privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

-

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு  காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

1990  களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’. ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும், 1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த காஷ்மீரிகள் “காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க’’த்தின் மூலம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப் பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் என்று புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது, அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989 முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.  அம்மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன. தீவிரவாதிகளைக் கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால் போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும் படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்விமுறையின்றி நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத் தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் கங்காணி அமைப்புகளும் மாநிலம் முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல்  தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. மனித உரிமைகள் கமிசனிடம் சாட்சியமளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச் செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத் தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.

காஷ்மீர் மாநில அரசும் மைய அரசும் இது குறித்து இன்றுவரை மௌனம் சாதிக்கின்றன. மனித உரிமைக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் இந்திய அரசு பயங்கரவாதிகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இனப்படுகொலையைக் குறித்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்னமும் வாய்திறக்காமல் இருப்பதுதான் அதைவிடப் பெருத்த அவமானம்.

காஷ்மீரில் மட்டுமல்ல, இதற்கு முன் பஞ்சாபில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் 1984 முதல் 1995 வரை இதேபோல மோதல் படுகொலைகளும் சாமானியர்கள் காணாமல் போவதும் நடந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளும் அட்டூழியங்களும் இன்றும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஈழத்தில் இனப்படுகொலை பயங்கரவாதத்தை நடத்திய ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளி என்றால், காஷ்மீரில் துடிக்கத் துடிக்க இனப்படுகொலைகளை இரகசியமாக நடத்தியுள்ள இந்திய அரசும் அதன் இராணுவமும் புனிதர்களா? இத்தகைய அட்டூழியங்களை நடத்திவரும் போலீசு  இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, காஷ்மீரில் காலனிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் தேசிய ஒருமைப்பாடா?  ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011

_____________________________________________________

  1. ரஷியாவுக்கு ஒரு செசன்யா, சீனாவுக்கு ஒரு உய்க்குர், இந்தியாவுக்கு ஒரு காஷ்மீர் – போட்டு தாக்க. கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் தான் – தத்தம் நாட்டு இறையாண்மை பற்றி பேசி படுகொலைகள் செய்ய உரிமை உள்ளதா?

  2. காசுமீரைப் பாக்கிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். அப்போ தானெ பிரச்னை தீரும்…கொடுத்திட்டா போச்சு…அப்படியே என்னன்ன பண்ண வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்திடுங்கோ..அதுக்கப்புறமாவது குண்டு வக்கிரது நிக்குமான்னு பாக்கலாம்.

    • தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத் தீவை யாரிடமும் கேட்காமல் தாந்தோன்றி தனமாக சிங்களவனுக்கு தூக்கி கொடுத்த இந்தியா, தனக்கு சம்பந்தம் இல்லாத காஸ்மீரை வம்படியாக பிடித்து வைத்துள்ளது ஏன்? க்ச்சத் தீவை கொடுத்தது மாதிரி, காஸ்மீரையும் கொடுத்திட வேண்டியது தானே? வரட்டு கவுரவம் தடுக்குதோ?

      • கொஞ்சமாவது பொறுப்பா இருக்க உங்க பதில்… இது என்ன பங்காளிகள் சொத்து பிரச்னையா? கேட்டோன்ன தூக்கி கொடுக்க என்ன படையப்பா சிவாஜி மாதிரி நினைசீன்களோ… ஒரு நாடு தனக்கு சொந்தமான நிலத்தை இன்னொரு நாட்டுக்கு அப்படில்லாம் கொடுக்க முடியாது.. அப்படியே அது எடுத்துக்கன்னு சொன்னாலும் இன்னொரு நாடு அத எடுத்துக்க முடியாது.. அதனுடைய நடைமுறை சிக்கல் மிகவும் அதிகம்…

        சொத்தை பிரிக்கையிலே…இச்லாமபத்தையும், கராசியையும் தான்வே அவிங்க கேட்டாங்கே,… காஷ்மிர வேணான்னு சொல்லிட்டான்கவே… இப்ப சும்மா சண்டை போடுறதுக்காக கஷ்மிர கேக்கான்கே.. இப்படியே காஷ்மிர பாகிஸ்தானிடமும், அருனாச்சலை சீனாவிடமும் கொடுத்துட்டு, அப்படியே தமிழ்நாட்டை வாங்க யாரவது வராங்கல்லன்னு பார்த்துட்டு இருக்க வேண்டியதுதான்….

        • நேற்று பிரணாபின் அறிக்கை – பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.

          தனது சொந்த நாட்டு மக்களின் அத்தியாவசியப் பொருள் ஒன்றின் மீதான அதிகாரம் தனக்கு இல்லை என்கிறது இந்திய அரசு. (இதுவே, இந்த நாட்டின் மீதான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை (அமெரிக்காவிடம்தான் உள்ளது!) என்று வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை) ஆனால், எங்கள் நிலத்தை எங்களிடம் கொடு என்று உரிமை கோரும் காஷ்மீரிகளிடம் கொடுக்க என்ன நடைமுறை சிக்கல் உள்ளது. மேலும், காஷ்மீரை பாகிஸ்தானுக்கு தூக்கி கொடுக்க அவர்கள் போராடவில்லை. அவர்களுடைய நிலத்தின் மீதான தங்களது உரிமைக்காகவே போராடுகிறார்கள்.

          • பெட்ரோல் விலையை நிர்ணயிக்க எங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்கள் முதலாளிகள் என்ற முறையில், மத்திய அரசின் உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். மத்திய அரசு உத்தரவிட்டால், பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறுவோம்’ – பொதுத்துறை என்னை நிறுவனங்கள்…

            மற்றபடி காஷ்மீர் நாட்டின் எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாதவர்களெல்லாம் காஷ்மீரை பற்றி பேசுவது வேதனையாக உள்ளது….

            • Manithan, I am in same thoughts as of you in many other articles where you replied. But in this issue, we need to think practically, not simply with emotions. Let us not think about history. We can say 100 points,and they will say other 100 points. In present scenario, we are spending large number of human lives, money (50% of our budget to military) simply to protect Kashmir. Let me understand what we will loose if we give kashmir to Pak? You may ask what is the value of thousands of soliders who lost their lives in past? My answer is let us few more thousands of soldiers in future. We can invest this huge chunk of money in many development activities. Is it not? Again, don’t be emotional – thats what we are doing since last 30 years in this issue.

              Pl note that I am not justifying vinavu thoughts or against Indian army

              You know the basic reason why this issue start firing since 1970s – even though it does not happen since 1947? – simple reason is partition of Bangladesh. And its worst decision of india to interfere in pak internal matter – that too in a stage where we are struggling for our grown. That’s the reason they are very particular in separating kashmir from India as revenge. And continuous effect is blasts in India as they could not succeed in kashmir so far…and it will continue – since USA is behind the scene and it will contiue to maintain this issue between Ind/Pak for obvious reasons. I would say next big mistake is supporting Dalai Lama and going against China..Do u think a country can grow after creating aversions with two big neighbours…NEVER…

              Next question is what will happen if every state starts asking separation. Very simply we can crush those parties at the very early stage with our force/technology.

              • Srinivas Sir, Nice to see your objections to my points in a very positive manner.
                Here goes my comments on your points.

                \\we are spending large number of human lives, money (50% of our budget to military) simply to protect Kashmir\\

                The Army deployed at LOC is not just to protect kashmir, its to protect entire india. As you say if Kashmir is separated, still we need to deploy the same force in the new LOC may be at the border of Himachal. Cannot save even a single rupee by this separation.. You may have to fight against more militants!!!

                \\We can invest this huge chunk of money in many development activities\\

                Impossible. Spending money for defense is more common today. This is something similar to say a state government not to spend for police department. Also India’s military expenditure is very less comparing our neighbors china and Russia.

                \\what will happen if every state starts asking separation. Very simply we can crush those parties at the very early stage with our force/technology\\

                Not a good strategy. What if more than one state ask separation at once? Can you crush all the states at once!!! So always prevention is better than cure.

        • அப்படியே சிறப்பு பொருளாதார மண்டலங்களோட சிக்கல் எப்படினு சொல்லீட்டீங்கனா பரவாயில்லை,அது எந்த மக்களுக்கு உரிமையானது?

  3. If they know they are killing innocent people, why bury them? They could have burned them instead? Which fool wants to leave the evidence?
    Oh well these brahmin warriors will do anything right?

  4. ஆமாம் தம்பி “ஜெய்ஹிந்து” .காவி , அரச பயங்கரவாதத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கிறவன் தேசத்துரோகி . ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துப் பயங்கரவாதிகளும் , அவனுங்களுக்கு துணை போகிற அரச பயங்கரவாதமும் , இவுக காலை நக்கிப் பொழைக்கிற உன்ன மாதிரி ஆட்களும் தான் உண்மையான தேசபக்தனுங்கோ.

  5. போலி பாதிரிகளும், கிறித்தவ ஆராய்ச்சியாளன் உதயகுமாரும் எப்படி ஒரு இஸ்லாமியரை ஏற்றுகொள்வார்கள்?

  6. இந்துக்களை காபீர்கள் என்றும் இந்தியாவை தாரூல் கராம் என்பதுதான் இன்று வரை இந்துக்கள் குறித்த முஸ்லீம்களின் அனுகுமுறை.அரேபிய வல்லாதிக்கத்தை நிலை நிறுத்தும் திட்டப்படிதான் பாக்கிஸ்தான் பிரிவினை மேற்கொள்ளப்பட்டது.காஷ்மீரில் இருந்து இந்துக்களை துரத்தி அதை பாக்கிஸ்தானோடு இணைத்து விட வேண்டும் என்ற திட்டத்திற்கு பாக்கிஸ்தான் அரசு,காஷ்மீரில் பல தலைவர்கள்,இந்தியாவில் உள்ள பிற பகுதியில் வாழும் முஸ்லீம்களும் இந்த சதி திட்டத்திற்கு உடந்தைதான். கேரள முஸ்லீம் இளைஞரை்கள் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்று பின் காஷ்மீரில் இந்திய ராணுவத்தை எதிர்த்து ஆயுத போரில் ஈடுபட்டு செத்த கைதான இளைஞர்கள் குறித்து தாங்கள் அறிந்திருக்க வேண்டும். தாங்கள் கூடு பாதிக்கப்பட்ட இந்துக்களைக்குறித்து கட்டுரை எழுத வில்லையே? ஏன? காஷ்மீரில் வாழும் இந்துக்களைக் காப்பாற்றவே பாக்கிஸ்தான் காஷமீர் முஸ்லீம்கள் பிறபகுதி முஸ்லீம்கள் நடத்தும் இந்து ஒழிப்பு நடவடிக்கையை இந்திய ராணுவம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒரு மறைமுக போர்தான். இங்கு வெற்றியாருக்கு என்பதுதான் கேள்வியாக உள்ளது. நியாயமில்லைதான். ஆனாலும் ராணுவத்திற்கு வேறு வழியில்லை.இன்று இருக்கும் காஷ்மீர் எல்லைக் கோட்டை நிரந்தர இந்திய பாக்கிஸ்தான் எல்லை என அனைவராலும் ஒப்புக் கொள்ளும்வரை …… இப்பிரச்சனை திருமா ? காஷமீரில், பங்களாதேஷ் நாட்டில் வாழும் இந்துக்களின் நிலை குறித்த தங்கள் வலைதளத்தில் கட்டுரைகள் ஏதும் இல்லை. மேற்படி நாடுகளில் இந்துக்களின் நிலை குறித்து கட்டுரை எழுதுங்களேன்.அனைவரும் தெரிந்து கொள்வோம்.

Leave a Reply to jai hind பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க