privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியா'தேசபக்தி'யை கற்பழித்த ஜொள்ளு!!

‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!

-

ஹீனா ரப்பானி கார் - எஸ்.எம்.கிருஷ்ணா
எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஹீனா

விவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!

தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

  • “பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.
  • “மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.
  • “அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.
  • “காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.
  • புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.
  • “ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.

என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.

79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.

இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!

இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.

அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.

இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?

தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?

ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.

ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.

இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது  வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?

கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்!

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. What a shameful and stupid article? By this of article, Vinavu can not become a useful website. Maintain some dignity while attacking Hindus.

    Will vinavu feel shame for this? Or will it continue in the same path?

    • சாணக்கியனின் வாரிசுக்கு தமிழ் தெரியாது???

      வினவை ஆங்கிலம் படித்தவர்களுக்கு போடவில்லை எனவே தமிழிலேயே

      பின்னூட்டமிடவும்.

      “வெட்கம்,மானம்& முட்டாள்தனம்.”ஹிந்துக்களை” திட்டும்பொழுது கண்ணியம்

      காட்டவும்.இதற்கு வினவு வெட்கப்படவும்.இதே பாதையில்தான் செல்வீர்களா? ”

      என்ன கேள்வி இது? வெகு ஜன ஊடகங்களைப் பார்த்து கேட்கவேண்டியது.

      ”அந்த” ”ஹிந்துக்களை”ப்பார்த்து கேட்கவேண்டியதுதானே?

      • பழயநிலா

        கட்டுரையைப் போலவே உமது வாதமும் முட்டாள் தனத்தின் உச்சம்

      • ஹிந்துக்கள் என்று யாரை சொல்கிறீர்கள் என்று என்க்கு முதலில் தெரியவில்லை. நீங்கள் சொல்லிய எந்த வெகுஜன ஊடகமும் RSS அமைப்பை சார்ந்தவர்களாலோ அல்லது ஹிந்து அமைப்புகளாலோ நடத்தப்படவில்லை என்பது கூட வினவுக்கு தெரியாமல் போனது வினவின் அறியாமையை காட்டுகிறது.

        http://intellibriefs.blogspot.com/2007/09/what-is-media-and-who-owns-media-in.html

        http://media-critics.blogspot.com/2011/04/know-your-media-personalities.html

        இந்தியாவில் நடத்தப்படும் 80% பத்திரிக்கைகள் சிறுபான்மை என்று சொல்லபடும் உலக பெரும்பான்மை மதங்களால் நடத்தபடுகிறது. இந்த லட்சனத்தில் இவர்கள் எப்படி இந்தியாவிற்கு ஆதரவாக எழுதுவார்கள்.

        அது சரி, நடப்பதோ வாடிகன் பிரதிநிதியான இத்தாலி சோனியாவின் ஆட்சி. இங்கு இந்தியர்களுக்கோ அல்லது ஹிந்துக்களுக்கோ எந்த விதத்தில் உரிமை கிடைக்கும்.

        எதேனும் ஒரு ஹிந்து ஆதரவு பத்திரிக்கையோ, நடுநிலை நாளிதலோ அல்லது சங்க பத்திரிக்கைகளோ இவ்வாறு எழுதியிருந்தால் நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்ளலாம். கிறித்துவ டாலரிலும் அரேபிய ரியாலிலூம் , சீன பணத்திலும் இயங்கும் இந்திய மீடியா பாக்கிஸ்தான் பெண்ணை பற்றி இது போல் எழுதாமல் வேறு என்ன எழுதுவார்கள்.

        \\ மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன \\

        வினவிற்கு நல்ல நகை சுவை உணர்வு உண்டு என்பதை இந்த வரிகளின் மூலம் உணர்ந்தேன். அப்படி என்றால் 1982 ஆம் ஆண்டு ஹிந்துக்களை கொன்று குவித்து அவர்கள் வீடு மற்றும் வழிபாட்டு தளங்கள் இடிக்கப்பட்டதார்களே அது எல்லாம் எதற்காக என்று? ஹோ சும்மா விளையாட்டுக்காக நடந்த விசயமா? ஒரு கும்முட்டத்தை இடித்ததற்கே இவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள். காஷ்மீர் எத்தனை கோயில்கள் இடிக்கப்பட்டன. அதை பற்றி எதுவும் பேசமாட்டார்கள். கிறித்துவ மிஷினரிகளின் கை கூலிகளுக்கு இது எல்லாம் கண்ணுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம் இல்லை.

        http://ikashmir.net/templesdestroyed/7.html

        \\ ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை!\\

        நல்ல வரிகளில். கிறித்துவ கை கூலிகளிடம் இதை விட வேறு எதை எதிர் பார்க்க இயலும். இதில் என்ன மறைக்க வேண்டி இருக்கிறது. பல ஆயிர வடிவங்களில் வழிபடப்படும் காளியின் ஒரு வடிவான உக்கிர வடிவில் ரத்தம் தோய்ந்த கத்திகளையும், தீயோரின் இரத்தத்தை புசித்த நாக்குடனும் காட்சி அளிக்கிறாள். நிலத்தை, நதியை, கல்வியை, செல்வத்தை பெண்ணாக பாவித்து வண்ங்க கூடியவர்கள் ஹிந்துக்கள். வழமான பாரதம் எவ்வாறு கீழ் தரமாக போனது பெண்கள் எவ்வாறு வீட்டிற்குள் முடக்கப் பட்டார்கள் என்பதும், உடன்கட்டை ஏறுதல் போன்ற விசங்களும் எப்படி ஏற்பட்டது, பெண்கள் ஏன் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டார்கள் என்பது பற்றிய விசயங்கள் ஜிஹாதிகளின் இந்திய ஆக்கிரமிப்பை படித்தாலே தெரியும். அது சரி ஹிந்து ஆதரவு கட்சியான பாஜாகவில் கூட இரண்டு பெண் முதலமைச்சர்கள் உருவாகினர். பாஜாகவின் நாடாளுமன்ற எதிர் கட்சி தலைவர் கூட ஒரு பெண் தான். ஆனால் கிறித்துவ அடி பொடிகளான கம்யூனிஸ்டு கட்சியிலோ அல்லது குந்தினி பிராமணர்களாலும், கேடு கெட்ட உயர் சாதி என்று சொல்லப்படும் கயவர்களால் இயக்கப்படும் கிறித்துவ தீவிரவாத படையான மாவோயிஸ்டுகளில் ஏன் பெண் தலைவர்களே இல்லை. எல்லாம் ஆண்கள் மயம் தான்.

        \\டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார்.\\

        இந்த ஒரு விசயத்தில் மட்டும் முழுமையாக வினவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். பெரும்பாலான இந்திய பத்திரிக்கைகளும் கம்யூனிஸ் சித்தாந்த கட்சிகளும் மதம் மாறிய கிறித்துவ வெளி நாட்டு அடி பொடி குந்தினி டுபாஷ் பிராமணர்களாலும் பணத்திற்கு பேயாக அலையும் உயர் சாதி என்று சொல்லி கொள்ளும் புரம் போக்குகளால் தான் நடத்தப் படுகிறது என்பதை நான் மறுக்க முடியாது.

        \\ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி?\\

        ஆடு நனைகிறது என்று ஓநாய அழுததாம் அந்த பழமொழி தான் இதை படிக்கும் பொழுது நியாபகம் வருகிறது.

        இது போன்ற கேடு கெட்ட தலைப்பிற்கு பின்னூட்டம் இட்டு என் நேரத்தை வீணடிக்க வேண்டியுள்ளதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தப்படுகிறேன்.

        • http://photo.outlookindia.com/images/gallery/20100408/sm_krishna_yang_jeichi_20100419.jpg

          இந்த படத்தில் கூட தான் சீன அதிகாரியுடன் சிறித்த முகத்துடன் பேசிகிறார். இப்படி ஒரு ஆணுடன் சிரித்து பேசியதன் காரணமாக. இவரை GAY என்று வினவு சொல்லுமா என்ன? ஹ்ம்ம் சொன்னாலும் சொல்வார்கள் யார் கண்டது. அரண்டவன் கண்ணுக்கு இருந்தது எல்லாம் பேய் என்ற பழமொழி தான் நியாபகம் வருகிறது.

          கிறித்துவ மிசினரியின் தீவிரவாதி கூட்டம் கண்ட மாதிரி பேசும் என்று கேள்வி பட்டு இருந்தேன் இப்பொழு தான் தெளிவாக தெரிந்தது.

          http://www.tamilhindu.com/2011/07/vampires-that-drained-sudan-2/

          அது சரி, உங்கள் கம்யூனிசத்தின் மத சார்பற்ற தன்மையையும் அவர்களின் ஒடுக்கபட்ட மக்களின் மீதான பாசத்தையும் ஒருவர் எழுதியுள்ளார். நடு நிலையாளர்கள் படித்து புரிந்து கொள்வார்கள், மிஷினரிகளால் மூலை சலவை செய்யப்பட்டவர்கள் நல்ல மருத்துவரையோ அல்லது நல்ல பூசாரியை வர வழைத்து வேப்ப மரக் குச்சியின் மூலம் பேயோட்டப்படுவதன் மூலமாக மட்டுமே குணம் அடைய முடியும்.

          • \\இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது.\\

            இதை படித்த உடன் எனக்கு லினிங்ஸ்டன் மற்றும் வடிவேலு அவர்கள் நடித்த ஒரு படத்தின் வரிகள் நியாபகம் வருகிறது.

            லிவிங்ஸ்டன்: கொய்யாலே என்னமா பீல் பண்ணி கூவுராண்டா

            வ்டிவேலு; அவ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்

            லிவிங்ஸ்டன் : அவன் கூவுரதுக்கு நீ எண்டா அலுவுர?

            வடிவேலு: கொய்யாலே வாங்குர காஸிக்கு மேல என்னமா கூவுராண்ட?

        • this shows ur hatrdness towards minorities of india.first be an indian and think ur fellow country ppl as indians rather than making differences in the name of religion

  2. // எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.//

  3. பிரச்சனையை தீர்க்க முடியாதவன், தங்கள் யோசனையை ஏற்று செய்தாலும் செய்வான். ஆம் அடுத்த சுற்று அழகி போட்டி ஆரம்பமாகலாம்

  4. நாமளும் சும்மா விடக்கூடாது..கிருஷ்ணா கிழவனை விரட்டிட்டு நமீதாவை வெளியுறவுத் துறைக்கு அமைச்சராக்கணும்

    • நாமளும் சும்மா விடக்கூடாது..கிருஷ்ணா கிழவனை விரட்டிட்டு நமீதாவை வெளியுறவுத் துறைக்கு அமைச்சராக்கணும்

      அருமையான யோசனை நண்பரே !!!(ராஜா)……
      இதை இந்திய அரசின் கவனத்திற்கு யாரவது எடுத்த செல்லவேண்டும் ….

  5. //உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.//

    மற்ற ஊடகங்கள் ஹீனா புகழ் பாடியதெல்லாம் இருக்கட்டும்…

    பெண்ணுரிமை, பெண் சமுதாய முன்னேற்றம் பற்றி கிழிய கிழிய பேசும் வினவு தளத்தில், ஒரு பெண் வெளி உறவுத்துறை அமைச்சரை அவளுடைய அழகுக்கும் கவர்சிக்காக பாகிஸ்தான் அவரை அமைச்சராக்கியதாக எண்ணுவது மடத்தனம்… அவமானம்…

    நீங்கள் பேசும் பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் அடிப்படையில், பாகிஸ்தான் செய்தால் அது தவறா? அவரது திறமையின் அடிப்படையிலோ அல்லது பணக்கார வர்க்க அடிப்படையிலோ இருந்திருக்கலாமே?? பெண்ணை போதை பொருளாக வினவு நினைக்கிறதோ??

    பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்ணுரிமை பற்றி பேசும் உரிமை வினவுக்கு மட்டுமே… 😉
    அதை அடுத்த நாட்டினார் யாரும் செய்யக்கூடாது 😉

    • ஜேப்பீ, நல்லா படிங்க, நீங்க எடுத்து போட்ட வரிகளுக்கு முன்னால இருக்கும் பாராவும், அடுத்து இருக்கும் பாராவும் என்ன சொல்லது? இல்ல நான் அதை இங்க காப்பி செஞ்சு போடவா? ஒரு விசயம் எந்த கான்டெக்ஸ்டுல பேசப்படுதுன்னே புரியாம இப்படி பினாத்துவது கொடுமையடா சாமீ…. அந்தப் பெண்ணைப் பற்றிய மதிப்பீடல்ல இது, அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற ஆளும் வர்க்கத்தை பற்றிய மதிப்பீடு. புரியுதா இல்லை இன்னும் தெளிவா புரிய வைக்கனுமா

  6. வாகை சூடட்டும் இளமை.

    79 வயதான தாத்தா எஸ்.எம். கிருஸ்ணா, தன் பேத்தி வயதான பாக்கிஸ்தானின்

    அயலுறவு அமைச்சர் ஹீனா ரப்பானியுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.நமது நாட்டில்

    எப்பொழுது இளைஞர்களுக்கு வழிவிடப்போகிறார்ளோ அப்பொழுதான்

    அயலுறவுக்கொள்கையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும்,பத்திரிக்கைகள், காட்சி

    ஊடகங்கள் எல்லாம் கவர்ச்சியையும் ஜொள்ளர்களையெல்லாம் வைத்துதான் பிழைப்பு

    நடத்திக்கொண்டுள்ளார்கள்.

    ”இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள்

    விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.

    பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக

    பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து

    அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு!

    இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!”

  7. பயங்கரவாதிகளின் கூடாரத்தில் இருந்து ஒருத்தி வந்தாளாம். அவளை இங்கே இருக்கும் ஒரு சில பன்னாடை பத்திரிகைகள் சிலாகித்து எழுதியவுடன் இந்தியர்களின் தேச பக்தி பல்லிளித்து விட்டதாம்… – என்ன ஒரு முட்டாள்தனமான வாதம்?..

    “இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! ” – வினவின் இந்த வரிகளை எப்படி எடுத்து கொள்வது? வினவு சிகப்பு சட்டை மட்டும்தான் உடுத்தும் என்று நினைத்திருந்தேன். தவறு ,அது சில சமயங்களில் நீல கண்ணாடியும் அணியும்.

    அது சரி பாகிஸ்தானுக்கு ஏன் இவ்வளவு சொம்பு அடிக்கிறீர்கள்? எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையிலா? அல்லது இங்கே இருக்கும் பாகிஸ்தான் அனுதாபிகளின் ஆதரவை பெறுவதற்கா? அல்லது இரண்டுமா?


    மாக்ஸிமம்

    • //அது சரி பாகிஸ்தானுக்கு ஏன் இவ்வளவு சொம்பு அடிக்கிறீர்கள்? எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையிலா? அல்லது இங்கே இருக்கும் பாகிஸ்தான் அனுதாபிகளின் ஆதரவை பெறுவதற்கா? அல்லது இரண்டுமா?//

      2ம் தான்…

      • பரவாலப்பா, குரங்கு பரிணாம வளர்ச்சி அடைய துவங்கியாச்சு, சீனுவும் சிரிப்பான் போடுவதை தாண்டி கமெண்டு போட துவங்கியாச்சு. சீக்கிரமே மனுசனாகி அறிவு வளர்ச்சி பெற்று எழுதியிருப்பதை படித்து புரிந்து கொண்டு கமெண்டு போட வாழ்த்துக்கள்

        • லூஸுங்ககிட்ட சில நேரத்துல பேச முடியாது. அதுக்காக தான் சிரிப்பான் போடுறது. இதுகூட தெரியாத நீயெல்லாம் வந்துட்ட…

          இல்லை, சிரிப்பான் போடவே கூடாதுனு சட்டமா?

      • பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது…

        மாக்ஸிமம்…

        ஸல்மான் டஷேர் கொலை இவர்களுக்கு தெரியாது பொல இருக்கு. அதிகம் பேசுனாஎன்ன முடிவு பாகிஸ்தான் நாடுலனு இவனுகலுக்கு தெரிஞும் தெரியாத மாதிரி தான் எழுதுவானுங….

        • Taken,

          அதிகம் பேசினால் அங்கே என்ன நடக்கும் என்று இவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல் எப்படி இங்கே அரசியல் பண்ண வேண்டும் என்றும் இவர்களுக்கு தெரியும்…

          இந்துத்துவத்தை எதிர்க்கும் மாற்று மத சகோதரர்களும், இந்தியாவின் அரசியலமைப்பையும் பண்பாட்டையும் எதிர்க்கும் வினவு வகை தோழர்களும் இணைத்திருக்கும் புள்ளி கொள்கை முடிவால் ஏற்பட்டது அல்ல. மாறாக தன் மகன் செத்தாலும் பரவா இல்லை, மருமகள் தாலி அறுத்தாக வேண்டும் என்பது போன்ற எண்ணத்தின் அடிப்படையிலானது.

          ஒருவேளை இவர்கள் விரும்பும் வகையில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அது எப்படி இருக்கும்?

          கம்முநிசம் விரும்பும் மாற்றம் வந்து விட்டால் இங்கே மத உணர்வுகள் கொள்கைகள் கோட்பாடுகள் குப்பை தொட்டிக்கு போய்விடும்..ரஷ்யா, சீனா மற்றும் கியூபா போன்ற உதாரணங்கள் உண்டு..

          மாறாக, ஹிந்துத்துவம் இல்லாத மாற்று மத சக்திகள் விரும்பும் மாற்றம் வந்து விடும் பட்சத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் கம்முநிசத்தின் நிலையை நாம் உதாரணமாக சொல்லலாம்..

          இறுதியில் இந்த இரண்டு சக்திகளும் ஒன்றை ஒன்று அழிக்க முற்படும். விளைவு இப்போதிருப்பதை விட பன்மடங்கு மோசமானதாக இருக்கும்..

          ஆனால், அதிர்ஷடவசமாக இந்த இரண்டுமே இங்கே நடக்க போவதில்லை..

          ஆக இந்தியாவிற்கு உகந்தது இப்போதிருக்கும் மதசார்பற்ற நிலையே.

          வேண்டுமானால் இங்கே ஒரு புரட்சி வரலாம். ஆனால் அது ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக இருக்குமே ஒழிய இவர்கள் விரும்புவது போல் அமையாது.. அப்போது ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது பங்களிப்பை, கடமையை பதிவு செய்யும் பட்சத்தில் இந்த தேசத்தின் எதிர்காலமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு விடும்..


          மாக்ஸிமம்

          • \\
            வேண்டுமானால் இங்கே ஒரு புரட்சி வரலாம். ஆனால் அது ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக இருக்குமே ஒழிய இவர்கள் விரும்புவது போல் அமையாது
            \\

            நீங்கள் இந்து ஊடகங்களால் திசைதிருப்பப் பட்டிருகிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. ஊழல் செய்பவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்டுத்தப்பட்ட மக்கள் செய்வது. ‘கோட்டா’ மூலம் வந்தவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட கேவலமான வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று மேல்சாதிக்காரர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பும் கட்டுக்கதை. இதன் அடியில் அவர்கள் கொள்கையான ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்தல்’ என்பது உள்ளது.

            அடுத்து பயங்கரவாதம். முசுலிம்கள் பயங்கரவாதிகள் இவர்கள் பெருவெற்றி பெற்று விட்டார்கள். அதற்கு இவர்களது தீர்வு முசுலிம்களை நாடு கடத்துதல், அல்லது கொன்றொழித்தல். இந்த புரட்சியா நீங்கள் எதிர்பார்ப்பது? என்று பரப்புவதில்

            • தோழர் நான் கடவுள் இல்லை,

              இந்து ஊடகம் என்ற ஒன்று இங்கே இல்லவே இல்லை. தினமணி, தினமலர், தி ஹிந்து (பெயரில் மட்டும்) போன்ற ஒருசில பிராந்திய சிறு பத்திரிக்கைகள் மட்டுமே உண்டு. மற்றபடி உங்களுக்கு சந்தேகம் இருப்பின் சோழன் என்பவர் மேலே தந்திருக்கும் இணைப்புகளுக்கு சென்று பார்க்கவும்.

              http://intellibriefs.blogspot.com/2007/09/what-is-media-and-who-owns-media-in.html

              http://media-critics.blogspot.com/2011/04/know-your-media-personalities.html

              அடுத்து நீங்கள் சொல்லிருக்கும் கருத்துக்கள் எனது கருத்துக்கு சம்பந்தமே இல்லாதது.

              “ஆக இந்தியாவிற்கு உகந்தது இப்போதிருக்கும் மதசார்பற்ற நிலையே.
              வேண்டுமானால் இங்கே ஒரு புரட்சி வரலாம். ஆனால் அது ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக இருக்குமே ஒழிய இவர்கள் விரும்புவது போல் அமையாது.. அப்போது ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது பங்களிப்பை, கடமையை பதிவு செய்யும் பட்சத்தில் இந்த தேசத்தின் எதிர்காலமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு விடும்..”

              நான் கூறிய மேற்கண்ட வரிகளில் எங்கே குறிப்பிட்ட இனமும் மதமும் வந்த தென்று தெரியவில்லை.
              ஊழல் மற்றும் பயங்கரவாதம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் , இனத்தவர் மட்டுமே செய்வதன்று. பண ஆசை யாரையும் நிறம் பார்க்கவில்லை. மதவெறி யாரையும் இனம் பார்க்கவில்லை..

              மாக்ஸிமம்

              • நீங்கள் ஒரு சாதியைப் பற்றியோ ஒரு மதத்தவர்களைப் பற்றியோ குறிப்பிட்டதாக நான் கூறவில்லை. உங்களை அப்படி எண்ணுபவராக நான் கருத வில்லை.
                பெரும்பாலான மக்களின் எண்ணவோட்டம் மேற்கூறியவாறுதான் உள்ளது. இதற்கு நமது பத்திரிக்கைகளே பெரும்பணியற்றியுள்ளன. இந்த நச்சுப் பிரச்சாரம் சிறிதளவேனும் நமது மனதில் இல்லாமல் போகாது. அதையேதான் கூறியுள்ளேன். பணத்தாசை இன்றும் அனைத்து மக்களையும் பீடித்திருக்கிறது. காரணம் அதிகமாக பணம் பெருக்க வேண்டுமென்ற வெறி. தூண்டியது முதலாளித்துவம். லஞ்சம், ஊழல் ஆகியன மனந்திரிந்த அனைவரும் செய்கிறார்களாயினும் அதிக அதிகாரத்திலுள்ளவன் மெத்தப்படித்த மேதாவி பெரிய அளவில் செய்கிறான். அதை மூடி மறைக்க தன்னில் சிறிதளவாய் தவறு செய்யும் தனக்கு கீழுள்ளாவர்களை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறான்.
                இது எங்கும் நடைமுறையிலுள்ளது. நாம் பணிபுரியும் இடங்களிலும் இந்த பெரும்பான்மை போக்கை பார்க்கலாம். இடஒதுக்கீட்டில் வந்தவர்களை குறிவைத்து பரப்பப்படும் நச்சுப் பிரச்சாரம் இது.

                அடுத்து பயங்கரவாதம். பயங்கரவாதிகள் முசுலிம்கள், முசுலிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் இல்லையாயினும் அனைத்து பயங்கரவாதிகளும் முசுலிம்களே, பெரும்பான்மை முசுலிம்கள் பயங்கரவாதத்தை ஒத்துக்கொள்ளாவில்லையாயினும் சகித்துக் கொள்ளுகிறவர்களே. பிராமண பத்திரிக்கைகள் பரப்பியுள்ள, பரப்பிக்கொண்டு இருக்கும் அடுத்த நச்சுப் பிரச்சாரம். சான்றுகளை இடதுபக்கத்தில் வினவில் பல சுட்டிகளில் காணலாம்.

                இங்கு பெரிய பயங்கரவாதிகள் காவிப்படையினரே.நாஜிக்களுக்கும் இவர்களுக்கும் பெரும் ஒற்றுமை உள்ளது. இன்றும் நாஜிக்களின் மூளைச்சலவையான தேசிய இனவெறிக் கொள்கைதான் இவர்களது பாணி. கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு இந்த நஞ்சை புகட்டி வருகிறார்கள். ஊழலையும் பயங்கரவாதத்தையும் பற்றிய இந்த பொய் பிரச்சாரத்தை நம்பி விடாதீர்கள். இதைத்தான் நான் கூற வந்தது.

                • Maximum kodutha linkkukku neenga badhil sollave illaye?? adha vittuty vinavu padum pallaviya thaana neenga padureenga…
                  Arnab Goswami- Born in a opressed community
                  Barkha Dutt- Whole world knows

            • ‘கோட்டா’ மூலம் வந்தவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட கேவலமான வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று மேல்சாதிக்காரர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பும் கட்டுக்கதை. இதன் அடியில் அவர்கள் கொள்கையான ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்தல்’ என்பது உள்ளது.

              APpo thiruttu Raaja oozhal pannave illangareengal?? Judgeye merattikiraaru andha aalu ella proofum irukku.. idhayum Jaadhiya vechu paartheenganna una veruppu thaan theriyudhu
              enna koduma saravanan!!!

  8. காது காதுன்னு சொன்னா சிலபேருக்கு கேது கேதுன்னே காதுல விழும். மாக்ஸிமம், பையா போன்றவர்கள் அக்கேட்டகிரியைச் சேர்ந்தவர்கள். அவுங்களா எதையாவது கற்பனை செய்து கொண்டு அதற்கு தமது அங்கலாய்ப்ப்புகளையு, பதிலையும் கூச்சமேயில்லாமல் கொட்டிச் செல்கிறார்கள் – ஆடு புளுக்கை போட்டது போல.

    • பார்யா! பார்யா! … பாகிஸ்தானை பத்தி சொன்னதும் என்னமா கோபம் வருதுன்னு!!!!

      • மேக்சி, நீ எங்கேய்யா பாகிஸ்தானை பத்தி எழுதுன? வினவைத்தானே திட்டிவச்ச?

        • எக்ஸ்ட்ரா லார்ஜ் ,

          நான் எங்கேய்யா உன்னை பத்தி எழுதினேன்? அகமதுவை பத்தி தானே எழுதினேன்?

          உனக்கும் அஹமதுக்கும் ஏதாவது “அக்கவுன்ட்” இருக்கா?

          மாக்ஸிமம்

          • பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது……

            “பாக்கும் கூட””???? என்னவோ பாகிஸ்தான் ஜனநாயகத் பேணி காப்பாத்துறநாடு மாதிரி பில்டப் கொடுக்கராங பாருங … இதுலெ தெரியுது இவர்கள் பாக் அனுதாபிகள் என்று….

  9. பாகிஸ்தான் என்ற பெயரைக் கேட்டதுமே வெறிபிடித்தவன் போல முகத்தைக் காட்டும் அத்வானி போன்ற கிழம்கள் ஹீனாவுடன் கைகுலுக்கும்போது மட்டுமல்லாமல், சும்மா பக்கத்தில் நிற்கும்போது கூட இளித்துக் கொண்டு ஜொள்ளு வடிப்பதை என்னவென்று சொல்ல?

    இந்தியாவின் கிழட்டு அரசியல்வாதிகளின் இளமையைக் கவர்ந்ததில் ஹீனாவின் பங்கு ரொம்பவே அதிகம்தான்.

    • உண்மை தோழன் என்று பெயரை வைத்து கொண்டு ஏன் பொய் பேசுகிறீர்கள். திரு அத்வானி அவர்கள் அப்பொழுது அவர்களுக்கு கை கொடுத்தார்கள். எந்த வெளி நாட்டு அரசியல் வாதிகள் வந்தாலும் அவர்கள் இன் முகத்தோடு வர வேற்பது தான் காலம் காலமாக எல்ல நாட்டிலும் நடக்கும் விசயம். உலக கிறித்துவ தீவிரவாதிகளின் தலைவரும் அமெரிக்காவின் ஏஜெண்டுமான போப் வந்த பொழுது கூட அத்வானி சிரித்த முகத்துடன் தான் வரவேற்றார்.

      இதே அதவானி ஆட்சியில் இருக்கும் பொழுது தான் லாகூர் உடன்பாடு ஏற்பட்டது. அப்பொழுது எல்லாம் என்ன கபோதியாகவா இருந்தீர்கள்.

  10. மேக்சி, வினவு கூடத்தான் உன்னைப்பத்தி எழுதல, நீ டென்சனாகி வினவை திட்டலயா? என்னையா இது விவாதம்

  11. மதிற்பிற்குரிய வினவு அவர்களுக்கு,
    வணக்கம் , மிகவும் அருமையான அதே சமயம் உண்மையான பதிவு
    இந்த பதிவில் மிகவும் முக்கியமான பதிவு என்னைப்போன்ற அணைத்து நண்பர்களும் உணர்ந்து இருப்பார்கள், அதாவது
    “பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.”
    மிக மிக மிக மிக மிகச் சரி…….இனியும் விழித்துக்கொள்ளுமா நம் இந்திய அரசு !!!????? ….

  12. We need to understand two things ,one media participation on this event news , Seccond we need to understand how long top politician going to use this weapon (pak – india meeting) to fool people.

  13. கட்டுரை மிக அழகான கிண்டல். பாகிஸ்தான் அமைச்சரிடம் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் பாகிஸ்தான் அவ்வளவு அக்கறை காட்டவில்லையே என்ற கேள்விக்கு இந்தியாவில் நடந்த சம்ஜஹுததா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பில் இந்தியா காட்டும் வேகத்தை விட மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முன்னேற்றம் உள்ளதாக தெரிவித்தார்.

  14. பாஸ் நீங்க எல்லாம் தெரிஞ்சுட்டு பேசறீங்களா இல்ல ஒண்ணுமே தெரியாம பேசறீங்களா?

    ““பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.”

    யோவ் ஒரு ஒன்ஆங்கிலாஸ் பையனுக்கு கூட இத விட ஒரு நல்ல புரிதல் இருக்கும்.

    செம காமெடி .. நாலு கம்யூனிஸ்ட் இருக்கபவே இப்டி காமெடி பண்றீங்க…. நாடே உங்க கைக்கு வந்தா??????? ரொம்ப பயம் ஆகிடுச்சு சாரே

  15. வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நஹி! பாக் ஹீனா கி ஜெய்!
    இந்துத்துவத்தை எதிர்க்கும் மாற்று மத சகோதரர்களும், இந்தியாவின் அரசியலமைப்பையும் பண்பாட்டையும் எதிர்க்கும் வினவு வகை தோழர்களும் இணைத்திருக்கும் புள்ளி கொள்கை முடிவால் ஏற்பட்டது அல்ல. மாறாக தன் மகன் செத்தாலும் பரவா இல்லை, மருமகள் தாலி அறுத்தாக வேண்டும் என்பது போன்ற எண்ணத்தின் அடிப்படையிலானது.

    ஒருவேளை இவர்கள் விரும்பும் வகையில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அது எப்படி இருக்கும்?

    கம்முநிசம் விரும்பும் மாற்றம் வந்து விட்டால் இங்கே மத உணர்வுகள் கொள்கைகள் கோட்பாடுகள் குப்பை தொட்டிக்கு போய்விடும்..ரஷ்யா, சீனா மற்றும் கியூபா போன்ற உதாரணங்கள் உண்டு..

    மாறாக, ஹிந்துத்துவம் இல்லாத மாற்று மத சக்திகள் விரும்பும் மாற்றம் வந்து விடும் பட்சத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் கம்முநிசத்தின் நிலையை நாம் உதாரணமாக சொல்லலாம்..

    இறுதியில் இந்த இரண்டு சக்திகளும் ஒன்றை ஒன்று அழிக்க முற்படும். விளைவு இப்போதிருப்பதை விட பன்மடங்கு மோசமானதாக இருக்கும்..

    ஆனால், அதிர்ஷடவசமாக இந்த இரண்டுமே இங்கே நடக்க போவதில்லை..

    ஆக இந்தியாவிற்கு உகந்தது இப்போதிருக்கும் மதசார்பற்ற நிலையே.

    வேண்டுமானால் இங்கே ஒரு புரட்சி வரலாம். ஆனால் அது ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக இருக்குமே ஒழிய இவர்கள் விரும்புவது போல் அமையாது.. அப்போது ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது பங்களிப்பை, கடமையை பதிவு செய்யும் பட்சத்தில் இந்த தேசத்தின் எதிர்காலமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு விடும்..

Leave a Reply to சீனு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க