Wednesday, September 27, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!

-

கோவையில் தனியார் பள்ளி ஒன்றின் அதிகமான கட்டணம்  வசூலிக்கும் கொள்ளையால்  சங்கீதா என்றொரு தாய் தற்கொலை செய்துகொண்டார். இந்த கொலைக்குத்  தனியார்மயக் கொள்கைதான்  முழுக்காரணம். இந்த தனியார்மய கொள்ளைக் கூட்டத்திற்க்கெதிராக பெற்றோர்கள் போராட வேண்டும் என்ற நோக்கோடு  மனித உரிமை பாதுகாப்பு மையம்  கோவையில் பெரும் பிரச்சாரம் செய்து வருகிறது.

அதன் அங்கமாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக்   கண்டித்தும் வேடிக்கை  பார்க்கும் தமிழக அரசை கண்டித்தும்   சுவரொட்டி ஒட்டியும்,  துண்டு பிரசுரம் வினியோகித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து கோவை செல்வபுரம் பகுதியில் ஸ்ருஷ்டி வித்யாலய என்ற தனியார்பள்ளி, கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக அந்தப்பகுதி பெற்றோர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு பள்ளியின் அடாவடிபோக்ககை பற்றி கூறினர்.  உடனடியாக பள்ளிகெதிராக பெற்றோர்களை ஒருங்கிணைத்து  பள்ளி முன் 25 /5 /2011 அன்று  முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெற்றோர்களை மிரட்டும் தொனியில் பேசி, அராஜகமாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாகம் HRPC போராட்டத்தின் இறுதியில் பெற்றோர்களிடம் தவறை ஒப்புக்கொண்டு  இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டோம்,  அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் வசுலீப்போம்,  பணம் கட்டுவதற்கு ரசீது தருவோம், அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுப்போம்,   கட்டணப் பட்டியலை போர்டில் எழுதி வைப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் மீது TC  கொடுப்பது, துன்புறுத்துவது போன்ற  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கமாட்டோம்    என்று கூறி பெற்றோர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

போராட்டத்தில் திரளான பெற்றோர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகள் என்பதால் மனம்போன போக்கில் இனியும் கொள்ளையடிக்க முடியாது என்பதை இந்த போர்க்குணமிக்க போராட்டம் எடுத்துக்காட்டுகிறது. கோவை மனித உரிமை பாதுகாப்பு மையமும் தொடர்ச்சியாக இந்தக் கல்விக் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகையில் சங்கீதாவின் மரணம் கோவையில் ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதற்கு காரணாமாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -

_____________________________________________________________________

– தகவல், படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை
______________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

    • ///போங்கடா உங்களுக்கு வேற வேலை இல்ல…/// your telling this but the parents all thanking to h.r.p.c

  1. the truth is many parents will not join you because they are wealthy enough to pay excess fees and they will consider it as an insult to their image. especially those of schools like perks, etc. I would be happy if there are no residential schools because people who are in the same locality join their children as hostlers and avoid seeing them for a long time. They do not understand the effects of doing so. They don’t want to see and take care of their children , all they want is, their children should score marks and speak English.

  2. கோவை மக்களின் எழுச்சியை வரவேற்கிறேன்.ஒரு சாவு நடக்கும் வரை காத்திராமல் தவறுகள் நடக்கும்போது இதே எழுச்சி தன்னியல்பாக நிகழ வேண்டும்……….அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வோட்டு போட்டுட்டு எது நடந்தாலும் வேடிக்கை பார்த்துட்டு இருப்பது சமூகபொறுப்பு அல்ல…..அப்புறம் இங்கே வரும் அம்பிகள் இனி பேசி பேசி என்ன ஆச்சு எழுதி எழுதி என்ன ஆச்சு என்று கேட்க மாட்டார்கள்!அந்த ஒரு விஷயத்துக்காகவே கோவை மக்களை வணங்குகிறேன்.ஏற்கெனவே மனித உரிமை பாதுகாப்பு மையம் விருத்தாசலம் மற்றும் திருச்சியிலும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக மக்களை திரட்டி அதிரடி போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

  3. நிறைய அரசுப் பள்ளி இருக்குண்னேன் அதுல மாணவர்களை படிக்க வைங்கண்னேன்

    அரசுப் பள்ளியில் நிறைய பயிர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர் அவர்களை நம்பி நம் தமிழ் வழி கல்வியில் மாணவர்களை படிக்க வைக்கலாம் அதை விட்டு விட்டு ஆங்கில வழி கல்வி மோகத்தில் எந்த அனுபவமும் இல்லாத சமீபத்தில் ஆசிரியர் பயிர்ச்சி முடித்த ஆசிரியர்களை கொண்டு நடத்தபடும் மெட்ரிக் வழி கல்வியை ஏன் நாடிப் போக வேண்டும்

    நீங்கள் செய்வது கோக் பெப்சி விலை அதிகம் உள்ளது அதை குறைக்க வேண்டும் என்று கம்பெனி வாசலில் நின்று போராடுவதை போல் உள்ளது. கல்வி தனியார் மயமாகி நீண்ட நாட்களாகி விட்டது தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அது பொன் முட்டையிடும் வாத்து
    அவர்களுக்கு அது தொழில் ஒரு பொருளுக்கு சந்தையில் மதிப்பு இருக்கும் வரை அதன் விலை அதிகமாக தான் இருக்கும். அதர்கான மதிப்பை ஏற்றியது நாம் தான்

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்தில் 30 அரசு பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் ஆனால் அங்கு தேவையான அளவு ஆசிரியர்களும் மற்ற வசதிகளும் உள்ளன இருந்தும் மாணவர்கள் வரவில்லை ஏன் ஆங்கில வழி கல்வி மோகம்

    இந்த விசயத்தில் போராடுவதை விட்டு விட்டு மக்களிடம் ஆங்கில வழி கல்விக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லது

  4. புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் எல்லாம் ஆங்கிலவழிகல்வியை மையப்படுதியே உருவக்கப்பட்டிருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க