Saturday, May 25, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா – ஆணவம் – ஆப்பு!

அம்மா – ஆணவம் – ஆப்பு!

-

சமச்சீர் கல்வி - அம்மா – ஆணவம் – ஆப்பு!

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அம்மாவின் ஆணவத்தின் மீது இறங்கியிருக்கும் ஒரு ஆப்பு!

தீர்ப்பை ஒட்டி இன்று இரவு போயஸ் தோட்டத்தில் நிச்சயமாக விசேட பூஜை நடைபெறும். அவ்வமயம், அம்மாவின் திருக்கரங்களால் அடித்து நொறுக்கப்பட்டு அன்னாரது திருவடியிலேயே உயிரை விட இருக்கின்ற ஜடப்பொருட்கள் எவையெவை,  அம்மையாரின் பாதத்துகள் படிந்த காலணிகளால் முத்தமிடப்படும் பாக்கியம் பெற்ற முகங்கள் யாருடையவை என்பதை நாம் அறியோம். ஸ்பெசல் பூஜை உண்டு என்பது மட்டும் உறுதி.

ஒரு அரசாங்கம் ஏதோவொரு வழக்கில் தோற்பதென்பது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. இந்த வழக்கு பெற்றுவிட்ட முக்கியத்துவத்துக்கு காரணம் இருக்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற வழக்கு என்ற காரணத்தினால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதில் நியாயம் இருக்கிறது.

மாறாக இந்த வழக்கு பெற்ற முக்கியத்துவத்துக்கு முதற்காரணம் அம்மாவின் ஆணவம். வெறும் ஆணவமல்ல. அம்மாவின் பின்னே அணிவகுத்து நிற்கும் பார்ப்பன மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டத்தின் கொழுப்பில் தோய்ந்த ஆணவம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் சமச்சீர் கல்வியைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்த ஜெ, நாற்காலியில் உட்கார்ந்த மறுகணமே அமைச்சரவையில் ஒரு முடிவை எடுப்பதும், சட்டப்பேரவையில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருவதும் எப்படி சாத்தியமானது?

“நம்மளவா ஆட்சி வந்துடுத்துன்னா அப்புறம் பாத்துக்கலாம்” என்று காத்திருந்த பார்ப்பன மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டமும், அம்மாவின் மறுவருகைக்குக் காத்திருந்த அதிகார வர்க்கமும் காட்டிய சுறுசுறுப்புதான் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்புலம்.

எது நல்லது எது கெட்டது என்பது பற்றி வாய்திறந்து பேசி விவாதிக்கும் தேவையே இல்லாமல், பார்த்த மாத்திரத்தில் சுருதி சேர்ந்து கொள்ளும் அளவுக்கு அம்மாவுக்கும் அவாளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் ஒரு இசைவு இருக்கிறது.

சமச்சீர் கல்வி என்பது ஒரு குப்பைத்தொட்டி என்றும், இந்தக் குப்பைத் தொட்டியில் விழுந்து பன்றியோடு பன்றியாக நம்முடைய “கன்றுக்குட்டிகளும்” வீணாகப் போய்விடும் என்றும் அட்வகேட் என்.ஆர். சந்திரனும் சோ ராமஸ்வாமியும் டி.ஏ.வி ஸ்கூல் ஃபங்ஷனில் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று மிசஸ் ஒய்.ஜி.பி அம்முவிடம் (அம்மாவிடம்) சொல்லியிருப்பார். முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து செல்ல வந்த மெட்ரிக் பள்ளி அசோசியேஷன் பிரமுகர்களும் லேசாக கண்ணீர் விட்டு மூக்கை சிந்தியிருப்பார்கள். “ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் “தமிழர்களின்” பங்கு குறைந்து கொண்டே வருவது பற்றிய தங்களது கவலையை துவிவேதி, திரிவேதி, சதுர்வேதி முதலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அம்மாவின் காதில் போட்டிருப்பார்கள். அப்புறம் பாடப்புத்தகங்களின் பின் அட்டையில் கருணாநிதியின் கையெழுத்தில் திருக்குறள் அச்சிடப்பட்டிருப்பதை அக்காவின் கவனத்துக்கு கொண்டுவந்திருப்பார் அன்புச் சகோதரி. அம்மா முடிவெடுப்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரங்கள் வேண்டும்?

தனக்குப் புரிந்த மேற்கூறிய காரணங்களை நீதிபதிகளும் புரிந்துகொள்வார்கள் என்று அம்மா எதிர்பார்த்திருக்கிறார். அது நடக்கவில்லை. நீதிபதிகளை நமது எம்ஜிஆரில் கட்டம் கட்டி நீக்குவதற்கான வாய்ப்பும் இல்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுமார் இரண்டரை மாதகாலம் நீதிமன்றத்திற்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரே தொட்டியில் அம்மா தண்ணி காட்டியிருக்கிறார்.

இனி நடக்கப்போவது என்ன? “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அமல்படுத்துவோம்” என்று நேற்று சட்டமன்றத்தில் அம்மா அறிவித்த போது அவையில் மயான அமைதி. இரண்டரை மாதங்களுக்குப் பிறகாவது பாடப்புத்தகம் என்ற ஒன்றை பிள்ளைகளின் கண்ணில் அரசு காட்டவிருப்பதால், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலாவது யாராவது ஒரு உறுப்பினர் மேசையைத் தட்டியிருக்கலாம். வலது,இடது போலிகள் உள்ளிட்ட யாரும் தவறிக்கூட மேசையைத் தட்டவில்லை.

காரணம் அம்மா தோற்றிருக்கிறார். அம்மா குமுறிக் கொண்டிருக்கிறார். கடந்த மே மாதம் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயித்தாரே அதே அம்மாதான், இப்போது தோற்றிருக்கிறார். தோற்கடித்தவர்களும் அதே மக்கள்தான்.

எனினும் இரண்டாவது சுற்று விரைவிலேயே துவங்கும். அம்மாதான் துவக்குவார். நாம்தான் முடித்து வைக்க வேண்டும்.

 1. சமச்சீர் கல்விக்கு ஆதரவாக களமிறங்கி போராடியவர்களின் பணி இன்னும் முடியவில்லை.நடைமுறைப் படுத்தும்போது என்ன கூத்து நடக்கப்போகுதோ…. அவாளுக்கே வெளிச்சம். களத்தில் நின்று போராடிய அமைப்புகளுக்கு நன்றி….

 2. வினவு தோழர்களுக்கு,

  அழுத்தம்திருத்தமாக எழுதப்பட்ட இடுகை. என்ன நடந்தது என்பதையும், இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக இடுகை பட்டியலிட்டிருக்கிறது.

  ‘அம்மா’வுக்கு இப்படி ஆப்பு வைப்பதற்காக இறுதி வரை களத்தில் நின்றதுடன், பெற்றோர், பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரச்னையை புரிய வைத்து அவர்களை அணி திரட்டி, இந்த மக்கள் திரளுக்கு தலைமையேற்று போராடிய ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’, ‘மனித உரிமை பாதுகாப்பு மையம்’, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி’, ‘மக்கள் கலை இலக்கிய கழகம்’, ‘பெண்கள் விடுதலை முன்னணி’ ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகள்…

  இந்த மக்கள் திரள் போராட்டம் அழுத்தம்திருத்தமாக ஒர் உண்மையை உணர்த்தியிருக்கிறது. அதுவும் இயங்கியலின் அரிச்சுவடி கற்றுத் தந்திருக்கும் பொத்தாம் பொதுவான உண்மை என்று எதுவுமில்லை… உண்மை எப்போதும் திட்டவட்டமானது என்பதை.

  பேராசான்களின் நூல்களை படித்து, மனப்பாடம் செய்து ஒப்பிப்பதால் மட்டுமே ஒருவரால் அல்லது ஒரு குழுவால் புரட்சிகர சக்தியாக மாறி விட முடியாது. மார்க்சியம் என்பது திட்டவட்டமான உண்மைகளை கண்டறிவதற்கான வழிகாட்டி. காலத்துக்கு ஏற்ப அதைப் பொருத்திப் பார்ப்பதே ஒரு புரட்சிகர சக்தியின் பணி. பொதுமையான வாய்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டு அவற்றை சமய சந்தர்ப்பம் இன்றி அமல்படுத்துவது வறட்டுவாதம்.

  இதை இங்கே குறிப்பிட காரணமிருக்கிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி நடைபெற்ற இந்த மக்கள் திரள் போராட்டத்தை சீர்திருத்தவாதம் என்று தங்களை புரட்சிகர சக்தியாக, குழுவாக, கருதிக் கொள்ளும் சிலர் தவறாகவும், கொச்சையாகவும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

  ஆனால், கார்ப்பரேட் கல்விக் கொள்ளையர்களை அடித்து நொறுக்க வேண்டுமானால் நிலவும் சமூக அமைப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்பதை ஒரே இலக்காகக் கொண்டு போராடி வரும் ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’, ‘மனித உரிமை பாதுகாப்பு மையம்’, ‘புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி’, ‘மக்கள் கலை இலக்கிய கழகம்’, ‘பெண்கள் விடுதலை முன்னணி’ ஆகிய அமைப்பை சேர்ந்த தோழர்கள், அந்த இலக்கை நோக்கிய பயணத்தின் இடைக்கட்டமாகவே இந்த சமச்சீர் கல்வியை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே புரிந்துக் கொள்ள தவறுகிறார்கள்.

  ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற தனது புகழ்பெற்ற நூலில் இதுபோன்ற வறட்டு – பொருளாதாரவாத – கொச்சை மார்க்சியவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் லெனின். இந்நூலில் உள்ள ‘தொழிற்சங்க அரசியலும் சமூக – ஜனநாயக அரசியலும்’ என்னும் அத்தியாயத்தில் இதுகுறித்து மார்க்சிய கண்ணோட்டத்துடன் விரிவாக விளக்கியிருக்கிறார். அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  ”புரட்சிகர சமூக – ஜனநாயகமானது சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தைத் தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகச் சேர்த்துள்ளது. ஆனால், ‘பொருளாதார’ போராட்டம் என்பதை அரசாங்கத்திடம் அனைத்து விதமான கோரிக்கைகளை முன்வைப்பதற்காக மட்டுமல்லாது, இதுவொரு யதேச்சதிகாரமான அரசாங்கமாக இருக்கக் கூடாது எனக் கோருவதற்காகவும் பயன்படுத்துகிறது. மேலும் இந்தக் கோரிக்கையை பொருளாதாரப் போராட்டத்தின் அடிப்படையாக மட்டுமல்லாது, பொது மக்கள் மற்றும் அரசியல் வாழ்வில் எழுகிற அனைத்து வெளிப்பாடுகளின் அடிப்படையிலும் முன் வைப்பதைத் தனது கடமை என்று கருதுகிறது. தொகுத்துச் சொன்னால், சீர்த்திருத்தங்களுக்கான போராட்டத்தை சுதந்திரம் மற்றும் சோசலிசத்துக்கான புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளடக்குகிறது…”

  நிலவும் முதலாளித்துவ அரசை எதிர்க்கும் போராட்டம், அரசியல் வாழ்வில் எழும் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் எதிரானதாக இருக்க வேண்டும் என்பதை மிகக் கச்சிதமான வார்த்தைகளுடன் வடித்தெடுக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல், புரட்சிகர மார்க்சிய இயக்கங்களுக்கு என்றும் பொருந்தக் கூடியவை.

  அதிகாரத்தை வெல்வதற்கான போராட்டத்தில் பாட்டாளிகள் கையில் அமைப்பு என்பதைத் தவிர வேறு ஆயுதம் எதுவுமில்லை என்பதை அமைப்புத் தோழர்களின் இந்த மக்கள்திரள் போராட்டம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்த இடைக்கட்டத்தை கடந்து, இறுதி இலக்கை அடைவதற்கான பயணம் தொடரட்டும். தொடர்வோம்.

  களத்தில் இறுதி வரை நின்ற அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  • //மக்கள் திரள் போராட்டத்தை சீர்திருத்தவாதம் என்று தங்களை புரட்சிகர சக்தியாக, குழுவாக, கருதிக் கொள்ளும் சிலர் தவறாகவும், கொச்சையாகவும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்/ தோழர், அந்த சிலர் யாரென்று அல்லது எந்த குழுக்கள் என்று தயவு செய்து கூறமுடியுமா? நன்றி

  • சமசீர் விசியத்தில் வெற்றி பெற்றதெல்லாம் சரிதான். வாழ்த்துக்கள்.

   ஆனால் தோழர் பைத்தியகாரன்,

   //இறுதி இலக்கை அடைவதற்கான பயணம் தொடரட்டும். தொடர்வோம்.///

   இந்த ‘இறுது இலக்கை’ அடைந்தபின், பாட்டாளி வர்க சர்வாதிகாரம் அமைந்தால், உங்களையும் ஒரு ‘தோழர்’ பூஸ்வா அடிவருடி என்று ‘ஆதாரபூர்வமாக’ குற்றம் சாட்டி, உள்ளே தள்ளப்படும் அபாயம் நிறைய உள்ளது. எனெனில் இப்ப நீங்க பார்த்து வரும் வேலை அப்படி. எதுக்கும் பாத்து இருங்க தோழர்.

   1966இல் சீன்வால் மாவோ உருவாக்கிய கலாச்சார புரட்சி போல் இங்கும் அப்ப உருவானால் உங்களை போன்றவர்களின் கதி என்னவாகும் ? (என்னை போன்றவர்கள் புரட்சியின் போது despatch செய்யபடுவர் என்பதே வேறு விசியம் !!). இவைகள் கட்டுகதைகள் என்போர் இந்த கட்டுரையை பார்க்கவும் :

   ’ஆசிரியர்களை அடித்து கொன்ற மாணவமனிகள்’
   http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/article2332248.ece

   (வினவு மற்றும் நண்பர் சித்திர குப்தன் : இந்து பத்திரிக்கையில் இருந்து பல கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியிடும் நீங்கள் மேற்கொண்ட கட்டுரையை மொழியாக்கம் செய்து வெளியிடுங்களேன், பார்க்கலாம்)

   • ம்ம்ம்ம், இப்படித்தான் அண்ணன் அதியமான் வருசக்கணக்கா தியானமென் சதுக்க படுகொலைகள்ன்னு சொல்லிகிட்டிருந்தாரு… அப்புற்ம் கொஞ்சா நாள் மிந்தி விக்கிலீக்சு அங்க ஒரு கொசுவைக்கூட கொல்லவில்லை, படுகொலையின்னு சொன்னதெல்லாம் அமெரிக்காவோட புளுகு வேலைன்னு போட்டு ஒடச்சப்புறம் கம்ம்ம்ம்ம்முனு இருக்காரு..

    பாக்கலாம் இந்த பொய் எப்போ அம்பலமாவப்போவுதோ………

    @@@@என்னை போன்றவர்கள் புரட்சியின் போது despatch செய்யபடுவர் என்பதே வேறு விசியம் !@@@@

    பாஸ் நீங்களா எத்தனை தடவ ஜீப்புல ஏறினாலும், நாங்க உங்களை ரவுடின்னு நம்பவே மாட்டோம்…..

    • //அப்புற்ம் கொஞ்சா நாள் மிந்தி விக்கிலீக்சு அங்க ஒரு கொசுவைக்கூட கொல்லவில்லை, படுகொலையின்னு சொன்னதெல்லாம் அமெரிக்காவோட புளுகு வேலைன்னு போட்டு ஒடச்சப்புறம் கம்ம்ம்ம்ம்முனு இருக்காரு..//

     இல்லை, நான் டியாமின் ‘புரட்சி’ பற்றி இங்கு பேசியதே இல்லை. 1989இல் சீனா மாவோவின் செஞ்சீனாவாக இருக்கவில்லை. 1959இல் மாவோ உருவாக்கிய great leap forwardஇல் ஏற்பட்ட கடும் விளைவுகள், 1966இல் அதை ‘சமாளிக்க’ உருவாக்கிய ‘கலாச்சார புரட்சி’ பற்றி தான் பேசியிருக்கிறேன்.

     எவை ‘பொய்கள்’ என்று வாசகர்கள் தீர்மானித்து கொள்ளட்டுமே. முதல்ல அந்த இந்து நாளிதழ் கட்டுரையை முழுசா படித்துவிட்டு, அதில் பேட்டி அளித்த மக்கள் ‘பொய்’ சொல்கிறார்களா என்பதை ’பகுத்தறிவு’ கொண்டு அலச முயல்க !!

 3. அருமையான கட்டுரை …

  நீதிமன்ற தீர்ப்பை விட அம்முவுக்கு இதைப் படித்தால் தான் அதிகமாக வெறி ஏறும்.

  எங்கய்யா போனாரு ஓ.ப ?.. இன்சுரன்சு இருக்கா ஓ.ப ?..

 4. //எனினும் இரண்டாவது சுற்று விரைவிலேயே துவங்கும். அம்மாதான் துவக்குவார். நாம்தான் முடித்து வைக்க வேண்டும்.//

 5. //அம்மாவின் பின்னே அணிவகுத்து நிற்கும் பார்ப்பன மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டத்தின் கொழுப்பில் தோய்ந்த ஆணவம்//
  நீங்க சொல்வதெல்லாம் நியாயம் தான் , ஆனா பார்ப்பன மக்கள் பள்ளிகள் மட்டும் தான் அநியாமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள் என்பது மிகவும் கீழ்த்தரமான விமர்சனம், கடவுள் இல்லை என்றால் எந்த கடவுளும் இல்லை , சாதி இல்லை என்றால் எந்த சாதியையும் இல்லை ( நான் பார்பனனுக்கு வக்காலத்து வாங்குவது போல் நினைக்காதீர் – நான் அந்த சாதியையும் அல்ல), கிருத்துவ அமைப்புகளால் கொள்ளை அடிக்கப்பெற்று வரும் பல நூறு பள்ளிகளை பட்டியலிடலாம்.

  கல்வி சம்பந்தப்பட்ட மிகவும் சென்சிடிவெ இச்சுஎ இது , அரசியலாக்கவும் வேண்டாம் , ஜாதி, மத பேதனைகளையும் கொணர வேண்டாம் ..

  எங்கள மனுசனா விடுங்கப்பா

 6. 1வது மற்றும் 6வது வகுப்பிற்கு பாட புத்தங்களை வழங்க வேண்டும் கடந்த முறை உச்ச நீதி மன்றம்… உத்தரவிட்ட பிறகும் வழங்காத தமிழக அரசு மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு போட்டு… உச்ச நீதி மன்ற நீதிபதிகளால் ஜெயலலிதா அரசை செருப்பாலும், விளக்கமாத்தாலும் அடித்திருக்க வேண்டும்…

  பார்ப்பன கல்வி கசாப்பு கடைகாரர்கள் வொய்ஜிபி, விஜயலஷ்மி, டிஏவி தேவ் போன்றவர்கள் அறிக்கை கொடுத்த பின்னர்… அந்த அறிக்கையை கொண்டே மக்களை ஏமாற்றி விட நினைத்தை ஜெயலலிதா அரசை விட கேடு கெட்ட ஜென்மம் ஒன்று தமிழ் நாட்டில் உள்ளது… அது பொறுக்கி வக்கில் விஜயன்… இந்த மாயவரம் மேல் சாதி சைவ பிள்ளை சாதி வக்கில்… தரமில்லாத சமச்சீர் பாடத்தை ஒழிக்கும் போதே… ஏற்கெனவே உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட 1வது மற்றும் 6வது பாடத்திற்கான சமச்சீர் பாடத்தை ஒழிக்க வேண்டும் என பொறுக்கி விஜயன்… கேப்பில் கிடா வெட்டினான்… இவனை இதே போன்ற கல்வி சமூக நீதி பிரச்சனையில் 1993இல் ஜெயலலிதாவின் ஆசியுடன்… எஸ்.டி.சோமசுந்தரம் வழிகாட்டுதலில்… ஆதி.ராஜாராம், வெல்டிங் குமார் போன்றவர்கள்… வீடு புகுந்து அடித்த போது அழுத… மேல் சாதி வெறி பிடித்த விஜயன்… இப்போதும் அதே மேல் சாதி வெறியுடன்… பார்ப்பன மற்றும் கல்வி கசாப்பு கூட்டத்திற்காக மக்களுக்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் களமிறங்கி இருந்தான்…

 7. நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.. இப்படை (வினவு) தோற்கின் எப்படை வெல்லும்.. கொண்டு வந்த தி மு க, மூடி கொண்டு இருக்க, நல்லதொரு தீர்ப்பை கொண்டு வந்த வினவிர்ற்கு வாழ்த்துகள்

 8. தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ……நவீன பார்பனீயத்தை வளர விடாமல் . அணைத்து மக்களுக்கும்
  கல்வி கிடைக்க உதவிய வினவிற்கு வாழ்த்துக்கள்

 9. சமச்சீர் கல்வி வழக்கு: வெற்றி! வெற்றி!!
  களத்திலும் தளத்திலும் போராடியத் தோழர்களுக்கு வாழ்த்துகள்.

 10. //எனினும் இரண்டாவது சுற்று விரைவிலேயே துவங்கும். அம்மாதான் துவக்குவார். நாம்தான் முடித்து வைக்க வேண்டும்.//
  அம்மா துவக்கும் வரை காத்திருக்க வேண்டுமா ?

 11. இன்று இஞ்சி தின்ற குரங்குக்கு நிச்சயம் பயித்தியம் பிடித்திருக்கும். அதன் புண்ணில் உப்பை அள்ளித் தடவியிருக்கிறீர்கள் இந்த கட்டுரை மூலம். பாப்பாத்தி அழுது துடிக்கிறாள். வேடிக்கை வேடிக்கை. வினவு தோழர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துக்கள்.

 12. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு சல்யூட்.ஆனாலும் இந்த கல்விவியாபார,பூணூல்,பாசிச தீய சக்தி கூட்டம், வேறு வகைகளில் தன் ’வேலை’யை காட்டக்கூடும்.விழிப்புடன் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

 13. பிரதானமான கட்சியான தி.மு.க முழுதுமாக ஒதுங்கிகொண்ட நிலையிலும் பல்வேறு அமைப்புகளூடன் களத்திலும் நீதிமன்ற்த்திலும் சிறப்பாக போராடிய தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் தந்திரங்களும் கவனத்துடன் முறியடிக்கப்பட வேண்டும்

 14. வினவு,
  சமச்சீர் கல்வி புரட்சியில் வுனது பங்கு சிறப்பானது.கொள்கையில்லாத கும்பலுக்கு தமிழர்கள் விலைப்போவதைநிறுத்தினால் தான் ,புரட்சிகர மார்க்சிய இயக்கங்களுக்கு வுன்மையான பணீயாக கருதமுடியும்.

  மெய்தேடி.

 15. சமச்சீர் கல்வி வழக்கு: வெற்றி! வெற்றி!!
  களத்திலும் தளத்திலும் போராடியத் தோழர்களுக்கு வாழ்த்துகள்.

 16. மக்கள் அரங்கிலும்,சட்ட அரங்கிலும் போராடிய மனித உரிமை பாதுகாப்பு

  மையம்,ம.க.இ.க, பு.மா.இ.மு,வி.வி.மு,பெ.வி.மு மற்றும் மாணவர் கல்வி

  உரிமைக்கான பெற்றோர் சங்கம் ஆகிய அமைப்புக்களுக்கு வாழ்த்துக்கள்.

  சமச்சீர்கல்வி வெற்றி பெற அனைவரும் உழைக்கவேண்டும்.மேலும் இந்த

  போராட்டத்தில் ஆசிரிய சமூகம் ஏன் முன்முயற்சி எடுத்து கலந்து கொள்ளவில்லை என

  ஆராய வேண்டும்.அவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்திருந்தால் வெற்றி எபொழுதோ

  கிட்டியிருக்கும்.பாசிச “தீயசக்தி”யின் கொட்டம் விரைவில் அடக்கப்பட்டிருக்கும்.

  இரண்டவது சுற்று எப்போது துவங்கும்?? பதில் விரைவில்.

  • \ஆசிரியர் சமூகம் ஏன் முன்முயற்சி எடுத்து கலந்து கொள்ளவில்லை/
   எஷ்மா..டெஷ்மா…என்ற[ஜெயா]பூதம் கண் முன்னா………..ல்

 17. போராடிய தோழர்களுக்கும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்கள்.
  பு. மா. இ. மு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் வெற்றி விழா நடத்த வேண்டும்.

 18. அம்மையாரின் ஆட்சியில் அவரை எதிர்த்து பேசுவதும்,எழுதுவதும்.வழக்கு போடுவதும் போராடுவதும் ”வம்பை”விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் கூறலாம்.

  ”நம்மளவா” என்றாலும் இந்து நாளேட்டின் ஆசிரியர் குழாமை கைது செய்து சிறையில் அடைக்க விடாமல் விரட்டியது,சந்திரலேகாவை அமில அரிதாரம் பூசி அழகு படுத்தியது, சுப்ர.சாமி,வழக்கறிஞர் விசயன்,என்று அந்த பட்டியல் மிகவும் நீளமானது.

  ஆனாலும் அடக்குமுறைகளை எண்ணி அஞ்சாமல் நீதிமன்றத்திலும் களத்திலும் போராடி இந்த வெற்றியை சாதித்துள்ள மாணவர்களுக்கும்,தோழர்களுக்கும் பெற்றோருக்கும் கல்வியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 19. இந்த சமச்சீர் விவகாரம், வெறும் வாய்ச் சவடால் சீர்திருத்தம் என்பது, அந்த சமச்சீருக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூறுகிற கருத்துக்களிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

  சமச்சீர் வக்காலத்துக்கள் என்ன சொல்கின்றன? ‘வசதி உள்ளவர்கள் மட்டும், நல்ல தரமுள்ள கல்வியைப் பெறுவது; மற்றவர்கள் சாதாரண கல்வியைப் பெறுவது – என்கிற நிலை அநீதி அல்லவா?’

  அதாவது, ‘சில வழிமுறைகளில் (மெட்ரிகுலேஷன் போன்ற) தரமான கல்வி புகட்டப்படுகிறது’ என்பதை இவர்கள் ஏற்கிறார்கள். இப்படி வசதியுள்ளவர்கள் பெறுகிற கல்விக்கு நிகராக, வசதி அற்றவர்களுக்குக் கிட்டும் கல்வியையும் உயர்த்த வேண்டியதுதானே? அது முடியவில்லை. அதற்கு வக்கில்லை. ஆகையால், உயர்ந்தவற்றையும் தாழ்த்தி, சமச்சீர் கல்வி தருவதுதான் நியாயம் – என்பது இவர்கள் வாதம்.

  ‘சிலர் விமானத்தில் போகிறார்கள்; சிலர் கார்களில் போகிறார்கள்; சிலர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள்; ஆனால், பலர் நடந்து போகிறார்களே! ஐயோ, இந்த அநீதி தொடரலாமா? இனி ‘கால் நடை’தான் எல்லோருக்கும் சமச்சீர் போக்குவரத்து’ என்று சொல்வதா நியாயம்?

  இந்த சமச்சீர் வக்காலத்துகளுக்கு, வசதியிருப்பவர்களைப் பார்த்தால் துக்கம் பொங்கிக் கொண்டு வருகிறது. அந்தத் துக்கம் கல்வியுடன் மட்டும் நிற்பது என்ன நியாயம்? வசதியுள்ளவர்களின் பிள்ளைகள், நல்ல ஹோட்டல்களில் சாப்பிடுகிறபோது, வசதி அற்றவர்களின் பிள்ளைகள் டீக்கடைகளில் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரை’ சாப்பிடுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் வசதியான ஹோட்டல் சாப்பாடு தர முடியாது; ஆனால் சம நிலை வேண்டும்; ஆகையால் இனி எல்லோரும் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரைதான்’! சமச்சீர் சிற்றுண்டி!

  இந்தப் பித்துக்குளித்தனத்திற்கு ஒரு எல்லை உண்டா என்ன? சமச்சீர் கல்வி மட்டும்தான் இன்றைய அவசியத் தேவையா? சமச்சீர் சாப்பாடு – சமச்சீர் போக்குவரத்து… என்று கொண்டு வந்து, சமச்சீர் என்ற பெயரில் எதிலும் தரமே கூடாது என்று செய்து விட்டால், அதன் பின்னர் உயர்வு ஏது? தாழ்வு ஏது?

  இந்த சமச்சீர் சன்மார்க்கவாதிகளின் பார்வை, இப்போது அரசு அதிகாரிகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. ‘அதிகாரிகள், தங்கள் வீட்டுச் சிறுவர் சிறுமிகளை, அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். அவர்களே இதைச் செய்யவில்லை என்றால், அப்புறம் அரசுப் பள்ளிகளுக்கு என்ன மரியாதை?’ என்று ஒரு வாதம் புறப்பட்டிருக்கிறது. இத்துடன் விடுவானேன்? ‘அரசு அதிகாரிகள் காரிலோ, வேறு எந்த வாகனத்திலோ போகக்கூடாது; அவர்கள் அரசு பஸ்ஸில்தான் – மன்னிக்கவும் – அரசுப் பேருந்தில்தான் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால், அரசுப் பேருந்துகளை யார் மதிப்பார்கள்?’ என்று வாதம் புரிந்து, அரசு அதிகாரிகளை ஒரு அமுக்கு அமுக்க வேண்டியதுதானே!

  அதே மாதிரி, அந்த அதிகாரிகள் தங்கள் வீடுகளில் அல்லது ஃப்ளாட்களில் குடியிருக்கும் அக்கிரமத்தை நிறுத்த வேண்டும். பல பிள்ளைகள் குடிசைகளில் வாழ்கிறபோது, இந்த அரசு அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு வீடும், ஃப்ளாட்டும் வேண்டிக் கிடக்கிறதா? அட்டூழியம். குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில்தான் அவர்கள் இனி குடியிருக்க வேண்டும். அப்போதுதான் சமச்சீர் குடியிருப்பு உருவாகி, சமநீதி வேரூன்றி, சமத்தாழ்வு முழுமை அடையும்.by cho
  your answer?

  • எல்லா குழந்தைகளையும் தரமற்ற கல்விவை படிப்பது தான் சமசீர் கல்வியாம்.இவுரு எல்லா புக்கயும் படிச்சு பாத்துட்டாராம்.பத்தாவது வரை தரமான ஒரு பாடத்திட்டத்தை சொல்லித்தருகிறோம் என்று வசூலிக்கும் அதே மெட்ரிகுலேஷன் பள்ளிகள் +1 மற்றும் +2 வில் மட்டும் மாநில அரசு பாடத்திட்டத்தை தானே சொல்லி தருகிறார்கள் அது மட்டும் தரமானதா?.சிறந்த கல்வியாளர்கள் வடிவமைத்ததை மொட்டை சோ சொல்வதை கேட்டு குற்றம் சொல்லாதீங்க சார்.இனி எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தான்.le chatelier என்னும் ஒரு மிக காஸ்ட்லியான ஸ்கூல் நடத்துறார் சோ என்பதை அறியுங்கள்.

  • சோவுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்.

   பூணூல் இட்ட இந்த மலந்தின்னி சொல்லுவதன் உண்மை நோக்கம் அனைவரையும் ஏரோபிளேனில் செல்ல வைப்பதற்கல்ல. மாறாக நான் போகும் ஏரொபிளேனில் எல்லோரும்ம் போனால் எனக்கு என்ன மதிப்பு என்பதுதான். அடிப்படையில் இவன் போன்றோரின் கேள்விகளின் உள்ளே இருப்பது எல்லோரும் படித்தால் யார் மலம் அள்ளுவது என்பதுதான்.

   சமச்சீர் கல்வி என்பது ஒருவன் மட்டும் நூற்றுக்கு நூறு வாங்கும் முறையை மாற்றி அனைவரும் சுயமாக சிந்திக்கவும் அறிவில் மேம்பட்டோராவதற்குமாகும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது மட்டும் சிறந்த கல்வி அல்ல. பாடத்தை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பது என்ன கல்விமுறை, அதில் என்ன சிறப்பைக் காண்கிறீர்கள்.

   இவனது எண்ண ஓட்டம் என்ன என்பதை இந்த கட்டுரையிலேயே தெரிந்து கொள்ளலாம்.பேருந்தில் செல்வது அவமானகரமான செயல் என்பது இந்த பாப்பானின் எண்ணம். புரை தின்பவர்கள் அப்படியே இருக்க வேண்டும். குடிசையில் வாழ்பவர்கள் எக்கேடுகெட்டு போனால் எனக்கென்ன என்பதே இவன் வாதம். என் சாதிக்கார குழந்தைகள் மட்டும் படிக்க வேண்டும், மற்றவன் குழந்தைகள் படிக்கக் கூடாது என்பதுதான் இவன் கூறவரும் கருத்து.

   சமசீர் கல்வி ஒன்றும் தரங்குறைந்ததல்ல. இந்த பாப்பான் அதை பார்த்திருக்கக் கூட மாட்டான். அதை தரங்குறைந்தது என்று கூறும் அறுகதையோ அறிவோ இந்த மூளையில் சாணி அடைக்கப்பட்டவனுக்குக் கிடையாது.

   நாய் தான் தின்றதை வாந்தி எடுத்து பின்னர் தானே தின்று கொள்ளுமாம். இந்த கீழான ஜன்மம் துக்ளக் என்னும் மஞ்சள் பத்திரிக்கை நெடுக இப்படி வாந்தி எடுத்து வைத்திருக்கிறான். பின்னர் பலமுறை அதையே தின்ன நேரிட்டிருக்கிறது. இந்த முறையும் அப்படியே ஆகும். தயவு செய்து இவன் வாந்தி எடுத்ததை எல்லாம் ஒரு பொருட்டாக கொள்ளாதீர்கள்

  • வினவின் பொதுவுடமைக் கொள்கைகளை எவ்வளவு அழகாக, தெளிவாக, சுலபமாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் (தன்னை அறியாமலேயே) விளக்கிவிட்டார் பாருங்கள்! இதைத்தான் same side goal என்பது!!

 20. போராட்டத் தோழர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

  கூடுதலாக சிந்திக்கத் தூண்டிய பைத்தியகாரன் மற்றும் புதுநிலாவுக்கு நன்றி.

 21. ஜெயா வின் பேயாட்டத்திற்கு விழுந்த அடி, அழுத்தம் திருத்தமான அடி.
  ஜெயா வின் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் தோழர்கள்.
  களத்தில் நின்று போராடிய தோழர்களுக்கும் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் வாழ்த்துக்கள்.

 22. வணக்கம்.
  போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
  3 மாத காலமாகவே, சமச்சீர் கல்விக்காக (பொதுப் பாடத் திட்டம்) தோழர்களின் ஆர்ப்பாட்டங்களும், போரட்டங்களும் உறுதியுடன் செயல்பட்டதை வினவு மூலம் அறிந்தேன். இப்படி ஒரு நீதிமன்ற தீர்ப்பினைஎதிர்பார்க்கவில்லை.கேட்டவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்த்து. 7ம் வகுப்பு படிக்கும் என் மகளின் படிப்பு சுமை எளிதாக இருக்கும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனாலும், ஒரு பக்கம் கொஞ்சம் பயம் தான். இந்தம்மா தீடீர்னு எது வேணுனாலும் செய்யும். லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியினை 100 நாட்களி முடக்கி சாதனை புரிஞ்சவங்களாச்சே இந்த அம்மா !!!

 23. களத்தில் நின்று போராடிய அமைப்புகளுக்கு நன்றி….
  EGO WAS DEFEATED.
  DMK really played a superb role on this by keeping itself quiet.

  If DMK also involved into this case intelligent TN people would have supported JJ.

 24. சமச்சீர் விசயத்தில் சட்ட மன்றத்தில் ஆதரவு தெரிவித்து விட்டு வீதியில் நின்று கொடி பிடித்த போலி கம்யூனிஸ்டுகளை நினைத்தால் தான் வெறுப்பாக வருகிறது.

 25. அட போங்க… எனனவோ பூர்ஸ்வா கோர்ட் தீர்ப்பு எல்லாத்தையும் தலையல வைச்சுக்கிட்டு கூத்தாடிறிங்க… உங்க பொழப்ப பாத்தா சிரிப்பா இருக்கு… எவ்வளவு மாறிப் போச்சு… அப்படியே.. பூர்ஸ்வா சட்டசபை பார்லிமெண்ட்டுனனு வலம் வந்துடுங்க.. ஒரு சுத்து சரியாய்டும்…..

  • தம்பி நாகராசா, இந்த தீர்ப்பு ஒன்னும் சும்மா கிடைச்சிடல தெரியுமா? நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒரு தொடர் போராட்டத்தின் மூலமா நீதிமன்றத்தின் வாயிலிருந்து கக்க வச்சிருக்காங்க! இதையெல்லாம் புரிஞ்சிக்க வெறும் மார்க்சிய வார்த்தைகள் போதாது. மார்க்சிய இயங்கியல் கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கனும். அடுத்தவங்களக் கண்டு வெறுமனே பொறாமை மட்டும் படத்தெரிஞ்சவங்களுக்கு இதெல்லாம் கைகூடி வராதுங்கோ!

  • அட போங்க… கம்யூனிஸ்ட்களோட போராட்டங்களின் மூலம் கிடைக்கும் பலன்களையெல்லாம் கம்யூனிஸ்டுகள எதிர்த்துகிட்டே அனுபவிக்கிறீங்க. உங்க பொழப்பையும், நிலைமையும் பாத்தா சிரிப்பா இருக்கு. அப்படியே ஒங்க புள்ளைங்களுக்கும் கம்யூனிஸ்டுகள திட்டுறதுக்கே சொல்லிக்கொடுங்க, பூர்வ ஜென்மம் பல கிடைச்சிரும். ….இதெல்லாம் ஒரு பொழப்புன்னு…….

 26. உ.பி. முதல்வர் மாயாவதிக்கு, ரூ.23 கோடியில் நவீன பங்களா

  உ.பி. சட்டசபையில் 2011-12 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1.65 லட்சம் கோடி ஆகும். இந்நிலையில், சட்டசபையில் ரூ.10 ஆயிரத்து 879 கோடி மதிப்புள்ள துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்-மந்திரி மாயாவதிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க குண்டு துளைக்காத 20 கார்களும், செல்போன் மற்றும் தொலைபேசி சிக்னல்களை தடுக்கும் 10 ஜாமர் வாகனங்களும் வாங்கப்பட உள்ளன. இதற்கு மட்டுமே ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர மாயாவதிக்கு புதிதாக 23 கோடி செலவில் சொகுசு பங்களா ஒன்றும் கட்டப்பட உள்ளது. புதிய சொகுசு பங்களா, முதல்-மந்திரி பதவி வகிக்காத நாட்களில் மாயாவதி தங்குவதற்காக கட்டப்பட உள்ளது. முன்னாள் முதல்- மந்திரிகளுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படுவது அந்த மாநில அரசின் பாரம்பரியமாக உள்ளது. மாயாவதியின் சொகுசு வாழ்க்கைக்காக பட்ஜெட்டில் இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

  (நன்றி : தினத்தந்தி)

 27. சமச்சீர் கல்விக்கு ஆதரவாக களமிறங்கி போராடியவர்களின் பணி இன்னும் முடியவில்லை.நடைமுறைப் படுத்தும்போது என்ன கூத்து நடக்கப்போகுதோ….
  களத்தில் நின்று போராடிய அமைப்புகளுக்கு நன்றி.தாய்மொழி கல்வி என்னாச்சு?

 28. அரசு மற்றும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
  இன்றிலிருந்து ஆத்தாவின் தோட்டத்தில் கோர்ட் பரிகார ஹோமத்திற்கு ஏற்பாடு செய்யப்படலாம், ஏனென்றால் சென்னை உயர்நீதிமன்றம் செருப்பாலடித்த மாதிரி தீர்ப்பு வழங்கியும் திருந்தாத ஆத்தா இப்போது உச்சநீதிமன்றம் பிய்ந்து போன விளக்குமாறால் அடித்ததோடல்லாமல் சாணியை வேறு கரைத்து ஆத்தாவின் தலையில் ஊற்றியிருக்கிறது!

  ஆத்தா பம்முவதைப் பார்த்தால் ஏதாவது அண்டர்கிரவுண்ட் வேலைக்கு ’அம்பிகள்’ ஐடியா கொடுத்திருக்காலாம் என்று தோன்றுகிறது.

 29. சமசீர் கல்வி தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தபோது, அது குறித்த விவாதத்தில் பின்னூட்டமிட்ட நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் நீதி மன்றங்கள் நிறமற்று தான் இருப்பதாகவும் ஆனால் வடக்கில் காவிசாயம் பூசிகொண்டிருப்பதகாவும் வருந்தி இருந்தார்,

  இப்போது உச்சநீதி மன்ற தீர்ப்பும் வெளிவந்த நிலையில் அவரின் கருத்தை அறிய விரும்புகிறேன்..


  மாக்ஸிமம்

  • வேறு வழிஇல்லாமல்தான் உச்சா நீதி மன்றம் இந்த தீர்ப்பை கொடுத்திருக்கிறது. இல்லையென்றால் இந்த தீர்ப்பை விசாரணையே இல்லாமல் முன்பே கூறியிருக்கலாம், உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது என்று. தேவையற்ற காலவிரையம் செய்தது எதனால்? பார்ப்பனர்களுக்கு சாதகமான வழியை ஆராய்வதற்கு கால அவகாசம் எடுத்துகொண்டது என்று வேண்டுமானால் கூறலாம்.

  • இன்னும் அது காவிச்சாயம் பூசப்பட்டதாகவேதான் உள்ளது நண்பரே. வேறு வழியில்லாமல் இந்தத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 30. போராடிய தோழர்களுக்கும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்,,,,,,,,,,

  அம்மாவின் ஆணவத்தின் மீது இறங்கியிருக்கும் ஒரு ஆப்பு.,,,,,,,, மேலும் தொடர வாய்ப்பு இருக்கு…….

  மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டத்தின் கொழுப்பு சும்மா இருக்குமா? அம்மாவின் ஆசியுடன் சமசீர் கல்வி புத்தகம் தனியாக அச்சு அடித்தாலும் அடிக்கும்,,,
  கவனமா பாக்கனும்,,,

  ராஜசூரியன்

 31. //மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டத்தின் கொழுப்பு சும்மா இருக்குமா? அம்மாவின் ஆசியுடன் சமசீர் கல்வி புத்தகம் தனியாக அச்சு அடித்தாலும் அடிக்கும்//
  அதையும் செய்திட்டா இந்த பாசிஸ்ட்..

  http://www.pallikalvi.in/Privatepublishersfinallist.pdf

  எனும் இணைப்பில் பள்ளிக்கல்வித்துறையே மெட்ரிக் கொள்ளையர்கள் விரும்பும் பாடப்புத்தகத்தை (சமச்சீர் பாடத்திட்டப்படி) வெளியிட அனுமதிக்கப்பட்ட தனியார் புத்தக வணிகர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

  அதே போல மெட்ரிக் கொள்ளைக் கூட்டத் தலைவர் நந்தகுமார் பேச்சில் இருந்து
  “1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தனியாரிடமே சமச்சீர் கல்வி புத்தகங்களை வாங்குவோம். இதுதொடர்பாக ஏற்கனவே அரசு அனுமதித்துள்ளது. தமிழ் புத்தகங்களை மட்டும் அரசிடமிருந்து பெறுவோம்.

  எங்களது பள்ளிகளில் மெட்ரிகுலேஷன், ஓரியண்டன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற பெயர்களை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அவைதான் எங்களது உயிர்நாடி. அவற்றை விட மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நாங்கள் வழக்கு தொடர்ந்து போராடுவோம்”

 32. //இன்று இஞ்சி தின்ற குரங்குக்கு நிச்சயம் பயித்தியம் பிடித்திருக்கும். அதன் புண்ணில் உப்பை அள்ளித் தடவியிருக்கிறீர்கள் இந்த கட்டுரை மூலம். பாப்பாத்தி அழுது துடிக்கிறாள். வேடிக்கை வேடிக்கை. வினவு தோழர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துக்கள்.//

  தேர்தலில் அடைந்த தோல்வியை மறக்க இப்படியெல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நினைக்கும்போது பாவமாக இருக்கிறது. ம்ம்ம்… இன்னும் 5 வருஷத்திற்கு இதுபோன்ற உளறல்கள் தொடரும்..

  • அவுங்க அப்படித்தான் சார்… பயித்தியம் அவ்வளவு சீக்கரம் தீருமா… எல்லா நாந்தான்னு எல்லாம் என்னாலத்தான்னு சொல்லிகிட்டு இருக்கறதுல்ல ஒரு தனி ஆனந்தம் காண்றாங்க… விடுங்க….

  • நண்பர் லக். தேர்தலில் நான் எங்கே போட்டியிட்டேன். தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை. வாக்களிக்கவும் இல்லை. நான் இருக்கும் இடம் வேறு, எனது வாக்கு உள்ள இடம் வேறு. நான் அருகே இருந்தாலும் நிச்சயம் வாக்களித்திருக்க மாட்டேன். நான் திமுக காரன் என்று தவறாக புரிந்து கொண்டீர்கள். மனதால் ஒத்துப்போவதைத் தவிர வினவுக்கு என்னை யார் என்று தெரியாது.

 33. சமசீர் கல்வியைகூட நாங்க Metriculation ன்னு தான் வியாபாரம் செய்வோம்ன்னு ஒரு குறுப்பு கெலம்பிடிசிய்யா,ரொம்ப நல்லவனா இருப்பானுகளோ? .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க