முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வி: 'பெரிய' அம்மா vs 'சின்ன' ம.க.இ.க - உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!

சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!

-

மச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி அமைச்சர், துறைச் செயலர், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட புரட்சித் தலைவியின் போர்ப்பபடைத் தளபதிகள் அனைவரும் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் பாசறை அமைத்து போர்த்திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

வரலாறு காணாத வெற்றி பெற்ற புரட்சித்தலைவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க முதல் மசோதாவுக்கே இடைக்காலத் தடையா? முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ வா? அக்கா மூடு அவுட் என்பதை தங்கச்சி தெரிவித்திருப்பார். அம்மாவின் நெற்றிக்கண் திறப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் கவனித்திருப்பார்கள். சமச்சீர் கல்வி நல்லதா கெட்டதா, குட்டையா நெட்டையா என்பதையெல்லாம் பேசுவதற்கு இனி நேரமில்லை. “உயர்நீதிமன்றத் தடையைத் தகர்த்தெறிய என்ன செய்ய வேண்டுமோ அதைச் வேண்டும்” என்பதுதான் தளபதிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரபகவானுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் மூலம் இடைக்காலத் தடையைத் அகற்ற வாய்ப்பில்லை என்று ஜோசியர்கள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது.

“கவிதையில் எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கேற்ப பரிசுத்தொகையைக் குறைத்துக் கொள்ளலாம்” என்று கூறி, சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள “பிழையான” பாடங்களை நீக்குவதற்கான அதிகாரத்தையும் அம்மாவின் அரசுக்கு வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு. எனினும் இத்தகைய சோளப்பொறிகளால் அம்மாவைத் திருப்திப் படுத்தி விட முடியுமா என்ன?

திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் நிலவிய வெறுப்பின் காரணமாக தான் வெற்றி பெறவில்லையென்றும், 1991-96, 2001-2006 ஆகிய இரு காலகட்டங்களில் தாங்கள் அனுபவித்த பொற்கால ஆட்சியை எண்ணிப்பார்த்து, அந்தப் பொற்காலத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று தமிழக மக்களின் இதயத்திலிருந்து வெடித்துக் கொப்புளித்த வேட்கையின் விளைவுதான் இந்த இமாயலய வெற்றி என்றும் அம்மா ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேற்படி பொற்காலம் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஒண்ணாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் ஆட்சியின் முதல் காட்சியை ஓபன் பண்ணும்போதே பழைய பொற்காலத்தின் “எஃபெக்ட்” தெரியவேண்டும் என்பதை உத்திரவாதப் படுத்தியிருக்கிறார் புரட்சித்தலைவி.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறந்திருக்க வேண்டும். அது ஜூன் 15 க்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்மாவின் அரசுக்கு சாதகமாக அமைந்துவிட்டால், செப்டம்பர் மாதம் முடியும்வரை மாணவர்களுக்கு விடுமுறைதான். இதுநாள்வரை வகுப்பறை இல்லாத பள்ளியையும், வாத்தியார் இல்லாத வகுப்பறையையும் மட்டுமே பார்த்திருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த முறை பாடப்புத்தகமே இல்லாத “கல்வி”யையும் காண்பார்கள்.

அக்டோபர் நவம்பரில் மழைக்காலம் தொடங்கும் வரை கோடைக்கால விடுமுறையை நீட்டிக்கும் ஆட்சி, பொற்கால ஆட்சியாகத்தானே இருக்கமுடியும்? இதை மாணவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டுமா என்ன? ஓபனிங் ஷாட்டிலேயே முழுப்படத்தின் கதையையும் நுணுக்கமாக கூறும் திறமை புரட்சித்தலைவியைத் தவிர வேறு யாருக்கு வரும்?

“பாடப்புத்தகத்துக்காக 4 மாத காலம் மாணவர்கள் காத்திருக்க வேண்டுமா?” என்று சிலர் குமுறக்கூடும். 2006 இலிருந்து 2011 வரை 5 ஆண்டு காலம் இந்தப் பொற்கால ஆட்சி தொடங்குவதற்காக 7 கோடி தமிழ்மக்கள் காத்திருக்கவில்லையா? ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக புரட்சித்தலைவியே கொடநாட்டில் 5 ஆண்டுகள் தவமிருக்கவில்லையா? அவ்வளவு ஏன், அம்மாவின் தரிசனத்துக்காக கூட்டணிக் கட்சிக்காரர்கள் போயசு தோட்டத்தின் வாயிலில் அன்றாடம் காத்திருக்கவில்லையா? பொற்காலம் வேண்டுவோர் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

எப்பாடு பட்டேனும் தமிழக மாணவர்களைப் பொற்காலத்துக்குள் தள்ளிவிடவேண்டும், இல்லையேல் தங்களது எதிர்காலம் இருண்டகாலமாகிவிடும் என்ற உண்மை புரிந்திருப்பதனால்தான் கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும், அட்வகேட் ஜெனரலும் சனிக்கிழமை காலை முதல் உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டிலேயே படுத்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் இப்படி ஒரு பொற்காலத்துக்குள் மாணவர்கள் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் ம.க.இ.க சார்ந்த மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மற்றும் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் ஆகிய அமைப்புகள். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்துள்ள கோரிக்கை.

இன்று – 13.6.2011, திங்கட்கிழமை – காலை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் பி.பி.ராவ் ஆஜரானார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். வழக்கின் விவரங்களைப் படித்துவிட்டு வரவேண்டியிருப்பதால் விசாரணையை நாளைக்குத் – 14.6.2011. செவ்வாய்க் கிழமை – தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை. விசாரணை நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. ஒரு வேளை மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாலும், கேவியட் மனு தாக்கல் செய்திருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வாதங்களைப் பரிசீலிக்காமல் இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்காது.

அம்மாவின் அரசு vs மனித உரிமைப் பாதுகாப்பு மையம்! இவ்வழக்கில் வெளிப்படையாகத் தெரியும் வாதி-பிரதிவாதிகள் இவர்கள். ஆனால் இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள்ளே “தனியார் கல்வி vs பொதுக்கல்வி”, “மனுநீதி vs சமநீதி” என்ற முரண்பாடு ஒளிந்திருக்கிறது. பொற்காலத்துக்குள் ஒளிந்திருக்கும் இருண்டகாலம் போல. இருளை அடையாளம் காட்டுவோம்!

_____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. உச்சநீதி மன்றத் தீர்ப்பை ஜெ தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டாலும் தோல்வி என்னவோ ஜெ யுக்குத்தான். முதல் சுற்றில் மண்ணைக் கவ்வியவர் அடுத்தச் சுற்றில் வென்றால் அது மோசடி வெற்றி என்பதை பாமரனும் புரிந்து கொள்வான். களத்திலும் தளத்திலும் போராடும் ம.உ.பா.மையம் வெற்றி பெற வாழ்த்துகள்!

 2. //வரலாறு காணாத வெற்றி பெற்ற புரட்சித்தலைவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க முதல் மசோதாவுக்கே இடைக்காலத் தடையா? முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ வா? அக்கா மூடு அவுட் என்பதை தங்கச்சி தெரிவித்திருப்பார். அம்மாவின் நெற்றிக்கண் திறப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் கவனித்திருப்பார்கள். சமச்சீர் கல்வி நல்லதா கெட்டதா, குட்டையா நெட்டையா என்பதையெல்லாம் பேசுவதற்கு இனி நேரமில்லை. “உயர்நீதிமன்றத் தடையைத் தகர்த்தெறிய என்ன செய்ய வேண்டுமோ அதைச் வேண்டும்” என்பதுதான் தளபதிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.//
  உண்மை, அம்மாவின் விருப்பம் அது தான் என்றால் எதையும் செய்யும் மனித ஜடங்கள்.

 3. மகஇகவின் இம்முயற்சி வர​வேற்கத்தக்க நல்ல முயற்சி. ஆனால் அது குறித்து எழுதப்படும் கட்டு​ரைகளின் தன்​மை, வடிவம் ஆகியவற்றில் ​தோழர்கள் சற்று ஆழ்ந்த கவனம் ​செலுத்த ​வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆ​சை.
  ​பொதுவாக​வே உங்களு​டைய எல்லா கட்டு​ரைகளிலும், த​லைப்பு உட்பட நக்கல், ​நையாண்டி, எகத்தாளம் ​போன்ற விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் ​கொடுக்கப்படுகிறது. எனக்கு என்ன​வோ இ​வை எந்தளவிற்கு அரசியல் பயன் வி​ளைவிக்கும் என்று புரியவில்​லை.
  குறிப்பாக கல்விப் பிரச்சி​னையில் தமிழகம் முழுவதும் மிக சீரியசான பிரச்சி​னையாக உள்ள இந்த ​நேரத்தில் ​பெற்​றோர்களும், கல்வியாளர்களும், ​பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இ​வை குறித்த கட்டு​ரைகள் மிகுந்த ​பொறுப்புணர்​வோடும், ஜாக்கிர​தை உணர்​வோடும், நாகரீகமாகவும் இருக்க ​வேண்டியது அவசியம்.

  உங்களு​டைய அரசியல் நி​லைப்பாடுகள், தத்துவப் பார்​வைகள் எத்த​னை சரியானதாக இருந்த ​போதிலும் கட்டு​ரைகள் ​சொல்லாடல்களின் தன்​மை ​தொடர்ந்து புதிய வாசகர்க​ளையும், மாற்றுக் கருத்துக்க​ளை ​தெரிந்​தோ ​தெரியாம​லோ ஏற்றுக் ​கொண்டிருப்பவர்க​ளையும் அந்நியப்படுத்துவதாக​வே அ​மையும், மாற்றுச் சிந்த​னை உ​டைய சாதாரண மக்க​ளை உணரச் ​செய்வதாக அ​மையாது என்பது என் எண்ணம்.

  எத்த​னை ​​கோபமூட்டும் விசயங்களிலும் ​பொறு​மை​யைக் ​கைவிடாது, சீரிய ​நோக்​கோடு ​பொறு​மையாக, நிதானமாக, ​​பொறுப்புணர்​வோடு, நாகரீகமாக விவாதிப்ப​தைத் தவிர ​வேறு வழியில்​லை. அது​​வே நீண்ட கால ​நோக்கில் நிரந்தரமான அரசியல் பயன் வி​ளைவிக்கும் எனக் கருதுகி​றேன்.

  • நீங்கள் கூறுகின்றபடி கட்டுரையை எழுதிய தோழர் எங்கேயும் பொறுமையையும், நிதானத்தையும் இழக்கவில்லை, நீங்கள் அவ்வாறு கூறுவதற்கு ஆதாரமில்லை, அநாகரீகமாகவும் எழுதப்படவில்லை, அவ்வாறு இங்கு இருப்பின் குறிப்பிட்ட வரிகளை மேற்கோளாக காட்டவும்.

   இந்த கட்டுரை எவ்வளவு அருமையான வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது, சில மொக்கையர்களுக்கும், எண்ணிக்கையை கணக்கு போடும் பலருக்கும் உணர்த்த நக்கல் அவசியம். இந்த கட்டுரை மிகச்சிறந்த கட்டுரை, இது போன்ற கட்டுரைகள் சிறந்த அரசியல் பலன்களை நிச்சயம் விளைவிக்கும்.

 4. இவ்வளவு சூடாகவும் சுறுசுறுபாகவும் வினவுதான் செயல்பட முடியும் .
  ball by ball commentry போல இருக்கு கட்டுரை .
  அதுமட்டுமல்ல வெறும் விமர்சகராக மட்டுமில்லாது செயலாளிகளாகவும்
  எவ்வளவு பாராட்டினாலும் தகும்

 5. உச்சநீதிமன்றம் அரசின் மனுவை விசாரிக்கவே கூடாது என்று மனுப் போட்டிருக்கிறார்களா இல்லை எங்கள் தரப்பினை விசாரிக்காமல் இடைக்கால தடை/ஆணை பிறப்பிக்க கூடாது என்று போட்டிருக்கிறார்களா.எதையும் கொஞ்சம் தெளிவாக தெரிந்து கொண்டு எழுதலாமே. ஒரிரு வழக்குகளில் (இடைக்கால) வெற்றி கிடைத்ததும் தலைகால் தெரியாமல் ஆடுவது நல்லதல்ல.

 6. அதிஷ்ட வசமாக ராஜிவ் 1991ல் புண்ணியத்தில் ஆட்சிக்கு வந்தார். அவர் செய்த ஆர்பாட்டதின் பலனை அனுபவித்தார்.

  2001 மக்கள் கொடுத்த மற்று அரசு தான் ஜெயலலிதாவின் வெற்றி அன்றி வேரில்லை. இது ஜெயலல்லிதாவே எதிர்பாராத வெற்றி என்றே பல சொன்னதுண்டு. ஆனால் அப்போதும் அவரின் நிதானமற்ற போக்கல் பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் இழந்தபோது ஆப்பசைத்த குரங்கு போல் துடித்தார்.

  2011ல் திமுக அதிருப்தியில் தான் ஆட்சியை பிடித்தோம் என்பதை மறந்து இப்போது திரும்பவும் ஆப்பசைக்கிறார்.

 7. இறக்கம் வேண்டாம், கனிக்கு பெயில் தரவேண்டாம், அதை மீறி தந்து சுப்ரீம் கோர்ட் தனது தரத்தை கெடுக்க வேண்டாம். அதான் தீகாரில், இட்லி, தோசை, சாம்பார் பின்னர் பேட்மிண்டன் எல்லாம் இருக்கே. கனியின் தந்தை, தனது மகள் ஒரு பூ, திகாரில் அடிக்கும் வெயில் யில் பூ வாடிவிடுமாம். இதெல்லாம் ரொம்ப ஓவர், இந்த கருணாவை, நடுத்தர குடும்பத்தின் வீட்டில், கத்திரி வெயிலில், சுட சுட fஅன் போட்டு அமர வைக்கணும். இதுதான், முக்கால்வாசி, தமிழர்கள், இந்தியர்களின் வீட்டில் உள்ள சூழல். பூ வாமல, முன்ன பின்ன இவர் பூவ பார்த்தாரா? தமிழ் மக்கள் பார்த்த பூ – வாழ்கையில் கசப்பு, வீட்டில் எரியாத அடுப்பு, உங்கள் குடும்பத்தை கண்டு வியப்பு, வெறுப்பு, கடுப்பு, தேர்தல் மக்களுக்கு குடுத்த வாய்ப்பு, உங்களுக்கு வைத்தது ஆப்பு, இன்னமும் குறையவில்லை சாணக்கியரின் நடிப்பு

 8. //பூ வாமல, முன்ன பின்ன இவர் பூவ பார்த்தாரா? தமிழ் மக்கள் பார்த்த பூ – வாழ்கையில் கசப்பு, வீட்டில் எரியாத அடுப்பு, உங்கள் குடும்பத்தை கண்டு வியப்பு, வெறுப்பு, கடுப்பு, தேர்தல் மக்களுக்கு குடுத்த வாய்ப்பு, உங்களுக்கு வைத்தது ஆப்பு, இன்னமும் குறையவில்லை சாணக்கியரின் நடிப்பு//

  இது நல்லாருக்கு….

 9. நன்றாகவே அறிந்திருக்கிறோம் கபட வேடதாரியே.. குளிரடித்தாலும் பரவாயில்லை, முக்காடு போட்டுக்கொண்டாவது இருக்கிறேன் என்று டெல்லியில் முகாமிட்டு இருந்தது, இலங்கை தமிழரின் கண்ணீர் துடைக்கவா? அஞ்சா நெஞ்சன் என்று சொல்லிக்கொண்டு, அந்த அம்மா ஆட்சி வந்ததும் மதுரையை விட்டு ஓடி விடும் மகனுக்கு மந்திரி பதவி பெறவா? வீட்டிலிருப்பவர்களிடம் கூட சொல்லாமல் வாக்கிங்கா வந்தீர்கள்? தள்ளுவண்டியில் உம்மை தள்ளி கொண்டு வந்ததையும், தலைமாட்டில் ராசாத்தியும், கால்மாட்டில் தயாளுவும் அமர்ந்திருக்க, அல்லக்கைகள் புடை சூழ, ஏர்கூலர் சகிதம், ராஜபோக படுக்கையில சில மணிநேரம் படுத்திருந்து நீர் நடித்த நாடகத்தை இந்த உலகமே கண்டு வியக்கவில்லை.. வேதனை கொண்டது.. அங்கே, வானிலிருந்து விழும் குண்டுகளில் இருந்து தன் குஞ்சுகளை காக்க போராடிய ஒவ்வொரு தாயும், நிச்சயம் உம் போராட்டத்தை கண்டிருந்தால் காரி உமிழ்ந்திருப்பாள். எம்மக்கள் எல்லாம் வீதிகளில் ஒரு பராரிகளை போல வந்ததை கண்ட நேரம் எம் கண்களில் ரத்தம் வழிந்தது. நீர் அதை தடுக்க வாய் பேச முடியாத ஊமை பிரதமருக்கு கடிதம் எழுதினீர். எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலித்த போது, தந்தி அடித்தீர். மனிதச்சங்கிலி போராட்டத்தில் நாங்கள் எல்லாம், எம் இனத்தின் துயர் துடைக்க கொட்டும் மழையில் நின்ற போது நீர் காரை விட்டு இறங்காமல் கையசைத்து சென்றீர். உண்ணாவிரதம் என்ற பேரிலே ஏதோ கூத்தை நடத்தினீர். அதையாவது சரியாக செய்தீரா? மதிய சாப்பாட்டு வேளை நெருங்கியதுதான் தாமதம், உள்துறை அமைச்சர் சிதம்பரம், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக சொன்னார் என்று நீர் சொல்லி விட்டு வீட்டிற்கு செல்லும் முன்னரே, சிதம்பரம் நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை என்று அறிக்கை விட்டாரே.. இனமானத்தமிழன் என்றால் திரும்பவும் வந்து உண்ணா விரதம் எண்டு சொல்லி படுத்திருக்க வேண்டியதுதானே..இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்ற தயக்கமா? உயிருக்கு போராடுபவனுக்கு உதவ நீர் அனுப்பிய மடல்களும், தந்திகளும் எத்தனை தூரம் உதவியது? பரந்து விரிந்த உம் குடும்பத்தின் ஏதாவது ஒரு அங்கத்தினருக்கு ஒரு பதவி கிடைக்கவில்லை என்றாலும், மந்திரி சபையில் இருந்து விலகல், எம்.பி.க்கள் ராஜினாமா என்று பல தகிடுதத்த வேலைகளை செய்த நீர், இறுதி போரின் சமயத்திலே, இலங்கை மக்களின் துயர் துடைக்க வேண்டி ஒப்புக்காவது நாங்கள் மத்திய அரசிலிருந்து விலகுகிறோம் என்று அறிக்கை விட்டீரா? கொள்ளைக்காரி கனிமொழி ஜெயிலில் கிடந்தால் ஒரு பூவை வைத்தால் வாடி விடும் வெயிலிலே இருக்கிறார் என்று ஓநாய் கண்ணீர் வடிக்கும் நீர், கம்பிகளுக்கு பின்னால் அனுதினமும் மரணத்துடன் போராடும் எம் மக்களின் நிலை பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? 1960 களில், நான் அந்த போராட்டம் நடத்தினேன், இந்த போராட்டம் நடத்தினேன் என்று கதை விடும் நீர், தேவை படும் நேரத்தில் என்ன போராட்டம் நடத்தினீர்?? இதையெல்லாம் பார்த்து பிறகும் நாடகம் என்று கூறாமல் எமக்காக போராடிய நீதி தேவன் என்றா கூறுவார்கள்? சுய தம்பட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டு, போய், வழக்கம் போல் ஏதாவது விஞ்ஞான ஊழல் செய்வதற்கு கூட்டு சதியில் ஈடுபடும். ஆண்டிமுத்து ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் உதவுவார்கள்.

 10. சட்டசபையில் தனி மெஜாரிட்டியில் அதிமுகவின் ஜெ ஆளும் கட்சி, ஆனால் எதிர் கட்சி விஜயகாந்த் தானே ,குவார்ட்டர் குடுத்தாலே போதும், அடங்கி விடுவார். திமுகவை பற்றி கேட்கவே வேண்டாம்..எந்திரிக்கவே மூணு வருஷம் ஆகும். இனி ஜெ வின் எதிர் கட்சி மகஇக தான்…மக்களின் வர்க்க நலனை ஆளும் கட்சியாக மகஇக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை…போராட்டங்களை முன்னெடுக்கும் மகஇக தான் இனி புரட்சியையும் வழிநடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை…கடந்த 15 ஆண்டுகளாக மகஇக ஆதரவாளராக உள்ளதில் பெருமை கொள்கிறேன்.(நான் உறுப்பினராக இல்லை, ஆனால் புரட்சியை நேசிப்பவனாக அதனை அடைய வேண்டும் என்று தாகத்தோடு, என் நண்பர்களையும், உறவினர்களையும், உடன் பணியாற்றும் தோழர்களையும் சில முதலாளிகளையும் மகஇக ஆதரவாளர்களாக மாற்றி என் கடமையை ஆற்றியுள்ளேன். இப்போது அவர்கள் பு.ஜ புக வினவு வாசகர்களாக உள்ளனர்.) வீர வணக்கம் தோழர்களே… புரட்சி வெல்லட்டும்…

  • சட்டசபைக்கு தேர்தலில்,

   மக்களின் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பானா வோட்டுக்களால் வெற்றியை

   கைப்பற்றிய ஜெயா,எதிர்க்கட்சியை பழிவாங்குவதாக நினைத்து மக்களின் எதிர்ப்பை

   சந்திக்கிறார்.சமச்சீர் கல்வி மக்களின் அடிப்படை உரிமையாகும்.உச்சநீதிமன்றமும் அதை

   உறுதி செய்யும்.ம.க.இ.க, மனித உரிமை பாதுகாப்பு மையம் & மாணவர் கல்வி

   உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் அனைத்து போராட்டக்காரர்களுக்கும்

   வாழ்த்துக்கள்.வெற்றி நமதே @ மக்கள் மன்றம்.

 11. ‘சமச்சீராய்’ காலில் விழுவோம்
  ========================
  அய்யா கொடுத்தார், அதனை
  அம்மா பறித்தார் எனக்
  குழந்தையின் கல்விக்கு
  எண்ணப்பட உள்ள பணக்
  கற்றைகளை எண்ணியிருக்கும் பெற்றோரின்
  சோகம் பெரிதா?
  இந்தக் கற்றையை விட, அய்யாவிற்கு
  இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையும்,
  திகாருக்குள் வாடும் பூவின் சோகமும் பெரிதா?
  சமச்சீருக்குக் கல்லறையா?
  பணப்பெட்டியின் சில்லறையா?
  ‘மெட்ரிக்குலேஷன்’ தளபதியின்
  பொருள் பொதிந்த சோகம் பெரிதா?
  சமச்சீருக்கு சட்டசபையில்
  ராணி குழிவெட்ட, வலப்புறமும் இடப்புறமும்
  மண்ணள்ளிப் போட்ட வலது இடதுகளின்
  கருத்தரங்க நாடகத்தின் கவலை பெரிதா?
  பெரிதாகிய கவலையால் வெளிறி வெளியேறிய
  சிவப்போ கால்வழியே ஓடுகிறது.
  உள்நாட்டுத் தமிழா,
  கவலையோடு இருந்ததினி போதும்..
  சமச்சீரெல்லாம் அப்புறம் பாரும்.
  “பாத்தியா பாத்தியா பயாஸ்கோப்பு பாத்தியா”
  “சட்டசபைப் பாப்பாத்தி தீர்மானம் பாத்தியா”
  வெங்காயத் தோல் உரித்தோம் – பெரியார்
  திடலை விட்டு ஓடிவந்தோம்..
  முதல் ஆளாய்ப் பூசை வைத்து
  ‘ஆசிரியரை’யே முந்திக் கொண்டோம்..
  ‘பாப்பாத்தி கைமணமும், தமிழ் ஈழப் பத்தியமும்’
  வீரவாள் கொடுப்பதற்குப் போதாதா?
  தோட்டத்திலே புல்லறுக்கும்
  மாவீரன் கதை கேளு..
  சேலைகட்டிய பிரபாகரனைக்
  கோட்டையிலே நீ பாரு..
  சமச்சீராம்..கல்வியாம்..வெங்காயம்..
  ராஜபக்சே நாக்கைப் பிடுங்கிச் சாக அம்மா ஆணையிட்டார்..
  ‘உலகத் தமிழினமே பாராட்டி’ மயங்குகையில்,
  உருப்படாத தமிழா,
  ஈழத் தாயை எதிர்க்கலாமா?
  சமச்சீரை ஓரம்கட்டி நன்றாக உற்றுப்பார்
  நாதியத்த ஈழத்தமிழன் நாக்கு வழிக்க
  வகை செய்த தீர்மானம் பார்..
  பெரியாரின் ஆசியோடு பாப்பாத்தியைக்
  கும்பிட்டுக் கரைசேரு..
  ‘சமச்சீராய்’ காலில் விழு..
  இதுதாண்டா ‘பெரியாரின் திராவிட’க் கல்வி..
   கவிதைப்பித்தன்

 12. தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. கூட்டாய் அணி திரள்வோம். புது யுகம் படைப்போம். பாப்பாத்தியின் சதியை முறியடிப்போம்

 13. டெல்லி: தமிழகத்தில் இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்றும் இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  திமுக ஆட்சியில் கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் விரிவாக்கப்படவிருந்தது.

  ஆனால், அதிமுக அரசு அமைந்ததும், இந்தத் திட்டம் தரமானதாக இல்லை, எனவே நடப்பு ஆண்டில் இது நிறுத்தி வைக்கப்படுகிறது. நிபுணர் குழு அமைத்து இதை சீரமைத்த பின்னர் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது.

  இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. மேலும், நடப்பு ஆண்டிலும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

  இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், கடந்த திமுக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் எழுதிய பாடல்களை பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

  கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தங்களது பாடல்களைப் படிக்கும்படியான கட்டாய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவேதான் இவற்றை நீக்கி தரமான பாடங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முடிவு செய்தது என்று கூறப்பட்டிருந்தது.

  இந்த மனு நீதிபதிள் பி.எஸ்.செளகான், ஸ்வதேந்திர குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

  அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

  1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

  இந்தக் குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் இடம் பெற வேண்டும். இவர்கள் தவிர பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.

  2 வாரத்திற்குள் இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.

  உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2,3,4,5,7,8,9,10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

 14. I am accepting the way that you have written the article.This is fantastic.But why you are not appericiating DMK Govt that gave the Samacheer Kalvi(Infact this is their Duty).But any way we have to accept that they have done atleast this work correctly during their period and this is Just the beginning.

 15. அட‌ என்ன‌ங்க‌ நீங்க‌ யாரும் முன்னேற‌க் கூடாது. ப‌ள்ளிக்குட‌த்துல‌ ந‌ல்லா அதிக‌மா க‌ட்ட‌ண‌ம் வ‌சூலிக்க‌ணும்னு தான‌ அம்மாவ‌ ஜெயிக்க‌ வைக்க‌ ப‌டாத‌ பாடு ப‌ட்டு செல‌வு ப‌ண்ணி முத‌ல்வ‌ர் ஆக்கி இருக்காங்க‌, அவ‌ங்க‌ளுக்கு எதிரா அம்மா எதாவ‌து செய்ய‌ முடியுமா? அது ந‌ம்பிக்கை துரோக‌ம் இல்லையா? பாவ‌ம் அவ‌ங்க‌ நிலைமையையும் கொஞ்ச‌ம் யோசிச்சு பாருங்க‌,

 16. முத‌ல்வ‌ர் க‌வ‌ன‌த்திற்கு க‌ருணாநிதி குடும்ப‌த்து பாட‌த்திட்ட‌த்தை ம‌ட்டும் க‌ண்ணில் காட்டி இருப்பார்க‌ள். இதை த‌விர‌ ம‌ற்ற‌ பாட‌ங்க‌ள் த‌ர‌மான‌து என்ப‌தை ம‌றைத்து இருப்பார்க‌ள்.வின‌வு தோழ‌ர்க‌ளே ப‌ழைய‌ பாட‌த்திட்ட‌த்தின் த‌ர‌க்குறைவையும், த‌ர‌மான‌ புதிய‌ பாட‌த்திட்ட‌த்தின் தேவையையும் அர‌சுக்கு வ‌லியுறுத்துங்க‌ள். பொற்றோர்க‌ளுக்கும் புரிய‌ வையுங்க‌ள். அப்போது தான் இத‌ற்கு ஒரு ந‌ல்ல‌ தீர்வு கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க