மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி மீண்டும் ஒரு ஊழல் பூதத்தை அடையாளம் காட்டியுள்ளார். சென்ற வருடம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக வெளியான CAGன் அறிக்கையிலிருந்து எழுந்து வந்த பூதத்தையே எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்தியில் ஆளும் காங்கிரசு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய CAG அறிக்கையிலிருந்து கிளம்பியுள்ள கே.ஜி பூதத்தை சர்வகட்சிகளும் மௌனமாய் இருப்பதன் மூலம் மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணை துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசுக்கும் மக்களுக்கும் பட்டை நாமம் சாற்றியிருப்பதாகவும் இப்போது வெளியாகியிருக்கும் CAG அறிக்கையின் முன்வரைவு கூறுகிறது.
குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும் போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஒரு அம்சம்.
இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered) பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீத பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.
இவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால் தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.
தற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், செனற் ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கணக்குத் தணிக்கை அதிகாரியின் வரைவு அறிக்கை வெளியாகி மத்தியில் ஆளும் காங்கிரசு கும்பல் படுகேவலமாக அம்பலமாகி நிற்கும் இந்த நிலையை பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா தனது சொந்த அரசியல் நலனுக்காகக் கூட பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை. காங்கிரசோடு சேர்ந்து கிழிந்திருப்பது அம்பானியின் கோவணமும் தான் என்பதால் பெயரளவுக்கு முனகிவிட்டு அடங்கிவிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியான போது சம்பிரதாயமாகவாவது சாமியாடிய போலி கம்யூனிஸ்டுகள் இப்போது ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு’ என்கிற ரீதியில் இந்த ஊழலைப் பற்றி கருத்துத் தெரிவித்து முடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
ஏற்கனவே கிருஷ்ணா கோதாவரி எரிவாயு வர்த்தகத்தில் அம்பானி சகோதர்களுக்குள் குத்துவெட்டு நடந்த போது அதில் தலையிட்டு பஞ்சாயத்துப் பேசி தீர்த்து வைத்ததே சுப்ரீம் கோர்ட்டு தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் கம்பெனி எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக அனில் அம்பானி ஆந்திர அரசு மற்றும் உர அமைச்சகங்கள் குற்றம் சாட்டிய போது தலையிட்ட காபினெட் குழுவும் உச்ச நீதிமன்றமும் முகேஷுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தன.
ஆக, ஊழல் சட்டபூர்வமானது என்பதைக் கடந்து, வளங்களைத் திருடிச் செல்வதில் முதலாளிகளுக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அதை பைசல் பண்ணிவிட நீதிமன்றமும் அரசுமே தயாராய் நிற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
சமீப நாட்களாக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்து வரும் முதலாளித்துவ ஊடகங்களோ, இதைப் பற்றி எதுவும் பேசாமல் மயான அமைதியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு செய்தியாகக் குறிப்பிடும் போது கூட, உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதால் தான் ஊழல் நடந்து விட்டது என்றும், கணக்குத் தணிகை அதிகாரி முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டால் பிரச்சினை தீர்ந்தது என்பது போலும் சொல்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு முறை ஊழல் வெளியாகும் போதும் அதைப் பற்றி தனித்தனியே விவாதிப்பதும், அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாய்கிழியப் பேசி விட்டு, அப்போதைக்கு கையில் மாட்டும் யாராவது ஒரு பலியாட்டின் தலையில் பாவக் கணக்கை எழுதி வைத்து விட்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக்கு ஒரு கல்மாடி என்று ஏற்கனவே மாட்டிக் கொண்ட பலியாடுகளைப் போல் இதற்கும் இனி ஒரு பலியாடு கண்டுபிடிக்கப்படுவார். பார்வையற்ற நான்குபேர் யானையைத் தடவிப் பார்த்துப் புரிந்து கொள்ள முயல்வதைப் போன்றே இவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது.
இந்த ஊழல்கள் அனைத்திலும் ஒரு இணைப்புக் கண்ணி இருப்பதை இவர்கள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களையும் அவ்வாறு பார்த்துப் புரிந்து கொள்ள விடுவதில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஊழலைப் பொருத்தவரையில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஓட்டை என்பது ஒரு விளைவு தான் – இந்த விளைவுக்கான காரணம் வேறு.
தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய ஆரம்ப காலத்தில் – ஏன் இன்றும் அதியமான் போன்றவர்கள் கூட – அதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது பொதுத்துறையின் திறமையின்மை. இவர்கள் முதலீடு செய்யும் பலமும், தொழில் நுட்பத் திறனும், வாடிக்கையாளார் சேவையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் பலமடங்கு பின்தங்கியிருப்பதாகவும், இதனால் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், இதற்குத் தனியார்களை அனுமதிப்பதே ஒரே தீர்வு என்றும் சொன்னார்கள்.
ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?
ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.
ஆக, நாட்டுக்கும் நாட்டு மக்களும் சொந்தமான இயற்கை வளங்களைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கும் படையல் போட்டு வைத்து விட்டு அதைப் பொறுக்கித் தின்ன வரும் முதலாளிகளுக்கு இடைஞ்சல் இல்லாத நடைமுறையை மேற்கொள்வது தான் ஊழலற்ற நல்ல நிர்வாகம் (good governance) என்கிறார்கள். இந்தக் கூச்சலில் வளங்கள் கொள்ளை போவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகளின் கூத்துகள் பயன்படுகின்றன.
ஆக, உண்மையாகவே ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் – அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் தேசபக்தியும் கொண்டவர்கள், அதற்கு ஊற்றுமூலமாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதைத் தவிற வேறு வழியொன்றும் இல்லை என்பதற்கு நேரடி சாட்சியாய் ரிலையன்ஸ் ஊழலே இருக்கிறது.
______________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
That is congress and BJP….!
Very soon the Country will destroy…..wait and see
அம்பானி, பல்லாயிர கணக்கான கோடி மதிப்புடைய சொத்துக்கள் வைத்துக்கொன்டு, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த பிறகும் என்னய்யா இன்னும் ஆசை?. இப்போது நீ
செய்யும் கோல் மால் தனத்தை பார்க்கும் போது இந்த சொத்தெல்லாம் இப்படி ஊழல் செய்து தான் சேர்த்திருப்பாயோ என்று தோன்றுகிறது.நீ எல்லாம் ஒரு பெரிய மனுசன் த்தூ.
“இப்போது நீ செய்யும் கோல் மால் தனத்தை பார்க்கும் போது இந்த சொத்தெல்லாம் இப்படி ஊழல் செய்து தான் சேர்த்திருப்பாயோ என்று தோன்றுகிறது”
@@!! Actually Dirubhai vidhaithaar ivar vallarkiraar.
செத்துப்போன சாயிபாபாவே,
மக்களை மொட்டையடிக்கிற
மேல் திருப்பதி நாமக்காரரே,
கற்பூரமடித்து சத்தியம் செய்யவே
தயக்கம் காட்டும் பக்தரைப் பெற்ற
தர்மஸ்தலா மஞ்சுநாதாவே,
தமிழனின் 2 ஜி ஊழலை,
உழைத்துச் சாதித்த
உலக மகா ஊழல் ரெகார்டை
இந்த பேமானி அம்பானி
எப்படியும் எகிறிவிடுவான்
என்றே பயம் கொள்கிறோம்.
தமிழனின் மானம் போகாமல்
தாங்கி நில்லுங்கள் தெய்வங்களே.
ஏனென்றால்
எது மயிராய்ப்போனாலும்
எமக்குக் கவலையில்லை.
இது எமது மானப் பிரச்சினை.
இங்கே இருக்கும் யாவரும்
தன் மானத் தமிழர்கள்.
தூக்கிட்டுத் தொங்கிச் சாவார்கள்.
காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள்…!
சே என்ன ஒரு கவலை ?
உங்களது கட்டுரைகளில் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்று குறிப்பிடுவதை தவிருங்கள். அவர்கள் தவறான கம்யூனிஸப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் என்றாலும் அவர்களை சிபிஎம் என்றோ சிபிஐ என்றோ பெயர் சொல்லியே விமர்சியுங்கள்.
போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்று பெயரிடுவதன் மூலம் அவர்களுடனான இணக்கமாக செயல்படும் வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.
சிபிஎம்மோ சிபிஐயோ உங்கள் பார்வைகளுடன் பொருந்தாதிருப்பது இருக்கட்டும். முதலாளித்துவம் தனது எதிரிகளுடன்(கம்யூனிஸ்ட்டுகளுடன்) மோதும் போது தங்களுக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து ஒற்றுமையாகப் போரிட்டு வீழ்த்தும். அந்தப் படிப்பினையை முதலாளிகளிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் ? உங்கள் போராட்டங்கள் உங்கள் கோஷங்கள் வேறாகவே இருக்கட்டும். ஆனால் ஒன்றிணைந்த எதிர்ப்பும், போராட்டமும் வேண்டுமா இல்லையா ?
தயவு செய்து போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்று அடைமொழிகள் வேண்டாம். சிபிஎம், சிபிஐ தோழர்களுக்கும் கூட இதே மாதிரி நினைக்க வேண்டும்.
சிங்கூர், நந்திகிராமுக்குப் பிறகும் அவர்களை கம்யூனிஸ்டுகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது? முதலாளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான போரில் அவர்கள் யார் பக்கம் இருந்தார்கள்? ராமதாஸ் கூட போஸ்டரில் கார்ல் மார்க்ஸ் படத்தைப் போடுகிறார், அப்போ அவரும் கம்யூனிஸ்டா?
சி. பி. எம், சி. பி. ஐ. கட்சிகளின் நடவடிக்கைகளை வைத்து மக்கள் கம்யூனிசத்தை எடை போடுகிற சூழலில் அவர்களை அம்பலப் படுத்துவது மிக முக்கியம். இல்லையேல் டாடாவுக்கு அடியாள் வேலை பார்ப்பது தான் கம்யூனிசம் என்று ஒரு புரிதல் உருவாகும்.
மே.வங்க அரசு வழங்கியிருக்கும் SEZகளின் எண்ணிக்கை 23. மொத்தமாக எல்லா மாநிலங்களின் SEZகளின் எண்ணிக்கை 584. அதில் மே.வங்க அரசின் SEZகள் நான்கு மட்டுமே 40 ஹெக்டேர் நில அளவைத் தாண்டியவை.
சிங்கூர் திட்டத்திற்கு மட்டும் 400 ஹெக்டேர் (995 ஏக்கர்). மே.வங்க அரசு மிக நியாயமான விஷயங்களை நில ஆக்கிரமிப்பு செய்வதில் கடைபிடித்திருந்தது. ஆனாலும் அரசியல் தலையீடுகளால் அது மாபெரும் விஷயமாக்கப்பட்டு, அரசும் அதைத் தவறாகக் கையாண்டதாலும் கடைசியில் அது அரசை வீழ்த்தும் இடத்திற்குப் போய் நின்றது. இதன் முக்கிய காரணம் சீனாவின் வழிகாட்டுதலில் SEZ களை முயற்சித்துப் பார்க்க மே.வங்க கம்யூனிச அரசு முயன்றது என்பது.
தமிழ் நாட்டு அரசின் SEZகள் 71. அதில் 20 SEZகளுக்கான நில ஆக்கிரமிப்பு 100 ஹெக்டேர்களுக்கு மேல். இரண்டு SEZகள் 1000 ஹெக்டேருக்கு மேல் நிலம் உடையவை. ஆனால் இவை எவற்றிலும் எழாத பிரச்சனை சிங்கூரில் மட்டும் ஏன் எழுப்பப்பட்டது என்பதை நாம் யோசிக்க வேண்டும். கருணாநிதி புத்ததேவ் பட்டாச்சார்யாவை விட மிக நேர்மையாக நில ஆக்கிரமிப்பு செய்தார் என்று நாம் நம்ப முடியுமா ? அல்லது 109 SEZக்களை ஆந்திராவிலும், 104 SEZக்களை மஹாராஷ்ட்டிராவிலும் மிக நேர்மையாகத்தான் நில ஆர்ஜிதம் செய்து உருவாக்கினார்கள் என்று சொல்லலாமா ? ஏன் இந்த மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் ஆட்சியை வீழ்த்தும் அளவுப் பிரச்சனையாக இது வலுவாக்கப்படவில்லை ? மாறாக அரசுகளின் ‘பொருளாதார வளர்ச்சித் திட்டங்களா’க பெருமையுடன் அறிவிக்கப்படுகிறது.
சிங்கூர் மே.வங்க இடது சாரி அரசு, முதலாளித்துவத்திற்கு சலாம் போடும் மன்மோகன்களின் கீழ் தனது மாநில வேலை இல்லா திண்டாட்டத்தைப் போக்க செய்த அபத்த முயற்சியின் விளைவு என்று தானே இதைப் பார்க்க வேண்டும் ? அதை விடுத்து புத்ததேவ் பட்டாச்சார்யா டாடவுடன் ஐந்து நட்சத்திர ஒட்டலில் டின்னர் சாப்பிட்டு நந்திகிராம் மக்களை சாகடித்தார் என்று வில்லன் ரேஞ்சில் முதலாளித்துவ பத்திரிக்கைகள் சித்தரிப்பதை வினவும் செய்யலாமா ?
சும்மா போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்று முத்திரை பதித்துக் கொண்டே இருந்தால் கடைசியில் கம்யூனிஸ்ட்டுகள் என்று உங்கள் பக்கம் நிற்க ஆளே இராது. கம்யூனிஸ்ட்டுகள் தவறிழைக்கவே மாட்டார்கள் என்று நாம் சொல்லமுடியாதல்லவா. சிபிஎம் தவறிழைத்தது எனில் அதன் தவறுகளை ஆய்ந்து அதைச் சரியாகக் குத்திக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்வோம். போலி கம்யூனிஸ்ட் என்று தேவையில்லாத வன்மம் வளர்ப்பதை நிறுத்துவோம்.
>>>
http://www.sacw.net/Nation/sezland_eng.pdf
http://www.sezindia.nic.in/writereaddata/pdf/StatewiseDistribution-SEZ.pdf
http://www.inrnews.com/realestateproperty/india/sez/sri_city_to_develop_5000_acre.html
237 SEZs in 19 states (occupying 86,107 hectares) have
been approved by the Central government.
• 63 of these SEZs have already been notified.
• 23 SEZs are operational, 18 in IT sector.
• Ultimately 500 SEZs.
• Total amount of land to be acquired across India: 150,000
hectares (the area of National Capital Region). This
land – predominantly agricultural and typically multicropped
– is capable of producing close to 1 million tons
of foodgrains. If SEZs are seen to be successful in the
future and more cultivated land is acquired, they will
endanger the food security of the country.
>>>
டாடா கார் தொழிற் சாலைக்கு சிங்கூரில் ஏழைகளிடம் நிலம் பறித்துக் கொடுத்தது அப்போதைய மே.வங்க ஒரிஜினல் கம்யூனிச அரசு.
அதே நிலத்தை ஏழைகளுக்கே திருப்பித் தருகிறார், மம்தா.
டாடா உச்ச நீதிமன்றம் சென்றாகிவிட்டது.
இனி தீர்ப்பு வரும் வரை எப்போதும்போல் ஏழைகள் நடுத்தெருவில்.
அம்பேதன்,
இந்த நில விவகாரத்தில், முதலாளிகள் யார், கம்யூனிஸ்டுகள் யார், போலிக் கம்யூனிஸ்டுகள் யார் என்று எனக்குப் புரியவேயில்லை.
நான் யாரை ஆதரிக்கவேண்டும் என்று தயவுசெய்து கூறிவிடுங்கள்.
எத்தனை ஊழல் வந்தாலும் எவனும் எவளும் ஊழல் செய்தவனின் மயிரக்கூட புடுங்கமுடியுமா? சொல்லுங்க! கர்….ர்..ர்…னாநாடகா மஞ்சுநாதா சத்தியமா?
என்ன கொடும சார் இது
//போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்று அடைமொழிகள் வேண்டாம். சிபிஎம், சிபிஐ தோழர்களுக்கும் கூட இதே மாதிரி நினைக்க வேண்டும்.// நந்திகிராம், சிங்கூரில் மேற்படி ‘கம்யுனிஸ்டுகள்’ ஒன்றினைந்து கர்ப்பரேட் கொள்ளையர்களை எதிர்த்து போராடினார்கள் என்றே நாம் நம்புவோம்..
தேசியம் அரசியல் அரசியல் சாசனம் ஆட்சி அதிகாரம் நிர்வாகம் மக்கள் தேர்தல் வேட்பாளர் வாக்காளர் என்ற அனைத்து பத்திற்கும் மறு ஆய்வுடன் கூடிய புது அகராதி கண்டுவிட்டு புதுவாழ்வு மறுமலர்ச்சி தேடவும். இனி இதைக்கதைப்பதால் எந்த பயனுமில்லை. முதலில் மக்களை கடந்த நிகழ்வுகளைக்கொண்டு மனமாற்றம் பெற சிந்திக்க ஆர்வமுட்டவும்.
எனக்கு அரசியலும் பிடிக்கல. ஊழலும் பிடிக்கல.
Why are you blaming only media. Blame so called intelligent Indians also.
For 2G issue till now all the bloody intelligents shouting by closing all their holes. They shouted like they learnt the word LAKH by this 2G scam only.
Where are they have gone? Where is Hasare and Ramdev?
“மனநலம்குன்றிய மக்களும் அவர்களின் தலையாரிகளும் அதன்மீதான ஒப்பாரியும்”
இதுக்கு செருப்ப கழட்டி அடிச்ருக்கலம்
pls. vinavu change the photo of rig, that’s not the rig that’s in Godavari river.
ha ha india america vuku adimai america coaprate ku adimai so indivaum coaprateuku adimiaa adimingalin desam ethuu
இதை ஒரு பொது நல வழக்கா போடுங்க வினவு .இங்கிருக்கும் வளங்களை ஏற்றுமதி செய்து கொள்ளையடிக்கும் அம்பானிக்கி இதுதான் செக் வைக்கும் வழி
இன்று உலகின் 80% மக்கள் வறுமையில். மூலதனத் தாக்குதலுக்கு எதிராக போராடுவது ஒன்றே இதற்கு தீர்வாகும்.எனவே, நாம் நமக்காக போராட கம்யூனிஸத்தில் இணைவோம் வாருங்கள்.
——————————————————
உலக மக்களில் 80 சதம் பேர் பின்பற்றும் பாட்டாளி வர்க்க வறுமைக்கோட்டை “கோட்டைவிட்டு” விட்டுப்போன மீதமான 20 சதம் பேர் கம்யுநிசத்திலிருந்து மதம்மாறி முதலாளியாக பணக்காரர்களாக ஆனது மாறிவிட்டது நல்லது தானே தோழா !!!
பணமுள்ளவன் முதலாளித்துவம் பேசுவதும் பணம் சம்பாதிக்க அருகதை இல்லாதவன் பாட்டாளி வர்க்கம் என்றும் பேசுவது தற்காலிகமானது தானே தோழா !!!
முதலாளி தொழிலாளி எல்லாவற்றிற்கும் அளவுகோல் பணம்தான்.
வர்க்க வெறி கொண்ட பாட்டாளியும் முதலாளியும் வர்க்கபேத அரசியலும் பணத்திற்காக அடிக்கும் லாவணி.
என்ன புரியவில்லையா !!! புரியவைக்கவா ?
loose@motion.com
வினவு தோழர்களே! //இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. // என்று தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை . ஆனால் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் இந்தியாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதை தீவிரமாக எதிர்க்கும் நீங்கள், இந்தியாவின் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளாகிய ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி ஆகியன உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதை எதிர்க்காதது மட்டுமின்றி, //ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. // என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறீர்களே நீங்கள் கம்யூனிஸ்டுகளா? தேசபக்தர்களா? தேசபக்தர்கள்கூட தங்கள் தேசத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் அந்நிய நாட்டினரை எதிர்ப்பவர்கள். ஆனால் தங்களிடமோ அதையும் தாண்டி மற்ற நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டும் இந்தியாவின் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளின் “நிபுணத்துவம்” “தகுதி” திறன்” மற்றும் “மூலதன பலம்” ஆகியவற்றைப் பார்த்து புளகாங்கிதம் அடையும் தேசியவெறி வாதம் அல்லவா தொனிக்கிறது. அது சரியாகப் படவில்லையே.
தோழமையுடன்,
த.சிவக்குமார்
வணக்கம் சிவக்குமார் அவர்களே.
நீங்கள் மேற்கோளிடும் பாராவில் கீழ்கண்ட வரிகளையும் சேர்த்துப்படியுங்கள் விசயம் புரியும் என்று நினைக்கிறேன்.
இது நீங்கள் மேற்கோள் காட்டும் வரிகள். //பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது//
இது நீங்கள் மேற்கோள் காட்டும் பாராவிலிருந்து கைதவறி கட் செய்த வரிகள். சேர்த்துப் படியுங்கள் புரியும்.
///அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது ?///
//ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?
ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.//
கட்டுரையின் முன்னர் பின்னர் இன்னும் சில இருக்கின்றது. எங்குமே இந்திய பொதுத்துறையை தேசபக்தியுடன் வினவு புகழ்ந்ததாக தெரியவில்லையே. enna vimarsana nermaiyo
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இந்த சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1 லட்சம் கொடியை எட்டி இருந்தது , இப்போது இருவர்க்கும் தனித்தனியாக 6 லட்சத்துக்குமேல் (மொத்தம் 12 லட்சம் ) சொத்து உள்ளது
அம்பனி ஒரு உல் நாட்டு கலவனி
உறுதியான இதயங்களுடன் புதிய இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கை???
“வாழ்த்துக்கள் சுப்ரமணிய சுவாமி அவர்களே!!!- இதே போல நடுநிலையுடன் எப்போதும்/ எவ்விடத்தும் செயல் பட்டால் நாட்டுக்கும் நல்லது- உங்களுக்கும் மக்கள் மனதில் இடம் கிடைக்கும்!! உறுதியான இதயங்களுடன் புதிய இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது. ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் நூல் வேலி உள்ள இடங்கள் எனக்கு அலர்ஜி என்று எப்படி எடுத்துரைப்பேன்??? -இதை தினமணி பிரசுரிக்குமா? பாராட்டுக்கள். வாழ்க பத்திரிகை தர்மம்.- கடலூர் சித்தன்.ஆர்”