1500 பேர் வந்திருந்தனர். கூட்டம் முடிவடையும் வரை மக்கள் எழுந்து செல்லாமல் இருந்தனர் கோவையின் பீளமேடு பகுதியில் கடந்த காலங்களில் இப்படி ஒரு கூட்டம் எழுச்சியோடு நடந்தது இல்லை என்று பகுதிமக்கள் கூறினர். கூட்ட இறுதியில் கூட்டத்தில் வசூல் செய்த தோழர்களிடம் மக்கள் 7 ,200 ரூபாய்  அளித்தது தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

கோவையில் ஐம்பதுகளில் இருந்த தொழிலாளர்களின் போர்க்குணமிக்க மரபு இப்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தொழிற்சங்க தரகர்களையே கண்ட அரசும், முதலாளிகளும் இப்போது முதன்முறையாக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையை எதிர்கொள்ளுகின்றனர். வர இருக்கும் நாட்களில் கோவையின் தொழிலாளர்கள் தமிழகத்திற்கே முன்னுதாரணமான வரலாற்றை கட்டியமைப்பது உறுதி.

– தகவல், புகைப்படங்கள்: பு.ஜ.தொ.மு, கோயம்புத்தூர்
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. கோவை என்.டி.சி தேர்தல் : நக்சலைட்டுகளின் வெற்றிவிழா பொதுக்கூட்டம் !…

    கோவையில் ஐம்பதுகளுக்கு பிறகு தொழிற்சங்க தரகர்களையே கண்ட அரசும், முதலாளிகளும் இப்போது முதன்முறையாக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையை எதிர்கொள்ளுகின்றனர்….

  2. தொழிளார்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது…

    இதை போன்ற வெற்றிகளை மேன்மேலும் தொடரவேண்டும்.

    தோழர் மருதையன் அவர்களது உரையை வெளியிட முடிந்தால் சிறப்பாக இருக்கும்…

  3. எங்கள் பகுதி முற்ப்போக்கு இளைஞைர்கள் சிலர். சிலரின் தப்பான பொய் பிரசாரம் காரணமாக மக்கள் கலை இலக்கிய கழகம் பற்றியும் தோழர் மருதையன் பற்றியும் ஒரு தவறான புரிதலில் இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர்கள் தாங்கள் இது வரை தவறாக விளஙிவந்ததை எண்ணி வருதம் தெரிவித்தனர். இந்த இளைஞர்கள் FACEBOOK ல் இதர்க்கு முன் அவர்கள் செய்த தவரான பிரசாரத்திலும் அவர்களே மறு மொழி இட்டதை நிகழ்ச்சிக்கு மறுநாளே காணமுடிந்தது

  4. நானும் மேற்கண்ட வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நேரில் பங்கேற்றுவிட்டு பல்வேறு உணர்ச்சிகரமான அனுபவங்களுடன் திரும்பிவந்தேன்.

    குறிப்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களில், தொழிற்சங்கப் பொறுப்பாளர்களாக அந்தந்த ஆலைகளில் உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளிகளில் ஒருவரே தேர்வுசெய்யப்பட்டிருப்பதும், அவர்களுடைய நடைமுறையுடன் கூடிய எதார்த்த உரைகளும் அவர்களுக்குள் வேர்விட்டிருக்கும் போர்க்குணமும் உண்மையிலேயே மெய்சிலிர்க்கவைத்தது.

    வினவு வெளியிடுள்ள மேற்படி பதிவில் தி.மு.க.வின் வெற்றிக்காக அவர்கள் தவறான வழிகளில் செலவழித்ததை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ‘பாரம்பரியமாக’ தொழிற்சங்கம் வைத்து பொறுக்கிக் திண்ணும் சி.ஐ.டி.யூ.-வும் தன் பங்கிற்கு தொழிலாளர்களுக்கு புடவைகள் கொடுத்து ஓட்டு கேட்டதை மேடையில் பேசிய தொழிலாளத் தோழர்கள் தெரிவித்தனர்.

    தி.மு.க-வை விட்டுத்தள்ளுவோம். அவன் ஊரறிந்த திருடன். ஆனால், நாங்கள்தான் அக்மார்க் கம்யூனிஸ்டுகள் என்றும் இந்திய ஜனநாயகத்த்தைப் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள் என்றும் தேர்தல் ஜனநாயகத்தின் அருமை பெருமைகளைப் பற்றித் தெரியாத மூடர்களான இந்த நக்சலைட்டுகள் என்னத்த பெரிசா கிழித்துவிடுவார்கள் என்றும் பேசித்திரியும் போலிகம்யூனிஸ்டுகளை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    இந்தத் தேர்தலை நடத்தவிடாமல் கடைசி நிமிடம் வரை மார்க்சிஸ்டு கட்சியின் சார்பில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டதையும், அக்கட்சியின் முன்னணி வழக்கறிஞர் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்தார் என்பதையெல்லாம் தோழர் பார்த்தசாரதி பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் முன் தெளிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் எடுத்துவைத்தார்.

    எனவே, இந்த தேர்தலைப் பொறுத்தவரை மார்க்சிஸ்டுகள் வெறும் கம்யூனிச போலிகள் மட்டுமல்ல, அவர்கள் பேசிவருகின்ற அனைத்தையும் போலியாகத்தான் பேசிவருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவருகிறது. அத்தகைய போலிப் பேச்சுக்களின் மூலம் நத்திப்பிழைப்பது மட்டும் உண்மையாக நடந்துவருகிறது. ஜனநாயகத்தை அறவே மதிக்காத தேர்தலையே நடத்தக்கூடாது என்று சொல்லுகின்ற அவர்களது இழிநிலை அரசியல் அம்பலமாகி சந்திசிரிக்கிறது.

    நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் நடைபெறும் தேர்தலுக்காக வெட்கத்தை விட்டு ஒன்றிரண்டு சீட்டுகளுக்காக கருணாநிதி வீட்டுக்கும் ஜெயலலிதா வீட்டிற்கும் இவர்கள் அலைந்து திரிவது ஏதோ கட்சியையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கான யுக்திதான் என்று அக்கட்சியின் அப்பாவிகள் நம்பிக்கொண்டிருக்க, அவர்களது உண்மை நிலை கோவை பஞ்சாலைகளுக்கான தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் அம்பலமாகியது மிகுந்த வரவேற்புக்குரியது.

    நாம் என்னதான் அவர்களை களத்தில் அம்பலப்படுத்தி முறியடிக்க முயன்றாலும், இதுபோன்ற அவர்களது இழிநிலை அரசியலால் தங்களைத் தாங்களாகவே அம்பலப்படுத்திக் கொள்ளுகின்ற செயல்கள் உண்மையிலேயே அற்புதமானதுதான்.

    நக்சல்பரி அரசியலை உயர்த்திப் பிடிப்போம்!
    போலிகம்யூனிஸ்டுகளை மக்கள் மத்தியிலிருந்து விரட்டியடிப்போம்!!

    நன்றி!

  5. தோழர்களுக்கு செவ்வணக்கங்கள் !

    தோழர்களின் உரையையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் உரையையும், மருதையனின் உரையையும் வெளியிடவும்.

    வினவு கண்டிப்பாக வெளியிடவும்.

  6. கூட்டம் சரியாக மாலை 6 மணிக்கு தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி கம்பீரமாகத் துவங்கியது. OK
    தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. WRONG

    PLEASE CHANGE

    • நண்பர் bootham இரவு சரியாக 10 மணிக்கு சர்வதேசிய கீதம் பாடி வீரவணக்கம் செலுத்தியே நிகழ்ச்சி முடிவடைந்தது எனவே இதில் என்ன தவறு கண்டீர்கள் என குறிப்பிடுங்கள் அதுமட்டுமல்ல இறுதியாக வீரவணக்கம் செலுத்தும் வரை கூட்டம் கலையாமல் இருந்த ஆச்சர்யத்தையும் நான் இங்கே மட்டுமே இதுவரை கண்டுள்ளேன்

      • சர்வதேசிய கீதம் பாடி வீரவணக்கம் செலுத்தியே நிகழ்ச்சி முடிவடைந்தது –
        sari thaanga. pathivu ezhuthunavinga thappa ezhuthittangalonu thonuchu. athaan sonnen !

  7. தோழர்களின் உரையையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் உரையையும், மருதையனின் உரையையும் வெளியிடவும்.

  8. puratchikara ezhuchi konda ithu pontra tolirsanga koottangali irandu talaimuraikal thaandi ippothu taan parkkamudikirathu.puthiya thalaimurai puratchikara thalaimuraiaka irupathai tavira veru vazhi illai.athu ontre tiirvu fntra pori pattrikondirukkirathu.tii paravttum.sivantha valtukkal!

  9. பொதுக்கூட்டத்தில் தோழர் விளவை ராமசாமி பேசும்போது கூறியவை
    “தேர்தலில் வெற்றி பெற்ற சங்கங்களில் வெற்றிவிழா கொண்டாடுவது புஜதொமு மட்டுமே, மூன்றாமிடத்தை பெற்ற சிஐடியுவால் வெற்றியை கொண்டாடாது. ஒரு வேளை கொண்டாடினால் இரண்டாமிடத்தில் வந்தவர்கள் யார்? அவர்களின் கொள்கை என்ன? எப்படி அவர்களால் இரண்டாமிடத்திற்கு வரமுடிந்தது போன்ற கேள்விகளை போலிகளால் எதிர் கொள்ள முடியாது அது புஜதொமுவுக்கு மறைமுகமான் பரப்புரையாகிவிடும்” எனவே போலிகள் தங்களது வழக்கமான டகால்டி வேலைகளை தொடர முடியாத கையறு நிலையில் உள்ளனர்.

    கோவைக்கு பெருமை சேர்த்த கூட்டம்.

  10. தோலர் நமது ஆர்பாட்டம் அதன் போட்டோ சேதி எப்படி அனுப்புவது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க