Tuesday, October 15, 2024
முகப்புஅரசியல்ஊடகம்அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !

அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !

-

லைப்பை பார்த்து விட்டு தினமணி அபிமானிகள் கோபிக்கக் கூடாது. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்று தினமணியின் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ஆசிரியர் வைத்தியநாதனின் மூக்குக்கு கீழே ஒரு முரட்டு மீசையும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆசிரியரை இப்படியா கொச்சைப்படுத்துவது என்று தினமணி அபிமானிகள் கோபப்படலாம். நாம் என்ன செய்வது? போயஸ் தோட்டத்தின் வாசலை மொய்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் ஆசிரியரின் நா வன்மை குறித்துத்தான் போவோர் வருவோரிடமெல்லாம் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் அம்மா வெற்றி பெற்றது குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இதொன்றும் தோட்டத்தில் நடக்காத அதிசயமில்லை. அம்மாவின் கருணையைப் பெற விரும்புவோர் எல்லோரும் செய்கின்ற காரியம்தான். எதிர்காலத்துக்கு வேண்டியதை செய்து வைத்துக் கொள்ளும் ஆசை எல்லோருக்கும் இருப்பதைப் போல வைத்தியநாதனுக்கும் இருந்திருக்கிறது. அவ்வளவுதான். உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது; பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

வதந்தியை ஆதாரமாக கொண்டு இப்படி ஒரு செய்தி வெளியிடுவதும், “நக்கினார்” என்று அதற்குத் தலைப்பு போடுவதும் நியாயமா என்று யாரேனும் கேட்பார்களேயானால், ஆகஸ்டு 15 தினமணியின் 11 ஆம் பக்கத்தைப் படிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். “மாசேதுங் ஜோசியம் பார்த்த புத்தர் மலை” என்று தலைப்பு போட்டு முக்கால் பக்க அளவில் ஒரு அண்டப்புளுகை வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர் வைத்தியநாதன்.

1949 இல் சீனாவில், வூதாய் மலையில் உள்ள புத்தர் கோயிலுக்கு வந்த மாவோ, அங்கே ஜோசியம் பார்த்தாராம். இதை நாங்கள் சொல்லவில்லை, அந்த ஊர் சுற்றுலா வழிகாட்டிகள் அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடம் இப்படித்தான் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறது தினமணி – இது முதல் வரி. அதாவது “நாங்கள் சொல்லவில்லை கைடுகள் சொல்கிறார்கள்” என்ற உத்தி இளித்தவாயர்களை ஏமாற்றுவதற்கு. ‘அந்த கைடுகள் விடுவது சரடல்ல உண்மைதான்’ என்று நக்கலாக தெரிவிப்பதற்காக சரடு என்ற சொல்லுக்கு தனியாக ஒரு மேற்கோள் குறி.

அதற்கு அடுத்த வரியில் “எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம் மாவோவுக்கும் இருந்திருக்கிறது” என்று ரொம்பவும் பெருந்தன்மையாக மாவோவின் பலவீனத்தை அங்கீகரிப்பது போன்ற தோரணையில் எழுதி, அவர் ஜோசியம் பார்த்தது உண்மைதான் என்ற கருத்தை தந்திரமாக நிலைநிறுத்துகிறார் ஆசிரியர், தில்லானா மோகனாம்பாள் வைத்தி.

சீனத்தின் எதிர்காலத்தை சிவப்பாக்கும் புரட்சியை வழிநடத்திய மாவோ, தன்னுடைய சொந்த எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஜோசியம் பார்த்தாராம். யாரிடம்? கம்யூனிச சீனத்தில் தங்களுடைய சொந்த எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருந்த புத்த பிக்குகளிடம்!

நம்மூரில் நாடி ஜோசியம் போல அங்கே நம்பர் ஜோசியமாம். மாவோ ஒரு சீட்டை எடுத்தாராம். 8341 என்று நம்பர் போட்ட சீட்டு வந்ததாம். அந்த நம்பருக்குப் பலன் என்ன என்பதை மாவோவுக்கு சொல்ல மறுத்துவிட்டார்களாம் பிக்குகள்.

“83 வயது வரை வாழ்வார், 41 ஆண்டுகள் ஆள்வார்” என்பதுதான் அந்த சீட்டு தெரிவித்த இரகசியமாம். அன்று முதல் இன்று வரை உலகத்தில் யாருக்குமே தெரிந்திராத அந்த இரகசியம், அங்கிருக்கும் சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதாம். அவர்கள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சாட்சி? யார் சொன்ன தகவல்? எந்த விவரமும் கிடையாது. ஆகஸ்டு 14ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில்தான் இந்த செய்தி முதலில் வெளிவந்திருக்கிறது. “ஏஜென்சி செய்தியிலிருந்து” என்று போட்டு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிடுகிறது. ஆனால் ராய்டர், பிடிஐ என்று எந்த செய்தி ஏஜென்சியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அந்த ஏஜென்சிகள் யாரும் இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை. ஒரு வேளை தினமணி குரூப்புக்கு சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA) இந்த செய்தியை கொடுத்திருக்கலாம்.

ஏனென்றால் இச்செய்தியையும் வெளியிட்டுவிட்டு, “இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியவில்லை, சுற்றுலா வழிகாட்டிகள் சொல்கிறார்கள்” என்று மாமாத்தனமாக எழுதியிருக்கிறது எக்ஸ்பிரஸ். அதைக்கூடச் சொல்லாமல், இந்த புளுகுமூட்டை உண்மைச்செய்தி போல வெளியிட்டிருக்கியிருக்கிறது தினமணி!

உண்மையில் 1948 ஏப்ரலில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் மாவோ அம்மலையைக் கடந்திருக்கிறார். ஒரு இரவு அங்கே தங்கியுமிருக்கிறார். அவர் தங்கியது குறித்த படமும் நினைவுக் குறிப்புகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம் என்ன, இது போதாதா? ஜோசியம் பார்த்தார், ரேகை பார்த்தார் என்று அடித்து விடவேண்டியதுதானே. பாபர் மசூதிக்கு உள்ளே இராமன் பிறந்த இடத்தை மட்டுமின்றி, பக்கத்திலேயே சீதையின் சமையலறையையும் (சீதா கி ரசோய்) சமையல் பாத்திரங்களையும் “கண்டுபிடித்த” யோக்கியர்களால் மாவோ ஜோசியம் பார்த்ததையா “கண்டுபிடிக்க” இயலாது?

சென்னை நகரின் நடைபாதையில் அமர்ந்திருக்கும் ஜோசிட ரத்தினங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு கைரேகை பார்ப்பது போல தயாரித்து மாட்டிக்கொள்ளும் போட்டோவுக்கும், புத்த பிக்குகளிடம் மாவோ ஜோசியம் பார்த்த கதைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? இவ்வளவு மட்டமான ஒரு கட்டுக்கதையை வரலாற்று உண்மை போல சித்தரித்து வெளியிடும் ஒரு நபர், புகழ் பெற்ற நடுநிலை நாளேட்டின் ஆசிரியராம். அவரை எல்.கே.ஜி ஆண்டுவிழா முதல் சிற்பி மணிவிழா வரையில் எல்லாவிதமான சுபகாரியங்களுக்கும் அழைக்கிறார்கள்.

அந்த விழாக்களில் திருவாளர் வைத்தியநாதன், சமுதாயத்தில் யார் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஊர் நாயம் உரைக்கிறார். அந்த உரைகளை, ஸ்ரீமான் வைத்தியநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தினமணியில், பேச்சாளர் வைத்தியநாதனுடைய திருவுருவப் படத்துடன் எட்டு காலம் செய்தியாக எடிட்டர் வைத்தியநாதனே வெளியிடுகிறார்.

மாவோ ஜோசியம் பார்த்த கதையை வெளியிட்டிருக்கும் தினமணி ஆசிரியர், “நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி”யைக் கொண்டவர் என்பதை வாசகர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இவற்றை விவரித்தோமேயன்றி நமக்கு வேறு நோக்கம் ஏதுமில்லை.

இந்தப் பதிவைப் படித்துப் பார்த்த ஒரு நண்பர், “இதெல்லாம் ஒரு விசயம் என்று மதிப்பு கொடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே” என்றார். எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்திக்கு இறக்கை முளைத்து அது இப்போது பவுத்த தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது அப்படியே அமெரிக்கா போய், மீண்டும் வூ தாய் மலைக்கே திரும்பி, அங்கிருந்து திபெத், நேபாளம், சிக்கிம் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவ்வாறு திரும்புங்கால் தினமணியில் வெளியான அந்த முக்கால் பக்க புளுகு, 300 பக்க புளுகு மூட்டையாக உப்பி தமிழ் கூறும் நல்லுலகத்தின் தலையில் இறங்கக்கூடும்.

நக்சலைட் இயக்கத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த ஜெயமோகன், ஒரு முறை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தமக்குள் பேசிக் கொள்வதை ஒளிந்திருந்து கேட்டாராம். ஜெயமோகனின் மதிப்புக்குரிய அந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் “நக்சலைட்டுகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாக” பேசிக் கொண்டார்களாம். கேட்டவுடன், ஜெயமோகனுக்கு காலடி நிலம் நழுவிவிட்டதாம். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் குறித்து அவரே தனது தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் நாம் பி.தொ.நி.குரலை (பின் தொடரும் நிழலின் குரல் – ‘நாவல்’) சுமக்க நேர்ந்தது.

மாவோவின் மீதும், தினமணி வைத்தியநாதனின் மீதும் பெருமதிப்பு கொண்டவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கக்கூடும். அத்தகையோரில் ஒருவராக ஜெமோ வும் இருக்கக்கூடும் என்பதே நமது அச்சம். அந்த வகையில் இந்தப் பதிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அவ்வளவே.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. அப்பு, அம்மாவோட திருவடிய நக்கினா தான் தப்பு. மாவோவின் திருவடிய நக்கினா இல்ல தப்பு.

  2. ஜோசியத்தை தொழிலாகவோ அல்லது உபதொழிலாகவோ வைத்துக்கொண்டு, மார்க்சியத்துக்கே ஜோசியம் பார்க்கும் பகுதறிவாள பின்னூட்டக்காரர்களுக்கு இந்தக் கட்டுரை அல்வாவை லபக்குவது போலிருக்கும்…!!

  3. நானும் படித்தேன்.தினமணி நக்கியதையும்,கக்கியதையும்.அதிலே ரெம்ப நல்லாவே நக்கியிருக்கிறார்.நல்லது,நல்லா நக்கட்டும். நக்குவதற்கும்,கக்குவதற்கும் வேற
    கிடைக்கல போலிருக்கிறது.

    • aaamma Vinavu and co Karunanidhikku evlo venna sombu adikkalam .. Aana Dinamani Jayavukku adicha thappu.. aaga motham inga ellame jaalra jkoottam thaan idhula enna vidhyasam??? Venumna rating vekkalam..No 1, No 2ngra maadiri

  4. தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லாமல் மூன்றாம் தரமாக உள்ளது. இதற்காக அந்த தினமணி கட்டுரை முதல் தரம் என்று கூறுவதாக பொருள் ஆகாது.

    • சூப்பர்!!செம நெத்தியடி!!வர வர மாமியார் கழுத போல ஆனாளாம்!!அப்பசி இருக்கு வினவின் கட்டுரைகள்.தரம் தாழ்ந்து வருகிறது!!

    • சரி நீங்கதான் துப்பாக்கிய தூக்கினு போங்களேன்.யார் வேணாம்னா?

  5. அதை மாவோவின் திருவடியை பூஜிக்கும் நீங்கள் சொல்வது வினோதம்!!

  6. இதை கண்டித்து முரசொலி, விடுதலை படிக்கும் போராட்டம் நடத்தலாமே?

  7. யூகத்தில் எழுதுவது என்பது எழுத்தாளர்களுக்கு மட்டுமில்லை பாமரனுக்கும் கை வந்த கலைதான் நீங்களும் அந்த மாதிரி எழுதியிருப்பீர்கள். மாவோவும் ஆர்வ மிகுதியில் பார்த்திருக்கலாம் அல்லது உண்மை அறியும் விதமாக கூட இருக்கலாம். அல்லது கலாய்த்திருக்கலாம்.ஆனால் பார்க்க வில்லை என்று மறுப்பதும் யூகத்தின் அடிப்படைதான். பார்த்தார் என்று தானே எழுதினார் நக்கினார் என்று எழுத வில்லையே அதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு பயந்து அலறி அடிச்சு நக்கினார் சொறிஞ்சார் என்று எழுதி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று முழங்கி உங்கள் தரத்தையும் உங்களின் கைவன்மையையும் காட்டுகிறீர்கள். உங்களிடமிருந்து இப்படி ஒரு கீழ்த்தரமான பதிவை எதிர்பார்க்கவில்லை.

  8. இத்தனை நாளா ஜெயா காலை வைத்தி கழுவிகொண்டிருந்ததாக கேள்வி,இப்ப நக்கவும் ஆரம்பிச்சுட்டாரா?சாய் பாப்பா மறைந்தபோது சாய் பாபாவின் மாஜிக் வித்தைகள்,ஆசிரமத்தில் நடந்த மர்ம கொலைகள் பற்றி எழுதாமல் மூடி மறைத்து அவரிடம் தூய மனம் இருப்பதாகவும்,இப்படிப்பட்டவர்களிடம் ஒரு சக்தி இருக்கும் எனவும் புருடா விட்டார்கள் பாருங்கள்,தலையில் அடித்து கொண்டேன்.இவங்க எதை வேணும்னாலும் எப்படியும் எழுதலாம்,வினவு எழுத கூடாதா?

  9. வினவு வினவயே வினவிக் கொள்ள நேரம் வந்து விட்டது…… இதையும் விட தரம் தாழ முடியாது… குளத்தளவே ஆகுமாம் ஆம்பல்…..

    • நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; …..குலத்து அளவே ஆகும் குணம்…இதைத்தானே சொல்ல வந்தாய் அன்பு? வினவின் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றால் வைத்தியின் குலத்தளவிலான குணம் என்ன? இவன் தினமணி வைத்தியா? தில்லானா மோகனாம்பாள் வைத்தியா?

  10. J ஆட்சிக்கு வந்தவுடன் தினமணி அடைந்த பரவசம், சமச்சீர் கல்வி பிரச்சினையில் காட்டிய
    நரித்தனம் இதெல்லாம் தினமலத்தினும் கேவலமாக அம்பலப்பட்டு நாறுகிறது.’பெரியார் தன் வீட்டில் வினாயகரை ரகசியமாக வழிபட்டார்’என அச்சில் வராமலேயெ கிசுகிசு பரப்பும் அவாளுக்கு தினமணி,எக்ஸ்பிரஸ் இல் வந்தது என்றால் இன்னும் வசதி

  11. நிமிர்ந்த நன்னடை+ நேர்கொண்ட பார்வை +யார்க்கும் அஞ்சாத நெறிகள் =ஜிங்சகஜிங்சா
    தாயே உன்னடி சரணம்.

  12. மிக சரியான பதிவு . இன பற்றை காட்டும் ஆசிரியரின் முக திரையை கிழிக்க வேண்டும் .

  13. மார்க்சியவாதிகள் தத்துவம்,அரசியல் துறையில் முன்னோடிகளாக இருப்பது போல பண்பாட்டு துறையிலும் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இது போன்ற கட்டுரை வழியாக அணிகளுக்கு போதிப்பது என்ன என்று விளக்க முடியுமா? தரமற்ற கட்டுரை.

  14. சமூகத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானித்துதான் மாவோ போன்ற புரட்சியாளர்கள் போராடினார்கள். தினமணியின் உளறல் எப்படி இருக்கிறது தெரியுமா?….ஒருவன் வீட்டை எப்படி கட்டுவது என்று வரைபடம் போட்டு வடிவமைத்து கட்ட ஆரம்பித்தப் பிறகு வீடு எப்படி இருக்கும் என ஆருடம்(ஜோதிடம்) பார்ப்பதைபோல் உள்ளது. சமூகத்தை சீரழிக்கிற ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை தூக்கிப்பிடிப்பது மிகமிக கீழ்த்தனமானது. வினவின் இதுபோன்ற திறனாய்வுக் கட்டுரைகளைப் போற்றி வரவேற்காமல்….தூற்றுவது பிற்போக்குத்தனமானது.

  15. L.K.G arrear வச்சிருக்கிறவர் எதோ எழுதிட்டார்னு இப்படி சத்தாய்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிபுட்டேன் ஆமா..

  16. வினவு! தனிமனித விமரிசனதை தவிர்க்கலாம். Whole political system is wrong. We cant change all this stupid things unless we change the basics.

  17. “அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !”னு போட்டுட்டு நீங்க மாவோவோட திருவடியை நக்கியிருக்கீங்களேனு யாராவது கேட்டுட போறாங்க…:)

    • அப்படி கேக்குறவன் கேக்கட்டும் .. நீ எதுக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற ?..

      உனக்கு சந்தேகம் வந்ததுனா கேளு. பதிலுக்கு நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போ.. அது மனுசனுக்கு அழகு.

  18. மாவோவை பற்றி எழுதியதால் கோபம் கொண்டு தனி நபர் தாக்குதலாகவே இந்த கட்டுரை உள்ளது. சீனாகாரன் குண்டு போட்டால் இந்திய கம்யுநிஷ்ட்காரன் கொண்டாடுவான் என்று வேடிக்கையாக சொல்வதை நிருபிக்கும் வண்ணம் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

  19. மாவோ அன்று ஜோதிடம் கேட்டாரா இல்லையா என்பது முக்கியமல்ல. இந்த ‘வதந்தியை’ வெளியிட்டதற்க்காக இப்படி ஒரு கேவலமான தலைப்பை வைத்திருக்கும் வினவு, இந்து பத்திரிக்கை மாவோவின் ’கலாச்சார புரட்சி’ பற்றி வெளியிட்ட கட்டுரை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர் :

    ’ஆசிரியர்களை அடித்து கொன்ற மாணவமணிகள்’
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/article2332248.ece “People want justice”

    இந்து பத்திரிக்கையில் திரு.சாய்நாத் எழுதும் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியுடுகிறீர். சரி. உமக்கு உண்மையில் அடிப்படை நேர்மை இருந்தால் மேலே உள்ள கட்டுரையை அப்படி மொழி பெயர்த்து வெளியிடுங்களேன் பார்க்கலாம். பிறகு அதை பற்றி இங்கு எல்லோரும் தமிழில் விவாதிக்கலாம். தயாரா ?

    • நீ ஏம்பா உன்னொட பிலாக்ல நடிகை சிலுக்கு சுமிதா பத்தி கட்டுரை எழுதல ?..

      விக்கிபீடியாவுல தேடிப்பாரு.. நிறைய சிலுக்கு கட்டுரை இருக்கும். நேர்மை இருந்தா உன்னோட பிலாக் ல பொழி பெயர்த்துப் போடேன் பாப்போம்…

      – எதையாவது பேசுனா, பதில் சொல்லலைனா …….. இருக்கனும். அதை விட்டுட்டு சம்மந்தம் இல்லாம பேசக் கூடாது …

  20. mao pathi ezhuthina ungalukku en ippadi eriyuthu? china pathiyum china makkala pathiyum ungalukku avvalavu thaan theriyum pola. maovukkum 8341-ukku irukkum thodarbu chumma google-la adicha 10 secondla theriya povuthu. look for mao and taoism – plenty of resources available.

    http://www.ericlmorris.info/eslnews/?p=2340

    http://www.theepochtimes.com/news/5-8-5/30984.html

    “Even though the CCP is atheist in name, many high-ranking Party officials deeply believe in fortune-telling and fengshui. [1] The story of how Mao Zedong named his personal bureau of guards the “8341 troops” is a typical example. Before Mao entered Beijing, an aged Taoist monk told Mao four numbers: 8341. Mao didn’t understand it, but he still used 8341 to name his entourage. After Mao’s death it became clear that the number meant that Mao would live until age eighty-three, and that he would be, from the Zunyi Conference in 1935 until his death in 1976, the most powerful man in China—a span of forty-one years. ”

    idhellam kathaiya kooda irukkalam. aana expresso dinamani vaidyanathano pudhusa uruvakki ezhuthina vishayangal alla.. adha mudhalla therinjukkunga…appurama vaithiya thittalam.

    ippavum muyalukku moonu kaala? inimelavathu thirunthuveegala?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க