Saturday, May 25, 2024
முகப்புஉலகம்அமெரிக்காகூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

-

ஊடகங்களின் புறக்கணிப்பையும் மீறி, பெருவாரியான மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடந்து முடிந்த கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்
ஊடகங்களின் புறக்கணிப்பையும் மீறி, பெருவாரியான மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடந்து முடிந்த கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடைபெற்ற மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்திப் பணிய வைத்துவிடவே அரசு முயன்றது. ஆளும் வர்க்க ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்தன. அண்ணா ஹசாரே என்ற ஒரு கோமாளி நடத்திய சர்க்கஸ் வித்தையையும், அதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் நேரலை ஒளிபரப்பில் காட்டி, ஊருக்கு ஊர் நாலு ஊழல் ஒழிப்புக் கோமாளிகளை உருவாக்கிய ஊடகங்கள், கூடங்குளம் போராட்டத்தைப் புறக்கணிக்கவே செய்தன என்பதை விளக்கத் தேவையில்லை. கூடங்குளம் போராட்டத்தை நாடறியச் செய்தால் அது, நாடு முழுவதும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றவைக்கும்  அத்தகைய சூழ்நிலையை தங்களது எசமானர்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் ஊடகங்கள் அறியும்.

ஆயினும் ஊடகங்களின் புறக்கணிப்பையும் மீறி இடிந்தகரையில் நடைபெற்ற மக்கள் போராட்டம் முதல் கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. “அணு உலையால் ஆபத்தில்லை; சுனாமி தாக்கினாலும், நிலநடுக்கம் வந்தாலும் அணு உலை அசையாது. உங்கள் அச்சம் அடிப்படையற்றது. போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று தனது உண்மையான கருத்தை, தனக்குரிய தோரணையில் அறிவித்தார், ஜெயலலிதா. அம்மாவின் ‘வேண்டுகோள்’ ஏற்கப்படாவிட்டால், அடுத்து லத்திக்கோல் வரும் என்பதே மரபு. எனினும், மூவர் தூக்கு பிரச்சினையில் நடந்ததைப் போலவே, மக்கள் போராட்டத்தின் உறுதி, ஜெயலலிதாவின் மீது பெருந்தன்மையைத் திணித்தது; பிரதமர் திருவாளர் கல்லுளிமங்கனின் மவுனம், தலைவியின் மீது ‘புரட்சி’யைத் திணித்து. விளைவு  “மக்களுடைய அச்சம் அகற்றப்படும் வரையில் கூடங்குளம் அணு மின்நிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும்” என்ற தமிழக அமைச்சரவைத் தீர்மானம்.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ‘அம்மா’வின் வேண்டுகோளை புறக்கணித்ததையடுத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது, ஜெ அரசு
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ‘அம்மா’வின் வேண்டுகோளை புறக்கணித்ததையடுத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது, ஜெ அரசு

சுயமாகச் சிந்திக்கும் மக்களையோ, தொண்டர்களையோ ஜெ. ஒருபோதும்  விரும்புவதில்லை. மொத்த தமிழகத்துக்காகவும் சிந்திக்கும் பொறுப்பைத் தன்னந்தனியாக ஏற்றுக்கொண்டு, மேசையைத் தட்டும் பொறுப்பை மட்டுமே மற்றவர்களுக்கு ஒதுக்கும் தாயுள்ளம் கொண்டவர். இடிந்தகரையிலிருந்து அம்மாவுடன் பேசுவதற்கு வந்த பிரதிநிதிகள், ஊருக்குத் திரும்பிச் சென்று, போராடும் மக்களின் கருத்தையும் கேட்ட பின் தங்களது முடிவை அறிவிப்பதற்கே விரும்பினர். ஆனால், அதற்கு முன் அந்தப் பொறுப்பையும் அம்மாவே ஏற்று, சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்து, இடிந்தகரை போராட்டத்தை கோட்டையிலிருந்தே வாபஸ் வாங்கிவிடக் கூடும் என்று அஞ்சியதாலோ என்னவோ, கோட்டை வளாகத்திலேயே அவர்கள் அறிவித்துவிட்டனர்.

தமிழக அரசின் தீர்மானம் ஒருபுறமிருக்க, டிசம்பரில் இயங்கத் தொடங்குவது என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அணு மின்நிலையப் பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கூடங்குளத்தை மூட நேரிட்டால், இந்திய-ரசிய கூட்டுத் தொழில் முயற்சிகள் பலவும் பாதிக்கும் என்று ரசியா எச்சரித்திருக்கிறது. கூடங்குளத்தில் அரசு தோற்றுவிட்டால், ஜெய்தாபூர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் அணுமின் நிலையங்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் கிளர்ந்தெழும். மேலும், சிங்குர், நந்திகிராமம் பிரச்சினைகளைப் போலன்றி, இதன் பரிமாணம் மிகவும் பெரிது. இந்தியாவின் அணுசக்தி கனவினால் அமெரிக்க, பிரெஞ்சு பன்னாட்டு முதலாளிகள் அடையவிருக்கும் கொள்ளை இலாபம், அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளின் இலாப வெறி, அணு மின்நிலையங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு… போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன.

தனியொரு பிரச்சினையாகக் கையாண்டு தீர்வு கண்டுவிடக்கூடிய பிரச்சினை அல்ல கூடங்குளம் பிரச்சினை என்ற போதிலும், அதன் குறிப்பான அபாயங்கள் நம் கவனத்துக்குரியவை. ஃபுகுஷிமா விபத்தினைத் தொடர்ந்து ரசிய அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய ஒரு ஆய்வறிக்கையை ரசிய அரசு நிறுவனங்கள் அதிபர் மெத்வதேவிடம் அளித்திருக்கின்றன.  வெள்ளம், தீ, நில நடுக்கம் முதலான இயற்கைப் பேரழிவுகள் முதல் மனிதத் தவறுகள் வரையிலான காரணங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் ஏற்பாடுகள் ரசிய அணுஉலைகளில் இல்லை என்று கூறுகின்றது அந்த அறிக்கை. “அதுநாள் வரை வெளிப்படையாகச் சொல்லப்படாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று நார்வேயின் ஆற்றல் தொழில்நுட்பத்துறையின் தலைமைப் பொறியாளர் ஓலே ரிஸ்தாத் இவ்வறிக்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.

அவ்வறிக்கை பட்டியலிட்டுள்ள எல்லா குறைபாடுகளையும் ஆராயத் தேவையில்லை. ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். நில நடுக்கம் வந்தால் அணு உலையைப் பாதுகாப்பதெப்படி என்ற பிரச்சினை, ரசிய அணுஉலைகளின் வடிவமைப்பின்போது கணக்கில் கொள்ளப்படவே இல்லை என்று கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால், இந்திய அணுசக்தித் துறை இந்த உண்மையை வெளியில் சொல்லவேயில்லை. அணுமின் நிலையத்தின் 1.6 கி.மீ. சுற்றெல்லையில் மக்கள் குடியிருப்பு இருக்கக் கூடாது என்பது மிகவும் அடிப்படையான உலகறிந்த ஒரு விதி. ஆனால், கூடங்குளம் அணுமின்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுனாமி குடியிருப்புகளை அரசே கட்டிக் கொடுத்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு குறித்த இந்திய அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள இவ்விரு எடுத்துக் காட்டுகளே போதுமானவை.

சுனாமியோ, நிலநடுக்கமோ வந்தால்தான் அணுலைகளுக்குப் பிரச்சினை என்ற பார்வையே பிழையானது. அமெரிக்கா, கனடா, பிரான்சு ஆகிய நாடுகளில் இதுவரை நடந்துள்ள விபத்துகள் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்டவை அல்ல. வடிவமைப்பு தவறு மற்றும் இயக்குபவரின் தவறினால் விளைந்தவை. சமீபத்திய சில பத்தாண்டுகளில் 17 முறை விபத்தின் விளிம்பிலிருந்து அமெரிக்க அணுஉலைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. உயர் வெப்பமும் உயர் அழுத்தமும் மிகவும் சிக்கலான தொழில்நுட்பமும் கொண்ட அணு உலைகளில், ஏதேனும் ஒரு இடத்தில் நேரும் சிறு பிழை, சங்கிலித்தொடர் போல முற்றிலும் எதிர்பாராத விளைவுகளைத் தோற்றுவிக்கும். அந்த வகையில் ஃபுகுஷிமா விபத்தைக்கூட எதிர்பாராதது என்று கூறுவது ஏமாற்றுவேலை. தீவிர நிலநடுக்கப் பகுதி என்று அறியப்பட்ட இடத்தில் 6 அணு உலைகளை வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த கொதிநீர்  உலைகளின் வடிவமைப்பிலும் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாட்டிலேயே இவை தொடர்பான உண்மைகள் இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஃபுகுஷிமா விபத்து நேர்ந்தபோது 30 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதியிலிருந்து வெளியேறினால் போதும் என்றனர்; அமெரிக்கா தனது குடிமக்களை 90 கி.மீ. சுற்றெல்லைக்குள் இருக்கவேண்டாம் என்றது. பிறகு 220 கி.மீ தூரத்தில் உள்ள டோக்கியோ நகரில் குழாய்த் தண்ணீரில் கதிர்வீச்சு இருப்பது தெரிந்தது. பின்னர், அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவின் கடற்பரப்புகளில் கதிர்வீச்சு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணுசக்தி துறையின் செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி, புகுஷிமாவில் நடந்தது அணுஉலை விபத்து என்று ஒப்புக்கொள்வதற்கே பத்து நாள் ஆனது. “இது விபத்தெல்லாம் இல்லை. விபத்தைத் தடுப்பதற்கு நடக்கும் ஒத்திகைப் பயிற்சி” என ஜப்பான்காரனே யோசித்துப் பார்த்திருக்க முடியாத கோணத்தில் ஃபுகுஷிமாவுக்கு அன்று விளக்கம் அளித்தார், இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே.ஜெயின்.

ஹிரோஷிமாவில் இலட்சக்கணக்கில் மக்கள் செத்து விழுந்ததைப் போல ஃபுகுஷிமாவில் சாகவில்லைதான். இதை வைத்து இந்த அபாயத்தை குறைத்து மதிப்பிட்டுவிட க்கூடாது. செர்னோஃபில் விபத்தில் கூட 32 தீயணைப்பு வீரர்கள்தான் உடனே இறந்தனர். ஆனால், அதன்பின் புற்றுநோய், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,40,000 பேர். இறந்தவர்கள் 70,000 பேர். உண்மையான எண்ணிக்கை இதைப் போல 10 மடங்கு என்று கூறுகிறது நியூயார்க் அகாதமி ஆஃப் சயின்சஸ் என்ற ஆய்வு நிறுவனம்.

மக்கள் போராட்டத்திற்கு ஆதராவாக புரட்சிகர இயக்கங்கள்

அணு மின்ஆற்றலின் பிரச்சினைகள் குறித்து பல அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் போதுமான அளவு எழுதியிருக்கிறார்கள். அணுமின் நிலையம் இயங்கும்போது நேரும் விபத்து என்பது அதன் பிரச்சினைகளில் ஒரு அம்சம் மட்டுமே. விபத்து நேராமல் கூடப் போகலாம். ஆனால், இயங்கி முடித்தபின் அந்த மின்நிலையமும், அணுக்கழிவுகளும் தோற்றுவிக்கும் பிரச்சினையிலிருந்து தப்பவே முடியாது.

அணு ஆற்றலின் அபாயம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாதபோது, அதன் தவிர்க்க இயலாமை குறித்து அரசும் ஆளும் வர்க்கமும் பேசத் தொடங்குகின்றன. அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், நகரங்கள், பெருகி வரும் மின்சார சாதனங்கள், நுகர்பொருட்கள் ஆகியவற்றைக் காட்டி, இந்த மின்சாரத் தேவையை ஈடுசெய்ய வேறு என்ன வழி என்பதை நீங்கள் கூறுங்கள் என்று நம்மைக் கேட்கிறார்கள். அந்நியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகள், அவர்களுக்கான தடையில்லா மின்விநியோகம், உலகமயம் தோற்றுவிக்கும் நகரமயம், நுகர்பொருள் கலாச்சாரம், அதற்கான கேளிக்கை விடுதிகள், மால்கள், ஒளிவெள்ளத்தில் திளைக்கும் நகர்ப்புறக் கடைவீதிகள் … என்று பெரும்பான்மை மக்களைச் சுரண்டுகின்ற, ஒதுக்குகின்ற ஒரு வளர்ச்சிப் பாதையைத் தீர்மானித்துக் கொண்டு, அதற்கு மின் விநியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனை கூறுமாறு அவர்கள் நம்மிடம் கோருவது அயோக்கியத்தனம். காற்றாலை, சூரிய ஒளி என்று மாற்றுகள் குறித்து நாம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம்.

அணு மின்நிலையம் என்ற வழிமுறை நமது மின் தேவை குறித்த பொருளாதாரரீதியான கணக்கீட்டிலிருந்து எட்டப்பட்ட முடிவு அல்ல. பொருளாதாரரீதியிலும் இது பெரும் செலவு பிடிப்பது; சுயசார்பானது அல்ல; உடனே ஆகக்கூடியதும் அல்ல. அணுமின்சாரம் குறித்த இந்த சாமியாட்டம், இந்தியஅமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க, பிரெஞ்சு அணு உலை உற்பத்தியாளர்களின் வர்த்தகத் தேவை ஆகியவற்றால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அணு மின்நிலையம் என்பது தேவதைகள் உலவும் சொர்க்கமாகவே இருக்கட்டும். அந்தச் சொர்க்கம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை மக்களுக்குக் கிடையாதா? அது சொர்க்கமல்ல, நரகம்தான் என்பதை திருவாளர் மன்மோகன் சிங்கிற்கு நாம் புரிய வைத்து விட்டால், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவாரா? அறிவும் அறமும்தான் நாட்டை நடத்துகின்றனவா? “இல்லை.. இல்லை” என்று திகார் சிறையிலிருந்து கத்துகிறார், அமர்சிங்.

ஃபுகுஷிமா விபத்துக்கு மேல் புரியவைப்பதற்கு வேறென்ன பொழிப்புரை வேண்டும்?  இன்று அணு உலைகள் அமைப்பதை எல்லா நாடுகளும் இடைநிறுத்தம் செய்து விட்டன. மன்மோகன் சிங்கோ “சுயேச்சையான ‘அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம்’ ஒன்றை அமைப்பதன் மூலம் அணு உலைகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவோம்” என்று அறிவித்திருக்கிறார்.

முதலில் அணுஉலைகளை விற்கும் அமெரிக்க முதலாளிகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துங்கள் என்று இந்திய அரசை நெருக்குகிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன். மன்மோகன் அரசு ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் அணுசக்தி கடப்பாடு சட்டத்தின் 17பி பிரிவு, “அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில், அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பதற்கு வழி வகுக்கிறது. பிரிவு 46 பாதிக்கப்பட்ட மக்கள் அணு உலை தயாரித்த கம்பெனியிடம் நட்ட ஈடு கோர மறைமுகமாக வழி செய்கிறது.’’ எனவே இவ்விரண்டு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே  நீக்க வேண்டும் என்கிறார் ஹிலாரி. (தி இந்து, ஜூலை,19, 2011)

அணு உலைகளையே நீக்க வேண்டும் என்று கோருவதற்கு இதைக் காட்டிலும் வலிமையான காரணம் தேவையா என்ன?

______________________________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. போராட்டத்தில் வினவும் குதித்து இருப்பது அருமை… போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஊக்கம் கொடுக்கும்

 2. மக்கள் இருந்தாதானெ கொள்ளை கூட அடிக்க முடியும். அவங்கலயும் கொன்னுபுட்டு இவனுக என்ன பன்னலமுமன்னு இருக்காஙன்னெ தெரியல…

  ராஜா

  • செத்த பொணத்தை வைச்சி அரசியல் பண்ற தந்திரம் உங்களுக்கு தெரியாதா பாஸ்? ‘ராஜிவ்’ செத்த போட்டோவை வைச்சி இன்றைக்கும் கூட வசந்த் டீவி பொழைக்கிறான். ஆனா பாருங்க ‘ராஜிவ்’ என்ற ஒரு ஒத்த ஆளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை இதுவரை செத்த,செத்துகொண்டிருக்கும்,சாகப் போகும் ஈழத் தமிழனைப் பற்றி இதே வசந்’தி’ டீவி (பொட்டை டீவி) காட்ட மாட்டான்.

 3. மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்களின் மேலான ஆணைப்படி கூடங்குளம் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டனர் – தேர்தல் பிரசாரம்

 4. னீயும் இன்னைக்காநாளைக்கா அடிவிளுமா விளாதான்னு பயந்து கிடந்து ஒரு வழியா எழுதீட்ட…

  என்னடா இது, அமெரிக்காவுடனான அணுதி ஒப்பந்தத்தை பாய்ஞ்சு பாய்ஞ்சு எதிர்த்தவங்க, இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு விழுந்து விழுந்து ஆதரவு தெரிவிக்கனுமே…ஏன்னா “இது’ ரஷ்யத் தயாரிப்புங்கிறது…!

  //அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானிகளின் இலாப வெறி, //

  போற போக்கில் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம எதையாவது உளறப்ப்டாது…

  //ஆளும் வர்க்க ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்தன. அண்ணா ஹசாரே என்ற ஒரு கோமாளி நடத்திய சர்க்கஸ் வித்தையையும், அதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் நேரலை ஒளிபரப்பில் காட்டி, ஊருக்கு ஊர் நாலு ஊழல் ஒழிப்புக் கோமாளிகளை உருவாக்கிய ஊடகங்கள், கூடங்குளம் போராட்டத்தைப் புறக்கணிக்கவே செய்தன என்பதை விளக்கத் தேவையில்லை.//
  இன்னுமா உனக்கு அன்னா மேல் உள்ள கோபம் தீரல..ஓ கிந்து பார்ப்பானியர் போல் அவரும் உனக்கு லைப்டைம் எதிரி ஆயிட்டாரா..அது சரி..அது உஙக பிஸினஸ் சமாச்சாரம்..

  அண்ணே ஒரு டவுட்டு…வினவு சார் மட்டும் இத்த்னநாள் இன்னாடா செய்தாய்….பலபேர் கேட்ட பின்பு தானேநீயும் இந்த கட்டுக்கதையை எழுதினாய்…
  அது எப்படிடா மருந்துக்குக்கூடா ரஸ்யான்னு சொல்லமாட்டியா? ஆனா உனக்குப் பிடிக்காத எல்லாப் பய பேரைடும் சேத்து வுட்டுறுவ…(டாடா, பிர்லா)

  • //அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானிகளின் இலாப வெறி, //
   ஆமாம் டாட்டாவும் அம்பானியும் எப்ப கூடங்குளம் வந்தாங்க?

   \\ஆளும் வர்க்க ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்தன\\
   அணைத்து தொலைக்காட்சி ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் கொடுத்து கூடங்குளம் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டன…
   ndtv, timesnow, cnn ibn ஆகிய வட இந்திய ஊடகங்களில் கூட கூடங்குளம் செய்திகள் “Flash News” ஆக ஓடிக்கொண்டிருந்தன.. இந்த ஊடகங்கள் நேரை ஒலிபரப்பு செய்யவில்லை என அங்கலாயித்திருப்பது அபத்தம்… வட இந்திய ஊடகங்கள் என்றுமே தென் இந்திய நிகழ்வுகளை நேரலையாக காட்டுவதில்லை… ஏன் வினவு போன்ற தமிழ் மீடியாக்களுக்கே இந்த பிரச்னை இன்றுதான் கண்ணுக்கு தெரிகிறது… பிறகு எப்படி வட இந்திய ஊடகங்களை குறை சொல்ல முடியும்… பார்க்க போனால் வினவின் மெத்தனத்தை விட வட இந்திய ஊடகங்கள் ஒன்றும் இன் நிகழ்வை இருட்டடிப்பு செய்யவில்லை… தோழர் தா. பாண்டியன் கூறுவது போல இது ஒன்றும் மக்கள் போராட்டம் அல்ல போலி பாதிரிகளின் போராட்டம் தான் என்றா ஊடகங்கள் கூறுகின்றன…?

   • // இது ஒன்றும் மக்கள் போராட்டம் அல்ல போலி பாதிரிகளின் போராட்டம் தான் என்றா ஊடகங்கள் கூறுகின்றன…?//

    இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராகக் கிளப்பப் பட்டிருக்கும் போராட்டத்தின் அரசியல் பரிமாணங்களைப் பார்ப்போம்.

    போராட்டத்தினை முன்னிறுந்து நடத்துபவர்களில், முக்கியமாக கத்தோலிக்கப் பாதிரியார்களும், இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்டுள்ள சில்லரை அரசியல்வாதிகளும், அமெரிக்காவில் ஆராய்ச்சி முடித்து விட்டு இந்தியாவில் தன்னார்வமாக அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த வந்திருக்கும் எஸ்.பி. உதயகுமார் என்பவரும் இருக்கிறார்கள்.

    இந்த உதயகுமார் என்பவர் ஏதோ அமெரிக்காவில் நியூக்ளியார் சயிண்டிஸ்டாக இருந்தார் என்று எண்ணி விட வேண்டாம். இவர் எதில் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தேடிப் பார்த்தால், இந்தியாவில் உள்ள இந்து இயக்கங்களைப் பற்றி அவதூறுகளையும் விஷமப் பிரச்சாரங்களையும் செய்வதையே தன் முழு நேர ஆராய்ச்சியாக செய்து வந்துள்ளார். இந்து இயக்கங்களையும், பாரதிய ஜனதா அரசையும் எதிர்த்து அவர்களை ஃபாசிஸ்டுகள் என்று வர்ணித்து ஆராய்சிக் கட்டுரைகளும் நூல்களும் வெளியிடுவதுதான் இவர் அமெரிக்காவில் செய்து வந்த முக்கியமான ஆராய்ச்சி! இவரது முக்கியமான எதிரியாக இவர் பாரதிய ஜனதா கட்சியையும், ஆர் எஸ் எஸ் இயக்கத்தையும் அடையாளப் படுத்தியே தாக்குதல் நடத்தி வந்துள்ளார். இவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களில் சில :

    – ‘Om-made’ History: Preparing the Unlettered for the Future Hindu Rashtra
    – Historicizing Myth and Mythologizing History: The Ayodhya Case in India
    – Mapping the ‘Hindu’ Remaking of India
    – Betraying a Futurist: The Misappropriation of Gandhi’s Ramarajya

    இவை போன்ற இந்து எதிர்ப்புப் பிரச்சாரங்களை யார் உருவாக்குகிறார்கள், இவரைப் போன்ற இந்து எதிர்ப்பாளர்களுக்கு எந்த சக்திகள் நிதியுதவி செய்கின்றன – என்பதையெல்லாம் நான் விளக்க வேண்டிய அவசியமில்லை.

    இவர் கடுமையாக எதிர்த்து ஆராய்ச்சி செய்து நூல்கள் வெளியிடும் பாரதிய ஜனதாவின் வாஜ்பாயியின் தலைமையிலான அரசுதான் பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தியது. அந்த அரசைப் பற்றி இவரது புத்தகம் என்ன சொல்கிறது என்று இவரது புத்தகங்களுக்கு பாராட்டி மதிப்புரை வழங்குபவர்கள் இப்படி கூறுகிறார்கள் (Amazon.com தளத்திலிருந்து) –

    Endorsement From Joseph E. Schwartzberg, Professor Emeritus, University of Minnesota:

    ”Rewriting the history of India to promote the fundamentalist Hindu nationalist agenda has been a major project of the so-called Sangh Parivar, a still potent collectivity of exclusivist political, social and cultural entities that flourished under the aegis of India’s recently deposed BJP-led government. In this trenchant and salutary work, S.P. Udayakumar exposes the methods employed by the revisionists and demonstrates their remarkable similarity to those developed so effectively under the European Fascist and Nazi regimes more than half a century ago.”

    Endorsement From Johan Galtung, Professor of Peace Studies & Director, TRANSCEND Rector, TRANSCEND Peacre University:

    ”Presenting the Past has two very basic ramifications. The BJP-led government in Delhi was substituting Nehruvian secularism with its virulent Hindutva, a fundamentalist ideology that put Muslims and other minorities in India on a collision course with the “Hindus.” It also sought to replace another Nehruvian principle, Non-alignment, and create a sort of Asian NATO with the United States against China. If the reader wants to know the background, this is the best book.”

    அதாவது பொக்ரானில் அணு குண்டு வெடித்த பா ஜ க அரசு இவரது ஆராய்ச்சியின் படி ஒரு ஃபாசிஸ்டு அரசு. நாசகார சக்தி. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே அமைதி ஆராய்ச்சியாளர் கூடங்குளத்தில் இறங்கி இந்திய தேசத்தை வலுவாக மாற்றும் ஒரு மாபெரும் திட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார் என்றால் அதன் பின்ணணியில் கத்தோலிக்க சர்ச்சுகளும் நிற்கின்றன என்றால் இவர்கள் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது பெரிய ராகெட் சயின்ஸ் அல்ல.

    இவரைப் போன்ற இந்து, இந்திய எதிர்ப்பு சக்திகள்தான் கூட்டணி சேர்ந்து இந்த கூடங்குளம் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள் என்பதன் காரணத்தையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

    அணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல. இந்தியாவைச் சுற்றியுள்ள சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை விட பல மடங்கு அதிகமான நியூக்ளியார் போர்க் கருவிகளும் பிற சாதனங்களும் தயார் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக அணுசக்தி தொடர்பான அறிவியல் ஆய்வுகளுக்கு இவை போன்ற அணு மின் நிலையங்களும் பயன் படுத்தப் படலாம். இந்தியாவை அத்தகைய ஆராய்சிகளில் இறங்க விடாமல் செய்து, தொடர்ந்து பிற நாடுகளின் தயவிலேயே தக்கவைக்கவே, இத்தகைய எதிர்ப்புகள் மறைமுகமாக நிகழ்த்தப் பெறுகின்றன.

    இந்தியா எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு உள்ள நாடாக, பலமான ஒரு நாடாக மாறுவதை கிறிஸ்துவ அமைப்புகளும் அவற்றை இயக்கும் நாடுகளும் விரும்புவதேயில்லை. அதன் வலிமையைக் குறைக்க உள்ள பல்வேறு வழிகளில் சர்ச்களும் ஒன்றே. இந்தியா அணு குண்டு வெடிப்பதை இதே சர்ச்சுகளும் இதே உதயகுமார் போன்றோரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஏன் எதிர்த்தார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த எதிர்ப்புக்கும் காரணம் புரியும்.

    • மன்மோகன் தான் தீர்க்கமா சொல்லிட்டாரே, இந்த போலிப் பாதிரி கூட்டத்தின் பம்மாத்து வேலைக்கெல்லாம் பயப்பட மாட்டோம், அணு உலை இயங்கியே தீரும் என்று… உதய குமார் போன்ற கிறித்தவ கூலிகளின் கூச்சலுக்கு தோழர்கள் மயங்க மாட்டார்கள்… பரமக்குடி சம்பவம் மட்டும் நடந்திராவிடில் கூடங்குளத்தில் அந்த துப்பாக்கிகள் வெடித்திருக்கும்… ஒரு குள்ள நரிக்கூட்டம் குறிபார்க்கப்பட்டிருக்கும்…

    • இன்று சாய்ந்திரம் சன் டிவிநியூஸில் வந்த சஎய்தியும் இக்கருத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது…

    • //இந்தியா அணு குண்டு வெடிப்பதை இதே சர்ச்சுகளும் இதே உதயகுமார் போன்றோரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஏன் எதிர்த்தார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த எதிர்ப்புக்கும் காரணம் புரியும்.//

     பாதிரிகளும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் திங்காதேன்னு சொன்னா,வீம்புக்கு மலத்தை கூட தின்பார்கள் போல.

     கட்டுரையில் இருந்து….
     ” ஃபுகுஷிமா விபத்தினைத் தொடர்ந்து ரசிய அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய ஒரு ஆய்வறிக்கையை ரசிய அரசு நிறுவனங்கள் அதிபர் மெத்வதேவிடம் அளித்திருக்கின்றன. வெள்ளம், தீ, நில நடுக்கம் முதலான இயற்கைப் பேரழிவுகள் முதல் மனிதத் தவறுகள் வரையிலான காரணங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் ஏற்பாடுகள் ரசிய அணூலைகளில் இல்லை என்று கூறுகின்றது அந்த அறிக்கை. “அதுநாள் வரை வெளிப்படையாகச் சொல்லப்படாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று நார்வேயின் ஆற்றல் தொழில்நுட்பத்துறையின் தலைமைப் பொறியாளர் ஓலே ரிஸ்தாத் இவ்வறிக்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.”

     இவையெல்லாம் உங்க கண்ணில் படாதா?

     புகுஷிமா விபத்துக்கு பிறகு ரசியாவின் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய புடின் உத்தரவிடுகிறார். ஆய்வுக்குப் பிறகு ரிபோர்ட் சமர்பிக்கப் படுகிறது. ரசிய அரசாங்கம் அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கிறார்கள் ( மன்மோகனும் ஜெயாவும் சொல்வது போல). ஆனால் புண்ணியவான் ஒருவர் அந்த உண்மையான அறிக்கையை லீக் செய்கிறார். உண்மை திடுக்கிட வைக்கிறது. அதே ரசிய தயாரிப்பு தான் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப் படுகிறது.

     வினவு சுட்டுகிற லிங்க்.
     http://www.bellona.org/articles/articles_2011/rosatom_report

     “The report comes as several countries have given up on hopes of a nuclear future. Germany had voted to phase out its last nuclear power plant by 2022, and Switzerland plans to follow suit by 2035. Last week, Italy sent a strong message in a referrundum when 95 percent of Italian voters tunred down the opportunity to have a future lighted by nuclear power. Russians have similarly expressed in polls that they would like to see Russia pursue a different energy strategy.

     (…)

     The report is one of the few documents to surface in recent history that actually flatly contradicts Russia’s own rosy assessment that its reactors are safe – a propaganda campaign that was kicked into high gear by Prime Minister Vladimir Putin and President Medvedev after the March 11 quake and tsunami hit Fukushima Daiichi, causing three meltdowns.
     (…)

     “Bellona nuclear physicist Nils Bøhmer called the report “shocking.”

     “It makes for dramatic reading with a view to the fact that the report comes from the owner of the nuclear plants,” he said, describing it as “the most serious description of the status of Russian nuclear plants I have ever seen (…).”

 5. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளும் பெரும் தவறுகளைச் செய்துள்ளன. இவை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை உரிய முன்யோசனை, பாதுகாப்புகள், மக்களிடம் விழிப்புணர்வு, மக்களின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகியனவற்றை முறையாகச் செய்த பின்னரே ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் நம் அரசு அதிகாரிகளிடமும், நிர்வாகிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் நிலவும் ஆணவமும், திமிரும், அலட்சியமும் மக்க்ளை மதிக்காத போக்குகளுமே இத்தனை பெரிய சிக்கலில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து விட்டுள்ளது.

  மக்களிடம் ஆரம்பம் முதலே நெருங்கிச் சென்று இதன் சாதக பாதகங்களை வெளிப்படையாகச் சொல்லியிருந்திருந்து அவர்களைத் தயார் செய்திருக்க வேண்டும். குறிப்பாக அந்தப் பகுதி வாழ் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் இது குறித்த போதிய அறிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அவர்கள் மூலமாக அவர்கள் பெற்றோர்களிடம் நம்பிக்கையை ஊட்டியிருக்க வேண்டும். அணு சக்தி என்பது அபாயகரமானது, பல தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்னும் பொழுது, தாம் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லியிருந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை அறிவித்து செயல் படுத்தினால் மட்டும் போதாது. மத்திய அமைச்சர்களும், விஞ்ஞானிகளும், மாநில முதல்வரும் அதிகாரிகளும் தொடர்ந்து மாதம் ஒரு முறை மக்களைச் சந்தித்திருக்க வேண்டும்.

  • nanbarey neengal oru murayavathu kudankulathirgu sendru ankey ena nadakirathu endru parpathu nalam.. athai viduthu vitu thodarpey ilamal ipadi pathividuvathu sari thana?

 6. இந்த பிரச்சினையில் ரசியாவின் நிலைப்பாடு குறித்த தங்களின் கருத்து என்ன?

 7. Wonderful article… Great… People here may have gone through the Tamilhindu website also regarding this. Just to oppose other religion they have supported this atomic power plant. They conveniently have hidden this research done by Russian atomic agencies regarding the security measures or flaws with their atomic plants.

 8. அமெரிக்க ரசிய மேல்நிலை வல்லரசுகள் என்று போஸ்டர் சொல்கிறதே..ரசியா இப்போது மேல்நிலை வல்லரசா?

 9. கூடன்குளம் போராட்டம் இப்பொழுதைக்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரை வெளிவர இவ்வளவு காலதாமதம் ஏன். மக்கள் போராட்டம் வென்றிருக்கிறது, இனியும் வெல்லும். ம க இகவின் பங்களிப்பு என்ன என்றும் இளக்கமாக கூறுங்களேன்.

 10. Dear Vinavu
  Due to hectic work schedule I have just re joining in reading Vinavu after a bried break. what I heard from my educated co employees is ” y this mobs are always against any thing by the govt? is the mobs having any alternate for power ? power is important so pls do not oppose nuclear power is the advise came ….

  your article is a brilliant work counter attacking the educated people who sits and talks always against the peoples wishes.. GOOD THOUGHT FULL ARTICLE .. KEEP IT UP AND CIRCULATE THE ARTICLE .
  REGARDS
  GV

 11. புரட்சிகர சக்திகள் சுவரொட்டி பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால், கூடங்குளம் போராட்டம் குறித்த பதிவெழுத வினவு இவ்வளவு தாமதம் செய்திருக்க வேண்டாம்.

 12. எல்லாஞ்சரி..சீன அணு உலை பாதுகாப்பானதானு கொஞ்சம் பாத்து சொல்லுங்கப்பா.

  அத கொண்டுவந்தா வினவின் நிலை என்னாங்கிரதையும் சொல்லிட்டா தெரிஞ்சுக்கலாம்ல.

 13. Not only Koodankulam, every atomic reactors in India should be closed immediately to save 80 million poor peoples of India. If the reactors are safe shift them to the parliament building, south block of New Delhi and shift Koodankulam to Tamilnadu assembly.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க