Wednesday, September 27, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

-

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள கடந்தாண்டு இறுதிவாக்கில் பத்திரிகைகளில் கசிந்த போது உலகிலேயே முதலாம் பெரிய ஜனநாயகம் என்று போற்றிப் புகழப்படும் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை சிரிப்பாய்ச் சிரித்தது. உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் அபிலாஷைகளுக்கு உட்பட்டுத்தான் இன்னாருக்கு இன்ன மந்திரிப் பதவி என்பது தீர்மானிக்கப்படுகிறது என்கிற உண்மை தெட்டத் தெளிவாக சாட்சி ஆதாரங்களோடு மக்கள் முன் நிரூபணமானது.

அப்போது ஜனநாயகக் கோவணத்தில் விழுந்த பெத்தாம் பெரிய ஓட்டைக்கு சர்வகட்சிகளும் சேர்ந்து ஒருவழியாக ஒட்டுப் போட்டு ஒப்பேற்றினார்கள். அதற்குள் ஏற்கனவே பலமுறை அம்பலமாகி நைந்து போன ஜனநாயகக்  கோவணத்துக்கு இப்போது விக்கிலீக்ஸ் வடிவத்தில் அடுத்த ஆபத்து வந்துள்ளது. இந்தியத் தரகு முதலாளிகளே கேந்திரமான அமைச்சகத் துறைகளில் புகுந்து புறப்படும் போது அமெரிக்கா என்ன சும்மாவா?

இந்தியா சர்வதேச அரங்கில் பல்வேறு தருணங்களில் எடுத்த முடிவுகள் அமெரிக்க நலன்களுக்கு ஒத்திசைவானதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள இங்கே அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள், குறிப்பான சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள அப்பட்டமான அமெரிக்க அடிவருடிகளை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது பற்றியும்  அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேசிக் கொண்ட விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

மத்தியில் அமைச்சர்கள் தொடங்கி பிரதமர் வரையில் அமெரிக்க அடிமைகள் என்பது நமக்கொன்றும் ஒன்றும் புதிய செய்தியில்லையென்றாலும் தற்போது அமெரிக்கர்கள் தங்கள் சொந்த வாயாலேயே “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” என்று அங்கீகரித்து உறுதி செய்திருப்பது தான் சிறப்பு. குறிப்பாக 2006-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றங்களில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராய் இருந்த மணி சங்கர் அய்யர் நீக்கப்பட்டு முரளி தியோரா நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிகாரிகள் மிகவும் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். இந்த விபரங்கள் அடங்கிய இரகசிய ஆவணங்களை இந்துப் பத்திரிக்கை விக்கிலீக்சிடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இது குறித்தும் தொடர்ந்து சாமியாடி வரும் எதிர்க்கட்சிகள், பிரதமர் இவ்விவகாரம் குறித்த விளக்கம் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிவருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இவ்விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஜஸ்வந்த் சிங் பேசியுள்ளார். இந்திய வெளிவிவகாரக் கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும் படி விடக்கூடாது என்றெல்லாம் பெரிய நன்னூல் போல வியாக்கியானமும் செய்துள்ளார். இதே ஜஸ்வந்த் சிங் தான் பாராளுமன்ற எம்.பிக்களில் அமெரிக்காவிற்கு அரசாங்க மட்டத்தில் தரகு வேலை பார்க்கும் அமைப்பு ஒன்றை 2002-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது துவக்கி வைத்தவர்.

தரகு முதலாளிகளின் சங்கமான ஃபிக்கியின் (Federation of Indian Chambers of Commerce and Industry) பேராதரவுடன் 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்தோ-அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் குழுமம் என்கிற அமெரிக்க அடிவருடிக் கும்பலைத் துவக்கி வைத்ததே ஜஸ்வந்த் சிங் தான். அதில் உறுப்பினராய் இருந்து தனது விசுவாசத்தை நிரூபித்துக் காட்டியதற்குக் கூலியாகத்தான் 2006-ஆம் ஆண்டு முரளி தியோராவுக்கு பெட்ரோலிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தான் பாரதிய ஜனதாவின் அமெரிக்க ‘எதிர்ப்பு’ வீரவசனங்களின் லட்சணம்.

எதிர்கட்சிகளெல்லாம் அடிப்பது போல் அடிப்பதற்கு அழுவது போல் அழுது, தனது வழக்கமான வரலாற்றில் பெரும் சிறப்புப் பெற்ற ‘விளக்கத்தை’ கூடிய விரைவில் மவுனமோகன் சிங் வழங்கத் தான் போகிறார். ஆதி காலத்தில் ஹைட் சட்டத்திற்கும் சமீப காலத்தில் எஸ்-பேன்ட் விவகாரத்திலும் மிஸ்டர் மவுனத்தால் வழங்கப்பட்ட அந்த சிறப்பான விளக்கம் – “எனுக்கு ஒன்னியும் தெரியாது” என்பது தான். இவ்விவகாரத்திலும் கூடிய விரைவில் அதே போன்றதொரு ‘விளக்கத்தை’  அளிக்கத் தான் போகிறார். அதைத் தொடர்ந்து விஷயத்தை அறுபதடி ஆழக் குழிக்குள் போட்டு மூடி விட்டு பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பை எல்லோருமாகச் சேர்ந்து காத்துக் கொள்வார்கள்.

ஆனால், வினவு வாசர்கள் இவ்விவகாரத்தை ஏதோ ‘அமெரிக்காவுக்கு ஆதரவான ஒருத்தரை மன்மோகன் அமைச்சராக்கினார்’ என்கிற அளவில் மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. மணிசங்கரய்யரை நீக்கி விட்டு முரளி தியோராவை அமைச்சராக்கியதன் பின்னணியில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.

ணிசங்கரய்யர் பெட்ரோலியத் துறை அமைச்சராக நீடிப்பதை ஏன் அமெரிக்கா விரும்பவில்லை?

இதற்கு விடை காணும் முன் அமெரிக்காவின் எண்ணைப் பசியைப் பற்றி சுருக்கமாகவாவது புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியின் காரணமாகத் தான் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தி முக்கியமான எண்ணை வளம் கொண்ட நாடுகளைத் தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. தனக்குக் கட்டுப்பட்டு ஒத்து வராத காரணத்தால் தான் பேரழிவு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்துக் கொண்டுள்ளது என்று சர்வதேச அளவில் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு பீதியூட்டி ஈராக் மேல் போர் தொடுத்து அதைத் தனது நேரடி இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இவ்வகையில் அமெரிக்காவுக்கு இப்பிராந்தியத்தில் கட்டுப்படாத இன்னொரு நாடு ஈரான். உலகின் மூன்றாவது பெரிய நிலத்தடி எண்ணை ரிசர்வையும் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு ரிசர்வையும் கொண்டுள்ள ஈரான் அமெரிக்காவுக்குக் கட்டுப்படாததோடு, இரண்டாயிரங்களின் மத்தியில் இருந்து தனது எண்ணை வர்த்தகத்தை சர்வதேச நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமெரிக்க டாலரில் நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளது. மேலும்,  அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாளும் பிராந்திய ரவுடி நாடான இஸ்ரேலை நேரடியாக விமரிசித்து – விரோதித்துக் கொண்டுள்ளது ஈரான்.

அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியை ஈடுகட்ட வேண்டுமானால், சல்லிசாக மத்திய கிழக்கு எண்ணை வளத்தை கேட்பாரின்றி உறிஞ்ச வேண்டியது அவசியம். மேலும், சரிந்து வரும் தனது டாலரை நிலை நிறுத்த படாத பாடு பட்டு வரும் வேளையில் அதற்கு ஒரு மாற்று தோன்றி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது அமெரிக்கா. எனவே ஈராக்கை ஒழித்துக் கட்டியது போலவே ஈரானுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்கா உள்ளது.  ஈரானின் மேல் போர் தொடுக்க ஒரு சந்தர்ப்பத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்து இரத்த வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஈராக் மேல் போர் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே எப்படி அமெரிக்கா அதன் மேல் பல்வேறு பொருளாதாரத் தடைகளைப் போட்டு பலவீனப்படுத்தியதோ அதே போல் ஈரான் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.  மட்டுமல்லாமல், ஈராக் போருக்கு முன் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளைப் போலவே இப்போது ஈரானும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச அளவில் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.  ஈரானுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச நாடுகளை நிர்பந்தித்தும் வருகிறது. ஈரானில் முதலீடு செய்யும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் அமெரிக்காவில் தமது தொழில் அலகுகளை நடத்த வேண்டுமானால் பெரும் நட்டஈடு வழங்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க, தொண்ணூறுகளின் மத்தியில் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு குழாய் மூலம்  இயற்கை எரிவாயுவை சப்ளை செய்யும் திட்ட முன்வரைவு ஒன்று முன்வைக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஈரானின் தெற்கு பார்ஸ் எண்ணை வயலில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வரையில் குழாய் பதிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் இத்திட்டத்தில் இந்தியாவையும் ஈரான் இணைத்துக் கொண்டது. பிப்ரவரி 1999-ஆம் ஆண்டு ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே இது தொடர்பாக ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதில் தொடங்கி, இத்திட்டம் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (IPI) எரிவாயுக் குழாய்த் திட்டம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் இந்தியாவின் தலையில் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா சுமத்துகிறது. இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் மேற்கில் காலாவதியான அணு உலைகளை கொழுத்த காசுக்கு இந்தியாவின் தலையில் ஏகாதிபத்திய நாடுகள் கட்டி விட வகைசெய்தாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்காவின் பல்வேறு இராணுவ / இராசதந்திர நலன்களும் பொதிந்து கிடக்கிறது. இந்தியவை நிரந்தரமாக அமெரிக்காவின் அடிமை நாடாக வைத்திருப்பது, தெற்காசியப் பிராந்தியத்தில் தனக்குக் கட்டுப்பட்ட ஒரு அடியாளாக இந்தியாவை வைத்திருப்பது என்பனவற்றை உள்ளடக்கிய பல்வேறு விரிவான அம்சங்கள் கொண்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இந்தியாவை  ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்து வெளியேறுமாறும், ஈரான் தனது மின் உற்பத்திக்காக அணு உலைகள் அமைப்பதையும் யுரேனியத்தை செரிவூட்டுவதை  எதிர்த்தும் சர்வதேச அணுசக்தி முகமையில் (IAEA) இந்தியா வாக்களிக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்திக்கிறது. அமெரிக்க நிர்பந்தத்திற்குப் பணிந்த இந்தியா, நவம்பர் 2009-இல் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது.

அதற்கும் முன்பாகவே 2006-ஆம் ஆண்டு முரளி தியோரா பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின், உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்து ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்தும் இந்தியா விலகுகிறது. இத்திட்டம் தொடர்பாக பாகிஸ்தான், ஈரான், இந்தியா இடையே நடக்கவிருந்த பல்வேறு முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை சரியான காரணம் ஏதும் சொல்லாமல் இந்தியா புறக்கணித்துள்ளது.

ஈரானிலிருந்து எரிவாயுவை இந்தியா பெறும் திட்டத்திற்கு மாற்றாக துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கான், பாகிஸ்தான் வழியே இந்தியாவுக்கு எரிவாயுவைக் குழாய் மூலம் கொண்டு வரும் இன்னொரு திட்டத்தையும் இந்தியாவின் தலையில் சுமத்துகிறது அமெரிக்கா. இதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தாகியுள்ளது. ஆப்கானின் வடகிழக்குப் பகுதி அமெரிக்க எதிர்ப்பு தாலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்றைய நிலையையும் பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திலும் (NWFP) பலுச்சிஸ்தானத்திலும் நிலவும் குழப்பங்களையும் கணக்கில் கொண்டால், இத்திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.

ஒருவேளை நேட்டோ படைகளை நேரடியாக இறக்கி குழாயை அமைத்து விட்டாலும், எரிவாயுக் குழாயின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று இந்தியா தனது படைகளை ஆப்கானில் இறக்க வேண்டும் – அல்லது, எரிவாயுக் குழாயின் பாதுகாப்புக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது ஆப்கான் புதைகுழியில் அமெரிக்கா சிக்குண்டுள்ள இன்றைய நிலையில், ஒன்று இந்தியா எரிவாயுக் குழாய் பாதுகாப்பு எனும் போர்வையில் நேரடியாக ஆப்கானில் இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் அல்லது மறைமுகமாக நேட்டோ படைகளின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்கா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது.

துர்க்மெனிஸ்தானிலிருந்து எரிவாயுவைப் பெறுவது ஒப்பீட்டு ரீதியில் அதிக செலவு பிடிக்கும் திட்டம் என்பதோடு பாதுகாப்புப் பிரச்சினைகளும் உள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் எரிவாயுத் தேவையையும் நாளுக்கு நாள் எகிறி வரும் பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் கணக்கில் கொண்டால், இந்தியா ஈரானின் எரிவாயுவைப் பெறுவதே சிக்கனமானது – சிக்கலில்லாதது. ஆனால், நாட்டின் நலனைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டு நேரடியாக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது மவுனமோகன் தலைமையிலான இந்தியா அரசாங்கம்.

மணிசங்கரய்யர் மேலான அமெரிக்காவின் எரிச்சலுக்கு முக்கியமான காரணம் அவர் வெளிப்படையாக ஈரான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தை ஆதரித்ததோடு அதை முன்னெடுக்கவும் முயற்சித்தது தான். தற்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி இருக்கும இரகசிய ஆவணங்களில் அமெரிக்க தூதரக அதிகாரி தனது குறிப்பில், இந்தியாவின் வெளிவிவகாரத் துறையில் தமக்கு இருக்கும் ஐந்தாம்படையில் ஒருவர், (அவர் கொஞ்சம் கவுரவமாக contacts என்கிறார்) மணிசங்கரய்யர் ஈரானுடனான எரிவாயுக் குழாய்த் திட்டத்தை முன்னெடுப்பது அத்துறையில் கடும் கசப்பை உண்டாக்கி விட்டுள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதும் ஆச்சரியகரமான மாற்றங்கள்  இருந்திடக் கூடாது என்பதற்காக வெளிவிவகாரத் துறையை நேரடியாக மன்மோகன் சிங்கே தனக்குக் கீழ் கொண்டு வந்து விட்டார் என்றும், குறிப்பிட்ட அந்த அமைச்சரவை மாற்றத்தில் கபில் சிபல், சைஃபுத்தின் சோஸ், ஆனந்த் சர்மா, அஸ்வினி குமார் போன்ற அமெரிக்க நலன் விரும்பிகள் இடம்பெற்றிருப்பதையும் அந்த அதிகாரி தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அமைச்சரவை மாற்றத்திலேயே முக்கியமானதாகக் குறிப்பிடுவது மணிசங்கரய்யரின் நீக்கத்தைத் தான்.

ஆக, இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும் சர்வதேச அரங்கில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – அதில் இந்தியாவின் நலனே பதிக்கப்பட்டாலும் கூட – என்று அமெரிக்கா காலால் இட்ட உத்தரவை நமது மவுனமோகன் தலையால் நிறைவேற்றியுள்ளார். முரளி தியோராவின் நியமனத்தை வெறுமனே அமெரிக்க சார்பு என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது – இந்த அமெரிக்க சார்பால் இந்தியா இழந்தது என்னவென்பதையும், மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சேர்த்து தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

லகின் பெரிய ஜனநாயகம்; மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் என்றெல்லாம் அலங்காரமாக பின்னி முடியப்பட்டுள்ள இந்தப் போலி ஜனநாயகக் கொண்டையின் உள்ளே புழுத்து நெளிவது அமெரிக்க நலன் என்னும் ஈரும் பேனும் தான். இது தம்மை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகம் எனும் கூச்ச உணர்வு கூட இல்லாமல் ஒரு தொழில் முறை தரகனைப் போல சூடு சொரணையில்லாமல் ஒருவனால் செயல்பட முடிகிறது என்றால், அவன் எப்பேர்பட்ட ஒரு அயோக்கியனாக இருக்க முடியும்? ஆனால், முதலாளித்துவப் பத்திரிகைகளோ இவரைத் தான் படித்தவரென்றும் அப்பாவியென்றும் ஓயாமல் நம் காதுகளுக்குள் ஓதிக்கொண்டுள்ளன.

இந்திய ஆளும் கும்பலின் அமெரிக்க அடிமைத்தனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்பே பத்திரிகைகளில் பேசப்பட்டிருந்தாலும் இப்போது மிக எடுப்பாக அமெரிக்கர்களின் வார்த்தைகளிலிருந்தே அம்பலமாகியுள்ளது.

நாடு எத்தகைய அபாயகரமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? ஆளும் காங்கிரசு கும்பலும் அதை தலைமை ஏற்றுநடத்தும் சோனியா – மன்மோகன்சிங் கும்பலும் எவ்வித கூச்ச நாச்சமின்றி அமெரிக்காவின் அடிமையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலை அடித்து விரட்டாமல் இந்தியாவிற்கு இறையாண்மையோ, சுதந்திரமோ இல்லை.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

ஆதாரங்கள்:

http://en.wikipedia.org/wiki/CentGas
http://en.wikipedia.org/wiki/Turkmenistan
http://en.wikipedia.org/wiki/Trans-Afghanistan_Pipeline
http://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93Pakistan%E2%80%93India_gas_pipeline
http://www.payvand.com/news/08/jun/IPI-map-US-gov.gif
http://www.payvand.com/news/08/jun/1158.html

http://ipsnews.net/news.asp?idnews=32152 – IPI in trouble
http://www.indiatvnews.com/news/India/Wikileaks_Aiyar_Was_Shifted_For_Being_Anti_US_-7119.html
http://www.indianexpress.com/news/wikileaks-row-oppn-corners-govt/763056/0
http://www.ndtv.com/article/india/wikileaks-cable-pro-us-cabinet-reshuffle-91832
http://www.telegraphindia.com/1110316/jsp/nation/story_13722263.jsp

http://www.iags.org/n0507071.htm
http://www.atimes.com/atimes/South_Asia/MB19Df01.html

http://www.onlinenews.com.pk/details.php?id=176177
http://www.indianexpress.com/news/iran-tells-india-cant-lower-gas-price/758134/1

http://www.ensec.org/index.php?option=com_content&view=article&id=282:politicking-over-central-asias-pipelines&catid=114:content0211&Itemid=374

http://english.farsnews.com/newstext.php?nn=8912220431
http://www.dailytimes.com.pk/default.asp?page=2011%5C03%5C12%5Cstory_12-3-2011_pg5_7 – 

http://www.energybulletin.net/node/12463

  1. அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன் – சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !! | வினவு!…

    பிரதமர் அமெரிக்க அடிமை என்பது தெரிந்த செய்தி. அமெரிக்கர்கள் தங்கள் சொந்த வாயாலேயே நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்று அங்கீகரித்து உறுதி செய்திருப்பது தான் சிறப்பு….

  2. நேத்து ரஜினி, இன்னிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், நாளைக்கு இந்துத்வாவா… சூப்பர். அட்டவணை மிக சரியா இருக்கு. அநியாயத்தை தட்டி கேட்க உங்களை விட்டா வேற ஆளே இல்லை.

    • நல்ல தம்பி! தட்டிக்கேட்டால் மட்டும் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள்!

  3. படிக்கிற காலத்தில் அரசியல் கூட்டங்கள் கேட்கிற போது, அரசியல் தெரியாத போது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற வார்த்தையை கேட்கிற போது, எல்லா வற்றிலுமா ஏகாதிபத்திய தலையீடு இருக்கும் என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. காலப்போக்கில் கல்வி கற்று, பணிக்குச் சென்று, தொழிற்சங்கம் உள்ளிட்ட அனுபவ பாடங்கள் கற்றபின், பல புத்தகங்கள் படித்த பின்னர் ஏகாதிபத்தியம், அது எதிர்க்கப்படவேண்டுமென்ற விபரங்கள் புரிந்தது. மார்க்சிய லெனினிய சிந்தனையாளர்கள் தமது கூட்டங்களில் உலகவங்கி நிபந்தனையின் பேரில் இந்தியாவில் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது என்று கூறுகையில், பேருந்துகளில் ம.க.இ.க. தோழர்கள் பு.ஜ மற்றும் பு.க புத்தகங்கள் விற்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகவங்கி கட்டளை என்கிற வார்த்தைகளை பயன்படுத்துகையில் பேருந்தில் பலர் அலட்சியமாக உதடு பிதுக்கி இவர்களுக்கு வேறு வேலையில்லை என சலிப்பதை பார்த்திருக்கிறேன்.
    ஆனால் இன்றோ இந்தியாவின் வெளியுறவு செயலாளரை இயக்குவதிலிருந்து, வெளியுறவு கொள்கையை தீா்மானிப்பதிலிருந்து, இந்தியா அயல்நாட்டு விவகாரங்களில் எதுவரை தலையிடலாம், எந்த எல்லைக்கு மேல் மவுனம் காக்க வேண்டும் என்பதிலிருந்து, இந்திய அமைச்சர்களாக யாரை நியமிக்கலாம் என்பதிலிருந்து, தோற்ற ப.சிதம்பரம் (உலகவங்கி ஆதரவாளர்) ஜெயிக்க வைக்க மேற்கொண்ட நடவடிக்கையிலிருந்து, தமிழக குக்கிராமங்களில் வாக்காளர்களுக்கு ப.சி. வாரிசை வைத்து பணம் கொடுக்க வைப்பதிலிருந்து, இலங்கைப்பிரச்சனையில் மவுனமாக வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டுமென்பதிலிருந்து, நிதியமைச்சர் பிரணாப் என்றவுடன் ஏன் மான்டேக் சிங் அலுவாலியா அந்த பதவியில் நியமிக்கப்படவில்லை என்பதிலிருந்து, மன்மோகன் சிங் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஒன்றுக்கு போக வேண்டுமென்பது வரை தீர்மானிப்பது அமெரிக்காதான் என்பது ஒரு அந்நிய நாட்டு இணையதள அதிபரான ஜூலியன் அசாஞ்சே யின் விக்கி லீக்கிலிருந்து, ரகசியங்களைப் பெற்று விக்கி-லீக் தி இந்து பத்திரிக்கை லீக் செய்த கடந்த 4 நாட்கள் செய்திகளால் இந்திய (ஜன)பணநாயகம் நாறித்தான் போயிருக்கிறது.
    பாலச்சந்தர் இயக்கிய (முந்தைய ஜெமினி கணேசன் நடித்த) நான் அவனில்லை என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் நீதிமன்றத்தில் வக்கீல் எதெற்கெடுத்தாலும் நான் அவனில்லை என தெரிவிக்கும் ஜெமினியின் மீது ஒரு புத்தகத்தை விட்டெறிந்து அதனால் அடிபட்டவுடன் எந்த மொழியில் அம்மா என அலறுகிறார் என்று பார்க்க நினைக்கிற போது ஜெமினி “முஷேர்” என்று கத்துவது போல் ஒரு காட்சியமைந்து, உடனடியாக அனைத்து வக்கீல்களும் எந்த மொழியில் முஷேர் என்ற வார்த்தை வருகிறது என பல புத்தகங்களை புரட்டுவது போல் ஒரு காட்சி வரும். அது போல் நமது உலகவங்கி நாயகர் திருவாளர் பரிசுத்தம் பாரத பிரதமர் இன்று திருவாய் மலர்ந்து முஷேர் – நான் அவனில்லை – எனிக்கி ஒன்னும் தெரியாது என்றுள்ளார் என இன்று காலை பேப்பரில் பார்த்தேன்.

    • ரஸ்ஸிய எகாதிபத்தியம் பற்றி படித்ததில்லையா நீங்க. இதே விக்கிலீக்ஸ் பனிப் போர நடந்த 45 ஆண்டுகளில் வெளிவந்திருக்குமானால், இந்த நாணயத்தின் மறுபக்கமும் தெரிந்திருக்கும். சோவியத ரஸ்ஸிய (ஸ்டாலின் காலத்திலும், அதற்க்கும் பின்பும்) நடத்திய ‘ஏகாதிபத்திய’ சதிகள் பற்றியும் விக்கிலீக்ஸ் போல் வெளிப்பட்டிருந்தால் மிக சுவாரசியமாக இருந்திருக்கும்.

      மற்றபடி, அமெரிக்க ‘அடிமைகள்’ என்றெல்லாம் பார்ப்பக்கவில்லை. அணு சக்தி ஒப்பந்தம் நமக்கு மின்சாரம் மிக அதிகம் தேவை படுவதால் தான். இப்பவே, சென்னை தவிர பிற மாவட்டங்களில் தினமும் பல மணி நேரங்கள் கடும் மின் வெட்டு. மின் பற்றாகுறைய குறைக்க என்னதான் செய்யலாம் ? சொல்லுங்களேன்.

      • நண்பர் சித்திர குப்த்தன்,

        ‘உலக வங்கி’ கட்டளை என்ற சொல்லாடல் : உலக வங்கி என்று எதை சொல்கிறார்கள் :
        IMF or World Bank ? இரண்டிற்க்கும் என்ன வேறுபாடு ? முதலில் அதை தெளிவுபடுத்துங்களேன். 1991 சிக்கல் பற்றிய எமது பதிவில் இந்த ‘உலக வங்கி’ கட்டளை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். மாற்று வழி சொல்லுங்களேன்.

  4. இனி வரும் கால்ங்களில் வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி போக்கை பாதிக்க கூடிய மூன்று முக்கிய விஷயங்கள் –

    1. இந்த பதிவில் உள்ளது போல் பெட்ரோல்.

    2.பருவ நிலை மாற்றம் சம்பந்தமான சுற்றுசூழல் பேச்சு வார்த்தை. கோபந்ஹேகன் பேச்சுவார்த்தையின் போது திடிரென இந்தியாவின் நன்மைக்கு எதிராக, இத்தனை ஆண்டு காலம் போராடி வந்த சலுகைகளை விட்டு கொடுத்த மேலை நாடுகளுக்கு ஆதரவாக திடீரென மத்திய அரசு முடிவெடுத்ததால் அது நாள் வரை கடினமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த இந்திய பேச்சுவார்த்தையாளர்கள் திடீரென விலகிவிட முடிவு செய்யும் அளவு பிரச்சனையானது. இது போன்ற முடிவுகள் பிற்காலத்தில் நாம் நினைத்து பார்க்கமுடியாத பதிப்பை ஏற்படுத்தும்

    3. WTO பேச்சுவார்த்தை – இந்த பேச்சுவார்த்தையிலும் இத்தனை நாட்கள் போராடி வரும் சில சலுகைகளை விட்டு கொடுக்க முடிவு செய்து விட்டதாகவும் உறுதி படுத்த படாத தகவல்கள் கசிந்து வருகின்றன.

    இந்த செய்திகள் பற்றியெல்லாம் பத்திரிக்கைகள் குறைந்த முக்கியத்துவமே கொடுக்கிறது.

  5. உறுதிமொழி :

    இந்தியா என்பது எனது அமெரிக்க நாடு. இந்தியர் அனைவரும் அமெரிக்கர்களுக்காக உழைக்கும் உடன்பிறப்புக்கள்.

    அந்த நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்திய நாட்டின் புதுப்பெருமைக்காகவும் முதலாளித்துவ மரபுச் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன். அமெரிக்க நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றென்றும் பாடுபடுவேன்.

    என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். இவர்கள் அனைவருக்கும் மேலாக அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவை மதிப்பேன். அவரிடம் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.

    அந்த நாட்டிற்காக என் மக்கள் உழைத்திட முனைந்து நிற்பேன். அமெரிக்கா நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.

    ***

    சோனியா, பிரதமர் மன்மோகன் மற்றும் அவரது அமைச்சர்கள் ,மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வாய்த்த திறமைசாலி அடிமைகள் தினந்தோறும் எடுக்கும் உறுதிமொழி.

    இதை ஒன்றும் விக்கி லீக்ஸ் வெளியிட்டு நம் மண்டைகளுக்கு ஏற வேண்டும் என்கிற அவசியமில்லை!

  6. இந்தியாவின் தலைநகரமே வாஷிங்டன்னாக மாறியபிறகு.இதுமட்டும
    ா நடக்கும்.இதுக்கு மேலயும் நடக்கும் இந்த வேசி பிறவியான கைக்கூலிகளின் அட்டுழியங்கள் தொடர்கதையாகும் .பின் இயற்கை கோபம் கொள்ளும் சுனாமியாக,புகம்பமாக,அனுஉலை வெடிப்பாக,
    அப்போதும் இவர்களும் அவர்களும் சத்திய சோதனையின் தியானத்தில் கோபம் கொள்ளமாட்டார்கள்

  7. ராஜேந்தர் சிங் சர்க்காரியா… இந்தப் பெயரில் சர்க்கரை இருந்தாலும், கருணாநிதிக்கு இந்தப் பெயர் வேப்பங்காயாகவே கசக்கும். கருணாநிதியின் ஊழல்களையும், அவர் ஊழல் செய்யும் முறைகளையும், மிகச் சிறப்பான புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு ஆராய்ந்து, கருணாநிதியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய பெருமை, இந்த நீதிபதி சர்க்காரியாவையே சாரும்.

    அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும். வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம். இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ஆனால் இதுதான் நடந்துள்ளது. என்னதான் நடந்துள்ளது என்று சென்னை கன்னிமரா நூலகத்தில் விசாரித்த போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனைத்து நகல்களும் வாங்கிச் செல்லப் பட்டு விட்டன என்ற தகவல் தெரிய வந்தது. யார் வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டால், ‘மினிஷ்டர் ஆபீஸ்லேர்ந்து வாங்கிகினு போனாங்க சார்… அத்தோட அவ்ளோதான்….’ என்று கூறினார்.

    இது போல ஆவணங்களை மறைப்பதன் மூலம், வரலாற்றை திரித்து, உத்தம சீலர் வேஷம் போட நினைக்கிறார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் கணக்கை பொய்யாக்க வேண்டாமா ? சவுக்கும் அதன் வாசகர்களும், பெரிய தில்லாலங்கடி இல்லையா ? சாம்பிளுக்காக ஒரே ஒரு பகுதி மட்டும், என் அன்பு சவுக்கு வாசகர்களுக்காக இதோ…..

    தர்மாம்பாள் என்ற அல்லது இராஜாத்தி என்னும் திருமதி தர்மா தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறற்த கடைசி மகள் ஆவார். திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இரண்டாவது கணவரும் இறந்து விட்டார். அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை. அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார். திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார். அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார். 1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர்.

    1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாவும் திரு.மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. திரு.கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் திருமதி.தர்மாவை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் (இதுக்குப் பேர்தான் சுயமரியாதைத் திருமணமா ? … கருமம். கருமம்) திருமணம் செய்து கொண்டார். அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். 1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது (அப்போ ஜாதகம் பாத்திருந்தா, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இந்தப் பிள்ளை ஆட்டையைப் போடும் என்று சொல்லியிருப்பார்களோ… நமக்கு இந்த மேட்டர் தெரிஞ்சுருந்தா அப்போவே ஏதாவது பண்ணியிருக்கலாம் பாஸ்) என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. திரு கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

    சாம்பிள் எப்பூடி…. ? இதில் ஒரு ஒற்றுமையை கவனித்தீர்களா பாஸ்…. ? கருணாநிதிக்கும் ராஜாத்தி மூன்றாவது மனைவி. ராஜாத்திக்கும் கருணாநிதி மூன்றாவது கணவர். (இதை விட தமிழனுக்கு கேவலம் வேண்டுமா?) விதியின் இந்த அற்புதமான விளையாட்டைப் பார்த்தால் அழுகை வருகிறது பாஸ். தமிழில் மிக முக்கியமான நாடகத் துறை ஒரு காதலை அரங்கேற்றியிருக்கிறது… அதற்கு போய் பய புள்ளைக என்னமா பேசுறாங்க பாஸ்… அதுவும் இந்த எதிர்க்கட்சிக் காரய்ங்க இருக்காங்களே….

    காதல் வயப்பட்டிருக்கும் காதலர்கள், அப்போது வெளியாகியுள்ள திரைப்படங்களில் உள்ள பாடல்களை தங்கள் காதலியிடம் / காதலரிடம் பாடி, மகிழ்வது வழக்கம். இவர்களுக்கு திருமணமானது 1966ம் ஆண்டு. அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் உள்ள பாடல்களில், இந்த சிறப்பான ஜோடிக்கு பொருத்தமான பாடல் எது என்று சவுக்கு ஆராய்ந்ததில், முகராசி படத்தில் இடம் பெற்ற, இந்தப் பாடலே மிக மிக பொருத்தமாக இருக்கிறது.

    “எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்..

    இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்…

    நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்….

    இதில் யாருக்கு இங்கே கிடைக்கும்…”

    60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார். இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே…..

    வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..

    என் அன்பு உறவுகளே…. சவுக்கை படிக்கும் நீங்கள் இணையத்தில் எத்தனை வல்லவர்கள் என்பது நன்கு தெரியும்…. உங்களிடம் சவுக்கு உரிமையோடு அன்புக் கட்டளை இடுகிறது. இணையத்தை பயன்படுத்தும் தமிழர் ஒருவர் கூட, இந்த விபரத்தை படிக்காமல் இருக்கக் கூடாது. நகலெடுத்து, அத்தனை பேருக்கும் மெயிலில் இதை அனுப்புங்கள். இறந்து போன ஈழத் தமிழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, துரோகிகளை துகிலுரிப்பதுதான். சவுக்கை ஏமாற்ற மாட்டீர்கள் தானே… ?


    என்றும் தமிழ் உணர்வுடன்
    அன்புடன்,

    “தளவாய்” பனிவளன்(+919842978005)
    நான்தமிழன்.திராவிடன்அல்ல.
    தமிழா,

    பள்ளனாய், பறையனாய்,
    நாடானாய், தேவனாய்,
    வன்னியனாய், பரவனாய்,
    பிள்ளையாய், கவுண்டனாய்,
    மள்ளனாய்,ராவுதனாய்,
    குயவனாய்……
    வாழ்ந்தது போதும்.

    வா – தமிழா
    தமிழனாய் வாழ்வோம்.

    வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

    “பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
    தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி ”

    “தமிழ் சாதிகள், தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ – வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி. “

  8. தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியா வில் சாதாரண விஷயம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் விக்கிலிகீஸ் தகவல் கூறுகிறது

    உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியா தொடர்பான விவரங்களை விக்கிலீக்ஸ், த ஹிந்து நாளிதழுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

    இதுவரை விக்கிலீக்ஸ் வெளியிடாத இந்தத் தகவல்களை நேற்று முதல் ஹிந்து வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுத்தாக ஆந்திரா மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், அவர்கள் உதவியாளர்களும் ஒப்புக் கொண்டதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரடரிக் கப்லான் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க தூதரக குழுவிடம் கார்த்தி சிதம்பரம், ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மதுரை மேயர் எம். பட்டுராஜன், ஆந்திராவைச் சேர்ந்த மஜ்லிஸ் இ இத்தன்ஹதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்களும்,

    தங்கள் உதவியாளர்களும் வாக்களர்களுக்கு எவ்வாறு பண பட்டுவாடா செய்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி பேசியுள்ளனர்.

    13-5-2009 அன்று அனுப்பப்பட்டுள்ள கேபிளில் கப்லான் தேர்தல் பணிகளை பண பலம் எவ்வாறு ஆட்டி படைக்கிறது என்று இந்த துறையில் உள்ள பலரிடம் சேகரித்த தகவல்களை அனுப்பியுள்ளார்.

    வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம், பொருள் முதலியவை கொடுப்பது என்பது தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று. ஏழை வாக்காளர்கள் வேட்பாளர்கள் ஏதாவது கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.

    அவர்களும் வாக்களர்களின் எதிர்பார்ப்புகளை எப்படியாவது பூர்த்தி செய்கின்றனர். கிணறு வெட்ட பணம் கொடுப்பதில் இருந்து, காலையில் செய்தித்தாள் கொடுக்கும்போது அதற்குள் பணத்தை வைத்து கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பது வரை செய்தவற்றை எல்லாம் அரசியல்வாதிகளும், அவர்கள் ஆட்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

    இதற்கான பணம் கட்சி நிதி திரட்டுவதன் மூலம் கிடைக்கிறது. இவ்வாறு பணம் கொடுப்பதால் வாக்காளர்களின் மனம் மாறுகிறதா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், சில நேரங்களில் நிச்சயம் மனம் மாறத்தான் செய்கிறது.

    கப்லானும், அவரது சக ஊழியர்களும் சென்ற இடங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் லஞ்சம் என்பது தேர்தல் நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றே கூறினர்.

    இந்த குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சேரிப் பகுதிகளுக்கு சென்றபோது தேர்தல் நேரத்தில் அங்குள்ள மக்கள் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பதை தெரிந்து கொண்டனர்.

    அரசியல் வல்லுநர் ஒருவர் அவர்களிடம் கூறுகையில், பிரச்சாரத்திற்கு சேரிப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. அங்குள்ள மக்கள் தொகையும், அவர்கள் வறுமையும் லஞ்சம் மூலம் அவர்களை சுலபமாக வாங்கிவிடச் செய்கிறது என்றார்.

    சென்னையில் உள்ள ஒரு என்ஜிஓ அமைப்பு கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு திமுகவும், அதிமுகவும் எப்பொழுதுமே லஞ்சம் கொடுக்கும். அவர்கள் பணப் பட்டுவாடாவுக்கென்று தனி முறை வைத்துள்ளனர்.

    தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் அரிசி மூட்டையில் பணத்தை கொண்டு வருவார்கள். அவர்களிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்வர். ஏஜென்டகள் வழக்கமாக தேர்தல் ஆணையம் தூங்கும்போது நடுராத்திரியில் குறிப்பாக 2 முதல் 4 மணிக்குள் தான் வருவார்கள்.

    இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?:

    இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு அரசியலில் பணப்புழக்கத்தை விட்டவர் அழகிரி என்பது கப்லானின் கருத்து. அழகிரியின் நம்பிக்ககைக்கு பாத்திரமான பட்டுராஜன் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்களை இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். இது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. அழகிரி திருமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் என்று பட்டுராஜன் கேபிளில் கூறியுள்ளார்.

    இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா என்ற தலைப்பில் கப்லான் எழுதிய கட்டுரையில் திருமங்கலத்தில் திமுக எவ்வாறு பணப்பட்டுவாடா செய்தது என்று விளக்கமாக கூறியுள்ளார்.

    வழக்கமாக நடுராத்திரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக திருமங்களத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு செய்தித்தாள்களில் ஒரு கவரில் பணம் வைத்து கொடுக்கப்பட்டது. அந்த செய்தித்தாள்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக வாக்காளர் சீட்டு வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அனைவரும் லஞ்சம் வாங்க வற்புறுத்தப்பட்டுள்ளனர். செய்தித்தாள்களில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை பட்டுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.

    மதுரையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி எஸ். கண்ணன் தூதரக ஊழியர்களிடம் கூறுகையில், திருமங்கலத்தில் தலைக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது அனைத்தையுமே மாற்றிவிட்டது. இது முன்பு கொடுக்கப்பட்ட தொகையை விட ரூ. 500 அதிகம் என்றார்.

    2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திருமங்கலத்தில் செய்ததுபோல் பணம் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏனென்றால் சட்டசபை தொகுதியை விட மக்களவை தொகுதி 7 மடங்கு பெரியது. இருப்பினும் செய்தித்தாள் முறை மூலம் பணம் கொடுக்கத்தான் அழகிரி திட்டமிட்டுள்ளார்.

    கார்த்தி சிதம்பரம்:

    கேபிளில் பெயர் குறிப்பிடாத தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சென்னையில் உள்ள தூதரக குழுவிடம் கூறுகையில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் சிறப்பாக செய்லபடுகிறார். அவர் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார் என்றார்.

    தனது தந்தையை ஆதரிக்கும் சில கிராமவாசிகளுக்கு பணம் கொடுத்ததை கார்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். பெரும்பாலான கிராமங்கள் உள்ளூர் கோயில்களுக்கும், சத்திரங்களுக்கும் நன்கொடை கேட்டன என்றார்.

    இது தவிர ஒவைசி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். நான் கிணறு வெட்ட பணம் கேட்டவர்களுக்கு கட்சியினர் மூலம் ரூ. 25 ஆயிரம் கொடுத்து அவர்கள் கிணறு தான் வெட்டுகிறார்களா என்று கண்காணிக்குமாறு கூறினேன். நான் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கவில்லை, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

    நான் ஒரு அனாதைப் பெண்ணின் திருமணத்திற்கு ரூ. 35 ஆயிரம் கொடுத்தேன். இவ்வாறு பணம் கொடுப்பது சட்டவிரோதமில்லையா என்று கேட்டதற்கு ஆமாம், ஆனால் இது தான் ஜனநாயகம் என்று பதில் அளித்துள்ளார்

    நன்றி

  9. ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப்போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம்.

    அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, “உலகமெல்லாம் நடப்பதுதான்’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர்.

    இது நடந்தது 1983-ம் ஆண்டில். இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார்.

    ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை. இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார்.

    அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று. உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம்.

    இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா? அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார்.

    “ஊழலை வேரறுக்க வேண்டும்” என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது. இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை “திருவாளர் பரிசுத்தம்’ என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது, அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது.

    ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.

    இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.

    சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், “திருடன், திருடன்’ என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.

    2.2 பில்லியன் டாலர் கதை1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் “ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்’ இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.

    இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.

    ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி, “இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்’ என்று ஸ்வீசர் கூறியது.

    அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும்.

    அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும். இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.

    கேஜிபி ஆவணங்கள் சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய “தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா – பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

    “அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார். கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், “இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்’ (பக்.223) இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். “ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார்.

    இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், “ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது’ என்று செய்தி வெளியிட்டது.

    இந்திய ஊடகங்கள்ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார்.

    2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது.”ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

    ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.

    மெளனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மெளனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மெளனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

    ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

    எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள். இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மெளனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சோனியா நேர்மையானவர்; ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா? ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மெளனமாகவா இருப்பார்? மொரார்ஜி தேசாய் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று புலிட்சர் பரிசுபெற்ற சேமெளர் ஹெர்ஷ் எழுதியபோது, 87 வயதான மொரார்ஜி கொதித்து எழுந்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 93 வயதாகியிருந்த மொரார்ஜிக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் ஆஜராகி, அவருக்கும் சிஐஏவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

    தம்மீது இல்லாத பழியைச் சொன்னால் தள்ளாத வயதிலும்கூட இப்படித்தான் கடுஞ்சினம் கொள்வார்கள். அதுதான் நேர்மையாளர்களின் குணம். ஆனால், சோனியாவிடமும் ராகுலிடமும் இருந்து இதுபோன்ற பதிலடி வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடவில்லை. மொரார்ஜிபோல தள்ளாத முதியோரும் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த மெளனம்? இதுவே ராகுலும் சோனியாவும் இல்லாமல் அத்வானியும் மோடியுமாக இருந்தால் நமது ஊடகங்கள் பேசாமல் இருந்திருக்குமா? இதைத் தலைப்புச் செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி இருக்காதா? இல்லை, சோனியாவின் கைப்பாவையாக இயங்கும் இந்த அரசு அவர்கள் இருவரையும் சும்மா விட்டிருக்குமா?

    ரூ. 20.80 லட்சம் கோடி கொள்ளை

    சோனியாவின் குடும்பத்துடன் விவகாரம் முடிந்துவிடவில்லை. இவர்களுடைய பணமும் அதில் அடக்கம் என்பதால் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க அரசு முயற்சி எடுக்கத் தயங்குகிறது. அதனால், நாட்டுக்கு அவர்களால் ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டு, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிவிட்டன.

    ஆனால், இந்தியா மட்டும் இந்தக் கள்ளப் பணத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாமல் சுணங்கியிருக்கிறது. 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் 500 பில்லியன் முதல் ரூ. 1.4 டிரில்லியன் வரையிலான கறுப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.கே. அத்வானி உறுதியளித்தார்.

    முதலில் அவ்வளவு பணம் இருக்காது என காங்கிரஸ் மறுத்தது. நாடு முழுவதும் கறுப்புப் பண விவகாரம் பரபரப்பான பிறகுதான் மன்மோகனும் சோனியாவும் சுதாரித்தார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று மிகத் தாமதமாக உறுதியளித்தார்கள். ஜிஎப்ஐ என்கிற கறுப்புப் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபடும் ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 462 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20.8 லட்சம் கோடி) கறுப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

    “1948 முதல் 2008 வரை வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம், குற்றச்செயல்கள் மூலமாக 213 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்தியா இழந்திருக்கிறது’ என்று ஜிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது. இதில் எந்தக் கணக்கின்கீழ் சோனியா குடும்பத்தில் 2.2 பில்லியன் டாலர் கணக்கு வரும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். இதுபோக, 2ஜி, காமன்வெல்த் என இப்போதைய ஊழல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்களது பதுக்கல் தொகை இன்னும் பல மடங்காக இருக்கக்கூடும். இப்படி சோனியாவின் குடும்பமே வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும்போது, அவர்கள் எப்படி மற்றவர்களின் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால், இந்தக் குடும்பத்தால், இந்தியாவுக்கு ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம்தானே!

    கொள்ளையர்களுக்குப் பாதுகாப்பு

    வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. லிக்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் 2008 பிப்ரவரியில் சேகரித்தார்கள்.

    அரசுகள் விரும்பினால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த கள்ளக்கணக்கு வைத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கிடைத்த பட்டியலில் சுமார் 250 இந்தியர்களின் பெயர்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

    இந்தப் பட்டியலைத் தருகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் வெளிப்படையாகச் சொன்ன பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைப் பெறுவதில் ஆர்வம் காட்டவேயில்லை. லிக்டென்ஸ்டைன் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கு இந்திய நிதியமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என “டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் ஆதாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டது.

    விவகாரம் பூதாகரமாவதைப் புரிந்துகொண்ட அரசு, கள்ளக்கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலைப் பெற முன்வந்தது. ஆனால், வெளிப்படையாக அல்ல. ஜெர்மனியுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தத்தின் வழியாக வெளிப்படையாகப் பெற்றால், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டிவரும். அப்படியில்லாமல், ஒப்பந்தத்தின் வழியாக விவரங்களைப் பெற்றால், அவை ரகசியமானவையாக வைக்கப்படும். ஊடகங்களுக்குத் தரவேண்டியது இல்லை.

    வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா, என்ன? மத்திய அரசின் மெத்தனத்தால் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது.

    ஹசன் அலி என்ற குதிரை வியாபாரி ஸ்விஸ் வங்கியில் ரூ. 1.5 லட்சம் கோடி வைத்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 71,848 கோடி வரி விதிக்கப்பட்டது. என்ன நடந்ததோ, இந்த வழக்கு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. விவரங்களைக் கேட்டு சுவிஸ் அரசுக்கு எழுதப்பட்ட கோரிக்கை வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டது. அதனால், தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை.

    உண்மையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஹசன் அலிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இந்த வழக்கு மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹசன் அலியை விசாரித்தால் இன்னும் எத்தனையோ பேரை விசாரிக்க வேண்டுமே!ஒரு குடும்பமும், அவர்கள் சுருட்டிக் கொண்டுபோய் வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்கும் பணமும்தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவதைத் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

    இப்படிப் பல ஆயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள், வெறும் ரூ. 3.63 கோடி வைத்திருப்பதாகவும், கார்கூட இல்லை எனவும் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இத்தாலியர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்களோ என்னவோ? இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதாகச் சோனியா வருத்தப்படுகிறார்; ஊழல்வாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ராகுல் கோபப்படுகிறார். ஆமென்!

    – நன்றி: தினமணி

  10. கேள்விகளுக்கு பதில் சொல்லாம ஓடிப் போன அதியமான் மீண்டும் வந்திருக்கிறார். விட்டுறோவோமா என்ன?

  11. லேட்டஸ்டாக காங்கிரசை விட எதிர்கட்சி பாஜக மிகச் சிறந்த அமெரிக்க அடிமை என்பதையும் அடிக்கடி பாஜக தலைவர்களுக்கு வரும் தேசபக்த வலிப்பு நோய் உண்மையில் அமெரிக்க தேசபக்தியைக் குறிக்கிறது என்பதும் விக்கிலீக்ஸில் அம்பலமாகியுள்ளது.

    காவி டவுசரும், காங்கிரசு டவுசரும் ஒன்னுதான் உள்ள இருப்பதோ அமெரிக்கத் தோலுதான்னு கிழிஞ்சு தொங்குது. இதுல ஸ்பேசாலிட்டி என்னனாக்க, பாஜகக் காரன்தான் பெரிய பூட்ஸ் நக்கின்னு அமெரிக்காகாரனே சர்டிபிகேட் கொடுத்துருக்கான்.

    ‘நமக்குக் கிடைத்த காவி அடிமைகள் நல்ல நீளமான நாக்குள்ளவர்கள், என்ன சிறுது வாய்க்கொழுப்புதான் அதிகமென்று’ அமெரிக்கத் தூதுவர் டீக்கடையில் பேசிக் கொண்டிருந்ததாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது பற்றி அசுரன் தள பதிவில் சேர்க்கப்பட்டுள்ள விவரம் இங்கு தகவலுக்காக,

    ________________________

    6)
    தேச பக்த வேசம் போடும் பயங்கரவாத கட்சியான பாஜகவின் அமெரிக்க எதிர்ப்பு ஏமாற்றும் விக்கிலீக்ஸில் அம்பலமாகி சிரிப்பாய் சிரிக்கிறது. அயோக்கியக் கிரிமினல் புணந்தின்னி சொறிநாய் அத்வானி (http://www.thehindu.com/news/the-india-cables/article1550809.ece) தனது ஹிட்லர் மீசையில் மட்டுமல்ல பொய், மோசடி, சுத்துமாத்துக்களிலும் ஹிட்லருக்குக் குறைவில்லாத 420 என்பதையும், ரெட்டை நாக்குப் பீப் பொறுக்கி என்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. வெளிய தேசபக்த வீறாப்புப் பேசி அமெரிக்காவை எதிர்த்துவிட்டு உள்ள போயி அவனோட கால்ல விழுந்து கதறிருக்கானுங்க இந்த காவி டவுசர் டப்பா மண்டையங்க.

    இத விட அசிங்கம் நம்ம ஆர்எஸ்எஸ் கியிஞ்ச கோமனம் வாஜ்பேயிய(http://www.thehindu.com/news/the-india-cables/article1556669.ece) பத்தின விசயம்.

    நாம என்னவோ மன்னுமோகன் சிங்தான் பெரிய பூட்ஸ் நக்கினு நினைச்சுட்டு இருக்கோம், ஆனா அவன விட பெரிய பூட்ஸ் நக்கி வாஜ்பேயின்னு அமெரிக்காரனே சர்டிபிகேட் கொடுக்கிறான். அத்தோட நில்லாம, காங்கிரசுக்காரன விட பாஜகக்காரன் இருந்தா இந்த நாட்ட இன்னும் சீக்கிரமாக் கூட்டிக் கொடுத்துறுப்பானுங்களேன்னு வருத்தப்படறான் அமெரிக்காக்காரன். இதுதாம்பா ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் சொல்லும் இந்து தேசியம்.

    ரெட்டை நாக்கு காவி கும்பலின் அமெரிக்க தேசபக்தி கார்டூன்:
    http://www.thehindu.com/multimedia/dynamic/00506/19THO1CARTOONCOLOUR_506084e.jpg

    • அசுரன் அண்ணே
      எததின வாட்டி சொன்னாலும் கேக்க மாட்டேங்கறிங்களே.
      செலது வாயெத் தொறந்தா வசவு தான் வரும்.

      கொரைக்கவும் ஊளையிடவும் மட்டும் தான் தெரிஞ்ச பிறவிங்களுக்கு இரக்கப் படணும் அண்ணே.

      • [obscured]. இந்த உலகமயமாக்கல் ஓவரா வேலை செய்ஞ்சு, இணைய எழுத்து இலவசமா ஆக்கியது பெரிய தப்பா போச்சு. பொது கழிப்பறை சுவர்களில் கண்டத கிறுக்கிற [obscured] இங்கு வந்து ‘கருத்து’ சொல்றேன் பேர்வழி [obscured]

        • அதியமான், ஏன் இப்படி கெட்ட வார்த்தையில திட்டுறீங்க, சுத்த பாசிசமா இருக்கே, உங்க கையில ஆட்சி வந்தா மாற்று கருத்து இருக்குறவங்களையெல்லாம் கழுவுல ஏத்திடுவீங்க போல.. இதுதானா உங்க டக்கு, ச்சீ. ஜனநாயகம். அச்சச்சோ!!!

        • முதலாளித்துவத்தை காப்பாற்றுவதற்காக சாருக்கு எவ்வளவு கோபம் வருது பாருங்க. ஆத்திரத்தில அறிவை இழந்து அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் வருது.

          இதுக்கே இப்படின்னா செம்புரட்சிக்கெல்லாம் என்ன பன்னுவீங்க அதியமான் ?

        • //சுத்த பாசிசமா இருக்கே, உங்க கையில ஆட்சி வந்தா மாற்று கருத்து இருக்குறவங்களையெல்லாம் கழுவுல ஏத்திடுவீங்க போல.. இதுதானா உங்க டக்கு, ச்சீ. ஜனநாயகம். அச்சச்சோ//

          yeah. you people must be treated exactly in the same way, we may be treated by you, if and when you capture power thru red revolution. it is a mistake to allow democracy for real fasicists here and now. How is that comrade !!!!

          It is only fair that each group is allowed to treat the opponent group in similar ways, when they capture power. right ?

    • முகில்:
      “ஆத்திரத்தில அறிவை இழந்து அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் வருது.”
      ஒருத்தர் இருக்கிறதை இழக்கலாம், இல்லாததை எப்படி இழக்க முடியும்?

      இந்த Lavatorianஇடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?