Wednesday, October 9, 2024
முகப்புஉலகம்அமெரிக்காதேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் !

தேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் !

-

ந்திய வரலாற்றின் முக்கியமான தினங்களில் ஒன்று 2008-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி. அன்றைய நாளில் தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சுடர்விட்டுப் பிரகாசித்தது. உலகிலேயே முதலாம் பெரிய ஜனநாயகம் என்று போற்றப்படும் இந்திய ஜனநாயகத்தின் கருவறையான தில்லி பாராளுமன்றத்தில் அன்று நடந்த ஆபாச நடனங்கள் தான் அந்த நாளை இன்றும் நாம் மறக்காமல் நினைத்துப் பார்க்கக் காரணம்.

காஞ்சிக் கருவறையில் காம நர்த்தனம் புரிந்த தேவதாதனே கூச்சப்படுமளவிற்கு மேற்படித் தேதியில் ஓட்டுக் கட்சிகள் நடத்திய ஜனநாயக ரிக்கார்டு டான்சை ஒரு முறை நாம் திரும்பிப் பார்ப்போம். “இப்ப ஏன் சார் கொசுவர்த்திய சுத்தரீங்க” என்று நீங்கள் கேட்பது புரிகிறது – கொஞ்சம் பொறுத்தீர்களானால் விடையை நீங்களே இறுதியில் கண்டடைவீர்கள். 2008-ஆம் ஆண்டின் மத்தியில் முதலாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்காளி பங்காளியாக இருந்த இடது வலது போலிக் கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணி அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

போலிகள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார்கள் என்றதும் உடனே இது ஏதோ கொள்கையின் அடிப்படையில் தேச நலனை முன்னிட்டு எடுக்கப்பட்ட முடிவு என்பதாக நீங்கள் யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எனவே வினவு வாசகர்கள் பாராளுமன்றத்தில் நடந்த ஜனநாயகக் குத்தாட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் முன், இந்தப் போலிகளின் ‘ஆதரவு வாபஸ்’ நாடகத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான பின்னணியை அறிந்து கொள்வது அவசியம்.

_________________________________________________________

சென்ற நூற்றாண்டியின் இறுதியில் இருந்தே அமெரிக்காவுக்குத் தெற்காசியப் பிராந்தியத்தில் வலுவான பேட்டை ரவுடி ஒன்றின் தேவை இருந்தது. தனது எண்ணைப் பசிக்காக மத்திய கிழக்கு நாடுகளை எந்தவித இடையூறும் இன்றி உறிஞ்சிக் கொள்வதற்கு எதிராக ஒரு சின்ன முணுமுணுப்பு கூட ஆசிய பிராந்தியத்தில் இருந்து எழுந்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது.  ஏற்கனவே முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய சீனத்தின் அசுர வளர்ச்சி அமெரிக்காவுக்கு உறுத்தலாய் இருந்தது.

சீனம் தொடங்கி மத்திய கிழக்கு வரை அமெரிக்க நலனுக்கேற்ற சரியானதொரு அடியாளாக இந்தியா தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்தது. இந்தியாவைத் தனது நீண்டகால அடிமையாக வைத்துக் கொள்ளும் நோக்கத்திற்காக நம் தலைமீது திணிக்கப்பட்டது தான் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் பல்வேறு அம்சங்களில் இந்தியாவைக் கட்டுப்படுத்துவதோடு அமெரிக்காவின் ஒரு மறைமுகக் காலனி நாடாகவும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஒப்பந்தத்தை வெறுமனே அணுசக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு உதவுவதற்காகப் போடப்பட்டதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. ஜூலை 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் – மன்மோகன் விடுத்த கூட்டறிக்கையில் இது இந்திய-அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் தொடர்ச்சியே என்று அறிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே ஏறக்கட்டிய தொழில் நுட்பத்தை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் தலையில் கட்டுவதால், இதையே காரணமாகக் காட்டி இந்தியாவை ஈரானுடன் பெட்ரோல் வர்த்தகம் வைத்துக் கொள்வதை நிறுத்த முடியும். மேலும், சர்வதேச அரங்கில் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப இந்தியாவை ஆட வைக்க முடியும். மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள அணு உலைகளை அமெரிக்க முதலாளிகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வகை செய்யும் இந்த ஒப்பந்தம், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இப்படி இந்த ஒப்பந்தத்தின் பக்க விளைவுகள் நிறைய உள்ளன.

இதெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியும். இந்த ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் முன்பே நடந்து வந்ததும் தெரியும்.  கூட்டு ஒப்பந்தம் பற்றியும் 2005-ஆம் ஆண்டு முதலே தெரியும். அவர்களை விடுங்கள்; செய்தித் தாள்களை வாசிக்கும் எவருக்கும் இதெல்லாம் தெரிந்தே தான் இருந்தது. ஒப்பந்தம் நிறைவேறுவதைத் தடுக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்திருந்தால், அரசுக்கான ஆதரவை முன்பே வாபஸ் பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்த்திருக்க முடியும். ஆனாலும் அவர்கள் வெற்றுச் சவடால்கள் அடித்துக் கொண்டும், செல்லமாகக் கோபித்துக் கொண்டும் ஜூலை  2008 வரை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் – காரணம் அடுத்த பத்து மாதங்களில் வரவிருந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல்!

ஆதரவு விலக்கப்பட்டதற்காகக் காங்கிரசும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் பார்க்காத ஜனநாயகமா இல்லை அவர்கள் பார்க்காத பாராளுமன்ற வாக்கெடுப்பா. அது அவர்கள் வழக்கமாக சிக்ஸும் ஃபோருமாக விளாசும் சொந்த மைதானமல்லவா? காங்கிரசு தனது கட்சியின் ஜனநாயகக் காவலர்களை பன்றி பிடிக்க பெட்டியும் கையுமாக பாராளுமன்றக் மலக்குட்டையில் இறக்கி விட்டது. இந்தப் பின்னணியில் தான் ஜூலை 22-ஆம் தேதி 2008-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்திய ஜனநாயகத்தின் புனிதத்தலமான தில்லி பாராளுமன்றத்தின் மையத்தில் பாரதிய ஜனதா எம்பிக்கள் சிலர் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகளைக் கொட்டினர். இந்தப் பணம் தாங்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட கொடுக்கப்பட்ட லஞ்சம் என்கிற குட்டையும் உடைத்தனர்.

இதற்கிடையே, வாக்கெடுப்பிற்கு முன்பாகவே சி.என்.என்- ஐபிஎன் தொலைகாட்சி எம்பிக்களிடம் பணம் கொடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருந்தது. ஏற்கனவே தனது இந்துத்துவ அரசியலால் ஓட்டாண்டியாகி நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலைக் குறிவைத்து பாரதிய ஜனதா தனது எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்ததை இரகசியமாகப் பதிவு செய்து ஓட்டெடுப்புக்கு முன்பு தொலைக்காட்சியில் வெளியிட வேண்டும் என்று சி.என்.என்- ஐபிஎன் மூலம் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது. இப்படிச் செய்ததால் பாரதிய ஜனதாவுக்கு அணு ஒப்பந்தத்தைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணமோ அமெரிக்க எதிர்ப்புணர்வோ  இருந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம் –  அமெரிக்க எதிர்ப்புணர்வென்பது அவர்கள் கனவில் கூட வந்ததில்லையென்கிற உண்மையை கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அத்வானியே  அமெரிக்க தூதரக அதிகாரியிடம் சொல்லியிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க, தாங்கள் பத்திரிகையாளர்கள் என்பதும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதும், ஜனநாயகப் பூந்தோட்டத்தைக் காவல் காக்கும் காவல் நாய்கள் என்பதுமான தீடீர் ஞானோதயம் சி.என்.என்னுக்கு ஏற்பட்டு விடுகிறது. எனவே, பாராளுமன்ற ஜனநாயகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் ‘நம்பிக்கையைக்’ காப்பற்றப் போவதாகவும், அதற்காக பதிவு செய்யப்பட்ட மேற்படி கண்கொள்ளாக் காட்சிகளை வெளியிடுவதில்லை என்றும் சி.என்.என் முடிவு செய்து, அந்தப் பதிவுகளை இவ்விவகாரம் பற்றி விசாரிக்கப் போகும் கமிட்டியிடம் அளித்து விடப்போவதாக அறிவித்தது.

ஜூலை 22-ஆம் தேதி நடந்த ஆபாசக் கூத்துகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஜனநாயகத்தின் முகத்தில் அப்பிக் கொண்டிருந்த நரகலைக் கழுவி பவுடர் பூசி பொட்டிட்டு மலர் சூடி சிங்காரிக்க வேண்டிய தேவை சர்வ கட்சிகளுக்கும் உண்டானது. ‘சுதந்திர’ இந்தியாவில் லஞ்ச ஊழல் முறைகேடுகளைக் கையாளும் பாரம்பரிய வழக்கத்தின் படி காங்கிரசு எம்பியான கே.சி. தியோவின் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டி ஒன்று  அமைக்கப்படுகிறது. மார்க்சிஸ்டு, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கொண்ட அந்தக் குழுவிடம் தான் சி.என்.என் பதிவு செய்த டேப்புகளும் ஒப்படைக்கப்பட்டது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையைச் சமர்பித்த மேற்படி கமிட்டி, அதில் குற்றச்சாட்டிற்கு உள்ளான அகமது பட்டேல் மற்றும் அமர்சிங் இருவரும் குற்றமற்றவர்கள் என்றும் தம்மிடம் ஒப்படைக்கப் பட்ட ஆதாரங்கள் போதுமானவைகள் அல்லவென்றும் குறிப்பிட்டது. மேலும், எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரின் மீதும் உரிய புலனாய்வு நிறுவனங்களைக் கொண்டு விசாரிக்கலாம் என்று சொல்லி மொத்தமாக விசயத்தை ஊத்தி மூடி விட்டது.

ஜூலை மாத நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து நான்கு மாதங்களாக சாமியாடி வந்த பாரதிய ஜனதாவோ, நேர்மை எருமை கருமை என்று பெரிய நன்னூல் போல பேசிக் கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகளோ இந்த விவகாரத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லாமல் அப்படியே கமுக்கமாக இருந்து விட்டார்கள். மேற்கொண்டு வெளிப்படையான விசாரணை கோரியிருக்கலாம்; அல்லது நீதி மன்றத்தை நாடியிருக்கலாம்; அல்லது மக்கள் முன் எடுத்துச் சென்றிருக்கலாம் – ஆனால், இவர்கள் மொத்தமாக மவுனம் காத்தார்கள். அவர்களுக்கே தெரியும் – இதற்கு மேல் இந்த விவகாரத்தை நோண்டினால் ஜனநாயக செப்டிக் டேங்கின் மூடியைத் திறந்து முகர்ந்து பார்த்தது போலாகி விடுமென்று. எனவே தங்கள் கள்ள மவுனத்தின் மூலம் ஜனநாயகத்தின் மாண்பை காத்துக் கொண்டார்கள்.

நிற்க.

இப்போது என்ன சார் பழைய விவகாரத்தையெல்லாம் எடுக்கறீங்க என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது.

________________________________________________________

ம் கிராமத்து மக்களிடையே ஒரு சொலவடை உண்டு – “யாருக்கும் தெரியாம போகட்டுமின்னு அய்யரு கிணத்துல முங்கிக் குசு வுட்டாராம்” என்பார்கள். பாராளுமன்றத்தில் பிரிந்த ஜனநாயகக் குசுவின் நாற்றம் ஏழு பேர் கமிட்டியென்னும் கிணற்றைத் தாண்டி வெளியே வராது என்று இத்தனை நாட்களாக சர்வகட்சி ஜனநாயக அபிமானிகளும் நினைத்துக் கொண்டிருக்க, கடந்த மார்ச் பதினேழாம் தேதி விக்கிலீக்ஸ் வடிவத்தில் குமிழிகளாக வெளிப்பட்டிருக்கிறது.

விக்கிலீக்ஸ் வசம் உள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களில் இந்தியா தொடர்பானவற்றை இந்து பத்திரிக்கை கடந்த வாரத்திலிருந்து வெளியிட்டு வருகிறது. இந்திய ஆளும் கும்பல் நேரடியாக அமெரிக்கப் பாதந்தாங்கிகளாக செயல்பட்டு வருவது பற்றிய விபரங்கள் தற்போது வெகு விமரிசையாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்கா தனது ஐந்தாம் படைகளை இந்திய அதிகார அடுக்குகளின் பல்வேறு மட்டங்களில் விதைத்து வைத்திருந்ததும், அவர்கள் நாய்களே நாணிக் கோணும் படிக்கு தமது அமெரிக்க எஜமானர்களின் கால்களை நக்கிக் கிடந்ததும் இந்தச் செய்திகளின் ஊடாக தெட்டத் தெளிவாக அம்பலமாகியுள்ளது.

மார்ச் 17-ஆம் தேதியிட்ட இந்து நாளிதழில் வெளியான – விக்கிலீக்ஸிடம் இருந்து பெறப்பட்ட – அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய ஆவணமொன்றில், 2008-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் பிரமுகரும் நேரு குடும்ப விசுவாசியுமான சதீஷ் சர்மா, ஜூலை 22-ஆம் தேதி நடைபெறப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல காங்கிரசு கடுமையாக முயற்சித்து வருவதாக தூதரக அதிகாரி ஸ்டீபன் வொய்ட்டிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் நெருங்கிய கூட்டாளியான நச்சிகேத்த கபூர் என்பவர் இரண்டு பெட்டிகளில் திணிக்கப்பட்டிருந்த கரன்சி காகிதங்களைத் தூதரக அதிகாரியிடம் திறந்து காட்டி அது எம்.பிக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய லஞ்சப் பணம் என்று தெரிவித்துள்ளார். அவரே மேலும், பிரதமரே நேரடியாக சந்த் சத்வால் என்பவர் மூலமாக அகாலி தளத்தின் எட்டு எம்பிக்களை வளைக்க முயன்றதாகவும் அது வெற்றி பெற வில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரியிடம் ஏதோ மாமன் மச்சான் போல் அத்தனை உரிமையெடுத்துக் கொண்டு பேசும் நச்சிகேதா கபூர், “துட்டு குடுப்பது ஒன்னியும் பெரிய மேட்டரேயில்ல.. ஆனா இந்தப் பயலுக வாங்கிக்கினு ஒயுங்கா நமக்கு ஓட்டுப் போடுவானுங்களான்னு தான் சந்தேகமா கீது” என்று தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.  இப்படி அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதை மிகக் கவனமாக கவனித்து வரும் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஓட்டெடுப்புக்கு முன்னரே தனது கணிப்பாக மன்மோகனின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைக்குமென்றும் – அது இன்னின்ன எண்ணிக்கையில் வாக்குகள் வாங்கும் என்றும் ஒரு கணிப்பை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில், வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வாங்கிய ஓட்டுக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அந்த அதிகாரியின் கணிப்பை ஒட்டியே இருந்தது!

ஏற்கனவே நெருப்பின் மேல் வைக்கோலைப் போட்டு மறைத்து விட்டோம் என்று எல்லோரும் நிம்மதியாக இருந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் மீண்டும் ஒரு முறை பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வாயை மூடிக் கொண்டிருந்த பாரதிய ஜனதாவும், போலி கம்யூனிஸ்டு தவளைகளும் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்திருக்கிறார்கள்.

2008-ஆல் விவகாரம் நாலு மாதங்கள் சூடாக இருந்தது என்றால் இப்போது விஷயம் நாலே நாளில் மீண்டும் ஆழமான குழிக்குள் போய் முடங்கிக் கொண்டு விட்டது. வழக்கம் போல் பிரதமர் மவுனமோகன் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துக் கொண்டுள்ள தனது வழக்கமான விளக்கத்தை அளித்து விட்டார் – அதை இனி நாம் புதிதாகச் சொல்லித் தான் வினவு வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றாலும் ஒரு சம்பிரதாயத்துக்காக அந்த விளக்கத்தை இங்கே அறியத்தருகிறோம்; அது – “தெரியாது”

இதற்கு மேலும் இதில் நோண்டிக் கொண்டிருப்பது ஜனநாயகத்தின் மாண்புக்கே பேராபத்தாக முடிந்து விடும் என்பதை உணர்ந்து கொண்ட சி.பி. ஐ, சி.பி.எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு அடுத்த இந்து இதழில் என்ன செய்தி வரும் என்று காத்துக் கிடக்கிறார்கள். சாவு வீடாகவே இருந்தாலும் சாப்பிட்டாக வேண்டுமே? இனி அடுத்தடுத்து வரப்போகும் இரகசிய ஆவணங்களையும், அது தெரிவிக்கப் போகும் உண்மைகளையும் இவர்கள் எதிர்கொள்ளப் போகும் செயல்தந்திரம் இது தான் – முதல் நாள் கூச்சல், ரெண்டாம் நாள் விளக்கம் கோரி சவடால், மூன்றாம் நாள் ஒன்னும் தெரியாத பிரதமரின் எல்லாவற்றையும் தெரியப்படுத்தும் ‘விளக்கம்’, நான்காம் நாள் இன்டர்வெல், அடுத்த நாள் அடுத்த பிரச்சினை.

ஒவ்வொரு முறை ஆளும் கட்சி அம்பலமாகும் போதும், பாராளுமன்ற ஜனநாயக கோவணம் கிழிந்து தொங்கும் போதும் இவர்கள் நடத்தும் இந்த ‘செத்து செத்து விளையாடும்’ விளையாட்டு நமக்குப் புதிதில்லை. ஆனால், இந்த விக்கிலீக்ஸின் ஆவணங்கள் வேறு சில கேள்விகளை நம்முன் வைக்கிறது. நீங்கள் மெய்யாகவே இந்நாட்டின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் அந்தக் கேள்விகள் உங்கள் மனதில் ஒரு சின்ன உறுத்தலையாவது உண்டாக்கியே தீர வேண்டும்.

____________________________________________________________

லஞ்சம் கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றிய அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று ஏன் எவருமே கோரவில்லை? லஞ்சம் கொடுத்தாவது அரசைக் காப்பாற்றி அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்; அதனால் நமது தேச நலன்களனைத்தும் அமெரிக்காவுக்கு காவு கொடுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று இத்தனை தீவிரமாக வெறியோடு மன்மோகன் கும்பல் இறங்கியிருக்கிறதே, இவர்கள் யாருடையா ஆட்கள்?

அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் தொடர்புகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்துள்ளார் முன்னால் அமெரிக்கத் தூதர் டேவிட் முல்ஃபோர்ட்; எனில் அதில் பிரதமரே நேரடியாக லஞ்ச விவகாரத்தில் தொடர்புடையதாக குறிக்கப்பட்டிருக்கும் தகவல் குறித்து நல்லவரான பிரதமரின் விளக்கம் என்ன? தனக்கு ஒன்றுமே தெரியாது என்று வழக்கமான பல்லவியைப் பாடும் மன்மோகன், அமெரிக்கர்கள் தமக்குள் பேசிக்கொண்டது தவறு என்று அடித்துச் சொல்ல முடியாமல் மென்று முழுங்குவது ஏன்? இவர் இத்தனை பச்சையாக அம்பலமாகி நின்ற பின்னும் முதலாளித்துவப் பத்திரிகைகள் இவரை ஒரு நல்லவர் போன்றும், ஒன்றும் தெரியாத அப்பாவி போன்றும் சித்தரிக்கும் அயோக்கியத்தனத்தை ஏன் தொடர்கிறார்கள்?

அணு ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமானால் காங்கிரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாக வேண்டும்; இதை உறுதிப்படுத்திக் கொள்ள பிரதமர் தொடங்கி மந்திரிகள் தொட்டு எம்பிக்களின் கையாட்கள் வரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியிருப்பது இப்போது அவர்கள் வாயாலேயே அம்பலமாகியிருக்கிறது –  அந்த ஒப்பந்தம் தெள்ளத் தெளிவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது ஏற்கனவே தெளிவான நிலையில் இப்போதும் கூட அணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சவடால் பேசும் பாரதிய ஜனதா கோராமல் இருப்பது ஏன்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக களத்தில் நின்ற அத்வானி, தூதரக அதிகாரியொருவரிடம் “அரசாங்கம் என்பது ஒரு தொடர்ச்சி தான்; சர்வதேச ஒப்பந்தங்களை நாங்கள் இரத்து செய்ய மாட்டோம்; அதை நாங்கள் மதிப்போம்” என்று சொல்லியிருக்கிறார். எனில், இன்று அவர்கள் போடும் கூச்சலின் பொருள் என்ன?

இந்தியா இப்படி அப்பட்டமான விற்பனையான கதை ஊடகங்கள், எதிர்க்கட்சிகளால் வெறுமனே சவுண்டு விடும் பரபரப்பு கதையாக மட்டும் வினியோகிக்கப்படுகிறது. ஜப்பானில் சுனாமி வந்தபிறகுதான் அணுவுலைகள் வெடித்திருக்கின்றன. இங்கோ அமெரிக்க அணுவுலைகள் வருவதற்கு முன்னாடியே அதன் கதிர் வீச்சு இந்தியாவின் இறையாண்மையில் வெடித்துப் பாய்கிறது. அமெரிக்க அடிமைத்தனம் என்பதில் காங்கிரசு, பா.ஜ.க கும்பல் இத்தனை பட்டவர்த்தனமாக செயல்படுகிறது என்றால் இந்தியாவின் எதிர்காலம் குறித்து விளக்கத் தேவையில்லை. நாடு மீண்டும் காலனியாகிறது என்று புரிந்தவர்கள் மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தை துவங்க வேண்டும். அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆளும் வர்க்கங்கள்தான், நாமல்ல என்பதை அறிவிப்போம், போராடுவோம்.

  1. தேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள்…

    இந்திய வரலாற்றின் முக்கியமான தினங்களில் ஒன்று 2008-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி. அன்றைய நாளில் தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சுடர்விட்டுப் பிரகாசித்தது….

  2. //விக்கிலீக்ஸ் வசம் உள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களில் இந்தியா தொடர்பானவற்றை இந்து பத்திரிக்கை கடந்த வாரத்திலிருந்து வெளியிட்டு வருகிறது.//

    இது ஒரு ஆரிய சூழ்ச்சியே! அசாங்ஜேவும், பார்ப்பன இந்து நாளேடுகளும், ஆரிய வழித் தோன்றல்களே!

  3. விக்கி லீக்-கில் இதுவரை லீக்கான விஷ‌யங்கள் பெரும்பாலான நமது தமிழக சாலைகளில் அண்டர் கிரவுண்ட் டிரைனேஜின் மூடி சிறிது உடைந்து செப்டிக் தண்ணீர் வெளியே செல்லும் போது அதை மிதித்த உணர்வை அளிக்கிறது. ஆனால் இவையனைத்தும் ஆங்கில நாளிதழில் வருவதால் மக்களுக்கு போய் சேருவதில்லை. அனைத்து ஒட்டுக் கட்சிகளும் இந்தியா விற்பனைக்கு என கூவிக் கூவி விற்று வருவதை வினவு தளம் பலமுறை சொல்லி வந்திருக்கிறது. தற்போது பாராளுமன்றத்தில் வெறும் கூச்சலோடு நின்று விடாமல் அணு ஒப்பந்தத்த ரத்து செய்ய கோரவேண்டும் என்பதை சரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது இது பலரை சென்றடைய வேண்டும்.

  4. இந்தியா, அமெரிக்காவின் அடிமை நாடா?மறைமுக காலனி நாடா?இந்த நிகழ்வால் விலை போனதாக கருதலாமா?கட்டுரையை மீண்டும் படிக்க இருக்கிறேன். //நாடு மீண்டும் காலனியாகிறது என்று புரிந்தவர்கள் மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தை துவங்க வேண்டும். அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆளும் வர்க்கங்கள்தான், நாமல்ல என்பதை அறிவிப்போம், போராடுவோம்.//நிச்சயம் போராடுவோம்.அதுவன்றி வேறு மாற்றுப் பாதை இல்லை.

  5. எவ்வளவு கேவலமான விசயங்கள் வெளிவந்தாலும் நம் தமிழக மக்களின் அரசியல் பார்வை தேர்தலை நோக்கியே ஏன் இருக்கிறது என்பது மட்டும் புரியவேயில்லை..

  6. DO NOT DISTURB!

    தமிழகத்தை அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க, பங்கு அதிகம் கொடுக்கும் தலைவனைத் தேர்ந்தெடுக்கும், வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில், போராட வா என்று, சிவபூஜைக் கரடி போல அழைக்காதே!

  7. அஸாஞ்சேவும், விக்கிலீக்ஸும்,அமெரிக்காவும் சேர்ந்து நரேந்திர மோடி, ஊழல் கறை படியாதவர் என்று சர்டிபிகெட் கொடுத்துள்ளார்களே, அதைப் பற்றியும் வினவு ஸ்பெஷல் கட்டுரை வெளியிடுமா?

    //மலக்குட்டை, கிணத்துல முங்கிக் குசு வுட்டாராம், நரகலைக் கழுவி, செப்டிக் டேங்கின் மூடியைத் திறந்து முகர்ந்து பார்த்தது போலாகி விடுமென்று//

    பாராளுமன்றத்திலும், அப்படியே கொஞ்சம் வினவு தளத்திலும், பினாயிலை தெளிங்கப்பா!
    கப்பு தாங்கமுடியல!

    • சார், உங்களுக்கு விசயம் தெரியாதா? குஜராத் முசுலீம் இனப்படுகொலையில் நரேந்திரமோடி மேல படிஞ்ச ரத்தக்கரையே பல இன்சுக்கு இருக்காம் அதை பத்து வருசமா சுரண்டியும் போவ மாட்டேங்குதாம்.. அப்பேர்பட்ட ரத்தக்கறை மேல ஊழல் கறையை கண்டுபிடிக்கவே முடியலயாமே…

    • //அஸாஞ்சேவும், விக்கிலீக்ஸும்,அமெரிக்காவும் சேர்ந்து நரேந்திர மோடி, ஊழல் கறை படியாதவர் என்று சர்டிபிகெட் கொடுத்துள்ளார்களே//

      சும்மா அடிச்சு விடப்படாது…

      http://www.thehindu.com/news/the-india-cables/article1559532.ece

      மோடி ஊழலற்றவர் என்று திக்விஜய் சிங்ஜி என்கிற காங்கிரஸ் அமைச்சர் சொன்னதாகத்தான் தூதரக அதிகாரி குறிப்பு அனுப்புகிறான். அமெரிக்க அதிகாரி ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வில்லை. மேலும் காங்கிரஸ்ல பாதி பேரு உங்கள மாதிரி தான். மோடிக்கு மறைமுக ஆதரவு கொடுப்பவர்கள்… “மோடி செஞ்சது ரொம்ப தப்பு தான். ஆனா, அப்பிடி பண்ணலேன்னா….” என்று போகும் சமாளிப்புகள்.

      அப்புறம்….ஹிட்லரும் நெம்ப ஊழலற்றவர் தான்.

      • //அமெரிக்க அதிகாரி ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வில்லை//
        ஏன், இந்த பெட்டி விவகாரம் கூட, யாரோ சொன்னதாக தூதரக அதிகாரி அனுப்பிய குறிப்புதானே?

        உங்களுக்கு பிடித்த விஷயம் என்றால் அதன் ரிஷி மூலம் எல்லாம் பார்க்க மாட்டீர். இல்லைன்னா இருக்கவே இருக்கு ஏகாதிபத்திய, பாஸிச, பார்ப்பண, ஆரிய சதி என்கிற முத்திரை.

        But Sinhji raised another reason why Modi could face challenges in becoming a national leader: Modi’s reputation for being completely incorruptible is accurate, and if he were to become a national leader he would crack down on corruption throughout the BJP. There are too many BJP rank and file waiting to line their pockets once the BJP returns to power, Sinhji said, and the prospect of Modi cracking the whip on corruption is entirely unappealing to this crowd. Modi would have a hard time clearing this hurdle, according to Sinhji.

        http://www.thehindu.com/news/the-india-cables/the-cables/article1559820.ece

        கார்கரேவை இந்து தீவிரவாதிகள் (மாலேகான் விஷயத்தில் கடுப்பாகி) போட்டு தள்ளி விட்டார்கள் என்று சொன்னவர்தான் இந்த திக்விஜய் சிங். இந்துத்வா சங்பரிவாரின் பரம விரோதியாக ஒரு காங்கிரஸ்காரரை சொல்லவேண்டும் என்றால் அது திக்விஜய் சிங்தான். அவரே மோடி விஷயத்தில் incorruptible என்று சொன்னதாக அமெரிக்க அதிகாரி குறிப்பு அனுப்பியிருக்கிறார்.

        • ராம்,

          ஊழல் செய்யாதவர் என்று மோடிக்கு அமெரிக்கா சர்டிபிகேட் கொடுக்கிறது. அவ்வளவு ஏன் டோ ண்டு ராகவனும் சோவும் கூடத் தான் சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்.

          முதலில் நீங்கள் ஊழல் என்பதை நீங்கள் எப்படி அளவிடுகிறீர்கள்? பணம் திருடிக் கொள்வது மட்டும் தான் ஊழலா? கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக குஜராத் இந்துத்துவ பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக்கி வைத்திருப்பவர் தான் மோடி. ஒட்டுமொத்த சமூகத்தை பாசிச மயமாக்கி வைத்திருப்பது ஊழல் இல்லையா? நேநோ தொழிற்சாலை அமைக்க காரின் உற்பத்திச் செலவின் பெரும்பங்கை வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளின் மூலம் அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
          பெரிதும் போற்றப்படும் குஜராத்தின் வளர்ச்சியென்பது தரகுமுதலாளிகளின் வீக்கம் தானேயன்றி வேறெதுவும் இல்லை.

          ஹிட்லரும் கூட ஊழல் செய்யாதவர் தான். ஜெர்மனியின் தொழில் வளர்ச்சியை அபரிமிதமான அளவில் தூண்டி விட்டவர்
          தான். அதற்காக நீங்கள் ஹிட்லரைப் போற்றுவீர்கள் என்றால் – அதுவும் – அமெரிக்கா மோடியின் ஊழல் அற்ற
          நிருவாகத்தைப் போற்றுவதும் ஒன்று தான். ஒரு ஆளுமையை (அ) ஒரு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நீங்கள் மதிப்பீடு
          செய்யும் போது அதன் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு அதன் முழுமையைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு வந்து
          விட முடியாது. மோடியைப் பொறுத்தளவில் அவரின் எந்தப் பகுதியும் போற்றுதலுக்குரியதில்லை – அமெரிக்கா ஒருவரைப்
          போற்றியுள்ளது (அ) இகழ்ந்துள்ளது என்பதை அவர்கள் தங்கள் நலன் சார்ந்து செய்கிறார்கள்; அந்த செய்தியை நாம்
          குறுக்கிட்டு ஆய்வு செய்யும் போது நம் நாட்டின் நலன் சார்ந்து தான் செய்ய முடியும்.

          உங்களிடமோ அதியமானிடமோ இதைப் புரியவைக்க முடியாது என்பது தெரிந்தது தான் – நீங்கள் வழக்கம் போல ஸ்டாலின் மாவோ ரஸ்யா சீனா என்ற பல்லவியை ஆரம்பிக்கலாம். இஸ்டார்ட்டு மீசிக்கு

      • எப்போதெல்லாம் முஸ்லீம் விரோதத்தோட நீங்க கெளம்பி வரீங்களோ, அப்போதெல்லாம் சரியான அவசரக் குடுக்கையாய்த்தான் குதிச்சிருக்கீங்க.

        நீங்க சொல்ற திக்விஜய் சிங் வேற, அவரு ம.பி முன்னாள் முதல்வர் . இங்க அமெரிக்காகாரன் சொல்ற திக்விஜய் சிங்ஜி வேற. இவரு சௌராஷ்டிரா இளவரசர், முன்னாள் மத்திய மந்திரி.

        அப்புறம்….ஹிட்லரும் நெம்ப ஊழலற்றவர் தான். ரிப்பீட்டு…

  8. அமெரிகாவிற்க்கு ‘அடிமையாக’ இருப்பதை கடுமையாக எதிர்க்கும் காம்ரேடுகள், ஒரு காலத்தில், இந்தியா, சோவியத் ரஸ்ஸியாவிற்க்கு ‘அடிமையாக’ இருக்க விழைந்தனர்.

    இந்த அணு ஒப்பந்தத்தின் அடிப்படை மிக எளிமையானது. டெக்னாலஜி மற்றும் தாதுபொருட்களை விற்பவர்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றனர் : இது ராணுவ செயல்பாடுகளுக்கு / அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. மின் உற்பத்திக்கு மட்டும் தான் அனுமதி. மேலும் இன்ஸுரன்ஸ் அளவு உலக அளவை விட குறைவு போன்றவை. நமக்கு கடும் மின் தட்டுப்பாடு. ‘சரக்கு’ வேண்டுமானால், விற்பவனின் நிபந்தனைக்கு உட்பட்டு வாங்கிக்கொள்ளலாம். இல்லாவிட்டால் இப்படியே புரட்சி பேசிக்கொண்டு இருட்டில் வாழலாம். the choice is ours and no compulsion from anyone about this. take or leave it deal. அவ்வளவுதான் விசியம்.

    ஆனால் இந்த ராணுவ கூட்டு ஒப்பந்தம் எல்லாம் தவறு மற்றும் தேவை இல்லாத வேலை தான். லிபர்ட்டேரிய கோட்ப்பாடுகளுக்கு மாறானது. அதிகார மையங்களை உருவாக்கி, ஏகாதிபத்திய பாணிக்கு வழி செய்வது. அதை விட வெட்டி செலவுகள் இவை. செய்ய வேண்டிய அத்தியாவச செலவுகளை விட்டு, military industrial complex crony capitalistsகளின் நலன்களுக்கு வரி பணத்தை செலவிடும் அயோக்கியத்தனம்.

  9. இந்தியாவில் பாரளுமன்ற ஜனனாயகம் சீரழிந்து, கேலிக்கூத்தாகிவிட்டது. பல விரிவான காரணிகளை பற்றி எமது பதிவுகளில் எழுதியுள்ளேன். சோசியலிச காலங்களின் நிகர விளைவு என்று வாதாடியுள்ளேன்.

    வினவு தோழர்களின் நோக்கம் வேறு. இந்தியாவில் சீரழிந்த்தால், இந்த அமைப்பு முறையே முற்றிலும் தவறானது, பாரளுமன்ற ஜனனாயக முறையே வெறும் பித்தலாட்டம். பூஸ்வா ஏமாற்று வேலை என்று அப்பாவி வாசகர்களை நம்ப வைப்பது. இதற்கெல்லாம் மாற்றாக, தொழிலாள வர்க ‘சர்வாதிகாரம்’ தான் சரியானது என்று பிரச்சாரம் செய்ய ஒரு உத்தி. அந்த அமைப்பில், ஓட்டு பொறுக்கிகள், எதிர் கட்சிகள், ஓட்டுக்கு பணம், விவாதங்கள், மாற்றுக்கருத்துக்கள் இருக்க மாட்டா.

    பாரளுமன்ற ஜனனாயகம் மிக வெற்றிகரமாக, நன்கு செயல்படும் அய்ரோப்பிய நாடுகளை பற்றி தப்பி தவறி பேசவே மாட்டார்கள். இதில் இருக்கும் தவறுகளை ‘மட்டும்’ தொடர்ந்து பிரச்சாரம் செய்வர். இந்தியாவில் மற்றும் வளரும் நாடுகளில் இந்த அமைப்பு சரியாக, ஒழுங்காக செயல்படுவதில்லை. எனவே இந்த அமைப்பே தவறு / அயோக்கியத்தனம். இதுதான் இவர்களின் பிரச்சார டெக்னிக். ஆனால் இனி இதெல்லாம் இங்கு எடுபடாது தோழர். ஏமாற மக்கள் இனி தயாராக இல்லை. நன்கு விசியம் தெரிந்த நடுத்தர வர்கம் இன்று பெரிதாக உருவாகிவிட்டது. அதனால் தான் இந்த நடுத்தர வர்கத்தை பார்த்து இத்தனை வயித்தெறுச்ச்சல் இவர்களுக்கு !!!

    • ’சோவியத் ரஸ்ஸியா, ஸ்டாலினுக்கு பின் போலி கம்யூனிஸ்டுகளினால் சீரழந்துவிட்டது ; இதர ’கம்யூனிச பாணி’ சோசியலிச நாடுகள்லும் அப்படியே’ : இதுதான் வினவு தோழர்களின் ஒரே பல்லவி. ஆனால் இதே ’லாஜிக்’ முதலாளித்துவ ஜனனாயக அமைப்புகளுக்கும் பொருந்தும் என்ற மறுபக்கத்தை பற்றி பேச மாட்டார்கள். அதாவது போலி முதலாளிகள், போலி ஜனனாயகவாதிகளால் தான் இந்தியா சீரழிந்தது. இது சித்தாந்தத்தின் குற்றமல்ல, போலிகளில் குற்றம் என்ற வாதம்.

      ’உண்மையான’ ஜனனாயகவாதிகள், ’உண்மையான’ முதலாளிகள் நன்கு செயல்படும் பல அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிட வேண்டும். (உங்களுக்கு மட்டுதான் ’போலிகள்’ என்று பேசத் தெரியுமா என்ன ? நாங்களும் பேசுவோம் !!!! )

      அப்பறம், இந்த post – stalin Russiaவிற்க்கு ஒரு நல்ல பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள் வினவு தோழர்கள் : ‘சமூக ஏதாதிப்பத்தியம்’ ; அது என்ன எழவோ. ஒரு 3 கோடி பேர்களை ’வர்கப்போர்’ என்ற பெயரில் போட்டு தள்ளிவிட்டு, ’ஸாரி, implementationஇல் சின்ன தவறு நடந்து விட்டது’ என்று சர்வ சாதாரணமாக அடுத்த விசியத்துக்கு போவாக இந்த கருணாமூர்த்திகள் !!!

    • இந்தியாவில் பொது வாழ்க்கையில் நேர்மை இவ்வளவு தூரம் சீரழிந்தற்க்கு 1991 வரை இங்கு இருந்த ‘சோசியலிச’ பாணி பொருளாதார கொள்கைகள் தான் அடிப்படை காரணம். அதன் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. மேலும் பல பத்தாண்டுகளில் படிப்படியாக நம் நேர்மை அழிந்தது. 1966இல் பிராகசம் அவர்கள் தான் ஏன் இன்னும் உயிர் வாழ வேண்டும் என்று நொந்து பேசியதை பற்றி ராஜாஜி எழுதியது :

      http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

      இந்த ’சோசியலிச எச்சங்கள்’ பற்றி ’சிசுபாலன்களுக்கு’ புரியாது. இதெல்லாம் போலி சோசியலிசம் அல்லது ’……’ என்று மட்டும் கதைப்பார்கள். அது என்ன எழவோ, அதன் விளைவை பற்ரி சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தலைவர் சாக வேண்டும் என்று நொந்து புலம்பும் அளவிற்க்கு நிலைமை சீரழிய ஆரம்பித்துவிட்டது. இன்று உச்சமடைந்து உள்ளது. இதெல்லாம் புரிந்து கொள்ள ‘முன் முடிவுகளற்ற’ திறந்த மனம் வேண்டும்.

      இறுதியாக அந்த கட்டுரையில் ராஜாஜி, நேருவின் கொள்கைகள் பற்றி எழுதியது :

      Sri Jawaharlal Nehru, urged by patriotic impulse, and early
      indoctrination committed the blunder of taking India out of
      the path of humility and put it in the race for industrialization,
      and did all he could to transform our ideology into that of
      Soviet Russia. This was the fatal step that brought us to the
      present position out of which it requires not only wisdom but
      indomitable courage to save India. Social justice and removal
      of disparities of opportunity and equitably distributed welfare
      are great and worthy ends. But the fatal mistake was the plan
      to achieve this by the shortcut of heavy borrowing and central
      planning and permit-license-regime which has brought in its
      wake all that makes Sri Sri Prakasa lament so bitterly.

      • என்னங்க ……. மாதிரி பேசறீங்க. ஒப்பந்தம் நிறைவேற்றதுக்குதான் காசு கொடுத்திருக்குறானுவ. இதுக்கும் சோசலிசத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கு. சோசலிசம் பேசிய காலத்துல இது மாதிரி நடந்திருந்தால் சொல்லுங்க.

        ஒப்பந்தம் இந்திய நலனுக்கு உகந்ததுன்னா ஏன் காசு கொடுக்குற நிலை வருது.

        • johny,

          உமக்கான பதில் சுவாமிநாதன் அங்கலேஸ்வரைய அய்யர் எழுதிய கட்டுரையில் உள்ளது. இந்தியாவில் தான் எம்.பிக்கள் ஓட்டு போட பணம் வாங்கினால், அது சட்டபடி குற்றமல்ல. மேலை நாடுகளில் அப்படி இல்லை. கீழே நான் இட்ட பின்னூட்டத்தின் இறுதியில் மிக தெளிவாக அய்யர் எழுதுகிறார் :

          ..Last week’s row in Parliament is distracting attention from the real job that lies ahead. Former prime minister Narasimha Rao survived a confidence vote by acquiring the support of three MPs of the Jharkhand Mukti Morcha. These gentlemen were naïve enough to deposit Rs 1 crore apiece in cash in their bank accounts, and were caught by the police. But the Supreme Court then held that voting for any reason whatsoever in the Lok Sabha was covered by privileges of Parliament, which gave MPs immunity from the normal laws of the land. So, MPs taking cash for votes could not be prosecuted.

          When the Constitution was formulated, it provided that Parliament should codify its own privileges, laying down precisely which acts would be immune from prosecution or civil suits. More than 60 years later, Parliament has not yet done so. MPs of all parties prefer their existing immunity for all actions. This is the real scandal, and no party or newspaper is highlighting it.

          We need to get beyond finger pointing to true morality and justice. The Lok Sabha needs to codify its privileges swiftly, providing immunity only for free speech in Parliament, not for any other action such as voting for cash or office. Indeed, it should provide that all criminal cases against MPs are heard first and foremost, so that parliamentarians are held to a higher standard than others, not a lower one. If the BJP and CPM are serious about improving political morality, they must launch an immediate campaign to codify and narrow parliamentary privileges. If they fail to do so, their talk of morality will stand exposed as pure hypocrisy.

        • //சோசலிசம் பேசிய காலத்துல இது மாதிரி நடந்திருந்தால் சொல்லுங்க.///

          பிரகாசம்காரு, தான் இதையெல்லாம் பார்த்துகொண்டு வாழ்வதை விட சாக வேண்டும் என்று நொந்து போய் பேசியதை பற்றி, ராஜாஜி அன்று எழுதியதை (மேலே) படிக்கவே இல்லை போல. அல்லது புரியலையா ? அன்று விதைத்த வித்துக்கள் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளன. அந்த வித்துகள் ‘சோசியலிசம்’ என்ற பெயரால் தான் அன்று அழைக்கப்பட்டன. அதன் cumulative effects இன்றும் உள்ளது. ஒரே வருடத்த்தில், நூற்றாண்டில் சீராக முடியாது. மாசுபட்ட நிலத்தடி நீர் சரியாக எத்தனை வருடங்கள் பிடிக்கும் ? அல்லது நுற்றாண்டுகள் பிடிக்கும். அதே போல் தான் மனோபாவ மாசுகளும்.

        • //ஒப்பந்தம் இந்திய நலனுக்கு உகந்ததுன்னா ஏன் காசு கொடுக்குற நிலை வருது.//

          இந்திய நலனை பற்றி யார் கவலை பட்டாங்க. மேலும் பலருக்கு இதன் அவசியம் புரியவில்லை. மின் பற்றாக்குறை பற்றி அக்கரை இல்லை. அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே நோக்கம் மட்டும் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை பாரளுமன்ற ஒப்புதல் பெற காங்கிரஸ் தனக்கு நன்கு பழக்கப் பட்ட ‘முறையில்’ வெற்றிகரமாக செயல்பட்டது. உண்மைய சொன்னால், இந்திய நலன் கருதிதான் மன்மோகன் சிங் இத்தனை பிடிவாதமாக அதை நிறைவேற முயன்றார். அவர் சூட்கேஸ் வாங்குபவர் அல்ல. அமெரிக்க கைக்கூலியும் அல்ல. he is a realist and visionary who know ground reality and the our follies in the past better than any of us here. He is the one who opened up India in 1991 and saved us from bankruptcy and disaster. but for his vision and determination, this chat here would not be happeining here. Indian rupees would have crumbled (like the Zimabwen dollar now) and our imports of petro products would have stopped in 1991 and India would have collapsed like USSR in 1992. difficult for you to picturise. nevertless that is the fact, which you refuse to look at.

        • //libert,
          இதுக்கும் சோஷலிசத்துக்கும் என்ன சம்பந்தம்///

          johnny,

          மிக எளிமையாக சொல்கிறேன். 1947 வரை நம்மிடம் இருந்த நேர்மை, முக்கியமாக அரசியலில் இருந்த நேர்மை, போகப்போக குறைந்தது. அன்று ஒரு எம்.பி இப்படி லஞ்சம் வாங்குவது மிக மிக மிக அபூர்வம். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு தியாகிகளாலும், நேர்மையாளர்களாலும் நிரம்பியிருந்தது. இன்று மிக சீரழிந்துவிட்டது. இது சோசியலிச பாணி கொள்கைகளில் விளைவுகள். இதை பற்றி தான் ராஜாஜி எழுதியதை எடுத்துகாட்டியிருந்தேன்.

          எம்.பிக்கள் பணம் வாங்கும் அளவிற்க்கு அவர்களின் நேர்மை கெட்டதற்க்கு இந்த சோசியலலிச பாணியில் நிகர விளைவுகளே காரணம். பொதுவாகவே சோசியலிசம் / கம்யூனிசம் என்ற பெயரில் அரசு எந்திரம் மற்றும் அமைச்சர்களிடம் அதிகாரம் மிக மிக அதிகமாக குவிந்த நாடுகளில், போக போக ஊழல் மலிந்து சீரழிவு உருவானது. பழைய USSR இல் இருந்த அனைத்து நாடுகளின் இன்றைய நிலை, சீனா, வட கொரியா, தென் அமெரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் அரசியல் நேர்மை மிக குறைந்து, லஞ்சம் விளையாடுகிறது. ஆனால் லிபரல் ஜனனாயகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆரம்பத்தில் இருந்து அமலாக்கிய பல வளர்ந்த நாடுகளில் இத்தனை சீரழிவு இல்லை. ஜெர்மனி, ஃபின்லாந் போன்ற நாடுகளின் எம்.பிக்கள் இப்படி பணம் வாங்குவது சாத்தியமில்ல. விதிவிலக்காக யாராவது வாங்கினால், பிறகு வெளியே தெரிந்தால், அவ்வளவுதான். அவன் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். சட்டப்படி தண்டனை கிடைக்க பெரும் சாத்தியம்.

        • libert,

          நேர்மையின்மை சோசியலிசத்தின் விளைவுகள் என்றால் சோசியலிசம் பேசப்பட்ட காலங்களில் இருந்ததைவிட சோசியலிசம் பேசப்படாத தற்போதுதான் ஒழுங்கீனம் அதிகமாக இருப்பது ஏன்? 1947ல் விதைத்த வித்துதான் இன்று ஆலமாமாகியிருக்கிறது இதை மாற்ற நூற்றாண்டாகலாம் ஆனால் சோசியலிசம் பேசிய உடனேயே சீரழிவு வந்துவிட்டதாக கூறிகிறீர்களே அது எப்படி சாத்தியமானது?

          இந்தியாவை விடவும், ஜெர்மனி சோசியலிசம் பேசிய நாடு. மேலும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பிராதனமாக செல்வாக்கு செலுத்தியது. மேலும் கிழக்கு ஜெர்மனி 1949 முதல் 1990 வரையிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருந்த நாடு.

          பிரகாசம்காருவின் நொந்துபோன வார்த்தைகள் வெளிப்பட்ட தருணங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது வாக்குகளை பணத்திற்காக விற்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். சோசலிசம் பேசப்படாத இப்போதுதன் ஓட்டுக்காக பணம் வாங்குவதும் அதிகரித்துள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

        • ஜானி,

          Long term effects, cumulative effects என்று சொல்வார்கள். அதுதான் இங்கு. ஓவர் நைட் மாற முடியாது. கிழக்கு ஜெர்மனியில் பின்னாட்களின் ஊழல் சீரழிந்தது. இணைந்த பிறகும் அதன் விளைவுகள் தொடர்ந்தன. ஆனால் மே.ஜெர்மனியின் பலம் மற்றும் இதர தன்மைகளால சமாளிக்க முடிந்தது. சரி, ஃபின்லாந் தான் உலகில், ஊழல் மிக மிக குறைவான நாடு என்று ட்ரான்ஸ்பாரன்ஸி இண்டெர்னேசனல் சொல்கிறது. எப்படி முடிந்தது ? வட கொரியாவையும் தென் கொரியாவையும் ஒப்பிடுங்கள்.

          1966 வாக்குகளை விற்க்கவில்லை தான். ஊழல் கான்ஸர் போல அனைத்து துறைகளிலிம் பரவ ஆரம்பித்த காலங்கள் அவை. 20 ஆண்டுகளின் அன்று பெரும் மாற்றம் எப்படி ? அதற்க்கு முன்பு ஏன் அப்படி இல்லை. பல லச்சம் மக்கள் தன்னலமில்லாம்ல, விடுதலை போராட்டத்தில் தியாகம் செய்ய முடிந்த காலங்கள். 20 ஆண்டுகளில் அதே மக்களின் நேர்மை, அர்பணிப்பு, ஒழுக்கம் எப்படி கெட ஆரம்பித்தது ?

  10. இன்று பேசப்படும் இந்த ‘விற்பனைக்கு இந்தியா’ பெரிய விசியமல்ல. 60களில், 70களில் இதை விட கடுமையான shrill campaign and hysteria about CIA agents within Indian political parties. ’சோசியலிச’ பாணியை எதிர்தவர்கள் யாராக இருந்தாலும். அவர் ஒரு சி.அய்.ஏ ஏஜண்ட் என்று தொடர்ந்து காட்டு கூச்சல். முத்திரை குத்தி இகழ்துதல்.

    இந்த ’கொசுத்’ தொல்லை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போனது. இதனால் வெறுத்துப் போன, சுதந்திரா கட்சியின் எம்.பி பிலு மோடி ,’நான் ஒரு சி.அய்.ஏ ஏஜண்ட்’ என்ற வாசகம் தாங்கிய அட்டையை தம் சட்டையில் அணிந்து கொண்டு பாராளுமன்றத்துக்கு வந்து கலக்கினார். :)))))))

    • //60களில், 70களில் இதை விட கடுமையான shrill campaign and hysteria about CIA agents within Indian political parties.//

      அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையின் மோசடிகள் இப்படி அம்பலமாயிருக்கும் வேளையிலும் சிறந்த ஏகாதிபத்திய தொண்டனாக நீங்கள் வந்து நிற்பதைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருக்கிறது. இதுக்கு அ.தி.மு.க தொண்டன் எவ்வளவோ பரவாயில்லை.

      NDTV பேட்டியில் ஜூலியன் அசான்ஜ் சொன்னது இங்க பொருத்தமா இருக்கு.

      ” இந்த குறிப்புகளைப் படிக்கும்போது நான் நினைத்தது இதுதான். 1960 -களில் அமெரிக்க வெளியுறவுத் துறை குறித்து தென்னமெரிக்க மார்க்சிஸ்டுகள் கூறிய புகார்களெல்லாம் எவ்வளவு உண்மையாக இருந்திருக்கின்றன…”

      Pranoy Roy: You mentioned that the U.S. President is like the super-president of us all. In the recent leaks about India, the diplomatic cables released by WikiLeaks, the overriding feature is America’s efforts to influence policies in India. Are you surprised at that, or was it expected?

      Julian Assange: Looking at what the U.S. has done with other countries, which we have revealed though these cables, it’s not at all a surprise, and it is their modus operandi. When I first started reading this material I thought, my god, everything those South American Marxists in the 1960s were complaining about in relation with the State Department, it’s actually true. It is not just that they are making political rhetoric. Actually it does appear that the State Department is an instrument of U.S. industry of all types, and it goes around the world clicking political intelligence, interfering in unions and all. We even saw this in Australia where the Australian Cabinet Minister from the Labor government was a confidential source for the U.S. Embassy, going there frequently. [He] said he has been that way throughout his political rise.

      • போதாம்கின்,

        விவாதம் செய்யும் போது கருத்தக்களை மற்றிம் பேசாமல், எம்மை ‘ஏகாதிபத்திய தொண்டன்’ என்று விளிக்கும் போது, சில சமயங்களின் நான் பொறுமை இழந்து, பதிலுக்கு வசை சொற்களை பயன்படுத்த தள்ளப்படுகிறேன். முதலில் லிப்ர்டேரியனிசம் என்றால் என்னவென்று எமது பெயரை சுட்டி, கேட்டோ வலைமனைக்கு சென்று புரிந்து கொள்ள முயலுங்கள். ஏகாதிபத்யத்தை முழுமூச்சாக எதிர்ப்பதே லிபர்ட்டேரியனிசம். அது எவ்வகை ஏகாதிபத்தியமாக இருந்தாலும் தான் : முதலாளித்துவ, கம்யூனிச, மதவாத, இனவாத, மொழி வாத, ஏகாதிபத்தியம் எதுவாகினும், மனித உரிமைகளை நசுக்கும் அமைப்புகள் எதுவகினும் அவற்றை எதிர்ப்பதே லிபர்ட்டேரியனிசத்தின் அடி நாதன். பெயரே அதை தான் சொல்கிறது. Libertarianism, Libertarian all trace their roots to LIBERTY அதாவது சுதந்திரம்.

        அமெரிக்க சி.அய்.ஏ விளையாடிய விளையாட்டுகள் ; ரஸ்ஸிய கே.ஜி.பியுடன் ஆடிய deadly games during cold war decades in many third world nations :இவை பற்றி நிறைய படித்திருக்கிறேன். எதையும் மறுக்கவில்லை. ஆனால் மதவெறி போல் அன்று இந்தியாவில், சுதந்திர சந்தை பொருளாதர கொள்கைகளை வலியுறுத்திய தலைவர்களை சகட்டுமேனிக்கு சி.அய்.ஏ ஏஜண்ட் என்று முத்திரை குத்தி இகழ்ந்தனர். இப்ப நீங்க கூட சர்வ சாதாரணமாக எம்மை ‘ஏகாதிபத்திய தொண்டன்’ என்று விளிக்கவில்லையா ? அப்படி தான். மேடைகளில், பத்திர்க்கைகளில், சினிமாவில்.

        சி.ய்.ஏ மற்றும் கே.ஜி.பி ஆடிய விளையாட்டுகள் பற்றி எமது பழைய பதிவு :

        http://athiyamaan.blogspot.com/2008/07/kgb-cia.html
        KGB / CIA ஒற்றர்கள்

      • //When I first started reading this material I thought, my god, everything those South American Marxists in the 1960s were complaining about in relation with the State Department, it’s actually true. //

        this statement from Assenge should be read along with this report for a balanced view :

        A new beginning : The emerging democratic paradigm in Latin America
        http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

        How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

        ..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I’ll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

  11. மன்னாரு,

    //உங்களிடமோ அதியமானிடமோ இதைப் புரியவைக்க முடியாது என்பது தெரிந்தது தான்///

    இதுதானே வேணாம்கறது. என்னை ஏன் இங்கு இழுக்க வேண்டும். மோடி லஞ்சம் வாங்குவதில்லை. தன் சகாக்களையும் ’சம்பாதிக்க’ விடாதாதால், கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு. குஜராத் வளர்ச்சிக்கு திறமையாக செயல்படுகிறது. இது ஒரு பக்கம். 2002 கலவரங்களில் அவர் பங்கு மறுக்க முடியாது / நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதன் பின்பு அவர் மத வெறியை அங்கு ‘தூண்டி’ முஸ்லீம்களை கொடுமைபடுத்துகிறார் என்பதெல்லாம் ஏற்ப்பதற்க்கில்லை. பல பகுதிகளில் முஸ்லீம்கள் அவருக்கு இப்ப வாக்கு அளிப்பது நிஜம். முதலமைச்சர் வேலைய உருப்படியா செய்வதால் அவர் மீது ஒரு மரியாதை. 2002 நிகழ்வை மட்டும் அவர்கள் கருதுவததில்லை. பல இதர விசியங்களையும் பார்க்கிறார்கள். இனி அங்கு 2002 போல் நிகழாது. எல்லோரும் உருப்படற வழிய பார்க்கிறார்கள்.

    மாற்றாக, உமா பாரதி இந்துத்தவ வெறியர். மத வெறியை கிளப்பி, வன்முறைய துண்டுபவர். ம.பியில் அன்று ’தாரளமாக’ லஞ்சம் வாங்கிய முதல்வர். அவருக்கு, மோடி பரவாயில்லை. அவ்வளவுதான் விசியம்.

    • இவர் பெயர் அதியமான். இவர் எப்பொழுதும் இந்திய அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும்
      ஆதரவாகவே பேசுவார்.

      நன்றி !

      வணக்கம்

  12. வேறு மாற்று வழி என்கிறீர்கள்… உலகமே ஒரு சங்கிலித் தொடர்போல் கட்டுண்டு இருக்கும் போது, அந்த ஆடிக் காற்றில் சீன அம்மி ரசிய அம்மியே தலை தெறிக்க பறக்கும் போது இங்கே மட்டும் இரும்புத் திரை போட்டு ‘சமத்தாக‘ உட்கார்ந்து விட முடியுமா… நடக்கிற கதையா… லிபியா எகிப்து போன்ற இசுலாமிய அடிப்படை சர்வாதிகார நாடுகளில் உள்ளதைப் போலவா இங்கே இந்துத் தீவிரவாதம் வந்துவிடும்.. உங்களுக்கு சற்று நடைமுறை சிந்தனை தேவை என்றே தோன்றுகிறது.. ஆயிரம் குறைகள் உள்ளதுதான் இருந்தாலும் அம்பலப் படுத்த ஆயிரம் பத்திரிகைகள் உங்களைப் போன்ற இயக்கங்கள் இருக்கிறதே… அதையெல்லாம் கடாபி முபாரக் (ஸ்டாலின் உட்பட) அனுமதித்துவிடுவார்களா… ஆமாய்ய அமெரிக்கா ஆதிக்கம் செய்யறான்.. துட்டு இருக்கு… நீர் சற்று பலமான கட்சியானால் ஆதிக்கம் செலுத்த மாட்டீரா.. எல்லா நடக்கற கத தான சாரே….

    • simple. because The Hindu is a ‘media comrade’ of CPM !!!!!

      Forget WikiLeaks, codify House privileges
      http://swaminomics.org/?p=1964

      WikiLeaks continues to amuse rather than enlighten us. The latest leaks took us back to the cash-for-votes scandal of 2008, when the Congress and allies desperately sought the support of small parties to survive a confidence vote after the Indo-US nuclear deal. At that time, BJP MPs displayed huge stacks of currency allegedly offered by Amar Singh, then a member of the Samajwadi Party, to help the government survive.

      The Hindu, media comrade of the CPM, has through WikiLeaks uncovered a note saying a US diplomat was told by a junior Congress sidekick that chests full of cash were ready to bribe MPs. Indeed, it said four MPs of Ajit Singh’s party had already been bribed.

      This caused a fresh uproar in Parliament last week. Ajit Singh protested that he had three MPs at the time, not four, and they had actually voted against the Congress government. Cynics will ask whether he got a better offer from the other side.

      Congress stalwarts have denied the WikiLeaks allegations. Some have taken refuge in the technicality that events of the 14th Lok Sabha cannot be discussed in the 15th Lok Sabha. This will convince nobody. The public rightly regards not just Congressmen but all politicians as crooks, and sees politics as a big business where money and ministerships are routinely used to make or break governments. Nothing new about it, and no confirmation needed from Wiki-Leaks.

      The BJP and CPM are trying to take the high moral ground. Yet they were among the parties that started making and breaking governments through the lure of office and lucre in the late 1960s. Non-Congress parties in several states backed Congress defectors to form new coalition governments. Two-way defections soon followed, leading to the phrase “Aya Ram, Gaya Ram.” Every party was soon neck-deep in the muck. We constantly hear one bunch of opportunists accusing another of criminality and immorality. But no party has clean hands.

      The Left has its own agenda of trying to win the cold war long after the death of the USSR. It wants to paint the Congress government as a US lackey, and will happily abandon its principles and join hands with dubious characters to derail Indo-US relations. In the 2008 confidence vote, it forgot its objections to BJP communalism and joined hands with it. The CPM was once a staunch secularist, and played a heartwarming role in combating Sikh extremism in Punjab. But it now appeals to low Muslim communalists, exemplified in its hounding out of Taslima Nasreen and wooing of Coimbatore bomber Madani. It sought to make foreign relations communal in the 2009 general election by portraying India’s vote against Iran in the Security Council as an anti-Muslim plot hatched with the US. However, voters did not buy this pathetic mix of cold war and communal rhetoric, and thrashed the CPM at the polls, while voting back the Congress.

      Last week’s row in Parliament is distracting attention from the real job that lies ahead. Former prime minister Narasimha Rao survived a confidence vote by acquiring the support of three MPs of the Jharkhand Mukti Morcha. These gentlemen were naïve enough to deposit Rs 1 crore apiece in cash in their bank accounts, and were caught by the police. But the Supreme Court then held that voting for any reason whatsoever in the Lok Sabha was covered by privileges of Parliament, which gave MPs immunity from the normal laws of the land. So, MPs taking cash for votes could not be prosecuted.

      When the Constitution was formulated, it provided that Parliament should codify its own privileges, laying down precisely which acts would be immune from prosecution or civil suits. More than 60 years later, Parliament has not yet done so. MPs of all parties prefer their existing immunity for all actions. This is the real scandal, and no party or newspaper is highlighting it.

      We need to get beyond finger pointing to true morality and justice. The Lok Sabha needs to codify its privileges swiftly, providing immunity only for free speech in Parliament, not for any other action such as voting for cash or office. Indeed, it should provide that all criminal cases against MPs are heard first and foremost, so that parliamentarians are held to a higher standard than others, not a lower one. If the BJP and CPM are serious about improving political morality, they must launch an immediate campaign to codify and narrow parliamentary privileges. If they fail to do so, their talk of morality will stand exposed as pure hypocrisy.

  13. இந்தியா விலைபோன கதையை சொன்னமாதிரி Libertarian விலைபோன கதையையும் சொன்னீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்

    • பெறுமதியானது எதுவும் விலை போன கதையைத் தானே யாரும் விசாரிப்பார்கள்.

  14. It is waste of time to discuss with Libertarian alias former Athiyaman since he is not having a open mind to accept anything or he must be traqula or blood sucker of indian innocent working people.

    so donot take that much serious about Athiyaman rather you can read his useless writings as interm funny between serious reading like vinavu.

    Aathavan

  15. libert,
    இந்தியாவின் சீரழிவிற்கு காரணமனைத்திற்கும் சோசலிசமே காரணம் என்று சர்வசாதாரணமாக குற்றம் சுமத்துகிறீர்கள். ஆனால், உங்களால் சுட்டிக்கட்டப்படும் ஐரோப்பிய நாடுகள் ஒரு காலத்தில் சோசலிசம் பேசியவைகள்தாம் என்பதை மறைத்துவிடுகிறீர்கள். இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனி,இத்தாலி நாடுகளால் கைப்பற்றப்பட்ட நாடுகள் சோவியத் யூனியனால் விடுதலை செய்யப்பட்டன. பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு செம்படை உதவியது. போரின் முடிவில் மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் ஜனநாயக அரசு அமைய சோவியத் யூனியன் உதவியது. இதன் மூலம் அந்நாடுகள் தேசிய சுதந்திரத்தை அடைந்தனர்.
    பின்லாந்தின் பகுதியளவு பிரதேசங்கள் சோவியத்தின் ஆதிக்கத்தில் இருந்தவைதாம். ஜெர்மனியுடன் இணைந்து சோவியத் மீது போர் புரிந்ததில் பல லட்சம் மக்களை பின்லாந்து இழந்தது. போரின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்கள் அன்று சமாதானதையே விரும்பினர். பாசிஸ்டுகளை வெறுத்தனர். இதன் காரணமாக சோசியலிசத்திலிருந்து சிலவற்றைத் திருடிக்கொண்டு ஜனநாயகம் பேசியவர்களை மக்கள் ஆதரித்தனர். இன்றும் பின்லாந்தில் கல்வி இலவசம், குழந்தை பேறு இலவசம். இவையெல்லாம் சோசலிசத்தின் எச்சங்களே.

    • சோசியலிசம் என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்துப்படுவதால்
      குழப்பம் அதிகம். கம்யூனிசததிற்க்கு முன்னோடியான சோசியலிசம் வேறு. நான் சொல்ல வருவது, சில மே.அய்ரோப்பிய நாடுகளில், இந்தியாவில் அன்று கடை பிடிக்கப்பட்ட ஜனனாயக பாணி சோசியலிசம்.

      இந்தியாவில் சோசியலிச பாணி என்ற பெயரில் 50களில் இருந்து
      நடைமுறைபடுத்தப்பட்ட கொள்கைகள் :

      அய்ந்தாண்டு திட்டங்கள் : இவை நாட்டில் பொருளாதாரத்தை
      முழுவது திட்டமிட்டு நடத்தும் நோக்கதில் உருவாக்கப்பட்ட்ன.
      முடிந்த வரை அரசு துறைக்குதான் முக்கியத்துவம். தனியார் துறை
      மிகுந்த கட்டுப்படுகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒவ்வொறு துறையிலும்
      தனியார்கள் எந்த ஒரு பொருளையும், எத்தனை அளவு உற்பத்தி செய்ய
      முன் அனுமதி அளிக்க industrial licensing policy என்ற சட்டம் இயற்றப்பட்டது.

      சில முக்கிய துறைகள் தனியார்களுக்கு அனுமதி மறுக்கப்ப்ட்டன.
      பல துறைகளில், மிக குறைந்த அளவு லைசென்ஸே அளிக்கப்பட்டது.
      பொதுதுறை வளர வேண்டி, தனியார் துறை முடக்கப்பட்டது. ஆனால் பொதுதுறையால வேண்டிய உற்பத்தி செய்ய இயலாமல் பற்றாக்குறை உண்டாகியது. சிமெண்ட். நூல், ஜவுளி என்று பல விசியங்களில் கடும் பற்றாக்குறை. அதனால கடத்தல், கள்ள சந்தை உருவாகி, ஊழல் தலைகாட்டியது.

      இந்த லைசென்ஸ் ராஜ்ஜியத்தை கட்டிக்காக்க பெரும் அரசு அதிகாரவர்கள் உருவாக்கப்பட்டது. அவர்களின் நேர்மை படிப்படியாக குறைந்தது. தொழிலதிபர்கள் புதிய நிறுவனங்களை ஆரம்பிக்க, இருக்கும் நிறுவனங்களை விரிவு படுத்த, இந்த அதிகாரிகள், அமைச்சர்களின் தயவை நாட வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால லைசென்ஸ் வழங்குவதில் லஞ்சம் மற்றும் political patronage பெரிய அளவில் உருவானது. இது இந்திரா காந்தி காலங்களில் அதி உச்சமடைந்தது.

      அரசு துறையை தொடர்ந்து விரிவு படுத்த, ராணுவ செலவுகளை செய்ய அரசு பெரும் அளவில் வரி விதித்தது. புதிய புதிய வரிகள் விதிக்கப்பட்டன. உச்சபட்சமான வருமான வரி 98 % அளவிற்க்கு (கோடீஸ்வர்களுக்கு மட்டும்) 70களில் உயர்ந்தது. இதனால் பெரும் அளவில் வரி ஏய்ப்பு நடக்க ஆரம்பித்தது. கருப்பு பணம் மிக மிக மிக அதிகம் உருவாகி, நேர்மையை அழித்தது.

      தேசியமயமாக்கல் என்ற ‘அபாயம்’ இருந்ததால், பலரும் புதிய தொழில்களை துவக்க, ரிஸ்க் எடுக்க தயங்கினர். அதனாலும் உற்பத்தி பற்றாகுறை ஏற்பட்டு சிக்கல் அதிகரித்தது.

      அன்னிய முதலீடுகளே தடை செய்யப்பட்டன. அன்னிய நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ரூபாய், பணச் சந்தையில் இன்று போல் float செய்யப்படாமல், severe foreign exchange rate controlsகளுக்கு உட்படுத்தப்பட்டது. ரூபாயின் மதிப்பு செயற்க்கையாக சந்தை மதிப்பை விட, பல மடங்கு அதிகமா நிலை நிறுத்தப்பட்டது. அனைத்து பரிவர்த்தனைகளும் அரசின் ரிஸர்வ் வங்கி மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இறக்குமதி எப்போதும் நமக்கு ஏற்றுமதியை விட டாலர் மதிப்பில்அதிகம். அதனால் டாலர் இருப்பு எப்போதும் பற்றாக்குறை. ஏற்றுமதியும் அதிகரிக்க வழியில்லை காரணம் நம் ரூபாயின் மதிப்பு செயற்கையாக அதிகமாக வைக்கப்பட்டதால். வெளிநாடுகளில், நம் பண்டங்களை இறக்குமதி செய்பவர்கள், சந்தை மதிப்பை விட அதிக விலை அளித்து, இறக்குமதி செய்ய தயாரில்லை. இது புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படையான விசியம் தான். (ரூபாய்க்கி எதிராக டாலர் வீழ்ச்சி அடைந்த 2007இல், நம் ஏற்றுமதியாளர்கள் அடைந்த பிரச்சனைகள், நஸ்டங்களை நினைவு கூருங்கள்).

      இறக்குமதி செய்ய லைசென்ஸ்கள் அரசாங்கத்தால் அளிக்க்பட்டன. அன்னிய செலவாணி மிக தட்டுப்பாடாக இருந்தால், எந்த பண்டம் அத்தியாவியம், எது ஆடம்பரம், யாருக்கு இறக்குமதி லைசென்ஸ் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் (காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும்), உருவாக்கப்பட்டன. இது பெரும் ஊழலுக்கு வகை செய்தது. பெரும் தொழிலதிபர்கள், தளவாடங்கள், இயந்திரங்கள், மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அதிகாரிகளில் தயவு மிக மிக அதிகம் தேவை பட்டது. போதாக்குறைக்கு, சில முக்கிய ஏற்றுமதி / இறக்குமதி வணிகம் அரசுடைமயாக்கப்பட்ட State Trading Corporation மூலமாக மட்டும் தான் சாத்தியாமானது. அதில் மெகா ஊழல் உருவானது.

      அரசின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேயிருந்தது. சமாளிக்க தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்டுகள். அதாவது புதிதாக பெரிய அளவில் நோட்டடித்து, அரசு பொறுப்பில்லாமல் செலவு செய்தது. இதன் விளைவு கடுமையான விலைவாசி உயர்வு. ஆண்டுகள் 18 சதவீதம் எல்லாம் சாதாரணம். அதனால வட்டி விகுதங்களும் அதை விட அதிகமாக உயர்ந்து, மக்களை வாட்டியது.

      விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்த்தால், அதற்க்கு ஏற்றது போல், கூலி உயர்வு கேட்டு, தொழிலாளர்களின் போராட்டமும் வலுத்தது. அதனால் வருடத்தில் பல நாட்கள் உற்பத்தி முடங்கி, பற்றாக்குறை அதிகரித்தது. புதிய தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தியிம் அதிகம் இல்லை. இரும்பு, சிமெண்ட், சர்கரை, உரம் போன்ற பல பொருட்களின் விலையை அரசு கடுமையான price controls மூலம் கட்டுப்படுத்தியது.
      இதனால கள்ள சந்தை, கடத்தல், பதுக்கல் உருவாகி, நேர்மையை மேலும் சீரழித்தது.

      வறுமையும் தொடர்ந்து அதிகரித்தது. வேலை இல்லாத்திண்டாடமும் மிக மிக அதிகரித்தது. ஜனத்தொகையும் தொடர்ந்து உயர்ந்தது.

      தொழிற்துறையை முடக்கியது போதாது என்று விவசாயத்தையும் சோசியலிச கோட்ப்படுகள் என்ற பெயரில் முடக்கினார்கள். நில உச்ச வரம்பு சட்டம் என்று எந்த ஒரு விவசாயும், நஞ்சை நிலங்கள் 15 ஏக்கர்களுக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க கூடாது என்று தடை. இதனால் பினாமி நிலங்கள் உருவாகின. வளர்ந்த நாடுகளில் நடந்தது போல், பெரும் அளவு கொண்ட நவீன பண்ணைகள் உருவாகி, விவசாய உற்பத்தி திறன், அதாவது maximization of yield and minimization of productions costs due to economies of scale and use of modern technology இங்கு சாத்தியமில்லாமல் போயிற்று. இதனால் தானிய விலை மிக மிக அதிகமாக உயர்ந்தது.

      அன்னிய முதலீடுகள், இந்திய பெரு முதலாளிகள், பெரிய விவசாயிகள் : இவர்கள் அனைவரும் மெகா வில்லன்கள் என்று இடதுசாரிகளால் தொடர்ந்து மேடைகளிலும், ஊடகங்களிலும் தூற்றப்பட்டனர். மக்களின் பொது புத்தியிலும் அப்படி ஏற்றப்பட்டது. இதனால் (இன்று போல் அல்லாமல்) தொழில் துவங்க பலரும் அன்று தயங்கினர். A whole generation of ‘would be’ entrepreneurs were blunted from risk taking and made to look for got jobs.

      தனியார் துறை மிக குறைவான வேலை வாய்புகளையே இதனால் உருவாக்க முடிந்தது. பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் மிக மிக அதிகரித்தது. வேலை என்றால் அரசு துறை வேலை மட்டும் தான் என்று பல பத்தாண்டுகள் இருந்தது. எம்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்துவிட்டு, வேலை கிடைக்காமல், இளைஞர்கள் தாடி வளர்த்துக் கொண்டு, குட்டை சுவற்றில் அமர்ந்து, கம்யூனிசம் பேசினர். 1980இல் வெளிவந்த வறுமையில் நிறம் சிகப்பு படம் அருமையாக இந்த சூழலை காட்சிபடுத்தியது.

      அன்னிய செலவாணி பற்றாமல், அய்.எம்.எஃப் வங்கியிடம் ஆண்டு தோறும் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் நமக்கு. ஒரு கட்டத்தில் வட்டி கூட கட்ட முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டோம். 1991இல் இது ஒரு களைமாக்ஸ்க்கு நகர்ந்தது.

      மேலும்..

  16. Mr.Libertarian,what kind of liberty u want? From whom u want to liberate?Do U want to liberate ur self from socialism? someone or somebody is curtailing Ur liberty ? Do U think western imperialism is the authority of liberty ? Is there a liberty without any limit? how does u came to know socialism ? thru west or from Marx – Eangles ,LENIN ?Before i know about Libertarianism i expect answers for my questions please.

  17. libert,
    அதாவது நீங்கள் ரஷ்யாவிலும், சீனாவிலும் இருந்த சோசியலிசத்தை தவறு என்று சொல்லவில்லை அப்படித்தானே!
    நான்கூட ஹிட்லரு கட்சிப் பெயரைப் பார்த்து அவரும் சோஷலிஸ்டோன்னு நினைச்சி ஏமாந்திருப்பேன்! நன்றி!

    ///சில மே.அய்ரோப்பிய நாடுகளில், இந்தியாவில் அன்று கடை பிடிக்கப்பட்ட ஜனனாயக பாணி சோசியலிசம்.///

    இவனுங்க கிடக்கானுக கைப்புள்ள வடிவேலு மாதிரி காமெடிப் பீசுக. சோசியலிசம் இல்லாததெல்லாம் சோசலிசம்னு சொல்லி உங்களையும் என்னையும் ஏமாத்திட்டானுங்க. keep it up.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க