Tuesday, November 29, 2022
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!

சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!

-

அன்பார்ந்த நண்பர்களே,may-day-2011

மே தினம்! இந்த உலகில் மனித குலத்தின் ஆகப் பெரும்பான்மையினருக்கு,  உரிமைகளை பெற்றுத் தந்த தினம். செந்நீர் சிந்தி, தியாகம் புரிந்து போராட்டத்தின் மூலமே மறுக்கப்பட்ட நமது உரிமைகளை கைப்பற்ற முடியும் என்று நிரூபித்த தினம்!

இது ஏதோ தொழிலாளர் தினம் என்று மட்டும் சிலர் நினைக்கிறார்கள். இல்லை நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு கிடைத்திருக்கும் எட்டுமணி நேர வேலை, ஓய்வு, விடுமுறை, பணிப்பாதுகாப்பு, இதர உரிமைகள் அத்தனையும் முதலாளிகளின் கருணையால் கிடைத்து விடவில்லை. அவை ஒவ்வொன்றும் முதலாளிகளை அடி பணியவைத்து தொழிலாளர் வர்க்கம் கொண்டு வந்த அடிப்படை உரிமைகள்.

தனது தொழிற்சாலையில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்த தொழிலாளி வர்க்கம்தான் பின்னர் அனைத்து மக்களின் விடுதலைக்காக சோசலிசப் புரட்சிகளையும் நடத்தியிருக்கிறது. இன்று உலகில் சோசலிச முகாம் இல்லை என்பதால் அதன் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை, முன்பை விட அதிகமாயிருக்கிறது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும், மறுகாலனியாக்கமும் முழு உலகையும் அரசியல், சமூக, பொருளாதாரம் அத்தனையிலும் சுரண்டி ஆதிக்கம் செய்கிறது. மேலாதிக்க வெறி பிடித்தலையும் அதன் ஆக்கிரமிப்பு போர்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கான், ஈராக், லிபியா, பாக்கிஸ்தான் என்று பல நாடுகளில் அதன் ஆதிக்க வெறிக்காக அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்கள், அமெரிக்காவின் ஆசிபெற்ற தரகு முதலாளிகள் சேர்ந்து ஒட்டச் சுரண்டுகின்றனர். தேசத்தின் தலைவிதியே இவர்களது லாபவெறிக்காக திருத்தி எழுதப்படுகிறது. சமீப காலமாக இருந்து வந்த குறைந்த பட்ச உரிமைகள் கூட இன்று தொழிலாளி வர்க்கத்திற்கு கிடையாது. சிறப்பு பொருளாதா மண்டலங்கள் என்ற பெயரில் அடிமைகள் மட்டும் வசிக்கும் முதலாளிகளின் சமஸ்தானங்கள் அதிகரித்து வருகின்றன.

நாடு வல்லரசாகிறது என்ற பெயரில் டாடா, அம்பானி, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், மேற்குறிப்பிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையை சட்டப்படியே நடத்த அரசே கொள்கை வகுத்துத் தருகிறது.

நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் இலவசங்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்தார்களே ! எந்த கட்சியாவது (பெயரளவில் இருக்கின்ற) “தொழிலாளர் சட்டப்படி, ஊதிய உயர்வு, போனஸ் பிற உரிமைகள் வழங்க உத்திரவாதப்படுத்துவோம் ! 1926 தொழிற்சங்க சட்டப்படி சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை அங்கீகரிப்போம். இதை மீறும் முதலாளிகளை தண்டிப்போம்” என்று சொன்னார்களா ? யாரும் சொல்லவில்லை. ஆக… உரிமைகளற்ற இலவசம் என்பது உயிரற்ற உடலுக்கு சமமானது. அந்த வகையில் இன்றைக்கு தொழிலாளர்கள் மட்டுமல்ல, இதரப் பிரிவு உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் சூறையாடப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டிருக்கிறார்ள். இந்த கொடுமைகளுக்கு காரணமான, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையையும், இதற்கு அடிப்படையாக இருக்கும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

இந்த மே தினத்தில் இந்த கடமையினை அறைகூவலாக விடுத்து ம.க.இ.க வும் தோழமை அமைப்புகளும் தமிழகம் முழுவதும் மே தினத்தை போராட்ட நாளாக கடைபிடிக்கின்றன. நுகர்வு கலாச்சார பண்டிகைகளையே கொண்டாடும் நாம் உண்மையில் கடைபிடிக்க வேண்டிய நாள் மே தினமாகும்.

மே நாள் என்ற உரிமைக்கு வித்திட்ட நாளில், அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் போராட்டத்திற்கு அறைகூவும் விதமாக நடைபெறவிருக்கும் பேரணியில் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!

________________________________________

மே நாள் பேரணி

மே 1, 2011

பேரணி துவங்குமிடம்: கல்லறை பேருந்து நிறுத்தம், ஜேம்ஸ் தெரு அருகில், பூந்தமல்லி

நேரம்: காலை 9.30 மணி

தலைமை: தோழர் முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

முழக்கங்கள்:

மே நாள் வாழ்க!

சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!

அமெரிக்க உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிப்போம்!

சட்டபூர்வமாக அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பகற்கொள்ளை அடிக்க வழி வகுக்கும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தை முறியடிப்போம்!

கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு பாதை வகுத்துக் கொடுத்து லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கொட்டத்தை ஒடுக்குவோம்!

ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி என்று பேசி கார்ப்பரேட் பகற்கொள்ளையை மூடிமறைக்கும் ஊடகங்கள், ‘உத்தமர்கள்’, தன்னார்வக் குழுக்களின் முகமூடிகளைக் கிழித்தெறிவோம்!

கார்ப்பரேட் கொள்ளையர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளை நாமே தண்டிக்க, நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம்!

_____________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை, அலைபேசி: 94448 34519

வினவு: 97100 82506

__________________________

வினவுடன் இணையுங்கள்

 1. ஏன் இந்த வருடம் பொதுக்கூட்டம் இல்லை, பேரணி மட்டும் ?

  ஆதவன்

 2. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலம் ஆகிய மூன்று பகுதிகளும் இணைந்து கடலூரில் மேதினப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. அனைவரும் கலந்துகொள்ள தோழமையுடன் அழைக்கின்றோம்.

  பேரணி துவங்கும் இடம்:- தந்தை பெரியார் சிலை. கடலூர். நேரம்.மாலை. 4 மணி.

  ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்:- மணிகூண்டு அருகில். மஞ்சகுப்பம். கடலூர். நேரம். மாலை. 5 மணி.

 3. //மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மேதினத்தை கொண்டாட்ட தினமாக அறிவித்திருக்கிறார்.//

  //இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இந்த ஆண்டும் வழக்கம்போல மே தினம் கொண்டாட அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.//

  ம.க.இ.க.வும் தோழமை அமைப்புகளும் தான் போராட்டத்தினமாக கடைப்பிடிக்கின்றன. மே தின வரலாறும் அதைத் தான் சொல்கின்றன. புரட்சிகர வாழ்த்துக்கள்.

  • மே நாள் என்றைக்குமே கொண்டாட்ட நாள் அல்ல ! அது தொழிலாளி வர்க்கத்தின் வெள்ளைக்கொடி உதிரத்தில் நனைந்து செங்கொடியான நாள். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே மே நாள் கொண்டாட்ட நாள் அல்ல. நாளை இங்கே புரட்சி நடந்து ஒரு சோசலிச அரசு அமைந்தாலும் மே நாள் போராட்ட நாளாகத்தான் கடைபிடிக்கப்படும்.

   இதை புரிந்து கொள்ளாத போலிக்கம்யூனிஸ்டுகளும் மற்ற ஓட்டுப்பொறுக்கிகளைப்போலவே மே நாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

   ஹீண்டாய் தொழிலாளிகள் விழாவா கொண்டாட முடியும் ?

 4. திருச்சி-உறையூரில் பிற்பகல் 3 மணிக்கு பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிகிறேன்.அவசியம் கலந்து கொள்வோம்.

  • திருத்தம் தோழரே,
   பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்,
   பேரணி:ஜெயந்தி பேருந்து நிறுத்தம், உறையூர். மாலை 4 மணி.
   ஆர்ப்பாட்டம்:புத்தூர் 4 ரோடு. மாலை 6 மணி.
   பங்கேற்கும் மாவட்டங்கள்:திருச்சி,தஞ்சை,திருவாரூர்,கரூர் மாவட்டங்கள்.
   அவசியம் வாங்க.

   ம.க.இ.க.,பு.மா.இ.மு.,பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு.,வி.வி.மு.,
   திருச்சி,தஞ்சை,திருவாரூர்,கரூர் மாவட்டங்கள்.

 5. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்……….

  மதுரைப் பகுதி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் இணைந்து உசிலம்பட்டியில் மேதினப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. அனைவரும் கலந்துகொள்ள தோழமையுடன் அழைக்கின்றோம்.

  பேரணி துவங்கும் இடம்:- கருக்கட்டான்பட்டி,உசிலம்பட்டி. நேரம். காலை. 11 மணி.

  ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்:- முருகன் கோயில் அருகில்.உசிலம்பட்டி.நேரம். ஊர்வலம் முடிந்த உடன்.

  Repl

 6. திருத்தம் தோழரே,
  பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்,
  பேரணி:ஜெயந்தி பேருந்து நிறுத்தம், உறையூர். மாலை 4 மணி.
  ஆர்ப்பாட்டம்:புத்தூர் 4 ரோடு. மாலை 6 மணி.
  பங்கேற்கும் மாவட்டங்கள்:திருச்சி,தஞ்சை,திருவாரூர்,கரூர் மாவட்டங்கள்.
  அவசியம் வாங்க.

  ம.க.இ.க.,பு.மா.இ.மு.,பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு.,வி.வி.மு.,
  திருச்சி,தஞ்சை,திருவாரூர்,கரூர் மாவட்டங்கள்.

 7. In Kovai May Day rally organised by PALA, NDLF, PLF, RSYF. The rally starts from Sivanantha Colony by 4PM and ends at VKK Menon road. NDLF state secretory Suba Thangarasu delivers the special speech in the end and Vilavai Ramasami presides it. All are invited. This rally organised by Kovai,Tiruppur,nilgiri, erode,namakkal organisations.

 8. தோழர்களுக்கு எனது மே தின நல்வாழ்த்துக்கள். இனியொரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்

 9. The history of the world holiday on the 1st May – Mayday, held in commemoration of four anarchists executed for struggling for an 8-hour day.

  Originally a pagan holiday, the roots of the modern Mayday bank holiday are in the fight for the eight-hour working day in Chicago in 1886, and the subsequent execution of innocent anarchist trade unionists.

  In 1887, four Chicago anarchists were executed; a fifth cheated the hangman by killing himself in prison. Three more were to spend 6 years in prison until pardoned by Governor Altgeld who said the trial that convicted them was characterised by “hysteria, packed juries and a biased judge”. The state had, in the words of the prosecution put “Anarchy is on trial” and hoped their deaths would also be the death of the anarchist idea.

  The anarchists were trade union organisers and May Day became an international workers day to remember their sacrifice. They were framed on false charges of throwing a bomb at police breaking up a demonstration in Chicago. This was part of a strike demanding an 8 hour day involving 400,000 workers in Chicago that started May 1st 1886 .

  It began over a century ago when the American Federation of Labour adopted an historic resolution which asserted that “eight hours shall constitute a legal day’s labour from and after May 1st, 1886”.

  In the months prior to this date workers in their thousands were drawn into the struggle for the shorter day. Skilled and unskilled, black and white, men and women, native and immigrant were all becoming involved.

  Chicago
  In Chicago alone 400,000 were out on strike. A newspaper of that city reported that “no smoke curled up from the tall chimneys of the factories and mills, and things had assumed a Sabbath-like appearance”. This was the main centre of the agitation, and here the anarchists were in the forefront of the labour movement. It was to no small extent due to their activities that Chicago became an outstanding trade union centre and made the biggest contribution to the eight-hour movement.

  The Chicago anarchist movement was also strong. In 1884, they produced the world’s first Anarchist daily newspaper, the Chicagoer Arbeiter-Zeitung, plus a weekly, Fackel, and a Sunday edition, Vorbote. By 1886, these newspapers had a circulation of over 26,000 – read by the large German immigrant working class community of the city. There were also newspapers for English, Bohemian and Scandinavian speakers. As well as this, Chicago anarchists were active in the unions and organised picnics, lectures, dances, libraries and other events for workers. These helped forge strong bonds of class solidarity, which was worrying to the bosses who were keen to break the workers’ organisations.

  When on May 1st 1886, the eight hour strikes convulsed that city, one half of the workforce at the McCormick Harvester Co. came out. Two days later a mass meeting was held by 6,000 members of the ‘lumber shovers’ union who had also come out. The meeting was held only a block from the McCormick plant and was joined by some 500 of the strikers from there.

  The workers listened to a speech by the anarchist August Spies, who has been asked to address the meeting by the Central Labour Union. While Spies was speaking, urging the workers to stand together and not give in to the bosses, the strikebreakers were beginning to leave the nearby McCormick plant.

  The strikers, aided by the ‘lumber shovers’ marched down the street and forced the scabs back into the factory. Suddenly a force of 200 police arrived and, without any warning, attacked the crowd with clubs and revolvers. They killed at least one striker, seriously wounded five or six others and injured an indeterminate number.

  Outraged by the brutal assaults he had witnessed, Spies went to the office of the Arbeiter-Zeitung and composed a circular calling on the workers of Chicago to attend a protest meeting the following night.

  The protest meeting took place in the Haymarket Square and was addressed by Spies and two other anarchists active in the trade union movement, Albert Parsons and Samuel Fielden.

  The police attack
  Throughout the speeches the crowd was orderly. Mayor Carter Harrison, who was present from the beginning of the meeting, concluded that “nothing looked likely to happen to require police interference”. He advised police captain John Bonfield of this and suggested that the large force of police reservists waiting at the station house be sent home.

  It was close to ten in the evening when Fielden was closing the meeting. It was raining heavily and only about 200 people remained in the square. Suddenly a police column of 180 men, headed by Bonfield, moved in and ordered the people to disperse immediately. Fielden protested “we are peaceable”.

  Bomb
  At this moment a bomb was thrown into the ranks of the police. It killed one, fatally wounded six more and injured about seventy others. The police opened fire on the spectators. How many were wounded or killed by the police bullets was never exactly ascertained.

  A reign of terror swept over Chicago. The press and the pulpit called for revenge, insisting the bomb was the work of socialists and anarchists. Meeting halls, union offices, printing works and private homes were raided. All known socialists and anarchists were rounded up. Even many individuals ignorant of the meaning of socialism and anarchism were arrested and tortured. “Make the raids first and look up the law afterwards” was the public statement of Julius Grinnell, the state’s attorney.

  Trial
  Eventually eight men stood trial for being “accessories to murder”. They were Spies, Fielden, Parsons, and five other anarchists who were influential in the labour movement, Adolph Fischer, George Engel, Michael Schwab, Louis Lingg and Oscar Neebe.

  The trial opened on June 21st 1886 in the criminal court of Cooke County. The candidates for the jury were not chosen in the usual manner of drawing names from a box. In this case a special bailiff, nominated by state’s attorney Grinnell, was appointed by the court to select the candidates. The defence was not allowed to present evidence that the special bailiff had publicly claimed “I am managing this case and I know what I am about. These fellows are going to be hanged as certain as death”.

  Rigged jury
  The eventual composition of the jury was farcical; being made up of businessmen, their clerks and a relative of one of the dead policemen. No proof was offered by the state that any of the eight men before the court had thrown the bomb, had been connected with its throwing, or had even approved of such acts. In fact, only three of the eight had been in Haymarket Square that evening.

  No evidence was offered that any of the speakers had incited violence, indeed in his evidence at the trial Mayor Harrison described the speeches as “tame”. No proof was offered that any violence had been contemplated. In fact, Parsons had brought his two small children to the meeting.

  Sentenced
  That the eight were on trial for their anarchist beliefs and trade union activities was made clear from the outset. The trial closed as it had opened, as was witnessed by the final words of Attorney Grinnell’s summation speech to the jury. “Law is on trial. Anarchy is on trial. These men have been selected, picked out by the Grand Jury, and indicted because they were leaders. There are no more guilty than the thousands who follow them. Gentlemen of the jury; convict these men, make examples of them, hang them and you save our institutions, our society.”

  On August 19th seven of the defendants were sentenced to death, and Neebe to 15 years in prison. After a massive international campaign for their release, the state ‘compromised’ and commuted the sentences of Schwab and Fielden to life imprisonment. Lingg cheated the hangman by committing suicide in his cell the day before the executions. On November 11th 1887 Parsons, Engel, Spies and Fischer were hanged.

  Pardoned
  600,000 working people turned out for their funeral. The campaign to free Neebe, Schwab and Fielden continued.

  On June 26th 1893 Governor Altgeld set them free. He made it clear he was not granting the pardon because he thought the men had suffered enough, but because they were innocent of the crime for which they had been tried. They and the hanged men had ben the victims of “hysteria, packed juries and a biased judge”.

  The authorities has believed at the time of the trial that such persecution would break the back of the eight-hour movement. Indeed, evidence later came to light that the bomb may have been thrown by a police agent working for Captain Bonfield, as part of a conspiracy involving certain steel bosses to discredit the labour movement.

  When Spies addressed the court after he had been sentenced to die, he was confident that this conspiracy would not succeed:

  “If you think that by hanging us you can stamp out the labour movement… the movement from which the downtrodden millions, the millions who toil in misery and want, expect salvation – if this is your opinion, then hang us! Here you will tread on a spark, but there and there, behind you – and in front of you, and everywhere, flames blaze up. It is a subterranean fire. You cannot put it out”.

  From anarkismo.net, edited by libcom.org

 10. சென்னை பூவிருந்தவல்லி மேநாள் பேரணி மாபெரும் வெற்றி! இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் என சகல பிரிவு மக்களும் பங்கேற்ற பேரணி. கொளுத்தும் வெயிலில் சுட்டெறிக்கும் தீப்பிழம்பாய் சீறிப்பாய்ந்தன தோழர்களின் முழக்கங்கள். பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் எனது மேநாள் வாழ்த்துகள்!

 11. கோவையில் மே தின ஊர்வலம் மிக எழுச்சியாக நடந்து முடிந்தது. 900 பேர் வரை கொட்டும் மழையில் கலையாமல் நடந்து வந்து மழையிலேயே கூட்டமும் நடந்தது. கடைசி வரை கைக் குழந்தைகலுடன் மழையில் கூட்டம் கேட்டனர். கலந்து கொன்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க