‘மார்க்சிஸ்டு’கள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளி வர்க்கத்துக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று அம்மாவையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் மார்க்சிஸ்டுகள் என்பதுதான் புது விசயம்.
சென்ற 8.6.2011 தினமணியை எடுத்துப் பாருங்கள்.
சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் என்ற பெயரில் அதனை ஒழிப்பதற்கு அம்மா கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்த முத்துக்குமரன் குழு 110 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்த்து. ஆனால் அதில 3,4 திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரைகுறைக் கல்வியாக சமச்சீர் கல்வித்திட்டத்தை நிறைவேற்றினார்கள்… இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித்திட்டத்துக்கான திருத்த மசோதாவை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ ஆறுமுகம், “இந்த சட்டமுன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவாகும்” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். (தினமணி, 8.6.2011 பக்கம் 9)
அதே 8 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியைச் சார்ந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் “சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி” சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். (தினமணி பக்கம் 6)
அதன் பின் 10 ஆம் தேதியன்று மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.
உடனே 11 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சி செயலர் இராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுகிறார்.
“சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சியும் ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது. இதையே கல்வியாளர்களும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”
இது எப்படி இருக்கு? அதாவது பொதுப்பாடத்திட்டத்தை நிறுத்துவதற்கும், அச்சிட்ட நூல்களை முடக்குவதற்கும் எதிராக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்தைத்தான் மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாம். மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தி வரும் இந்தக் கருத்தைத்தான் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துகிறார்களாம்.
ஏற்கெனவே என்றால் எந்த ஏற்கெனவே? 11 ஆம் தேதிக்கு முன்னால் உள்ள “ஏற்கெனவே” என்பது 7 ஆம் தேதி. அதற்கும் முந்தைய “ஏற்கெனவே” என்பது திமுக ஆட்சிக்காலம்.
ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது சமச்சீர் கல்வி சட்டத்தை மார்க்சிஸ்டு கட்சி ஆதரித்தது உண்மை. இதுதான் “முதலாவது ஏற்கெனவே”.
இந்த மாதம் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி ஒழிப்பு மசோதாவை “சமூக நீதிக்கான சட்டமுன்வடிவு” என்று கூறி ஆதரித்ததும் உண்மை. இது “இரண்டாவது ஏற்கெனவே”.
இதில் எந்த “ஏற்கெனவே” பற்றி குறிப்பிடுகிறது மார்க்சிஸ்டு கட்சி என்று நமக்குப் புரியவில்லை. ஆனால் வேறொரு விசயம் புரிகிறது. சமச்சீர் கல்வியை ஆதரிப்பவர்களும் சரி – எதிர்ப்பவர்களும் சரி, யாராயிருந்தாலும் மார்க்சிஸ்டு கட்சி “ஏற்கெனவே” வலியுறுத்திய கொள்கையைத்தான் பின்பற்றியாகவேண்டும்.
இராமகிருஷ்ணனின் கூற்றுப்படி, சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியாகட்டும், அதனை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கும் புரட்சித்தலைவியாகட்டும், இரண்டு பேருமே மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கொள்கை முடிவைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.
மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ மேற்படி முடிவுகளை எடுத்திருக்கலாம். மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கை முடிவுகளை திருடி முன்தேதியிட்டு அறிவித்து விட்டார்கள் என்றுதான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமேயன்றி, நேற்று கருணாநிதிக்கும், இன்று ஜெயாவுக்கும் காவடி எடுப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
ஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இந்த முடிவுகள் எதையும் கருணாநிதி, ஜெயலலிதா அல்லது சிவபெருமான் உள்ளிட்ட யாரும் தோழர் இராமகிருஷ்ணனுக்கு மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கவில்லை என்பதையும் மாநில செயற்குழு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறது.
மேலும், “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு” என்று கூறும் சிவபெருமானின் கவிதையும், “இல்லை” என்று கூறும் நக்கீரனின் தீர்ப்பும் இது தொடர்பாக மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தையே வழிமொழிகின்றன என்பதையும் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவினர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
டெய்ல் பீஸ்:
சட்டமன்றத்தில் மசோதாவை வரவேற்று விட்டு, வெளியே வந்து எதிர்ப்பதாகப் பேசும் மார்க்சிஸ்டுகளின் நாடகம் புரட்சித்தலைவிக்குப் புரியாமல் போனதெப்படி? இது பற்றி அம்மாவிடம் எடுத்துச்சொல்ல உளவுத்துறை தவறிவிட்டதா? கடமை தவறும் காவல்துறையை தினமணி கூட கவனிக்கவில்லையா?
புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே! தா.பா கவனிப்பாரா?
பின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும் சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். செய்வார்களா?
_______________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
- புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !
- வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?
- உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!!
- மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?
- கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !
- தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!
- தேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !
- தோழருக்காக ஒரு உதவி…
- மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து
- முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!
- போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
- லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!
- திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு
- நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!
- மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
- சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!
- சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள்!!!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!
காமடி பீசுங்க. கண்டுக்காதீங்க.
//காமடி பீசுங்க. கண்டுக்காதீங்க.//
ரொம்ப சரி.
//புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே! தா.பா கவனிப்பாரா?//
அவர் வெறும் தாபா இல்லை. ‘பாரதி போலே பேசும்’ தாபா….
//ஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.//
😛
கட்சியின் முடிவும்/கருத்தும்,கட்சி சார் அமைப்புகளின் கருத்தும் சில சமயங்களில் வேறுபடும்.கட்சியின் முடிவு சட்டமன்றத்தில் ஒட்டளித்ததில் தெளிவாக உள்ளது.
மாணவர்,இளைஞர் அமைப்புகள் தங்கள் கருத்தை பொதுவில் தெரிவித்தனர்.அது கட்சியின் முடிவிலிருந்து மாறுபட்டது.அவ்வளவுதான். இதில் என்ன இரட்டை வேடம் இருக்கிறது. சமச்சீர் கல்வி பற்றி கட்சி என்ன சொல்கிறது- அது வேண்டும் என்கிறது. அரசு சில காரணங்களுக்காக அதை அடுத்த ஆண்டு முதல் என்கிறது.
இதில் கட்சி அரசின் பக்கம்,அமைப்புகள் அதை ஏற்கவில்லை.இது ஒரு சிறு முரண்பாடு.
இதை தீர்க்க கட்சிக்கும் தெரியும், இதை வைத்து கட்சியை விமர்சிக்க கூடாது என்பது அமைப்புகளுக்கும் தெரியும். எனவே குள்ள நரி வினவே, கட்சிக்கும்,அமைப்புகளுக்கும் இடையே சிண்டு முடிகிற வேலையை, குழப்பை உண்டாக்கும் வேலையை வேறெங்காவது வைத்துக் கொள்ளவும்.
நீங்க சி.பி.எம்மா, இதுக்கு முன்னாடி நீங்க போட்ட பின்னூட்டங்களை பாத்தா ரொம்ப டெரராவுல இருக்கு..
சரி கட்சி அம்மாவை ஆதரிக்கிறது. வாலிபர் அமைப்பு சமச்சீர் கல்வியை ஆதரிக்கிறது. அப்போ சமச்சீர் கல்வியை எதிர்க்கிறவங்களை வாலிபர் அமைப்பு எதிர்க்க வேண்டுமே? அப்படி எதிர்க்கும் போது அதில் கட்சியும் வருமே? இல்ல கட்சியை விட்டுவிட்டு மத்தவங்கள மட்டும்தான் எதிர்ப்போம் என்றால் அதில் அம்மா கட்சி வருமா வராதா? அம்மா கட்சியை வாலிபர் அமைப்பு எதிர்த்தா வாலிபர் அமைப்பை இயக்கும் கட்சியின் நிலைபாட்டுக்கு எதிராக போகுமே? சரி வுடுங்க, நீங்க சமச்சீர் கல்வியை அம்மா மனம் நோகாமல் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்வீர்கள் என்று சொன்னால் சரியாக இருக்குமா?
சூப்பர், அருமையான கட்சி அமைப்பு கோட்பாடு, அப்படியே இன்னொன்னும் பன்னுங்க கட்சியில இருக்கிற டி.கே.ரங்கராஜன், வாசுகி போன்ற மாமாக்களும் மாமிக்களும் பூனூல் அணிந்து கொள்ளலாம்,மடிசார் கட்டிக்கொள்ளலாம், ஆனால் கட்சி சார் அமைப்புகளுக்கு அதில் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அந்த முரண்பாடு நிச்சயம் தீர்க்கப்படும், இது தான் மார்க்சிய இயங்கியல் என்று கூறுங்களேன், அது இயங்கியலுக்கு நீங்கள் செய்த புதிய பங்களிப்பாக இருக்கட்டும் !
மானங்கெட்டவர்களே இப்படியெல்லாம் பேச உங்களுக்கு துளியும் வெட்கமாக இல்லை,த்தூ தூ..
பேயாட்சி துவங்கி விட்டது கூடவே பூசாரிகளுக்கும் இருக்கிறது கவனிப்பு.
சரி அண்ணே இன்னிக்கி சுப்ர்ரிம் கோர்டுல இந்த கேசுல என்னாதான் சொன்னாங்கன்னு கொஞ்சம் சொலுங்களேன்
கம்யூனிசத்தை ஒழிக்க கம்யூனிஸ்டுகளால்தான் முடியும் !!
சமச்சீர் கல்வி நடைமுறைபடுத்தபடுதல் எந்த அளவு உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டியதோ அதேபோல் சமச்சீர் கல்வி குறித்த மறு ஆய்வும் இன்றைய தேவைக்கேற்ப செய்யப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.கல்வித் தரம் மட்டுமன்றி சமமான வசதிகள், சமமான கல்வி பயிற்றுவிக்கும் தரம், சமமான கல்விக் கட்டணம், சமமான தேர்வு முறை ஆகியன உள்ளடிக்கிய அம்சங்கள் அனைத்தும் விஞ்ஞான ரீதியில் பரிசீலிக்கப்பட வேண்டியவை. இதில் கால நேரம் கடத்தாமல் செய்தல் முக்கியம் என்றாலும், நோக்கத்துக்கு பழுது வராமல் பார்ப்பதும் மிக அவசியம்.
புதுதில்லி, ஜூன் 14- தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டில், முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து கல்வியாளர்கள் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு இருவார காலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் மீது ஒரு வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், பழைய கல்வி முறை தொடரும் என்று அரசு அறிவித்தது. இதனிடையே, தமிழக அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அம்மா ஆட்சிக்கு வந்தவுடனே அரசியல் அமர்க்களப்படுகிறது. இந்த அமர்க்களத்தில் மார்க்சிஸ்டுகளின் (CPM) டிரவுசர் கிழிந்து மானம் கப்பலேறுகிறது. அம்மா ஆட்சி தொடரட்டும். அப்பதான் மானமுள்ளவர்களை மக்கள் அடையாளம் காணமுடியும்.
பின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும் சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். செய்வார்களா? என்னங்க தோழர். இப்படி கேட்டுடீங்க, என்னயிருந்தாலும்
வாயும்,வயிறும் வேறு வேறு இல்லீங்களா!!!எப்படி செய்வார்கள்.
சூத்திரன் அவர்களுக்கு,ஆட்சி மாற்றம் எதுவுமில்லை. புதிதாக பதியேற்ற அதிமுக அரசு.அல்லது அடுத்து ஆள வந்த அதிமுக அரசு என்று குறிப்பிடலாமே!
வழிப்ப்போக்கன், அது CCP.
கம்யூனிசமும் மார்க்சியமும் அவர்களது பெயரில் மட்டுமே உள்ளது,
பட்டா வாங்கிட்டாங்க ?
வினவு அவர்களே, மாற்றம் சில விஷயங்களிலும் தொடர்ச்சி சிலவற்றிலும் இருத்தல் அவசியம் என்பதே சமச்சீர் கல்வி குறித்து நீதிமன்றங்கள் முதல் அறிவார்ந்த மக்கள் வரை இருக்கும் பொதுவான கருத்து. ஆக சமச்சீர் கல்வி குறித்த மறுபரிசீலனையை வரவேற்கும் அதே நேரத்தில் அந்த பரிசீலனை விரைவாக முடிக்கப்பட்டு, செருவூட்டப்பட்ட திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதில் மார்க்சிஸ்டுகள் சார்பில் நீங்கள் காணும் குற்றம் புரியவில்லை.
சமச்சீர் கல்வி குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு
கவர்னர் உரை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் சமச்சீர் கல்வி குறித்து தெரிவிக்கப்பட்டது கீழே
“சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிப் போடாமல் அமலாக்க வேண்டுமென்பதே அனைத்துப்பகுதி மக்களுடைய விருப்பம். பொதுப் பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சமச்சீர்க்கல்வி அமலாக்குவதற்கு மாநில அரசு காலக்கெடுவை அறிவிக்க வேண்டும்.”
சமச்சீர் கல்வியை தொடரவேண்டும் என்ற சமீபத்திய அறிக்கை
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2099330.ece
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிகவும் கேவலமா இருக்கிறது. அவன்கொண்டு வந்ததை இவன் ரத்து பண்றதும், இவன் கொண்டு வந்ததை அவன் ரத்து பண்றதும் இங்கே தான் நடக்கின்றது. விரைவில் முன்னேறிடும்!?
‘இடதுபுறம் செல்’ என்பது நல்லவேளையாக வெள்ளைக்காரன் கொண்டுவந்த போக்குவரத்து விதி.
செந்தமிழ்,
சற்று நினைத்துப்பாருங்கள்; இதே போக்குவரத்து விதியை கருணாநிதி கொண்டுவந்திருந்தால்?
ஐந்து வருடத்துக்கு சாலையின் இடது புறம் போக வேண்டும்.
அடுத்த ஐந்து வருடத்துக்கு சாலையின் வலது புறம் போக வேண்டும்.
ஏனென்று சொல்ல முடியுமா?
காரணம் இதுதான் :
“மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.”**
**நன்றி – நாட்டின் நாலாந்தரத் தூண்கள்.
கம்யுனிச்டுகள் பெயரை மாற்றீகொன்டல் நல்லது. கம்யுனிசம் பிழைது பொகட்டும்
த்ரவிட அலையில் பதுஙிருந்த பார்பனியம் அப்பொ அப்பொ தலை தூக்குகிரது
கம்முனிச அலை வராமல் காம்ரெடுகள் பாத்துக்குவாஙகாஅ
ஆவாலின் பத்ரிக்கையயை உதரானம் காட்டும் அவதூரு வினவு அவர்களே!!சமச்சிர் கல்வியயை கொன்டு வருவதில் CPMஐ எந்த வகையிலும் குறை சொல்ல உங்கலுக்கு தகுதி இல்லை எனபது தெரிந்தும் ஏன் அவதூரு வீசுவதை தொடர்கிறிர்கள்…….comrade balakrishanan paesiyathai mzhuvathyum veliyadavum….cpmi kurai solla nurasoloiyai thinamum padiyungal vasathiyaga irukum….
CPMஐ எந்த வகையிலும் குறை சொல்ல வினவுக்கு தகுதியிலலலையா? நீங்க அடித்த ஜோக்குல சிரிப்பே வரல. பிரபு, வேற இருந்தா சொல்லுங்க.
cpm – communist party of malayalees
cpi-capitalist party of india
cpi[m]-capitalist party of india[murdoch]
suryajeevaa வா தமிழ்ல சொன்னா நாங்களும் தெரிஞசுக்குகோம்ல.
கம்யூணிஸ்டுகல் வசூல் மன்னர்கல் தான் ,புரட்ஷி தலைவி அம்மா என்று காலில் விழாக்குறையாக சட்டசபையில் பாரட்டுகிரார்கள் ,இவர்கள் இதற்குநான்டுகிட்டு சாகலாம்.
சூடு,சொரனை,வெட்கம்,மானம் எதுவுமே கிடையாதுங்க இவர்களிடம்,கேட்டா செயல் தந்திரம் என்பார்கள்.
[…] சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின்… […]