Tuesday, December 3, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிவசாயிகள் மீது தடியடி : ஜெ'வின் பேயாட்சி!

விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!

-

விவசாயிகளின் மீது தடியடி - ஜெயலலிதாவின் பேயாட்சி
விவசாயிகளின் மீது தடியடி - ஜெயலலிதாவின் பேயாட்சி

திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவ தில்லை. இதனால், அம்மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக்கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும். இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.

விழுப்புரம் நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினமும் ஏறத்தாழ 2,000 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த ஜூன் 2 அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் 750 ரூபாயிலிருந்து 825 ரூபாய் வரை விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அன்று 75 கிலோ மூட்டைக்கு ரக வாரியாக 360 ரூபாய் முதல் 639 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் அறிவித்தனர்.

தவிட்டின் விலையைவிட நெல்லின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைக் கேட்ட விவசாயிகள் கொதித்துப் போனார்கள். நெல் மூட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டணி கட்டிக் கொண்டு தம்மிடம் பகற் கொள்ளை அடிக்க முயலுவதைப் புரிந்து கொண்ட விவசாயிகள், நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீசு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வந்திறங்கிய போலீசு பட்டாளம், பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு முயலாமல், விவசாயிகளை அடித்துத் துரத்தியது.

விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன். “திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் டன் நெல்லை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக ஒரு குவிண்டாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட 200 ரூபாய் குறைவாக விலை வைத்தாலே, விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக’’க் கூறுகிறார், அவர். விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பு வியாபாரிகளுக்குக் கொள்ளை இலாபமாக, அதிகாரிகளுக்கு இலஞ்சமாகப் போய்ச் சேருகிறது.

ஜெயா பதவியேற்றவுடனேயே, “விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, விவசாயத்தில் மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக” அறிவித்தார். ஆனால், விழுப்புரத்தில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி போராடிய ‘குற்றத்திற்காக’ ஆறு விவசாயிகள் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது, அவரது அரசு.
விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்3 அல்லவா!

_________________________________

புதிய ஜனநாயகம் – ஜூலை 2011
_________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. விவசாயிகளின் கஸ்டம்நியாயமானது தான்..ஆனால் அதற்க்கு ரோட்டை மறிப்பது தான் ஒரே தீர்வா..அவ்வாறு ரோட்டை மறிக்கும் போது தடியடியைத் தவிற வேறு என்ன வழி என்று தாங்களே சொன்னால் தேவலை…

    • //விவசாயிகளின் கஸ்டம்நியாயமானது தான்..ஆனால் அதற்க்கு ரோட்டை மறிப்பது தான் ஒரே தீர்வா..அவ்வாறு ரோட்டை மறிக்கும் போது தடியடியைத் தவிற வேறு என்ன வழி என்று தாங்களே சொன்னால் தேவலை…//

      அவுங்களுக்கு தெரிஞ்சி ரோட்ட மறிக்குறது மாதிரி எதுனா செஞ்சி கவனத்த ஈர்த்தாத்தான் பிரச்சினையப் பத்தி பேசவே வற்றாங்க. அதுதான் பல போராட்டங்களில் கிடைத்த அனுபவம். நீங்க அது சரியில்லனு சொல்றீங்க. அப்போ வேற வழி என்னன்னு நீங்கதான் சொல்லனும்.

      எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை ஐரோம் சர்மீள் 10 வருசமா உண்ணாவிரதம் இருந்ததோ இல்லை மேதா பட்கரின் நர்மதா அணை எதிர்ப்பு இயக்கம் செய்யாததையோதான் நந்திகிராம், சிங்கூர், கலிங்காநகர் மக்கள் போராட்டங்கள் சாதித்துள்ளன.

    • //விவசாயிகளின் கஸ்டம் நியாயமானது தான்..//

      அது சரி…. என்ன ஒரு அருமையான சொல்லாடல்…. கமெண்ட் போடுறதுக்கு முன்னாடி ரொம்ப யோசிச்சிருப்பிங்க போல தெரியுது!!!

      ஆனாலும் உங்களின் விவசாயிகள் மீதான ‘கரிசன’ கருத்தை புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை. இருந்தாலுமே ஏதாவது ஒன்னு பேசுங்க.. அதாவது விவசாயிகள் போராட்டம் நியாயமானதா? இல்லையா?

      ரோட்டை மறித்து போராடாமல் விவசாயிகள் கோரிக்கை எப்படி நிவர்த்தி செய்திருக்கலாம் என்று நீங்கள் சொன்னால் தேவலை.

    • \\விவசாயிகளின் கஸ்டம்நியாயமானது தான்..ஆனால் அதற்க்கு ரோட்டை மறிப்பது தான் ஒரே தீர்வா..அவ்வாறு ரோட்டை மறிக்கும் போது தடியடியைத் தவிற வேறு என்ன வழி//

      .விவசாயிகள் பக்கம் நியாயம் உள்ளது என்றால் அதிகாரிகளும் வணிகர்களும் அநியாயம் செய்திருக்கிறார்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.ஆகவே காவல்துறை பிரச்னையை கேள்விப்பட்டு வந்தவுடன் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் மீதுதானே தடியடி நடத்தியிருக்க வேண்டும்.அப்படி செய்திருந்தால் சாலை மறியலுக்கு அவசியமே இருந்திருக்காதே.

  2. னான் சமச்சீர் கொள்கை கட்டுரையில் எழுதிய கருத்துக்கள் பின் வறுவன…

    அந்தக் கருத்துக்களுக்குநண்பர்களிடம் இறுந்து எந்த பதிலும் இல்லை..

    அப்ப காலைல 5 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு ஆபிஸ் போரவன்…

    அப்பாவப் பார்க்க ஆஸ்ப்பத்திரி போறவன்..இன்டெர்வியு போரவன்…

    அவசரமா ஊருக்குப் போறவன்..அயல்னாடு போக ஏர்போர்ட் போறவன்..

    அட உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ்ல போறவன்னு எல்லாம் முட்டாளா?????

    னீங்க மட்டும் அறிவளியா????

    இது அம்மா ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் வாதம் அல்ல…ஒரு சாதாரன குடிமகன் இதனால் பாதிக்கப்படக்கூடாது…னீ போ சட்டசபை முன்னாட்ப்போ அந்தம்மா வீட்டு முன்னாடிப்போ…

    *******இந்த மாதிரி “வால் பையாக்கள்” இந்த அம்மா ஆட்சியில் ஆட்டுவார்கள் ஏற்கனவே ஆட்டியவர்களின் வால் என்ன ஆனது??

    கல்விக் “கொள்ளை” எரிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளப்படும்.கல்விக்கொள்கை அல்ல.*******************அடுக்கு மொழி எல்லாம்நல்லாத்தான் இறுக்கு ஆனால் கருத்து இல்லையே..

    யாரு ரோட்டுல வந்து மக்களுக்கு தொந்தரவு கொடுப்பவன் வால்ப்பையனா இல்லநான் வல்ப்பையனா..யோசிச்சுப்பார்..

    • அன்பு Paiya,
      டேங்கப்பா.. பொதுசனம் பாதிக்கப்படுதாம்.. என்ன அக்கறை இவருக்கு ? உங்களுக்கு நேரத்துக்கு ஆபீசுக்கு போகனும்… இல்லாட்டி தாலி அறுந்துடும் இல்லையா? வெளிநாடு போறவன் கூட ப்ளைட் மிஸ் பண்றது கிரிமினல் குத்தமில்லை.. ரொம்ப ஈசியா அடுத்த ப்ளைட்டுக்கு டிக்கெட்டை தள்ளி வைக்கிற அளவுக்கு ப்ளைட்ல போற வர்க்கம் வசதி பண்ணி வச்சிருக்கு..
      உடனே அனுதாப அலைக்கு ஆம்புலன்ஸ்ல உயிர்போற அவசரம் இருந்தான்னு ஒரு கேள்வி..
      எந்த ஊர்லயாவது எந்த மறியலிலாவது ஆம்புலன்ஸையும் போகவிடாம பண்ணினாங்கன்னு படிச்சீங்களா.. பாத்தீங்களா.. மறியல் செய்யறவன் எல்லாம் எவனோ புறம்போக்குன்னு நினைக்கிற மண்டையில் தான் இந்த மாதிரி கிரிமினல் கேள்விகள் உருவாகும்.
      இவ்வளவு நாயம் பேசுற இவருக்கு மூட்டை 800 ரூபாய் நெல்லை 400 ரூபாய்க்கு கொள்ளையடிக்கிறவன்க மேல மட்டும் ஏன் கோவமே வரமாட்டேங்குது? அங்க மட்டும் அவங்க கோரிக்கை நாயம் தான்.. வாஸ்தவன் தான்.. ஆனா..ஆவன்னான்னு பேசுறாரு…அரிசி 32 ரூபா என்ன 62 ரூபாய் வித்தாலும் உங்களுக்கு என்ன சார் பிராப்ளம் ? நீங்க தான் வாங்குற அளவுக்கு வக்கணையா இருக்கீங்களே. விவசாயிங்க என்னாடான்னா நிலத்துல போட்ட காசு கூட கெடைக்காம தற்கொலை பண்ணிக்கிட்டிருக்காங்க..இவரு இங்க வந்து ரோட்டு நியாயம் பேசுராரு…

      • அண்ணன் அம்பேதன்,
        //வெளிநாடு போறவன் கூட ப்ளைட் மிஸ் பண்றது கிரிமினல் குத்தமில்லை.. ரொம்ப ஈசியா அடுத்த ப்ளைட்டுக்கு டிக்கெட்டை தள்ளி வைக்கிற அளவுக்கு ப்ளைட்ல போற வர்க்கம் வசதி பண்ணி வச்சிருக்கு.//
        நீங்க சொல்லுரது தயானிதி, கலானிதி போன்ற தொழிலதிபர்களை..னான் சொல்லுரது துபாய் எங்க இறுக்குன்னே தெரியாம துபாய்க்கு வேலைக்குப் போகும் ஒரு கடைமட்ட தொழிலாளியை..500 ரூபாய் பெருமானமுள்ள ஒரு வேலைக்காக 15000 ரூபாய் கொடுது டிராவல் ஏஜென்சிக்காரனிடம் டிக்கெட் வாஙகி அதில் உள்ள சிறு தவறுக்காக ஏர்பொர்ட் வாயிலில் இந்தி காவளளியிடம் கெஞிக்கொன்டிருபானே..அவனுக்குநேரம் தவறாமை ரொம்ப முக்கியம்…
        //எந்த ஊர்லயாவது எந்த மறியலிலாவது ஆம்புலன்ஸையும் போகவிடாம பண்ணினாங்கன்னு படிச்சீங்களா.. பாத்தீங்களா.. மறியல் செய்யறவன் எல்லாம் எவனோ புறம்போக்குன்னு நினைக்கிற மண்டையில் தான் இந்த மாதிரி கிரிமினல் கேள்விகள் உருவாகும்.//
        யோவ் விழுப்புரத்துல 2 மணிநேரம் மறியல்நடந்தா இறு புரமும் 100 1000 கி மீக்கு டிராபிச் ஜாம் ஆகும், அதுல எத்தனை கார்ட் பேஸன்ட், எத்தனி இன்டெர்வியு கேசு, எத்த்னை ஆம்புலன்சுநிக்குதோன்னு என்ன முடியுமா?

        ஓரு முறை விவசாயிகள் செய்த மறியலில் எத்தனை கார்கள் அடித்துநொறுக்கப்பட்டன..தினமலரில் அவர்கள் செய்த அட்டூலியஙள் அனைத்தும் படங்களாக வந்திருந்தன..அதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்..அப்பர் கிளாஸ் மட்டும் அல்ல கன்னா..தினக்னகூலிக்கு வேலை செய்பவனும் பாதிககப்பட்ட்னர்..

        • பையா,
          மனிதாபிமானம் என்ற போர்வையில் துபாய் போகும் தொழிலாளியின் மீதும் அவசர ஊர்தியில் போகும் நோயாளியின் மீதும் நீங்கள் காட்டும் அக்கறை தன்னலத்தை பொதுநலமாக காட்டும் கபட நாடகமாக அருவருப்பு ஏற்படுத்துகிறது.கண் முன்னால் வாழ்வுரிமைக்காக போராடும் மக்களின் அவலத்தை பார்க்க மறுத்து கற்பனையாக துன்பங்களை பட்டியல் இடுகிறீர்கள்.
          சரி உங்கள் கற்பனைகளையும் பரிசீலித்து விடலாம்.விழுப்புரத்திற்கு முன்னும் பின்னும் போக்குவரத்து தடை பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று போகும் என்கிறீர்கள்.[அதென்ன கணக்கு 100 .1000 கி.மீ.அப்படி பார்த்தால் நாகர்கோவில் வரை,அதாவது கிட்டதட்ட தமிழகம் முழுவதும் போக்குவரத்து நின்றுவிடும்] அய்யா,பையா அவர்களே.விழுப்புரத்திற்கு முன்னும் பின்னும் 40 கி.மீ.தொலைவில் திண்டிவனமும் உளுந்தூர்பேட்டையும் அமைந்துள்ளன. பல வழி சாலைகள் வந்து சந்திக்கும் மையமான இடத்தில் அமைந்துள்ளன அந்த ஊர்கள்.அங்கேயே வாகனங்களை திருப்பி விட காவல்துறை நடவடிக்கை எடுத்தால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க அவசியம் இருக்காது.பயண நேரம் மட்டுமே சற்று கூடுதலாகும்.நியாயமாக பார்த்தால் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாததற்காக போக்குவரத்து காவலர்கள் மீதுதான் தடியடி நடத்த வேண்டும்.

          • னான் பேசுரது உஙலுக்குப்புரியல இல்ல..அது விவசாயப் பிரச்சனையோ ஜாதிச்சண்டையோ..எதுவா இருந்தலும் ரோட்ட மறிச்சா உங்களுக்குத் தீர்வு கிடைக்காது..அடி தான் கிடைக்கும்….ப்ஸ்ஸை மறிப்பதொ ரயிலை மறிபதொ சட்டவிரோதமே..ஒரு மனிதனுடைய பிரச்சனையில் இன்னொரு சராசரி மனிதன் பாத்க்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது..ணீங்கள் கலெச்டர் அலுவலகம் முன்போ நகராட்சி அல்லது காவல்நிலையம் முன்போ போராட்டம்நடத்தினால் உஙள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் ரோட்டி மறித்தால் சக குடிமகனுக்கு பாதிப்புத்தான் ஏற்படும், உஙல் பிரச்சனை தீராது, ப்ஸ்ஸை மறிப்பதொ ரயிலை மறிபதொ உஙளுக்கு வெற்றியெஇத் தேடித்தராது..அடியே கிடைக்கும்

    • \\இது அம்மா ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் வாதம் அல்ல…ஒரு சாதாரன குடிமகன் இதனால் பாதிக்கப்படக்கூடாது…னீ போ சட்டசபை முன்னாட்ப்போ அந்தம்மா வீட்டு முன்னாடிப்போ…//

      அதே பதிவில் தாங்கள் திருவாய் மலர்ந்தது.

      \\தொந்தரவு கொடுத்தால் அடி பிறிக்கனும்,நீ இன்னும் பத்துநிமிசம் அங்க இற்ந்திறுந்தீனா அதான்நடந்த்திருக்கும்…இது அம்மா ஆட்ஷி தம்பி…//

      \\னான் சமச்சீர் கொள்கை கட்டுரையில் எழுதிய கருத்துக்கள் பின் வறுவன…
      அந்தக் கருத்துக்களுக்குநண்பர்களிடம் இறுந்து எந்த பதிலும் இல்லை..//

      இந்த ”வறுவல்” கருத்துக்கள் ஏற்கனவே முந்தைய தில்சன் கொலை குறித்த பதிவில் விவாதிக்கப்பட்டுள்ளன.போய் படித்து பார்த்துக்கொள்ளலாம்.

  3. வினவு, நீங்க புரட்சி மூலம் ஆட்சிய பிடிச்சதும், எவராவது ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டம் பண்ணினா, அப்ப இப்படி தடியடி எல்லாம் நடத்தப்படாது.

    • வினவு, நீங்க புரட்சி மூலம் ஆட்சிய பிடிச்சதும்!!!
      Enna Bossu kalaile Sarakku edhavadhu pottuteengala??? Ethana Nootradugal aanalum ahellam nadakkathu…Poi thelinjittu vandhu kalaila pesunga

  4. //வினவு, நீங்க புரட்சி மூலம் ஆட்சிய பிடிச்சதும், எவராவது ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டம் பண்ணினா, அப்ப இப்படி தடியடி எல்லாம் நடத்தப்படாது.// அட்வைசுக்கு நன்றீங்கோ. புரட்சி செய்ய நீங்களும் சேந்து நின்னீங்கன்னாக்க ஒன்னுமன்னா ஆட்சி செய்யலாம். அப்பாலிக்கா ஜனநாயக ரீதியா போராடுறவங்கள அனுமதிக்குற இடத்துல வினவோட சேந்து நீங்களும் உக்காந்திருப்பீங்கீங்கோ… எங்கேயோ கேட்ட குரல் மான் கண்டேன் மான் கண்டேன்….

  5. சம்ச்சீர் கல்வி பிரச்சினை, நாட்டுக்கு சோறு போடுற விவசாயிக பிரச்சினை இதுக்கெல்லாம் நம்ம பையா போன்றவர்கள் போராடியிருந்தால் விவசாயியும், சமச்சீர் கல்வி கேக்குறவனும் ஏன் ரோட்டுக்கு வற்றான்?

    விவசாயிக ஒன்றரை லட்சம் பேர் தற்கொலை செஞ்சி செத்தான். உலகமயத்தின் உடனடி தாக்குதல் இலக்காம் விவசாயி செத்தான் என்றாலும் அது எல்லாரையும் பாதிக்கும் பொதுப் பிரச்சினைதான். ஆனா, நம்ம பையா அதுக்கெல்லாம் கவலப்பட்டுனு இருந்தாரா என்ன?

    அதே விவசாயி ரோட்டுல இறங்கி அரசை முடக்கி மத்தவனுக்கும் உணர்த்தும் போதுதான அரசும் வேற வழியில்லாம பிரச்சினையை தீர்க்கப் பாக்குது நம்ம பையாவும் அட்வைசு கூடைய தூக்கினு வர்றாரு?

    பக்கத்து வீட்டுல இழவு விழுந்தாக்க நம்ம வீட்டுக்கு இடைஞ்சல்தான். நம்ம அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் சிறிது பாதிக்கத்தான் செய்யும். நான், என் சுகம்னு சிந்திக்காம நாம், நம் சமூகம்னு பாக்கத் தெரிஞ்சவனுக்கு பையா எழுப்புவது மாதிரி நோகாம நொங்கு திங்கும் அட்வைசு தோணாது.

    • /*/அதே விவசாயி ரோட்டுல இறங்கி அரசை முடக்கி மத்தவனுக்கும் உணர்த்தும் போதுதான அரசும் வேற வழியில்லாம பிரச்சினையை தீர்க்கப் பாக்குது /*/

      ரோட்டுல இறங்கி போராட்டம் பன்னுனா அரசும் முடஙாது..பிரச்சனையும் தீராது.. தமிழ்னாட்டில்நடந்த பல போராட்டங்கள் இதற்கு சாட்சி..

      //பக்கத்து வீட்டுல இழவு விழுந்தாக்க நம்ம வீட்டுக்கு இடைஞ்சல்தான். நம்ம அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் சிறிது பாதிக்கத்தான் செய்யும். நான், என் சுகம்னு சிந்திக்காம நாம், நம் சமூகம்னு பாக்கத் தெரிஞ்சவனுக்கு பையா எழுப்புவது மாதிரி நோகாம நொங்கு திங்கும் அட்வைசு தோணாது.//
      எங்கேநான் கூறும் யாரேனும் ஒருவன் சுகத்திற்க்காக பிரயானம் பண்ணுபவர்களா??

      அப்பாவப் பார்க்க ஆஸ்ப்பத்திரி போறவன்..இன்டெர்வியு போரவன்…

      அவசரமா ஊருக்குப் போறவன்..அயல்னாடு போக ஏர்போர்ட் போறவன்..

      அட உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ்ல போறவன்?
      அயல்னாடு போக ஏர்பொர்ட் போரவன் என்ரதும் இது சுகம் என்ட்ருநினைக்கக்கூடாது..தூபாய் போய் சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்தப்போகும் ஒரு ஏழைத்தொழிலாளி………

      • ஹையோ ஹையோ, பையா, சங்கர் படம் ரொம்போ பார்ப்பியோ?, அதான் இவ்ளோ பேரு சொல்றாங்க இல்ல , சும்மா கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப பேசிக்கிட்டு.

  6. //அட உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ்ல போறவன்னு எல்லாம் முட்டாளா?????

    னீங்க மட்டும் அறிவளியா????//

    அப்படி எதுனா நடந்தா பேசுங்க. சும்மா பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற வேல வேண்டாம்.

  7. //அவ்வாறு ரோட்டை மறிக்கும் போது தடியடியைத் தவிற வேறு என்ன வழி என்று தாங்களே சொன்னால் தேவலை…// ரொம்ப சிம்பிளுங்கோ. அவிங்க கேக்குற நியாயமான கோரிக்கையை நிறைவேத்திட்டு போயிரதுதான் தீர்வு.

    தடியடி நடத்துற போலீசுக்கு கோரிக்கையை நிறைவேத்துற அதிகராம் இருக்கா? கோரிக்கையை நிறைவேத்துற அதிகாரிக்கு மக்களை சந்திக்கனுங்கிற நிர்பந்தம் இருக்கா?

    இல்லையே. அப்போ இந்த சிஸ்டம் வேண்டுமென்றே மக்களை ஏமாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ற ரப்பர் ஸ்டாம்பு கும்பலையும், மக்களுக்கு எந்த பதிலும் சொல்லத் தேவையற்ற அதிகார கும்பலின் மூலம் விருப்பம் போல ஆட்சி செய்யும் தந்திரத்தையும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டிடுப்பதுதானே பிரச்சினை?

    பையா நியாயமானவர் எனில் என்ன செய்திருக்க வேண்டும்? விவசாயிக கோரிக்கை நியாயமானது, அதுக்காக அவுங்க போராடுனா அதை நிறைவெத்தி தராம போலீச வைச்சி அடிச்சது தப்பு இது மாதிரி டுபாக்கூர் அரசமைப்பை வைத்துக் கொண்டிருந்தால் மக்கள் இப்படித்தான் போராடி எல்லாருக்கும் ‘டிஸ்டபன்ஸ்’ பன்னுவாய்ங்க. அதுனால அரசே உன்னோட நிர்வாக முறைகளை மாற்றிக் கொள், அரசே உன்னோடய அரசாளுமை முறையை மக்கள் பதில் சொல்ல கடைமைப்பட்டவர்களைக் கொண்டு செய்னு சொல்லிருக்கனும்.

    ஆனா, பையாவோட நோக்கம் என்னவென்றால், இது மாதிரி மக்கள் பிரச்சினைக்கு எவனாவது போராடினாக்க நம்ம சினிமாவுக்கு போறது லேட்டாயிருமே என்று கவலை. அத அப்படியே வெளிப்படையா சொன்னா எல்லாரும் கண்டுபிடிச்சுடுவாய்ங்கன்னுதான் பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குறாரு, விவசயிங்க கோரிக்கை நியாயம்தான்னு வேற சொல்லி வைச்சிக்கிறாரு.

    • //தடியடி நடத்துற போலீசுக்கு கோரிக்கையை நிறைவேத்துற அதிகராம் இருக்கா? கோரிக்கையை நிறைவேத்துற அதிகாரிக்கு மக்களை சந்திக்கனுங்கிற நிர்பந்தம் இருக்கா//

      முதலில் காவல் துறை எதற்கு தடியடிநடத்துகின்றனர் என்று புரிந்து கொல்ல வேண்டும், விருதுனகர் தேசியநெடுஞ்சாலையில் பகல் 11 மணிக்கு ஒரு விபத்து நடன்தது..நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமத்தை சேர்ந்த 2 இளைங்கர் இறுவர் சம்பவ இடத்தில் பலியானர்…அவர் 1 கி.மி தூரம் சுற்றி வற சோம்பேரித்தனப்பட்டு தவறான பாதையில் எதிர் பாதையில் வந்து லாரியில் அடிபட்டு மரணிக்கிறார்கள்..தவறு அந்த இறுவர் மீது தான்..அனால் தாக்கப்பட்டது 10 பேருந்துகள் முதலமைச்சர் வேண்டும் பிரதமர் வரவேண்டும் என ஒரெ காட்டுக்கத்தல்..குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் தவிக்க..வந்தது அதிரடிப்படை..முழுச 3நிமிசம் கூட ஆகல..ரூட் கிளீயர்…

      இது ஒரு சாம்பிளே..ஜாதிச் சண்டை, ஊர் சண்டை, இலவச டீ வி வேனும், பால் விலை ஏத்தனும்,ஜாதி ஊர்வலம், கட்சி ஊர்வலம் என எந்தக் காரணம் கொன்டும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது…

      • //அதிரடிப்படை..முழுச 3நிமிசம் கூட ஆகல..ரூட் கிளீயர்…

        இது ஒரு சாம்பிளே..ஜாதிச் சண்டை, ஊர் சண்டை, இலவச டீ வி வேனும், பால் விலை ஏத்தனும்,ஜாதி ஊர்வலம், கட்சி ஊர்வலம் என எந்தக் காரணம் கொன்டும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது…
        //

        இங்க பேசிக் கொண்டிருப்பது விவசாயிக பிரச்சினையப் பத்தி…

        • னான் பேசுரது உஙலுக்குப்புரியல இல்ல..அது விவசாயப் பிரச்சனையோ ஜாதிச்சண்டையோ..எதுவா இருந்தலும் ரோட்ட மறிச்சா உங்களுக்குத் தீர்வு கிடைக்காது..அடி தான் கிடைக்கும்….ப்ஸ்ஸை மறிப்பதொ ரயிலை மறிபதொ சட்டவிரோதமே..

      • //இது ஒரு சாம்பிளே..ஜாதிச் சண்டை, ஊர் சண்டை, இலவச டீ வி வேனும், பால் விலை ஏத்தனும்,ஜாதி ஊர்வலம், கட்சி ஊர்வலம் என எந்தக் காரணம் கொன்டும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது…//

        கீழே குறிப்பிடப்பட்டுள்ள் விசயங்களால்தான் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பையா அவற்றை எதிர்ப்பரா? எப்படி எதிர்ப்பார்?

        @@
        உலகமயம் விவசாயத்தையும், தேசியப் பொருளாதாரத்தையும் சீரழித்ததன் விளைவு நகரங்களை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். இதன் விளைவு என்ன? பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் கோடிக்கணக்கான மக்கள் நெருக்கடியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். இந்த கோடிக்கணக்கானவர்கள்தான் டிராபிக் நெருக்கடியிலும், வளார்ச்சித் திட்டம் என்ற பெயரில் வாழ்விடத்திலிருந்து தூக்கியெறியப்படுவதாலும், விலைவாசி உயர்வாலும், சுற்றுச் சூழல் மாசுகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.

        நம்ம பையா பட்டியலிட்டுள்ள பின்வரும் பிரச்சினைகளை மிகப் பெருவாரியாக பாதிப்பது என்றைக்கோ ஒரு நாள் நடக்கும் மக்கள் போராட்டங்களா இல்லை அன்றாடம் உலகமயம் உருவாக்கும் இட/வசதி நெருக்கடி வீரியப்படுத்தும் உள்கட்டமைப்பு சீர்குலைவுகளாலா?

        அப்பாவப் சேர்க்க கவர்மெண்டு ஆஸ்ப்பத்திரி போயி வேலைக்காகம நிரந்தரமாக விக்கித்துப் போன பார்வை கொண்ட பாமரன்,

        வேலையே கிடைக்காம வெறும் இன்டெர்வியு மட்டுமே போரவன மற்றும் இண்டெர்வியு அளவுக்கெல்லாம் வொர்த் இல்லாத உதிரிப் பாட்டாளியாக வாழ்வை நித்தம் உதிர்க்கும் பாமரன்,

        அவசரமா ஊருக்குப் போக சுகுசுப் பிரயாணம் செய்ய காசில்லாமல் நொந்து நிர்ந்தர நூடுல்சான பாமரன்,

        அயல்னாடு போக ஏர்போர்ட் போறத விடுங்க, ஏர்போர்ட் கட்ட பலபேரோட கக்கூச உருவிட்டாய்ங்க அவன் தினம் காலைக்கடன் முடிக்க முடியாத கடனாளியா காலையில அலையறான்,

        அட உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ்ல போனாலும், டிராபிக்கும் ஆஸ்பத்திரி செலவும் சேர்ந்து அம்புலன்ஸ்லேயே உயிரைப் பிடுங்கக் கொடுத்தவன்

        இவனெல்லாம் முட்டாள் ஆனா விவசாயி போராடுறதுனாலத்தான் மேலா சொன்னதெல்லாம் நடக்குதுன்னு சொல்ற நம்ம பையா ரொம்ப புத்திசாலியாம்.. ங்கொய்யாலா..
        @@

      • makkal pathikkapadakutathu engirrrkale, mariyal nadathupavarkalellam makkal illamal marangala?. roatil povatharku unagalukku ethani karanangal irukiratho athavida athikamana karanangal mariyal seipavarkalukkum undu. ullur makkalukku roattil urimai illamal pogumpothu verupadaiyathan seivarkal.

  8. //அப்ப காலைல 5 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு ஆபிஸ் போரவன்…

    அப்பாவப் பார்க்க ஆஸ்ப்பத்திரி போறவன்..இன்டெர்வியு போரவன்…

    அவசரமா ஊருக்குப் போறவன்..அயல்னாடு போக ஏர்போர்ட் போறவன்..

    அட உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ்ல போறவன்னு எல்லாம் முட்டாளா?????

    னீங்க மட்டும் அறிவளியா????//

    உலகமயம் விவசாயத்தையும், தேசியப் பொருளாதாரத்தையும் சீரழித்ததன் விளைவு நகரங்களை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். இதன் விளைவு என்ன? பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் கோடிக்கணக்கான மக்கள் நெருக்கடியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். இந்த கோடிக்கணக்கானவர்கள்தான் டிராபிக் நெருக்கடியிலும், வளார்ச்சித் திட்டம் என்ற பெயரில் வாழ்விடத்திலிருந்து தூக்கியெறியப்படுவதாலும், விலைவாசி உயர்வாலும், சுற்றுச் சூழல் மாசுகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.

    நம்ம பையா பட்டியலிட்டுள்ள பின்வரும் பிரச்சினைகளை மிகப் பெருவாரியாக பாதிப்பது என்றைக்கோ ஒரு நாள் நடக்கும் மக்கள் போராட்டங்களா இல்லை அன்றாடம் உலகமயம் உருவாக்கும் இட/வசதி நெருக்கடி வீரியப்படுத்தும் உள்கட்டமைப்பு சீர்குலைவுகளாலா?

    அப்பாவப் சேர்க்க கவர்மெண்டு ஆஸ்ப்பத்திரி போயி வேலைக்காகம நிரந்தரமாக விக்கித்துப் போன பார்வை கொண்ட பாமரன்,

    வேலையே கிடைக்காம வெறும் இன்டெர்வியு மட்டுமே போரவன மற்றும் இண்டெர்வியு அளவுக்கெல்லாம் வொர்த் இல்லாத உதிரிப் பாட்டாளியாக வாழ்வை நித்தம் உதிர்க்கும் பாமரன்,

    அவசரமா ஊருக்குப் போக சுகுசுப் பிரயாணம் செய்ய காசில்லாமல் நொந்து நிர்ந்தர நூடுல்சான பாமரன்,

    அயல்னாடு போக ஏர்போர்ட் போறத விடுங்க, ஏர்போர்ட் கட்ட பலபேரோட கக்கூச உருவிட்டாய்ங்க அவன் தினம் காலைக்கடன் முடிக்க முடியாத கடனாளியா காலையில அலையறான்,

    அட உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஆம்புலன்ஸ்ல போனாலும், டிராபிக்கும் ஆஸ்பத்திரி செலவும் சேர்ந்து அம்புலன்ஸ்லேயே உயிரைப் பிடுங்கக் கொடுத்தவன்

    இவனெல்லாம் முட்டாள் ஆனா விவசாயி போராடுறதுனாலத்தான் மேலா சொன்னதெல்லாம் நடக்குதுன்னு சொல்ற நம்ம பையா ரொம்ப புத்திசாலியாம்.. ங்கொய்யாலா..

    • பொடங்_மான்… எல்லா ஊர்லையும் பிரச்சனை இறுக்குது, அதுக்காக எல்லாரும் ரோட்ட மறிச்சா பின்ன காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஸ்தம்பிச்சுத்தான்நிக்கும்…

      //அவசரமா ஊருக்குப் போக சுகுசுப் பிரயாணம் செய்ய காசில்லாமல் நொந்து நிர்ந்தர நூடுல்சான பாமரன்,//

      அப்படி எல்லாம் பொழம்பித்திரிய இப்ப ஆளு இல்ல ராஜா..ஒரு கொத்தனார் சித்தாள் வேலை செய்து டெய்லி 500 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்..

  9. உள்ளூர் ஹீரோ ரஜினி திரும்பி உள்ளது மற்றும் மக்களை சமாதானப்படுத்தும் மேலும் அவற்றின் பாதிப்புகள் கணிசமாக அடங்கி என்பதை உறுதி செய்ய எதையும் செய்ய தயாராக உள்ளது. இங்கே அதே இன்னும் இருக்கிறது http://bit.ly/n9GwsR

  10. பையா தம்பீ. உங்களைத்தான் ரொம்ப எதிர்பார்த்திருந்தேன். விதைக்கிறவன் ஒருத்தன். திங்கிறவன் ஒருத்தன். இதிலேநடுவில ஏஜண்டுதான் அதிகமா காசை அள்ளுகிறான். விவசாயிக்கு கையும் காலுந்தான் மிச்சம். ஏஜண்டு வியாபாரி முதலாளி இவங்களை ஒழிச்சாத்தான் நாடு திருந்தும். எங்கநியாயத்திற்கு பஸ்ஸ கொளுத்தாம விட்டோமேன்னு ஆறுதல் பட்டுக்குங்க.
    உங்கள் ஆட்சியின் போதும் இப்படியே மறியல் செய்பவர்களுடன் சேர்ந்து உக்காந்து ஆதரவு கொடுங்கன்னு ஒரு நண்பர் நக்கல் அடித்திருந்தார்.நண்பரே. எங்கள் ஆட்சியில்நிச்சயம் ஏஜன்சியைநாங்கள் எடுத்துக் கொள்வோம். விவசாயி சுரண்டப்பட மாட்டார். மறியல் செய்ய அவசியம் இருக்காது. எங்கள் வழி கூட்டுறவு சந்தை. கூட்டு முன்னேற்றம். ஆகியன.

    பஸ் மறியல் தவறல்ல.நியாயமான கோரிக்கைகள் நிறைவேறாது என்ற நிலையில் எங்கள் போராட்டத்தின் வடிவம் நிச்சயம் மாறும்.நினைவிற்கொள்ளுங்கள். எங்கள் ஆயுதம் எதிரியால்தான் தீர்மானிக்கப் படுகிறது.

    • ஆமான்னேன் மறியல் பண்ணுறது ஒறுத்தன்…உத்தரவு போடுரது ஒறுத்தன்…இதுக்கு எடைல மாட்டிகிட்டு முழிக்குரது பொது மக்கள்நாஙதான்னேன்…

      //எங்கநியாயத்திற்கு பஸ்ஸ கொளுத்தாம விட்டோமேன்னு ஆறுதல் பட்டுக்குங்க.//

      அய்யொ பயமாஇறுக்குன்னே..சும்மா கிமிடி கீமிடி பன்னாம இற்ஙண்ணே..!!ட்

      உன் உரிமை பாதிக்கப்பட்டால்நீ அரசையேநாட வேண்டும், இன்னொரு குடிமகனின் உரிமையிப் பரிபது தவறு..

      //எங்கள் ஆயுதம் எதிரியால்தான் தீர்மானிக்கப் படுகிறது.//

      ஆமான்னேன் போலிஸோட ஆயுதமும் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது..

      • உங்க நக்கலுக்கு ரெம்ம்ப தாங்க்ஸுண்ணேன்.

        \\உன் உரிமை பாதிக்கப்பட்டால்நீ அரசையேநாட வேண்டும், இன்னொரு குடிமகனின் உரிமையிப் பரிபது தவறு..\\

        முதலில் இது யாருக்கான அரசு. இந்த அரசைநாடினால் நியாயம் எல்லாம் கிடைக்குமா. இது அனைவருக்குமான போராட்டம் என்பதால் மற்றொரு குடிமகனின் உரிமையில் எப்படி இடர் இழைத்திருக்கிறோம். அண்ணேன். கொஞ்சம் சொல்லுங்கண்ணேன்.

        \\ஆமான்னேன் போலிஸோட ஆயுதமும் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது..
        \\

        போலீஸு ஒரு ஏவல்நாய். எஜமான் காட்டிய ஆளை கடித்துக் குதறும். அதன் ஆயுதம் ஏற்கனவே என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதுநானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஏவினால் தனது ஆயுதத்தை உபயோகிக்கத் தயங்காது. அதன் ஆயுதம் எங்களால் அல்ல, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. எங்கள் எதிரி போலீஸுநாய் அல்ல. அதனை ஏவி விடும் அரசும், அதனை இயக்கும் முதலாளித்துவமும்தான்.

        ஆனால் இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறேன். உமக்கு ஆனாவும் தெரியாது, ஆவன்னாவும் தெரியாது

  11. வினவு கானும் கனவு பகல் கனவு.. இது பலிக்காது தம்பி…இப்போது தான் ஒரு பகல் கொலயனிடமிருந்த தமிழகம் காப்பாட்ரப்பட்டுள்ளது. தாங்கள் நடத்தும் நாடகம் நிரைவேராது..

    • இப்போது பகல் கொள்ளைக்காரி திருமதி.ஜெயலலிதாவிடம் தமிழகம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒலிமயமான எதிகாலம் தமிழகத்திற்கு

  12. இந்த அமைப்பு முறை கொடுத்திருக்கிற அமைதியாக போராடும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் மீறுபவை அரசு அமைப்புகள்தான் என்பது ஏற்றுதான் இதே அமைப்பு மனித உரிமை கமிஷந்வைத்துள்ளது.

    Please ignore persons like ‘Paiya’ who don’t wish to see the truth.

    To moderator: please remove the screen shots above. I am unable to forward ‘vinavu’ mails to my female friends because of it.

  13. //பையாவோட நோக்கம் என்னவென்றால், இது மாதிரி மக்கள் பிரச்சினைக்கு எவனாவது போராடினாக்க நம்ம சினிமாவுக்கு போறது லேட்டாயிருமே என்று கவலை.//

    பாவம் அவர மட்டும் விட்டுருவும் ஏன்னா மேட்னி சோவுக்கு லேட் ஆகிடும்ல…

    • கன்னாநான் ஊன் வழியிலே வற்றேன்…எனக்கு மேட்னி சோ போச்சுன்ன 1ஸ்ட் சோ இறுக்கு..1ஸ்ட் சோ போச்சுன்ன 2ன்டு சோ இறுக்கு..சோ இது சினிமா பிரச்சனை அல்ல..

      தயவுசெய்து 2, 2.1 இ படிக்கவும்..

  14. அட பையா ரோட்ல எவன் செத்து கடந்தா என்ன நாம சாவலையே….

    ஆனா நமக்கும் ஒரு சாவு வரும் அப்ப ரோட்டுக்கு வந்துதான் ஆகனும்……..அப்ப தெரியும்…

  15. //வினவு கானும் கனவு பகல் கனவு.. இது பலிக்காது தம்பி…இப்போது தான் ஒரு பகல் கொலயனிடமிருந்த தமிழகம் காப்பாட்ரப்பட்டுள்ளது//

    ம்..உண்மைதான் பகல் கொல்லையனிடமிருந்து காப்பாட்ரி இரவு பேய்யிடம் கொடுத்தாட்சி…

    • Iravu peiyidam koduthathu thapputhaan adhukkaga adhayum pudungi Dinosaur kitta kodukkalama, thaanum azhinju ellarayum muzhingidume.. Kanavu thaane kaanungal engal Thalaivar Abdul Kalam sollirukkaru…. thappillai!!!

  16. சாலை மறியலை அரசுதான் ஊக்குவிக்கறது.
    அரசு அதிகாரிகள் ஒழுங்காக நடந்துகொண்டால் மக்கள் சாலை மறியல் செய்ய அவசியம் இருக்காது.

    நம்ம paiya போன்றவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போய் இந்த மாதிரி கொள்ளை அடிக்கிறார்கள் என்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தால், உடனே போலீஸ் படை வந்து தப்பு செய்தவர்கள் பிடித்து கூண்டோடு சிறை வைத்துவிடுவார்கள்!
    இது சாதாரண மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ தெரியமாட்டேங்குது.

    அரசு இயந்திரம் சரியாக இருந்தால் இது போன்ற போராட்டங்களுக்கு அவசியம் இருக்காது.

    யாரும் “டைம் பாஸ்”க்கு போராட்டம் செய்ய மாட்டார்கள். இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல மக்கள் அனைவருக்குமான பிரச்சினை.

    அடுத்த முறை நீங்கள் சாலை மறியலில் சிக்கிக்கொண்டால், அந்த மக்களின் போராட்டத்தில் நீங்களும் பங்கு கொண்டதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

    இந்த போராட்டத்தின் மூல காரணம் அரசின் தவறு. அதை திருத்த முற்படுங்கள் Paiya.

    • //யாரும் “டைம் பாஸ்”க்கு போராட்டம் செய்ய மாட்டார்கள்.//

      னான் அனுபவப்பட்ட ஒரு விசயத்தை சொல்கிறேன்…போன ஆட்சியில பெட்ரோல் விலை ஏத்துனப்ப..னான் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ல கேரளா போனேன்..அப்பொ இங்க தாத்தா ஆட்சி அங்க கம்முனாட்டி கம்யூனீஸ்ட் ஆட்சி…காஙிரஸ் ஏத்துன பெட்ரோல் விலைக்கு கம்யூனீஸ்ட் அறிவித்த பந்த் அது,நாகர்கோவில் தான்டி கேரளா வந்தவுடன் வ்ச்சாங்க ஆப்பு…2 மணிநேரம், கம்முனாட்டி கம்யூனீஸ்ட் பந்த், முழுச 25 பேர் ஆளுக்கொரு கொடி, வெட்டிதனமான கோசம், ரயிலில் தண்ணியும் இல்லை உணவும் இல்லை, அந்த ஸ்டேசனோ ஒரு சிறிய ஸ்டேசன்..அஙொ ஒன்னும் இல்லை…னான் முன்னெ சென்ட்ரு வேடிக்கை பார்த்தேன்..எஙளைப் பார்த்தவுடன் மளையாலத்தில் திட்டினான், பத்துநாள் ஆனாலும்நகர முடியாது என்ட்ரானாம்..அஙிருந்த தமிழ்நண்பர் சொன்னார்..ஒவ்வொரு பெட்டியாகப்பார்த்தேன் அனைவரும் கஸ்டப்பட்டனர், மிகவும் பாதிக்கப்ப்பட்டது பாலும் பிஸ்கட்டும் கூட கிடைக்காமல் அழுத குழந்தைகள் தான்…அந்தக் குழந்தைகளின் அழுகுரல் கூட அந்தநாய்களுக்கு கேத வில்லை பின்னர் சாப்பட்டுநேரம் வந்த வுடன் அன்டக் கூட்டம் கோசத்துடன் கலைந்து சென்றது, அஙு இற்ந்தநம்ம தமிழ் ரயிவே பொலிசிடம் பேசினேன், அவர் சொன்னது, தம்பி இங என்ன ஆனாலும் அவனுகளா போனாத்தான், 10 கி.மீ முன்னடி மறிச்சிறுந்த 10நொடீல்ல கிளீயர் பன்னீருவோம் ஏன்னா அது தமிழ்னாடு…ஆனா இங ஒன்னும் பன்ன முடியாது..

      1. சில கேள்விகள்-

      1. இந்தக் கம்னாட்டிஸ் ரயில மற்ப்பதனால் பெட்ரோல் விலை குறைந்ததா?
      2. மத்திய மானில அரசுகள் வந்து பேச்சு வார்த்தைநடத்தியதா?
      3. பசிக்கு அழும் குழந்தை என்ன பாவம் பன்னியது?
      4. காலையிலநல்லா சாப்பைட்டு வந்து உண்ணாவிரதம் இறுந்த மாதிரி, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வந்து பெட்ரோல் விலையேட்ரத்துக்கு ரயில் மறியல்நியாயமா?

      • பையா என் அனுபவம் ஒன்றை சொல்லுகிறேன் கேளு.ஏப்ரல் 26 அன்று புதுவை போலீசார் ஒரு கொத்தனாரை அடிச்சே கொன்னுட்டானுங்க. அவரது உறவினர்களும், உடன் வேலை செய்த தொழிலாளிகளும் உன்ன மாதிரியே இந்த அரசாங்கத்த நம்பி போராட்டமெல்லாம் வேணாம் நம்ம கவர்மெண்டு ந்மக்கு நல்லத செய்யும்னுட்டு சும்மா இருந்துட்டாங்க. ஆனால் விளைவு சந்தேகத்திற்கிடமான மரணம் என பைல் மூடப்பட்டது. இப்போ கொன்னவனுங்க எல்லாம் நல்லா தெனாவட்டா பதவியிலதான் இருக்கானுங்க. ஆனால் அந்த இளம் விதவைத் தாய் த்னது 3 குழந்தைகளுடன் சோத்துக்கே வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள். நீங்க சொல்லியிருப்பதைப் போன்ற 2 மணிநேரம் பால் பிஸ்கட் இல்லாத அவதியல்ல இது. பல மாதங்களாகத் தொடருகின்ற பசி பட்டினி. அன்று ஒரு தொழிலாளி அடித்துக் கொல்லப்பாட்டார் என்ற சுவடே தெரியாமல் போனது. ஒருவர் கூட என்ன ஏது என்று கூட கேட்கவில்லை. அதுவே ஒரு சாலை மறியல் நடத்தியிருந்தால்…………………அப்பொழுதும்கூட உங்கள மாதிரி நாலு பேரு திட்டுறதுக்குத்தான் வருவீங்க.

      • அரசியலுக்காக செய்யப்படும் மறியலை இதனுடன் சேர்க்காதீர்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிரீரர்கள் என்று தெரியவில்லை. உங்கள் சம்பளத்தை இடைத் தரகர் ஒருவர் 40 சதவிகிதம் பிடித்துக்கொண்டு கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்களா?

        அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை ஒழுங்காக செய்தால், சாலை மறியல் தேவை இருக்காது.

        எப்போதாவது சட்டம், போலீஸ், நீதி, அரசு துறைகள் தங்கள் கடமையை சரிவர செய்யாதபோது உங்களுக்கு இதன் அடிப்படி அர்த்தம் புரியும்.
        அந்த அனுபவம் பெற உங்களை வாழ்த்துகிறேன் பையா. அதுவரை விமர்சனம் செய்துகொண்டிருங்கள்.

      • பையா,
        .பொய்யும் புனைசுருட்டும் கவைக்குதவாது.குருவாயூர் விரைவு வண்டி கேரளாவுக்குள் நுழைவது இரவு 10 மணி அளவில்தான்.முழு அடைப்பு எனபது பகலில் நடத்தப்படுவது.இப்படி பொய் சொல்லி வாதத்தை வெல்ல முயல்வது குறித்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா.பையாவின் பித்தலாட்டத்தை இந்த சுட்டிக்கு போய் தெரிந்து கொள்ளலாம்.
        http://www.trainenquiry.com/Schedule_Display.aspx?drop_sel=16127&date=16%2f07%2f2011&t_no=&queryDisplay=MS+GURUVAYUR+EX%2c+16127

  17. பையா போன்ற புரட்டுவாதிகளின் புரட்டுகலுக்கு தயவு செய்து வினவில் இடம் தராதீர்கள்.பாசிச தினமலரை போல எடிட் செய்து விடலாம்.இதுகள் ஞான கிறுக்குகள்.இதுகளுக்கு_____ அடித்து சொன்னால் கூட புரியாத மாதிரி நடிக்கிற வர்க்கம் இது.இல்லையென்றால் ’கம்மனாட்டி கம்யூனிஸ்ட்’என விளித்து இதுகள் பின்னூட்டம் இடுமா?போக்குவரத்து பாதிக்கிறது என ஊளையிடும் இதுகளை ஒரு நாள் சுட்டெரிக்கும் வெயிலில் 12 மணி நேரம், வேலை வாங்காமல் சும்மா வயல் காட்டில் நிறுத்தி வைத்தாலே,விவசாயியின் கஸ்டம் புரிந்தாலும் புரியும்,புரிந்தாலும்,புரியாத மாதிரி நடிக்கும் நடிக்கும் ஜென்மங்கள் இதுகள்.இதுக்கெலாம் பதில் ஒரு கேடு………

    • போ போயி வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டீட்டுவா…அழாமப்போனும்..

  18. வினவின் கட்டுரைக்கு என் பாராட்டுக்கள். உலக சரித்திரத்தில் எங்கும் புரட்சி/போராட்டம் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனைக்கும் விடிவு கிடைத்ததில்லை. போராட்டத்தை ஆதரிக்கும் உங்கள் கட்டுரையை வரவேற்கிரேன்.
    என் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
    உங்கள் வீடிற்கும் (விவசாயி) பக்கத்து வீடிற்கும்(அரசு அதிகாரிகள்/ஏஜண்டு) ஒரு பிரச்சனை. உங்கள் பக்கம்தான் நியாயம். ஆனால் எதிர் வீடுக்காரர் (போலீசார்) பக்கத்து வீடிற்கு சாதகமாக நடக்கிரார். நீங்கள் உடணே பின் வீடிற்கு (பொது மக்கள்) போய் அவர்களிடம் நியாயம் கேட்கிறிர்கள்(மறியல் செய்கிறிர்கள்). முதலில் அவர்களும் உஙகள் பிரச்சனையை கவனிப்பார்கள் ஆனால் சிறிது காலத்தில் அவர்களும் உங்கள் மீது / உங்களிடம் கோபம் கொள்வார்கள். இது தான் இன்றய சூழ்நிலை.
    “பையா” போன்றவர்கள் சொல்வதும் இது தான். இன்றய சூழ்நிலையில் மறியல் போராட்டத்தால் தீர்வு ஏதாவது கிடைத்துள்ளதா? கவனயிர்ப்பு மக்களிடம் கிடைகின்றது. ஆனால் நாளடைவில் அதுவே மக்களிடம் மறியல் என்றாலே ஒரு விரக்தியை, எரிச்சலை உன்டாக்குகிரது. இது தான் நடைமுறையில் யதார்தத்தில் உள்ள உண்மை.
    மறியலில் சிக்கிய பஸ்ஸில் ஒரு விவசாயி இருந்தால் அவர் மறியல் செய்பவர்களுக்கு ஆதரவாக வருவரா என்றால் இல்லை. அவருக்கு இவர்கள் கஷ்டம் புரியும் ஆனால் ஒன்றும் ஆக போவதில்லை என்று நொந்து கொண்டு, எப்போ போலீசார் மறியலில் ஈடு பட்டிருபோரை களைத்து பஸ்சை போக விடுவார்கள் என்று தான் இருப்பார். யதார்தம் இதுதான்.
    அநியாயத்தை கண்டு மக்கள் போராடுவது மிகவும் அவசியம். எங்கு போரடினால் நியாயம் கிடைக்கும் என்பதை அறிந்து போராடினால் இன்னும் நன்றாக இருக்கும். அதற்கு “வினவு” போன்றவர்கள் அந்த வழிகளை ஆராய்ந்து அவர்களை சரியான இடத்தில் போராட உதவினால் இன்னும் பயன் உள்ளதாக இருக்கும்.
    இன்று அதிகாரிகள் எவ்வளவு பிரச்சனை பண்ணினாலும் மக்கள் அவர்களிடம் போராட மாட்டார்கள் பஸ் மறியல், உண்ணா விரதம் என்று அவர்களை(அதிகாரிகளை) பாதிக்காத வண்ணம் தான் போரடுவார்கள் என்று அதிகாரிகள் நன்று தெரிந்து வைத்திருகிறார்கள். அதனால் அதிகாரியோ/அதிகாரவர்கமோ மாறவில்லை. இவை இப்படியே தொடர்ந்தால் அவர்கள் மாறபோவதும் இல்லை.
    ஒரு சிலர் இங்கு மறியல் போராட்டத்தால் பொது மக்களுக்கு பதிப்பு இருந்தால் எற்று கொள்ளத்தான் வேண்டும் என்றும் ரயில் மறியலில் பயணிகளுக்கு பசியேடுதால் போராட்டகரர்களுக்காக பசியை தாங்கிகொள்ள வேண்டும் என்றும் ஏழுதியிருந்தார்கள். என் கேள்வி எல்லாம் எங்கே போகிறது மனிதனேயம்/மனிதாபிமானம். அடுதவர் பதிக்கபட்டாலும் பரவாயில்லை தான் நன்றாக இருந்தால் போதும் என்ற அதிகார வர்கதிர்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? யாரால் பாதிக்க படுகின்றோமோ அவர்களை பாதித்தோம் என்றால் ஒரு நியாயம் இருக்கின்றது. தனக்கு நடந்த ஒரு அநியாயத்தால் பிறருக்கு நானும் அநியாயம் செய்வேன் என்பதில் நியாயம் இல்லை.
    விவசாயிகளுக்கு இந்நிலை தொடர்ந்தால் தற்கொலையும், நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழிலையும் தான் நாடுவார்கள். அவர்களுக்கு “வினவு” போன்றவர்கள் உதவி பெரிய அளவில் தேவை. உஙகள் உதவி அவர்களுக்கு சரியான விடை கிடைக்க செய்யும் போராடத்தை அளிக்கும் வகையில் இருக்கட்டும். விடை கிடைக்காத வெற்று போராட்டம் போராட்டகரர்களுக்கு பாதிப்பை தான் தரும். நாம் விவசாயிகளுக்கு விடை கொடுக்கும்/கிடைக்கும் வகையில் போரடுவொமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க