Sunday, September 15, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!

மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!

-

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய மே தினப் பேரணி சிறப்பாக நடந்தேறியது. சென்னை, கடலூர், திருச்சி, கோவை, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். உசிலையில் மட்டும் போலீசு ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மே தினத்திற்கு கூட ஊர்வலம் அனுமதி இல்லை எனும் பாசிச நிலையை வந்தடைந்திருக்கிறோம். அதனால் போராட்டம் நின்றுவிடப் போவதில்லை. மே நாள் தரும் ஊக்கத்தில் அது தொடர்ந்து நடக்கும். இங்கே ஊர்வலக் காட்சிகளை ஊர் வாரியாக வெளியிடுகிறோம்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

 

உசிலம்பட்டி

மே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டி

 

திருச்சி

மே நாள் 2011 - திருச்சி

ஓசூர்

ஓசூரில் கடந்த மே 1 அன்று நடந்த மேதின நிகழ்வில், விவசாயிகள் விடுதலை முன்னணி ஐ சார்ந்த தோழர் முனிராஜ் மே தினப் பேரணியைத் துவக்கி வைத்துப் பேசினார். பேரணியின் முடிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட விவிமு  தோழர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

மே தினம் எனும் தொழிலாளர் தினம், 8 மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற தமது கோரிக்கைகளுக்காகப் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தைப் போராடி பணிய வைத்த தினம். இன்று தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகளால் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களும், தனியார் அல்லது அரசு நிறுவனம் என்ற வேறுபாடு இல்லாமல் தினசரி 16 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர்.

எனவே கேக் வெட்டிக் கொண்டாடவோ, கோவிலுக்குப் போய் கும்பிடுவதற்கோ இந்நாளைப் பயன்படுத்தக் கூடாது.  நமது உரிமையை நிலைநாட்ட, முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டிட‌  வேண்டும்.  கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எதிராகப் போராடி நமது நாட்டைப் பாதுகாக்க‌ வேண்டும். அதற்காக தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கம் என்ற வகையில் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இதற்கான சூளூரையை இந்நாளில் ஏற்பதுதான் சரியானது என்று பேச்சாளர்கள் பேசினர்.

கமாஸ் வெக்ட்ரா ஆலையின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் முருகன் நன்றியுரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான மக்களும், செஞ்சட்டையணிந்த தோழர்களும், பெண்களும், குழந்தைகளும் முழக்கங்களை பாதகைகளுடன் முழங்கியது ஓசூரில் தொழிலாளர்களுக்கு மேதினத்தில் வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும், தாம் ஒன்றுபடுவதன் அவசியத்தை உணரவைப்பதாகவும் அமைந்திருந்தது.

மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே நாள் 2011 - ஓசூர்

கோவை

கோவையில் மே 1 பேரணி மாலை 4 மணிக்கு சிவானந்தா காலனியிலிருந்து புறப்பட்டு . சித்தாபுத்தூர் V  K மேனன் வீதியில் பொதுக்கூட்டத்துடன் முடிந்தது, பேரணியில் 950 க்கும் மேற்பட்ட தோழர்களும் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பேரணியின் இடையில் பெரும் காற்றுடன் மழை வந்தும் பேரணி சற்றும் கலையாமல் நடந்தது.  பொதுமக்களின் பார்வையில் மே தினத்தை கொண்டாட முழு தகுதி உடையவர்கள் இவர்களே என்பதை உணர்த்தியது. இறுதியில் அடாத பெரும் மழையிலும் பொதுக்கூட்டத்தில் நிகழ்ச்சி முடியும் வரைதோழர்கள் கலையாமல் நின்றனர்  . இதே வேளையில் மழையின் காரணமாக சிபிஐ-சிபிஎம் கட்சியின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவை

சென்னை

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பூந்தமல்லியில் மே நாள் விழா  நிகழ்ச்சி நடந்தது.

பல தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்த உரிமைகளை அடகு வைக்க முண்டியடிக்கும் போலிகளின் குத்தாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் மத்தியில் போராட்டமே மகிழ்ச்சி என்ற  மார்க்சிய ஆசானின் கூற்றுக்கேற்ப புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் மே நாள் விழா போராட்டமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்டது. வர்க்கப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு முறைப்படி வீரவணக்கம் செலுத்தி பேரணி  கல்லறை பேருந்து நிறுத்தத்தில் காலை 10 மணிக்கு பறை முழக்கத்தோடு புஜதொமு தலைவர் அ.முகுந்தன் தலைமையில் தொடங்கியது.”மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு ?” என்று  நாட்டின் இயற்கை வளத்தை கொள்¨ளயடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடக்கோரும்  பாடல் இசைக்கப்பட்டது.

ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்கள் செஞ்சட்டையுடன் செங்கொடியேந்தி  தொழிலாளி வர்க்கத்தின் உரிமைககளை ப¡துகாப்பதற்காக இழந்து போன உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, அந்த கம்யூனிச செஞ்சுடரை ஏந்தி  பேரணியாய் சென்றார்கள்.  இருங்காட்டுக்கோட்டை, திருப்பெரும்புதூர் பகுதியிலே பணிபுரிந்து சுரண்டப்படும் தொழிலாளிகள் பரவலாக வாழும்  பகுதிகளின் ஊடாக  பேரணி சென்றது. அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிக்கக்கோரியும், தனியார் மயம் தாராளமயம் உலக மயத்தை முறியடிக்ககோரியும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும், ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க நக்சல் பாரிப் பாதையில் அணி திரளக்கோரியும் முழக்கங்கள் முழங்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் மாவோவின் படங்களை ஏந்தி  அவர்களின் உண்மையான வாரிசுகளாக களத்திலே  தங்கள் குடும்பங்களோடு தோழர்கள் சென்றார்கள்.   தோழர்கள் மூன்று கிலோமீட்டர் பேரணியாய் சென்றார்கள் என்றால் மக்கள் பெருந்திரளாக ஆதரித்து தோழர்களுக்கு தண்ணீர் தேவையா என்று தோழமையோடு வினவினார்கள்.

பூந்தமல்லி  நீதி மன்றம் அருகே 11 மணிக்கு பேரணி முடிவுற்றது . அவ்விடத்திலே   ஆர்ப்பாட்டம் தொடங்கியது. புஜதொமு மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றி வேல் செழியன்  சிறப்புரையாற்றினார்.  125 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் தொழிலாளார்களால் எட்டு மணி நேர வேலை என்ற  தொழிலாளிவர்க்கத்தின் கோரிக்கைக்காக தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் முழுக்க பற்றிப்படர்ந்து பல தொழிலாளர்கள் குருதி சிந்தி சாதித்தது. ஆனால் அப்படி போராடி வாங்கிய உரிமைகள் இன்றைய மறூகாலனியாக்கச் சூழலில் நசுக்கப்பட்டு,  வேலைகள் பறிக்கப்பட்டு, தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையற்ற அடிமையாக தொழிலாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  சிஐடியூ, ஏஐடியுசி போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் தொற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றபடி தாளம் போடுபவையாக உள்ளன. தொழிலாளிகளிடம் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கு மாறாக அவர்களின் போர்க்குணத்தை சிதைக்கின்றன. தொழிலாளிகள் தம் உரிமையை மீட்டெடுக்க ஓட்டுக்கட்சிகளை நம்பிப்பலனில்லை. புரட்சிகர தொழிற்சங்கமான புஜதொமு தொழிலாளர்களின் போராடி வென்றதையும் , புஜதொமுவைப்பற்றி அரசு பரப்பும் பெ¡ய் செய்திகளையே போலி கம்யூனிஸ்டுகள் பரப்பிக்கொண்டு செல்லும் வேளையில் தொழிலாளி வர்க்கத்தின் இன்னல் தீர புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வென்றும் அதற்கு நக்சல்பாரிப் பாதையில் அணிதிரள  வேண்டுமென்றும் அறைகூவியது சிறப்புறை . பாட்டளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது

மே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னை

கடலூர்

மே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரி

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பார்ப்பணர்களின் சதியால் ஊர்வலத்துக்கு தடை…. வாழ்த்துக்கள் வினவு.. மே தினக் கொண்டாட்டம் தானே அதை ஏன் போராட்டம் என்று அழைக்கிறீர்கள்?

    • இன்னும் தொழிலாளர்கள் வாழ்க்கை எந்தவித முன்னேற்றமும் வரவில்லை, கொஞ்ச நஞ்ச அடிப்படை வசதிகளை மட்டும் கொடுத்துவிட்டு சுரண்டல்வாதிகள் தொழிலாளர்களை சுரண்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த சுரண்டல் இருக்கும் வரை போராட்டம் தொடரும்…அத்னால் மேதினத்தில் கொண்டாட்டம் ஏன்பதைவிட போராட்டம் என்பது தான் சரி

  2. அவிநாசி: அவிநாசி அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில், கடுமையாக வேலை வாங்கியதால், எட்டு குழந்தைத் தொழிலாளர் உட்பட ஒன்பது பேர் தப்பி ஓடி, மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குன்னத்தூர் – ஊஞ்சப்பாளையத்தில், தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு, மில் ஹாஸ்டலில் இருந்து 10 சிறுமியர் உட்பட 11 பேர், சுவர் ஏறி குதித்து தப்பினர்; அங்குள்ள கோவில் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். தப்பி ஓடும் போது, இருவர் வழி தவறி சென்று விட்டனர். அவ்வழியே வந்த ஒருவர், சிறுமியரை குன்னத்தூர் போலீசில் ஒப்படைத்தார். தப்பியவர்களில் பெரும்பாலோர் சிறுமியர் என்பதால், அவிநாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமியரிடம் டி.எஸ்.பி., பழனிசாமி விசாரணை செய்தார். அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு, நாகவள்ளி, கருப்பாயி, சத்யா, செல்வி, சாவித்திரி, சத்யாகுமாரி, நந்தினி என்பது தெரிந்தது. தொழிலாளர் நல ஆய்வாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்ட துணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் துரைராஜ் தலைமையில், வட்டார ஆய்வாளர் ரமேஷ், தொழிற்சாலை ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் கொண்ட குழுவினர், அவிநாசி ஸ்டேஷனுக்கு சென்றனர். இதில், ஒன்பது பேரில் எட்டு பேர் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர் என்பது கண்டறியப்பட்டது. சிலரது கைகளில் காயம் ஏற்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து பெண் குழந்தைகள் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், கார்குப்பம், அய்குந்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 பேரை, ஸ்பின்னிங் மில் வேலைக்கு, ஏஜன்ட் ராஜா என்பவர் அழைத்து வந்தார். மில்லில், வார்டன் ஸ்ரீதேவி என்பவர், எங்களை அடிக்கடி அடிப்பார். காலையில் இருந்து இரவு வரை, நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும்; உட்கார்ந்தால் அடிப்பார். மில் மிஷினில் உள்ள பஞ்சுகளை, “பம்ப்’ மூலம் சுத்தம் செய்யும் போது பலருக்கும் காயம் ஏற்படும். மிகவும் கஷ்டமாக இருப்பதாக சொல்லியும் கூட, ஊருக்கு அனுப்பவில்லை. வேறு வழி தெரியாமல், சுவர் ஏறி குதித்து தப்பினோம். இன்னும் பலர் அங்கு உள்ளனர். அவர்களையும் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தொழிற்சாலை ஆய்வாளர் துரைராஜிடம் கேட்ட போது, “”குன்னத்தூர் அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில் இருந்து வெளியேறிய தொழிலாளர்களுக்கு, மருத்துவமனையில் வயது சான்றிதழ் பெற்றுள்ளோம். எட்டு பேர், குழந்தைத் தொழிலாளர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் கூறிய தகவல் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மில்லில் ஆய்வு நடத்த உள்ளோம். குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

    சி.எஸ்.இ.டி., கண்டனம்: அவிநாசி சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மைய ஒருங்கிணைப்பாளர் நயினான் கூறுகையில், “”ஸ்பின்னிங் மில்லில் பெண் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து கடுமையாக வேலை வாங்கியுள்ளனர். அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொழிலாளர் நல சட்டத்தை மீறியுள்ள மில் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை துன்புறுத்திய வார்டன் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மில்லில் தொழிலாளர் நல ஆய்வாளர், போலீசார் இணைந்து விசாரணை நடத்த வேண்டும்,” என்றார்.

    இருவர் எங்கே?: ஊஞ்சப்பாளையம் ஸ்பின்னிங் மில்லில் இருந்து மொத்தம் 11 பேர் தப்பினர்; ஒன்பது சிறுமியர் மட்டுமே போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தப்பி ஓடும்போது மில் உரிமையாளரின் ஆட்கள் அங்கு வந்ததால், முரளி, ஈஸ்வரி ஆகியோர் வழி தவறி விட்டனர். இதுவரை அவர்கள் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை.

    காணாமல் போன முரளியின் தங்கை மஞ்சு கூறுகையில், “”அனைவரும் ஒன்றாக சுவர் ஏறி குதித்து தப்பினோம். எனது அண்ணன் முரளி, ஈஸ்வரி ஆகியோர், இருட்டில் வழிமாறிச் சென்று விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார்.

  3. //இதே வேளையில் மழையின் காரணமாக சிபிஐ-சிபிஎம் கட்சியின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது//

    ஆனந்த அரிப்புகள்!
    வாளியிலிட்ட நண்டுகளில்,
    ஒரு நண்டு மற்றொன்றை
    கீழே இழுத்து தள்ளிவிடும்!

    • ரம்மி எவ்வளவு நல்லவரு பாருங்க என்னமா பீல் பண்றாரு

  4. திருச்சி-உறையூரில் நடைப்பெற்ற பேரணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல இயலவில்லை.ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டத்திற்கான மேடைபோல் அமைக்கப்பட்டு நடைப்பெற்றது சிறப்பு.

  5. ஓசூரில் நடைபெற்ற மே-தினப் பேரணியில் நானும் கலந்துக் கொண்டேன்.M.G.R சிலையருகே பறையோசையின் முன்னே சில முன்னணி தோழர்கள் கம்பீரத்துடன் முழக்கமிட்டதும் நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பம் சகிதமாக முழக்கமிட்டே அணிவகுத்தார்கள். அங்கிருந்த காவலர்கள் அலையலையாய் திரண்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை கண்டு பரபரப்பானார்கள்.வயது முதிர்ந்த வி.வி.மு –யை சேர்ந்த மூத்த தோழர், தோழர் ஆம்பள்ளி முனிராஜ் இளைஞரின் துடிப்போடு உரையாற்றிப் பேரணியை துவக்கி வைத்தார்.
    பேரணியின் முடிவில் ராம் நகர் அண்ணாசிலை அருகே எழுச்சிமிகு முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.பு.ஜ.தொ.மு-ன் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட வி.வி.மு தோழர், தோழர் முத்துக்குமார் தனது சிறப்புரையில் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் அனைவரும் கார்பரேட் முதலாளிகளின் பணியாட்களாக செயல்பட்டு இந்த நாட்டை சுடுகாடாக்கி வரும் இவ்வேளையில் தொழிலாளர்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற அச்சத்தை புறந்தள்ளி உழைக்கின்ற எல்லா வர்க்கப் பிரிவு மக்களிடமும் ஐக்கியப்பட்டு கார்பரேட் கொள்ளைக்கெதிராக கோடிக்கால் பூதமென நக்சல்பாரிகளின் தலைமையில் அணிதிரட்டப்பட வேண்டும். அந்தவகையில் உறுதியேற்போம் என்று சூளுரைத்துப் பேசினார்.
    இந்த பேரணி-ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துக்கொண்டதன் பேரில் எனக்கு கிடைத்த மூன்று அனுபவங்களை இங்கே பதிவிடுகிறேன்.
    1) பேரணியின் தொடக்க முதல் ,ஆர்ப்பாட்டத்தின் இறுதி நிகழ்ச்சிவரை பங்கேற்றிருந்த நடுத்தர வயதுடைய 4-தோழர்கள், கூட்டமுடிவில் என்னிடம் வந்து என்ன தோழரே தளி MLA ,மகேந்திரன் போன்றவர்களெல்லாம் காணோம் என்றார். அவர்களுடைய கூட்டம் வேறு இடத்தில் நடக்கிறது என்றவுடன்,அப்படியா? நாங்க அந்த கூட்டத்துக்குதான் வந்தோம்,கடைசியில் உங்க கூட்டத்தில் கலந்துக்கொண்டோம்.என்று கூறிச்சென்றனர்.
    2) 27-வயதுடைய ஒரு தொழிலாளி,இந்த பேரணி- ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டப் பிறகுதான் மே-தினம் –ன்னா என்ன? என்பதையே புரிந்துக்கொண்டேன் என்றும், இதற்கு முன்னாடி எனக்கு தெரிந்த தெல்லாம் மே-1ல் school leave விடுவார்கள், government leave இதுதான் எனக்குத் தெரிந்த மே-1. மேலும் ,’’கம்பெனியில் 15-வருசமா வேலை செய்கிறேன் முதலாளியும் சொன்னது கிடையாது,தொழிற்சங்கமோ கொடியேற்றி இனிப்பு வழங்குவார்கள். நான் ஒரு தொழிலாளியாக இருந்துக்கிட்டே இதுவரை தொழிலாளர் தினம் பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருந்துவிட்டேன்’’ என்று வருத்தமுடன் சொல்லிச் சென்றார்.
    3) மே-மாதத்தில் ஏதாவது ஒரு தோதான விடுமுறை நாளாகப் பார்த்து மே-தினப் பொதுக்கூட்டம் நடத்துவதையே தமது வாடிக்கையாக கொண்டிருந்த போலிகம்யூனிஸ்டுகள், நக்சல்பாரிகளின் வளர்ச்சியைக் கண்டு பீதியடைந்துபோய், தமது அணிகள் இதுபோன்ற போராட்டங்களுக்கு சென்று கலந்துக்கொள்வதை தடுக்குமுகமாகவே,இப்போதெல்லாம் குறிப்பாக கடந்த 4-ஆண்டுகளாக மே-1-லே பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர்.
    இதுக் குறித்து ஒரு C.I.T.U-ன் மூத்த தோழர் ஒருவரிடம் மறுநாள் பேசியபோது அதற்கு அவர்,தோழரே மே-1ல் அஜித் பிறந்தநாள் கொண்டாடுகிறான்.இந்த சாக்கடை பிறந்த நாளில் நாம் மே-தினத்தை கொண்டாடக்கூடாது.அதற்கே உரிய மரியாதையுடன் மே-மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் கொண்டாடுவதில் தப்பில்லை என்றார்.சரி தற்போது மே-1லே ஏன் நடத்துகிறீர்கள்?என கேட்டபோது, இப்போது அந்த அஜித் கழிசடையைக் காணோம் என்றும்,இப்ப கன்ஃபூயூசன் கிடையாது என்றும் சொல்லிவிட்டு இப்ப மட்டும் என்ன? மே-1 என்பது மே-மாதத்துக்குள்ளேதானே இருக்குது.என்று ‘அதிபுத்திசாலிதனமாக’ பதிலுரைத்துச் சென்றார்.

    மேற்கண்டவகையில் நான் கண்ட அனுபவத்திலிருந்து ஓசூரில் நடத்தப்பட்ட புரட்சிகர அமைப்பினரின் பேரணி-ஆர்ப்பாட்டம் என்பது மாபெரும் வெற்றி!! என்றால் மிகையல்ல.
    –சுடலை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க