Wednesday, October 16, 2024
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

-

  • இந்திய அரசே, தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்கு !

  • கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை உறுதி செய் !

மதுரை உயர்நீதிமன்றத்தில்  மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு!

சட்டம் யாருக்கு, எந்த வர்க்க நலனுக்கு சாதகமாக இருக்கிறது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடைசெய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி  மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும்.  2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல்  இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி  வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்டபோதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அதேபோல் மற்றொரு வழக்கில் ராமேசுவரம் மன்னார் வளைகுடாப் பகுதியானது, பல்வேறு அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் நிரம்பிய பகுதி என்பதால் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சீசன் நேரங்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிப்பார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் 1974, 1976 ன் படி கச்சத் தீவுப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தங்களின்படி  நேரடியாக கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு அளித்தால் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என்பதால் சூழ்ச்சியாக கடல் எல்லையை வரையறுப்பது என்ற அடிப்படையில், கச்சத்தீவிலிருந்து இந்திய கடல் எல்லையை வரையறுக்காமல் திட்டமிட்டே, கச்சத்தீவு இலங்கை கடற்பகுதியில் வருமாறு மாற்றி வரையறுக்கப்பட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை மையப்படுத்தி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் கடல் எல்லையை இந்திய அரசு புதிதாக வரையறுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் 15.02.2011 ல் நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து கச்சத் தீவு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

இந்த வழக்கு தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான வழக்காகும். இதில் எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் என்ன விடை தரும், வழக்கை தள்ளுபடி செய்யுமா என்றெல்லாம் வாசகருக்கு கேள்வி எழலாம்.

எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே. நீதிமன்றம் இதற்கு முகங்கொடுக்காமல் போனால் நாம் மக்கள் மன்றத்தில் இந்த கோரிக்கையை வைத்து போராடுவதே சரியாக இருக்கும்.

_________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ///எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே.///

    அப்பாத்தான் சரிப்பட்டு வரும்

    பொதுவாக மீன் புடிக்க போற மீனவர்கள் குழுவாக ஒரே குடும்பத்தை சேந்ர்தவர்கள் (தந்தை ,மகன் மாமனார், மறுமகன்)ஒன்றாக சொன்று இந்த சிங்கள் ஆர்மி காரய்ங்க கிட்ட மாட்டும் போது
    அவிய்ங்க மீனவர்களை மொட்டக்குண்டியாக்கி தூப்பக்கி முனையில் ஒருத்தர ஒருத்தர் சூத்தடிக்க வச்சு அத பாத்து இந்த சிங்கள ஆர்மிக்கார நாய்கள் கைகோட்டி சிரிப்பாய்ங்ளாம்

    இதுபோல் மாட்டும் மீனவர்கள் உயிரோடு திரும்பி வந்தாலும் மனரீதியாக செத்து நடைபிணமாகத்தான் கரை வந்து சேர்கிறார்கள்

    நம்ம மீனவர்கள் கையிலே தூப்பக்கியை கொடுத்து இப்படி சூத்தடிக்க சொல்லுறவாய்ங்க சூத்துலையே சுடனும்

    தமிழக அரசே உடனே மீனவர்களுக்கு தூப்பக்கி வழங்கு

  2. ராஜஸ்தான் மக்களின் பாதுகாப்பிற்கு அரசு ஆயுதம் வழங்கியுள்ளதாக செய்தி உண்டு…

    மேலும் மக்களின் பாதுகாப்பிற்கு ஊர் காவல் படை எனும் ஒரு அமைப்பு இருப்பதை போல் கடலில் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பிற்கு… தமிழ் மீனவர்கள் தங்களை சிங்கள கடல் படை மற்றும் இந்திய கடல் படையினரின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள தமிழ் நாடு அரசு ஆயுதம் வழங்குவது தவறானது இல்லை…

    இன்னொரு செய்தியையும் மக்களுக்கு அறியபடுத்த விரும்புகிறேன்…

    1986 ஏப்ரல் மாதம் தமிழக சட்ட மன்றத்தில் பேசிய அப்போதைய முதல் அமைச்சர் எம்ஜிஆர்… பெண்களின் பாதுகாப்பிற்கு… அவர்கள் கத்தி வைத்து கொள்ள வேண்டும் எனும் வாக்குமூலத்தின் அடிப்படையில்… சிங்கள மற்றும் இந்திய படைகளின் உயிர் மற்றும் உடமைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்…

  3. இலங்கையில் சிங்கள் மக்களுக்கு ஊர்க்காவல் படை அமைத்தும், ஆயுதமும் கொடுத்து இருக்கிறது இலங்கை அரசு.. ஆனால் சிங்களவன் எம்மைச் சுட்டுக் கொன்றிருக்க, எமது பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிக் கொள்வதில் ஏன் இத்தனைத் தடைகள்……….. செத்துப் போவது தமிழன் தானே ! என்றக் இழக்காரமா????????????????????????????????

  4. இப் பிரச்சனையை வெறும் தமிழர்-சிங்களவர் பிரச்சனையாக்கிக் கொச்சைப் படுத்துவது நல்லதல்ல.

    இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறிய மீன்பிடி மிகப் பெருமளவில் நடக்கிறது (இதற்குச் செய்மதிப் படச் சான்றுகள் உள்ளன).
    எனவே இது சும்மா கச்ச தீவைப் பற்றிய பிரச்சனை அல்ல.
    அண்மையில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் (வன்முறையின்றிச்) சிறைப்பிடித்து இந்தியத் தூதரகத்தின் முறைகேடான குறுக்கீட்டால் விடுவிக்கப் பட்ட 100+ பேர் இலங்கைக் கரை ஒரம் மீன்பிடிக்க வந்தோரே.

    பெரும் இழுவைப் படகுகளால் தமிழகம், கேரளம், கர்னாடகம் ஆகிய மாநிலங்களில் கரையோர மீன்வளமும் ஏழை மீனவர்களின் வயிற்றுப் பிழைப்பும் பாதிக்கப் படுவது பற்றி வாசித்திருக்கிறேன். இழுவைப் படகுகள் சிறு மீன்பிடி உபகரணங்களையும் சேதமாக்குகின்றன.

    இலங்கைக் கடற்படையினரது துப்பாக்கிச் சூடும் சித்திரவதையும் நிபந்தனை இன்றிக் கண்டிக்கத் தக்கன. அவ்வாறே இந்தியக் காவல் துறை இலங்கை மீனவர்களைப் பல மாதக் கணக்கில் சிறை வைத்திருப்பதும் கண்டிக்கத் தக்கது. இவற்றுக்கு உடனடித் தீர்வு வேண்டும்.

    சிறு படகுகளில் மீன்பிடிப்போரின் பாதுகாப்பும் மறு கரையில் மீன்பிடிப்பதற்கான உரிமையும் பற்றி இரு அரசாங்கங்களும் பேசித் தீர்வு காணுவது அவசியம். அதே வேளை மிகையான மீன்பிடி (குறிப்பாக, பெரும் மீன்பிடி முதலாளிகளின் இழுவைப் படகு மீன்பிடி) சாதாரண மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீன் வளத்தையும் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.

    இப் பிரச்சனையின் வர்க்கப் பரிமாணம் எங்கோ, வேண்டுமென்றே, தொலைக்கப் பட்டு வருகிறது.

  5. இக்கட்டுரை தமிழக மீனவர்கள் கொல்லப்படுதல் குறித்த பிட்ரச்சனை பற்றிப் பேசுகிறது. அவர்கள் கொசுக்கள் போலக் கொல்லப்படுதல் கண்டிக்கத்தக்கது. அரசிற்கு அழுத்தம் வழங்கப்பட வேண்டும். இதற்கும் இலங்கை மீனவர் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? அது பேசித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. பன்னாட்டு நிறுவனங்கள் பாரம்பரிய மீன்டியை அழிப்பது பிறிதொன்று. இலங்கை இந்திய ஒட்டுக் கட்சிகள் தமது சொந்த லாபத்திற்காக இவற்றை ஒரே கூடையில் போட்டு தேர்தல் சந்ததையில் விற்பனை செய்கிறார்கள்.

    • இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை எவருமே ஏற்க இயலாது.
      அதற்காகப் போராடுவதை நியாய உணர்வுள்ள எவரும் மறுக்கவும் இயலாது.
      இலங்கைப் படையினர் யாரைத் தாக்குகின்றனர் யாரைத் தாக்காது விடுகின்றனர் என்பதும் நம் கவனத்துகுரியது. பலியாவோர் பெரும்பாலும் ஏழை மீனவர்களே.
      எனவே, அதன் பின்புலத்திலுள்ள உள்ள பலவற்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியாது.

      இலங்கை மீனவர்களின் வாழ்வாதரங்கள் சூறையாடப்படுவது இங்கு பேசக் கூடாத விடயமல்ல.
      ஒன்றோடொன்று உறவுடைய பிரச்சனகளைச் சேர்த்து நோக்காவிடின் நாம் அரைகுறையான தீர்வுகளையே நாடுவோராவோம்.

      நான் குறிப்பிட்ட பிரச்சனைகளில் எந்த ஒன்றும் மற்ற எதிலும் முக்கியமற்றதல்ல; எந்த ஒன்றும் மற்றதிலிருந்து முற்றாகப் பிரித்து நோக்கக் கூடியதுமல்ல.

      தமிழகத்தில் இப் பிரச்சனை கணிசமானோரால் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதைச் சில பின்னூட்டங்களைப் பார்த்து என்னால் உணர முடிகிறது.
      அப் பார்வை மிக ஆபத்தானது.
      சிங்களம்-தமிழ் என்று பிரச்சனைகளை மிகையாக எளிமைப்படுத்தி நோக்குவது, மீன்பிடிப் பிரச்சனையின் அடிநாதமான வர்க்க நலன்கள் கண்ணுக்குப் புலனகாமல் மறைக்கிறது.

      கச்ச தீவு இரண்டு நாட்டு மீனவர்களும் பலபல ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்த ஒரு ஆளில்லாக் காடு. 1974, 76 உடன்படிக்கைகள் வரையறுக்கும் வரை இரு பகுதி மீனவர்களும் இரு கரைகளிலும் பருவங்கட்கேற்ப மீன்பிடித்து வந்தனர். அது தவிர்க்க இயலாததாக இருந்ததுடன் இன்றும் எற்கத்தக்க விடயம் ஆகும்.

      பெரும் மீன்பிடி முதலாளிகளின் பாரிய இழுவைப் படகுகள் வந்த பின்பு நிலைமைகள் மாறி விட்டன. இவற்றைப் பற்றி எல்லாம் பேசாமல் நாம் பிரச்சனையை விளங்கிக்கொள்ள மாட்டோம்.

      வருந்தத்தக்க விதமாக, இலங்கை ஓட்டுக் கட்சி எதுவுமே இலங்கைத் தமிழ் மீனவர்கட்காகக் குரல் கொடுக்கவில்லை.
      சென்ற வாரம் தமிழ் மீனவர்கள் (2 மாதங்களே முன்பு திறக்கப்பட்ட) யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
      எந்தத் தமிழ் ஓட்டுக் கட்சியும் இலங்கைத் தமிழ் மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக முன்வந்து பேசவில்லை.
      இந்தியத் துணைத் தூதரின் அத்துமீறலையோ இந்தியாவின் ஒழுங்கீனமான குறுக்கீட்டையோ அவர்கள் தட்டிக் கேட்க மாட்டார்கள்.

      • பிரச்சனையை வெறுமனே தமிழ் – சிங்கள மோதலாக அணுகுதல் எவ்வளவு தவறானதோ, எல்லை தாண்டும் மீனவர்களை அதிலும் வறிய மீனவர்களைக் கொசுக்கள் போலக் கொல்லுதலை கண்டிக்கத் மறுத்தலும் தவறானதே. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது குறித்துக் குரலெழுப்பப்படும் போதெல்லாம் இனவாதம் என முத்திரையிடுதல் பேரினவாதத்தையும் அதிகார வர்க்கத்தையும் பாதுகாப்பதாகும். ஈழத்திலிருப்பவர்கள் பன்னாட்டுக் கம்பனிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக இந்திய மீனவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுவதற்க்ய்ப் பதில் இலங்கை அரசின் கொலைகளை நியாயப்படுத்தும் பாங்கில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் மிகவும் அருவருப்பான விடயம்: ” தமிழ் – சிங்களப் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள் அப்பாவித்தனமாகத் தேசியவாதம் பேசுகிறவர்கள். பேரினவாதத்தை நியாயப்படுத்துகிறவர்களில் மார்க்சியம் பேசுகிறவர்களும் அடங்குகிறார்கள்”

      • “தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது குறித்துக் குரலெழுப்பப்படும் போதெல்லாம், இனவாதம்” என யார் சொன்னார்கள்?
        வலிந்து பொருள் கொள்ளாதீர்கள்.
        பேரினவாதம் என்னால் எங்கே எவ்வாறு நியாயப்டுத்தப் படுகிறது? னேர்மையாக விளக்க இயலுமா?

        பேரினவதத்தை எதிர்க்கிற பேரில், குறுகிய தேசியவாதத்ததை என்னால் ஆதரிக்க இயலாது.
        அதிலும் முக்கியமாக இனத்தின் பேரால் மக்களை ஏய்த்துச் சுரண்டுகிற்வர்களின் நலன்களைக் காப்பாற்றும் முயற்சிகளைக் கண்டுங் காணாததுபோல இருக்க இயலாது.

        பிரச்சனைகளின் சில பக்கங்களைத் திட்டமிட்டு ஒதுக்குவதன் மூலமே, குறுகிய தேசியவாதமும் பேரினவாதமும் சுரண்டும் வர்க்க நலன்களை காப்பாற்றிக் கொள்ளுகின்றன.

        இலங்கத் தமிழரின் எதிரிகள் சிங்களவரோ முஸ்லிம்களோ அல்ல. குறுகிய தேசியவாதத்தையும் சிறுபான்மை இன மக்களையும் வேறுபடுத்தத் தவறுகிற போதும், பேரினவாதத்தையும் பெரும்பான்மை இன மக்களையும் வேறுபடுத்தத் தவறுகிற போதும், எஞ்சுவது ஃபாசிஸ இனவெறி மட்டுமே.
        சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளும் (இன்று சிறப்பாக ராஜபக்ச ஆட்சி) தமிழ்த் தேசியவாதிகளும் (குறிப்பாகப் புலி ஆதரவாளர்கள்) சந்திக்கும் புள்ளி இதுவே.

  6. இங்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்….
    ‘லிபியாவில் கடாபிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கடாபியின் ராணுவமே கொல்கிறது’ என்பது குற்றச்சாட்டு. இதற்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய ஓநாய்கள் தீர்மானம் இயற்றின. (இவர்கள் இதுபோன்ற குற்றத்தை செய்ததே இல்லையாம்!!!!)… இங்கு விஷயம் என்னவென்றால் இதற்கு இந்தியா தனது தார்மீக ஆதரவை வழங்கி உள்ளது. தனது சொந்த மக்களை அடுத்தவன் கொல்வதை வேடிக்கை பார்க்கும் வக்கற்ற இந்திய அரசு எங்கோ நடக்கும் அநீதியை எதிர்கிறதாம். (இந்த செயலுக்கு அமெரிக்க அதிபரின் ஷூவை நக்கலாம்.)

    தான் தாக்கப்படுவதை தட்டிகேட்க பலம் இருந்தும் தட்டிகேட்காத ஒரு தகப்பன், யார் யாரையோ தாக்குவதற்கு எதிராக கொடிபிடித்து செல்வதை பார்க்கும் மகனின் மன நிலையில் தான் ஒவ்வொரு தமிழனும் இருக்கிறன். இந்தியன் என்று சொல்வதற்கு முதல் முறையாக வெட்கப்படுகிறேன் அந்த மகனின் மன நிலையில்.

  7. சிவசேகரம் அவர்கள் இப்பிரச்சனையின் மையத்தை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார். அதாவது இது கடல்தொழிலாளர்களிற்கும், இந்திய பெருமுதலாளிகளிற்குமான வர்க்கப்பிரச்சனை. இதற்குள் தமிழ் குறுந்தேசியவாதிகளின் தலையீடு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை தர்க்கரீதியாக விளக்கியுள்ளார். இலங்கை பாசிச அரசு தமிழக கடல்தொழிலாளரை கொல்வதற்கு எல்லை தாண்டுதலை சாட்டாக பயன்படுத்துகிறது. ஆனால் கடல்தொழிலாளரது ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை எல்லை தாண்ட வைத்து பலி கொடுப்பது பெருமுதலாளிகள் தான்.

  8. தன் சுய பாதுகாப்பிற்காக காவல்துறைக்கே சுட உரிமை இருக்கும் போது ; இந்த ஏழை மீனவ பாத்காப்பிற்க்கு துப்பாக்கி வழங்கினால் என்ன?

    அன்புடன்… ஆனந்த்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க