Wednesday, October 9, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!

விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!

-

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட கிளையின் சார்பில் விருத்தாசலம் பகுதியில் கடந்த ஆறுமாத காலமாக அனைத்து பள்ளி வாசல்களிலும் சென்று நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணத்தை அச்சடித்து விநியோகித்தோம். பெற்றோர்களை திரட்டி விளக்கி ஆலோசனை கூட்டம், பிறகு மூன்று நாட்கள் நகரத்தின் பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம், அதன் மூலம் பெற்றோர்களிடம் கூடுதல் பணம் கட்டியதற்கான ரசீதுடன் புகார் மனு என தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம்.

இறுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை முற்றுகையிடுவோம் என நகரம் முழுவதும் சுவரொட்டி மூலம் அறிவித்தோம். பள்ளி நிர்வாகத்திடம் நேரில் கட்டணத்தை கட்டமாட்டோம் என சண்டை போட்டோம். கட்டணத்திற்காக பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தபட்ட மாணவர்களின்  பெற்றோர்களுக்காக நேரில் சென்று நியாயம் கேட்டபோது, கட்டுபடியாகாது பள்ளியை மூடவேண்டியதுதான் என்ற பதில் தந்தது நிர்வாகம்.

உயர்ந்த தரத்தில் கல்வியை விற்கின்ற பள்ளி ஒன்றில், பெற்றோர்களை அழைத்து கூட்டம் போட்ட நிர்வாகம், “அரசு கட்டணம் வேண்டும் என்பவர்கள் கை தூக்குங்கள்” என்றவுடன் பெற்றோர்களிடம் அமைதி நிலவியது. உடனேஅரசு கட்டணம் வேண்டுவோர் அரசு பள்ளிகளுக்கே சென்று விடுங்கள், இங்கே யாரும் வெத்தல பாக்கு வைத்து அழைக்க வில்லை, கட்டணத்திற்காக நான் பிச்சைகாரி போல அலைய வேண்டய அவசியம் இல்லைஎன்று ஆண்டை, அடிமைகளிடம் பேசுவது போல பேசினார் ஒரு நிர்வாகி.

கடலூர் மாவட்ட தனியார் பள்ளி முதலாளிகள் சங்கம் அவசரமாக கூடி “பணம் கட்ட முடியாதவர்கள் நகராட்சி பள்ளிக்கு செல்லலாம், ஏழை பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அஞ்சல் வழிக்கல்வி, நடமாடும் கல்வி, திறந்த வெளிகல்விககூடங்களை அமைக்கலாம்”,என ஆலோசனை சொன்னதுடன் “நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி கட்டணம் எங்களுக்கு கட்டுபடியாகாது, ஆண்டுக்கு 15 சதவீதம் ஏற்றிதரவேண்டும் என தீர்மானம் போட்டார்கள்.

பிறகு கடலூரில் காங்கிரசு எம்.பி அழகிரி, திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோரை அழைத்து இந்தக் கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி முடித்து விட்டனர்.

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

கூடுதல் கட்டணம் கட்டியதற்கான ரசீது, மேலும் கட்ட சொல்லி மாணவர்களை துன்புறுத்தல் புகாரை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட்டு 1-3-2011 அன்று மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, மீண்டும் நகரம் முழுவதும் பிரச்சாரம் செய்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம். பிறகு பள்ளிகள் தோறும் பிரசுரம், வீடு தோறும் தாய்மார்களிடம் அச்சம் தவிர்க்க விளக்கி அழைப்பு விடுத்தோம். காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது. தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலுருந்து புறப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

டி.இ.ஒ. “எனக்கு அதிகாரமில்லை” என எங்களுக்கு ஆறுதல் சொன்னார். போலீசார் சுற்றி வளைத்து மறித்தனர். அதிகாரம் பெற்ற நபர் பேசும் வரை முற்றுகை தொடரும்,என மக்களும், தோழர்களும் உறுதியாக அறிவிக்கவே “மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இன்றே போராட்டக்காரர்களை அரசு மேல்நிலைபள்ளியில் சந்திக்கிறார்” என்பது உறுதியானவுடன் முற்றுகை தற்காலிகமாக விலக்கப்பட்டது.

மதியம் குறித்த நேரத்தில் காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பெற்றோர்களை ஆட்டோ பிரச்சாரம் மூலம் வீதி வீதியாக விசயத்தை சொல்லி அணிதிரட்டினோம். மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டண கொள்ளையை கொட்டி தீர்த்தோம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் “தமிழகம் முழுவதும் இப்படிதான் நடக்கிறது, பெற்றோர்கள் ஏன் கூடுதலாக பணம் கட்டுகிறீர்கள்,கட்டண பட்டியலை அறிவிப்பு பலகையில் ஒட்ட சொல்லி மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் உத்திரவிட்டுள்ளார், நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று கூசாமல் பொய்யை சொன்னார்.

அதற்கு மக்கள் “விருத்தாசலத்தில் எத்தனை பள்ளி கூடத்திற்கு சென்று கண்காணித்தீர்கள், ஒரு பள்ளி கூடத்தில் கூட ஒட்டவில்லை, உங்கள் உத்திரவை எந்த பள்ளி முதலாளி மதிக்கிறார்” என எதிர்கேள்வி கேட்டு உண்மையை எடுத்துரைக்க ஆய்வாளர் அமைதி காத்தார்.

“மனித உ¡¢மை பாதுகாப்பு மையத்தின் சார்பில் திரட்டிய ஆதாரங்களை உங்களிடம் புகாராக கொடுத்துள்ளோம், நடவடிக்கை எடுப்பீர்களா? என்றதற்கு “எடுக்கிறேன், எங்கள் துறை சார்பில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள், அதை ரசீது ஆதாரங்களுடன் ஒரு வாரத்திற்குள் எனக்கு அனுப்புங்கள்” என்றார். இதை தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறோம்.

தனியார் பள்ளி முதலாளிகள் கட்டுபடியாகாது என கூடுதலாக கட்டணம் வசூலிப்பது ஊரறிந்த உண்மை. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களுக்கு அரசு உத்தரவை மீறும் தைரியத்தை வழங்கியது யார்? எனக் கேட்டோம். பெற்றோர்கள் யாரும் ஆதாரங்களுடன் எங்களுக்கு புகார் அனுப்பவில்லை என்று கூறினார் அந்த ஆய்வாளர்.

“கண் முன்பு தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு புகார் கேட்கிறீர்களே, புகார் பெறுவதற்கு என்ன முயற்சி செய்தீர்கள்? பெற்றோர்கள் அச்சத்தை போக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எத்தனை முறை எச்சரிக்கை செய்தீர்கள்? நாங்கள் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை,தனியார் பள்ளிகள் மீது கட்டணத்திற்காக நீங்கள் போட்ட உத்திரவை ஏன் அமுல்படுத்த வில்லை” என்று கேட்கிறோம், ஆறுமாதம் நாங்கள் பிரச்சாரம் செய்து 60 க்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றோர்களிடம் பெற முடியும் என்றால் ,அரசு அதிகாரியாகிய உங்களால் ஏன் முடியாது? என்றோம்.

பொதுமக்களின் கேள்விகணைகளால் திணறிய அதிகாரி இறுதியாக “உங்கள் கோரிக்கையை  நடைமுறைபடுத்துகிறேன், பத்திரிகையாளர்களே எழுதிகொள்ளுங்கள், அனைத்து தனியார் பள்ளிகளிலும் நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டண விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன், நாளை 12-00 மணிக்குள் நடக்கும்,மேலும் அரசு கட்டணத்திற்கு கூடுதலாக பெற்றோர்கள் கட்டவேண்டாம். தனியார் பள்ளிகளும் வசூலிக்க கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதுவதற்கும் கட்டணம் கட்டுவதற்கும் தொடர்பில்லை பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம், என ஆவேசமாக அறிவித்தார்.

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

அவரை அனுப்பி விட்டு வந்திருந்த பெற்றோர்களிடம் தொடர்ந்து அரசையும், தனியார் பள்ளி முதலாளிகளையும், கண்காணிக்க வேண்டும், அப்போதுதான் நமது கல்வி உரிமையை பாதுகாக்க முடியும் என்றோம். தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணத்தில் மட்டுமல்ல, புத்தகம் விற்பதில், யூனிபார்மில், செருப்பில், அடிக்கிற கொள்ளை, மேலும் தாய்மொழி தமிழ் வழிக்கல்வியை, சமச்சீர்கல்வியை எதிர்த்து போராடுகிறார்கள், தடையுத்திரவு பெறுகிறார்கள், உச்சநீதிமன்றம் வரை கொள்ளையடித்த பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள், ஆங்கிலம் மட்டும் கற்பதற்கு நாம் என்ன அடிமைகளா?குழந்தைகளை பணையக்கைதியாக வைத்து பணம் பறிப்பதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்பதை விளக்கி தனியார் பள்ளிகளின் மாணவர்கள் நல பெற்றோர் சங்கம்என்று உருவாக்கி தனியார் பள்ளிகளை கண்காணிப்பதுடன்  பெற்றோர்களை சங்கமாக திரட்டவேண்டும். இந்த வெற்றி செய்தியை பிரசுரமாக அச்சடித்து நகரம் முழுவதும் விநியோகிக்க வேண்டும், என்ற முடிவுடன் புதிய சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்வுடன் பெற்றோர்கள் அச்சம் கலைந்து நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்களுக்கு உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை அடைவதற்கு தடையை மீறி பாதிக்கபட்டவர்களின் கையை பிடித்து அழைத்து சென்று அவர்களது போராட்டத்தின் மூலம் அதை அடைவதற்கு கை கொடுக்கிறது என்பதறத்கு இந்த அனுபவம் ஒரு நிரூபணம்.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்க்காக பெற்றோர் இனியும் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் சக்தியாக ஒன்று திரண்டால் விருத்தாசலத்தில் நடந்த இந்த நிகழ்வு தமிழகம் முழுமைக்கும் பரவும்.

_____________________________________________

– மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்


  1. விருத்தாசலம் – தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி ! | வினவு!…

    தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்க்காக பெற்றோர் இனியும் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் சக்தியாக ஒன்று திரண்டால் விருத்தாசலத்தில் நடந்த இந்த நிகழ்வு தமிழகம் முழுமைக்கும் பரவும்….

  2. தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக வீச்சான போராட்டததை நடத்தியுள்ள மனித உரிமை பாதுகாப்பு மையம் ,விருத்தாசலம் தோழர்களையும் பெற்றோர்களையும் மனமுவந்து பாராட்டுகிறோம்.தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தின் அச்சாரம் இது. நடுத்தர வகுப்பு மக்களின் மென்னியை முறிக்கும்,அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்குக் கல்வியை மறுக்கும் இந்தக் கொள்ளையர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட போராட்டஙகள் நாடு முழுவதும் பற்றிப் படரவேண்டும்.பாதிக்கப்படுவோர் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.இந்தப் போராட்ட அனுபவப் பதிவு பலருக்கு வழிகாட்டும்.

  3. இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவட்டும் !
    போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்க்கு வாழ்த்துக்கள்!

  4. இப்போராட்டம் அனைத்து ஊர்களிலும், கல்லூரிகளுக்கும் பரவ வழிவகுக்க இறைவன் அருள் புரிய வேண்டும். எவ்வளவு நாளைக்குத் தான் தரங்கெட்டப் படிப்புக்களுக்கு பணம் கொட்டித் திரிவது……………………..

  5. தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் அதிகம் வசூல் செய்கிறார்கள் ,ஏன் செய்கிறார்கள்?

    அரசாங்கம் கல்வியை வியாபார பொருளாக கருதி வியாபாரிகளிடம்

    ஒப்படைத்துவிட்டது.நாம் கல்வியை இலவசமாக அனைவருக்கும் அளிக்க

    போராடவேண்டும்.அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் அதிகம் பேர் ,அரசியல்வாதிகளில்

    அதிகம்பேர் இந்தகல்வி வியாபாரத்தை செய்து வருகிறார்கள்.இதனை

    ஒழிக்கவேண்டும்.அபொழுதுதான் இதற்கு விடிவு பிறக்கும்.போராடாமல் விடிவு இல்லை.

  6. தனியார் பள்ளி கட்டணங்கள் மட்டுமல்ல, அனைத்து சேவைகளின், பண்டங்களின் விலை சந்தையில் தான் நிர்ணியக்கப்படுகிறது. Demand Vs Supply, மற்றும் rate of increase of inflation / money supply in that particular market : இவற்றை ஒட்டிதான் விலை நிர்ணியக்கபடுகிறது.

    அரசு பள்ளிகளை மக்கள் பெரும் அளவில் புறக்கணிக்க காரணம் என்ன ? அரசு பள்ளி ஆசிரியர்களின் தரம் மற்றும் அடிப்படை நேர்மை, work ethics பற்றி ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறீர்கள் ? முக்கியமாக கிராம புற பஞ்சாயத் பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை திறன் பற்றி ? இந்தியாவில் சராசரியாக தினமும் 30 சத அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. ஆனால் சம்பளம் உண்டு. நிரந்தர வேலை என்ற சோசியலிச கோட்பாடு அவர்களின் அடிப்படை நேர்மையை சீரழித்துவிட்டது.

    தனியார் பள்ளிகள் மாதம் தோறும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க வேண்டிய நிர்பந்தம். புதிய பள்ளி ஆரம்பிக்க பல பத்து லச்சங்கள் முதல் கோடிகள் வரை ‘கப்பம்’ கட்ட வேண்டிய ஊழல் முறை. Prices will be determined by total investment and expected rate of return. this is normal in any industry.

    மேலும் பல முட்டாள்தனமான கட்டுபாடுகள் உள்ளன். டுட்டோரியல்கள் போல பள்ளிகளையும் செயல்பட அனுமதிக்க வேண்டும். சில ஆசிரியர்கள் கூட்டு சேர்ந்து, ஒரு சிறிய வீட்டில், ப்ளஸ் டூ விற்க்கு மட்டும் பள்ளி ஆரம்பிக்க ‘தாரளமாக’ அனுமதிக்க வேண்டும். இடப்பற்றாகுறை மற்றும் பணவீக்கத்தினால் நிலங்களில் விலை கண்டபடி ஏறியதும் இந்த அதிக கட்டிணங்களுக்கு ஒரு அடிப்படை காரணம். முக்கியமாக பெரும் நகரங்களில் இது பொருந்தும்.

    தாரளமயமாக்கல் இதில் அனுமதித்து, ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பல வகை பள்ளிகளை திறக்க அனுமதித்தால் கட்டணம் குறையும். போட்டிகள் தான் விலையை குறைக்கும். (செல் போன் சேவைகளில் நிகழ்ந்தது போல).

    கல்வி துறையில் தொழில் முனைவோர்கள் நேர்மையாக, சட்டப்படி லாபம் ஈட்ட வழியில்லை. அனைத்து நிறுவனங்களும் non-profit trusts என்ற அடிப்படையில் தான் இயங்க அனுமதிக்கும் முட்டாளதனமான சட்டம். எனவே, லாபத்தை, கருப்பில் தான் வெளியே எடுக்க முடியும். அதிக கட்டணங்களை வெள்ளையில் வாங்கி, மருத்துவமனைகள் போல செயல்பட அனுமதி இல்லை. வருமான வரி விலக்கு இருக்கிறது. அதை நீக்கிவிட்டு, மிக குறைந்த அளவு வரி விதிக்கலாம். கருப்பில் நடக்கும் இந்த ‘வியபாரத்தை’ முதலில் வெள்ளைக்கு மாற்றினாலே பல சீர்கோடுகள் குறையும்.

    மேலும்..

    • போட்டிகளை அதிகரித்து, ‘விலையை’ குறைக்க செய்ய வேண்டியவை :

      1.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இனிமேல் ஒப்பந்த அடிப்படையில் தான் பணி என்று மாற்ற வேண்டும். அவர்களின் சம்பளம் இனி மாணவர்களின் தேர்வு விகிதம் மற்றும் இதர performance parameters என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும். விடுப்பு இஸ்டத்திர்கு கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள நிலை வேண்டும்.

      2.அரசு பள்ளிகள் அனைத்தும், மீண்டும் (50 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல) லோக்கல் அரசு அமைப்புகளின் கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வர வேண்டும். அதாவது பஞ்சாயத், நகராட்சிகள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். over centralised govt structure with DEO and CEO under govt IAS officer sitting in chennai : இதை ஒழித்து, de centralised control and moniotoring முறை வேண்டும். அப்ப தான் ஒழுங்கு மற்றும் பொறுப்பு உருவாகும். பெற்றோர்கள், வார்ட் உறுப்பினர்கள் மூலம் ஆசிரியர்களின் வேலை திறனை கேள்வி கேட்டு கட்டுபடுத்த முடியும்.

      3.அரசு அநியாயமாக வெட்டி செலவுகள் (இலவச கலர் டி.வி போன்ற திட்டங்களுக்கு) செய்யும் முறையை மாற்றி, அந்த பணத்தை கொண்டு பல ஆயிரம் புதிய அரசு பள்ளிகளை திற்க்க வேண்டும். Like BSNL in telecom (in spite of its corruption), if the govt schools give a stiff competition to private schools, then they can give a run for the money and improve quality and reduce costs.

      4.தனியார் பள்ளிகளை, யார் வேண்டுமானாலும், எந்த sizeஇலும் ஆரமிப்பத்தை மிக எளிதாக்கி, ஊழல் இல்லாமல் செய்வது. இரண்டு வகுப்பறை மட்டும் கொண்ட ஒரு மிக சிறிய பள்ளியில், சில ஆசிரியர்கள் மட்டும் சேர்ந்து ஒன்று அல்லது இரண்டு வகுப்புகள் மட்டும் நடத்த அனுமதி. அதாவது 6ஆவது மட்டும், அல்லது 10ஆவது மட்டும் அல்லது ப்ள்ஸ் டூ மட்டும் என அவரவர் விருப்ப்படி, தேவைபடி ஆரம்பிக்க அனுமதி.

      இவை மூலம் பல ஆயிரம் புதிய, சிறிய பள்ளிகள் உருவாகி, போட்டிகள் அதிகரித்தால், தரம் உயரும், விலை குறையும். ’லாபமும்’ குறையும். Let those schools which provide the best services at the lowest prices win. that is the core of free market enterprise system.

      • //1.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இனிமேல் ஒப்பந்த அடிப்படையில் தான் பணி என்று மாற்ற வேண்டும். அவர்களின் சம்பளம் இனி மாணவர்களின் தேர்வு விகிதம் மற்றும் இதர performance parameters என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும். விடுப்பு இஸ்டத்திர்கு கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள நிலை வேண்டும். //

        இதே விதிகள்தான் நீங்கள் முன்பு குறிப்பிட்டுள்ள உண்மை முதலாளித்துவம் உள்ள நாடுகளில் உள்ளதா? அப்படித் தெரியவில்லையே? அங்கெல்லாம் தொழிலாளர் சங்கங்களின் கையல்லவா மேலோங்கியுள்ளது?

        • தொழிலாளர் சங்கங்கள் அங்கு நன்கு செயல்படுகின்றனதான். ஆனால் ’நிரந்தர’ வேலை என்று ஒன்றும் அங்கு இல்லை. இந்தியாவை போல் இல்லை. ஒழுங்கீனத்திற்காக வேலை போகும் அபாயம் உண்டு.

          அமெரிகாவில் பெரும்பாலானவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர். தரம் நன்றாகவே இருக்கும். இந்தியர்களின் பசங்களும் அங்கே தான் படிக்கின்றனர். அங்கு எப்படி இது சாத்தியமானது ? இரண்டு நாடுகளும் ‘முதலாளித்தவ ஜனனாயகங்கள்’ என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் பெரும் வேறுபாடுகள். முக்கியமாக அரசு துறை சேவைகளின் தரம் மற்றும் ஊழல்களில். ஏன் ?

        • \\பள்ளி கல்வி பற்றி தான் விவாதம். கல்லூரிகள் பற்றி அல்ல//
          கடலையே நீந்திக் கடந்தவனுக்கு குளத்தில் நீந்தி கரையேற முடியாதா.அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களால் தரமான உயர்கல்வியையே வழங்க முடியும்போது தரமான பள்ளிகல்வியை ஏன் வழங்க முடியாது.மீண்டும் சொல்கிறேன். தேவைப்படுவதெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடும் முறையான நிர்வாகமுமே.
          இது சாத்தியமா என சான்று தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற ஆளும் அதிகார வர்க்கங்களின் செல்லக்குழந்தைகள் பயிலும் அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.[தயவு செய்து அவை மைய அரசு நடத்துவன,மாநில அரசுகளால் முடியாது என்று சொல்லிவிடாதீர்கள்]

          \\சரி, என்ன செய்யலாம் என்கிறீர்கள் ? practicalஆக பேசலாம். நான் சொன்ன யோசனைகள் அப்படிதான் என்று கருதுகிறேன்.//
          முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேன்.
          \\குடிமக்கள் அனைவருக்கும் தரமான வகையில் முறையான கல்வியை இலவசமாக அளிக்கவேண்டியது அரசின் கடமையாகும்.//
          \\தேவைப்படுவதெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடும் முறையான நிர்வாகமுமே//

          அரசு தன் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.இல்லையேல் நாம் அதற்கு ”உணர்த்தி” செயல்பட வைக்கவேண்டும்.

          மற்றபடி உங்கள் யோசனைகள் ஏற்கத்தக்கன அல்ல.முழுக்க முழுக்க ஆதாய நோக்கில் கல்வி நிறுவனங்களை நடத்தச் சொல்கிறீர்கள்.மீண்டும் சொல்கிறேன் கல்வி வணிகப்பொருளல்ல.அது மனித குலம் முழுவதற்கும் உரிமையான பொதுச்சொத்து.மனித குலத்தின் முன்னேற்றத்துக்காக பயன்பட வேண்டிய பொதுச்சொத்து.
          கல்வி பயிற்றுவித்தல் எனபது வெறுமனே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை உருவாக்குவதல்ல.ஆராய்ச்சி மனப்பாங்கை வளர்க்கும் நல்ல கல்வியை வழங்குவதோடு நல்லொழுக்க பயிற்சி,உடல்திறன் மேம்பாட்டுக்கான விளையாட்டுக்கள்,கைத்தொழில் பயிற்சி,சாரணர் இயக்கம்,NCC .NSS என மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதும் அதில் அடக்கம்.எடுத்துக்காட்டாக குழுவாக விளையாடும் ஆட்டங்களின் மூலம் சக மனிதர்களிடமும்.சமூகத்திலும் ஒத்து வாழும் மனப்பாங்கு வளர்கிறது.சக ஆட்டக்காரனின் சாதனையை பொறாமை இன்றி கொண்டாடும் பண்பை தருகிறது.வெற்றி-தோல்வி வாழ்வில் இயல்பான ஒன்று என புரிந்து கொள்கிறார்கள்.வெற்றியின்போது எதிரணியின் முன்பாக அடக்கமாக இருக்கும் பண்பை பெறுகிறார்கள்.தோல்வி கண்டு துவளா பண்பு வளர்கிறது.,சாரணர் இயக்கம்,NCC .NSS மூலமாக நாட்டின் மீதும் சமூகத்தின் மீதும் பற்று கொண்டு பணியாற்றும் மனப்பாங்கு வளர்கிறது.இவையெல்லாம் நீங்கள் சொல்வது போன்ற ”புறாக்கூடு”பள்ளிகளில் சாத்தியமா பரந்து விரிந்த அரசு பள்ளிகளில் சாத்தியமா.

          ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணியாற்ற சொல்கிறீர்கள்.ஆசிரியப்பணி வெறுமனே உடலுழைப்பு சார்ந்ததல்ல.அது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட வேண்டியது.அவர்களிடமிருந்து அத்தகைய சிறந்த பணியாற்றுதலை வரவழைக்க தேவைப்படுவது சாட்டையல்ல சமூக அக்கறையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் தரவல்ல ஊக்குவிப்புதான்.

      • லிபெர்டரியன்,
        எல்லாவற்றையும் பணத்தால் அளவிடும் முதலாளித்துவ கண்ணோட்டத்துடன் கல்வியையும் அணுகுகிறீர்கள்.தேவை-அளிப்பு கோட்பாட்டை பொருத்திபார்க்க கல்வி ஒன்றும் விற்பனை சரக்கல்ல.அது மனித குலம் முழுவதற்கும் உரிமையான பொதுச்சொத்து.
        ஒருவனிடம் இருக்கும் கல்வியறிவு எனபது அவனாகவே ஆய்ந்து அறிந்து சேர்த்துக்கொண்டதல்ல.முந்தைய தலைமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்த அறிவு செல்வத்தை பத்து இருபது ஆண்டுகளில் வகுப்பறைகளில் அமர்ந்தபடியே எளிதாக கற்றுகொள்கிறான்.அந்த அறிவை விற்பதற்கு அவனுக்கு எந்த உரிமையும் கிடையாது.அது மனித குலத்தின் முன்னேற்றத்துக்காக பயன்பட வேண்டிய பொதுச்சொத்து. அதனை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும்,அதன்வழி மேற்கொண்டு முன்னேற்ற பாதைக்கும் அழைத்துச் செல்ல வேண்டியது அரசின் கடமையாகும்.ஆகவே குடிமக்கள் அனைவருக்கும் தரமான வகையில் முறையான கல்வியை இலவசமாக அளிக்கவேண்டியது அரசின் கடமையாகும்.

        தரமான கல்வி அரசு கல்வி நிறுவனங்களில் கிடைக்காது என்பதும் மோசடியான வாதம். இன்று தனியார் மருத்துவ,பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல பெருத்துப்போன பின்னரும் தரத்தில் முந்தியிருப்பவை அனைத்தும் AIIMS ,MMC ஸ்டான்லி.M .C, IIT ,IIM போன்ற அரசு கல்வி நிறுவனங்களே.

        தேவைப்படுவதெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடும் முறையான நிர்வாகமுமே.

        • //தரமான கல்வி அரசு கல்வி நிறுவனங்களில் கிடைக்காது என்பதும் மோசடியான வாதம்////

          பள்ளி கல்வி பற்றி தான் விவாதம். கல்லூரிகள் பற்றி அல்ல.

          சரி, ஏன் அரசு பள்ளிகளில் முன்பு இருந்த கூட்டம் இன்று இல்லை. ஜனத்தொகை கூடியும் ?
          நான் படித்த கரூர் முன்சிபல் மேல் நிலை பள்ளியில் அன்று 3000 மாணவர்கள். (1985). இன்று கரூர் ஜனத்தொகை பல மடங்கு அதிகம். ஆனால் அந்த பள்ளியில் 1000 மாணவர்கள் தான் இன்று. ஏன் ?

          சரி, என்ன செய்யலாம் என்கிறீர்கள் ? practicalஆக பேசலாம். நான் சொன்ன யோசனைகள் அப்படிதான் என்று கருதுகிறேன்.

        • //தரமான கல்வி அரசு கல்வி நிறுவனங்களில் கிடைக்காது என்பதும் மோசடியான வாதம். இன்று தனியார் மருத்துவ,பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல பெருத்துப்போன பின்னரும் தரத்தில் முந்தியிருப்பவை அனைத்தும் AIIMS ,MMC ஸ்டான்லி.M .C, IIT ,IIM போன்ற அரசு கல்வி நிறுவனங்களே.//

          //பள்ளி கல்வி பற்றி தான் விவாதம். கல்லூரிகள் பற்றி அல்ல.//

          அதியமான் சமூகம் அவர்கள் முதலாளித்துவம் அம்பலமாகும் போதெல்லாம் ஐரோப்பாவிற்கு ஓடுவார் ஆனால் கண் முன்னால் அரசுக் கல்லூரிகள் தரமான கல்வி வழங்கும் உதாரணத்தைக் காட்டி அது போல பள்ளிகளிலும் ஏன் கொடுக்க முடியாது என்ற எளிய கேள்வி கேட்டால் ‘ அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்’ என்று பிராக்டிக்கலான கேள்வி கேட்கிறார்.

        • @அதியமான்
          ///பள்ளி கல்வி பற்றி தான் விவாதம்.////

          அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளனவே?
          அப்பள்ளிகளின் பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அரசு ஊதியம் பெறுபவர்கள், அரசு ஊழியர்கள் தானே? அப்படிப்பட்ட பள்ளிகளில் எப்படி கல்வி தரம் சரியாக உள்ளது?

          அரசு பள்ளிகளில் சீர்கேடான நிலைக்கு காரணமானவகள் மீது நடவடிக்கை எடுத்து நிர்வாக சீர்திருத்தம் செய்வதை தடுப்பது எது ? அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது ? அதன் பின்னனி என்ன ?

        • //ஆனால் கண் முன்னால் அரசுக் கல்லூரிகள் தரமான கல்வி வழங்கும் உதாரணத்தைக் காட்டி அது போல பள்ளிகளிலும் ஏன் கொடுக்க முடியாது என்ற எளிய கேள்வி கேட்டால் ‘ அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்’ என்று பிராக்டிக்கலான கேள்வி கேட்கிறார்///

          அசுரன்,

          அனுபவம் இல்லாத சிறுவன் தான் நீர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீர்கள்.
          அரசு கல்லூரிகளில் உள்ள சீரழிவை பற்றி என்ன தெரியும் உமக்கு. அண்ணா பல்கலை கழத்தினுள் எத்தனை கோடிகள் கொள்ளையடிக்கப்டுகின்றன தெரியுமா ? பேராசியராக போஸ்டிங் பெற, துணைவேந்தராக பதவி பெற, காண்டாரக்டுகளில் ; அரசு கலை கல்லூரிகளின் தரம் என்ன பெரிய லச்சனம் ?

          எனக்கு தெரிந்து ஒரு மாணவர், கிண்டி அண்ணா பலகலை கழகத்தில், கம்யூட்டர் சயுன்ஸ் பிரிவில் இடம் கிடைத்தும், அதை நிராகரித்து, தனியார் கல்லூரியான SSN Engg இல சேர்ந்தார். எனெனில் அங்கு தான் மிக சிறந்த கல்வி கற்பிக்கப்படுகிறது. கிண்டியில் பெரும்பாலும் மாணவர்கள் தாங்களே படித்துக்கொள்கின்றனர். பல நேரங்கள் வகுப்புகள் நடப்பதில்லை. top notch students என்பதால் self learning தான் பல நேரங்களில். என் நெருங்கிய உறவினர் அங்கு 20 வருடங்களாக பேராசியரியர். ஊழல் மற்றும் தரம் பற்றி மேலும் சொல்ல முடியும்.

          கோவை GCT யில் நிலை இன்னும் கொடுமை. உள்ளே நடக்கும் ஊழல் பற்றி விசாரித்து பாரும்.

          சரி, அரசு பள்ளிகளில் ஏன் இன்று கூட்டம் இல்லை. அதற்க்கு என்ன தீர்வு சொல்கிறீர்கள் ? உருப்படியாக, நடைமுறை சாத்தியமாக, யதார்த்தம் புரிந்து, நல்ல தீர்வுகள் சொல்ல துப்பில்லை. ஆனால் சும்மா வெற்று கூச்சல் மட்டும்.

          நீங்க கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்களேன், பார்க்கலாம். பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்வதில், போஸ்டிங்களில், டிராண்ஸ்ஃபர்களில் நடக்கும் ஊழல் பற்றி தெரியுமா ? வட இந்தியாவில் நடப்பது பற்றி தெரியுமா ?

          அமெரிக்காவில் அரசு பள்ளி கல்வி முறையாக தரமாக இருக்கிறது என்பது FACT. அதை பற்றி ஒப்பிட்டு பேசினால், அதற்க்கு உருப்படியாக பதில் சொல்ல துப்பு கிடையாது உமக்கு. ////அதியமான் சமூகம் அவர்கள் முதலாளித்துவம் அம்பலமாகும் போதெல்லாம் ஐரோப்பாவிற்கு ஓடுவார்//// இப்படி உளருவீர். நீர் மட்டும் ஸ்டாலின் காலத்து ரஸ்ஸியாவின் சாதனைகளை பற்றி பேசுவீர். எதெற்கெடுத்தாலும். நீர் ஒப்பிடலாம். ஆனால் நான் செய்க்கூடாது.

          முதலாளித்துவம் இங்கு எப்படி ‘அம்பலமாகியதாம்’ ? சும்மா உளரக் கூடாது. ’சோசியலிசம்’ தான் இங்கு அம்பலமானது. அதாவது இந்திய அரசு துறை பள்ளி கல்வியின் லச்சணம். (இன்னெறு முறை இந்த ’சோசியலிசம்’ பற்றி ஏதாவது திமிராக பேசினால், பிறகு நானும் பதிலுக்கு அதே பாணியில் பேச வேண்டியிருக்கிம். அந்த சொல்
          பல நாடுகளில், பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. நீர் மட்டும் தான் அதற்க்கு சொந்தக்காரர் அல்ல. மேலும் உமது வியாக்கயானம் மட்டும் தான் சரி என்று எல்லாரும்
          ஏற்க்க முடியாது.)

          சரி, அப்ப அரசு கல்வி முறையில் தரம் இப்படியே தொடரட்டும். பொன்முடிகள் கொளையடிக்கட்டும். மக்கள் எல்லோரும் நாசமாக போகட்டும். உருப்படியாக எதாவது சொல்ல முனைவர்கள் வாயை மூடிக்கொண்டு சொந்த வேலையை பார்க்கிறோம். நீர் தொடர்ந்து முழங்குக.

        • //அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளனவே?
          அப்பள்ளிகளின் பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அரசு ஊதியம் பெறுபவர்கள், அரசு ஊழியர்கள் தானே? அப்படிப்பட்ட பள்ளிகளில் எப்படி கல்வி தரம் சரியாக உள்ளது?///

          இல்லை. அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. மேலும் அரசு ஊழியர்கள் போல ’நிரந்தர’ வேலை அவர்களுக்கு இல்லை. அதனால் தான் ஒழுங்கா பணி புரிகின்றனர். எப்படி வேலை செய்தாலும், என்ன செய்தாலும் வேலை போகாது என்று இருந்தால், மனிதன் இப்படிதான் சீரழிவான். இது அடிப்படை உளவியல். இதை கம்யூனிஸ்டுகளுக்கு புரிய வைக்கவே முடியாது. அதனால் தான் ஒப்பந்த கூலி அடிப்படையை எப்போதும் கண்மூடித்தனமாக எதிர்பீர்கள்.

          பார்க்கவும் :

          http://swaminomics.org/?p=95

          School vouchers as affirmative action
          by ‘Swaminathan S. Anklesaria Aiyar’

          எழுதியவர் : ஸ்வாமிநாதன் அங்கலேசர்ய ’அய்யர்’

          இவர் மணி சங்கர அய்யரின் சகோதரர். நான் மிக விரும்பி இவரின் கட்டுரைகளை
          தொடர்கிறேன். விசிய ஞானம் மிகுந்தவர். பொருளாதார நிபுணர். தன் மனைவியின் பெயரை தன்னுடன் இணைத்து கொண்ட பெண்னியவாதி !

        • திப்பு,

          ஐ.ஐ.டி. யின் உயர்ந்த கல்வித் தரத்திற்கு காரணம் பெரும்பான்மையான ஆசிரியர்கள் “அவாள்”.
          அங்கேயும் ஆசிரியர்கள் நியமனத்தில் ரிஸர்வேஷனை புகுத்திப் பாருங்கள் பத்தே வருஷத்தில் நம்ம கார்ப்பொரேஷன் ஸ்கூல் தரத்துக்கு கொண்டு வந்து விடலாம்.

          http://ibnlive.in.com/news/iitd-students-teachers-protest-faculty-quota/68370-3.html

        • 40 ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணி புரிந்து ஐ.ஐ.டி யின் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பி.வி. இந்திரேசன் அவர்களின் கட்டுரையை படிக்கவும்.

          http://www.carnatic.com/kishore/articles/art_0001.html

          I started my education in a Corporation school in Madras and that did
          not preclude me, and many others like me, from going on to acquire the
          best education the country could provide. These days, however, a child
          which has the misfortune of being condemned to study in our municipal
          schools and even government schools, should more or less give up all
          hope of academic advancement.

          Our governments, committed as they have
          been to socialism, systematically made it impossible for the poor to
          get quality education. The more committed the government was to
          socialism, the worse were the teachers it recruited, and the worse did
          it make the fate of poor students.

          இப்பொழுது கார்ப்பொரேஷன் பள்ளியில் படிக்கும் 100 SC/ST மாணவர்களை அரசு ஸ்காலர்ஷிப் கொடுத்து “பத்மா சேஷாத்ரி” போன்ற பள்ளிக்கு அனுப்பினால், இன்னும் பத்து வருஷத்தில் அதில் ஒரு ஐம்பது மாணவர்களாவது ஐ.ஐ.டி யில் தகுதியின் அடிப்படையில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.

          அரசு எக்கச்சக்கமாக பணத்தையும் செலவு செய்து, தரக்குறைவான பள்ளிகளை நடத்துவதால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வித லாபமுமில்லை

        • இல்லை ராம். அது மிகவும் எளிமைபடுத்தப்பட்ட வாதம். சென்னை அய்.அய்.டியில் எனது ‘பிராமண’ நண்பர் ஒருவர் Associate Professor ஆக பணிபுரிகிறார். அவரை பார்க்க அடிக்கடி அங்கு செல்வேன். பிரமணர் என்ற காரணத்திற்காக மட்டும் அங்கு வேலை கிடைக்காது. மிக கடுமையான நிபந்தனைகள் மற்றும் performance appraisals உண்டு. தொடர்து research papers presentation செய்து கொண்டே இருக்க வேண்டும். Academic performanceமும் இணயாக தரமாக இருக்க வேண்டும். வேலை கடுமையானது. வேலைக்கான தேர்வுகள் மற்றும் போட்டிகள் மிக கடுமையானவை. எனது நண்பர் அமெரிகாவில் ’நல்ல’ வேலையை விட்டு விட்டு இங்கு வந்தவர். ஆய்வுகளில் திறமையானவர். கடும் உழைப்பாளி. அவரிடம் இந்த ‘பிராமண ஆதிக்கம்’ பற்றி விரிவாக பேசியிருக்கிறேன். பல தகவல்களை அறிந்து தெளிவடைந்தேன். விசியம் அத்தனை simple இல்லை.

        • \\ஐ.ஐ.டி. யின் உயர்ந்த கல்வித் தரத்திற்கு காரணம் பெரும்பான்மையான ஆசிரியர்கள் “அவாள்”.
          அங்கேயும் ஆசிரியர்கள் நியமனத்தில் ரிஸர்வேஷனை புகுத்திப் பாருங்கள் பத்தே வருஷத்தில் நம்ம கார்ப்பொரேஷன் ஸ்கூல் தரத்துக்கு கொண்டு வந்து விடலாம்.//

          வாருங்கள் ராம்,
          இட ஒதுக்கீடு ஆதரவாளர்களை ”வாருவதாக”நினைத்துக்கொண்டு பார்ப்பனிய எண்ணவோட்டம் ஒன்றை ”வாரி”விட்டிருக்கிறீர்கள்.பார்ப்பனர்கள் மட்டுமே அறிவாளிகள்.இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்கவும் பணிபுரியவும் வரும் ”சூத்திரர்களும்”பஞ்சமர்களும்”அறிவற்றவர்கள்.அவர்கள் இடம் பெறும் அமைப்பையே கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவார்கள் என்ற மேல்சாதிக்கே உரிய அகந்தை மனப்பான்மையே [superiority complex] உங்களை இப்படி ஒரு பின்னூட்டம் எழுத வைத்திருக்கிறது.

          .பார்ப்பனர்கள் மட்டுமே அறிவாளிகள். ”சூத்திரர்களும்” பஞ்சமர்களும்” அறிவற்றவர்கள்.இது அறிவியல் பாற்பட்ட கருத்தா.இல்லை.அறிவியல் இதை மறுக்கிறது.சூழ்நிலையும்,வாய்ப்புமே ஒரு மனிதனை அறிவாளியாக்குகின்றன.பிறக்கும்போது மனிதர்கள் அனைவரும் சமமே.மனிதர்களில் ஒரு சாரார் பிறக்கும்போதே மேதைகளாகத்தான் பிறக்கிறார்கள் என்பதும் ஒரு வகையான மூட நம்பிக்கையே.

          சரி.IIT கதைக்கு வருவோம்.
          IIT க்கள் துவங்கிய காலத்திலிருந்தே நீங்கள் ”போற்றி பாடும்”அவாள்கள் இந்த தரத்தை உருவாக்கி பராமரித்து வந்தார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில்.இந்த தரத்தையும் கல்வித்திட்டத்தையும் உருவாக்கி செயலுக்கு கொண்டுவந்தவர்கள் பெரும் பொருட்செலவில் இந்திய அரசு கொண்டுவந்த செருமானியப் பேராசிரியர்கள்.அவர்கள் அவாளை பயிற்றுவித்தது போல் பிற்படுத்தப்போட்டோரையும் தாழ்த்தப் பட்டோரையும் பயிற்றுவித்திருந்தால் அவர்களும் அவாள் போன்றே பணியாற்றி இருப்பார்கள்.எதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காமல் அவனுக்கு திறமை இல்லை என்று தீர்ப்பளித்தால் எப்படி ராம்.

          இறுதியாக ஒன்று.ஒரு நாள் வரும்.அப்போது .IIT உட்பட அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீட்டின் மூலமாக சூத்திரர்களும் பஞ்சமர்களும் இடம் பெற்றிருப்பார்கள்.தரத்தில் ஒரு குறையும் இருக்காது.சான்றுக்கு பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அண்ணல் அம்பேத்கார்,அப்துல் கலாம்,மயில்சாமி அண்ணாதுரை என சான்றுகளுக்கு பஞ்சமில்லை.

      • //4.தனியார் பள்ளிகளை, யார் வேண்டுமானாலும், எந்த sizeஇலும் ஆரமிப்பத்தை//

        திரு.அதியமான்,

        உங்களது 4 பாயிண்டுகளில் முதல் மூன்றை ஆதரிக்கிறேன். ஆனால் 4 வது பாயிண்ட் சரியில்லை என்று நினைக்கிறேன்.

        அமெரிக்காவில் “ஹோம் ஸ்கூலிங்” என்பது பரவி வருகிறது. அதாவது வீட்டிலேயே பெற்றோர் சொல்லிக் கொடுத்து, பொதுத் தேர்வு மட்டும் எழுதுவது.

        மிகவும் முன்னேறிய நாடான அமெரிக்கவிலேயே இது போன்ற புது முயற்சிகளை ரெகுலேட் பண்ணுவது சிரமமான காரியமக இருக்கும் பொழுது இந்தியாவில் நீங்கள் சொல்வது போல் “வீட்டுக்கு வீடு” ஸ்கூல் ஆரம்பித்தால் கண்காணிப்பது எப்படி?
        தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் வாங்கும் அதே அரசு ஊழியர்கள் தானே இதையும் “மேற்பார்வை”யிடப் போகிறார்கள்.

        • கண்காணிக்க வேண்டாம் என்பதே free market theory. Let their merit be proved and ‘bought’ by the market with no distortions from govt intervention or regulation. பொது தேர்வுகளுக்கு மாணவர்கள் செல்லட்டும். நுழைவு தேர்வு வைத்து, புதிய மாணவர்களை ஒவ்வொறு பள்ளியும் இஸ்டபடி தேர்வு செய்து கொள்ளட்டும். அல்லது அது அவர்கள் பாடு.

          ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்று மாவோ சொன்னது இதில் பொருந்தும் !

        • //அனுபவம் இல்லாத சிறுவன் தான் நீர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீர்கள்.
          அரசு கல்லூரிகளில் உள்ள சீரழிவை பற்றி என்ன தெரியும் உமக்கு. அண்ணா பல்கலை கழத்தினுள் எத்தனை கோடிகள் கொள்ளையடிக்கப்டுகின்றன தெரியுமா ? பேராசியராக போஸ்டிங் பெற, துணைவேந்தராக பதவி பெற, காண்டாரக்டுகளில் ; அரசு கலை கல்லூரிகளின் தரம் என்ன பெரிய லச்சனம் ?//

          உங்களுடைய ஒப்புமை மிகக் காமெடியாக இருக்கிறது அதியமான். தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை பற்றி பேசினால் அரசு பள்ளியில் தரம் இல்லை என்கிறீர்கள், சரி அரசுக் கல்லூரியில் தரம் சாத்தியமாயிற்றே என்றால் அங்கு கொள்ளை என்கிறீர்கள்.

          ஆக, தனியார் கல்லூரி, பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அரசு பள்ளிகளின் தரக் குறைபாட்டை வைத்தும், தனியார் கல்லூரி-பள்ளிகளின் தரக் குறைபாட்டை அரசுக் கல்லூரிகளின் ஊழல்களை வைத்தும் இட்டு நிரப்பும் முயற்சியைத் தவிர நடுநிலை என்று நீங்கள் ஒன்றை போலியாக நம்பிக் கொண்டிருக்கிறீர்களே அப்படி எதுவும் உங்களிடம் தெரியவில்லை. அப்பட்டமான தனியார்மய ஆதரவு ஒன்றைத் தவிர.

        • //முதலாளித்துவம் இங்கு எப்படி ‘அம்பலமாகியதாம்’ ? சும்மா உளரக் கூடாது. ’சோசியலிசம்’ தான் இங்கு அம்பலமானது. அதாவது இந்திய அரசு துறை பள்ளி கல்வியின் லச்சணம். (இன்னெறு முறை இந்த ’சோசியலிசம்’ பற்றி ஏதாவது திமிராக பேசினால், பிறகு நானும் பதிலுக்கு அதே பாணியில் பேச வேண்டியிருக்கிம். அந்த சொல்
          பல நாடுகளில், பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. நீர் மட்டும் தான் அதற்க்கு சொந்தக்காரர் அல்ல. மேலும் உமது வியாக்கயானம் மட்டும் தான் சரி என்று எல்லாரும்
          ஏற்க்க முடியாது.)//

          என்னா கோவம். அப்ப முதலாளித்துவம் பற்றியும் நீங்க ஏதாவது திமிராப் பேசினா நானும் பதிலுக்கு அதே பாணியில் பேச வேண்டியிருக்கும். அந்த சொல் பல நாடுகளில் பல அர்த்தங்களில் அல்ல ஒரே அர்த்த்தில் முதலாளிகளின் சுரண்டல் என்ற அர்த்தத்தில்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், முதலாளித்துவம் பற்றிய உமது வியாக்கியான மட்டும்தான் சரி என்று என்னாலும் ஏற்க முடியாது….

          இது ஓகேவா அதியமான்?

      • //
        1.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இனிமேல் ஒப்பந்த அடிப்படையில் தான் பணி என்று மாற்ற வேண்டும். அவர்களின் சம்பளம் இனி மாணவர்களின் தேர்வு விகிதம் மற்றும் இதர performance parameters என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும். விடுப்பு இஸ்டத்திர்கு கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள நிலை வேண்டும்.

        2.அரசு பள்ளிகள் அனைத்தும், மீண்டும் (50 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல) லோக்கல் அரசு அமைப்புகளின் கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வர வேண்டும். அதாவது பஞ்சாயத், நகராட்சிகள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். over centralised govt structure with DEO and CEO under govt IAS officer sitting in chennai : இதை ஒழித்து, de centralised control and moniotoring முறை வேண்டும். அப்ப தான் ஒழுங்கு மற்றும் பொறுப்பு உருவாகும். பெற்றோர்கள், வார்ட் உறுப்பினர்கள் மூலம் ஆசிரியர்களின் வேலை திறனை கேள்வி கேட்டு கட்டுபடுத்த முடியும்.

        3.அரசு அநியாயமாக வெட்டி செலவுகள் (இலவச கலர் டி.வி போன்ற திட்டங்களுக்கு) செய்யும் முறையை மாற்றி, அந்த பணத்தை கொண்டு பல ஆயிரம் புதிய அரசு பள்ளிகளை திற்க்க வேண்டும். Like BSNL in telecom (in spite of its corruption), if the govt schools give a stiff competition to private schools, then they can give a run for the money and improve quality and reduce costs.

        //

        அதியமானின் நான்கு பாயிண்டுகளுக்கும் தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை சரி செய்வதற்கும் என்ன தொடர்பு? ஒப்பீட்டளவில் பல திறமையான பேராசியர்களும், ஆய்வு ஆசிரியர்களும் (அதியமானுக்கு பிடிக்கும் என்பதால் சொல்கிறேன், என்னுடைய சொந்த அனுபவத்திலேயே அரசுப் பள்ளியில் படித்த பொழுது எனக்குக் கற்றுக் கொடுத்த கணிதம், அறிவியல், ஆங்கில வாத்தியார்களை இன்றும் மிக உயர்ந்த மதிப்பான இடத்தில் வைத்துள்ளேன்) மிகச் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். அப்படியான அனுபவத்தை என்னுடைய நண்பர்களாய இருந்து தனியார் பள்ளியில் படித்த ஒருவனுக்கும் இல்லை. ஒரேயொரு வாத்தியாரைக் கூட அவர்களால் காட்ட இயலவில்லை. வெறும் பணத்தைக் கொண்டு கல்வி சொல்லித் தரும் விசயத்தின் தரத்தை, பண்பை பெற்றுவிட முடியும் என்று வழக்கம் போல கற்பனை உலகில் சஞ்சரிக்கும் அதியமான் நம்புகிறார். கண் முன்னே அனுபவமோ வேறாக உள்ளது. சிறுவயது, அனுபவக் குறைவு எனப்வை ஒருவருடைய சிந்தனை முறை சார்ந்ததுதானேயன்றி, வருட அதிகரிப்பு சார்ந்தது அல்ல என்பதை அதியமான் என்று உணர்வாரோ?

        • குறிப்பாக ஆசிரியர்களின் தரம் குறைபாடடையத் துவங்கியது கல்வி தனியார்மயம் அதிகரிக்கத் துவங்கிய பிறகுதான். வெறுமே துட்டு சம்பாதிப்பது, வேலையை தக்கவைத்துக் கொள்வது, கல்லூரி-பள்ளியின் விற்பனையை அதிகரிக்கும் விற்பனைத் தரகரகாக செயல்படுவது, குறைந்த கூலிக்கு அடிமாடு போல வேலை செய்வது என்பதாக ஆசிரியர்களின் வேலை தனது புனிதத்தை கெடுத்துக் கொண்டது இந்த காலகட்டத்தில்தான். இன்று மொத்தமாகவே கல்வி என்பது சரவண பவன் சமோசா போல ஒரு பண்டமாக தயாரித்து விற்கப்படுகிறது. அதில் உயிர் என்று எதுவும் இல்லை. இன்றைய மாணவர்களின் அறிவியல் முன்முயற்சியின்மையே இதற்குச் சான்று. வெறுமனே மனனம் செய்வதையும் துறை சார் கிளர்க்குகளையும் மட்டுமே தாயாரித்து அனுப்பும் இன்றைய கல்வி எங்கே, பல்துறை ஆய்வாளர்களை குறிப்பாக ஆய்வுக்காக அதிக பொருட் செலவு தேவையில்லாத மொழியியல், வரலாறு, மானுடவியல் துறைகளில் பல அறிஞர்களை உருவாக்கியது அரசு கல்விதானேயன்றி, தனியார் கல்வியல்ல. தனியார் கல்வியின் விளைவுக்கு ஒரேயொரு சான்று அமெர்க்க உளவாளியும் பிரதம மந்திரியுமான மன்மோகன் சிங்தான்.

        • அசுரன்,

          உமது அபத்தமான பதில்களுக்கு இனி பதில் சொல்ல வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் திமிராக தொடர்ந்து பேசுவதால் இப்ப :

          1.அரசு பள்ளிகளில் தான் முன்பு பெரும்பாலானவர்கள் படித்தனர். அது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வரை. அன்று நேர்மை மற்றும் தரம் இருந்தது. பிறகு படிப்படியாக அரசு துறை சீரழிந்து, கெட்டது. அதற்க்கு முக்கிய காரணம் lack of accountablity due to over centralisation while the panchayath schools were no longer under the direct control of panchayaths or mucipal bodies.

          2.அரசு பள்ளிகளுக்கு பதிலாக, தனியார் பள்ளிகளை மக்கள் நாட ஆரம்பித்தனர். ஆனால் மிக அதிகமாக, சிறிய மற்றும் பல தரப்பட்ட முறைகள் / அளவுகளில் தனியார் பள்ளிகளை தொடங்க அரசு அனுமதி இல்லை. பல முட்டாள்தனமான கட்டுபாடுகள். மேலும் இடத்தின் விலை பணவீக்கத்தால் மிக அதிகரித்தால், பள்ளி ஆரம்பிக்க ஆகும் தொகை மிக அதிகமானது. rising demand from ever increasing student population while the supply was lagging. hence the sharp rise is fees.

          3.அரசு பள்ளிகளில் கூட்டம் குறைகிறது. ஏறக்குறைய இலவச கல்வி, நல்ல பெரிய இட வசதி, highly qualified teachers இருந்தும், தரம் இல்லை என்ற பிம்பம். காரணம் : அரசு ஊழியர்களுக்கு கடந்த 45 ஆண்டுகளில் உருவான job security தான். இதை பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.

          லாபம் என்பது நீர் சொல்வது போல :////விலை அவர்கள் விரும்பும் லாபத்தால் தீர்மானிக்கப்படுகிறது அதியமான் அவர்களே. வெறும் உள்ளீடும் முதலால் அல்ல.///
          அல்ல. இஸ்டத்துக்கு விலையை நிர்ணியக்க முடியாது. செல் போன் சேவைகளில் ஏன் உங்க லாஜிக் வேலை செய்யவில்லை ? காரணம் supply Vs demand balancing process.
          it is always the gap between these two, plus cost of production, plus extent of free competition unfettered by stupid govt regulation or interventions.

          லாபம் மட்டும் தான் உங்க கண்களுக்கு படுகிறது. நஸ்டம் என்பது எப்போதும் சாத்தியம். அந்த ரிஸ்க் இல்லாத தொழிலே இல்லை.

    • //தனியார் பள்ளிகள் மாதம் தோறும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க வேண்டிய நிர்பந்தம். புதிய பள்ளி ஆரம்பிக்க பல பத்து லச்சங்கள் முதல் கோடிகள் வரை ‘கப்பம்’ கட்ட வேண்டிய ஊழல் முறை. Prices will be determined by total investment and expected rate of return. this is normal in any industry. //

      ஓ இது போன்ற நிலைகளின் காரணமாக தனியார் பள்ளி ஆரம்பிப்பவர் வறுமையில் வாடுகிறாராம், அவர்கள் பள்ளியை இத்தனை கஸ்டத்திலும் நடத்துவதே சேவை செய்யத்தானாம்? அதியமான் சார் ரீலு அந்து போச்சி சார்….

      • //. Prices will be determined by total investment and expected rate of return. this is normal in any industry. //

        விலை அவர்கள் விரும்பும் லாபத்தால் தீர்மானிக்கப்படுகிறது அதியமான் அவர்களே. வெறும் உள்ளீடும் முதலால் அல்ல.

      • //அது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வரை. அன்று நேர்மை மற்றும் தரம் இருந்தது. பிறகு படிப்படியாக அரசு துறை சீரழிந்து, கெட்டது. அதற்க்கு முக்கிய காரணம் lack of accountablity due to over centralisation while the panchayath schools were no longer under the direct control of panchayaths or mucipal bodies. //

        மேற்படி 40 வருடங்களுக்கு முன்பு நிலவிய நேர்மை, தரம் இவற்றைச் சொல்லும் போது மட்டும் ‘சோசலிச’த்தை மறந்துவிடுகிறீர்களே அதியமான்? ‘சோசலிசம்’ ரொம்ப முக்கியம் அமைச்சரே….

        • அசுரன்,

          ’சோசியலிஸ்டுகள்’ என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் பலரும் இந்தியாவில் 1980கள் வரை பல கட்சிகளில், குழுக்களில் இருந்தனர். இந்திய சோசியலிச கட்சி, பிரஜா சோசியலிச கட்சி என்றெல்லாம் கட்சிகள் இயங்கின. ஜெயபிரக்காஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் இருந்தனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் சோசியலிஸ்ட் தான். அர்ஜுன் சிங், முலாயம் சிங் யாதவ் கூட ஒரு காலத்தில் சோசியலிசம் பேசியவர்கள் தாம்.

          இவர்கள் எல்லோரும் போலி என்று உம்மை போன்ற மேதைகள் சொல்வீர்கள். நாளை ஒருவன் வந்த நீரும் ஒரு போலி அல்லது லூசு என்று சொல்வான். இதெல்லாம் எமது பிரச்சனை அல்ல. ஒருவர் தன்னை என்ன கொள்கைகளை கொண்டவர் என்று அழைத்துகொள்கிறாரோ, தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை என்ன பெயர் சொல்லி அழைக்கிறாரோ, அந்த பெயரை கொண்டுதான் அவர்களை refer செய்ய முடியும். எது போலி, எது ஒரிஜினல் என்று ஆராய்வது எம் வேலை அல்ல. நடைமுறையில் அவர்களின் கொள்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியின என்று பார்ப்பதுதான் யாம் செய்வது.

          அன்று இந்தியாவில் சோசியலிசம் பேசாத கட்சிகள் இல்லை. இருந்தால் அவை பிற்போக்குவாதிகள், முதலாளித்துவ கைக்கூலிகள் என்று ஏசப்பட்டனர். சோசியலிசம் என்ற பெயரில் லைசென்ஸ் ராஜ் வளர்ந்தது. ஊழல் பெருகி, நேர்மை அழிந்தது. நமது பொருளாதாரம் முடங்கியது. வறுமை பெரிய அளவில் இருந்தது.

          சோசியலிசம் என்ற பெயர் அன்று மிக பரவலாக பொதுமேடைகளில், பொது புத்தியில் இருந்தது. நல்ல வேளையாக இன்று ஒழிந்துவிட்டது. அந்த கால கட்டத்தை பற்றி பேசும் போது, சோசியலிசம் என்ற சொல்லை உபயோக்கித்தான் வேண்டும். அது உமக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். அது உம் பிரச்சனை. எமது பிரச்சனை அல்ல.

    • “அரசு பள்ளிகளை மக்கள் பெரும் அளவில் புறக்கணிக்க காரணம் என்ன ? அரசு பள்ளி ஆசிரியர்களின் தரம் மற்றும் அடிப்படை நேர்மை, work ethics பற்றி ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறீர்கள் ? முக்கியமாக கிராம புற பஞ்சாயத் பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை திறன் பற்றி ? இந்தியாவில் சராசரியாக தினமும் 30 சத அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. ஆனால் சம்பளம் உண்டு. நிரந்தர வேலை என்ற சோசியலிச கோட்பாடு அவர்களின் அடிப்படை நேர்மையை சீரழித்துவிட்டது.”

      இங்கே எப்படி வந்தது சோசியலிச கோட்பாடு? நிரந்தர வேலை என்பது சோசியலிச கோட்பாடு என்றால் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலை செய்வோருக்கும் இது பொருந்தும் தானே. சோசியலிச கோட்பாட்டை எதிர்க்காமல் உங்களால் ஒரு பின்னூட்ம்கூட போட முடியாதா?

      நிரந்தர வேலை என்கிற சோசியலிச கோட்பாடுதான் அடிப்படை நேர்மையை சீரழித்துவிட்டது என்றால் நேர்மையைக் காக்க தினக்கூலிகளாகத்தான் எல்லோரும் வேலை செய்ய வேண்டும். சூப்பர்அப்பு.

      சரி! அரசுப்பள்ளிகளில் நீங்கள் கொல்லும் குறைபாடுகள் இல்லை என்று யாரும் சொல்ல வில்லையே. யார் போராடுவது? தவறு என்று உங்களுக்குத் தெரிந்தும் மௌனியாக இருப்பது குற்ற உடந்தையாகாதா? மக்கள் மீது அக்கறை இருந்தால் வாங்க போராடுவோம்.

  7. போராட்டம் நடத்திய தோழர்களுக்கு பாராட்டுகள்.

    தனியார் முதலாளிகள் தங்களது பள்ளி நிர்வாகங்களுக்கு, ‘கல்வி தர்மஸ்தாபனம்’, ‘கல்வி அறக்கட்டளை’ என்று பெயர்களை வைத்துவிட்டு மக்களை கொள்ளை அடிக்கிறார்கள்..

    சமீபத்தில்அத்தகைய அறக்கட்டளையின் கல்விக்கூடத்தில் காவலராக பணியாற்றும் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரை சந்தித்தேன். அரசு கல்வி கட்டணத்தை குறைத்ததால், அவருக்கு சம்பளம் குறைத்து விட்டார்களாம்.

    சுமார் 18 வருடங்கள் பணியாற்றி சென்ற வருடம் தான் ரூ.6500 ஆக சம்பளம் பெற ஆரம்பித்திருக்கிறார். இப்போது அந்த முதலாளி ரூ.1800 ஐ குறைத்து விட்டானாம்!
    மீண்டும் ஐயாயிரத்து சொச்சம் வாங்குகிறார். மாணவர்களிடம் வாங்கும் பணம் குறைந்ததால், சம்பளம் குறைப்பு என்றால், தர்மஸ்தாபனம் – அறக்கட்டளை பெயர்கள் எதற்கு? யாரை ஏமாற்ற? இதிலும் அந்த முதலாளி, இந்த பள்ளி மட்டும் வைத்திருக்கவில்லை, பல்வேறு துறைகளில் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கிறார்.
    தர்மஸ்தாபனம் – அறக்கட்டளை என்பது உண்மையானால், தங்கள் கைகாசை போட்டு தானே நிர்வகிக்க வேண்டும்?

    மக்களை ஏமாற்ற இந்த முதலாளிகள் கைகொள்ளும் ஏமாற்று வேலைகள் தான் எத்தனை எத்தனை?

  8. அதியமான்,

    ////மிக கடுமையான நிபந்தனைகள் மற்றும் performance appraisals உண்டு. தொடர்து research papers presentation செய்து கொண்டே இருக்க வேண்டும். Academic performanceமும் இணயாக தரமாக இருக்க வேண்டும். வேலை கடுமையானது. வேலைக்கான தேர்வுகள் மற்றும் போட்டிகள் மிக கடுமையானவை.////

    அரசு பள்ளி வேலைகள் மட்டும் என்ன அவ்வளவு எளிதாகவா கிடைத்து விடுகிறது?
    அரசு ஐ.ஐ.டி.யில் இதை செய்யும் போது பள்ளிகள் வரை இதே போல திறமையான நிர்வாகத்தை செயல் படுத்தாமல் தடுப்பது எது? அதை சரி செய்து ஐ.ஐ.டி போல பள்ளிகளையும் சிறப்பாக நிர்வகித்தால், தனியார் பள்ளிகளின் தேவை என்ன?

    உங்கள் நோக்கம் என்ன?
    உங்களுக்கு அரசு நிர்வாகத்தை சீர்செய்யவேண்டும் என்பதும், மக்களனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்கவேண்டும் என்பதும் நோக்கமா? அல்லது, இருக்கிற நிர்வாக சீர்கேட்டை வைத்துக்கொண்டு தனியார் பள்ளிகளை ஆரம்பிக்கப்பட்டு முதலாளிகளின் கொள்ளைக்கு வழிவிட (சுதந்திரம்) வேண்டுமென்பது நோக்கமா?

    தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு உங்கள் தீர்வு என்ன?
    நீங்களும் பிராக்டிகல்லாகவே யோசித்து தீர்வு சொல்லுங்களேன்…

    • //உங்கள் நோக்கம் என்ன?
      உங்களுக்கு அரசு நிர்வாகத்தை சீர்செய்யவேண்டும் என்பதும், மக்களனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்கவேண்டும் என்பதும் நோக்கமா?///

      ஆம். அதற்கான வழிமுறைகளை தான் மிக தெளிவாக எழுதியிருந்தேனே. முழுசா படிக்கவும். சுவாமினாதன் அங்கலேஸ்வர் அய்யர் எழுதிய கட்டுரையும் மிக நல்ல தீர்வை பற்றி பேசுகிறது.

      ///தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு உங்கள் தீர்வு என்ன?
      நீங்களும் பிராக்டிகல்லாகவே யோசித்து தீர்வு சொல்லுங்களேன்…

      போட்டிகளை அதிகப்படுத்துவது பற்றியும் எழுதியிருந்தேனே.

      சரி, இப்ப என்ன செய்யலாம்கிறீங்க ? விலைவாசி உயர உயர, மக்கள் தொகை அதிகரித்து, தேவைகள் அதிகரிக்கும் போது, கட்டணங்களும் உயரத்தான் செய்யும். இது அடிப்படை பொருளாதார விதி.

      ///அரசு ஐ.ஐ.டி.யில் இதை செய்யும் போது பள்ளிகள் வரை இதே போல திறமையான நிர்வாகத்தை செயல் படுத்தாமல் தடுப்பது எது? அதை சரி செய்து ஐ.ஐ.டி போல பள்ளிகளையும் சிறப்பாக நிர்வகித்தால், தனியார் பள்ளிகளின் தேவை என்ன?////

      நீங்க தான் பதில் சொல்ல வேண்டும். காரணிகளை பற்றி நான் எழுதியிருந்தேன்.
      இல்லாவிட்டால், இப்படியே ‘பேசிக்கொண்டே’ இருக்கலாம். அவ்வளவுதான்.

  9. அதியமான்,

    ///ஒப்பந்த அடிப்படையில் தான் பணி என்று மாற்ற வேண்டும்////

    ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஏதாவது ஒரு தொழிலாளியையாவது நேரில் சந்தித்து பேசியிருக்கிறீர்களா?
    அவர்களிடமும் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா?

    பெருங்குடியிலிருந்து கொண்டே, ஸ்ரீ பெரும்பதூர் ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றி ஞான திருஷ்டியில் பேசி எழுதும் கலை எங்களுக்கு வருவதில்லை.

    எங்கள் (பு.ஜ.தொ.மு) தோழர்கள் ஒவ்வொரு ஆலை வாயிலிலும் (ரயில்களிலும், பேருந்துகளிலும்) நேரடியாக பிரச்சாரம் செய்து கொண்டு தானிருக்கிறார்கள்…

    எங்களை சின்ன பயல், உன்னிடம் விவாதிக்க முடியாது என்று சொல்லிவிட்டு, ஒரு வட்டமடித்து மீண்டும் முருங்கை மரத்திலேறி முதலில் இருந்து வருவீர்கள்.

    என்ன கொடுமை சார் இது?

    • ///ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஏதாவது ஒரு தொழிலாளியையாவது நேரில் சந்தித்து பேசியிருக்கிறீர்களா?//

      திருபூரில் இதே போன்ற ’தெழிலாளியாக’ முன்பு வேலை பார்த்திருக்கிறேன். தொழிலில் தோல்வி அடைந்த பல தருணங்களில், நடுவில் பல ஆண்டுகள் குறைந்த சம்பளத்தில் பல இடங்களில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. ஒப்பந்த தொழிலாளியாகவும் தான்.
      போதுமா ?

      உங்களை விட்டால், சென்னையில் இன்று உருவான வேலை வாய்புகளையும் கெடுத்துவிடுவீர்கள் ! உருப்படியாக புதிய வேலைகள் உருவாக நீங்களும் வகை செய்ய மாட்டீர்கள் தான் ! something is better than nothing என்பதன் அர்த்தம் உம்மை விட எமக்கு புரியும்.

    • //எங்களை சின்ன பயல், உன்னிடம் விவாதிக்க முடியாது என்று சொல்லிவிட்டு, ஒரு வட்டமடித்து மீண்டும் முருங்கை மரத்திலேறி முதலில் இருந்து வருவீர்கள்.
      என்ன கொடுமை சார் இது?///

      அசுரனை தான் அப்படி விளித்தேன். எல்லோரையும் அல்ல. இந்த ‘அகாகி’ என்ற பெயரில் ’பலரும்’ எழுதுகிறீர்கள் போல. இந்த அக்காகி மரியாதையா பேசராரே !!! :))

    • //ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஏதாவது ஒரு தொழிலாளியையாவது நேரில் சந்தித்து பேசியிருக்கிறீர்களா? அவர்களிடமும் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா///

      நீங்க ஒரு ஆலை ஆரம்பித்து, அதில் நிரந்தர தொழிலாளர்களை மட்டும் நியமித்து, தொழில் நடத்தி பாருங்க. அப்ப தான் புரியும்.

      ஒரு தொழிலாளி, தன் வேலையை விட என்ன உரிமை அல்லது நிபந்தனைகள் உள்ளனவோ, அதே முறைதான் முதலாளிக்கும் அவரை வெலையை விட்டு நீக்க உண்டு.
      ‘உனக்கு ட்ரெயினிங் கொடுத்துவிட்டேன். நீ வேலையை விட்டு செல்லக் கூடாது, ‘நிரந்தரமாக’ இங்கேயே பணி புரிய வேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா ?

      http://www.quebecoislibre.org/younkins25.html
      Freedom to Contract

      சந்தை பொருளாதாரத்தின் அடிப்படையே இந்த voluntary free contract system தான்.
      மேலோட்டமாக பார்த்தால், தொழிலாளர் விரோதமாக தோன்றும். ஆனால் அப்படி அல்ல.
      இதை பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.

  10. அதியமான்,

    உங்களுடைய டிமாண்ட் சப்ளை தியரியை கல்விக்குமா பொருத்த வேண்டும்?
    (அதற்கு தோழர்கள் திப்பு, அசுரன் பதிலளித்து விவாதம் நடந்து கொண்டிருப்பதால், நான் அதனுள் செல்ல விரும்பவில்லை.)

    இருக்கிற எல்லா தனியார் பள்ளிகளுமே கொள்ளை கட்டணம் விதிக்கப்படுகிறதே? இதில் என்ன டிமாண்ட் சப்பளை ???

    உதாரணம்: கொக்கோ கோலா, பெப்ஸி தியரி தான்.
    இப்போது மார்கெட்டில் இருப்பது இவை இரண்டு தான், இவை இரண்டின் விலை பண்ணிரண்டு ரூபாய். அநியாய விலை. (இவை தனியார் பள்ளிகள்)
    களிமார்க், பவண்டோ (இவற்றை அரசு பள்ளிகள் என்று வைத்துகொள்வோம்) இவர்களுடைய தரம் சரியில்லை, சர்வதேச தரத்திற்கு இல்லை (இது உங்கள் வாதம்).

    ஏன் இல்லை? இவர்களுடை மார்கெட்டை தான் அவன் அபகரித்து விட்டானே? என்றால் உங்களிடம் செல்லாது!
    இதற்கு முன் இருந்த பல சிறு சோடா கம்பெனிகள் இவர்களால் சீரழிந்து மூடப்பட்டனவே என்றால், இது தான் போட்டி, டிமாண்டு, சப்பளை என்கிறீர்கள்.
    நல்லா இருந்த சங்கை இவனுங்களே வந்து ஊதி கெடுத்து விட்டு, பிறகு அது சரியில்லை இது நொல்லை என்று சொல்லி இன்னும் இருக்கிற/செயல்படுகிறவற்றையும் மூட வைபார்களாம்!

    நீங்களே ஒத்துக்கொண்டது போல, அந்தக்காலத்தில் அரசு பள்ளிகள் ஓரளவுக்கேனும் சரியாக செயல்பட்டது உண்மையானால், தற்போது கல்வி தனியார்மயமானதால் தான், அரசு பள்ளிகள் சீரழிந்துள்ளன என்பது உண்மை தானே?
    கல்வி தனியார்மயமானது, அரசு கல்விகூடங்களை சீரழித்ததோடல்லாமல், கட்டணக்கொள்ளைக்கும் வழிவகுத்துள்ளது!

    (ஐ எனக்கும் சம்பந்தம் இருந்தும் இல்லாமலும், வங்காச்சியா பேச வருதே!!! 🙂 )

  11. ‘School vouchers as affirmative action’
    by ‘Swaminathan S. Anklesaria Aiyar’
    http://swaminomics.org/?p=95

    Dear Kapil Sibal

    You have aroused great expectations as Education Minister. We are heartened by your commitment to educational reforms to improve higher education, including easier entry for foreign universities.

    Yet for truly inclusive growth we must focus on improving basic education for the poor and historically disadvantaged classes. Poor people send their kids to government schools, but hardly any teaching takes place there, and the teachers are protected from disciplinary action by powerful trade unions. No Chief Minister dares antagonize these unions. Richer students supplement schooling with private tuitions, but this is unaffordable by poor students, who end up functionally illiterate after years of schooling. Lakhs of crores spent on education are wasted.

    School vouchers can be one way forward. Parents can get outright grants per child in the form of school vouchers, which are redeemable only for expenses in a government or private school. Vouchers will empower poor people through choice in schools, just as democracy empowers them through choice in politics. Competition with private schools will improve government schools, just as competition from private airlines and banks have improved service in government airlines and banks.

    But teachers’ unions hate competition or accountability, and oppose school vouchers. They also point out that the results of school vouchers in Western countries have been mixed. In some states in the US, voucher students perform no better than those in government schools. In Sweden, on the other hand, voucher students fare distinctly better.

    But in those countries, government teachers actually teach. This, alas, is not the case in India. And so desperate urban slum families are pulling their children out of free government schools and sending them to private schools, at great financial sacrifice. These private slum schools are hardly of high quality, yet are better than government schools having highly qualified teachers but little teaching. The very fact that slum dwellers are sending kids to private schools in large numbers is the best evidence that

    private schools are better, whatever may be the experience in the US or Europe.

    In Delhi, the Centre for Civil Society has started a small project offering school vouchers worth Rs 3,600 per year to 408 children. An independent evaluation shows that voucher children perform better in standardized tests than comparable children in neighbouring government schools; that parents find the teaching and infrastructure better in private voucher schools than

    government schools; and that over half the poor beneficiaries will be forced to send their children back to government school if the vouchers are withdrawn. This shows that vouchers are badly needed by the poor, and yield better results too.

    The Delhi scheme is tiny. Some Chief Ministers have sought other ways to try and scale up vouchers. In Rajasthan, the former BJP government sought to persuade government teachers to start private schools, for which students would be given vouchers. Unsurprisingly, this failed to find many takers.

    So, Kapil Sibal, let me propose an alternative. You should launch a pilot project, making funding available to States who are interested, and scale up after removing the inevitable glitches. The project should offer school vouchers to urban children of disadvantaged minorities—dalits, tribals and Muslims. Only urban areas have multiple schools within walking distance of every locality, and that is a necessary condition for real choice.

    Teachers unions will oppose this idea too. But their opposition will be muted since the benefits are limited to a small, historically disadvantaged section of the population. Besides, the idea will be supported by vote-banks of dalits, tribals and Muslims, all of whom are wooed by politicians. Chief Ministers will find it worthwhile to take on trade unions only if they are compensated by support from substantial vote banks.

    In the Delhi scheme, activists spread information about vouchers in areas with 12 lakh. citizens, of whom 1.2 lakh applied for vouchers. The vouchers were awarded through a draw of lots to a lucky few. Although only 408 children benefited, the project enthused over a lakh households, a number high enough to qualify as a vote bank, and so interest politicians.

    Teachers will see this as the thin end of the wedge, and launch agitations. One form of compromise could be to offer vouchers at least to girls from dalit, tribal and Muslim families. Even the most cynical unions may feel ashamed of denying benefits to the most oppressed gender among the most oppressed classes.

    Kapil Sibal, your new government is committed to affirmative action for the historically disadvantaged. This can be an excellent launching pad for school vouchers. Do not waste the opportunity.

    • லிபெர்டரியன்,
      விக்ரமாதித்தனின் விடாமுயற்சியோடு விடையளிக்கும் தாங்கள் எனது பின்னூட்டத்திற்கு பதிலளிக்கவில்லை.பின்னூட்டம் சற்று இடம் மாற்றி பதிவானதால் நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.permalink எண். https://www.vinavu.com/2011/03/02/virudhachalam-protest/#comment-37557

      • திப்பு,

        சுவாமிநாதன் அங்கலேஸ்வர் அய்யரின் கட்டுரைதான் விடை. முழுசா படிக்கவும்.

        //தரமான பள்ளிகல்வியை ஏன் வழங்க முடியாது.மீண்டும் சொல்கிறேன். தேவைப்படுவதெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடும் முறையான நிர்வாகமுமே.///

        சரி. ஆனால் எப்படி செய்வது ? இப்படியே ’பேசிக்கிட்டே’ இருக்கலாம். நிதி ஒதுக்கீடு மட்டும் போதாது. இப்ப செலவு செய்யும் நிதியை ஒழுங்கா செய்தாலே போதும். அரசு ஊழியர்களின் work ethics தான் அடிப்படை பிரச்சனை. அதை ஒழுங்குபடுத்தாமல் ஒன்றும் செய்ய முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க