முகப்புகட்சிகள்அ.தி.மு.கரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

-

அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த பிறகு பலரும் மனிதாபிமான நோக்கில் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரக் கொழுப்பில் ஏற்பட்ட அந்த சாலை விபத்தும் சரி, அதன் பின் அ.தி.மு.க மற்றும் த.மு.மு.க காலிகள் திருச்சியில் செய்த கலவரங்களும் சரி மரியம்பிச்சையின் யோக்கியதையை நிரூபிக்கின்றன. அந்த கலவரங்கள் குறித்தும், ரவுடி மரியம்பிச்சை மந்திரியான கதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த காலத்தில் இந்த ரவுடி மரியம்பிச்சை ம.க.இ.கவோடு மோதி மூக்குடைபட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆக ‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ரவுடி மரியம்பிச்சையின் மரணம் தெரிவிக்கிறது. படியுங்கள், பயம் கொள்ளாதீர்கள், அணி சேருங்கள்!

திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர்  கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

11 மணிக்கு  அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும் அவரது கார் டிரைவர் ஆனந்தன் கூறியுள்ளார். பாதுகாவலரும், படுகாயத்துடன் உயிர் தப்பிய துணை ஆய்வாளருமான மகேஷ்-ம் இதை உறுதி செய்துள்ளார். நிலைமை இப்படி இருக்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேகத்தில் அமைச்சர் மரியம்பிச்சை பலியான செய்தி ஊடகங்கள் வாயிலாக காட்டுத்தீயாக பரவியது.

காலை  8.30 மணிக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க காலிகளும், இஸ்லாமிய அமைப்பான த.மு.மு.க-வும், “கே.என்.நேரு.ஆள் வைத்து லாரி ஏற்றி கொன்றுவிட்டான்” என வதந்தி பரப்பி, கடைகளையும், பொது வாகனங்களையும் தாக்கத் துவங்கினர். மக்கள் நெருக்கமுள்ள பல இடங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கற்களையும், கட்டானையும் வீசவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பதற்றம் பற்றிக்கொண்டது. அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. தி.மு.க.கொடிமரங்கள், பெயர்ப் பலகைகள், கலைஞர் படிப்பகம் என பலவும் இவ்வாறே உடைத்து நொறுக்கப்பட்டன.

விபத்து நடந்த அன்றும்  அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளும் இரு சக்கர வாகனங்களில் தலா 3 பேர் வீதம் த.மு.மு.க மற்றும் அ.தி.மு.க. காலிகள் கொடிகளுடனும், கட்டானுடனும் கத்திக் கொண்டே கடைகளை மூட வைத்தனர். இதைத்தான்  மரியம்பிச்சையின் இறப்புக்கு  அனுதாபம் தெரிவித்து கடைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது போல செய்தி ஊடகங்கள் சித்தரித்தன.

இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாசிச ஜெயலலிதாவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அரசியல் பழி வாங்குதலுக்கான தனது பங்கை செவ்வனே செய்து தனது கூட்டணி கட்சி காலிகளையும் ஊக்கப்படுத்தினார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பயன்படுத்தி தி.மு.க – வின் மீது பழிபோட்டு கொடி கம்பங்களை சாய்த்தும் அலுவலகங்களை நொறுக்கியும் கலவரம் செய்தது போலவே இப்போதும் மாவட்ட அளவில் நடந்து கொண்டனர்.

ஊழல் வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் 3 விவசாயக்கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதே வெறியோடு இங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் களமிறங்கினர். த.மு.மு.க,தே.மு.தி.க போன்ற புதிய பங்காளிகளும் சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?

சாவு செய்தி கேட்டு அரசு மருத்துவமனை முன்பாகக் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மினி லாரியில் லுங்கி கட்டிக்கொண்டு சலம்பிக்கொண்டு வந்த கும்பல் எல்லாக் கடைகளையும் பூட்டவைத்தனர். கடைக்குப் பொருள் வாங்கவந்த பெண்கள், முதியவர்களையும் அடித்து விரட்டினர். கறிக்கடைக்கு வந்த கும்பல், அங்கு தொங்கிய உரித்த ஆட்டை வெட்டிவீசியது.

கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.

மேலப்புதூர் பகுதியில் தி.மு.க கொடி கம்பங்கள் சாய்க்கப்பட்டதுடன் போக்குவரத்தை நிறுத்துவதற்காக இந்த கும்பல் போட்ட வெறியாட்டத்தில் ஒரு புங்க மரமே வெறும் கையால் சாய்க்கப்பட்டது. அது விழுந்ததில் கார் ஒன்று அடியில் சிக்கி நொறுங்கியது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.)

மல்லிகைபுரம் பகுதியில் தி.மு.க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கடை மூடப்பட்டதைவிட வண்டியில் வலம்வந்து வெறியாட்டம்  போட்ட விடலைகளின் வசவுகள், பல கடைக் காரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இருப்பினும் புலம்புவதைத்தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவர்களின் வெறியாட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மருந்துக் கடைகள் கூட தப்பவில்லை. பேருந்துகளின் கண்ணாடிகள் பல நொறுக்கப்பட்டன. காவல் துறையே பல பகுதிகளின் போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லாடவைத்தது. எப்போதாவது ஒரு அரசுப்பேருந்து மட்டும் பந்த் நடக்கவில்லை எனறு காட்டுவதற்காக ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டன.

இவ்வளவு வெறியாட்டங்களும் காவல்துறையின் கண்ணெதிரில்தான் நடந்தது. கை கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதற்கு மேல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. காலித்தனத்தை எதிர்த்துக்கேட்டு அடிவாங்கிய தி.மு.க காரர் மீதே பொய் வழக்குப்போட்ட கொடுமையும் நடந்தது. போலீசே கடையை ழூடிட்டுப் போ என்று விரட்டி காலித்தனத்துக்கு துணை நின்றனர். அதே போலீசார் சில இடங்களில் ரொம்ப ஆடுறாங்க என்று புலம்பியதும் நடந்தது. குடும்பம் இல்லாமல் நகரத்தில் தங்கி வேலை செய்யும் ஏராளமான இளைஞர்கள் உணவு, டீ கூட கிடைக்காமல் திண்டாடினர். இது முதல் நாளோடு முடியவில்லை. இரண்டாம் நாள் கடை திறக்கலாமென வந்த பலரும்கூட விடலைகளின் வெறியாட்டத்துடன் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

மரியம்பிச்சை ஒரு முசுலிம் என்பதால் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்ட த.மு.மு.க- வினர், அமைச்சரின் உடலை தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து மாற்றியது முதல் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து கடை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தியது, சவஅடக்கம் நடக்கவிருந்த பள்ளிவாசல் பகுதியில் சாலையையே அடைத்து மேடை போட்டு போக்குவரத்தை ஸதம்பிக்கச் செய்தது வரை அனைத்திலும் செய்த அலப்பரை மக்களால் தாங்கமுடியவில்லை. அம்மா வந்தவுடனே ஆட்டமும் தொடங்கிவிட்டது என்றே புலம்பத்தொடங்கினர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆட்சி என்ற பல வெறுப்புகள் காரணமாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலையை உருவாக்கிவிட்டனர். என்னதான் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் இடது,வலது போலிகளும் “அம்மா மாறிட்டாங்கன்னு” டயலாக் பேசினாலும் தான் பழைய காட்டேறிதான் என்பதை மறைத்துக் கொள்ள அம்மா எப்போதுமே முயன்றதில்லை. இரத்தத்தின் இரத்தங்களும் இத்தனை ஆண்டுகளாக அடக்கிவைத்த தங்களின் ஆட்டத்தையெல்லாம் பத்தே நாளில் காட்டி விட்டார்கள். இது மீண்டும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாபமாக மாறலாம். அது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. மக்கள் இதே ஓட்டுச்சீட்டு பாதையில் மாற்றைத்தேடி எந்த பயனும் இல்லை. மக்கள்கையில் அதிகாரம் கிடைக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக சிந்திக்கவேண்டும் என்பதையே நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!

யார் இந்த மரியம்பிச்சை? ஒரு ரவுடி மந்திரியான கதை!

க்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.  இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.

இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில்  புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.

இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப்  பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.

சொந்த  வாழ்க்கையில்  நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.

மேலும் தான்  வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின்  கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.

இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.

அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின்  மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.

திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும்  கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.

மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.

மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில்    தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம் , தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும்  கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள்  போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.

உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

குறிப்பு :

1.         மரியம்பிச்சை இறப்புக்கு பின்னர் 25-05-2011 அன்று தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் நேரு, “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மரியம்பிச்சை எனக்கு நல்ல நண்பர், கொலை செய்யும் அளவுக்கு என்னை மோசமாக சித்தரித்து விட்டனரே” என்று புலம்பியுள்ளார்..உடல் அடக்கம் செய்யப்பட்டபின் திருச்சி சிவா மற்றும் பலர் மரியம்பிச்சையின் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வந்துள்ளனா. அ.தி.மு.க. வில் ஒருவர் கூட இதற்கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை. தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர். இதிலிருந்து இரண்டு கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2.         பெரும்பிடுகு முத்துரையர் சதய விழாவில் பங்கேற்ற மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த பிறகும் சதய விழா நிகழ்ச்சிகள் எந்த குறையும் இல்லாமல் அன்று முழுவதும் நடந்தது. இவ்வளவு கலவரம் செய்து துக்கம் கொண்டாட வைத்தவர்கள் யாரும் அவர்களை  கண்டிக்கவில்லை. அவர்களும் குறைந்தபட்ச நாகரீகம் கருதிக்கூட மாலை அணிவிப்பு, போட்டா எடுப்பது முதல் ஊர்வலமாக டெம்போ வண்டியில் ஏறி கூச்சலிட்டு ரகளை செய்தது வரை எதையும்  குறைத்துக்கொள்ள தயாரில்லை..

_________________________________________________________________

-தகவல், படங்கள்:  ம.க.இ.க, திருச்சி
_________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • மரியம் பிச்சையின் வரலாறு – சாமிப் படத்தில் வரும் பிச்சைப் பெருமாளை நினைவுப் படுத்துகின்றது .. இப்படியான பலர் தான் இன்று அரசியல் பஞ்சம் பிழைக்கின்றார்கள் —

 1. மரியம் பிச்சை போன்ற நபர்களை அதிகம் தெரியாது.தெரிய வைத்ததற்கு நன்றிகள். பெரும்பாலும் அரசியல் பிழைப்பவர்கள் அனைவரும் இதுபோன்ற ஒரு பின்னணி யுடன் தான் பதவிக்கு வருகிறார்கள்.

 2. அருமையான கட்டுரை!! வினவுக்கு வாழ்த்துக்கள்!! தங்களின் பணி என்றென்றும் தொடரட்டும்.

  எதிர்காலத்தில் இதே மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றால் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய திட்டமிடலும், மக்களை ஒன்று திரட்டவதும் உடனடித்தேவை…

 3. “விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும் கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள் போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.”

 4. good article . i am reading lot of papers but today only i came to know the real face of this mariam pitchai. excellent class journalistic reporting. congrats. keep it up.

 5. என்னோடு பணிபுரியும் திருச்சியை சேர்ந்த நண்பர் சொன்னது இது … மரியம் பிச்சைக்கு 12 மனைவியர் என்று. என்னால் நம்ப முடியவில்லை. உங்களுக்கு எப்படி தெரியும் ? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், மரியம்பிட்சையின் ஏதோ ஒரு மனைவிக்கு பிறந்தவர் இவரோடு படித்தார் என்று. வினவு () படியுங்கள் உங்களுக்கு புரியும்.

 6. தயவு செய்து .,மரிஅம் பிச்சை .,.,உன்மயான முச்லிம் .,.அல்ல.,.,பெயர் மட்டும் தான்.,.,.,சாராயம் .,விபச்சாரம் .,.,.,அப்பொ எப்படி முச்லிம் .,.,.,ஒரு ஆட்டை வாங்கி அப்துல்லா என்ரு பெயர் வைதால் .,அந்த ஆடு முச்லிம் ஆடு அல்ல.,.,.,அது தான் மரனமொ .,.,.,இரைவன் மிக பெரியவன்

  • அதே வழியில் செல்லும் தமுமுகவினரும் உண்மையான முஸ்லிம்களாகப் படவில்லை. அவற்றை முஸ்லிம்கள் எப்படி எதிர்க் கொள்ளப் போகின்றார்கள் என்பதே வினா?

 7. எந்த மதமானால் என்ன என்ன இனமானால் என்ன எந்த மொழியாளர் ஆனால் என்ன எல்லோரும் மனிதர்கள். எல்லா மதத்திலும் ரவுடிகள் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ரவுடி கிறிஸ்தவன் தான் ஏனெனில் அவன் தான் அதிக எண்ணிக்கை உடையவன் அதற்கு அடுத்தாற்போல் உள்ளவன் இஸ்லாமியன். பிறகு வருகிறான் நமது இந்து. அதிலும் உயர்சாதி இந்து.பஞ்சமன் மற்றும் சூத்திரனுக்கு அங்கே இடமில்லை. என்னதான் செய்வது

 8. உங்கள் கட்டுரையை வாசிக்குபோது உண்மை விளங்க வருகிறது, த மு மு க என்ற ஒரு கட்டபஞ்சயது இயக்கம் இதற்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை ஓட்டுகளை பொருக்குவதற்காக இஸ்லாமிய பெயரை பயன் படுதிகொகிரார்கலே ஒழிய அவர்களிடம் இஸ்லாம் கூறும் கொள்கை என்பதே இல்லை அவர்களும் ஒரு புதிய அரசியல் ரவுடிகள் தான் இவர்களால் முஸ்லிம் சமுதயதிர்க்கு எந்த ஒரு நன்மையையும் கிடையாது முஸ்லிம்கள் யாரும் அவர்களை ஆதரிக்கவில்லை, ADMK வைத்து தான் இவர்கள் ஜெயிக்க முடிந்ததே தவிர இவர்களிடம் எந்த ஒரு உண்மையும் கிடையாது இவர்களை இஸ்லாமிய சமுதயதவர்ரக பாவிக்க வேண்டாம்.

 9. மரியம் பிச்சை மந்திரியான உடனேயே இவர் ஒரு திடீர் பணக்கார அரசியல் ரவுடி என்பதை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன். இறந்த பிறகும் அதையேதான் சொன்னேன். பலருக்கும் தெரியாத ஒரு ரவுடியைப் பற்றி, இறந்தாலும் உண்மையைச் சொல்வது ஒரு சமூகக் கடமை. அந்தக் கடமையை சியற்பாகச் செய்துள்ள வினவுக்கு வாழ்த்துகள்.

  திரும்புகிறது மீண்டும் இருண்ட காலம். ” அண்ணன் வர்றாரு.. வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க…” பாடல் மீண்டும் ஒலிக்க வேண்டும். கோவனுக்கு பாட்டைழுதும் வேலை வந்துவிட்டது. இந்தப் பாடலைப் பொருத்தவரை பெயரை மட்டும் மாற்றினால் போதும்.

  போராளிகளே!… பொதுமக்கள் அனைவரும்தான்… தயாராயிருங்கள். போராடும் வேலை இனி அதிகம்தான்.

 10. நல்ல கட்டுரை. உங்க தைரியத்த பாராட்டுறேன்.

  வினவு உடன் சித்தாந்த ரீதியா கடுமையான முரண்பாடுகள்
  கொண்டாலும், நம் அனைவருக்கும் ‘பொது எதிர்கள்’ நிறைய உண்டு.
  ‘முதலாளிகள்’ எதிரிகள் அல்ல. (நீங்க மாறுபடுவீங்க) மரியம் பிச்சை போன்ற
  மாபியா தலைவர்கள் தான் முதல் எதிரிகள். உண்மையில்
  இவர்கள் தான் முக்கிய எதிரிகள்.

  • இங்க பாருப்பா! ‘ஐக்கிய முன்னணி’க்கு அதியமான் கைகுடுக்கிறார். வாழ்த்துக்கள்.

   அதியமான்,
   ஐக்கியமுன்னணி ன்னா என்னவென்று, மாவோவின் ‘புதிய ஜனநாயகம்’ படித்து தெரிந்துகொள்ளுங்கள். லிங்க் எல்லாம் தரமுடியாது.

 11. இது போன்ற ‘எதிரிகளை’, நீங்க நேரடியாக, தைரியமாக,
  எதிர்த்து போராடுவதால் தான், பல நேரங்களில்,
  சகிக்க முடியாம இங்கு நீங்க பேசினாலும், தொடர்ந்து
  இங்கு உரையாட தலைபடுகிறேன்.

  • உங்கள் சகிக்க முடியாத சகிப்புக்கு வாழ்த்துக்கள்..

   ஆனா.. “”இது போன்ற ‘எதிரிகளை’, நீங்க நேரடியாக, தைரியமாக,
   எதிர்த்து”” போராடாமல், சகிச்சுக்கிட்டு போறீங்களே,, ஏன் சார்?

   • @ K.R.Athiyaman
    in addition to ஆதி comment (உங்கள் சகிக்க முடியாத சகிப்புக்கு வாழ்த்துக்கள்..
    ஆனா.. “”இது போன்ற ‘எதிரிகளை’, நீங்க நேரடியாக, தைரியமாக,
    எதிர்த்து”” போராடாமல், சகிச்சுக்கிட்டு போறீங்களே,, ஏன் சார்?
    ), i remember the following from VINAVU about sai baba….

    ’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.

    நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!

    அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.

    இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.

    ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர் ( டு K.R.அதியமான் , ஆதி இத தான் கேகுரருங்க…). முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.

    இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.

    actually i highlighted some words but i could not get it inside this comment box. 🙁 by
    AAJ

  • இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது மரியம் பிச்சை போன்ற கெட்டவர்களால் மட்டும் அல்ல.கொடூரமான முதலாளிகளாளும் மட்டும் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்து, உரையாடிக்கொண்டிருக்கும் கே.ஆர்.அதியமான் போன்ற நல்லவர்களாளும்தான்…..!!!!

  • @ K.R.Athiyaman
   in addition to ஆதி comment (உங்கள் சகிக்க முடியாத சகிப்புக்கு வாழ்த்துக்கள்..
   ஆனா.. “”இது போன்ற ‘எதிரிகளை’, நீங்க நேரடியாக, தைரியமாக,
   எதிர்த்து”” போராடாமல், சகிச்சுக்கிட்டு போறீங்களே,, ஏன் சார்?
   ), i remember the following from VINAVU about sai baba….

   ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர் ( டு K.R.அதியமான் , ஆதி இத தான் கேகுரருங்க…).

 12. ஈர்ப்பு விதியில், மேலே தூக்கி எறியப்படுபவை கீழே வந்தேயாக வேண்டும்.
  மேடு இருந்தால் பள்ளம்.
  யாரும் இயற்கை விதிக்கு பதில் சொல்லியாக வேண்டும்!

 13. உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
  பரவட்டும் முன்னுதாரணம்

 14. “கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.”
  – இவர்களும் மனிதர்கள் தானே; இவர்களின் தவிப்பை புரிந்து கொள்ள முடியும் சாதாரண மனிதனால். ஏன் காவலர்கள் கூட புரிந்து கொள்ளவில்லை. அப்புறம் எதற்கு காவலர்கள்? – மனிதாபிமானம் எல்லாம் போட்டோ ஃபோஸ் கொடுப்பதோடு தானா?
  – வினவின் மூலம்நிறைய தெரிந்து கொண்டு வருகிறேன்.
  – உங்களால் நிச்சயம் மக்களின் மனங்களை மாற்ற முடியும்.
  – ஊடகம் எப்படி செயல் பட வேண்டும் என்பதற்கு வினவு நல்ல உதாரணம்
  மிக்க நன்றி!

 15. பாராட்டுகள் வினவு,
  ஊடகங்கள் உட்பட யாருமே சொல்லாத செய்திகளை வெளியிட்டதற்காக.ஜெயலலிதா ஆட்சி என்றால் சட்டம் ஒழுங்கு அருமையாக இருக்கும் என்ற மாயை உடைந்தது.தமுமுக வா? ம.ம.க(மனிதநேய(!!) மக்கள்(?) கட்சி) யா? .அவர்களும் அரசியல் கட்சிகளாக நிலைத்திருக்க எல்லா தகுதிகளும் உண்டென்று நிரூபித்து உள்ளார்கள்.இவர் முஸ்லிம் என்பதால் போராட்டம்(?0 நடத்தினோம் என்று சொல்லும் அமைப்புகளுக்கும்,இவர் உண்மையான முஸ்லிம் அல்ல அதனால்தான் மோசமாக நடந்தார் என்று கூறுவதற்கும் வித்தியாசம் இல்லை.உண்மையான் முஸ்லிம்(இந்து,கிறித்தவன்) என்று எப்படி தீர்மானிப்பது?.இரவுடிகள் எல்லா மதத்திலும்,சாதியிலும் இருக்கிறார்கள்.மரியம் பிச்சை மத சார்பற்ற இரவுடியோ?
  நன்றி

 16. எந்த பத்திரிக்கையிலும் இந்த சுதந்திர போராட்ட வீரரைப் பற்றி இந்த அளவுக்கு தகவல்கள் எதுவும் வரவில்லையே? வாழ்த்துகள்.

 17. இதுக்குதான் நான் வினவு படிக்கிரேன். இவனுஙகெல்லாம் திருந்தவே மாட்டாங்கலா? அய்யா சுல்தான், இவனெல்லாம் மனுஷனெ இல்ல, அப்பொ என்ன மதம இருந்தா என்ன?
  @னேதாஜி, இன்னுமா பத்ரிகையை நம்புரீங்க?

 18. வன்முறை அரசியலை நம்பிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட முடிவு தான் த.மு.மு.கவுக்கும் நிகழும். மரியம் பிச்சை விபத்தானதை கொலையென்று பொய் செய்தியைப் பரப்பியிதில் விகடன் இணையத் தளத்திற்கும் பெரும்பங்குண்டு.

 19. மனிதனை மனிதாக பார்க்காதவரை எந்த மதமும் என் செருப்புக்கும்,செருப்பில் ஒட்டிகொண்டிருக்கும் அழுக்குக்கும் சமம்.தமிழகத்தில் நீங்கள் ஒரு விசயத்தை தொடர்ந்து காணலாம்.எந்த மோசடி நடந்தாலும் இந்த காலிப்பயல்கள் மத வேறுபாடு இல்லாமல் ஒன்று கூடி நிற்பார்கள்.மதத்திற்கும் இது போன்ற அயோக்கிய தனத்திற்கும் என்ன உறவு?ஒரு மயிரும் இல்லை.இங்கு பரந்து பட்ட உலகில் இரண்டே மதம் ஏழை,பணக்காரன்.இந்த இரண்டிலயும் நல்லவன்,கெட்டவன் என இரண்டே ஜாதிகள்.

 20. அதியமானே பாராட்டிய பிறகு நானென்ன சொல்ல?

  தகவலுக்கு நன்றி! 🙂

  நிற்க! இந்த விபத்தில்(?) ‘சின்ன பண்ணையின்’ கையுண்டாம்! அரசுக்கும் தெரியுமாம். அதிலிருந்து தப்(புவிக்க)ப பேரம் ஆரம்பமாம்! ராமா ராமா..

  • இதுக்கு நீங்க நேருவின் தம்பி ராம ஜெயம் என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாம்….!!!!

 21. அப்படியே நேரு எப்படி பெரிய அரசியல் வாதியாக வந்தார், அரசியல் வாழ்க்கைக்கு வந்த பிறகு அவர் சொத்து எவ்வளவு அதற்க்கு முன்பு எவ்வளவு? அவர் மீது எதனை வழக்குகள் உள்ளன? திருச்சியை சுற்றி அவர் வாகி குவித்துள்ள நிலங்கள் எவ்வளவு என்பதையும் தாங்கள் தெரிவிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். இந்த விசயத்தில் ஒரு மறுக்க முடியாத உண்மையை தெரிவிக்க வேண்டும் சாதியின் பெயராலோ மதத்தின் பெயராலோ தமிழக மக்களிடம் இருந்து மயிரை கூட இனி யாராலும் பிடுங்க முடியாது. மக்களை மாக்களாய் மாற்றிய ஜாதி இன்று அழிவின் உச்சம் சென்று கொண்டிருக்கிறது.

  • இடைத்தேர்தல் வருதுல்ல… அம்மா பிரச்சாரத்துக்கு வருவாங்கல்ல… அங்க அங்க நின்னு பேசுவாங்கல்ல… அதுக்கு ரோட்டுக்கு ரெண்டு பக்கம் கூட்டம் கூடுமல… அந்த கூட்டத்தை அடிக்கிற வெயிலிலும் கலைஞ்சி போவாம இருக்க யாராவது மைக் புடிச்சி மானாவாரியா பேசனும்ல… அப்படி நிறைய பேரு பேசுவாங்க… அப்பா வந்து கேளுங்க… ‘நேருவோட வாழ்க்கை வரலாற்றை’…. கூச்ச நாச்சம் இல்லாமல் தண்ணியை போட்டுக்கிட்டு சும்மா புட்டு புட்டு வைப்பாங்க…..!!!

 22. Am very happy to see VINAVU moving towards its TARGET !
  The internet fans are less percentage when compared to TN PEOPLE.
  So please spread this news to PEOPLES of TAMILNADU.
  TERRIFIC WORK !
  PLEASE KEEP IT UP!!

 23. ROWDIKKU NIGAR ROWDIYATHAAN NIRAKA VAIKA MUDIYUM……………………..VIAYGYANAM PESI VEENA POGUM ORU KOOTAM UNDENIL ADHU NICHAYAMAGA MA KA EE KA IDHAI VIDUTHU AAKKA POORVAMANA VAZHIYIL YOSIUNGAL………………..

 24. It became very normal to damage public properties to express anger of a group of people. This expression is produced by political leaders. Unless we get politicians with good attitude our country wont change.

 25. நன்றி.இப்படி எல்லா மந்திரி முன்னாள் மந்திரி அதிகாரிகளின் வண்டவாளத்த தனடவாளம் ஏத்துங்க புண்ணியமா போகும்.ஒங்களுக்கு அவ்வளவு அரசியல் அறிவு இருக்கு .தயவு செய்து இத மட்டும் செய்ங்க

 26. ம.க.இ.காவின் சகலபடிகளான மாவோயிஸ்களின் போராட்டங்களின் போது கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வருபவர்கள் பாதிக்கப்படுவதில்லையா?
  மண்வாடு நேருவை தோற்கடித்தார் என்பதற்காக செத்துப்போன் மரியம் பிச்சையை இப்படியா கரித்து கொட்டுவதுதாண் நல்ல புரட்சிகர புதிய ஜனநாயக பண்பாடா?

 27. ரவுடி மரியம் பிச்சை அப்படின்னு எழுத தைரியம் கண்டிப்பாக தேவை! வாழ்த்துக்கள்

 28. rowdykalin attakasangal ellam nagarukkul mattume sellupadiyakum. Neengal solliyathai pola t.m.m.k thairiyam irunthal muthiriyar vilavukku vanthavarkalidam nirutha solliyirunthal theriyam enna nadakkumendru. D.m.k a.d.mk ethuvanalum thagararu seivathu padhil pesadha nagaravasi makkalidamum veliyur kadai muthalikalidamumthan. Idharkku peyar veeram endru avarkalakave ninaithu kolkirarkal.

 29. வினவு பக்க சார்பா பேசுது…எழுதுது… அவாள்கள் தப்பு பண்ணினா மட்டும் தான் வினவு பெரிசா பேசுது… எதிர்க்குது… ஆனால் ‘பாய்கள்’ தப்பு செய்தாலோ, ‘அல்லேலூயா’ தப்பு செய்தாலோ அதை வினவு பெருசா தண்டிப்பது இல்லை… — இப்படி புலம்பும் அவாள்களுக்கு இந்த பக்கத்தை டெடிகேட் செய்யப் படுகிறது.

 30. ரவுடிகளை ஒழிப்பேன் என களமிறங்கி ஓட்டுப் பொருக்கிய ரவுடியம்மா ஆட்சியின் முதல் ஒழிப்பாக இருக்குமோ?

 31. இந்த கட்டுரையை படிக்கும் பொழுது மீண்டும் அன்றைய தின சம்பங்கள் என் கண் முன்னே வந்து செல்கிறது. நானும் திருச்சி பகுதியில் ஒரு உணவத்தில் வேலை பார்க்கிறேன் என் கடை முதலாளி வெளியில் அனைத்து கடைகளும் அடைத்துவிட்டார்கள் கடையை மூடிவிடலாம என கேட்க நான் உடனே மூடவேண்டாம் என கூறி தைரியப்படுத்தினேன்(அந்த பகுதியில் ம.க.இ.க.தோழர்கள் எனக்கு கொடுத்த தைரியத்தில்). வெளியில் எந்த கடைகளும் இல்லாத்தால் நான் வேலைப் பார்க்கும் உணவகத்தில் அதிகமான கூட்டம் அச்சத்துடன் கடை முதலாளி கல்லா கட்டிக்கொண்டிருக்க நான் வந்த வாடிக்கையாளர்களிடம் பரிமாறிக்கொண்டே பேச்சு கொடுத்தேன். வெளி நிலவரங்களை கூறினார்கள். சாலைகள் முழுவதும் எங்கும் கடைகள் பூட்டப்பட்டு மயான அமைதியாக வெளியே உள்ளது எனவும் அ.தி.மு.க கரை வேட்டிக்காரர்களும் ரவுடிகளும் அத்தனை கடைகளையும் தன் கண் முன்னால் அடித்து மிரட்டி பூட்டவைத்தார்கள் எனவும் தெரிவித்தார் மற்றொருவர் நீங்கள் மட்டும் எப்படி தைரியமாக கடை வைத்துள்ளீர்கள் என கேட்டார் அதற்க்கு நான் மக்களை கொள்ளும் அரசியல் ரவுடிகளுக்காக நாம் ஏன் பயப்பட வேண்டும் எனவும் நம் ம.க.இ.க. அமைப்பை பற்றியும் கூறினேன். உணவு கொடுத்ததற்க்கு நன்றியையும் நம் போராட்ட குணத்திற்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிறைய பேர் வெளியே உணவு கிடைக்காமல் கையில் குழந்தகளை தூக்கிக்கொண்டு எது இருந்தாலும் பரவாயில்ல சார் காலைல இருந்து பிள்ளைங்க சாப்பிடல சார் என்று கையில் இருந்த பணத்தை நீட்டி கேட்க்க அந்த ஒரு நிமிடம் பிச்சை எடுப்பவர்களை போல அவர்களை உணவுக்காக கெஞ்சவிட்ட அந்த அரசியல் ரவுடிகள் மேல் இன்னும் கோபம் அதிகரித்தது. என்னால் முடிந்தவரை மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து அதிகப்படியான உணவு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு இரு தினங்களுக்கு கொடுத்தோம். வாடிக்கையாளர்கள் எங்களுக்கு நன்றிகளை கூறிச்சென்றனர். என்னுடன் கடுமையாக உழைத்த ஊழியர்களுக்கு அன்று கூடுதல் சம்பளம் பெற்றுத்தந்தேன். அன்றைய இரு தினங்களும் கடை முதலாளி கல்லா நிறைந்து அவர் மணம் நிறைந்திறுந்தாலும் என் மணம் நிறையவில்லை அரசியல் ரவுடிகளின் அராஜகங்களை நினைத்து.

  • நல்ல கதையப்பா ! ஒரு மரியம் பிச்சையில்லை இந்த நாடே மரியம் பிச்சை போன்ற அரசியல்வாதிகளால் சூழப்பட்டிருக்கிறது என்பதை தவிர எந்த அரசியல்வாதியும் யோக்கியன் இல்லை எந்த கட்சியும் விதிவிலக்கல்ல .நன்றி.

 32. தோழர் உங்களின் நேர்மை என்றும் எங்களுக்கு பிடிக்கும் ஆனால் ,மரியம் பிச்சை குடும்பத்தினர் இதை படித்தால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்….? தோழா

  • அவர் சந்ததிகளுக்கு மனிதபிமானம் இருந்தால் நல்ல மாற்றம் வரும்.

 33. ஒரு பக்க சார்பாக எழுதபடிருக்கிறது இந்த கட்டுரை.மரியம் பிச்சை போன்று வேறு எந்த அமைச்சர் இறந்திருந்தாலும் இதே பாணியில்தான் அரசியல் கட்சியினர் நடந்திருப்பார்.இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.ஆனால் தமுமுக இது போன்ற செயல்களில் ஈடுபட்டது என்று எந்த அடிப்படயில் வினவு செய்தியாளர் குறிப்பிடுகிறார்.எதாவது ஆதாரம் உள்ளதா.தமுமுக freezer box கள் மரியம் பிச்சய்க்கு மட்டுமல்ல அந்த பகுதியில் வசிக்கும் பல ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாகவே வழங்கபடுகிறது.கூட்டணி தர்மத்தின் அடிப்படயில் தமுமுக மற்றும் மமக தோழர்கள் செய்த கடும் உழைப்பினால்தான் மரியம் பிச்சையின் வெற்றி சாத்யம் ஆகியிருக்கிறது.அந்த அடிப்படையிலும் தேர்தல் நேரத்தில் மரியம் பிச்சை கூட்டணி கட்சியினரிடம் நடந்து கொண்ட நல்ல நட்பின் அடிப்படையிலும் அவரது இறப்பு நேரத்தில் தமுமுகவினர் முழுமையாக அவரது குடும்பத்தினருக்கு உதவி இருக்கின்றனர்.சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் அழுகி கரை ஒதுங்கிய மீனவர்களின் உடலையும் மீட்டு ஆம்புலன்சில் கொண்டு சென்று உடலை முழுமையாக அடக்கம் செய்தவர்கள் தமுமுகவினர்தான்.தமுமுகவை ரவுடிகள் என்று குறிப்பிட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.மேலும் விவரங்களுக்கு Tmmk திருச்சி மாவட்ட செயலாளரை (faiz 9944688886)வாசகர்களும் வினவும் தாரளமாக தொடர்பு கொள்ளலாம்.

  • தமுமுக மீதான காழ்புணர்வுதான் இந்த கட்டுரையில் ரவுடிகள் என்று எழுத தூண்டி இருக்கிறது.முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கலப்போராட்டங்களை நடத்திய சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் இளைஞர்களின் மாபெரும் இயக்கமான தமுமுகவை கொச்சை படுத்தும் வினவை வன்மையாக கண்டிக்கிறோம்.உங்கள் செய்தியாளன் ஒரு மறை கழன்றவன் என்றே தோன்றுகிறது.அந்த மூதேவிக்கு தில் இருந்தால் தமுமுகவினர் செய்த அராஜகங்களின் போட்டோக்களை வெளியிடட்டும்.குறைந்த பட்சம் தமுமுக நிர்வாகிகளிடம் அவன் எதாவது கருத்து கேட்டானா…மற்றவர்களை ரவுடிகள் பொறுக்கிகள் என்று எழுதுவதெல்லாம் வீரமா.அப்படி எழுதி எழுத்து பொறுக்கித்தனம் செய்யும் வினவு போன்றவர்கள் வெகு விரைவில் மக்கள் ஆதரவை இழப்பது நிச்சயம்.

 34. நமது கழகத்தின் முப்பெரும் விழாவினை இம்முறை புது டில்லியில் திகார் சிறையில் ஜூன் 3 அன்று நடத்தலாம் என்று நானும், பேராசிரியர் எனும் உதவி ஆசிரியரும் முடிவு செய்து உள்ளோம். அது என்ன முப்பெரும் விழா ?

  ஒன்று – திகார் சிறையில் “தகத்தாய கதிரவனின்” 100 நாட்கள் நிறைவு விழா.

  இரண்டு – கழகத்தின் குல விளக்கு ஒப்பில்லா “கவி” அவர்களின் திகார் சிறை நுழைவு விழா.

  மூன்று – நமது கழகத்தின் டில்லி பிரதிநிதியாக அனுப்பப்பட்ட எனது “பேரன்” அவர்களின் திகார் சிறை வழியனுப்பு விழா .

  ஆக கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் இன்றே முன்பதிவு செய்து புது டில்லி நோக்கி வரும்படி அக மகிழ்வுடன் அழைக்கின்றேன்.

 35. வினவு தளத்தினர் பார்ப்பனர்கள், பார்ப்பன எதிர்ப்பு வேசம் என்பது கிறிஸ்துவர்களையும் முஸ்லீம்களையும் தாக்குவதற்கு என்ரு போட்ட வேஷம் என்று சொல்லும்போது நான் நம்பவில்லை. இந்த பக்கத்தை பார்த்தால் நன்றாகவே விளங்குகிறது.
  உங்களை போன்ற இந்துத்துவ பாசிச மனித ரத்த வெறி பிடித்தவர்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களையும் எளிய முஸ்லீம்களையும் காப்பாற்றுவதற்கு என்றே துவங்கப்பட்டது தமுமுக. வெகு வேகமாக பரவும் இஸ்லாத்தில் நீங்களும் ஒரு காலத்தில் இணைவீர்கள். தமிழ்நாடு தாருல் இஸ்லாமில் இணையும். நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். இஸ்லாத்தில் விரைவில் இணையுங்கள். இல்லையேல் இணைய வைக்கப்படுவீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

  • மைய்தீன் கான்,

   ஒரு கேலி கூத்தான மிரட்டலை விடுத்துள்ளீர்கள். ஜெயலலிதா தனது பதவியேற்பு விழாவில் பாசிச மோடிக்கு விருந்து வைத்தார். முஸ்லிம் ஓட்டுக்களை பொறுக்குவது என்பதற்கு மேல் த.மு.மு.க மீது மயிரளவு மரியாதையும் இல்லாதவர் ஜெ. ஜெயாவின் பாதந்தாங்கியாக செயல்படும் ஜவாஹிருல்லா விரைவில் ஜெயாவிடமிருந்து செருப்படி பட போவது உறுதி.பதவியேற்றவுடன் ஜெயா டி.விக்கு ஜெயலலிதா வழங்கிய பேட்டியில் குஜராத்தை போன்று தமிழகத்தை மாற்றுவேன் என்று கூறினார். காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பதையும் இடதுசாரிகள் மண்குதிரை என்பதையும் தெரிந்து வைத்துள்ளவர் தான் ஜெயலலிதா. எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பி.ஜே.பியுடன் இணைவது உறுதி. உனக்கு உண்மையிலேயே முஸ்லிம் மக்களின் சமூக, ஜனநாயக உரிமைகள் மீது அக்கறை இருந்தால் த.மு.மு.க-வை விட்டு வெளியேறு. அல்லது முக்தார் அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் உசேன், நஜ்மா ஹெப்துல்லா போன்ற துரோகிகள் வரிசையில் அடையாளம் காணப்படுவாய். .

 36. ஒரு விஷயம் நான் தெளிவாக மாறுகின்றேன்… இக்கட்டுரை யில் இருக்கும் (தாமுமுக) சம்பந்தமாக … ஆதாரம் இல்லாமல்… வாய் பூச்சு… பேச்சு இரண்டும் தான் மிகைதுள்ளது …

 37. அதே வேளையில் நான் தாமுமுக ஆதரவு நிலை எடுப்பவன் என்று நீங்கள் விளங்க வேண்டாம் … ஏன் எனில் முஸ்லிம் … எந்த ஒரு கட்சிக்கும் …. காட்சிக்கும்… அடி போக மாட்டான்… அப்படி போவான் என்றால் …. அவன் முஸ்லிம் இல்லை… ( நான் உங்களை மேலும் குழப்பி விட்டேன் போலும் 🙂 …)

 38. அல்லோ சுக்கு,
  எப்போ எதிரியோடு கூட்டு சேரணும் எப்போ கவுக்கணும்னு எங்களுக்கு தெரியும். கூட்டு சேரவதாலோ, கட்சியில் உறுப்பினர் ஆவதோ ஒரு போர்முறை தந்திரம். முஸ்லீம்களை குறைவாக எடை போட வேண்டாம். இன்றைக்கு அதிமுகவுடன் கூட்டு வைத்தாலும், எதற்காக கூட்டு வைத்திருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியாதா? இறுதியில் தமுமுக தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யபோவதை பார்க்கத்தான் போகிறாய்.

 39. Never ever think that the killing in Dantewada and other naxal infested areas are violation of human rights or rowdyism. Because, they were done by the ‘Maoists’. Days are numbered for Maoists and their bretheren Ma. Ka. E. Ka.

 40. கட்டுரை அருமை…

  முதலில் அரசியல் ஒழித்தால் நாடு முன்னேறும்

  Sukdev June 2, 2011 at 6:28 pm Permalink – மெய்பித்திருக்கு நன்றி

  மைதீன் கான் June 2, 2011 at 10:09 pm Permalink
  //தமுமுக தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன்// – மெய்பித்திருக்கு

 41. ஆமா இங்க எல்லாவனும் ரவுடிங்க
  ம.க.இ.க மட்டும் ரொம்ம்ம்ம்ம்ப ச்சாஃப்ட்டான அகிம்சைவாதிங்க.
  …..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க