Thursday, May 30, 2024
முகப்புபார்வைகேள்வி-பதில்யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

-

கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்?

– குரு

அன்புள்ள குரு,

முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள் சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன.

சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன்,  விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,

இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

நன்றி

____________________________________________________________

கேள்வி: நம் நாட்டைப் பொருத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை என்பது வளரத் துவங்கியிருக்கிறதா? வளர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது வளருமா? ஏனென்றால் பொதுவுடைமைப் பற்றிய போதிய சிந்தனை பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்பதும் உண்மைதானே?

– இனியவன்

அன்புள்ள இனியவன்,

நம் நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையின் வளர்ச்சி என்பது பொதுவுடமைக் கட்சிகளின் வளர்ச்சி, தேய்வோடு சம்பந்தப்பட்டது. இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் சகதியில் விழுந்து புரண்டு சரணடைந்து விட்டார்கள். 1925 முதல் 1960கள் வரை இவர்களே பொதுவுடைமைக் கட்சியென அறியப்பட்டார்கள். முக்கியமாக இந்தியாவின் விசேட சமூக நிலைமைகளை ஆய்வு செய்து எவ்வாறு புரட்சி செய்யப் போகிறோம் என்பதில் சோடை போனார்கள். 47க்கு முன்பிருந்தே காங்கிரசு, காந்தியின் வாலாகவும் செயல்பட்டார்கள். தமது சொந்தக் கொள்கையின் மூலம் மக்களைத் திரட்டமுடியும் என்ற நம்பிக்கை இல்லாது இருந்தார்கள்.

இவர்களுக்கு மாற்றாக இவர்களிடமிருந்தே கிளம்பி இவர்களது திரிபுவாதத்தை தகர்த்தெறிந்து 1960களின் பிற்பகுதியில் எழுந்த நக்சல்பாரிக் கட்சி ஆரம்பத்தில் இழைத்த இடது தீவிரத் தவறுகள் காரணமாக பின்னடைவு கண்டது. பிறகு சில மாநிலங்களில் தவறுகளை திருத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

1990களில் உலக அளவில் சோவியத் யூனியன் என்ற பெயரில் இருந்த போலி கம்யூனிசம் விழுந்த போது ஒரு அதிர்ச்சி இருந்தது. பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது மேற்குலகின் மக்கள் பொதுவுடமை கொள்கைகளை தேடிப் படிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தியாவிலும் இடதுசாரி முகாமைச் சேர்ந்த அறிவு ஜீவிகளே ஊடகங்களில் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள். மறுகாலனியாக்கத்தின் கேடுகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளே தொடர்ந்து போராடுகின்றன. தமிழகத்தில் என்.சி.பி.எச், பாரதி புத்தகலாயம், கீழைக்காற்று கடைகளில் மார்க்சிய நூல்கள் அதிகம் விற்கின்றன. விற்றுத் தீர்ந்த பல நூல்கள் இப்போது கிடைப்பதில்லை.

எனினும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கெட்ட பெயர் உருவாக்கியிருக்கும் சூழல் எங்களையும் அடிக்கிறது. வினவில் கூட பல புதியவர்கள் சீனா, மே.வங்கத்தை வைத்து எங்கள் விமரிசிப்பது இன்னமும் நடக்கிறது. போயஸ் தோட்டத்தில் சென்று அம்மா காலில் விழாத குறையாக செஞ்சட்டை தலைவர்கள் நடத்தும் பூஜை குறித்து நாங்கள் எவ்வளவுதான் விமரிசித்தாலும் மக்களுக்கு மனம் ஒப்புவதில்லை. இருப்பினும் பொதுவில் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களையும் உள்ளிட்டு கம்யூனிஸ்டுகள் என்றாலே எளிமையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் என்று மக்கள் சந்தேகமின்றி கருதுகிறார்கள். கூடவே இவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் செல்லமாகவும் கடிந்து கொள்வார்கள்.

எங்களைப் பொறுத்த வரை  தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பேருந்துகள், இரயில்கள், குடியிருப்புகள், ஆலைகள் என எல்லா இடங்களிலும் பல இலட்சக்கணக்கான மக்களை எங்கள் தோழர்கள் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கு மேலும் பொதுவுடமைக் கொள்கை வளர்கிறது என்பதற்கு வினவின் சிறு வெற்றியையும் சொல்லலாமே?

மற்ற கொள்கைகளெல்லாம் அநீதியான இந்த உலகோடு ஒட்ட ஒழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால் அவைகள் மக்களிடம் பரப்புவது சுலபம். ஆனால் பொதுவுடைமை கொள்கை என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் அடியோடு மாற்றவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதால் மக்களிடம் பரப்புவது சிரமம். ஆனால் பிரச்சினைகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பொதுவுடைமைக் கொள்கைகள் மட்டுமே மக்களோடு இணைவதற்கான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது.

என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

_________________________________________________________________

கேள்வி: ஆங்கிலத்தில் மூன்று வேளை உண்ணுவதற்கும் பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் என்று பெயர்கள் உள்ளன. அது போன்று தமிழில் உண்டா?

– சுதா செந்தில்

அன்புள்ள சுதா செந்தில்,

மூன்று வேளை சாப்பாடு ஆங்கிலப் பெயர்களுக்கு இணையாக தமிழில் உண்டா என்று தமிழிறிஞர்களைத்தான் கேட்க வேண்டும். எங்களுக்குத் தெரிந்து இல்லை என்றுதான் நினைக்கிறோம். ஒருவேளை தமிழ் மொழியில் அப்படிப் பெயர்கள் இருந்தாலும் தமிழ் மக்களிடம் இத்தகைய மும்முறை சாப்பாட்டுப் பெயர்கள் வழக்கத்தில் இல்லை என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில் இன்றும் கூட பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வீடுகளில் மூன்று முறை சமையலோ, சாப்பாடோ கிடையாது. அதிக பட்சம் ஒரு முறைதான் சமையலே! இதுதான் யதார்த்தம் எனும் போது மூன்று பெயர்களுக்கான தேவையே எழவில்லையே?

“தி கிட்” எனும் சார்லி சாப்ளினது திரைப்படத்தில் அவர் ஒரு அனாதைச் சிறுவனை வளர்ப்பார். அவரது குடிசையில் ஓட்டை ஒடிசலுடன் இருக்கும் ஒரு மேசைதான் டைனிங் டேபிள். சாப்பிட இருந்தாலும், இல்லாவிட்டாலும் டேபிள் மேனர்சோடு சிறுவனை சாப்பிடுமாறு சாப்ளின் பயிற்சி அளிப்பார். வயிற்றுக்கில்லையென்றாலும் நாகரீகத்தை விட முடியாதல்லவா என்று சாப்ளின் கேலி செய்வது இங்கு நினைவுக்கு வருகிறது.

தமிழக உணவு வகைகள், வட்டார உணவு ருசிகள் என்று இப்போது நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து நடத்தப்படும் உணவு மேளாக்கள் எல்லாம் வட்டார ஆதிக்க சாதியினரின் உணவு பழக்கங்களைத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் நிலமற்ற கூலி விவசாயிகளும் சரி, இல்லை சிறு விவசாயிகளும் சரி, இல்லை கொஞ்சம் வசதியான விவசாயிகளாக இருந்தாலும் சரி இத்தகைய தினுசு தினுசான உணவு வகைகளெல்லாம் அவர்களது வாழ்வில் இல்லை.

காலையில் நீராகாரம், மதியம் வற மிளகாய் அல்லது பச்சைமிளகாயோடு பழையது, இரவு சுடு சோறு என்பதே பெரும்பாலான கிராமத்து மக்களது உணவு. இதுவும் கூட முன்னர் தினை வகைகளோடு கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றை வைத்து களி, கூழ், ரொட்டி என்று இருந்தது. இன்றும் கூட பல கிராமங்களில் தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளின் போதுதான் இட்லி, தோசையை செய்கிறார்கள். தருமபுரியில் களி உருண்டையை சாப்பிடும் திறனை வைத்து சித்தாள், பெரியாள் ஊதியத்தை முடிவு செய்வார்கள். இந்தக் களியை நீங்கள் மென்று சுவைக்க முடியாது. அப்படியே விழுங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் நீர் அதிகம் உள்ள பருப்புக் குழம்பு, தஞ்சையிலோ, ஈரோட்டிலோ இருக்கும் விவசாயிகளிடம் புளி கரைத்த நீர்க்குழம்பு இவைதான் அன்றாட குழம்பு வகைகள். அந்த குழம்பில் அன்று என்ன காய் போடுகிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு விசேசம். சென்னையின் சேரிகளில் வாழும் மக்கள் அனைவரும் இரவுதான் முறையான சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். பகலில் தேநீர், பன் என்று ஏதோ ஓட்டுகிறார்கள். இவர்களது அசைவ சமையல் கூட கோழி, மீன்களின் கழிவாக கருதப்படும் பகுதிகளை வைத்தே இருக்கும். அதாவது கோழிக் குழம்பு என்றால் கோழிகளின் தலை இருக்கும்.

அறுசுவைகளுக்கும் பெயர் பெற்ற செட்டிநாட்டு சமையல், பார்ப்பனர் சமையல், சைவ வேளாளர் சமையல், கொங்கு சமையல் போன்றவையெல்லாம் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் இல்லை. ஆனால் பத்திரிகைகளெல்லாம் இவற்றைத்தான் தமிழரது உணவு வகைகள் என்று போற்றுகின்றன. நிலவுடமை சமூகத்தின் சுரண்டலில் தலைமை இடம் வகிக்கும் இத்தகைய சாதிகளது வாழ்க்கை முறையில்தான் இத்தகைய விருந்துகள் இருக்க முடியும். ஆனால் இவற்றை மட்டும் தமிழர் உணவு என்று சொல்வது முழுத் தமிழகத்தையும் பிரதிபலிப்பதாக ஆகாது.

சான்றாக ஆம்பூர் பிரியாணி, மாட்டுக்கறி வறுவலை தமிழர் உணவாக இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களின் கடுமுழைப்பு தொழிலாளிகள் தங்களது புரதத் தேவைக்காக கையேந்தி பவன்களில் மலிவான மாட்டுக்கறி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். டிகாஷன் காபியை விரும்பி அருந்துபவர்கள் அநேகம் பேர் பார்ப்பன ‘மேல்’ சாதியதினர்தான். ஆனால் தேநீர் என்பது தொழிலாளிகளின் பானமாக இருக்கிறது. சென்னை புள்ளாபுரத்தில் அருந்ததியினர் வாழும் பகுதியில் மாட்டுக்கறி உப்புக்கண்டத்தில் செய்யப்படும் சிப்ஸ் மிகவும் பிரபலம்.

ஆக தமிழர்களது உணவு முறைகள் அனைத்தும் வர்க்க வாழ்நிலைக்கேற்ப பிரிந்து இருக்கிறது. சாரத்தில் மூன்று வேளை சாப்பிடும் பழக்கமோ, வசதியோ அற்ற மக்கள் கணிசமாக வாழும் நாட்டில் நாம் ஆங்கில முறையில் மூன்று வேளை உண்ணுவதற்கான பெயர்களுக்கு எங்கே போவது?

மதுரையைச் சேர்ந்த மாவட்டங்களில் என்னதான் விருந்து சாப்பிட்டாலும் மக்கள் “கஞ்சி குடிச்சாச்சா” என்றுதான் கேட்பார்கள். அதையே நாமும் தமிழக உணவு முறைப் பெயராக கொள்ளலாமே? என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

 1. தமிழனுக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை.நம்மள்லாம் அரபு நாட்டில் இருந்து வந்தவங்கன்னு முட்டாள்தனமா நம்பிகிட்டு இருக்கும் இஸ்லாமியத் தமிழனை விட்டுட்டீங்க?

 2. தமிழன் யார்?
  தமிழன் மதம் என்ன?
  தமிழரின் உணவு உடை நிலம் ஏது?
  தமிழறிவு ஜீவிகள் விளக்குவாகளா?

 3. //1990களில் உலக அளவில் சோவியத் யூனியன் என்ற பெயரில் இருந்த போலி கம்யூனிசம் விழுந்த போது ஒரு அதிர்ச்சி இருந்தது//.
  1917 இல் புரட்சி நடந்ததன் விளைவு தான் சோவியத் ரஷ்யா என்னும் சோசலிச அரசு.முதலாளித்துவமுகாமுக்கு எதிராக சோசலிச முகாம் இருந்ததற்கான காரணமும் அதுவே. நடத்தியவர்கள் கிளாஸ்ட்நாஸ்ட் பெரித்ரோய்ஸ்கா என்று அதை அசைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால் மட்டும் அவர்கள் போலி கம்யூனிஸ்ட் ஆகி விடு
  வார்களா என்ன? லெனின் தலைமயில் நடந்த புரட்சியை கேவலப்படுத்துவது ஆகாதா தங்கள் கூற்று…

 4. //முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை//.

  உண்மையில் சொல்லப்போனால் 25 சதமானமாக உள்ள அட்டவணைத்தமிழன் அவனை அடக்கி ஒடுக்கிக்கொண்டிருக்கும் தன்மான ஆதிக்கசாதித்தமிழன்( அது கள்ளர், முத்தரையர் தொடங்கி, நாயக்கமார், ரெட்டிமார், பிள்ளைமார் என பிராமணர் வரை நீளும் ) தமிழ் பேசுபவன் மட்டும் தான் தமிழன் என்றால் சிவகாசியில் உள்ள மேத்தா, சென்னையில் உள்ள அகர்வால், மதுரையில் இருக்கும் ஜெயின் இன்னும் உள்ளவர்களை எந்தப்பட்டியலில் இடுவது?

 5. எங்கல் .தமிழ் முசுலிம் உனவு என்ன் தெரியுமா ?? ப்ரியானி .,அப்படிதான் எல்லொரும் சொல்லுரானங்க.,ஆனால் .,.,சில மாவாட்ட்த்தை தவிர்த்து .,.,முசுலிம் கல் உனவு.,.,சொல்லவெ வெக்கம்.,.,.,

 6. //இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?//
  இவனே கேவலம், இவனை விட கேவலமான ஒருவன் இருக்கிறான்.
  அவன் நூறு வரியில் எழுதபட்டுருக்கும் ஒரு கட்டுரைக்கு ஒரு இரண்டு வரியில் அரைகுறையாக, எதிர்மறையாக கருத்துகள் சொல்லும், கட்டுரையை எழுதியவனை முட்டாளாகவும், தான் தான் எல்லாம் அறிந்தவனாகவும் நினைக்கும், விதண்டா வாதம் பேசும் தற்குறி தமிழன்.

  இந்த மனிதர்களை விகடன், தினமலர் ஆகிய இணையதளங்களின் நீங்கள் காணலாம்.

  • அப்படி போடு அருவாள! ஆனா கோட்டர் அடிச்சுட்டு குப்புற கவுந்து கிடக்கும் , தமிழ் நாடு எங்கும் நீக்கமற நிறைத்திருக்கும்
   நமது தேசிய தமிழனை பற்றி ஒன்னுமே சொல்லே ?

 7. மனிதன் யார்?

  Homo sapiens sapiens

  மனிதன் மதம் என்ன?

  Humanity

  மனிதன் உணவு ஏது?

  Plants and animals

  மனிதன் உடை ஏது?

  Conscience

  மனிதன் நிலம் ஏது?

  Planet mass

  quranist@aol.com

 8. நண்பர் வினவு
  //பொதுவுடைமை கொள்கை என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் அடியோடு மாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதால் மக்களிடம் பரப்புவது சிரமம்//

  உண்மைதான் தோழரே இருப்பினும் முற்போக்கான நவீன‌ பொதுவுடைமைக் கொள்கைகளை வகுத்துக் கொண்டு மக்களை சந்தித்தால் எளிதில் சென்றடைய வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன். இனி கொள்கைகளை வகுப்பது யார்? கொள்கை ரீதியான முற்போக்குத் தலைவர் யார்? பூனைக்கு மணி கட்டுவது யார்? போன்ற பாகுபாடுகளை மறந்த சிறந்த தலைவர் ஒருவர் உருவாகும் வரை பொதுவுடைமைக் கொள்கைகள் மக்களை சென்றடைவது என்பது சுலபம் இல்லைதான். தமிழ் நாட்டைப் பொறுத்த வரை பொதுநலக் கொள்கையுடைய நல்ல தலைவர்களுக்கு மக்களிடையே மரியாதையும் செல்வாக்கும் இருப்பதில்லை. ஒன்று நடிகர்களாக இருக்க வேண்டும் அவரும் ‘கோடி’யில் புரளவேண்டுமே எங்கே போவது?

 9. உழுவதை நிறுத்திவிட்டு, வாய்க்கால் நீரில் கை கழுவி, பாத்தியில் இருக்கும் மிளகாய்ச் செடியிலிருந்து ஒரு பச்சை மிளகாய் பறித்து இரு கைகளையும் குவித்து வைத்துக் கொண்டால் கூழ் அல்லது பழைய சாதம் இடப்படும். முந்தா நாள் காரக் குழம்பை கீழே கொட்டுவதற்குப் பதிலாக சுண்டக் காய்ச்சி,கவனமாக, கொஞ்சமாக விரல் நுனியில் தடவி விடுவார்கள்.
  நாங்கள் மென்று முழுங்குவதையெல்லாம் பார்த்து இளைப்பாறும் ஏர் மாடுகள் அசை போட்டவாறே எங்களின் தாடை அசைவுகளை நங்கெடுத்துக் காட்டும்.

  பிரேக்பாஸ்ட். தமிழனின் மொழியில் கஞ்சி.

  ஒன்றரை மணிக்கு பச்சைக் கலரில் ‘ஓடுகாலி’ பஸ் வரும். களை எடுக்கும் பெண்களுக்கு ‘டூட்டி’ முடிந்து விட்டது என அறிவிக்கும் பஸ். அதனால்தான் வரப்பில் குடைபிடித்துக் குந்தியிருக்கும் ஆண்டைமார்கள் அந்த பஸ்க்கு ‘ஓடுகாலி’ என்று பெயர் வைத்தனர்.
  களையெடுத்து முடிப்பவர்களுக்கு கழனியில் சாப்பாடு கிடையாது. அவர்கள் வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடவேண்டும். அவர்களின் மதிய உணவு கூழ். பச்சை மிளகாயும் இல்லாமலே.

  தொடர்ந்து உழுபவர்களுக்கு சூடாகக் களி, புளிச்சக் கீரை. வசதியான வீடென்றால் எப்போதாவது சோறு குழம்பு.

  லன்ச். தமிழனின் மொழியில் மதியக் கஞ்சி.

  சாயுங்காலம் கலப்பையை தோளில் சுமந்து முன்னே மாடு செல்ல,தாங்கல் ஏரி மதகு கோரைப்புதர் அருகில் மாடுகள் தயங்கி நிற்கும். ‘நில்லு’ என்று சொல்லிவிட்டு புதரின் பின்னால் பேச்சு சிரிப்புகளினூடே பானை ஊரலை குடித்துவிட்டு வருவோம்.
  தொட்டுக்கொள்ள மதியம் பரிமாரப்படும்போது ஆண்டையின் பெண்டாடிக்குத் தெரியாமல் ஒதுக்கி மறைத்து வைத்த சுண்டக் குழம்பு.
  போகும்போது நன்றாயிருந்த மூஞ்சி வரும்போது அஷ்ட கோணலாயிருக்கும்.
  அசை போட்டுக்கொண்டே அதுவரை எங்களுக்காக காத்திருக்கும் மாடுகள்.
  ‘ஹேய், போடா, போடா..’ என்று அதட்டிக்கொண்டு, அல்லது எங்கள் கையறு நிலை நினைத்து குரலெடுத்துப் பாடி, திட்டி, வைது, வீடு போய்ச் சேர்வோம்.

  டெய்லி பார்ட்டி. தமிழனின் மொழியில் ஊரல்.

  ‘ஒரு கருவாடு வறுக்கக்கூடாதா, மூதேவி’ என்ற தினந்தோறும் பாடும் பாட்டைப் பாடிவிட்டு, தட்டை எடுத்துவைத்து உட்கார்ந்தால், காலை கிண்டிவைத்த களியும் புளிச்ச கீரையும் முழுங்கக் கிடைக்கும்.

  டின்னர். தமிழனின் மொழியில் ராச்சோறு.

  திருவிழாக் காலத்து ஈ மொய்க்கும் பேரீச்சம்பழமும் பலாச்சுளையும் தமிழன் விரும்பியுண்ணும் பழ வகைகள்.
  வருடத்துக்கொரு முறை வரும் பொங்கலுக்கும் தீமிதி விழாவுக்கும் சமைக்கப்படும் கோழிக்கறிக் குழம்பு. தமிழனின் விருந்து.
  எப்போதாவது வெளியூரிலிருந்து வரும் மாமனோ தாத்தாவோ தனது தலைப்பாகைத் துணியில் முடிச்சிட்டு வாங்கிக்கொண்டு வரும் காராசேவு அல்லது பூந்தி. ஸ்னாக்ஸ். தமிழனின் மொழியில் ‘பொட்டலம்’.

  ப்ரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் ஆகிய ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் இணையான வார்த்தைகளுண்டா என்று சிந்திப்பதைவிட, தமிழனின் உணவுமுறைப் பரிமாற்றங்களில் நாம் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!

  • தமிலனை தமிலனெதான் இலிவு படுதுவான், எமது கலாசாரத்தை வெரு யாரும் அல்ல நாமெதான் கின்டல் செய்கிரோம். அதனை யேன் செயிக்ரொம் என்ட்ரு யோசிக்காமல் அதனை மூடநம்பிக்கை என சொல்கிரான். உன்மைய் அரிந்தன் அமைதியாகவே இருக்கிரான். இந்த அமைய்தியெ அனைதுகும் காரனம.

 10. இன்றைய சூழலில் “தமிழன்” என்பது அருவமானது. அதாவது பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத, புரிந்து கொள்ள முடியாத இப்படி எந்தப் புலன்களாலும் அறிய முடியாத ஒருவன்தான் தமிழன். மனிதனையேக் காணோமாம். இதில் தமிழன் மட்டும் எப்படிக் கிடைப்பான்? தமிழனைத் தேடுவதற்கு முன்பு மனிதனைத் தேடுவோம். அதுதான் இன்றைக்குத் தேவை.

 11. யார் தமிழன் என்பதற்கு வரையறை என்ன? தமிழா இன உணர்வு கொள்,கல்தோன்றா,மண் தோன்றா காலத்தில் தோன்றிய முத்தக்குடி தமிழ்குடி-இவையெல்லாம் எவை?.

  அரிசிக்குள் அரசியல் இருப்பது போல் உணவுக்குள் வர்க்கம் இருக்கிறது.நன்றி

  பொதுவுடமை அரசியலை பரப்புவதில் சிரமம் எந்த வகையான சிரமம் என தெளிவுபடுத்தவேண்டும்.குறிப்பாக அரசின் அடக்குமுறையை பற்றி

 12. //யார் தமிழன் என்பதற்கு வரையறை என்ன? தமிழா இன உணர்வு கொள்,கல்தோன்றா,மண் தோன்றா காலத்தில் தோன்றிய முத்தக்குடி தமிழ்குடி-இவையெல்லாம் எவை//

  கல்தோன்றா,மண் தோன்றா காலத்தில் தோன்றிய முத்தக்குடி தமிழ்குடியார் செம்மொழியார் மஞ்சள் மாமனிதர் சுரண்டல் சக்கரவர்த்தி தமிழ் மக்களின் ஈடு இணையிலா மெழுகுவர்த்தி பதில் சொல்வார் !

 13. 1.யார் தமிழன்?

  டாஸ்மாக்கில குடிச்சுட்டு கோமனத்துண்டு அவிழ்ந்தும் சென்னை சிறப்புத்தமிழ் பேசும்

  அறிஞன்.

  2.எவை தமிழர் உணவு?

  எலிக்கறி பிரியாணி உண்ணும் பகுத்தறிவு ஜந்து.

  3.பொதுவுடமை வளர்கிறதா?

  டாஸ்மாக் பார்ல குடிச்சுட்டு ரவ்ஸ் விட்டு பொதுஇடத்தில ஆம்லெட் போடும்

  பொதுவுடமைவாதி.

 14. ஆனால் அந்த கஞ்சித்தமிழனுக்கு ஒரு ருபாய்க்கு அரிசி கொடுத்து அவனையும் சுடுசோறு சாப்பிட சொன்னால் கவுருமென்டையே கலைக்கிறானே அவன் தான் ஜாதித்தமிழன்.

 15. யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா? முதல் இரண்டு வினாவும் தொட்ர்புடையைவை மூன்றாவது வினாவுக்கு அவற்றுடன் என்ன தொடர்பு? மூன்றாவது வினாவுக்கு ஏன் விடை இல்லை? பிற மொழியினர் பற்றி யார் ……? எவை அவர் உணவு? என்பதற்கு ……இப்படி பதில் சொல்ல முடியுமா? இப்படி பதில் சொன்னால் [obscured] என்றுதான் மறு மொழி கிடைக்கும் தமிழனா பிறந்ததினால் இப்படிப்பட்ட கேள்வி பதில்களை சகித்துக்கொள்ள வேண்டுமா?

 16. யார் தமிழர்கள்???

  திருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, செம்மொழி தமிழ்,
  தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல்,சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் நம்மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் பேசும் மக்களும்- தன் சாதி அடையாளமாக சமஸ்கிருதம் கலந்த தனி அடையாள பெயர் வைத்திருப்பவர்களும் தமிழர்கள் அல்லர்….
  இந்த கூட்டம் இல்லாத மற்ற கனவிலும்/நனவிலும், வீட்டிலும், வெளியிலும்,
  உணர்விலும் உள்ள – இளிச்ச வாயன்களும்/ ஏமாளிகளும்/ சொரனையற்றவர்களும்/ வெட்டுரவனை நம்புகிறவர்களும்,பகுத்தறிவை பயன்படுத்தாததும் ஆன அனைத்து மக்களும் – தமிழரே!!!!

 17. மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள்???

  “தன்மதிப்பு தெரியாமல் வாழ்கிறான் தமிழன்: குமரி அனந்தன்”

  கருத்துக்கள்:” இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …..இந்தி கத்துக்காம ,ஹைதராபாத், மும்பை பக்கம் போனா ரணகளமாயிடுது …. By கபிலன்”

  “தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்??? மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் ???-By கடலூர் சித்தன்.ஆர்”

  Pl c link:
  http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=550825&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%A9%

 18. “தாய் மொழியை தமிழாக கொண்ட திராவிடர்களுக்கு D.M.K வில் பொறுப்புகள்
  எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது?”

  “இளைஞர்களுக்குப் பொறுப்புகள் காத்திருக்கின்றன:”- ஸ்டாலின்

  “இளைஞர் அணியில் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டும்தான் இருக்க முடியும்.ஹி..ஹி..ஹி முதியவர் அணிக்கு வயது வரம்பு உண்டா??? தாய் மொழியை தமிழாக கொண்ட திராவிடர்களுக்கு அவைகளில் எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது?”

  Pl c link:
  http://www.dinamani.com/edition/story.aspx?artid=549863

 19. “தமிழ் இனம், மொழி, பண்பாட்டை பாதுகாக்க மக்கள் ஆரிய கலாச்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும். திராவிட கொள்கைகளால் பிற்படுத்தப்பட்டோர் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.- திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்”

  திராவிட கொள்கைகளால் பிற்படுத்தப்பட்டோர் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர்??? –

  அதில் Pachai Thamizhar Evvalavu Sathvikitham Munneriyullanar Endru Solla Mudiyumaa Perasiriyar Avarkale???

 20. தமிழர் என்றால் யார் என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. தமிழரின் மதம், மொழி ,உணவு ,உடை, கடவுள் , ஆன்மீக புத்தகம் ஆகியவைகள் எதுவும் சொல்லாமல் இவர் தமிழர் என்று எப்படி கண்டுபிடிப்பது. தமிழ் நாட்டில் பிற மொழி பேசும் மக்கள் ஐம்பது சத்திற்கு மேல் உள்ளனர். பெரும்பாலானோர் தமிழையே பேசுகிறார்கள். எதை வைத்து தமிழன் மற்றும் தமிழன் இல்லை என்று நிர்ணயம் செய்வது? “ஜாதியை” வைத்துத்தானே! குட்டையை உடைத்துப் பேசுங்கள். எந்தெந்த ஜாதியை சேர்ந்தவர்கள் தமிழர்கள். மற்றவர்களை என்ன செய்வது? பிராமணரை அடையாளங்கள் காண ஜாதியைத்தான் தேட வேண்டியுள்ளது. எப்படி இருப்பினும் “பாண்டிய நாடு” வாழ்க!!!!!

 21. ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

  ஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.

  நீ யாருடா கோமாளி?
  நானும் ரவுடி தான்.

  நீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?
  ஈக்குவலா பேசறேன் இல்லே?
  எங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.

  உன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே?
  நான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.

  நான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.
  நல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.

  வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

  தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

 22. “ வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே ! “
  // கர்நாடகத்தில் வாழும் கன்னடர்-தமிழர் இடையே நல்லிணக்கம் மேம்படும்வகையில் தமிழர்கள் இனி தங்களை தமிழ்கன்னடர் என்று கூறிக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். – கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.”-தினமணி // மிகவும் நன்றி .வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே!!! தாங்கள் இது போல மகாகணம் பொருந்திய ராஜபக்சே அவர்களுக்கு ஒரு அன்புச் செய்தி அனுப்பி தமிழர்களையும் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்தால் கோடி நன்றி சொல்வோம். – இப்படிக்கு திராவிடத் தமிழன் மன்னிக்கவும் .தமிழ்த் தமிழன்.
  http://dinamani.com/latest_news/2013/07/27/

 23. வாழ்க திராவிடம்! வாழ்க அண்ணா (NAAAAMAM)!!!

  //அன்பு குடியரசே..! ( இல்லை.. இல்லை..) தமிழ்க்’குடி’அரசே..!
  முன்பு பூரண மதுவிலக்கை ரத்துசெய்து
  பின்பு மெல்ல ஏன் நீ ‘மலிவு விலை மது’ தந்தாய்? – அன்று…

  ‘கள்ள மதுவை ஒழிக்க’ என காரணித்தாய் – உன்
  உள்ள நாட்டம் – கொள்ளை இலாபம்
  அள்ள மட்டும் – என்பதனை ஏன் மறைத்தாய்? – இன்று…

  திகட்டத்திகட்ட டாஸ்மாக் குவிக்கும் நிதிகண்டு – அதை
  பகட்டு விளக்கால் அலங்கரித்து பட்டித்தொட்டி எங்கும்
  சகட்டு மேனிக்கு பொது இடங்களிலும் ஏன் திறந்தாய்?

  கள்ளுண்ணாமை எனும் குறளதிகாரம் இயற்றிய
  வள்ளுவரை வாழ்த்தி வானுயர சிலைவடித்த நீ
  கிள்ளுகீரை என அவர்தம் அறிவுரையை ஏன் புறந்தள்ளினாய்?

  குடிமக்களின் நலன் காக்கும் அரசே குடியரசு – எனில்
  குடிமக்களின் சுகவாழ்வில் அக்கறையற்று தன்
  வடிகட்டின சுயநல டாஸ்மாக் சுரண்டலுக்காக…

  குடிமக்களை ‘குடிக்கும் மாக்களா’க்கி என் இந்திய மனிதவளத்துக்கு
  வெடிவைக்கும் மேற்படி தமிழ் ‘குடி’ அரசுக்கு கொடியேற்ற இனி
  ‘குடியரசு தினம்’ எனும் பெயரில் ஏதேனும் ஒன்றுண்டா..? – சுதியேற்ற இனி…
  ‘குடி’அரசு தினமே… எல்லா நாளும் தமிழ்நாட்டில்…//
  ( http://pinnoottavaathi.blogspot.com/2011/01/26-1.html )-நன்றி.//

  ஹிஹும்..ஹிஹும்…..வாழ்க! வளர்க!… “கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றி மூத்த தமிழ் குடி.” “வாழ்க திராவிடம்!” “வாழ்க அண்ணா (NAAAAMAM)!!!”

 24. “வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.”
  //ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது.தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.” தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை. கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே??? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.//

  “திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.”
  //”தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”:திரைப்பட இயக்குநர்கள் .; தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா; கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா; என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.; ஹி ஹி..ஹி . இப்படியாகத்தானே எல்லா துறைகளிலும், தொலைக்காட்சியிலும், தமிழ்த்திரையுலகிலும் தமிழர்களின் மனதை கொள்ளை கொண்டு அருஞ் சேவை புரிந்து வருகிறோம். எல்லாம் அவன் செயல். வேறொன்றும் அறியோம் – பராபரமே!!! //

 25. தமிழ்பேசுவோர், அதற்காக சிறுமை என்று எண்ணாமல் பெருமைகொள்பவர்கள், அனைவரும் தமிழர்களே! எந்த மொழியை நீச மொழி என்றார்களோ, எந்த மொழி கோவிலுக்குள் நுழையமுடிய வில்லையோ, எந்த மொழியை அடக்கப்பட்ட மக்கள் தவிர ஏனைய ஆதிக்க வர்க்கம் தவிர்க்கிறதோ, அதை வளர்ப்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் தமிழர்களே!

 26. ’’உலகம் சமநிலை பெற வேண்டும்”

  // “கடவுள் ஏன் கல்லானான் – மனம் கல்லாய் போன மனிதர்களாலே” நாடற்ற தமிழன்.//

  //”கொடுத்ததெல்லாம் கொடுத்தான்;அவன் யாருக்காகக் கொடுத்தான்;ஒருத்தருக்கா கொடுத்தான்; இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” – ஈழத் தமிழன்.//

  //’’உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே சமயம் யாவும் தழைத்திடவே”- இந்தியத் தமிழன்.//

  //ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்; சாராய கங்கை காயாதடா…. சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா; சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா ” – டாஸ்மாக் தமிழன்//

  //”நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்; நல்லவர் கெட்டவர் யாரென்றும்; பழகும் போதும் தெரிவதில்லை;பாழாய்ப் போன இந்த பூமியிலே.” – பாமரத் தமிழன்.//

  //”எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” – – வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் தமிழன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க