Sunday, February 9, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஉச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு - நிதி தாரீர்!

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!

-

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். எனினும், “சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 க்குள் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு பெற்றிருக்கிறது தமிழக அரசு. இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அச்சிட்டுத் தயார் நிலையில் உள்ள நூல்களை விநியோகிப்பதற்கு எதற்கு கால நீட்டிப்பு? நடைமுறையில் இந்தக் “காலநீட்டிப்பு” பெறுவதன் நோக்கம் இறுதித் தீர்ப்பு வரும்வரை புத்தகங்களை விநியோகிக்காமல் தடுப்பதுதான்.  மாணவர்களையும் ஆசிரியர்களையும் “இதோ.. ..அதோ” என்று இரண்டு மாதங்களாக அலைக்கழித்து வருகிறது ஜெ அரசு. இதே காரியத்தை கருணாநிதி செய்திருந்தால் சோ, வாசந்தி, வைத்தியநாதன், எச்.ராஜா, தா.பாண்டியன் முதலான “தமிழர்கள்” தம் நாக்காலேயே நெம்பி ஆட்சியைக் கவிழ்த்திருப்பார்கள். மேற்படி அயோக்கியத்தனத்தை செய்துவருபவர் புரட்ச்சித்தலைவி என்பதால், இவர்களுடைய நாக்கு அம்மாவின் பொற்பாதங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறது.

நம் கண் முன்னால் 1.25 கோடி மாணவர்களை உருட்டிப் பந்தாடுகிறார் புரட்சித்தலைவி. பள்ளிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஒருவேளை ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைக்காக பத்து நாட்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தால், மாணவர்கள் அவர்களை ஆதரித்துப் போராடியிருந்தால் – என்ன நடந்திருக்கும்? 2 இலட்சம் அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கிறதா? அதுதான் நடந்திருக்கும்.

தமிழக மக்களைத் தனது *@# க்குச் சமமாகத்தான் ஜெ மதிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் சான்றுகள் தேவையில்லை. நீதித்துறையின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பு, மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டிலும் ஒரு *@# கூடுதலாக இருக்கலாம். அவ்வளவே.

சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமானவைதானா என்று கமிட்டி போட்டு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அம்மா போட்ட கமிட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே, 2002 பாடத்திட்டத்தின் அடிப்படையிலா பாடநூல்களை அச்சடிக்கச் சொல்லிவிட்டார் புரட்சித்தலைவி. இது குறித்த செய்தி நாளேடுகளிலும் வந்துவிட்டது. “இப்படி செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?” என்று குமுறினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. “எந்தப் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று ஐயா உத்தரவு பிறப்பித்தாலும், அடுத்த கணமே கொடுத்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் அதையும் அடிக்கிறோம் மை லார்ட்” என்று நீதபதிக்கு பதில் சொன்னார் அரசு வழக்குரைஞர். இது எப்படி இருக்கு?

“அனாவசியமாக இன்னொரு 200 கோடி செலவு வேண்டாம். சமச்சீர் பாடத்தை இந்த ஆண்டுக்கு கொடுத்து விடுங்கள். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்” என்று நீதிமன்றம் சொல்லிவிடக்கூடுமோ என்று அம்மாவுக்கு ஒரு ஐயம். அதனால்தான் இந்த குறுக்கு வழி, தீர்ப்பு வருவதற்கு முன்னரே இன்னொரு 200 கோடியையும் செலவு செய்யச் சொல்லிவிட்டார். நீதிமன்றத்தை உப்பு மூட்டை மேல் படுக்கப் போட்டு வீக்கம் வெளியில் தெரியாதபடி அடிப்பது என்பது இதுதான். இதை மற்றவர்கள் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு. அம்மா செய்தால் அதற்குப் பெயர் துணிச்சல்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்தவுடனே கல்வித்துறை செயலர், அட்வகேட் ஜெனரல், அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் டெல்லிக்கு பறந்து விட்டனர். “மனு தாக்கல் செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டமாக இருக்க்கூடாது. வழக்கிற்கு வழங்கப்படும் வரிசை எண்ணின் கூட்டல் தொகை 9 ஆக இருக்க வேண்டும்”. என்ற இரண்டு முக்கியமான லா பாயிண்டுகளை பின்பற்றுவதில் புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் கவனமாக இருந்தனர்.

வெயிட் காட்டுவதன் மூலமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற முடியும் என்பதனால், இந்தியாவின் சட்டத்துறை சூப்பர் ஸ்டார்களாக அறியப்படும் வழக்குரைஞர்கள்  பலரையும் விலைக்கு வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுபரீம் கோர்ட்டில் இறக்கி விட்டிருந்தார் அம்மா. அரசியல் சட்ட வழக்குரைஞர் பி.பி.ராவ், முகுல் ரோகத்கி, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் என்று ஒரு வழக்குரைஞர் படை அரசின் சார்பாக இறக்கப்பட்டிருந்த்து. ரோஹிந்தன் நாரிமன், ஆர்யமா சுந்தரம், ராஜீவ் தவான் உள்ளிட்ட இன்னொரு வழக்குரைஞர் படையைக் களத்தில் இறக்கியிருந்தனர் மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகள். இவர்களுடைய கூட்டமே நீதிமன்ற அறையில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது,

ஒரு முறை நாறைகாலியை விட்டு எழும்புவதற்கே சில இலட்சங்களை கட்டணமாக வசூலிக்கும் மேற்குறிப்பிட்ட வழக்குரைஞர்கள், நேற்று நெடுநேரம் கால் நோக நின்றபடியே தடையாணை கேட்டு மன்றாடினர். எனினும் நீதிமன்றம் தடையாணை கொடுக்க மறுத்தது. “தடையாணை தராவிட்டாலும் அவகாசமாவது கொடுங்கள். சமச்சீர் பாடத்திட்ட நூல்களை 22 ஆம் தேதிக்குள் விநியோகிக்க இயலாது” என்று கூறி, ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் கோரினர்.

தயார் நிலையில் கிடங்குகளில் தூங்கும் நூல்களை எடுத்து விநியோகிப்பதற்கு எதற்கு கூடுதல் அவகாசம்? இருப்பினும், “அவ்ளோ பெரிய்ய வக்கீலுங்க, இவ்ளோ தூரம் ப்ரஸ் பண்ணி கேட்பதன் காரணமாக”, மேற்கொண்டு ஒரு பத்து நாட்களைப் போட்டுக் கொடுத்தது உச்ச நீதிமன்றம். நூல்களை விநியோகிப்பதற்கு என்று கூறி ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் பெற்ற ஜெ அரசு, இந்த அவகாசத்தை “நூல்களை விநியோகிக்காமல் மாணவர்களை இழுத்தடிப்பதற்கான அவகாசமாக” பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதையும், இரண்டு மாதங்களாக மாணவர்களைத் தெருவில் நிறுத்தியிருப்பதையும் ஜெ வின் தனிப்பட்ட குணாதிசயத்தின் விளைவாக மட்டுமே பலர் காண்கின்றனர். இப்பிரச்சினையைப் பொருத்தமட்டில் அது ஒரு அம்சம் மட்டுமே.

மேட்டுக்குடி வர்க்க மாணவர்களுக்கும், உழைக்கும் வர்க்க மாணவர்களுக்கும் பொதுவானதாக ஒரு பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்டவுடனேயே, காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியது போலப் பலர் துடிக்கின்றனர். மேட்டுக்குடி வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிக் பள்ளி கொள்ளையர்கள், பார்ப்பனிய-புதிய தாராளவாத சித்தாந்தக் குஞ்சுகள் போன்ற பலரும் இதில் அடக்கம். ஜெயலலிதா அவர்களுடைய பிரதிநிதி. எனவே, ஜெயலலிதா இதில் காட்டும் மூர்க்கத்தனம் என்பது, சர்ச் பார்க், டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி, டி.ஏ.வி உள்ளிட்ட மேட்டுக்குடி வர்க்கத்தின் கண்ணோட்டத்திலும் குணாதிசயத்திலும் விளைந்ததாகும். அம்மையார் பிடிவாத குணம் கொண்ட ஒரு பாசிஸ்டாக இருப்பது மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு கிட்டிய ஒரு கூடுதல் வரப்பிரசாதம்.

மெட்ரிக் பள்ளித் தொழிலதிபர்கள் கருத்து ரீதியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தருவது மட்டுமின்றி, கோடிகளை வாரி இரைத்து உச்ச நீதிமன்றத்தில் நட்சத்திர வழக்குரைஞர்களையும் நிறுத்தியிருக்கிறார்கள். கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டம் அரசாங்க செலவில் டெல்லியில் தங்கியிருந்து வாதிடவிருக்கும் வழக்குரைஞர்களுக்கு தேவையான அனைத்தையும் திரட்டிக் கொடுப்பதுடன், சாதகமான தீர்ப்பை வாங்குவதற்கான எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது.

பாடத்திட்டம் தரமில்லை என்று வல்லுநர் குழுவை வைத்து நிரூபிக்கும் முயற்சி உயர்நீதி மன்றத்தில் தோற்றுவிட்டது. “அரசு இயற்றிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்த்தன் மூலம், சட்டமன்றத்தின் அதிகார எல்லைக்குள் உயர்நீதிமன்றம் வரம்புமீறித் தலையிட்டுள்ளது” என்று இதனை ஒரு அரசியல் சட்டச் சிக்கலாக மாற்றி திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் இறங்கக்கூடும்.

எதிர்த் தரப்பில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கை மற்றும் “வலிமை”யை ஒப்பிடும்போது, நமது தரப்பு (அதாவது சமச்சீர் பாடத்திட்டத்துக்காக வாதிடுவோரின் தரப்பு) வழக்குரைஞர்களின் எண்ணிக்கை குறைவு என்பதுடன், பலவீனமாகவும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் பலம் பலவீனத்தை தீர்மானிப்பதில் பணமே முக்கியப் பாத்திரமாற்றுகிறது என்பதை விளக்கத்தேவையில்லை.

இவ்வழக்கைப் பொருத்தவரை முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும், அதன் பின்னர் வல்லுநர் குழு அறிக்கை தொடர்பாக மீண்டும் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு நடத்தியிருக்கிறோம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் ஊதியமில்லாமல்தான் இதற்க்காக உழைக்கிறார்கள் என்ற போதிலும், பிரபலமான மூத்த வழக்குரைஞர்களை அமர்த்திக் கொள்ளும்போது அவர்களுக்குரிய கட்டணத்தைக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டுமானால் அதற்கு இங்கிருந்து ஒரு வழக்குரைஞர் குழுவே டெல்லி சென்று, மனுவையும், வாதுரைகளையும் தயாரிப்பதுடன், நாம் அமர்த்திக் கொள்ளும் மூத்த வழக்குரைஞர்களுக்கு வழக்கின் சாரத்தை விளக்கிப் புரியவைக்கவும் வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல அவ்வப்போது அவர்கள் கேட்கும் ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதற்காக, வழக்கு முடியும் வரை அங்கே இருக்கவும் வேண்டியிருக்கிறது.

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிக் கொண்டு, தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக மக்கள் பணத்தை கோடிக் கணக்கில் வாரியிரைத்து இந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறது ஜெ அரசு. அது மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிப்பணம்.

இதுவரை சமச்சீர் கல்வி இரத்துக்கு எதிராக எமது அமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களிடமிருந்து பெறப்பட்ட நண்கொடையால்தான் சாத்தியமாயின. பிரச்சார இயக்கம், ஆர்பாட்டங்கள், மெட்ரிக் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான பல முற்றுகைப் போராட்டங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற அரங்கக்கூட்டங்கள், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகள் என்று கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இப்போராட்டம்.

இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம். தற்போதைய நிதித் தேவை குறைந்த பட்சம் 3 இலட்சம் ரூபாய்

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது. எனவே உங்கள் நன்கொடையை விரைந்து அனுப்பவும். நாம் வென்றே தீரவேண்டும் என்ற வேட்கை, நீங்கள் வழங்கவிருக்கும் நன்கொடையின் தொகையைத் தீர்மானிக்கட்டும்.

வழக்கு நிதி தாரீர் !

வெஸ்டர்ன் யூனியன் (WESTERN UNION) மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் KANNAIYAN RAMADOSS என்ற பெயருக்கு பணம் அனுப்பி விட்டு விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

  1. “உங்களிடம் வழக்கு “நிதி” கோருகிறோம்”
    ———————————————————————
    ஜெயாவுக்கு எதிரான இவ்வழக்கு “நிதியை” கருணா”நிதி”யிடம் பெறலாமே ?

  2. I will send it to the bank a/c, because i am not having credit card. so i wil deposit in ur a/c. congrats. we will win. the people of Tamilnadu will win. if we fail then there is no justice left in this country and it is AN OPEN ANNOUNCEMENT OF CAPITALIST WIN.

  3. கடைசியாக காவி மயமாக்கப்பட்ட நீதிமன்றம்… பார்ப்பன ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டது .. 🙂

  4. \\ “மனு தாக்கல் செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டமாக இருக்க்கூடாது. வழக்கிற்கு வழங்கப்படும் வரிசை எண்ணின் கூட்டல் தொகை 9 ஆக இருக்க வேண்டும்”. என்ற இரண்டு முக்கியமான லா பாயிண்டுகளை பின்பற்றுவதில் புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் கவனமாக இருந்தனர்.//

    சர்வாதிகாரிகள் முட்டாள்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.இருந்தாலும் இப்படியா.இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொள்பவர் ”திறமை”யான முதல்வராம். மனு தாக்கல் செய்யும் நேரமும்,வரிசை எண்ணும் வழக்கின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும் என்றால் பி.பி.ராவும் பெரிய வழக்குரைஞர் கூட்டமும் எதற்கு.ஏதாவது ஒரு முன்சீப் நீதிமன்றத்தில் வழக்காடும் அரசு வக்கீல் போதுமே.

  5. ஆரம்பிச்சுட்டேங்கய்யா, ஆரம்பிச்சுட்டேங்க! கருணானிதியோட சுய புராணத்தைப் பரப்ப ஆசைப் படுற நீங்க தானே உங்க தலைவர்ட்ட கேட்டு வாங்கிக் கேஷ்நடத்தனும்.நல்ல எண்ணத்துல மாணவர்களை முன்னேற்ற பாடுபடுற ஜெயா முயற்சியில மண்ணாத் தூவினதும் இல்லாமே, நிதி வேறே கேக்குதோ!
    உங்களோடநடவடிக்கைநல்லது இல்லை ஐய்யா!

    • //நல்ல எண்ணத்துல மாணவர்களை முன்னேற்ற பாடுபடுற ஜெயா முயற்சியில//
      அற்புதம். தமிழன் மானம் இல்லாதவன் என்பதற்கு, நீர் சிறந்த உதாரணம்.

  6. சமச்சேர் கல்விக் குழுத் தலைவராக இருந்த முத்துக் குமரன் கூறுவதைக் கேளுங்கள், பாடப் புத்தகங்களில் கருணானிதியின் திருவிளையாடல் புரிந்துவிடும். மாணவர்களின் எதிர் காலத்தோடு விளையாடும் உங்களுக்கு நிதி தருவோரும் பாவத்தையே கட்டிக் கொள்வார் என்பது உறுதி.

  7. இதில் வினவுக்கு எதிராக கருத்து எழுதியிருபவர்கள் கோள்கை என்பதனை விட தமது பணத்தை ஏன் இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் எழுதுகிறார்கள். எம்மில் பலரைக் கண்டிருக்கிறேன், தமது பணதிற்கு செலவு என்றவுடன் மாற்றி கதைப்பார்கள்.

  8. நம்மிடம் உள்ள லட்சங்களும், கோடிகளும் வெறும் காகிதங்கள், அவை இம்மாதிரியான நல்ல நிகழ்வுக்கு பயன்படும் வரை. என்கின்ற புரிதல் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்.

  9. இந்த விசியத்தில் உங்கள் பணி பாராட்ட தக்கது. நிதி அளிக்கத்தான் ஆசை. ஆனால் தற்போது இயலாத நிலை. by the way : கடந்த ஆண்டில் இருந்து நான் ’தொழிலாளியாக’ மாறிவிட்டேன். தொழிலில் இருந்து விலக வேண்டிய நிலை. இப்போது ‘சுரண்டப்படும்’ தொழிலாளியாகத்தான் வாழ்க்கை !! :))

      • அடப்பாவிகளா. எதுக்குதான் ‘வாழ்த்து’ சொலறதுன்னு இல்ல ? :))))

        அய்.டியில் மாசம் 80 ஆயிரம் வாங்கிறவன் உங்கள பொறுத்தவரை ’தொழிலாளி’ !!
        பெட்டி கடை வைத்திருக்கிறவன் ’முதலாளி’.

    • அதியமான் ‘தொழிலாளி’யாக ஆவார் என்று அன்றே சொன்னது வினவு!

      Submitted on 2009/09/03 at 11:01 pm | In reply to K.R.Athiyaman.

      அதியமான் ஒரு ஆளுமைப் பார்வை !

      ஒரு ஐ.டி துறை ஊழியரின் ஒராண்டு வருமானத்தில் முதலீடு செய்து பிளாஸ்டிக் தொழில் செய்யும் தொழிலதிபர் நண்பர் அதியமான் முதலாளித்துவத்தின் மீது இவ்வ்வளவு தீவிர பக்தராக இருப்பதன் காரணமென்ன? எப்போதும் அவர் வினவிலேயே குடியிருப்பதைப் பார்த்தால் தொழில் ஒழுங்காக நடக்கவில்லையோ என்ற கவலையும் எமக்குண்டு. அதியமான் ஒரு சிறு முதலாளி. சிறு முதலாளிகள்தான் பெருமுதலாளிகளைக் காட்டிலும் சொத்துடைமையின் காதலை தீவிரமாக வைத்திருப்பார்கள். சோசலிச சமூகத்தில் கூட முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண் இவர்கள்தான் என்கிறார் லெனின். தனது கண்பார்வைக்குள் முதலீடு, தொழில் எல்லாம் நடப்பதால் இலாபத்தின் மீதும், எதிர்கால பெரிய முதலாளி எனும் கனவின் மீதும் இவர்கள் வெறியாய் இருப்பார்கள். தொழில்தான் இவர்களது முதல் மனைவி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதனால்தான் அதியமான் எப்போதும் முதலாளித்துவத்தின் பக்தராக தன்னந்தனியராக வினவில் போராடுகிறார்.

      ஆனாலும் என்ன செய்ய? மேற்கில் அமெரிக்காவில் வெடித்த பொருளாதாரம் எழுந்திருக்க முடியாமல் அரசே முதலாளிகளைக்காப்பாற்ற வேண்டுமென்ற ‘சோசலிச’ கோரிக்கையை முதலாளிகள் வைக்கின்ற காலத்தில், பல இலட்சக்கணக்கில் வேலையிழந்த, வீடிழந்த மக்கள் முதலாளித்துவம் ஒழிக எனும் காலத்தில், மார்க்சின் மூலதனம் ஐரோப்பாவில் விற்பனையில் சக்கை போடும் நேரத்தில், பெயில்அவுட், சோசலிசம் இரண்டும்தான் கூகிளில் அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ற நேரத்தில் அய்யோ அதியமான் ஏதோ லைசன்சு ராஜ், என ஹதர் காலத்தில் வாழ்கிறார். எதற்கெடுத்தாலும் லிங்க் கொடுத்தே சாகப்போகும் முதலாளித்துவத்தை வாழவைக்கலாம் எனப் பகல் கனவை கணினியில் காண்கிறார், எழுதுகிறார்.

      முதலாளித்துவம் அமெரிக்காவில், ஐரோப்பாவில் அழிந்து வருவது இருக்கட்டும். அதியமானின் கதி என்ன? இவரைப் போன்ற சிறு முதலாளிகள் தயவு தாட்சண்யமின்றி பெரு முதலாளிகளாகல் அழிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் கிண்டியிலும், அம்பத்தூரிலும் மூடப்பட்ட தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். உலகமயத்தின் தயவில் விரைவிலோ அல்லது ஒரிரு வருடத்திலோ அதியமானும் முதலாளி எனும் அந்தஸ்தை இழந்து ஏதேனும் வேலைக்குப் போகவேண்டுமென்ற தொழிலாளிநிலைக்கு வரப்போகிறார். அப்போது இப்போது உரைக்காத தோழர் அசுரனது அறிவுரைகள் உரைக்க்கஃகூடும். அது வரை காத்திருக்காலாம். விவாதிக்கலாம். மற்றபடி அம்பானி மாதிரியெல்லாம் ஆகலாம் என்று அதியமான் கனவு காணலாம். ஆனால் நடப்பில் அப்படி நடக்கப் போவதில்லை. தனியார் மயம், தாராளமயம், உலகமய காலத்தில்தான் இந்தியாவில் பல்லாயிரம் முதலாளிகள் சிறு முதலாளிகள், தேசிய முதலாளிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். பெப்சி கோக் வந்த உடனேயே எத்தனை குளிர்பான முதலாளிகள் அழிந்திருக்கிறார்கள்? பார்லே நிறுவனம் கூட 200 கோடிக்கு தனது சாம்ராஜ்ஜியத்தை கோக்கிடம் பறிகொடுத்த்து.

      எனவே எந்தக் காலத்திலும் அதியமான் பெரு முதலாளிமட்டுமல்ல சிறு முதலாளியாக்கஃகூட நீடிக்க முடியாது. வேண்டுமானால் முதலாளித்துவ பொருளாதார பத்திரிகைகளில் அவர் கட்டுரை எழுதும் பணிக்கு செல்ல்லாம். ஆனால் அங்கேயும் லிங்கு மட்டும் கொடுத்து எழுதினால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். முதலாளித்துவத்தின் நெருக்கடியையை புதிது புதிதான வாக்கியங்களில் எழுதி நம்பிக்கையூட்டும் கலையை கற்க வேண்டும். அதை வேண்டுமானால் நண்பர் அதியமானுக்கு பீஸ் வாங்கிக்கொண்டு டியூஷன் எடுக்க வினவு தயாராக இருக்கிறது. எமது கொள்கையின் படி சிறு முதலாளிகள் அழிவதை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடுகிறோம். அந்த வகையில் அதியமானுக்கு எங்கள் அட்வைஸ் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

      நட்புடன்
      வினவு

      • இதற்க்கு அன்றே தக்க பதில் அளித்திருந்தேன். அதையும் சேர்த்து வெளியிட்டு இருக்கலாமே !! ஆனால் மீண்டும் ‘முதலாளி’ ஆக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். இது போல் பல முறை மாற்றம் கண்டுள்ளேன். நீங்க அனுமானிக்கும் காரணங்களுகாக தொழிலில் இருந்து விலகவில்லை. அந்த நிறுவனம் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. வேறு சில சொந்த காரணங்கள் தான். மற்றபடி நலமே. தாரளமயமாக்கல் உருவானதால் தான் இத்தனை சாத்தியங்கள், வேலை வாய்ப்புகள் என்பதை தொடர்ந்து உணர்ந்து கொண்டுதான் உள்ளேன். அதில் எந்த ‘சந்தேகமும்’ இல்லை.

        தொழிலை விட்டவுடன் நண்பர் ஞாநி, என்ன ஆச்சு என்று கேட்டதற்க்கு, ‘முதலாளித்துவம் வேலைய காட்டியிருச்சு’ என்று கிண்டலாக பதில் சொன்னேன். சிரித்தார். இந்த கிண்டல் என்றும் குறையாது !! :))

  10. Unga thalaivar Karunanidhi kittaye kekalame.. avaru thaan perulaye karunai vechukurare… Ungalukkum , paarparnargal azhivurkum avar thaan sothaye ezhudhi koduthiruvare… avar kitta oru request vechenganna gemini bridge, T nagar bridge, perambur bridge ellam kooda unga perukku ezzhudi vechiruvaaru…

  11. தோழர் மூலமாக என்னால் இயன்ற தொகையை அனுப்பி இருக்கிறேன். இது நன்கொடையல்ல. இத்தொகை என்னுடைய, நம்முடைய வருங்கால சந்ததிக்கு தேவையான தரமான கல்விச் செலவுக்கு என்று கணக்கு வைத்துக் கொள்கிறேன். வெல்லட்டும் நம் பணி. வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    பால்வெளி

  12. கல்வியில் “செமச்சீரழிவைக்” கொண்டு வந்தது கருணாநிதி அரசு. அதில் உண்மையான சமசீரைக் கொண்டுவர முயற்சிப்பது, அம்மாவின் அரசு.
    செந்தமிழன்

  13. கருணாநிதி அறிவித்த பள்ளிப் புறக்கணிப்பு ஏன் இப்படிப் பிசுபிசுத்துப் போனது? பாவம் வினவு!

  14. அதியமானும்,வினவும் சேர்ந்து செந்தில்-கவுண்டமணி போல் காமெடி செய்யலாமே.வினவு-கவுண்டமணி,அதியமான் – செந்தில். கிடைக்கிற லாபத்தில் 50%-50%. 50% புரட்சிக்கு, 50% அதியமானுக்கு.வடிவேலுவின் மார்க்கெட் சரிந்துள்ளதால் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.அசுரன்,உண்மைத்தமிழன்,ஏழரை,லக்கிலுக் போன்றவர்களுக்கும் சைடில் சான்ஸ் தரலாம்.

  15. நானும் ஒரு தொழிலாளி என்று கமல் நடித்து படம் வந்ததே.கமல்,ரஜனி,விஜய்,சல்மான் கான்,த்ரிஷா,அனுஷ்கா – இவர்கள் எல்லோருமே தொழிலாளிகள்தானே.

  16. செந்தமிழன் ஜெயலலிதாவின் அடிமைகளில் ஒருவர் போல் தெரிகிரது. அவருக்கு பாப்பாத்திய பத்தி ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். அவர் இன்னும் இந்திய வர்லாறு தெரியாம எழுதிக்கிட்டு இருக்கிரார்.

  17. இங்கே ஜெயலலிதா மேல் உள்ள பக்தியினாலோ, கருணாநிதி மேலுள்ள வெறுப்பினாலோ சமச்சீர் கல்வியைப் பற்றியும் வினவின் நோக்கம் பற்றியும் அவதூறாக எழுதுபவர்களுக்கு எழுதுவத்ற்குச் சரக்கு எதுவும் இல்லை போல் தெரிகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க