Wednesday, December 11, 2024
முகப்புஅரசியல்ஊடகம்மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!

-

பெரியோர்களே தாய்மார்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,

அனைவரையும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளத்தின் முதல் பக்கத்துக்கு உடனே வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இரண்டு உரிமைப் போர்களுக்கு அணிதிரளுமாறு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு இன்று தனது வாசகர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

முதல் போராட்டம் “சரக்கடிக்கும் உரிமை” தொடர்பானது. “குடிப்பதற்கான வயது வரம்பு 25” என்று மகாராட்டிரா, டெல்லி அரசுகள் தீர்மானித்திருப்பதை எதிர்த்த தனது போராட்டத்தின் நியாயத்தை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது டைம்ஸ் ஆப் இந்தியா:

“இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகமே வியந்து போற்றுவது நம் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. மென்மேலும் அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரவும் அதன் மூலம் மக்களைத் துன்புறுத்தி லஞ்ச வசூலை அதிகரித்துக் கொள்வதற்கே கிழட்டு நரிகளான அரசியல்வாதிகள் திட்டமிடுகிறார்கள்.”

“மைக்கை பிடுங்கி அடித்து கெட்டவார்த்தைகளால் ஏசிக்கொள்கிற எம்.பி எம்.எல்.ஏக்களும், நாட்டைக் கொள்ளையடிக்கின்ற அமைச்சர்களும் ஒழுக்கம் பற்றி நமக்கு உபதேசம் செய்வதா? இது தண்ணியடிப்பது பற்றிய பிரச்சினை அல்ல. நம்முடைய சுயமரியாதை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினை. படித்த, நேர்மையான, பொறுப்பான, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்கள் அனைவரும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுந்து நின்றாக வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை. உன்னால் உதவ முடியாவிட்டால் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாதே என்று முழங்கவேண்டும்” என்று குமுறி வெடித்திருக்கிறது டைம்ஸ் .ஆப் .இந்தியா.

இரண்டாவது போராட்டம் ஊழல் எதிர்ப்பு, அண்ணா ஹசாரே ஆதரவு தொடர்பானது. சரக்கடிக்கும் உரிமையைப் போலன்றி, இது எல்லோருக்கும் தெரிந்த எளிமையான பிரச்சினை என்பதால் இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா அதிகம் விளக்கவில்லை.

சரக்கடிக்கும் உரிமை தொடர்பான டைம்ஸ் ஆப் இந்தியாவின் “அப்ரோச்” கவனிக்கத்தக்கது. “ITS MY LIFE இது என்னுடைய வாழ்க்கை. நான் குடிப்பேன், குளிப்பேன், குப்புற அடிச்சுப் படுப்பேன். நீ யார்றா கேக்குறதுக்கு – ITS NONE OF UR BUSINESS” என்று அரசாங்கத்துக்கு சவால் விடுகிறது அந்த முழக்கம்.

இல்லையா பின்னே? உண்ணாவிரதம் இருக்கணும்னா 22 கண்டிசன் போடறான். சரக்கடிக்கணும்னா 25 வயசுன்னு கண்டிசன் போடறான். என்ன சார் இது சர்வாதிகாரமா இருக்கு? சாப்பிடவும் கூடாதுங்குறான், சாப்பிடாம இருக்கவும் கூடாதுங்கிறான். சாப்பிட்டா நமக்கு ஜெயில். சாப்பிடலேன்னா ஹசாரேக்கு ஜெயில்.

ஊழல் கனிமொழிக்கு திகார் ஜெயில், ஹசாரேவுக்கும் அதே ஜெயிலான்னு கேட்டிருக்கார் கேப்டன். ஜெயில் மட்டுமா? ரெண்டு பேருக்கும் அதே போலீசு, அதே மாஜிஸ்டிரேட், அதே சி.ஆர்.பி.சி. என்ன சார் நியாயம்?

This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?

அதுனாலதான் “ஐ ஆம் அன்னா ஹசாரே” ன்னு லட்சக்கணக்குல ‘சிட்டி’சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.

“அந்தப் பிரச்சினை வேற, இந்தப் பிரச்சினை வேற” ன்னு ஏமாத்த முடியாது சார். சாயங்காலம் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா.

ஐ ஆம் அன்னா ஹசாரே !

குறிப்பு:

ன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் தம் ஆதரவைத் தெரிவிக்கலாம். ரிலையன்ஸ் அம்பானி, டாடா, ஏர்டெல் மித்தல் ஆகிய முதலாளிகள் ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போரை ஸ்பான்சர் செய்திருப்பதனால், மேற்படி கம்பேனிகளின் மொபைலிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராளிகள் இலவசமாக பேசலாம் பேசலாம் பேசிக்கிட்டே இருக்கலாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.

“இட்ஸ் மை லைப்” என்று முழங்கும் சரக்குரிமை இயக்கத்திலிருந்து ஹசாரேயின் ஊரான “ராலேகான் சித்தி”க்கு மட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா விலக்களித்திருக்கிறது. அந்த ஊரில் மட்டும் சரக்கடிப்பவர்களின் வயது 25 க்கு கீழே இருந்தாலும், மேலே இருந்தாலும் அவர்கள் கட்டி வைத்து உரிக்கப்படுவார்கள்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 

  1. அருமையான் சட்டம்,கொடுமையான எதிர்ப்பு,
    அவ்வப்போது இம்மாதிரி நகைசுவைகளும் அரங்கேறும்.
    மது ஏன அருந்தக்கூடாது என்று கூறுகிறோம். மது அருந்துபவர்களில் அதற்கு 10% அடிமையாகி வாழ்க்கையை தொலைகின்றார். பலவித சமூக பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே குடிக்கமுடியும் என்பது நடைமுறைப் படுத்த முடியாத செயல்.டைம்ஸ்ன் படி இந்தியாவின் டைமே சரியில்லை.
    மதுவில் கூட நம் நாட்டு பொருள்களான கள்,சாராயம் போன்றவை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு மேஎலை நாடு மதுவகைகள் மட்டும் அனுமதிக்கப் படுவது இன்னொரு காமெடி.
    டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பக்கம் போனால் ஒவ்வொரு குடிமகனும் நல்ல “குடி” மகனாக் இந்த டுபாக்கூர் சட்டத்தை எதித்து அறச்சீற்றம் கொள்வதை காணும் போது “மேரா பாரத் மஹான்” என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.பூரண மது விலக்கு அமலுக்கு வரவேண்டும். இல்லையேல்.முடியாது என்றால் மேலை நாடு மது வகைகள் தடை செய்து கள் மட்டும் அனுமதி கொஞ்ச நாளைக்கு தரலாம்(நம்ம விவசாயி கொஞ்சம் பிழைக்கட்டும்).நாகரிகமான் டைம்ஸ் ஆட்கள் கள் குடிப்பார்களா என்று பார்க்கலாம்.
    கொடுமை!!!!!!!!!!!!!!!!

  2. ஆது எப்படி நீங்க மட்டும் நல்லவங்களா இருக்கீங்க மத்தவங்க எல்லாரூம் கெட்டவங்களா இருகாங்க பாவம்

    • சரியாக கேட்டிங்க. இவங்கலுக்கு மட்டுந்தான் அரிவும் அதை பயன் படுத்தும்நுட்பமும் போராட்ட குனமும்நேர்மையும் இருக்கீரது. மட்ர எல்லோரும் அயோக்கியர்கள்.
      போங்கடா…

      • அவரவர்களைப் பொருத்தமட்டில் ஒவ்வொருவரும் நல்லவரே. யார் நல்லவங்க யார் கெட்டவங்க என்பது பற்றி எல்லோருக்கும் கருத்து இருக்கும். பொதுவாக பேசுவதை விடுத்து கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தர்க்கம் குறித்து தங்களின் கருத்து என்னவோ அதை முன்வைத்தால்தானே நல்லவர்கள் குறித்த கருத்தை பரிசீலித்து மாற்றிக் கொள்ள முடியும். ஆரோக்கியமான விவாதமே இங்கு தேவை.

  3. . சாயங்காலம் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா.
    அட நல்லாத்தான். இருக்குது. டை.ஆப்பு இநதியாவின் ஞாயம்

  4. தான் சொல்வது மட்டுமே சரி, தனது கருத்து மட்டுமே சரி என்பது ஒரு வகையான மன நோய்.
    நாம் எந்த கூட்டத்திற்கு சென்றாலும் இந்த மன நோய் பிடித்தவர்களைப் பார்க்கலாம்.

    அவர் நல்லவரா, கெட்டவரா ? என்று பார்ப்பதை விட்டுவிட்டு , லஞ்ச, ஊழலுக்கு எதிராக என்ன மாதிரி சட்டம் வேண்டும் அல்லது இருக்கும் சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் ? லஞ்ச, ஊழலுக்கு எதிராக யார் யார் போராட்டத்தை தமிழகத்தில் பல ஆண்டுகளாக செய்கிறார்கள் ? என்ற கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும்.

    வினவு புரிந்து கொள்ளுமா ?

    • //அவர் நல்லவரா, கெட்டவரா ? என்று பார்ப்பதை விட்டுவிட்டு , லஞ்ச, ஊழலுக்கு எதிராக என்ன மாதிரி சட்டம் வேண்டும் அல்லது இருக்கும் சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் ? லஞ்ச, ஊழலுக்கு எதிராக யார் யார் போராட்டத்தை தமிழகத்தில் பல ஆண்டுகளாக செய்கிறார்கள் ? என்ற கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும்.
      //
      வினவு கட்டுரைகள் முழுக்கவே அதை தான் சொல்கிறது, இதே கட்டுரையில் உள்ள லின்குகளை வாசிக்கவும். உங்கள் கேல்விக்கு பதில் அது தான் ///

      //தான் சொல்வது மட்டுமே சரி, தனது கருத்து மட்டுமே சரி என்பது ஒரு வகையான மன நோய்.நாம் எந்த கூட்டத்திற்கு சென்றாலும் இந்த மன நோய் பிடித்தவர்களைப் பார்க்கலாம்.
      //

      ந‌ன்றி நெல்லைக்குமரன் இந்த கமென்ட் உங்களையும் சேர்த்து இங்கே உளரிக்கொண்டிருக்கும் பலதுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.. என்ன கட்டுரை அதில் என்ன சொல்லியிருக்கிறது, இவர்கள் கலத்தில் என்ன செய்கிறார்கள்? என்று எதையும் படிக்காமல், வினவு தவறு என்று கமென்ட் போடுவதும், உங்கள் கூற்றுப் படி ஒரு வித மனநோய் தான்..

  5. மக்களின் சந்தோஷத்துக்காகவே காமெடி பதிவுகளாகப் போடும் வினவு யூ ஆர் கிரேட்…..உங்களோட குருனானக் கல்லூரிப் போராட்டம் வெற்றியா?

  6. அருமையான பதிவு .டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஏன் எரியுது ? சாராய யாவாரி மல்லையாவுக்கும் இவிங்களுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ!!!

  7. பிறப்பு முதல் இறப்பு வரை குடிக்க கூத்தடிக்க கும்மியடிக்க கும்மாளமிட “அரசியல் சாசனம் திருத்தம்” வேண்டும் “இல்லையேல் தீக்குளிக்க மசோதா” தாக்கல் செய்யப்படவேண்டும்.

  8. ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் இயக்கதின் மீதும் நிலவுவதாக,

    சுவனத்தை தவிர மற்ற இடங்களில் குவாட்டர் அடிப்பதை ஹராமானதாகவே ஆக்கியிருக்கிறான். ஆனால் ஷைத்தான் குடலில் அல்கஹாலை உற்பத்தி செய்து எல்லோரையும் ஹராமிகளாக ஆக்கியிருக்கிறான்.

    ஹராமான உணவுவகைகளை உண்ணும் மூஃமீன்கள் என்ற பதிவில் இது பற்றி விவரமாக எழுதியுள்ளேன்.

    யா அல்லாஹ். அல்லாஹ் போதுமானவன்.

  9. எல்லா செல்ஃபோன் முதலாளியும் களவாணிப்பய தான் அதுக்காக அவங்கலை ஆதரிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு ஏண்டா செல்ஃபோனை பயன்படுத்துரீங்க!

    “உங்க கோரிக்கையெல்லாம் நிரைவேத்துரேன், இதுபத்தி பேச என்னோட இந்த ரிலையன்ஸ் நம்பருக்கு டயல் பண்ணு” ந்னு சொன்னா நீ அவனுக்கு ஃபோன் பண்ணாம விட்ருவியா?!? புறா தூது விடுவியா?!?

    டைம்ஸ் ஆஃப் இந்தியாவை நான் தொடைக்கக்கூட பயன்படுத்துரது இல்லை. கடைசியா எப்ப குடிச்சேன்னு ஞாபகமே இல்லை. சில லூசுப்பதிவுகளை படிச்சா அந்த கோவத்துலதான் சரக்கடிக்கவே தோணுது!

    • இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்..

      ” 1. முதலாளி நடத்துற தொழிற்சாலையில வேலை பாத்துட்டு எதுக்குடா சம்பள உயர்வு கேக்குறீங்க ?..
      2. பண்ணையாரோட பண்ணையில வேலை பாத்துட்டு எதுக்குடா கூலி கேக்குறீங்க ..
      3. கல்வி வள்ளல் நடத்துற காலேஜ்ல படிச்சிட்டு எதுக்குடா அநியாய ஃபீஸ் கேட்குறதுக்கு எதிரா எதுக்குடா போராடுறீங்க ?. “

      இப்படி பல அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேளுங்க வினா …

    • அப்புறம் முக்கியமா இன்னொரு விசயம் ..

      நீங்க கூட உங்க கம்பேனியில வேலை பார்த்துக்கிட்டே உங்க முதலாளிகிட்ட சம்பளம் கேக்குறீங்களே ?.. இது அநியாயம் இல்லையா ?..

      நாளையில இருந்து சம்பளம் வேணாம்னு சொல்லிட்டு வேலை பாருங்க ..

  10. செய்தித் தாளைப் பிரித்தால் ஜப்பான் சுனாமியின் கோரச் செய்திக்கு பக்கத்தில் ஆண்மை சக்திக்கான(!) விளம்பரத்தில் ஆண் பெண் உறவுப் படத்தினைப் பார்த்துப்பழகிய நமக்கு வினவு கட்டுரையின் நோக்கம் புரியாததில் ஆச்சரியம் இருக்க வாய்ப்பில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க