Friday, June 2, 2023
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!

தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!

-

திண்டுக்கல் சி.பி.எம் வேட்பாளர் பாலபாரதியின் சொத்து மதிப்பு வெறும் ஒரு இலட்சம்தான் என்று சி.பி.எம் தோழர்கள் தங்கள் கட்சியின் எளிமையை ஆடம்பரமான அ.தி.மு.க கூட்டணிக்குள் இருந்து கொண்டு கடை விரிக்கிறார்கள். கொள்வார்தான் யாருமில்லை.

திருப்பூரின் தி.மு.க வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற தேர்தலில் சி.பி.எம் சார்பில் வெற்றி பெற்றார். திருப்பூரில் இவர் வளைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து உடன்பிறப்புகளே அசந்து போனதால்தான் அய்யாவுக்கு ஒரு பணக்காரர் கட்சியில் சீட்டு கிடைத்திருக்கிறது. கோவிந்தசாமி ஏராளமான சொத்து சேர்த்ததாகட்டும், இல்லை முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சரிடம் சூட்கேஸ் கொடுத்தாக இருக்கட்டும் அப்போதெல்லாம் சி.பி.எம் கட்சி இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கப் போகிறார் என்றதும்தான் வேறு வழியின்றி கட்சியை விட்டு வெளியேற்றியது.

பாலபாரதி போன்ற காந்திய எளிமைக்காரர்கள் இருக்கும் கட்சிதான் கோவிந்தசாமிகளையும் உருவாக்குகிறது. எனில் இந்த எளிமை தனிநபர் சம்பந்தப்பட்டதா, இல்லை கட்சி உருவாக்குவதா? கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கூட சொத்துக்கள் இல்லை என்றுதான் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் சி.பி.எம் மாநில செயலாளர் பினரயி விஜயன் லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் கட்சிக்காக ஆட்டையைப் போடவில்லையா? இந்த மார்ட்டின்தான் கருணாநிதிக்கு ஐம்பது இலட்சம் கொடுத்து கதை வசனம் எழுதி வாங்கி இளைஞன் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார். கேரளாவில் சி.பி.எம் கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் சில ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது.

எளிமையான கட்சி என்றால் இந்த கோடி மதிப்பில் உள்ள சொத்து எதற்கு? மக்களைத் திரட்டி புரட்சி செய்யப்போவதில்லை என்று உறுதியாயிருக்கும் கட்சி சொத்துக்களை திரட்டி செட்டிலாவதில் வியப்பொன்றுமில்லை. இவர்கள் இன்னமும் கம்யூனிச நாடாக அங்கீகரிக்கும் சீனத்தின் கம்யூனிஸ்டுக் கட்சியில் சீனத்து டாடா, பிர்லா, அம்பானிகளெல்லாம் உறுப்பினர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உண்மை தெரியாததால்தான் அதியமான் போன்ற முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதிகள் கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள். யாராவது அதற்குரிய சுட்டிகளை அளித்தால் அண்ணன் அதியமான் நாளை முதல் சி.பி.எம் கட்சியில் சேருவது உறுதி. எத்தனை நாளைக்குத்தான் விலை போகாத லிபரேட்டிரியனாக தனிமையில் வாட முடியும்?

போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளில் நிரூபன் சக்கரவர்த்தி போன்ற எளியவர்களும், கோவிந்தசாமி போன்ற வலியவர்களும் சேர்ந்து செயல்பட முடியும் என்பதுதான் முக்கியமானது. ஓட்டுக் கட்சி அரசியலில் மூழ்கி எல்லா சந்தர்ப்பவாதங்களையும் கற்றுத் தேர்ந்த கட்சியில் இனியும் எதற்கு அந்த எளிமை சென்டிமெண்ட்?

சரி, இனி இந்த தேர்தல் தளியில் அளித்திருக்கும் ஒரு சந்தர்ப்பவாதத்தின் கதையை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் சென்ற சட்டமன்ற தேர்தலில் சி.பி.ஐ கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் நாகராஜ் ரெட்டி. தமிழகத்தில் சாதிப்பெயர் போடும் வழக்கம் எப்போதோ ஒழிந்தாலும் சமத்துவம் பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டும் இன்னும் அதை விடவில்லை. கிடக்கட்டும். இந்த நாகராஜ் ரெட்டிக்கு தொகுதி போனதால் ஏமாற்றம் அடைந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைகிறார்.

அப்போது சி.பி.எம், சி.பி.ஐ இரண்டும் தி.மு.க கூட்டணியில்தான் இருந்தன. காங்கிரசு கட்சியில்தான் சீட்டு கிடைக்காத நாட்டாமைகள் போட்டி வேட்பாளராக மல்லுக்கட்டுவது வழக்கம். இந்தத் தேர்தலிலும் அதையே பார்க்கிறோம். ஆனால் போலிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கட்சி முடிவு செய்ததை மீறி போட்டிட்டு வெற்றிபெறும் அளவுக்கு அவர் தனிப்பட்ட சாதி, வர்க்க செல்வாக்கோடு அந்த தொகுதியில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான சி.பி.எம் கட்சி அந்த ராமச்சந்திரனை கட்சியிலிருந்து நீக்கி விடுகிறது.

சரி, அத்தோடு அந்த ராமச்சந்திரனது கம்யூனிஸ்ட்டு நாடக வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை. இந்த ராமச்சந்திரன் சுயேட்சை வேட்பாளராகவே வெற்றி பெறுமளவு செல்வாக்கு கொண்டவர் என்பதால் சி.பி.ஐ கட்சி இவரை சேர்த்துக் கொண்டது. இது தி.மு.க, அ.தி.மு.க இரண்டிலும் மாறி மாறி சேரும் பெருச்சாளிகளின் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது.

இந்த தேர்தலில் தளி தொகுதி சி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக இதே ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். தளி தொகுதிக்கு முட்டி மோதி வாய்ப்பு கிடைக்காத நாகராஜ் ரெட்டி காரு தற்போது ராமச்சந்திரனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்று அறிவித்திருக்கிறார். இதற்காக மாவட்டம் முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை வெற்றிபெற வைப்போமென சபதமும் ஏற்றிருக்கிறார்.

மேலும் நம்ம ரெட்டிகாரு ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார். தளி சீட்டை ஐம்பது இலட்ச ரூபாய்க்கு தா.பாண்டியனும், மகேந்திரனும் (சி.பி.ஐ தலைவர்கள்) விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். உடனே போயஸ் தோட்டத்து பூசாரி தா.பாண்டியன் ரெட்டியை கட்டம் கட்டி கட்சியை விட்டு நீக்கி விட்டார். மேலும் ஐம்பது இலட்சம் ரூபாய் மேட்டருக்காக அவதூறு வழக்கு போடப்போவதாகவும் சும்மா ஒரு பேச்சுக்கு அறிவித்திருக்கிறார்.

நாகராஜ் ரெட்டி ஏதோ ஒரு சாதாரண பொறுப்பில் உள்ளவர் அல்ல. கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமென்றால் தேர்வு நிலைக்காலம், பயிற்சிக்காலம் எல்லாம் முடித்து விட்டுத்தான் ஆக முடியும். அதனால் ஒரு தோழர் மாவட்ட செயலாளராக வர வேண்டுமென்றால் அவர் பல சுற்று நிலைகளை முடித்து விட்டுத்தான் வரமுடியும். அப்படிப்பட்டவர் தா.பாண்டியன் ஐம்பது இலட்சத்திற்கு தொகுதியை விற்று விட்டார் என்று சொன்னால் அது சாதாரணமானதில்லையே?

சரி ஒரு வேளை தொகுதி இவருக்கு கிடைத்திருந்தால் எவ்வளவு தொகை  கொடுத்திருப்பாரோ தெரியாது. ஒருவேளை இவருக்கு பேரம் படியவில்லையோ தெரியவில்லை. கூட்டிக் கழித்து பார்த்தால் இது கம்யூனிஸ்டு கட்சியா, இல்லை வேட்டியை கிழிக்கும் தமிழக காங்கிரசு கட்சியா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நம்ம தோழர்களுக்கு தோன்றவில்லையே?

தேர்தல் பாதையில் சீரழிந்து எல்லா சந்தர்ப்பவாதங்களையும் அணிந்து கொண்டு போலிக் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தங்களை கம்யூனிஸ்டு கட்சி என்று அறிவித்துக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. இன்னமும் மக்களை நேசித்து, புரட்சியை நெஞ்சிலேந்தி வாழ்வதில் உண்மையாக இருக்கும் தோழர்கள் இந்த போலிக் கம்யூனிஸ்டுகட்சிகளிலிருந்து வெளியேறி புரட்சிகர கட்சிகளில் சேர வேண்டும். தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்றால் அவர்களும் கூட்டணி தலைவி புரட்சித் தலைவயின் தலைமையில் புர்ரரச்சி செய்ய வேண்டியதுதான். வரலாறு பழித்துரைக்கும் தோழர்களே, முடிவெடுங்கள்!

  1. தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் ! | வினவு!…

    தளி சீட்டை 50 இலட்ச ரூபாய்க்கு தா.பாண்டியனும், மகேந்திரனும் விற்றுவிட்டதாக நாகராஜ் ரெட்டி குற்றம் சாட்டிய உடனே போயஸ் தோட்டத்து பூசாரி தா.பா ரெட்டியை கட்டம் கட்டி கட்சியை விட்டு நீக்கி விட்டார்….

  2. சி.பி.எம் ,சி.பி.ஐ இவர்களின் கம்யூனிஸம் இந்திய மண்ணுக்கேற்ற
    மார்க்ஸியம் இது ஒங்களுக்கு புரியாது

    நம்ம சி.பி.எம். சி.பி.ஐ மாதிரிஅரசியல எறங்கி (இந்திய மண்ணுக்கேற்ற மார்க்ஸியமுன்னு சொல்லி) அதிகாரத்த பிடியுங்க

    பொழைக்க தெரியாத பக்கிகள இருக்குக

  3. ///இவர்கள் இன்னமும் கம்யூனிச நாடாக அங்கீகரிக்கும் சீனத்தின் கம்யூனிஸ்டுக் கட்சியில் சீனத்து டாடா, பிர்லா, அம்பானிகளெல்லாம் உறுப்பினர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உண்மை தெரியாததால்தான் அதியமான் போன்ற முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதிகள் கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள். யாராவது அதற்குரிய சுட்டிகளை அளித்தால் அண்ணன் அதியமான் நாளை முதல் சி.பி.எம் கட்சியில் சேருவது உறுதி. எத்தனை நாளைக்குத்தான் விலை போகாத லிபரேட்டிரியனாக தனிமையில் வாட முடியும்?////

    இதெல்லா வேண்டாத வேலை. எமது கருத்துகளை சிறிதேனும் புரியாத அறியாமையில் எழுதப்பட்ட உளரல் மற்றும் அவதூறுகள். சீனா பற்றி உம்மை விட எமக்கு அதிகமாக தெரியும் தான். (தற்பெறுமைக்காக சொல்லவில்லை.) அங்கு கம்யூனிசம் காலாவதியாக பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. உண்மையாக லிபரல் ஜனனாயக அடிப்படையிலான சுதந்திர சந்தை பொருளாதார பாணி முதலாளித்துவமும் அங்கு உருவாகவில்லை. ஒரு வகையான crony capitalism with a fascist state தான். சும்மா இஸ்டத்துக்கு எழுத வேண்டாம். கம்யூனிசத்தை நாங்கள் ‘எதிர்ப்பதற்க்கு’ மேற்சொன்ன காரணிகள் முக்கியம் அல்ல. (கம்யூனிசத்தை நோக்கிய பயணத்தில், இறுதியில் இப்படி தான் சீரழிவு உருவாகும் என்பதற்க்கு இன்றைய சீனாவும், ரஸ்ஸியாவும், வட கொரியாவும் தான் சாட்சிகள் :

    http://nellikkani.blogspot.com/2009/05/blog-post.html
    வட கொரியா என்னும் நரகக்குழி

    http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html
    கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)

    வெறும் ‘முதலாளித்துவத்தை’ நான் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அடிப்படை உரிமைகளை தான் முன்மொழிகிறேன். அதில், முதலாளித்துவத்தில் அடிநாதமான ‘சொத்துரிமை’ ஒரு அங்கம். அவ்வளவுதான். நான் மிக ஆதரசமாக முன்மொழியும் கொள்கைகளை விளக்கி எழுதிய சுட்டி :

    http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html

    மேலும் ‘முதலாளித்துவத்தின் அடிப்படைகள்’ என்று எழுதிய பதிவுகள் :

    http://nellikkani.blogspot.com/2010/04/1.html
    http://nellikkani.blogspot.com/2010/04/2.html
    http://nellikkani.blogspot.com/2011/03/3.html

    முழுசா படிக்காமல், சும்மா மேலோட்டமா இப்படி sweeping statements அளிக்க
    கூடாது.

    • எம்மை பற்றி இப்படி எல்லாம் இங்கு எழுதப்படுவதால், எமது பின்புலத்தை பற்றி ஒரு சிறிய தகவல் :

      சமீபத்தில், கரூரில் 86 வயதில் காலமான எம் தாத்தா (தாய் வழி தாத்தா) திரு.S.N அவர்கள், 1967 வரை சி.பி.எம் கட்சியில் பணியாற்றியவர். 1967 கரூர் சட்ட மன்ற தேர்தலில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு ஒரு ஜமீந்தாரிடம் தோற்றார். பிறகு அந்த நிலப்பிரத்துவவாதி ’ஜமீந்தாரை’ தோற்கடிக்க தி.மு.காவிற்க்கு மாறி, 1971இல் தேர்தலில் வென்றார். மிக நேர்மையான அரசியவாதியாக செயல்பட்டு, மக்களின் நன்மதிப்பை பெற்றார். அனைத்து கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. சி.பி.எம் போலிட்பீரோ வரை உயர்ந்த பலரும் நெருங்கிய நண்பர்கள் தாம். அவர்களுடன் இன்றும் உறவு உண்டு. எனவே சி.பி.எம் மற்றும் இந்திய பொது உடைமை இயக்கங்களின் வரலாறு பற்றி ஓரளவு தெரியும். அவர்களோடு வாதாடியிருக்கிறேன். Old gurad என்ப்பட்டும் 75 வயதை தாண்டியவர்கள் அவர்கள். மிக நேர்மையாக், அர்பணிப்புடன் பெரும் தியாகம் செய்தவர்கள். அவர்களை புண்படுத்த நான் விரும்பானல், அதிகம் வாதாடுவதில்லை.

      தள்ளாத வயதில், கரூரில் இன்றும் வாழும் திரு.சோளியப்பன் அய்யா அவர்கள் எமக்கு குரு மாதிரி. தாத்தாவின் நண்பர். 1950இல் கம்யூனிஸ்ட் கட்சியில் துடிப்பு மிகு இளைஞராக சேர்ந்து, பல பத்தாண்டுகள் மிக நேர்மையுடன், அர்பணிப்புடன், பணியாற்றிய போராளி. பல போராட்டங்களை நடத்தி, பல முறை சிறை சென்றவர். சி.பி.எம் எப்படி படிப்படியாக சீரழிந்தது என்பதை பற்றி மிக விரிவாக எம்மிடம் சொல்லியிருக்கிறார். மிக நேர்மையாக இருந்தவரை ஊழல் வாதிகள் பொய் குற்ற சாட்டி 80களி கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் வரும் கே.கே.எம் போன்றவர் இவர். சிங்கம் போல் வாழ்ந்தவர். எம் ஆசான் மற்றும் நண்பர்.
      40 ஆண்டுகளை ஒரு பொய்யான சித்தாந்திற்க்காக வீண் செய்துவிட்டேன் என்று இப்ப வருந்துகிறார். (இதே போல் இன்று இளைஞர்களாக, துடிப்புடன் செயல்படும் நீங்களும் பின்னாட்களிம் வருந்த வேண்டாம் என்ற ‘நல்லெணத்தோடுதான்’ நான் இங்கு தொடர்ந்து எழுதுகிறேன் !)

      இவர்கள் எல்லோருமே ‘போலிகள்’ என்று ஒற்றை வரியில் ஏசும் உமக்கு என்ன தெரியும் இவர்களை பற்றி…

      • // எம் ஆசான் மற்றும் நண்பர்.
        40 ஆண்டுகளை ஒரு பொய்யான சித்தாந்திற்க்காக வீண் செய்துவிட்டேன் என்று இப்ப வருந்துகிறார்.//

        எதை வீண் செய்தார்? நீங்கள் எதிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற போகிறீர்கள்?

        • தம் மொத்த வாழ்க்கையையே வீணாக்கிவிட்டேன் என்று
          வருந்துகிறார். மனித வாழ்வை பற்றி, வாழ்க்கை அனுபவம்
          மிக மிக அதிகம் பெற்றவர். நீங்களெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காய். இப்ப
          இப்படிதான் பேசுவீக. ஆவேசப்படுவீக. இன்னும் 30 ஆண்டுகள்
          கழித்து இந்த உரையாடலை நினைவு கொள்ளும் சந்தர்ப்பம்
          ‘தோழர்கள்’ பலருக்கும் உருவாகும். but it will be too late.

          அவரை பற்றி ஒரு விரிவான பதிவு எழுதுகிறேன்.

        • நீங்கள் உங்க தாத்தாயெல்லாம் மட்டும் தான் அறிவாளிங்க.. நீங்க சொன்னவுடனே ஏன் எதுக்குன்னு கேட்காம வாயை பொத்திக்கொண்டு கேட்கவேண்டும் ஏனென்றால் அனுபவம்.. இதர ஜந்துகள் எல்லாம் ஏட்டு சொரக்காய்.. இவ்வளவு தானா இல்லை நீங்கள் உங்கள் குடும்பத்தாரை தவிற மற்றவரெல்லாம் மனிதர்களே இல்லை என்பீர்களா?

          வயதாகிவிட்டது என்பதற்காக அவர் அனுபவமெல்லாம் சமுக மாற்றத்திற்கான அனுபவமாக எடுத்துக்கொள்ள கூடாது. கடைசியில் அவருடைய குரு உபதேசங்கள் உங்களை மாதிரி அடிவருடியை தானே உருவாக்கியிருக்கிறது..

          விசேஷம் இருப்பதாக தெரியவில்லை… ஒரு முழு பதிவு வேஸ்ட்… உடனே இதை கூட பொருத்துக்கொள்ள முடியாமல் கோபப்படதீர்கள்..

        • சரி அக்கினிபார்வை. நான் சொல்லாதெல்லெல்லம் சொன்னதாக அர்த்தம் செய்துகொள்ளும் திறமை உமக்கு நன்கு வருகிறது. உமக்கு அறிவுரை எல்லாம் சொல்ல வரவில்லை. உமது வழியில் நீர் செல்க. எமது வழியில் நான் செல்கிறேன்.

      • நாங்கள் தவறான பாதைக்கு போய் விடுவோம் என்று எங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் சொல்கிறீர்கள். ஊரை அடித்து உலையில் போடும், உழைக்கும் மக்களை சுரண்டும் தவறான பாதைக்கு நீங்கள் போய்விடாதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.

        இந்த நோக்கத்திற்காகத் தான் இங்கே விவாதிப்பதாக சொல்லும் நீங்கள் ஏன் அடிக்கடி தவறான வார்த்தைகளை பயபடுத்தி அநாகரீகமாக நடந்துகொண்டீர்கள் ? எப்படியாவது இந்த பாதையிலிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா அல்லது பாட்டாளி வர்க்க அணியை உடைப்பதற்காகவா ?

        • அப்படி என்ன தவறான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டார் கட்டுரையாளர் ?
          //மக்களை சுரண்டும் தவறான பாதைக்கு நீங்கள் போய்விடாதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.//
          இதை எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?
          தேர்தல் எனும் சகதியில் பன்னிகளாய் வீழ்ந்து கிடக்கிறார்கள், மக்களை சுரண்டும் பேர் வழிகளாய் போலிகள் மாறி விட்டார்கள், தோழர்கள் என்பதை சம்பிரதாயமான வார்த்தைகளாய் மாற்றி விட்டு வரும் போலி கழிசடைகளை நம்பாதீர், என்று அங்கு இருக்கும் நேர்மையான அணிகளிடம் கூறுவதில் எங்கே மக்களை சுரண்டுவது இருக்கிறது? போயஸ் அம்மண் பூசாரி தா பாண்டியனின் காரை பார்த்திருகிறீர்களா?
          //பாட்டாளி வர்க்க அணியை உடைப்பதற்காகவா ?//
          என்ன காமடியா?
          1996 தேர்தலில் சிபிஐ திமுக கூட்டணியில் நின்றது, இன்னொரு போலி சிபிஎம் மதிமுகவோடு மூன்றாவது அணி அமைத்தது, உங்க பேச்சுக்கே வெச்சுகிலாம் நீங்க எல்லாம் பாட்ளிதாம்பா!. 1996 தேர்தல்ல சிபிஎம்ம எதுக்கு எதிர்த்தீங்க? ஒரு பாட்ளி இன்னொரு பாட்ளி எப்புடி எதுக்கலாம்? நீங்க எல்லாம் பாட்டாளி வர்க்க அணின்னா ராமதாசும் பாட்டாளி வர்க்க அணிதான் அத எதிர்த்து நீங்க நிற்பது ஏன்?

        • மேலே ‘உண்மை’ சொன்ன பதில் அதிமானுக்கு. கட்டுரையாளருக்கு அல்ல.

        • //நாங்கள் தவறான பாதைக்கு போய் விடுவோம் என்று எங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் சொல்கிறீர்கள்///

          உண்மை, நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன். ஆளை விடுங்கப்பா. உங்க வழியில் சென்று புரட்சி செய்து வெற்றி பெறுங்க. மங்களம் உண்டாகும் !!!

      • //1967 கரூர் சட்ட மன்ற தேர்தலில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு ஒரு ஜமீந்தாரிடம் தோற்றார். பிறகு அந்த நிலப்பிரத்துவவாதி ’ஜமீந்தாரை’ தோற்கடிக்க தி.மு.காவிற்க்கு மாறி, 1971இல் தேர்தலில் வென்றார். மிக நேர்மையான அரசியவாதியாக செயல்பட்டு, மக்களின் நன்மதிப்பை பெற்றார். அனைத்து கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு.//

        ஜமீன்தரை திமுக வில் MLA ஆனவுடன் தோற்கடித்து விட்டாரா, தேர்தலில் தோற்றவுடன் அந்த ஜமீன் வீழ்ந்து விட்டானா என்ன? சிபிஎம்மில் இருந்து MLA சீட்டில் ஜெயிப்பதற்காக திமுக வில் சேர்ந்தார் என்பதே உண்மை, திமுக ஜமின்தர்களை எதிர்த்து கொண்டிருந்த இயக்கமா என்ன? சொந்த பகைக்காக திமுகவில் சேருவதெல்லாம் பொது தொண்டா?

        //சி.பி.எம் எப்படி படிப்படியாக சீரழிந்தது என்பதை பற்றி மிக விரிவாக எம்மிடம் சொல்லியிருக்கிறார். மிக நேர்மையாக இருந்தவரை ஊழல் வாதிகள் பொய் குற்ற சாட்டி 80களி கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் வரும் கே.கே.எம் போன்றவர் இவர். சிங்கம் போல் வாழ்ந்தவர். எம் ஆசான் மற்றும் நண்பர்.
        40 ஆண்டுகளை ஒரு பொய்யான சித்தாந்திற்க்காக வீண் செய்துவிட்டேன் என்று இப்ப வருந்துகிறார். (இதே போல் இன்று இளைஞர்களாக, துடிப்புடன் செயல்படும் நீங்களும் பின்னாட்களிம் வருந்த வேண்டாம் என்ற ‘நல்லெணத்தோடுதான்’ நான் இங்கு தொடர்ந்து எழுதுகிறேன் !)//

        உளரவேண்டாம் அதியமான், சிபிஎம்மும் புரட்சிகர அமைப்புகளும் ஒன்றா?எதையாவது திரித்து கொண்டிருப்பதே வேலையா?, உங்கள் ‘நல்லெண்ண டால்டா’ நாறுகிறது

        • //உளரவேண்டாம் அதியமான், சிபிஎம்மும் புரட்சிகர அமைப்புகளும் ஒன்றா?எதையாவது///

          பெரிய புடுங்கியாட்ட பேச மட்டும் தான் தெரியும் உமக்கு. அவர்களை பற்றி உமக்கு என்ன வெங்காயமா தெரியும். 1950இல் இருந்த சி.பி.அய் பற்றி என்ன தெரியும் உமக்கு ? அல்லது நக்ஸல்பாரிகள் மட்டும் தான் உண்மையானவர்கள் என்று நீரே உளர வேண்டாம்.

          எனது சொந்த விசியத்தை பற்றி இங்கு எழுதியது தவறு தான். வினவு : மேலே உள்ளதை அழித்து விடுக. மேலும் எம்மை பற்றி தனிமனித விமர்சனங்கள் உமது பதிவில் இனி வேண்டாமே. வேண்டும் என்றால் நேரில் வருகிறேன். பேசலாம். இங்க அடிப்படை பண்பு இல்லாத பேமானிகளுடன் எம் தாத்தா மற்றும் மதிப்பிற்க்கு உரிய மனிதர்களை பற்றி விவாதிக்க முயன்றது எம் தவறுதான்.

        • அதியமான்,

          அவர் உங்கள் தாத்தாவை எந்தவிதத்திலும் தரக்குறைவாக விமர்சிக்கவில்லையே. ஒரு கம்யூனிஸ்டாக நீங்கள் காட்ட முற்படுபவர் எந்த அடிப்படையில் கட்சித் தாவினார் என்ற கேள்வி எழத்தானே செய்யும். அதை நாகரீகமாகத் தானே கேட்டார்?

          லிபர்ட்டி, உரிமைகள் பற்றி பேசுவதை நீங்களும் கடைபிடிக்க வேண்டும் அல்லவா? கேள்வி கேட்கும் உரிமையைக் கூட பறித்து விட்டு புடுங்கி… பேமானி… கேனக்கூ… என்று திட்டினால் யார் ஃபாசிஸ்டு?

          வர வர ரொம்ப அசிங்கமாக நடந்து கொள்கிறீர்கள்.

        • போத்தாம்கின்,

          ஒரு விளக்கமாக தான் இந்த பின்னூட்டம். 1970களின் இறுதியில் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்தித்த வேலையில், எமது தாத்தவையும் அழைத்தார். அவருடன் சேர்ந்து மந்திரி பதவியை கூட அடைந்திருக்கலாம். மறுத்துவிட்டார். மிக முக்கியமான விசியம் : அவர் லஞ்சம் ஏதும் வாங்காமல், அரசியலை ’சம்பாதிக்க’ பயன்படுத்தாமல், தம் சொத்துகளை வித்து அரசியல் செய்த ‘பிழைக்க தெரியாதவராக’ இருந்தவர். இது மக்கள் அனைவரும் அறிவர். எனவே அவர் மீது மரியாதை. அவர் இறந்த போது பெரும் கூட்டம். பல் வேறு ஊர்களில், கிராமங்களில் இருந்து பெருந் திரளாக வந்து அஞ்சலி செய்தன. தோட்டகுறிச்சி கிராமம் தான் அவரின் சொந்த ஊர். 1983இல் அங்கு தலித்தகளுக்கு எதிராக பெரும் வன்முறையை ஆதிக்க சாதியனாரன் கவுண்டர்கள் நடத்தினர். அதற்க்கு தலைமை அந்த தோற்கடிக்கப்பட்ட ’நிலபிரபு’ தான். எமது தாத்தாவும் அதே கவுண்டர் சாதி தான். ஆனால் அவர் தம் ‘பங்காளிகள்’ மற்றும் சொந்த சாதியினரை எதிர்த்து, தலித்துகளின் பக்கமே நின்றார். சமாதானம் செய்ய பாடு பட்டார். ஆனால் அவர் பேச்சை யாரும் கேட்க தயாராக இல்லை. தலித்தகளின் மத்தியில் என்றும் அவருக்கு மரியாதை உண்டு.

          சோளியப்பன் அய்யா ஒரு legend. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கடும் வறுமையிலும், கொள்கைக்காக, கடுமையாக உழைத்தவர். போராட்டங்களில் அவர் நடத்த்திக்கொண்டிருகும் போது, அவர் மனைவியார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாறினார். பெரும் போராளி அவர். திருச்சியில் அன்று வாழ்ந்த பாப்பா உமாநாத் (சமீபத்தில் காலமானர்), ஆர்.சி தாத்தா (இவர் சென்ற ஆண்டு காலாமானார்) : இவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி முழுதாக அறிந்தவர்கள் அவர்களை ‘போலிகள்’ என்று தூற்றமாட்டார்கள். இன்று சி.பி.எம் போலிகளாக, ஊழல் மிகுந்தவர்களாக சீரழிந்திருக்கலாம். அதை பற்றி சோளியப்பன் அய்யா சொல்வதை விட தெரிந்து கொள்ள புதிதாக எதுவுமில்லை. ஆனால் பழைய, உண்மையான, நேர்மையான பெரியவர்கள் அனைவரையும் இப்படி அறியாமையால, ஆணவத்தால் ஏசுவது காட்டுமிரணாடித்தனம்.
          அப்படி பேசுபவகளை பதிலுக்கு பேமானி என்று என்ன, அதற்க்கு மேலும் சொல்லாம். அனானியாக கண்டபடி பேசுப்வர்களே : நேரில் ம.க.இ.க அலுவலகத்தில் அமர்ந்து பேசலாமே. தயாரா ?

          இது போல் சகட்டு மேனிக்கு முத்திரை குத்துவது தான் ஸ்டாலினிய படுகொலைகளுக்கு வழி வகுத்தது என்பதை புரிந்தி கொள்ளுங்கள். ’தான் மட்டும் தான் ஒரிஜினல், தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும், தான் யாரை போலி என்று சொல்கிறேனோ, அவர்கள் எல்லோரும் போலிகள் என்று தண்டிக்கப்பட வேண்டியவர்கள்’ என்ற மனோபாவம் தான் ஸ்டாலின்களை உருவாக்குகிறது. நீதி அழிந்து, மானுட பேரவலம் உருவாக வகை செய்கிறது. Self righteousness leads to such terrible violations of human rights and fasicism.
          இல்லை, இவை வரலாற்று கட்டாயம், இயக்கத்தை காப்பாற்ற செய்ய பட வேண்டியவை என்று உம்மை போன்றவர்கள் நியாயம் கற்பிப்பீர்கள். விடுதலை புலிகளின் ஆதாரவாளர்களும் இதே லாஜிக் தான் பேசினர்.

        • நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரிதான் எனக்கும் தோனிச்சி. மக்கள் செல்வாக்கு இருக்குற தாத்தா எதுக்கு கட்சி மாறினாருன்னு கேக்கலாம்னுதான் நெனெச்சேன். ஆனால் Mr. libert, “நீ என்ன பெரிய புடுங்கியான்னு கேட்டுருவாறுன்னுறனால விட்டுட்டேன்”. என்ன இருந்தாலும் நீங்க தைரியசாலி.

        • தோழர்களே! இந்த அதியமான் ஒரு அராஜகவாதி விவாதங்களை எதிர் கொள்ளும்போதே அவரின் சாதிக் கொழுப்பும் உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பும் கொப்பளிக்கிறது. கேள்வி கேட்டால் தெனவெட்டாக திட்டுவது, ஆயிரம் சுட்டிகளை லிங்க் கொடுப்பதே வேலையாக வைத்திருக்கிறார் இவரை “சுட்டி மான்” என்று கூட அழைப்பது சாலச்சிறந்தது, சரியான “டகால்டி”

        • //அவரின் சாதிக் கொழுப்பும் உழைக்கும் மக்கள் மீதான ///

          என்னப்பா உங்களோடு பேஜாரா போச்சு. எம்மை ’பார்ப்பான்’ என்று நினைத்து கொண்டு தாக்குகிறார்கள் என்று, எம் சாதி சான்றிதலை இங்கு எடுத்தியம்பினால், இப்ப இப்படி பேசறீக. இன்னும் என்ன செய்றது. பெரிய ரோதனையா போச்சு உம்மோட.

      • இதனால் பதிவுலகத்திற்கு தெரியபடுத்துவது என்னவென்றால், “Libertarian” என்று நாம் எல்லோருக்கும் அறியப்பட்ட அதியமான் அவர்கள் அமெரிக்க ஆதரவாளரோ, முதலாளி வர்க்க சர்வாதிகார ஆதரவாளரோ அல்ல. அவர் “கம்யூனிச பூதத்திற்கு” மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார், அதுவும் கம்யூநிசம் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுசெல்லும் என்கிற ஒரே காரணத்தினாலும் மக்கள் அனைவரும் இன்புற்றிருக்கவேண்டும் என்கிற உயர்ந்த லட்சியத்தினாலும் மட்டுமே இங்கு வந்து பின்னூட்டம் இடுகிறார். சரி தானே Libertarian ?

        • அதுவும் கம்யூநிசம் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுசெல்லும் என்கிற ஒரே காரணத்தினாலும் மக்கள் அனைவரும் இன்புற்றிருக்கவேண்டும் என்கிற உயர்ந்த லட்சியத்தினாலும் மட்டுமே இங்கு வந்து பின்னூட்டம் இடுகிறார். சரி தானே Libertarian ?//

          ஆகா என்ன உயர்ந்த லட்சியம்.சிறுபான்மையாக அதுவும் விரல்விட்டு என்னக்கூடிய முதலாளிகளின் மீது சர்வதிகாரத்தை உபயோகப்படுத்துவது பெருங்குற்றம்,சர்வதிகாரம் சரி.இப்பொழுது இருக்கும் உங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களின் மீது சர்வதிகாரத்தை உபயோகப்படுத்தியும்,முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ளது தான் நல்ல ஜனநாயகம்.சூப்பர் அப்பு

    • முதலாவதாக அதியமானின் கருத்துக்கள் அனைத்தும் ஆகாயத்திலிருந்து விழுபவை அல்ல. அவை அவருடைய வர்க்க பின்புலத்திலிருந்து வருபவை. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வர்க்கத்தின் கருத்தைத் தான் வெளியிடுகிறான். அந்த வகையில் அதியமான் என்கிற முதலாளியின் வாயிலிருந்து வருபவை அனைத்தும் முதலாளி வர்க்கத்தின் கருத்துக்களே, முதலாளி வர்க்கத்தை காப்பதற்கான கருத்துக்களே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

      மீண்டும் மீண்டும் தனது பதிவுகளின் இணைப்புகளை தரும் அதியமான் தற்போதும் கம்யூனிசத்தின் அழிவு என்று சில இணைப்புகளை கொடுத்திருக்கிறார். அவையெல்லாம் இருக்கட்டும் முதலில் முதலாளித்துவம் எப்படி அழியும் என்பதைப்பற்றி மார்க்சிலிருந்து மாவோ வரை எழுதியுள்ளார்கள் அவற்றை வாசிக்கவும்.

      மேலும் மனநோய் பீடித்தவர்களின் விருப்பங்கள் எல்லாம் உங்களுக்கும் கூட பிடித்திருக்கலாம் எனினும் அந்த கருத்தும் வர்க்கச் சார்பிலிருந்து தான் வருகிறது.

  4. ஆயுத போராட்டத்தை புறக்கணித்து, பாராளுமன்ற ஜனனாயகத்தில் பங்கெடுக்க இந்திய கம்யூனிஸ் கட்சி 50களில் முடிவு செய்தது சரியானதுதான். ஆனால் எந்த ஒரு ‘பூஸ்வா’ கட்சியுடனும் உறவு மற்றும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல், எப்போதும் தனியாக போட்டியிட்டு, சட்ட மன்றங்களில் issue based support or opposition for all acts and bills, தேவைப்பட்டால் abstention from voting in parliament / assemblies என்று ஒரு நிலைபாடு எடுத்திருந்தால், இப்படி சீரழிந்திருக்காது.

  5. ///தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்றால்///

    இல்லை. மிக மிக தவறான, ஆபத்தான கருத்து. இல்லாவிட்டால் சர்வாதிகாரம் தான் உருவாகும். எத்தனை சீரழிவுகள் இருந்தாலும், இங்கு தேர்தல் பாதைக்கு நிகரான மாற்று ‘பாதை’ எதுவும் இல்லை. இருக்கவும் முடியாது. இந்தியாவில் பாராளுமன்ற ஜனனாயக பாணி இப்படி சீரழிந்ததால் (அதற்க்கான ‘சோசியலிச’ காரணிகளை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்), இந்த ’பாதையே’ திருடர் பாதை என்பது வறட்டு வாதம் மற்றும் விவோகமற்ற செயல்.

    ’தேர்தல் பாதையே’ இல்லாத இன்றைய பர்மா, வட கொரியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் உங்களை எல்லாம் கூண்டோடு ‘export’ செய்யனும். அப்ப தான் புரியும். ’நிழலின் அருமை, வெய்யிலில் தான் தெரியும்’ என்று ஒரு அருமையான முதுமொழி உண்டு. உங்களுக்காகவே சொல்லப்பட்டது.

    • அண்ணே அதியமான் என்னங்க தேர்தல் பாதை திருடர்பாதை என்பது சர்வதிகாரம் என்கிறீர்கள். இப்பொழுது இங்கு நடப்பது என்ன ஜனநாயகமா? எந்த நாட்டையும் சுரண்டாமல் இந்த தேர்தல் பாதையில் சென்று வெற்றிப்பெற்று ஊழலையும், வறுமையையும் ஒழித்த எதாவது ஒரு உலக நாட்டை காட்டமுடியுமா?

      • //எந்த நாட்டையும் சுரண்டாமல் இந்த தேர்தல் பாதையில் சென்று வெற்றிப்பெற்று ஊழலையும், வறுமையையும் ஒழித்த எதாவது ஒரு உலக நாட்டை காட்டமுடியுமா?/

        நிறைய நாடுகள் உள்ளன. இரண்டாம் உலப்போரில் முற்றாக அழிந்த ஜப்பான், ஜெர்மனி, தைவான், தென் கொரியா போன்ற நாடுகள். ஸ்காண்டினேவிய நாடுகள், ஸ்விஸர்லாந், சிங்கபூர், ஹாங்காங், நியூசிலாந் போன்ற நாடுகள். காலனியாதிக்கம் செய்யாமல், லிபரல் ஜனனாயக சந்தை பொருளாதார முறையில் வறுமையை பெருமளவில் பல நாடுகள் ஒழித்த்தன. இரண்டாம் உலக்ப்போருக்கு பின், காலனியாதிக்கம் ஒழிந்த பின்பு, பல முன்னால் ஏகாதிபத்திய நாடுகளும், இதே பாணியில் வென்றன. இதை பற்றி தான் நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன். உம்மை போன்றவர்கள் படித்து உள் வாங்க மறுத்து, ஒரே பல்லவியை பாடுகிறீர்கள். முதலில் இந்த சுரண்டல் என்பதை பற்றி எம் இடுக்கைகளை படித்து பார்க்கவும். காலனியாதிக்கத்தை சொல்லவில்லை.

      • இதில் 100 % வெற்றி பெற்ற நாடு. அமைப்பு எதுவும் இல்லை. இருக்கவும் முடியாது. (சொர்கத்தில் வேண்டுமானால் முடியும்). மிக குறைந்த சதம் வறுமை மற்றும் ஊழல் இருக்கத்தான் செய்யும். இன்றைய ஃபின்லாந் நாடு தான் இந்த பட்டியலில் முதன் இடத்தில் உள்ளது.

        லிப்ரல் ஜனனாயக பாணி முதலாளித்துவம் perfect ஆன் அமைப்பு அல்ல். குறைகள், ஏற்ற தாழ்வுகள், சிக்கல்கள் உள்ள அமைப்பு தான். ஆனால் இதை விட சிறந்த அமைப்பை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. (கம்யூனிசம் என்று ஆரம்பிக்காதீர்கள். அதன் பெயரில் நடந்த கொடுமைகள், இறுதி சீரழிவுகள் பற்றி விலாவாரியாக எழுதியுள்ளேன். முதலாளித்துவ குறைப்பாடுகளுக்கு மாற்று கம்யூனிசம் அல்ல. தலைவலி போய் திருகுவலி வந்துவிடும்)

        • என்னங்க நீங்கள் சொன்ன நாடுகள் எல்லாமே குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள்.அதில் சில நாடுகள் மூன்றாம் உலக நாட்டுகளை கொள்ளையீட்டு தனது வறுமையை போக்கிக்கொண்டு இருக்கிற நாடுகள் தான். இதில் தென்கொரியா,தைவான் போன்ற நாடுகளில் வறுமை இல்லை என்று யார் சொன்னது.இது தவறான எடுத்துகாட்டுகள். மேலும் உலக திறந்த சந்தைப்பொருளாதாரம் என்பது வளர்ந்த நாடுகள் வளரும்,வறுமையில் இருக்கும் நாடுகளை கொள்ளையடிப்பதுதான். மக்களின் தேவைக்கு உற்பத்தி என்று இல்லாமல் லாபம் என்ற ஒற்றை இலக்கை மட்டுமே கொண்டு பல முதலாளிகளை தொழிலாளர்களாக மாற்றி ஒரு ஏகாதிபத்திய முதலாளியை உருவாக்குவது தான் நீங்கள் சொன்ன பொருளாதாரம் ஆகும்

        • அய்யா கரூர் அதியமான், ஜப்பான் சுரண்டவில்லையா? சீன ஜப்பான் போரின் அடிப்படையே ஆக்கிரமிப்புதானே? சரி உம்முடைய லிபரல் சனநாயக முதலாளித்துவத்தை பற்றி இங்கு சீரிய முயற்சியில் எழுதுவதை விட மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லலாமே, ஏன் துண்டு பிரசுரங்கள் கூட போடமுடியவில்லை உங்களால் ? உங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை அப்படி! முதலாளித்துவம் என்ற வார்த்தையிலேயே உழைக்கும் மக்களை ஒடுக்கும் சர்வாதிகாரம் என்ற அர்த்தம் இருக்கிறது, முடிந்தால் உங்கள கொள்கையை விளக்கி ஒரு பிடிஎப் பைலை உங்கள் தளத்தில் போடுங்கள், லிபரல் சனநாயக முதலாளித்துவத்தை எப்படி கொண்டுவரமுடியும் என்கிற செயல் திட்டத்தையும் போடுங்கள். பிறகு பேசலாம். இது விளையாட்டுக்கோ கிண்டலுக்கோ சொல்லவில்லை

        • விடுதலை சார், கிட்டத்தட்ட என் கேள்வியும் இதே தான். மக்கள் அனைவரும் நலமா இருக்கவேண்டும் அதற்கு முதலாளித்துவ/கம்யூனிச சர்வாதிகாரம் (கம்யூனிசம் சர்வாதிகாரம் என்பது அவர் கருத்து) உதவாது என்பது தான் அதியமானின் வாதம்,

          அதியமான்: இன்னும் வரவே இல்லாத கம்யூனிசத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டுவதும் இங்கு வந்து பின்னூட்டம் இடுவதுமாக இருக்கும் நீங்கள்,

          இன்று நிலவிவரும் முதலாளித்துவ வரம்பு மீறல் / சர்வாதிகாரத்திற்கு எதிராக “நீங்கள்” ஆற்றிய தொண்டு, போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் எதுனா இருந்தா அதுக்கும் லிங்க் கொடுங்களேன்? அப்புறம் பேசலாம் யார் ஏட்டு சுரைக்காய் யாரு களப்பணியாளர் அப்டீன்னு.

      • சுரண்டலுக்குக் காலனி ஆதிக்கம் தேவை என்று எந்த “மாமேதை” சொன்னான்?
        ஜப்பானைப் பாத்தியா கிரீன்லாந்தைப் பர்த்தியா என்று புலுடா விடுவது வசதி.
        ஆழ நோக்கினால் ஏகாதிபத்தியம் எப்படி வேலைசெய்கிறது என்று விளங்கும்– மூளையை யோக்கியமாகப் பாவித்தால்.

        • இது ‘வேற’ கார்பரல் ஜீரோ போல !!! தொணியே மாறிவிட்டதே !! :)))

          முதலாளி வர்கம், மற்றும் ’சுரண்டலே’ இல்லாத வட கொரியாவிற்க்கு உம்மை ஏற்றுமதி செய்யனும். அப்பறம் தான் ‘புரியும்’ ; இப்ப இப்படிதான் பேசுவீக மக்கா..

        • பாவம்
          பதில் சொல்ல முடியாத அவலம்.
          சம்பந்தமில்லாமல் உளறித் தீர்க்கிறது.

          அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா.

  6. உண்மையாக சொல்லபோனால் போலி கம்யுனிஸ்டாக இருப்பது தான் இன்றைய நாட்களில் பிழைப்பதற்க்கு நல்ல வழி. எவ்வளவு சம்பாதித்தாலும் ”கம்யுனிஸ்ட்கள் எளிமையானவர்கள்” என்ற இமேஜ் இருக்கும். போலி கம்யுனிஸ்ட் கட்சிகளில் யாராவ்து தனிநபராக எளிமையாக வேறு இருப்பார்கள் இது போதாதா இமேஜை காப்பாற்ற.

    ஆமாம் நானும் கொஞ்சம் ஆச்சரியபட்டேன் அதென்ன நாகராஜ’ ரெட்டி’? ”மார்க்ஸ் தான் சாதி பெயர் போட்டுகொள்வதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை” என்று வேறு மேற்கோள்கள் காட்டுவார்கள்..

      • தோழர் விடுதலையின் கவனத்துக்கு மட்டும் :

        பெரிய புடுங்கி, வெங்காயம், பேமானி என்ற நாகரீகமற்ற வார்த்தைகளை சகித்துக் கொள்கிறீர்கள். பதிலுக்கு ‘ஐய்யா, கரூர் அதியமான்..’ என்று விளிப்பது சற்று சங்கடத்தை அளிக்கிறது. சபை (மற்ற எல்லாம் தெரிந்ததுபோல் காட்டிகொண்டு) நாகரிகம் தெரியாதவர்களுக்கு நாம்தான் நாகரிகம் கற்றுக் கொடுக்கவேண்டும்.

        • ஆதாரமே இல்லாமல் எம்மை சாதி வெறியன், சாதி கொழுப்பு என்றெல்லாம் பேசுவதை ஒப்பிட்டால் இதெல்லாம் ஒன்னுமே இல்ல. சிலருக்கு, அவர்களுக்கு ’புரியும்’ பாசைல பேசினாதான் ஒழுங்கா மரியாதைய நடந்துக்குவாங்க. ’தலித்களுக்கு எதிரான ஆதிக்க சாதியன்ர்களில் அடக்குமுறைகள். என்றெல்லாம் எழுதியவனை சாதி வெறியன் என்று கருதி முத்திரை குத்துவது தான் ‘பகுத்தறிவோ’ ?

        • தோழர் புதியபாமரன் ,
          தாமதமாக விளக்குவதற்கு மன்னிக்கவும்
          அதியமானின் புடுங்கி பாணி விமர்சனத்திற்கு அதே பாணியிலான மறுமொழியைத்தான் முதலில் மறுமொழியிட்டேன், ஆனால் வினவு அதை வெளியிடவில்லை. அதற்கான காரணம் சகதோழர்கள் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தும்போது அவர்களை சரியான முறையில் விவாதிக்கவைக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம், அது சரியனதாகவே எனக்கும் பட்டது. மற்ற படி அதியமான் போன்றதுகளுக்கும் நமக்கும் வித்தியமுண்டு தோழர். அதற்காக தொடர்ச்சியாய் அதியமானின் நாறிப்போன வார்த்தைகளை பொறுத்துக்கொண்டிருக்கவும் மாட்டேன். தோழர்கள் பிரசுரிக்கும் வகையிலான மறுமொழிகளை இடுவேன் அப்படி ஒரு சூழல் வந்தால் அதியமானுக்குத்தான் மானக்கேடு(அப்படி ஒன்று இருந்தால்)

        • 2.
          தோழர் புதியபாமரன்,

          அதியமான்ஏற்கனவே தோழர் அசுரனிடம் விவாதத்தில் ஈடு கொடுக்கமால் புறமுதுகிறட்டு ஓடி அம்பலபட்டதுதான் இந்த ஜோதிடபுரட்டு கில்லாடி அதியமான், அடிபட்டு புண் பிடித்த அதி யார் பக்கத்தில் வந்தலும் லொள் லொள் என்கிறது, அதியிடமெல்லாம் மரியாதையை எதிரிபார்க்ககூடாது தோழர், தன்னையே ஒரு மனிதனாக அதி நினைக்கவில்லை அதனால்தான் அடுத்தமனிதனையும் மரியாதையாக நினைக்கதெரியவில்லை 😛
          என்னடா கரூருக்கு வந்த சோதனை:)))))

  7. சி.பீ.எம் லருந்து சிபீஐக்கு தாவினதுக்கே இவ்ளோ பதறுறீங்களே! சீபீஎம் ல இருந்தா புரட்சி வர லேட்டாகும்னு சொல்லி பொர்ச்சித்தலேவி கட்சிக்கு ஜம்ப் ஆன ஒன்றியச் செயலாளர் கதையெல்லாம் தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க? :))

  8. கேரளாவில் சி.பி.எம் கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் சில ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது.//

    !!!!!!!!

    //யாராவது அதற்குரிய சுட்டிகளை அளித்தால் அண்ணன் அதியமான் நாளை முதல் சி.பி.எம் கட்சியில் சேருவது உறுதி. எத்தனை நாளைக்குத்தான் விலை போகாத லிபரேட்டிரியனாக தனிமையில் வாட முடியும்?//

    நண்பர் அதியமானின் பங்களிப்பும் சிறப்புதான்.. பல கேள்விகள் வர ஏதுவாகுது..

  9. கேரளாவில் சி.பி.எம் கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் சில ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது.//

    !!!!!!!!

    //யாராவது அதற்குரிய சுட்டிகளை அளித்தால் அண்ணன் அதியமான் நாளை முதல் சி.பி.எம் கட்சியில் சேருவது உறுதி. எத்தனை நாளைக்குத்தான் விலை போகாத லிபரேட்டிரியனாக தனிமையில் வாட முடியும்?//

    நண்பர் அதியமானின் பங்களிப்பும் சிறப்புதான்.. பல கேள்விகள் நம்முள் வர ஏதுவாகுது..

  10. தேர்தல் பாதையில் சீரழிந்து எல்லா சந்தர்ப்பவாதங்களையும் அணிந்து கொண்டு போலிக் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தங்களை கம்யூனிஸ்டு கட்சி என்று அறிவித்துக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. இன்னமும் மக்களை நேசித்து, புரட்சியை நெஞ்சிலேந்தி வாழ்வதில் உண்மையாக இருக்கும் தோழர்கள் இந்த போலிக் கம்யூனிஸ்டுகட்சிகளிலிருந்து வெளியேறி புரட்சிகர கட்சிகளில் சேர வேண்டும். நீங்களும் அந்த வெங்காயங்களுக்கு வெத்தல பாக்கு வச்சு வரவேற்க ஒக்காந்துகிட்டு இருக்கிறது.கொடுமையிலும் கொடுமையா இருக்கு!!!

  11. ஜெயமோகன் என்கிற புளுகுணி கூடத் தான் ஒருகாலத்தில் சி.பி.எம்மில் இருந்ததாகச் சொன்னார்.
    சில மனிதர் சீரழிவது சூழ்நிலைகளின் விளைவு.
    ஆனால் சுந்தர ராமசாமி மாதிரி “நான் ஒரு ‘முன்னாள் கம்யூனிஸ்ட்'” என்பதெல்லாம் ஒரு பம்மாத்து.

    “எனக்குக் கம்யூனிஸ்ட் கட்சியிலே இத்தனை பேரைத் தெரியும்” என்று ஒருத்தன் தொடங்கும் போதே அவன் எங்கே போகிறன் என்று நமக்கு விளங்க வேண்டும்.

  12. எல்லாத்தையும் பொறுத்துகிட்ட வடிவேலு தன் அப்பத்தாவை திட்டியதும் பொங்கி எழுவது போல் அதியமானை பொங்க வைக்காதீர்கள்.சிபிஎம்மில் இருந்து MLA சீட்டில் ஜெயிப்பதற்காக திமுக வில் சேர்ந்த அவர் தாத்தா மார்க்சை ஸ்டாலினை மாவோவை எல்லாம் பற்றி கடுமையாய் விமர்சித்து இருப்பார் போல.

    • சிங்கப்பா,

      எம்.எல்.ஏ சீட் என்ன பெரிய விசியம். அ.தி.மு.காவில் சேர்ந்து அமைச்சர் பதிவியே அடைந்திருக்கலாம். அல்லது தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்த போதே, ‘சம்பாதித்திருக்கலாம்’. அவர் பதிவிக்காக கட்சி மாறவில்லை. அன்று சூழல் அப்படி, அந்த நிலப்பிரவுவை வீழ்த்த அப்படி செய்ய நிரபந்திக்கப்பட்டார். ஆனால் அவர் துய்ய ‘கம்யூனிஸ்ட்’ என்றெல்லாம் நான் சொல்லவில்லை. பதவி ஆசை அவரின் நோக்கம் அல்ல. அதை விட மிக முக்கியமாக, நேர்மையை இழக்காமல் கடைசி வரை அரசியலில் இருந்தவர். கைப்பொருளை அரசியிலுக்காக செலவு செய்த ‘பிழைக்கத் தெரியாதவர்’ ; கடைசி காலங்களில் எம்.எல்.ஏ பென்ஸனில் வாழந்தவர். இதை பற்றி தான் ‘விளக்கியிருந்தேன்’ ; இங்கு அவரை பற்றி எழுதியமை தவறுதான்.

      • மேலும் நான் ‘பொங்கி எழுந்தது’ இவரை பற்றி ’’அவதூறு’ சொல்லப்பட்டதற்க்காக அல்ல. பழம் பெரும் கட்சி உறுப்பினர்களை பற்றி அறிந்து கொள்ளாமலலேயே அவர்கள் அனைவரும், (ரிபீட் : அனைவரும்) போலிகள் என்று ஏசும் அறீவீலிகளை பார்த்துதான் இத்தனை கோபம். விவரம் தெரியாத பசங்க தான் இப்படி எல்லாம் பேசுவாக. இவர்கள் அன்று அவர்களின் நிலையிம் இருந்திருந்தால் என்ன கிழித்திருப்பர் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். உருப்படியாக ஒன்றும் செய்திருக்க முடியாது. இணையத்தில் அனானி பெயரில் ஏசுபவர்கள் என்ன சாதிக்க முடியும் ?

        இவர்களை பொருத்தவரை இ.எம்.எஸ் நம்பூதிரிபார்ட் கூட ‘போலி’ ; இவர்களை தவிர எல்லோரும் போலி. இன்னும் 35 வருடங்களில் கழித்து கெ.க.அ.க என்று ஒரு புதிய குழு உருவாகி மருதையன் மற்றும் ம.க.இ.க அனைவரும் போலிகள் என்று முழங்கினால் எப்படி இருக்கும். அதே தான் இங்கும். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளராகைய நானே அப்படி கருதவில்லை. ஆனால் மேதைகள் இப்படி…..

        • அதியமான் சார்! அதியமான் சார்!!! எல்லாருக்கும் பதில் சொல்றீங்களே இந்த குழல் விளக்கின் கேள்விக்கு மட்டும் பதிலே சொல்ல மாட்றீங்களே ஏன் சார்? நானும் இரண்டாவது முறைய ஒரு கேள்விய இங்க கேட்டிருக்கேன். 🙁 ;-(

    • குழல் விளக்கு,

      ட்யூப் லைட்டுகளுக்கு புரியவைப்பது சிரமம் என்பதால் எழுதவில்லை !!! வராத உண்மை கம்யூனிசம் கிடக்கட்டம். இதுவரை வந்த ‘அரைகுறை’ கம்யூனிசம் அல்லது சோசியலிசம் படுத்திய பாடே போதும் சாமி. அதிகமில்லை ஜெண்ட்ல்மேன், ஒரு எட்டு கோடி மக்களை போட்டு தள்ளிவிட்டு, ‘ஸாரி, implementationஇல் ஒரு சின்ன தவறு நடந்துவிட்டது, இனி நாங்கள் கொண்டு வரப்போகும் புரட்சியில் இப்படி எல்லாம் ஆகாது’ என்று சர்வ சாதரணாம சொல்லிவிட்டு (எதோ சாப்பட்டல உப்பு கம்மியாயிருச்சு என்ற ரேஞ்சில்) வேறு வேலை பார்க்க சென்று விடுவீகளே.

      முதல்ல எம்மை கேட்ட கேள்வியை உம்மிடமே கேட்டு, அதற்க்கான பதிலை சொல்க. அப்பறம் பார்க்கலாம். anyway நான் தான் முதலாளித்துவ கைக்கூலி ஆச்சே. எம்மிடம் இப்படி கேட்ட எப்படி ? சரி இந்த ஜொக்குகளை படித்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துக்கங்க :

      http://athiyamaan.blogspot.com/2008/07/blog-post_15.html

      சோவியத் யூனியன் சிதறியதும், சைபீர்ய சிறைச்சாலைகளை திறந்து பார்த்தார்கள் :

      முதல் அறையில் தோழர் ஸடாலின் உயிருடன் இருந்தார். அடுத்த அறையில் தோழர் லெனின் மூப்பெய்திய வயதில் இருந்தார். அதற்கு அடுத்த அறையில் ஒருவர் நீண்ட வெண்தாடியுடன் காணப்பட்டார்.

      “நீங்கள் யார் என்று கேட்டதிற்கு ?”

      “காரல் மார்க்ஸ்” என்றார்.

      “அடக்கடவுளே”

      “அவர் அடுத்த அறையில் இருக்கிறார்” என்றார் மார்க்ஸ்.
      —————

      motto on US dollar :

      “IN GOD WE TRUST”

      (rest is strictly cash)

      • சரிங்க சார் ஒரு குறைந்த்தபட்ச எதிர்பார்ப்பா “முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு” எதிரான உங்களோட கட்டுரைகளை சொல்வீங்க அதைவச்சு நீங்க “முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு” சார்பா பேசலைன்னு முடிவுபண்ண இருந்தேன். சும்மா நக்கலுக்கு “முதலாளித்துவ கைக்கூலி” னு பேர்வச்சிங்கனு நினைச்சேன்.

  13. இது கட்டுரை உண்மை இதை மறுப்பவன் சுயநலவாதியே என்பதில் சந்தேகம் இல்லை

  14. “குருக்கள் குசுவினல் குற்றம் இல்லை” என்று சொல்லுவார்கள்.

    இப்போ “தாத்தா தாவினால் தப்பு இல்லை” என்று வைத்துக் கொள்வோம்.

    சந்தர்ப்பவாதத்தை எத் தரப்பில் கண்டாலும் விமர்சிக்க நேர்மை வேண்டும்.
    அதை எல்லாரிடமும் எதிர்பார்ப்பது தவறு.

  15. வினவு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் :

    மிக முக்கியமான கட்டுரை இது. இப்பதான் கண்டிபிடித்தேன். லெனினின் புதிய பொருளாதார கொள்கை, ஸ்டாலின், புகாரின் மற்றும் பல வரலாற்று செய்திகள், ஆய்வுகளோடு கூடிய கட்டுரை. திரு.சித்திரகுப்தன் அவர்களின் உதவியோடு தமிழில் மொழிபெயர்த்து இடவும்.

    http://www.thefreemanonline.org/columns/soviet-admissions-communism-doesnt-work/

  16. “இதெல்லா வேண்டாத வேலை. எமது கருத்துகளை சிறிதேனும் புரியாத அறியாமையில் எழுதப்பட்ட உளரல் மற்றும் அவதூறுகள். சீனா பற்றி உம்மை விட எமக்கு அதிகமாக தெரியும் தான். (தற்பெறுமைக்காக சொல்லவில்லை.) அங்கு கம்யூனிசம் காலாவதியாக பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. உண்மையாக லிபரல் ஜனனாயக அடிப்படையிலான சுதந்திர சந்தை பொருளாதார பாணி முதலாளித்துவமும் அங்கு உருவாகவில்லை. ஒரு வகையான crony capitalism with a fascist state தான். சும்மா இஸ்டத்துக்கு எழுத வேண்டாம்……. :

    சும்மா சொல்லக்கூடாது! லிபர்ட்டேரியனின் அறிவுத்திறன் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வளவு தெரிந்த இவர் ஏன் வினவிலேயே காலத்தை ஓட்டுகிறார் எனத் தெரியவில்லை. இவரின் அறிவாற்றல் மக்களிடையே சென்றால் இவர் இந்தியாவின் பராக் ஒபாமாவாக மிளிர்வார். ஒரு தத்துவஞானிக்குரிய அனைத்து அம்சங்களும் இவரிடம் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. வெளியே வாருங்கள் லிபர்ட்டேரியன் அவர்களே! இந்தியா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

    • ////சும்மா சொல்லக்கூடாது! லிபர்ட்டேரியனின் அறிவுத்திறன் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வளவு தெரிந்த இவர் ஏன் வினவிலேயே காலத்தை ஓட்டுகிறார் எனத் தெரியவில்லை. இவரின் அறிவாற்றல் மக்களிடையே சென்றால் இவர் இந்தியாவின் பராக் ஒபாமாவாக மிளிர்வார். ஒரு தத்துவஞானிக்குரிய அனைத்து அம்சங்களும் இவரிடம் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. வெளியே வாருங்கள் லிபர்ட்டேரியன் அவர்களே! இந்தியா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.////

      ஊரான்,

      கிண்டாலாக நீர் சொன்னாலும், இது உண்மைதான். நன்றி. என்ன செய்வது, என் ஜாதகம் அப்படி. சிம்ம லக்கனத்தில் பிறந்தும், பாக்கியாதிபதி கெட்டூட்டான். இரண்டில் வேறு செவ்வாய், குரு, கேது. எனவோ பெரிசா உருப்பட முடியாமல், இங்கே குப்பை கொட்ட வேண்டிய துர்பாக்கியம். :))))))

      • சிம்மலக்கனத்தில் பிறந்த அபாக்கியவாதியே உம்மை இந்தியாவிலேதான் குப்பைக் கொட்ட அழைக்கிறார். வீட்டை விட்டு வெளியே வாரும். உமது லிபர்டேனியசத்தைப் பரப்பும்.

      • அதியமான்,
        பெரியாரிய குடும்ப பின்னணியில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் நீங்கள் சோதிடத்தை நம்புவது ஆச்சரியமாக உள்ளது.
        பார்க்க,
        சோதிடம் ஒரு ஏமாற்று வித்தை என நிறுவும் எனது பதிவு.உங்கள் மொழியில் சொல்வதானால் ”முக்கிய”பதிவு.
        http://thippuindia.blogspot.com/2010/09/blog-post_05.html

        • திப்பு,

          சோதிடம் பற்றி ஒரு திறந்த மனதோடு ஆராய்ச்சிகள் செய்கிறேன். ஒரு காலத்தில் உங்களை போல் பேசியவன் தான். வாழ்க்கை பாடம் பல புதிய விசியங்களை, கேள்விகளை, கோ