முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!

அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!

-

அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!
பிசாசு ஆட்சி போய் பேயாட்சி வந்திருக்கிறது!

ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. அஸ்ஸாமில் காங்கிரசே எதிர்பார்க்காத வெற்றி கிடைத்திருக்கிறது. மே. வங்கத்தில் எல்லாரும் எதிர்பார்த்தது போல மம்தா பானர்ஜிக்கு மூன்றில் இரண்டு பங்கு வெற்றி கிடைத்திருக்கிறது. புதுவையில் ரங்கசாமி – அ.தி.மு.க கூட்டணி மயிரிழை வெற்றியும், கேரளத்தில் காங்கிரசு கூட்டணி இரண்டு தொகுதிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இதில் மேற்கு வங்கம் குறித்து தனிச்சிறப்பான கட்டுரை விரைவில் வெளியிடுகிறோம். இங்கு தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து மட்டும் பார்க்கலாம்.

மிழகத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணித்த எக்சிட் போல் கணிப்புகள் கூட இந்த பிரம்மாண்ட வெற்றியை கணிக்க முடியவில்லை. இதுவரை எங்கள் கணிப்புதான் தமிழக தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போனது என்று மார்தட்டிய நக்கீரன் பத்திரிகை இப்போது மூக்குடைபட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக மக்களின் முடிவுகளை துல்லியமாக எவராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பொதுவில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பதை பொதுமக்கள் முதல் பத்திரிகையாளர்கள், சில பதிவர்கள் வரை பேசி வந்தனர். அவர்களும் கூட இந்த அளவு வெற்றியை கணித்திருக்கவில்லை.

இதில் என்.டி.டி.வி ஹிண்டு நிருபர் ஒருவர் டெல்லியில் நடந்த அண்ணா ஹாசாரே போராட்டம் தமிழக வாக்காளர்களின் ஜனநாயக கடமையை எழுப்பி விட்டிருக்கும் என்று கூறினார். இனி இது போன்ற அபத்தங்கள் பல முனைகளிலிருந்தும் வரும். ஜெயலலிதாவின் வெற்றியை சிலாகித்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் குவியலாம்.

தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும் முக்கிய பிரச்சினையாக பார்த்திருந்தனர். ஆனால் உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.

இலவசங்கள், காப்பீட்டு திட்டம் போன்ற சலுகைகளை விட விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தது. வருமானம் உயர்ந்திருப்பதால் விலைவாசியெல்லாம் பிரச்சினையில்லை என்று தி.மு.க அமைச்சர்கள் திமிராக பேசிவந்தனர். அதே போல கல்வி கட்டண உயர்வு, சுயநிதிக் கல்லூரி கட்டணக் கொள்ளை போன்றவை காரணமாக நடுத்தர வர்க்கமும் இந்த ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தது. சன்.டி.வி, கலைஞர் டி.வி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இவர்களது ஏகபோகத்தால் சிறைபட்டிருந்த சினிமா உலகிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.

இத்தகைய கடும் மக்கள் விரோத அரசாங்கத்தை தூக்கியெறிய வைக்குமளவுக்கு இங்கே அ.தி.மு.க எந்த போர்க்குணமிக்க போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அடையாள போராட்டங்களை நடத்தி விட்டு, அம்மா தரும் அறிக்கைகளை வைத்தே அந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. இதில் முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டில் ஓய்விலிருந்த ஜெயலலிதாவின் ‘திறமை, அர்ப்பணிப்பு’ காரணமாக இந்த வெற்றி கிடைக்க வில்லை என்பதை இங்கே வலியுறுத்தி சொல்கிறோம்.

தி.மு.கவின் மீது மக்களுக்கு இருந்த அளவு கடந்த கோபமே இப்படி வெளிப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தத் தேர்தலில் ஜெயா தோற்று தி.மு.க வெற்றி பெற்றிருந்தால், முழு தமிழகத்தையும் மொட்டையடித்திருப்பார்கள். அதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஆக மொத்தம் அ.தி.மு.கவின் வெற்றி என்பது எதிர்மறையில் கிடைத்த ஒன்றாகும். அதில் அவர்களது சொந்த பங்கு எதுவும் இருக்கவில்லை.

சொல்லப்போனால் வைகோவை வெளியேற்றியது, கூட்டணியினரை அவமதிக்கும் வண்ணம் வேட்பாளர் பட்டியலை முந்தி வெளியிட்டது போன்றவற்றால் கெட்ட பெயரைத்தான் அக்கட்சி சம்பாதித்திருந்தது. இருப்பினும் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அவலத்தில் ‘புரட்சித் தலைவி’ மீண்டும் ஆட்சி அமைக்க வருகிறார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரசின் தோல்வி அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், பா.ம.க, வி.சி அனைவரும் மண்ணைக் கவ்வியிருக்கிருக்கிறார்கள். இந்த காரியவாதிகள் தோற்றார்கள் என்று மகிழ்ச்சியடைய முடியாதபடி தே.மு.தி.க எனும் காரியவாதிக் கட்சி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அதாவது இதுதான் எதிர்க்கட்சியாம்.                                அந்த வகையில் தி.மு.கவை எதிர்க்கட்சி என்ற தகுதியில் வைப்பதற்கு கூட மக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்தத் தோல்வி அப்பாவி உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்குமே அன்றி அதே அளவு அதிர்ச்சி தி.மு.க தலைவர்களுக்கு இருக்காது என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளூர் அளவில் அனைத்து தொழில், காண்ட்ராக்டுகளும் அ.தி.மு.கவினருக்கும் கொடுக்கப்பட்டு நடந்தது போல இந்த ஆட்சியிலும் உள்ளூர் தி.மு.க தலைவர்களை அ.தி.மு.கவினர் கவனிப்பார்கள். அந்த வகையில் தி.மு.க தலைவர்களது தொழில்கள் செவ்வனே நடைபெறும். தி.மு.க அமைச்சர்களெல்லாம் தேவையான கப்பத்தை ஜெயா கும்பலுக்கு கட்டி விட்டு தொழிலை தொடர்ந்து நடத்துவார்கள்.

அசுர பலத்தில் வந்திருக்கும் அ.தி.மு.க ஆட்சி எப்படியிருக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஜெயாவின் இரண்டு இருண்ட காலத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.

கருணாநிதி குடும்பத்தின் ஏகபோக தொழில்களை ஓரளவுக்கு கப்பம் வாங்கி அனுமதித்துவிட்டு ஜெயா சசி கும்பலின் ஏகபோகம் ஆரம்பிக்கும். மறுகாலனியாக்கத்தின் கொள்ளையில் பொறுக்கி தின்பதற்கு தற்போது வாய்ப்பு அதிகமென்பதால் இவர்கள் சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவம் வெகுவேகமாக கல்லா கட்டுவார்கள். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலில்லாத வறட்சியை ஐந்து மாதங்களில் கூட தீர்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் போலீசின் நேரடி அதிகார ஆட்சி வரும். ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், ஈழ ஆதரவு முதலியவையெல்லாம் மிரட்டல் கண்காணிப்பில் வைக்கப்படும். இதற்கு மேல் ஜெயலலிதா, சசிகலா என்ன விரும்புகிறார்கள், எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த திகில் நிறைந்த அடக்குமுறைகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர், தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களது நலனுக்காக போராடுவது குதிரைக் கொம்பாக மாற்றப்படும். மீறி போராடினால் கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டுகள் மாறினாலும் ஜெயலலிதா மாறமாட்டார். இது போக துக்ளக் சோ போன்ற குருநாதர்கள் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தின் வேலைத்திட்டங்களெல்லாம் மறைமுகமாகவோ,நேரடியாகவோ கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் பல உண்டு.

மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

 1. இரு திராவிட கட்கிகள் தவிர வேறு வழி இல்லை என்ற தமிழக மனப்பான்மை மேலும் வலுப்பெற்று இருப்பது வருத்ததுக்குரியது.

 2. எல்லோரும் வீட்டில் வேப்பங்கன்றுகளை நட்டி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.(பேய் ஓட்டுவதற்காக)
  இனி சுபா, ராஜேஸ்குமார் நாவலில் உள்ள விருவிருப்பைவிட மிக வேகமாக நாட்கள் நகரும் என்பது உறுதி….

 3. மம்மி ரிடர்ன்ஸ் ‍- வாக்குச் சீட்டால் மம்மியை எழுப்பி விட்டார்கள். இனி, தமிழகத்தையே தன் காலடிக்குள் கொண்டு வர முயற்சிக்கும்!

  மம்மி ரிடர்ன்ஸ் ‍- இப்பொழுது எழுதும் ‘சேலஞ்ச்’ தொடரை நக்கீரன் கோபால் வருடக்கணக்கில் தொடர வேண்டியிருக்கும்

 4. ப்ளாக்கர் கொடுத்த தொழில் நுட்ப ஆப்பால் ஒரு பய புள்ளைங்களும் புதிதாக இந்த தேர்தல் முடிவு குறித்து எழுத முடியவில்லை. நீங்க ராஜபாட்டை மாதிரி தொடங்கி வச்சுருக்கீங்க.

 5. கறவைப் பசுக்கள் இல்லாதபோது காளை மாட்டை இழத் து பால் கறக்க முயற்சிப்பது மனித இயல்பு. தமிழக மக்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள்.

  கடைசியில் ஏமாந்தது மக்களே

 6. Jumping from the frying pan of Karunanithi into the burning fire of Jeyalalitha…!

  அய்யோ பாவம் தமிழ்ர்கள் !

 7. “இந்தத் தோல்வி அப்பாவி உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்குமே அன்றி அதே அளவு அதிர்ச்சி தி.மு.க தலைவர்களுக்கு இருக்காது என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளூர் அளவில் அனைத்து தொழில், காண்ட்ராக்டுகளும் அ.தி.மு.கவினருக்கும் கொடுக்கப்பட்டு நடந்தது போல இந்த ஆட்சியிலும் உள்ளூர் தி.மு.க தலைவர்களை அ.தி.மு.கவினர் கவனிப்பார்கள். அந்த வகையில் தி.மு.க தலைவர்களது தொழில்கள் செவ்வனே நடைபெறும். தி.மு.க அமைச்சர்களெல்லாம் தேவையான கப்பத்தை ஜெயா கும்பலுக்கு கட்டி விட்டு தொழிலை தொடர்ந்து நடத்துவார்கள்”

  நேற்றைய அண்ணன்கள் இன்று தம்பிகளாவதும், நேற்றைய தம்பிகள் இன்று அண்ணன்கள் ஆவதும் அரசியலில் வழக்கமாக நடக்கின்ற ஒன்றுதான். மற்றபடி அண்ணன் தம்பி உறவுகளால் ஊர் கொள்ளை போவதை தடுப்பதற்கு எந்த மாமனும் மச்சானும் வரப்போவதில்லை.

  ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். மணல் கொள்ளையால் ஆற்று நீர்வளம் குன்றிப்போய் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். கட்டடத் தொழில் வளர வேண்டுமானால் மணல் தேவை. மணலை ஆற்றிலிருந்துதான் எடுத்தாக வேண்டும். மணல் கொள்ளையை தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலுக்கு மூடுவிழாதான் நடத்தவேண்டும். ஆறா? கட்டடமா? எதைப்பாதுகாப்பது? வீடு கட்டுபவருக்கு ஆற்றைப்பற்றி கவலையில்லை. வீடுதான் முக்கியம். விவசாயிக்கு வீடு கட்டுபவனைப்பற்றி கவலையில்லை. அவருக்கு நீர்தான் முக்கியம். இருவரையும் காக்க வேண்டுமானால் கட்டடம் கட்ட மணலுக்குப் பதிலாக மாற்று தொழில் நுட்பம் தேவை. அது இப்போதைக்கு யாரிடமும் இல்லை. இந்தச் சூழலில் ஆளும் கட்சியின் மணல் கொள்ளை பற்றி எதிர்கட்சிகள் பேசுவது அவன் மட்டும் சம்பாதிக்கிறானே என்கிற ஆதங்கம்தானோயொழிய ஆற்றைப் பாதுகாக்க அல்ல.

  இதுவரை மணல் கொள்ளை பற்றி கூப்பாடு போட்ட அதிமுக இனி மணல் கொள்ளையை தடுத்துவிடப் போகிறதா? திமுக காரன் கொள்ளையடிப்பதை வேண்டுமானால் தடுக்கலாம். மணல் கொள்ளையையே முழுவதுமாக தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலை இழுத்து மூடவேண்டியதுதான். இது நடக்கப் போவதில்லை. மணலுக்கு மாற்று காணாத வரை மணல் கொள்ளை தொடரத்தான் போகிறது. ஆற்று நீர் வளம் வற்றத்தான் போகிறது. மணல் கொள்ளை கைமாறுமேயொழிய அது ஒருக்காலும் நிற்கப் போவதில்லை.

  இதே நிலைதான் மற்ற தொழில்களிலும் நீடிக்கும்.

  • இது குறித்து விரிவாக பதிவெழுதலாம் என்றால் எனது வலைப்பூ திறக்க மறுக்கிறது. “Blogger is currently unavailable. We apologise for this interruption in service.” இப்படி பதில் வருகிறது.ஏன் எனத் தெரியவில்லை. பிற பதிவர்களுக்கும் இதே நிலைதானா? தெரியப்படுத்தினால் நல்லது.

  • ivargalin veettil thenum palum enrum odum athi micha methiyai ethirpparththu
   nirppavargal makkal. antha makkalukku theriyatha visayam avargal kottam adippathu thangalin varippanam enru avarkalukku eppothu puriyutho appothuthan ethuvume illathavanai puthiya muthalvar puthiya manthirikalai thernthu edukka muyalvargal athuvaraikkum ivargal kollai adikkum ellame oru veettukku ththan pogirathu muthalil ithai purinthu kondu makkal adutha therthalil thangalukkaka ethaiyum ethir parkkamal thangalin urukkul irunthu kondu thangalukkaga ulaippavanaye
   nam namakku sevai seyya vaippalikka vendum

 8. அதிமுக வின் பகிரங்கமான நிர்வாகம், பகிரங்கமான அரசியல், பகிரங்கமான வாழ்க்கை முறை இவைதான் மக்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை ஏற்படுத்தும். பகிரங்கமாக அரசியலில் ஆட்சியில் இயங்கியதால்தான் கனிமொழியையோ, ஸ்டாலினையோ, அழகிரியையோ, விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் பொது மக்களால் முடிந்தது.
  அதிமுக சசிகலாவை துணை முதலமைச்சராக நியமிக்கவேண்டும் . அரசியலில் துணைபுரியும் சசிகலாவினது சொந்தங்களை அமைச்சர்களாக்க வேண்டும் . அப்போதுதான் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களே நேரடியாக பகிரங்கமாக மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

  நல்லையா தயாபரன்

 9. பார்ப்பன எதிர்ப்புக்கு முதல் ஆப்பு. ஒரு பார்ப்பனனாக நான் இந்த வெற்றியை நேசிக்கிறேன். இனி பூனூல் பத்திரிக்கை போன்ற வார்த்தைகளை ..க்கு பின்னால் வைத்து உட்காருவார் ஒரு யோக்கியன்.

  • பார்ப்பன எதிர்ப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. பார்ப்ப்னர்கள் மட்டுமே ஜெயலலிதாவுக்கு ஜாதி ஓட்டுக்கள் அளித்துள்ளர். மற்றவர்கள் அப்படி செய்யவில்லை. தேவையுமில்லை. கருனானிதியின் எதிர்ப்பு ஒட்டுகள் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரணம். சீரிதரின்நேசமே பார்ப்ப்ன துவேசத்துக்கு வழிவகுக்கும். சிர்தர்கள் இருக்கும் வரை பார்ப்பன எதிர்ப்பு இருக்கும் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும்.

   ஒன்று மட்டும் சிரிதர் சொன்னதைல் சரி. பார்ப்ப்ன ஊடகங்களை இனி ஐந்தாண்டுகள் ஆரும் ஜாதிவாரியாகப்பார்க்கமாட்டரர். அவைகளும் செய்யா. ஏனெனில், வந்திருப்பவர் பார்ப்பன்ர். ஏன் வசைமாறி பொழிய வேண்டும் அவர் மீது பார்ப்பன் ஊடகங்கள் ?

   பார்ப்ப்னருக்கு ஏதாவது செய்வாரா என்று சிரிதர் எதிர்நோக்கலாம். அதற்குத்தானே ஓட்டுபோட்டார்கள் பார்ப்பனர்கள்

   எ.டு.

   சிரிரங்கத்து ஐயங்கார்கள் வாக்குகள் 60000. இதைப்பெற ஜெ கொடுத்த வாக்குறிது என்னவென்றால், கோயிலைச்சுற்றி கோயிலுக்குச் சொந்தமான் வீடுகளில் வசிக்கும் ஐயங்கார்களுக்கு அவ்வீடுகள் உடமையாக்கப்படும். அனைவருக்கும் மெத்த மகிழ்ச்சி.

   ஜெயித்து விட்டார். அவர்களுக்கு வீடுகள் கிடைக்குமா ? கிடைத்தால் சிரிதர், நான் பார்ப்ப்னனாகா இருந்து கண்டு மகிழ்கிறேன் எனச் சொல்லலாம்.

   நானும் மகிழ்கிறேன். ஏனெனில் கோயிலில் உள்ளெ உள்ள கழிப்பறை தூயமைப்படுத்தும் சக்கிலியருக்கு வீடுகள் கிடைக்கா. அவர்களுக்கெதுக்க, அவர்கள் ரோட்டோரக்தில் படுத்து காலையில் கோயிலுக்கு வந்து கழுவி விடுவார்கள். பாப்பனருக்கல்ல்வா வீடுகள் தேவை !

   அவர்கள் சேவை நாட்டுக்குத் தேவை.

   இவர்கள் சேவை பார்ப்ப்னர்கள் வீட்டுக் கக்கூசுகளுக்குத் தேவை.

   இல்லையா சிர்தர் ?

   • நன்றி வினவு, எனது பதிலை நிராகரித்ததற்க்கு.

    இவரை ஜோ மலம் என்று மட்டும் விளிக்க அனுமதியுங்கள்.

    ஜோ மலம், தங்கள் திருச்சபை கக்கூசுகள் மற்றும் தங்கள் வீட்டு கக்கூசை யார் கழுவுகிறார்களோ அவர்கள் தான் எங்கள் வீட்டு கக்கூசையும் கழுவுகிறார்கள். அவர்கள் சேவையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படி தான் நாங்களும் பார்க்கிறோம்.

    மேலும் எங்களுக்கு யாருடைய தயவும் தேவை இல்லை. செய்யும் தவறுகளை எங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு செய்யும் மாயை இனி இருக்காது என்பது தான் எங்கள் வெற்றி களிப்புக்கு காரணம்.

   • ஜோ (அ)மலன்(ம்), தங்கள் திருச்சபை கக்கூசுகள் மற்றும் தங்கள் வீட்டு கக்கூசை யார் கழுவுகிறார்களோ அவர்கள் தான் எங்கள் வீட்டு கக்கூசையும் கழுவுகிறார்கள். அவர்கள் சேவையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படி தான் நாங்களும் பார்க்கிறோம்.

    மேலும் எங்களுக்கு யாருடைய தயவும் தேவை இல்லை. செய்யும் தவறுகளை எங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு செய்யும் மாயை இனி இருக்காது என்பது தான் எங்கள் வெற்றி களிப்புக்கு காரணம்.

    • நான் கிருத்துவன் அல்ல. பெயரை வைத்து சொல்லமுடியாது. இணையத்தில் தம் அடையாளம் காட்டப்படவேண்டும் என்ற கட்டாயமல்ல. என் பெயரை மலம் என்று எழுதினால் அதை அள்ளிப்போடும்படி நான் எழுதுவேன். இங்கு நாகரிகமாகத்தான் எழுதவேண்டும். Give and take respect.. You will face a serious tongue lashing from me if you trespass decency. Take care what you write.

     இங்கு எழுதும் எந்த பின்னூட்டக்காரரும் தம் சாதியைச் சொன்னாரா ? Only you said it. தான் பார்ப்ப்னன் எனவே ஜெயல்லிதாவைன் வெற்றியைக்கொண்டாடுகிறேன் என்று சொல்வது ஒரு ஈனத்தனமான செயல்.

     நான் எழுதிய சம்பாசனையில் அப்பெண் என்ன சொன்னார் ? ஜெக்குப்போட்டோம் ஓட்டு அவர் பார்ப்ப்னர் என்றா சொன்னார்?

     சிரிரங்கத்தில் பார்ப்ப்னரல்லாத வாக்காளர்கள் ஆயிரமாயிரம். அவர்கள் போட்டதனால்தான் ஜெ வென்றார். வெறும் 60000 ஐயங்கார்கள் ஓட்டுகளினால்ல.

     இந்த பார்ப்பனரல்லா சிரிரங்கத்து மக்கள் ஜெக்கு எதற்கு ஓட்டு போட்டார்கள்? பவர் கட்டை வராமல் செய்வார்; விலைவாசியைக் குறைப்பார். அராஜ வாழ்க்கையை ஓட வைப்பார் என்றுதான் போட்டார்கள்.

     பார்ப்பன்ர்கள் எதற்காக போட்டார்கள் ? ஜெயலலிதா பார்ப்ப்னர் எனவே அவருக்குத்தான் போட வேண்டும் என்றே.

     அப்படி அவர்கள் செய்வார்கள். பார்ப்ப்னர்கள் தம் ஜாதிப்பற்றை என்றும் விட்டுக்கொடுக்கமாட்டர்கள் என்று தெரிந்துதானே சிரிரங்கத்துக்கு ஜெ ஓடினார். இல்லை என்று சிரிதரால் சொல்ல முடியுமா ?

     மற்ற மக்கள் எவரும் ஜாதிஅடைப்படையில் ஓட்டு போடவில்லை ? அதிமுகவை கூட்டணியாகக்கொண்ட ஜாதி வேட்பாளர் வென்றனர். ஜாதிக்காக அல்ல. கூட்டணிக்காக. கருனானிதியை விரட்ட வேண்டும் என்று.

     ஆனால் பார்ப்ப்னர் நிலை என்ன ? என் ஜாதி ; என் உலகம்; என் வீடு ! உமக்கு இச்சாதிப்பற்று இருந்தால், பிற் மக்களை விட கீழே போய்விட்டீர் ஜனநாயகத்தில்.

     நினைவிருக்கட்டும். ஜெயை பார்ப்பனர்கள் அவர் ஒரு பார்ப்ப்னத்தி என்பதற்காகவே ஆதரவு தருகின்றனர்.

     இதை எவரேனும் மறுத்தால் அது நலம்.

     கேட்ட கேள்விக்குப்பதில் பார்ப்பனர்கள் எதற்காக ஜெயை விரும்புகிறார்க்ள்.

     You are writing ‘we’. U cant associate urself with an average AIADMK worker. An average AIADMK worker does not see her as a paarppanar. He works for her because he may have captivated by her style of leadership; and or, perhaps he has a strong hatred of Muka.

     But you? Only because she is your caste.

     That is why you told here ‘I am a parpananr. I rejoice in Je’s victory”

     • இங்கு எழுதும் எந்த பின்னூட்டக்காரரும் தம் சாதியைச் சொல்லவில்லை ஆனால் பார்பனனை எந்த சாதியினாராயினும் அவனை கண்டபடி அசிங்கமாக பேசலாம் அதுதான் வினவில் இருக்கும் நியதி.

      இந்த பார்ப்பனரல்லா சிரிரங்கத்து மக்கள் ஜெக்கு எதற்கு ஓட்டு போட்டார்கள்? பவர் கட்டை வராமல் செய்வார்; விலைவாசியைக் குறைப்பார். அராஜ வாழ்க்கையை ஓட வைப்பார் என்றுதான் போட்டார்கள்.அதே நம்பிக்கையில்தான் பார்ப்பன ஐயங்கார்களும் போட்டார்கள். திருச்சில இருக்கிற பார்ப்பனனும், சென்னையில் இருக்கும் பார்பனனும் பார்பனன் அல்லாதவர்களுக்கு ஓட்டு போட்டார்களோ அப்படித்தான். வன்னியருக்கு, நாடருக்கு, ….இருப்பதுப்போல் பார்பனருக்கு ஜாதி கட்சி கிடையாது. பி.ஜே.பி க்கூட ஒரு பார்ப்பன வேட்பாளரை ஸ்ரீரங்கத்தில் நிறுத்தியது ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைக்கவில்லையே அங்குள்ள பார்ப்பனர்கள். காரணம் அவர்களுக்கு இருக்கும் சமுதாய விழிப்புணர்வுதான்.

      இந்த பின்னூட்டத்திற்க்கு என்னென்ன திட்டு விழும் என்று தெரியும். Start the music.

 10. then you are all saying the people are so dumb????
  then why any of you couldn’t have run for Office? people would have voted to you “Truthful People Servents” right?
  why didn’t you all want to set up an example???
  if people wouldn’t vote for you, that means you are worse than JJ and MK in their view?????????????????

 11. you are hundred percent correct. we too share this opinion. we cannot be happy about the result, especially giving absolute majority to person such as Jaya is dangerous. people who believe in electoral politics should ponder over this. ours is a cursed land.

 12. பார்ப்பணர்கள் சூழ்ச்சியினாலும், கம்யூனிஸ்ட் தொழர்கள் காலை வாரியதாலும் தி மு க தோற்றது…….பார்ப்பன் ரசினியையும் சிவப்புத் தோல் குஸ்பூவயும்நம்பியதற்கு தி மு கவுக்கு பாடம்…

  எல்லாரும் போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைச்சு முன்னேறப் பாருங்க.. வித்தையெல்லாம் முடிந்தது…. வினவுக்குத் தான் கொண்டாட்டம்.. நிரைய போராட்டம் பண்ணலாம்…

 13. last time the people gave a divided verdict only but DMK terrorised its allies by showing the parliamentary strength and made ugly dances in the State. Considering all this we have to welcome this massive victory. Definitely Jayalalithaa will give a better governance than the previous regime (i don’t want to say that name again) and it is time to reap for all the bad that was done by previous regime’s leader.

  • That s reflected in the dialogue I hav just posted here at 9.31 pm. The voters hoped that Jeyalalitha will undo the regime of excessive price rise and long duration power cuts. It is for future to tell whether the hope gets realised or belied. If belieed, she will b voted out of power next time, unless she herself votes her out to bring mid term elections. Past experience shows that Jeyalalitha squanders the good will of the people soon.

   I welcome the landslide victor to anti karunanith force for the reasons:

   1. The victory is landslide and not a fractured veridct. Decisively people have told Karunanith to go, not coz they wanted Jeyalaitha but coz of his governance and somewhat his excessive care for the welfare of his family.

   2. Landslide victory will usher in a stable govt – a prospect that s denied to Kerala, where the thin lead of Cong will be jittery. Anytime they may fall. In TN, for 5 years, poliicies can be framed w/o fear of failure, unless, as I said, Jeya spoils everythins with her ill nature and idiocy.

   3. Bidding Karunanith out is a poetic justice for his selfish non support to SL Tamils which led to the genocide of abt 60k people. He ought to pay for that sin.

   4. For the common principle of Indian politics i.e You have earned and it is my turn to earn. So, the turn comes for Sasikala and co to earn now. It s for earning they need power in the first place. Why only Karunanithi and his family ? Why not Jeya and Sasi? Hence, I welcome the victory.

   5. The massive corruption in spectrum issue and the brazenness of the politicians involved in facing the aftermath.

   6 Karunanithi had his day. His exile from politics due to his age is long over due. Himself not stepping down, we must force him out. The landslide victory has achieved that.

 14. புதுவையில மயிரிழை வெற்றி இல்லைங்க…… அத முதல்ல மாத்துங்க … 15/30 சிங்கம் சிங்கிளா ஜெயிச்சது.

 15. மே.வங்கத்தில் கம்யுனிசத்திற்கு சவுக்கடி.ஜனநாயகம் இறுதியில் வென்றது…காரணம் என்ன?

  • காரணம் என்ன?

   தோற்றது போலி கம்யூனிசம், வென்றது போலி ஜனநாயகம்!

    • ஆமா ஸ்ரீதர் = பாப்பார மென்டல்

     வினவு ஒடனே டெலிட் பண்ணிடாதீங்க, ”ஒரு பார்ப்பனனாக நான் இந்த வெற்றியை நேசிக்கிறேன்.” அப்படின்னு ஸ்ரீதர் மேல சொல்லியிருப்பதை பாருங்க

    • தோழரே நானும் உம்மைப்போல சிறு வயதில்இருந்து ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் படித்து கம்யுனிசக் கொள்கையை கடைப்பிடித்து வந்தேன்.இன்றும் எனக்கு கம்யுனிசம் எனக்கு பிடிக்கும்.ஆனால் அது என் காந்தியத்தை விட பெரியது ஓன்றும் இல்லை.

     எல்லாவற்றுக்கும் கம்யுனிசமும் தீர்வாகாது.முதலாளித்துவவும் தீர்வாகாது.உங்களிக்கு சந்தேகம் இருந்தால் வினவு.காம் போன்ற தளங்கள் ரஷ்யாவிலே,சீனாவிலே, செயல்பட முடியாது.கருத்துகளை சுகந்திரமாக செல்ல முடியாது. அதுபோல் விக்கிலீக் போன்ற தளங்கள் அமெரிக்காவில் செயல்பட முடியாது.ஏன் என்று சொல்ல முடுயுமா?

     காந்தி வழியில் நடப்போம்.உண்மையாய் இருப்போம்.பிறரை அன்பு செய்வோம்.

     • கல்நெஞ்சம்//
      உங்களுக்கு கம்யுனிசம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.பின்பு கம்யுனிசத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்கிறீர்கள்.காந்தி ஒரு ஆங்கிலேயரின் அடிமை. அகிம்சை என்பதின் பெயரில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி மக்களை ஆங்கிலேயனின் குண்டுக்கு பலி ஆக்கியவன்.காந்திக்கும்,கம்யுனிசத்துக்கும் வித்தியாசம் தெரியாத, சுயநலத்தை விட்டு வெளியே வராத மனிதராக தான் தெரிகிறது உங்களுடைய எழுத்து.வரலாற்றின் பெரும்பகுதி வலிமையுள்ளவர்களால் தான் எழுதப்பட்டது.கொஞ்சம் உரிமைக்காக போராடியவர்களின் வரலாற்றை படித்து காந்திக்கொள்கை நல்லதா இல்லை சாக்கடையில் வீச வேண்டியதா என்று சொல்லுங்கள்.

      • மே.வங்கத்தில் 34 வருடங்களுக்குப் பிறகு ஜனநாயகம் மலர்ந்துள்ளது.அங்கு கம்யுனிசம் என்ன கிழித்தது தெரியுமா?
       நான் மே.வங்கத்தில் இரு மாதங்கள் தங்க நேரிட்டது.அதன் பின் கம்யுனிசத்தின் மீதன பற்று நீங்கியது.

       ஏன் தெரியுமா?

       இம்மாநிலத்தில் இன்றும் ஐந்து பைசா,பத்து பைசா நாணயங்கள் செல்லுபடியாகும். ஒரு ரூபாய்க்கு வைரார அரிசி மாவு சாப்பிடலாம்.
       இயற்கை வளங்களை அபகரிக்கும் அந்நிய நாடுகளுக்கு கழுவிவிடும் வேலையைத்தான் கம்யுனிசம் 34 வருடங்களாக செய்து வந்துள்ளது.
       எதிர்த்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்,எதிர்பார்த்தவர்கள் பணம் பார்த்தனர்.போராடியவர்கள் நக்சல் என பெயர் பெயர் பெற்றார்கள்.

       நீங்கள் வேண்டுமானால் செல்லிக்கொள்ளலாம். இவர்கள் போலிக் கம்யுனிசவாதிகள் என கூறலாம்.அப்படியென்றால் அவர்களை கட்சியில் இருந்து
       நீக்கலாமே. ரஸ்யாவைப் போல் பால்காரி,டிரக்டர் ஓட்டும் இளைஞன் போன்றவர்களை போல் மே.வங்கத்தில் வைத்து இருக்கலாமோ.

       ஏன் கம்யுனிசத்தால் முடிய வில்லை? நந்தன் அவர்கள் காந்தியை ஆங்கிலேயரின் அடிமை என்கிறார். அப்படியென்றால் நீங்கள் மே.வங்கத்தில்
       கனி வளங்களை அள்ளிக்கொடுத்த நீங்கள் யார்?

       மே.வங்கத்தை பற்றி நான் சென்ன செய்திகளை நம்ப முடியவில்லையெனில். அங்கு நேரடியாக செல்லுங்கள்.கண்களால் காணுங்கள் கம்யுனிசத்தின்
       கண்றாவிகளை….பத்திரிக்கைகள்,டிவி போன்றவற்றை நம்ப வேண்டாம்.ஏன் என்னைக்கூட நம்ப வேண்டாம்.நீங்கள் நேரடியாக சென்று கம்யுனிசம்
       என்ன செய்துள்ளது என பார்த்து சொல்லுங்கள்.

       இன்னும் சில..

       try google search or wikipedia
       கம்யுனிச சீனாவில் மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிய பத்தாயிரம் மாணவர்களை கொன்றது ஏன்?
       Tinnaman or tankman from china
       சீனாவில் இன்றும் இணையத்தில் கருத்துக்கள் பரிமாற தடையுள்ளது.ஏன்?
       Chinese firewall
       கியூபாவில் காஸ்ட்ரோ தனக்கு பிறகு யாரை நியமித்தார்?
       செல்லமுடியுமா தோழர்களோ

       காந்தி நமக்கு பெற்று தந்தது.ஒட்டு,பேச்சு,கருத்து உரிமைகள், தான். அதனால்தான் வினவு தளம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.கம்யுனிச சீனாவிலோ,வட கொரியாவிலோ செயல்படமுடியாது.
       ஜனநாயகத்திற்காக போராடிய அனைத்து தியாகிகளுக்கு இது சமர்பணம்.

       • திரு. கல்நெஞ்சம் அவர்களே, முதலில் உங்களுக்கு கம்யூனிசத்தின் மேல் பற்று இருந்ததாகவும் மே.வங்கத்தில் இரு மாதங்கள் இருந்த பிறகு அந்த பற்று நீங்கியதாகவும் கூறியுள்ளீர்கள். மே.வங்கத்தைப் பார்த்து உங்களுக்கு கம்யூனிசத்தின் மேல் பற்று போய் விட்டதாக நீங்கள் கூறியுள்ளதில் இருந்தே உங்கள் கம்யூனிச பற்று எவ்வகைப் பட்டது என்று புலப்படுகிறது. சரி இனி விசயத்திற்கு வருவோம்.
        1.மே.வ வில் 5,10 பைசா இருந்தால் என்ன பிரச்சனை.நல்லதுதானே.
        2.34 வருடங்களாக அந்நிய நாடுகளுக்கு கால் கலுவி விடுவதாகவும் அவர்களை எதிர்த்து போராடுபவர்கள் நக்சல் எனப் பெயர்பெற்றதாகவும் நீங்கள் உதாராண‌ம் கூற வரும் நிலையில் கூட உங்களால் அதே கம்யூனிச புரட்சிக்காக போராடும் நக்சல்பாரிகளைத்தான் காட்ட முடிகிறதே ஒழிய ஒரு காந்தியவாதியையும் காட்ட முடியவில்லை.
        3.போலிகளை தோலுரிப்பதற்காகத்தான் மாபெரும் தோழர் மாவோ அவர்கள் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் அரசாங்கம் சட்டப்படி அதன் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட முடியாது என்பதால்தான் கலாச்சார புரட்சியை ஆரம்பித்து மக்களே முன்வந்து பார்க்கும் இடங்களில் தட்டிக் கேட்க வழி வகை செய்தார். ஆனால் பிறகு வந்த போலிகளின் பிரச்சாரத்தில் மதிமயங்கி புயலுக்கு முன் உருவாகும் தென்றலில் சுகம் கண்டு மேற்கொண்ட பணியில் மெத்தனமாக இருப்பது போல் மக்கள் கலாச்சாரப் புரட்சியை கைவிட்டதன் விளைவே முதலாளித்துவ மீட்சியும் இன்று அங்கே தொழிலாளர் அநுபவிக்கும் துயரத்தின் காரணமாகும். இருப்பினும் சரியான வழியில் சென்று கொண்டிருந்த 20 வருடங்களிலேயே அந்நாடுகள் பெற்ற வளர்ச்சியை முதலாளித்துவவாதிகள் மூடி மறைக்க முயலுவதைப் போலவே நீங்களும் அதைப் குறிப்பிடவில்லை. இங்கேதான் நீங்கள் கம்யூனிசத்தின் மேல் பற்றாக இருந்ததாக கூறுவது சந்தேகத்திற்கு இடந்தருகிறது.

        4.சந்தேகம் இருந்தால் நேரடியாக எங்களை மே.வ. விற்கு போய் பார்க்க சொல்கிறீர்கள். சந்தேகமே இல்லாமல் நாங்களும் அவர்களை அம்பலப்படுத்தி எங்கள் கம்யூனிசக் கடமையை ஆற்றியது உங்களுக்கு தெரிந்து இருந்தும் மறைக்க முயலுவதின் நோக்கம்தான் முதல் வரியிலேயே மார்க்சிஷ்களை கம்யூனிட்கள் என்று விமர்சனம் சொல்வத்கு பயன்படுத்திக் கொண்ட நீங்கள்
        இரண்டாவது பத்தியில் அவர்களை போலிகள் என்று நாங்கள் சொல்வதையும் சுட்டிக்காட்டி அதை ஏற்காமல் சந்தேகத்தின் தீர்த்துக் கொள்ள எங்களையே மே.வ.விற்கு போகச் சொல்கிறீர்கள். இப்படி வார்த்தைகள் முன் பின் தெரியாமல் குளறுபடியாவத‌ற்கு காரணம் என்ன என்பது உங்கள் காந்தியத்திற்குத்தான் தெரியும்.

        5.ஒரு தனிப்பட்ட கேள்வி, காந்தியம் என்றால்தான் என்ன. கொஞ்சம் விளக்கிக் கூறினால் எனக்கும் எங்கள் தோழர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதன் பொருளாதார திட்டம்தான் என்னவென்று(தயவு செய்து ஒருவருக்கொருவர் அன்பு செய்வது என்று கூறிவிடாதீர்கள், அதை இன்றைய நித்யானந்தாவும் தான் கூறிவருகிறார்) தெரியாமல் எங்கள் தோழர்கள் காந்தியத்திற்காக வாதாடி எப்போதாவது மறுமொழியிடும் ஏதாவது ஒரு நபரிடம் விவாதிக்க முடியாமல் மிகவும் அவதியுறுகிறார்கள். எங்கள் தோழர்களின் அவதியை தீர்பதற்கு காந்தியம் பேசும் கல்ல்ல்ல் நெஞ்சத்தை விரைவில் எதிபார்த்து காத்திருக்கிறோம்.

        • தோழரே…அப்படியே இதுக்கு கொஞ்சம் பதில் அளிக்கவும்.
         கம்யுனிச சீனாவில் மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிய பத்தாயிரம் மாணவர்களை கொன்றது ஏன்?
         Tinnaman or tankman from china
         சீனாவில் இன்றும் இணையத்தில் கருத்துக்கள் பரிமாற தடையுள்ளது.ஏன்?
         Chinese firewall
         கியூபாவில் காஸ்ட்ரோ தனக்கு பிறகு யாரை நியமித்தார்?
         செல்லமுடியுமா தோழர்களோ

         • திடீர்யென்று international politicsக்கு போறேன் தப்பா நினைக்காதிங்க..அங்கேயும் இங்கேயும் ஓன்னாதான் செய்யுராங்க.

          தமிழ்நாட்டில் ஓரு பிச்சைக்காரன் கூட வாங்காத 5,10 பைசா,வங்கிகள் கூட வாங்காத சில்லறைக்காசு இன்று வங்கத்தில் செல்லுபடுகிறது.
          கேட்டால் அதற்கென என்று கம்யுனிசத்திற்கே உரிய மெத்தன பதில் வருகிறது.
          பின்குறிப்பு.
          தயவுசெய்து தமிழ் நாட்டு பிச்சைக்கார்களுக்கு 5,10 பைசா கொடுத்து நீங்கள் அவமானம் அடைய வேண்டாம்.

          சரி தோழரே.
          இந்தியாவில் உங்களுக்கு நன்கொடை அல்லது உதவிபுரியும் கம்யுனிச தொழில் அதிபர்கள்
          யாரொனும் கம்யுனிசக் கொள்கையைப் பின்பற்றி அதன் படி தனது தொழிலை நடத்துகிறார்களா?

          முதலில் கம்யுனிசக் கொள்கைப்படி ஓரு நிறுவனத்தை அல்லது ஓர் கூட்டுறவு பண்ணையை இந்தியாவில் அமைத்து சாதித்துக்காட்டுங்கள்.
          முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் இது போன்று 100க்கு மேல் நிறுவனங்கள்,பண்ணைகள் இயங்கிவருகிறது.
          ஆதாரம்.capitaliam-a love story documentry by michael moore

          காந்தியம் பற்றி அறிய சத்திய சோதனை,மார்ட்டின் லூதர் கிங்,மண்டோலா ஆகியோர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கவும்.

          • முதலில் உங்கள் கருத்துக்களில் இருந்துதான் நான் கேள்வி கேட்டுள்ளேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சும்மா ரஷ்யா,சீனா என்று கேட்டு திசை திருப்ப நினைப்பது உங்களுக்கே ஓவராக தெரியவில்லை. ஒரு கேள்விக்கு இன்னொரு எதிர்கேள்வி பதில் ஆகாது என்பது உண்மை. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிடுங்கள் பிறகு மற்றவைகளைப் பற்றி பேசலாம்

          • சத்திய சோதனையில் உண்மை, அன்பு ஆகியவகளைப் பொருத்து தான் பெற்ற அனுபவத்தில் இருந்து தண்ணுடைய உள்ளுணர்வைப் பற்றித்தான் உள்ளதே தவிர குறிப்பிட்ட அளவில் கூட குறைந்தபட்சம் அந்த காலத்தின் பொருளாதார தேவகளுக்கு கூட ஒரு திட்டத்தையோ தீர்வையோ காணமுடியாது. ராட்டையை சுற்றுவது வேண்டுமாணாலும் அதனுடைய பொருளாதார திட்டமாக கூறலாம். லூதர்கிங்,மண்டெலா ஆகியோருடைய புத்தகங்களும் இதை ஒட்டித்தான் இருக்கும். மண்டெலா தன்னிடம் நடைமுறைப் படுத்துவதற்கென்று ஒரு முன்மாதிரியான ஒரு புதுவகைப்பட்ட பொருளாதார திட்டம் இல்லை என்பதால் தான் முன்பிருந்த ஐரோபியர்களின் பொருளாதார மாதிரியை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

           நான் உங்களிடம் கேட்ட கேள்வி

           \\34 வருடங்களாக அந்நிய நாடுகளுக்கு கால் கலுவி விடுவதாகவும் அவர்களை எதிர்த்து போராடுபவர்கள் நக்சல் எனப் பெயர்பெற்றதாகவும் நீங்கள் உதாராண‌ம் கூற வரும் நிலையில் கூட உங்களால் அதே கம்யூனிச புரட்சிக்காக போராடும் நக்சல்பாரிகளைத்தான் காட்ட முடிகிறதே ஒழிய ஒரு காந்தியவாதியையும் காட்ட முடியவில்லை.
           3.போலிகளை தோலுரிப்பதற்காகத்தான் மாபெரும் தோழர் மாவோ அவர்கள் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் அரசாங்கம் சட்டப்படி அதன் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட முடியாது என்பதால்தான் கலாச்சார புரட்சியை ஆரம்பித்து மக்களே முன்வந்து பார்க்கும் இடங்களில் தட்டிக் கேட்க வழி வகை செய்தார். ஆனால் பிறகு வந்த போலிகளின் பிரச்சாரத்தில் மதிமயங்கி புயலுக்கு முன் உருவாகும் தென்றலில் சுகம் கண்டு மேற்கொண்ட பணியில் மெத்தனமாக இருப்பது போல் மக்கள் கலாச்சாரப் புரட்சியை கைவிட்டதன் விளைவே முதலாளித்துவ மீட்சியும் இன்று அங்கே தொழிலாளர் அநுபவிக்கும் துயரத்தின் காரணமாகும். இருப்பினும் சரியான வழியில் சென்று கொண்டிருந்த 20 வருடங்களிலேயே அந்நாடுகள் பெற்ற வளர்ச்சியை முதலாளித்துவவாதிகள் மூடி மறைக்க முயலுவதைப் போலவே நீங்களும் அதைப் குறிப்பிடவில்லை. இங்கேதான் நீங்கள் கம்யூனிசத்தின் மேல் பற்றாக இருந்ததாக கூறுவது சந்தேகத்திற்கு இடந்தருகிறது.

           4.சந்தேகம் இருந்தால் நேரடியாக எங்களை மே.வ. விற்கு போய் பார்க்க சொல்கிறீர்கள். சந்தேகமே இல்லாமல் நாங்களும் அவர்களை அம்பலப்படுத்தி எங்கள் கம்யூனிசக் கடமையை ஆற்றியது உங்களுக்கு தெரிந்து இருந்தும் மறைக்க முயலுவதின் நோக்கம்தான் முதல் வரியிலேயே மார்க்சிஷ்களை கம்யூனிட்கள் என்று விமர்சனம் சொல்வத்கு பயன்படுத்திக் கொண்ட நீங்கள்
           இரண்டாவது பத்தியில் அவர்களை போலிகள் என்று நாங்கள் சொல்வதையும் சுட்டிக்காட்டி அதை ஏற்காமல் சந்தேகத்தின் தீர்த்துக் கொள்ள எங்களையே மே.வ.விற்கு போகச் சொல்கிறீர்கள். இப்படி வார்த்தைகள் முன் பின் தெரியாமல் குளறுபடியாவத‌ற்கு காரணம் என்ன என்பது உங்கள் காந்தியத்திற்குத்தான் தெரியும்.

           5.ஒரு தனிப்பட்ட கேள்வி, காந்தியம் என்றால்தான் என்ன. கொஞ்சம் விளக்கிக் கூறினால் எனக்கும் எங்கள் தோழர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதன் பொருளாதார திட்டம்தான் என்ன//

     • ///காந்தி வழியில் நடப்போம்.உண்மையாய் இருப்போம்.பிறரை அன்பு செய்வோம்.///

      திருத்திக் கொள்ளுங்கள். “காந்தி வழியில் நடப்போம். உண்மையான தேசப்பற்றாளர்களைக் காட்டிக் கொடுப்போம் . நாட்டை கூட்டிக்கொடுப்போம்”நு சொன்னா சரியா இருக்கும்.

      • மே.வங்கத்தில் காந்தியவாதிகளை அதாவது நல்லவற்றை செய்பவர்களை கொல்வதுதானே கம்யூனிசத்தின் குலதொழில்.
       மாணவர்களிடம் புரட்சிக்கருத்துக்கள் பரப்புவதில் பிரச்சனைகள் இல்லை.ஆனால் ஆயுதம் கொடுத்து மக்களைக் கொன்று ஏன்
       நக்சல்பாரிகளாக மாற்றுவதுதான்.காந்தியம் முரட்டுதனத்தினால் அல்ல. மூளையைப் பயன்படுத்துவது

       வாய்கிழிய பேசும் உங்கள் கட்சிக்காரர்கள் ஏன் கம்யுனிசக் கொள்கைப்படி ஓரு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
       கொடுத்து கம்யுனிசத்தை இந்தியாவில் நிறுபிக்கலாம்.FOLLOW UP MY ANSWERS

       ரஷ்யாவில் முதலில் அறிமுகப்படுத்திய விவசாயக்கொள்கையால் பல்லாயிரக்கணக்கோர் மாண்டனர் வரலாற்றை புரட்டவும்.முதல் இருபது வருடங்களில் ஓன்றும் கிழிக்கவில்லை.
       உலகப்போர்க்குப் பின் cold warல் முன்னேற்றம் அடைந்ததுதான்.

       I WILL GIVE YOU THE PENDING ANSWERS ASAP.

       P.S
       கெஞ்சம் மேலே கேட்ட international politicesக்கு பதில் அளிக்கவும்.பின் இதற்கு பதில் அள்ளிக்கவும்.

 16. //தி.மு.கவின் மீது மக்களுக்கு இருந்த அளவு கடந்த கோபமே இப்படி வெளிப்பட்டிருக்கிறது.//ஜெயலலிதாவும் இதைதான் தனது பேட்டியில் உண்மையை ஒப்புகொண்டிருக்கிறார்.
  //கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.//ஜெயலலிதாவும் இதைதான் தனது பேட்டியில் உண்மையை ஒப்புகொண்டிருக்கிறார் வெடிவெடிப்பதை நிறுத்தசொல்லுங்கள் என்று கடுப்போடு கோபத்தை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் சொல்லும் போது இதை உணர முடிகிறது.http://www.ndtv.com/convergence/ndtv/new/playvideo.aspx?id=199458

 17. இன்று ஒரு அப்பாவி போக்குவரத்துக் கழக அதிகாரி என்னிடம் ஏற்கனவே உயா்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தீர்ப்பின் அடிப்படையில் ஒரு சங்க அங்கீகாரம் என்று சொல்லிக்கொண்டிருக்கிற திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் நிலை இனி என்ன ஆகும் என்றார். நான் உடனே என்ன சார் சாதாரண அரசியல் கூட தெரியாமல் இருக்கிறீர்களே?

  மக்கள் மிகப்பெரியதாக நம்பிக்கொண்டிருக்கிற சிபிஐ நீதிமன்ற நீதிபதியே கனிமொழியின் மீதான தீர்ப்பை ஏன் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்? தமிழக மக்கள் திமுகவிற்கு ஆப்பு வைத்தால் நாம் காப்பு மாட்டுவோம், இல்லையென்றால் லூசுல விடுவோம் என்று தானே? அது மாதிரிதான் சார் எல்லா நீதிபதிகளும். ஏற்கனவே ஒரு சங்க அங்கீகாரம் என்பதை எதிர்த்து அதிமுக தொழிற்சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து நிலுவையிலிருக்கிறது. அந்த வழக்கு இந்த கோடை விடுமுறை முடிந்தவுடன் எழுந்து நின்று ஆடும். அதில் நீதிமான்கள், ஒரு சங்க அங்கீகாரம் செல்லாது என்பார்கள். அது ஒரு பக்கம் இருந்தாலும் நாளையிலிருந்தே அதிகார வர்க்கம் அம்மா சங்கத்துக்காரர்களை பார்த்து ஆடப் போகிறீர்கள். நாளையே கழகங்களில் தொமுச சங்கம் ஒரு கோரிக்கை மனுக் கொடுத்தாக் கூட , தனியா அதிமுக சங்க பொதுச் செயலாளரிடம் கலந்து கொண்டுதானே நடவடிக்கையை துவக்குவீர்கள். இது தான் சார் அரசியல் என்றேன். நேற்று வரை திருச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டிருந்த ஒரு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் (கோனார்) ராஜ கண்ணப்பன் டிரான்ஸ்போர்ட் மினிஸ்டரானா நம்ம சொந்தம்தான் என்கிறாராம் இன்று – ஆக என்றும் அதிகார வர்க்கம் தனிதான், போராளி வர்க்கம் தனிதான்

 18. //உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.//
  மிகவும் சரியான உண்மை.

 19. நான்: உங்க ஊர்ல யார் ஜெயிச்சா ?
  உறவினர் மனைவி: செல்லத்துரை
  நான்: யார் அவர்?
  உ.ம: அவர்தான் சினிமா காப்ளெக்ஸ் ஓனர்
  நான்: பெரிய பணக்காரணச்சே ?
  உ.ம்: ஆமா
  நான்: எந்த கட்சி?
  உ.ம்: ஜெயலலிதா
  நான்: ஏன் ஓட்டு போட்டீர்கள்?
  உ.ம்; ஆமாயா விலைவாசியெல்லாம் ஒரேயடியாப்போச்சு. கரண்டு கட்டு, ஒருநாளைக்கு பத்து மணினேரம்.
  நான்; ஜெயலலிதா மாற்றிவிடுவாரா
  உ.ம்: ஆமா இங்கே வந்தார். பாக்கப்போணோம். எல்லாத்தையும் நான் மாத்ரேன். செய்ஞ்சு காட்டுவேன் என்று வாக்குக்கொடுத்தார். நம்பி ஓட்டுப்போட்ருக்கோம்.

 20. நண்பா அன்னைக்கு அம்மா இருந்தா கூட இதே நிலமை தான் தமிழருக்கு வந்து இருக்கும்
  இந்தயா மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்தின் உதவியோடு தான் சிரிலங்கா அரசு புலிகளை வெற்றி கொண்டது ராஜ பக்ஸவுக்கு பட்டு கம்பலம் போட்டு வரவேற்ப்பு கொடுத்த கத்தாபிக்கு {லிபியா}அங்கே பிரச்சனை என்றவுடன் ஐ நா உதவிக்கு அனுப்பியது போல்
  ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை ?

 21. இந்த தேர்தல் முடிவினால், ஆட்சி தான் கை தான் மாறி இருக்கிறது. இது மக்கள் விரும்பும் மாற்றத்தை தராது. ஆனால் என்ன இந்த மாற்றம் மக்கள் கலைஞர் ஆட்சியை விரும்பவில்லை என்று சொல்ல தேவைப்படுகிறது.

  மிண்டும் ஐந்து வருடத்திற்கு பிறகு DMK-வை நோக்கி நாம் அனைவரும் செல்ல வேண்டிய நிலை வரும்.

 22. So it is antiincumbency vote; with the hope that she will do something to turn over.

  If Muka had taken care to arrest price rise and power cuts, je wdnt have won. His corruption is not the issue among voters.

 23. இதையும் மறக்காதீகள் தமிழ் நாட்டில் அடுத்த பெண் முதல் மந்திரி கணி மொழி தான்.

 24. 2ஜி ஊழல் ராசா, கருணாநிதி, கனிமொழி, ராசாத்தி ஊழல் மற்றபடி அதற்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்புமில்லை என அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்க மக்கள் நினைத்த கொடுமையை என்னவென்று சொல்ல?

 25. தமிழகத்தில் அம்மா ஆட்சி! வங்கத்தில் நக்சல்களின் நிழல் ஆட்சி?

 26. பேயாட்சியோ பிசாசாட்சியோ பிரச்னை இல்ல, செம்புரட்சி மட்டும் வந்துடாம பாத்துக்கணும்னு மக்கள் ரெம்ப தெளிவா இருக்காங்க தோழர். அது தான் தமிழ் மண்ணின் சிறப்பு. நீங்க என்னதான் புரட்சி பேசினாலும் தமிழன் சும்மா காரிதுப்பிட்டு போயிடுவான்.

  ஆனா உங்களுக்கென்ன…கீறல் விழுந்த ரிக்கார்டு நிறைய வெச்சிருக்கீங்க. கச்சேரி ஆரம்பிக்கட்டும்.

 27. நீங்கள் சொன்ன அனைத்தும் இந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமாக நடந்துள்ளது, கருணா 90 சதவீதம் கெட்டவர் என்றால் ஜெயா 30 கெட்டவர்

  • ஜெயா 30 கெட்டவரா! தமிழகத்தில் கடந்த காலத்தில் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்தும், இப்படி சொன்னால், என்ன தான் செய்வது?

 28. ஓட்டு யாருக்கு போடுவது ? இரண்டு கழுதைகளில் எதாவது ஒன்றுக்கு. வேறென்ன தேர்வு ? எல்லா நாடுகளிலும் இதே கதைதான். கோடிக்கணக்கான பணம் இருந்தால் தான்தேர்தலில் போட்டியே போடலாம். சாதாரண ஏழைக்கு முடியுமா ? கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு அதை வெள்ளையாக்குவதற்கு இந்த தேர்தலை பாவிப்பவர்களுக்கே இங்கு போட்டிபோடமுடியும்.
  எமக்கு வேறென்ன செய்ய முடியும் ? இம்முறை பேய்க்கு. அடுத்த முறை பிசாசுக்கு.

  இனி நிமிர்த்தும் நிற்க இயலாது.அம்மாவின் காலில் விழுந்து வணக்கவேண்டும். உடம்பு முறிந்து போடும்! !

 29. யாருக்கு ஓட்டு போடலாம்.எல்லாரும் மோசம்…பொறுக்கிகள்…ஏமாற்றுக்காரர்கள்….சொல்லுங்களேன்..Any choice? Be bold…

 30. ஒசாமா பின்லேடனின் அழிவுதான் ஜெ யின் வெற்றிக்கு காரணம்.
  – ஒபாமா மற்றும் அத்வானி

 31. ஏன்? சீமானால்தான் இந்த வெற்றி என்று கூற கூச்சப்படுகிரீர்கள். 2016சீமான் காலம் !!!!!!!!!

 32. 7 கோடி தமிழர்களில் எவரும் ஜெயலலிதாவை ‘பார்ப்ப்னத்தி’ என்று ஓட்டுப்போடவில்லை. போடாமலுமில்லை. அவர்கள் மனத்தில் இருந்தது கருநானிதிக்கு எதிரான எண்ணம் மட்டுமே.

  ஆனால் தமிழர்களில் பார்ப்ப்னர்கள் மட்டுமே ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று பார்த்தார்கள். சிரிதர் ஒரு எ.டு. அவர்கள் அப்படி பார்ப்பார்கள் தம்மை எனநினைத்துத்தான் ஜெயலலிதா சிரிரங்கத்துக்கு ஓடினார். அவருக்குப் பிறதமிழர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர் ஒரு கருனானிதி எதிர்ப்பு அலை இருக்கிறது என்று எதிர்பாக்கவில்லை. இருந்தால், எங்கேயுமே நின்றிருப்பார்.

  அனைத்து மக்களிலும் மாறுபட்ட ஜாதி சிந்தனை உடையவர்களான பார்ப்பன்ர்கள் மீது துவேசம் வருமா வராதா ? தம் ஜாதிக்கு என்ன செய்வார் என்று எதிர்பார்த்துத்தான் சிரிரங்கம் ஐயங்கார்களின் 600000 ஓட்டுக்கள் விழுந்தன. தமிழக மக்கள் எவரும் இத்தேர்தலில் சாதிவாரியாகப் பிரிந்து தம் ஜாதிக்கு என்ன கிடைக்கும் என்று ஓட்டுப்போடவில்லை என்பதற்கு ஜாதிக்கட்சிகள் மண்ணைக்கவ்வினதிலிருந்து தெரிகிறது.

  கருனானிதியின் ஊழல் ஒரு பேச்சாக மக்கள் எடுத்துக்கொள்ளவில்லை. தம் அன்றாட வாழ்க்கையில் என்ன கஷடங்கள் நேர்ந்தன. அது ஜெயலலிதாவால் நிவிர்த்தி பண்ண முடியும் என்று நம்பிக்கையால் – காரணம் ஜெயவைத் தவிர் வேறு மாற்றில்லை – என்பதால் ஜெ வெற்றி.

  கருனானிதி போனார். பார்ப்பன துவேசம் போயிற்று என்பது போலி எண்ணம்.
  உண்மை என்னவென்றால்,
  எவர் வந்தாலும் போனாலும், பார்ப்பனர்கள் தம் ஜாதியுணர்வை விட மாட்டார்கள் என்பதற்கும்,
  எல்லா மக்களும் ஜாதியுணர்வை விட்டாலும் பார்ப்ப்னர்கள் விடமாட்ட்டார் என்பதற்கும்
  இத்தேர்தல் ஒரு சாட்சி.

  ஜெயலலிதாவை விரும்பினார்கள், திடீரென விகாந்தை விரும்பினார்கள், சரத்குமாரை விரும்பினார்கள் எனவே ஓட்டுபோட்டார்கள் என்பது கற்பனை. கழுதை, குதிரை என்று எதைக்கொண்டு தி.மு.கவிற்கு எதிராகநிறுத்தியிருந்தாலும் மக்கள் ஜெயிக்க வைத்திருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியது இந்த ஆட்சி கிளம்பவேண்டுமென்பதே. எனவேதான் கடைந்தெடுத்த பொறுக்கிகளும், பணமுதலைகளும் ஜெயித்து விட்டார்கள் கருனானிதியை தோற்கடிக்க உதவும் என்பதால்.

  சீமானில் ஈழப்பிரச்சாரம், முல்லைவாய்க்கால் கொலகளுக்கு காரணமானவர்கள் போகவேண்டும் என்றெல்லாம் தமிழக மக்கள்நினைப்பதில்லை என்பதற்கு போன தேர்தல் சாட்சி. அப்போதே அதைச் சட்டை செய்யாதவர்கள் இப்போது சட்டை பண்ணிவிட்டார்களா ?

  எல்லாரும் எம் பிரச்சாரத்தால் தி.மு.கவிற்கும் காஙிரசுக்கும் பாடைகள் கட்டப்பட்டன என்பது, விக்டர் கூகோவின் சொற்களைத்தான்நினைவு படுத்துகிறது:

  வெற்றி என்னும் குழந்தைக்கு நான் தான் தந்தை எனச்சொல்லி ஆயிரம்பேர் ஓடிவந்து குழந்தைக்குச் சொந்தம் கொண்டாடுவார்கள்.
  ஆனால், தோல்வி என்னும் குழந்தை அனாதை. எவரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள்.

  சீமான், ஜெயலலிதா, விகாந்த், வடிவேலு, சரத்குமார், கம்யூனிஸ்டுகள், கருனானிதி, திருமா, ராமதாசு, பிற ஜாதிக்கட்சிகள் என்று அனைவரையும் முட்டாள்கள் எனநிருபித்து
  எமக்கு எது பிடித்ததோ அதைத்தான் செய்வோம் எனக் காட்டி உங்களைவிட நாம் அறிவாளிகள் என தமிழக வாக்காளர்கள் காட்டி விட்டார்கள்.

  இதை வரும்தேர்தல்களிலும் மக்கள் கடைபிடித்தால், அரசியல்வாதிகள் ஏமாற்ற முடியாது. ஜெயலலிதாவுக்கு ஓட்டுபோட்டதனால் அய்யோ பாவம் என்றேன். ஜெயலலிதாவுக்கே தற்போது தெரியும் அய்யோ பாவம் நாமே ஏனென்றால், மக்கள் எதிர்பார்ப்பதை தாம் தராவிட்டால், நாளைக்கு தமக்கு அதோ கதிதான் என்று. தெருக்களில் கொண்டாட்டம், ,வெற்றி முழக்கம் என்றெல்லாம் ஜெயலலிதா போக முடியாது. வெற்றியல்ல இது. ஒரு எச்சரிக்கை.

  • உங்க எச்சரிக்கை ..துடைக்க போய் விட்டது. மீண்டும் குரைக்க வாழ்த்துக்கள்.

   எங்களுக்கும் ஒரு ஆடு/ நாய் வேணும்.

   உங்கள் சூழ்ச்சி பிரச்சாரம் எல்லாம் படிய வில்லை என்ற உடன் இப்படி குரைப்பது நாய் இயலாமை தான், வேறு ஒன்றும் எதிர் பார்க்க முடியாது.

   தங்களுக்கு கை வந்த கலையை தயை கூர்ந்து செய்யுங்கள். It will go where it deserves to go. If it is a constructive critisism it will get the due it should have. or if it is a vomit it will get the phenoyl treatment so that the worms do not affect the people.

   வாழ்த்துக்கள்.

   • நாய் குரைத்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலலது. திருடன் ஓடிப்போய் விடுவான்.

    கோடிக்கணக்கான தமிழர்கள் வாக்குகள் அளித்து ஒருவரை பதவியில் வைத்து இன்னொருவரை விரட்டுகிறார்கள்.

    அவ்வெற்றியை ஏன் எதற்கு பின்னர் என்ன நடக்கும் இது நன்மையா தீமையா என்றெல்லாம் ஆராயத் தெரியாமல், விரும்பாம்ல்.

    ‘நான் பார்ப்ப்னன். எனவே மகிழ்கிறேன் இந்த வெற்றியில் என்பதை நாயின் குரைத்தலுடன் ஒபபிட்டால் அது அப்பிராணிக்குத்தான் அவமானம்.

  • “எவர் வந்தாலும் போனாலும், பார்ப்பனர்கள் தம் ஜாதியுணர்வை விட மாட்டார்கள் என்பதற்கும்,எல்லா மக்களும் ஜாதியுணர்வை விட்டாலும் பார்ப்ப்னர்கள் விடமாட்ட்டார் என்பதற்கும் இத்தேர்தல் ஒரு சாட்சி.”

   நூறு சதவீதம் உண்மை. அதிமுக வெற்றியை இனிப்பு கொடுத்து கொண்டாடிய சில பார்ப்பனர்கள் அதே நேரத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் இரண்டாம் இடம் பெற்றதையும் ஒரு இடத்தில் முப்பதாயித்துக்கும் மேலே வாக்குகள் வாங்கியதையும் பெருமையோடு பசைாற்றுகின்றனர்.

   இந்த உணர்வு எங்கிருந்து வருகிறது?. சாதிய உணர்விலிருந்துதான் வருகிறது. பிற சாதி மக்கள் தமது சொந்த சாதிக்கட்சியை தோற்கடிக்கத் தயங்குவதில்லை. பிற சாதி மக்கள் அநியாயத்தை எதிர்க்கத் தயங்குவதில்லை. ஆனால் வென்றாலும் தோற்றாலும் பார்ப்பனர்களின் வாக்கு முதலில் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக வுக்கு. இரண்டாவதாக பா.ஜ.க. வுக்கு.

   • என்னங்க ஊரான் பண்ணறது, உங்கள மாதிரி ஆட்கள் செய்யறத எல்லாம் செஞ்சுட்டு அதை திசை திருப்ப பார்பனர் என்று சொல்லி தப்பிக்கும் கேடு கெட்ட நிலை இருக்கும் வரை எங்கள் ஜாதியுணர்வை விட மாட்டோம்.

    • ஐயா ஸ்ரீதர் அவர்களே!

     இங்கே நான் சொல்ல வருவது சாதிய உணர்வைத்தான். இது எங்கிருந்து வந்தது? எதனால் இன்னமும் தொடர்ந்து நீடிக்கிறது? இதன் பின்னணியைப் பார்க்காமல் எல்லோரையும் குற்றம் சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது.

     உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற எண்ணம் சாதிய சிந்தனை உள்ளவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. ஐயங்காரைவிட ஐயர் தாழ்ந்தவர், ஐயரைவிட முதலியார் தாழ்ந்தவர், முதலியாரைவிட வன்னியர் தாழ்தவர், வன்னியரைவிட பறையர் தாழ்ந்தவர், பறையரைவிட அருந்ததியர் தாழ்ந்தவர். இப்படி ஒவ்வொரு சாதிகளுக்குள்ளும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இப்படி ஏற்றத் தாழ்வு பார்க்கும் சிந்தனைப் போக்கிற்குப் பெயர்தான் பார்ப்பனியம். இது பார்ப்பனர்களால் தொடங்கி வைக்கப்பட்டதால்தான் இதற்கு பார்ப்பனியம் என்று பெயர் வந்தது. இன்று பிறப்பால் ஏற்றத் தாழ்வை கடைபிடிக்கிற அனைவருமே பார்ப்பனியவாதிகள்தான்.

     சாதிய மனப்பாண்மை உள்ளவர்கள் ஒரு குழுசாக, அணியாக இருந்து கொண்டு அடுத்தவர்களை மட்டம் தட்டுவதில் இன்றும்கூட முன்னணியில் இருப்பவர்கள் ஐயங்கார்களும் ஐயர்களும்தான். இவர்கள் கற்றுக் கொடுத்ததைத்தான் பிற சாதியினர் கடைபிடிக்கின்றனர். ஒவ்வொருவனும் தனது சொந்த சாதிக்காரனுக்கு ஆதரவாக செயல்படும் மணப்பான்மையை வளர்த்துவிட்டவர்களும் ஐயங்கார்களும் ஐயர்களும்தான். இது வரலாற்று மற்றும் நடைமுறை உண்மை. நீங்கள் சாதி உணர்வை விட மறுப்பதிலிருந்து இது உண்மைதான் என்பதை நீங்களே நிரூபித்துவிட்டீர்கள்.

     இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனியம் பிறவிக் குணம் அல்ல. அது வளர்ப்புக் குணம். பிறக்கும் போது அனைவரும் மிகச்சாதாரண குழந்தைகளாகத்தான் பிறக்கிறோம். ஒவ்வொருவரும் வளர்க்கப்படுகிற சாதிய சமூகச் சூழல்தான் இத்தகைய சாதியப் பண்புகளை மனிதர்களிடம் புகுத்துகிறது. இதற்கு ஏராளமான சான்றுகளைத் தரமுடியும். பார்ப்பனியம் பிறவிக் குணமா என்பது குறித்து எனது தளத்தில் ஒரு பதிவை எழுத உள்ளேன். அப்பொழு இன்னும் விரிவாக விவாதிக்கலாம். பார்ப்பனியம் என்பது ஏற்றத்தாழ்வு பார்க்கின்ற அதே வேளையில் இன்னும் சில குணாதியங்களையும் கொண்டது.

     பார்பனியம் என்று சொல்வது தனிமனித தாக்குதல் அல்ல. ஏற்றத் தாழ்வை போதிக்கும், கடைபிடிக்கும் கீழ்த்தரமான ஒரு சிந்தனை முறையின் மீதான விமர்சனப் பார்வை.

     • அம்பேத்கர் கூறிய “போலச்செய்தல் தன்மை” என்பது தான் பார்ப்பனீயத்திற்க்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். பிராமணர்களை பார்த்து அவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள சாதிக்காரர்கள் செய்தார்கள். அவர்களை கண்டு அடுத்தநிலையாளர்கள் எண்ணினார்கள். இவ்வாறு அனைவரும் எண்ணி செய்ததால் சாதி ஏற்றத்தாழ்வு இங்கேநிலை பெற்றது

     • பிராமணர்கள் அனைவரும் சாதி பற்று உள்ளவர்களே. அவர்களில் பலருக்கு சாதி வெறி உண்டு

 33. மக்கள் பிசாசு ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டார்கள் இனி பேயாட்சியையும் வீழ்த்த விரைவில் முடிவெடுப்பார்கள். இலவசங்களால் மக்களை ஆட்டுமந்தைகளாக மாற்ற நினைத்த தி.மு.க.விற்க்கு மக்கள் கொடுத்த ஆப்பு. அடுத்த ஆப்பு சீவப்பட்டுவருகிறது மக்களை ஏமாற்ற நினைக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் இனி மக்களே விரைவில் பாடம் கற்பிப்பார்கள் தேர்தல் வழியில் அல்ல போராட்ட வடிவில் மக்களுக்கான மக்கள் ஆட்சி வரும் வரை தொடர்ந்து போராடுவோம்.

 34. தமிழகத்தில் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைதான் என்று ஆரம்பமாகப் போகும் பேயாட்சிக்கு (போலீஸ் ஆட்சிக்கு) முன்னறிவிப்பு செய்திருக்கிறார் திருமதி.ஜெ. இனி அரசிற்கு எதிரான போராடங்கள் போலீசைக் கொண்டு கடுமையாக ஒடுக்கப்படும்.

 35. It is true that the sanity of Jeyelalitha is a real question.
  She will start awarding contracts to thieves to dig drinking
  water ponds in fields for animals.
  Thuglag CHO will go that far to drink water, as his health will
  not allow him to walk that far.
  Jj also will build a giant pool next to her bed to watch the water,
  not to swim!
  But in reality, the poor Tamils will go hungry and thirsty for the
  next five years, as they did in TMK robber family rule.
  Hope, in the next five years, the next Sai Baba will born into some
  akkrakaram to collect the leftover in Thamilan’s spoon,if not from his
  torn pocket.
  Does Seeman has the answers to break this vicious cycle by next election?