Thursday, December 12, 2024
முகப்புஉலகம்அமெரிக்காமன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்...

மன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்…

-

மன்மோகன் சிங்கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதையாக 91ஆம் ஆண்டு கேரளத்தில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் நடந்த ஊழலில் தொடர்புடைய பி.ஜே தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப் பட்டார். பி.ஜே தாமஸ் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் மவுனமோகன் சிங், தாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்வதே முக்கியமானது என்று தெரிவித்து விட்டார்.

பிரதமரின் இந்த ‘விளக்கத்துக்காகவே’ காத்திருந்த எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பிரதமரே தனது தவறை ‘உணர்ந்து’ பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதால், இந்த விவகாரத்தை இத்தோடு ஊத்தி மூடி விடுவது நல்லது என்று திருவாய் மலர்ந்துள்ளார். அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதற்கு மேலாக மன்மோகன்சிங் பொறுப்பேற்றுக் கொண்டதோடு நில்லாமல் மன்னிப்பு ஒன்றையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரகாஷ் காரத்தோ, பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுக்கப் போகும் விளக்கத்துக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தேசியளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் ஏதோ நெம்ப நல்லவரான மவுனமோகன் சிங்கிற்கு இந்தச் சம்பவம் தீராத களங்கத்தை இப்போது தான் புதிதாக ஏற்படுத்தி விட்டது போலவும், அதற்கு அவரே தனது நீண்ட மவுன விரதத்தைக் கலைத்து ஒரு பதிலைச் சொல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது போலவும் மக்களுக்குக் கதை சொல்லி வருகின்றன. என்னதான் புளுகினாலும், பித்தலாட்டம் செய்தாலும், கொள்ளையடித்தாலும் இவரு ரொம்ப நல்லவருன்னு எல்லாரும் சேர்ந்து பாடும் கோரஸ் சப்தம் நம் காதில் காய்ச்சிய ஈயம் போய் பாய்கிறது.

ஏதோ தவறு நடந்து போச்சு என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு இப்போது சொல்லும் இதே பிரதமர் தான் இந்தாண்டு ஜனவரி மாதம் தாமஸின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாணைகளின் போது தாமஸின் மேல் இருக்கும் ஊழல் புகார்கள் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். தாமஸின் மேல் நடந்து வரும் ஊழல் வழக்கு பற்றிய விபரங்கள் அவரது சுயவிவரத்தில் (பயோடேட்டா) காணப்படவில்லையென்றும் அதனால் அது பற்றித் தமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கூசாமல் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

ஒரு சாதாரணக் குடிமகன் பாஸ்போர்ட் பெற வேண்டி விண்ணப்பித்தாலே அவர் மேல் ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா, இன்ன முகவரியில் தான் இருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் காவல் துறையைக் கொண்டு விசாரித்து உறுதி செய்து கொள்கிறார்கள். ஒரு சாதாரண குமாஸ்தா வேலைக்கு ஆள் எடுப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தையே தோண்டியெடுத்து விசாரிக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் ஊழல் கண்காணிப்பு அமைப்பின் முக்கியமான பதவியொன்றிற்கு ஒருவரை நியமிக்கும் போது மட்டும் அவரே கொடுத்த சுயவிவரத்தை மட்டும் தான் கணக்கில் எடுத்தார்களாம் – அவரது பின்னணி குறித்து விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளவில்லையாம். இதையும் எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி நீதிமன்றத்தில் சொன்னது நாட்டின் மிக உயர்ந்த பதவில் இருக்கும் ஒருவர்!

இந்தக் புளுகுணிக் கதைகளையெல்லாம் எந்தக் எதிர்க் கேள்வியும் இன்றி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள். இவர்களெல்லாம் படித்தவர்களாம்.

தேசியளவிலான ஊடகங்களில் தாமஸ் 91ஆம் ஆண்டு கேரள உணவுத் துறைச் செயலாளராக இருந்த போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்து அது பற்றி நடக்கும் விசாரணையில் அவரும் அக்கியூஸ்டு லிஸ்ட்டில் இருப்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் இருப்பதைப் பற்றியும் அம்பலப்படுத்தி எழுதி நாறடித்துக் கொண்டிருந்த  போதும் கூட அவரது பதவியைப் பறிக்காமல் விட்டு வைத்திருந்தார் நெம்ப நல்லவரான மவுனமோகன்.

மன்மோகன் சொல்லும் இந்தத் “தெரியாது” என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் அவரின் இந்தத் “தெரியாது” அஸ்திரத்தை மக்களை நோக்கி ஏவி விட்டுள்ளார். இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவ ஊடகங்கள் அந்தக் கதைகளை கர்ம சிரத்தையாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தற்போது தலைப்புச் செய்தியிலிருந்து இரண்டாம் பக்கத்துக்கும் மூன்றாம் பக்கத்துக்கும் நகர்ந்து விட்டது – கூடிய விரைவில் எட்டாம் பக்கத்தின் எட்டாம் பத்திக்கும் போய் விடும். ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் பலியாடான ஆ. ராசாவைக் கம்பிகளுக்குப் பின்னே தள்ளியாகி விட்டது. ஆனால், அந்தப் பதவிக்கு அவரை ரெக்கமன்டேசன் செய்த – ஊழலில் பலனடைந்த –  டாடாவும், மிட்டலும், அம்பானியும் எஸ்கேப்பாகி விட்டனர். தன் உள்ளங்கைகளுக்குள்ளேயே ஊழல் நடந்து கொண்டிருந்த போது மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் அப்பாவியாகி விட்டார்.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. நம் நாட்டின் அணு விஞ்ஞானிகள் எத்தனையோ வருடங்களாக ராப்பகலாக உழைத்து சொந்த முயற்சியில் உருவாக்கிய அணு உலைகள் அனைத்தையும் கொண்டு போய் தனது அமெரிக்க எஜமானர்களுக்கு பாத காணிக்கையாக்கி விட்டார் மன்மோகன். அதற்கு வழிவகை செய்த அமெரிக்க ஹைட் சட்டம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைக்குக் கேள்வி கேட்டபோதும் இன்று பி.ஜே தாமஸ் விவகாரத்திற்குச் சொன்ன அதே பதிலைத் தான் சொன்னார் – “ஹைட் சட்டமா…? அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே”

எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை வழங்கும் செயற்கைக்கோள் ட்ரான்ஸ்பான்டர்களை தேவாஸ் எனும் தனியார் கம்பெனிக்கு தாரைவார்க்க 2005ம் ஆண்டே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இஸ்ரோ நிறுவனத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸும் தேவாஸ் நிறுவனமும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்திற்கான அனுமதியை அளித்தது பிரதமர் உள்ளிட்ட காபினெட் அமைச்சர்களின் கூட்டம். வின்வெளித் துறையோ நேரடியாக பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடியது.

பின்னர் இந்த ஒப்பந்தத்தின் விபரங்கள் ஊடகங்களில் அம்பலமாகி ஊரே நாற்றமடித்துக் கொண்டிருந்த போது இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரோ,  ட்ராஸ்பான்டர்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தான் எங்கள் பணி. அதிலிருந்து கிடைக்கும் ஸ்பெக்ட்ரம் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்றார். அதாவது எல்லாரும் சேர்ந்து கொண்டு “நாங்கள் தாம்புக் கயிறைத் தான் விற்றோம் அதில் கட்டப்பட்டிருந்த மாட்டைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றனர்”

நமது மவுனச்சாமியார் வாய் திறந்து அளித்த ‘விளக்கமும்’ இது தான் – “எனக்குத் தெரியாது” . தனக்குக் கீழ் நேரடியாக இயங்கும் ஒரு துறையில் நடந்துள்ள இந்த முறைகேடுகள் பற்றியே ஒரு பிரதமருக்குத் தெரியாதென்று சொல்வாராம், அவரை நாமும் மெத்தப் படித்தவர், பொருளாதாரத்தில் புலி, நேர்மையில் எலி என்றெல்லாம் நம்ப வேண்டுமாம் – அப்படித்தான் முதலாளித்துவ ஊடகங்கள் நம்மிடம் சொல்லுகின்றன.

இன்ன துறைகளுக்கு இன்னின்ன அமைச்சர்கள் தான் இருக்க வேண்டும் என்று பெருமுதலாளிகள் கோருகிறார்கள்  என்றால், அதன் மூலம் அவர்கள் அடையக் கூடிய ஆதாயம் என்னவாய் இருக்கும் என்று புரிந்து கொள்ளத் தெரியாது. தனது அரசின் கீழ் இருக்கும் ஒரு துறையே கார்ப்பரேட்  தரகர்களுக்கும் தனது கட்சியின் முக்கிய தலைகளுக்குமான பேச்சுவார்த்தைகளை இரசியமாய் பதிவு செய்திருப்பது பற்றித் தெரியாது. அதில் ஊழல் நடத்தப்படும் விதம் குறித்தும் ஆதாயம் அடைந்தது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்  என்றும் தெரியாது.

இதெல்லாம் ஒன்றும் தெரியாது என்றால் வேறு என்ன எழவு தான் தெரியும்? விசயம் அம்பலமான பின் தெரியாது என்று கூசாமல் புளுகத் தெரியும். அப்படிப் புளுகுவதையும் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டே செய்யத் தெரியும். அறிவாளியாயும் முட்டாளாயும் ஒரே நேரத்தில் நடிக்கத் தெரியும்.

மேற்படித் திறமைகளும் நடுத்தர வர்க்கத்தினரிடையே எடுபடும் ‘படித்தவர்’ எனும் இமேஜும் சேர்த்து தான் அவரை பிரதமர் நாற்காலியில் நீடிக்க விட்டுள்ளது. இன்று தேசத்தின் வளங்களனைத்தையும் கொள்ளையிட்டுப் போகும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகு முதளாளிகளுக்கும் இப்போதைக்கு இப்படி ஒரு அப்பிராணி மூஞ்சி தேவையாக இருக்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் பகல் கொள்ளைகளுக்குப் பயன்படுவார்களென்றால் மோடி போன்ற ஒரு ரத்தக் காட்டேரி ‘திறமையான’ நிர்வாகியாக அவதரிக்க முடியும். மன்மோகன் போன்ற ஒரு காரியவாதக் கல்லூளிமங்கன் ‘நல்லவராகவும், அப்பாவியாகவும்’ வேடம் போட்டுக் கொள்ள முடியும்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

  1. மன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்……

    கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதையாக பி.ஜே தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப் பட்டார்….

  2. மனமோஹன சிங்கம் அசிங்கப்பட்டுவிட்டது! சரி!
    திறமை இருந்தாலும் மோடி, ஒரு பயங்கரி! ஓ.கே!
    இந்த தேசம் நலமுடன் இருக்க, ஒரு நல்ல தலைவரை அடையாளம் காட்டும் கடமையும், கட்டுரையாளர்க்கு உண்டு!

  3. நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தபிறகு தொப்புளில் பம்பரம் விட வசதி செய்து தருவோம்!

      • நமீதா நாட்டு நலன் கருதி கர்ப்பம் தரித்தால்…..
        பிரசவ செலவை கட்சி ஏற்க வேண்டும்!

  4. AHMEDABAD: The verdict, which gave death to 11 and life terms to 20 in the Godhra carnage case on Tuesday, substantiates the motive of the attack and the conspiracy partly by falling back on Godhra’s history of communal riots.

    The target of the mob in Godhra on February 27, 2002 was only kar sevaks returning from Ayodhya and not other Hindus travelling on the Sabarmati Express, says the 826-page judgment. Fiftynine passengers of S-6 coach, mainly kar sevaks, were killed that day sparking off riots across the state.

    Although judge P R Patel does not pin-point the motive of the attack, he notes, “Godhra is known for its past history of communal riots…For Godhra, this is not the first incident of burning alive innocent persons belonging to Hindu community. Earlier, during many riot incidents in Godhra, persons were burnt alive and shops/houses etc came to be destroyed by fire.” He cites 10 incidents of communal riots in Godhra since 1965 and noted that several riots broke out during the rath yatra in 1990 and 1992.

    The judge says shouting slogans like ‘Pakistan Zindabad’, ‘Hindustan Murdabad’ etc and announcements on loudspeaker from a nearby mosque clearly suggest a motive and pre-planning to attack the train.

    The court has substantiated this conclusion by saying: “If the petrol was not kept ready in loose in carboys on previous night near Aman Guest House, it would not have been possible to reach with carboys within 5-10 minutes near S-6 coach…Not possible to gather Muslim persons with deadly weapons within short time to reach near A cabin on the railway tracks”.

  5. unkalin katturai mika alzaku .,aanaal ade samayam .ippo ivarai vittalum veru nadi illai .,.,.,illai endral sollunkal paarppom .,yaaru nallavaraka irukkanko.,.,namadhu indiyavil.,

  6. really nice story .,.but better than other Pm.,so tell to me who is .and was good PM in india.,have been answer to you,u can’t.so this PM is ok.,otherwise .available shortly pommai PM

  7. 14 doctrate டிகிரி வாங்கிய மன்மோகன் சிங் என்ன கிழிக்கிறார் என்பது கொஞ்சமாவது சோற்றில் உப்பு போட்டு திங்கிறவன் எல்லாருக்கும் தெரியும்.

    கடந்த 2 வருடங்களாக பிரதமருக்கு தெரிந்து தான் 2G allocation செய்தேன் என்று ராசா சொன்னான். அப்பொழுது வாய் திறக்காத, ஆண்மையற்ற , மன்மோகன் …சென்ற மாதம் … எனக்கு தெரியாமல் தான் ராசா எல்லாம் செய்தான் என்று உளறுகிறார். 2009 MP தேர்தலில் 6 மாதத்தில் விலை வாசி குறையும் என்று சிங் சொன்னார். ஆனால் என்ன ஆனது ?? இவனுக்கும், படிக்காத விஜயகந்த்க்கும் என்ன வித்தியாசம் ??

    கடனுக்கான வட்டி விகிதம் கடந்த 2 ஆண்டுகளில் 20 % உயர்ந்து விட்டது.

    பதித்த மன்மோகன், சிதம்பரம், பிரணாப் என்ன கிழித்தார்கள் ?

    • மெத்தப் படித்த இவர்களை விட, பள்ளி/கல்லூரியில் அதிக நாட்களை செலவளிக்காத கலைஞர் ,லல்லு, அச்சு, மாயாவதி ,போன்றோர் மேல் என்கிறீர்களா?
      ஆட்சி, அதிகாரம் என்று வந்து விட்டால் ஆண்/பெண்,ஏழை/பணம் கொழுத்தவன், பார்ப்பனர்/தலித், வலது/இடது, படித்தவன்/பாமரன் அனைத்து வர்க்கங்களும் ஒன்று போலவே செயல்படும் விந்தை இங்கு நிலவுகிறது!

      • விதிக்குட்பட்டுத்தானே (முதலாளித்துவம்) அனைவரும் ஆடமுடியும்.

      • நான் அவ்வாறு சொல்லவில்லை..

        காமராஜர் , கக்கன் , ஜீவா போன்றோர் என்ன படித்தார்கள் என்றே தெரியாது … ஆனால் மக்களுக்கு தொண்டு செய்ய வில்லையா ?

        • அது கரைந்து போன காலம்! நிகழ் காலத் தலைவர்களின் தகுதியே, நாறிப் போயிருக்கையில், எதிர்காலத் தலைவர்களை ( இளைய நிதிகள், சந்திரகலா குடும்பத்தினர், ஜாதீ பசுமைகள்,விடுதலை வேட்டைகள், நொங்கு …) போன்றோரை

          “நினைத்தாலே நடுங்கும்”!

    • 2006 இல் சொல்லவில்லை. 1991 இல் நரசிம்மராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, மன்மோகன் சிங் வெண்ணை புதிய பொருளாதார கொள்கையை நுழைக்க முயன்ற போது சொன்னது 100 நாளில் விலைவாசி குறையும் என்று. இந்தியாவின் மிக மோசமான பிரதமர் இவன் தான். நாட்டையே கூறு போட்டு வித்தது, இந்த அமெரிக்க அடி நக்கி நாய்தான். ஊமகோட்டான் போல நடிக்கிது.

  8. எனக்கு ஒன்னும் வேண்டாம் என்னும் துறவியும், எனக்கு ஒன்னும் தெரியாது என்னும் அரசியல் புரோக்கரும், உலகிலேயே மிக மோசமான அயோக்கியர்கள். அதுவும் இந்த மவுன மோகன் தான் இன்றைய இந்தியாவின் மிக மோசமான நபர்.

  9. சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் – ரூ 4000 கோடிக்கு மேல் )

    ஆனால் செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ?

    அல்லது மதிய அரசாங்கத்தை போராடி கேட்டு பெற முடியாதா ??

    தன் குடும்ப வருவாய்க்கு டெல்லி சென்று பல நாட்கள் தங்கும் தெருனாநிதி, விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டை பாதைக்கு பணம் பெற நடவடிக்கை எடுக்க முடியாதா ?

    கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?

    சென்னை மட்டும் தான் தமிழகமா ?

    சேது திட்டம் – வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது போக மீதம் தலைவர் தெருனாநிதி குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?

    சென்னையில் எத்தனை பாலங்கள் ? ரோடு அதே ரோடு தான் !!! ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ? கொள்ளை அடிக்கவா ?

  10. படிக்கத் தெரியாதவன் பாட்டைக் கெடுத்தான், எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான், ஆளத் தெரியாதவன் நாட்டைக் கெடுத்தான், ஓட்டுப் போடத் தெரியாதவன் தன்னையேக் கெடுத்தான் …………………………

  11. 2006 இல் சொல்லவில்லை. 1991 இல் நரசிம்மராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, மன்மோகன் சிங் வெண்ணை புதிய பொருளாதார கொள்கையை நுழைக்க முயன்ற போது சொன்னது 100 நாளில் விலைவாசி குறையும் என்று. இந்தியாவின் மிக மோசமான பிரதமர் இவன் தான். நாட்டையே கூறு போட்டு வித்தது, இந்த அமெரிக்க அடி நக்கி நாய்தான். ஊமகோட்டான் போல நடிக்கிது WELLDON SUPER

  12. we have talended actors:without make-up Manmohan singhu performs well:his all out effort to eliminate tamil community in srilanka:Oh horrible,still we are alive to see this rogue”second fiddiling” USA beggars

  13. “தாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்வதே முக்கியமான……

    ‘பொருப்பான’ பதில். இதை அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டால் காவல் துறை, சி.பி.ஐ, நீதிமன்றம், சிறைச்சாலைகளுக்கான செலவு மிச்சம்தானே.

    நாட்டை எட்டு கால் பாய்ச்சலில் ஏழே நாளில் உலகின் உச்சிக்கே கொண்டு செல்லலாம்.

    Well done Mr.Singh.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க