privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!

-

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
ஆதிமூலம்

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.

“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.

“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”

“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”

நகர சுத்தி தொழிலாளர்கள்“”எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக் கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத் தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு துன்னாவணுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.”

“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

_________________________________________
— நன்றி: திங்கள் சத்யா
_________________________________________

  1. இஸ்லாம் மார்க்கம் மானிடர்க்கு கண்ணியத்தையும், அந்தஸ்தையும் பெற்றுதருகிறதே! இழி பார்வைகளையும், இழி சொர்க்களையும் இவர்களிடமிருந்து நீக்குகிறதே! அதனுள் நுழைந்து பாதுகாப்பும் கண்ணியமும் பெருவது பற்றி ஏன் நீங்கள்/இவர்கள் சிந்தித்திடல் கூடாது??

    • பெரியவர் ஆதிமூலம் அவர்கள் & குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறவேண்டும், மாறினால் அவர் அதற்கு மேல் இந்த வேலையை செய்ய வேண்டாம், எல்லாவற்றையும் இஸ்லாமியர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நீங்கள் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளலாமா?

    • நண்பரே! எந்த விதத்தில் பாதுகாப்பும் கண்ணியமும் இசுலாம் அளிக்கிறது என்பதை விளக்கி கூறுவீரா. ஏனெனில் சவுதி செல்லும் நம் பெண்களின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அரசாங்கம் வயது குறைந்த பெண்கள் அங்கு செல்லக்கூடாது என்று சட்டமே இயற்றி இருக்கிறது. இது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. இது மனித மனத்தின் குறைபாடு. எல்லா இடத்திலும் ஏழைகள், உதவியற்றோர், திக்கற்றோர் அனைவரும் நடத்தப்படும் விதமே இவ்வாறுதான். இதற்கு தீர்வு மதமாற்றத்தில் அல்ல, மனமாற்றத்திலேயே உள்ளது. முதலில் அவர்களின் சம்பளத்தை கூட்டிக்கொடுப்பது. அவர்களை அந்த வேலைக்கு மாற்று வேலை கொடுப்பது, அவ்வாறான வேலைகளை இயந்திரப்படுத்துவது, மாற்று வேலைகளில் இவர்களுக்கு முதன்மையளிப்பது, இனி இவ்வாறான வேலைகளில் மனிதரை ஈடுபடுத்துவதை தடை செய்வது, ஈடுபடுத்துவோரை தண்டிப்பது,இவையே ஆகும். இதை விட முக்கியமான ஒன்று, இவ்வாறான சமூக சூழல் உருவாகவும்,நிலைபெறவும் காரணமாக உள்ள இந்து மதத்தை ஒழித்துக்கட்டுவது. மதமாற்றம்நிச்சயம் தீர்வல்ல. சமூக மாற்றமே தீர்வாகும். பொதுவுடைமை சமுதாயம் படைப்போம்

    • அய்யா சாலிகு,

      உன்னை மாதிரி ஆளுகெல்லாம் கொஞ்சம் கூட கூச்சம் இருக்காதா? இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்லை?

      மத்த மதத்து காரனுக்கு எதாவது பிரச்சினை நா உடனே மதம் மாரிடனுமா?

      நீ சொல்ற மாதிரி இந்த பெரியவர் மதம் மாறிடார்னா அவர் இறங்குற சாக்கடை எல்லாம் சந்தனமா மாறிடுமா? இல்ல அதை சுத்தம் பண்ண எதாவது புது மெஷின் வருமா?

      உன் ஆளுங்க அதிகமா உள்ள நாட்டுல எல்லாம் இந்த பிரச்சினையே இல்லையா? அங்கேயெல்லாம் வேற எதாவது மஷின் இருக்கா? சரி அப்போ அந்த மஷின் கண்டுபுடிக்கரதுக்கு முன்னாடி என்னா பண்ணிட்டு இருந்தீங்க?

      போயா, போ , எப்ப எவன் மாட்டுவான் ? அவனை எப்படி புடிச்சி உள்ள போட்டுக்கலாம் னு பார்க்குறீங்க!!!!


      மாக்ஸிமம்

    • சாலிH என்ற பெயரில் ஒரு விசமி இக்கருத்தை தருகின்றார். அண்டை வீடு எம்மதத்தை சார்ந்தவராயினும் அவரும் பசியோடு இருக்க கூடாது என கூறும் இஸ்லாமை இந்த அள்விற்கு கூற கூடாது. கட்டுரையின் நோக்கத்தை மாற்றாதே.

  2. What can we do? One thing we can all do…
    Nowadays whatever be the work in my house, I am not negotiating when they ask 400 or 500. Whether it is just a cleaning in backside of the house or drainage cleaning. I can do that much only.

    • அடிமைத்தனம் எவ்வளவு கொடியது எவ்வளவு துன்புறுத்தப்படுகிறார்கள், இவர்கள்நிலை மாறாதா யாரேனும் வந்து இவர்களை காப்பாற்ற மாட்டார்களா என்றுநித்தம் எண்ணுகிறேன் அவர்கள் முதுகில் அமர்ந்து சாட்டையை சொடுக்கிக்கொண்டே. pay them 500 rs. how largehearted you are!

    • நான் வரவேற்கிறேன். இது போன்ற வேலைகள் செய்வோருக்கு 3000-4000 ருபாய் குடுக்கவேண்டும் மேலை நாடுகளில் இதுபோன்ற வேலைகளுக்கு $400-$600 வரை குடுக்கவேண்டும், இத்தனைக்கும் பல வேலைகளை இயந்திரம் மற்றும் Robot வைத்து செய்வார்கள். இதை ஒரு கம்பெனி போன்ற ஒரு அமைப்பாக உருவாக்கி செய்தால் இவர்கலுக்கு நல்ல பயன் கிட்டும். இது போன்ற வேலைகளை செய்யகூடாது என்று தடுக்க முடியாது இந்த வேலைகளை alternative வரும் வரை யாராவது ஒருவர் செய்யத்தான் வேண்டும். Practicalலாக யோசித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும், மேலும் இப்படி பட்ட வேலைகள் செய்வதால் இவர்களுக்கு பிற்காலத்தில் நோய் வருகிற ஆபத்து இருக்கிறது இதையும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு தகுந்த திட்டங்கள் வழங்க வேண்டும் அதை அரசே செயல் படுத்த வேண்டும்.

  3. இஸ்லாம் மார்க்கம் மானிடர்க்கு கண்ணியத்தையும், அந்தஸ்தையும் பெற்றுதருகிறதே! இழி பார்வைகளையும், இழி சொர்க்களையும் இவர்களிடமிருந்து நீக்குகிறதே! அதனுள் நுழைந்து பாதுகாப்பும் கண்ணியமும் பெருவது பற்றி ஏன் நீங்கள்/இவர்கள் சிந்தித்திடல் கூடாது??

    நண்பரே இதைப் பற்றி விபரமாக எழுதினால் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே?

    • அவர்கள் இடத்திற்கு இடம் மாறுபட்டு பேசுபவர்கள். கம்யூனிசத்தில் அனைவரும் சமம் அவர்களின் வாழ்நிலைக்குத் தேவையான ஊதியம் அளிக்கப்படும் என்று கூறினால் அப்படியென்றால் இது போன்ற கழிவுகளை யார் சுத்தம் செய்வது? என வினவுவார்கள்.

      மதம் மாறிய பிராமணர்கள் முஸ்லீம்களுடன் உடனடியாக மணவுறவு கொள்ளமுடியும். தலித்துகளுக்கு அப்படியல்ல.

  4. இன்பமும் துன்பவும் பிர தரா வரா. அவர் தொழ்லில் கஷ்டம் உன்மை. ஆனால் இந்த வயது வரை கஷ்டம் பட அவரெ கரனாம் இந்த வயது. பொன்டதி 2.

    • என்ன ஒரு இழிசிந்தனை. 2 பொண்டாட்டிக்காரன் எல்லாம்நிச்சயம் மலம் அள்ள வில்லை. இவர் முதல் மனைவியின் காலத்திற்குப்பிறகே அடுத்த மனைவியை மணமுடித்திருக்கிறார். அவ்வாறு இல்லையெனினும் அவர் செய்யும் தொழிலின்நிலை பிறர் தர வந்ததே. அந்த பிறர்நீங்களும் நானுமே.”நீ 2 பொண்டாட்டி கட்டியிருகிறாயல்லவா. உனக்குநல்லா வேணும். அப்படித்தான் பீ அள்ளு” என்று கூறுகிறீர்களா

  5. “”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”//

    மனித தெய்வங்கள்..

    இவர்களை வணங்குவதை விட்டுவிட்டு கோவில் கோவிலா ஊர் உலகமெல்லாம் சுத்துறோம்..

    அந்த கடவுள்கள் இல்லேன்னா குடி முழுகாது..

    இவர்கள் இல்லேன்னா முழுகி , அழுகித்தான் போவோம்..

    என்ன மரியாதை , எப்படி செய்ய போறோம்.?.

    அட்லீஸ்ட் அவர்கள் சொல்வதையாவது கேட்போம்.. அடைக்கும் பொருளை வீசாமல்..

    • அடைக்கும் பொருளை வீசாமல் இருப்பது மட்டுமல்ல. அவர்களை உள்ளே இறங்க விடாமல் இருக்க அனைத்தையும் செய்ய வேண்டும். என்ன செய்யப்போகிறீர்கள்

  6. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன்.//

    :((((

    என்ன விலை அழகே .. விலைமதிப்பில்லா வலிமை நெஞ்சம்..

  7. So only if some one belongs to your religion, can you treat him equally. Is that so ? (to mu aa salih)

    Jobs like this should be summarily mechanized. Enna anyayam idhu ? Naam ellam kal nejakkarargalae ! There is no doubt about it. He is old and he is poor. Leave out his rantings on caste. Every Indian, no matter what RELIGION or IDEOLOGY we belong to, we will only leave our CASTE, RELIGIOUS, and IDEOLOGICAL bag, during our death. So let us ignore the poor mans rantings on caste.

    The reporter who saw this happening and wrote about it here, please, on behalf of us audience, do something to locate him and help him out with some other job.

    Let the blockages remain ther and not be cleared by another human being. Nalla Naarattum. Naarattumae ! Kodi, kodiya lanja panam swallowing politician, ward members, corporation members, let them pool all their ill gotten money and get a machine to do such jobs.

  8. வினவு தோழர்களுக்கு,

    இது ஒரு வித இந்தியாவின் மனித அடக்குமுறை என்பேன்.ஏனைய நாடுகளில் மட்டும் ஏன் இந்த இழிநிலை இல்லை?நம்மூர் தண்ணி லாரி மாதிரி கழிவு நீர் வண்டி,ஒரு ஓட்டுநர் என மொத்தக் கழிவுகளையும் கடலில் சேர்க்க இயலாத பகுதிகளில் அன்றாடம் அகற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.கழிவு நீரைக்கூட ரீசைக்கிளிங்க் முறையில் மாற்றம் செய்யும் நவீன முறைகள் கூட வந்து விட்டது.திட்டங்கள் வகுக்கலாம்.நம்மூர் அரசு அலுவலர்களை,என்ஞினியர்களை வெறுமனே ஊர்சுற்றிப்பார்க்க விடாமல் வெளிநாட்டுப் பயிற்சிக்கு அனுப்பலாம்.திட்டக்குழு அறிக்கை சமர்ப்பிக்கலாம்.மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

  9. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்
    குறள் 1062

  10. ஒன்னும் சொல்லத்தோணல…இந்த கருத்துக்களை அவர் படிக்கப்போறது இல்லயே…

    சாய் பாபா, ராம்தேவ் மாதிரி நாத்தம் புடிச்சவங்க கிட்ட பணத்த கொட்ற நம்ம அப்பர் மிடில் கிளாஸும், பணக்காரங்களும் திருந்தாட்ட்டி, வேற ஒன்னும் பண்ண முடியாது

  11. இதுவும் ஒரு தொழில்தான். ஆனால் மிக உயர்ந்த தொழில். இத்தகைய உயர்ந்த தொழிலைத்தான் மிகக் கேவலமானதாக சமூகம் பார்க்கிறது. இத்தொழிலை பாதுகாப்பான முறையில் செய்வதற்கு உரிய நவீன முறைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதும், இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு உரிய மருத்துவ உதவிகளும், இவர்களுக்கு உரிய மரியாதையும் கிடைக்க வேண்டும். இத்தொழிலின் தன்மை கருதி இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு அதிக ஊதியமும் வழங்கப்பட் வேண்டும். இத்தொழிலை நவீனப்படுத்தி இது அனைவருக்குமான தொழிலாக மாற்றப்படவேண்டும். பத்சாதாபங்களால் இழிவுகள் ஒருபோதும் அகலாது.

    • எல்லாவற்றிற்கும் மூலகாரணி அடைப்பெடுக்கமுடியாமல் தேங்கிக்கிடக்கும் சாதியச்சாக்கடையும்.அதைச்சுத்தம் செய்ய மனசில்லாத இந்தியாவும் தான்.அவர் நாயக்கர்தானே என்று யாராவது பதில் சொல்லமுன்வரலாம்.விதிவிலக்குகள் பொது விதியாகமாட்டா.

    • நிச்சயம் இது கேவலமான தொழில்தான். இது உயர்ந்தது என்று கூறி அந்த மனிதரை இழிவுபடுத்தாதீர்கள். அசிங்கத்தை கையால் அள்ளுவதில் என்ன உயர்வைக் கண்டீர்.நிச்சயம் நவீன முறைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தினால் அப்போது இது ஒரு தொழிலாக கருதப்படும். ஆனால் மனிதனே இதைச் செய்வதற்கு பணிக்கப்பட்டால் அல்லது தள்ளப்பட்டால் அது கேவலமான தொழிலே. (மனிதரில் யாரும் கேவலம் கிடையாது. இவ்வாறு இருக்கும் சமூகமே கேவலமானது. )

      • எப்படி இதைக் கேவலமான தொழில் என்று சொல்கிறீர்கள்? மக்களின் அவசியமானத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற எல்லாத் தொழில்களும் உயர்வானத் தொழில்கள்தான். விபச்சாரம், சாராயம், கந்துவட்டி, கஞசா போன்ற மக்கள் விரோதத் தொழில்களைத்தான் கேவலமானத் தொழிலகளாகக் கருத வேண்டும். இத்தொழிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஈடுபடுத்தி அச்சமூகத்தையும் இத்தொழிலையும் கேவலப்படுத்தி வருகிறது ஒட்டு மொத்த சமூகம். வருமையே இத்தொழிலில் ஈடுபட கட்டாயப் படுத்துகிறது.

        கழிவுகளை அகற்றுகின்ற தொழில் அசிங்கமானதா அல்லது இத்தொழிலில் ஈடுபடுவோர் அசிங்கமானவர்களா? முதலாளிகளும் அதிகாரிகளும் பார்ப்பதற்கே கூசுகின்ற ஆலைக்கழிவுகளை அடிமட்டத் தொழிலாளர்கள்தான் அகற்றுகிறார்கள். ஆனால் ஆலைகளில் ஓரளவு நவீப்படுத்தப் படுவதால் இத்தொழிலில் பல்வேறு தரப்பினரும் ஈடுபடுகிறார்கள். இங்கேயும் படிப்பும் ஏழ்மையுமே இத்தொழிலை தேர்வு செய்வதற்கு காரணமாய் அமைகின்றன. வறுமையும் ஏழ்மையும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது, சாதிய இழிவுகளும் இல்லை என்றாலும் கழிவுகளை அகற்றுகின்ற தொழில் இருக்கத்தானே செய்யும். அப்போது இதை யார் செய்வது? அல்லது செய்யாமல்தான் விட்டுவிட முடியுமா? எனவே கழிவுகளை அகற்றுகின்ற தொழிலை நவீனப்படுத்துவதே சரி. அதைவிடுத்து தொழிலே கேவலமானது என்பதும் அதைச் செய்கின்ற மக்களை கேவலமானவர்களாகப் பார்ப்பதும் சரியல்ல என்பதே எனது கருத்து.

        • //வறுமையும் ஏழ்மையும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது, சாதிய இழிவுகளும் இல்லை என்றாலும் கழிவுகளை அகற்றுகின்ற தொழில் இருக்கத்தானே செய்யும். அப்போது இதை யார் செய்வது? அல்லது செய்யாமல்தான் விட்டுவிட முடியுமா? எனவே கழிவுகளை அகற்றுகின்ற தொழிலை நவீனப்படுத்துவதே சரி. //

          நானும் அதையேதான் கூறுகிறேன். இதுவும் ஒரு தொழிலே. ஆனால் மனிதன் தனது கையால் அதை சுத்தம் செய்வதற்காக கட்டாயப்படுத்தப்பட்டால் அல்லது தள்ளப்பட்டால் அது எவ்வாறு உயர்வாக ஆக முடியும்.
          சமூகநிலைகள் 6ஆக பகுத்து உள்ளனர்.
          Market researchers divide the population into 6 socio-economic groups or social grades , which are based on the occupation, or job, of the head of a household. These grades give some idea of a households income and how it might be spent. They are:
          A- Higher managerial, administrative, professional e.g. Chief executive, senior civil servant, surgeon
          B – Intermediate managerial, administrative, professional e.g. bank manager, teacher
          C1- Supervisory, clerical, junior managerial e.g. shop floor supervisor, bank clerk, sales person
          C2 – Skilled manual workers e.g. electrician, carpenter
          D- Semi-skilled and unskilled manual workers e.g. assembly line worker, refuse collector, messenger
          E – Casual labourers, pensioners, unemployed e.g. pensoiners without private pensions and anyone living on basic benefits
          இது யாகூ கேள்வி பதிலில் இருந்து எடுத்து கொடுக்கப்பட்டது. இவ்வாறாகவே இப்பொழுது உள்ள சமூகம் இருப்பதாக முதலாளித்துவம் கூறுகிறது. இதில் நீங்கள் கூறும் “உயர்ந்த வேலை” கடைசியாக வருகிறது.நமது எண்ணமெல்லாம் அன்ஸ்கில்ட் லேபர் வேலையை இயந்திரப்படுத்த வேண்டும். பெரும்பகுதி சமூக அங்கத்தினர் அறிவுசார் தொழிலுக்கு வர வேண்டும் என்பதே.நிச்சயம் விபச்சாரிகள் குற்றவாளிகள் அல்லர். they are victims of prostitution. அவர்களும் மனிதர்களே. விபச்சாரம் என்பது குற்றம் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் மனிதர் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்துகிறீர்கள்.

          • கழிவுகள் அகற்றுவதை எப்படிக் கேவலமான தொழிலாகப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. கையால் சுத்தம் செய்வதால் ஏற்படுகின்ற உடல் ரீதியான கேடு ஒருபுறம். மன ரீதியாக ஏற்படும் ‘அசிங்கம்’ என்கிற எண்ணம் மறுபுறம். மலக்கழிவு என்பதால் இதை அசிங்கமாகப் பார்க்கிறோமா அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதால் ‘நாம் மட்டும் இத்தொழிலை செய்வதா’ என்கிற குற்ற உணர்விலிருந்து அசிங்கம் எனப் பார்க்கிறோமா என்கிற கேள்விகளுக்கு விடை தேடாமல் உணர்ச்சி (emotional) நிலையிலிந்து இப்பிரச்சனையை அணுகினால் இத்தொழில் அசிங்கமானதாகத்தான் தெரியும்.

            இத்தொழிலை இயந்திரப்படுத்துவதன் மூலம் உடல் ரீதியான பாதிப்பிலிருந்து இதில் ஈடுபடுவோரைக் காக்க முடியும். இதில்கூட இயந்திரங்கள் பழுதானால் அதை பழுது பார்க்கும் போது இந்த அசிங்கங்களோடு போராடித்தான் ஆகவேண்டும்.

            ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு என விதிக்கப்பட்ட இத்தொழிலை அனைவருமக்குமான தொழிலாக மாற்றியமைக்க வேண்டும். அது எப்படி சாத்தியம் எனக் கேட்கலாம்? நவீனப்படுத்தப்பட்ட பிறகு இத்தொழிலில் கிடைக்கும் வருவாயும் இத்தொழில் அசிங்கமானதல்ல என்கிற சமூகச் சூழலுமே இதைத் தீர்மானிக்கும்.

            திறன் குறைவாகத் தேவைப்படுகின்ற வேலைகளை இயந்திரப்படுத்த வேண்டும் அறிவுசார் தொழிலில் அதிகமானோரை ஈடுபடுத்த வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. ஒரு குறிப்பிட்ட வேலை அசிங்கமானது என்கிற எண்ணத்திலிருந்து அறிவுசார் தொழிலை நோக்கி வருவது ஒருபுறம், அதிகமானோர் அறிவுசார் தொழிலைச் செய்வதன் மூலம் தொழில் வளர்ச்சி பெருகும் என்கிற கருத்து மறுபுறம். இதில் எது அறிவு பூர்வமானது?

            விபச்சாரத் தொழிலில் தள்ளப்படுவதற்கு இச்சமூகச் சூழல் காரணம் என்றால் அதை மாற்றியமைப்பதற்குப் போராடுவதே சரியானது. பதிலாக சமூகத்தின் மீது பழிபோட்டுவிட்டு விபச்சாரம் செய்வதை நியாப்படுத்த முடியாது.

            ”மனிதர் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்துகிறீர்கள்”. நான் எங்கேயும் நியாயப்படுத்தவில்லையே. இந்தத் தொழில் மட்டுமல்ல எந்தத் தொழிலையும் ஒருவர் செய்வதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களே விரும்பி ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கான சமூகக் கட்டமைப்பு தேவை.

            • “மலக்கழிவு என்பதால் இதை அசிங்கமாகப் பார்க்கிறோமா அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதால் ‘நாம் மட்டும் இத்தொழிலை செய்வதா’ என்கிற குற்ற உணர்விலிருந்து அசிங்கம் எனப் பார்க்கிறோமா”

              நிச்சயம் நீங்கள் இரண்டாவதாகக் கூறியதற்குதான் இதை கேவலம் என்கிறேன். இது தீண்டாமை கொடுமையை விட கொடுமையானது. ஒருநிறுவனமயமாக்கப்பட்ட அடிமைத்தனம் இது.

              “ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு என விதிக்கப்பட்ட இத்தொழிலை அனைவருமக்குமான தொழிலாக மாற்றியமைக்க வேண்டும். அது எப்படி சாத்தியம் எனக் கேட்கலாம்? நவீனப்படுத்தப்பட்ட பிறகு இத்தொழிலில் கிடைக்கும் வருவாயும் இத்தொழில் அசிங்கமானதல்ல என்கிற சமூகச் சூழலுமே இதைத் தீர்மானிக்கும்.”

              அனைவருக்குமான தொழிலாக அல்லாமல் யாருக்கும் அல்லாத தொழிலாக இதை மாற்ற வேண்டும். எவ்வாறென்றால் கழிவை அகற்றுதல் சமூகத்தின் மற்றும் அதன் பிரதிநிதியாகநாம் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் வேலை. இது முழுக்க இயந்திரமயமாக்க வேண்டும். அது வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி மருத்துவம் தொழில் போல கழிவகற்றுதலும் எந்த சமூகத்தில் வருவாய் ஈட்டலுக்காக அல்லாமல் சேவைக்காக செய்யப்படுகிறதோ அப்பொழுதுதான் இது அனைவருக்கும் ஆன தொழிலாகும்.

              “விபச்சாரத் தொழிலில் தள்ளப்படுவதற்கு இச்சமூகச் சூழல் காரணம் என்றால் அதை மாற்றியமைப்பதற்குப் போராடுவதே சரியானது. பதிலாக சமூகத்தின் மீது பழிபோட்டுவிட்டு விபச்சாரம் செய்வதை நியாப்படுத்த முடியாது.”

              சரியாக கூறினீர்கள். சமூகம் பொதுவுடைமைநிலைக்கு முன்னேறுவதையே குறிப்பிடுகிறீர்கள் என்றுநினைக்கிறேன். விபச்சாரம் விபச்சாரிகளால் செய்யப்படுவதல்ல. அவர்களை வைத்து செய்யப்படுவது. கறிகடையில் கசாப்புக்காரன் விற்பனையாளன். வாங்குவோர் கஸ்டமர். ஆடு என்ன என்று நீங்களே கூறுங்கள்

        • ‘சுகாதாரக் கேடான அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய’ என்கிற தொனி தரும் பொருளில், கேவலமான தொழில் என்று கூறுகிறாறோ நான் கடவுள் இல்லை.?!

          • அது மட்டும் அல்ல புதிய பாமரன் அவர்களே. இது மனிதத்தன்மையற்ற வேலை. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இத்தொழிலை செய்யப் பணிக்கப் படுகிறார்கள்.நண்பர் ஊரான் கூறியது போல் இது முறை படுத்தப்பட்டால் மட்டுமே இத்தொழிலை “இதுவும் ஒரு தொழில்” என்று ஏற்றுக்கொள்ள முடியும். அதுவரை இது தீண்டாமையின் உச்சக்கட்டமாகத்தான் இருக்கும். திருமணம் என்பது ஆண் சமூகம் தனது சாதிப்பெண்களை ஒடுக்கும் கருவியாகக் கொண்டது. இன்று அது வரைமுறைப்படுத்தப்பட்டாலும் பொதுவாக அந்த சடங்கு இன்னும் ஆணாதிக்கத்தின் கருவியே. விபச்சாரம் என்பது அடுத்த இனத்துப்பெண்களை ஒடுக்கப்பயன்பட்டது. அது போல சாதி, மதம், கடவுள், புனிதநூல்கள், தீண்டாமை ஆகியன பிற சாதியினரை அடக்குவதற்க்காக பிராமணரால் உருவாக்கப்பட்டவை. அதில் இதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.

    • Very well said Ooran. I am very much for this. If they decide to charge a good amount taking into consideration the nature of the job and hazardous situation they are working in people would definitely have to give it in. The problem here as I see is mostly ignorance of these workers due to the lack of understanding of market economics. The demand for this kind of job is very high and essential aswell the job can be classified as hazardous. Once they start charging hefty fees for these jobs then they might aswell be able to take care of themselves and deal with most of their problems. Not all people will cooperate with such a proposal to give them a good fees for this job, but the Govt or NGO’s or Entreprenurial youth with a social motive can engage in this and make such things possible and feasible. There is Money stagnating with so many rich people in India this has to be released and made to circulate that will keep the economics flowing. I am already thinking of doing something good to them with longterm solution from the little capacity that I am in. I request people in capable positions to also consider this. Thanks to Vinavu for bringing this to our attention. Please do publish such content that can bring in social awarness with offer of practical solutions, that will be constructive.

      • நண்பரே. மனிதரில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதை ஒத்துக்கொள்வீரானால் நான் கூறுவதைக் கேளுங்கள். இது போன்ற வேலைகள் இயந்திரப்படுத்தப்பட வேண்டும் என்பதே உங்களது வாதமாக இருந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவோம் ஆனால் அவர்கள் அதே வேலையை அவர்கள் செய்ய வேன்டும் என்று கூறுதல் தகாதது. ஒரு மருத்துவனது ஊதியத்தையோ அல்லது ஒரு கம்பெனியின் முதலாளியின் ஊதியத்தையோ எதிர்பார்க்கமுடியாதல்லவா. இதற்கு ஒரே தீர்வு தொழிலில் முன்னேறியநாடாகுதல் வேண்டும். சமூக மாற்றம் வரவேண்டும். பொதுவுடைமை சமூகம் அமைய வேண்டும்

  12. இந்த சமூகத்தில் நானும் ஒருவன் என்ற வகையில் வருத்தமாக உள்ளது.

  13. முன்பு ரிக்ஷா இழுப்பவர்கள் அனைவருக்கும், “மழை கோட்’ கொடுத்து மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்., இன்று, நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும், குப்பை அள்ளும் பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள், எவ்வித பாதுகாப்புமின்றி, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.உடைந்த கண்ணாடித் துண்டுகள், துருப்பிடித்த தகரங்கள், பிளேடுகள், அழுகிய காய்கறி, பழங்கள், ரத்தக்கறை படிந்த பாண்டேஜ்கள், சானிட்டரி நாப்கின்கள், அடித்துப் போட்ட பெருச்சாளிகள் மட்டுமின்றி, இறந்து கிடக்கும் நாய், பூனையைக் கூட, வெறும் கைகளாலேயே அள்ளிச் செல்கின்றனர். அரசின் கவனம், இவர்கள் பக்கமும் சற்று திரும்ப வேண்டும்.மக்களுக்கு பெரும் சேவை செய்து வரும் இவர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு வேண்டி, குப்பை அள்ள தரமான கையுறைகள், முழங்கால் வரை அணியும், “பூட்ஸ்’கள், மழை கோட்டுகள், தரமான மருத்துவ வசதி, முகமூடி போன்றவற்றை வழங்க வேண்டும்.ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது போல், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தான் அவர்கள் பணிபுரிய வேண்டும் என, ஆணை பிறப்பிக்க வேண்டும். “எக்ஸ்னோரா’ போன்ற சேவை மையங்களும், அரசுடன் சேர்ந்து, இவ்விஷயத்தில் செயலாற்றலாம்.

  14. .மக்களுக்கு பெரும் சேவை செய்து வரும் இவர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு வேண்டி, குப்பை அள்ள தரமான கையுறைகள், முழங்கால் வரை அணியும், “பூட்ஸ்’கள், மழை கோட்டுகள், தரமான மருத்துவ வசதி, முகமூடி போன்றவற்றை வழங்க வேண்டும்.ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது போல், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தான் அவர்கள் பணிபுரிய வேண்டும் என, ஆணை பிறப்பிக்க வேண்டும். “எக்ஸ்னோரா’ போன்ற சேவை மையங்களும், அரசுடன் சேர்ந்து, இவ்விஷயத்தில் செயலாற்றலாம்.

  15. LATEST NEWS – மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை நீக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு அலட்சியம் செய்து வருவதாக கூ‌றி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதனை தடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை ஆகஸ்‌ட்டி‌ல் கொண்டுவராவிட்டால் பிரதமர் அலுவலக அதிகாரியை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராக உத்தரவிடுவோம் என்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

    சாக்கடை அள்ளும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து 2008ஆம் ஆண்டு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை சரிவர அமல்படுத்தவில்லை என்று கூறி மத்திய, மாநில அரசுகள் மீது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் எ‌ன்பவ‌ர் ‌‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கு தொட‌ர்‌ந்தா‌ர்.

    சாக்கடை கால்வாய், கழிவுநீர்த் தொட்டி ஆகியவற்றில் இந்தப் பணிக்காக மனிதர்கள் இறங்கும்போது விஷ வாயு தாக்கி பலர் உயிரிழப்பதால் எந்திரங்கள் மூலம் பராமரிப்புப் பணிகளை நடத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரிக்கின்றனர். இந்த அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிகாரிகள் சிலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    மனித துப்புரவு பணியாளர்கள் நியமனம் மற்றும் உலர் கழிவறைகள் கட்டுமான தடுப்புச் சட்டத்தில் (மத்திய அரசுச் சட்டம்) சில திருத்தங்களை கொண்டு வந்தால்தான், மனிதர்களை அதில் பயன்படுத்தாமல் இருக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழ‌க்க‌றிஞ‌ர், அந்த சட்டத்தில், 2 மாநில அரசுகள் பரிந்துரைக்கும் பட்சத்தில்தான் அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரமுடியும் என்று சுட்டிக்காட்டினார்.

    இந்த நிலையில் ‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கில் மற்றொரு மனுவை நாராயணன் தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முக்கியத்துவத்தையும் காட்டவில்லை. இதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவராதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

    எனவே மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலாளர் இந்த வழக்கு விசாரணைக்காக 23ஆ‌ம் தேதி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நேரில் ஆஜராகி, எப்போது அந்த திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்? என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயல‌ர் ஆஜராகவில்லை. விசாரணை தேதியில் ஏற்பட்ட குழப்பத்தால் செயலாளரை ஆஜர்படுத்த முடியவில்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தர‌வி‌ல், இந்த வழக்கு 29ஆ‌ம் தேதிதான் விசாரணைக்கு வருவதாக நினைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். எனவே வழக்கு தொடர்பான ஆயத்தங்களை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    ஆனாலும் இணை செயலாளர் நேரில் ஆஜரானார். செயலாளர் தரப்பில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சாக்கடை பராமரிப்பு பணிகளுக்கும், மனித கழிவுகளை அகற்றுவதற்கும் மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தகுந்த சட்டத் திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்து பிரதமருக்கு தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் கடிதம் எழுதிய பிறகு, இந்த விவகாரத்தில் பிரதமர் தனிக்கவனம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு கண்டனத்துக்குரியது. தேவையான சட்டத்திருத்தங்களை செய்வதற்காக 6 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

    இந்த வழக்கை ஆகஸ்‌ட் 22ஆ‌ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் தகுந்த சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் அல்லது சட்டத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் நேரில் ஆஜராவதற்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன், மாநில தலைமைச் செயலர் தொடர்ந்து தொடர்புகொள்ள வேண்டும். ‌நீ‌திம‌ன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றிய விளக்கங்கள் அடங்கிய அறிக்கையை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

  16. மத்தியஅரசும்,உச்ச,உயர் நீதிமன்றங்கள். மனிதகழிவுகளை மனிதன் அள்ளக்கூடாதுன்னு
    சட்டம் போட்டுருச்சுப்பா? அல்லாரும் ஒத்தி நில்லுங்க!!

    • அய்யா வலிபோக்கன், உங்க கருத்து தான் வலிய கொடுக்குது. என்னதான் சட்டம் வந்தாலும் சரி அத எவனும் நடைமுறை படுத்த மாட்டானுங்க இந்த அரசியல் வாதிங்க. கலக்டர் வீட்டு சாக்கடையா இருந்தாலும் சரி, முதல் அமைச்சர் வீட்டு சாக்கடையா இருந்தாலும் சரி அத அல்லனும்னா இவங்க தான் வரனும், அதனால நீங்கதான் ஒத்திநிக்கனும்………..
      அந்த மனிதரின் குடும்ப சூழலுக்கு உங்க அரசியல் சட்டத்த வச்சு ஏதாவது நல்லது பன்னுங்க பார்ப்போம், இல்ல அவரோட பொண்ணுங்கலுக்கு கல்யாணம் ஆவதற்கு ஏதாவது வழி பன்னுங்க, அதுவும் வேண்டாம் அவர் மகனயாவது திருத்துங்க பாருங்க………

  17. மனித கழவை மனிதர் அகட்ரும் கொடுமைக்கு வாஜ்பாய் முடிவு கட்டிட்டாராம் ! யெத்தனை ஆட்சி மாரினாலும் பொதுவுடைமை ஆட்சி மலராமல் ஆதிமூலம் அய்யாவின் கொடுமைக்கு முடிவு வராதுங்க !

Leave a Reply to ராஜ நடராஜன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க