Wednesday, October 16, 2024
முகப்புஉலகம்அமெரிக்காமுதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!

முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!

-

முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!

“பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்!”
“பறித்துக் கொண்டோரிடமிருந்து பறிமுதல் செய்வோம்!”
“நமது அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் பூசாரிகள்!”
“வால் ஸ்டிரீட்டில் இருக்கின்றன பேரழிவு ஆயுதங்கள்!”
“மார்க்ஸ் கூறியது உண்மை உண்மை!”

-இவை நியூயார்க் நகரின் வால் வீதியில் திரண்டிருக்கும் அமெரிக்க மக்கள்,  செப் 17 முதல் எழுப்பி வரும் முழக்கங்களில் சில. வால் வீதியென்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் தலை வீதி. பங்குச் சந்தையும், முதலீட்டு வங்கிகளும் குடி கொண்டிருக்கும் உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறை. அந்தக் கருவறையில் நுழைந்திருக்கும் அமெரிக்க மக்கள், முதலாளித்துவத்தின் சூதாட்டத் தேவதைகளை ஏசுகிறார்கள். தம்மைப் பீடித்திருந்த முதலாளித்துவப் பிரமைகளையும் ஒவ்வொன்றாய்த் தூக்கி வீசுகிறார்கள்.

செப் 11, 2001 இல் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானங்கள் வெடித்துச் சிதறியபோது அதனை பயங்கரவாதம் என்றது அமெரிக்க அரசு. சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று அதே நியூயார்க்கில் வெடித்திருக்கும் இந்த மக்கள் போராட்டத்தைக் கண்டு இது வர்க்கப் போர் என்று கூக்குரலிடுகின்றனர் அமெரிக்க முதலாளிகள்.
போர்தான். எந்த வால் ஸ்டிரீட் கொள்ளையர்களுக்காக ஆப்கான், இராக், லிபியா போன்ற நாடுகளின்மீது அமெரிக்க அரசு போர் தொடுத்ததோ, யாருக்காக உலக மக்களின் வளங்களையெல்லாம் கைப்பற்றுகிறதோ, அந்த வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்  என்று போர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள்.

செப்டம்பர் 17 ஆம்தேதியன்று வால் ஸ்டிரீட்டில் சில நூறு பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கேயே கூடாரமடித்துத் தங்கியபோது, அதனை ஏளனமாகப் புறந்தள்ளின அமெரிக்காவின் கார்ப்பரேட் ஊடகங்கள். போராட்டக்காரர்கள் மீது மிளகுத்தூளை பொழிந்து விரட்டியடித்தது போலீசு. அவர்கள் ஓடவில்லை. பின்னர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வாங்கவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கேயே குவிந்து விடுவார்கள் என்றோ,அமெரிக்காவின் எல்லா நகரங்களுக்கும் இந்தப் போராட்டம் பரவும் என்றோ அரசு எதிர்பார்க்கவில்லை.

“ஒரு முனையில் செல்வம் குவிவதன் விளைவாக, அதே நேரத்தில் இன்னொரு முனையில் வறுமைத்துயர் குவிகிறது” என்றார் மார்க்ஸ். அந்த இன்னொரு முனைதான் வால் ஸ்டிரீட்டில் குவிந்து கொண்டிருக்கிறது. செல்வம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பொசியும் என்ற முதலாளித்துவப் பித்தலாட்டம் அதன் தலைமையகத்திலேயே எள்ளி நகையாடப் படுகிறது.

“கடன் பாக்கிக்காக வீடுகளைப் பறிமுதல் செய்து எங்களை விரட்டுகின்றன வங்கிகள். வீட்டு வாடகை அல்லது மளிகை சாமான் இரண்டில் ஒன்று என நாங்கள் நெருக்கப்படுகிறோம். சோற்றுக்காக தெருவில் கிடக்கிறோம். வேலை இல்லை. இருந்தாலும் நியாயமான கூலி இல்லை. மருத்துவ வசதி இல்லை. ஒரு சதவீதத்தினருக்கு மட்டும் எல்லாம்  இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் 99% பேர். நாங்கள்தான் அமெரிக்கா!” என்று முழங்குகின்றனர் மக்கள்.

“நாம்தான் 99%. ஆனால் 1% நம்மை ஆள்கிறது. அரசாங்க கணக்கின்படி 5 கோடிப் பேர் (உண்மையில் 10 கோடி) வறுமையில் தவிக்கிறார்கள். 5 கோடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு. நமக்கு சிக்கன நடவடிக்கை. குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் முதலாளிகளின் கட்சிகள். வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றிவிட்டது. நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றித்தான் ஆகவேண்டும்”

எளிய மொழியில் வெளிப்படும் இந்த வர்க்க அரசியலின் தர்க்கம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. ‘இது வர்க்கப்போர்’ என்று அலறுகிறார் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் களத்தில் நிற்கும் மிட் ரோம்னி. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகிறார் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியைச் சேர்ந்த கிலென் பெக். வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதோ அதுதான் உலகின் முதன்மை அபாயமாம்! இசுலாமிய பயங்கரவாதம்  கம்யூனிசத்துக்கு வழி விட்டு ஒதுங்கிவிட்டது போலும்!

கம்யூனிச எதிர்ப்பின் தலைமையகத்திலேயே வர்க்கப் போராட்டமா? அமெரிக்காவில் இத்தீயை மூட்டிய சக்தி எது? பிரிட்டன், பிரான்சு,  கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக நாடு விட்டு நாடு தாவிப்பரவும் போராட்டத்தீயை மூட்டிய சக்தி எதுவோ அதே சக்திதான்!

‘நம்முடைய எதிர்காலமும் லண்டனைப் போன்றதுதானா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த உலகின் 3வது பெரிய பணக்கானரரான வாரன் பப்பெட் “அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வேகமாக நம்பிக்கை இழந்து வருகிறார்கள். விரக்தியாக மாறுவதற்குள் அதனைத் தடுக்க வேண்டும். இல்லையேல் அந்த விரக்தி தனக்குப் பொருத்தமான எதார்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும்” என்று எச்சரித்தார். பழம் தின்று கொட்டை போட்ட அந்த ஊகவணிகச் சூதாடியின் ஊகம் பொய்க்கவில்லை.

ஏன் எதற்கு என்ற விளக்கமில்லாமல், வெடித்துத் தெறிக்கும் கோபமாக சுழன்றடித்தது லண்டன் கலகம். வால் ஸ்டிரீட் போராட்டமோ அழுத்தமாக, விடாப்பிடியாக, தொடர்ச்சியாகத் தனது எதிர்ப்பைக் காட்டுகிறது. வால் ஸ்டிரீட் பகுதியின் சாலைகள் பூங்காக்கள் எங்கும் மக்கள் கூட்டம். கல்வி உரிமை பறிக்கப்பட்ட மாணவர்கள், வேலையில்லாதவர்கள், நியூயார்க் நகரின் போக்குவரத்து, துப்புறவுப் பணியாளர்கள், வங்கிகளிடம் வீட்டைப் பறி கொடுத்தவர்கள், மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள், ஊனமுற்றவர்கள், ஓய்வூதியக்காரர்கள், முன்னாள் இராணுவத்தினர், போர் எதிர்ப்பாளர்கள் எனப் பலதரப்பு மக்கள்! திரள் திரளாகக் கூடிநிற்கும் மக்களிடையே நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.

வெட்ட வெளியில் கூடாரம் அமைத்து 30 நாட்களாக வாழ்ந்து வரும் மக்களுக்கு உணவு உறக்கம் அனைத்தும் அங்கேயேதான். இலவச உணவுக்கூடங்கள், இலவச முடி திருத்துமிடங்கள், இலவச மருத்துவ முகாம்கள் என ஒரு புதிய சமூகமாகவே அவர்களைத் திரட்டுகிறது இந்தப் போராட்டம். தம்மிடம் உள்ள நூல்களைக் கொண்டு இலவச நூலகம் அமைக்கிறார்கள். மார்க்ஸ் முதல் நோம் சாம்ஸ்கி வரையிலான பலரது நூல்கள் விவாதிக்கப்படுகின்றன. இடது சாரி அறிஞர்களும், பல நாட்டு செயல்வீரர்களும் உரையாற்றுகிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்களின் இருட்டடிப்பை மீறி போராட்டச் செய்தியை உலகெங்கும் கொண்டு செல்கிறது திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள இணைய மையம். முர்டோச்சின் வால் ஸ்டிரீட் ஜர்னலை ஏளனம் செய்யும் விதத்தில், ‘கைப்பற்றப்பட்ட வால் ஸ்டிரீட்டின் ஜர்னல்’ என்றொரு பத்திரிகையைத் தொடங்கி 50,000 பிரதிகள் அச்சிடுகிறார்கள் போராட்டக்காரர்கள்.

தங்களுடைய உடைமைகளையும், உரிமைகளையும் பறித்துக் கொண்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்தான் என்ற கருத்து எங்கும் பரவி நிற்கிறது. அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரிக்கும் மாணவர்களின் கல்விக்கடன்கள், அதிகரிக்கும் இராணுவச் செலவுகள், அதிகரிக்கும் வரிகள்.. இவையெல்லாம் ஏன் என்பது குறித்து யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அட்டைகளும் காகிதங்களும் பேனாக்களும் வண்ணங்களும் தூரிகைகளும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன. முழக்கங்களை, ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் மக்கள்.

‘நாம் அனைவருமே பாலஸ்தீனியர்கள்தான்’ என்று ஒரு முழக்கம். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் வீடிழந்த பாலஸ்தீனியர்களையும், அமெரிக்க வங்கியிடம் கடன் வாங்கி வீட்டைப் பறிகொடுத்த அமெரிக்கர்களையும் பிரிக்கின்ற  எல்லைக்கோடு எது? அமெரிக்க நிதிமூலதனமும் இஸ்ரேலின் ஜியோனிசமும் கைகோர்த்து நிற்கும்போது வீடிழந்த அமெரிக்கனும் பாலஸ்தீனியனும் கைகோர்ப்பதில் என்ன தடை இருக்கிறது?

தம் துயரத்தையும் அதற்கான காரணத்தையும் விவாதிப்பதன் ஊடாக, தங்கள் பொது எதிரி உலக முதலாளித்துவம்தான் என்ற கருத்தொற்றுமைக்கு அவர்களைக் கொண்டு வருகிறது இந்தப் போராட்டம். வால் ஸ்டிரீட்டில் கூடியிருக்கும் இம்மக்கள் எந்த ஒரு அமைப்பினாலும் திட்டமிட்டுத் திரட்டப்படாதவர்கள். இது தன்னியல்பான போராட்டம் என்பதால், இதனைத் தம் நோக்கத்திற்கேற்ப வளைப்பதற்கு கூட்டத்தில் கலந்திருக்கும் தன்னார்வக் குழுக்கள் முயற்சிக்கின்றன. ஆனால் தன்னார்வக் குழுக்களின் அடையாள அரசியல், நுண் அரசியல் அனைத்தையும் பின்தள்ளி தம் சொந்த அனுபவத்தினூடாக வர்க்கப்போராட்ட அரசியலை உயர்த்துகிறது இந்தப் போராட்டம். “இப்போராட்டம் நிதிச்சந்தையின் செயல்பாடு குறித்த மக்களின் விரக்தியைக் காட்டுகிறது” என்று கூறி, அரசியல் ஆதாயம் தேட ஒபாமா முயன்று கொண்டிருக்கும்போதே, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ரூபர்ட் முர்டோச், கோச் போன்ற அமெரிக்க கோடீசுவரர்களின் வீடுகளை முற்றுகையிடுகின்றனர். இரண்டு கட்சிகளும் மக்களின் பிரதிநிதி இல்லை என்று முழங்குகின்றனர்.

“வங்கிகள் நம் வீடுகளைப் பறிமுதல் செய்தால், வங்கிகளைப் பறிமுதல் செய்வோம்! நகர அரசு பள்ளிகளை மூடினால் நாம் அரசை இழுத்து மூடுவோம்!” என்று முழங்குகிறார்கள். “கல்விக்கும், மருத்துவத்துக்கும், ஓய்வூதியத்துக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பணம் இல்லை. இந்த நெருக்கடியின் சுமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்” என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கூற்றை மக்கள் ஏற்கவில்லை.

வங்கிகளும் நிதிமூலதனச் சூதாடிகளும் உருவாக்கிய 2008 சப் பிரைம் குமிழி வெடிப்பையும், திவாலாக்கப்பட்ட வங்கிகளைக் காப்பாற்ற அம்முதலாளிகளுக்கு அரசு கொட்டிக் கொடுத்த பல இலட்சம் கோடி டாலர் மானியத்தையும் ‘நெருக்கடி’ என்ற சொல்லால் குறிப்பிடுவதையே மக்கள் ஏற்கவில்லை.

“உன்னுடைய நெருக்கடிக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம்” என்ற முழக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் நடைபெற்ற முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முழக்கம். அங்கிருந்து அது கிரீஸுக்கும் பிரான்சுக்கும் பரவியது. அதே முழக்கம் வால் ஸ்டிரீட்டில் எதிரொலிக்கிறது.

‘சந்தை விதிகள் எனப்படுபவை, இயற்கை விதிகள் அல்ல, மாற்றவொண்ணாத புனிதக் கோட்பாடுகளும் அல்ல’ என்ற புரிதலை தம்முடைய நடத்தையின் மூலம் மக்களுக்குப் புரியவைத்திருக்கிறார்கள் வால் ஸ்டிரீட்டின் நிதிமூலதனச் சூதாடிகள். தற்போது நடைபெறும் வால் ஸ்டிரீட் முற்றுகை அமெரிக்க முதலாளித்துவத்தையோ, உலக முதலாளித்துவத்தையோ நாளையே வீழ்த்திவிடப் போவதில்லை. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த பிரமையிலிருந்து மக்கள் விடுபட்டு வருவதை இப்போராட்டம் காட்டுகிறது.

ஒரே மாதத்திற்குள் வால்ஸ்டிரீட்டின் முழக்கங்கள் உலகெங்கும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘முதலாளித்துவம் ஒழிக’ என்ற ஒரே முழக்கத்தை பல்வேறு மொழிகளில் முழங்கின. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

லண்டன் பங்குச்சந்தையைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், பாரிசில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டு வளாகத்தின் எதிரிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருக்கின்றனர். கிரீஸ் விற்பனைக்கல்ல என்ற முழக்கத்துடன் நாட்டின் பொதுச்சொத்துகளை முதலாளிகளுக்கு விற்பதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான கிரேக்க மக்கள் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். இத்தாலியில் வேலைவாய்ப்பில்லாதவர்கள், மாணவர்கள், ஓய்வூதியம்பெறுபவர்கள் போன்றோர், ‘அவமதிக்கப்பட்டோர் அணி’ என்ற பெயரில் திரண்டு கிளர்ச்சியில் இறங்கியருக்கின்றனர். வங்கிகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன, போலீசு வாகனங்கள் எரிந்திருக்கின்றன.

ரோம் எரிந்து கொண்டிருக்கிறது. வால் ஸ்டிரீட் எரியக் காத்திருக்கிறது.

______________________________________________________

– மருதையன், புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. rome is burning, and the wall street is to be burned by the so for enduring war of those who toiled in economical, political and cultural exploitation of cappitalism that was ones there dream-savier. a marwelous analysis of the current situation in europien and north american continents.

  2. ம்ம்ம்… Occupy Wall Street ஆரம்பமாக காரணமாக இருந்தது கனடாவில் வான்கூவர் இலிருந்து வெளிவரும் ஒரு மகஸீன் (Adbusters).

    ////*Vancouver is the home of Adbusters, the anti-corporate, anti-consumerist non-profit organization and magazine that first suggested the Occupy Wall Street demonstration during the summer. This fact isn’t that well-known in the U.S. (much like the bimonthly magazine), but Canadian media have been pointing out lately with some pride…*////

    http://www.marketwatch.com/story/occupy-finally-comes-to-roost-in-vancouver-2011-10-13?reflink=MW_GoogleNews

  3. The same capitalism has produced computers,internet medicines and brought lot of innovations to the world. What about your stinking communism? Where is the innovation?

    Your China is not letting people to read about Arab spring or occupy wall street. If your solution is wonderful why to worry about people upsurge?

    Vinavu and viewers have “It is always green on the other side” mentality

    • இந்தியாவின் ஜனநாயகம் , சீனாவின் கம்யூனிசம் – அடிப்படையில் இரண்டுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு.

      இருக்கு … ஆனா இல்ல…

      சீன ஆட்சியாளர்கள் அப்படி சொல்வதால் சீனாவில் இன்னும் கம்யூனிசம் இருப்பதாக நம்பித் திரிபவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் சீனத்தின் ‘கம்யூனிசத்தை ‘ ஏற்றுக் கொள்ளாத வினவிடம் வந்து இதற்கு பதில் கேட்டால் சிரிப்பு தான் வருது.

      // What about your stinking communism? Where is the innovation?//

      1920 -களில் ஐரோப்பாவின் சேரியாயிருந்த ரஷ்யாவில் இருந்து தானே புரட்சிக்கு பின் உலகின் முதல் செயற்கைக்கோள் ( ஸ்பூட்னிக் 1 – 1957) விண்ணில் ஏவப்பட்டது?

      • If the system is proper, it should provide results consistently. After sputnic what are their innovation? Man I have spoken to many ex Russians,Armenians,ukrain people. Not ONE single person said well our communism system was perfect, Amerika spoiled it. They all are happy with democracy. Humanity needs freedom.

        It is always green on the other side

          • Dear FireVision
            Occupy wall street is about correcting the democracy, not asking for socialism or communism.
            OWC people feel Govt is controlled by Corporates which are owned by rich people.
            They want the Govt should really represent people.

            Iraq and Libya are dictatorship countries not democratic countries.
            In Iraq ,It is just greed for oil. America will get Oil and Iraq people will get freedom. A win win situation was expected by Americans but they failed due to religious issues of that region.

            In Libya, Though Gadaffi has run the country well (comparing bankrupt PIGS countries ) , people lacked freedom.
            If I tell you, I

            will give three meals a day,
            safe place to live,
            and little physical work
            and books for reading

            Does it sound like jail or a good place to live? It depends on how lazy you are.Even beggers are not committing crime and going to jail to live in these nice places. Ultimately Libyan people wanted freedom.
            Libyan people took help from western countries thinking they are friends. But they forget no body spends a penny without expecting a return.

            For Iran,It is interesting. The country openly states it will wipe out Isrel. Can the world afford a relegious war during tough economic times? And beyond that it has Sanni/siya internal fight with Saudis. And it is not just the interset of US to setup friendly puppet leader to get oil,it has relgious fight between whether sanni or siya will dominate. Oh EURO is now not in picture of reservce currency fight and Irans request for EURO for Oil is not the reason.

            “Theethum nanrum pirar thara vaaraa”

            If you really want to understand the political freedom, please go to China and call for a strike against Govt project and come and share your experiance.

            Right for the information
            Right for the speech
            are very important. Chinese cannot read about Arab spring or OWC like you do. Now compare with americans , you Chinese ,Libyan and analyze yourself

        • just adding to Ragu’s point.

          we got pyramids built from slavery, so what?
          can pyramids justify slavery? every king managed to
          build fabulous temples from public fund, does that
          mean… we want monarchies!?

          yes, russia managed to launch first satellite,
          its victory of government NOT for people.
          What happened to the people whose slavery sponsored
          the government’s showoff? its a symbol of exploitation,
          not a sign of victory if the feat is made possible through
          public fund where the actual public is sleeping with empty stomach!

          instead consider ipod or windows or mobile/internet technology… from
          western world which are made possible by private individuals/companies
          without putting a gun to some beggars head… blah blah. hope you get the point.

  4. என்ன இன்னும் அமெரிக்க அடிவருடி,சொம்புதூக்கி,அல்லக்கை
    புள்ளிவிவர புலிகளை காணவில்லை?
    அவர்களும் புரிந்து கொண்டுவிட்டார்களா என்ன?

    • இப்படி கீழ்தரமாக என்னை தானே சொல்கிறாய் ‘சிலந்தி’ ? கடந்த இரு வாரங்களாக வெளியூர் பயணம். இணையம் பார்க்கமுடியவில்லை. சரி, இந்த விசியம் பற்றி ஏற்கெனவே பழைய பதிவுகளில், நிறைய எழுதியுள்ளேன். பொருளாதார மந்தங்கள் மற்றும் வீழ்ச்சிகளுக்கான உண்மையான காரணம் பற்றியும். இதுவரை யாரும் சரியாக எதிர்வினையாற்றவில்லை. மேலும் தொடர்ந்து ஏன் இங்கு வீணாக ‘கதைக்க’ வேண்டும்.

      For example, ‘negative interest rates’ caused by Fed from 2004 பற்றி பேசியிருந்தேன். சாமினாதன் அங்கலேஸ்வர் அய்யர் எழுதிய அருமையான விளக்க கட்டுரை சுட்டியையும் இட்டிருந்தேன். மிக சிக்கலான விசியங்களை மிக எளிமை படுத்தி, கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்க்கும் இங்கு ‘விவாதிக்க’ ஒன்றுமில்லை. மேலும், உன்னை போன்ற வீணர்கள் இப்படி தனி மனித தாக்குதல்கள் செய்வது வேறு கொசுகடி போல். எனவே…

  5. America’s problem is that it failed to protect the free market. Capitalism works in best way when implemented in a free market. But American (global) market is becoming more and more monopolized markets. Consider Apple, GE etc. They don’t even tolerate other companies doing similar business like them. If everyone is allowed to do their own business (free market), capitalism will produce good outcomes like Linux (can a Chinese student do this?). Even companies like Apple, Microsoft etc were started by university students with small capital. But the problem is that, now the same companies don’t want to provide the same freedom to others.

    • //If everyone is allowed to do their own business (free market), capitalism will produce good outcomes like Linux (can a Chinese student do this?//

      இலவச மென்பொருளான லினக்ஸ் -க்கும் முதலாளித்துவத்திற் குமான தொடர்பு என்ன என்பதை விளக்க முடியுமா?

  6. அமெரிக்கனுக்கே தெரியாத விஷயத்தை எல்லாம் நமக்கு அள்ளித்தரும் அதியமான் அண்ணாச்சியை எங்கே காணோம்? மீசையில் மண் ஒட்டாத கதையை ரெடி பண்ண இவ்வளவு நேரமா?…..அய்யோ……அய்யோ…..

  7. //ரகசியமாக வைக்கப்பட்ட கலாம் வருகை :*பாதுகாப்பு கருதி அப்துல் கலாமின் கூடங்குளம் பயணம், நிகழ்ச்சி விவரம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது
    *நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பிற்கு கலாம் வந்தார்
    * நேற்று காலை சரியாக 9.30 மணியளவில், காரில் அணுமின் நிலைய வளாகத்திற்குள் நுழைந்தார். அவருடன், இந்திய அணுசக்தி கழகத்தலைவர் எஸ்.கே.ஜெயின் வந்தார்.
    * அணுமின் நிலையத்தில் அதிகாரிகள், விஞ்ஞானிகளின் ஆலோசனை நடத்திவிட்டு, அணுஉலை 1, 2ஐ ஆய்வு செய்த கலாம், அணுமின் நிலைய ஆதரவாளர்களையும் சந்தித்தார்.
    * அப்துல் கலாமிடம் பேட்டியெடுக்க தமிழ், ஆங்கிலம், மலையாள பத்திரிகை நிருபர்கள், “டிவி’ நிருபர்கள் ஏராளமானோர் இங்கு குவிந்தனர்
    *மதியம் 1.15 மணிக்கு நிருபர்களை சந்தித்த கலாம், முக்கால் மணி நேரம் பேட்டியளித்தார். அணுஉலை குறித்த நிருபர்களின் சரமாரியான கேள்விகளுக்கு, ஆசிரியர் போல் விளக்கமாக பதில் கூறினார்.
    *பிரச்னை தவிர்ப்பதற்காக கூடங்குளம் அணுமின் நிலையம், சுற்றுப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    * அணுஉலை ஆய்விற்கு கலாம் சென்றபோதும், அணு உலை ஆதரவாளர்கள் அவரை சந்தித்தபோதும், அதை படமெடுக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.//

    காலை 930 மணிக்கு உள்ளே சென்ற Dr . கலாம் மதியம் 1 .15 மணிக்கு முக்கால் மணி நேரம் பேட்டி அளித்துள்ளார்.

    பார்வையிட்டது 3 . 45 மணி நேரம், பேட்டி அளித்தது முக்கால் மணி நேரம்.

    3 . 45 மணி நேரத்தில் அப்படி என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

    இதில் பழாபோன தினமலம் எதிர்கருத்துக்களை தனது இணையதளத்தில் வெளியிடமாட்டேன் என்கிறது. சொம்புகளின் கருத்துகளை மட்டும் வெளியிடுகிறது.

    நன்றி:தினமலம்

      • Dear Ragu,

        Instead of arguments I submit some article for your view. Please read.

        அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

        ஊதியமும் சூழ்ந்து செயல் – திருக்குறள்.

        ‘எந்த அளவுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே, ஒரு செயலைத் தொடங்க வேண்டும்’ – நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கான மூல மந்திரம் இதுதான்! ஆனால், ‘இன்றைய வளர்ச்சி’ என்ற சொல்லாடல், எந்த அளவுக்கு இந்தக் குறளுடன் பொருந்திப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தது உண்டா?

        ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள்: ”மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்?” ஐன்ஸ்டீன் சொன்னார், ”மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம்

        உலகப் போரைப்பற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள் கல், வில்கொண்டு போரிடுவார்கள். ஏனெனில், அணு ஆயுதங்களால் இந்த உலகம் அழிந்து, அதன் பிறகு மீண்டும் ஒரு பெருவெடிப்பின் மூலம் உலகம் என்ற ஒன்று உருவானால், அப்போது மனிதர்கள் இப்படித்தான் போரிடுவார்கள்!” என்றாராம்.

        தோழர்களே… தூற்றவும், போற்றவும் ஆள் இல்லாத ஒரு தேசத்தில், ஆயுதங்களை வைத்துக்கொண்டு ‘நாம் வல்லரசு’ என்று கூக்குரல் இடுவதில் என்ன இறுமாப்பு இருக்கிறது?

        அணுப் பொருளாதாரம், வேறு எந்தப் பொருளாதாரத்தைக் காட்டிலும் இன்று மிகச் சூடான உரையாடல்களைக் கொண்டுள்ள விஷயம். ‘தாங்கள்தான் பொருளாதாரத்தின் போக்கையே தீர்மானிப்பவர்கள்’ என்று காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், சில மேட்டுக்குடி அறிவுஜீவிகளும், அணுப் பொருளாதாரம் என்பதை அணு அரசியலாக மாற்றி இருக்கிறார்கள். இன்று வரையிலும் கணக்கு வழக்கு, லாப – நட்டம் காட்ட முடியாத துறை என ஒன்று இருந்தால், அது அணு சக்தித் துறை மட்டும்தான்!

        எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், அமெரிக்காவுக்கு வேலை செய்கி​றோமா அல்லது இந்தியாவுக்கா என்றே தெரி​யாமல் இயங்கி வரும் ஒரே அரசுத் துறையும் இதுதான்!

        ‘உலகின் அடுத்த வல்லாதிக்க அரசுகளாக சீனாவும் இந்தியாவும்தான் இருக்கும்’ என்று கணிக்கிறார்கள். எதை வைத்து?

        ‘இந்தியாவிடம் 100 அணுகுண்டுகள் இருக்கின்றன. சீனாவிடமோ 1,000 அணு​குண்டு​கள் இருக்கின்றன. என்னிடமோ வெறும் 500 அணுகுண்டுகள்தான்! சீனாவை வளரவிட்டால், அவன் நம் குடுமியைப் பிடிப்பான். சீனாவுடன் இந்தியா கைகோத்தாலும், உலக நாட்டாமையான எனக்கு ஆபத்துதான். மூச்சுத் திணறும் வர்த்தகப் போட்டியில் சறுக்கினாலும் முதலாளித்துவத்தை, சீனன் உள்ளே அனுமதிக்க மாட்டான். மூச்சுத் திணறிச் செத்தாலும், இந்தியன், முதலாளித்துவத்தின் காலை விட மாட்டான். ‘வல்லரசாக்குகிறோம் உங்களை’ என்று சொல்லி அவன் வறுமையை நாம் பயன்படுத்திக்கொள்வோம்’ என்று அமெரிக்கா சிந்தித்ததன் விளைவுதான் அணு ஒப்பந்தம்.

        இப்படி எல்லைப் பிரச்னை முதற்கொண்டு போட்டி நாடான சீனாவுக்கும் நமக்கும் இடையே பள்ளம் பறித்து, திரி கிள்ளி யார் மாட்டிக்கொண்டாலும், ‘ஒரு எதிரி முடிந்தான்’ என்று கொக்கரித்துக் கொண்டாடக் காத்திருக்கிறது வல்லாதிக்கம். அதன் பிறகு ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்று முதுகுக்குப் பின்னால் கத்தியை வைத்துக்கொண்டு அமெரிக்காவும் சீனாவுமோ அல்லது அமெரிக்காவும் இந்தியாவுமோ கட்டித் தழுவிக்கொள்ளும். முதுகுக்குப் பின்னால் குத்தும் பழக்கம் நம்மிடம் இல்லை என்பதால், அமெரிக்காவிடமும் சீனாவிடமும் நாம் மார்பு காட்டி நிற்போம். எனவே, அபாயச் சங்கு அணு ஒப்பந்த வடிவத்தில் ஊதப்பட்டுவிட்டது!

        ‘மக்கள் பாடையில் போனால்தான் என்ன, பட்டினி கிடந்தால்தான் என்ன? நமக்கு பென்ஸ் காரும், பசிக்கு கேக்கும் இருக்கிறது’ என்கிற நிலைப்பாட்டில்தான் அரசியல் கட்சிகள் இந்த அணு விஷயத்தில் இயங்கி வருகின்றன. ‘அணு… அதன் பாதிப்பு என்ன?’ என்பதில் துளியேனும் அக்கறை காட்டப்பட்டு இருந்தால், இன்று இத்தனை அணுமின் நிலையங்கள் இந்தியாவில் தோன்றி இருக்காது.

        கனிமொழி தனது நாடாளுமன்ற உரையில் அணுமின் நிலையங்களின் தேவையைப்பற்றி, அதன் அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசி இருந்தார். அவரின் உரை ‘காலச்சுவடு’ இதழில் வெளியாகி இருந்தது. அதற்கு எதிர் வினையாக, அணு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அந்தக் கடுப்பில், அரசு நூலகங்களுக்கான ‘காலச்சுவடு’ இதழ் சந்தாவை நிறுத்திவிட்டார்கள். சந்தா நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று சொல்லப் படவில்லை. ‘இதுவாகவும் இருக்கலாம்’ என்பது என் சுய அனுமானம். அதாவது, அணு… அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டு உள்ளது!

        ஜப்பான், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளின் அரசியல் எப்படி அணுவால் தீர்மானிக்கப்படுகிறதோ, அது போன்றதொரு நிலை இந்தியாவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. வல்லாதிக்கங்களிடம் இருந்து பணம் வாங்கிவிட்டு, அரசியல்வாதிகள் விலைபோய் விடுவார்கள். அவர்கள் அனுமதித்த அணு மின் நிலையங்களை, ஏன் அணு சக்தித் துறையையே இயக்குவது டாடா, பிர்லாக்களாகத்தான் இருப்பார்கள்.

        அணு விஷயத்தில் அரசியல் இவ்வாறு சீர்குலைந்து கிடக்க, நம் அறிவியலாவது அறிவுபூர்வமானதாக இருக்கிறதா என்றால், அதுவும் கேள்விக்குறியே!

        இந்தியாவின் ஒட்டுமொத்தக் கடற்கரையின் நீளம் 7,500 கி.மீ. சுனாமியின்போது, குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை உள்ள கடலோர மாநிலங்களில், ஒன்று மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டது, அது தமிழகம். அதிலும், 13 கடலோர மாவட்டங்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாயின. பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே நம் அரசு இயந்திரத்தால் மறுவாழ்வு நடவடிக்கை ஒன்றைக்கூட முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. அதற்கும் வெளிநாட்டு ஏஜென்ஸிகள்தான் வரவேண்டி இருக்கிறது. மன்மோகன் சிங்கும், ஜெயலலிதாவும் சவேரியர் கோயிலில் நின்றுகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதே போல் தமிழ் நாட்டில் வெள்ள நிவாரணப் பணியின்போது, உதவிப் பொருட்களை வாங்கப் போய், அந்த நெரிசலில் 42 பேர் உயிர் இழந்தார்கள். இது நம்மிடையே உள்ள பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்பு உணர்வுக்கு ஓர் உதாரணம்!

        அதே சமயம், ‘நம் நாட்டில் உள்ள பல விமானிகள் கள்ளச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள்’ என்கிற அதிர்ச்சிகரமான தகவலை நான் விமானத்தில் சென்றுகொண்டு இருந்தபோது படித்தேன். நம் மக்களின் பாதுகாப்பைப்பற்றி நாம்கொண்டுள்ள அறிவு இவ்வளவுதானா?

        சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். ஜப்பானில் ஏற்பட்ட அணு விபத்துக்குப் பிறகு, அடுத்த பத்தே நாட்களில் சீனாவில் ஒரு மாநாடு ஒன்றைக் கூட்டுகிறார்கள். சீனாவுக்கும் உதயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தமிழகத்தின் கடைக்கோடியான நாகர்கோவிலில் இருக்கும் என்னை சீனாவுக்கு அழைத்து, சூரிய ஒளி ஆற்றல் பற்றிப் பேசச் சொல்கிறார்கள். அந்த மாநாட்டில் அணு தவிர்த்து, புதிய ஆற்றல் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான வாத, விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னும் ஐந்து வருடங்களில் நம்மிடம் இருக்கும் சூரிய ஒளி ஆற்றல் சந்தையை அவர்கள் எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்.

        ஒரு நாட்டில் ஆபத்து ஏற்பட்டால், அடுத்த சில நாட்களில் அதே ஆபத்தைத் தடுக்கும் முன்னேற்பாடுகளைச் செய்யும் அவர்கள் வல்லரசு ஆவார்களா? அல்லது ‘இந்தோனேஷியாவில் சுனாமி தாக்கி 5 மணி நேரத்துக்குப் பிறகு இந்தியாவில் சுனாமி ஏற்படும்’ என்பது தெரிந்தும்… நடவடிக்கை எடுக்காத நாம் இந்த உலகத்துக்குத் தலைமையேற்கப் போகிறோமா?

        காற்றில் கலந்திருக்கும் 4 சதவிகிதக் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த 48,000 வருடங்கள் உயிர்ப்புடன் இருக்கும் கதிரியக்கம் கொண்டுள்ள அணு மின் நிலையங்கள் தேவைதானா? 40 வருடங்கள் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எத்தனையோ தலைமுறைகளை அழிக்க நமக்கு யார் உரிமை தந்தது?!

        கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவின் கைகா என்கிற இடத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் தீ விபத்து நடந்தது. அந்த நிலையத்தின் இயக்குநர் குப்தா, ‘ஆபத்தாக எதுவும் நடக்கவில்லை’ என்று செய்திகளில் சொல்கிறார். ஆனால், ‘விபத்து ஏற்பட்டது உண்மையா இல்லையா? அது எவ்வாறு ஏற்பட்டது? அதை எப்படி அணைத்தீர்கள்?’ என்பன போன்ற கேள்விகளைக் கேட்பதற்கும்கூட நமக்கு உரிமை மறுக்கப்படுகிறது!

        சமீபத்தில் பீகாரில் நிதிஷ்குமார், அங்கு உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஐந்தாம் வகுப்புத் தேர்வு ஒன்றை நடத்தினார். அதில் 8,000 பேர் தோல்வி. இந்த லட்சணத்தில் இருக்கும் ஆசிரியர்களால், அடிப்படை அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டால், குழந்தைகளுக்கு எவ்வாறு அறிவியல் ஆர்வம் வரும்… வளரும்? ‘நான் என்னவாகப் போகிறேன்?’ என்றே தெரியாமல், பணம் சம்பாதிக்கலாம் என்கிற ‘பாப்புலர் கல்ச்சர்’கொண்டு வளரும் தலைமுறை இன்னொரு பக்கம்… ஆக, முறையான கல்வித் தலைமையும் நம்மிடம் கிடையாது.

        இத்தனைக்குப் பிறகும் நாம் ஏன் வல்லரசாக விரும்புகிறோம்? காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்து வருகிற தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம். ‘அமெரிக்காவிடம் உள்ளதுபோல அணு ஆயுதங்கள் நம்மிடம் இருந்தால், நாமும் நாட்டாமை செய்யலாம்’ என்கிற நினைப்புதான் வல்லாதிக்கம் பெறுவதற்கான அடிப்படை.

        சரி, அப்படியே வல்லரசு ஆகித்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்? குளங்களை வெட்டி குடிமராமத்து செய்து வாழ்ந்தோமே… அது வளர்ச்சியா? அல்லது குளங்களை மூடிவிட்டு, அதன் மேல் பாலங்கள் கட்டுகிறோமே… இது வளர்ச்சியா?

        மீண்டும் ஒரு முறை மேலே உள்ளக் குறளைப் படியுங்கள். வளர்ச்சி என்பது விகிதங்கள் சொல்வதில் இல்லை. வறுமையைப் போக்குவதில் இருக்கிறது. பண வெறி பிடித்த முதலாளிகள், தன்னலம் மட்டுமே கருதக்கூடிய விஞ்ஞானிகள், மக்கள் மத்தியில் உண்மைகளைச் சொல்லாமல் ரகசியத்தன்மை வாய்ந்த அரசியல்… இவை மூன்றும்தான் ஒரு நாட்டுக்கு ஆபத்து. இந்தக் கட்டுமானத்தை உடைப்பதுவே இந்தத் தொடரின் நோக்கம். நம் அனைவரின் நோக்கமாகவும் இது மலரட்டும். இந்தக் கட்டுடைப்பில் நீங்களும் பங்கேற்கலாம்.

        எப்படி?!
        – அதிரும்…

        யார் இந்த உதய குமாரன்?

        இந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர் டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

        இவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய், சமூகப் பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்​காகவும், மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்ல​வும் பல விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.

        இவர் அணு சக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணல் போன்ற கனிமங்​களில்இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட… அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் கண்டது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழா வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!

        களப் பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக எழுதவும் ஊக்கம் தந்த இவரின் பேராசிரியர் எபினேசர் பால்ராஜும் புற்றுநோயால் இறந்தார். எனவே, ‘புற்றுநோய் கல்வி’ என்கிற புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.

        ‘தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, ‘கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப் டிசாஸ்டர்’, ‘கிரீன் பொலிட்டிக்ஸ் இன் இண்டியா’ புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். ‘அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் கல்விச் சாலை ஒன்றினை, மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி வருகிறார்.

        தமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அணு சக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று திரட்டி 2009-ல், ‘அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராகஇருந்து, சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார் நம் உதயகுமாரன்!

        • \\யார் இந்த உதய குமாரன்\\

          உதயகுமாரின் உண்மை முகம் கீழ்க்கண்ட இணைப்பில் தோலுரிக்கப்பட்டுள்ளது..
          https://www.vinavu.com/2011/10/10/koodankulam/#comment-50246

          உதயகுமார் ஒரு கிறித்தவ மத ஆராச்சி கட்டுரையாளர் என்பதும், இந்து, இஸ்லாம் மதங்களை இழிவு படுத்தி எழுதிய ஆய்வு கட்டுரைக்காக அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்றும் தெளிவாகிறது.. ஒரு கிறித்தவ ஆராய்சியாளரும், போலி பாதிரி கூட்டங்களும் சேர்ந்து நடந்தும் மாமேதை கலாம் அவர்களையே அவமதிக்கும் கூடங்குளம் போராட்டம் எந்த அந்நிய சக்தியின் பண பலத்தால் ஊக்குவிக்கப்படுகிறது எனபது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்… உண்மை முகம் வெளிவரும்…

          • //உதயகுமாரின் உண்மை முகம் கீழ்க்கண்ட இணைப்பில் தோலுரிக்கப்பட்டுள்ளது.//.

            இந்த மக்களின் மீது ஒரு கிறித்தவனுக்கு உள்ள கரிசனம் பையா போன்ற இந்துவுக்கு இல்லாதது பலவற்றை யோசிக்க வைக்கின்றது.

            //மாமேதை கலாம்//

            கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் வராது என இந்த மாமேதை கூறியிருக்கிறார். முன்பு நிலநடுக்கம் வராத பகுதிகளாக கணிக்கப்பட்ட தமிழகத்தின் பல பகுதிகள் நிலநடுக்கம் வருவதற்குண்டான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளாக கூறப்பட்டுள்ளன என்பது இந்த விஞ்ஞானிக்கு தெரியாமல் போய்விட்ட மர்மம் என்ன!

            • கிறித்தவனின் கரிசனத்தை ரொம்பவும் வியக்காதீர்… கிழக்கிந்திய கம்பெனிகாரனும் இதே கரிசனத்தொடுதான் இந்தியாவுக்குள்ள அடியெடுத்து வைத்தான்…
              மதத்தை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவனை அறிவாளி என்று ஒத்துக்கொள்ளும் நாம், அறிவியலை கற்று, ஆராய்ச்சி செய்து, ஆசிரியராக பணியாற்றி, இஸ்ரோவில் விஞ்சானியாக பணிபுரிந்து, தேசிய அறிவியல் ஆலோசகராக பணியாற்றி, குடியரசு தலைவராக பணியாற்றிய கலாமை மாமேதை என்று கூறுவதை ஒப்ப மறுக்கிறோம்..
              அணு உலை பற்றி உதயகுமாரனுக்கு தெரிந்திருப்பதை விட கலாமுக்கு அதிகம் தெரியும்…

  8. Dear sir,
    The experiments of human beings with two major ideological discourses namely capitalism and communism in the post modern era have proved one unpalatable truth. That is, both these ideologies are structurally weak. Russia pathetically failed in communism. What is being followed as political ideology in China, Cuba and other communist countries also does not corroborate anything associated with communism. i do not think that in those countries people are living with equality in terms of wealth, property, employment et al. I do not think a space scientist in a communist country is getting the same salary of a school teacher. Actually communist ideology has been reduced to a political terminology after being stripped off its sheen which it had earlier. It is just like DMK (Dravida Munnetra Kazhagam)which does not have ‘dravidam’ in its political manifesto these days.

    Communism is a Utopian concept whereas capitalism is a reality. Let us swallow one fact even if tastes bitter. All the countries do not share sympathy with communism. All are invariably capitalist countries. The globalisation is a monster which wont allow any country in isolation. American citizens are protesting their government not because they do not have employment and suffering from debt but because of their over confidence and miscalculation of their country’s ability to withstand financial recession. the level of disappointment and feeling of being cheated have taken the form of this protest. The same American civil society kept silence when their country invaded Iraq. They were the same people who accepted their leaders’ version that they were/are under attack and thus giving mandate to their political and military leadership to rampage the countries which can not hit back. They were the ones who showed the arrogance of capitalism. If they get job and the banks do not seize their property, they will maintain their capitalist arrogance for ever.

    The issue is not with the capitalism but with the distribution of capitalist benefits to others. This is vulgar side of capitalism. More it is just, less the upsurge will be. Concentrating wealth in one place and draining out the other extreme is dangerous, be it communism or capitalism. (please read Orwell’s Animal Form )Is there any one in the world who is ready to say that he would not enjoy or touch something which is the byproduct of capitalism? If he says yes, it will be negligible blurt.

    Regards.
    Saravanan.k

  9. முதலாளித்துவத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டாலும், அதன் பலவீனத்தை மனதில் உணர்ந்தாலும், மீசையினை காப்பு வைத்து மறைத்து (வீம்புடன்)போராடும் வாள்(ய்)வீச்சு வீரர்கள் பரார்! பரார்! வால் ஸ்ட்ரீடின் வாலினை வெட்டிட கூடிய தோழர்களின் போராட்டம் வென்றிட ஒன்றிடுவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க