ஒரு தலைப்பட்சமே அடிப்படையாக – ஜெயதி கோஷ்
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். அதற்கு வைக்கப்படும் வாதம் யாதெனில் சந்தையின் சக்தியென்பது காலம் காலமாக இருந்து வரும் சமூக கட்டுப்பாடுகளையும், உடைத்தெறிந்து குறிப்பாக பாலின வேறுபாட்டினால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட வாய்ப்புக்களை பெற்று தருகிறது என்பதாகும்.
துரதிருஷ்டவசமாக இந்தியாவில் யதார்த்தம் என்பது அது போலன்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது. தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சொல்லப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், அதனுடைய சக்தியினால் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புக்கள் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், இருக்கும் போக்கிலிருந்து மாறவில்லை என்பதுடன், பிடிவாதமாக முதலாளித்துவ நலன் சார்ந்தே உள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை முறைசார்ந்த, அல்லது முறைசாராத அனைத்து பணிகைளயும் குறைந்த கூலிக்கு வெளியில் கொடுத்து வாங்குவது என்ற முறை கடைபிடிக்கப் படுவதை சொல்லலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும் அத்தகைய நடவடிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளின் உற்பத்தி செலவினம் பெருமளவில் குறைகிறது என்பதோடு, உற்பத்தியில் இருக்கிற அபாயங்களை பல சாதாரண தொழிலாளர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிற சிறிய பிரிவுகளிடம் தள்ளிவிடுவதற்கும் அது உதவியாக உள்ளது.
இந்தியாவில் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் என்பது, பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத, முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைக்கக் கூடிய மறைமுக உதவிகளைச் சார்ந்தே இருக்கிறது. அதிகமான பணிகளை வெளியில் கொடுத்து வாங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட செலவினம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெருமளவில் குறைகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் கணினி மென்பொருள் தொழிலில் சர்வதேசங்களோடு ஒப்பிடுகையில் மலிவான கூலிக்கு திறமையானவர்கள் கிடைப்பதால், அதன் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
மேலும் குறிப்பிடத்தக்கவாறு செலவின குறைப்பு என்பது ஒவ்வொரு அலுவலகத்திலும் சுத்தப்படுத்துவது, அலுவலகப் பராமரிப்பு, போக்குவரத்து, காவல்/பாதுகாப்பு பணிகள், அலுவல் முடிந்தபின் நடைபெறும் இதர பணிகள், உணவு சமைத்தல், வழங்கல் போன்ற அனைத்து பணிகளும் வெளியில் சிறு சிறு குழுக்களிடம் கொடுப்பதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவை மிகக் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிவாங்கும் சிறிய நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது. இதில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லை. இத்தகைய குறைந்த சம்பள பணியாளர்கள் மூலமான செலவின குறைவு இல்லாதிருந்தால் சிறிய கணினி மென்பொருள் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மிகுந்த சிரமப்பட நேரிடும். இதே நிலை உற்பத்தியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும் உண்மையாகும்.
கார்ப்பரேட் பிரிவில் இத்தகைய நேரடி மற்றும் மறைமுக செலவின குறைப்பு என்பதில் குறைந்த சம்பளத்திற்கு சில சமூக தன்மைகளை வைத்து தொழிலாளர்களை தீர்மானித்து திறம்பட கையாள்வதில் இந்திய முதலாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதி மற்றும் இனத்தின் வழியான பாகுபாடு காட்டும் தன்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய சமூகத்தில் உள்ள இந்த பிரத்யேக சாதி ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மலிவான தொழிலாளர்களை முடிவு செய்கின்றனர்.
பல்வேறு ஆய்வுகளிலிலிருந்து சமூக பிரிவினை என்பது வறுமையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதும், அதன் காரணமாக பணியும், சம்பளமும் சமூக பிரிவுகளில் மிகவும் ஏற்றத் தாழ்வாக அமைகிறது என்பதும் தெரியவருகிறது. தேசிய மாதிரி ஆய்விலிருந்து குறைவான கூலிக்கு வேலையாட்கள் என்பது பொதுவான சாதி இந்து மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட இனத்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இந்த வரிசையில்) ஆகியோரே அதிகமாக உள்ளனர் என்பது தெரியவருகிறது. இது பெரும்பாலும் கல்வியறிவு குறைவினாலும், திறமையின் அளவுகோலாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதுடன், கல்வியறிவு பெறுவதிலும் சமூகத்தில் மிகுந்த பாகுபாடுகள் உள்ளது.
அத்தகைய சாதிவாரியான வேறுபாடுகள் என்பது ஊரக மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தைகளில் நிலவுகிறது. உதாரணத்திற்கு டெல்லி போன்ற பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநகராட்சியில் கூட தலித் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதுடன், அவர்கள் தான் பெரும்பாலும், மீள முடியாத குறைந்த கூலி பணிகளில் நியமிக்கப் படுகின்றனர். உற்பத்தியில் கூட இவையெல்லாம் அத்தியாவசிய பணிகள் அதாவது குப்பை பெருக்குபவர்கள், சுமைப்பணியாளர்கள், கட்டிட பணியாளர்கள், கடைகளில் விற்பனை உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்பவர்கள் ஆகிய தொழிலாளர்கள். தொடர்புகளின் மூலம் இத்தகைய குறைந்த திறனுள்ள வேலைகளுக்கான ஆட்கள் தேர்வில் வெகு காலமாக இருந்துவரும் சாதிய பாகுபாடு என்பது பிரதான பங்கு வகிப்பதுடன், அவர்களிடம் இருக்கும் ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கான ஆட்கள் தேர்வு என்பது மேற்கொள்ளப்படுகிறது. இந்த சமூக அமைப்பில் அவர்களுக்கான வருமானம் ஈட்டல் என்பதில் உள்ள அவசியத்தினால் அவர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் உள்ளூரில் மிகக் குறைந்த கூலிக்கு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு முதலாளிகளிடம் அமர்த்தும் பழக்கம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. திரு கன்ஷ்யாம் ஷா என்பவர் எழுதியுள்ள ஊரக இந்தியாவில் தீண்டாமை என்ற புத்தகத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட) ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் தீண்டாமை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதும், இங்குள்ள பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது.
இந்த ஆய்வில் 73 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது என்பது தெரியவருகிறது. 70 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது. 64 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் கடைகளில் நுழைய கூடாது. ஏறக்குறைய இந்த ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் 3ல் ஒரு பங்கு கிராமங்களில் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை விற்கும் பணியில் தலித்துக்கள் வியாபாரிகளாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை என தெரியவருகிறது. இத்தகைய பழக்க முறைகளினால் தலித்துக்கள் தங்களின் விருப்பப்படி சம்பாதிக்கும் முறையை தேர்வு செய்து கொள்ள முடிவதில்லை என்பதால் கூலி உயரும் காலங்களில் கூட மலிவான கூலி வேலைக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் சூழலிலும் இத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
ஆனால் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் அத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், பொருளாதாரம் ஓரிடத்தில் குவியும் நடவடிக்கைக்கு அடிப்படையாகவும் அது இருக்கிறது என்பதுதான். மற்றொரு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவில் முதலாளித்துவம் என்பது, குறிப்பாக உலகளாவிய சமீபத்திய சூழலில், ஏற்கனவே இருந்து வந்த தற்போதும் இருக்கிற சாதிய பாகுபாடுகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களை தமது சொந்த நலனுக்காக தள்ளி வைப்பதும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மிகக் குறைந்த கூலிக்கு அழைப்பதுமான போக்கில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
எனவே சமூக பிரிவினைகள் என்பது பொருளீட்டும் நடவடிக்கையில் சுதந்திரமாக இல்லை. மாறாக கூடுதலாக பணி வாங்குவதும், குறைந்த கூலிக்கு அதிக ஆட்கள் கிடைக்கும் வண்ணம் வழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது.
இதேமாதிரியான பாகுபாடு பார்க்கும் பழக்கம் என்பது பாலினத்திற்கேற்பவும் வேறுபடுவது கண்கூடான ஒன்று. பெண்களிடம் வேலை வாங்குவது என்பதில் வெளிப்படையாக இந்த நான்கு முரண்பாடுகள் தென்படுகிறது. கூலி வழங்கப்படும் தொழிலாளி, குறைந்த கூலி வழங்கப்படும் தொழிலாளி, கூலி மறுக்கப்படும் தொழிலாளி மற்றும் வேலை மறுக்கப்படும் தொழிலாளி என்பதாகும். வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலையின்மை என்பது குறையும் போது, அல்லது கூலி பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்து கூலி பெறாதவர்கள் எண்ணிக்கை குறையும் போது ஏற்படுகிற இது ஒரு முரண் நிலையாகும்.
ஊரக பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் வழக்கமான வேலை என்பது அதிகரித்து வருவதுடன் குறிப்பாக வீட்டு வேலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் முக்கியமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை என்பது ஏற்படுகிறது. உற்பத்தி என்பதைப் பொறுத்தமட்டில் சமீபத்திய பல பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்தி சங்கிலியில் அது சார்ந்த பணிகளை சிறிது சிறிதாக வெளியில் கொடுத்து வாங்கும் தன்மையினால், வீட்டிலிருந்து கொண்டே குறைந்த கூலிக்கு வேலை செய்வது என்பது பெண்களிடம் அதிகரித்திருக்கிறது.
ஆனால் ஏற்றுமதி சார்ந்த வேலைகளில், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மண்டலங்களில் கூட ஊரக இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதன் நடுவில் ஊரக இந்தியாவில் சம்பளத்திற்கு வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பெண்களிடம் விவசாயம் சாராத சுய வேலை வாய்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.
இந்த பொருளாதார வளர்ச்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது 1993-94-லிருந்து 2004-05-க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சிறிது கூடியிருக்கிறது. ஆனால் அதே சமயம் தேசிய தனிநபா் வருவாய் என்பது பெண்களை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது (ஊரக பட்டதாரிகள் மற்றும் கிராமத்து படிக்காத பெண்கள்), உண்மையான சம்பளம் என்பது குறைந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வித்தியாசம் என்பது அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது.
பொதுப் பணிகள் என்பது மிகுதியாக குறைந்த கூலி வாங்கும் பெண்களை சார்ந்து இருக்கிறது. மாதிரி நிர்வாகி என்று செயல்பட வேண்டிய அரசுத் துறை பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இன்னும் குறைவாகத்தான் உள்ளது. அத்தியாவசிய பொதுப்பணிகள் என்பது நிச்சயமற்ற ஒப்பந்த முறையில் குறைந்த கூலி மற்றும் பயன்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தும் போக்குதான் நீடிக்கிறது.
இது பள்ளிக் கல்வி போன்ற அரசுப் பணியில் அப்பட்டமாக தெரிகிறது. (அதாவது பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தினால்) அதே போல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (அங்கன்வாடி மற்றும் சமூக நலப்பணிகள்) சார்ந்த பணிகளில் பெண்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் என்பது ஒன்று வந்தபின் தான் இத்தகைய பாலின வேறுபாடுகள் என்பது குறைந்துள்ளது ஊரகப் பணிகளில் இந்த திட்டம் செயல்படுவதை பார்க்கும் போது தெரிகிறது. சுய வேலைவாய்ப்பில் பெண்களுக்கான நிபந்தனைகள் என்பது, சம்பளத்திற்கான பணியில் உள்ள நடத்தைப் பாங்கினை சிரமப்படுத்தும் விதமாக உள்ளது. வருமானம் தொடர்பான குறைந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெண்களின் விவசாயம் சாராத சுய வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற போதிலும் அந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை கூட பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது. தொழில்துறையிலும், சிறு வணிகத்துறையிலும் உயர் வருவாய் என்பது ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் போதிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதால், சுயவேலை வாய்ப்பு என்பது சிரமத்துடன் கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கியிருந்தாலும், வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளில், அது பெருவாரியாக ஒரு வேலைக்கு ஒரு கூலி என்று இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி இத்தகையதே என்பதால், அந்த தொழிலிலும், அதனால் வரும் இந்த கூலியும், பெரிய நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு எடுத்த ஆய்வும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிப்படுத்துகிறது.
அது போல் பெண் தொழிலாளர்களின் பணிக்கு கூலியே கொடுப்பதில்லை என்பதும் அதிகமாகி வருகிறது.ஏனென்றால் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் குறைக்கப்படுவதும், அல்லது தனியார் மயமாக்கப்படல், அல்லது வலுவிழந்த பொது சொத்துக்கான கட்டுமானம், மனைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பதற்கான கால நீடிப்பு ஆகும் வகையில் உள்ள பற்றாக்குறை கட்டுமான வசதியும், அல்லது தெளிவாக சொல்லப் போனால், நல்ல நோக்கமுள்ள பல திட்டங்கள் கூட (உதாரணம்- வன அழிப்பு) பாலினம் சார்ந்ததாக உள்ளது என்பதுமே ஆகும்.
மீண்டும் இந்த பாலின வேற்றுமை தற்போதும் இருந்து கொண்டு இருக்கிறது என்பது அச்சாரமான குறிப்பு என்பதோடு மட்டுமின்றி, (இந்தியாவில் இந்த நிலைப்பாடு மேல்மட்டத்திலும் எடுக்கப்படுகிறது) இது மூலதன குவிப்பிற்கான வழிமுறையில் பிணைந்துள்ளது. எனவே, தற்போதைய வளர்ச்சி, நிலவி வரும் சமூக வேற்றுமையை உடைப்பதற்கு பதில் அதனை சார்ந்திருந்தே வளர்ச்சி பற்றிய கருத்தை முன்னெடுத்து செல்லப்படுகிறது.
_________________________________________________________________
– நன்றி: ஃபிரண்ட்லைன், கட்டுரையாளர் – ஜெயதி கோஷ்
–தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள்!
- கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!
- கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!
- இது துரோகத்தின் விளை நிலம்!- அசுரன்
- காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!
- சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- கருகும் கனவுகள் !
- நாப்கின் – சங்கரி.
- அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
- பெற்ற மகளை விற்ற அன்னை !
- அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?
- சொக்கலிங்கம் தேநீர்க் கடை!
- ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !
- தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!
- கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!
- பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !
- தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!
- பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!
- சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
- அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
- வெண்மணிச் சரிதம்
- சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
- சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!
- தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?
- ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!
- பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !
ஜெயதி கோஷ், வினவு போன்றவர்களுக்கு எப்போதும் குறைதான் சொல்லத் தெரியும்.சில வாரங்களுக்கு முன் அவுட்லுக் தலித் தொழிலதிபதள் பற்றி அட்டைபடக் கட்டுரை வெளியிட்டது.அதில் தலித்கள் தொழில் முனைவோராக சாதித்துள்ளதை விளக்கியிருந்தது. சென்னையைச் சேர்ந்த சரத்பாபு என்ற தலித் தொழில்முனைவரின்
எப்படி உயர்கல்வி பெற்று வேலைக்கு செல்லாமல் தொழில் முனைவராக வெற்றி பெற்றுள்ளார் என்பதையும் எழுதியிருந்தது.வினவுக்கும்,சித்ரகுபதனும் அதை ஏன் எழுதுவதில்லை.
ஐந்தியாவின் அது மோசம், இது மோசம் என்று எழுதுபவர்கள் இந்தியர்களின் சாதனைப் பற்றி எதுவும் எழுதாவிட்டால் அவை இல்லை என்று ஆகிவிடாது. சிபிஎம் என்றால் வினவிற்கு ஆகாது, ஆனால் சிபிஎம் சார்புடைய,
சிபிஎம் தலைமைக்குநெருக்கமான ஜயதியின் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிடும்.
உங்களால் உருப்படியாக எதையும் செய்ய முடியாது, குறைதான் சொல்லத் தெரியும்.
ஜெயதி கோஷ்கள் என்றும் இந்தியாவின் தகவல்தொழில்னுட்பத்துறையில் உள்ள TCஸ்,
WஈPறோ,ஈண்Fஓஸ்Yஸ் செய்துள்ள சாதனைகளை, அதுதுறையில் லட்சக்கணக்கில் வெலைவாய்ய்பு உருவானதை பாராட்டி எழுதியதில்லை.
வினவு,ஜெயதி கோஷை நம்பி இந்தியா இல்லை.
நீங்கள் குறை கூறுவதில் இன்பம் காண்கிறீர்கள்.அது ஒரு மன்நோய்.
குறை கூறுகிறீர்கள் குறை கூறுகிறீர்கள் என்று நீங்கள் அதிகமாக குறை பட்டுகொண்டுள்ளீர்கள். இந்தியாவின் சாத்னை வளர்ச்சி என்று எதை சொல்லுகிறீர்கள்? வீட்டின் நடுவில் மலத்தை வைத்துக்கொண்டு வெள்ளை வெளேர் என்று வேட்டி கட்டிகொள்வது தான் நீங்கள் சொல்லும் இந்தியாவின் வளர்ச்சி. நடுவீட்டை சுத்தம் செய் என்று சொன்னால் என் வெள்ளை வேட்டி என் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்று கேட்கிறீர்கள்!
புரிந்து கொள்வதற்கு சற்று சிரமமாக உள்ளது.
ஆம் முழுமையாக விளங்கி கொள்ள முடியவில்லை. இருக்கும் ஏற்ற தாழ்வுகளை பயன்படுத்தி கொண்டு எப்படி உற்பத்தி செலவினங்களை குறைத்து பெரும் லாபம் அடைகிறார்கள், அதனால் ஏற்ற தாழ்வுகள் நிலைத்திருக்கும் சூழல் ஆகியனவற்றை கட்டுரை விளக்க முற்படுகிறது என்பதை தவிர்த்து குறிப்பாக எப்படி பயன்படுத்துகிறார்கள், எந்தெந்த இடங்களில் நிகழ்கிறது என்பதை விளக்கும் இடங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
கீழ்கண்ட இரு கட்டுரைகள், இதற்க்கு மாறான தகவல்களையே சொல்கிறது :
http://swaminomics.org/?p=1894
Dalits are marching ahead in Uttar Pradesh
….Are you among those who think record GDP growth has done nothing for dalits ? Think again. A seminal paper, “Rethinking Inequality : Dalits in UP in the Market Reform Era” by Devesh Kapur, CB Prasad, Lant Pritchett and D Shyam Babu, reveals a veritable dalit revolution after 1990 in Uttar Pradesh, long viewed as a sink of caste oppression.
The media remains full of stories of caste oppression, inequalities and lousy economic and social indicators. Without doubt, dalits remain close to the bottom of the income ladder. Nevertheless, the new study reveals huge improvements in economic and social terms, based on questions to capture realities that dalits themselves view as important . The survey covered all dalit households in two blocks in UP, one in the relatively prosperous west (Khurja) and one in the backward east (Bilariaganj), between 1990 and 2008……
மேலும் இதையும் பார்க்கவும் : The social revolution in Uttar Pradesh http://swaminomics.org/?p=1900
இந்த லின்கு படி எரும மாடு ஏரோபிளான் ஓட்டியிருக்கிறது…
http://adhiyamaan-gives-dubokar-link.com
இந்த லின்கில் ரஷியாவில் தான் தலித்கள் அதிகமாக கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது
http://adhiyamaan-always-gives-dubokar-link.com
முக்கியமான கட்டுரைகளை தமிழில் மொழிமாற்றம் செய்து வரும் சித்திரகுப்தரின் பணி வளர்க.
சில ஆக்கபூர்வமான விமரிசனங்கள்:
1) இயந்திரத்தனமாக சொல்லுக்கு சொல் என்று மொழிபெயர்க்காமல், ஒரு வாக்கியத்தின் சாரத்தை எழுதினால் படிக்க எளிமையாக இருக்கும்.
2) ஒரு பெரிய ஆங்கில வாக்கியத்தை இரண்டாகவோ, மூன்றாகவோ கூட உடைத்து தமிழில் எழுதலாம், மூலத்தின் பொருள் சிதையாதவரை.
உதாரணமாக
//பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்//
என்பதை
இந்தியாவில் நிகழும் பொருளாதார வளர்ச்சி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள்.
என்று இருந்தால் போதுமானது.
இவை அறிவுரைகளல்ல ஆலோசனைகள்.
நண்பர் ராம்காமேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. வரும் கட்டுரைகளில் இன்னும் எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன்
சரியான வழிகாட்டல் ராம்.
You can prove anything with statistics – புள்ளி விவர இயலைக் கொண்டு உங்களுக்கு வேண்டியதை நிரூபிக்கலாம் என்று சொல்வார்கள்.
ஜெயதி கோஷின் கட்டுரையில் அவர் ஆதாரமாகக் கூறும் ஆராய்ச்சியை நடத்தியது ஆக் ஷன் எய்ட் என்ற அமெரிக்க தன்னார்வ நிறுவனத்தின் இந்திய கிளை.
இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை குஜராத்தில் கண்ஷியாம் ஷா என்பவர் நடத்திய சர்வேக்கள். இரட்டை குவளைகளிலிருந்து, கோவில் அனுமதி வரை 98 விஷயங்களைப் பற்றிய கேள்விகள் கேட்டு “ஆம்” “இல்லை” என்ற பதிலின் அடிப்படையில் முடிவுக்கு வந்த ஆராய்ச்சி.
ஆராய்ச்சி கட்டுரையின் லிங்க்
http://www.rfkcenter.org/files/Untouchability_Report_FINAL_Complete_1.pdf
அதியமான் கொடுத்துள்ள லிங்கில் உள்ள சுவாமிநாதன் அங்கலேஸரியா அய்யரின் கட்டுரையில், ஹார்வர்ட் மற்றும் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உத்திரபிரதேசத்தில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வந்த முடிவு.
ஆராய்ச்சி கட்டுரையின் லிங்க்
http://www.hks.harvard.edu/fs/lpritch/India/Dalit_survey_inequality_EPW.pdf
உண்மை இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி இல்லாமல் சமூக நீதி கிடைக்காது.
//economic activity of lower caste and Dalit groups, and forced them to supply very low wage labour in harsh and usually precarious conditions.//
//அதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் ……பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது.//
தாழ்ந்த சாதியினர் என விளிப்பது சரியா?
இந்த கட்டுரை பார்ப்பனியமும், முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி? என்ற கட்டுரைக்கு நடைமுறை உதாரணமாய் இருக்கிறது. மொழி பெயர்த்த தோழர் சித்திரகுப்தனுக்கு நன்றி.
“உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்!”
vs
“One rupee sanitary napkin scheme”