Wednesday, October 4, 2023
முகப்புகட்சிகள்காங்கிரஸ்வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் வந்தே மாதரம்‘. தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தே மாதரதேசிய கீதத்தை கிறித்தவர்களும், முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”

ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.

டந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.

நாட்டுப் பற்று ஜெபத்திலா, சிறையிலா?

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்களின் பெருமை, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்தே மாதரத்தை உச்சசாடனம் செய்தார்களா என்பதில் இல்லை; தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும். அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

பாரதமாதா கிடக்கட்டும், பாரதம் என்று இன்று அறியப்படும் இந்தியாவே உருவாயிராத காலம்தான் 19ஆம் நூற்றாண்டு. பல்வேறு வழிமுறைகளில் ஆட்சியதிகாரத்தை வெள்ளையர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் அதிகாரமிழந்தவர்கள் அவர்களை எதிர்ப்பதும், அதிகாரம் பெற்றவர்கள் ஆதரிப்பதும் இடத்திற்கிடம் மாறுபட்டது. உதாரணத்திற்கு மராத்திய சிவாஜிக்குப் பின், பேஷ்வாக்களின் ஆட்சியில் தக்காணம் முழுவதையும் பார்ப்பன ‘மேல்’சாதி நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் ஆண்டு அனுபவித்தனர். ஆங்கிலேயரின் வரவு பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தமது சமூக மேலாண்மை பறி போனதைக் கண்ட மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கிய சூழ்நிலை இதுதான். திலகர், கோகலே, சாவர்க்கர் போன்ற சித்பவனப் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக உருவான விதமும் அப்படித்தான்.

ஆங்கிலப் பிதாவிடம் வங்கமாதாகாதல்!

மராத்திய நிலைமை இப்படியிருக்க வங்கத்தின் நிலைமை நேரெதிராக இருந்தது. மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.

”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.

பஜனை நாட்டுப்பற்று எங்கேயுமில்லை!

இந்த இடத்தில் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபதியங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்திருக்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் விடுதலையும் அடைந்திருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கிறித்தவம், இசுலாம், பவுத்தம் என்ற பலவிதமான மதநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். லிபியாவின் ஓமர் முக்தா தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இசுலாமிய மதப்பற்று கொண்டவர்; துருக்கியின் கமால் பாட்சாவோ மதச்சார்பற்றவர்.

சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானும், அடிமைப்பட்ட சீனாவும் பவுத்தமத நம்பிக்கை கொண்ட நாடுகள்தான். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் மதமும், அடிமைப்படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மதமும் கிறித்தவம்தான்.

அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் மக்கள் தம்நாட்டைத் தாய்நாடென்றோ தந்தையர் நாடென்றோதான் அழைத்தார்கள். ஆனால், யாரும் கன்னி  மேரியைப் போலவோ, ஏசுவைப் போலவோ, புத்தரைப் போலவோ ஒரு படம் வரைந்து வைத்து குடம், சாம்பிராணி காட்டி, இந்தப் படத்துக்கு பஜனை பாடுபவன்தான் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவன் என்று கூறவில்லை. ஒரு மதத்தினர் மட்டுமே வாழும் நாடுகளில் கூட  நடக்காத இந்தப் பித்தலாட்டம், பல மதத்தினர் வாழும் இந்தியாவில் நடந்தது.

ரவிவர்மாவின் லட்சுமி காங்கிரசின் பாரத மாதா

கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?

இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.

பாரத மாதாவை விற்பவர்கள் யார்?

ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

ஆகாசவாணியின் விடிகாலை ஒலிபரப்பில் கீறல் விழுந்த ரிக்கார்டாக ஒலித்துவந்த வந்தே மாதரத்தை, பிரேக் டான்சின் வலிப்புக்கேற்ப பாப்பிசை ‘வண்ட்டே மாட்றம்’ ஆக சோனி நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது. இன்னொருபுறம் மேல்நிலை வல்லரசுகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்து விற்கும் தரகனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ”பாரத மாதா”வை விற்பவர்கள் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல!

– தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. அமெரிக்க காரனிடம் முதுகுக்கு பின்னால் பேரம் பேசுபவர்கள் இவர்கள், வந்தே மாதரம் மட்டும் எதற்கு இவர்களுக்கு.

    மற்றவர்களை தேச துரோகிகள் ஆக்குவதர்காகவோ.!

  2. தங்களுடைய பதிவுகளை தினமும் படிப்பவன் நான். தங்களின் கருதுக்கள் அனைத்தும் நடுநிலையாகவும் நல்ல தகவல்களை தருவதாகவும் உள்ளது. தஙளுடைய அனைத்து பதிவுகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம்.
    தங்கள் பதிவுகள் சிறந்த முறையில் தொடர வாழ்த்துக்கள்..

  3. Naanum paakarem, thodarnthu Hinduism pathiye ezhudhiye kaalatha otriye, enna christians ennavo romba nallavanunga madhiriyum, muslim ellarum thyagigal madhiriyum project panreengale, ungalukku thiruttu Jegath casper,Thioruttu dinakaran, Vincent Selva kumar angel Tv, Fake muslim preiests across the counrtry avangala pathi theriyadha madhiriye bajana panreengale, innum ethana nalaikku??? If you had any guts you should expose christian fraud? just mentioning people like Dinakaran once in a bluemoon to win peoples trust and forgetting the followups altogether doesnt do vinavu any favor….

  4. நான் இந்துவோ, முசுலிமோ, கிருத்தவனோ அல்ல தமிழன், ஒரு இனத்தின் விடுதலை பாட்டு என்பது அந்த இனத்தின் தாய்மொழியில் இருக்க வேண்டும் ஆனால் சமற்கிருத மொழியில் உருவான தேசிய கீதம், தேசிய பாடல் போன்றவற்றை தமிழன் பாடுவது காலத்தின் அவமானம், இந்திய என்னும் கூட்டாட்சியில் தமிழ் இனத்திற்கு பாதுகாப்பில்லை, தமிழ் மொழிக்கு பாதுகாப்பில்லை
    தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, பண்பாடு, திருவிழாக்கள் என அனைத்தையும் இந்தியா மறைத்து வடநாட்டு மொழியான இந்தி, வடநாட்டு மக்களின் நலம் இதை மட்டுமே இந்தியா கவனம் செலுத்துகிறது, இதை மக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்

    • Ennaya tamizh tamizhnu overa sound kodukureenga.. tamizh na enna komba molaikkudhu illa vera edhavadhu… vayula asingama varudhu.. ella mozhiyum onnu thaan.. Indiala irukka mozhi ellame samam thaan. Hindi learn panna enna koranja poiduvom? just learning a another language helps us to understand them in a better way and communicate freely with out any hassles. Its such a pity that tamils have been deprived of learning hindi by thos filthy politicians. Indiala matha endha statelayum poi paarunga. conductor, poti kada vechurkavan ellarum hindi pesuranga.. aana inga tamizh tamizhnu solraaangale thavira avanga thamizh ellam Kumudham, Dina thanthi , Vikatan levella thaan irukku. Can anybody tell us what harm does one have in learning a language???

      • உனக்கு உன் தாய் மொழியான தமிழ் தெரியுமா? முதலில் தமிழை எழுத படிக்க பழகு. அதன் பிறகு மற்ற மொழிகளை கற்கலாம். மற்ற மொழிகளை கற்க கூடாது என்று எவரும் சொல்லப்போவதில்லை. முதலில் உன் தாய் மொழியை படி. நீ தமிழ் பண்டிதராக வேண்டாம். சாதாரணமாக படித்தால் போதும்.

        • Pasikkamala inga vandhu ezhudurrom ayyo kadavule indha jandhukkala enna panradhu???.. Idhaye karunanidhiyidam kel poi enya unga suyanalauthukkagqa matravargal oru languagea kathukka mudiyadhapadi panninanu…

          • Sorry for the typo..
            Padikkamala inga vandhu ezhudurrom ayyo kadavule indha jandhukkala enna panradhu???.. Idhaye karunanidhiyidam kel poi enya unga suyanalauthukkagqa matravargal oru languagea kathukka mudiyadhapadi panninanu… Atleast chennai has its fair share of private schools where hindi as a second language is available what about the plight of thousands of schools in the rurals and suburbs.. You can convenienly say nobody stopped you from learning. Ofcourse, those who live in city can learn spending their money but what about millions of people living in the outskirts. Aren’t those people migrating to places like Bangalore, Delhi, mumbai.. Particularly when they lack communicating in English Hindi could come in handy.. Its the duty of state government to ensure the best for its citizens is it or not??

            • தம்பீ, முதலில் ஏன் இங்கே இந்தி எதிர்ப்பு வந்ததுன்னு தெரிஞ்சுன்டு உன் கருத்தை சொல்லு..நல்லா இருக்கும்.. 1964 முதல் இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி..அதைக் கட்டாயம் படிக்கணும்னு இந்தி வெறியர்கள் சட்டம்போட முனைந்தபோது அந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு நாம் தக்க பதில் கொடுத்தோம்.. ஹிந்தி எத்தனை சதவீதம் பேரால் பேசப்படுகிறது? 25%? கடிபோலி, ஹிந்துஸ்தானி, மைதிலி, போஜ்பூரி, கட்வாலி,ஹரியான்வி, ராஜஸ்தானி என எல்லா மொழிகளையும் ஹிந்திதான்னு மட்டை அடி அடிக்காம ஹிந்தி எத்தனை சதவீதம் பேரால் பேசபப்டுதுன்னு சொல்லு.. நிற்க..இந்தியாவில் ஒரே தேசிய இனமா இருக்குது? இது தேசமே அல்ல..தேசிய இனங்களின் சிறைக்கூடம்..புரியுதா? தமிழ் ஒரு தேசிய இனம்..மலையாளம் ஒரு தேசிய இனம்..வங்காளம் ஒரு தேசிய இனம்..இந்த மாதிரி இருக்கச்சே ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் மொழியை அரச கரும மொழியா அறிவிக்கிறது அயோக்கியத்தனம் இல்லையா? இலங்கையிலே பாரு..2 தேசிய இனங்களுடைய மொழிகளும் ஆட்சிமொழியா இருக்கு..சிங்கப்பூரிலே மலாய்,சீனம்,ஆங்கிலம்,தமிழ் 4ம் தேசியமொழிகள்..இத்தனைக்கும் அங்க்ந்ந் 8 சதம்தான் தமிழர்கள்.. இப்படி இருக்கும்போது சும்மா கருணாநிதி மீது பாஞ்சு பிரான்டாம..சுயமா யோசிச்சுப் பார்..இந்தி படிச்சா எல்லோருக்கும் வேலை கிடைக்கும்..அப்படிங்கறது பொய்..அங்கேருந்துதான் நிறைய பேரு தென்னிந்தியாவுக்கு வேலைதேடி வாராங்க..மேலும் இந்தி பெல்ட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் கொடி கட்டிப் பறக்கு..லக்னோ மாணவன் இந்தி,இங்கிலீஸ், அறிவியல்,கணக்கு,சமூகவியல் னு 5 பாடம் மட்டும் படிச்சிட்டு 10 ஆம் வகுப்பு பாஸ் பண்ணும்போது நான் (தமிழன்) மட்டும் 6 பாடம் ஏன் படிக்கணும்? நான் இந்தி படிக்கத் தயார்-அவன் தமிழ் படிக்கத் தயார்னா..
              இந்தி என்ன மராட்டி கூட எவரும் கத்துக்குவாங்க..தேவையின் அடிப்படையில்..கன்யாகுமரி,ராமேஷ்வரம் ஊர்களில் தரைக்கடை வியாபாரிகள் அனைவருக்கும் இந்தி தெரியும்..ஏன்னா அது சுற்றுலாப்பயணிகளிடம் சரக்கு விற்க அவங்களுக்கு தேவை..அவங்க எந்தப் பள்ளியிலும் போய் இந்தி கற்கலை..தாராவிக்கு வேலை தேடிப்போகும் தமிழன் 1 மாதத்துக்குள் மராத்தி இந்தி கத்துக்குவான்..இதுவும் தேவை அடிப்படையில்தான்.. ஆனா எல்லோரும் இந்தி படின்னு சொல்றது பித்தலாட்டம்..7 கோடி தமிழனுமா தில்லிக்கு போறான்? இப்படியே போனா கோவில்ல சாமிகிட்டே பேச சம்ஸ்கிருதம் கத்துக்கணும்னு சொல்வே போல இருக்கு..வேணும்னா சாமி தமிழ் கத்துக்கட்டும்..முடியாதுன்னு முரண்டு பிடிக்கிற சாமி எனக்கு வேணாம்..நாடு கடத்துவோம்..

              • Anne, En inga vattiku vudra set tamizh pesaliya, Sowcarpetla covering naga vikkaravan tamizh pesaliya, Gulfi ice vikkaravan tamizh pesaliya, opanipuri podravan tamizh pesaliya?? avangalam ellam vada naatula varama spain mexicolendha vandhaanga. Naan kattayapaduthunatha edhirthiorukken keezha poi paaar. Sari un kannaku padiye, தாராவிக்கு வேலை தேடிப்போகும் தமிழன் 1 மாதத்துக்குள் மராத்தி இந்தி கத்துக்குவான்?? omedyy kemedy pannaliye..Ivanuga oru language supremacyoda alayuraanuga ivanunga 1 maasathula hindi kathukiraanungala.. kaadhu poo suthalam \poo malaye sutha koodathu…. இலங்கையிலே பாரு..2 தேசிய இனங்களுடைய மொழிகளும் ஆட்சிமொழியா இருக்கு..சிங்கப்பூரிலே மலாய்,சீனம்,ஆங்கிலம்,தமிழ் 4ம் தேசியமொழிகள்..இத்தனைக்கும் அங்க்ந்ந் 8 சதம்தான் தமிழர்கள்.. idhu vena othukkuren…singapore enna namma mylapore mandaveli, adyara setha enna size irukkomu avlo irukkuma? irundhalum vijaykanth rangeku percentage, statistics sona ungala paaratama irukka mudiyala…
                இப்படியே போனா கோவில்ல சாமிகிட்டே பேச சம்ஸ்கிருதம் கத்துக்கணும்னு சொல்வே போல இருக்கு..வேணும்னா சாமி தமிழ் கத்துக்கட்டும்..முடியாதுன்னு முரண்டு பிடிக்கிற சாமி எனக்கு வேணாம்..நாடு கடத்துவோம்..

                Paathengala, kadaisila unga favoutite topicku vandhuteenga.. idha idha idhathaan naan ethirpaarthen.. ponga poi karunanidhukku sombu adeenga nalla

            • இந்தி என்பது தேவையற்ற ஒரு கூடுதல் சுமைதான் மாணவர்களுக்கு, தோழர் இரணியன் சொன்னது போல இந்தியை தாய் மொழியாய் கொண்ட இந்தியர்கள் மிகவும் குறைவு. நான் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறேன் இங்கு பணிபுரியும் உ.பி, பீகார் தொழிலாளிகள் தங்களுக்குள் போஜ்பூரி மொழியிலேயே பேசி கொள்கின்றனர். அவர்களின் தாய் மொழி போஜ்பூரி, இந்தி அல்ல.லக்னோ போன்ற பெருநகரங்களில் இருந்து வரும் மிக சிறுபான்மையினரே இந்தியை தாய்மொழியாய் கொண்டுள்ளனர். இந்தி பேசும் நபர்களோடு தொடர்சியாய் பழகினால் இரண்டே மாதத்தில் கற்று கொள்ள கூடிய எளிமையான மொழி இந்தி. இந்தி தெரியாதவர்களுக்கு இந்தி பேசப்படும் இடங்களில் சிரமமென்பது இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான். இந்த குறுகிய காலத்திற்காக பள்ளி சிறார்களை பல வருடங்கள் வதைப்பது தேவையற்றது.

      • I think this ‘Super’ never visited Kolkata, Rajastan and all. In kolkata only few person speak and understand Hindi. I bet this idiotic guy. If he really wants to know the fact he can check with his friends who visited Kolkata. Even in Rajastan, cities like Udaipur I saw many conductors who rarely understand Hindi. I bet this idiotic guy.

        Ask him to go to Surat in Gujarat. Only other state people speak hindi. Survey says that in Surat 85% of native people don’t understand Hindi. Think or at least try to know the fact before take vomit on the net ….

        • Is it so? maramanda… ive visited ahmedabad many times with my colleagues who are fluent in hindi, ive seen them conversing in hindi with the natives. If Ahmedabad (which is main city in gujarat, where all the businesses run) can speak hindi without any hassles why not chennai which is so called metropolitan.. have the 20 other states which have their language as well speak hindi lost their language completely??? , . So you wanna compare tamilnadu with yet westbengal for this linguistic inability.. great!!!

          • எதற்கெடுத்தாலும் ஜப்பானைப் பார், பிரான்சைப் பார், அமெரிக்காவைப் பார்ன்னு சொல்றீங்களடா ! அவனுங்க எல்லாம் அவனவன் தாய்மொழியிலதான்டா ஆய் கூட போறான்.

        • நிறைய மொழி கத்துண்டா என்ன பிரயோஜனம் சொல்லும் ஓய்..குருவிக்காரவா ஆறு பாஷைலாம் பேஷரா தெரியுமோ..அவாளை எல்லாம் அன்டர் செக்ரட்டரியாவோ, சர்வீஸ் கமிஷன் சேர்மனாவோ, வைஸ் சான்சலராவோ மாத்திடப் போறேளா? அப்புறம் என்னத்துக்கு நெறைய பாஷை கத்துக்கச் சொல்றேள்? ஒண்ணு பண்ணும் ஓய்…சிதம்பரம் நடராஜர் மாதிரி ஆளுங்களை அந்த அந்த ஊர் பாஷையைக் கத்துக்கச் சொல்லுங்கோ..அது போரும்…நம்பவா பல்லு விளக்காம சமஸ்கிருதத்துல முனங்கறதுல எத்தன கெட்ட வார்த்தன்னு ஜனங்களுக்காச்சும் புரியுமோ இல்லியோ…நம்ம ஸ்வாமிகள் இத்தனை பிடிவாதமா சமஸ்கிருதம்னு இருக்கலாம்..ஆனா சூத்திராள் அவா பாஷை மேலே பிடிவாதம் காட்டிறப்படாதா?

  5. டுபாக்கூர் கம்மியுனிசம் பேசி அடுத்தவனை பிரைன் வாஷ் பண்ணி தெருவில் உண்டி குலுக்க விடும் வினவையே, எவனோ (ஹிந்து இல்லாத ஒருத்தன் ) பக்காவா பிரைன் வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கான். அதோட வெளிப்பாடுதான் இதேமாதிரியான வாரா வாரம் ஆரவாரமான கட்டுரைகள். , , ,
    போகட்டும் .

    வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.

    மத்தபடி வேற மதத்தை சேர்ந்தவனை பாடுடான்னு எவனும் எங்கியும் வற்புறுத்தல. எதாவது ஆதாரமோ, சம்பவமோ காமிக்க முடியுமா உங்களால?

    இல்லாத ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு ,ஏன்யா வீணா புது புது பிரட்சினைய கிளப்புறீங்க?.

    அதுக்காக வந்தே மாதரம் பாடறவன் லாம் ஏதோ தீவிரவாதி மாதிரி நினைச்சுகுறீங்க. இது உங்க தாழ்வு மனப்பான்மையோட வெளிப்பாடுதான். அதோட இல்லாமல் அதை பாட கூடாதுன்னு சொல்றமாதிரி தான் இருக்கு உங்க கட்டுரை வரிகள்.

    அராபிய பாலைவனத்தில் வேலைக்கு போகும் ஒரு மைனோரிட்டி மதத்துக்காரன் தெரியாம ஏதும் தப்பு பண்ணிட்டன்னா , உடனே அந்த நாட்டு சட்டத்தை மதிச்சி தான் நடக்கணும்னு லா பேசும் இந்த நாட்டு ஆளுங்க, வந்தே மாதரம் விவகாரத்தையும் ஏன் அந்த கண்ணோட்டத்துல பார்க்க கூடாது?

    இது இந்தியா , இங்கே இப்படிதான்யா இருக்கும். புடிக்காதவன் அவன் அவன் பொழப்பை பார்த்துட்டு பொட்டி கட்டிட்டு கிளம்பி போங்களேன்,

    இதுதான், பொம்மை சாமியை கும்பிடுற மக்கள் அதாவது சைத்தானின் , பேயின் குழந்தைகள் உள்ள நாடாச்சே, அப்புறம் ஏன்யா தெரிஞ்சே இங்கே இருக்கீங்க?

    நீங்க யாரும் கிளம்ப மாட்டீங்க, நீங்க போனாலும் ஒருத்தனும் உங்களை கிட்ட சேர்த்துக்க மாட்டான், அடிச்சி தொரத்திடுவான்.

    உங்களுக்கே நல்லா தெரியும் இந்தியாவை உட்டா வேற எங்கியும் உங்க பஜனை செல்லாதுன்னு.

    ஏற்கனவே சுதந்திரம் கிடைக்கிறவரைக்கும் இங்கே கூடி கும்மியடிச்சிட்டு சுதந்திரம் கிடைச்சவுடனே தனியா போனனுங்கள்ள அவனுங்க நிலைமை எல்லாருக்கும் தெரியும்.

    பாகிஸ்தானை ஏதோ சொர்க்க பூமி மாதிரி சில பேர் நினைச்சிட்டு இருக்காங்க . அவங்கல்லாம் ஒரு பாகிஸ்தானியை நேரில் கூட பார்த்துருக்க மாட்டங்க. பழகி இருக்க மாட்டாங்க.

    தினம் தினம் சாவு, குண்டுவெடிப்பு, பஞ்சம் பட்டினி, இங்கே இந்தியாவுல இருக்குற மாதிரி அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ் லோயர் கிளாஸ் னு மூணு நாலு பிரிவெல்லாம் அங்கே கிடையாது, ரெண்டே கிளாஸ் தான். ஒன்னு மதம் சட்டம் னு சொல்லி ஏழையை சுரண்டிதின்னு வயிறு வளர்க்கும் ஒரு கும்பல், இன்னொன்னு அவன் சொல்றதை நம்பி அல்லாடும் மற்றொரு கும்பல். இதெல்லாம் உங்களுக்கு சொல்லி புரியாது. புரிஞ்சாலும் காட்டிக்க மாட்டீங்க .ஒக்கே .

    அடுத்து,

    “கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா.”

    அது சரி அப்போ , வேளாங்கண்ணி மேரி அம்மா சிலைக்கு பட்டு புடவை கட்டி மல்லிகை பூ வச்சி விட்டது எந்த ரொவி வர்மா?

    கிறுக்கு பசங்களா! தெய்வம் ங்குறது நீ எப்படி கற்பனை பண்ணிக்கரியோ அப்படிதாண்டா இருக்கும். நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி புடவை கட்டி தெய்வத்தை நீங்க சொன்னா மாதிரி வரைஞ்சே இருந்தாலும் அதுல என்னா தப்பு இருக்க முடியும்?

    அடுத்தது,

    “உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் “.

    யாரு சார் சொன்னது? இப்படி உங்களுக்கு?

    அப்போ மேரி அம்மா சிலை, குழந்தை இயேசு சிலை, இயேசு சிலுவையில் அறையப்பட்டது மாதிரியான சிலை எதையெல்லாம் வச்சு கும்பிடறவன் கிறிஸ்தவன் இல்லாம வேற யாரு?

    எல்லா ஊரிலும் இருக்கும் வெவ்வேறு பெயருடைய தர்காக்கள் எந்த வகையை சேர்ந்ததுன்னு தெளிவா சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்.

    அப்புறம், எப்போ பார்த்தாலும் பார்பான் லாம் எங்கியோ வேற ஒரு நாட்டுலேர்ந்து வந்ததா சொல்லிக்கிட்டு திரியறீங்க ( நான் ஒரு நான் – பிராமின்). அப்படின்னா அது எந்த நாடு? அது இப்போ இருக்கா? இல்லை சுனாமி ல அழிஞ்சு போச்சா? அப்போ பார்பனோட மூதாதையர் , சொந்தக்காரன் லாம் அங்கே இருக்கானா? மரபணு சோதனை, ஜீன் டெஸ்ட் ரிசல்ட் லாம் ஒத்து போகுதா? தங்களோட புனித நகரம் னு சொல்லி அந்நிய நாடான அரேபியா, ஜெருசேலம் செல்லும் இசுலாமிய கிறிஸ்தவ மக்களை போல பார்ப்பானும் அங்கே புனித பயணம் போய்ட்டு வந்துகிட்டு இருக்கானா? வினவு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும், எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்,

    வினவு,

    நீங்க என்னதான் எழுதினாலும், உங்க நோக்கம் நிறைவேற போறதில்லை,

    எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

    மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.

    எவனையும் கட்டாய படுத்தி மதம் மாத்தனும் ங்கற அவசியமும் எங்களுக்கு இல்லை.அதே மாதிரி எங்க சாமியை கும்பிடாதவனை சைத்தான், பேயின் பிள்ளைகள் னு சொல்ற வழக்கமும் இல்லை.

    இதுதான்யா இந்த மதத்தின் ஸ்பெஷாலிட்டி , கழுதைகளுக்கு கர்ப்பூர வாசனை தெரியாமல் போறதுல ஆச்சர்யம் இல்லை.

    இத்தனைக்கு பிறகும், மத்த மதத்து காரங்க மேல எங்களுக்கு கோபமும் வர்ரதுல்ல, ஏன் தெரியுமா? அவங்க எல்லாருமே ஏதோ ஒரு காலத்துல இந்துவா இருந்தவங்க தான், எங்க முன்னாள் ஹிந்து சகோதரர்கள் தான்,

    பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.

    இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,

    மாக்ஸிமம்

    • மாக்ஸிமம் -நன்றி.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்…

      ///இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,//

      இதையேத் தான்நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்..இவன் வேலையே சண்டை மோட்டிவிடுவதுதான்..

    • ##வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.##

      Hello மாக்ஸிமம் sorry… மாங்க
      தாலிபான்னுக்கு உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..

    • ஆகா அற்புதம் என்ன நிதர்சனமான உன்மை…ஆல் அல்லக்கைஸ் அசெம்பில் கியெர்..

      ////வினவு,

      நீங்க என்னதான் எழுதினாலும், உங்க நோக்கம் நிறைவேற போறதில்லை,

      எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

      மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.

      எவனையும் கட்டாய படுத்தி மதம் மாத்தனும் ங்கற அவசியமும் எங்களுக்கு இல்லை.அதே மாதிரி எங்க சாமியை கும்பிடாதவனை சைத்தான், பேயின் பிள்ளைகள் னு சொல்ற வழக்கமும் இல்லை.

      இதுதான்யா இந்த மதத்தின் ஸ்பெஷாலிட்டி , கழுதைகளுக்கு கர்ப்பூர வாசனை தெரியாமல் போறதுல ஆச்சர்யம் இல்லை.

      இத்தனைக்கு பிறகும், மத்த மதத்து காரங்க மேல எங்களுக்கு கோபமும் வர்ரதுல்ல, ஏன் தெரியுமா? அவங்க எல்லாருமே ஏதோ ஒரு காலத்துல இந்துவா இருந்தவங்க தான், எங்க முன்னாள் ஹிந்து சகோதரர்கள் தான்,

      பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.

      இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,////

    • \\
      வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.
      \\

      வந்தே மாதரம்.
      வருதே மூத்திரம்.
      எடுடா பாத்திரம்.
      குடிடா சீக்கிரம்.
      நாங்களும் பாடுவோமுல்ல.

      \\எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

      மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.
      \\

      வித விதமா அம்மணக்..டி சாமிகள்.நாலு கையி. கூட ரெண்டு அல்லக்கை சாமிங்க. ஆளுக்கு கையிலநாலு கத்தி துப்பாக்கி அணுகுண்டு. போங்கடா. போயி உழுந்து கும்புடுங்க.
      \\
      பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.
      \\

      அட அண்ணாச்சி. உங்களுக்கு விவரமே தெரியாதா. மதம் மாறுனவங்கள்ளாம் படிப்பு, சாப்பாடு, சுயமரியாதை, சகோதர மனப்பான்மைக்காகத்தான் மாறுனாங்க. அவங்களாச்சும் பால் பவுடர் குடுத்தாங்க.நீங்க சாணிப்பாலும் சவுக்கடியும்தான் குடுத்தீங்க

      • வினவு. தயவு செய்து என் பின்னூட்டத்தை வெட்டு இல்லாமல் பதிவேற்றம் செய்யுங்கள். பிள்ளைக்கறி கேட்டதும் பக்தனின் மனைவியை பெண்டாளக்கேட்டதும் இந்து கடவுள்தான்.

        • வினவு இதை அழித்து விட்டார்கள். “சாமி அப்புறம் பசிக்குதுன்னு பிள்ளைக்கறி கேட்கும். சந்தோசமா இருக்க உங்க பொண்டாட்டிகளை கேட்கும். அப்படிப்பட்ட நல்ல சாமிங்க.”

      • சரியான செருப்படி…கலக்குங்க…!!!!!!!!! வாழ்த்துக்கள்

        https://www.vinavu.com/2011/06/29/yeddi-kumara/#comment-45024 -> இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பதில் இன்னும் சூப்பர். ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்கணும். இந்திய எங்கும் தெருத்தெருவா இதை போஸ்டர் அடிச்சு ஓட்டனும்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…

      • நான் கடவுள்,
        நண்பா இந்த ஆரிய மக்சிமம்தின் வர்ணாசிரமத்தின் கொள்கையை அறுத்து எறிவதற்கு, தீடான்மையை கொள்கையை அறுத்து எறிவதற்கு, இந்த தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு என்றும் உன்னுடன் உறுதியோடு நிற்போம் நண்பா, உன்னுடைய வரிகள் ஹிண்டுதுவாவின் இதயத்தை உடைத்து எறியடும். நன்றி .

    • ####அப்போ பார்பனோட மூதாதையர் , சொந்தக்காரன் லாம் அங்கே இருக்கானா? மரபணு சோதனை, ஜீன் டெஸ்ட் ரிசல்ட் லாம் ஒத்து போகுதா?###

      5 or 6 years back hereditary genetics research program was telecasted in National Geographic Channel, you must see that program first. I think that was BJP’s period, they banned the retelecast. In the program, they took DNA samples from Africa-india(madurai)-australia. and another one from Africa-Europe-India. the first one proved same DNA pattern from Africa-Madurai-Australia(Aborigines). Another proves North Indian connection……so, search the net….you fool “pops”

    • டுபாக்கூர் கம்மியுனிசம் பேசி அடுத்தவனை பிரைன் வாஷ் பண்ணி தெருவில் உண்டி குலுக்க விடும் வினவையே, எவனோ (ஹிந்து இல்லாத ஒருத்தன் ) பக்காவா பிரைன் வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கான். அதோட வெளிப்பாடுதான் இதேமாதிரியான வாரா வாரம் ஆரவாரமான கட்டுரைகள். , , ,
      போகட்டும் .

      வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.

      மத்தபடி வேற மதத்தை சேர்ந்தவனை பாடுடான்னு எவனும் எங்கியும் வற்புறுத்தல. எதாவது ஆதாரமோ, சம்பவமோ காமிக்க முடியுமா உங்களால?

      இல்லாத ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு ,ஏன்யா வீணா புது புது பிரட்சினைய கிளப்புறீங்க?.

      அதுக்காக வந்தே மாதரம் பாடறவன் லாம் ஏதோ தீவிரவாதி மாதிரி நினைச்சுகுறீங்க. இது உங்க தாழ்வு மனப்பான்மையோட வெளிப்பாடுதான். அதோட இல்லாமல் அதை பாட கூடாதுன்னு சொல்றமாதிரி தான் இருக்கு உங்க கட்டுரை வரிகள்.

      அராபிய பாலைவனத்தில் வேலைக்கு போகும் ஒரு மைனோரிட்டி மதத்துக்காரன் தெரியாம ஏதும் தப்பு பண்ணிட்டன்னா , உடனே அந்த நாட்டு சட்டத்தை மதிச்சி தான் நடக்கணும்னு லா பேசும் இந்த நாட்டு ஆளுங்க, வந்தே மாதரம் விவகாரத்தையும் ஏன் அந்த கண்ணோட்டத்துல பார்க்க கூடாது?

      இது இந்தியா , இங்கே இப்படிதான்யா இருக்கும். புடிக்காதவன் அவன் அவன் பொழப்பை பார்த்துட்டு பொட்டி கட்டிட்டு கிளம்பி போங்களேன்,

      இதுதான், பொம்மை சாமியை கும்பிடுற மக்கள் அதாவது சைத்தானின் , பேயின் குழந்தைகள் உள்ள நாடாச்சே, அப்புறம் ஏன்யா தெரிஞ்சே இங்கே இருக்கீங்க?

      நீங்க யாரும் கிளம்ப மாட்டீங்க, நீங்க போனாலும் ஒருத்தனும் உங்களை கிட்ட சேர்த்துக்க மாட்டான், அடிச்சி தொரத்திடுவான்.

      உங்களுக்கே நல்லா தெரியும் இந்தியாவை உட்டா வேற எங்கியும் உங்க பஜனை செல்லாதுன்னு.

      ஏற்கனவே சுதந்திரம் கிடைக்கிறவரைக்கும் இங்கே கூடி கும்மியடிச்சிட்டு சுதந்திரம் கிடைச்சவுடனே தனியா போனனுங்கள்ள அவனுங்க நிலைமை எல்லாருக்கும் தெரியும்.

      பாகிஸ்தானை ஏதோ சொர்க்க பூமி மாதிரி சில பேர் நினைச்சிட்டு இருக்காங்க . அவங்கல்லாம் ஒரு பாகிஸ்தானியை நேரில் கூட பார்த்துருக்க மாட்டங்க. பழகி இருக்க மாட்டாங்க.

      தினம் தினம் சாவு, குண்டுவெடிப்பு, பஞ்சம் பட்டினி, இங்கே இந்தியாவுல இருக்குற மாதிரி அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ் லோயர் கிளாஸ் னு மூணு நாலு பிரிவெல்லாம் அங்கே கிடையாது, ரெண்டே கிளாஸ் தான். ஒன்னு மதம் சட்டம் னு சொல்லி ஏழையை சுரண்டிதின்னு வயிறு வளர்க்கும் ஒரு கும்பல், இன்னொன்னு அவன் சொல்றதை நம்பி அல்லாடும் மற்றொரு கும்பல். இதெல்லாம் உங்களுக்கு சொல்லி புரியாது. புரிஞ்சாலும் காட்டிக்க மாட்டீங்க .ஒக்கே .

      அடுத்து,

      “கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா.”

      அது சரி அப்போ , வேளாங்கண்ணி மேரி அம்மா சிலைக்கு பட்டு புடவை கட்டி மல்லிகை பூ வச்சி விட்டது எந்த ரொவி வர்மா?

      கிறுக்கு பசங்களா! தெய்வம் ங்குறது நீ எப்படி கற்பனை பண்ணிக்கரியோ அப்படிதாண்டா இருக்கும். நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி புடவை கட்டி தெய்வத்தை நீங்க சொன்னா மாதிரி வரைஞ்சே இருந்தாலும் அதுல என்னா தப்பு இருக்க முடியும்?

      அடுத்தது,

      “உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் “.

      யாரு சார் சொன்னது? இப்படி உங்களுக்கு?

      அப்போ மேரி அம்மா சிலை, குழந்தை இயேசு சிலை, இயேசு சிலுவையில் அறையப்பட்டது மாதிரியான சிலை எதையெல்லாம் வச்சு கும்பிடறவன் கிறிஸ்தவன் இல்லாம வேற யாரு?

      எல்லா ஊரிலும் இருக்கும் வெவ்வேறு பெயருடைய தர்காக்கள் எந்த வகையை சேர்ந்ததுன்னு தெளிவா சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்.

      அப்புறம், எப்போ பார்த்தாலும் பார்பான் லாம் எங்கியோ வேற ஒரு நாட்டுலேர்ந்து வந்ததா சொல்லிக்கிட்டு திரியறீங்க ( நான் ஒரு நான் – பிராமின்). அப்படின்னா அது எந்த நாடு? அது இப்போ இருக்கா? இல்லை சுனாமி ல அழிஞ்சு போச்சா? அப்போ பார்பனோட மூதாதையர் , சொந்தக்காரன் லாம் அங்கே இருக்கானா? மரபணு சோதனை, ஜீன் டெஸ்ட் ரிசல்ட் லாம் ஒத்து போகுதா? தங்களோட புனித நகரம் னு சொல்லி அந்நிய நாடான அரேபியா, ஜெருசேலம் செல்லும் இசுலாமிய கிறிஸ்தவ மக்களை போல பார்ப்பானும் அங்கே புனித பயணம் போய்ட்டு வந்துகிட்டு இருக்கானா? வினவு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும், எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்,

      வினவு,

      நீங்க என்னதான் எழுதினாலும், உங்க நோக்கம் நிறைவேற போறதில்லை,

      எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

      மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.

      எவனையும் கட்டாய படுத்தி மதம் மாத்தனும் ங்கற அவசியமும் எங்களுக்கு இல்லை.அதே மாதிரி எங்க சாமியை கும்பிடாதவனை சைத்தான், பேயின் பிள்ளைகள் னு சொல்ற வழக்கமும் இல்லை.

      இதுதான்யா இந்த மதத்தின் ஸ்பெஷாலிட்டி , கழுதைகளுக்கு கர்ப்பூர வாசனை தெரியாமல் போறதுல ஆச்சர்யம் இல்லை.

      இத்தனைக்கு பிறகும், மத்த மதத்து காரங்க மேல எங்களுக்கு கோபமும் வர்ரதுல்ல, ஏன் தெரியுமா? அவங்க எல்லாருமே ஏதோ ஒரு காலத்துல இந்துவா இருந்தவங்க தான், எங்க முன்னாள் ஹிந்து சகோதரர்கள் தான்,

      பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.

      இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,

      மாக்ஸிமம்
      சரியாக சொன்னிர் நன்பரே இந்த கட்டுரை எழுதினவன் மட்டும் என் கையில் கிடைத்தால் வெட்டி வேள்வில போட்டுருவேன்

  6. Superya maximum,.. summa saravedi madhiri pesuna.. naatula pala vishayangal irukku kavalapada aana ivanunga innum madham jadhi, krishnar, ramarnu hinduism RSS thaandi ezhuda maatanga.. appadiye ezhuthunalum udane oru post hindu madathatha attack panniye irukku. What a hypocrites these people are….
    POli communistnu solrangale adhu ivanga thaan modhalla…

  7. //இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.//

    தேசபக்தியை இந்து வழிபாட்டு முறையாக மாற்றுவது கடுமையாக கண்டிக்கபடதக்கது, இம்மாதிரியான முறையில்தான் தேசபக்தியை வெளிபடுத்த வேண்டுமென்றால் சிறுபான்மையினருக்கு இந்தியா பாதுகாப்பற்ற அந்நிய நாடாகவே தோன்றும். இந்தியாவில் இருக்கின்ற எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது பெரும்பான்மையான வட இந்தியரின் ஹிந்தி வெறி, வந்தேமாதரம் பாட வேண்டுமென்று சொல்வது இந்து வெறி. தேவ பாஷை சமஸ்கிருதம் போற்றி,ஹிந்தி படித்து,மாட்டு கறி மறுத்து, வந்தே மாதரம் பாடி இந்திய தேசபக்தி நிரூபிக்கபடுமானால், நிரூபிக்கபடுவது தேசபக்தி அல்ல, இந்து தேசிய வெறி.

    • இந்தியாவில் இருக்கின்ற எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது பெரும்பான்மையான வட இந்தியரின் ஹிந்தி வெறி….

      Yet another merdivorous whacko…. What are you gonna lose by learning a new language????

      • Sari yaarum kattayapadutha vendam, kattaya paduthuvadhu enbathil enakkum udanpadu illai. Why dont tamils are so guarded against other languages thats one thing that puzzling?? Vera language kathukitta enna problem ???

  8. இன்னும் எத்தனைநாலுக்குத் தான் பழைய புரானமே பாட போரீங்க. தாங்கள் கூறும் மதம் தனி மனிதனோடு தொடர்புடையது.
    appo abdulkalam engeirunthar, polytics gulam nabi azad engirunthar, en exaple bollywood Khan’s enge irunthanga.Etc….
    namma indiyala arasiyalla irukara sakkadai nainga apdi pandranga…appuram enga kasimeerla kalavaram nadakuthu. anga ethavathu hindu politician irukana..rendu paryume muslims thane..
    Enna pirachinaina thngaloda suyanalathukaga madaththai oru karuviya avanga ubayogapaduthuranga….
    Athanala neenga ethavathu padhivu idarathunna aakapoorvama idunga..summa ithumathiri mudinthuponavatrai mathathin peyaral kilara vendam..

    endrum anbudan
    Boopathi..

  9. மக்கு மக்சிமம்,

    எதுக்கு நாங்க போகணும், நாங்க ஒன்னும் கைபர் கணவாய் வழியா வரலே . இது எங்க நாடு நீங்க வேண்டும் என்றால் உங்க காவி நேபாளத்துக்கு போங்க இது ஒன்னும் ஹிந்து நாடு இல்லை இது அனைவர்க்கும் பொதுவான நாடு.

  10. அதிபுத்திசாலி அஹமது,

    சரி நீங்க, கைபர் கணவாய் வழியா வரலை. அப்போ எது வழியா வந்தீங்க?

    கைபர் கணவாய் எங்கே இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? அதுக்கு ஆங்கிலத்துல பேரு என்னன்னு தெரியுமா? , மேப் ல காட்ட சொன்னா காட்ட தெரியுமா? அங்கேருந்து யாரு வந்தான், எப்போ வந்தான் ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா?

    எவனோ ஒரு பொறம்போக்கு திண்ணைல உட்கார்ந்து சொன்னதை கேட்டுட்டு லாம் கருத்து சொல்ல கூடாது பாஸ் .

    “இது எங்க நாடு நீங்க வேண்டும் என்றால் உங்க காவி நேபாளத்துக்கு போங்க இது ஒன்னும் ஹிந்து நாடு இல்லை இது அனைவர்க்கும் பொதுவான நாடு.”

    இதை நீங்க உள்ளன்போடு, சகோதரத்துடன் சொல்லி இருந்தா அதை நான் பாராட்றேன். சந்தோஷம்.

    மாறாக நீங்க எங்களையே நேபாளத்துக்கு பார்சல் பண்ணனும்னு நினைக்கறீங்க பார்த்தீங்களா?

    உங்களுக்கெல்லாம் இன்னும் நூறு , ஆயிரம் நரேந்தர் சிங்க் மோடி வந்தாலும் பத்தாது.

    மாக்ஸிமம்

    • மாக்ஸிமம்களின் அலறல் ஆறுதல் அளிக்கிறது. வினவின் ஒவ்வொரு கட்டுரையும் ஹிந்து கலாச்சாரத்தின் சாவு மணியாக அமையட்டும். வாழ்த்துக்கள் தோழர்.

      • இதுஅலறல் சத்தம் அல்ல….இந்த மண்ணின் மைந்தனுக்கு அலறத்தெரியாதுடா பெண்…

        ஹிந்து கலாச்சாரத்தின் சாவு மணியா? போடா டே காமிடி பீசு

        • உலகிலேயே மிகவும் கேவலமான மதம் இந்து மதம் தான்.. பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கருதும் ஒரு அயோக்கிய மதத்திற்கு வக்காலத்து வாங்கும் அம்பிகளே, உங்களிடம் இருந்து நாங்கள் எந்த உரிமையையும் எதிர்பார்க்க வில்லை.. மாறாக உங்களை வீழ்த்துவதுவதன் மூலம் அந்த உரிமைகளை நாங்களே பெற்றுக் கொள்வோம்..

          தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லரையாக்குவோம்!

          • Paarpom, paarpom…mela ukkanthu kadikkara kosuva kooda ungalala azhikka mudiyadhu apuram thaane madham ellam.
            Eppo indha thani madha thakuthalai niruthureergalo appo thaan neenga kandukollapadave vaippirikku.. ilainna neenga koovura koovukku ellam kaaka kooda varadhu…

            • Pirivinai erpaduthum sakthigalai , poli vesham potta arasiyal katchigal, samiyargal, amaipugalai makkale nasukkuvaargal adhukku oru example thaan the Himalayan defeat of most corrupt parties in the history of india, DMK and Congress..

    • மக்கு மக்சிமம்,
      முதல்ல உன்னுடைய ஆரிய வரலாறே தெரிச்சிகோ அப்பதான் கைபர் கணவாய் எங்கே இருகுதுனும் தெரியும்,
      வந்தே மாதரம் ஒன்னும் இந்தியா உடைய தேசிய கீதம் இல்ல முதல்ல தெரிச்சிகோ, எங்களுடைய தாய் நாட்டுக்காக எவ்ளவோ தியாகங்கள் பண்ணிடோம் இன்னும் பண்ண தயாரா இருக்கோம். உங்களுக்கெல்லாம் இன்னும் நூறு , ஆயிரம் நரேந்தர் சிங்க் மோடி வந்தாலும் பத்தாது. சூப்பர் அப்பு , முதல்ல இந்த மரண வியாபாரி மோடி டவுசர் கிழிய போகுது அப்புறம் வர மோடிய பாக்கலாம் . தன்னுடைய சொந்த நாட்டு மக்களை கொண்டு அதில் குளிர் காயும் கூட்டம் தான் இந்த சேவா சங்க கூட்டம் என்று இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும். வினவின் அதிரடி தொடரட்டும் காத்திருப்போம்.